மத்தியப்பிரதேசம்: எஸ்.ஐ.ஆர்-இல் புதிய மோசடி

பா.ஜ.க. ஆளும் மத்தியப்பிரதேசத்தில் எஸ்.ஐ.ஆர். பணியை மேற்கொள்ளும் பி.எல்.ஓ. பணியாளர்களின் உதவியாளர்களாக ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க-வின் உறுப்பினர்களை நியமித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

SIR பயங்கரவாதம்! | பதிவு 3

தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக வைத்துக்கொண்டு, “சிறப்பு தீவிர திருத்தத்தின்” (SIR – Special Intensive Revision) மூலம் புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ள மோடி – அமித்ஷா கும்பல், அதில் மேற்கொண்டுவரும் மோசடி – முறைகேடுகளுக்கு ஒரு எல்லையே இல்லை என்றாகிவிட்டது.

பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்தியப்பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர். பணியை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் பி.எல்.ஓ. (Booth level officer) பணியாளர்களின் உதவியாளர்களாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் உறுப்பினர்களை நியமித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

இதை கண்டித்து மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி பி.எல்.ஓ. மற்றும் பி.எல்.ஓ. உதவியாளர்களின் பட்டியலை அப்படியே இணையத்தில் வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளார். அதன் பிறகு தேர்தல் ஆணையம் அந்த உதவியாளர்களின் பெயர்கள் ‘தவறுதலாக’ சேர்க்கப்பட்டிருந்ததாகவும் இப்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு விட்டதாகவும் பூசி மெழுகியுள்ளது.

அதிகாரப்பூர்வ பி.எல்.ஓ-களின் பட்டியலை மாவட்ட ஆட்சியர்தான் நேரடியாக வெளியிட்டார். ஆகையால், தேர்தல் ஆணையம் மட்டுமல்ல மாவட்ட நிர்வாகமும் கூட பா.ஜ.க-வின் கைப்பாவையாக செயல்படுகிறது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

அதிலும், பி.எல்.ஓ. உதவியாளராக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் பா.ஜ.க-வின் மண்டல தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அரசு நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டார் என்று சொல்வதை விட தன்னை தானே நியமித்துக்கொண்டார் என்பதே சரி.


படிக்க: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: பா.ஜ.க – தேர்தல் ஆணையத்தின் பாசிச பயங்கரவாதம்!


தேர்தல் ஆணையத்தின் விதிகளிலேயே இல்லாத “எஸ்.ஐ.ஆர்.” என்பதே ஒரு மோசடி என்று பலரும் விமர்சித்துக் கொண்டிருக்க, எஸ்.ஐ.ஆர். நடைமுறை பணிகளிலும் பல்வேறு தகிடுத்தத்தங்களை அரங்கேற்றி வருகிறது பா.ஜ.க. கும்பல்.

எஸ்.ஐ.ஆர். மூலம் உருவாக்கப்படும் வாக்காளர் பட்டியலானது,“பா.ஜ.க-வின் வாக்காளர் பட்டியல்” அல்லது “காவி வாக்காளர் பட்டியலாக” இருப்பதை உத்தரவாதம் செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. காவி கும்பல் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறது.

தேர்தல் ஆணையமோ பாசிச பா.ஜ.க-விடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, வெறுமனே பார்வையாளராக கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இனியும் தேர்தல் ஆணையத்தை தனி அதிகாரம் பெற்ற நிறுவனம் என்றோ நடுநிலையான அமைப்பு என்றோ கூறிக் கொள்வதில் எந்த பொருளும் இல்லை; அது பாசிச பா.ஜ.க-வின் தொங்கு சதையாகிவிட்டது என்பது எஸ்.ஐ.ஆர். மூலம் மீண்டும் நீரூபணமாகியுள்ளது.

மறுபுறம்,பாசிசமயமாகிவரும் இந்த தேர்தல் கட்டமைப்பும் பா.ஜ.க-வின் இந்துராஷ்டிரத் திட்டத்திற்கான ஒரு படிக்கல்லாக மாற்றப்பட்டு வருகிறது!

மூலக்கட்டுரைதி வயர்


சுந்தரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க