Description
பாஜக.வின் வளர்ச்சி சவடாலையும், பார்ப்பனிய பண்பாட்டு தாக்குதலையும் அம்பலப்படுத்தும் அறிவுத்துறையினரை ஒடுக்க, மோடி அரசு முயல்கிறது. நமது நாடு ஒரு பாசிச அபாயத்தை எதிர்கொள்ளும் உண்மையையும், அதை முறியடிக்க வேண்டிய கடமையையும் இந்தத் தொகுப்பு நினைவுபடுத்துகிறது.
“மோடியைக் கொல்ல சதியா ? “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் !
- ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து ! பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் !!
- பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும் !
- ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் ஊபா சட்டத்தில் கைதா ?
- மோடி அரசின் பாசிசத்திற்கு பச்சைக் கொடி காட்டும் உச்ச நீதிமன்றம்
- அவசர நிலை : ஆர்.எஸ்.எஸ் அன்றும் இன்றும்
- மோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் – பிரசாந்த் பூசன் – ராமச்சந்திர குஹா கண்டனம் !
- ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய்! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் !
- அண்டப்புளுகர் அர்னாப் கோஸ்வாமியை அம்பலப்படுத்துகிறார் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ்
- தோழர் கோபட் காந்தியை சிறைப்படுத்திக் கொல்லாதே! விடுதலை செய்!
- தீஸ்தா செதல்வாட் கைது முயற்சி : பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி !
- கவுரி லங்கேஷ் கொலையாளிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதல் இடத்தில் கிரிஷ் கர்னாட்
- மோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா?
- பிணியொன்று நம்மை பீடித்துள்ளது!
- கல்புர்கி கொலை : இந்து மதவெறி – ஆதிக்க சாதிவெறியின் அட்டூழியம் !
- பேராசிரியை நந்தினி சுந்தர் மீது கொலை வழக்கு – பாஜக பாசிசம் !
- தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் !
- ஜே.என்.யு. மாணவர் உமருக்கு துப்பாக்கிக் குண்டு !! இதுதான் மோடியின் சுதந்திரதினச் செய்தி !
பதினெட்டு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்