தமிழ்நாட்டை எழுச்சி கொள்ளச் செய்த மே தின ஆர்ப்பாட்டங்கள் | தூத்துக்குடி

மே 1 சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு தழுவிய பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி பகுதியில் மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தோழர் தாளை.செல்வா தலைமை தாங்கினார். தலைமை உரையை ஆற்றிய தோழர் தாளை. செல்வா சர்வதேச மே தின போராட்ட வரலாறு குறித்தும், இன்றைய தொழிலாளி வர்க்கத்தின் நிலை குறித்தும் அவர்கள் படும் சொல்லன்னா துயரm குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துரைத்தார்.

அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை அம்பலப்படுத்தியும், அவர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை விவரித்தும் புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் சுர்ஜித் அவர்கள் விளக்க உரையாற்றினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய தோழர் தமிழ்வேந்தன் இன்றைய தொழிலாளி வர்க்கத்தின் நிலை குறித்தும், அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களைப் பற்றியும் அதன் பாதிப்புகள் குறித்தும் விவரித்துப் பேசினார். தொடர்ச்சியாக உழைக்கும் மக்களைப் பிரிவு படுத்தக்கூடிய ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச கும்பலை முறியடிக்க உழைக்கும் தொழிலாளர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறினார். தொடர்ச்சியாகப் போராடிவரும் தொழிலாளர்களின் போராட்டமானது, உழைக்கும் மக்கள் தங்களுடைய உரிமையை மீட்க பாசிச கும்பலுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டங்களை கட்டியமைக்க வேண்டிய தேவையை உணர்த்துவதாக உள்ளது என்றும், சமூகநீதி பேசக்கூடிய ’திராவிட மாடல்’ அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமையை மீட்பதற்குப் பதிலாக கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது என்றும், உழைக்கும் மக்கள் தங்களுடைய உரிமையை மீட்க மாற்று அரசியல், பொருளாதார சமூக கட்டமைப்பை முன் வைத்துப் போராட வேண்டும், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நிறுவ வேண்டும் என்று கூறி அவருடைய உரையை நிறைவு செய்தார்.

மக்கள் அதிகாரக் கழகம் நடத்திய இக்கூட்டத்தில் பொட்டலூரணி போராட்டக் குழுவின் சார்பாக தோழர் ராமகிருஷ்ணன், புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக தோழர் சுர்ஜித், தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர் கட்டபொம்மன் மற்றும் மக்கள் அதிகாரக் கழக சுற்று வட்டார தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை தூத்துக்குடி மாவட்டம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க