நன்கொடை தாருங்கள்

அன்பார்ந்த நண்பர்களே,

வினவு ஒரு தொழில் முறை நிறுவனத்திற்குரிய வசதிகள் ஏதுமில்லாமலேயே தொழில் முறை நிறுவனம் போல செயல்படுகிறது. புதிய வடிவமைப்பு அறிமுகப்படுத்திய பிறகு பதிவுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளோம். தற்போது வாசகர் பார்வைகள் பத்தாயிரம் என்ற அளவை எட்டியிருக்கிறது. இது அதிகரிக்கும் போது தற்போதுள்ள சர்வர் வசதி போதாது என்பதால் டெடிகேட்டட் சர்வர் வசதியை பெறவேண்டியிருக்கும் என்று எமது தொழில் நுட்ப பணிகளை ஒருங்கிணைக்கும் தோழர் கூறுகிறார். அதுதான் தேவை என்றால் கூடிய விரைவில் மாதம் சில ஆயிரங்களை கட்டணமாக செலுத்த நேரிடும்.

இதுவரை வினவின் வடிவமைப்பிற்காக கணிசமாக செலவு செய்து முடித்திருக்கிறோம். இது போக கணினி பராமரிப்பு, அதிவேக இணையக் கட்டணம், வினவு தோழரின் குறைந்த பட்ச பராமரிப்பு என்ற வகையில் எமது மாதாந்திர செலவுகள் அதிகரித்திருக்கின்றன. மேலும் எழுத வாய்ப்புள்ள சில தோழர்களுக்கு கணினி இல்லாமல் இருப்பது, படம் வரைய வாய்ப்புள்ள தோழர்களுக்கு கணினி, இணைய தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது முதலான தேவைகளும் இருக்கின்றன.

வினவு குழுத் தோழர்கள் அனைவரும் பகுதி நேரமாகவே இந்த வேலையை செய்து வந்தாலும் யதார்த்தத்தில் இதுவே முழுநேர வேலையாக மாறி வருகிறது. எதிர்காலத்தில் வினவுக்கென்றே முழுநேரமாக வேலை செய்யும் தோழர்களை ஒதுக்க நினைத்திருக்கின்றோம். அப்போது அவர்களது பராமரிப்பு ஈடு கட்டப்பட வேண்டும். வினவு ஆசிரியர் குழுத் தேவைக்காக மாதந்தோறும் பல பத்திரிகைகள் வாங்குவது, தேவையான நூல்கள் வாங்குவது என்ற முறையிலும் நிதி தேவைப்படுகிறது.

இன்னும் ஆடியோ, வீடியோ முதலான வசதிகளை நாங்கள் கிரமமாக பயன்படுத்தவில்லை. அதற்கும் ஏற்பாடுகள் செய்து அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே எமது அவா. எதிர்காலத்தில் வினவு பத்திரிகையாக மட்டுமில்லாமல் இணைய ஊடகத்தின் அனைத்து சாத்தியப்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம்.

புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் மற்றும் எமது அமைப்பு வெளியிட்ட நூல்கள் அனைத்தையும் ஆவணப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கென்று சில இலட்சங்கள் வரையிலும் செலவாகுமெனத் தெரிகின்றது. தமிழக அரசியல் உலகில் மிகுந்த வரவேற்பு பெற்றிருக்கும் இந்தப் பத்திரிகைகள் இப்போது உங்களுக்கு மாதந்தோறும் இலவசமாகவே அளிக்கப்பட்டு வருகின்றது. தற்போது வாய்ப்பிருக்கும் பட்சத்தில் நேரடி ரிப்போர்ட்டுகளை அளிக்கிறோம். இனி அவற்றை அதிகரிக்க நினைத்திருக்கிறோம். இத்தகைய அளவில் நடைமுறைச் செலவுகள் அதிகரித்திருக்கின்றன.

கூடிய விரைவில் வினவு ஆங்கிலத் தளம் அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். தேவையெனில் அதற்கு தொழிற்முறை மொழிபெயர்ப்பாளர்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவையும் எமது நடைமுறைச் செலவுகளை அதிகரிக்கும்.

தற்போது சில தோழர்கள், நண்பர்களின் பொருளாதார பங்களிப்பினாலேயே வினவு தளம் நடத்தப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் செலவினங்களால் அந்த பங்களிப்பு போதாது என்பதாலேயே உங்களை நாடி வருகிறோம். மேலும் வினவில் எந்த விளம்பரமும் வெளிவராது என்பதை ஏற்கனவே அறிவித்திருக்கிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக இணையத்தில் காத்திரமான கருத்துக்களையும், சமூக அக்கறைக்குரிய செய்திகளையும், ஆய்வுகளையும் சுருங்கச் சொன்னால் சமூக மாற்றத்தையும், புரட்சிகர அரசியலையும் நம்பிக்கையுடன் படிப்பவர் மனதில் வளர்க்கும் இந்த தளத்திற்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும். ஒன்று நீங்கள் எங்களது அரசியலை, செயல்பாட்டை மேலும் தெரிந்து கொள்வதற்கு நேரடியாக எம்மை தொடர்பு கொள்வது, மற்றொன்று உங்களால் தீர்மானிக்கப்பட்ட நிதியுதவியை மாத நன்கொடையாகத் தருவது.

நாடும் மக்களும் இருக்கும் நிலையில் வினவின் இருப்பும், வளர்ச்சியும் எவ்வளவு தேவையானது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அந்த ஆதரவை பொருளாதார ரீதியில் தரவேண்டிய கடமையும் உங்களுக்கு இருக்கிறது.

எனவே உங்களது மாத குடும்பச் செலவுகளில் ஒரு அம்சமாக வினவுக்கு நன்கொடை என்பதையும் சேர்த்து விட்டு அமுல்படுத்துமாறு உரிமையுடன் கோருகிறோம். உங்களால் இயன்றதை நன்கொடை அளிப்பதை விட இன்னதுதான் என்று தீர்மானித்து அளிப்பதை விரும்புகிறோம். நன்கொடை அளிப்பதற்கு வசதியாக பே பால் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். நீங்கள் மட்டுமல்ல, உங்கள் நட்பு வட்டாரத்தையும் நன்கொடை பட்டியலில் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இணையம் மூலம் பாதுகாப்பாக நன்கொடை அளிக்கும் வகையில் பேபால் (PAYPAL) வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம். பதிவின் இறுதியில் தோன்றும் “DONATE” பட்டனை அழுத்தி நீங்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். வெஸ்டர்ன் யூனியன் (WESTERN UNION) மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் KANNAIYAN RAMADOSS என்ற பெயருக்கு பணம் அனுப்பி விட்டு விவரங்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். BANK TRANSFER மூலம் வங்கி கணக்கில் செலுத்த விருப்புவோருக்கான விவரம்

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

நன்கொடை அளிப்பவர்கள் அனைவருக்கும் உரிய இரசீதுகள் அனுப்பி வைக்கப்படும். தோள் கொடுங்கள்!

தோழமையுடன்
வினவு

_____________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]