Wednesday, October 16, 2024
முகப்புஅரசியல்ஊடகம்யுவகிருஷ்ணா ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?

யுவகிருஷ்ணா ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?

-

குமுதம் ரிப்போர்ட்டர்: லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?

இணையத்தில் சைபர்கிரைம் பற்றி தேடு பொறியில் வலைவிரித்தால் இலட்சக்கணக்கில் பக்கங்களும் படங்களும் கிடைக்கும். தமிழகத்தில் நடக்கும் குற்றங்களில் பீரோ புல்லிங், போலீசு-இன்கம்டாக்ஸ் வேடத்தில் வழிப்பறி, காக்காய் எச்சத்தை போட்டு குனியவைத்து பையை பறிப்பது, 500 நூறூரூபாய் தாளை போட்டு உங்களுடையதா என கவனத்தை திசைதிருப்பி வங்கியில் எடுத்த பணத்தை அபேஸ் பண்ணுவது, கவரிங் நகை மோசடி, ரியல் எஸ்டேட் மோசடி, ஓடும் லாரியில் திருவது என எண்ணற்ற திருட்டு சாதனைகள் உள்ளன. இத்துடன் விபச்சாரம் என்பதும் செல்போன், மாருதி கார் வரை விரிந்திருக்கிறது. மற்றபடி செல்காமராவில் பாலியல் மோசடிகள் என்று தொழில்நுட்பம் உதவிய வகையில் வக்கிரங்கள் வகைதொகையில்லாமல் வளர்ந்திருக்கின்றன.

ஆக மண்ணில் நடக்கும் சாதாக் குற்றங்கள், பாலியல் வக்கிரங்களை மானிடரின் இணையத்தில் செய்தால் அதற்கென்று தனி மவுசா வந்து விடப்போகிறது? அப்படி ஒரு மவுசை உருவாக்குவதற்காக குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை, பதிவுலகில் நொறுக்குத்தீனி எழுத்தில் கொடிகொட்டிப்பறக்கும் லக்கிலுக்கை, யுவகிருஷ்ணா என்ற பெயரில் மவுசின் உதவியால் சைபர் கிரைம் என்ற தொடரை எழுதப் பணித்திருக்கிறது. இதற்கு பதிவுலகில் பல அப்பாவிகள் வாழ்த்து வேறு தெரிவித்திருந்தார்கள். எல்லாம் நம்ம லக்கி சுஜாதா, சாருநிவேதிதா மாதிரி ஆகட்டும் என்ற நல்லெண்ணம்தான். நம்மைப் பொறுத்தவரை இதற்கு அனுதாபம் கூட தெரிவிப்பதற்கு லாயக்கானதில்லை.

முதல் இரண்டு தொடரை படிக்கும்போதே லக்கியை கவனிக்க வேண்டுமென்று நினைத்து அப்புறம் சரி விட்டுத் தொலைப்போம் என்று மறந்த நேரத்தில் தனது பதினோராவது பாகத்தில் மீண்டும் பலான விசயத்தை  லக்கி தொட்டிருப்பதால் அதைப் பற்றி எழுதவில்லையென்றால் அந்த மகரகுழத்தாள் கூட மன்னிக்கமாட்டாள்!

லக்கியை வைத்து சைபர் கிரைமை எழுதுவதற்கு குமுதம் ஆசிரியர்களும், பின்னாளில் இந்த தொடரை நூலாக வெளியிட வாய்ப்புள்ள பதிப்பக ஓனரும் பாடத்திட்டத்தை தயார் செய்திருப்பார்கள் போலும். அதன்படி செக்ஸ் மேட்டரை தூக்கலாக காண்பித்து அதற்கு ஒரு ரிலீஃபாக பொருளாதார மோசடிகளையும் வைத்து எழுத தீர்மானித்திருப்பார்கள் என்று தெரிகிறது. இரண்டு தொடர்களுக்கு பின்னர் நைஜீரியா மோசடிகள் எல்லாம் எழுதப்பட்டாலும் அது வாசகர்களிடம் எடுபடவில்லையோ தெரியாது. பின்னே இலட்சத்திலும் கோடியிலும் நைஜீரியா பிளேடு கும்பலிடம் ஏமாறுவதற்கு கே.ஆர்.அதியமானது நண்பர்களாக இருக்கும் முதலாளிகளுக்குத்தானே வழியிருக்கிறது. எட்டு ரூபாய் ரிப்போர்ட்டரை வாங்கி மேயும் சாதரணர்களுக்கு அந்த போர்ஜரி வேலைகள் அவ்வளவு ருசிக்காது என்பதே அவர்களது பொருளாதார யதார்த்தம்.

ஆனால் இந்த சாதரணர்களை சுண்டி இழுக்கும் மகிமை சிட்டுகுருவி லேகிய சமாச்சாரங்களில்தானே இருக்கிறது? முதல் தொடரில் குற்றவாளிகள் என்றால் பிளேடு பக்கிரி போன்று இருக்கத் தேவையில்லை கோட்டு சூட்டு போட்டுக்கூட குற்றங்கள் செய்வார்கள் என்று ஆரம்பித்து அப்புறம் இணையத்தில் தொழில்நுட்பத்தின் உதவியால் நடக்கும் மோசடிகளைப் பற்றி ஒரு பில்டப் கொடுத்துவிட்டு பிறகு சரியாக ‘மேட்டருக்கு’ வருகிறார் லக்கி.

திரிஷா குளியலறை சி.டி முதல் விசயம்.

ஒரு வரியில் சொல்ல வேண்டிய விசயத்தை முழு நீள நீலப்படமாக வருணிக்கிறார் லக்கி. வந்தாள், ஆடையைத் துறந்தாள், காமரா அலைகிறது என்று அந்த பொழிப்புரை படிப்பவர்களின் நாக்கில் அஜினோமோட்டோ கணக்காய் எச்சிலை ஊறவைத்து அப்புறம் திரிஷாவின் அம்மாவின் மறுப்பு அதுவும் அந்த வருண்ணைகளுக்கு பொருத்தமாய் திரிஷா அப்படி ஆடைகளை வீசமாட்டார், பாத்டப்பில்தான் குளிப்பார், அவரது பாடி லாங்குவேஜ் எனக்கு தெரியும் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சங்கதிகளை கூறி எல்லாம் முடிந்த பிறகு இந்த சைபர் குற்றங்களை தடை செய்யமுடியாது, மார்ஃபிங் தொழில் நுட்பத்தில் தலையை வெட்டி மாற்றலாம் என எல்லாம் அட்சுரசுத்தமாய் காயத்ரி மந்திரம் போல ஓதப்படுகிறது. அப்புறம் இந்த சி.டி, மொபைல் வழியாக எப்படியெல்லாம் பரவியது என விளக்கி விட்டு அடுத்த மேட்டருக்கு போகிறார்.

அது சிம்பு, நயன்தாராவின் உதடைக் கவ்விய படமாம். அதையும் விலாவாரியாக விவரித்துவிட்டு நயன்தாரா இதைப் பற்றி சைபர் கிரைமில் புகார் தெரிவிக்கவில்லை என்று வருத்தப்பட்டு முடித்து விட்டு மச்சான் சி.டிக்கு வருகிறார்.

இதில் நமீதா உடலமைப்பு கொண்ட பெண் இரு இளைஞர்களிடம் உறவு கொள்வது அரைமணி நேரம் ஓடுகிறதாம். நமீதா உடலமைப்பு ரசிகர்களுக்கு மனப்பாடமென்பதால் இந்த பெண்ணை நமீதா என்றே நம்புவார்கள் என கண்டுபிடிக்கிறார் லக்கி. இதைப்படித்து விட்டு உசிலம்பட்டியிலோ, மடிப்பாக்கத்திலோ மச்சான் சி.டி தேடி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் படையெடுத்திருப்பார்கள் என்பது நிச்சயம். இத்தனைக்கும் பிறகும் இந்த படங்களை வெறிப்பதற்கு நாக்கை தொங்கப்போட்டு அலையும் ஆண்களின் வக்கிரத்தை மருந்துக்கு கூட லக்கி கண்டிக்கவில்லை. அவரது நோக்கமே இவற்றை அறியாதவருக்கு அறிமுகம் செய்வதுதான், போர்னோ கிரைமை அறிமுகம் செய்கிறோம் என்ற பெயரில் ஆவலை உண்டுபண்ணுவதுதான் எனும்போது என்ன செய்வது? மற்றபடி இதெல்லம் சைபர் குற்றங்கள் என அவர் பொத்தாம் பொதுவாக கண்டிக்காமல் இல்லை. தலைப்பில் ஒழுக்கம் குறித்த எச்சரிக்கை, உடலில் ஒழுக்க மீறலை ஆவலுடன் கற்றுக் கொடுக்கும் சாமர்த்தியம். லக்கயின் இரட்டை வேடம் நன்றாகத்தான் பொருந்துகிறது!

இரண்டாவது தொடரில் செக்ஸ் ஆசைக்காக அலையும் மேட்டுகுடி ஆன்டிகள் என்று தூண்டில்போட்டு பணத்தை கறக்கும் கும்பலைப் பற்றி ஸ்டெப் பை ஸ்டெப்பாக விவரித்து வாசகர்களை எச்சரிக்கிறார். படிப்பவர்கள் இது போன்ற தூண்டில் புழுக்களிடம் சிக்கக்கூடாது என்ற நல்லெண்ணம்தான். ஐயா லக்கி அவர்களே இந்த மேட்டுக்குடி நடுத்தர வயது பெண்களை பிரச்சினை இல்லாமல் அனுபவிக்கத் துடிக்கும் ஆண் மனதின் அலைபாயும் எண்ணங்களை பற்றி இலேசாகக் கூட இடித்துரைக்க தோணவில்லையே ஏன்?  பாலியல் ஒழுக்கத்தில் தனிப்பட்ட வாழ்வில் கற்பையும், பொதுவாழ்வில் விபச்சாரத்தையும் போற்றும் பார்ப்பனியத்தின் போலித்தனமான சமூக மதிப்பீடுகளை வைத்து காமத்தை இரகசிய உலகில் முடிவில்லாமல் ருசிக்க நினைக்கும் ஆண்களைப் பற்றியும் அவர்களது இரட்டை வேடத்தைப் பற்றியும் நோக்கினால்தானே இதில் பார்க்கும் குற்றவாளிகளை குறைந்த பட்சம் தமது பலவீனங்களை பரிசீலிக்க வைக்க முடியும்.

அதனால்தான் சொல்கிறோம் இந்த தொடர் சமூக ஆய்வல்ல, அதன் பெயரில் அறிமுகப்படுத்தப்படும் போர்னோதான் இதன் ஆன்மா. படிப்பவர்களின் மலிவான இச்சையை தொட்டுச் சொறிந்து பத்திரிகையின் எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ளும் சீப்பான தந்திரம்தான் இந்த சைபர் கிரைம்.

இதன்பிறகு பொருளாதார மோசடிகள் பக்கம் திரும்பிய லக்கி திரும்பிய வேகத்திலேயே யூ டார்ன் அடித்து மீண்டும் போர்னோ பக்கம் வந்தரா, வரவழைக்கப்பட்டாரா என்பது தெரியாது. ஆனால் லக்கி என்ற சூப்பர் மார்க்கெட்டில் எது வேண்டுமென்று கோரினாலும் அந்த சூப்பர் மார்க்கட் திருப்தி செய்யும் என்ற உண்மை நமக்கு தெரியவேண்டும்.

பதினோராவது தொடரில் சபிதா பாபியின் படக்கதையை படம் பார்ப்பவர்களுக்குக் கூட போரடிக்காத விதத்தில் எழுதுகிறார் லக்கி. பாபி என்றால் இந்தியில் அண்ணியாம். இந்த இந்தி அண்ணி செக்சுக்காக ஏங்கி வீட்டுக்கு வரும் சேல்ஸ்மேன் முதலான இளைஞர்களை அனுபவிக்கும் உணர்ச்சிப் போராட்டத்தை காமிக்ஸ் படக்கதையாக வெளியிடப்பட்டு இந்தியாவில் பெரும் வெற்றி பெற்றதாம். உயிருள்ள போர்னோ படங்கள் மவுசைக் கிளிக்கினால் கொட்டும் நெட்டில் இந்த உயிரற்ற ஓவியங்கள் வெற்றி பெற்றது எப்படி என்ற ‘சமூக ஆய்வை’ லக்கி அருவருப்பின்றி விளக்குகிறார்.

நீலப்படத்தில் எல்லாம் அவுத்துப் போட்டு சட்டுனு ஜோலியை முடிப்பதால் கிக் இல்லையாம். கிக் குறித்து வாத்ஸ்யானர் கூட இப்படி யோசித்திருக்க முடியாது. படக்கதையில் சபீதா முதல் ஷாட்டில் முழுசாக முக்காடு போட்டுத்தான் அறிமுகமாம். அப்புறம் உணர்ச்சிகளின் ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப உடையும் குறையுமாம். நீலப்படத்தில் காமார பார்க்காத கோணங்களையும் வாளிப்புகளையும் இந்த படத்தில் ஓவியர் த்தரூபமாக வரைவதால் இக்கதை பல்லாயிரம் ஹிட்ஸாக வெற்றி பெற்றதாம்.

போர்னோ தளங்கள் இந்தியாவில் இயங்குவதற்கு தடை இருப்பதால் வெளிநாடுகளில் வைத்து நடத்தப்படுகிறதாம். டாக்டர் பிரகாஷ் புழலில் இருந்தாலும் அவரது படங்கள் இன்னும் உயிர்வாழ்கிறது என ஒரு போனஸ் செய்தியையும் லக்கி வாசகருக்கு தருகிறார். அப்போதுதானே பிரகாஷ் தளத்தின் படங்கள வாசகர்கள் ஆவலுடன் தேட முடியும். பிறகு சபிதா தளம் தடை செய்யப்பட்ட பிறகு அதன் உரிமையாளர் வெளிஉலகிற்கு தெரியவர என எல்லா சங்கதிகளையும் மர்மங்களை கட்டவிழ்க்கும் சுவாரசியத்துடன் தருகிறார். ஆகா பாலுணர்வு காமிக்ஸ் படக்கதை கூட கிக்கைத் தரும் போல என இந்நேரம் லக்கியின் புண்ணியத்தில் பல நூறு கைகள் கூகிலில் சபிதாபாபியைத் தேடிக் கொண்டிருக்கும். அந்தக் காலத்தில் சாண்டில்யனின் வாழத்தண்டு தொடை கதாநாயகிகளை வேறு வழியின்றி ருசித்த பெரிசுகளைப்போல இன்றைய இளசுகளுக்கு சபிதா அண்ணி. இரண்டும் ஓவியம்தான் என்றாலும் ரசனை மாறவேயில்லையே.

மற்றபடி தானும் போர்னோவை கண்டிப்பதாக பதிவு செய்யும் சடங்கிற்காக அரபு நாடுகளில் போர்னோ சைட்டுக்களை தடை செய்திருப்பதை ஆச்சரியத்துடன் முன்மாதிரியாக குறிப்பிடுகிறார். ஆனால் மக்களுக்கு மட்டும் காமத்தடை விதித்த ஷேக்குகளின் மாளிகைககளில் உள்ள டிஷ் ஆண்டாடனாக்கள் டிரிபிள் எக்ஸ் சானல்களை 24 மணிநேரமும் வழிய விட்டுக்கொண்டுதானே இருக்கிறது. இதே அரபுஷேக்குகள்தான் தமது பணத்திமிரினால் சிறுமிகளை மணப்பது முதல் எல்லா வக்கிரங்களையும் அரங்கேற்றுவதில் முன்னணி வகிக்கிறார்கள். பணக்காரர்களுக்கு வக்கிரத்தின் எல்லா வகையும் அனுபவிக்கலாம், ஏழைகள் செய்தால் அவை குற்றமென்பதுதான் அரபு நாடுகளின் விதிமுறை. இதையும் தவறாக குறிப்பிடும் அளவுக்கு லக்கியின் சமூக அறிவு போர்னோ படத்திற்கு மேலே வரமாட்டேன் என்கிறது.

இப்படி இன்றைய இளையோர் உலகம் இன்பத்தில் நீடித்திருப்பதைத் தவிர வேறு நோக்கமில்லை என்று இந்த தொடரைப் பார்த்து இன்னும் என்னவெல்லாம் அறிமுகம் செய்வார் என்று காத்திருக்கும் இதயங்களை வைத்து ரிப்போர்ட்டரின் பிரதிகள் சில ஆயிரம் கூடியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதற்கிணையாக ஜூனியர் விகடனில் நிருபரின் டயரிக் குறிப்பு என்ற பெயரில் சினிமா போர்னோ கிசுகிசு நடையில் பிளந்து கட்டிக் கொண்டிருக்கிறது. இப்படி நீயா, நானா என்ற போட்டியில் லக்கி ரிப்போர்ட்டரின் பங்கை வெட்கமின்றி நிறைவேற்றி வருகிறார்.

நண்பர்களே, பாலியல் மோசடிகள் அன்றாடம் கொலைகளிலும், அவலத்திலும் நடக்கும் நாட்டில் இந்த பிரச்சினைகளைப் பேசுவோர் உண்மையில் எதைப் பற்றி பேச வேண்டும்? கள்ள உறவுக்காக ஆத்திரத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணையோ, ஆணையோ கொலை செய்வது கூட பிரச்சினை இல்லை. அதை கள்ளக்காதலுக்காக கொலை என்ற தலைப்பில் கதையை கொலை செய்ய முடியாத கோழை கள்ளக்காதல் ஆர்வலர்களிடம் கேவலமாக படிக்க வைக்கிறார்களே அந்த தினசரிகள்தான் குற்றவாளிகள். சினிமாவில் சதையைக் காட்டி, தொலைக்காட்சியில் கள்ளக்காதல் ஒன்றும் கடினமல்ல என்று நெடுந்தொடரில் கற்பித்து, இப்படி ஊடகங்கள் எல்லாம் இயல்பான காமத்தை பிரம்மாண்டமாக வெறியூட்டி அலைய வைக்கின்றன.

இதுவே மேற்கத்திய நாடுகளில் இன்னும் பல்வேறு வகைகளில் நடந்து வருகிறது. ஆக பாலியல் பிரச்சினை பற்றி அதில் கணத்தில் தடுமாறி பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்ளும் மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு ஒரு நியாயமான முயற்சி என்பதே இந்த ஊடகங்களை அம்பலப்படுத்துவதில்தான் ஆரம்பிக்க முடியும். மாறாக அந்த கயமைத்தனத்தில் இணைந்து கொண்டு சைபர் கிரைம் என்ற பெயரில் அதைப் பற்றி தெரியாதவர்களுக்கு இணைய போர்னோக்களை கா(ர்)ம சிரத்தையுடன் கற்றுக் கொடுக்கும் வேலையைத்தான் லக்கி, ரிப்போர்ட்டரின் ஆணைக்கிணங்க ஊதியம் வாங்கிக்கொண்டு செய்கிறார். பெண்ணுடலை குதறி தின்னும் பண்டமாக கருதும் ஆணின் மனசாட்சியை இந்த தொடர் ஒருபோதும் உலுக்கப் போவதில்லை. மாறாக அப்படி வெறியுடன் தின்னுவதற்கு நூற்றுக்கணக்கான புதிய முறைகளை லக்கி பக்திப் பரவசத்துடன் அறிமுகம் செய்கிறார்.

சும்மா வெட்கப்படாதீங்க சார் என்று நடிகைகளின் அங்கங்களை தெரிவிக்கும் படங்கள் லக்கியின் பிரபலத்திற்கு ஒரு முக்கியமான காரணமென்றால் யாராவது அதை மறுக்க முடியுமா? அதை வெறும் நகைச்சுவை என்றே பலரும் கருதுகிறார்கள். இப்போது ரிப்போர்ட்டரில் லக்கியின் கைங்கரியத்தை பார்க்கும் போது இனிமேலும் அதை வெறும் நகைச்சுவை என்று கருத முடியாது. ஆனால் லக்கி அவர்களே! இப்படி ஒரு பெண்ணுடலை ஆணின் வக்கிரத்திற்கு இரையாக்குவதன் மூலம் நீங்கள் முழு பெண்ணினத்தையும் கேவலப்படுத்துகிறீர்கள். உங்களுக்கு தமிழ்மொழி எனும் அழகான பெண் குழந்தை பிறந்ததற்கு பல வாசகிகள் பாசத்துடன் அண்ணாவிற்கு வாழ்த்து தெரிவித்ததையும் பதிவு செய்திருக்கிறீர்கள். அத்தகைய பெண்களுக்கு நீங்கள் எழுதும் போர்னோ கிரைமை சமர்ப்பணம் செய்யுங்கள் லக்கி! SHAME ON YOU !!

 

  1. பேமஸாகனும்னு முடிவு பண்ணீட்டீங்க , அடுத்து லக்கிலுக்கா ?

    ஏன் நீங்கள் சகீலா பற்றி ஒரு பதிவு போட்டு இன்னும் பேமஸாக கூடாது ?

    அண்ணே , உங்க பு,ஜவில் ஈராக்கில் பெண்கள் கற்பழிப்பு என்ற செய்திக்கு நீங்கள் போட்ட ஆபாச படங்களைவிடவா லக்கியுடையது ?

    அந்த படங்களை மறுபிரசுரம் இங்கே இணையத்தில் ஏற்றுங்கள் , எது ஆபாசம் என மக்கள் சொல்லட்டும் .

    கிளுகிளு பக்கங்களுக்கு நாங்கள் எப்படி லக்கியின் தளம் போகிறோமோ அதே போல் வக்கிர எழுத்துகளை படிக்க வினவு போன்ற கம்யூனிச கதறல் தளங்களுக்கு போகிறோம் .

    செத்துப் போன சித்தாந்ததுக்கு ஜிந்தாபாத் அடிக்க வேலையற்ற வீணர்கள் சிலர் .

    அசுரனே திருந்தி பன்னாட்டு நிறுவனத்துக்கு சொம்பு தூக்க போயாச்சாம் , இவங்க வந்துட்டாங்க லக்கியை குறை சொல்ல

    • புதிய கலாச்சாரத்தில் வந்த ஈராக் சிறைக்கொடுமை படங்களுக்கும், லக்கிலுக் மற்றும் குமுதம் குழாம் வெளியிடும் படங்களுக்கும் உள்ள ஒப்பீடு இருக்கிறதே! எதிரி கூட இப்படி கேவலமாக சொல்லமாட்டார்கள். மதி குழம்பி போச்சோ!

    • ஆமான்டா! ஈராக்கில் பெண்களை அமெரிக்கர்கள் சித்ரவதை செய்த படங்கள் மட்டுமல்ல கயர்லாஞ்சியில் பிரியங்காவை ஆதிக்க சாதி வெறியர்கள் பாலியல் வல்லுரவால் கொன்ற படம், மணிப்பூரில் ‘ இந்திய இராணுவமே எங்களையும் பாலியல் பலாத்காரம் செய்’ என தாய்மார்கள் நடத்திய நிர்வாண போராட்ட படம், இவைகளை கூடத்தான் வெளியிட்டோம், இதையெல்லாம் பார்த்தால் உனக்கு பாலுணர்வு தூண்டப்படுகிறதா, சைக்கோவாடா நீ?

      • அதிலென்ன சந்தேகம் நம்ம ஜெயமோக்கன் கதையையின் வெறியன் & அவருக்கு பிரஷ்ஷா இருக்கும் இந்தியாவின் நேரடி மதிக்குட்டி வாரிசு லூசா , சைக்கோவா இருக்கக்கூடாதா என்ன?

    • வினவின் எல்லா பதிவுகளையும் எதிர்க்க வேண்டும் என்றே கங்கணம் கட்டியிருக்கின்றீர்களோ!சிங்கள வெறியர்கள் ஈழப் பெண் போராளிகளை ஆபாசமாக எடுத்த வீடியோ பதிவுகளையும் பாலுணர்வு கண்ணோட்டத்துடன் பார்த்தீரா. இதிலிருந்து நீர் எப்படிப்பட்டவர் என அறியமுடிகிறது.

    • மதி மாதிரியான கொசுக்களின் புலம்பல், சலும்பல் களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பதில் சொல்ல வேண்டியது இல்லை. கொசுக்கள் அவ்வப்போது கடிக்கும். புகை போட்டோ, வில்லை வைத்தோ அதை அழிக்க முடியாது. ஓங்கி ஒரு அடி கொடுங்கள். போதுமானது.

  2. லக்கி தன் எழுத்து திறமையை தவறாக பயன்படுத்துறார். தமிழ் பதிவுலகில் தவறான முன்மாதிரியாக விளங்குகிறார்.

  3. இப்பவே போய் ரிப்போர்ட்டர் வாங்கி படிக்கிறேன். மிக்க நன்றி தோழர்

  4. லக்கியுக் கின் மொக்கை மற்றும் ஜில் ஜில் எழுத்தும் அவர் சேர வேண்டிய குட்டைகளான குமுதம் மற்றும் கிழக்குப் பதிப்பகத்தில் கச்சிதமாக விழுந்திருக்கிறார். அவருடைய வலைத்தளம் 10 லட்சம் ஹிட்டுகளுக்கும் மேலான ஹிட்டுகளுக்கும் காரணமானவர்களை நினைத்தால் தான் இப்பொழுது கவலையாக இருக்கிறது.

  5. குமுதம், ஆனந்த விகடன் மஞ்சள் பத்திரிக்கைகள் ஆகட்டும், லக்கி போன்ற மஞ்சள் பதிவர்கள் ஆகட்டும், அவர்களின் தவறான போக்கை கண்டிப்பது தவறல்ல.

    தெரியாம செஞ்சா திருத்திகிடலாம். தெரிஞ்சே செஞ்சா நாம அத ஒதுக்கிடலாம். அவ்வளவு தானே மதி இண்டியா.

  6. ஒரு கட்டுரை 360 டிகிரி அதாவ்து அனைத்து கோணத்திலும் பார்க்கபட வேண்டும்..
    அதன் அடிப்படையில் ஒரு 90 டிகிரி இந்த கட்டுரையில் மிஸிங்க்..தொடர் முடிவடையவில்லை, அத்னால் முழு தொடர் வெளிவந்த பின் தான் தொடரின் போகை பற்றிய விமர்சனம் சரியாக் இருக்கும்…

    இப்பொழுது வரை வரும் தொடரில் ஆபாச விவரிப்புகளை ’ஒரு வரியில் சுருக்கலாம்’ என்கிறீர்கள் அது நிச்சயம் ஏற்றுகொள்ளபட வேண்டியது தான்.. மற்றபடி எது ’ஆபாசம்’ என்பது எப்பொழுதும் அவரவர் பார்வை சம்பந்தபட்டது.. இனி வரப்போகும் பின்னூட்டங்களும், கருத்துகலும் தான் மீதியை சொல்ல வேண்டும்… பார்க்கலாம்..

    • அக்னிபார்வை,

      ஆபாசம் எது என்பது அவரவர் பார்வை சம்பந்தப்பட்டது என்றால் ஒரு அயோக்கியன் எட்டு வயது சிறுமியை பாலுணர்வு வெறியுடன் பார்த்தால் அது அவன் உரிமை என மதிப்பீர்களா? ஆபாசத்தில் நாம் கருதத்தக்க பிரச்சினை எது என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். எல்லா ஊடகங்களும் லக்கியின் இந்த தொடரும் பெண்ணுடலை பூதகரமான கவர்ச்சிப் பிண்டங்களாய் ஆண்களின் மனதில் விசமாய் விதைக்கிறது. இந்த ஆண்கள் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி நம்மைப் போல பெண்களும் மனிதர்களே என உணரவைப்பதே நமது அக்கறையாக இருக்க முடியும். ஆனால் ஊடகங்களோ இதற்கெதிராக திட்டமிட்டபடி போதையை ஏற்றி வருகிறார்கள். ஆகவே பாலுணர்வு குறித்த ஜனநாயகத்தை யதார்த்தத்துடன் இணைத்துபேசுங்கள். அப்போதுதான் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது உங்களுக்கே விளங்கும்

      • இல்லை மீண்டும் நான் அதையே தான் சொல்கிறேன் ஆபாசம் என்பது அவரவர் பார்வை சம்பந்தபட்டது… நீங்கள் சொல்லியது போல் ஒரு அயோக்கியன் எட்டு வயது சிறுமியை பாலுணர்வு வெறியுடன் பார்த்தால்.. என் பார்வையில் அது தண்டனைக்குறிய குற்றம் அவன் பார்வையில் அது கேளிக்கை, குழந்தையின் பார்வையில் அது மிககொடூரம்.. இதை ஏன் முன் வைத்தேன் என்றால் சாதரணமாக எழுதும் விடயம் கூட, ஒருவர் படிக்கும் போது தவறாக் புரிந்துகொள்ள வாய்பிருக்கிறது.. அதனால் தான் முடிக்கும் பொழுது இனி வரும் கருத்துக்கள் தான் பல விடயங்களை நம் முன் வைக்க போகிறது என்று எழுதியிருந்தேன்.. மற்றப்டி நான் எங்கும் ஆபாசத்தை உரிமை என்றோ, அதை சரி என்றோ சொல்லவில்லை….

        சரியாக சொன்னால், பாய்ஸ் திரைப்படம் பெரும்பாலான இளைஞர்களுக்கு கேளிக்கையாக தெரிந்த அந்த திரைப்படம் பெரும்பாலான பெண்களுக்கு எரிச்ச்லை கொடுத்தது அத்னால் அந்த படத்தை பற்றி அனைவரின் பார்வையையும் பதிய வைத்த போது படைபாளிகள் தங்களின் தவறை உணர்ந்தனர் (அடுத்த படத்தில் அதயே வேறுவிதமாக செய்த போது பலர் அதை கண்டுகொள்ளவில்லை)…

      • அக்னி, இப்போதே விமர்சனம் செய்தால்தானே தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும் – தவறு என்று உணருகின்ற பட்சத்தில்- மற்றபடி லக்கி எழுதுவது ஒரு நாவல் அல்லவே முடிவு வரை காத்திருக்க, செய்தி தொகுப்பு/ விமர்சனம் தானே, எதை பிரதானமாக எப்படி எழுதுகிறார் என்பதுதானே முக்கியம்… விமர்சனமும் மற்றதை பற்றியல்ல பாலியல் குற்றங்களை பற்றி எழுதும் போது அதை ரசிக்கதக்கத்தாக எழுதுவது தவறு என்பது தானே… இதில் உங்களுடைய முரண்பாடு எங்கே வருகிறது

      • தோழர் அர டிக்கட்,

        ///இப்பொழுது வரை வரும் தொடரில் ஆபாச விவரிப்புகளை ’ஒரு வரியில் சுருக்கலாம்’ என்கிறீர்கள் அது நிச்சயம் ஏற்றுகொள்ளபட வேண்டியது தான்.. /// நானும் உங்கள் கருத்தை தான் சொல்லியுள்ளேன், எனக்கு முரண்பாடில்லை ..என்ன ஒரு வேலை இனி வரும் நாட்களில் அந்த கட்டுரை திசை மாறியிருக்கலாம் என்ற ஊகத்தில் தான் முழு தொடருக்கு பின் விமர்சனம் எழுதியிருக்க்லாம் என்றேன்…

        ம்ற்ற விடயங்களை லக்கியும் ரிப்போர்ட்டர் இதழும் தான் தீர்மானிக்க வேண்டும், வினவு இதை ரிப்பொர்ட்டர் இதழுக்கு மின் அஞ்சல் செய்தால் சரியாக இருக்கும் என தோன்றுகிறது…

      • அக்னி சொல்வதை விரித்து பார்த்தால் “அவரவர் செயலுக்கு, அவரவர்களுக்கு ஒரு நியாயம் உண்டு” என புரிதல் வருகிறது. ஹிட்லருக்கும், மோடிக்கும், ராஜபக்ஷேக்கும் அவர் தம் தரப்பு நியாயங்கள் உண்டு..

