“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | திருவாரூர் | செய்தி – புகைப்படம்

க்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கையைத் தமிழ்நாடெங்கும் கொண்டு செல்லும் வகையில் தொடர்ந்து வெளியீட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அவ்வகையில் திருவாரூர் மாவட்ட குழு தோழர்கள் முன்னெடுப்பில் ஆகஸ்ட் 3 அன்று ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது. நிகழ்வில் 35 முதல் 40 நபர்கள் பங்கேற்றனர்.

முதலில் தோழர் ஆசாத் சமூக சூழலுக்கு ஏற்றவாறு கொள்கை அறிக்கை கொண்டுவந்ததன் நோக்கத்தைச் சுருக்கமாகப் பேசினார். அடுத்து ஜனநாயக சக்திகளை வாழ்த்துரை வழங்க அழைத்தார்.

அவ்வகையில் முதலில் திராவிடர் கழகத்தின் நகரச் செயலாளர் தோழர் சிவராமன், அம்பேத்கர் மக்கள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் தோழர் விக்னேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மிகவும் நுட்பமாக அவர்களது கொள்கைகளோடும் சமுக நிலைமைகளோடும் எமது ம.அ.க கொள்கைகளை ஒப்பிட்டுப் பார்த்து வாழ்த்துரை வழங்கினர்.

குறிப்பாக அவர், “இரட்டை ஆட்சி முறை நீடிப்பதன் விளைவால் இன்று காவல்துறை ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை. அரசியல் கட்சிகளுக்கு அதிகாரம் இல்லை. அதிகாரம் முழுவதும் மத்திய அரசிடமே குவிந்துள்ளது. இதை தகர்ப்பது தான் தி.க-வின் நோக்கமும். அவ்வகையில் ம.அ.க-வோடு ஒன்றுபடுகிறோம். தலைவர்கள் விட்டு சென்ற பாதையில் பின் தொடர்வோம் என கூறியுள்ளீர்கள். அதில் தான் விசயமே உள்ளது. நிச்சயமாக பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிராகவும், சாதி ஒழிப்புக்காகவும் போராடுவோம்” என கூறி தனது உரையை முடித்தார்.

இவருக்கு அடுத்தபடியாக பேசிய அம்பேத்கர் மக்கள் நல சங்க ஒருங்கிணைப்பாளர் தோழர் விக்னேஷ், ”இந்திய சூழலுக்கு ஏற்றவகையில் கொள்கை அறிக்கைகளை வடிவமைத்து அமைப்பை இன்று கட்சியாக மாற்றியிருப்பது பாராட்டுக்குரியது” என்றும் ”ஆ.எஸ்.எஸ் இன்று பல்வேறு அமைப்புகளை வைத்துக் கொண்டு இந்துராஷ்டிரம் என்ற ஒரே நோக்கத்தில் மக்களை அணிதிரட்டி வருகிறது. ஆனால் நம்மைப்போன்ற அமைப்புகள் ஐக்கிய முன்னணி அமைப்பதிலும், மக்கள் முன்னணி அமைப்பதிலும் சிக்கல் உள்ளது. இங்கு தான் சாதியைப் பற்றியான பார்வை தேவையாக உள்ளது. சாதியைப் பற்றியான விசயத்திலும், இட ஒதுக்கீடு பற்றியான விசயத்திலும் கொள்கை போதுமானதாக இல்லை” என்று கூறினார். இது குறித்து எமது தோழர்கள் பேசுகையில் பதில் அளித்தனர் .

அடுத்தாக பேசிய தோழர் ஜி. வரதராஜன், ”இந்த அறிக்கை இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிரான அறிக்கையாகவும் மிகவும் செறிவூட்டப்பட்டு எளிய நடையில் கொண்டு வந்துள்ளனர்” என்று கூறிவிட்டு ஆர். எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலுக்கு எதிரான தனது கருத்தைப் பேசினார்.

த.மு.மு.க மாவட்ட தலைவர், த.வா.க மாவட்ட தலைவர், வி.சி.க மாவட்டத் தலைவர் ஆகியோர் தங்களது வாழ்த்துரையை வழங்கினர். இறுதியாக மக்கள் அதிகாரக் கழகத்தின் மாவட்ட துணைத் தலைவர் டி.கே லெனின் நன்றியுரை ஆற்றிக் கூட்டத்தை நிறைவு செய்தார்.

மக்கள் அதிகாரக் கழகம்,
திருவாரூர் மாவட்டக்குழு.
6383461270

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க