SIR – தொடரும் பி.எல்.ஓ-களின் தற்கொலைகள்: பா.ஜ.க-வும், தேர்தல் ஆணையமுமே குற்றவாளிகள்

பாசிச ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பலின் அங்கமாக மாறிப்போயுள்ள தேர்தல் ஆணையத்தின் தான்தோன்றித்தனமான, எதேச்சதிகாரமான அணுகுமுறைகள்தான் வாக்குச்சாவடி ஊழியர்களின் ‘மரண’ங்களுக்குக் காரணம் என்பதை உத்தரப் பிரதேச நிகழ்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

SIR பயங்கரவாதம்! | பதிவு 1

ற்போதைய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி ஊழியர்கள் (பி.எல்.ஓக்கள் – BLO’s) பல பேர் மீது சர்வாதிகாரமான முறையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகின்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில், அம்மாவட்ட நிர்வாகமானது, பயிற்சியின்போது அலட்சியமாக இருந்ததாகக் கூறி பி.எல்.ஓக்களுக்கு எதிராக தொடர்ச்சியான எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்துள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரியாக இருக்கும் மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம்-இன் (Medha Roopam) கண்காணிப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், ரூபம் தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமாரின் மகள் ஆவார்.

தற்போதைய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பி.எல்.ஓக்களின் பணி என்பது, படிவங்களை விநியோகிப்பது, சேகரிப்பது என்பது மட்டுமில்லாமல், புதிய வாக்காளர் விவரங்களுடன் வாக்காளர்களின் அல்லது அவர்களது பெற்றோரின் பழைய தேர்தல் விவரங்கள் பொருந்திப் போகிறதா என்பதைச் சரிபார்ப்பது என்ற வகையில் உள்ளது. தேர்தல் ஆணையம் ல் மேற்கண்ட செயல்முறையை நிறைவு செய்வதற்கான காலக்கெடுவாக டிசம்பர் 4 நிர்ணயித்து பின்னர் அதை டிசம்பர் 11 வரை நீட்டித்துள்ளது.

நொய்டா நிர்வாகம் 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 32 இன் கீழ், அலட்சியம் மற்றும் கீழ்ப்படியாமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், மூன்று போலீசு நிலையங்களில் 60-க்கும் மேற்பட்ட பி.எல்.ஓக்கள் மற்றும் ஏழு மேற்பார்வையாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்துள்ளது. மேதா ரூபமின் உத்தரவின் அடிப்படையில், மூன்று நொய்டா தொகுதிகளின் துணை ஆட்சியர்கள் (sub-divisional magistrates) நான்கு எஃப்.ஐ.ஆர்களை தாக்கல் செய்தனர்.

டாட்ரி தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு எஃப்.ஐ.ஆர்களில், 18 பேரின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் 12 பேர் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்; 6 பேர் மேற்பார்வையாளர்கள் ஆவர். கிரேட்டர் நொய்டாவின் ஈகோடெக் கட்டம் 1 போலீசு நிலையத்தில், ஒரு எஃப்.ஐ.ஆரில் 33 பி.எல்.ஓக்கள் மற்றும் ஒரு மேற்பார்வையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜேவர் (Jewar) என்ற பகுதியில் 17 பி.எல்.ஓக்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

துறை சார்ந்த மற்றும் மண்டல அளவிலான அதிகாரிகளுக்கான மறு ஆய்வுக் கூட்டத்தில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நிறைவு செய்வதற்கான காலக்கெடுவுக்குள் பணிகளை நிறைவு செய்யாவிட்டால், சம்பளத்தை நிறுத்தி வைத்தல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்தல் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, பல பி.எல்.ஓக்கள் மீது பி.ஜே.பி கட்சியைச் சார்ந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பி.எல்.ஓ தொலைப்பேசியில் பேசும்போது ஆட்சேபனைக்குரிய வகையில் பேசினார் என பா.ஜ.க வைச் சேர்ந்த அங்கிட் குமார் சிங் அளித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அழைப்பு பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகளை ஆதாரமாக வைத்து மட்டுமே எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டும் இத்தகைய கேலிக்கூத்துகள் அரங்கேறி வருகின்றன.


படிக்க: பீகார் சிறப்பு தீவிர மறு ஆய்வு: காவிமயமாகும் வாக்காளர் பட்டியல்


அண்மைய வாரங்களில் நாடு முழுவதும், மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களில் வாக்குச்சாவடி ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் அங்கமாக மாறிப்போயுள்ள தேர்தல் ஆணையத்தின் தான்தோன்றித்தனமான, எதேச்சதிகாரமான அணுகுமுறைகள்தான் வாக்குச்சாவடி ஊழியர்களின் ‘மரண’ங்களுக்குக் காரணம் என்பதை உத்தரப் பிரதேச நிகழ்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன. பாசிச பி.ஜே.பி கும்பலின் நோக்கத்தை ஈடேற்ற வாக்குச்சாவடி ஊழியர்கள் கொலை செய்யப்படுகின்றனர் என்றே இந்நிகழ்வுகளைப் பார்க்க வேண்டும்.

தேர்தலில் தங்களை வீழ்த்தவே முடியாத வண்ணம், அரசின் நிர்வாகக் கட்டுமானங்களைப் பாசிச கும்பல் மாற்றி வருவதன் ஒரு அங்கமாகவே இத்தகைய நடவடிக்கைகளையும் பார்க்க முடியும்.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை களத்தில் வீழ்த்துவதற்கான செயல்பாடுகளை நாம் எந்த அளவிற்குத் தீவிரப்படுத்துகிறோமோ அந்தளவிற்குத்தான் தேர்தலிலும் வீழ்த்த முடியும் என்பதையே இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதை நோக்கி நகர வேண்டும்.


லெபா ரேடிக்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க