Friday, May 2, 2025
முகப்பு பதிவு

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 ஜனவரி, 1991 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 4 | 1991 ஜனவரி 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஜெயலலிதா: தமிழ்நாட்டின் அரசியல் சீக்கு
  • வாசகர் கடிதம்
  • மத்தியப் படைகள் குவிப்பு மாநில அதிகாரம் பறிப்பு
  • பொருளாதாரத் தாக்குதலின் துவக்கம்
  • அரசியல் சூதாட்ட துருப்புச் சீட்டுகள்
  • கூட்டுக் கொள்ளைக்குக் கூட்டுறவு சங்கங்கள்
  • கொலையாளிகளின் காவலர்களாக போலீசு
  • இதில் யார் முஸ்லீம்? யார் இந்து? மதவெறி -நரபலி
  • விலைபோகும் நீதித்துறை
  • அவதூறுகளையே விமர்சனங்களாக்கும் வீரமணி கும்பல்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • வானளாவிய அதிகாரத்தின் விளைவு
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மே தின வரலாறு | அலெக்ஸாண்டர்  ட்ராச்டென்பர்க் | பாகம் 1

மே 1, 1909 அன்று நியூயார்க் நகரில் நடந்த பேரணி

குறைந்த வேலை நேரத்துக்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை மிகப் பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்துறை ஓர் அமைப்பாக வளர்ந்தபொழுது இப்போராட்டம் வெளிப்பட்டது.

இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஆரம்ப நாட்களில் பல வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்தன. ‘அதிக ஊதியம் வேண்டும்’ என்பதுதான் இந்த வேலை நிறுத்தங்களில் முக்கிய கோரிக்கையாக எழுப்பப்பட்டது. இருந்தபோதிலும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வகுத்த போதெல்லாம் குறைந்த வேலை நேரம், சங்கம் சேரும் உரிமை போன்ற பிரச்சினைகளை முன்வைத்தனர். தொழிலாளர்கள் வெகுவாக சுரண்டப்பட்ட காலகட்டம் அது. நீண்ட வேலை நேரங்கள் அவர்களை மேலும் துன்பப்படுத்தின. எனவே, வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக எழுப்பப்பட்டது.

‘அதிகாலை முதல் அந்தி சாயும்வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக் குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர். பதினான்கு, பதினாறு, ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது சாதாரண விஷயங்கள். 1806 ஆம் ஆண்டு பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களின் தலைவர்கள் மீது சதி வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மின்போது தொழிலாளர்கள் பத்தொன்பது. இருபது மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டார்கள் என்ற விஷயம் வெளியே வந்தது.

1820 மற்றும் 30களில் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று பற்பல வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. ‘பத்துமணி நேர வேலைநாள்’ என்ற கோரிக்கை பல தொழில் மையங்களில் முன் வைக்கப்பட்டது. பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதற்தொழிற்சங்கமாகக் கருதப்படுகிறது. இந்த தொழிற்சங்கம் உருவான இரு ஆண்டுகளுக்குப் பின்புதான் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகத் துவங்கின. பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன்முதலாக வைத்த பெருமை இச்சங்கத்துக்கே உண்டு. 1827ல் பிலடெல்பியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தில் தான் இந்தக் கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது. 1834ல் நியூயார்க்கில் ரொட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இந்த ரொட்டித் தொழிலாளர்கள் எகிப்திய அடிமைகளைக் காட்டிலும் அதிகம் துன்புற்றனர். நாளொன்றுக்கு அவர்கள் பதினெட்டிலிருந்து இருபது மணி நேரம் வேலை செய்ய வேண்டி வந்தது என்ற செய்தியை அப்போது வெளியான ‘தொழிலாளருக்காக வாதிடுபவன்’ (Workingmen’s Advocate) என்ற பத்திரிகை வெளியிட்டது. பத்து மணி நேர வேலைநாளுக்கான இப்போராட்டங்கள் விரைவிலேயே ஓர் இயக்கமாக உருவெடுத்தன. 1837ல் ஏற்பட்ட நெருக்கடி ஒரு தடையாக இருந்தபோதிலும் வேன் பியுரன் தலைமையிலான அரசாங்கம், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பத்து மணி நேர வேலைநாள் அறிவித்தது. எல்லோருக்கும் பத்து மணி நேர வேலைநாள் என்பதற்காக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பல தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைய உடனே தொழிலாளர்கள் 8 மணி நேர வேலைநாள் என்ற கோஷத்தை எழுப்பினர்.

தொழிற்சங்க இயக்கத்தின் அதிவேக வளர்ச்சியால் 1850களில் இக்கோரிக்கை புதிய உத்வேகத்தை அடைந்தது. 1857ல் ஏற்பட்ட நெருக்கடி இந்த உத்வேகத்திற்கு ஒரு தடையானது. இருந்தபோதிலும் நன்கு வளர்ச்சி பெற்ற தொழிற்சங்கங்கள் அதற்கு முன்பே இக்கோரிக்கையை அடைந்தன.இவ்வாறு குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட அனைத்து வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக வெகுதூரத்தில் இருந்த ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேரப் பொழுது போக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன்வைத்து 1858ல் அதை அடைவதில் வெற்றியும் பெற்றனர்.

எட்டு மணி நேர இயக்கம் அமெரிக்காவில் துவங்கியது

1884ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின்போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன. ஆனாலும், இதற்கு ஒரு தலைமுறை முன்பே தேசிய தொழிற்சங்கம் குறைந்த வேலை நேரத்துக்கான கோரிக்கையை முன்வைத்து பரந்த இயக்கத்தையே நடத்தியது. ‘தேசிய தொழிற்சங்கம்’ அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க ஸ்தாபனமாக அப்போது விளங்கியது.

1861-62ல் உள்நாட்டுப் போர் துவங்கியது. இதற்கு சற்று முன்பே துவங்கப்பட்ட வார்ப்பட அச்சுத் தொழிலாளர் சங்கம், இயந்திரத் தொழிலாளர்கள் சங்கம், கொல்லர்கள் சங்கம் போன்ற தேசியத் தொழிற்சங்கங்கள் அப்போது மறையத் துவங்கின. ஆனபோதிலும் அதற்கடுத்த சில ஆண்டுகளில் பல உள்ளூர் தேசியத் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் எழுச்சியும் உருவானது. இவ்வாறு பல தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து 1866 ஆகஸ்டு 20ம் நாள் பால்டிமோர் என்னுமிடத்தில் தேசியத் தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இதன் தலைவராக வில்லியம் எச். சில்விஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாற்றியமைக்கப்பட்ட வார்ப்பட அச்சுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராவார். தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியமானவராய் கருதப்பட்ட இவர் ஓர் இளைஞர். இவர்லண்டனில் இருந்த முதலாவது இண்டர் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். இதன் நேஷனல் காரணமாக தேசிய தொழிற்சங்கத்துக்கும் இன்டர்நேஷனலின் பொதுக் குழுவுக்கும் இடையே உறவை ஏற்படுத்தியது அவரால் முடிந்தது.

தேசியத் தொழிற்சங்கத்தின் முதல் மாநாடு 1866ல் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“அமெரிக்கா முழுமைக்கும் 8 மணி நேர வேலைநாள் என்பதை சட்டமாக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ அடிமைத்தனத்திலிருந்து நாட்டின் உழைப்பை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனையடைய நாம் நமது சக்தி அனைத்தையும் ஒன்றுத் திரட்டத் தீர்மானிக்கிறோம்.”

மேலும் இம்மாநாட்டில் 8 மணி நேர வேலைநாளை சட்டபூர்வமாக சுயேச்சையான அரசியல் நடவடிக்கை வேண்டும் மற்றும் தொழிலாளர் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. தேசியத் தொழிற்சங்கப் போராட்டங்களினால் 8 மணி நேரக் குழுக்கள் ஏற்பட்டன. மேலும், இச்சங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் பல மாநில அரசுகள் அரசு வேலைகளில் எட்டு மணி நேர வேலைநாளை அமுல்படுத்தின. 1868ல் அமெரிக்க காங்கிரசும் இதே போன்ற ஒரு சட்டத்தை இயற்றியது. பாஸ்டனைச் சேர்ந்த இயந்திரத் தொழிலாளியான ‘ஐராஸ் டூவர்டு’ என்பவர்தான் இந்த 8 மணி நேர இயக்கத்தின் எழுச்சியூட்டும் தலைவராக விளங்கினார். ஆரம்ப தொழிலாளர் இயக்கத்தின் கொள்கைகள், திட்டங்கள் பழமையானதாக இருந்தன. இவை எல்லா நேரங்களிலும் சரியாக இருந்தன என்றும் சொல்ல முடியாது. ஆனாலும், அடிப்படையில் இந்த இயக்கம் பாட்டாளி வர்க்கத்தின் வலுவான அடிப்படைகளைக் கொண்டிருந்தது. மேலும் திருத்தல்வாதத் தலைவர்கள், முதலாளித்துவ அரசியல் வாதிகள் இந்த இயக்கத்தில் ஊடுருவாமல் இருந்திருப்பார்களினால் இந்த இயக்கம் போர்க்குணமிக்க தோழிலாளர் இயக்கத்தின் ஆரம்ப கட்டமாக இருந்திருக்கும். இவ்வாறு நான்கு தலைமுறைகளுக்குப் பின் அமெரிக்காவில் தேசியத் தொழிற்சங்கமானது முதலாளித்துவ அடிமைத்தனத் திற்கெதிராகவும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்காகவும் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டது.

சில்விஸ் தொடர்ந்து லண்டனிலுள்ள இண்டர்நேஷனலோடு தொடர்பு கொண்டிருந்தார். இவரைத் தலைவராகக் கொண்ட 1867ல் நடைபெற்ற தேசியத் தொழிற்சங்க மாநாடு சர்வதேச தொழிலாளிவர்க்க இயக்கத்தோடு ஒத்துழைக்க வேண்டும் என முடிவு செய்தது. 1869ல் இண்டர்நேஷனலில் பொதுக்குழுவின் அழைப்பிற்கிணங்க பேச்சில் நடைபெற்ற இண்டர்நேஷனல் காங்கிரசுக்கு ஒரு பிரதிநிதியை அனுப்ப முடிவு செய்தது. ஆனால், துரதிஷ்டவசமாக மாநாட்டிற்குச் சற்று முன்பு சில்விஸ் மரணமடைந்தார். எனவே சிக்கா கோவிலிருந்து வெளிவந்த “வொர்க்கிங்மென்ஸ் அட்வகேட்” பத்திரிகையின் ஆசிரியரான ஏ.சி. காமெரான் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார்.

மாநாட்டில் பொதுக்குழு அந்த நம்பிக்கையூட்டும் இளம் அமெரிக்கத் தொழிலாளர் தலைவனுக்கு ஒரு சிறப்பு தீர் மானத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. “பாட்டாளி வர்க்க ராணுவத்தின் தளபதியாக பத்தாண்டு காலம் மாபெரும் திறமையோடு பணியாற்றிய சில்விஸ் எல்லோருடைய கவனமும் திரும்பும் வகையில் செயல்பட்டவர். ஆம் அந்த சில்விஸ்தான் இறந்துவிட்டார்” என்றது அஞ்சலித் தீர்மானம். சில்விஸின் மறைவு தேசியத் தொழிற்சங்கத்தின் அழிவுக்கு ஒரு காரணமாகி பின்னால் அது மறையவும் காரணமாயிற்று.

எட்டு மணி நேர இயக்கம் குறித்து மார்க்ஸ்

1866ஆம் ஆண்டு 8 மணி நேர வேலைநாள் என்ற முடிவை தேசியத் தொழிற்சங்கம் எடுத்தது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் கூடிய இண்டர் நேஷனலின் காங்கிரசும் இதே கோரிக்கையைப் பின்வருமாறு முழங்கியது.

“வேலைநாளுக்கு சட்டபூர்வமான அளவு முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்க முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது… வேலைநாளுக்கான சட்டபூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும் என்று இம்மாநாடு முன்மொழிககிறது”. தேசிய தோழிற் சங்கத்தின் இந்த 8 மணி நேர இயக்கத்தைக் குறித்து மார்கள் 1867ல் வெளியான ‘மூலதனம்’ புத்தகத்தில் ‘வேலை நாள் குறித்து’ எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறார். கறுப்பு மற்றும் வெள்ளைத் தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையைப் பற்றிய அந்த புகழ்பெற்ற பத்தியில் பின்வருமாறு எழுதுகிறார்: “அமெரிக்க ஐக்கியக் குடியரசின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்த விதமான சுயேச்சையான தொழிலாளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருந்தது. தொழிலாளர்களில் ஒரு பகுதி கறுப்பு இனத்தவர் என்று முத்திரையிடப்பட்டிருக்கும் வரையில் வெள்ளைத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே விடுதலை தேடிக்கொள்ள முடியாது. ஆனால், அடிமைத்தனத்தின் அழிவிலிருந்துதான் புதிய உத்வேகமுள்ள வாழ்க்கை பிறந்தது. உள்நாட்டுப் போரின் முதல் பலனே 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டமாகும். இது ஒரு இயக்கமாக அதி வேகத்துடன் அட்லாண்டிக் முதல் பசிபிச் வரையிலும், நியூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரையிலும் பரவியது.”

இரு வார வித்தியாசத்தில் நடைபெற்ற பால்டிமோர் தொழிலாளர் மாநாடும், ஜெனிவா இண்டர்நேஷனல் காங்கிரசும் ஒரே சமயத்தில் 8 மணி நேர வேலைநாளை முன்மொழிந்தன என்பதை மார்க்ஸ் சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு அட்லாண்டிக்கின் இருபுறமும் உற்பத்தி முறை நிலைமையால் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இயல்பாக ஏற்பட்ட வளர்ச்சி ஒரே விதமான இயக்கத்தை அதாவது எட்டு மணி நேர வேலைநாளுக்கான இயக்கத்தை உருவாக்கியது.

ஜெனிவா காங்கிரஸ் முடிவு எவ்வாறு அமெரிக்க முடிவோடு ஒத்துப்போகிறது என்பதை தீர்மானத்தின் பின்வரும் பகுதி காட்டுகிறது. “வடஅமெரிக்க ஐக்கிய நாட்டுத் தொழிலாளர்களின் பொதுவான கோரிக்கையாக இந்த அளவு இருப்பதால், இந்த காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை உலகத்தின் அனைத்து தொழிலாளர்களுக்குமான பொது மேடையில் முன்வைக்கிறது.”

அமெரிக்கத் தொழிலாளர் இயக்கத்தின் இந்த செல்வாக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு இதே போன்ற காரணங்களுக்காக இன்னும் வேகமாக சர்வதேச காங்கிரசில் செலுத்தப்பட்டது.

அமெரிக்காவில் மே தினம் பிறந்தது

முதல் இண்டர்நேஷனல் 1872ல் தன் தலைமையகத்தை லண்டனிலிருந்து நியூயார்க்கிற்கு மாற்றியது. அது அப்போது சர்வதேச ஸ்தாபனமாக விளங்கவில்லை. பின் 1876ல் இது அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. பின் இது மாற்றியமைக்கப்பட்டு இரண்டாவது இண்டர்நேஷனல் என்று அழைக்கப்பட்டது. இதன் முதல் மாநாடு 1889ல் பாரிஸில் நடைபெற்றது. இம்மாநாட்டில்தான் மே முதல் நாள் என்பது உலகத் தொழிலாளர்கள் தங்கள் அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் கீழ் மிக முக்கிய அரசியல் கோரிக்கையாக 8 மணி நேர வேலைநாளுக்கு போர்க் குரல் கொடுக்க வேண்டிய தினம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1884, அக்டோபர் 7ம் நாள் சிக்காகோவில் அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பின் மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு முடிவே பாரிஸ் மாநாட்டு முடிவுக்கு அடிகோலாக விளங்கியது. அம்மாநாட்டில் அமெரிக்க மற்றும் கனடா தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்கள் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

“1886 மே முதல் நாள் முதல் சட்டப்பூர்வமான வேலை நாள் என்பது 8 மணி நேரம்தான் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் ஸ்தானப் படுத்தப்பட்ட தொழிற்சங்கம் மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு தீர்மானிக்கிறது. எனவே எல்லா தொழிலாளர் அமைப்புகளும் தங்கள் அதிகார வரம்பிற்குரிய இடத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இத்தீர்மானத்திற்கு ஏற்ப தங்கள் சங்க விதிகளை அமைத்துக்கொள்ளுமாறு இம்மாநாடு பரிந்துரைக்கிறது.”

எட்டு மணி நேர வேலை நேரத்தை எப்படி கொண்டு வருவது என்பது பற்றி கூட்டமைப்புத் தீர்மானத்தில் ஏதும் சொல்லப்படவில்லை. இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50,000க்கு உட்பட்டது. தங்கள் உறுப்பினர்கள் வேலை செய்யும் கடை, ஆலை, சுரங்கங்களில் போராடி இன்னும் அதிகமான தொழிலாளர்களைத் திரட்ட வேண்டும் என்பதை அறிந்திருந்தது. அப்போதுதான் 8 மணி நேர வேலைநாளை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பதை அறிவிக்க முடியும் என்பதையும் உணர்ந்திருந்தது. 1886, மே முதல் நாள் 8 மணி நேர வேலைக்காக போராடும் தொழிலாளிகளுக்கு உதவும் பொருட்டே “தீர்மானத்திற்கேற்ப சங்க விதிகள் அமைய வேண்டும்” என அறிவித்திருந்தது. வேலைநிறுத்தத்தின்போது வெகு நாட்கள் வெளியே தங்க நேரிடலாம். அப்போது சங்கத்தின் உதவி தேவை. மேலும், இவ்வேலைநிறுத்தம் தேசிய அளவில் நடைபெறுவதாலும் இணைக்கப்பட்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் கலந்துகொள்வதால் அவர்கள் விதிப்படி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு தங்கள் உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகிறது. இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கூட்டமைப்பானது தற்போது அமெரிக்கத் கூட்டமைப்பைப் போலவே சுயேச்சையாகக் கூட்டமைப்பு முறையில் தொழிலாளர் உருவானது. எனவே கூட்டமைப்பில் இணைந்த தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்தால்தான் தேசிய மாநாட்டின் முடிவுகள் அவற்றைக் கட்டுப் படுத்தும்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 10

17. தொழிலாளர்கள், குடியானவர்களின் சாதனைகள் லெனின் எதிர்பார்த்ததற்கும் மேலானவை

சோவியத் அரசாங்கத்தின் வலிமையும் நீடித்த நிலைப்பும் சிலர் அனுமானிப்பது போல எல்லா நியதிகளும் மீறப்படுவதிலோ, அறிவுக்கு எட்டாத விதியின் விந்தை விளையாட்டிலோ அடங்கியிருக்களில்லை. அது எதை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று லெனின் சொன்னாரோ அதையே தொழிலாளர்கள், குடியானவர்களின் திண்ணமான சாதனைகளையே அது ஆகாரமாகக் கொண்டிருக்கிறது.

பொருளாதாரத் துறையில் லினன், நெருப்புக் குச்சிகள் ஆகியவை தயாரிப்பதற்கும் ருஷ்யாவின் பேரளவான முற்றாக நிலக்கரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய செயல்முறைகளை அவர்கள் தொடங்கியுள்ளனர். இயந்திரத் தொழிற்சாலைகளையும் மின்னாக்க நிலையங்களையும் நிறுவுவது முதல் பால்டிக் கடலுக்கும் வோல்கா ஆற்றுக்கும் இடையே பெரிய கால்வாயை ஆழப்படுத்துவது. நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்துக்கு இருப்புப் பாதைகள் அமைப்பது வரை விரிவான பொறி இயல் நிறுவனச் செயல்களை அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இராணுவத் துறையில் தொழிலாளர்களும் குடியானவர்களும் கண்டிப்பான இராணுவக் கட்டுப்பாட்டுக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டார்கள். இந்தக் கட்டுப்பாடு செஞ்சேனையை உலகிலேயே விறல்மிக்க போர் இயந்திரங்களில் ஒன்றாக மாற்றிவிட்டது. இந்தப் பாட்டாளிகள் தனிவகை உளத்திண்மையும், உற்சாக உணர்ச்சியும் கொண்டிருக்கிறார்கள். இதற்குமுன் அவர்கள் எப்போதும் ஏதேனும் மேல் வகுப்பினரின் நலன்களுக்காகவே போரிட்டு வந்திருக்கிறார்கள். தங்கள் நலன்களுக்காகவும் உலகின் உழைப்பாளிகள், சுரண்டப்படும் மக்களுடைய நலன்களுக்காகவும் இப்போதுதான் முதல் தடவையாக உணர்வுபூர்வமாக அவர்கள் போர்கள் புரிந்து வருகிறார்கள்.

ஆயினும் பண்பாட்டுத் துறையில்தான் இந்த “அறிவு மங்கிய மக்களின்” வெற்றிகள் மிகக் குறிப்பிடத்தக்கவை ஆகும். மனிதனைக் கட்டற்றவன் ஆக்கிவிட்டால் அவன் படைக்கிறான். புத்துணர்ச்சியின் ஊக்கமூட்டும் ஸ்பரிசத்தின் விளைவாகப் பத்து புதுப் பல்கலைக்கழகங்களும் டஜன் கணக்கான நாடக மன்றங்களும் ஆயிரக்கணக்கான நூலகங்களும், பதினாயிரக்கணக்கான பொதுப் பள்ளிகளும் தோன்றியுள்ளன.

இந்த எதார்த்தங்கள்தாம் மக்ஸீம் கோர்க்கியை²⁶ சோவியத்துக்களின் ஆதரவாளராக மாற்றின. அவர் எழுதுகிறார்: “ருஷ்ய அரசாங்கத்தின் பண்பாட்டுப் படைப்புச் செயல் மனித குல வரலாற்றில் இதற்குமுன் அறியப்படாத பரப்பு எல்லையையும் வடிவத்தையும் விரைவில் மேற்கொண்டுவிடும். பண்பாட்டுத் துறையில் ருஷ்யத் தொழிலாளர்களின் சென்ற ஆண்டுச் சாதனையின் பெருமாண்பை வியந்து பாராட்டாமல் இருக்க வருங்கால வரலாற்று ஆசிரியனால் முடியாது.”

பொதுமக்கள் எத்தகைய இடையூறுகளுக்கு நடுவே உழைத்தார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இந்தச் சாதனைகள் இன்னும் பிரம்மாண்டமானவையும் முக்கியத்துவம் உள்ளவையும் ஆகிவிடுகின்றன. அவர்கள் அரசாங்கத்தைக் கையில் எடுத்துக்கொண்ட போது நூற்றாண்டுக்கணக்காகக் கொடுமைப்படுத்தவும் வறுமைக் குள்ளாக்கவும் நசுக்கவும் பட்டு வந்த மக்களே மரபுரிமையாக அவர்களுக்குக் கிடைத்திருந்தார்கள். உலக மகாயுத்தம் அவர்களுடைய உழைப்புத் திறன் கொண்ட இருபது லட்சம் ஆண்களைப் பலிவாங்கியிருந்தது. இன்னும் முப்பது லட்சம் ஆண்களை அது அங்கவீனர்கள் ஆக்கியிருந்தது லட்சக்கணக்கான அனாதைகளையும் குருடர்கள், செவிடர்கள், ஊமைகள் ஆகியோரையும் பராமரிக்கும் பொறுப்பு அவர்கள் மீது சார்ந்திருந்தது. இருப்புப் பாதைகள் தகர்க்கப்பட்டிருந்தன, சுரங்கங்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. உணவு, எரிபொருள் சேமிப்புகள் அனேகமாகத் தீர்ந்து போயிருந்தன. யுத்தத்தினால் சிதறுண்டு போய், புரட்சியினால் மேலும் தகர்க்கப் பட்டிருந்த பொருளாதார இயந்திரத்தின் மீது ஒரு கோடிப் படைவீரர்களைப் படைக் கலைப்புச் செய்யும் பொறுப்பு திடீரென்று சுமத்தப்பட்டது. அவர்கள் அமோகமாக தானியப் பயிர் விளைத்திருந்தார்கள். ஆனால் ஜப்பானியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், அமெரிக்கர்கள் ஆகியோரின் உதவியுடன் செக்கோஸ் லோவாக்கியர்கள்²⁷ சைபீரியத் தானிய வயல்களிலிருந்து அவர்களுடைய தொடர்பைத் துண்டித்துவிட்டார்கள். உக்ரேனியத் தானிய வயல்களிலிருந்து பிற புரட்சி எதிர்ப்பாளர்கள் இவ்வாறே அவர்களைத் துணிந்து அகற்றிவிட்டார்கள். “இப்போது பட்டினியின் எலும்புக்கை மக்களின் குரல்வளையை நெரித்து அவர்களுக்குப் புத்தி புகட்டும்” என்றார்கள். சோவியத் தொழிலாளர்கள் சர்ச்சை அரசிலிருந்து சமயவிலக்குச் செய்யப்பட்டார்கள். பழைய அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக மறைமுக நாச வேலைகள் செய்தார்கள். அறிவுஜீவிகள் அவர்களைக் கைவிட்டார்கள், நேச நாட்டினர் அவர்களை முற்றுகையிட்டார்கள். நேச நாட்டினர் எல்லா வகையான அச்சுறுத்தல்களாலும் கைக் கூலிகளாலும் கொலைகளாலும் சோவியத் தொழிலாளர்களின் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றார்கள். பிரிட்டிஷ் ஏஜெண்டுகள் பெரிய நகரங்களுக்குத் தேவைப் பொருள்கள் செல்லவிடாது தடுக்கும் பொருட்டு பாலங்களை வெடிவைத்துத் தகர்த்தார்கள். தங்கள் தாதுவ நிலையங்களிலிருந்து காப்புரிமை பெற்றிருந்த பிரெஞ்சு ஏஜெண்டுகள் ரெயில் எஞ்சின்களின் உராய்வு தாங்கிகளில் குருந்தக் கல்லை வைத்து அவற்றைச் சிதைத்தார்கள்.

இந்த எதார்த்த நிகழ்ச்சிகளுக்கு எதிர் நின்று லெனின் பின்வருமாறு கூறினார்:

“ஆம், நமக்கு விறல்மிக்க பகைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை எதிர்ப்பதற்குப் பாட்டாளிகளின் இரும்புப் பட்டாளம் நம்மிடம் உள்ளது. விரிவான பெரும்பான்மையினர் இன்னும் உண்மையாக உணர்வு பெறவில்லை. அவர்கள் இன்னும் ஊக்கத்துடன் செயல்படவில்லை. இதன் காரணம் தெளிவு அவர்கள் போரினால் களைத்து, பசியால் வாடிச் சோர்ந்திருக்கிறார்கள். புரட்சி இப்போது மேற்போக்காகத்தான் இருக்கிறது. ஆனால் ஓய்வு கிடைத்ததும் மக்களிடையே பெருத்த உளமாற்றம் ஏற்படும். அது உரிய நேரத்துக்குள் மட்டும் ஏற்பட்டுவிட்டால் சோவியத் குடியரசு காப்பாற்றப்பட்டுவிடும்.”

லெனினது கருத்துப்படி 1917, நவம்பர் மாத நிகழ்ச்சி திரளான பொதுமக்கள் காட்சிப் பகட்டான முறையில் பாய்ந்து தாக்கி ஆட்சியைக் கைப்பற்றியது புரட்சி அல்ல. இந்தத் திரளான மக்கள் தங்கள் குறிக்கோளை உணர்ந்து, கட்டுப்பாட்டையும் ஒழுங்கான உழைப்பையும் மேற்கொண்டு, தங்களது பெருத்த படைப்பாற்றல்களையும் ஆக்கத் திறன்களையும் செயலில் ஈடுபடுத்துவதுதான் புரட்சி ஆகும்.

அந்தத் தொடக்க நாட்களில் சோவியத் குடியரசு காக்கப்பட்டுவிட்டது என்ற உறுதியான நம்பிக்கை லெனினுக்கு ஒருபோதும் ஏற்படவில்லை. “இன்னும் பத்து நாட்கள்! அப்புறம் நாம் பாரிஸ் கம்யூன் அளவு காலம் நீடித்து நிலைத்திருந்தவர்கள் ஆகிவிடுவோம்” என்றார். பெத்ரோகிராதில் நடந்த சோவியத்துக்களின் மூன்றாவது அகில ருஷ்யக் காங்கிரஸின் முன் தமது உரையை அவர் பின்வரும் சொற்களில் தொடங்கினார்: “தோழர்களே, பாரிஸ் கம்யூன் எழுபது நாட்களே நிலைத்திருந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். நாம் ஏற்கெனவே அதை விட இரண்டு நாட்கள் அதிகமாக நீடித்திருந்துவிட்டோம்.”

பதின்மடங்கு எழுபது நாட்களுக்கும் மேல் மாபெரும் ருஷ்யக் கம்யூன் பகைவர்களின் உலகத்தை எதிர்த்துத் தாக்குப் பிடித்துவிட்டது. பாட்டாளி மக்களின் விடாப்பிடி இடையறா முயற்சி, அசையா உறுதி, வீரம் ஆகியவற்றின் மீதும் பொருளாதார, இராணுவ பண்பாட்டுத் துறைகளில் அவர்களுடைய வருங்கால வாய்ப்புக்கள் மீதும் லெனின் கொண்டிருந்த நம்பிக்கை மிகப் பெரிது. அவர்களுடைய சாதவைகள் அவரது பற்றார்ந்த நம்பிக்கையின் மெய் மட்டுமே அல்ல அவருக்கே அவை பெரு வியப்பின் ஊற்றுக்கண்ணாக விளங்குகின்றன.

18. ருஷ்யப் புரட்சி லெனினைச் சாராது தனித்த வெற்றி ஆகும்.

லெனின் ருஷ்ய வானில் எழுந்து உலக அரங்கின் மையப் பிரமுகர் ஆகிவருகையில் அவரைச் சுற்றி ஒரு விவாதப் புயல் உக்கிரமாக வீசிக் கொண்டிருக்கிறது.

திகிலடைந்த பூர்ஷ்வா வர்க்கத்துக்கு அவர் எதிர்பாராப் பேரிடியாக இயற்கையின் பயங்கர உற்பாதமாக, உலகையே அழிக்கும் கொள்ளை நோயாகத் தோற்றம் அளிக்கிறார்.

இரகசியவாதப் போக்கு உள்ளவர்களுக்கு, விந்தையான முறையில் நிறைவேறிய போருக்கு முந்திய தீர்க்கதரிசன உரையில் குறிப்பிடம் பட்ட மாபெரும் “மங்கோலிய ஸ்லாவியர்” வடிவில் அவர் காட்சி தருகிறார். இந்தத் தீர்க்கதரிசன உரை தல்ஸ்தோயால் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. உலக மகாயுத்தம் நிகழும் என்று முன்னுரைத்தபின் இந்த உரை கூறுவதாவது: “ஐரோப்பா முழுவதும் தீப்பட்டெரிவதையும் குருதி பெருக்குவதையும் நான் காண்கிறேன். பெரிய போர்க்களங்களின் புலம்பல்களை நான் கேட்கிறேன். 1915ஆம் ஆண்டு வாக்கில் வடக்கிலிருந்து ஒரு விந்தை மனிதர் இந்த உதிரப் பெருக்கு நாடகத்தில் பிரவேசிக்கிறார். அவர் இராணுவப் பயிற்சி அற்றவர். எழுத்தாளர் அல்லது பத்திரிகையாளர். ஆயினும் ஐரோப்பாவின் பெரும் பாகம் 1925 வரை அவருடைய பிடிக்குள் இருக்கும்.”

பிற்போக்குச் சர்ச்சின் கண்களுக்கு லெனின் கிறிஸ்து விரோதி. புனிதக் கொடிகளையும் தேவ உருவங்களையும் சுற்றிக் குடியானவர்களை அணிதிரட்டி அவர்களைச் செஞ்சேனைக்கு எதிராக நடத்திச் செல்லப் பாதிரிகள் முயல்கிறார்கள். ஆனால் குடியானவர்களோ, “அவர் கிறிஸ்து விரோதியாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு நிலமும், விடுதலையும் கொண்டு தருகிறார். அப்படியிருக்கும்போது அவருக்கு எதிராக நாங்கள் எதற்காகச் சண்டை செய்ய வேண்டும்?” என்று சொல்லுகிறார்கள்.

சாதாரண மனிதர்களுக்கோ லெனின் அனேகமாக அதிமனித மகத்துவம் உள்ளவராகத் தோன்றுகிறார். அவர் ருஷ்யப் புரட்சியை ஆக்கியவர். சோவியத்தை நிறுவியவர், ருஷ்யாவின் இன்றையச் சிறப்புக்கள் எல்லாவற்றுக்கும் காரண புருஷர். “லெனினையும் த்ரோத்ஸ்கியையும் கொன்றுவிட்டால் புரட்சியையும், சோவியத்துக்களையும் கொன்றுவிடுவீர்கள்”

இவ்வாறு நினைப்பது வரலாற்றை மாபெரும் மனிதர்களின் படைப்பு என்று கருதுவதாகும். பெரிய நிகழ்ச்சிகளும் சகாப்தங்களும் மாபெரும் தலைவர்களாலே நிச்சயிக்கப்படுவது போல இது அர்த்தப்படும். ஒரு சகாப்தம் முழுவதும் ஒரு தனி நபரின் வெளியீடு பெறலாம் என்பதும் ஒரு பெரிய பொதுஜன இயக்கம் ஒரு தனி மனிதரைக் குவிமுனையாகக் கொண்டிருக்கலாம் என்பதும் உண்மையே. ஆனால் வரலாற்றில் தனி நபரின் பங்கு பற்றிய கார்லைலின் கருத்துக்கு நாம் இந்த அளவுக்கு மட்டுமே விட்டுக் கொடுக்க முடியும்.

ருஷ்யப் புரட்சி ஒரு தனி மனிதரையோ அல்லது மனிதர்களின் ஒரு குழுவையோ ஆதாரமாகக் கொண்டு இயங்குவதாகக் காட்டும் வரலாற்று விளக்கம் எதுவும் தவறான வழியில் இட்டுச் செல்வது ஆகும். ருஷ்யப் புரட்சியின் நற்பேறு தமது கைகளிலோ தமது கூட்டாளிகளின் கைகளிலோ இருக்கிறது என்ற கருத்தை எல்லோருக்கும் முன்னர் லெனினே எள்ளி நகையாடுவார்.

ருஷ்யப் புரட்சியின் தலைவிதி அது எந்த ஊற்றுக் கண்ணிலிருந்து உற்பத்தி ஆயிற்றோ அதிலேயே வெகுஜனங்களின் உள்ளங்களிலும் சுரங்களிலுமேயே இருக்கிறது. எந்தப் பொருளாதாரச் சக்திகளின் அழுத்தம் இந்த வெகு ஜனங்களைச் செயலில் ஈடுபடுத்தியதோ, அவற்றை அது சார்ந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக இந்த மக்கள் அசைவின்றி பொறுமையாக, நீண்ட துன்பத்தில் உழன்று வந்தார்கள். ருஷ்யாவின் விரிந்த பெருவெளிகள் எங்கணும், மாஸ்கோச் சமவெளிகளிலும் உக்ரேனிய ஸ்தெப்பிகளிலும் சைபீரியாவின் பேராறுகளை ஒட்டிய பகுதிகள் யாவற்றிலும் இந்த மக்கள் வறுமையின் சாட்டையடியால் உந்தப்பட்டு, மூடநம்பிக்கைகளால் பிண்ணிப்பினைந்து உழைத்து வந்தார்கள். அவர்களது நிலைமை கால்நடைகளின் நிலைமையைவிட மேம்பட்டதாக இல்லை. ஆனால் எல்லா விஷயங்களுக்கும் ஏழைகளின் பொறுமைக்குக்கூட முடிவு உண்டு.

1917, மார்ச் மாதம் நகர மக்கள் தங்கள் விலங்குகளை உலகம் எங்கும் கேட்ட மடார் ஒலியுடன் உடைத்து எறிந்தார்கள். படை வீரர்களின் சைனியத்தின் பின் சைனியமாக அவர்களது உதாரணத்தைப் பின்பற்றிக் கிளர்ச்சி செய்தது. பின்பு புரட்சி கிராமங்களுக்குள் புகுந்து பரவியது. மேலும் மேலும் ஆழச் சென்று மிகப் பின்தங்கிய பகுதியினரின் உள்ளங்களிலும் புரட்சி உணர்ச்சியை மூட்டிவிட்டது. முடிவில் பதினாறு கோடி மக்கள் பிரெஞ்சுப் புரட்சியில் இருந்ததுபோல் ஏழு மடங்கு மக்கள் தொகை கொண்ட நாடு அனைத்தும் தீவிர எழுச்சிக் கொந்தளிப்புற்றது.

மாண்புசால் காட்சி ஒன்றால் வசீகரிக்கப்பட்டு ஒரு மக்களினம் முழுவதும் கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு புது அமைப்பை நிறுவமுற்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளில் மனித உணர்ச்சியின் மிகப் பெருத்த இயக்கம் இது ஆகும். வெகு ஜனங்களின் பொருளாதார நலன் என்ற மூலக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நியாயத்தின் பொருட்டு நடத்தப்பெறும் யாவற்றிலும் அசையா உறுதிமிக்க தாக்குதல் இதுவே ஆகும். ஒரு நாடு முழுவதும் அறப்போர் வீரனாக மாறி, புது உலகம் பற்றிய காட்சிக்கு உரிய விசுவாசத்தைக் கடைப்பிடித்தவாறு, பட்டினியையும், யுத்தத்தையும் முற்றுகையையும் சாவையும் மதியாமல் வீறுநடை நடந்து முன்னே செல்கிறது. மக்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ளாத தலைவர்களை ஒருபுறம் பெருக்கித் தள்ளிவிட்டு, அவர்களுடைய தேவைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் ஏற்பச் செயலாற்றுபவர்களைப் பின்பற்றியவாறு அது விரைந்து முன்னே ஏகுகிறது.

ருஷ்யப் புரட்சியின் விதி வெகுஜனங்களையே, அவர்களது கட்டுப்பாட்டையும் ஆழ்ந்த பற்றையுமே சார்ந்திருக்கிறது. அதிர்ஷ்டம் அவர்களிடம் மிகவும் அன்பு காட்டியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. பேரறிவும் எஃகுச் சித்தவுறுதியும் வாய்ந்த ஒருவரை, விரிந்த நூற்பயிற்சியும் அச்சமற்ற செயல்வன்மையும் கொண்ட ஒருவரை, மிக உயர்ந்த ஆதர்சவாதமும் மிகக் கண்டிப்பான நடைமுறை மதிநுட்பமும் உடைய ஒருவரை அவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளக்குபவராகவும் அது நல்கியிருக்கிறது.


26. மக்ஸீம் கோர்க்கி (பேஷ்கல் அ.ம.) (1868-1936) மாபெரும் பாட்டாளி வர்க்க எழுத்தாளர்.

27. ருஷ்யாவில் செக்கோஸ்லோவாக்கியப் படைப்பிரிவுகள் முதலாவது உலக யுத்தத்தின்போது செக், ஸ்லோவாக் போர்க் கைதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டன. 1918, மே மாதத்தில் பிரெஞ்சு பிரிட்டிஷ் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் சோஷலிஸ்ட் புரட்சிவாதிகள், மென்ஷெவிக்குகள் ஆகியோரின் செயலூக்கமுள்ள உதவியுடன் வோல்காப் பிரதேசத்திலும் சைபீரியாவிலும் செக் படைப் பிரிவுகளில் புரட்சி எதிர்ப்புக் கலகத்தை மூட்டிவிட்டார்கள்.

(முற்றும்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஜே.என்.யு தேர்தல்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – ஏ.பி.வி.பி அடித்தளத்தை வேரறுக்க வேண்டும்! | தோழர் தீரன்

ஜே.என்.யு தேர்தல்:
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – ஏ.பி.வி.பி அடித்தளத்தை
வேரறுக்க வேண்டும்! |
தோழர் தீரன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 9

15. அமெரிக்கர்களையும் முதலாளிகளையும் சலுகைகளையும் பற்றிய லெனினது போக்கு

அமெரிக்கத் தொழில்நுட்ப நிபுணர்களையும், பொறி இயலாரையும் நிர்வாகிகளையும் லெனின் சிறப்பாகப் பெரிதும் மதித்தார். அவர்கள் ஐயாயிரம் பெயர் வேண்டும் என அவர் விரும்பினார். அவர்கள் உடனே வேண்டுமென விரும்பினார். அவர்களுக்கு மிக உயர்ந்த சம்பளங்கள் கொடுக்கத் தயாராயிருந்தார். அமெரிக்காவின்பால் தனிப்பட்ட மனச்சாய்வு கொண்டிருந்ததற்காக அவர் இடைவிடாது தாக்கப்பட்டு வந்தார். அவருடைய எதிரிகள் அவரை “அமெரிக்க பாங்கு முதலாளிகளின் ஏஜெண்டு” என்று இகழ்ச்சியாகக் குறிப்பிட்டார்கள். விவாத மும்முரத்தில் இடதுசாரியினர் இந்தக் குற்றச்சாட்டை நேரிலேயே பயன்படுத்தினார்கள்.

உண்மையில் அமெரிக்க முதலாளித்துவம் எந்தப் பிற நாட்டின் முதலாளித்துவத்தையும்விடத் தீமையில் குறைந்தது என அவர் எண்ணவில்லை. ஆனால் அமெரிக்கா வெகு தொலைவில் இருந்தது. சோவியத் ருஷ்யாவின் வாழ்க்கைக்கு அது நேரடி அபாயம் விளைவிக்கவில்லை. சோவியத் ருஷ்யாவுக்குத் தேவையாயிருந்த சரக்குகளையும், நிபுணர்களையும் அளிக்கும் நிலையில் அது இருந்தது. “எனவே, விசேஷ ஒப்பந்தம் செய்துகொள்வது இரு நாடுகளின் பரஸ்பர நலன்களுக்கும் ஏன் ஏற்றதாகாது?” என்று கேட்டார் லெனின்.

ஆனால் ஒரு கம்யூனிஸ்ட் அரசு முதலாளித்துவ அரசுடன் உறவுகள் வைத்துக்கொள்ள முடியுமா? இந்த இரு வடிவங்களும் அருகருகே வாழ முடியுமா? இந்தக் கேள்விகள் லெனினிடம் நோதோவால் கேட்கப்பட்டன.

“ஏன் முடியாது?” என்றார் லெனின். “எங்களுக்குத் தொழில்நுட்ப நிபுணர்களும் விஞ்ஞானிகளும் பல்வகை இயந்திரத் தொழில் செய்பொருள்களும் தேவை. இந்த நாட்டின் பிரம்மாண்டமான வளங்களை அபிவிருத்திச் செய்ய நாங்கள் தனியே திறனற்றவர்கள் என்பது தெளிவு. இந்த நிலைமைகளில், ருஷ்யாவில் நாங்கள் கடைப்பிடிக்கும் கோட்பாடுகள் எங்கள் எல்லைகளுக்கு வெளியே அரசியல் ஒப்பந்தங்களுக்கு இடம் கொடுத்து விலகிக்கொள்ள வேண்டும் என்பதை, இது எங்களுக்கு உவப்பாக இல்லாவிடினும்,ம்நாங்கள் ஒப்புக்கொண்டாக வேண்டும். எங்கள் வெளிநாட்டுக்கடன்களுக்கு வட்டி கொடுப்பதாக நாங்கள் மிக நேர்மையுடன் சொல்லுகிறோம். ரொக்கமாகக் கொடுக்க இயலாவிடில் நாங்கள் அவற்றைத் தானியமாகவும், எண்ணெயாகவும் எங்களிடம் வளமாக உள்ள எல்லா வகைக் கச்சாப் பொருள்களின் வடிவிலும் செலுத்துவோம்.

“ஆந்தாந்த் வல்லரசுகளின் குடிகளுக்கு காடுகள், சுரங்கங்கள் பற்றிய சலுகைகள் வழங்க நாங்கள் நிச்சயித்துள்ளோம். எப்போதும் இதற்கான நிபந்தனை, ருஷ்ய சோவியத்துக்களின் முக்கியக் கோட்பாடுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதாகும். தவிரவும் பழைய ருஷ்ய சாம்ராஜ்யத்தின் ஏதேனும் பிரதேசத்தைச் சில நேச வல்லரசு களுக்கு ஒப்படைக்க மகிழ்வுடன் அல்ல, போனால் போகட்டும் என்ற உணர்வுடன்தான் என்றாலும் நாங்கள் சம்மதிக்கக் கூடச் செய்வோம். ஆங்கில, ஜப்பானிய, அமெரிக்க முதலாளிகள் இத்தகைய சலுகைகளை மிகப் பெரிதும் விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

” ‘வெலீக்கிய் ஸேவெர்னிய் பூத்’, அதாவது மாபெம் வடக்கு ரெயில்பாதை கட்டுவதை ஒரு சர்வதேசக் கழகத்திற்கு நாங்கள் ஒப்படைத்துள்ளோம். நீங்கள் அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது சுமார் 3,000 கிலோமீட்டர்கள் நீளமான ரெயில் பாதை ஒனேகா வளைகுடாவின் அருகே தொடங்கி கோட்லாஸின் வழியாக உரால் மலைத் தொடரைக் கடந்து ஓப் ஆறு வரை இது செல்லும் 80 லட்சம் ஹெக்டேர் நிலமும் பயன்படுத்தப்படாத எல்லாவகைச் சுரங்கங்களும் கொண்ட பிரம்மாண்டமான கன்னிக் காடுகள் இருப்புப் பாதை நிறுவும் கம்பெனியின் அதிகார எல்லைக்குள் வரும்.

“இந்த அரசு உடைமை குறித்த காலத்துக்கு, ஒருவேளை எண்பது ஆண்டுகளுக்கு, விட்டுக் கொடுக்கப்படுகிறது, மீட்டுப் பெறும் உரிமையுடன். எட்டு மணி வேலைநாள், தொழிலாளர் ஸ்தாபனங்களின் கட்டுப்பாடு ஆகியவை போன்ற சோவியத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கோருகிறோம். இதற்கும் கம்யூனிஸத்துக்கும் வெகுதூரம் என்பது உண்மையே. எங்களது ஆதர்சத்துக்கு இது சற்றும் பொருந்தவில்லை. சோவியத் சஞ்சிகைகளில் இந்தப் பிரச்சினை மிகக் கடுமையான விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது என்பதை நான் சொல்லிவிட வேண்டும். ஆனால் பரிணமிப்புக் காலகட்டத்தில் தேவையாயிருப்பதை ஒப்புக்கொள்ள நாங்கள் நிச்சயித்திருக்கிறோம்.”

நோதோ சொன்னார்: “அப்படியானால், வெளிநாட்டு முதலாளிளுக்கு இங்கே எதிர்ப்படும் அபாயங்களை இந்த அபாயங்கள் அகற்றப்பட்டுவிட்டதாகத் தெரியவில்லை. எந்த நேரத்திலும் இவை இன்னும் கடுமையாகலாம் என்ற அச்சம் இருக்கிறது கருத்தில் கொண்டால், ருஷ்யாவுக்கு வரவும் அது புய செல்வ வளங்களை விழுங்க அனுமதிக்கவும் நிதியதிபர்கள் துணிவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? தங்கள் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சைனியத்தின் பாதுகாப்பு இல்லாமல் இம்மாதிரிக் காரியத்தை அவர்கள் தொடங்க மாட்டார்கள். வெளிநாட்டுப் படைகள் உங்கள் பிரதேசத்தை இவ்வாறு கைப்பற்றிக் கொள்வதற்கு நீங்கள் இசைவீர்களா?”

“இதற்குத் தேவையே இருக்காது. ஏனெனில் தான் விதித்துக் கொண்ட நிபந்தனையை சோவியத் அரசாங்கம் உண்மையுடன் கடைப்பிடிக்கும். ஆனால் எல்லா நோக்கு நிலைகளும் பரிசீலிக்கப் படலாம்.”

மாபெரும் மாஸ்கோ பொருளாதார ஆலோசனை சபையின் 1919, ஜூன் மாதக் கூட்டத்தில்,ஜெர்மனியுடன் பொருளாதாரக் கூட்டுறவை ஆதரித்துப் போராடியவர்களுக்கு எஞ்சினீயர் க்ராஸின்²² தலைமை தாங்கியதாகவும் அவருக்கு எதிராக, அமெரிக்காவுடன் பொருளாதாரக் கூட்டுறவுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதை ஆதரித்து லெனினும் சிச்சேரினும்²³ போராட்டம் நிகழ்த்தியதாகவும் மேற்படிக் கூட்ட விவரங்கள் தெரிவிக்கின்றன.

16. பாட்டாளிகள் மீது லெனின் கொண்டிருக்கும் பெருத்த நம்பிக்கை

பாட்டாளி வர்க்கமே புரட்சியின் இயக்கு சக்தி, அதன் ஆன்மாவும் தசை நாணும் என்று லெனின் திண்ணமாகக் கருதினார் புதிய சமூகம் நிறுவப்படுவதற்கான நம்பிக்கைக்கு ஒரே ஆதாரம் பொது மக்களே என அவர் எண்ணினார். ஆனால் பொதுவாகப் பரவியிருந்த கருத்து இது அல்ல. ருஷ்ய மக்களைப் பற்றி பொதுவாக நிலவும் கருத்து, அவர்கள் மண்ணை நம்பி வாழும் பாங்கற்ற பிராணிகள், திறமையற்றவர்கள், சோம்பேறிகள், எழுத்தறிவில்லாதவர்கள், வோத்காவையே குறியாகக் கொண்ட இருள்மதியினர், ஆதர்சவாதம் அற்றவர்கள், விடாப்பிடியாக முயலத் திறன் இல்லாதவர்கள் என்பதே ஆகும்.

இதற்கு எதிராக மேலெழுந்து நிற்கிறது “அறிவீனர்களான” வெகு ஜனங்கள் பற்றிய லெனினது மதிப்பீடு. அவர்களுடைய அசைவற்ற உளத் திண்மையையும், பற்றுறுதியையும், தியாகங்கள் செய்யவும் துன்பங்களைத் தாங்கவும் அவர்களுக்குள்ள திறனையும் பெரிய அரசியல் கருத்துகளைப் புரிந்துகொள்ளும் அவர்களது சக்தியையும், அவர்களுக்குள் மறைந்திருக்கும் பெருத்த படைப்பு, ஆக்க ஆற்றல்களையும் லெனின் பல நீண்ட ஆண்டுகளாக விடாது வலியுறுத்தினார். வெகுஜனங்களின் சுபாவத்தின் மீது அநேகமாகத் துணிச்சலான நம்பிக்கை போல இது தோன்றுகிறது. ருஷ்யத் தொழிலாளி மீது நம்பிக்கை வைக்கும் லெனினது துணிவை விளைவுகள் எவ்வளவு தூரத்துக்குச் சரி என்று காட்டியுள்ளன?

ருஷ்யாவில் மேற்பரப்புக்கு அடியில் பார்வை செலுத்தியுள்ள எல்லா அவதானிக்கையாளர்களும் பெரிய அரசியல் கருத்துகளைப் புரிந்து கொள்ளும் ருஷ்யத் தொழிலாளிகளின் திறனைக் கண்டு பெரு வியப்பு அடைந்திருக்கிறார்கள். ரூட் தூதுக் கோஷ்டியின்²⁴ ஓர் உறுப்பினர் இதனால் ஆச்சர்யம் அடைந்து பின்வருமாறு கேட்டார்: “மெய்யாகவே கற்றறிந்தவர்கள் எல்லோராலும் அறிவினர்கள், மந்த புத்தி உள்ளவர்கள் என்று கருதப்பட்ட ருஷ்ய மக்களின் பெருந்திரளின் இவ்வளவு பெரிய பகுதியினர் ஏனைய உலகிற்கு இவ்வளவு புதியதும், அதற்கு இவ்வளவு தூரம் முன்னே உள்ளதுமான சமூகத் தத்துவத்தை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டது எவ்வாறு நிகழ்ந்தது?” “இளைஞர் கிறிஸ்துவ சங்கத்தாலும்”²⁵ பிற ஸ்தாபனங்களாலும் அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ருஷ்யத் தொழிலாளிகளுக்குப் புதிராக இருந்தார்கள். இந்தப் “பயிற்சி நிபுணர்கள்” அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள். எனினும் சோஷலிஸத்துக்கும் சிண்டிக்கலிஸத்துக்கும் அராஜக வாதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை இவர்கள் அறிந்திருக்கவில்லை. லட்சோப லட்சம் ருஷ்யத் தொழிலாளிகளின் கல்வியிலோ இது அரிச்சுவடிக்கு ஒப்பாயிருந்தது.

அமெரிக்கப் பிரசார ஏஜெண்டுகள் ஜனாதிபதி வில்ஸனின் பதினான்கு அம்சங்கள் பற்றிய உரையின் பிரதிகளை லட்சக்கணக்கில் ருஷ்யாவில் வினியோகித்தார்கள்.

தொழிலாளர்கள் அல்லது குடியானவர்களுக்கு இந்தப் பிரதி களைக் கொடுத்துவிட்டு, “இந்த உரையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று அவர்கள் கேட்பார்கள்.

”படிப்பதற்கு நன்றாய்த்தான் இருக்கிறது” என்று ருஷ்யர்கள் பொதுவாகப் பதில் அளிப்பார்கள். “ஆனால் இதன் பின்னே ஒன்றும் இல்லை. ஜனாதிபதி வில்சனின் மூளையில் இந்த ஆதர்சங்கள் இருக்கலாம் ஆயினும் தொழிலாளிகள் அரசாங்கத்தை நிர்வகிக்காவிட்டால் சமாதான உடன்படிக்கையில் இந்த ஆதர்சங்களில் எதுவும் இராது”.

ருஷ்யர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்ட பிரபல அமெரிக்கப் பேராசிரியர் அவர்களுடைய சந்தேகப் போக்கு குறித்து நகைத்தார். இப்போதோ, தமது வெகுளித்தனமான நம்பிக்கையை எண்ணி அவர் நகைக்கிறார். பின்தங்கிய ருஷ்யாவின் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த சிறு சோவியத்துக்களில் உள்ள இந்த “அறிவு மங்கிய மக்கள்” சர்வதேச அரசியலைத் தம்மைவிட நன்றாகப் புரிந்துகொண்டது எப்படி என்று அவர் அதிசயிக்கிறார்.

பொதுமக்களின் உடனடியான தன்னலத்தைத் தூண்டி விடுவது ஒன்றுதான் அவசியமானது என்ற திட்டத்தின் பேரில் பிரிட்டிஷார் செயல் புரிந்தனர். மக்களை ஏமாற்றித் தம்பால் ஈர்ப்பதற்காகப் பழக்கூழ், விஸ்கி, கோதுமை மாவு ஆகியவற்றுடன் அவர்கள் அர்காங்கேல்ஸ்க் நகருக்கு வந்து சேர்ந்தார்கள். பட்டினியால் நலிந்த மக்கள் இந்தப் பரிசுகளைப் பெற்று மகிழ்ந்தார்கள். ஆனால் இவை தங்களைக் குருடாக்குவதற்கான கைக்கூலிகள் என்பதையும் இந்தப் பொருள்களின் விலை ருஷ்யாவின் பிரதேச முழுமையும் விடுதலையுமே என்பதையும் கண்டதும் அவர்கள் படையெடுப்பாளர்களுக்கு எதிராகக் கிளம்பி அவர்களை நாட்டை விட்டுத் துரத்தியடித்தார்கள்.

ருஷ்யப் பொதுமக்களின் விடாப்பிடியையும், அசையா உறுதியையும் பற்றிய லெனினது நம்பிக்கையைக் காலமும் சரி என மெய்ப்பித்து விட்டது. 1917ஆம் ஆண்டு கூறப்பட்ட பயங்கரமான வருங்கால உரைகளை இன்றைய உண்மை விவரங்களுடன் ஒப்பு நோக்குங்கள். “மூன்றே நாட்களில் அவர்கள் ஆட்சி ஒழிந்துவிடும்” என்று அப்போது கொக்கரித்தார்கள் சோவியத்துக்களின் பகைவர்கள். மூன்று நாட்களும் மேலும் அத்தனை நாட்களும் கழிந்தபின், “அதிகமாய்ப் போனால் மூன்றே வாரங்கள் மட்டுமே சோவியத் நிலைத்திருக்க முடியும்” என்ற கூச்சல் கிளப்பப்பட்டது. மீண்டும் அவர்கள் கூச்சலை மாற்ற நேர்ந்தது. இந்தத் தடவை அது “மூன்று மாதங்கள்” ஆயிற்று. இப்போது, எண் மடங்கு மூன்று மாதங்கள் கழிந்துவிட்டபின் சோவியத்துக்களின் விரோதிகள் தங்கள் ஆதரவாளர்களுக்குக் கூறக்கூடியதெல்லாம் “மூன்று வருஷங்கள்” என்பதே.


22. க்ராஸின் லி.பொ. (1870-1926) – முக்கியமான சோவியத் ராஜதந்திரி, ஆட்சியாளர்.

23. சிச்சேரின் கி.வ.(1872-1936) – முக்கியமான சோவியத் ராஜதந்திரி, ஆட்சியாளர்.

24. ரூட் தூதுக் கோஷ்டி எ.ரூட் (1845-1937) என்பவரின் தலைமையில் 1917ஆம் ஆண்டு ருஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட விசேஷ அமெரிக்கத் தூதுக் கோஷ்டி ருஷ்யா போரிலிருந்து விலகுவதைத் தடுப்பதும் புரட்சி இயக்கத்தை எதிர்த்துப் போராடத் தற்காலிக அரசாங்கத்துக்கு உதவுவதும் இதன் நோக்கம்.

25. இளைஞர் கிறிஸ்துவ சங்கம் இளைஞர்களின் பூர்ஷ்வாஸ்தானம். ருஷ்யாவில் இதன் பிரதிநிதிகள் மதப் பிரசாரமும் சோவியத் எதிர்ப்புப் பிரசாரமும் செய்து வந்தார்கள்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 டிசம்பர், 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 3 | 1990 டிசம்பர் 16-31, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பரவும் மதவெறி பாசிசம் – பயங்கரம்
  • தண்ணீர் கேட்டால் ரத்தம் கேட்கும் போலீசு
  • கடற்படையில் தளபதியின் பதவிச் சண்டை
  • ராஜீவ் – சந்திரசேகர் கூட்டு உருவாக்கும்
    புது அரசியல் பாரம்பரியம்
  • அசாம்: பாசிச கும்பலின் பகற்கனவு பலிக்காது
  • தி.மு.க. ஆட்சி கலைக்கப்படுமா?
  • அயோத்தி: அகழ்வாராய்ச்சி மோசடி
  • அவதூறுகளையே விமர்சனங்களாக்கும் வீரமணி கும்பல்
  • வல்லம்: தி.க.வின் மேல்சாதிவெறி
  • மூச்சுத் திணறவைக்கும் விலையேற்றம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • வங்கதேசம்: எர்ஷாத் வீழ்ந்தான்
  • பாகிஸ்தான்: அரங்கேறும் சர்வாதிகாரம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஜகபர் அலி, ஜாகிர் உசேன்.. தொடரும் படுகொலைகள் – கிரிமினல்மயமான அரசே குற்றவாளி!

படுகொலை செய்யப்பட்ட ஜகபர் அலி மற்றும் ஜாகிர் உசேன்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிவெறித் தாக்குதல்கள், திருட்டு, கொலை, கொள்ளை என தமிழ்நாட்டில் நாள்தோறும் பல குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கெதிராக குரலெழுப்பும் எதிர்க்கட்சிகளும் ஜனநாயக சக்திகள் பலரும் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆனால், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவே இப்பிரச்சினைகளுக்கான காரணம் என்பது ஒரு பக்கப் பார்வை மட்டுமே. ஏனெனில், இக்குற்றங்களுக்கு பின்னணியில் சமூக-பொருளாதார-அரசியல் காரணங்களும் இருக்கின்றன. புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிவந்த ஜகபர் அலி, மயிலாடுதுறையில் சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள், நெல்லையில் செயல்பட்டுவந்த சமூக சேவகர் ஜாகிர் உசேன் ஆகியோரின் அடுத்தடுத்த படுகொலைகள் இதனை நிரூபிக்கின்றன.

சமூக ஆர்வலர்களின் படுகொலைகள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் காட்டுப்பாவா பள்ளிவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யபுரம், துலையானூர், லெம்பலாக்குடி பகுதிகளில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அப்பகுதியிலுள்ள மண்ணையும் மலைகளையும் புறம்போக்கு நிலங்களையும் கனிமவள மாஃபியா கும்பல்கள் ஆக்கிரமித்து, எம்.சாண்ட், ஜல்லி என அப்பகுதி இயற்கை வளங்களைச் சூறையாடி வருகிறது.

இதற்கெதிராக போராடிவந்த ஜகபர் அலி, இக்கொள்ளையில் முதன்மையாக ஈடுபட்டுவரும் ஆர்.ஆர். குழுமம் 70,000 லாரி அளவிலான கற்களைத் திருடி வைத்திருப்பதாகவும், தட்டிக் கேட்பவர்களை குண்டர் படைகளைக் கொண்டு மிரட்டுவதாகவும், தான் கொல்லப்படுவதற்கு முன்பு கடைசியாக வெளியிட்ட காணொளியில் கூறியிருந்தார். இக்கனிம வளக் கொள்ளைக் குறித்து மாவட்ட ஆட்சியர், டி.ஆர்.ஓ., கோட்டாட்சியர், வட்டாட்சியர், கனிம வளத்துறை என பல்வேறு அரசுத்துறைகளிடம் மனு கொடுத்து முறையிட்டதாகவும், “கொஞ்ச நாள் பொறுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம்” என்று அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும், இதனால் மக்களைத் திரட்டி போராட உள்ளதாகவும் அக்காணொளியில் ஜகபர் அலி குறிப்பிட்டிருந்தார்.

ஜனவரி 10 அன்று விரிவான ஆதாரங்களுடன் கோட்டாட்சியரிடம் புகாரளித்துவிட்டு இக்காணொளி வெளியிடப்பட்டிருந்த நிலையில், புகார் கொடுத்த ஒரு வாரத்தில் ஜகபர் அலி லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டார். ஜனவரி 18 அன்று மதியம் தொழுகை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த ஜகபர் அலி மீது டிப்பர் லாரி மோதி தூக்கியெறியப்பட்டதில் நிகழ்விடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஜகபர் அலியின் படுகொலையை விபத்தாக சித்தரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர், ஜனநாயக சக்திகள் மற்றும் சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் ஆகியோரின் தொடர் போராட்டத்தால்தான் அவரது மரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது என்பது அவரது மரணத்தைவிட கொடூரமானதாகும்.