        ஆனால் அருமை அக்னி அவர்களே…. அந்த மாதிரியான நியாயங்களை,
        அவர்களின் உரிமை என்று எம்மால் ஏற்க ஏலாது. பெறும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்வை முன்னேற்றும் எதையும் ஏற்க முடியும்.
        அழிக்கும் / சீரழிக்கும் எதையும் எதிர்த்து நிற்போம்.

        அவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்தொழிப்போம்.

        இதுவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம். பாட்டாளி வர்க்க ஜனநாயகம்.

      • அவரவர் செயலுக்கு அவரவர் நியாயம் கற்பிப்பார் என்பதை சொன்னது உண்மை தான் ஆனால் அது அவர்களைன் உரிமை என்று சொல்லவில்லை.. அழித்தல் வேலையை செய்யும் பொழுது அதை எதிர்பதும் நியாயம் ஆனல் அதற்க்கு உரிமை இருக்கிறது என்னும் சராசை நியதியை தான் கடைபிடிக்கிறேன்… ஆனால் எல்லாருக்கும் அவர்களின் கருத்தை சொல்லவும் உரிமை இருக்கிறது அதை அளித்து விவாதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்…

      • இணையத்தில் எத்தனையோ தளங்கள் (தமிழ், இங்கிலீஷ் என பல மொழிகளில்) ஆபாச செய்தியை, புகைப்படங்களை வெளியிடுகிறது. இதில் லக்கிலுக் பதிவை தேர்ந்தெடுத்து நீங்கள் பதிவு போடவேண்டிய அவசியம் புரியவில்லை… Could be your “Paarpana Phobia?” அல்லது நாட்டில் வேலை வெட்டி இல்லாமல் நிறைய பேர் இருக்கிறோம் (என்னையும் சேர்த்துதான்.. இந்த வெட்டி பதிவிற்கு ஒரு மறுமொழி செய்கிறேனே. )

  7. குமுதம் ரிப்போர்டர் கேட்பதைத்தான் லக்கி எழுதி கொடுக்கிறார்.
    எழுதிய கட்டுரைகள் திருத்தம் செய்யப்படுவது உண்டு.

    இப்பொழுது உங்கள் இடுகையை படித்த பிறகு தான் எனக்கு மச்சான் சி.டி பற்றி தெரியும். அப்படி நான் கெட்டு போனால் நீங்கள் தான் பொறுப்பு.

    • லக்கி,
      நீங்கள் எழுதும் தொடரை பல்லாயிரக்கணக்கானோர் படிக்கிறார்கள். பதிவுலகம் போல சில நூறூபேர்களுக்குள் அடங்கிவிடும் விசயமல்ல. அந்தப் பொறுப்புண்ர்விலிருந்துதான் இதை நாங்கள் எழுதியிருக்கிறோம். ஆனால் இதையும் நீங்கள் காமடியாகவோ, இல்லை எளிதாகவோ புறக்கணிப்பது வருத்தத்தை அளிக்கிறது. எழுதப்பட்ட விமரிசனங்களுக்கு உங்களுடைய பதிலைத் தருவதே சரியாகும். மற்றபடி நீங்கள் ஒன்றும் சிறுவனல்ல. வாரமிருபத்திரிகையில் ஒரு அதிரடி தொடர் எழுதும் அளவு பெரியவர். எங்களைப்போன்ற சிறியோர்களின் கேள்விகளுக்கு பதில் தருவதுதான் பெரியவர்களுக்கு அழகு.

    • மிகத்தேவையான கட்டுரை,

      வித்தககவிஞர்கள் என்ற சாக்கடையில் லக்கி வீழ்ந்து விடக்கூடாது(!) என்பது விருப்பமாக இருந்தாலும் அவர்தான் வழியினை தேர்ந்தெடுக்க வேண்டும்.(இனி மேல் தான் விழனுமா என்ன என கேட்கலாம் சும்மா ஒரு டச்சிங்க் ). பெண்ணின் உடலை வைத்து காமகளியாட்டங்களில் ஈடுபடுவோருக்கும் ஆபாச எழுத்தாளர்களுக்கும் வித்யாசம் இருப்பதாய் தெரியவில்லை.

      பல படைப்பாளிகள் இருக்கிறார்கள் எதையுமே சிறப்பாக வெளிப்படுத்துவார்கள் கதையாக,கவிதையாக,கட்டுரையாக,இசையாக இப்படி பல வழிகளில்,கண்ணதாசன் வயிரமுத்தன்களி¢ன் கவிதைகளை படித்து பலரும் இப்படி சொல்வதுண்டு”எதை கொடுத்தாலும் அந்த ரெண்டு பேரும் அப்படியே கவிதையா வடிப்பாங்க” அப்படித்தான் “ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே” என்று பாட்டெழுதிய வைரமுத்து தான் “ஆண் தொடாத பெண்மையா” என்றும் எழுதினார்.ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்புக்களை உண்மையாகவே சிந்தித்து படைக்கின்றான் எனில் எப்படி ஒரே கையால் ஏழையின் வறுமையை பற்றியும் , முதலாளித்துவத்தின் பெருமையைப்பற்றியும் படைக்க முடிகின்றது, அவன் முதலாளித்துவத்தின் பெருமையை படைப்பதற்க்ககவே ஏழையின் வறுமையை படிக்கின்றான் . எந்த படைப்பாளியும் தன் வர்க்கத்துக்காகவே சிந்திக்கின்றான் அவனின் தேவைக்கு ரசிப்புக்கு ஏழையின் கண்ணீரும் தேவைப்படுகின்றது என்பது தான் உண்மை.

