20.05.2025
பத்திரிகை செய்தி
திருவாரூர் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக மருத்துவக் கல்லூரி முதல்வரைச் சந்தித்து 13 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து மனு கொடுக்கப்பட்டது.
கோரிக்கைகள்:
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 10 ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ளது. அது உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அவசர சிகிச்சைப் பிரிவில் 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- அனைத்து வார்டுகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
- நோயாளிகளுக்கு குடிப்பதற்கு வெந்நீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மருத்துவம் பார்க்கும் நோயாளிகளுக்கு காப்பீடு தொகை எவ்வளவு பிடிக்கப்படுகிறது என்பதை கைப்பேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
- மருத்துவமனை வளாகத்தில் உள்ள கடைகளில் உணவு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் சரியான விலை நிர்ணயித்து விலைப் பட்டியல் வைக்க வேண்டும்.
- மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்களின் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன பாதுகாப்பகம் அமைத்துத் தர வேண்டும்.
- மருத்துவமனைகளில் உள்ள அனைத்து கழிவறைகளும் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் பிடிப்பதற்கு பக்கெட் வைக்கப்பட வேண்டும்.
- வயிற்றுப் பகுதிக்கு எடுக்கக்கூடிய ஸ்கேன்களுக்காக பதிவு செய்து ஒரு மாத காலமாக நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இது தனியாருக்கு மக்களைத் தள்ளிவிடும் போக்கு. அதனால் பதிவு செய்த உடனே ஸ்கேன் எடுக்கப்பட வேண்டும்.
- சிறப்பு மருத்துவர்கள் வாரத்தில் அனைத்து நாட்களிலும் முழு நேரமாக பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
- பாராமெடிக்கல் படிக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கு உடனடியாக விடுதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
- மருந்தகத்தில் மாத்திரை வழங்கும்போது தனித்தனி கவர்களில் மாத்திரைகளை வைத்து எந்தெந்த வேளைகளில் சாப்பிட வேண்டும் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
- பற்றாக்குறையாக உள்ள மருத்துவர்கள் ஊழியர்கள் செவிலியர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக முன்வைத்துள்ளோம்.
கோரிக்கையைப் பரிசீலிப்பதாக கல்லூரி முதல்வர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் தோழர் ஆசாத், தோழர் முரளி, தோழர் குமரகுரு, தோழர் வாஞ்சிநாதன் உட்படப் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை அளித்துள்ளோம்.
மக்கள் அதிகாரக் கழகம்,
திருவாரூர் மாவட்டம்,
63797 47632.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram