privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்தடையை மீறி திருச்சி, தருமபுரி, புதுச்சேரியில் மே நாள் பேரணி

தடையை மீறி திருச்சி, தருமபுரி, புதுச்சேரியில் மே நாள் பேரணி

-

ஞ்சை, திருச்சி, கரூர், திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து திருச்சியில் மே தின பேரணி- ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம்
ஆளும் அருகதையற்ற அரசு கட்டமைப்பை வீழ்த்துவோம். மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

ஆளும் அருகதையற்ற அரசு கட்டமைப்பை வீழ்த்துவோம். மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!” என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

10 நாட்களுக்கு முன்பே காவல்துறையிடம் அனுமதி கோரியிருத்தோம். உரிய நேரத்தில் பதில் சொல்லாமல் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தனர். அனுமதி மறுப்புக்கு போலீசு கூறிய காரணம் தான் வேடிக்கையானது. “ஊர்வல பாதையில் மிகுதியான தொழிலாளர்கள் இருப்பதால் அனுமதி வழங்க இயலாது” என்று குறிப்பிட்டு இருந்ததைக் கண்டு அழுவதா?, சிரிப்பதா என்றே தெரியவில்லை.

இருப்பினும், உயர் அதிகாரிகளை சந்தித்து அனுமதி பெற முயற்சித்தோம். இதற்கு பொறுப்பான துணை ஆணையர், “திருச்சி மாநகரில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை. இது குறித்து எவ்வித விவாதம் நடத்தவும் நான் தயாராக இல்லை” என திமிராக பதிலளித்தார்.

எனவே, தடையை மீறி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்து திட்டமிட்டவாறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

கடைசி நேரத்தில், “ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அனுமதி தருகிறோம்” என காவல் துறை பேரம் பேசியது.

“பேரணி, ஊர்வலம் நடத்துவதற்கு குறைவாக எதையும் ஏற்க மாட்டோம்! தடைமீறி நடத்துவோம்!” என உறுதியாக தெரிவித்த பிறகு மே தினத்தன்று பகல் 3.30 மணிக்கு அவசர அவசரமாக நம்மிடம் விண்ணப்பம் வாங்கிக் கொண்டு அனுமதி தந்தனர்.

மே நாள்  பேரணி, ஆர்ப்பாட்டம்
“பேரணி, ஊர்வலம் நடத்துவதற்கு குறைவாக எதையும் ஏற்க மாட்டோம்! தடைமீறி நடத்துவோம்!”

பேரணி 4.30 மணிக்கு மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகிலிருந்து எழுச்சியுடன் துவங்கியது. பெண்கள் விடுதலை முன்னணியின் திருச்சி மாவட்டத் தலைவர் தோழர் நிர்மலா உரையாற்றி துவங்கி வைத்தார். பேரணி முன்னதாக சிறுவர் சிறுமியர், பெண் தோழர்கள் கலந்து கொண்ட சிலம்பாட்டம் நடத்தியது பார்ப்பவர்களின் புருவத்தை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து தோழர்களின் பறை இசை விண்ணதிர செய்தது.

சிலம்பம், பறையிசை, பாடல்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தோழமை அமைப்புகளின் பெரிய அளவிலான கொடிகளை செஞ்சட்டை அணிந்து தோழர்கள் ஏந்தியும், அரிவாள், சுத்தியல் சின்னத்தையும் ஏந்தி நடைபோட்ட காட்சி அனைவரையும் பரவசப்படுத்தியது. மேலும் மே தின தியாகிகளின் 8 படங்கள் அடங்கிய பதாகைகள் பிடித்து வரப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஊர்வலத்தில், “அரசு கட்டமைப்பின் உறுப்புகளான சட்டமன்றம், பாராளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை, தேர்தல் முறை இவை சீரழிந்து நிலைகுலைந்து மக்களுக்கு எதிரான சக்திகளாக மாறிவிட்டன” என்பதையும்”, “மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மக்களே தங்களின் அதிகார அமைப்புகளை நிறுவுவது ஒன்றே வழி” என்பதையும் விளக்கும் வகையில் முழக்கங்கள் எழுப்பட்டன. போலீசு, நீதித்துறையையும் அம்பலப்படுத்தி எழுப்பட்ட முழக்கங்கள் அனைவரையும் ஈர்த்தன.

பேரணி தொடங்கும் போது நம் தோழர்கள் போல சிகப்புச் சீருடை அணிந்து கொண்டு உளவு பிரிவு காவலர் கூட்டத்திற்க்குள் நுழைந்து பேரணியில் கலந்து கொண்டவர்களை மிக அருகில் வந்து வீடியோ எடுத்து கொண்டிருந்தார். இதை கவனித்த தோழர்கள் அவர் அருகில் சென்று விசாரித்ததில் முதலில் தயங்கிய அவர் பிறகு தான் உளவு பிரிவை சேர்ந்தவர் என்பதை ஒத்துக்கொண்டார்.

சிவப்பு சட்டை போட்ட உளவுத்துறை போலீசின் கேவலமான செயல்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

உடனே, பேரணியில் கலந்து கொண்ட தோழர்களிடம் சத்தமாக “இவர் நமது தோழர் அல்ல, உளவுப் பிரிவை சேர்ந்தவர் என்ன ஒரு கேவலமான செயல் பாருங்கள். இது தான் காவல் துறையின் யோக்கியதை” என்று அம்பலப்படுத்தி அந்த காவலரையும் எச்சரித்து அனுப்பினார்கள்.

ஊர்வலம் மிகுந்த கட்டுப்பாட்டுடனும், ஒழங்குடனும் நடைபெற்றது. சாலை இருமருங்கிலும், நுற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர். மாலை 6.30 மணிக்கு சத்திரம் (திருச்சி) பேருந்து நிலையம் அருகே சிந்தாமணி அண்ணாசிலை அருகில் பேரணி நிறைவுற்று ஆர்ப்பாட்டம் துவங்கியது.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.முவின் இணைப்பு சங்கமான பாய்லர் பிளான்ட் ஒர்க்கஸ் யூனியன் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் சுந்தர்ராஜ் தலைமை ஏற்று நடத்தினார்.

“130 ஆண்டுகளுக்கு முன் சிக்காகோ நகரத்தில் உயிர்தியாகம் செய்த மே தின தியாகிகளின் வரலாறு தொடங்கி ஏராளமான போராட்டங்களால் வென்றேடுக்கப்பட்ட உரிமைகள் இன்று பறிபோய்க் கொண்டிருக்கின்றன” என சுட்டிக்காட்டி, “இந்த சுரண்டல் சமூக அமைப்பை ஒழித்து கட்ட தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அடுத்து பு.மா.இ.மு திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆசாத், “கல்வி, மருத்துவத்தில் அரசு தன்னுடைய பொறுப்பை தட்டிக்கழித்து தனியார் கொள்ளைக்கு துணைபோகும், இந்த அரசமைப்பை வீழ்த்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து வி.வி.மு பட்டுக்கோட்டை வட்ட செயலர் தோழர் மாரிமுத்து, மோடி அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையப்படுத்தல் சட்டத்திருத்தத்தின் மக்கள் விரோத நோக்கத்தை பேசினார்.

ம.க.இ.க திருச்சி மாவட்ட செயலர் தோழர் ஜீவா இந்த அரசு கட்டமைப்பு முழுவதும் மக்கள் விரோதமாக மாறியிருப்பதையும், அதை அடித்து நொறுக்கி மக்கள் அதிகாரத்தை நிறுவவேண்டிய அவசியத்தை பேசினார்.

இறுதியாக சிறப்புரை ஆற்றிய ம.க.இ.க மாநில இணை பொதுச்செயலர் தோழர் காளியப்பன் பிழைப்பு வாத ஓட்டுப் பொறுக்கிகள் மே தினத்தின் போராட்ட குணத்தை நீர்த்து போகச் செய்யும் வகையில் இனிப்பு வழங்கி கொண்டாடுவதை அம்பலப்படுத்தினர். ஆளும் நியாய உரிமையை இழந்து மக்கள் விரோதமாக மாறியிருக்கும் இந்த அரசு கட்டமைப்பின் தோல்வி, சீர்குலைவு. இவற்றை ஆளும்வர்க்கத்தின் அறிவுத்துறையினரே ஒத்துக் கொள்வதை பல்வேறு உதரணங்களுடன் விளக்கி இந்த அரசு கட்டமைப்பை தகர்த்தெறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, மக்கள் சொந்த அதிகார அமைப்புகளை நிறுவுவதே அனைத்து மக்கள் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்று கூறினார்.

மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம்
மக்கள் சொந்த அதிகார அமைப்புகளை நிறுவுவதே அனைத்து மக்கள் பிரச்சனைக்கு ஒரே தீர்வு.

ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே புரட்சிர பாடல்கள் இசைக்கப்பட்டன. இறுதியாக,  கரூர் மாவட்ட பு.மா.இ.மு மாவட்ட செயலர் தோழர் பாக்கியராஜ் நன்றியுரையாற்றினார்.

