Saturday, January 28, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை! 'கல்வி வள்ளலின்' ரவுடித்தனம் !

ஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை! ‘கல்வி வள்ளலின்’ ரவுடித்தனம் !

-

jepeyar

எம்.ஜி.ஆருக்கு அடியாளாகவும், மாமாவாகவும் ‘சேவை’ புரிந்து அதற்குரிய சன்மானம், சொத்துக்களைப் பெற்று சாராய ரவுடி எனும் பட்டத்தோடு கல்வி வள்ளல் எனும் விருதினைப் பெற்றிருக்கும் ஜேப்பியாருக்கு ஏழெட்டு பொறியியல் கல்லூரிகள் உண்டு. அதிலொன்று புனித ஜோசப் பொறியியல் கல்லூரி.

இக்கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முதலாமாண்டு படிக்கும் விவேக் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர். விடுதியில் தங்கிப் படிக்கும் விவேக் கல்லூரியின் செமஸ்டர் தேர்வுக்கான கணினி செய்முறைத் தேர்வின் போது நண்பனது பாஸ்வோர்டை பயன்படுத்தி லாஃக் இன் செய்தாரென குற்றம் சாட்டப்பட்டார். இதனால் அவரை செமஸ்டர் தேர்வு எழுதுவதிலிருந்து தடை செய்த நிர்வாகம் இது தொடர்பாக கல்லூரி இயக்குநரை சந்திக்குமாறு உத்திரவிட்டது. அதன்படி இயக்குநர் வாசலில் மூன்று முழுநாட்கள் நின்றபடியே காத்துக் கிடந்தார் விவேக். ஆயினும் இயக்குநர் இவரை வேண்டுமென்றே சந்திக்கவில்லை.

இதனால் இரண்டு செய்முறைத் தேர்வுகள் எழுத முடியாமல் போயிற்று. அடுத்து வரும் செமஸ்டர் தேர்வும் எழுத முடியாவிட்டால் என்ன செய்வது என அதிர்ச்சியில் உறைந்து போன விவேக் தனது விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன் படிக்கும் மற்ற மாணவர்களெல்லாம் தேர்வு எழுதிவிட்டு வருவதைப் பார்த்து தனது எதிர்காலத்தை எண்ணி மனமுடைந்து போன விவேக் இளவயதில் இந்த அவலமான முடிவை மேற்கொண்டுவிட்டார்.

கல்லூரி நிர்வாகத்தின் அப்பட்டமான மிரட்டலால் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டதை கண்டு கொதித்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதை ஒடுக்குவதற்கு கல்லூரி நிர்வாகம் முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் பத்தாம் தேதி வரை கட்டாய விடுமுறை அறிவித்துவிட்டு விடுதியிலிருந்து அனைவரையும் வெளியேற்றியுள்ளது.

தனது சாவுக்கு முந்தைய கடிதத்தில் விவேக் தனக்காக தனது பெற்றோர் அளித்துள்ள நன்கொடை பணத்தை கல்லூரி நிர்வாகம் திரும்ப அளிக்கவேண்டுமெனவும், அந்தப் பணத்தை வைத்து தனது தம்பியின் காது அறுவை சிகிச்சை நடக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தின் மொத்த விசயங்களை ஜேப்பியாருக்கு ஆதரவாக செயல்படும் போலீசு இதுவரை வெளியிடவில்லை.

முதலில் விவேக் செய்ததாகக் கூறப்படும் தவறுக்கு ஆதாரமில்லை. மேலும் எல்லா சுயநிதிக் கல்லூரிகளிலும் செய்முறைத் தேர்வு என்பது கடனுக்காக நடத்தப்படும் சடங்குதான். முக்கியமாக ஆசிரியர்கள் தங்களது வல்லமையைக் காட்டுவதற்கு இந்த தேர்வை ஆயுதமாக பயன்படுத்துவார்கள். ஒருவேளை விவேக் தவறு செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் அதற்காக அவரை பருவத் தேர்வுகள் எழுதுவதிலிருந்து நீக்கியது நிச்சயமாக மிகக் கடினமான தண்டனைதான். அதற்காக இயக்குநரை சந்தித்து விளக்கமளிக்க வேண்டுமென்பதற்காக அவரை சில நாட்கள் சிலை போல நிற்க வைத்து ரசித்தது நிர்வாகத்தின் அடக்குமுறைத் திமிரைக் காட்டுவதாகவே உள்ளது.

இத்தகைய தண்டனைகள் பள்ளிப்பருவத்தில் நடப்பதைத்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். தமிழகத்தைப் பொறுத்தவரை எல்லா சுயநிதிக்கல்லூரிகளிலும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இதில் முன்னோடி, இக்கல்லூரிகளது கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் ஜேப்பியார்தான். சாராய ரவுடியாக கொடிகட்டிப் பறந்த இந்த மாவீரர் தனது கல்லூரிகளின் தர்பாரை இப்படித்தான் ரவுடித்தனமாக ஆட்சி நடத்துகிறார். இங்கே மாணவர்கள் தவறு செய்தால் முக்கியமாக நிர்வாகத்திற்கு எதிராக முனகினால் கூட கடுமையான தண்டனை தரப்படும். ஜேப்பியார் குழும கல்லூரிகளை அவரது குடும்பத்தினர்தான் ஆண்டு வருகிறார்கள். எல்லோரும் ஜேப்பியாரின் அவதாரங்கள்தான்.

மேலும் தண்டனை என்ற பெயரில் விடுதியிலிருக்கும் மாணவர்களுக்கு எல்லாப் பராமரிப்பு வேலைகளும் – கழிப்பறையை சுத்தம் செய்வது உட்பட – தரப்படும். நிர்வாகத்தோடு முரண்படும் மாணவர்கள் அலுவலக வாயிலேயே தவம் கிடக்க வேண்டும். இப்படி பல இலட்சம் ரூபாயை நன்கொடையாக அழுதுவிட்டு அல்லல்படும் மாணவர்களது அடிமைகளைப் போன்ற உளவியல் நிலைமையை யாரும் புரிந்து கொள்ளலாம்.

ஜேப்பியார் குழும கல்லூரிகளிலேயே அதிக நன்கொடை பெறப்படும் கல்லூரி புனித ஜோசப் கல்லூரிதான். அதிலும் பிரிவுக்கேற்றபடி நன்கொடை மாறுபடும். இங்கு ஒரு மாணவனிடம் குறைந்த பட்சம் 20 லட்சம் ரூபாய் நன்கொடையாக கொள்ளையடிக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட விவேக்கின் சித்தப்பா இக்கல்லூரியில் Placement Officer ஆக பணிபுரிகிறார் என்பதால் விவேக் பத்து இலட்சம் ரூபாய் வரை நன்கொடை கொடுத்திருக்கக்கூடும்.

ஏற்கனவே ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மற்றொரு மாணவர், அவருக்கு பார்வை குறைபாடு உள்ளது என முக்கியமாக கோர்ஸ் மறுக்கப்பட்டு அதற்காக அவர் தனது நன்கொடையை திருப்பிக் கேட்டு கிடைக்காத நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இது வயிற்று வலிக்காக நடந்த தற்கொலை என நிர்வாகம் கதையளந்தது. இதுதான் ஜேப்பியாரின் தர்பார்.

(மாணவர் விவேக்கின் தற்கொலைக்கு காரணமான ஜேப்பியாரை கைது செய்ய வேண்டுமென புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பல்வேறு கல்லூரிகளில் பிரச்சாரம் செய்து மாணவர்களை அணிதிரட்டி வருகிறது. மேற்க்கண்ட தகவல்கள் இவ்வமைப்பின் தோழர்கள் எம்மிடம் தெரிவித்தவை )

______________________

மாணவர்களை விட அதிகமாகவும், இழிவாகவும் நடத்தப்பட்ட இக்கல்லூரிகளின் ஓட்டுநர் மற்றும் இதர தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் சேர்ந்து தமது சுயமரியாதையையும், உரிமைகளையும் மீட்டெடுத்திருக்கிறார்கள். இந்தப் போராட்டம்தான் ஜேப்பியாரின் திமிரை பெருமளவுக்கு அடக்கியது. மாணவர்கள் அந்த போராட்ட வரலாற்றை தொழிலாளர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு உதவும் பொருட்டு இது தொடர்பாக புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்தவும்

 1. தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
  . தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
  மேலும் படிக்க

  http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html

  • தமிழினி, விளம்பரம் போடுவது சரிதான் ஆனால் இடுகையை பற்றி ஒரு வார்த்தையாவது கருத்து எழுதிவிட்டு பிறகு விளம்பரம் செய்யக்கூடாதா. இது எழுத்தாளரை மதிக்காத செயல் என உங்களுக்கு புரியவில்லையா?

 2. ஜெகத்ரட்சகன் கல்லூரி பற்றி எழுதியவர்கள் இந்த அவலங்களை பற்றி வாய்திறவாமல் இருக்கிறார்களே

   • இன்னாங்க,

    இப்புடி சொல்லிட்டீங்க , நம்ம சைதாபேட்டை டிப்போ பஸ்ஸ்டான்டுக்கு எதிர்ல காலையில இருந்து
    சூடா போட்டுகினு இருப்பாங்க.சூப்பரா இக்கும்.

 3. சிறுபான்மையினர் கல்வி தருவதை எதிர்க்கும் உங்களை போன்ற போலி கம்யூனிஸ்டுகள் ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை.

  • சரியான பாயின்டு பிரான்சிசு…சமூகத்துல நேர்மையா , ஒழுக்கமா வாழுரவங்கதான் பெரும்பான்மையான மக்கள், ஜேப்பியார் போன்ற மாமாக்களும், ரவுடிகளும், அரசியல்வாதிகளும், ஆக சிறுபான்மையே…இது போன்ற பெறம்போக்குங்க கைல லட்சக்கணக்குல பணத்த கட்டி சேந்தா இப்படி பொணமாத்தான் வரணும் போல

  • என்னங்கய்யா..இது…. கொள்ளையடிக்கும்போது மட்டும் சாதாரண ஆளு…..அதப்பத்தி நாலு பேருக்கு தெரியும்படி எழுதினா சிறுபான்மையினருக்கு எதிரானதா? இந்த jpr மட்டுமில்ல.. இதே மாதிரி நிறைய நிறுவனங்கள் ஏசுவின் பேரை வைத்துக் கொண்டு சம்பாதிக்க இல்ல இல்ல கொள்ளையடிக்கிறாங்க. அங்கு பணிபுரியும் ஆசிரியர்களையும் இதர பணியாளர்களையும் அடிமைகள் போலே நடத்துகிறார்கள். இதை நான் சும்மா சொல்லவில்லை. இரண்டு ஆண்டுகள் St.John’s குரூப்ஸ்ல ஆசிரியனாக லோல்பட்டு “ச்சே வேண்டாம் இந்த அடிமை வேலை” என்று வேலையை உதறிவிட்டு வந்ததால் சொல்கிறேன். வினவு சொல்வது உண்மைதான். என்ன… கொஞ்சம் உணர்ச்சிபூர்வமா எழுதிட்டாங்க. அந்தாள இந்த அளவோடயாவது உட்டாங்களேன்னு பாருங்க… நானாயிருந்தா………………….. வேணாம் விட்டுடுங்க….

   • This is my story with St Joseph college.Two years before i got placement through entance examination.But on the first day of joining those bastards working in college ordered me “Pay the entire fees today or else your admission will be cancelled without giving enough time or previous intimation.Later only i came to know that they have sold that (free)seat for 10 lakhs in management quota.Like S A Raja govt should hang this p****movan.

 4. மாணவன் தற்கொலை வள்ளலின் ரவுடித்தனம்…

  எம்.ஜி.ஆருக்கு அடியாளாகவும், மாமாவாகவும் ‘சேவை’ புரிந்து அதற்குரிய சன்மானம், சொத்துக்களைப் ப…

 5. என்ன அய்யா இது? சிறுபான்மையினரை மாமா, ரவுடி என்று திட்டுவதும் முத்திரை குத்துவதும்தான் கம்யூனிஸமா? ஜேப்பியார் சாராய பிஸினஸிலிருந்து வந்தவர்தான். அவர் மறுக்கவில்லையே? அதற்காக அவர் கல்வி கொடுக்கவும், கல்லூரிகளை ஆரம்பிக்கவும் கூடாதா? எவர் எங்கிருந்து வந்தாலும் அவர்களுக்கு மதிப்பு கொடுப்பதும், அவர்களை உயர்த்திவிடுவதுமே தானே தேவை. பாஸிஸ்டு என்று சொல்லும் பாஜகவினர் கூட கள் இறக்குவதற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். நீங்கள் என்னடாவென்றால், அவர்களை விட மோசமான பாஸிட்டுகளாக இருக்கிறீர்கள்.

  • கிறித்தவர் என்ற ஒரே காரணத்திற்காக ஜேப்பியார் போன்ற உலகறிந்த ரவுடிகளை நீங்கள் ஆதரிப்பது நல்ல வேடிக்கை. ஜேப்பியார் என்ன பாடுபட்டு உழைத்தா கல்லூரியை ஆரம்பித்தார்? இந்த கல்லூரிக்காக அவர் செய்த முதலீடு எம்.ஜி.ஆரின் அடியாளாக, அமைச்சராக இருந்து சம்பாதித்த்து. அடுத்து அந்தக் கல்லூரிகளில் மாணவர்களும், தொழிலாளர்களும் எப்படி அடிமை போல நடத்தப்படுகிறார்கள் என்பதைத்தான் கட்டுரையில் விளக்கியுள்ளேமே தவிர, அவர் கிறித்தவர் என்பதால் இந்த விமரிசனத்தை செய்யவில்லை. மற்றபடி உங்களின் மத உணர்வு இல்லையில்லை மதவெறி உணர்விலிருந்து வெளியேறுவதுதான் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையேல் உங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் வேறுபாடில்லை என்றாகிவிடும்.

   நட்புடன்
   வினவு

 6. நான் எழுதிய பின்னூட்டம் ஏன் நீக்கப்பட்டது?
  சிறுபான்மையினரை ரவுடி மாமா என்று முத்திரை குத்துவதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்? சாராய பிஸினஸ் செய்பவர் அதனை விட்டுவிட்டு கல்லூரி நடத்தக்கூடாதா?

  • ஜேப்பியார் மட்டும் அல்ல மதபோதகம் செய்யும் தினகரன் கும்பலும் இதே போல் கல்லூரி கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. கிறுத்துவர் என்றால் யாரும் கேள்வி கேட்க கூடாது என்று சட்டம் இருக்கிறதான் என்ன. பொறுக்கிகள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள்

   • மந்திரி பதவி கூடுதலா கொடுக்கலைன்னா, தலிவரு ஆரிய திராவட போராட்டம்னு பேசலயா… எல்லாம் அப்படித்தாம்மா…..

  • பெர்ணான்டசு என்னா கேள்வி கேட்டுட்டீங்க, ரத்தமெல்லாம் கொதிக்குது,சாராயம் அவன் வித்தான்னு ஒத்துக்குறீங்களா? அவன் ஏன் கல்லூரி ஆரம்பிக்கக்கூடாது கேக்குறீங்களே? அருமை நிங்களோட கேரளகமிட்டியே மார்ட்டின்கிட்ட பணம் வாங்கிடதே கேட்டதுக்கு திருப்பி தரோம்னு சொல்லுச்சே அப்புடியா. அவன் அதை தப்புன்னு ஒத்துக்குட்டு உங்க கிட்ட மட்டும் “பெர்ணா,பெர்ணா எனக்கு பாவமன்னிப்பு தான்னு ” சொன்னானா?

   ஜேப்பியார் மாமாதொழிலை விட்டுவிட்டார்ன்னு சொல்லுறீங்களா. வேசத்த ஒழுங்கா போட்டுட்டு வாங்கப்பா , அவன் கிட்ட வாங்கின கம்ப்யூட்டருக்கு மேல கூவுவாதப்பா. என்ன பன்ணறது நீங்க எல்லாம் ஒரு வேளை சீஇபீஎம் கம்பெனியில ஞானஸ்தானம் பெற்றீங்களோ?.

 7. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும், தமிழ்நாட்டு சட்டத்துக்கும் மதிப்பளிக்காமல் மாணவர் அட்மிசனிலேயே தங்களது கொள்ளையை ஆரம்பிக்கும் தனியார் கல்லூரிகள் ஏராளமாக பெருகிவிட்டன. இவங்கெல்லாம் மாணவர்களுக்கு ஒழுக்கம் போதிக்கும் தொழில் செய்வதுதான் வேதனை…இதில் மூலைக்கு மூலை கல்லூரியில் விநாயகர், முருகன், கர்த்தர், மேரிமாதா சிலைகள் வேறு…கேவலம்…

 8. தனியார் கல்லூரிகள் கேட்கும் பணத்தை மத்திய வர்க்கம் பெரும்பாலும், பலர் வாயை கட்டி, வயித்தைக் கட்டி, இன்னும் பலர் பல வகைகளில் கல்லாக்கட்டி பணம் கட்டிவிடுகிறார்கள்.

  சமூகம் எக்கேடோ கெட்டுப்போகட்டும், நாம் முன்னாடி ஓடிப்போய் தப்பித்துவிடலாம் என்ற சுயநல சிந்தனையின் உளவியல் தான், இந்த மாணவனின் உளவியலையும் தீர்மானிக்கிறது. அதுவே தற்கொலைக்கும் அடிப்படையாகிறது.

  கல்வி வியாபாரமாகிவிட்டதே! என்பதன் அபாயம் குறித்து, புலம்பல்களே அதிகம். அதை போராட்டமாக கட்டியமைத்து, எதிராக போராடுவது பற்றி சிந்திப்பதில்லை. மாறாக, இப்படிபட்ட அநியாயத்திற்காக போராடும் மக்களை ஏதோ அற்ப ஜீவிகளாக பார்க்கும் போக்கும் இருக்கிறது.

 9. நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும். கள்ளச்சாராயம் விற்பவனுக்கும் கல்வி வியாபாரம் செய்பவனுக்கும் வேறுபாடு இல்லை. கொள்ளையர்கள் பெரும்பான்மை சமூகமாக இருந்தால் என்ன? சிறுபான்மை சமூகமாக இருந்தால் என்ன? திருடன் திருடன்தான்.

