ஃபேஸ்புக் பார்வை
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போர் | புத்தகத்தின் மீதான பார்வை | ஹாலித் ராஜா
இதை வாசித்த பிறகு நாமும் அதே மனிதராக இருக்க முடியாது. ஏனெனில் இது கண்ணீர் கேட்கவில்லை, கேள்விகள் தான் கேட்கிறது
மதுரவாயல் சேட்டு அம்மா மறைந்தார்!
சேட்டு அம்மா தன்னுடைய மகன் இந்த அமைப்பில் போய் தன் வாழ்க்கையை இழந்து விட்டான் என்று எப்போதும் நினைத்தது கிடையாது. மாறாக எவன் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று எங்களுக்கு சொல்லுவார்.
சிறையிலிருந்து ஒலிக்கும் குரல்! – உமர் காலித் கடிதம்
என்னுடைய சிறைவாசம் எனக்கு மட்டுமானது இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பாத கேள்விகளை கேட்கும் எவருக்கும் என் நிலைதான் வாய்க்கும் என அனைவருக்கும் உணர்த்த என்னை பயன்படுத்துகின்றனர். எனவே என்னுடைய போராட்டம் என்பது தனிப்பட்ட போராட்டம் அல்ல. அது என்னையும் தாண்டிய அளவிலான போராட்டம்!
ரோகித் வெமுலா – ஒரு கடைசி கடிதத்தின் முதல் முயற்சி
எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். “நிழல் உலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.”
உண்மையில் யார் குற்றவாளி?
திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் ஒருவரை சிறுவர்கள் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி அதனை காணொளியாகவும் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சிறுவர்கள் மத்தியில் திணிக்கப்படும் போதை கலாச்சாரம் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தின் கோர விளைவை எடுத்துக்காட்டியுள்ளது.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி அஷ்பகுல்லா கான் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!
1927 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி ஃபைசாபாத் சிறையில் வைத்து அஷ்பகுல்லா கான் தூக்கிலிடப்பட்டார். இறுதி ஆசை ஏதேனும் உண்டா என்று கேட்ட அதிகாரியிடம், நாட்டின் சுதந்திரத்தை விட வேறு எந்த விருப்பமும் இல்லை என்று பதிலளித்து, 'ஸர்ஃபரோஷி கி தமன்னா' பாடலை உரத்த குரலில் பாடி, நிமிர்ந்த தலையுடனும் புன்னகையுடனும் அவர் தூக்கு மேடையை நோக்கி நடந்து சென்றார்.
கல்லாங்காடு பல்லுயிர் சூழலைப் பாதுகாப்பீர்!
மனிதர்களின் வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல் பல்வேறு உயிரினங்களின் வாழிடமாகவும் இக்கோயில்காடு இருக்கிறது. புள்ளிமான், நரி, வெருகு, மரநாய், புனுகுப்பூனை, செம்முககுரங்கு, சாம்பல் நிற தேவாங்கு, சாம்பல் நிற கீரி, மூவரி அணில், பச்சோந்தி, உடும்பு, மலை பாம்பு, பாறை பல்லி, அரணை உள்ளிட்ட காட்டு விலங்குகளின் வாழிடமாக இக்கோயில்காடு விளங்குகிறது.
கரூர் படுகொலை: நவீன ஓவியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை
கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது! | சாவித்திரி கண்ணன்
முதலமைச்சர் ஸ்டாலின் கமுக்கமாக தொடர்ந்து மெளனத்தை கடைபிடிப்பது அவரது கள்ள உள்ளத்தையே படம் பிடித்துக் காட்டுகிறது. போராடுவோரை நேரில் எதிர்கொண்டு பேசத் துணிவின்றி, அதிகார பலத்தை கொண்டு அடக்குவது கடைந்தெடுத்த கோழைத்தனமாகும்.
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் குறித்த பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை
”நமது போராட்டம் எல்லைக்கு அப்பால் உள்ள தொழிலாளர்களுடன் அல்ல, மாறாக இரத்தக்களரியால் லாபம் ஈட்டும் தரகு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவ எச்சங்கள் மற்றும் இராணுவ-தொழில்துறை வளாகங்களுடன் தான்.”
அனைத்து கட்சிகளையும் ஆட்டுவிக்கும் பா.ஜ.க
கூட்டணிக்கு வந்த அடுத்த நாளே அதிமுகவை பொன்முடியின் இந்து மதத்திற்கு எதிரான ஆபாச பேச்சிற்கு எதிராக போராட்டம் அறிவிக்க செய்து விட்டது, பாஜக!
சனாதனம் தகர்க்கவே வள்ளலாரின் ஜோதி வழிபாடு!
கடவுளையும் கோயிலையும் தங்களுக்கு மட்டுமே உரியதாக ஆக்கிக்கொண்டு, ஆரிய பார்ப்பனர்கள் செய்த ஆதிக்கத்தையும், ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமையையும், மூடச் செயல்களையும், சுரண்டல்களையும் ஒழிக்க, கடவுள் ஜோதி வடிவானது என்ற கொள்கையை அவர் கட்டமைத்தமை புலப்படுகிறது.
ஆட்டு ரத்தமும் தினை அரிசியும் முருகனின் படையல்
சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து..
சாவித்ரிபாய் பூலே ஏன் மறைக்கப்பட்டார் ? || சிந்தன் இ. பா. | மீள்பதிவு
பல கொடூரமான தாக்குதல்கள் நடத்தியபோதிலும், அனைத்தையும் தாங்கிக்கொண்டு அனைத்து சாதிப் பெண்களும் படிப்பதற்காக பள்ளிகளைத் துவங்க சாவித்ரிபாய் புலேவைத் தூண்டியது என்று சொல்லலாம்.
எம் மாணவிகளிடம் இனி என்ன சொல்ல? | கல்விச் செயற்பாட்டாளர் உமா
உங்களுக்கு ஏதாவது பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் நிச்சயமாக இந்த எண்ணுக்கு (14417) புகார் அளியுங்கள் என்று ஒரு ஆசிரியராக என்னிடம் படிக்கும் பெண் குழந்தைகளிடம் இனிமேல் எப்படி, நான் சொல்ல முடியும்?















