privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசெப்டம்பர் 2 : தமிழகமெங்கும் தொழிலாளர் போராட்டம்

செப்டம்பர் 2 : தமிழகமெங்கும் தொழிலாளர் போராட்டம்

-

தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம்!

செப்டம்பர் 2 அன்று மாநிலம் தழுவிய போராட்டங்கள்!

ரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் தொழிலாளி வர்க்கத்தின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இந்திய தொழிலாளி வர்க்கம் காலனியாதிக்கத்தின் போது போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் அப்பட்டமாகப் பறித்து வருகிறது. ஏற்கனவே, தொழிலாளர் நலச்சட்டங்களை முதலாளிகள் கோருகின்ற வகையில்  திருத்தி வருகிறது. இதன் உச்சகட்டமாக தற்போது உள்ள 44 தொழிலாளர் நலச்சட்டங்களையும் 5 தொகுப்புகளாக்கிட திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தொழிலாளர் நலச்சட்டங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள முக்கியப் பிரிவுகளை பிரித்தெடுத்து, அவற்றை முதலாளிகளுக்கு சாதகமான முறையில் திருத்தம் செய்து, பின்னர் ஒரு தொகுப்பாக வெளியிடுவது என்பது மத்திய அரசின் திட்டம்.

இதன் முதல் கட்டமாக தொழிற்சங்க சட்டம், தொழிற்தகராறு சட்டம், நிலையாணைகள் சட்டம் ஆகிய மூன்றையும் ஒன்றாக்கி “தொழிலுறவு சட்டத்தொகுப்பு மசோதா 2015” என்கிற பெயரில் வரைவு ஒன்றினை கடந்த ஏபரல் மாதத்தில் முன்மொழிந்துள்ளது.

இது நிறைவேற்றப்படுமானால்,

  • தொழிற்சங்கம் அமைக்கின்ற உரிமை,நியாயமான கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்கிற உரிமை, கூட்டுப்பேர உரிமை ஆகிய அனைத்து உரிமைகளையும் தொழிலாளி வர்க்கம் இழந்து விடும்.
  • அதே போல, 100 தொழிலாளர்கள் பணிபுரிகின்ற ஆலைமூடலுக்கு அரசிடம் முன்அனுமதி பெற வேண்டும் என தற்போதுள்ள உச்சவரம்பை 300 ஆக உயர்த்த உத்தேசித்திருப்பதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் வேலை செய்கிற உரிமையும் பறிக்கப்பட்டு விடும்.

தொழிலாளி வர்க்கத்தின் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களையும், உரிமை பறிப்புகளையும் மோடி அரசு நியாயப்படுத்தி வருகிறது. நாட்டின் தொழில்வளர்ச்சி தடையின்றி முன்னேற வேண்டும் எனில், தொழிலாளி வர்க்கம் தன்னை பலி கொடுத்தே ஆக வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதும், முதலாளிகளின் வளர்ச்சிக்காக தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுவணிகர்கள், சிறுதொழில் புரிவோர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் தியாகம் செய்ய வேண்டும் என்பதும் அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது.

இந்த அரசுக் கட்டமைப்பு தானே வகுத்த சட்டங்கள், விதிமுறைகள் நீதிபரிபாலன நடவடிக்கைகள் என அனைத்திலும் தோற்றுப்போய், அதற்கு எதிராக செயல்படுகின்றது. மொத்தத்தில் ஆளும் அருகதையற்றுப் போய்விட்டது, இந்த அரசு கட்டமைப்பு!

எனவே, உரிமையைப் பறிக்காதே என்று இந்த அரசிடம் கெஞ்சிப் பயனில்லை. மாறாக, தொழிலாளி வர்க்கம் தன்னுடைய அதிகாரத்துக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம். இதன் துவக்கமாக, மோடி அரசு முன்மொழிந்துள்ள தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை, செப்டம்பர் 2 அன்று காலை 10 மணியளவில் கீழ்க்காணும் 7 மையங்களில் தீயிட்டுக் கொளுத்த திட்டமிட்டுள்ளோம்.

1) ஆவடி

2) திருப்பெரும்புதூர்

3) கும்முடிப்பூண்டி

4) ஓசூர்

5 ) திருச்சி

6 ) கோவை

7) புதுச்சேரி

இந்த போராட்டங்களை வெற்றியடையச் செய்கிற வகையில் அலை அலையாகத் திரண்டு வர தொழிலாளர்களை அழைக்கிறோம்.

வாழ்த்துக்களுடன், இவண்

சுப.தங்கராசு
பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க