privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கும்மிடிப்பூண்டி : பாரத் நிறுவனத்தின் அடாவடி !

கும்மிடிப்பூண்டி : பாரத் நிறுவனத்தின் அடாவடி !

-

தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுக்கா, சூரவாரிகண்டிகை கிராமத்தில் இயங்கி வரும் பாரத் டெக்ஸ்டைல்ஸ் &  புரூஃபிங் லிமிடெட் ஆலையில் 51 நிரந்தர தொழிலாளர்களை கொண்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளை சங்கம் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தார்பாய் உற்பத்தியை நடத்தி வருகிறது.

இந்நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள ’ஸ்ரீ சிட்டி’ என்னுமிடத்தில் தனது புதிய நிறுவனத்தை திறந்து இதே தார்பாய் உற்பத்தியை துவங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆலையை மூடவேண்டும் என்கிற நீண்ட நாள் திட்டத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண்டிகைக்கால முன்பணம் வழங்காமல் இழுத்தடித்தது. இதை எதிர்த்து தொழிலாளர் துணை ஆணையரிடம் மனு செய்யப்பட்டது. அதற்கு நிர்வாகம் சமர்ப்பித்த விளக்க கடிதத்தில் “தங்கள் ஆலையில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுள் பலர் தமிழர்கள் அல்ல, தெலுங்கு பேசக்கூடியவர்கள். ஆகவே அவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடமாட்டார்கள் எனவும், பெரும்பாலும் அனைத்து தொழிலாளர்களும் விவசாயம் பார்ப்பவர்கள். தற்சமயம் நல்ல மழை பொழிந்திருக்கிறது. ஆகவே நல்ல லாபம் கிடைத்திருக்கும் என்பதால் அவர்களுக்கு பணம் தேவை ஏற்படாது” எனவும் நிர்வாகம் திமிராக பதிலளித்துள்ளது.

அந்த வகையில் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சீருடை, பாதுகாப்பு காலனி, பண்டிகைக்கால முன்பணம் ஆகியன வழங்காததை எதிர்த்து சட்ட ரீதியாக எதிர்கொண்டு வந்த சூழலில் கடந்த 24.10.2016 தேதி முதல் 23.11.2016 வரையில் ஆலை லே-ஆஃப் விடப்பட்டது. ஒரு தொழிற்தாவா நிலுவையில் இருக்கின்றபோது தாவா சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையினையும் நிர்வாகம் மேற்கொள்ளக்கூடாது என்பது சட்டம். அதனை மீறி லே-ஆஃப் அறிவித்திருப்பது சட்டவிரோதம் என்பதை தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் தொழிற்சங்கம் சார்பில் மீண்டும்  தொழிற்தாவா ஏற்படுத்தப்பட்டது.

நிர்வாகத்தின் அடுத்த கட்ட தாக்குதலாக 24.11.2016 தேதியிலிருந்து 14.12.2016 தேதி வரை லே-ஆஃப் -ஐ காலநீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்டதுடன், 30 தொழிலாளர்களை, 02.12.2016 தேதியில் இருந்து ஆட்குறைப்பு செய்துள்ளதாகவும் அறிவிப்பு செய்தது. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தாக்கல் செய்து 30 தொழிலாளர்கள் மீதான ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக 02.12.2016 தேதியில் இடைக்கால தடை ஆணை பெறப்பட்டது.  தடையாணை பெறப்பட்ட தகவலை நிர்வாகத்திற்கு அதே தேதியில் தொழிற்சங்கத்தால் தெரியபடுத்தப்பட்டது. அச்சமயம் ஆலை லே-ஆஃப்-ல் இருந்தது. ஆகவே, ஆலை மீண்டும் இயக்கப்படும்போது அனைவருக்கும் பணி வழங்கப்படும் என தொழிலாளர்கள் நம்பியிருந்தனர்.

லே-ஆஃப் காலக்கெடு முடிந்து 15.12.2016 அன்று ஆலை இயக்கப்பட்டபோது பணிக்கு வந்த தொழிலாளர்களுள் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்திருந்த 30 தொழிலாளர்களை தொழிற்சாலைக்குள் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. நிர்வாகத்தின் இந்நடவடிக்கை சம்பந்தமாக அன்றைய தினமே பிற்பகலில் நிர்வாக இயக்குனர்களிடம் தொழிற்சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் பெற்றதாக தெரிவித்த தடையாணை நகலை பார்த்த பின்னரே எந்த முடிவையும் எடுக்க இயலும் எனவும், அதுவரை ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்கள் தொழிற்சாலைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என திட்டவட்டமாக நிர்வாகம் தெரிவித்துவிட்டது.

மேற்படி ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பெறப்பட்ட இடைக்கால தடையாணை நகல் 11.01.2017 அன்றுதான் தொழிற்சங்கத்திற்கு கிடைக்கப்பெற்றது என்பதையும், அதில் கீழ்க்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும் 12.01.2017 தேதியிட்ட  தொழிற்சங்க கடிதத்தின் வாயிலாக நிர்வாகத்திற்கு அனுப்பப் பட்டது.

ORDER: IN view of the retrenchment order dated 24.11.2016, there shall be an order of interim injunction as prayed for – “(ii) Grand interim injunction restraining the 3rd respondent from altering the service conditions of the members of the petitioner union whose names are annexure to this petition in any manner including discontinuance of their services, engaging outsiders in the production activities or removing the materials, machinery or closing the factory or any act which will make result in non – employment to them (in WMP.NO.36394/2016) pending disposal of above WP.No.42500/2016 respectively)

ஆலை நிர்வாகத்திடமிருந்து போராட்டத்தை கைவிட தொழிலாளர்களுக்கு விடப்பட்ட மிரட்டல்

மேற்படி ஆட்குறைப்பு செய்யப்பட்ட தொழிலாளர்கள் 13.01.2017 தேதியில் ஆலை நிர்வாகத்திடம் வேலை செய்ய அனுமதிக்குமாறு கோரி ஆலை வாயிலில் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். ஆட்குறைப்பிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ள நிலையிலும் நிர்வாகம் அதை சிறிதளவும் மதிக்காமல் அலட்சியமாக நடந்து கொள்வது சட்டத்திற்கும், நியாயத்திற்கும் எதிரானதாகும்.

தொடர்ந்து 17.01.2017 தேதியன்று உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடுத்தக் கோரியும், அனைத்து தொழிலாளர்களையும் வேலை செய்ய ஆலைக்குள் அனுமதிக்கக் கோரியும் ஆலை வாயிலில் காத்திருந்தனர். காலை முதல் மாலை வரை காக்க வைத்து பின் காவல் துறை ஆய்வாளரை  வரவழைத்து தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆலை நிர்வாகம் முயற்சித்தது. ஆலை நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் கும்மிடிப்பூண்டி காவல் துறை ஆய்வாளர் திரு.டில்லிபாபு தொழிலாளர்களை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டார். அவரிடம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை காண்பித்து நியாயம் கேட்டபோது நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஆலை நிர்வாகத்தை எந்த கேள்வியையும் கேட்காமல், ஆலை நிர்வாகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மேற்கொள்ளுங்கள் என தொழிலாளர்களுக்கு காவல் துறை ஆய்வாளர் உபதேசம் செய்தார்.

அந்த வகையில் பாரத் டெக்ஸ்டைல்ஸ் & புரூஃபிங் லிமிடெட் ஆலை நிர்வாகம் எந்தவித சட்ட – திட்டங்களையும் மதிக்காமல் காவல் துறையின் உதவியோடு தொழிலாளர்கள் மீது ஒடுக்குமுறையையும், பழிவாங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து குடும்பத்துடன் பொருளாதார ரீதியாக மிகுந்த கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில்தான் கடந்த 29.03.2017 தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளனர். ஆறு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தொழிலாளர்களை சந்தித்து பிரச்சினைக்கு தீர்வுகான இதுநாள்வரை அரசு சார்பில் எந்தவொரு அதிகாரியும் முன்வரவில்லை. இருப்பினும் தங்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வரை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையின் வழிகாட்டுதலின்படி போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

செய்தி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்- தொடர்பு எண்:9444461480.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க