17.10.2025

ஜே.என்.யூ-வில் இடதுசாரி மாணவர் அமைப்பினர் மீதான
ஏ.பி.வி.பி குண்டர்களின் தாக்குதல்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் கண்டன அறிக்கை

15.10.2025 அன்று டெல்லி ஜே.என்.யூ (JNU) பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி (ABVP) குண்டர்களால் இடதுசாரி மாணவ அமைப்பை சேர்ந்தவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

JNU-வில் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் குழு ஒன்று அமைக்கப்படும். அதற்கான கலந்துரையாடல் கூட்டத்திற்கு கும்பலாக அணிதிரண்டு வந்த ABVP குண்டர் படையினர் சாவர்க்கர் என முழக்கமிட்டும் அங்கிருந்த இடதுசாரி மாணவர்களைத் தாக்கியும் உள்ளனர். மாணவர் அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவரின் மண்டையை உடைத்தும், JNU மாணவர் சங்கத் தலைவரின் சட்டையைக் கிழித்தும் அராஜக முறையில் தாக்கியுள்ளனர்.

சென்ற ஆண்டு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் முதல் முறையாக ABVP-யை சேர்ந்த வைபவ்மீனா என்பவர் இணைச் செயலாளராக (Joint Secretary) பொறுப்பேற்றார். அதற்கு பின்பு ABVP குண்டர்களின் வன்முறைச் செயல்களும் இந்துத்துவ நடவடிக்கைகளும் வெளிப்படையாக அதிகரித்துள்ளது.

சி.ஏ.ஏ (CAA), என்.ஆர்.சி (NRC) சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உமர் காலித், தோழர் மாவோ மற்றும் அப்சல் குரு ஆகியோரின் புகைப்படங்களை ராவணன் போல சித்தரித்து அசுரர்கள் என மத வெறியை தூண்டுகின்றனர்.

மேலும், மாணவர் சங்கத்திற்கான கட்டடத்தில் சாவர்க்கரின் புகைப்படத்தை வைப்பது, பிற்போக்கான இந்துத்துவ பண்டிகைகளை சினிமா நடிகர்களை அழைத்து வந்து வெளிப்படையாக நடத்துவது, ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளை வெளிப்படையாக முன்னெடுப்பது ஆகியவை அதிகரித்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பாக விழுப்புரத்தை சேர்ந்த JNU மாணவர் ஒருவர் ABVP நபர் ஒருவர் இடதுசாரி சிந்தனை உடையவர் மற்றும் பால் புதுமையினர் அடையாளத்திற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாண்டைராஜ் என்பவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்.

இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போதைய தாக்குதலையும் நாம் பார்க்க வேண்டும். ஆகையால் இந்த ABVP குண்டர் படையானது எந்தவித ஜனநாயகத் தன்மையும் அற்ற மதவெறி பிடித்த குண்டர் படையாகும். இவர்களை ஒரு மாணவர் அமைப்பு என்ற முறையில் ஜனநாயகமாக அணுக முடியாது.

மாணவர் அமைப்பு என்ற பெயரில் இயங்கி வரும் ABVP குண்டர் படையை தடைசெய்!

தாக்குதலில் ஈடுபட்ட ABVP குண்டர்களை பல்கலைக்கழகத்திலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்!

JNU பல்கலைக்கழகத்தின் ஜனநாயகத்தைப் பாதுகாத்திட இடதுசாரி அம்பேத்கரிய முற்போக்கு மாணவர் அமைப்புகள் ஒருங்கிணைந்த முறையில் ஒரு பொதுத் திட்டத்தை உருவாக்கி ABVP குண்டர்களுக்கு எதிராகப் போராடி வீழ்த்திட வேண்டும் என புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (RSYF) வலியுறுத்துகிறது.


இவண்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர-மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க