தூத்துக்குடி:
மே 1 சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு தழுவிய பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி பகுதியில் மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தோழர் தாளை.செல்வா தலைமை தாங்கினார். தலைமை உரையை ஆற்றிய தோழர் தாளை. செல்வா சர்வதேச மே தின போராட்ட வரலாறு குறித்தும், இன்றைய தொழிலாளி வர்க்கத்தின் நிலை குறித்தும் அவர்கள் படும் சொல்லன்னா துயரm குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை அம்பலப்படுத்தியும், அவர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை விவரித்தும் புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் சுர்ஜித் அவர்கள் விளக்க உரையாற்றினார்.
இறுதியாக சிறப்புரையாற்றிய தோழர் தமிழ்வேந்தன் இன்றைய தொழிலாளி வர்க்கத்தின் நிலை குறித்தும், அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களைப் பற்றியும் அதன் பாதிப்புகள் குறித்தும் விவரித்துப் பேசினார். தொடர்ச்சியாக உழைக்கும் மக்களைப் பிரிவு படுத்தக்கூடிய ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச கும்பலை முறியடிக்க உழைக்கும் தொழிலாளர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறினார். தொடர்ச்சியாகப் போராடிவரும் தொழிலாளர்களின் போராட்டமானது, உழைக்கும் மக்கள் தங்களுடைய உரிமையை மீட்க பாசிச கும்பலுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டங்களை கட்டியமைக்க வேண்டிய தேவையை உணர்த்துவதாக உள்ளது என்றும், சமூகநீதி பேசக்கூடிய ’திராவிட மாடல்’ அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமையை மீட்பதற்குப் பதிலாக கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது என்றும், உழைக்கும் மக்கள் தங்களுடைய உரிமையை மீட்க மாற்று அரசியல், பொருளாதார சமூக கட்டமைப்பை முன் வைத்துப் போராட வேண்டும், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நிறுவ வேண்டும் என்று கூறி அவருடைய உரையை நிறைவு செய்தார்.
மக்கள் அதிகாரக் கழகம் நடத்திய இக்கூட்டத்தில் பொட்டலூரணி போராட்டக் குழுவின் சார்பாக தோழர் ராமகிருஷ்ணன், புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக தோழர் சுர்ஜித், தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர் கட்டபொம்மன் மற்றும் மக்கள் அதிகாரக் கழக சுற்று வட்டார தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை தூத்துக்குடி மாவட்டம்.
9385353605
***
கடலூர்:
அதிகரித்து வரும் வேலையின்மை, விலையேற்றம் உரிமைகள் பறிப்பு, போர், சூழலியல் நெருக்கடி
வேண்டும் ஜனநாயகம்!
என்ற முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பில் கடலூரில் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் கிளை செயற்குழு உறுப்பினர் தோழர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மே தினத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிக்க பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைக்க வேண்டும் என்று பேசினார்.
இந்நிகழ்வில் தோழர்.V.செல்வம், தலைவர் அறிஞர் அண்ணா தனியார் போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்து தொழிலாளர் சங்கம், கடலூர் மற்றும் தோழர்.திருவரசு, செயல் ஒருங்கிணைப்பாளர், அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு, கடலூர் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்கள் ILO விதிப்படி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊர்வலம் செல்லவும், கோரிக்கையை முன்வைத்துப் பேசவும் உரிமையிருக்கிறது என்றும் இவ்வுரிமையைத் தட்டிப் பறிக்கும் போலீசை கண்டித்தும் பேசினார்.
தோழர் A.D.தீனதயாளன், (தலைவர், LIC லிக்காய் முகவர் சங்கம், கடலூர் கிளை எல்.ஐ.சி, ரயில்வே துறை தனியார்மயமாதலைக் கண்டித்தும், GDP என்ற பெயரில் மோடி அரசு எவ்வாறு மக்களை ஏமாற்றுகிறது என்றும் பேசினார்.
