07.10.2025
உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயற்சி!
பார்ப்பன மதவெறி சங்கிகளின் கொட்டத்தை அடக்குவோம்!
கண்டன அறிக்கை
நேற்றைய தினம் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி .ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்ற பார்ப்பன மதவெறியன் சனாதனத்தை இழிவுபடுத்துபவர்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்ற கத்தியபடி காலணி வீச முயற்சி செய்துள்ளார். இதை அறிந்த மற்ற வழக்கறிஞர்கள் கிஷோரை தடுத்து நிறுத்தி போலீசிடம் ஒப்படைத்துள்ளனர் . வழக்குத் தொடுக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விரும்பாததால், பார் கவுன்சிலில் இருந்து மட்டும் கிஷோர் மீது இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு பேட்டி அளித்துள்ள ராகேஷ் கிஷோர், கடவுள் கூறியதால் தான் காலணி வீசினேன் என்றும் அதற்காக வருந்தவில்லை என்றும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பார்ப்பனத் திமிரோடு தெரிவித்துள்ளார். இந்திய உச்சநீதிமன்றத்தின் தலித் தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய் கஜுராஹோ கோயில் தொடர்பான வழக்கில் தெரிவித்த கருத்துக்கள் புண்படுத்தியுள்ளதாகவும் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல் நாடு முழுவதும் புரளிகளையும் பொய்களையும் வதந்திகளையும் பரப்பி பெரும் கலவரங்களையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் இஸ்லாமியர்களும் தலித் மக்களும்தான் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களுக்காகவும் தலித் மக்களுக்காகவும் வருத்தப்படாத இந்த பார்ப்பன மத வெறியன், கஜுராகோ வழக்கில் விஷ்ணுவிடம் போய் கேளுங்கள் என்று கூறியதற்காக வருத்தப்பட்டு இருக்கிறார், மனம் புண்பட்டிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பல் அரசு கட்டமைப்பை விழுங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தான், பி.ஆர்.கவாய் மீது காலணி வீசிய நிகழ்வு நடைபெற்று உள்ளது. இதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் பார்ப்பன மதவெறி சங்கிகளின் கொட்டத்தை அடக்குவதற்காக மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராகேஷ் கிஷோரின் சட்ட உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மீது தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் போடப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram