தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான சாதி வெறியாட்டங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இச்சூழலில், “சாதி – மதம் கடந்து காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்..” என்ற முழக்கத்தின் கீழ் தோழர்கள் ராதிகா – ரவி ஆகியோரின் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக நடைபெற உள்ளது. தோழர்களின் இந்த சாதி மறுப்பு மணவிழா ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக மாற்றுப் பண்பாட்டை முன்னிறுத்தும் வகையில் நடைபெற உள்ளது. இம்மணவிழாவில் புதிய ஜனநாயகம் பதிப்பகம் சார்பாக “தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப் போகிறோம்?” என்ற நூலும், மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக “ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டுப் போர்” மற்றும் “சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன்”ஆகிய நூல்களும் வெளியிடப்பட உள்ளன. மதுரையில் டிசம்பர் 28 அன்று காலையில் நடைபெற உள்ள இம்மணவிழாவில் வாசகர்கள் கலந்துகொள்ளுமாறும் இந்நூல்களை வாங்கிப் படித்து மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்லுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
– வினவு
***
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டுப் போர்
“சாதி-மதம் கடந்து காதலிக்க, மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்கிற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் ரவி என்கிற செல்வகணேசுக்கும் தோழர் ராதிகாவிற்கும் வருகின்ற டிசம்பர் 28-ஆம் தேதி சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா நடைபெறவுள்ளது.
இம்மணவிழாவை ஒரு மக்கள் இயக்கமாக, ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போராக மக்கள் அதிகாரக் கழகம் முன்னெடுத்து வருகிறது. அதனையொட்டி மக்கள் அதிகாரக் கழகம் சார்பாகக் கொண்டுவரப்பட்ட கட்டுரைகள், துண்டறிக்கைகள், மற்றும் அறிக்கைகளைத் தொகுத்து “ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டுப் போர்” என்ற தலைப்பில் இந்நூல் வெளியிடப்படுகிறது.
மேலும், 1997-இல் ம.க.இ.க. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட “சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின்” ஒரு பகுதியாக ஏழு இணையர்களுக்கு சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா நடத்தப்பட்டது. அம்மணவிழா 28 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், அதன் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில் “புதிய ஜனநாயகம்” நவம்பர் 2022 இதழில் வெளியான கட்டுரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
சாதி ஒழிப்புப் போராட்டத்தில் சாதி மறுப்பு மணங்களின் பங்களிப்பையும், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்களை முன்னிறுத்த வேண்டிய தேவையையும் இந்நூல் வலியுறுத்துகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆதிக்கச் சாதி வெறியாட்டங்கள், சாதி ஆணவப் படுகொலைகள் அதிகரித்துவரும் இவ்வேளையில் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான மாற்றுப் பண்பாட்டை நிறுவ வேண்டிய அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது. இதனை ஜனநாயக சக்திகள், பார்ப்பனிய எதிர்ப்பு சக்திகள் மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வெளியீடு :
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டுப் போர்
முதற்பதிப்பு : டிசம்பர் 2025
வெளியிடுவோர் :
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுச்சேரி.
முகவரி :
எண்: 6, கருமாரப்பேட்டை,
மஞ்சக்குப்பம்,
தமிழ்நாடு – 607 001
தொடர்புக்கு : 99623 66321
நன்கொடை : ₹ 30
வாசகர்கள் வாங்கிப் படித்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுச்சேரி.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