தோழர்.குருமூர்த்தி, (வழக்கறிஞர் பிரிவு விசிக, மாநில துணை செயலாளர்) காண்டிராக்ட் மயத்தால் தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக்கப்படுகின்றனர் என்பதைக் கண்டித்துப் பேசினார்.
தோழர். இராமலிங்கம், (மாவட்ட பொதுச் செயலாளர், புதிய ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம்) பாசிச மோடி அரசு மக்களுக்கெதிராக வேலை செய்கிறது என்பதை அம்பலப்படுத்திப் பேசினார்.
தோழர்.விஜி, (தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புதுவை) வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொத்தடிமைகளாக தொலைநிலையைப் பற்றி அம்பலப்படுத்திப் பேசினார்.
தோழர். கார்த்திகேயன் (மக்கள் அதிகாரக் கழகம், கடலூர்) நாட்டின் பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைத்து பஹல்காம் தாக்குதல் என்று கண்ணீர் சிந்தும் மோடி கும்பல் மணிப்பூர் மக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகிறது இதற்கு ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் மக்களுக்கு எதிரானவர்கள் என்று பேசினார்.
தோழர். விநாயகம் (செயற்குழு உறுப்பினர் – மக்கள் அதிகாரக் கழகம், கடலூர் மண்டலம்) அவர்கள் மே தினம் என்பது போராடிப் பெற்ற உரிமையாகும். சங்கம் வைக்க அனைவருக்கும் உரிமை உண்டு; போலீசு சங்கம் வைக்கப் போராடிய போது அப்போது மகஇக அப்போது ஆதரவு அளித்தது. எனவே போலீசு அனுமதி மறுக்க முடியாது என்றும் மாணவர்கள் மத்தியில் நிலவும் கஞ்சா போதை கலாச்சாரத்தைத் தவிர்க்க மாணவர்கள் சங்க தேர்தல் நடத்த வேண்டும்; அது அவர்களின் உரிமை. அப்போது அவர்கள் தவறான வழியில் செல்ல மாட்டார்கள். சங்கம் என்பது தங்களது உரிமை கேட்பது என்று பேசினார்.
தோழர். விடுதலை. (திராவிடர் கழகம், கடலூர்) இன்றைய மே தின ஆர்ப்பாட்டத்திற்கு இந்த அரசு அனுமதி மறுப்பது ஜனநாயக விரோதமாக உள்ளது மேலும் பாசிச மோடி கும்பலை அகற்ற வேண்டும் என்று பேசினார்.
தோழர்.சாந்தகுமார் (மாநில அமைப்புச் செயலாளர், மக்கள் அதிகாரக் கழகம், தமிழ்நாடு, புதுவை) தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த மே தின பேரணி ஆர்ப்பாட்டம் போலீசு அனுமதி மறுப்பு தெரிவித்து பின் சில இடங்களில் அனுமதி அளித்தது. வேலையின்மை அதிகரித்து உள்ளது என்று பேசினார்
விவசாயிகளை விரட்டி நகரபுரத்திற்கு துரத்தி அடிப்பது மோடி ஆட்சி வந்தபின் வேகமாக நடக்கிறது. தொழிலாளர்கள் அடிப்படை உரிமை பறிப்பது காண்டராக்ட் முறை தீவிரமாக அமல்படுத்தி தொழிலாளர்கள் சுரண்டலை ஏற்படுத்துகிறது மோடி அரசு. தமிழ்நாட்டை விட வடமாநிலங்களில் தொழிலாளர்கள் கொத்தடிமை வைத்துக்கொள்வது அவர்களைக் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை அங்கு உள்ளது. இஸ்ரேல் போர் மூலம் மக்களைக் கொல்கிறது; போர்களை அனுமதிக்கக் கூடாது. இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அதானி – அம்பானி பாசிஸ்டுகளை தடைசெய் என்று தோழர் பேசினார்.
இறுதியாக தோழர். பெருமாள் நன்றியுரையாற்றினார்.
தோழர் சக்தி,
மாவட்ட இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கடலூர் மண்டலம்.
944231009

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram