privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்வெங்காயம்: நமக்கு ஆம்லேட் போடும் உரிமை கூட இல்லை !

வெங்காயம்: நமக்கு ஆம்லேட் போடும் உரிமை கூட இல்லை !

-

ன்றைக்கு வெங்காய விலை என்ன ? என்று கேட்பதுதான் பெரும்பான்மை மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை அவர்களே உரசிப் பார்க்கும் அளவுகோல். சத்தான உணவோ, காய்கறிகளோ கிடைக்காமல் போனால் கூட சாதாரண மக்கள் வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் வைத்து ஒரு ரூபாய் ரேசன் அரிசியைப் பொங்கி நாளை ஓட்டி விடுவார்கள். ஆனால் அந்த வெங்காயத்தின் விலையோ கடந்த வாரம் கிலோவுக்கு ரூ 80 வரை உயர்ந்து தற்போது ரூ 100-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உரிக்கும்போது வரும் கண்ணீரை விட விலையை கேட்கும் போது வருவதாக அனைத்து ஊடகங்களும் ஒன்று போல தெரிவிக்கின்றன.

onion1998-ல் டெல்லி யூனியன் பிரதேச தேர்தலில், ஆட்சியிலிருந்த பாஜக வை மண்ணைக் கவ்வ வைத்த வெங்காய விலை உயர்வை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். (அதனால்தானோ என்னவோ டெல்லியிலுள்ள அரசு விற்பனையகங்களில் கிலோ வெங்காயம் ரூ 50-க்கு விற்கப்படுகையில், கிலோ ஒன்றுக்கு ரூ 25 என வெங்காய விற்பனையை பாஜக துவங்கி உள்ளது).

இன்று வெங்காய உற்பத்தியானது கனமழை மற்றும் ஏற்ற இறக்கம் நிறைந்த கொள்முதல் விலையினால் பாதிக்கப்பட்டிருப்பதோடு, ஏற்றுமதிக்கு நாட்டின் கதவு தாராளமாக திறந்து விடப்பட்டுள்ளதாலும் வெங்காய விலை ஏற்றம் நடக்கிறது. உள்நாட்டு சந்தையின் தேவையை விட மிகவும் குறைவான அளவே வெங்காய வரத்து இருப்பதால் விலை அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை வெங்காயத்தை அழுகச் செய்துள்ளது. வெங்காய மொத்த வியாபாரிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதனை பதுக்கவும் செய்கின்றனர்.

வெங்காயம் ஒரு குறுகிய காலப் பயிராகும். வெங்காய சாகுபடிக்கு குறைந்த அளவே நீர் தேவைப்படுகிறது. பெரிய அளவில் வேலைகளைக் கோராத வெங்காய பயிரிடலில் 60 முதல் 90 நாட்களுக்குள் விளைச்சலை எடுத்து விடலாம். ஆனால் அதற்கு பிறகு அதனை பக்குவமாக சேமிப்பது என்பது மிகவும் வேலை பிடிக்க கூடியது. வெங்காயம் மற்றும் தக்காளி போன்றவற்றின் விலை நிலையற்றதாக இருப்பதால் விவசாயிகள் இதனை பெரும்பாலும் பயிர் செய்ய விரும்பவதில்லை. தமிழகத்தின் திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஓரளவு பயிர்செய்யப்பட்டாலும் தமிழகத்தின் 80 சதவீத வெங்காயத் தேவையை பூர்த்தி செய்வது மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டம்தான். ஏறக்குறைய இந்திய தேவையான ஆண்டுக்கு 100 லட்சம் டன் வெங்காயத் தேவையில் கால் பங்கு இங்கிருந்துதான் செல்கிறது. 2002-ல் அரசு இந்த மாவட்டத்தை திட்டமிட்டரீதியில் வெங்காய விவசாயத்திற்காக தேர்வு செய்தது.

அம்மாவட்டத்தினைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏறக்குறைய 400 சதுர கி.மீ பரப்பளவில் வெங்காயம் விளைகிறது. அங்கு ஜனவரி முதல் மே மாதம் வரையிலும், மத்திய பிரதேசத்தில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலும், ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் செப்டம்பர் வரையிலும் சாகுபடி செய்யப்படும் வெங்காயம் இந்தியா முழுக்க செல்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக வெங்காய கொள்முதல் விலை கட்டுபடியாகாத காரணத்தால், இந்த ஆண்டு நாசிக் மாவட்டத்தில் வேறு பயிர்கள் மற்றும் கனிகள் உற்பத்திக்கு விவசாயிகள் மாறி விட்டனர். குறிப்பாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் கேசார் மாம்பழ விவசாயத்திற்கு மாறியுள்ளனர்.

