22.05.2025
பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர்
தோழர் பசவராஜ் படுகொலை!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீர வணக்கம்!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பல் ஒழிக!
கண்டன அறிக்கை
மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா பகுதியில் இயற்கை – கனிம வளங்களையும் கொள்ளையடித்து அதானிக்கு தாரை வார்க்கும் முயற்சியாக தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் ககர் என்ற அரசு பயங்கரவாதம் நடவடிக்கையின் மூலமாக நேற்றைய தினம் மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் உள்ளிட்ட 26 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
2026 ஆம் ஆண்டுக்குள் நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாசிச அமித்ஷா அறிவித்தார். அதன் நோக்கமே, பழங்குடியின மக்களிடம் இருந்து இயற்கை வளங்களை கொள்ளை அடித்து அம்பானி அதானி கும்பலுக்கு தாரை வார்ப்பதுதான்.
சில ஆயிரம் பேர் உள்ள பழங்குடி மக்கள் உள்ள பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படைகள் சுற்றி வளைத்து பேச்சு வார்த்தைக்கு தயாராக இருந்த மாவோயிஸ்டு கட்சியினரையும் மக்களையும் வேட்டையாடியுள்ளது.
இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் வாழ்நாள் இறுதிவரை பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடி அரசு பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் உள்ளிட்ட மாவோயிஸ்டு கட்சியினருக்கும் பழங்குடி மக்களுக்கும் மக்கள் அதிகாரக் கழகம் வீரவணக்கம் செலுத்துகிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram