மதுரை: இந்து முன்னணி மாநாடு – நீதிமன்றமே துணை!
                    சனாதன பயங்கரவாதம் மதுரையில் பரவி வருகிறது. அதை எதிர்க்கவேண்டிய நீதிமன்றத்திலோ, சனாதனமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.                
            பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதி கிடைத்துவிட்டதா?
                    இக்குற்றத்திற்கு உறுதுணையாக இருந்த போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், அச்சமயத்தில் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த அரசியல்வாதிகள், கந்துவட்டி ரவுடிகள், பணக்காரப் பொறுக்கிகள் பலர் விசாரணை வளையத்திற்குள்ளேயே கொண்டுவரப்படாமல் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர்.                
            பாசிச கருநாகத்தின் கரையான் புற்றுகள்!
                    பா.ஜ.க. என்ற பாசிச கருநாகம் தமிழ்நாட்டில் கொழுத்து வளர்வதற்கு ஏதுவான கரையான் புற்றாக அ.தி.மு.க. உள்ளது. இப்புற்றுக்குள் குடிபுகுந்து அதனை கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்துவிட்டு தமிழ்நாட்டை சுற்றிவளைக்கும் மலைப்பாம்பாக வளர வேண்டும் என்று எத்தனிக்கிறது பாசிச கும்பல்.                
            தென்மாவட்டங்கள்: மாணவர்களிடையே அதிகரிக்கும் அரிவாள் கலாச்சாரம்
                    மாணவர்கள் மத்தியில் அரிவாள் கலாச்சாரமும் சாதியத் தாக்குதல்களும் அதிகரிப்பதை ‘சிறுவர்களுக்கு இடையிலான சாதாரண மோதல்’ என்றே தி.மு.க. அரசும் அதன் ஊடகங்களும் சித்தரிக்கின்றன.                
            ஜகபர் அலி, ஜாகிர் உசேன்.. தொடரும் படுகொலைகள் – கிரிமினல்மயமான அரசே குற்றவாளி!
                    இயற்கைவளக் கொள்ளைக்கு எதிராகவோ அல்லது சமூகப் பிரச்சினைகளுக்காகவோ போராடுபவர்கள் படுகொலை செய்யப்படுவதை இந்த அதிகார வர்க்கம் கண்டுகொள்வதில்லை என்பதுடன், அப்படுகொலைக்குக் கூட்டாளியாகவும் செயல்படுகிறது.                
            கல்லாங்காடு சிப்காட்டிற்கு எதிரான மக்கள் போராட்டம் வெல்லட்டும்!
                    சிப்காட் தொழிற்பேட்டை வருவதன் மூலம் கல்லாங்காடு சுற்றுவட்டாரப் பகுதி விவசாயம், கால்நடைகள், மேய்ச்சல் நிலங்கள், பழங்கால சின்னங்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள், காட்டுயிர்கள், கோவில்கள் என கல்லாங்காடு பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்நிலை மோசமடையும் அவலநிலை உள்ளது.                
            விகடன் முதல் விஜய் டிவி வரை: நெரிக்கப்படும் குரல்வளை!
                    ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுவதும் போலீசால் சிறையிடப்படுவதும் கிரிமினல் கும்பலால் படுகொலை செய்யப்படுவதும் அன்றாட நடைமுறையாக மாறிவருகிறது.                
            பள்ளிக்கல்வித்துறை: மோடி அரசின் பிடி இறுகுகிறது
                    தமிழ்நாடு ஆசிரியர்களையும் மாணவர்களையும் மோடி அரசுக்கு தாரைவார்ப்பதை ஒத்த இந்நடவடிக்கையின் மூலம் தி.மு.க. அரசு வலியுறுத்திவரும் மாநில உரிமை, கூட்டாட்சி போன்றவற்றையெல்லாம் அதுவே காலில் போட்டு மிதித்துள்ளது.                
            பி.எம். ஸ்ரீ திட்டம்: தேசிய கல்விக் கொள்கையின் சோதனைச்சாலை
                    ஒட்டுமொத்த அரசுப் பள்ளி கட்டமைப்பையே ஒழித்துக்கட்டி காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிடுவதற்கேற்பவே மோடி அரசு இப்பாசிச திட்டத்தை வடிவமைத்துள்ளது.                
            ஜாக்டோ-ஜியோ போராட்டம்: டிஜிட்டல்மயமாக்கச் சதியை முறியடிக்க வேண்டும்!
                    அரசுத் துறைகளில் நடக்கும் இந்த தனியார்மயமாக்கம், ஊழியர்களுக்கு உரிமைகளற்ற நிலைமை, ஒப்பந்தப் பணி முறை திணிப்பு, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் செய்யப்படும் அறிவிக்கப்படாத ஆட்குறைப்பு போன்றவை டிஜிட்டல்மயமாக்கம் என்ற பேரபாயத்தின் தயாரிப்புகள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும்.                
            பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்: தீர்வின் திசை எது?
                    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துவரும் சூழலில், குழந்தைகளின் பாதுகாப்பு மையமாக விளங்க வேண்டிய பள்ளிகளிலேயே இத்தகைய பாலியல் கொடூரங்கள் அரங்கேறி வருவது மிகவும் அபாயகரமான போக்காக உள்ளது.                
            முருகனைப் பற்றிய பார்ப்பனப் புரட்டு: களவாடும் பார்ப்பனக் கும்பலை விரட்டு!
                    தமிழரின் பழமையான நாட்டார் தெய்வமான முருகன் வழிபாடானது, குறிஞ்சி நிலத்தின் காவலராகத் தொடங்கி, காலப்போக்கில் பக்தி இயக்கங்களின் வழியே திசைமாற்றப்பட்டது. பார்ப்பனியத்தின் தலையீடுகள், முருகனுக்கான தமிழர் வழிபாட்டை மாற்றி, முருகனை வேத மரபுகளின் கீழ் அமையச் செய்தன.                
            திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டின் அயோத்தியல்ல, பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் தொடர்ச்சி!
                    எப்படியேனும் சாதி-மதவெறிக் கலவரங்களைத் தூண்டி தமிழ்நாட்டில் தளம் அமைக்க முயன்றுவரும், பார்ப்பன பாசிச கும்பலின் அடுத்தகட்ட நகர்வுதான் திருப்பரங்குன்றம். தாமதிக்காமல் திருப்பியடிக்க வேண்டிய தருணம் இது.                
            மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும்
                    இந்த மதவெறிக் கும்பலை விரட்டியடிப்பது பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் கடமையாகும். இதற்கு, மக்கள் அதிகாரம் தலைமையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டங்கள் ஒரு தொடக்கமாகும்.                
            மாநகராட்சி விரிவாக்கம்: கார்ப்பரேட் நகர உருவாக்கமும் உழைக்கும் மக்கள் வெளியேற்றமும்
                    சேவைத் துறையிலிருந்து அரசு விலகல், வரிச் சுரண்டல், விலைவாசி-கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்ட இந்த நகரமயமாக்கலால் மக்களின் வாழ்க்கை செலவினம் அதிகரிக்கும். இதனால் சமூக நெருக்கடி தீவிரமடைவதோடு உழைக்கும் மக்கள் புலம்பெயர்வதும் அகதிகளாவதும் தீவிரமடையும்.                
            





















