மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 4 )
மும்பையில் உயிரிழந்தர்கள் குறிப்பாக பாதுகாப்புப் படை வீரர்களுக்காக தமிழ் சினிமா நடிகர்கள் நடிகர் சங்க கட்டிடத்தில் மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினார்கள். சர்வதேசத் தீவிரவாதிகளை தனியொரு போலீசு அதிகாரியாக எதிர்த்து நின்று வீழ்த்தியதாக பல திரைப்படங்களைக் கொடுத்தவர்கள் நன்றிக் கடனாக இதைக்கூட செய்யவில்லையென்றால் எப்படி? அல்லது யாராவது ஒருவர் ஒருநாள் உண்ணாவிரதமென்று கொளுத்திப் போட்டால் ஒரு நாள் பிழைப்பு போய்விடுமென்பதாலும் அவசரமாக இந்தச் சடங்கை செய்து முடித்தார்கள்.
பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்ட பின்னர் பாதுகாப்பான ஞாயிற்றுக் கிழமையன்று மராட்டிய (முன்னாள்) முதல்வர் விலாஜிராவ் தேஷ்முக், தாஜ் ஓட்டலைப் பார்வையிடச் சென்றார். அவருடன் நடிகரும் மகனுமான ரித்தீஷ் தேஷ்முக்கும், இந்தித் திரைப்பட பிரபலம் ராம் கோபால் வர்மாவும் சென்றார்கள். தெறித்து விழுந்த இரத்தக்கறை இன்னமும் காயாத நிலையில் அதை சினிமாவாக்க லொகேஷன் பார்ப்பதற்கு ஒரு இயக்குநரை மாநில முதல்வர் அழைத்துச் செல்கிறார். அந்தப் படத்தில் அவர் மகன்தான் நாயகனென்றும் தகவல். சிவாஜ டெர்மினசில் கொல்லப்பட்ட மக்களின் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கூட மும்பையின் அவலத்தை சினிமாவாக்கி காசாக்க முனைகிறார்கள் என்றால் என்னவென்று சொல்ல?
இதில் சினிமாக்காரர்களை குற்றம் சொல்லுவதை விட நாளை அந்த சினிமா வந்தால் அதை பரபரப்பாக வெற்றிபெறச் செய்யும் இரசிகர்கள்தான் நம் விமரிசினத்திற்குறியவர்கள். அந்த இரசனைதான் மும்பை தாக்குதலில் உயிரிழந்த கமாண்டோக்களை சினிமா ஹீரோக்களைப் போல புகழ்கிறது. நாடு முழுக்க பாராட்டும், வாழ்த்தும் குவிகிறது. கொல்லப்பட்ட மக்களுக்கு ஓரிரு இலட்சங்களை வழங்கும் அரசுகள் வீரர்களுக்கு மட்டும் பல இலட்சங்களை அள்ளி வழங்குகின்றன. பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியாராவோ அவர்களது குடும்பத்தாருக்கு கேஸ் உரிமம் அல்லது பெட்ரோல் ஏஜென்சி வழங்கப்படும் என்கிறார். உயிரிழக்கும் அபாயமுள்ள போர்த்தொழிலில் ஈடுபடுவதற்குத்தான் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்கள் கடமையைச் செய்வதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள்?
மும்பையில் உடன் பணியாற்றும் வீரரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மேஜர் சந்தீப் தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார். பெங்களூரிலிருக்கும் அவரது இல்லத்தில் நடந்த இறுதிச் சடங்கில் உள்ளூர் அரசியல்வாதிகள் பலர் கலந்து கொள்கின்றனர். இந்த மேஜர் ஒரு மலையாளி என்பதால் கேரளப்பத்திரிகைகள் அம்மாநில முதல்வர் கலந்து கொள்ளாதது குறித்து தேசபக்தி சென்டிமெண்டைக் கிளறி விடுகின்றன. பொதுவாகவே மலையாளிகளுக்கு ‘இந்திய உணர்வும், தேசபக்தியும்’ கொஞ்சம் அதிகம்தான். இதனால் தேசபக்த நெருக்கடிக்காளான முதல்வர் அச்சுதானந்தன் பெங்களுரு செல்கிறார். ஆனால் மேஜர் சந்தீப்பின் தந்தை உன்னி கிருஷ்ணணோ வீட்டிற்கு வந்த முதல்வரை அவமரியாதை செய்து அனுப்புகிறார். தன் மகன் ஒருமலையாளி இல்லை, அவன் ஒரு இந்தியன் என்பதாகவும், பத்திரிகைகளின் நிர்ப்பந்தத்தால் வந்த முதல்வரின் ஆறுதல் தேவையில்லையென திமிராகப் பேசுகிறார்.
நாடு முழுக்க எழுப்பிவிடப்பட்ட ஹீரோயிச உணர்வின் மேட்டிமைத்தனத்தில் உன்னி கிருஷ்ணன் தன் மகன் மாபெரும் சாதனை செய்த மிகப்பெரிய தியாகி என்றெல்லாம் கற்பித்துக் கொள்கிறார். இந்த மேஜர் மட்டும் இங்கு பிறக்கவில்லையென்றால் ஒரு நாய் கூட இந்த வீட்டிற்கு செல்லாது என பொருத்தமாக பேசிய அச்சுதானந்தன் பின்னர் எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள் தந்த நெருக்குதலால் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அரசியல்வாதிகளின் மீது மக்களுக்குள்ள வெறுப்பு அதிகாரவர்கக்த்தின் ஒரு பிரிவாக இருக்கும் இராணுவத்தை தேசபக்தியின் சின்னமாக போற்றவைக்கிறது. உண்மையில் காவல் துறைக்கும், இராணுவத்திற்கும் உள்ள முக்கியமான வேலை என்ன?
போலீசும், இராணுவமும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளைக் காப்பாற்றுகிறது என்பதால்தான் அவர்கள் செல்லப்பிள்ளைகள் போல சீராட்டி வளர்க்கப்படுகிறார்கள். மும்பையில் கொல்லப்பட்ட கமாண்டோக்களின் பிரதான பணியைப் பார்த்தாலே இது விளங்கும்.
உள்நாட்டில் தீவிரவாதிகளின் கடத்தல், தீடீர் தாக்குதலை முறியடிப்பதற்காக 1984 ஆம் ஆண்டு என்.எஸ்.ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை உருவாக்கப்படுகிறது. இதில் எஸ்.ஏ.ஜி, எஸ்.ஆர்.ஜி என இரண்டு பிரிவுகள் முறையே இராணுவம் மற்றும் துணை இராணுவப்படையினரிடமிருந்து தெரிவுசெய்யப்பட்டு கமாண்டோ பயிற்சி அளிக்கப்படுகிறது. எஸ்.ஆர்.ஜி பிரிவில் பாதிப்பேர் முக்கியப் பிரமுகர் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளனர். இது போக எஸ்.பி.ஜி எனப்படும் விசேட பிரிவு இந்திரா காந்தி குடும்பத்தினர், பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியில் ஈடுபடுகிறது. சோனியா காந்தி குடும்பம், பிரதமர்கள் என விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கான பாதுகாப்பில் ஈடுபடும் இந்த எஸ்.பி.ஜியின் இவ்வாண்டு செலவு பட்ஜட் மட்டும் 180 கோடி. ஆனால் 100 கோடி மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து காக்கும் என்.எஸ்.ஜியின் இவ்வாண்டு செலவு பட்ஜட் 117 கோடி மட்டுமே.
பிரமுகர் பாதுகாப்பில் இசட் பிளஸ், இசட், ஒய், எக்ஸ், என பல பிரிவுகள் உள்ளன. இசட் பிளஸ் வகையில்தான் அத்வானி, மோடி, ஜெயலிலிதா, அமர்சிங், முரளி மனோகர் ஜோஷி போன்ற பாசிஸ்ட்டுகள் உள்ளனர். இவர்களை என்.எஸ்.ஜியின் கறுப்பு பூனைகள் பாதுகாக்கின்றனர். இசட் பிரிவில் 68 பிரமுகர்களும், ஒய் பிரிவில் 243 பேரும், எக்ஸ் பிரிவில் 81 அரசியல்வாதிகளும் இத்தகைய விசேடப் படைப் பிரிவுகளால் பாதுகாக்கப்படுகின்றனர். இது போக டெல்லயில் மட்டும் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கதின் பாதுகாப்பிற்காக 14,200 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாநிலங்களில் கொடுக்கப்படும் பாதுகாப்பு தனி. மத்திய அரசில் மட்டும் பிரமுகர் பாதுகாப்பிற்காக தோராயமாக ஆண்டுதோறும் 250 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இந்த டெல்லித் தலைவர்கள் விஜயம் செய்யும் போது பாதுகாப்பிற்காக மாநில அரசுகள் செலவழிக்கும் தொகை இக்கணக்கில் வராது என்றால் இதன் மொத்தத் தொகை எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். இந்த வி.ஐ.பி பாதுகாப்பில் டெல்லி சீக்கியர்களைக் கொன்ற வழக்கிலிருக்கும் காங்கிரசின் சஜ்ஜன் குமார், கார்ப்பரேட் முதலாளிகளின் புரோக்கர் அமர் சிங், சந்தர்ப்பவாதத்திற்கு இலக்கணம் படைத்திருக்கும் தேவகவுடா போன்றவர்களும் அடக்கம்.
டெல்லி கமாண்டோப் படையைப் பார்த்து உள்ளுரில் அதேபோல ஆரம்பித்தார் அல்லி ராணி ஜெயலலிதா. 1992ஆம் ஆண்டு கிராக் கமாண்டோ படை எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இப்பிரிவில் இன்று 292 பேர்கள் உள்ளனர். இந்த பதினாறு ஆண்டில் 1996ஆம் ஆண்டு ரவுடி கபிலனை என்கவுண்டர் செய்தில் இந்தப் படையைச் சேர்ந்த பதினைந்து பேர்கள் கலந்து கொண்டனர். இதைத்தவிர இவர்களுக்கு வேறெந்த வேலையும் இல்லை. ஜெயலலிதாவின் தமிழக விஜயத்தில் பந்தாவுக்காக நிற்பதுதான் இப்படையின் சாதனை.
தற்போது தீவிரவாதிகளின் தாக்குதல் அபாயத்தில் சென்னை உள்ளதால் இப்படைக்கு நவீன ஆயுதங்களை வாங்க போலீசு அதிகாரிகள் அமெரிக்கா, ஜெர்மனி, இசுரேல் நாடுகளுக்குச் செல்லப் போகிறார்களாம். இப்படித்தான் நாடு முழுவதும் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் ஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசு அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு மட்டும் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்கிறது. டெல்லியிலிருந்து ஒரு தலைவர் விஜயம் செய்தால் தனிவிமானம், புல்லட்புரூப் கார், நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சோதித்தல், எல்லாம் புயல் வேகத்தில் நடக்கும். ஆனால் மும்பைத் தாக்குதலில் இப்படையினரின் செயல்பாட்டைப் பார்த்தால் இப்படை யாருக்கானது என்பது புரியவரும்.
புதன்கிழமை இரவு சிவாஜி டெர்மினசுக்குள் தீவிரவாதிகள் நுழையும் போது மணி 9.25. அப்போது கேரளாவிலிருந்த முதல்வர் தேஷ்முக்கிடம் இத்தகவல் தெரிவிக்கப்படும்போது நேரம் 11.00. அவர் உடனே டெல்லியிலிருக்கும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் என்.எஸ்.ஜி படையினர் வேண்டுமெனக் கேட்டபோது நேரம் 11.30. அவர் எத்தனை வீரர்கள் வேண்டுமெனக் கேட்க முதல்வர் 200 எனப் பதிலளிக்கிறார். அடுத்து உள்துறை அமைச்சர் என்.எஸ்.ஜியின் தலைவர் ஜே.ஆர்.தத்தாவிடம் தொலைபேசியில் 200 வீரர்களை மும்பைக்கு அனுப்புமாறு உத்தரவிடுகிறார். தூக்கத்திலிருந்த கமாண்டோக்கள் எழுப்பப்பட்டு ஆயுதம், உடை தரித்து டெல்லி விமான நிலையம் செல்லும்போது நேரம் 1.00மணி. 200பேர்களை தாங்கிச் செல்லும் விமானம் அப்போது டெல்லியிலில்லை, சண்டீகரில் இருக்கிறது. அந்த நள்ளிரவில் ஐ.எல்.76 எனும் அந்த விமானத்தின் பைலட் எழுப்பப்பட்டு விமானத்தில் பெட்ரோல் நிரப்பி டெல்லி வந்து சேரும் போது நேரம் 2.00 மணி.
ஏர்பஸ், போயிங் போன்று இந்த விமானம் வேகமாக செல்லாதாம். டெல்லியிலிருந்து புறப்ப்பட்ட அந்த விமானம் மூன்று மணிநேரம் கழித்து அதிகாலை ஐந்து மணிக்கு மும்பை இறங்குகிறது. தூக்கக் கலக்கத்திலிருந்த கமாண்டோக்களை காத்திருந்த பேருந்துகள் ஏற்றிக் கொண்டு ஒரு இடத்திற்கு சென்று இறக்கியது. அங்கு ஆப்பரேஷன் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டு தீவிரவாதிகள் இருந்த இடத்திற்கு வீர்கள் செல்லும்போது மணி 7.30. அங்கு சாவகாசமாக உடைமைகளை இறக்கிய வீரர்கள் துப்பாக்கியை தூக்கியபடி நிலைகளுக்குச் செல்கின்றனர். ஹாலிவுட் ஆக்ஷன் படங்களைப் பார்க்கும் அறிவுஜீவிகளின் வாதப்படி தீவிரவாதிகள் தாக்கத் துவங்கிய அரை மணிநேரத்திற்குள் எதிர்த்தாக்குதலை ஆரம்பிக்க வேண்டுமாம். இல்லையேல் அவர்கள் தங்களது நிலையை பலப்படுத்திக் கொள்வார்களாம். இங்கு கிட்டத்தட்ட பதினொரு மணிநேரம் தரப்பட்டிருக்கிறது.
தீவிரவாதிகள் இருந்த கட்டிடங்கள் குறித்து வீரர்களுக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாததால் ஆரம்பத்தில ஒரே குழப்பம். ஆனால் கராச்சியிலிருந்து முதன்முறையாக மும்பை வந்திருக்கும் தீவிரவாதிகள் அந்த ஓட்டல்களின் புவியியலை மனப்பாடம் செய்திருந்தனர். காடு, கிராமம், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் மட்டும் போரிட பயிற்சி பெற்றிருக்கும் வீரர்களுக்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் எப்படி சண்டையிடுவது என்று தெரியவில்லையாம். இதுவும் தீவிரவாதிகளுக்கு மட்டும் எப்படி தெரிந்திருந்தது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். எல்லா இடங்களையும் சுற்றி வளைத்து, தாக்குதல் தொடுக்கும் ஒன்பது தீவிரவாதிகளைக் கொல்லுவதற்கு மொத்தம் 60 மணிநேரத்தை, சிலநூறு வீரர்கள் எடுத்துக் கொண்டனர். அதிலும் இவர்களால் பணயக்கைதிகள் கொல்லப்பட்டது பற்றி கணக்கில்லை. நாரிமன் இல்லத்தில் கொல்லப்பட்ட 6 யூதர்களில் ஒரு சிலர் கமாண்டோக்களால் கொல்லப்பட்டதாக சில இசுரேலியர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் ராஜ்ஜிய உறவு பாதிக்கூடாது என்பதற்காக இசுரேல் அரசு இதை மறுத்திருக்கிறது.
அடுத்து மும்பையில் தீவிரவாதிகள் தாக்கப்போவதாக வந்த தகவலை ‘ரா’வும், ஐ.பியும் கடற்படைக்கும், மராட்டிய காவல் துறைக்கும் அனுப்பியதாகச் சாதிக்கின்றன. ஆனால் கடற்படை அட்மிரலும், மராட்டிய முதல்வரும் அப்படி ஒரு எச்சரிக்கை வரவேயில்லையென அடித்துக் கூறுகின்றனர். இதுதான் இவர்கள் செயல்படும் லட்சணமென்றால் புதிதாக வரப்போகும் தேசிய பெடரல் புலனாய்வு நிறுவனம் எதைச் சாதிக்கப்போகிறது? மாநில உரிமைகளுக்கு அப்பாற்பட்டு இந்தியா முழுவதும் நேரடியாக தலையீடு செய்யவும், கைது செய்யவும் அதிகாரம் கொண்ட இப்புதிய அமைப்பு மத்திய அரசின் சர்வாதிகார பணிகளுக்கே உதவி செய்யும். அதுவும் பா.ஜ.க ஆட்சியில் வந்தால் இந்துத்வத்தை எதிர்ப்பவர் அனைவரும் இப்பிரிவால் அடக்குமுறைக்குள்ளாவது நிச்சயம்.
பாக்கிற்கு ஐ.எஸ்.ஐ போல இந்தியாவிற்கு இருக்கும் ரா வின் ஒராண்டு பட்ஜட் ஆயிரம் கோடி ரூபாயாம். அதிலும் இந்தப்பணம் எப்படி ஏன் செலவழிக்கப்படுகிறது என்பது தேவரகசியம். பல ரா அதிகாரிகள் பிரம்மாண்டமாக வீடுகளை கட்டிக்கொண்டு ரா விற்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார்களாம். மேலும் ரா வின் செயல்பாடுகள் என்பது ஐ.எஸ்.ஐயை விட சதித்தனமும் நரித்தனமும் நிறைந்தவை.
ஈழத்தில் போராளிக் குழுக்களை ஒன்றுக்கொன்று மோதவிட்டு அழித்தது, அதேபோல வடகிழக்கில் பல்வேறு தேசிய இனங்களுக்கான குழுக்களின் முரண்பாடுகளை வளர்த்து மோதவிட்டது, காஷ்மீரில் மதச்சார்பற்று இருந்த விடுதலைப் போராளிகளை மதச்சார்பாக மாற்றியது, கைக்கூலிக் குழுக்களை உருவாக்கியது, பாக்கிஸ்தானில் சன்னி பிரிவுக்கெதிரான ஷியா பிரிவுக்கு உதவி செய்தல், ஆப்கானில் வடக்குக்கூட்டணிக்கு ஆதராவாக வேலை செய்வது என அதன் கைங்கரியங்கள் பல. இதைத் தவிர மத்திய மாநில உளவுத் துறைகள் அனைத்தும் ஆளும் கட்சிக்கான அரசியல் உளவுப்பணிகளில் ஈடுபடுவதுதான் முக்கியமான பணி.
இந்திய ஆளும்வர்க்கங்களின் நலனுக்காக மட்டும் உருவாக்கப்படட இந்தப்படைப் பிரிவுகளும், புலனாய்வு அமைப்புக்களும் எந்தக் காலத்திலும் இந்திய மக்களைக் காப்பாற்ற முடியாது.
