வினவு
அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! – சென்னை எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டம்
கல்வி கொடுப்பேன், மருத்துவம் கொடுப்பேன், சுகாதாரம் கொடுப்பேன், பேச்சுரிமை, சங்கம் சேரும் உரிமை, வியாபாரம் செய்யும் உரிமை எல்லாம் தருவேன் என்று ஏற்று கொண்டு, இந்த அரசு எல்லாவற்றையும் பறிக்கிறது. மேலும் மேலும் வரி விதித்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறது.
பெண் : வலியும் வலிமையும் – புதிய கலாச்சாரம் மின்னூல் !
இவர்கள் புதுமைப் பெண்கள் அல்ல; போராடும் பெண்கள். போராடும் கடமையை உணர்த்தும் வலிமையான பெண்கள். அந்தப் போராட்டத்தில் தங்களது உயிரையும் வாழ்வையும் இழந்த பெண்கள்.
இதயத்தை பிசையும் மாணவர் பிரகாஷின் மரண வாக்குமூலம் !
மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், கடந்த 25.10.2017 அன்று மாலை தனது முகநூல் பதிவில் “ இனி கல்லூரிக்கு என்னால் வரமுடியாது. என்னை மிகவும் இழிவு படுத்துகிறார்கள். எனது படிப்பையும் முடிக்க விடமாட்டார்கள். நான் சாகபோகிறேன்” என கடிதம் எழுதிவிட்டு, தனது மரணவாக்குமூலத்தை வீடியோவாக தனது மொபைலில் பதிவிட்டிருக்கிறார்.
அராஜகங்களுக்கு முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை ! தருமபுரி பொதுக்கூட்டம் !
எல்லா பிரச்சினையும் தீர்க்க கரம் கோர்ப்போம், வீதிக்கு வருவோம் தோற்றுப்போன கட்டமைப்பு இது என அம்பலப்படுத்துவோம். மக்கள் அதிகாரம் படைப்போம்.
கந்து வட்டி முதல் டெங்கு வரை தீர்வு என்ன? ஓசூர் போராட்டம்
கந்துவட்டிக் கொள்ளையை ஒழிக்க, சிறு தொழில் - விவசாயத்தை மீட்க, அனைவருக்கும் வேலை அளிக்க, கல்வி - சுகாதாரத்தை உத்திரவாதப்படுத்த மக்கள் அதிகாரத்தை நிறுவுவது ஒன்றே தீர்வு! ஊரெங்கும் மக்கள் கமிட்டி அமைப்போம்! மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்!
மூலதனம் நூலின் 150 வது ஆண்டு ! நவம்பர் புரட்சியின் 100 வது ஆண்டு !!
உலக முதலாளித்துவத்தின் கருவறையான அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டிலேயே ‘‘முதலாளித்துவம் ஒழிக” என்று லட்சக்கணக்கான மக்கள் குரலெழுப்பினர். முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களும் கூட மார்க்சின் மூலதனம் கூறும் கசப்பான உண்மைகளை அங்கீகரித்து விழுங்க வேண்டியதாயிற்று.
மோடியின் பணமதிப்பழிப்பு : எஸ்கேப் ஆகிறார் குருமூர்த்தி !
சென்னை பொருளாதார மையத்தில் குருமூர்த்தி ஆற்றிய உரையில் "பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஒரு விஷவாயுக் கூடமாக மாறிவிட்டது. முன்கூட்டியே வரியை வசூலிக்க முடியாத அரசாங்கம், இப்பொழுது வரியை வசூலிப்பதற்காகக் கருப்புப் பணத்தைத் துரத்தி வருகிறது" எனக் கூறியுள்ளார்.
ஏர் – இந்தியா : மகாராஜா விற்பனைக்கு !
பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்ட ஏர் இந்தியாவை விற்பதற்கு எந்தவிதமான சர்வதேச டெண்டரும் கோராமல், தாம்பாளத்தில் வைத்து டாடாவிடம் தூக்கிக் கொடுக்க மோடி அரசு முயலுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
டெங்கு : செயலிழந்த அரசை தட்டிக் கேட்போம் – திருப்பூர் ஆர்ப்பாட்டம் !
தலைமை மருத்துவர் எங்கே என்றால் எல்லோரும் கலெக்டர் பின்னால் சென்றுவிட்டார் என்றார்கள், கலெக்டர் எங்கே என்றால் மோடியின் அல்லக்கை OPS - EPS ன் - அமைச்சர்கள், MLA , MP களுக்கு பின்னால் கசாயம் கொடுத்துக் கொண்டுள்ளனர் என்பதே பதிலாக உள்ளது.
நீயா நானா நிகழ்ச்சி தேவையா ? கருத்துக் கணிப்பு
அமெரிக்காவில் பேஜ் 3 எனப்படும் மேட்டுக்குடியின் உணவு உடை இருப்பிடம் இதர அக்கப்போர்கள் குறித்து பேசப்படும் டாக் ஷோவின் பிரதிதான் நீயா நானா என்பது அதன் இயக்குநர் ஆண்டனிக்கு கூட தெரியாது.
அரசு மருத்துவமனைகள் விற்பனைக்கு… மோடியின் அடுத்த தாக்குதல் !
இந்தியாவெங்கிலும் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலுள்ள மூன்று முக்கிய பிரிவுகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் மோடி அரசின் முடிவு, ஒட்டகம் கூடாரத்தினுள் மூக்கை நுழைத்த கதையாகவே முடியும்.
பா.ஜ.க ஆளும் குஜராத்தில் 18 குழந்தைகள் மரணம் !
மருத்துவர் பிரபாகர் கூறியிருப்பதுதான் முக்கியமானது. அதாவது பிறக்கும் குழந்தைகளில் அன்றாடம் சராசரியாக ஐந்து முதல் ஆறு குழந்தைகள் இறக்குமென்றும், சனிக்கிழமை அன்று அது ஒன்பதாக சற்றே கூடியிருக்கிறது என்றும் நியாயப்படுத்தியிருக்கிறார்.
கந்துவட்டி படுகொலையைக் கண்டித்தால் சிறை ! கரூர் போலீசின் அராஜகம்
கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் பிருத்திவிராஜ் மற்றும் மாவட்ட காவல் துறையினர் மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதும், தொடர்ந்து பொய் வழக்கு போடுவதும் வாடிக்கையாக உள்ளது.
அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் – விழுப்புரம், திருச்சி பொதுக்கூட்டம் !
அரசியல் அக்கிரமங்களுக்கும் அராஜகங்களுக்கு முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை ! - மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்
கருப்புப் பண சேகர் ரெட்டியிடம் சரணடையும் மத்திய அரசு !
சேகர் ரெட்டி மட்டுமின்றி தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை மூலம் சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால், இப்போதுவரை சோதனை நடத்தப்பட்ட யார் மீதும் நடவடிக்கை இல்லை.