தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான சாதி வெறியாட்டங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இச்சூழலில், “சாதி – மதம் கடந்து காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்..” என்ற முழக்கத்தின் கீழ் தோழர்கள் ராதிகா – ரவி ஆகியோரின் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக நடைபெற உள்ளது. தோழர்களின் இந்த சாதி மறுப்பு மணவிழா ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக மாற்றுப் பண்பாட்டை முன்னிறுத்தும் வகையில் நடைபெற உள்ளது. இம்மணவிழாவில் புதிய ஜனநாயகம் பதிப்பகம் சார்பாக “தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப் போகிறோம்?” என்ற நூலும், மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக “ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டுப் போர்” மற்றும் “சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன்”ஆகிய நூல்களும் வெளியிடப்பட உள்ளன. மதுரையில் டிசம்பர் 28 அன்று காலையில் நடைபெற உள்ள இம்மணவிழாவில் வாசகர்கள் கலந்துகொள்ளுமாறும் இந்நூல்களை வாங்கிப் படித்து மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்லுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
– வினவு
***
தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்:
என்ன செய்யப் போகிறோம்?
2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நெல்லை நாங்குநேரியில் சின்னதுரை என்ற தலித் மாணவனை மறவர் சாதியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் வீடுபுகுந்து சரமாரியாக வெட்டிய சம்பவம், தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பள்ளர், பறையர், அதிருந்ததியர் மக்கள் மீது நடந்துவரும் தாக்குதல்களில் அது ஒரு சம்பவம் மட்டுமே.
அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில், குறிப்பாக தென்மாவட்டங்களில் ஆதிக்கச் சாதிவெறியர்களால் தலித் மக்கள் மீது ஏவப்படும் வன்முறைகளின் பல்வேறு பரிமாணங்கள், அவற்றிற்கான காரணங்கள், தலித் மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கான வழிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து “புதிய ஜனநாயகம்” மாத இதழ் சார்பாக “தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப் போகிறோம்?” என்ற சிறுநூல் 2023 அக்டோபரில் வெளியிடப்பட்டது.
இச்சிறுநூல் ஜனநாயக சக்திகளிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, உடனடியாக மறுபதிப்பு செய்யப்பட்டது. 2023 டிசம்பரில் கீழ்வெண்மணி ஈகியர் நினைவு நாளையொட்டி இச்சிறுநூல் மூன்றாவது முறை பதிப்பிக்கப்பட்டு, நேரடியாக கீழ்வெண்மணி நினைவிடத்தில் மக்களிடையே விநியோகிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரைகளையும் இணைத்து “புதிய ஜனநாயகம் பதிப்பகம்” சார்பாக, கடந்தாண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நூலாக வெளியிட்டோம். இது ஜனநாயக சக்திகளிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, சமூக வலைதளங்களில் இந்நூலின் விளம்பரத்தை பார்த்து பலரும் எம்மை தொடர்புகொண்டு நூலை வாங்கிக்கொண்டனர்.
இந்நூல் பெரும் வரவேற்பை பெற்றுவரும் அதேவேளையில், தலித் மக்கள் மீதான தாக்குதல் என்ற இப்பிரச்சினை மென்மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு தாக்குதலின் தன்மை, அதன் பின்னணி குறித்து புதிய ஜனநாயகம் இதழ் தொடர்ச்சியாக பதிவு செய்து வந்தது. அக்கட்டுரைகளையும் உள்ளடக்கி தற்போது மீண்டும் இந்நூலை மேம்படுத்தி கொண்டுவந்துள்ளோம்.
ஒரு ஜனநாயகமான சமூக மாற்றத்திற்கு தலித் மக்கள் மீதான சாதிவெறி வன்முறையாட்டங்கள் மிகப்பெரும் சவாலாகும். சாதிவெறியாட்டங்களை தடுத்துநிறுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் இந்நூலை, இன்னும் பரவலாக மக்களிடம் கொண்டுசெல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வெளியீடு :
தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப் போகிறோம்?
முதற்பதிப்பு : ஜனவரி 2025
இரண்டாம் பதிப்பு : டிசம்பர் 2025
வெளியிடுவோர் :
புதிய ஜனநாயகம் பதிப்பகம்,
15/5, தெற்கு ஜெகநாதன் தெரு,
1-வது மெயின் ரோடு, நேரு நகர்,
வில்லிவாக்கம், சென்னை – 600 049.
தொடர்புக்கு : 97915 59223
மின்னஞ்சல்: puthiyajananayagampublication@gmail.com
அச்சாக்கம்: எழில் பிரிண்ட்ஸ், சென்னை – 24
விலை : ₹ 60
வாசகர்கள் வாங்கிப் படித்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
தோழர் ஆகாஷ்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம் பதிப்பகம்,
9791559223.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