எவ்வித நியாயமுமின்றி அரசின் அலட்சியத்தால், அதிகார வர்க்கத்தின் திமிரால், ஏழையென்று ஒதுக்கும் இந்தச் சமூக அமைப்பால், நிஷா புயல் தாக்கப்போகிறது என்று முன்கூட்டியே தெரிந்தும் 130க்கும் மேற்பட்ட மக்கள் தமிழகத்தில் இறந்துள்ளனர். இவர்களைக் காப்பாற்ற வக்கில்லாத அரசு இதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்பதில்லை. ஆனால் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களை தடியடி மூலம் கலைக்கும் போலீசுக்கு ஒரு ஆபத்தென்றால் அரசின் அடி முதல் தலை வரை துடிக்கும். மும்பைக்கு வந்த பயங்கரவாதிகளைக் கொன்று பல மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த போலீசு, இராணுவ வீரர்களை இவ்வளவு அலட்சியமாகப் பார்க்கலாமா என சில ‘ தேச பக்தர்கள் ‘ கொதிக்கலாம். சினிமாவின் செல்வாக்கில் இராணுவ வீரர்களை ஹீரோக்களாக பாவிப்பவர்கள் எவரும் போலீசு, இராணுவத்தின் உண்மை முகத்தை தரிசித்திருக்க வாய்ப்பில்லை.
அமைதிப் படை என்ற பெயரில் இலங்கைக்குச் சென்ற இந்திய இராணுவம் கொன்ற கணக்கையும், கற்பழித்த கணக்கையும் ஈழத்தமிழர்களிடம் கேட்கவேண்டும். மனோரமா என்ற பெண்ணைக் கடத்திக் கொண்டு போய் பாலியல் பலாத்காரப்படுத்திச் சுட்டுக் கொன்ற அசாம் துப்பாக்கிப்படைப் பிரிவினரைக் கண்டித்து “இந்திய இராணுவமே எங்களையும் பாலியல் பலாத்காரம் செய்” என்ற பதாகையை ஏந்திக்கொண்டு நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் நடத்திய மணிப்பூர் தாய்மார்களிடம் கேட்டுப் பார்க்க வேண்டும். “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம்” என்ற சட்டத்தின் பாதுகாப்பில் வடகிழக்கு மாநிலங்கள் முழுக்க அட்டூழியம் செய்யும் இந்திய ராணுவத்தைப் பற்றி அப்பகுதி மக்களிடம் கேட்டால் உண்மை தெரியும். ஐந்து லட்சம் துருப்புக்களை குவித்து எல்லாவகை ஒடுக்குமுறைகளையும் செய்யும் இந்திய ராணுவம் மற்றும் துணை இராணுவத்தைப் பற்றி காஷ்மீர் மக்களிடம் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்.
போலீசுக்காரர்களைப் பற்றி அதிகம் விளக்கத்தேவையில்லை. ஒரு காவல் நிலையத்தின் அருகிலேயே மக்களைக் கேட்டால் காததூரம் ஓடுவார்கள். இந்தியா முழுவதும் போராடும் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரையும் தடியடி, துப்பாக்கிச்சூடு செய்து கொல்லுவதுதான் இத்துறையின் முதன்மைப்பணி. தாமிரபரணிப்படுகொலை முதல் நந்தி கிராம் படுகொலை வரை பல எடுத்துக்காட்டுகளை சமீப ஆண்டுகளில் பார்த்திருக்கிறோம்.
எனவே ஆட்சியாளர்களின் நலன்களைக் காப்பாற்றுவதற்காக இயங்கும் இந்தப் படைகள் புதிது புதிதாக பல பெயர்களில் பல நூறு கோடி மூலதனத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. இந்திய அரசின் பெரும்பான்மைச் செலவே பாதுகாப்புத் துறைக்குத்தான் என்றாகிவிட்டது. அரசியல்வாதிகள் மோசம் அதிகாரவர்க்கம் அதாவது ஐ.பி.எஸ், மற்றும் இராணுவ அதிகாரிகளின் கைகள் கட்டப்படவில்லை என்றால் அவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்களென தற்போது பலரும் பேசுகிறார்கள். தெகல்கா நடத்திய முதல் ஆபரேஷனே இராணுவ அதிகாரிகளின் ஊழலை அம்பலப்படுத்தியது நினைவிருக்கலாம். இதுபோக கார்கில் போருக்கு ஆயுதம் வாங்கியதில் மட்டுமல்ல விருது வாங்கியதிலும் ஊழல் சந்தி சிரித்தது இங்கே நினைவு கொள்ளவேண்டும். வீரப்பனைப் பிடிக்கிறேன் என்ற பெயரில் தேவாரத்தின் அதிரடைப்படை நடத்திய அட்டூழியங்களை சதாசிவம் கமிஷனே அம்பலப்படுத்தியிருக்கிறது. இயல்பாகவே மக்களுக்கெதிரான வெறியைக் கொண்டிருக்கும் போலீசு, இராணுவத்தைப் போற்றுவது தற்கொலைக்கு ஒப்பானது.
இறுதியாக மும்பைத் தாக்குதலினால் கண்ட பலன் என்ன? இதுவரை அத்வானி, மன்மோகன் சிங், சோனியா காந்தி, ஜெயலலிதா போன்ற அரசியல் வாதிகளுக்கு கிடைத்த அதி உயர் பாதுகாப்பு இனி அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, ராகுல் பஜாஜ், முத்தையா செட்டியார் போன்ற முதலாளிகளுக்கும் கிடைக்கும். மக்களைப் பொறுத்தவரை தீவிரவாதிகள் மற்றும் இராணுவம் இரண்டு பிரிவினரிடமிருந்தும் பாதுகாப்பில்லை என்பதுதான் யதார்த்தம்.
அடுத்ததாக நாம் அலசவேண்டிய கேள்வி மும்பைத் தாக்குதலை யார் செய்திருப்பார்கள்?
-தொடரும்
சோசலிச சமூகங்கள் என்று நீங்கள் சொல்லும் சமூகங்களிலும்
போலிஸும்,ராணுவமும் ஆளும் சக்திகளின்
எடுபிடியாகத்தானே இருந்திருக்கிறது.
ஸ்டாலினா அல்லது மாவோவோ மக்களுடோடு மக்களாக வாழ்ந்தார்களா
இல்லை பாதுகாப்பு என்ற பெயரில்
காவலர் பாதுகாப்பில் வாழ்ந்தார்களா?.
‘இயல்பாகவே மக்களுக்கெதிரான வெறியைக் கொண்டிருக்கும் போலீசு, இராணுவத்தைப் போற்றுவது தற்கொலைக்கு ஒப்பானது.’
போலிஸ்,ராணுவம் இல்லாத ஒரு சோசலிச
நாட்டைக் காட்டுங்கள்.அங்கே சோசலிச
ராணுவமும்,போலிசும் எப்படி செயல்பட்டன
என்பதையும் எழுதுங்கள்.போலிஸ்,ராணுவம்
இயல்பாக மக்களுக்கெதிரான வெறியை
கொண்டிருக்க வேண்டும் என்று கட்டாயம்
ஏதும் இல்லை.நிர்வாகம் சரியாக இருந்தால்
போலிஸ் மக்களின் நண்பராகவும் இருக்க
முடியும்.இவ்வளவு எழுதும் நீங்கள்
உங்கள் வீட்டில் திருடு போனால்
போனால் போகட்டும் என்று விடுவீர்களா?
மக்கள் இயக்கங்களையும், ஜனநாயக அமைப்புகளையும் ஒடுக்கவே புதுப்புது பெயர்களில் வரும் இந்த போலீசு படைகள். வீரப்பனை பிடிக்கிறோம் என சொல்லி தமிழ்நாட்டில் அதிரடிப்படையினர் நடத்திய அட்டூழியங்கள் எத்தனை? காசுமீர், வடமேற்கு இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகளை 50 ஆண்டுகளாக ராணுவம் கொண்டு அடக்கப்படுகிறது.
இப்போது மாநிலம் தோறும் அமைக்கப்படவுள்ள கமாண்டோ படைகளும் மக்களின் போராட்டங்களையும் ஆதரிக்கவா போகிறது? மாறாக நம் மக்களை வாய் திறக்கவே அச்சமூட்டும் கமாண்டோ படைகளாகவே மாநில தலை நகரங்களில் அவிழ்த்துவிடப்படும்.
Vinavu,
I have serious disagreements with this post.
1. OK, a filmmaker has no place in an official delegation to visit the scene of attacks. But you are taking issue with a film being made based on these incidents. Do you think Eisenstein shouldn’t have made Battleship Potemkin? After all, that has a picturization of a real massacre. How about Schindler’s List?
2. The commandos deliberately risk their lives. Why shouldn’t they be honored?
3. Perhaps your ire should be directed against the Kerala CM. If he truly believed that the major was doing his duty, he shouldn’t have decided to visit based on newspaper comments! If he had come because he truly wanted to honor the fallen soldier, great! If he had decided not to come because he thought the major was just doing his job or whatever, then I disagree with him, but I appreciate his honesty. His stance changed because pressure from popular opinion, as you mention. Then you should be upset with the hypocrisy!
4. I agree with Godzilla – who did the police and army serve in the erstwhile Soviet Union? It is the nature of power, and police! Who does the police serve in West Bengal where communists are in power? The poor farmers of Nandigram?
இந்த அரசின் உறுப்புக்களாகவே ராணுவம்,போலீசு செயல் படுகின்றன .வாச்சாத்தி தொடங்கி இந்தியாவெங்கும் அந்த பற்களின் பதிவுகளை கானலாம்.
“மும்பைதாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தமைக்காக ராணுவ, NSG வீரர்களுக்காக நாம் பெருமைப்படமுடியுமா? பெருமைப்பட முடியுமெனில் குஜராத்தில் 3000 முசுலீம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டதற்காக நாம் அவமானப்பட்டே ஆக வேண்டும்.ராணுவம், NSG எப்போதும் மக்களுகெதிராகவே இருக்கின்றன. இவை தான் இந்த பாசிச அரச உறுப்புக்கள்.அரசின் கூலிப்படைகள் .அசாம்,காசுமீரிகளை கொன்று அப்பெண்களை பாலியல் வன்முறை செய்ததற்காகவும்,மனோரமாவின் உடலெங்கும் குண்டுகளை பதித்தற்காகவும் அவைகள் பரிசுகளை வாங்கி குவித்தன.மும்பை தாக்குதலில் தனது வீரத்தை காட்டியவர்கள் தான் மேற்கண்ட வேலைகளையும் செய்தனர்.இப்பாதக செயல்களுக்காக ,அரசோ வெட்கி தலைகுனியவில்லை,மாறாக தலையை நிமிர்த்தி வெற்றிக்களிப்பில் மிதந்தன.பத்திரிக்கைகளோ வாயே திறக்கவில்லை.ஆம் ஆளும் வர்ர்கங்களின் எச்சில் எலும்புகளுக்கு அலையும்
இவர்களால் எப்போதும் பாசிசத்தை எப்படி நேர்த்தியாக கொண்டு செல்ல முடியும் என்று ஆலோசனைதானே கூறமுடியும்.”
கலகம்
http://kalagam.wordpress.com/
//இவ்வளவு எழுதும் நீங்கள்
உங்கள் வீட்டில் திருடு போனால்
போனால் போகட்டும் என்று விடுவீர்களா?//
dear Godzilla, we have nothing to lose. No one will come and steal in our house.
Kalagam,
Is there any doubt that the Gujarat riots are one of the most shameful incidents in the history of India? Except for Modi and his ilk, who wouldn’t be ashamed of it? Several of you seem to feel that the average person didn’t give a damn then, and is expressing concerns only when the terrorists happen to be muslims. The problem of the average person is not knowing how to something constructive about it – even today, none of us – at least definitely not me – aren’t doing anything useful – what is the use of venting in blogs and replies anyway?
The media was the only way we all even came to know about Gujarat riots. I don’t know why you think that the media kept quiet.
“அரசு என்பது ஒழுங்கு செய்யப்பட்ட வன்முறை கருவி” என்றார் லெனின். காவல்துறையும், ராணுவமும் அக்கருவியின் முக்கிய அங்கமாகும். அதனால்தான், உலக வங்கியின் ஆனையின்ப்படி அனைத்துத் அரசுத் துறைகளிலும் வேலை நியமனத் தடைச்சட்டம்/ஆட்குறைப்பு அமல்ப்படுத்தப்பட்டாலும், காவல்துறைக்கும், ராணுவத்திற்க்கும் அது பொருந்தாது. இன்றும், இத்துறைகள் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது. இதன் முதன்மையான நோக்கம் என்பதே வர்க்கப் போரட்டங்களை அடுக்குவதாகும். இவர்களின் தோட்டாக்கள் எப்பொழுதும் தொழிலாளிகளின் நெஞ்சையே கிழித்திருக்கிறது.சில நேரங்களில், முதலாளிகளின் தத்து பிள்ளைகளான பயங்கரவாதிகளும், ரவுடிகளும் அவர்களுக்கு எதிராக திரும்பும்போது தேசப்பக்தியுடன் கொண்றிருக்கிறது.
எனக்கு தெரிந்து, எந்த இளைஞனும் தேசப்பக்தி பொங்கி ராணுவத்தில் சேருவதில்லை. B.A , B.com படித்து வேலைக்கிடைக்காமல், எதோ நிரந்தர வருமானம் கிடைத்தால் போதுமென்றே சேருக்கின்றான்.அங்கு கொடுக்கப்படும் பயிற்சி அவனை மனிதன்மையற்ற, காமவெறிப்பிடித்த, சுயப்புத்தியற்ற, ஆனைக்களுக்கு கட்டுப்படுக்கின்ற இரண்டு கால் மிருமாக மாற்றுக்கின்றது.
இந்த படித்த மத்தியத்தர வர்க்கத்தினர், சில காமொன்டோக்கள் உயிர் இழ்ந்தவுடன் அவர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் 5 லட்ச்ச விவாசயிகள் தற்கொலை செய்துள்ளார்கள், அதே மாரட்டிய மாநிலத்திலுள்ள விதர்பாவில் ஆயிரக்கண்கான விவசாயைகள் தற்கொலை செய்துள்ளார்கள், இவர்கள் எப்பொழதுதவாது குறைந்தப்பட்ச்ம் அவர்களது கடண் தள்ளுபடி செய்யவேண்டு என்று கூறியிருக்கிறார்களா?
கோட்சிலா போன்ரோர் சோசலிச அரசில் இராணுவமும் போலிசும் இல்லையா என்கிறார்கள். அங்கும் அளும் வர்க்கத்தின் அதரவாகத்தானே செயல்ப்படும் என்கிறார்கள். சரிதான், ஆணால் முதலாளித்துவ சமுதாயத்தில் யார் ஆளும் வர்க்கம்? சோசலிச சமுதாயத்தில் யார் ஆளும் வர்க்கம்? என்பதுதானே முக்கியாமான கேள்வி.
ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? எனக்கு புரிஞ்சது என்னனா..
வங்கியில், விவசாயத்திற்காக தாலி அடமானம் வச்சு, கடன் தொகையை கட்ட முடியாத விவசாயி வீட்ட ஜப்தி பன்னும் நம்ம போலீஸ், ஆயிரம் கோடி கடன் வாங்கி ஏப்பம் விட்ட முதலாளி பெயரக்கூட வெளியிடாது, கேட்ட Bank secrecy Act அப்பிடிக்கும். அநத தொகையை வாரா கடனா காமிச்சு, அரசு வங்கி நட்டமாயிருச்சுனு சொல்லி, தனியார்மயப்படுத்துறேன் சொல்லி அதே முதலாளிட்ட விக்கும். இது முதலாளித்துவ சமுதாயத்தில.
இது reverseல நடக்கும் சோசலிச சமுதாயத்துல. அதாவது பாட்டாளிக்கு ஆதரவாக செயல்ப்படும்.
படிப்படியாக, கம்யுனிச சமுதாத்தில அரசு என்கிற அமைப்பே உதிர்ந்துவிடும் என்கிறார்கள் மார்க்சிய ஆசான்கள்.
போலிஸும் இராணுவமும் என்றும் ஆளும் வர்க்கத்தின் பிடியில்லிருப்பது உண்மையே. பல இடங்களில் இராணுவமே ஆளும் வர்க்கமாகவும் இருக்கின்றன.
ஆர்.வி –
உங்களுக்குக் கிடைக்கப் போகும் பதில் “ அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள்’.
அய்யா ஆர்.வீ,
முசுலீம் பயங்கரவாதத்தின் தோற்று வாய் பார்ப்பன இந்து மதவெறி பயங்கரவாதமே.ஒரு சம்பவம் நடந்தால் அது எதனால் நடந்தது,ஏன் நடந்தது என ஆராய்வது தான் சரியாக இருக்கும்.பார்ப்பன இந்து மதவெறியர்கள் களின் நோக்கமே இந்து ராஷ்டிரம் என்றும் ,அந்த இந்து ரா ஷ்டிரத்தில் பஞ்சமனுக்கும்,ஏனையோருக்கும் இடமில்லை என்பதும் மாற்று மதங்களுக்கு அங்கு இடமில்லை என்பது நீங்கள் அறிவீர்களா?.அந்த நோக்கத்தை நிறைவேற்றும் நோக்கில் தான் அரியானாவின் 5 தலித்துக்களின் தோலை உரித்ததிலும்,மதக்கலவரங்களிலும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன காலிகளின் பங்கு உலகம் அறிந்ததே.உலகம் அறிந்தத விசயத்தை ஏன் பத்திரிக்கைகள் குறைத்து மதிப்பிடுகின்றன.நாங்கள் பத்திரிக்ககைகளை அமைதியாக இருக்க சொல்லவில்லை.ஊடகம் என்பது மாபெரும் பொக்கிசம்,அங்கு இருந்து வெளிவரும் தகவல்கள் மக்களில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.தந்தை பெரியார் முதல் பல புரட்சிகர பத்திரிக்கைகள் மக்களிடம் அடிமைத்தனதை அகற்றும் பணியை செய்து வந்தன,தற்போதும் கூட புரட்சிகர பத்திரிக்கைகள் அப்பணியை தொடர்ந்து வருகின்றன.மாலேகான் குண்டு வெடிப்பின் போது ஆரம்பத்தில் என்ன எழுதின “பாகிஸ்தான் தொடர்பு,வங்கதேச அகதிகளுக்கு தொடர்பா?”
ஆனால் அது பார்ப்பன பயங்கரவாதிகளின் கை வரிசை என உண்மை புலப்பட்டவுடன் ஏன் “குற்றம் சாட்டப்பட்டவர்” என்று சாமியாரிணியை எழுதுகின்றன.இன்னாட்டில் ஒரு பிள்ளயார் சிலையை வைத்து கூட கலவரம் செய்ய மதறியர்கள் துடித்து கொண்டிருக்கும் சூழலில் பத்திரிக்கைகளின் இந்த போக்கு எதை குறிக்கின்றது.இந்த நாடு அடிமையாகின்றதா இல்லையா? நமது நாட்டின் எதிரி அமெரிகா ஏகாதிபத்தியமா? இசுலாமியமா?உண்மையை எழுத தடுப்பது எது? குழலி உட்பட பலரும் சொல்லும் வார்த்தை இது “எங்களை குற்றம் சாட்டுகின்றீர்”
ஒரு செய்தியை நீங்கள் தான் நேரடியாக பார்கின்றீர்கள் மக்களுக்கு நீங்கள் தான் நடக்கும் செய்தியை தெரிவிக்கின்றனர்,அப்படியெனில் உங்களுக்கு சமூக பொறுப்பு வேண்டாமா? பல பத்திரிக்கைகளுக்கு இருக்கின்றது அது பார்ப்பன பொறூப்பக இருப்பதை மறுக்கமுடியுமா உங்களால்? கோவையில் ஒரு பிக்பாக்கெட் முசுலீமையோ,ரயில்வே ஸ்டேசனில் படுத்து கிடப்பவன் பிடிபட்டால் முசுலீம் எனில் பத்திரிக்கைகள் என்ன எழுதுகின்றன”மும்பை தாக்குதலுடன் தொடர்பா போலீஸ் விசாரணை”. சிமி இயக்கமுள்ளிட்ட பல இசுலாமிய அமைப்புகள் மீது சந்தேகம் தெரிவிக்கும் பத்திரிக்கைகள் இதையே மாலேகனில் குண்டு வைத்த சாமியாரினி பிடிபட்டவுடன் ஏன் பிக்பொகெட் இந்து மீது
அப்படி ஒரு சந்தேகம் எழவில்லை.அவர்களுக்கு எழாது ஏனெனில் முன்னரே சொன்னது போல ஆளும் வர்க்கத்துக்கும்,இந்து மத வெறிபாசிசத்துக்கும் ஊது குழலாகவே செயல் படுகின்றனர்.இதே தெகல்கா போல எத்தனை பத்திரிக்கைகள் உண்மையை எழுதுகின்றன?ஈராகில் பல தாய் மார்களை பாலியல் சித்திரவதை செய்த ராணுவத்துக்கு புஷ் சொன்னதை அப்படியே தான் வாந்தி யெடுத்தன.அரசு என்ன சொன்னாலும் அப்படியே எழுதுவதா பத்திரிக்கையாளரின் வேலை . ஒரு மானாட்டில் திண்ணியக்கொடுமைக்கு ஆளான ராமசாமி பேசினார் அதை “வாயில் மலம் திணிக்கப்பட்டதாக கூறப்படும் நபர் “என்று தான் சொன்னார்கல்.நீங்கள் உண்மையாக மக்களுக்காக பணியாற்றுவீர்களானால் தீண்டாமை வெறிபிடித்த கொலைகுற்றவாளி சங்கராச்சாரிக்கு சிறீ சிறீ சிறீ என்றும் அன்சாரிக்கள் அவன் என்றும் ஏன் எழுதப்பட்டுகொண்டிருக்கின்றனர்.இதற்கு பேர் என்ன? அப்படி பார்ப்பன மதவெறிக்குக் மறுகாலனிக்கும் சப்பைகட்டு கட்டும் இந்த பத்திரிக்கைகளை விமர்சிக்காமல் என்ன செய்ய வேண்டும் என எதிபார்க்கின்றனர்.குறைந்த பட்ச நடு நிலமையாவது பெரும்பாலான பத்திரிக்கைகளுக்கு இருக்குமா? மேலும் உங்கள் கேள்விகளை முடிந்த அளவுக்கு தமிழில் வெளியிடுங்கள் அப்போது தான் பாலும் தன் பலை எழுத முடியும்.மறுமொழிக்கான இடத்தில் இவ்வவளவு நீண்ட இடத்தை எடுத்துக்கொண்டது தவறான முன்னுதாரணமாக இருந்தாலும் தேவை காரணமாகவே எழுத நேர்ந்தது.
கலகம்
http://kalagam.wordpress.com/
dear Godzilla, we have nothing to lose. No one will come and steal in our house
this sounds like one of the punch dialogs in tamil films :).
‘மும்பைதாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தமைக்காக ராணுவ, NSG வீரர்களுக்காக நாம் பெருமைப்படமுடியுமா? பெருமைப்பட முடியுமெனில் குஜராத்தில் 3000 முசுலீம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டதற்காக நாம் அவமானப்பட்டே ஆக வேண்டும்.”
How should we feel about the mumbai blasts of 1993, coimbatore blasts of 1998,the massacres in Kashmir Valley by islamic miltants.
Madhavan,
You are living in a dream land. Aren’t you aware of pogroms conducted by Stalin in which millions died? Yes, millions. Many of them were communists – many of them were the workers. Who do you think Beria served? The only difference between the Soviet govt and a free capitalist govt is that you can write like this without being afraid of imprisonment.
Kalagam,
You have a tendency to add the “parppana” as adjective to anything you dislike. I have never bothered to find out which caste a reporting team belongs to and don’t intend to in the future either. I think Cho has lost his journalistic integrity today – I also think he was the one neutral, incisive political commentator until 1990 at least. It is not his caste that made him a good journalist for 20 years and a journalist with a political program in the next 20 years. What I care about is the content. Who gives a damn about whether Kalanidhi Maran is a Dalit or a Velalar? We all know Sun TV is biased, and has a political program. Who gives a damn about whether Kumudam is run by Chettiars or Gounders? If you find Kumudam interesting, read it, otherwise move on. You are welcome to find someone’s caste before you form a opinion about what he/she says – hopefully, I would be welcome in your eyes to think that is a ridiculous practice.
Oh, I should mention that I am born in the Iyer caste – perhaps you would find that info helpful in forming your opinions about what I say, but I hope not.
1. You say that Muslim terrorism’s root is Hindu, “parppana” terrorism. I wonder about the fallout of Hindu, “non-parppana” terrorism. Does such a beast exist? I guess if someone is a Hindu and a terrorist, then (s)he is a brahmin. I realize that you have a tendency to add “parppana” to everything bad, but do you think it possible that some Hindu terrorists may not be born in the brahmin caste?
Shall we explore the roots of Hindu terrorism? Do you have any comments about the 1946 Bengal/Navakali riots? As far as I know, no riots from Hindus preceded it. You may remember that Jinnah called a Direct Action Day and openly advocated violence. Perhaps we should keep going back in history to cite Ahmed Shah Abdali; Aurangazeb; Babar; Taimur; Thuglaqs; Malik Ghafur; Khiljis; Mohd. Ghori; Mohd Ghazni – The problem is, in history every group that has had power has exploited the groups that didn’t have power. I think it would be better to stop at some point instead of justifying an act of terrorism by another injustice. Internet, media, elections, democracy – hopefully some combination would work. After all, the terrorists aren’t killing other terrorists (Then I would say good riddance!) The Hindu “parppana” and “non-parppana” terrorists are killing ordinary people and vice versa. How in the world can the shooting by at the CST terminus be justifiable, because 3000 muslims were massacred in Gujarat?
I realize that I am being rhetorical here. I have glanced through your blog and it is hard for me to believe that intelligent people like you and Vinavu are justifying the terrorist acts. I believe what you really are saying is not to look at this event in isolation – however, you come across as justifying the terrorist act. Perhaps it is mutual – perhaps you think that several of us who argue so much here don’t give a damn about acts of Hindu terrorism – Oh, we do; at least I do. I just think that there is no distinction between acts of terrorism – whether the perpetrators are Hindus, Muslims, Christians, Sikhs, parppanas, non-parppanas, young, old, bald, long-haired…
//How should we feel about the mumbai blasts of 1993, coimbatore blasts of 1998,the massacres in Kashmir Valley by islamic miltants.//
Dear Godzilla,
How shoud we feel about shelling and aerial bombing of Jaffna, and killing thousands of innocent people by Indian forces in 1989? How should we feel about massacres of Jaffna Hospital in 1989 by Indian Army (terrorists in uniform)?
Dear Godzilla,
Would you cheer the state- terrorism, if your family members were killed and sisters were raped by Indian Army? What is the difference in killing people, between terrorsts and and army (terrorists in uniform)? I hope you will become terrorist, if horrible things happened in your personal life. You can’t feel others problems, you do only care about your well-to-do lifestyle. When your environment is threatened, you cry outrage. There are enough evidence for state terrorism commited by Indian forces (whom you prais as heros) then in Eealm and now in Kashmir. Only because medio don’t give much coverage, doesn’t mean, such things never happened.
Dear Godzilla, you must feel shame for your double standard. You justify even glorify one kind of terrroism (of the state), while rejecting another.
திரு ஆர்.வீ,
தயவு செய்து தமிழில் எழுதுங்கள் அப்போதுதான் பலரும் தங்கள் பதிவுகளை படித்து பின்னூட்டமிடுவார்கள்.முயலுங்கள்.
அனைத்து வகை பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக சொல்லும் நீங்கள் “பார்ப்பன” என்று எழுதினாலே ஏன் அதற்கு சப்பை கட்டுகட்டுகின்றீர்கள்?
அய்யா பார்ப்பனீயம் என்பது என்ன? அது ஒரு கோட்பாடு,அது ஆண்டான் அடிமை காலத்தை நீட்டிக்கச்சொல்லும் .தனக்கு கீழே இத்தனை பேரவது வேண்டும் என அதன் விதிகளில் எழுதியிருக்கின்றது.பார்ப்பனீய கோட்பாட்டின் முக்கியமான உறுப்பு எனப்படும் வர்ணாசிரம த்ர்மத்தை பற்றி கீதையில் கிருஷ்ணன் சொல்கிறார்”நான்கு பேதங்களையும் நானே படைத்தேன்” ஏன் முதல் வர்ணம் பார்ப்பனானாகவும்,கடைசி வர்ணம் சூத்திரனாகவும்,பஞ்சமனுக்கு அதில் இடமில்லை என்றால் அது அடிமைத்தனத்தை நீட்டிப்பு செய்வதற்கான வழியன்று அல்லாது வேறு எது.இப்படி நாட்டின் உழைக்கும் மக்களை அடிமையாக வைத்து இருக்கும் பார்ப்பனீயத்தை ஒழிக்கவேண்டுமா இல்லையா?
இந்த அடிமைத்தனத்தை பார்ப்பனர்கள் உருவாக்கியதால் அதற்கு பார்ப்பனீயம்.அதனை பின்பற்றும் யாரும் பின்பற்றாதவர்களை தாக்கும் யாரும் பார்ப்பனீயத்துக்கு துணை போகின்றவர்களே.அதற்கு மிகச்சிறந்த உதாரணம் மாயாவதி மற்ற கட்ச்சியெல்லாம் தலித்துக்கு ஒதுக்கீடு தர இவரோ பார்ப்பனர்களுக்கு கணிசமான அளவு தொகுதிகளை ஒதுக்கினார்.இப்படி பார்ப்பனீயத்தின் தூன்களான பார்ப்பனர்களுக்கு சேவை செய்யும் யாரும் பார்ப்பனீயவாதிகளே.சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரில் பறையர் என்ற தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ரவுடிகள் சிலர் அருந்ததிய சாதியை சேர்ந்தோரை வன்மத்தோடு தாக்கினார்கள்.இங்கு ஒரு முக்கியமான கேள்வி.ரெண்டு பேரும் தாழ்த்தப்பட்டவர் எனில் அவர்கள் ஐக்கியமாக த்டுப்பது எது?தனக்கு ஒருவன் அடிமையாய் இருக்கவேண்டும் என்ற பாப்பனீய கண்ணோட்டம் அன்றி வேறேது ? அது போல் மாற்று மதத்தினரை எதிரியாக்கி உண்மையான் எதிரிக்கு வாலாட்டும் இந்த அயோக்கியத்தனத்தை ஒழிக்காமல் சாடாமல் என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்?உங்களிடம் பதிலிருக்குமா எனத்தெரியவில்லை .எப்போதும் போல பாப்பன என எழுதி விட்டீர்கள் என மீண்டும் இழுக்காமல் உண்மையான ஜனனாயகவாதியாய் பதில் சொல்லுங்கள்
கலகம்
http://kalagam.wordpress.com/
Kalagam,
Good point about writing in Tamil. I do write a blog in Tamil, but I find it time consuming. I shall try when I am in a little less of a hurry.
You have asked these questions several times and I have answered them as well. Perhaps a more detailed explanation is required, and I shall try to come to up with one this weekend. The biggest problem with your words is that you are using the word “parppana” in two senses – are you referring to people who are born as brahmins, or the concept of casteism? Don’t say that you distinguish between people who were born in the brahmin caste and “parppaneeyam” – you don’t call the concept of casteist physical violence as “thervariyam”, do you? And you certainly would be up in arms if terrorism is equated to Islam, as evinced by your posts. So how could you intentionally demean the group identity of a section, especially an identity over which they have no control?
Also, I don’t see you answering any of the questions I have asked. Admittedly, some of them are rhetorical – but still it would be good to hear from you on them. For example, when you say “parppana” terrorism, do you mean terrorist acts by people born in the brahmin caste or any acts of terrorism by Hindus is equated to “parppana” terrorism? If the root of the muslim terrorism is “parppana” terrorism, then what is the root of “parppana” terrorism? Should the “parppanas” justified in taking vengeance against Malik Ghafur to Jinnah? What is the root of 9/11 attacks? Hard to see that originating from “parppana” terrorism.
Kalagam,
At last, I managed to put up a post – http://koottanchoru.wordpress.com/2008/12/22/பார்ப்பனர்கள்-பார்ப்பனீ/
Check it out…
[…] […]
[…] […]
[…] […]