மதக்கலவரத்தை தூண்டும்
இந்து முன்னணி, பி.ஜே.பி கும்பலின்
முருக பக்தர் மாநாட்டை
தடை செய்!
- பொங்கல் வைப்பதும்
ஆடு, கோழி பலியிடுவதும்
அவரவரின் வழிபாட்டு உரிமை!
மக்களின் உரிமையில் தலையிட்டு
மனித ரத்தம் குடிக்க முயலும்
இந்து முன்னணி, பி.ஜே.பி கும்பலின்
சதிகளை முறியடிப்போம்! - அழகர் கோவில், பாண்டி கோயில்,
18ஆம்படி கருப்பும்
அய்யனாரும்
ஆடு, கோழி பலி ஏற்று
நிற்கும் போது
திருவண்ணாமலையில்
‘இறைச்சியே கூடாது’ என
கூப்பாடு போட்டு
ஆடு, கோழி பலியிடும்
எமது வழிபாட்டு உரிமையையும்
உணவு முறையையும்
ஒழித்துக் கட்ட நினைக்கும்
இந்து முன்னணிக்கு
தமிழ்நாட்டில் என்ன வேலை? - அழகர் கோவில்,
பாண்டி கோவிலில்
ஆடு, கோழி பலியிடுவதை
ஒழிக்கத் துடிக்கும்
இந்து முன்னணி, பி.ஜே.பி-யே!
திருவண்ணாமலையில் சோதனை ஓட்டமா? - ஊரெங்கும் நடக்கும்
வள்ளி திருமண நாடகத்தில்
மதக்கலவரம் தூண்டும்
வசனங்கள் எங்கே?
இந்து முன்னணியே! பதில் சொல்! - முருக பக்தர் மாநாடு
என்ற பெயரில்
மத வெறியை தூண்டி
மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து
கலவரத்திற்கு அடித்தளமிடும்
இந்து முன்னணி, பி.ஜே.பி
கும்பலை விரட்டியடிப்போம்! - அலகு குத்துவது மத நம்பிக்கை.
அடுத்த மதத்தினரை குத்துவது.. மதவெறி!
மதவெறி பிடித்தலையும்
இந்து முன்னணி பி.ஜே.பி கும்பலின்
மதக்கலவர முயற்சிகளை முறியடிப்போம்!

- தமிழையும் தமிழரையும்
அழிக்கத் துடிக்கும்
இந்து முன்னணி பி.ஜே.பி-க்கு
தமிழ் கடவுள் முருகன் மேல்
ஏன் திடீர் அக்கறை?
திருப்பரங்குன்றத்தை அயோத்தி ஆக்கவா? - அரிட்டாபட்டியை அகர்வாலுக்கு கொடுத்து
குடியை கெடுக்க முயன்ற
சங்கிக் கும்பலே!
‘குன்றம் காப்போம்’ என முழங்குவது
எந்த சேட்டுக்காக? - கலவரம் மூலம் கட்சி வளர்த்த
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி,
இந்து முன்னணிக்கு
முருக பக்த மாநாடு என்ற பெயரில்
கலவரம் நடத்த அனுமதியளிப்பது
என்ன வகையான ஜனநாயகம்?
நீதிமன்றமும் நீதியும் எங்கே?
பாசிஸ்டுகளுக்கு ஜனநாயகம்!
ரவுடிகளுக்கு ஜனநாயகம்!
ரேப்பிஸ்டுகளுக்கு ஜனநாயகம்!
உரிமைக்காக ஒற்றுமைக்காக
போராடுபவர்களுக்கு
எங்கே இருக்கிறது ஜனநாயகம்? - வேலையின்மை,
விலைவாசி உயர்வு,
கந்து வட்டி கொடுமைகள்,
ஆபாச, போதை, சீரழிவுக் கலாச்சாரம்,
போன்ற மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு
யார் காரணம்?
அம்பானி, அதயனி, அகர்வால்
போன்ற பகாசுர கம்பெனிகளா?
பக்கத்து வீட்டு முஸ்லீமா? - வணிகமும் இயற்கை வளங்களும்
மார்வாடி, குஜராத்திக்கு
மக்களுக்கோ
வன்முறை வெறுப்பு முஸ்லிம் எதிர்ப்பு!
இதுதான் இந்து முன்னணியின்
தாரக மந்திரமென்றால்…
தமிழ்நாடு அழிவது
அடிமையாவது
உமது நோக்கமென்றால்…
தமிழ்நாட்டு மக்கள்
உனக்கு கல்லறை எழுப்புவோம்! - அன்று: மண்டைக்காடு, கோவை கலவரம்!
நேற்று: சென்னிமலை, மைக்கேல்பட்டி!
இன்று: திருப்பரங்குன்றம்!
தொடர்ந்து தமிழ்நாட்டில்
மதக்கலவரம் செய்ய முயலும்
இந்து முன்னணியை
ஒழித்துக் கட்டுவோம்! - இந்து முன்னணி, பி.ஜே.பி
பின்னே செல்லாதே!
பொய் பேசி கலவரம் செய்யும்
போதைக்கு அடிமையாகாதே! - மக்களைப் பிரிக்கும்
சாதி மத கலவரம்
பாசிஸ்டுகளின் ஆயுதம்!
ஒற்றுமையும் உரிமைக்கான போராட்டமே
நமது மாபெரும் ஆயுதம்! - முருக பக்தர்களுக்கு தேவை கலவரமா?
அல்லது கல்வி, வேலை, மருத்துவமா? - நீட், ஜி.எஸ்.டி கொள்ளை,
பண மதிப்பிழப்பு, சிறுதொழில் நசிவு,
விவசாயிகள் விரோத வேளாண் மசோதா,
கார்பரேட் கொள்ளை என
மக்கள் விரோத நடவடிக்கைகள்
அனைத்திற்கும்
ஆதரவு தெரிவிக்கும்
இந்து முன்னணிக்கு
மக்கள் நலன் மேல்
அக்கறை உண்டா? - தமிழ், தமிழரின் தொன்மை பேசும் கீழடி-
மதுரையின் பெருமை!
தமிழ்நாட்டு மதநல்லிணக்கத்தின்
அடையாளம் – மதுரை!
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்
முன்னோடி – மதுரை!
மதுரை மண்ணின் பெருமைகளை
ஒழித்துக் கட்டி,
மதக்கலவரம் செய்ய முயலும்
சங்கிகளை ஒழித்துக் கட்டுவோம்! - மதுரை மக்களே!
பொய்ப் பிரச்சாரமே மூலதனமாக,
கலவரமே ஆயுதமாக,
மக்களை பிரித்து ஒடுக்குவதே
லட்சியமாக கொண்டு
திருப்பரங்குன்றத்தில்
கலவரம் நடத்த வருகிறார்கள்! - இந்து முன்னணி – பி.ஜே.பி கும்பலின்
முருக பக்தர் மாநாடு எனும்
கலவரத்திற்கான கால்கோள் விழாவை
முறியடிப்போம்!
மக்கள் விரோத கலவரக் கும்பலையும்
விரட்டியடிப்போம்!

தமிழ்நாட்டின் மதநல்லிணக்க மரபை மீட்டெடுப்போம்!
தமிழ்க் கடவுளான முருகனையும் கருப்பனையும் காப்போம்!
ஆடு, கோழி பலியிடும் மக்களின் வழிபாட்டு முறைகளை நிலைநாட்டுவோம்!
சாதி, மதம் கடந்து ஒன்றிணைவோம்!
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை மாவட்டம்.
97916 53200, 78268 47268
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










