தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா மார்ச் 7ஆம் தேதி பேருற்சாகத்துடன் நடைபெறும்!

தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான துண்டறிக்கைகள், பல்லாயிரக்கணக்கான சுவரொட்டிகள் மூலமும் பல நூற்றுக்கணக்கான காணொளிகள் மூலமும் தொடர்ந்து மேற்கொண்டு வந்த பரப்புரை பயணம், இதுபோன்ற தடங்கல்களால் ஒருபோதும் நிற்கப் போவதில்லை. ஆகவே தமுக்கம் திடலில் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா
மார்ச் 7ஆம் தேதி பேருற்சாகத்துடன் நடைபெறும்!

21.02.2026

பத்திரிகைச் செய்தி

க்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் 21.02.2026 அன்று தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவை மதுரை தமுக்கம் திடலில் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். தமிழ்நாடு முதல்வரின் வருகையைக் காரணம் காட்டி இறுதி நேரத்தில் போலீசும் மாநகராட்சி நிர்வாகமும் சேர்ந்து பெருவிழாவிற்கு அனுமதி தர மறுத்துவிட்டன.

அனுமதி அளித்த சில நாட்களிலேயே அனுமதி தொடர்பான முடிவை போலீஸ் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்ட போதும் கூட மதுரை மாவட்ட போலீஸ் உயர்நீதிமன்றத்திற்குக் கட்டுப்படாமல், 20.02.2026 அன்று மாலை 3 மணிக்கு மேல் அனுமதி மறுப்பதாகத் தெரிவித்தது. இதனை எமது அமைப்புகள் வன்மையாகக் கண்டிக்கின்றன.

தமிழ்நாடு முதல்வரின் வருகை என்பது பத்து நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்ட பிறகும் கூட எங்களுக்கு போலீசும் மாநகராட்சி நிர்வாகமும் முறையாக அறிவிப்பு செய்யவில்லை. இது தவறான நடைமுறையாகும்.

தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான துண்டறிக்கைகள், பல்லாயிரக்கணக்கான சுவரொட்டிகள் மூலமும் பல நூற்றுக்கணக்கான காணொளிகள் மூலமும் தொடர்ந்து மேற்கொண்டு வந்த பரப்புரை பயணம், இதுபோன்ற தடங்கல்களால் ஒருபோதும் நிற்கப் போவதில்லை.

ஆகவே தமுக்கம் திடலில் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்கு அனைவரும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் அதிகாரக் கழகம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு),
தமிழ்நாடு – புதுச்சேரி.
9962366321, 9791653200,
9444836642, 7397404242.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க