இவரது மரணம் சமூக ஊடகங்களிலும், தமிழ்நாடு அரசியல் களத்திலும் பெரும் விவாதப்பொருளாகிய பிறகுதான், ஆர்.ஆர். கல் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ், லாரி ஓட்டுநர், லாரி உரிமையாளர் ஆகியோர் போலீசால் கைது செய்யப்பட்டனர். ஜகபர் அலி வழக்கானது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டிருக்கிறது. அவரது மரணத்திற்கு பிறகே, கனிமவளத்துறை அதிகாரிகள் ஆர்.ஆர். குழுமத்தின் சட்டவிரோத கல்குவாரிகளை ‘ஆய்வு செய்ததாக’ செய்திகள் வெளியாகின.

அடுத்ததாக, மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையை தட்டிக் கேட்டதற்காக ஹரிஷ், ஹரிசக்தி என்ற இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், இப்படுகொலைக்கும் சாராய விற்பனைக்கும் தொடர்பில்லை என்றும் வாய் தகராறு காரணமாகத்தான் இக்கொலை நடந்துள்ளதாகவும் அப்பட்டமாக பொய்யுரைத்தது போலீசு. ஆனால், வாய் தகராறு காரணமாக கொலை நடந்திருந்தால், இவ்வழக்கை விசாரித்துவந்த பெரம்பூர் போலீசு நிலையத்தின் 19 போலீசுகள் ஏன் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர் என்று கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது.

ஏற்கெனவே, இப்பகுதியில் சாராய விற்பனை குறித்து பலமுறை புகாரளித்தும் போலீசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒருவேளை போலீசு முன்னரே சாராய விற்பனையை தடுப்பதற்கு முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்விரு இளைஞர்களின் உயிர் பறிபோய் இருக்காது என்பதே கசப்பான உண்மை.

இறுதியாக, தமிழ்நாட்டை உறையவைத்த ஓய்வுபெற்ற போலீசு உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் படுகொலை. 60 வயதான உசேன் நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் மசூதியில் நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். எனவே, வக்ஃப் வாரிய சொத்துகளைப் பாதுகாப்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்.

குறிப்பாக, வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான 36 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற தவ்ஃபீக் என்ற நபரிடமிருந்து அந்தச் சொத்தை பாதுகாப்பதன் மூலம் அதில் ஏழை, எளியோருக்கான நற்காரியங்களை செய்ய வேண்டும் என்பதே ஜாகிர் உசேனின் நோக்கமாக இருந்துள்ளது. கிருஷ்ணமூர்த்தி என்ற தவ்ஃபீக் இந்துவாக இருந்து இஸ்லாமியராக மதம் மாறியவராவார். இந்த தவ்ஃபீக்தான், கூலிப்படை மூலம் உசேனை படுகொலை செய்திருக்கிறார்.

உசேன் கொலை செய்யப்படுவதற்கு முன்பு உருக்கமான ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். “என்னை 30-க்கும் மேற்பட்ட கும்பல் கொலை செய்ய சுற்றிக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமான நபர் தவ்ஃபீக். இந்தக் கொலை மிரட்டலுக்கு காரணம் நெல்லை டவுன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் செந்தில்குமார். எப்படியும் என்னை கொன்றுவிடுவார்கள்” என்று அவர் கூறுவதுடன் அக்காணொளி நிறைவடைகிறது.

ஜாகிர் உசேன், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பல முறை புகாரளித்தும் போலீசு அதனை கண்டுகொள்ளவில்லை. மாறாக, கோபால கிருஷ்ணன், செந்தில்குமார் ஆகிய இரண்டு போலீசு அதிகாரிகளும் தவ்ஃபீக்கிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஜாகீர் உசேன் மீது பொய்வழக்கு போட்டதோடு, அவரை மிரட்டி பணம் பறிக்கவும் முயன்றுள்ளனர்.

மேலும், உசேனின் கொலையில் உதவி மின்பொறியாளர் அருணன் மற்றும் எம்.ஏ.கே. டைல்ஸ் நிறுவன முதலாளி ஆகியோருக்கு சம்பந்தமிருப்பதாக உசேனின் மகள் கூறியிருப்பதன் மூலம், இக்கொலைக்கு வெறும் 36 சென்ட் நிலம் மட்டும் காரணம் இல்லை என்பது தெளிவாகிறது.

உசேன் படுகொலை குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜாகிர் உசேன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமூக வலைதளங்களில் காணொளி வெளியிட்டதை தொடர்ந்து, ஏற்கெனவே பதியப்பட்ட சி.எஸ்.ஆர். அடிப்படையில், அவரை அச்சுறுத்துவதாக குறிப்பிட்ட எதிர்த்தரப்பினரை திருநெல்வேலி மாநகர போலீசு நிலையத்துக்கு அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணை நடைபெற்றுவரும் சூழ்நிலையிலேயே, இந்தக் கண்டிக்கத்தக்க சம்பவம் நடைபெற்றுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

மு.க.ஸ்டாலினோ, எதிர்க்கட்சிகளோ கூறுவது போல இப்படுகொலைகளுக்கான காரணம் முன்விரோதமோ சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையோ மட்டுமல்ல. இப்படுகொலைகளை வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாக சுருக்குவதென்பதே பிரச்சினையின் முழுப் பரிமாணத்தை மக்களிடமிருந்து மூடிமறைப்பதாகும்.

அரசு கட்டமைப்பு கிரிமினல்மயம்

தனிப்பட்ட ரீதியில் போலீசு, அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காததால் இப்படுகொலைகள் நடக்கின்றன என்று சுருக்கிப் பார்ப்பதாலேயே மேற்குறிப்பிட்ட கொலைகள் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், கொல்லப்பட்டவர்கள் தனிநபர் பிரச்சினைக்காக கொலை செய்யப்படவில்லை, அவர்கள் சமூகத்திற்காக செயல்படக் கூடியவர்களாக, குற்றத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்களாக இருந்துள்ளனர். இவர்களைப் பாதுகாக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு இந்த அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் இருக்கிறது. அப்படியிருக்கும்போது ஏன் இவ்வாறான படுகொலைகள் அரங்கேறுகின்றன?

சான்றாக, மதுரையில் நடந்த கிரானைட் கனிமவளக் கொள்ளையை எடுத்துக்கொள்வோம். கிரானைடைக் கொள்ளையடிப்பதற்காக அரசின் மேல்மட்டத்திலிருந்து, கீழ்மட்டம் வரை அரசு அதிகாரிகள்-ஊழியர்கள் என அனைவரையும் விலைக்கு வாங்கி பி.ஆர்.பழனிச்சாமி ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்தினான். திருச்செந்தூரில், தாதுமணலைக் கொள்ளையடிப்பதற்காக வி.வி.மினரல்ஸின் வைகுண்டராஜன் நடத்திய கிரிமினல் சாம்ராஜ்யம் மற்றொரு மாதிரி. ஆனால், ஆற்று மணல், கிரானைட் போன்ற இயற்கைவளக் கொள்ளைக்கு அடித்தளம் போட்டுக்கொடுத்து கொள்ளையடிப்பதன் பரிமாணம் தற்போது மாறியிருக்கிறது. அதாவது, கொள்ளைக்கு மூளையாக செயல்படுவதிலிருந்து கொள்ளைக்காரக் கும்பலாகவே அரசு-அதிகார வர்க்கம் மாறியிருக்கிறது. தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையை அமல்படுத்தியதன் மூலம், அரசு என்ற முறையில் சமூகத்திற்கு தான் செய்ய வேண்டிய குறைந்தபட்ச பொறுப்புகளைக் கூட கைகழுவுவதுடன், கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக கிரிமினல்மயமாகிக் கொண்டிருக்கிறது அரசு கட்டமைப்பு.

எனவேதான், இயற்கைவளக் கொள்ளைக்கு எதிராகவோ அல்லது சமூகப் பிரச்சினைகளுக்காகவோ போராடுபவர்கள் படுகொலை செய்யப்படுவதை இந்த அதிகார வர்க்கம் கண்டுகொள்வதில்லை என்பதுடன், அப்படுகொலைக்குக் கூட்டாளியாகவும் செயல்படுகிறது. ஜகபர் அலி கொடுத்த புகார் குறித்து ஆர்.ஆர். குழுமத்திற்கு தெரிவித்த தாசில்தார், நடவடிக்கை எடுக்காத அதிகார வர்க்கம், தவ்ஃபீக்குக்கு ஆதரவாக ஜாகிர் உசேனை பணம் கேட்டு மிரட்டிய போலீசு அதிகாரிகள், பலமுறை புகாரளித்தும் சாராய விற்பனையை தடுக்காத போலீசு அதிகாரிகள் அனைவரின் நடவடிக்கையும் அரசுக் கட்டமைப்பு கிரிமினல்மயமாகி வருவதையே காட்டுகின்றன.

ஜகபர் அலியின் மரணத்தைத் தொடர்ந்து, கனிம வளத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் குறைவான கல்குவாரிகள் மட்டுமே அரசின் அனுமதியுடன் இயங்குவது தெரிய வந்துள்ளது. ஆனால், 3000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. அதேபோல், சுமார் 5000 கிரஷர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசுக்கட்டமைப்பு மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவின்றி இவ்வளவு குவாரிகளும், கிரஷர்களும் சட்டவிரோதமாக செயல்பட முடியுமா? இதிலிருந்தே ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கொள்ளையின் பரிமாணம் எந்தளவிற்கு பரந்துவிரிந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

அரசியல் கட்சிகள் ஓட்டு வாங்குதற்காக தங்களுக்கிடையே அரசியல் முரண்பாடுகள் இருப்பதாக காட்டிக்கொண்டாலும், திரைமறைவில் தங்களுடைய தொழில் நலன்களுக்காக கட்சி வேறுபாடின்றி நெருக்கமாகத்தான் இருக்கின்றனர். பா.ஜ.க-வைப் போல, கிரிமினல்களை நேரடியாக தங்களது கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளவில்லையென்றாலும், இந்த கிரிமினல் கூலிப்படைகளின் உதவியின்றி தங்களது தொழிலை நடத்த முடியாது என்பதுதான் தற்போதைய அரசியல் கட்சிகளின் நிலை.

அரசு-அரசாங்கம்-கூலிப்படை என இவற்றிற்கிடையே இருந்த கோடுகள் மறுகாலனியாக்கக் கொள்கை அமல்படுத்தப்பட்ட இந்த 30 ஆண்டுகளில் மறைந்திருப்பதே, இக்கொள்கையால் நாடு கண்ட ‘வளர்ச்சி’யாகும். இதற்கு சிறந்த சான்றுதான், கடந்த ஜூலையில் நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் படுகொலையாகும். ரியல் எஸ்டேட் – ஸ்கிராப் உள்ளிட்ட பல விவகாரங்களில் ஏற்பட்ட பிரச்சினையில், பா.ஜ.க, அ.தி.மு.க., தி.மு.க. என பல கட்சி பிரமுகர்கள்-போலீஸ்துறை-கூலிப்படையின் கூட்டால் அப்படுகொலை அரங்கேறியது.

ஒருபுறம் அரசுக் கட்டமைப்பு கிரிமினல்மயமாகி வருவதும், மறுபுறம் அரசுக் கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஊடுருவல் தீவிரமாகி வருவதும் இக்கட்டமைப்பை மேலும் நஞ்சாகவும், மக்கள் விரோதமாகவும் மாற்றி வருகிறது. அரசுக் கட்டமைப்பு கிரிமினல்மயமாவது – ஆர்.எஸ்.எஸ். ஊடுருவுவதானது பாசிசம் அரங்கேறுவதற்கான அடிப்படைகளாக உள்ளன. எனவே, இத்தகைய அபாயமிக்க நிகழ்ச்சிப்போக்கின் பின்னணியிலிருந்து இப்படுகொலைகளை புரிந்துகொண்டு, அதற்கெதிராக குரலெழுப்புவதும் போராட்டங்களை கட்டியமைப்பதும் முன்நிபந்தனையாகும்.


வாகைசூடி

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மே – 1: உலகத் தொழிலாளர் தினம்! | பறிக்கப்படும் உரிமைகளை நிலைநாட்ட ஒன்றிணைவோம்!

மே – 1, உலகத் தொழிலாளர் தினம்!

பறிக்கப்படும் உரிமைகளை நிலைநாட்ட ஒன்றிணைவோம்!

விழிப்புணர்வு பிரச்சாரம் – 2025

1. தொழிலாளர் நிலை!

நாட்டில் எந்த ஆலையிலும் பணி நிரந்தரம் செய்யப்படுவதில்லை,
படிப்புக்கும் உழைப்புக்கும் பொருத்தமான ஊதியமில்லை,
பாதுகாப்பான பணிச்சூழலுமில்லை,
8 மணி நேர வேலைக்கும் வேலைப்பளுவுக்கும் கட்டுப்பாடில்லை,
ஊதிய உயர்வு – போனஸ் போன்ற சட்ட உரிமைகள் கூட இல்லை.

காண்ட்ராக்ட், CL, அப்ரண்டீஸ், LEAD, NAPS, FTE என்ற பெயரில் தொழிலாளர் வாழ்க்கை அலைந்து திரியும் நாடோடிமயமாகி விட்டது.

ஆலைக்குள் அற்பக் கூலி – அடக்குமுறைக்கு எதிராக கேள்வி எழுப்பினாலே பாதிப்பை சந்திக்க நேரிடும் என அமைதியாக கடந்தும் செல்கின்றனர்.

விலைவாசி உயர்வின் காரணமாக உடல் நலனுக்கு பொருத்தமான உணவின்றி அரை வயிற்றுக்கு தரமற்ற கலப்பட உணவு சாப்பிடுவது என்றும் நாட்டு நடப்புகள் நம்பிக்கை தரும் சூழல் இல்லாததால், யாரையும் நம்ப முடியாத விரக்தியில் இளைஞர்கள் செல்போன் – இணையதளம் – போதையில் மூழ்கி உடல் நலன் – சிந்தனை – ஆரோக்கியத்தை இழந்தும் வருகின்றனர்.

இந்த நிலைமைக்கு காரணம் என்ன?
பிரச்சனைகளுக்கு தீர்வு தான் என்ன?
தொழிலாளர்கள் சந்திக்கும் துயரங்களுக்கு கார்ப்பரேட்களின் சுரண்டல், இலாப வெறி தான் காரணம் என்று சிலர் புரிந்து வைத்திருக்கலாம். ஆனால் கார்ப்பரேட் பாசிச உற்பத்தி முறைக்கும் அரசியலுக்கும் சமூகக் கட்டமைப்புக்கும்  இடையிலான தொடர்பினை புரிந்து கொள்வதுதான் இன்றைய மே தின கடமையாக இருக்கும்!

2. சமூகத்தின் நிலை!

குறைந்த கூலியை கொண்டு திருமணம் – பெற்றோர் – குழந்தைகள் – பராமரிக்க முடியாது என்றாகிவிட்டது.  குடும்ப வாழ்க்கையும் கானல் நீராகி வருகின்றது.

கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்றால் மட்டுமே வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளிவிட்டனர். குழந்தைகளுக்கு செல்போனும் தனியார் பள்ளிகளும் கதி என்றாகி வருகிறது. அதனால் சமூகத் தொடர்பு, இயல்பு வாழ்க்கை இழந்து எந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

தொழில்துறை தொடங்கி விவசாயம், சிறு தொழில் என மொத்த பொருளாதாரமும் கார்ப்பரேட்மயமாவதால் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இதன் விளைவாக மக்களிடம் நிச்சயமற்ற வாழ்க்கை தன்மையும் பதட்டமும் நிலவுகிறது. ஏமாற்று – திருட்டு, கொலை – கொள்ளை, பாலியல் வன்முறை என சமூகம் வாழத் தகுதி இழந்து வருகிறது.

உற்பத்தியும் மனிதர்களும்!

உற்பத்தியில் ஈடுபடாமல் காய், கனி, இலை, மாமிசம் உண்டு வாழ்ந்த ஆதிமனிதர்கள் விலங்குகளை ஒத்த பண்பாட்டில் குகை, மரம் என வாழ்ந்துள்ளனர். உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியதும் உண்டான உபரி-தனிச்சொத்துடமையுடன் உற்பத்தி உறவால் பண்பாடு, அதிகாரத்துவம் – பெண்ணடிமைத்தனம், சகலமும் பிறந்தது.

குறிப்பாக, மலைவாழ் மற்றும் கிராமப்புற நிலவுடமை பகுதி மக்களிடம் நிலவும் பண்பாடு, பழக்க வழக்கம், சிந்தனை, நடை, உடை, பாவனை, மொழி பயன்பாடு, படைப்புகள் இவற்றுடன் நகர மக்களை ஒப்பிட்டு பார்த்தால் இன்றளவும் வேறுபாடுகள் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து உற்பத்தி முறையும் அதனுடன் தொடர்புடைய உறவும் தான் சமூகத்தின் சகலத்தையும் தீர்மானிக்கிறது என்பதை நன்கு அறியலாம்.

ஆக, பொருளுற்பத்தி முறை அதனுடனான மக்கள் உறவில் ஏற்பட்டு வரும் இடைவெளி – வாழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களால் மனிதப் பண்பில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொள்வதன் மூலமே மாறிவரும் சமூக அமைப்பையும் மக்களையும் புரிந்துகொள்ள முடியும்!

3. கார்ப்பரேட் பாசிச உற்பத்தி முறை என்றால் என்ன?

முதலாளித்துவத்தின் வளர்ந்த வடிவம் தான் கார்ப்பரேட் என்பதாகும். அதன் பாசிச உற்பத்தி முறை என்பது தொழிலாளர்களையோ, சமூகத்தையோ கணக்கில் கொள்ளாதது. மாறாக, அதீத இலாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டது.

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற சட்ட உரிமைகள் அனைத்தையும் பறிக்கிறது. தொழிலாளர்களின் உடல்நலன், எதிர்காலத்தை கணக்கில் கொள்ளாமல் உழைப்பையும் உயிரையும் கசக்கிப் பிழிவதை இலக்காகக் கொண்டது.

12 மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 8 மணி நேரத்தில் செய்ய சதித்திட்டம் தீட்டி நிர்பந்திக்கிறார்கள். பெண் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தர உரிமைகள், பாதுகாப்புச் சூழலை உத்திரவாதம் செய்யாமல் தீவிரமாக சுரண்டலை திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது வழங்கப்படும் அற்பக் கூலியானது குடும்ப வாழ்க்கை நடத்த போதுமானதாக இல்லாததால் குடும்பப் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது.

கார்ப்பரேட் சிஸ்டத்தின் அடங்காத இலாப வெறியால் விலைவாசி உயர்கிறது, பணத்தின் மதிப்பு குறைகிறது. மக்களின் வாங்கும் திறனும் குறைகிறது. உற்பத்திப் பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கம் – மந்தம் – வேலை இழப்பில் முடிந்து, நாட்டின் பொருளாதாரத்தை குழி தோண்டிப் புதைக்கிறது. இதைத்தான் முதலாளித்துவ ஊடகங்கள் பணவீக்கம் என்று புரியாத மொழியில் பேசி வருகிறார்கள்.

இந்த கார்ப்பரேட் ஆலையில் உழைப்பால் உருவாகும் உபரியில் – மூலதனத்தோடு அற்பக் கூலியை தவிர்த்து ஒட்டு உறவு, உரிமை ஏதும் தொழிலாளர்களுக்கு கிடையாது. இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி மக்களை உருவாக்குகிறது.

கார்ப்பரேட் கும்பலுக்காக உழைத்து மடிவது தான் வாழ்க்கை என சுருங்கி, தொழிலாளர் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விட்டது. தினசரி 12 மணிநேர வேலை, part-time job, side பிசினஸ் என பணத்திற்காக ஓடிஓடி உழைத்து சிந்திப்பதற்கோ, நிதானிப்பதற்கோ நேரமில்லாமல், சமூகத்தொடர்பு குறைந்து, ஓய்வின்றி உழைப்பதன் காரணமாக ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு, பொது நலன் என விழுமியங்கள் இழந்து, உதிரிகளாக மாறி, பாசிசத்தின் காலாட்படையாக மனிதர்கள் திட்டமிட்டு மாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

உதாரணமாக, 1920 – களில் வரலாற்றில் ஜெர்மன் முதலாளிகளின் தீவிர சுரண்டலால் உதிரித்தனமான கும்பல் உருவானது. அந்த கும்பலுக்கு இன வெறி போதையூட்டி, உலகைச் சூறையாடுவதற்காக விழுமியங்களற்ற மனிதர்களை பயன்படுத்தியது ஜெர்மன் முதலாளித்துவம்.  அந்த பாசிச பொருளுற்பத்தியில் உருவான உதிரி சமூக அடித்தளத்தில் இருந்து தான் ஹிட்லரின் பாசிச கும்பலும் உருவாக்கப்பட்டது. (இது மேற்குலகின் பாசிச வரலாறு)

இந்தியாவை பொருத்தமட்டில் 2000 ஆண்டுகளாக உழைக்கும் மக்களை ஜாதிகளாக பிரித்து, மூளைக்கு விலங்கிட்டு சிந்திக்க திறனற்ற அடிமைகூலிகளாக பார்ப்பனியம் வைத்திருக்கிறது. பார்ப்பனியம் என்பது சர்வாதிகார சுரண்டல் சிஸ்டம்; தற்போது அது கார்ப்பரேட் சுரண்டல் கொள்ளையுடன் கைக்கோர்த்து ஆட்டம் போடுகிறது. இந்தக் கேட்டினை ஒருங்கிணைத்து புரிந்து கொள்வது அவசரத் தேவையாகும்.

இவ்வாறு கார்ப்பரேட் சிஸ்டத்தின் அதீத இலாப வெறிக்கு பொருளுற்பத்தி முறை பாசிசமயமாவதால் சமூகத்தில் உதிரிகள் அதிகரித்து சமூகமே பாசிசமயமாகி வருகிறது. சுருக்கமாகக் கூறினால் கார்ப்பரேட் பாசிச உற்பத்தி முறையையும் அதனால் ஏற்படும் பண்புச்சிக்கல் உள்ளிட்ட மொத்த விளைவுகளையும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதிகாரத்துவ, ஆதிக்க மனோபாவ, அறிவியல் பார்வையற்ற, சமூக உணர்வு இல்லாத, சுயநலவாத, கிரிமினல் கும்பல் தொழிற்சங்க அரங்குகளிலும் நிரம்பி வழிவது. சமூக போக்கின் சிறு உதாரணமாகும்.

குவிக்கப்படும் சொத்தும் வளங்களும் கார்ப்பரேட்டிற்கு!
வறுமையும் திண்டாட்டமும் மக்களுக்கு!! என சமூகம் பிரிவதால் ஜனநாயக வழிமுறைகளை இனி அவர்கள் மேற்கொள்ளப்போவதில்லை!

4. அரசியல் நிலை!

மேற்குலகில் மன்னராட்சி – நிலவுடமை உற்பத்தி முறையின் பிற்போக்கு இடிபாடுகளிலிருந்து முதலாளித்துவ சுரண்டல் உற்பத்தி முறை முளைத்தது.

1750: முதலாளித்துவத்தின் துவக்கக் கால கட்டத்தில் 12 – 16 மணி நேர வேலை – அடக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வந்தனர்.

மே தின வரலாறு !

1810 களில் ஆஸ்திரேலியாவில் 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை தீவிரமடைந்தது.

1848 – ல் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான பொதுவுடமை அறிக்கையை கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் வெளியிட்டனர்.

அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின்  சிகாகோ நகரில் 8 மணி நேர வேலை உரிமையை 1886, மே – 1 ல் இரத்த வெள்ளத்தில் தொழிலாளர்கள் நிலை நாட்டினர்.

1917: வரலாற்றின் திருப்பு முனையாக லெனின் தலைமையிலான ரசியப் சோசலிச புரட்சி – தொழிலாளர் வர்க்கத்திற்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்தது. உழைப்பால் உருவாகும் உபரியுடனான முதலாளிகளின் தனியுடமை உறவும் மன்னராட்சியும் தகர்க்கப்பட்டது.  உருவான உபரி மதிப்பு – இலாபம் பொதுச் சொத்தானது. அதன் காரணமாக வறுமை ஒழிக்கப்பட்டது. புவிப்பரப்பில் சொர்க்கம் படைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, உலகெங்கும் உழைக்கும் – போராடும் மக்களுக்கு உரிமைகள் வழங்க வேண்டும் என்ற போராட்ட நிலைமைகள் முதலாளித்துவத்தின் கழுத்தை நெரித்தது.

இந்நிலையில், உலகெங்கும் விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்தது. நிர்பந்தங்களால் காலனி நாடுகள் குடியரசுகளாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் தொழிலாளர்களின் போராட்டக் களத்தை சமாளிக்க
1923 தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம்,
1926 தொழிற்சங்கச் சட்டம்,
1936 கூலி வழங்கல் சட்டம் என வரிசையாக தொழிலாளர் நலச் சீர்திருத்தங்களை பிரிட்டன் முதலாளிகள் அறிமுகப்படுத்தத் தொடங்கினர்.

மாண்டேகு- செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மூலம் ஆங்கிலேயர் அரசு கட்டமைப்பில் புதிதாக நாடாளுமன்றம் – சட்டமன்றம் எனும் கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் ஜனநாயக – அரசுக் கட்டமைப்பின் வழியாகவே சுரண்டலை நிலைப்படுத்திக் கொண்டனர்.

ஆனால், அடுத்த 100 ஆண்டுகளில் நிலைமைகள் தலைகீழாக மாற்றப்பட்டது. உலக அரங்கில் சோசலிச முகாம் இல்லை. முதலாளிகள் வளர்ந்து கார்ப்பரேட்களாக உருவெடுத்து விட்டார்கள். இன்றோ அரசுக் கட்டமைப்பை அவர்களின் கண்ணசைவிலேயே இயக்குகிறார்கள். பெயரளவில் இருந்த சட்ட உரிமைகள் கூட திருத்தம் செய்யப்பட்டு தொழிலாளர் நலன் பறிக்கப்பட்டு விட்டது.

இலாப வெறியின் காரணமாக விவசாயம் – சிறு குறுந்தொழில், கல்வி – மருத்துவம், பொதுத்துறை – தொழில்துறை என மொத்த அரசியல் – பொருளாதார கட்டமைப்பையும் கார்ப்பரேட்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்று விட்டனர்.

இலாபத்திற்காக அதிகமான உற்பத்தி செய்து உலகையே திணறடித்தும் வருகின்றனர். இதற்கு அமெரிக்க மக்களும், அமெரிக்கப் பொருளாதாரமும் கூட தப்பவில்லை. வேலைவாய்ப்பு சுருங்கி விட்டது. தற்போது, கார்ப்பரேட்கள் – நிதி மூலதன சூதாடி கும்பலை மீறி அமெரிக்க அரசு கூட செயல்பட முடியாது என்பது அம்பலமாகி விட்டது.

இலாபத்திற்காக இயற்கை வளக் கொள்ளை அதாவது காடு, மலை, விளைநிலங்கள் பாழடிக்கப்பட்டு சுற்றுச்சூழலை உயிர் வாழத் தகுதி இல்லாத நிலைமைக்கு தள்ளிவிட்டனர்.

குறிப்பாக, மனித குலத்திற்கு எதிரான இந்த கார்ப்பரேட் போக்கை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கும் அடிமை – வேலையாட்களை உருவாக்கும் கல்வி – பாடத்திட்டம் வகுத்தும் உலகளவில் வலைப் பின்னல் உருவாக்கி செயல்பட்டும் வருகின்றனர்.

மேலும் ரசியப் புரட்சி – யின் அனுபவத்திலிருந்து குறிப்பாக, இந்திய தொழிலாளர் வர்க்கம் எந்தக் காலத்திலும் எழுச்சி பெற்று விடக் கூடாது என்பதற்காக, பார்ப்பனிய மூடநம்பிக்கை, ஜாதி, மத வெறுப்பு, நுகர்வு வெறி, போதை, சீரழிவு கலாச்சாரம் போன்றவை அரசு – ஆளும்வர்க்கத்தால்  திட்டமிட்டு தீவிரப்படுத்தப்படுகிறது.

அடுத்து, ஆங்கிலேயர்கள் வெளியேறி 75 ஆண்டுகளாகி விட்டது. ஆனாலும் சுரண்டலும் சொத்துக்குவிப்பும் தடுக்கப்படவில்லை. இதன் விளைவாக வறுமையும் திண்டாட்டமும் தலைவிரித்தாடுகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் மக்களின் நிலையும் நாட்டின் எதிர்காலமும் சோமாலியா நோக்கி செல்கிறது.

கார்ப்பரேட் பாசிச உற்பத்தி முறையின் சுரண்டலுக்கு ஏற்றதாக 44 தொழிலாளர் சட்டங்கள் தொடங்கி, சிவில் – கிரிமினல் சட்டங்கள், நிதி – நீதி தொடர்புடைய சட்டங்கள் மொத்தமும் திருத்தப்பட்டுவிட்டன..

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் வாதங்கள் பயனற்று போய்க்கொண்டிருக்கிறது. சட்ட உரிமைகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது.

பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனிக்கு பதிலாக குஜராத்தின் அம்பானி – அதானி தலைமையிலான கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆட்சி நிறுவப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கேற்றாற்போல் அரசு அமைப்பும் மாற்றப்படுகிறது.

கார்ப்பரேட் கொள்ளையையும் அதற்குக் கவசமாக பாசிச அரசுக் கட்டமைப்பை தக்கவைப்பதற்காக ஜாதி, மத, இன வெறுப்பு அரசியலை பார்ப்பன பனியா RSS – BJP கும்பல் திட்டமிட்டு திணித்து திசைதிருப்புகின்றனர்.

சமூகம் பாசிசமயமானால் தான் பாசிச ஆட்சி முறையை நடைமுறைப்படுத்தி, பாசிச சுரண்டலை தக்க வைக்க முடியும் என்பதை சர்வதேச அனுபவங்கள் வாயிலாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதற்காக உரிமைகளைப் பறித்து நிச்சயமற்ற வாழ்க்கைத் தன்மையை வேகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் பிரச்சனைகளை பட்டியலிட்டு போராடும் அதே சமயம், பிரச்சனை மற்றும் அதன் விளைவுகளின் தத்துவார்த்த அடிப்படைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில் மக்களின் எதிர்காலம் இருண்டு வருகிறது!

இந்தியாவில் பாசிச கொலைபாதக வரலாற்றை தொடர அனுமதிக்கப் போகிறோமா? யோசியுங்கள்.

உலகெங்கும் உள்ள 800 கோடி மக்களும் சந்திக்கும் கார்ப்பரேட் பேரழிவை முறியடிப்பதற்கான சமூக அறிவியலே மார்க்சிய தத்துவமாகும்!

5. முடிவாக:

பொருளுற்பத்தி முறை மற்றும் அதனுடன் நிலவும் உற்பத்தி உறவுக்கும் – மனிதப் பண்புக்கும் உள்ள தொடர்புகள் கணக்கில் கொள்ளப்படாததால் மக்களிடையே கருத்து முரண்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதை புரிந்து கொண்டால் மட்டுமே மக்களைத் திரட்ட முடியும்!

மற்றொரு பக்கம், இந்தியாவில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் கர்மா – விதி – தலையெழுத்து காரணமென்று அறிவியலை சிந்திக்க விடாமல் முடக்கி விடுகிறது பார்ப்பனியம்!

கார்ப்பரேட் சிஸ்டத்தின் எடுபுடி அரசுகள் வழங்கும் கல்வி – பாடத்திட்டமானது இந்தச் சூழலை புரிந்து சிந்திக்க அனுமதிப்பதில்லை. குறிப்பாக, அடிமையாக வேலை செய்யும் ரோபோ மாதிரியான மனிதர்களை உருவாக்குகிறது!

கார்ப்பரேட் சிஸ்டத்தின் அதீத இலாபவெறியால் உற்பத்தி முறை பாசிசமயமாகி விட்டது, அதன் விளைவாக சமூகமும் பாசிசமயமாகிக் கொண்டிருக்கிறது, இந்தச் சூழலைத் தக்க வைக்க மொத்த அரசு கட்டமைப்பும் பாசிச மயமாக்கப்பட்டுள்ளது.

அதி தீவிர சுரண்டல் சமூக கட்டமைப்பில் எந்த வகையிலும் வாழ முடியாது என்பதையும் தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

உற்பத்தி முறை, உற்பத்தி உறவு, பண்பு, அரசியல், சமூகம் இவற்றின் சார்பியல்பு குறித்த ஒருங்கிணைந்த புரிதலும் சிந்தனையும் தான் விடுதலையைச் சாத்தியப்படுத்தும் என்பதை மே நாளில் உரக்கச் சொல்வோம்!

பாசிசத்தால் பறிக்கப்பட்ட உரிமைகளை நிலைநாட்ட மக்களை திரட்டி வீதியில் இறங்குவோம்!

  2025 மே நாளில் முழங்குவோம்!

  • தொழிலாளர்களை நாடோடிகளாக்கும் காண்ட்ராக்ட், CL, NAPS, FTE சுரண்டல் திட்டங்களை அம்பலப்படுத்தி முறியடிப்போம்!
  • பணிகள் அனைத்தும் நிரந்தரம், ஆலைக்கு ஒரு சங்கம், நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைகள் நேரடி ஒலிபரப்பு என்பதை உயர்த்திப்பிடிப்போம்!
  • நிறுவனத்தின் மொத்த வருவாய்க்கு இணையான ஊதியம் – VDA, போனஸ், சரி விதித சத்தான உணவு என்று முழங்குவோம்!
  • தினசரி OT-யை நிராகரித்து, 8 மணி நேர வேலை எனும் உரிமையை நிலைநாட்டுவோம்!
  • அரசமைப்பு ஆர்டிக்கிள் 39 படியும் சம வேலைக்கு – சம ஊதியம் என்ற சட்ட உரிமையை நிலைநாட்டுவோம்!
  • காண்ட்ராக்ட், கேசிவல் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ35,000 அத்துடன் விலைவாசி உயர்வை சமாளிக்க Variable DA சட்ட உரிமையை நிலைநாட்டுவோம்!
  • 44 தொழிலாளர் சட்டத் திருத்தங்களை வாபஸ் பெறும்வரை போராடுவோம்!
    PF சேமிப்பான 12 லட்சம் கோடியை பங்குச் சந்தையில் முதலீடு செய்து கார்ப்பரேட்டுகள் கபளிகரம் செய்வதை தடுப்போம்!
  • பார்ப்பனிய அடக்குமுறைகள் முதல் கார்ப்பரேட் பாசிச உற்பத்தி முறை வரை திட்டமிடப்படும் சதி, சூழ்ச்சிகள் அனைத்தையும் முறியடிப்போம்!
  • 150 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திட வேளாண் நிலங்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு அனுமதிப்பதை எதிர்ப்போம்!
  • இயற்கை வளங்கள், காடு மலைகளை பாதுகாப்போம்!
  • முஸ்லிம், தலித் வெறுப்பு அரசியலை முறியடிப்போம்!
  • வேண்டும் ஜனநாயகம்!
    வேண்டாம் பாசிசம்!!

தொழிலாளர் ஒருங்கிணைப்பு சிந்தனைகள்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 டிசம்பர், 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 2 | 1990 டிசம்பர் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் பாசிச பாதந்தாங்கிகள்
  • போர் வெறிபிடித்த அமெரிக்காவின் போலிசுக்காரன் வேலை
  • அம்பானி – இந்துஜா கும்பல் ஏலத்தில் எடுத்த ஆட்சியுரிமை ‘ஜனநாயக’ சாத்தான்கள்
  • அதிர்ச்சி! போதை மருந்து கடத்தி இஸ்ரேலிடம் ராணுவ பயிற்சி!
    புலிகளின் சீரழிவு பற்றி புதிய ஆதாரங்கள்
  • அவதூறுகளையே விமர்சனங்களாக்கும் வீரமணீ கும்பல்
  • தொலை தொடர்புத்துறை ஊழியர் போராட்டம்
    வர்த்தக சூதாடிகள் பாய்ச்சல்! தொழிற்சங்கங்களின் மலட்டுத்தனம்!
  • தொடர்கிறது மதக்கலவரம்! படர்கிறது இந்துமதவெறி பாசிசம்!
  • புதிய ஜனநாயகம்
    ஆறாவது ஆண்டுவிழா!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • போலீசு – ரௌடிகள் நடத்தும் திடீர் கலவரங்கள்!
  • மதுரை சட்டக் கல்லூரி மாணவர் போராட்டம் போலீசு தாக்குதல்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 8

13. லெனின் தீர்க்கதரிசி என்ற முறையிலும் ராஜதந்திரி என்ற முறையிலும்

ராஜதந்திரி என்ற முறையிலும் வருங்காலத்தை உணர்ந்தவர் என்ற முறையிலும் லெனினது ஆற்றல் ஏதேனும் மாயாவாத உள்ளுணர்விலிருந்தோ வருவதை அனுமானிக்கும் சக்தியிலிருந்தோ அல்ல, ஒரு விஷயம் பற்றிய எல்லா மெய் விவரங்களையும் ஒன்று திரட்டவும் பின்பு அவற்றைப் பயன்படுத்தவும் அவருக்கு உள்ள திறமையிலிருந்தே தோன்றுகிறது என்பது தெளிவு. ருஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி என்னும் நூலில் இந்தத் திறமையை அவர் காட்டினார். ருஷ்யக் குடியானவர்களில் பாதிப் பேர் பாட்டாளிகள் ஆக்கப்பட்டு விட்டார்கள் என்றும், ஒரு சிறிது நிலம் அவர்களிடம் இருந்த போதிலும் இந்தக் குடியானவர்கள் எதார்த்தத்தில் “ஒரு துண்டு நிலம் வைத்திருக்கும் கூலி உழைப்பாளிகளே” என்றும் அந்த நூலில் லெனின் வலியுறுத்தித் தம் காலத்துப் பொருளாதாரச் சிந்தனைக்குச் சவால் விடுத்தார். இந்த வலியுறுத்தல் துணிகரம் மிக்கதாக இருந்தது எனினும் பிந்திய வருஷங்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இதைச் சரி என்று காட்டின. லெனின் இந்த விஷயத்தை வெறுமே ஊகிக்கவில்லை. ஜெம்ஸ்த்வோக்களிலும்²¹ பிற துறைகளிலும் புள்ளிவிவரங்களை விரிவாகத் திரட்டித் தொகுத்த பின்னர் அது அவர் அளித்த தீர்ப்பு ஆகும்.

லெனின் பெற்றுள்ள பெருமதிப்புக்கு மூல காரணங்கள் யாவை என்பது பற்றி ஒரு நாள் பீட்டர்ஸுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவன் சொன்னான்: “அடிக்கடி எங்கள் கட்சியின் பிரத்தியேகக் கூட்டங்களில் நிலைமை பற்றிய தமது பகுத்தாராய்வின் அடிப்படையில் லெனின் குறித்த யோசனைகளை முன்வைப்பார். நாங்கள் அவற்றைப் பெரும்பான்மை வாக்குகளால் நிராகரித்து விடுவோம்.

லெனின் சொன்னது சரி, எங்கள் கருத்து தவறு என்பது பிற்பாடு நிரூபணமாகிவிடும்.” லெனினுக்கும் கட்சியின் மற்ற உறுப்பினர்களுக்கும் இடையே செயல் தந்திரம் குறித்துக் கடும் போராட்டங்கள் நடந்துள்ளன. அப்புறம் வந்த நிகழ்ச்சிகள் இவற்றில் பொதுவாக லெனினது மதிப்பீட்டைச் சரி என்று காட்டியிருக்கின்றன.

திட்டமிடப்பட்ட நவம்பர் புரட்சியில் வெற்றி பெறுவது இயலாது என்று பிரபல போல்ஷெவிக்குகளாகிய காமினெவும் ஸினோவியேவும் அபிப்பிராயப்பட்டார்கள். “அது தோல்வி அடைவது இயலாது என்றார் லெனின் அவர் சொன்னதே சரி ஆயிற்று. போல்ஷெவிக்குகள் ஒரு பாய்ச்சல் காட்டியதுமே அரசாங்க அதிகாரம் அவர்கள் கைகளுக்கு வந்துவிட்டது. அரசாங்க அதிகார மாற்றம் இவ்வளவு சுளுவாக நடந்தேறியது குறித்து மற்றவர்களைவிட அதிக வியப்பு அடைந்தவர்கள் இந்த போல்ஷெவிக்குகளே.

அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்வது முடியலாம் எனினும் அதை நிலையாக வைத்திருப்பது இயலாது என்று மற்ற போல்ஷெவிக் தலைவர்கள் சொன்னார்கள். லெனின் சொன்னார், “ஒவ்வொருநாளும் நமக்குப் புதிய பலத்தைக் கொண்டுவரும்” என்று லெனின் கூறியதே சரி ஆயிற்று எல்லாப் புறங்களிலுமிருந்து நெருக்கும் பகைவர்களுக்கு எதிராக இரண்டு ஆண்டுகள் போரிட்ட பின்னர் சோவியத் எல்லா முனைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

ஜெர்மானியர்களை ஆசைகாட்டி மயக்குவதும் ஆனால் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட மறுப்பதுமாகத் தமது ஜாலவித்தைத் தந்திரத்தைக் காட்டிக்கொண்டிந்தார் த்ரோத்ஸ்கிய். அப்போது லெனின் சொன்னார்: “அவர்களுடன் விளையாடாதீர்கள். முன் வைக்கப்படும் முதல் உடன்படிக்கையில், அது எவ்வளவு மோசமாகயிருந்தாலும் சரி, கையெழுத்துதிடுங்கள். இல்லாவிட்டால் நாம் இன்னும் படுமோசமான உடன்படிக்கையில் கையொப்பம் இட நேரும்” என்று. இம்முறையும் லெனின் சொன்னதே சரி ஆயிற்று. வழிப்பறிக்காரர்களின்”, “கொள்ளைக் கூட்டத்தாரின்” சமாதான உடன்படிக்கையில் ருஷ்யர்கள் பிரேஸ்த்லித்தோவ்ஸ்க்கில் கையெழுத்திட வேண்டியதாயிற்று.

1918ஆம் ஆண்டு வசந்த காலத்தில் ஜெர்மானியப் புரட்சி பற்றிய கருத்தை உலகம் முழுவதும் எள்ளி நகையாடிக்கொண்டிருந்தபோது, பிரான்சில் நேச நாட்டினரின் படையணியைக் கெய்ஸரின் சேனை நொறுக்கிக்கொண்டிருக்கையில், என்னுடன் ஓர் உரையாடலின்போது லெனின் கூறினார்: “கெய்ஸரின் வீழ்ச்சி ஓர் ஆண்டுக்குள் வந்துவிடும் என்று இதற்கு ஒன்பது மாதங்கள் பின்னர் கெய்ஸர் தமது சொந்த நாட்டு மக்களிடமிருந்து தப்பி ஓட நேர்ந்தது.

“நீங்கள் அமெரிக்கா திரும்புவதாயிருந்தால் வெகு சீக்கிரம் புறப்பட  வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்கச் சைனியம் சைப்பீரியாவில் உங்களுக்கு எதிர்ப்படும்” என்று 1918 ஏப்ரலில் லெனின் என்னிடம் சொன்னார். இது வியப்பூட்டும் கூற்று. ஏனெனில் அந்தக் காலத்தில் மாஸ்கோவிலிருந்த நாங்கள் புதிய ருஷ்யாவின்பால் அமெரிக்கா மிக மிக நல்லெண்ணமே கொண்டிருப்பதாக நம்பத் தொடங்கியிருந்தோம். “அது நடவாத காரியம். சோவியத்துக்கள் அரசு அங்கீகாரம் பெறுவதற்குக்கூட வாய்ப்பு இருப்பதாக ரேய்மண்ட் ராபின்ஸ் நினைக்கிறாரே” என்று நான் மறுத்துரைத்தேன்.

“மெய்தான். ஆனால் ராபின்ஸ் அமெரிக்காவின் மிதவாத பூர்ஷ்வாக்களின் பிரதிநிதி. அமெரிக்காவின் கொள்கையை நிர்ணயிப்பவர்கள் அவர்கள் அல்ல. நிதி மூலதனமே அதை நிர்ணயிக்கிறது. நிதிமூலதனமோ சைபீரியாவைத் தன்வசம் வைத்திருக்க விரும்புகிறது. சைபிரியாவைக் கைப்பற்றுவதற்காக அது அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பும்” என்றார் லெனின். இந்த நோக்கு எனக்கு அபாண்டமாகப் பட்டது. ஆயினும், பிற்பாடு, 1918, ஜூன் 29ந் தேதி, விளாதிவஸ் தோக்கில் அமெரிக்கக் கடற்படைவீரர்கள் இறங்குவதை நான் கண்கூடாகப் பார்த்தேன். அதே சமயம் ஜாரின் ஆதரவாளர்களும் செக்குகளும் பிரிட்டிஷாரும் ஜப்பானியரும் பிற நேச நாட்டினரும் சோவியத் குடியரசின் கொடியை இறக்கி அகற்றிவிட்டுப் பழைய எதேச்சாதிகார அரசின் கொடியை ஏற்றினார்கள்.

லெனினுடைய முன்மொழிவுகள் நிகழ்ச்சிகளால் மிக அடிக்கடி மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆதலால் வருங்காலம் பற்றிய அவருடைய அபிப்பிராயம் குறைந்தபட்சம், அக்கறை என்பது முக்கியமானது. 1919, ஏப்ரலில் பாரிஸ் “தான்” பத்திரிகையில் லெனினுடன் நோதோவின் புகழ்பெற்ற பேட்டி விவரம் வெளியாயிற்று. அதன் சுருக்கம் வருமாறு:

லெனின் கூறினார்: “உலகின் வருங்காலமா? நான் தீர்க்கதரிசி அல்ல. ஆனால் இது மட்டும் நிச்சயம். முதலாளித்துவ அரசு, இங்கிலாந்து இதற்கு ஓர் எடுத்துக்காட்டு, மடிந்துகொண்டிருக்கிறது. பழைய அமைப்பின் தலைவிதி தீர்க்கப்பட்டுவிட்டது. யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார நிலைமைகள் புதிய அமைப்புக்கு வலிய இட்டுச் செல்லுகின்றன. மனிதகுலத்தின் வளர்ச்சி தவிர்க்க இயலாதவாறு சோஷலிஸத்துக்குக் கொண்டு செல்லுகிறது.

“அமெரிக்காவில் ரெயில் பாதைகள் தேசிய உடைமை ஆக்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு யார்தாம் நம்பியிருப்பார்கள்? அந்தக் குடியரசு எல்லா தானியத்தையும் அரசின் முழு நலத்துக்கு ஏற்பப் பயன்படுத்தும் பொருட்டு விலைக்கு வாங்குவதை நாம் பார்த்துவிட்டோம். அரசுக்கு எதிராகச் சொல்லப்பட்டது எல்லாம் இந்தப் பரிணாமத்தைத் தடைப்படுத்தவில்லை. குறைபாடுகளை நீக்கும் பொருட்டுப் புதிய கட்டுப்பாட்டுச் சாதனங்களை உண்டாக்குவதும் அமைப்பதும் அவசியம் என்பது உண்மையே. ஆனால் அரசு சர்வாதிகாரமாக உள்ளது. ஆவதைத் தடுக்கும் எந்த முயற்சிகளும் வீணே ஆகும். ஏனெனில் தவிர்க்க இயலாதது வருகிறது, தனது சொந்த விசையாலேயே வருகிறது. ‘பணியாரம் நன்றாயிருப்பதற்குச் சான்று அது உண்ணப்படுவதில் இருக்கிறது’ என்று ஆங்கிலேயர்கள் கூறுவதுண்டு சோஷலிஸப் பணியாரத்தைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். எல்லா நாடுகளும் அதை உண்கின்றன. மேலும் மேலும் அதிகமாக உண்ணும்.

“தொகுத்துரைக்கிறேன். ஒவ்வொரு மனிதக் குழுவும் சோஷலிஸத்தை நோக்கித் தனக்கே உரிய தனி வழியில் செல்கிறது என்பதை அனுபவம் நிரூபிப்பதாகத் தோன்றுகிறது. லாட்வியர்கள் கூட அதை நோக்கி ருஷ்யர்களிலிருந்து வேறான முறையில் செல்கிறார்கள். பற்பல தாற்காலிக வடிவங்களும் விதங்களும் இருக்கும். ஆனால் அவை எல்லாம் ஒரே குறிக்கோளை நோக்கி இயங்கும் புரட்சியின் வெவ்வேறு கட்டங்களே ஆகும். பிரான்சிலோ ஜெர்மனியிலோ சோஷலிஸ அரசு அமைப்பு நிறுவப்பட்டால் அதை நிரந்தரம் ஆக்குவது இங்கே ருஷ்யாவில் ஆக்குவதைக் காட்டிலும் மிக எளிதாயிருக்கும். ஏனென்றால் ருஷ்யாவில் காணப்படாத அமைப்புச் சட்டங்கள், ஸ்தாபனங்கள், எல்லா வகையான அறிவுத் துணைக்கருவிகள், பொருள்கள் ஆகியன மேற்கே சோஷலிஸத்துக்குக் கிடைக்கும்”

14. அறிவாளிகள்பால் லெனினது போக்கு

“நேர்மையுள்ள ஒவ்வொரு போல்ஷெவிக்குக்கும் முப்பத்தொன்பது கயவர்கள், அறுபது முட்டாள்கள் வீதம் இருக்கிறார்கள்.” விரிவாக மேற்கோள் காட்டப்படும் இந்த வாக்கியம் லெனினால் கூறப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீது இகழ்ச்சியும் அவநம்பிக்கையும் கொண்ட, பெருமிதம் மிக்க உயர்குலத்தவராக லெனினைச் சித்திரிக்கும் நோக்கத்துடன் இது புனையப்பட்டுள்ளது. விந்தையான இக்குற்றச்சாட்டுக்கு ஆதரவாகப் பதினைந்து ஆண்டுகளுக்கு முந்திய ஓர் அறிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. உழைக்கும் வர்க்கங்கள் ஒழுங்கமைப்பு பற்றிய அறிவு, முதலாளிக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தல், ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை கோருதல் முதலியவை தொழிற்சங்க உணர்வை மட்டுமே வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்றும் சோஷலிஸக் கருத்துகள் பெருமளவு வெளியிலிருந்தே, அறிவுஜீவிகளிடமிருந்தே தொழிலாளர்களுக்குக் கிடைத்துள்ளன என்றும் கூறுகிறது இந்த அறிக்கை.

லெனினும் சோவியத் அரசாங்கமும் தங்கள் எல்லாச் செயல்களிலும் ஆணைகளிலும் அறிவுக்குத் தாங்கள் அளிக்கும் பெருமதிப்பைக் காட்டுகிறார்கள் என்பது உண்மையே. ஒவ்வொரு துறையிலும் லெனின்  நிபுணருக்குப் பணிந்துபோகிறார். ஜார் ஆட்சிக் காலத்திய ஜெனரல்களைக்கூட இராணுவ விவகாரங்களில் நிபுணர்கள் என்ற வகையில் லெனின் மதிக்கிறார். புரட்சிச் செயல் தந்திரத்தில் லெனின் பிரமாணமாகக் கருதுவது ஜெர்மானியரான மார்க்ஸை என்றால் அமெரிக்கரான டெய்லர் உற்பத்திச் செயல்திறமைக்கு வெனினால் பிரமாணமாகக் கருதப்படுகிறார். தேர்ந்த கணக்கர், பெரிய பொறி இயலறிஞர், ஒவ்வொரு செயல் துறையிலும் தனித் தேர்ச்சியாளர் மிக மதிப்புள்ளவர்கள் என்பதை லெனின் எப்போதுமே வலியுறுத்தித்தி வந்திருக்கிறார் உலகம் முழுவதிலிருந்தும் இத்தகைய நிபுணர்களை ஈர்க்கும் காந்தமாக சோவியத் விளங்கும்  என்று அவர் நம்பினார். தங்கள் படைப்பு ஆற்றல்களுக்கு வேறு எந்த அமைப்பிலும்விட சோவியத் அமைப்பில் அதிக விரிவான செயல் வாய்ப்புகள் இருப்பதை அவர்கள் காண்பார்கள் என லெனின் எண்ணினார்.

ஹாரிமன் தமது பெரிய ரெயில்வேயை இயக்கி நடத்தும் வேலையைவிட அதற்கு நிதி வசதி செய்யும் பிரச்சினை காரணமாகவே பெரிதும் களைத்துச் சோர்ந்து போனார் என்று சொல்லப்படுகிறது. சோவியத் அமைப்பில் அவர் தமது ஆற்றலை நிர்வாக வேலையிலிருந்து நிதிவசதி செய்யும் வேலையில் ஈடுபடுத்த வேண்டியிராது. ஏனெனில் நாம் காங்கிரஸில் உள்ள நமது பிரதிநிதியிடம் அரசியல் அதிகாரத்தை ஒப்படைப்பது போலவே சோவியத் அமைப்பில் பொருளாதார அதிகாரம் தலைமை நிர்வாகியிடம் ஒப்படைக்கப்படுகிறது ருஷ்யாவின் பெருத்த வளங்கள் பண்படுத்தும் பொருட்டு அவர் பொறுப்பில் விடப்படுகின்றன. சோவியத் ஆட்சியில் ருஷ்யா பொறி இயலருக்கோ, நிர்வாக நிபுணருக்கோ செவ்வைப்படுத்துவதற்குத் தனது விசாலமான வளங்களை மட்டும் அல்ல, அவ்வாறு செயல்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படும் உற்சாகமும் உயிரோட்டமும் உள்ள உழைப்பாளிகளையும் நல்குகிறது.

கடைசியில் இந்த நிலைமை முதலாளித்துவ அமைப்பில் கிடையாது. அங்கே தொழிலாளியின் மிகப்பெரிய அக்கறை தனது வேலையை விடச் சம்பளத்தில்தான் இருக்கிறது. நிர்வாக அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே அங்கே இடைவிடாது பிணக்கு விளைந்துகொண்டிருக்கிறது. சோவியத் அமைப்பில் மனிதர்களின் ஆற்றல்கள் உற்பத்திப் பொருளின் பங்கீடு குறித்துச் சச்சரவிடுவதில் செலவிடப்படுவதற்குப் பதிலாக, அதிக விரிவான உற்பத்தியின் பொருட்டு விடுவிக்கப்படுகின்றன. வெகுஜனங்களின் உற்சாகம் மிக்க படைப்பு ஆற்றல்களை வெளிக்கொணரும் அதே சமயத்தில் அறிவாளிகளுக்கும் மேதாவிகளுக்கும் செயலாற்றச் சுதந்திரம் அளிக்கும் சோவியத் முறையிலிருந்து பெருத்த பயன்கள் விளையும் என லெனின் நம்பினார்.

தமது பார்வையில் சமூகச் சக்திகளின் வெவ்வேறு வகையான எல்லாப் பகுதிகளதும் மதிப்பை லெனின் அனுமானித்தார். புரட்சிக்கு முன்பும் பின்பும் அறிவாளிகள் தங்களுக்கு உரிய இடம் பெற்றார்கள் பிரசாரக் கிளர்ச்சியாளர்கள் என்ற முறையில் புரட்சி சாத்தியமாக அவர்கள் உதவ முடிந்தது. திறமையும் தொழில் நுட்பமும் வாய்ந்த நிபுணர்கள் என்ற வகையில் புரட்சியைச் சாசுவதமும் நிலைப்பும். கொண்டது ஆக்குவதற்கு அவர்கள் உதவ முடிந்தது.


21. ஜெம்ஸ்த்வோக்கள் மாபெரும் அக்டோபர் புரட்சிக்கு முன் மத்திய ருஷ்யப் பிரதேசங்களில் ஸ்தல அதிகாரத்தைச் செலுத்திய நிறுவனங்கள்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 நவம்பர், 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 1 | 1990 நவம்பர் 16-30, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இந்துமதவெறி பாசிச அபாயமும் சமூகவிரோத
    கிரிமினல் கும்பலின் ஆட்சியும்
  • அயோத்தி: இந்துமதவெறி பாசிசத்தின் தாக்குதல்
  • அவதூறுகளையே விமர்சனங்களாக அடுக்கும் வீரமணி கும்பல்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவலம்
  • ஜெர்மன் பிளவுக்கு காரணம் யார்/
  • பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் ‘புரட்சி’ செய்யும் போலிகள்
  • மதவெறிக்கு எதிராக….
  • நம்பிக்கையின் ஒளிக்கீற்று
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 7

11. லெனினின் நேர்மையும் எதார்த்தமின்மைபால் வெறுப்பும்

லெனினது சக்தியின் மர்மங்களில் ஒன்று அவருடைய உளமார்ந்த நேர்மை ஆகும். தமது நண்பர்களிடம் அவர் நேர்மையைக் கடைப்பிடித்தார். அணிகளில் ஒவ்வொரு புது நபர் சேரும்பொழுதும் அவர் மகிழ்ச்சி அடையத்தான் செய்தார். ஆயினும் வேலை நிலைமைகளையோ வருங்கால வாய்ப்புக்களையோ கவர்ச்சியாகச் சித்திரிப்பதன் மூலம் ஒரு ஆளைக்கூட அவர் திரட்ட மாட்டார். மாறாக விஷயங்களை உள்ளதைவிட மோசமாக வருணிப்பதையே அவர் மேற்கொண்டார். லெனினுடைய பல பேச்சுக்களின் பல்லவி இதுதான்: “போல்ஷெவிக்குகள் அடைய முயலும் குறிக்கோள் தொலைவில் இருக்கிறது உங்களில் பெரும்பாலோர் கனவு காண்பதைவிடத் தொலைவில் இருக்கிறது. நாம் ருஷ்யாவைக் கரடுமுரடான பாதையில் நடத்தி வந்திருக்கிறோம். ஆனால் நாம் கடைப்பிடிக்கும் போக்கு நமக்கு மேலும் அதிகப் பகைவர்களையும் மேலும் பட்டினியையும் உண்டாக்கும். சென்ற காலம் கடினமாகவே இருந்தது. வருங்காலமோ இன்னும் கடினமான நீங்கள் நினைப்பதை விட அதிகக் கடினமான நிலைமைகளை கொண்டிருக்கும்” கவர்ச்சியூட்டும் ஆசை காட்டல் அல்ல இது. வழக்கமாகப் படை திரட்டுவதற்குரிய அழைப்பு அல்ல இது! எனினும் காயங்களும் சிறைவாசமும் மரணமுமே எதிர்ப்படும் என்று கூறிய காரிபால்டியை இத்தாலியர்கள் திரண்டு வந்து பின்பற்றியது போல ருஷ்யர்கள் திரண்டு வந்து லெனினைப் பின்பற்றினார்கள். தலைவர் தமது இயக்கத்தைப் பெருமைப்படுத்த வேண்டும். கேட்போர் மனம் மாறி அதில் சேர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தித் தூண்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பவனுக்கு இது ஓரளவு சங்கடமாயிருந்தது. ஆனால் லெனின் இந்தத் தூண்டுதல் உள்ளத்திலிருந்து வரும்படி விட்டு விட்டார்.

தமது வெளிப்படையான பகைவர்களிடமும்கூட லெனின் நேர்மையைக் கடைப்பிடிக்கிறார். அவரது அசாதாரணமான கபடின்மையைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஓர் ஆங்கிலேயர் அவருடைய போக்கு பின்வருமாறு இருந்தது எனச் சொல்லுகிறார்: “சொந்த முறையில் உங்கள்மீது எனக்குப் பகைமை எதுவும் இல்லை. ஆனால் அரசியல் நோக்கில் நீங்கள் என் பகைவர், உங்களை அழிப்பதற்கு எனக்குத் தோன்றும் எல்லா ஆயுதங்களையும் நான் பிரயோகித்தாக வேண்டும். உங்கள் அரசாங்கம் எனக்கு எதிராக இதையே செய்கிறது. இப்போது எவ்வளவு தூரம் நாம் சேர்ந்து செல்ல முடியும் என்பதைப் பார்ப்போம்.”

நேர்மையின் இந்த முத்திரை லெனினுடைய எல்லா வெளிப்படைக் கூற்றுக்களிலும் பதிந்திருக்கிறது. ராஜதந்திரி அரசியல்வாதிக்குரிய வழக்கமான சாதனங்கள் வெற்று வேட்டு, படாடோபமான சொற்கள், வெற்றி மனப்பான்மை ஆகியவை லெனினிடம் கிடையாது. அவர் விரும்பினாலுங்கூட மற்றவர்களை ஏய்க்க அவரால் முடியாது என்று தோன்றுகிறது. அதே காரணத்தினால் தம்மையே ஏமாற்றிக் கொள்ளவும் அவரால் முடியாது. அவரது விஞ்ஞான மனப்போக்கும் மெய் விவரங்கள்பால் அவருக்குள்ள தீவிர ஆர்வமுமே இதன் காரணம். அவருடைய தகவல் மார்க்கங்கள் எல்லாத் திசைகளிலும் சென்று கணக்கற்ற மெய் விவரங்களை அவருக்குக் கொண்டு தருகின்றன. இந்த விவரங்களை அவர் சீர்தூக்கிப் பார்த்து, சலித்தெடுத்து, சுத்தப்படுத்துகிறார். பிறகு அவர் போர்த்தந்திர நிபுணர், சமூகத் தனிமங்களைக் கொண்டு செயல்புரியும் தேர்ந்த இரசாயனி, கணித அறிஞர் என்ற முறையில் இவற்றைப் பயன்படுத்துகிறார். உதாரணமாக ஒரு விஷயத்தை அவர் பின்வரும் வழியில் அணுகுகிறார்:

“இப்போது நமக்குச் சாதகமான விவரங்கள் இவை: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு…” அவற்றை அவர் சுருக்கமாக எடுத்துரைப்பார். “நமக்கு எதிரான விவரங்கள் இவை.”

அதேமாதிரி இவற்றையும் அவர் எண்ணிக் கணக்கிடுவார், “ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு வேறு எவையேனும் உள்ளனவா? என்று கேட்பார். வேறு எதையேனும் கண்டு சொல்வதற்காக நாங்கள் மூளையைக் குடைந்துகொள்வோம், பொதுவாகப் பயனின்றி, சாதகமானவை, பாதகமானவை, இருதரப்பு விஷயங்களையும் விவரித்து விட்டு, கணிதப் பிரச்சினையை மதிப்பிடுவது போலத் தமது மதிப்பீட்டைச் செய்வார் லெனின்.

மெய் விவரங்களைப் பெருமைப்படுத்துவதில் அவர் வுட்ரோ வில்சனுக்கு நேர் எதிரானவர். வில்சன் ஒரு சொற்கலைஞர். எல்லா விஷயங்களுக்கும் நயமான சொற்களால் முலாம் பூசி, மக்களைப் பிரமிக்கவும், மதிமயங்கவும் புரிந்து, விஷயத்தில் அடங்கிய விகாரமான எதார்த்தங்களையும் திண்ணமான பொருளாதார விவரங்களையும் அவர்கள் காணவிடாதவாறு அவர் செய்துவிடுவார். லெனினோ அறுவைக் கத்தியுடன் சத்திர மருத்துவன் போல வருகிறார். ஏகாதிபத்தியவாதிகளின் ஆடம்பரமான பாஷைக்குப் பின் மறைந்துள்ள எளிய பொருளாதார நோக்கங்களை அவர் திறந்து காட்டுகிறார். ருஷ்ய மக்களுக்கு அவர்கள் விடுக்கும் பிரகடனங்களின் வெளிப் போர்வையை நீக்கி, அம்மணம் ஆக்கி, அவர்களுடைய நேர்த்தியான உறுதிமொழிகளின் பின்னே மறைந்திருக்கும் சுரண்டுவோரின் கரிய, சூறையாடும் கையை அவர் வெளிக்காட்டுகிறார்.

வார்த்தைப் பந்தல் போடும் வலதுசாரியினர்பால் அவர் சற்றும் இரக்கம் காட்டுவதில்லை. அதேசமயம், எதார்த்தத்திலிருந்து தப்புவதற்குப் புரட்சிக் கோஷங்களில் புகலிடம் தேடும் இடதுசாரியினரை அவர் கடுமையுடன் விளாசுகிறார். “புரட்சிகர ஜனநாயகச் சொல்வன்மை என்னும் இனிப்பூட்டப் பெற்ற நீரில் காடியையும் பித்தநீரையும் ஊற்றுவது தமது கடமை என அவர் கருதுகிறார். உணர்ச்சிப் பெருக்கில் உருகுபவனையும் வறட்டுக் கோட்பாடுகளை உரக்க முழங்குபவனையும் அவர் சுரீரெனத் தைக்கும் ஏளனத்துக்கு உள்ளாக்குகிறார்.

ஜெர்மானியர்கள் சோவியத் தலைநகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது ருஷ்யாவின் எல்லாப் பகுதிகளிலுமிருந்து தந்திகள் ஸ்மோல்னியுக்கு வெள்ளமாகப் பெருகி வந்தன. வியப்பும். திகிலும் ஆத்திரமும் அவற்றில் வெளியிடப்பட்டிருந்தன. “ருஷ்யப் பாட்டாளி வர்க்கம் நீடூழி வாழ்க!” “ஏகாதிபத்தியக் கொள்ளைக்காரர்கள் ஒழிக!” “கடைசித் துளி வரை இரத்தம் சிந்திப் புரட்சியின் தலைநகரைக் காப்போம்!” என்பது போன்ற கோஷங்களுடன் இந்தத் தந்திகள் முடிந்திருந்தன.

லெனின் அவற்றைப் படித்துவிட்டு எல்லா சோவியத்துக்களுக்கும் ஒரு தந்தி அனுப்புவித்தார். பெத்ரோகிராதுக்குப் புரட்சிக் கோஷங்களைத் தயவுசெய்து அனுப்பாமலிருக்கும்படியும் துருப்புக்களை அனுப்பும்படியும் அதோடு எத்தனை தொண்டர்கள் படைவீரர்களாகத் திரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கும்படியும், ஆயுதங்கள், போர்த் தளவாடங்கள் ஆகியவற்றின் இருப்பு பற்றியும் உணவு நிலைமை பற்றியும் அறிக்கை செய்து கொள்ளும்படியும் அதில் சோவியத்துக்கள் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தன.

12. நெருக்கடியில் செயலாற்றும் லெனின்

ஜெர்மானியர்களின் முன்னேற்றத்திற்கு கூடவே அயல்நாட்டினரின் வெளியேற்றம் நிகழ்ந்தது. “ஹூணர்களைக் கொல்லுங்கள்!” என்று காட்டுக்கூச்சல் போட்டவர்கள் எல்லோரும் இப்போது ஹூணன் கொல்லப்படும் தொலைவுக்குள் வந்ததும் கண் தலை தெரியாமல் விழுந்தடித்து ஓடியதைக் குறித்து ருஷ்யர்கள் அமிழ்ந்த வியப்பைத் தெரிவித்தார்கள். இந்தக் கும்பலோடு சேர்ந்து கம்பி நீட்டுவது எனக்கும் நன்றாய்த்தான் இருந்திருக்கும், ஆனால் கவசமோட்டார் மீது நின்று நான் அளித்த வாக்குறுதி என்னைத் தடுத்தது. எனவே நான் செஞ்சேனையில் சேர முன்வந்தேன். இடதுசாரிக் கம்யூனிஸ்ட் புகாரின் நான் லெனினைக் காண வேண்டும் என்று வற்புறுத்தினார்.

“எனது வாழ்த்துக்கள்! எனது மகிழ்வுரைகள்!” என்றார் லெனின், “எங்களது நிலைமை இப்போது மிக மோசமானதாகத் தோன்றுகிறது. பழைய சைனியம் போரிடாது. புதிய சைனியமோ பெரும்பாலும் காகிதத்தில்தான் இருக்கிறது. ப்ஸ்கோவ் நகரம் எதிர்ப்பு இன்றி இப்போதுதான் சரணடைந்துவிட்டது. இது கடுங்குற்றம். அந்த வட்டார சோவியத் தலைவன் சுடப்பட வேண்டும். நமது தொழிலாளர்களிடம் பெருத்த தன்னலத் தியாகமும் வீரம் இருக்கிறது. ஆனால் இராணுவப் பயிற்சி இல்லை, கட்டுப்பாடு இல்லை.”

இவ்வாறு சுமார் இருபது சின்ன வாக்கியங்களில் நிலைமையைத் தொகுத்துரைத்துவிட்டு முடிவில் லெனின் கூறினார்: “நான் காண்பது எல்லாம் சமாதானந்தான். எனினும் சோவியத் போருக்கு ஆதரவாக இருக்கலாம். என்னவாயினும், புரட்சிச் சேனையில் சேர்ந்ததற்கு என் வாழ்த்துக்கள். ருஷ்ய பாஷையுடன் உங்கள் போராட்டத்துக்குப் பிறகு ஜெர்மானியர்களுடன் போர் புரிய நீங்கள் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டுமே” சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபின் அவர் மேலும் கூறினார்:

“ஒரு வெளிநாட்டான் நிரம்பச் சண்டை போட்டுவிட முடியாது. ஒருவேளை மற்றவர்களும் உங்களுடன் சேர்ந்துகொள்ளலாம்.”

ஒரு படைப்பிரிவு அமைக்க நான் முயலக்கூடும் என்று நான் அவரிடம் சொன்னேன்.

லெனின் நேரடியாகச் செயலாற்றுபவர் திட்டம் யோசனையில் உதித்ததுமே அதைச் செயல்படுத்துவதில் அவர் முனைந்தார். சோவியத் கமாண்டர் க்ரிலேன்கோவுக்குப் போன் செய்ய முயன்றார் அது முடியாமல் போகவே பேனாவை எடுத்து அவருக்கு ஒரு குறிப்பு எழுதினார்.

இரவு ஆவதற்குள் நாங்கள் சர்வதேச லீஜியன் அமைத்து விட்டோம். அயல்மொழிகள் பேசும் ஆடவர் அனைவருக்கும் இந்தப் புதிய படைப்பிரிவில் சேருமாறு அழைப்பு விடுத்தோம். ஆனால் லெனின் விஷயத்தை இத்துடன் விட்டு விடவில்லை. காரியத்தை ஆடம்பரமான முறையில் தொடங்கி வைத்ததுடன் அவர் திருப்தி அடையவில்லை. அவர் அதை விடாது, விவரமாகத் தொடர்ந்தார் அழைப்பு அறிக்கையை ருஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் அச்சிடுமாறு பிராவ்தா அலுவலகத்துக்கு இரண்டுமுறை போன் செய்து உத்தரவிட்டார் பின்பு அதைத் தந்தி மூலம் நாடெங்கும் பரப்பினார். இவ்வாறு யுத்தத்தையும் சிறப்பாக அதைப் பற்றிய புரட்சிக் கோஷங்களால் தங்களுக்கு வெறி ஏற்றிக் கொண்டிருந்தவர்களையும் ஒருபுறம் எதிர்த்த அதே சமயத்தில் போருக்கு ஆயத்தமாவதற்காக எல்லாச் சக்திகளையும் லெனின் திரட்டிக் கொண்டிருந்தார்.

பெத்ரோப்பாவ்லவ்ஸ்க்காயா கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த புரட்சி எதிர்ப்பு இராணுவ அதிகாரிகளில் சிலரை அழைத்து வருமாறு செங்காவற்படையினருடன் ஒரு காரை அனுப்பிவைத்தார்.

ஜெனரல்கள் லெனினது அலுவலகத்துக்குள் வரிசையாக வந்து சேர்ந்ததும் அவர், “கனவான்களே, நிபுணர்கள் என்ற முறையில் உங்களிடம் ஆலோசனை கேட்பதற்காகவே உங்களை இங்கே அழைத்திருக்கிறேன். பெத்ரோகிராத் அபாயத்தில் இருக்கிறது. அதன் தற்காப்புக்கான இராணுவச் செயல் தந்திரத்தை உங்களால் வகுத்துத்தர முடியுமா?” என்றார். அவர்கள் சம்மதித்தார்கள்.

வரைப்படத்தில் செம்படையினரின் அணிகளும் போர்த்தளவாடங்களும் சேமிப்புப் படையினரும் இருக்கும் இடங்களைக் காட்டிவிட்டு லெனின் தொடர்ந்தார்:

எங்கள் படைகள் இதோ இருக்கின்றன. எதிரித் துருப்புக்களின் எண்ணிக்கையையும் இட அமைப்புக்களையும் பற்றி எங்களுக்குக் கிடைத்துள்ள கடைசியான தகவல்கள் இவை ஜெனரல்களுக்கு வேறு ஏதேனும் தேவையானால் அவர்கள் கேட்கலாம்.”

ஜெனரல்கள் வேலையில் முனைந்தார்கள். மாலையாகும் போது தங்கள் யோசனைகளின் முடிவுகளை லெனினிடம் அளித்தார்கள். பின்பு அவர்கள் நைச்சியமாக, “இப்போது, எங்களுக்கு அதிக வசதியான இருப்பிடங்கள் அளிப்பதற்கு முதலமைச்சர் அன்புகூர்ந்து இணங்குவாரா?” என்றார்கள்.

“மிக மிக வருந்துகிறேன். வேறு ஒரு சமயம் பார்ப்போம், ஆனால் இப்போது அல்ல. கனவான்களே, உங்கள் இருப்பிடங்கள் சௌகரியம் இல்லாதவையாக இருக்கலாம், ஆனால் பாதுகாப்பானவை என்ற அனுகூலம் அவற்றில் உண்டு” எனப் பதிலளித்தார் லெனின். அதிகாரிகள் பெத்ரோப்பாவ்லவ்ஸ்க்காயா கோட்டைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விகடன் முதல் விஜய் டிவி வரை: நெரிக்கப்படும் குரல்வளை!

ந்தியாவில் ஊடகம் என்பது ஜனநாயகத்தை தாங்கும் நான்காவது தூண் என்று கூறப்படுகிறது. ஜனநாயகத்திற்கு வேண்டுமென்றால் சுதந்திர ஊடகங்கள் தேவைப்படலாம். ஆனால், அதானி – அம்பானி; ஆர்.எஸ்.ஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலின் ஆட்சியில் சுதந்திர ஊடகம் என்பது ஒரு தடைக்கல்லாகவே பார்க்கப்படுகிறது. எனவேதான் தேசிய ஊடகங்கள் முதல் சமூக ஊடகங்கள் வரை அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பல்வேறு முயற்சிகளை பாசிச மோடி அரசு மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில், தமிழ்நாட்டில் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் “நீயா நானா” எனும் விவாத நிகழ்ச்சியில், புதிய கல்விக் கொள்கையின் மும்மொழித் திட்டம் குறித்து “மும்மொழித் திட்டத்தை ஆதரிப்போரும் – எதிர்ப்போரும்” என்கிற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு படப்பிடிப்பும் முடிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்நிகழ்ச்சி மோடி அரசின் நிர்பந்தத்தினாலும் விஜய் டி.வி-யின் புதிய முதலாளி முகேஷ் அம்பானியின் உத்தரவினாலும் நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்நிகழ்ச்சியில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பேசுவதற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஆனந்தன் அய்யாசாமி என்கிற பா.ஜ.க. பிரமுகர் உட்பட யாராலும் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக எந்த நியாயமான வாதத்தையும் தர்க்க ரீதியாக எடுத்து வைக்க முடியவில்லை. இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டால் பா.ஜ.க-வின் மும்மொழிக் கொள்கை அம்பலப்பட்டுப் போகும் என்பதை உணர்ந்துகொண்ட ஆனந்தன் அய்யாசாமி, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மூலம் இந்நிகழ்ச்சியை தடை செய்ய வைத்துள்ளார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதேபோல், சில வாரங்களுக்கு முன்பு “ஆனந்த விகடன்” இணையப் பத்திரிகையில் மோடியின் அமெரிக்க அடிமைத்தனத்தை அம்பலப்படுத்தும் விதமாக கார்ட்டூன் வெளியிட்டதற்காக, தேசத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு எந்தவித முன்னறிவிப்புமின்றி விகடனின் இணையதளம் முடக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கும் இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் இந்திய ஊடகச் சுதந்திரத்தின் நிலையைப் புரிந்துகொள்வதற்கான சமீபத்திய சான்றுகளாகும்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலோ ஊடக சுதந்திரம் என்பது கல்லறையில் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுவதும் போலீசால் சிறையிடப்படுவதும் கிரிமினல் கும்பலால் படுகொலை செய்யப்படுவதும் அன்றாட நடைமுறையாக மாறிவருகிறது. நிலவரத்தைப் புரிந்துகொள்ள சில சம்பவங்களை மட்டும் சுருக்கமாகப் பார்ப்போம்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில், சுயேட்சையான பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர் என்பவர், “நிலாஸ்னார்- மிர்தூர்- கங்கலூர்” சாலை கட்டுமான ஒப்பந்தம் 56 கோடியிலிருந்து சுமார் 120 கோடியாக உயர்த்தப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதை அம்பலப்படுத்தியிருந்தார். இதனால், ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர்கள் ஜனவரி 1 அன்று முகேஷ் சந்திராக்கரை கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அவரது உடல் ஜனவரி 3 அன்று ஒப்பந்ததாரரின் புதிய கட்டடத்தின் செப்டிக் தொட்டியில் போடப்பட்டு கான்கிரீட் சிதறல்களால் மூடப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் 1. முகேஷ் சந்திராகர் 2. ராகவேந்திர பாஜ்பாய்

இதேபோல், கடந்த மார்ச் மாதம் 9-ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில், இந்தி நாளிதழ் ஒன்றில் பத்திரிகையாளராக பணிபுரிந்துவந்த ராகவேந்திர பாஜ்பாய் என்பவர் கிரிமினல் கும்பலால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நெல் கொள்முதல் முறைகேடுகள் மற்றும் நில கொள்முதலில் முத்திரை வரி ஏய்ப்பு குறித்து செய்திகள் வெளியிட்டதால், ராகவேந்திராவுக்கு சமீப காலமாக கொலை மிரட்டல்கள் வந்ததாக அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இறுதியாக, தற்போது இந்திய அளவில் பேசுபொருளாகியிருக்கும் நகைச்சுவையாளர் குணால் கம்ரா விவகாரம். கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி “நயா பாரத்” (புதிய இந்தியா) என்ற தலைப்பில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை குணால் நடத்தியிருந்தார். அதில், மோடியின் புதிய இந்தியா குறித்தும் நாட்டில் உள்ள நீதிமன்றங்களும், அமலாக்கத்துறையும் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும், மகாராஷ்டிரா துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்தும் கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த விமர்சனங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள துணிவில்லாத பா.ஜ.க. கும்பல், ஷிண்டே பிரிவைச் சார்ந்த சிவசேனா குண்டர்படை மூலம் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தப்பட்ட கிளப் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், மும்பை போலீசு குணால் கம்ரா மீது வழக்கும் பதிவு செய்துள்ளது.

வட இந்தியாவில், பா.ஜ.க. அரசின் மக்கள்விரோத கொள்கையையும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையையும் எதிர்க்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நினைக்கும், இந்து மதவெறிக்கு எதிராக மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கும் ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் பலரும் மிரட்டப்படுவதும் போலீசின் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படுவதும், கிரிமினல் கும்பல் மற்றும் காவிக் குண்டர் படையால் வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

உலக சமாதானத்திற்காக செயல்படும் அமைப்பாக கூறப்படுகின்ற “அம்னஸ்டி இன்டர்நேஷனல்” (Amnesty International) மோடி அரசின் அடக்குமுறைகள் காரணமாக சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் 2020-இல் தனது இந்தியக் கிளையை மூடிவிட்டுப் போய்விட்டது. இவையெல்லாம் கருத்துரிமை மீதான மோடி அரசின் அடக்குமுறைகளை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

இந்து குழுமத்தின் இயக்குநர் என்.ராம், “மோடி ஆட்சிக்குப் பிறகு இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மிகவும் வெட்டி சுருக்கப்பட்டிருக்கிறது. உலகின் பத்திரிகை சுதந்திரம் பற்றிய குறியீடுகளில் (World Press Freedom Index) 2004-இல் 114-வது இடத்தில் இருந்த இந்தியா 2024-இல் 159-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது” என்று கூறுகிறார். மேலும், “2014-லிருந்து 2024 வரையிலான 10 ஆண்டுகளில் 19 பத்திரிகையாளர்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். காயமடைந்தவர்கள், மிரட்டப்பட்டவர்கள், வேலையிழந்தவர்கள் இன்னும் ஏராளம். குறிப்பாக, இன்றைய நிலையில் பத்திரிகையாளர்களுக்கு இந்தியா அபாயமிக்க நாடாக கருதப்படுகிறது” என்றும் கூறுகிறார்.

டெல்லியைச் சேர்ந்த வரலாற்றியலாளரும் எழுத்தாளருமான முகுல் கேசவன், “ஊடகங்களையும் பத்திரிகைகளையும் கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றுவது, தொடரப் போகும் பெரும் சதி திட்டங்களுக்கான முன் தயாரிப்பு நடவடிக்கையாகும்” என்று கூறுகிறார். மேலும், “மாற்றுக் கருத்துகளை நசுக்குவது என்பதுதான் கார்ப்பரேட்டுகளின் முதன்மையான இலக்காக இருக்கிறது. ஆனாலும், பெரும்பாலான பத்திரிகை ஊடகங்கள் அவற்றின் முதலாளிகளின் நோக்கங்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் அரசுக்கு ஆதரவானதாக மாறிப் போய்விட்டன” என்று குற்றம் சுமத்துகிறார். இது தொடர்ந்தால் ஜனநாயகத்திற்கு அழிவு காலம்தான் என்கிறார் முகுல் கேசவன்.

அரசை விமர்சிப்பவர்கள் எதிர் கருத்து அல்லது மாற்றுக் கருத்து சொல்பவர்கள் அவற்றை தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடுபவர்கள் என்று அனைவர் மீதும் வழக்கு தொடுப்பது, சிறையிலடைத்து கொடுமைப்படுத்துவது என்றால், இது என்ன ஜனநாயகம் என்று கேள்வி எழுப்புகிறார் தெற்காசியாவின் மனித உரிமை கண்காணிப்பகத்தின் (South Asian Director of Human Rights Watch) இயக்குநர் மீனாட்சி கங்குலி.

மக்கள் அமைப்பாக அணிதிரளவும், எதிர்த்துப் போராடவும், பேரணி நடத்தவும் பொதுவெளியில் பேசவும், தங்கள் கருத்துக்களை பதிவிடவும் என்று எல்லா உரிமைகளும் உள்ளது என அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கின்றன. நடைமுறையில் அவ்வாறு இல்லையெனினும், கொஞ்சநஞ்சம் இருந்த உரிமைகளை கூட முற்றுமுழுதாக பறிக்கும் வேலையில் பாசிச மோடி அரசு இறங்கியுள்ளது.

அதுவும் மக்களின் இந்த அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுவது வெறுமனே வாய் வழியாக, அடாவடித்தனமாக நடத்தப்படுவது மட்டுமல்ல, அவை தேச விரோதமாகவும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும், தீவிரவாத சக்திகளுக்கு ஊக்கம் கொடுப்பதாகவும், நாட்டைக் காட்டி கொடுப்பதாகவும் இதே சட்டத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகின்றது. சட்டத்தின் ஆட்சி என்ற கேடயத்தின் பின்னால் இருந்துகொண்டு நீதிமன்றங்களும் இவற்றை ஆதரித்து நிற்கின்றன. இதுதான் அடிப்படை பிரச்சினையாகும்.

எல்லாம் அரசின் விருப்பம் என்று ஆக்கப்பட்டிருக்கின்றது. அரசு மட்டுமே சமூகத்தின் ஒரே நிறுவனம் அதற்கு எதிராக இயங்கும் எவையும் தேசவிரோதம் என்று வெளிப்படையாக பேசுகின்றனர். இதில் பலியிடப்படுவது ஜனநாயகம்தான் என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பதே நமது சமூகக் கட்டமைப்பின் அவலம். இவ்விடத்தில்தான் ஜனநாயக சக்திகளின் கடமையும், இயக்கமும், செயல்பாடும் முக்கியத்துவமடைகின்றன.


