“ஈழத்தில் தமிழின அழிப்பில் ஈடுபட்ட, துணைநின்ற இனப்பகைவர்களை அடையாளம் காண்போம்!” என்ற தலைப்பில் பா.ம.க ராமதாசின் வன்னிய சொந்தங்களுக்காக நடத்தப்படும் தமிழ்ப் படைப்பாளிகள் இயக்கம் 10.06.2009 புதனன்று சென்னை அண்ணா கலையரங்கத்தில் ஒரு மாலை நேரக் கருத்தரங்கை நடத்தியது. மாபெரும் கருத்தரங்கமென்றாலும் உள்ளே சுமார் 250 தலைகளே இருந்தன. ஓவியர் வீர.சந்தானம் தலைமை வகிக்க, புதுவை செயமூர்த்தி என்ன பிழை செய்தோமென்ற பாடலைப் பாட கவிஞர் ஜெயபாஸ்கரன், கவிஞர் பச்சியப்பன் கவிதை வாசிக்க கருத்தரங்கம் தொடங்கியது. யார் யார் என்ன தலைப்பில் பேசினார்கள் என்பதை அந்த அழைப்பிதழில் உள்ளபடியே கீழே தருகிறோம்
தமிழகச் சக்திகள்- அய்யா பழ.நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு
இந்திய அரசின் நிலைப்பாடு- திரு. எம்.ஜி. தேவசகாயம், இ.ஆ.பி.(பணிநிறைவு)
ஊடகங்கள்- தோழர் தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
போர்க்குற்றவாளிகள்- வழக்கறிஞர் சுரேஷ், தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழநாடு-புதுவை.
இந்திய வெளியுறவுக் கொள்கை- தோழர் இராசேந்திர சோழன், ஆசிரியர், மண்மொழி, திங்களிதழ்.
சர்வதேசச் சக்திகள்- மருத்துவர் நா.எழிலன், அமைப்பாளர், இளைஞர் இயக்கம்
நிறைவுரை
தமிழினப் போராளி மருத்துவர் அய்யா ச.இராமதாசு
நன்றி
கவிஞர் விஜேந்திரா,
சென்னை மாவட்டச் செயலாளர், தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம்.
இந்த தலைப்புக்களைப் பார்த்த பிறகு ஏதோ பயங்கரமான ஆய்வு நடந்திருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். எல்லாம் ஜெ தலைமையிலான கூட்டணி தேர்தலில் தோல்வி அடைந்ததைப் பற்றி ஒரு மூச்சு அழுதுவிட்டு தமிழர்களை திட்டி விட்டு ஈழத்திற்காக தாங்கள் என்னவெல்லாம் சாதித்தோம் என ஒருவருக்கொருவர் முதுகு சொறிந்து கொள்ளத்தான்.
பேசியோர் அனைவரும் சதீஸ்நாயர், விஜய நம்பியார், ஏ.கோபிநாத், எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் உள்ளிட்ட கேரள மலையாளிகள்தான் இதற்கெல்லாம் காரணம் என திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்துப் பேசினர். இந்த மலையாள பூச்சாண்டி பற்றி வினவில் தனியாகவே ஒரு பதிவு எழுதுவோம்.
கூட்டத்தலைவர் வீரசந்தானம், நெடுமாறனை பேச அழைக்கும் போது, “பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என விடை தெரியாது தமிழகமே தவித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு விடை தந்து நம்பிக்கையூட்ட அய்யாவை பேச அழைக்கிறேன்” என்றார்.
அய்யா நெடுமாறனோ, இத்தனை அழிவுகளுக்கும் காரணம் கருணாநிதிதான் என்று ஆரம்பித்தவர்,”அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாங்களெல்லாம் மத்திய மந்திரிகளை மட்டும்தான் ராஜினாமா செய்வது என்று பேசினோம்.ஆனால் கலைஞர்தான் ஒருபடி மேலேபோய் எம்.பி.க்கள் அத்தனைபேரும் ராஜினாமா செய்வார்கள் என அறிவித்தார். ஆனால், பிரணாப் இலங்கை சென்றுவந்தது மனநிறைவு தருகிறது எனக்கூறி, தான் முன்பு கூறியது போல எம்.பிக்களெல்லாம் ராஜினாமா பண்ணத்தேவையில்லை, தில்லி அரசு பார்த்துக்கொள்ளும் என நாடகமாடினார். அன்று மட்டும் அவர் அவ்வாறு முடிவெடுக்காமல், எம்.பிக்களை ராஜினாமா செய்ய வைத்திருந்தால் தில்லி அரசு பயந்திருக்கும். ஒரு இலட்சம் தமிழர்கள் இறந்திருக்க மாட்டார்கள். இதன் மூலம் வரலாற்றுப்பிழையை கருணாநிதி இழைத்துவிட்டார். மத்திய அரசின் நடவடிக்கையை எப்போதும் இவர் நியாயப்படுத்தியே பேசிவருவதால், தில்லி அரசும் மாநில அரசு நம்பக்கம் இருக்கிறது, எனவே, தமிழக மக்கள் குரலுக்கு நாம் செவிசாய்க்க தேவையில்லை என கருதுகிறது. அதற்கேற்ப கருணாநிதியும் மக்கள் எழுச்சியை ஒடுக்கும் வேலையைத்தான் செய்து வருகிறார்” என்று வழக்கமான கருணாநிதி பழிப்பு புராணத்தை பேசினார்.
ஈழத்திற்கு கருணாநிதி துரோகம் செய்வது எல்லோரும் ஒத்துக்கொள்ளக் கூடியதே. ஆனால் அவர் ராஜினாமா நாடகம் மட்டும் தடைபடாமல் நடந்திருந்தால் ஒரு இலட்சம் ஈழ மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் என அளந்தாரே அதுதான் தாங்க முடியவில்லை. ஏதோ கருணாநிதிக்குப் பயந்துதான் இந்தியாவும், இலங்கை அரசும் அங்கே போர் நடத்திக் கொண்டிருந்ததைப் போல கருணாநிதியே எதிர்பார்த்திராத வல்லமையை அய்யா நெடுமாறன் கருணாநிதிக்கு அளித்தாரே அதுதான் கொஞ்சம் கூட ஒட்டவில்லை. ஒரு வேளை தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்தால் ஈழமக்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று நெடுமாறன் ஏன் பேசவில்லை? கருணாநிதிக்கு ஒரு நீதி, ஜெயலலிதாவுக்கு ஒரு நீதியா?
பேசியவர்கள் அனைவரும் ஜெயலலிதாவை பற்றி மட்டுமல்ல, ஜெ.என்ற வார்த்தையைக் கூட எவரும் உச்சரிக்க வில்லை. குறிப்பாக ராமதாசு பேசவேயில்லை. போயஸ் தோட்டத்திலிருந்து தொலைவில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வு எடுத்துவரும் அம்மாவைப் பற்றி அத்தனைபேருக்கும் அவ்வளவு மரியாதை இல்லையில்லை பயம்.
வழக்கமாக இத்தகைய கூட்டங்களில் ‘சே’ படம் பொறித்த டி.சர்ட்டில் வலம் வரும் ஒரு சில இளசுகளைத் தவிர எல்லாமே பெருசுகளின் தலைகள் பெரும்பாலும் தென்பட்டன.
நேற்றுவரை இந்த தேர்தல் முடிவுதான் ஈழத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்கப் போகும் சக்தியென முழங்கி வந்த தியாகு, இக்கூட்டத்தில், மிகவும் கம்மியான குரலில் “நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தாலும், இதில் எப்படி தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர் என்பதை அய்யா (ராமதாசு) அவர்கள் காட்சி விளக்கமே தந்துவிட்டார். எனவே நம்மை பொருத்தவரை இந்த தேர்தலில் பெறும் வெற்றி தோல்விகள் முக்கிய விசயமல்ல” என போகிற போக்கில் பேசிவிட்டுப் போனார்.
இறுதியாக அய்யா ராமதாசு முழங்க வந்தார். தேர்தலுக்கு முந்தைய மணித்துளி வரை ஈழத்தின் பிணங்களைக் காட்டி சதை வியாபாரம் செய்து ஏழு இடங்களையும் அள்ளிவிடலாம் என மனப்பால் குடித்த அந்த தமிழினக் காவலர் என்ன பேசினார் என்பதை கீழே அப்படியே தருகிறோம்.
“இங்கே பேசிய தலைவர்கள் அவர்களுக்கான தலைப்பில் மிகச்சுருக்கமாப் பேசினார்கள். குறிப்பாக தியாகு பேசிய தலைப்பிற்கு இரண்டு மணிநேரம் வேண்டும். இரண்டுமணி நேரம் வேண்டும் என்றால் அதை கேட்க இரண்டாயிரம் இளைஞர்கள் வேண்டும். அவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும். தமிழ் இளைஞர்களாக இருக்க வேண்டும். தமிழ் உணர்வாளர்களாக இருக்கவேண்டும். அவன் தமிழச்சிக்குப் பிறந்தவனாக இருக்க வேண்டும். தமிழை ஊட்டி வளர்ப்பவர்களாக இருக்க வேண்டும். தமிழை நேசிப்பவர்களாக இருக்கவேண்டும். வீட்டில் தமிழை பேசுபவர்களாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் தமிழ் படிப்பவராக இருக்க வேண்டும். இரண்டுமணி நேரம் அதற்கு கொடுக்கலாம்.
ஆனால், இங்கு ஒவ்வொருவரும் பேசிய இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற மிகுந்த அக்கறை காட்டி *** முதன்மை செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற தேவசகாயம் அவருக்கு இரண்டுமணி நேரம் வேண்டும், பி.யூ.சி.எல். சுரேசுக்கு இரண்டு மணிநேரம் வேண்டும். இங்கு பேசிய எல்லோருக்கும் இரண்டுமணி நேரம் வேண்டும். இராசேந்திர சோழனுக்கு இரண்டுமணி நேரம் வேண்டும். ஒவ்வொருத்தருக்கும் இரண்டுமணி நேரம் வேண்டும். ஆனால், மாணவர்கள் வேண்டும், இளைஞர்கள் வேண்டும். எங்கே இளைஞர்கள்? நாங்க அரைச்சமாவையே அரச்சிகிட்டிருக்கிறோம். அரைச்ச மாவையே அரைக்கலை… இங்க பேசினவங்கல்லாம், அரைக்கலை… ஆனா வந்தவர்களே கேட்டவர்களே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கேட்டவர்களே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் வந்தவர்களே வந்து கொண்டிருக்கிறார்கள். ஆறுகோடி தமிழன் எங்கே? தமிழனை தேடுங்க. தேடுங்க எங்கே இருக்கிறான் தமிழன்?
இராசேந்திர சோழன் சொன்னார், நாமெல்லாம் போராட்டம் நடத்தினோம், பேரணி நடத்தினோம், உண்ணாவிரதம் இருந்தோம். நாம நடத்தாத போராட்டமில்லை. எல்லாம் நடத்திட்டோம் எல்லாம் சொல்லிட்டோம், என்னன்ன வழி இருக்குதோ அதெல்லாம் செய்தோம்
தனித்தனியாகச் செய்தோம், கூட்டாகச் செய்தோம், இயக்கம் கண்டு செய்தோம், இன்று படைப்பாளர் பேரியக்கம் அவங்களோடு பங்கை நிறைவேற்றுகிறார்கள்.
இவ்வளவும் செய்தோம் ஆனால் ஒன்னும் பலனில்லை. *** மீதித் தமிழன் எங்கே? தமிழன் காயடிக்கப்பட்டு விட்டானா? இல்லை தமிழனே இல்லையா? எங்கே போனான் தமிழன்? நமக்குள்ளே பேசிக்கொண்டிருக்கிறோம். தியாகு சொன்னார் கடைசித் தமிழன் இருக்கிற வரைக்கும் அங்கே தமிழ் ஈழம் மலரும் நாள்வரும். ஆனால் இங்கேயிருக்கிற தமிழ்நாட்டு தமிழன் 6.5கோடி, 7 கோடி இந்தியாவிலிருக்கிற தமிழன் என்ன செய்யப்போகிறான்? இவனை எங்கே தேடுவது? எங்கே போயிருக்கிறான்?
நாங்கள் தேர்தலில் பேசாத பேச்சா? எல்லாம் சொன்னோம். உலகத்திலிருக்கிற கதைகளெல்லாம் படிச்சோம். எல்லாத்தையும் சொல்லிப் பார்த்தோம். ஆனால், எவ்வளவுச் சொல்லியும் தமிழன் உணரவில்லையே?
இங்கே தமிழோசை படிக்கிறவர்கள் எத்தனைப்பேர்? மக்கள் தொலைக்காட்சிப் பார்க்கிறவங்க எத்தனை பேர்? இத ரெண்ட தவிர இந்த செய்தியை கொண்டு போறது யாரு? நானும் அய்யா நெடுமாறனும், தியாகு, இராசேந்திர சோழன், வை.கோ., நாங்கதான் ஊர் ஊரா போனாம். ஊர் ஊரா சொன்னோம்.
யாரைப் போயி சொல்றது? எங்கே போயி சொல்றது? இல்ல எங்கப் போயி முட்டிக்கிறது? எந்த சுவத்துல, எந்த குட்டி சுவத்துல முட்டிக்கிறது? யாருகிட்ட சொல்றது? எங்கே தமிழன்? அவன் எங்க இருக்கிறான்? தமிழர்கள் எங்கே இருக்கிறார்கள்? இருக்கிறார்கள் எல்லாம் தமிழச்சிதான். 6.5 கோடின்னு சொல்றோம், 6 கோடி இருப்பான், 5.5 கோடியாவது இருப்பான். ஆனால் உணர்வுள்ள தமிழன் எத்தனைபேர்? உணர்வை எப்படி ஊட்டப்போறோம்?
தோழர் தியாகுவின் பேச்சுக்களை எத்தனை கல்லூரிகளில் கேட்கத் தயாராயிருக்கின்றன? தமிழ் மன்றங்கள் எங்கே போச்சு? இவர்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்? சினிமா கொட்டகைகளில், குடிகாரதமிழர்களாக இளைஞர்களை ஆக்கி வைத்திருக்கிற இந்த கொடுமைக்கு நாம் என்ன முடிவு காணப்போறோம்.
எவ்வளவோ புத்திமதி சொன்னோம். இன்னும் பேசப்போறோம். இதுக்கு முன்னாடி பேசுனோம், போராட்டம் நடத்தினோம். இனியும் பேசுவோம் இன்னும் ஒருமணிநேரம் சட்டையை பிழிஞ்சு வேர்வையை நனைச்சுட்டு ஊத்தோ ஊத்தோன்னு வெயில்ல பேசப்போறோம். சொல்லப் போறோம். ஆனால், என்ன நடக்கப் போகிறது? என்ன நடந்துகிட்டிருக்குது?
எல்லாத்துக்கும் மொத்தமா சொல்லிட்டாரு நம்முடைய தமிழக முதல்வர். என்ன சொல்லிட்டார் –நான் அடிமை– நான் அடிமைன்னா அப்ப நாமெல்லாம்? நாமெல்லாம் அடிமைகள்தான். அந்த ஒரு வார்த்தை சொன்னதற்காக கலைஞரை நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அய்யா கலைஞர் அவர்களே நீங்கள் மட்டும் அடிமையில்லை. நாங்களும்தான் அடிமை. 6.5 கோடி, 7 கோடி, 6.25(ஆறேகால்) கோடி என்னமோ ஒரு கணக்கு தமிழ்நாட்டு கணக்கு புள்ளிவிவரம். எல்லாம் அடிமை. வாயற்ற பூச்சிகளாயிருக்கிறோம். ஒன்னும் நடக்கவில்லையே?
இரண்டு தீர்மானங்களை தமிழக முதல்வர் ஒன்று அய்யகோ தீர்மானம். அடுத்து டெல்லிகோ போனோம். இப்படியெல்லாம் சொன்னோம்.
யார் யார் என்ற அதிகாரிகளின் பட்டியலையே சொன்னார். விஜய நம்பியார், கோபிநாதன், எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன். என் பட்டியல் நீளுது.
அங்கே ஒரு வங்காளிப் பாதிக்கப்பட்டால், ஒரு மலையாளி பாதிக்கப்பட்டால், நிலைமை வேறு. ஆனால், ஒரு இந்தியத் தமிழன் பாதிக்கப்பட்டால் ஒன்றுமே இல்லியே, நடக்கலியே.
ஆக நமக்குள்ளேயே நாம பேசிக்கொள்வது. தமிழனை அடையாளம் காணவேண்டும். தோழர் தியாகு அவர்களே தமிழனை கொஞ்சம் அடையாளம் காட்டுங்கள். டாக்டர் எழிலன் தமிழனை கொஞ்சம் அடையாளம் காட்டுப்பா. நம்முடைய அருமை மிகு இங்குள்ள எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன் கொஞ்சம் அடையாளம் காட்டுங்கள்.
இங்கே, நம்முடைய அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் சொன்னார்கள், நம்முடைய மிகப்பெரிய ஆபத்து சீனா, பாகிஸ்தான். தியாகுகூடச் சொன்னார், வடக்குதான் ஆபத்தாயிருந்தது இப்ப கிழக்கு தெற்கயும் வந்துட்டான். மேற்குல பாகிஸ்தான் இருந்துச்சு அதே பாகிஸ்தான் இப்ப தெற்கேயும் வந்துட்டான். இரண்டுபேரும் சங்கமிக்கிறான், தமிழனை அழிக்கனும், பூண்டோடு அழிக்கனும்,கூண்டோடு அழிக்கணும் தமிழினமே இருக்க கூடாது என்பதற்காக.
வெளியுறவுத்துறை அமைச்சரைப் பார்த்து உன் வேலையைப் பார் என்கிறான். இலங்கைக்காரனே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டான். நான் எங்களுக்காகப் போரை நடத்தவில்லை. இந்தியாவிற்காகத்தான் போரை நடத்தினோம் என்று.
நாம் எத்தனை தீர்மானங்களை நிறைவேற்றினோம். எத்தனை உண்ணாவிரதங்கள். நீங்களும் உண்ணாவிரதம் இருந்தீர்கள். அதை கொச்சைப்படுத்திக்கூட பேசினோம். இப்போது பேச விரும்பலை.
இந்தியாவுக்கானப் போரை நாங்கள் நடத்தினோம். தமிழின அழிப்புப் போரை நாங்கள் நடத்தினோம்.உங்க வேலையைப்பார் என்கிறான். மைன்ட் யுவர் ஒர்க்ஸ்* (ஒன்ஸ) என்கிறான், எஸ்.எம்.கிருஷ்ணாவை. என்ன செய்யப் போறோம். என்ன சொல்லப் போறோம். இனி நாம் என்ன செய்யப் போகிறோம். என்னப் பேசப் போகிறோம்.
பேசுவோம். எல்லா அமைப்புகளும் சேர்ந்து எல்லா தலைவர்களும் சேர்ந்து பேசுவோம். ஒரு நாளு பேசுவோம். ஒருமணிநேரமல்ல, ஒருநாளை இதற்காக ஒதுக்கி நிறைய பேரெல்லாம் இருக்கக் கூடாது.
ஒவ்வொரு உணர்வுள்ள அமைப்புக்கு ஒருவராக ஒரு இருபது முப்பது பேராக உட்கார்ந்து பேசுவோம். இந்த அடிமை விலங்கை தகர்ப்பதற்கு நீங்கள்தான் ஒரு வழியை சொல்ல வேண்டும்.
ஒன்னும் புரியலை ஒன்னுமே புரியலை எங்களுக்கும் ஒன்னும் புரியலை. ஆக நாமெல்லாம் முட்டாள்களாக்கப்பட்டிருக்கிறோம் அது மட்டும் நமக்கு புரியுது. மீண்டும் நாம் கூடுவோம், ஆனாலும்கூட துன்பப்படுகிற அந்த ஈழத்தமிழர்களை பற்றி நினைக்கின்றோம். ஆனால், நினைக்கிறோமே தவிர வேறு ஒன்றும் நம்மாலே செயலளவிலே செய்ய முடியாத அளவிலிருக்கிறோம்.
தமிழ் ஈழம், தமிழ் ஈழம் மலரும், தமிழ் ஈழம் ஒருகாலத்தில் உருவாகும் என்கிற எண்ணம் அந்த ஒரு வேட்கை இருக்கிறது.
ஆகையால் இதை எப்படிநாம் சாதிக்கப்போகிறோம். என்பதை நாம் உட்கார்ந்து ஒருநாள் பேசுவோம். ஒருநாள் பூராவும் பேசுவோம். அடுத்து இதை எப்படி கொண்டு செல்லப்போகிறோம் என்பதையும் பேசுவோம்.
இங்கே பேசியவர்களெல்லாம் மிகச்சுருக்கமாக 15 நிமிடங்களில் பேசி அமர்ந்தார்கள். இரண்டு மணிநேரம் கொடுக்க வேண்டும். ஆனால், கேட்பதற்கு ஆள்வேண்டும். கேட்பதற்கு தமிழர்கள் வேண்டும். தமிழ் இளைஞர்கள் வேண்டும். புதுப்புது இளைஞர்கள் வேண்டும். கேட்டவர்களே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வந்தவர்களே வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணம் மாற்றம் வேண்டும் என யோசிப்போம்”…
இதுதான் அய்யா தமிழினக் காவலர் ராமதாசு பேசிய பேச்சு. இதற்கு தனியே விமரிசனம் தேவையா என்ன? தமிழன் எங்கே என்று அய்யா பேசும்போது எல்லோரையும் பார்த்து சிரிக்க சிரிக்க பேசினார். அரசனை நம்பி புருசனை கை விட்ட கதையாக ஒரு சீட்டுக்காக அணி மாறிய அய்யா ஒரு சீட்டு கூட தேறாமால் மண்ணைக் கவ்வினார். கல்லாக் கட்டிய மந்திரிப் பதவி போச்சு. தமிழோசைக்கும், மக்கள் டி.விக்கும் வந்த விளம்பரங்கள் போச்சு. அமைச்சராக இருந்து தேற்றிய கைக்காசு பலநூறு கோடி தேறினாலும் இனி கட்சிக் கம்பெனியை கைக்காசு போட்டு நடத்த வேண்டுமே என்ற கவலை. இதெல்லாம் சேர்ந்துதான் அய்யா எங்கே தமிழனென்று சிரித்துக்கொண்டே தேடுகிறார்.
ஈழத்திற்காக தமிழகத்தில் நடந்த போராட்டங்களால் எந்தப் பயனுமில்லை என அய்யாவுக்கு இப்போதுதான் புரிந்ததாம். ஆனால் ஜெவை ஈழத் தாயாக்கி இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என பிலிம் காட்டினாரே அப்போது ஏன் உரைக்க வில்லை? தேர்தலில் தோற்றதால் ஈழத்திற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்தை பாதுகாப்பாக எழுப்புகிறார் ராமதாசு. ஒரு வேளை தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றிருந்தால்? நிச்சயம் தமிழனைக் காணவில்லை என புலம்பமாட்டார். மாறாக இரண்டு இலட்சம் தமிழர்கள் சாகவேண்டியது தங்கள் ஆட்சியினால் ஒரு இலட்சமாக குறைந்திருக்கிறது என்று சாதனையாக அறிவிப்பார்.
தேர்தலில் தோற்றால் தமிழனுக்கு சுரணையில்லை என்ற இந்த சோக நாடக புலம்பலை தமிழக மக்கள் கருணாநிதியின் புண்ணியத்தில் பலமுறை பார்த்திருக்கிறார்கள். இந்த முறை அந்த இடத்தை அய்யா ராமதாசு எடுத்திருக்கிறார். தனது சொந்த தேர்தல் தோல்விக்காக தமிழன் இலாயக்கில்லை என்று கிண்டலடிக்கும் இந்த சுயநலக் கோமாளிகளையெல்லாம் ஈழத்து மக்கள் நம்புகிறார்களே என்ன செய்ய? இறுதி தாக்குதலில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட போதும் தேர்தலுக்காக வாய் கிழிய ஈழம் ஈழம் என முழங்கிய அ.தி.மு.க கூட்டணி ஒரு மாலை நேர ஆர்ப்பாட்டம் கூட செய்யவில்லையே? அய்யா ராமதாசு அவர்களே முதலில் உங்களுக்கும், உங்கள் அணி தலைவிக்கும் சுரணையும், நன்றியுணர்வும் உள்ளதா என்பதை விளக்குங்கள். அப்புறம் தமிழனைப் பற்றி கவலைப்படலாம்.
இறுதியாக தற்போது ராமதாசின் கவலை என்ன தெரியுமா? வன்னியில் வதை முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களை காப்பாற்றுவது குறித்து என்று நினைத்து விடாதீர்கள். அய்யா அம்மாவுடன் ஒப்பந்தம் போட்ட போது ஏழு சீட்டுக்கு பிறகு எட்டாவது சீட்டை நாடாளுமன்ற மேலவை தேர்தலில் அ.தி.மு.க தரவேண்டும் என்று பேசியிருந்தார்கள். இப்போது கொடநாட்டில் குப்புறப்படுத்திருக்கும் புரட்சித் தலைவி தேர்தல் தோல்வி கோபத்தில் அந்த எட்டாவது சீட்டை தரமாட்டேன் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? இந்தப் பிரச்சினைக்கு தீர்வும் ஆறுதலும் தர விரும்புவர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு கையில் விளக்குமாற்றுடன் செல்லலாம்.
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
தொடர்புடைய பதிவுகள்
ஈழத்தின் இரத்தத்தை வியாபாரம் செய்யும் பா.ம.க ராமதாஸ் !
ஈழம்: சோனியாவிடம் பா.ம.க பம்முவது ஏன்? கருத்துப்படம் !!
ராமதாசு ஒரு காமெடி பீசு அந்தாளுக்கு இவ்வளவு பெரிய்ய்ய பதிவா? கொடனாட்டுல குப்புற படுத்திருக்கும் ஈழத்தாய் கோச்சுக்க மாட்டாங்களா?
எது எப்படி போனாலும் நீங்க எவ்வளவு எழுதினாலும், இந்த கூட்டம் தன்னத்தானே லைட்டு போட்டு நாங்கெல்லாம் டுப்பாக்கூறுன்னு காமிக்கிற மாதிரி வர்ராது… உங்க பதிவுல இன்னமும் அந்த கொய்யா பழ.நெடுமாறன் பத்தி எழுதலியே?
ராமதாசு ஒரு செத்த பாம்பு அதை அடித்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்
:-))))))))))))))
ராமாதாஸ் ஒரு தரந்தாழ்ந்த நான்காம்தர அரசியல் வாதி. பா.ம.க. என்ற பிச்சைக்காரக் கூட்டத்தின் தோல்வி ராமதாசை அழ வைப்பதும், அதைப்பார்த்து நீங்கள் எள்ளி நகையாடியிருப்பதும் மனதுக்கு திருப்தியாக இருக்கிறது.
ராமதாசின் பேச்சை பார்த்தால் ஈழம் பற்றிய கூட்டம் போல் தெரியவில்லை. தேர்தல் தோல்வியின் இரங்கல் கூட்டம் போல இருக்கிறது. தனது கட்சிக்கு நிறைய ஆள் பிடிக்க புதுசு புதுசா ஆட்களை கூப்பிடுகிறார். அதற்கு தழிழ் அமைப்பு தலைவர்களும் ஒத்தூதுகின்றனர். இவர்கள் ஜெ-லலிதாவை நம்பி, தமிழ் மக்களையும் நம்ப சொல்வது வெட்க கேடானது
ராமதாஸ் மாதிரி கருங்காலிகளை பற்றி இன்னும் நாலு பக்கம் எழுதலாம். தமிழ் பெயரை சொல்லி சோறு தின்னும் பொறுக்கி கூட்டம்
நாய் நன்றியுள்ளது. அது தன் எஜமானின் காலை நக்கும்.
ஆனால் தன் இனத்தைக் கண்டால் குதறிக் கடிக்க ஓடிவரும். தமிழனும் நன்றியுள்ளவன் ஏதாவது புரிகிறதா?..
தமிழ்நாட்டில் பலர் தன்னை முற்போக்காளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் காட்டிக்கொள்வதற்காக யாரையாவது தொடர்ந்து விமர்சனம் செய்துகொண்டே இருப்பார்கள். குறிப்பாக தனக்கு அரசியல் அறிவு அதிகமாக இருப்பதாக காட்டிக்கொள்ள பா.ம.க.-வையும் மருத்துவர் இரமதாசையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். அந்த வகையைச் சேர்ந்ததே இந்த கட்டுரை…
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாருமில்லை. அதுவும் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் ஈடுபடுவர்கள் அனைவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே… கட்டுரையில் குறிப்பிட்ட நிகழ்வை விமர்சனம் செய்பவர்கள் தமிழீழ மக்களின் விடியலுக்காக தமிழகத் தமிழர்களும் தலைவர்களும் என்னதான் செய்யவேண்டும் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்…
ராம்தாஸ் மாதிரி சீசனுக்கு சீசன் நிறம் மாறாமல் இருந்தாலே போதும்
அய்யா என்று எழுதுவதே பிழை. தமிழ் படுகொலை. ஐயா என்று தான் எழுத வேண்டும். தயவு செய்து ஐ வர வேண்டிய இடத்தில அய் என்று எழுதாதீர்கள். பார்பதற்கு மிக அசிங்கமாக உள்ளது. இப்படி எழுதினால் ஐ என்ற எழுது தமிழ் வழக்கிலிருந்து ஒழிந்து போகும். உயிர் எழுது பதின்
ஒன்று என்று ஆகி விடும். ஐ என்ற உயிர் எழுத்தை ஒழித்து விட்டால் ஐ சார்ந்த மெய் எழுத்துகள் பதினெட்டும நீக்கப்பட்டு தமிழை மானபங்கம் செய்வது போல் ஆகி விடும். இதை முதலில்
இந்த “தமிழ் காக்கும் தலைவர்களுக்கு” தெரியபடுத்த வேண்டும்.
அன்புடன் பிரசாத்
பிரசாத், அது எப்படி ஐ ஓழிஞ்சு போகும்??? ஐஸ் என்ற குளிர்ச்சியான தமிழ்வார்த்தை உலகில் இருக்கும் வரையில் ஐ எழுத்துக்கு அழிவே கிடையாது.. நீங்க சொல்லிதான் அய்யா அப்புடின்னு எழுதக்கூடாதுன்னு தெரிஞ்சுகிட்டேன் ஐயா.. ரொம்ப நன்றிங்க
ராமதாஸ் பத்தி பேச யாருக்கும் லாயக்கு இல்லை , அவர் என்ன சொன்னார் என்பதை படிக்கவும் சிந்திக்கவும் நுனி பில் மெய்யும் மாடுபோல் ஒரு கட்டுரை படித்து பேசகுடாது , ப ம க கொள்கை பற்றி நாக்கு தெரிந்து கொண்டு பேசவும்
அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு …
உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு
அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!
ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்
ஜாதி வெறி கொண்ட நாய்கள் குறைத்திருக்கின்றன?
என்ன சொல்லறார் ன்னு பாருங்கடா … அதைவிட்டு காரணம் இல்லாம திட்டறீங்களே ..
நீங்கள் மனுஷனா … கருணாநிதியா ( நாயான்னு கேக்குறது பழைய ஸ்டைல் ).
வந்துட்டீயா படியாச்சீ,
நீ வந்தாதான் நானும் வருவேன்.என்னா உங்க கோட்டைக்காரன் (அதாம்ப்பா தர்மபுரிக்காரன்). பாத்து கண்ணு பென்னாகரத்துலயே மண்ணு தின்னுட்டீங்களாம். எனக்குதான் அய்யா என்ன சொல்லறாருன்னு புரியல நீனு சொல்லுறியா கொஞ்சம் விளக்கமா?
வன்னியன், படையாச்சின்னு ஏப்பா நல்லா ராமதாசுக்கு கூஜா தூக்குறீங்க, ஏப்புடி யாரு தமிழன்னு அய்யாகிட்ட இலவசமா செக்கப்பண்ணிகலாமா? பேசாம அந்த வியாபாரத்த ஆரம்பிக்க சொல்லு நல்லா ஓடும். ஈழ வியாபாரம்தான் புட்டுக்கிச்சே
இப்படி உங்களுக்கு உள்ள ஜாதி வெறி எல்லா வன்னியனுக்கு இருந்த இப்படி நீங்க பேச மாட்டிங்க அதுதான் இங்க வன்னியனுக்கு உள்ள பிரட்சனி இதே வெறி வன்னியர்கள் கிட்ட இருந்துச்சின நீ இப்ப சொல்லுற வசனம் இருக்காது என்ன செய்ய எல்லாம் வன்னியர்கள் தவறு நீங்க இப்பிட் பேச பேச வன்னரிகள் ஒற்றுமை அதிகம்தான் ஆக்கும் போகுர் அபோக்குல நீங்கள் ஒன்னு சேர்த்து வசிடுவிர்கள் மற்றவன் திங்கும்போது ஏன் நம்ம ஜாதிக்காரன் திங்க கூடாதுன்னு ஒரு என்னத்த மக்கள் கிட்ட உருவாகிவிடுவிர்கள் போல, வண்ணான் லேலோரும் பா ம க வு சப்போர்ட் பண்ணின எவனும் அசைக்க முயட்யது வட தமிழ் நாட்டுல அந்த பொறாமை தான் உன்ன போல ஆளுங்க காரது எழுதி தனிசிகிருரிகள்
Could you please use your blog to make more sense and creative.
Thanks
திரு பிரபாகரனின் ஆதங்கம் புரிகிறது.
காலம்காலமாக தமிழீழ விடுதலைக்காக போராடும் மக்கள் தமிழகத் தமிழர்களையும் தலைவர்களையும் கேட்டுவந்தது இதுதான்.
”ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தலையிடாது இந்தியாவை சும்மா இருத்திவை”
உங்களால் அது முடியவில்லை ஆனாலும்
இப்போது இது முடிந்துபோனகதை.
எஞ்சிய ஈழத்தமிழரின் உயிர்கொண்ட உடற்பாகங்கள் இன்னமும் முற்றாக அழிந்துவிடவில்லை அசைந்துகொண்டிருக்கின்றன.
இவர்களை வைத்து தமிழகமக்கள் மட்டுமல்ல இலங்கை தமிழ்மக்களும் தலைவர்களும் தங்கள் அரசியலை கோலாகலமாக தொடரலாம் தடையே இல்லை.
இருந்தாலும் மறுபடியும் தமிழகத் தமிழர்களும் தலைவர்களும் என்னதான் செய்யவேண்டும் என்ற உங்கள் கருத்திலுள்ள கேள்விக்கு பதில்தந்தாக வேண்டும்.
”ஈழத்தமிழர் இனி தலைநிமிர்ந்து எழுவதற்கு பல தலைமுறைகளை தாண்டவேண்டும்”.
இப்போது தமிழகம் என்ன செய்யவேண்டும் என்பதற்கு தமிழகமே விடைகாணவேண்டும்.
முத்துக்குமரன் என்ற அந்தப் பெரும் தமிழ்மகனை படியுங்கள் அவனும் உங்களுக்கு வழிகாட்டுவான்.
saathiya vachithaana katchi nadaththurar. pala peththa katti kittu kooti kuduththa katchi nadaththuraar?
உழைப்பையும் தியாகத்தையும் மதிக்காத சமூகம் ஒருபோதும் உருப்படாது. தன்னை உணராத தன் நிலையை உணராத சமூகம் மானங்கெட்ட அடிமை சமூகமாகத்தான் இருக்கம். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தமிழகத் தமிழர்கள்தான்.
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழீழ மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கையை இந்திய அரசின் துணையோடு சிங்கள இனவெறி அரசு நடத்தி வருகிறது. இந்த இனப்படுகொலை கருணாநிதியின் அனுமதியோடுதான் நடைபெறுகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே.
ஈழத்தில் தமிழன் செத்துமடிகிறான் என்ற செய்தியை தமிழக மக்களுக்கு சொல்வதற்குக்கூட பெரிய ஊடகங்கள், பெரிய கட்சிகள் என்று சொல்லிக்கொள்கிற யாரும் தயாராக இல்லை.
இந்தப்பணியை தன்னால் இயன்றவரை மக்கள் தொலைக்காட்சி, தமிழ் ஓசை நாளேடு, விண் தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சி போன்ற சிறிய ஊடகங்களே உணர்வோடு செய்திகளை வெளியிட்டன. அதுபோல் பா.ம.க., ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய பொதுவுடமை கட்சி, பெரியார் தி.க., தமிழர் தேசிய இயக்கம், ம.க.இ.க. போன்ற சிறிய அரசியல் இயக்கங்களே தொடர்ந்து போராட்டங்களை நடத்தின.
இவர்களின் எழுச்சியை அடக்குவதற்காகவே பெரிய கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது செய்தன.
தமிழினத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்பவர்களை கண்டிக்காமல் தன்னால் இயன்றதை செய்த அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவது வெட்கக்கேடான செயல்…
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எந்த ஈனச்செயலையும் செய்யாத அரசியல் கட்சி ஏதாவது இந்த நாட்டில் உள்ளதா? ஏன் பா.ம.க.-வை மட்டும் இழிவு படுத்துகிறீர்கள்… பா.ம.க.-வை இழிவுபடுத்துவது என்பது பின்தங்கிய மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சியை எழுச்சியை இழிவுபடுத்துவதற்கு சமம்.
கரிகாலன், இராமதாஸை விமர்சிப்பது எப்படி பின்தங்கிய மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சியை இழிவுபடுத்துவதாகும் என்பதை நீங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்
இதுவரைக்கும் தி மு க அ தி மு க இவர்களுக்கு சோம்பு தூக்கிட்டு இருந்தீர்கள் இப்பதான் பா ம க வந்தது அவர்கள் ஆட்சிக்கு வந்து எதோ ஒன்னும் பண்ணாத போல அவர்களை நீங்க விமர்சனம் என்ற பேருல உங்க வலை பன்னலுக்கு சுட சுட செய்தி வேணுமுன்னு எதையாவது விமிர்சனம் பண்ணுறது பா ம க மந்திரிகள் எவளவு நல்லதே செய்தார்கள் அத சொன்ன என்ன அவன் அப்பா வீடு கசனு கேட்பீர்கள் அதைத்தான் மற்ற கட்சிகர்ணும் த்னனுடிய திட்டம்னு சொல்லுறன், இங்க உள்ள பல பேருக்கு உண்மயுளியே கழ்புனர்ச்தன் மற்றபடி நல்லது செய்தலும் இல்லனுளும் அதை பற்றி இவர்களுக்கு கவலை இல்ல
வல்லாதிக்கத்தை நம்பி தன்னாதிக்கத்தையும் இழக்கும் இந்தியா
தமிழர்களை ஒடுக்குவதில் ரணிலும் மகிந்தனும் கட்சி பேதங்களை தாண்டி ஒன்று சேர்ந்தார்கள். கொல்லப்படும் தமிழர்களை காப்பாற்ற குரல் கொடுப்பதற்காக கூட தமிழகத்தில் கட்சிகள் ஒன்று சேர்ந்தது இல்லை.
ஈழத்தமிழன் பிரிவினையை கடந்து ஒன்றாகியதும் இல்லை.
அனைத்து இந்தியரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி:
தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்.
கீழிருக்கும் அஞ்சலை திறந்து படியுங்கள்
யார் எழுதியதென்பது முக்கியமல்ல
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=75041&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=???????+???????????+???????????????!
யார் எழுதியதென்பது முக்கியமில்லையா? பதிலுக்கு சுப்பிரமணிய சாமியின் கட்டுரை ஒன்றை நான் பதிவு செய்யட்டுமா? பிழைப்புக்கு வழியில்லாமல் பினாற்றும் நெடுமாறன் பேச்சையெல்லாம் முக்கியத்துவம் கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் இன்னும் கேடுதான் வரும்!
இவர் சொல்கிறார் “இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையைவிட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்:” என்று.
ஏன் தெரியுமா? புலிகளின் தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாத அரசியல் நெருக்கடி அவருக்கு. அவர்கள் வென்றதாக சொன்னாலும் ஊரில் எல்லாரும் சிரிப்பார்கள். எனவே தன் விருப்பப்படி கருத்தளிப்பதற்காக இதை விடுங்கள் அதைக் கேளுங்கள் என்று பேச்சு மாற்றுகிறார்.
1985 ஆம் வருடம் சிறுவனாக இவர் பேச்சைக் கேட்ட போது இவரைப் பெரிய மனிதர் என்று நினைத்தேன். இப்போது தெரிகிறது இது போல தன் தேவைக்கேற்றாற் போல் பேசி சொல்ல வேண்டியதை சொல்லாமல் மறைத்து எத்தனையோ ஈழத் தமிழர்கள் இறப்புக்கு (பொது மக்களாகவும், போரில் மாண்ட புலிகளாகவும்) இவரும் முக்கிய காரணமானவர். இவரின் துரோகமும் சுய நலமும் புரியாமல் அய்யா கொய்யா என்று கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
இராமதாசை இன்னும் ஈழப்போராட்டத்தை தனது அரசியல் லாபத்துக்காக யாரெல்லாம் யூஸ் பண்ணுகிறார்களோ ஒவ்வொருவராக கறாராக அம்பலப்படுத்த வேண்டும். இப்பொழுது செத்த பாம்பு அது இது என ராமதாசை சொல்கிறார்கள். தமிழக தலைவர்களில் யாருக்கும் சளைத்தவரில்லை டாக்டர் ராமதாசு. தமிழக அரசியல் அரங்கில் மீண்டும் காட்சிகள் மாறும். எல்லோரும் கட்சி மாறி, மீண்டும் குழைந்து கொள்வார்கள். கூட்டணி அமைப்பார்கள். ராமதாசுக்கு மக்கள் தொலைக்காட்சி மூலம் முற்போக்கானவர் என்ற பெயர் வேறு தனியாக ஒரு இமேஜை தருகிறது.
இவர்கள் எத்தனை முறை எழுந்தாலும், ஒவ்வொருமுறையும் சாத்தவேண்டும். அதில் தான், தமிழகத்தின் விடுதலைக்கான வெளிச்சம் இருக்கிறது.
யார் எழுதியதென்பது முக்கியமில்லையா? பதிலுக்கு சுப்பிரமணிய சாமியின் கட்டுரை ஒன்றை நான் பதிவு செய்யட்டுமா?
கெடுகுடி சொற்கேளாது என்பர், இதில் தமிழ்குடிமட்டும் வேறுபட்டதா? நடத்துங்கள் நன்றி வணக்கம்.
அய்யா , ராமதாஸ் அவர்களை குறிசொல்லும் நண்பர்கள் மக்களுக்கு தமிழ் உணருள்ள நல்ல தலைவர் யார என அடையாளமும் கட்டட்டுமே . குடும்பம் மட்டுமே வழவண்டும் என்று பாடுபடும் கருணாநிதியா ……………… அனைவரும் ராமதாஸ் அவர்களை எதிர்ப்ப்துக்கு முதல் கரணம் அவர் பிற்பட்ட , தாழ்த் தப்பட்ட மக்களுக்காக போராடுவது ..அவர்களுக்கான அரசியல் உரிமைகளை பெற போராடுவதுதான் . அது நடந்துவிட்டால் என்னசைவது என்று கவலைய படும் கொள்ளை குடத்திற்காக மட்டுமே
// முதல் கரணம் அவர் பிற்பட்ட , தாழ்த் தப்பட்ட மக்களுக்காக போராடுவது//
ஏயா இது உனக்கே ரொம்ப ஒவரா தெரில,,
அவன் எங்கயா BC , Scக்கும் போராடுனான்? ராமதாசுனால MBC க்கும் ஒரு வெங்காயமும் கிடைக்குல, ஊருல நாலஞ்சு கேப்மாரிங்க ராமதாசு கால கழுவி
பொருக்கி தின்னுட்டு இருந்திருப்பானுங்க அத வெச்சு BC ,Sc க்கும் போராடுனானா நியாயமா?. ராமதாசு,PMK வின் அரசியலால்
மத்த சாதி காரங்களால பள்ளி , வன்னியன்னாலே திருட்டு பசங்க ன்ற பேரு கிடைச்சு அம்மக்கள் அன்னியப்பட்டதுதான் மிச்சம்,,
ராமதாசு ஒரு நபரால்தான் நீங்க இப்ப வன்னியர்களை பத்தி பேசிக்கிட்டு இருக்க இல்லன அப்படியா அப்பிட் ஒரு ஜாதி இருக்கணு நக்கல சொல்லுவிங்க, இதுல பல பேரு கருத்துன்னு பேருல ஜாதி வெறிய அப்படியே எழுதி வெறிய தனிசிகிரர்கள், ராமதாசு என்ன சொன்னலும் குற்றம்
நல்லது செய்தலும் குற்றம் கட்சிய வளர்க்க சில சியல்கள் தவிர்க்க முடியாதது எவனும் யோகியன் இல்ல நல்ல கொல்கிய வரவேற்க கற்று கொள்ளுங்கள் விமர்சனம் தப்பு இல்ல அதக்க கழ்புனற்சில பேசுறது ஒன்னும் புண்ணியம் இல்ல நீங்க என்ன கத்தினாலும் பா ம க ஒழிக முடியாது பல வருடங்களுக்கு முன்னாடியே தனிய நின்று வெற்றி பெற்ற கட்சி இப்ப எவன் தனிய நின்னாலும் ஒரே நிலமைதான் பா ம க பல தொகுதில வெற்றி பெரும் எல்லோரும் தனிசி நின்றால்
மரண அடி நீ எதுக்கு தேவை இல்லாம இப்படி ஒரு கதை சொல்லுற உனக்கு வன்னியன் மேல உள்ள வெறிய இப்படி சொல்லுற எந்த ஊருல வன்னியன் திருடனு சொல்லுறன் நான் பல் பகுதில வாழ்ந்து இருக்கேன் எவனும் மத ஜாதிகரகளை தர குறிவ பேசுறது இல்ல ஆனால் இப்படி நெட்லதான் உங்களை போல ஆளுங்க மற்ற ஜாதிக்காரன் தப்ப கமெண்ட் எழுதுறது ஏன் என்றல் எப்படி கண்டு புடிபர்கல்னு அபப்டி உனக்கு ராமதாசு மேஅல் அக்கறை இருந்தால் உன்னுடிய கருத்தை அவருக்கு போஸ்ட் பண்ணறது எதுக்கு இப்படி நெட் ல உட்கார்துகிட்டு திட்டி டைம் பாஸ் பன்னுரின்ர்கள்
மற்றவர்களை மரியாதையை கொடுத்துகூட பேச தெரியாத நீ எப்படி தமிழ்னு சொல்லிக்கிட்டு கூட்டத்துல கோவிந்த போடுற என்னதான் உனக்கு வெறிய இருந்தாலும் ஒரு கட்சி தலைவருக்கு மரியாதையை கொடுக்கணும் அவ்ருடிய வயதுகவது மரியாதையை கொடுக்கணும் இந்த சின்ன அறிவு கூட இல்லைதான் நாட்டு மேல அக்கறை எடுத்துகிட்டு கருத்து சொல்ல வந்துட்ட என்ன கொடுமை இது சொந்த பேரு கூட எழுத பயம் இதுல வேற மரண அடி உனக்கு மரண பயம்னு வசிக்க
tholvi romba pullamba vaikkum exmple Ramdass…..
innum dass ai vimarsanam panna vendum vinavu…..
ithu elm avangalukku bottadhu……
avar Congress kku suppot ha iruntha pothu tamilzan parthy sindikka ve iali..
Olika P.M.K
உலகமே சுருங்கி போச்சு!மனசு சுருங்காம இருக்குமா? போங்கப்பா!!!!
[…] எங்கே தமிழன்? எங்கே எட்டாவது சீட்டு? ர… […]
அய்யா ராமதாஸ் பற்றி எவனுக்கும் அருகதை இல்லை. பிரபாகரனுக்கு தம்பி என்று சொல்லி கொண்டு அரசியல் நடத்தும் திருமாவளவனை பார்த்து இந்த விமர்சனங்களை சொல்லுடா நாய்களே. அய்யா நினைத்திருந்தால் கருணாநிதிகிட்ட எத்தன கோடி பணம் வேண்டும் என்றாலும் சம்பரிசிருப்பர். அனால் இந்த தமிழ் மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து நியாயமாந எதிர் கட்சியாக செயல்பட்டார். அய்யாவை இனியும் ஒருவன் குறை சொன்னால் அவன் உண்மையான தமிசனுக்கு பொறந்தவன் இல்லை……………போர்மபோக்கு பசங்களா……..
பா.ம.க ராமதாஸ் தமிழ இன போராளியா, அல்லது தமிழ்நாட்டை பிரிக்க முயலும் சாதி வெறி தெலுங்கு அரசியல்வாதியா ?
தமிழர்களை ஒன்று சேர்க்க முயல்பவர் ஒரு தமிழ் இன போராளி .
வன்னியர், இட ஒதுக்கீடு , சாதி கணக்கீடு என சொல்லி சாதி போராட்டம் மட்டும் நடத்து வது எப்படி ‘தமிழ் போராளி’ ஆக முடியும் ? இது ஒரு தமிழ் இன துரோகி . வீட்டில் பேசுவது தெலுங்கு !
இட ஒதுக்கீட்டில் யார் உள்ளார்கள் ? அனைவரும் தமிழர்களா ?
இந்தி தெலுங்கு கன்னடம் பேசும் சாதிகள் தமிழ் வேடத்தில் இடம் பிடித்துள்ளனர்.
சாலை கட்டிட திட்டங்களில் தமிழர் உள்ளார்களா ? வட நாட்டு இந்தி வந்தேறிகள் தானே ?
இப்போது தமிழ் பேசு மாநிலத்தை மூன்று தெலுங்கு பேசும் மாநிலங்களாக பிரிக்கும் துரோகி ராமதாஸ். அது என்ன லாலுவுடன் கைக்குலுக்கல் ?
இதர மாநிலங்களில் அவரவர் மொழிகள் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு உள்ளது. தமிழ் நாட்டில் தான் தமிழை வெறுக்கும் அரசியவாதி கம்மனாட்டிகள் தமிழ் என்கிற பெயரில் துரோகம் நடத்துகிறார்கள்.