பாதிரியார் ஸ்டேன் சுவாமி 4 ஆம் ஆண்டு நினைவு நாள் | தெருமுனைக் கூட்டம் | தூத்துக்குடி

ழங்குடியின மக்கள் போராளி ஸ்டேன் சுவாமி 4 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ”ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் தூத்துக்குடி சிலுவை பட்டியில் 05/07/2025 அன்று மாலை தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

நிகழ்வுக்கு மக்கள் அதிகாரக் கழகத்தின் நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா தலைமையேற்றார்.

இதில் அருட்பணியாளர் எக்ஸ். டி செல்வராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யூ மாவட்ட தலைவர் தோழர் மின்னல் அம்ஜத், அய்யா வழி குருஜி கே. ராமகிருஷ்ணன், ஆதி தமிழர் பேரவை மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தோழர் ஏ.ஜே சுரேஷ்,மே 17 இயக்க மாவட்ட பொறுப்பாளர் தோழர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்‌.

கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம் மா.தங்கையா, மனித நேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் தோழர் சையது சம்சுதீன், திராவிடர் கழகம்  மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் திரவியம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் முத்துலட்சுமி, கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்த நக்கீரன், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தோழர் சுஜித், தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு – தூத்துக்குடி – சம்சுதீன் ஆகியோர் உரையாற்றினார். அனைவரும் ஸ்டேன் சுவாமியின் போராட்டத்தையும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் குறிப்பிட்டுப் பேசினர். இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காகப் பலர் மக்கள் அதிகாரக் கழகத்தைப் பாராட்டுவதாகத் தெரிவித்தனர்.

பாசிசம் அரங்கேற்றப்படுகின்ற இன்றைய சூழலில் ஸ்டேன் சுவாமி நிகழ்வில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்தது முக்கியமான நிகழ்வாக இருந்தது.

சிறப்புரையாற்றிய மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சிவகாமு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் பாசிச நடவடிக்கை பற்றியும் அது அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு எவ்வாறு சேவை செய்கிறது என்பதையும், உழைக்கும் மக்களுக்கு நேரடி எதிரியாக இருக்கிறது என்பதையும் இயல்பான மக்கள் மொழியில் எடுத்துரைத்தார். பகுதி வாழ் உழைக்கும் மக்கள் மேற்கூறிய உரைகளை கவனமாக உள்வாங்கினர். பாசிசம் ஏறித் தாக்கி வரும் இன்றைய சூழலில் மக்கள் தங்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட களத்தில் இறங்க வேண்டிய அவசியத்தையும், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியத்தையும் இந்நிகழ்வு உணர்த்தியது.

தகவல்
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி மாவட்டம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க