தோழர்கள் ராதிகா, ரவி புரட்சிகர மணவிழா || Live Blog

நாள்: டிசம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை; காலை 10 மணி | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை. | அனைவரும் வாரீர்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!

டிசம்பர் 28 அன்று மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் ரவி என்கிற செல்வகணேசுக்கும் தோழர் ராதிகாவிற்கும் நடக்க இருக்கும் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா, “சாதி-மதம் கடந்து காதலிக்க, மணமுடிக்க
வேண்டும் ஜனநாயகம்” என்கிற முழக்கத்தின் கீழ் க்கள் அதிகாரக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளால் நடத்தப்படுகிறது.

இந்த மணவிழாவில் தமிழ்நாடு – புதுச்சேரி முழுவதிலிருந்து பல்வேறு ஜனநாயக சக்திகள், சாதி ஒழிப்புப் போராளிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்; சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

சாதிவெறியர்கள், பார்ப்பன இந்து மதவெறியர்கள், இனவெறியர்கள் அனைவரும் பாசிச சக்திகளின் பாதந்தாங்கிகளாக செயல்பட்டு வருகின்றனர். இக்கொடிய காலத்தில், பாசிசத்திற்கும் பார்ப்பனிய, சாதி ஆதிக்கத்திற்கும் எதிரான போரை, பண்பாட்டுத் தளத்திலும் தொடுப்பது மிக மிக இன்றியமையாத கடமையாகும்.

சாதி ஒழிப்புப் போராட்டத்தின் அங்கமான, ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போராட்டமாக அமைந்துள்ள இந்த புரட்சிகர மணவிழா குறித்த பதிவுகள் இந்த லைவ் பிளாக்-இல் (Live Blog) தொடர்ந்து பதிவிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்… | மண ஏற்பு விழா அழைப்பிதழ்

***

தோழர்கள் ராதிகா, ரவியின் புரட்சிகர மணவிழாவின் அரசியல் முக்கியத்துவத்தை உணர்த்தும் கட்டுரைகள்:

1. மணவிழா அழைப்பிதழில் கொலையுண்டவர்களின் படங்களா…?

மணவிழா அழைப்பிதழில் கொலையுண்டவர்களின் படங்களா…?

2. தோழர்கள் ராதிகா – ரவி மணவிழா: ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுக விழா!

தோழர்கள் ராதிகா – ரவி மணவிழா: ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுக விழா!

3. ஆணவப் படுகொலைக்கெதிரான இயக்கம்: பார்ப்பனிய, சாதி ஆதிக்கத்திற்கெதிரான எமது பண்பாட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சி…!

ஆணவப் படுகொலைக்கெதிரான இயக்கம்: பார்ப்பனிய, சாதி ஆதிக்கத்திற்கெதிரான எமது பண்பாட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சி…!

***

Live Blog:

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க