புரட்சிகர அமைப்புகளின் இந்த பேரணி , ஆர்ப்பாட்டம் திருச்சி பகுதி உழைக்கும் மக்களிடையே விரிவாக பிரச்சாரத்தை கொண்டு செல்ல ஏதுவாக இருந்தது.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி கிளை

2. திருச்சி பு.ஜ.தொ.மு

மே தினத்தில் காலை 8 மணிக்கு திருச்சி குட்செட் பகுதியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பாக கொடியேற்று விழா நடைபெற்றது. அதற்கு அச்சங்கத்தின் தோழர் முத்துகருப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தோழர் இராஜரெத்தினம் வாழ்த்துரை வழங்கினார். இச்சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர் ராஜா அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அவர் பேசுகையில், இரயில்வே துறை தனியார்மய மாக்கப்படுத்துவதை கண்டித்தும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை இழப்பு ஏற்படுவதை விளக்கி, “ஆளும் அருகதையற்ற இந்த அரசு கட்டமைப்பை வீழ்த்துவோம் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்” எனக் கூறினார். இந்நிகழ்வில் புதிதாக சங்கத்தில் இணைந்த தோழர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பாக ஒத்தம்மாள் ஆட்டோ ஸ்டாண்டு மற்றும் NSP ரோடு ஆட்டோ ஸ்டாண்டுகளில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுகளுக்கு தோழர் மணலிதாஸ், தோழர் கோபி தலைமை தாங்கினார்கள்.

ஆ.ஓ.பா.ச தலைவர் தோழர் செல்வராஜ் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வு ஆ.ஓ.பா.ச தோழர்களுக்கும் புதிதாக வந்திருந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செய்தி:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி.

3. தருமபுரி

மே நாளில் சூளுரைப்போம், ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம், மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்

dharmapuri-may-day-rally-demo-06மக்களின் உரிமைகளை மீட்டெடுத்த உன்னத திருநாளான மே நாளை, ஓட்டுப் பொறுக்கி கட்சியான அ.தி.மு.க குத்தாட்டம் போட்டு, தொழிலாளர்களின் சிந்தனையை சீரழித்து ஓட்டு பொறுக்குவதற்கான விழாவாக மாற்றியது.  சி.பி.ஐ, சி.பி.எம் கூட மே நாளை சடங்குத்தனமாகவே பார்க்கின்றனர்.

ஆனால், மே தினம் உணர்த்தும் உண்மைகளை வெளிக் கொண்டு வந்தது புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மே தினத்திற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் சுவரெழுத்து எழுதினர். பெரிய போலீசு படையே வந்தது.

“அனுமதி வாங்கி விட்டீர்களா” என்றது, போலீசு.

“வாங்கியாச்சு” என்றார்கள் தோழர்கள்.

“இருந்தாலும் நீங்க எழுதக் கூடாது” என்று லேசாக மிரட்டிப் பார்த்தனர்.

அசராத தோழர்கள் பணியை நிறுத்தாமல் தொடர்ந்தனர். இது வேலைக்கு ஆகாது என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு ஃபோட்டோ எடுத்துக் கொண்டனர். எங்கு சுவரெழுத்து எழுதினாலும், முழக்கங்களை ஃபோட்டோ எடுத்தது உளவுத்துறை.

இதனைத் தொடர்ந்து கடைவீதி, பேருந்து என மக்கள் கூடும் இடங்களில் பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

மே தினத்தன்று மதியம் 2.45 மணிக்கு தோழர் பரசுராமன் தலைமையில் பேரணி துவங்கியது. தருமபுரி சந்தைப்பேட்டையிலிருந்து சிவப்பு கொடிகளும், பறை ஒலியும், விண்ணை அதிர வைத்த முழக்கங்களுடன் நக்சல்பாரிகள் இந்த நாட்டின் விடிவெள்ளிகள் என்பதை நிரூபிக்கும் வகையில் கம்பீரமாக தொடங்கி, செங்கொடிபுரத்தில் நிறைவுற்றது, பேரணி.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆர்ப்பாட்டத்திற்கு வி.வி.மு வட்டாரச் செயலாளர் தோழர் கோபிநாத் தலைமை தாங்கினார்.  பு.மா.இ.மு  மாவட்ட அமைப்பாளர் தோழர் ராஜா, வி.வி.மு தோழர் முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

“மே தினத்தின் ஓட்டுக்கட்சிகள் குத்தாட்டம் ஆடினால் செருப்பால் அடிக்க வேண்டும். மே தினம் நமக்கு நமது உரிமையை மீட்டெடுக்க உணர்த்தும் தினம். இந்த அரசமைப்பு ஆளும் தகுதியை இழந்து விட்டது. நீதிமன்றம் கிரிமினல் மன்றமாக உள்ளது. போலீசுகாரர்கள்தான் கற்பழிப்பு, திருட்டு, செம்மரக் கடத்தலில் காசு பார்ப்பது என்று இருக்கின்றனர். மருத்துவம், கல்வி, சுகாதாரம், வேலை என மக்களுக்கு எதுவும் செய்ய துப்பில்லாத அரசை நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும். நம்மை ஆளுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. நக்சல்பாரிகள் தலைமையில் மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டும்” என்று அறைகூவி பேசினார் தோழர் முத்துக்குமார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக, தோழர் சிவா நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

 4. புதுச்சேரி

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் மே நாள் அன்று புதுச்சேரி சுதேசி மில் அருகில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க