சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் || நூல்

டிசம்பர் 28 அன்று மதுரையில் நடைபெற உள்ள தோழர்கள் ராதிகா - ரவி சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவில், மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக இந்நூல் வெளியிடப்பட உள்ளது.

மிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான சாதி வெறியாட்டங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இச்சூழலில், “சாதி – மதம் கடந்து காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்..” என்ற முழக்கத்தின் கீழ் தோழர்கள் ராதிகா – ரவி ஆகியோரின் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக நடைபெற உள்ளது. தோழர்களின் இந்த சாதி மறுப்பு மணவிழா ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக மாற்றுப் பண்பாட்டை முன்னிறுத்தும் வகையில் நடைபெற உள்ளது. இம்மணவிழாவில் புதிய ஜனநாயகம் பதிப்பகம் சார்பாக “தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப் போகிறோம்?” என்ற நூலும், மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக “ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டுப் போர்” மற்றும் “சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன்”ஆகிய நூல்களும் வெளியிடப்பட உள்ளன. மதுரையில் டிசம்பர் 28 அன்று காலையில் நடைபெற உள்ள இம்மணவிழாவில் வாசகர்கள் கலந்துகொள்ளுமாறும் இந்நூல்களை வாங்கிப் படித்து மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்லுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

– வினவு

***

சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன்

இமானுவேல் சேகரன் இந்த மண்ணில் சிந்திய இரத்தம், அதன் ஈரம் இன்னும் காயவில்லை. கவின் போன்ற எண்ணற்ற இளைஞர்களின் ஆணவப் படுகொலையாலும், சாதியத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் வெட்டி வீழ்த்தப்படும்போதும் கொப்பளிக்கும் குருதி இமானுவேல் சேகரன் சிந்திய இரத்தத்தின் வேட்கையை இன்னும் சூடாக்குகிறது. அந்த வேட்கை விடுதலைக்கானது. அந்த வேட்கை சமத்துவத்துக்கானது. அந்த வேட்கை சாதி ஒழிப்புக்கானது.

இமானுவேல் சேகரன் அவர்களை சாதி ஒழிப்புப் போராளியாக சரியாக அடையாளம் காட்டி, அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட அரங்கக்கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரை இது.

ஈராயிரம் ஆண்டுகளாக வேரூன்றியிருக்கும் சாதிய நச்சு வேரை, அதை நிலைநிறுத்தியிருக்கும் பார்ப்பனியத்தை தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை உயர்த்திப் பிடித்து முறியடிக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு உள்ளது. அந்த மரபின் தொடர்ச்சிதான் சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன். இமானுவேல் சேகரன் அவர்களை சாதி ஒழிப்புப் போராட்டக் களத்தில் முன்னிறுத்தி உழைக்கும் மக்களை அணி திரட்டும் போர்வாளின் கூர்முனையே தோழர்களின் உரைகள்.

அமைதியாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது நதி. ஆனால் அதில் கலக்கப்படும் சாக்கடை போல, மனித மனங்களில் கலக்கப்படுகிறது சாதி. இது ஆதிக்கசாதி சங்கங்கள் மூலமாக இது மேலும் தூபம் போடப்பட்டு சாதிவெறியாக தூண்டப்படுகிறது. வடமாநிலங்களில் மதவெறி, மணிப்பூரில் இனவெறியைத் தூண்டி அதிகாரத்தை பிடித்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க இந்துத்துவ கும்பல்கள் தமிழ்நாட்டில், ஆதிக்க சாதி சங்கங்களை பின்னால் இருந்து தூண்டிவிட்டு தனது கொடுங்கோன்மையை நிறுவிக் கொள்ளத் துடிக்கிறது‌. அந்த கொடுங்கனவை சிதைத்து எறிய நமது தோள்களும் துடித்துக் கொண்டிருக்கிறது. உழைக்கும் மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தும் ஆதிக்க சாதி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ கும்பல் களையும் தடை செய்யாமல் சாதி வெறி படுகொலைகளை நம்மால் தடுக்க முடியாது.

இம்மண்ணில் சமத்துவத்தை நிலைநாட்ட உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவோம். பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு அமைக்க களமிறங்குவோம்.

வெளியீடு :
சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன்

முதற்பதிப்பு : டிசம்பர் 2025

வெளியிடுவோர் :
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுச்சேரி.

முகவரி :
எண்: 6, கருமாரப்பேட்டை,
மஞ்சக்குப்பம்,
தமிழ்நாடு – 607 001

தொடர்புக்கு : 99623 66321

நன்கொடை : ₹ 30

வாசகர்கள் வாங்கிப் படித்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுச்சேரி.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க