07.10.2025

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயற்சி!

பார்ப்பன மதவெறி சங்கிகளின் கொட்டத்தை அடக்குவோம்!

கண்டன அறிக்கை

நேற்றைய தினம் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி .ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்ற பார்ப்பன மதவெறியன் சனாதனத்தை இழிவுபடுத்துபவர்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்ற கத்தியபடி காலணி வீச முயற்சி செய்துள்ளார். இதை அறிந்த மற்ற வழக்கறிஞர்கள் கிஷோரை தடுத்து நிறுத்தி போலீசிடம் ஒப்படைத்துள்ளனர் . வழக்குத் தொடுக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விரும்பாததால், பார் கவுன்சிலில் இருந்து மட்டும் கிஷோர் மீது இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு பேட்டி அளித்துள்ள ராகேஷ் கிஷோர், கடவுள் கூறியதால் தான் காலணி வீசினேன் என்றும் அதற்காக வருந்தவில்லை என்றும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பார்ப்பனத் திமிரோடு தெரிவித்துள்ளார். இந்திய உச்சநீதிமன்றத்தின் தலித் தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய் கஜுராஹோ கோயில் தொடர்பான வழக்கில் தெரிவித்த கருத்துக்கள் புண்படுத்தியுள்ளதாகவும் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல் நாடு முழுவதும் புரளிகளையும் பொய்களையும் வதந்திகளையும் பரப்பி பெரும் கலவரங்களையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் இஸ்லாமியர்களும் தலித் மக்களும்தான் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களுக்காகவும் தலித் மக்களுக்காகவும் வருத்தப்படாத இந்த பார்ப்பன மத வெறியன், கஜுராகோ வழக்கில் விஷ்ணுவிடம் போய் கேளுங்கள் என்று கூறியதற்காக வருத்தப்பட்டு இருக்கிறார், மனம் புண்பட்டிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பல் அரசு கட்டமைப்பை விழுங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தான், பி.ஆர்.கவாய் மீது காலணி வீசிய நிகழ்வு நடைபெற்று உள்ளது. இதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் பார்ப்பன மதவெறி சங்கிகளின் கொட்டத்தை அடக்குவதற்காக மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராகேஷ் கிஷோரின் சட்ட உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மீது தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் போடப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



7 மறுமொழிகள்

  1. அந்த வழக்கறிஞர் செய்கை தவறாக இருந்தாலும் அதற்கான சூழலை உருவாக்கியவர் யார்?பொதுநல வழக்கு விசயம் ஒரு தேசத்தினஅ உயரிய பொறுபில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி இந்துசமூகத்தின் மீது உள்ளுணர்வு வன்மத்துடன் பதில் அளித்து தனது பொறுப்பற்ற நிலையை சமூகத்திற்கு காட்டியுள்ளார். தவிரவும் அந்த வழக்கறிஞர் தலித் சமூகதினராக இருந்ததால் சுலபமாக சங்கி ப்ரச்சணைன்னு திசை திருப்புறீங்க இதே உயர் ஜாதிபிரிவு என்று சட்ட வரைவு மூலம் இந்த தேசத்தின் பழிவாங்கப்பட்ட சமூகத்தினராக இருந்தால் இந்நேரம் வன்முறையை கட்டவிழ்து விட்டு உச்ச நீதிமன்ற உயரிய பொறுப்பில் உள்ளவர் வேடிக்கை பார்த்துகொண்டு இருந்திருப்பார் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி தனது பதில் எப்படி தரவேண்டும் சம்பந்தபட்ட துறையைக்கோ சம்பந்தபட்ட மாநிலத்திற்க்கோ அதுதொடர்பான விவரங்களையோ அல்லது ப்ரச்சணைகளையோ கலைவதற்கு ஏற்பாடு செய்யும்படி பரிந்துறைத்திருக்கவேண்டும் அதை விடுத்து பொறுப்பற்ற முறையில் தேசத்தின் பெரும்பாண்மை சமூகத்தின் மீது வன்ம சிந்தணையில் பதில் அளித்தது முறையற்றதுதான்

  2. கருத்துக்கு எதிர் கருத்து சரி or இல்லை ன்னு பதில் சொல்லனும். அத்தை விட்டு ஜாதி மதம் உயர்ந்தவன் தாழ்த்தவன் ன்னு கையால் ஆகாதவன் போல ஓடி ஒழியும் செயல் சரியல்ல. செருப்பு வீசியது தப்பு. பதவிக்கு மரியாதை உண்டு

  3. உச்ச நீதிமன்ற தலமை நீதிபதி கூறிய கருத்தில் தவறு ஒன்றும் இல்லை. கடவுளுடைய சிலை புனரமைக்க அதுதொடர்பான அரசு துறையை நாடவேண்டும் என்பது உச்சநீதிமன்ற வழக்கறிஞரான ராகேஷ் கிஷோர் அறியவில்லையா?.
    தலமை நீதிபதி மீது செருப்பு வீசும் செயல் நன்கு திட்டமிட்ட செயல். இது தற்செயலாக நடக்கவில்லை என்பது அடிப்படை அறிவு உள்ள எவறும் அறிவார்.
    தலமை நீதிபதி தாழ்த்தபட்ட சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இது நாம் பெரும் மதிப்பு வைத்துள்ள சட்ட சாசனத்தின் மீது வீசப்பட்டதிற்கு சமம். இதைப்பற்றி மத்திய பெருமக்கள் யாரும் பேசவில்லை என்பதுதான் இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது.

  4. இந்த கம்யூனிச தீவிர வாத குழுக்களை அடியோடு ஒழித்தால் தான் இப்படிபட்ட கட்டுரைகளை படிக்கும் துர்பாக்கியம் இல்லாதிருக்கும்.

  5. ராகேஷ் கிஷோர் கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்று அவரே கூறுகிறார்.ஆகவே இது சூடு சொரணை உள்ள ஒரு இந்துவுக்கும் அது இல்லாத இந்துவுக்கும் நடந்த ஒரு நிகழ்ச்சி.அம்புட்டுதேன்.

  6. தனிப்பட்ட ஒரு வழக்கறிஞரின் செயலுக்காக பிராமண இனத்தை இழிவு படுத்திப் பேசுவது எப்படி சரியாகும்.பட்டியல் இனம் என்றால் அது குற்றம்.பிராமணர் என்றால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க