 10. குண்டு வெடிப்பை பற்றி எழுதினால் இந்துவை விமர்சிக்கிறாய், சிறுபான்மையினரை விமர்சிக்க முடியுமா என்று கேள்வி கேட்பது. கல்லூரி முறைகேடுகளை சுட்டிக்காட்டினால் சிறுபான்மையினருக்கு எதிராய் என்பது. இவர்கள் இங்குவந்து எதிர்ப்பது போல் பின்னூட்டமிடுவது கட்டுரையின் கருத்தினால் ஏற்பட்ட பாதிப்பா? அல்லது வேறு காரணங்களா?

  தோழமையுடன்
  செங்கொடி

 11. தனியார் கல்லூரிகளை அரசுடமை ஆக்குவதோ, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுப்பதோ நடவாத காரியம்…ஏனெனில் பெரும்பாலான இந்த கொள்ளை கல்லூரிகள் அரசியல் கொள்ளையர்களாலும் அவர்களின் அடிவருடிகளாலும் நடத்தப்படுகின்றன… லஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம்…அதுபோல் நன்கொடை வாங்கும் இந்த கொள்ளையர்களுக்கு துணை போகும் நன்கொடை கொடுப்பவர்களும் தண்டிக்கப் பட வேண்டும்…பணம் இருப்பவனுக்கு மட்டுமே கல்வி என்ற சூழலை இவர்கள் கூட்டு சேர்ந்து உருவாக்குகிறார்கள்….இது மேலும் பரவி எல்லா மட்டத்திலும் பணம் இருப்பவன் மட்டுமே பிழைக்கமுடியும் என்ற நிலை வேகமாக வந்து கொண்டிருக்கிறது.ஜெகத்ரட்சகன் மருத்துவ கல்லூரி விவகாரம் ஆங்கில செய்தி சேனலின் ஒரு வார பரபரப்புக்குதான் உதவும்…அவர்கள் வைத்திருக்கும் ஆதாரம் நீதி மன்றத்தில் எடுபடாது…தவிர இந்த கொள்ளையையும் நிறுத்த முடியாது. மாட்டாதவர்கள் எல்லாம் (விஜயகாந்த், ராமதாஸ் உட்பட) நல்லவன் மாதிரி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கலாம். அவர்கள் நடத்தும் நடத்த போகும் கல்லூரிகளிலும் இதே கொள்ளையைதானே அடிக்க போகிறார்கள், பார்ப்போம்.

 12. நான் இந்தாளின் கல்விக்கூடங்களில் ஒன்றில் படித்தவன் தான். இவரும் இவரின் மாப்பிள்ளைகளும் செய்யும் அராஜகங்களில் சிலதைப்பார்த்தவன், அனுபவித்தவன். யாருக்க்கும் மரியாதை இல்லை. பேராசிரியர்கள் லெக்சரர்கள் ஏன் பிரின்சி கூட பம்மி பம்மித்தான் காலத்தை ஓட்டுவார்கள். லேப் அஸிஸ்டெண்ட்ஸ் நிலமை கூட மோசம்தான். தொழில்னுட்பம் தெரிந்த அவர்கள், சுதந்திரனாளுக்கு தேசியக்கொடி நட மண்ணை தோண்டும் வேலை கூட செய்வார்கள். மற்ற கல்லூசிகள் எல்லாம் கொஞ்சம் பரவாயில்லை தான், சுதந்திரம் என்று வரும் போது.

  ஆனால் பெற்|றோர்களைத்தான் சொல்லவேண்டும், படிக்காத பிள்ளையயும் படிக்க வைக்கும் கல்லூரி, பெண்களுக்கு ’பாதுகாப்பான’ கல்லூரி என்று போய் அவர்கள் விழும் வரை கல்லூரிடின் கல்லாவும், சேப்பீயாரின் திமிரும் குறைய வாய்ப்பில்லை

 13. சகோதரரே, எதர்கெடுத்தாலும் ஏன் கமலை இழுக்கிரீர்கள்? அவர் கலைஞரை ஆதரிப்பது போல பேசினாலும் அது இலக்கியவாதி கலஒஞருக்க்கு மட்டும் தான். அரசியல்வாதி கலைஞருக்கு அல்ல. அதிபோல அவர் சேப்பீயார் கல்லூரியில் படப்பிடிப்பு நடத்துவது பட்டம் பெறுவதால் அவர் சேப்பீயாருக்கு ஆதரவு என்று எப்படி முடிவு செய்தீர்கள். நிச்சியம் அவர் இந்த விஷயத்தில் மௌனம் தான் காப்பாரே தவிர ஆதரித்து பேச மாட்டார்.

  • என்ன,

   கமல்ஸ், ரொம்ப வருத்தப்படாதீங்க, உங்களோட இந்த படம் ரொம்ப காமெடியா கீது

 14. அணைத்து கல்வி தந்தைகளும் அயோக்கிய சாராய வியாபாரிகள் தான். அவர்கள் என்ன தவறு செய்தலும் ஆண்டவன் அவர்களை தண்டிக்கப்போவதில்லை. அன்று எம்கியாருஉக்கு மாமா வேலை பார்த்தவன் இன்று கல்வி தந்தை. எல்லாம் களத்தின் கோலம்

 15. மானவபருவத்தில் செய்கின்ற தவறுகளுக்கு தண்டனைகள் கடுமையாகத்தான் இருக்க வேண்டும். அதற்க்கு வக்காலத்து வாங்குவது நல்லதில்ல்லை.

  • உங்களுடைய வாதப்படி கடுமையாக நடத்த வேண்டும். சரி! நடந்து கொண்டார்கள். ஒரு பையன் அநியாயமா செத்துப்போயிட்டான். இதுக்கு என்ன சொல்கிறீர்கள்?

   • அது தானே விழுந்த களை எதிர்கால விளைச்சலுக்கு நல்லதுதான் . இவனுடன் சேர்த்து அதிகமான பயிர்கள் அழிந்திருக்கும். விஷ செடியாக மாறிஇருக்கும்.

    • ஹலோ கிருஷ்ணா என்ன இது ஒரு பய்யன் இர்னதுடன்.
     நீங்க என்ன மோ சாதரணமா பிசுறீங்க . போங்காய நீங்குள் உங்க கமெண்டும். நானும் அந்த கலூரி இல் படித்தவன் தான்.
     நானும் இந்த கொடுமை எல்லாம் அனுபவசு இருக்கேன்.
     இவனுங்க பண்றது ரொம்ப ஓவர். மவனே வெங்கட உங்களுக்கு வஞ்சகட ஆப்பு.

 16. இந்த ஒரு மாணவருக்கு ஏற்பட்ட நிலையை மட்டும் வைத்து ஒரு கலலூரியை எடை போடுவது சரியா ? இதே கல்லூரியில் நன்றாக படித்து நல்ல நிலையில் உள்ள எத்தனையோ மாணவர்கள் இருப்பார்கள். அதைப்பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை . இந்த கல்லூரியைப் பற்றி தெரிந்தும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நன்கொடை கொடுத்து சேர்க்க விரும்புவது ஏன்? அப்போது மட்டும் கல்லூரியின் கட்டுப்பாடுகள் பற்றி தெரியாதா? இது போன்ற விசயங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு பெற்றோர்களின் கண் காணிப்பும், அரவணைப்பும் வழிகாட்டுதலும் மாணவர்களுக்கு தேவை…

  • இந்த மாணவருக்கு ஏற்பட்டது உள்ளே நடந்துகொண்டிருக்கும், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அநியாயங்களின் ஒரு சிறு வெளிப்பாடு என்பது அந்த கல்லூரியில் படித்து வெளியில் வந்து என்னுடன் பணிபுரியும் நண்பர்களின் கருத்து.

 17. நீங்கள் பாப்பார கும்பல் என்று தற்போதுதான் அறிந்துகொண்டேன்.
  ஆகவே நீங்கள் சிறுபான்மையினரை ரவுடி மாமா என்று கேவலப்படுத்துவது ஆச்சரியமாக இல்லை.

 18. ஃபெர்னாண்டஸ்,

  வினவு நிலை பாவம்தான். அவரும் எத்தனையோ முறை அம்பி, கிமபி என்றெல்லாம் எழுதிப் பார்க்கிறார். இங்கே சாதாரணமாக அவருடைய கருத்துகளோடு ஒத்துப் போகும் பலரும் பார்ப்பனர்களை திட்டுகிறார்கள். நீங்கள் இந்த குழுவையே பாப்பார கும்பல் என்று திட்டுகிறீர்கள்.

  பாப்பார கும்பல் என்று வினவு சொன்னால் அவர் யாரையோ திட்டுகிறார் என்றுதான் பொருள். உங்களுக்கும் அப்படித்தானா? இந்த ஒரு விஷயத்திலாவது வினவோடு ஒத்துப் போகிறீர்களே!

 19. ஃபெர்னாண்டஸ்! பார்ப்பான் என்னும் பதம் திட்டும் சொல்லாக இங்கு இருப்பது, பிராமணர்கள் காலங்காலமாக சூத்திரன் என்ற இழி குறியீடைப் பயன்படுத்தியதால் எனக்கு சிரிப்பு வர வழைக்கிறது. யானைக்கு ஒருகாலம்; பூனைக்கு ஒரு காலம்.

  ஆனால் வினவையே நீங்கள் பார்ப்பனன் என்று திட்டுவது சமுதாயத்தில் பல்வேறு அடுக்குகளாக ஒளிந்திருக்கும் சாதி வேறுபாடுகளை நினைவுறுத்துகிறது.

  மற்றபடி ஜேப்பியார் போன்ற பொறுக்கிக்கெல்லாம் பிறப்பை முன்னிட்டு வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பது அபத்தம். ஒட்டு மொத்த சமுதாயத்தால் ஒதுக்கப்பட, தண்டிக்கப்பட வேண்டிய பச்சை கிரிமினல் ஜேப்பியார். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருக்கும் சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது.

 20. ஜேப்பியார் மட்டும் இல்லை. இங்கு ஏறக்குறைய 250 கிரிமினல்கள் உலா வருகிறர்கள். நான் சொல்லவந்தது, 250 தனியார் பொறியியல் கல்லூரிகளை.
  இந்த கல்லூரிகளுக்குப் பின்னால் உள்ள‌ மடாதிபதிகள்,அரசியல்வாதிகள்,கார்ப்பரெட் நிறுவனங்களின் சாகசங்கள் புல்லரிக்கிறது.
  தனியார் மருத்துவக்கல்லூரிகளின் கல்வி பங்களிப்பு ஒரு கிளைக்கதை. உடையார், ஜெகத்ரட்சகன் போன்ற “சான்றோர்களின் கல்விப்பணி” இந்த நேரத்தில், குறைத்து மதிப்பிடமுடியாது.

 21. “வினவையே நீங்கள் பார்ப்பனன் என்று திட்டுவது ”
  ” பார்ப்பனன் என்று திட்டுவது ” அவர்களை இன்னும் உயர்த்தி விடுவது போல் உள்ளது . அனால் வினவின் கருத்துகள் பார்ப்பான் கருத்துகளை ஒத்து உள்ளது

 22. படித்தவர்கள் மத்தியிலும் கூட இவ்வளவு ஜாதி துவேஷம் இருக்கிறது என்பது…ஆச்சரியப்பட வைக்கிறது…இதனால் என்ன சாதிக்க முடியும் என்று புரியவில்லை. வேதனையாக இருக்கிறது…

 23. Add your Blog to Top Tamil Blogs – Powered by Tamilers.
  It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

  This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.

  http://tamilers.com/topblogs
  Top Tamil Blogs

  “சிறந்த தமிழ் வலைப்பூக்கள்” தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

  இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

  http://tamilers.com/topblogs
  சிறந்த வலைப்பூக்கள்

  நன்றி.
  தமிழர்ஸ் டாட் காம்.

 24. மதம் என வரும்பொழுது, ஜேப்பியாரும் கிருத்துவனாகி விடுகிறான். அதற்கு கிருத்துவத்தை சார்ந்த ஒருவர் வக்காலத்து வாங்குகிறார். மதம் எவ்வளவு பெரிய அயோக்கியனை கூட காப்பாற்றுகிறது. மதம் பெரிய விசயம் தான்.

 25. —–Sent by Anita Josephine—-Hi,
  I want to share some comments with you regarding my college since i was a X student of St. Josephs Engineering college.
  Note : I want to make you clear that the below given comments are not opposing ur Blog or not supporting my college but still i want to give soem point s which may be fewer than your complaints but still i want to make you know how me a middle class family student finished my Engg successfully
  1. I also joined as a management student giving only 1 lak rupee though we din have any reference in that college and i heard the max was 7 lax for some courses which was the same in most of the good going private colleges.
  2. My parents selected that college though we were from a normal middle class family just becuase the college was very strict and yes most of the parents did the same for the same reason.
  3. Regarding college exams they don give us Internal marks(20) as such as other colleges do we have to study hard and gain more marks nearly 90 per in each mid sem test till model to get the full 20 marks.That made all the students automatically study during the whole sem which made us perform well in the Semester exams too.
  4.They never punish people who never do mistakes. I have seen them punishing that is giving OD (Office Duty) mostly to students who break the rules both boys and girls. I felt like i was still studying in my school thats it.
  5.Talking about the food we can feel like heaven we will have all varities all six days with ice creams too!!!! it might sound funny while i talk about the food but it is real. Since i was a nonvegetarian i enjoyed the most since we had non veg from mon to Thursday … Morning breakfast will also be given and tea during break time and tiffen if we need to stay till five in the evening . This is for the money we pay along with our fees. and same for buses too they had some 50 to 60 buses which will even go till chengalpet..
  6.And to most they give Rs 25,000 every year for the acadamic merrit and sports persons in each year. Like if we are 120 students in our Dep first 12 people will bwe getting 25000 each. We always have the annauniversity rank even first rank holders when compared to toher colleges.
  7.Last but not the least is our pleacment. They strive hard to place all the students in campus interviews. Some 500 out of 700.
  I morn for the boy who died but if he had not done the mistake i promise he would have been one of the shining student since i heard he was a 80 per holder. Management must not have behaved in such a way.
  I still want to make it clear i din support my collge but still i want to tell about my college since i also joined the college with a long face and wheni came out with smiling once i finished.

  Regards,
  Anita Josephine. W

  • HI, Just imagine this! you committed suicide by the mistake of the college. And thi website publish the same column. I am writing the same reply as you have written. You are watching all these as a spirit. Will your opinion be the same?

 26. //4.They never punish people who never do mistakes. I have seen them punishing that is giving OD (Office Duty) mostly to students who break the rules both boys and girls.//

  இந்த பசங்களும் புள்ளைகளும் சேர்ந்து பேசக்கூடாது என்பதற்காகவே, கல்லூரியில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டினாரே, இந்த புண்ணியவான்…அதையும் சேர்த்துக்கவா?

  //Since i was a nonvegetarian//

  !!!!!!!!!!!!!!

  • They have given AC class rooms (Not only labs but class rooms) like IT company which college with give thjs Srinivasan …

   Engeluku ehtuku maram sollungal …

   Naan Non vegetarian than annan ange dily pote icecream , Sweets , payasam ellem vegetarian than …

   • ஓஹோ! உங்களுக்கு மரம் தேவையில்லை என்று நீங்கள் போய் சொல்லி, அப்புறம் அவர் அதையெல்லாம் வெட்ட சொன்னாரா? சாப்பாடு ரொம்ப பிரமாதம்னு சொல்றிங்க. சரி. டிரைவர், சுத்தம் செய்பவர், வாத்தியார், மாணவன் என்று எல்லாருக்கும் கிடைத்த நல்ல உணவு, இப்போ, எல்லோருக்கும் அதே தரத்தில் கிடைக்குதா? உறுதியா சொல்ல முடியுமா உங்களாலே? கட்டுரைய நல்ல படிம்மா. ஆயிரம் பேருக்கு கேட்டது நடந்தாலும் பரவாயிலை, நான் நல்ல இருக்கிறேன், அதனாலே அந்த கல்லூரியை பத்தி குறை சொல்லாதீங்கன்னு வக்காலத்து வாங்குறே பாரு, அப்படியே புல்லரிக்குதும்மா.

   • //Engeluku ehtuku maram sollungal …//

    அடி முட்டாள்தனமான கேள்வி! வக்காலத்து வாங்கவும் ஒரு அளவு இருக்கு!

 27. //

  அடி முட்டாள்தனமான கேள்வி! வக்காலத்து வாங்கவும் ஒரு அளவு இருக்கு // Inthe reply en kanavar srinivasanukage ungeluku ilay

  //Note : I want to make you clear that the below given comments are not opposing ur Blog or not supporting my college // ithe yaarum padikule pol iruku

 28. நண்பர் வினவு…
  மிகத் துணிச்சலான பதிவு ,நான் அங்கு செயின்ட் ஜோசெப் கல்லூரி கட்டுமானத்தில் வேலை பார்த்திருக்கிறேன்,மூன்று வருடம்.அந்த நவீன கண்ணாடி கட்டிடங்கள்.அருகிலேயே பொருந்தாத ஜேப்பியாரின் ஆட்டு மூளை வடிவமைத்த டோம்கள்.இவன் யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அவரை முதல் முறை ஆபிஸ் வரச்சொல்லி மோர் கொடுப்பான்,அத்துடன் இவன் கண்ணில் படக்கூடாது.
  ஆனால் பஸ் டிரைவர்களை ரொம்ப உத்தமர்களாக சித்தரிக்காதீர்கள்,
  சரியான உளவாளிகள்.
  காதல் துரோகிகள்.ஒரு மாணவனையும் நிம்மதியாக கடலை போட விடமாட்டார்கள்.

  வீண் பழி சுமத்தி மாணவர்களை அழ வைப்பார்.எத்தனையோ மாணவர்கள் சொல்லனாத் துயரை அனுபவித்துள்ளனர்.
  ஜெப்பிய்யாரை அந்த இயேசு என் இன்னும் ஒன்னும் செய்யவில்லை?என்று ரொம்ப ஆச்சர்யமாக உள்ளது..
  சிவாஜி படத்தில் வரும் சுமன் பாத்திரம் தான் இந்த கயவன்.
  ராமாபுரத்தையே சுடுகாடாக்கிய கபோதி.
  இவன் இறக்குமதி பென்ஸ் 2002 ஆம் ஆண்டே 1 கோடி ருபாய் ,
  செயின்ட் ஜோசெப் கல்லூரி இவன் மருமவன் பாபு மனோகரனின் சொத்து.
  இவன் பணத்தாசை மட்டும் விடவே விடாது..
  அய்யா நீங்கள