ஆதி

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 அக்டோபர், 1-15 நவம்பர், 1990 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 05, இதழ் 23-24 | 1990 அக்டோபர் 16-31, நவம்பர் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இரத்த வெள்ளத்தில் இந்தியா
  • கர்நாடக ஆட்சிக் கவிழ்ப்பு: சாராய அதிபர்களிடம் ராஜீவ் சோரம்!
  • கேரள கடற்கரையை ஆளுவது ‘மார்க்சிஸ்டு’களல்ல! மாஃபியாக்கள்!
  • பிழைப்புவாதிகளின் புழுதி அரசியல்
  • “பயிற்சி மட்டும் இருந்தால், இந்திய ராணுவத்தைக் கொன்று பழி தீர்ப்பேன்”
  • ஜெர்மன் ஐக்கியம்: மேற்கு கிழக்கை முழுங்கியது
  • ‘பரிசுத்த ராஜா’ ஆட்சியில் பல்லாயிரம் கோடி சுங்கவரி மோசடி
  • அயோத்தி விவகாரத்தின் ஆதிமூலம்: பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சிகள்
  • அமெரிக்க அரசே செயலிழந்தது
    பாலஸ்தீன படுகொலைக்கு வக்காலத்து
    முதலாளிதுவத்தின் மகிமை
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 6

9. லெனினது அசாதாரண நிதானம்

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் லெனின் மிகுந்த தன்னடக்கத்தை மேற்கொண்டிருந்தார். மற்றவர்களை வெறி கொள்ளச் செய்த நிகழ்ச்சிகள் அவரிடம் அமைதியையும் கம்பிரத்தையும் தோற்றுவித்தன.

அரசியல் நிர்ணய சபையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரே கூட்டத்தில் இரண்டு கட்சிப் பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று கொலை வெறியுடன் மோதிக்கொண்டன. ஒரே கொந்தளிப்பும் குழப்பமுமான காட்சியாக விளங்கியது அது. பிரதிநிதிகள் போர்க் கோஷங்களை முழங்கினார்கள், சாய்வு மேஜைகளைத் தடதடவென்று தட்டினார்கள். பேச்சாளர்கள் அச்சுறுத்தல்களையும் சவால்களையும் கூறி ஆர்ப்பரித்தார்கள். இரண்டாயிரம் குரல்கள் இன்டர்நேஷனலையும் புரட்சி அணிநடைப் பாட்டையும் ஆவேசத்துடன் பாடின. இவைஎல்லாம் சூழ்நிலையை மின்னேற்றம் கொண்டது ஆக்கின. இரவு முதிர முதிர சபையின் மின்னோட்டம் மேலும் மேலும் அதிகரிப்பதாகத் தோன்றியது. பார்வையாளர் வரிசைகளில் இருந்த நாங்கள் அழிக் கம்பிகளைப் பற்றிக் கொண்டோம். எங்கள் பற்கள் நெறுநெறுத்தன, நரம்புகள் முறுக்கேறின. லெனினோ முன்வரிசை இடம் ஒன்றில் சலிப்படைந்தவர் போன்று உட்கார்ந்திருந்தார்.

கடைசியில் அவர் எழுந்து மேடையின் பின்புறத்துக்கு நடந்து போய் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்த படிகள் மீது கால்களை நீட்டி அமர்ந்தார். விசாலமான கூட்டத்தினர் மீது தற்செயலாகப் பார்வை செலுத்தினார். பிறகு “இத்தனை மனிதர்கள் நரம்புச் சக்தியை வீணாக்குகிறார்கள். நல்லது, ஒரு மனிதன் அதைக் கொஞ்சம் சேமிக்கப் போகிறான்” என்று சொல்பவர் போலக் கைமீது தலையைச் சாய்த்து உறங்கிவிட்டார். பேச்சாளர்களின் சொல்வன்மையும். கூட்டத்தினரின் ஆரவாரமும் அவர் தலைக்கு மேலே அலையடித்துப் பெருகின. அவரோ, அமைதியாகத் தூங்கினார். ஓரிரு தடவைகள் கண்களைத் திறந்து, இமைகளைக் கொட்டியவாறு இங்கும் அங்கும் பார்த்தார். பின்பு மறுபடி உறங்கலானார்.

முடிவில் எழுந்து சோம்பல் முறித்துவிட்டு முன்வரிசையில் தமது இடத்திற்குச் சாவகாசமாக நடந்தார். தருணம் வாய்த்ததென்று கண்டு ரீடும் நானும் கீழே நழுவி, அரசியல் நிர்ணய சபை நடவடிக்கைகளைப் பற்றி அவரிடம் கேள்விகள் கேட்டோம். அவர் அலட்சியமாகப் பதில் அளித்தார். பிரசார இலாக்காவின்¹⁸ வேலைகள் பற்றி அவர் விசாரித்தார். பிரசுரங்கள் டன் கணக்கில் அச்சிடப்படுவதாகவும் அவை உண்மையாகவே பல தடைகளை கடந்து ஜெர்மானியச் சைனியத்திற்குள் வினியோகமாகி வருகின்றன என்றும் நாங்கள் சொன்னதும் அவர் முகம் பளிச்சிட்டது. ஜெர்மானிய மொழியில் வேலை செய்வது எங்களுக்குக் கடினமாய் இருப்பதாகச் சொன்னோம்.

திடீரென்று உற்சாகத்துடன் “ஆ!” என்றார் அவர், கவச மோட்டாரில் எனது சொற்பொழிவு முயற்சியை நினைவுபடுத்தி, “ருஷ்ய மொழிப் பயிற்சி எந்த அளவில் இருக்கிறது? இந்தப் பேச்சுக்களை எல்லாம் இப்போது நீங்கள் புரிந்துகொள்ள முடிகிறதா?” என்று கேட்டார்.

“ருஷ்ய மொழியில் ஏராளமான சொற்கள் உள்ளனவே” என்று பட்டும் படாமலும் பதில் அளித்தேன். “அதுதான் விஷயம். நீங்கள் முறையாக அதைப் பயில வேண்டும். மொழியின் முதுகெலும்பை எடுத்த எடுப்பிலேயே முறித்துவிட வேண்டும். அதைப் பயில்வதற்கான எனது முறையை உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் லெனின்.

சாராம்சத்தில் லெனினது முறை இதுதான்: முதலில் எல்லாப் பெயர்ச்சொற்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு முறையே எல்லா வினைச்சொற்களையும் எல்லா வினையுரிச்சொற்களையும் பெயர்ச்சொற்களையும் எல்லாப் பிற சொற்களையும் கற்க வேண்டும். அப்புறம் இலக்கணம் முழுவதையும் வாக்கிய அமைப்பு விதிகள் யாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் எங்கும் எல்லோருடனும் மொழியைப் பேசிப் பழக வேண்டும். லெனினுடைய முறை முழுமையானது எனினும் அவ்வளவு நுட்பமானதல்ல என்பதை இதிலிருந்து காணலாம். சுருங்கக் கூறின் பூர்ஷ்வாக்களை வெல்வதற்கான அவரது முறை மொழியை வெல்வதற்காகக் கையாளப்படுவதே. எடுத்த காரியத்தில் தயவுதாட்சண்ணியமின்றி ஈடுபடுவதே இது. ஆனால் அவர் இதில் மிகுந்த உற்சாகம் காட்டினார்.

தமது இருக்கையிலிருந்து குனிந்து விழிகள் சுடர, அங்க ஜாடைகளால் தமது சொற்களை எங்கள் மனதில் பதிய வைத்தார். எங்கள் சக நிருபர்கள் பொறாமை ததும்பப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். லெனின் எதிர்த்தரப்பினரின் குற்றங்களை வன்மையாகத் தொலைத்தெடுக்கிறார், அல்லது சோவியத்தின் இரகசியங்களை வெளியிடுகிறார், அல்லது புரட்சிபால் இன்னும் அதிக உற்சாகம் காட்டும் படி எங்களைத் தூண்டி ஊக்குவிக்கிறார் என்று அவர்கள் நினைத்தார்கள் இத்தகைய நெருக்கடியின்போது, மாபெரும் ருஷ்ய அரசின் தலைவர் இவ்வளவு ஆற்றலை வெளியிடுவது இத்தகைய விஷயங்கள் குறித்தே இருக்க முடியும் என அவர்கள் எண்ணினார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது தவறு. ருஷ்ய முதலமைச்சர் அயல் மொழி ஒன்றைக் கற்பது எப்படி என்பது பற்றி வெறுமனே விளக்கிக் கொண்டிருந்தார். நட்பார்ந்த சிறு உரையாடலால் கிடைத்த பொழுபோக்கை ரசித்துக் கொண்டிருந்தார், அவ்வளவுதான்.

பெருத்த விவாதங்களின் இறுக்கத்தில், எதிர்த்தரப்பினர் தம்மை இரக்கமின்றி விளாசிக்கொண்டிருக்கையில் லெனின் கம்பீரமான அமைதியுடன் வீற்றிருப்பார். இந்த நிலைமையில் நகைச்சுவையைக் கூட காண்பார். நான்காவது காங்கிரஸில் பேசியபின், மேடையில் தமது இடத்தில் அமர்ந்து தமது ஐந்து எதிர்த்தரப்பினரின் தாக்குதல் களைச் செவிமடுத்தார் லெனின் தமக்கு எதிரான வாதம் நல்லதாகப்பட்டால் அவர் முகம் மலர்ந்து முறுவலிப்பார், கைதட்டலில் கலந்து கொள்வார். எதிர்த்தரப்பு வாதம் கேலிக்கிடமான தாகத் தோன்றினால் கிண்டலாகப் புள்ளகை செய்து கட்டைவிரல் நகங்களை ஒன்றோடொன்று அடித்து நையாண்டிக் கரகோஷம் செய்வார்.

10. அந்தரங்கப் பேச்சில் லெனின் நடத்தை

ஒரே ஒரு தடவைதான் அலுப்பின் குறியை நான் அவரிடம் கண்டேன் சோவியத்தின் நள்ளிரவுக் கூட்டம் ஒன்றின் பின் தமது மனைவியுடனும் சகோதரியுடனும் “நேஷனல் ஹோட்டல்” லிப்டில் புகுந்தார் லெனின் “மாலை வணக்கம்” என்று ஓரளவு அலுப்புடன் சொல்லிவிட்டு, “இல்லை, காலை வணக்கம் என்பதே சரி. பகலும் இரவும் முழுவதும் நான் பேசிக் கொண்டிருந்தேன். களைத்துப் போய்விட்டேன். ஒரு மாடிதான் ஏற வேண்டும் என்றாலும் லிப்டில் போகிறேன்” என்றார்.

ஒரே ஒரு தரம்தான் அவரிடம் பரபரப்பையும் அவசரத்தையும் கண்டேன். அது பிப்ரவரி மாதம் நேர்ந்தது. அப்போது “தவ்ரிதா அரண்மனை” மறுபடியும் காரசாரமான பூசலுக்கு அரங்கு ஆயிற்று. ஜெர்மனியுடன் போரைத் தொடர்வதா அல்லது சமாதானம் செய்து கொள்வதா என்பது பற்றி விவாதம் நடந்துகொண்டிருந்தது. திடீரென்று லெனின் தென்பட்டார். நீண்ட ஹாலைக் கடந்து பிரசங்க மேடையின் புகு வாயிலை நோக்கி விரைவாக, சுறுசுறுப்பாக அடி வைத்து அநேகமாகப் பாய்ந்தார். பேராசிரியர் சார்ல்ஸ் குந்த்ஸும் நானும் அவருக்காகப் பதிபோட்டுக் காத்திருந்தோம். “ஒரு நிமிடம் தவாரிஷ் லெனின்” என்று அவரைக் கூவி அழைத்தோம்.

அவர் தமது விரைந்த பாய்ச்சலை நிறுத்தி அனேகமாக இராணுவப் பாங்கில் கால்களைச் சேர்த்து நின்று, ஆழ்ந்த தோற்றத்துடன் தலை வணங்கிவிட்டு, “தயவுசெய்து இப்போது என்னைப் போக விடுங்கள், தோழர்களே.எனக்கு ஒரு வினாடி நேரம்கூட இல்லை. ஹாலுக்கு உள்ளே அவர்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள். தயவு செய்து இந்தத் தடவை என்னை மன்னித்துவிடும்படி வேண்டிக் கொள்கிறேன்” என்றார். இன்னொரு முறை தலைவணங்கி, கைகுலுக்கிவிட்டு அவர் மறுபடியும் பாய்ச்சலாக விரைந்துவிட்டார்.

போல்ஷெவிக் எதிர்ப்பாளரான வில்காக்ஸ் என்பவர் அந்தரங்க உறவுகளில் லெனினுடைய வசீகரத் தன்மையைப் பற்றிக் கூறுகையில் பின்வரும் நிகழ்ச்சியை விவரிக்கிறார்: ஒரு ஆங்கிலேய வியாபாரி தமது குடும்பத்தினரை நெருக்கடியான நிலைமையிலிருந்து தப்புவிக்கும் பொருட்டு லெனினது சொந்த உதவியைக் கோரச் சென்றார். “இரத்த வெறி கொண்ட கொடுங்கோலர்’ என்று வருணிக்கப்பட்ட லெனின் சாந்தமான நடத்தையும், மரியாதையும் பரிவும் உள்ள தோற்றமும் கொண்ட மனிதர் என்பதையும் தம் சக்திக்கு உட்பட்ட எல்லா உதவியையும் செய்ய அவர் ஆர்வமாக முன்வந்ததையும் கண்டு பெருவியப்பு அடைந்தார் அந்த வர்த்தகர்.

உண்மையில் லெனின் அபரிமித மரியாதை காட்டுவதாகவும் மிகையான முறையில் காட்டுவதாகவும் சில வேளைகளில் தோன்றியது. இதன் காரணம் அவரது ஆங்கிலப் பிரயோகமாக இருக்கலாம். மரியாதையான உரையாடலுக்குரிய விரிவான வடிவங்களைப் புத்தகங்களிலிருந்து அப்படியே எடுத்து வழங்குவார் அவர். அல்லது மக்களுடன் பழகுவதற்கான அவரது முறையின் ஓர் அம்சமாக இது இருக்கலாம். ஏனெனில் மற்றத் துறைகளில் போலவே இந்தத் துறையிலும் லெனின் மிகுந்த திறமைசாலி. அவசியமற்ற மனிதர்களுக்காக நேரத்தை வீணாக்க அவர் மறுத்தார். அவரைச் சந்திப்பது எளிதல்ல. அவரது வரவேற்பறையில் பின்வரும் குறிப்பு காணப்பட்டது: “மிக ஏராளமான அலுவல்கள் உள்ள ஒரு மனிதருடன் தாங்கள் பேசப் போகிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுமாறு பார்வையாளர்கள் வேண்டப்படுகிறார்கள். தாங்கள் சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் விவரிக்கும்படி அவர்களை அவர் கேட்டுக்கொள்கிறார்.”

லெனினைச் சந்திப்பது மிகக் கடினம். ஆனால் ஒருமுறை அவரைச் சந்தித்து விட்டால் அவரது முழுமையான கவனத்தை நாம் பெற்று விடுவோம். அவரது திறமைகள் அனைத்தும் நமக்குக் கூச்சம் உண்டாக்கும் அளவுக்குத் தீவிரமான முறையில் நம்மீது ஒருமுனைப் படுத்தப்படும். மரியாதையாக, அநேகமாக உணர்ச்சி வெளிப்பாட்டுடன், முகமன் தெரிவித்த பிறகு அவர் நம்மை நெருங்குவார். அவருடைய முகம் நமக்கு ஓர் அடி தூரத்துக்கு மேல் இராத அளவுக்கு அவர் கிட்டத்தில் வந்துவிடுவார். உரையாடல் நடந்து கொண்டிருக்கையில் அடிக்கடி அவர் இன்னும் அருகே வந்து நமது விழிகளுக்குள் பார்வையைச் செலுத்துவார். நமது மூளையின் மிக ஆழத்திலுள்ள இடுக்குகளை அவர் துருவி ஆராய்வது போலவும் நமது ஆன்மாவுக்குள் கூர்ந்து நோக்குவது போலவும் தோன்றும். மலினோவ்ஸ்க்கிய் போன்ற சற்றும் நாணமற்ற பச்சைப் புளுகன் மட்டுமே அந்தப் பார்வையின் நிலைத்த தாக்குதலுக்கு எதிர்த்து நிற்க முடியும்.

ஒரு சோஷலிஸ்டை நாங்கள் அடிக்கடி சந்திப்பதுண்டு. 1905ஆம் ஆண்டு மாஸ்கோ எழுச்சியில் கலந்து கொண்டு தடையரண்களில் நன்றாகப் போரிடக் கூடச் செய்தவர். தொழிலும் வாழ்க்கையின் வசதிகளும் அவருடைய ஆரம்ப கால உளமார்ந்த ஈடுபாட்டிலிருந்து அவரை விலகச் செய்துவிட்டன. ஓர் ஆங்கிலச் செய்தித்தாள் சிண்டிகேட்டுக்கும் பிளெகானவின்¹⁹ யெதின்ஸ்த்வோ²⁰ பத்திரிகைக்கும் நிருபராக வேலை செய்து வந்த அவரது தோற்றம் செல்வச் செழிப்பைக் காட்டியது. பூர்ஷ்வா எழுத்தாளர்களை நேரத்தை வீணாக்குபவர்கள் என்று லெனின் கருதினார். ஆனால் தமது சென்ற காலப் புரட்சிச் செயல்களைப் பிரமாதப்படுத்தியதன் மூலம் இந்த மனிதர் லெனினுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதில் வெற்றி பெற்று விட்டார். லெனினைச் சந்திக்கப் போகும்போது அவர் ஒரே உற்சாகமாக இருந்தார். சில மணி நேரத்துக்குப் பிறகு அவர் கலக்கமுற்றிருக்கக் கண்டேன். இதன் காரணத்தை அவர் விளக்கினார்.

அலுவலகத்துக்குள் போனதும் 1905 புரட்சியில் எனது பங்கைக் குறிப்பிட்டேன். லெனின் என் பக்கத்தில் வந்து, “சரி தோழரே, ஆனால் இந்தப் புரட்சிக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அவருடைய முகம் எனக்கு ஆறு அங்குல தூரத்துக்கு மேல் இல்லை. அவருடைய விழிகளோ நேராக என் விழிகளுக்கு உள்ளே நோக்கிக்கொண்டிருந்தன. மாஸ்கோ தடையரண்களில் எனது பழைய நாட்களைப் பற்றிப் பேசியவாறு நான் ஓர் அடி பின்வாங்கினேன். ஆனால் லெனின் ஓர் அடி முன்னே வைத்து, என் விழிகளிலிருந்து பார்வையை அகற்றாமலே, “சரி தோழரே, ஆனால் இந்தப் புரட்சிக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என மீண்டும் கேட்டார். எக்ஸ்ரே போலிருந்தது அது. கடந்த பத்து ஆண்டுகளில் நான் செய்தவற்றை எல்லாம் அவர் கண்டுகொண்டது போன்று தோன்றியது. என்னால் அதைத் தாங்க முடியவில்லை. குற்றம் புரிந்த குழந்தை போல நான் தரையை நோக்க நேர்ந்தது. பேச முயன்றேன், ஆனால் பயனில்லை. நான் வெளியே வர வேண்டியதாயிற்று. சில நாட்களுக்குப் பிறகு இம்மனிதர் இந்தப் புரட்சிக்குத் தொண்டு செய்யத் தொடங்கி, சோவியத்துக்காக உழைப்பவர் ஆகிவிட்டார்.


18. 1918ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ருஷ்யக் கம்யூனிஸ்ட் (போல் ஷெவிக்) கட்சியில் நிறுவப்பட்ட அயல்நாட்டுக் குழுக்களின் சம்மேளனத்துடன் இணைக்கப்பட்டிருந்தது பிரசார இலாகா வெளிநாட்டு எழுத்தாளர்களும் பிரசாரகர்களும் கொண்டது இது. பல்வேறு பிரசுரங்களை இது வெளியிட்டு வினியோகித்தது ஏகாதிபத்திய லல்லரசுகளின் துருப்புக்களுக்கு இடையே பிரசாரம் நடத்தி வந்தது.

19. பிளெகானல் கிவ (1856-1918) ருஷ்யாவில் மார்க்சியத்தை முதன்முதலாகப் பரப்பியவர். பொருள்முதல்வாத உலகக் கண்ணோட்டத்தின் உறுதியான பிரசாரகர் ருஷ்ய சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் பிரதானச் செயலர்களில் ஒருவர். அதே சமயம், தமது தத்துவ, அரசியல் நோக்குகளிலும் நடைமுறைச் செயல்களிலும் அவர் ஆழ்ந்த தவறுகள் செய்தார். மென்ஷெவிக் தலைவர்களில் அவர் ஒருவராக இருந்தார். முதலாவது உலக யுத்தத்தின்போது சோஷலிஸ நாட்டுவெறிப் போக்கை மேற்கொண்டார்.

20. “ஒற்றுமை.”

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram