41-ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் | சந்தா செலுத்துவீர்!

இத்தனை ஆண்டுக் காலமும் ஒரு புரட்சிகர அரசியல் பத்திரிகையை பல்வேறு நெருக்கடிகளையும் கடந்து எம்மால் நடத்திவர முடிகிறதென்று சொன்னால், அதற்கு வாசகத் தோழர்களின் பேராதரவுதான் முதன்மையான காரணமாகும். அந்த நம்பிக்கையில் எமது பணிகளைத் தொடர்கிறோம்.

புதிய ஜனநாயகம் | மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு

உழைக்கும் மக்களின் அரசியல் போர்வாள்

41 ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம்

சந்தா செலுத்துவீர்! நன்கொடை அளித்து ஆதரிப்பீர்!

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

நாற்பது ஆண்டுகளுக்கு முன் 1985-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் ரசியப் புரட்சி தினத்தன்று மார்க்சிய -லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புதிய ஜனநாயகம் முதல் இதழ் வெளியானது. அன்று முதல் இன்றுவரை, 41 ஆண்டுகளாக தொடர்ச்சியாக புரட்சிகர அரசியலை உயர்த்திப் பிடித்து வெளிவரும் ஒரே அரசியல் இதழ் புதிய ஜனநாயகம் ஆகும். பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் இன்றளவும் தொடர்ச்சியாக பாட்டாளி வர்க்கத்தின் போர்வாளாக புதிய ஜனநாயகம் திகழ்ந்து வருகிறது.

இந்த வெற்றிகள் – பெருமைகளுக்குப் பின்னே பலநூறு தோழர்களின் அயராத உழைப்பு பொதிந்துள்ளது. மார்க்சிய -லெனினிய இயக்கத் தோழர்கள் மற்றும் திராவிட, தலித்திய, தமிழின அமைப்புகளின் தோழர்கள், விவசாய சங்க – தொழிற்சங்கத் தோழர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் ஆதரவோடுதான் இந்த வரலாற்றுப் பணியை இதுகாறும் தொடர்ந்து வருகிறோம். உங்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியம் இல்லை.

இந்த 41 ஆண்டுகளில் நமது நாடு பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து வந்துள்ளது. உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மேலும் மேலும் கீழ்நிலைக்குச் சென்றுள்ளது. இந்த எல்லா காலங்களிலும் புதிய ஜனநாயகம் உழைக்கும் மக்கள் பக்கம் நின்று, சமரசமின்றி குரல் கொடுத்து வந்துள்ளது. மக்களின் துன்ப துயரங்களுக்கான தீர்வு இந்த போலி ஜனநாயக அரசியல் கட்டமைப்புக்கு வெளியே இருப்பதைத் தொடர்ந்து உணர்த்தி வந்துள்ளது.

இன்று பாசிச அபாயம் மேலோங்கி வரும் காலகட்டம். பாசிச பா.ஜ.க கும்பலுக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டங்கள்தான், பாசிசத்தை வீழ்த்துவதற்கான ஆயுதம் என்பதை புதிய ஜனநாயகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதோடு, நாடு முழுவதும் நடக்கும் உழைக்கும் மக்களின் எல்லா போராட்டங்களுக்கும் ஆதரவு கரங்களை நீட்டி வருகிறது, வழிகாட்டி வருகிறது. மக்கள் பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வை பாசிச எதிர்ப்புடன் இணைக்கிறது.

அதன்மூலம் “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” என்ற மாற்றை மக்களிடையே கொண்டு சேர்க்கிறது. இன்றைய காலகட்டம் விவசாயம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்கும் விதமாக இந்த மாற்றை விரிவாக்கியும் வருகிறது.

இச்சூழலில், ஊடகங்கள் மீது தொடர்ச்சியாக பாசிச தாக்குதல்களை தொடுத்துவரும் பாசிச கும்பல் கடந்தாண்டு “அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவுச் சட்டத்தை” நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்தின் மூலம், பத்திரிகைகளுக்கு நிர்வாக ரீதியாக பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.

இத்துடன், 1990-களிலிருந்து தனியார்மய தாராளமயக் கொள்கை தீவிரமாகச் செயல்படுத்தப்பட்ட பின்னர், அச்சு ஊடகங்கள் குறிப்பாக, புரட்சிகர – ஜனநாயக இயக்கங்களின் சிறு பத்திரிகைகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அச்சுத்தாள் உள்ளிட்ட பொருள்களின் விலையேற்றம், சமூக ஊடகங்களின் செல்வாக்கு ஆகியவற்றால் பல வார இதழ்கள், மாத இதழ்கள் தமது விற்பனைப் படிகளைப் பெருமளவு குறைத்துவிட்டன. இதற்கு புதிய ஜனநாயகம் இதழும் விதிவிலக்கல்ல.

புதிய ஜனநாயகம் இதழை முறையாக மாதந்தோறும் உரிய தேதியில் வெளியிடுவதோடு, இன்றைய காலகட்டத்தின் தேவைக்கேற்ப புதுப்பொலிவுடனும் கொண்டுவர வேண்டி உள்ளது. இலட்சக்கணக்கான உழைக்கும் மக்களிடம் புதிய ஜனநாயகம் இதழின் புரட்சிகர அரசியலை பரப்ப வேண்டி உள்ளது. ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் எமக்கு இவை இமாலயப் பணிகளாகும்.

இத்தனை ஆண்டுக் காலமும் ஒரு புரட்சிகர அரசியல் பத்திரிகையை பல்வேறு நெருக்கடிகளையும் கடந்து எம்மால் நடத்திவர முடிகிறதென்று சொன்னால், அதற்கு வாசகத் தோழர்களின் பேராதரவுதான் முதன்மையான காரணமாகும்.

அந்த நம்பிக்கையில் எமது பணிகளைத் தொடர்கிறோம். நிதி நெருக்கடியை ஈடுசெய்ய சந்தா மற்றும் நன்கொடை சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.

  • உழைக்கும் மக்களின் அரசியல் போர்வாளான புதிய ஜனநாயகம் இதழின் சந்தா மற்றும் நன்கொடை திரட்டும் பணி வெற்றியடைய தோள் கொடுங்கள்!
  • சந்தா செலுத்தி இதழைப் பெற்றுக் கொள்ளுங்கள்!
  • தங்களது நண்பர்களையும் சந்தாதாரர் ஆக்குங்கள்!
  • புதிய ஜனநாயகம் இதழுக்கு நன்கொடை அளித்து ஆதரியுங்கள்!

புரட்சிகர வாழ்த்துகள்!

தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

***

ஆண்டுச் சந்தா என்ற அடிப்படையில் ஓராண்டுச் சந்தா, ஈராண்டுச் சந்தா, ஐந்தாண்டுச் சந்தா என வாசகர்கள் பணம் செலுத்தலாம்.

ஆண்டுச் சந்தா: ரூ.360

இரண்டாண்டுச் சந்தா: ரூ.720

ஐந்தாண்டுச் சந்தா: ரூ.1,800

அச்சிதழ் ஒரு படி: ரூ.30 (சந்தா இல்லாமல் ஒரு இதழை அஞ்சல் மூலம் பெறுவதற்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டும்)

மின்னிதழ் ஒரு படி: ரூ.30 (ஒரு இதழைப் பெறுவதற்கான தொகை)

G-Pay மூலம் பணம் கட்ட: 94446 32561

குறிப்பு: ஜி-பே (G-Pay) முறையில் பணம் செலுத்துபவர்கள், அதன் திரைப்பதிவையும் (ஸ்கிரீன் சாட்) முகவரியையும் சேர்த்து எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

வினவு தளத்தில் மின்னிதழ் கிடைக்கும்: vinavu.com

வங்கி கணக்கு விவரம்:

Bank: SBI
Branch:
Kodambakkam
Account Name:
PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

தொடர்பு விவரங்கள்:

தொலைபேசி / வாட்ஸ்-அப்: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க