privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாசாம்சங்கிற்கு எதிராக மகளை இழந்த ஒரு தந்தையின் போராட்டம் ! ஆவணப்படம்

சாம்சங்கிற்கு எதிராக மகளை இழந்த ஒரு தந்தையின் போராட்டம் ! ஆவணப்படம்

-

தென்கொரிய டாக்சி ஓட்டுநரான ஹவாங் மற்றும் அவரது மகள் யுமி

தென்கொரிய டாக்சி ஓட்டுநரான ஹவாங் (Hwang) அரசுக்கு எதிராகவும், மீப்பெரும் பன்னாட்டு நிறுவனமான சாம்சங்கிற்கு (Samsung) எதிராகவும் ஐந்தாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார். தனது மகள் 23ம் வயதில் அரிய வகை இரத்தப் புற்றுநோயால் மரணமடைந்ததற்கு காரணம் தேடுகிறார்.

அவரது குடும்பத்தில் மரபு ரீதியாக இந்த நோய் எவருக்கும் இருந்ததில்லை. தனது மகள் இரண்டாண்டுகளாக வேலை செய்த குறைகடத்தி (Semiconductor) தொழிற்சாலையின் கொடிய இரசாயன நச்சுக்கள் அடங்கிய சூழலே மரணத்திற்கான காரணமென ஹவாங் நம்புகிறார்.

தனது மகளின் இழப்புடன், அவர் ஏன் இறந்தார் என்பதை கண்டறியும் உறுதியுடன் உள்ள துயரமான தந்தையின் மிகவும் உணர்ச்சிபூர்வமான பயணத்தை இந்த ஆவணப்படம் பின்தொடர்கிறது.
**

ஹவாங், சியோலில் இருந்து நான்கு மணி நேர பயண தூரத்தில் இருக்கும் சோக்சோ (Sokcho) நகரில் ஒரு சாதாரண டாக்சி ஓட்டுநர். ஆறாண்டுகளுக்கு முன் லுகேமியா (leukaemia) என்ற கொடிய ரத்தப் புற்று நோய்க்கு தனது மகள் யுமியை (Yumi) இழந்துள்ளார்.

உயர்நிலைப் பள்ளியில் இருந்து பட்டம் வாங்குவதற்கு சிறிது காலத்திற்கு முன்பிருந்தே, யுமி சாம்சங்கின் ஒரு குறைகடத்தி ஆலையில் வேலை செய்யத் தொடங்கினார். இருபது மாதங்களுக்குப் பின் அவருக்கு கடுமையான லுகேமியா நோய் இருப்பது கண்டறியப்பட்டது. நோயினால் போராடிக் கொண்டிருந்த போது, அவர் நச்சு இரசாயனங்களுடன் வேலை செய்ய வேண்டியிருந்த வேலைச் சூழலைப் பற்றி தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து தனது மகளின் நோய்க்கு பணி நிலைமையே காரணம் என்று ஹவாங் முடிவுக்கு வந்துள்ளார்.

சாம்சங் குழுமம் தென் கொரியாவின் ஒரு குடும்பத்தினால் கட்டுப்படுத்தப்படும் மீப்பெரும் தொழிற்கூட்டமைப்பாகும். தென் கொரியாவில் மட்டும் சாம்சங்கிற்கு 79 துணை நிறுவனங்கள் உள்ளன. சாம்சங் உலகின் மிகப்பெரிய குறைக்கடத்தி நிறுவனமாக உள்ள அதே வேளை, அதன் கைபேசிகள் உலக அளவில் மிகப் பிரபலமாகவும் உள்ளன. இத்தகைய மகத்தான வெற்றியின் விளைவாக தென் கொரிய செய்தி ஊடகங்கள் இந்நிறுவனத்தை “சாம்சங் குடியரசு” என்றழைக்கின்றன.

இவ்வெற்றிகளுக்கு கடின உழைப்பாளிகளான தனது தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாம்சங் கடன்பட்டிருக்கிறது. சாம்சங்கின் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூன்று ஷிப்ட்களில் 24 மணி நேரமும் இயங்குகின்றன. தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் யுமியைப் போன்ற இளம் பெண்கள்.

யுமியின் மரணத்திற்குப் பின் தனது மகளின் நோய்க்கு கொடிய நச்சு இரசாயனங்கள் அடங்கிய பணி நிலைமையே காரணம் என்று சந்தேகிக்க ஆரம்பித்துள்ளார். அதை உறுதிப்படுத்திக்கொள்ள அவர் சொந்தமுறையில் விசாரணைகள் நடத்த முடிவெடுத்துள்ளார். அவர் தனது மகளின் சக ஊழியர்களிடம் பேசினார். அந்த ஆலையில் வேலை செய்து இறந்து போன மற்ற தொழிலாளிகளை பற்றி விசாரித்து அறிந்து கொண்டார்.

ஆனால், யுமியின் பணி நிலைமைகளுக்கு அவரது மரணத்துடன் தொடர்பில்லை என்று சாம்சங் வலியுறுத்தி வந்தது. ஹவாங் தென் கொரிய செய்தி ஊடகங்களை நாடினார். யுமியின் நோய்க்கு பணி நிலைமைகளே காரணம் என்பதற்கு நம்பகமான ஆதாரமிருந்தால் மட்டுமே செய்தி வெளியிட முடியும் என்று அவை நிராகரித்துவிட்டன. ஆனால், ஹவாங் இரண்டு செய்தி பிரசுரங்களில் இந்தப் பிரச்சினையை வெளியிடச் செய்வதில் சிலகாலத்திற்குப் பின் வெற்றியடைந்தார்.

அதன் பிறகு சாம்சங் தொழிற்சாலையின் ஊழியர்களின் இறப்புகளுக்கு வேலை நிலைமைகளின் தொடர்பைப் பற்றிய மற்ற அறிக்கைகள், பல இடங்களில் பரப்புவத் தொடங்கின. இறுதியாக, யுமியின் மரணம் பற்றிய செய்திகளால், சமூக உரிமை அமைப்புகள் ஹவாங்கிற்கு உதவ முன்வந்துள்ளன.

தனது மகளின் மரணத்திற்கு நீதிக்காக தொடர்ந்து போராடும் ஹவாங்கின் தினசரி வாழ்க்கையை இந்த ஆவணப்படம் பின்தொடர்கிறது. சோக்சோ நகரில் டாக்சி ஓட்டுநராக இருக்கும் அவர், மாதம் இரண்டு அல்லது மூன்று முறை சியோலுக்கு செல்கிறார். அங்கு தனது மகளின் புகைப்படத்துடன் சாம்சங் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு எதிரில் தனியாளாகப் போராடுகிறார்.

ஒரு பாசமிகு தந்தையின் துயரம், நீதிக்கான தேடலையும் மீப்பெரும் பன்னாட்டு நிறுவனத்தின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அநீதிகளையும் வெளிப்படுத்துகிறது இந்த ஆவணப்படம்.

நன்றி: அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க