கூடவே கடும் வறட்சியும், விவசாய தொழிலாளர்கள் தட்டுப்பாடும் வெங்காய விளைச்சலை கடுமையாக பாதித்தன. விளைந்து வந்த வெங்காயத்தை சமீபத்தில் பெய்த கனமழை அழுகச் செய்யவே சந்தைக்கு வரத்து குறைந்து, விலை கடுமையாக உயர்ந்தது. கர்நாடகாவில் சித்திரதுர்கா பகுதியிலிருந்து இந்த ஆண்டு வர வேண்டிய 50 லட்சம் மூட்டைகளில் பாதியளவே தமிழகத்திற்கு வந்துள்ளது என்கிறார் கோயம்பேடு மொத்த விற்பனையாளர் சங்க ஆலோசகர் வி.ஆர். சௌந்திரராசன்.

Onion-priceவிலை உயர்வுக்கு மத்திய அரசு தாராளமாக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்த்தும் ஒரு காரணம் என்கிறார் அவர். 2010-ல் இப்படி அதீத ஏற்றுமதியால் உள்நாட்டுத் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பிறகு பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்து சரி செய்தோம் என்கிறார். பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது உயர்ந்து கொண்டிருப்பதும் வெங்காய விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்றாலும், கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்தில் மட்டும் 7 லட்சம் டன் வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போது சீனா, ஈரான், மலேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து நிலைமையை அரசு சமாளிக்க வாய்ப்பிருந்தாலும், அதற்கு அருகி வரும் அந்நிய செலவாணியை கொஞ்சம் இழக்க வேண்டியிருக்கும். ரூபாயின் மதிப்பு வேகமாக சரிந்து வருவதற்கு வெங்காய இறக்குமதியும் தன் பங்கிற்கு கொஞ்சம் அழவைக்கும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வின் காரணமாக பங்களாதேஷில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயத்தின் விலையை டன் ஒன்றுக்கு 400 டாலரில் இருந்து 650 டாலர் வரை உயர்த்தி விட்டனர். இதனால் அந்நாட்டு மக்களும் சொந்த தேவைகளுக்கு வெங்காயம் வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

onion-workersஆன்லைன் வர்த்தகத்தில் வெங்காயம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. பதுக்கலும் கணிசமாக இருப்பதால் செப்டம்பர் மாதம் ஆந்திரத்திலிருந்து வெங்காயம் வரத் துவங்குவதற்குள் பதுக்கல்காரர்கள் இருப்பிலுள்ள வெங்காயத்தை சந்தையில் விட்டு காசாக்கி விடுவர். அதன் பிறகு வரும் ஆந்திர விவசாயிகளின் வெங்காயம் அதிக வரத்து காரணமாக அடிமாட்டு விலைக்கு (அதாவது கிலோ ஒன்றுக்கு ரூ 10 வரை) கொள்முதல் செய்யப்படும்.

நாடு முழுக்க ஒரே சீரான கொள்முதல் நிர்ணய விலையை அரசு வெங்காயத்திற்கு நிர்ணயிக்கவில்லை. அதிகம் வெங்காயம் விளையும் நாசிக் பகுதியில் வெங்காயத்திற்கான கொள்முதல் விலை கடந்த மாதம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2400 வரை இருந்தது. ஆனால் உற்பத்தி 47.6 லட்சம் டன் (அதாவது கடந்த ஆண்டை காட்டிலும் 16% குறைவு) குறைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இப்போதுதான் கடுமையான விலை உயர்வு வெங்காயத்திற்கு ஏற்பட்டுள்ளது.

வெங்காயம் விலை உயர்வு மற்றும் மிளகாய் விலை உயர்வு போன்றவை அனைத்து தரப்பு மக்களையும், குறிப்பாக ஏழை எளியவர்களை கடுமையாக தாக்கும் பிரச்சினை.

சரி, கூட்டிக்கழித்துப் பார்த்தால் வெங்காய விலை உயர்வுக்கு காரணம் என்ன? இதற்கு இயற்கை சதியோ இல்லை நுகர்வு பெருக்கோ காரணமல்ல. முதலாளித்துவ சந்தைதான் விலையை தீர்மானிக்கும் என்ற அராஜக நிலைமையே விலை உயர்வைத் தோற்றுவிக்கிறது.

ஓராண்டிற்கு இந்திய மக்களுக்கு எவ்வளவு வெங்காயம் வேண்டும், அதை எங்கெல்லாம் எப்போதெல்லாம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற மையப்படுத்தப்பட்ட உற்பத்தியோ திட்டமோ இங்கில்லை. மாறாக மறுகாலனியாக்கத்திற்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யலாம், விலையை சந்தையின் கையில் அளிக்கலாம், உற்பத்தியை மாற்றலாம் என்று ஏராளமான அராஜக செயல்பாடுகள் வெங்காயத்தின் சருகுகளில் மறைந்துள்ளன.

இந்திய விவசாயத்தின் தற்போதைய நிலையும், போக்கும் பன்னாட்டு முதலாளிகளால்தான் தீர்மானிக்கப்படும் என்றான பிறகு நீங்கள் ஆம்லேட்டிற்கு வெங்காயத்தை எதிர்பார்க்க முடியாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க