      அதே போல பெண்ணை பொருளாய் மாற்றிய அதே ஆணாதிக்கம்தான் அப்பெண்ணை வரம்பற்ற முறையில் நுகரக்கோருகிறது. தன்னுடைய சுய இன்பங்களை மக்களுக்கு அளித்து அதன் மூலம் பொருளீட்டும் பலரும் எழுத்தாளர்கள் என்றே சொல்லிக்கொள்கிறார்கள். தன்னுடைய தேவைக்காய் ஒரு சரக்குப்பொருளாய்(பத்திரிக்கை விற்பனையைத்தூண்டும்) பென்ணின் மீதான பாலியல் துன்புறுத்தலை இவர்கள் ஆவலோடு வரவேற்கிறார்கள்.

    • லக்கி, நீங்க ஒரு தேர்ந்த எழுத்தாளராவதற்கு எல்லா திறமைகளையும் உடையவர், துடிப்புடன் எழுதக்கூடிய நடை, நகைச்சுவை, சமூக அறிவு எல்லாம் பெற்றவர், உங்கள் பதிவுகளில் விலங்குகளின் மதம் எது, இன்னா போன்றவைகள் என் மனதில் அப்படியே இருக்கிறது இருந்தாலும் உங்கள் எழுத்தை சமூக மாற்றத்திற்கு பயன்படுத்துங்கள் என்று கேட்க எனக்கு நியாயங்கள் இருந்தாலும் நான் கேட்பதோ சமூக கேட்டுக்கு பயன்படாமல் இருக்கும்படியாக பார்த்துக்கொள்ளுங்கள் என்பதுதான். நீங்களே சிந்தித்துப் பாருங்கள், சைபர் கிரைமில் நீங்கள் எழுதிய நடை ஒருவருக்கு கிரைம் செய்வதில் ஆர்வம் தூண்டுவது போலல்லவா இருக்கிறது,,,, எப்படி ஒரு இந்துத்வா மோடியின் முசுலீம் எதிர்ப்பைத் தூண்டும் பேச்சை (provocative speech) நாம் எதிர்க்கிறோமோ அது போலத்தானே இதுவும், ஒரு வளரும் எழுத்தாளர் என்ற முறையில் இதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்,
      ன் வணிக எழுத்து என்பது சரிதான் ஆனால் அது உங்களின் மேல் ஆளுமை செலுத்த நீங்கள் அனுமதிக்க கூடாது… இன்று லக்கிஎன்றால் திராவிட அரசியல் எழுத்துலகின் தளபதி என்றுதான் நினைவுக்கு வரும், இனிமேலும் அப்படித்தான் வரவேண்டும்….இது உங்கள் வாசகனான எனது வின்னப்பம்

      • அரை டிக்கெட்டு.. லக்கி எழுதிய சைபர் கிரைம் ஆர்வத்தை தூண்டுகிறதோ இல்லையோ, வினவு எழுதிய இந்தப் பதிவு லக்கியின் தொடரை படிப்பதற்கும் அதை தொடர்ந்து கிரைம் செய்வதற்கும் முக்கிய தூண்டுகோலாக இருக்க போகிறது. ஓங்குக புரட்சி!

    • இப்படியெல்லாம் வினவுனா எப்படி??? பாவம் லக்கிலுக், நல்லா மாட்டிக்கிட்டீங்களா? 😀

  8. நான் உங்கள் விமர்சனத்தினை ஆதரிக்கிறேன். ஆனந்தவிகடன், குமுதம், நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள், முதலினைப் பெறுக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவை. அவைகளும், அதில் எழுதுபவர்களும் அப்படிதான் இருப்பார்கள்.

  9. //பின்னே இலட்சத்திலும் கோடியிலும் நைஜீரியா பிளேடு கும்பலிடம் ஏமாறுவதற்கு கே.ஆர்.அதியமானது நண்பர்களாக இருக்கும் முதலாளிகளுக்குத்தானே வழியிருக்கிறது. எட்டு ரூபாய் ரிப்போர்ட்டரை வாங்கி மேயும் சாதரணர்களுக்கு அந்த போர்ஜரி வேலைகள் அவ்வளவு ருசிக்காது என்பதே அவர்களது பொருளாதார யதார்த்தம்.///

    wrong. these con groups cheat even small amounts like 50 dollars, etc. and thanks for mentioning my name here !!! actually, i wish i were friends with top notch industrialists. alas it is not so.
    :))

    and i have friends in all groups and classes. ok.

  10. லக்கியின் தொடர் வெளியான ஒரு குமுதம் ரிப்போர்டர் இதழைக் கூட படித்ததில்லை – பொதுவில் சமீப காலமாய் அரசியல் கிசு கிசு பத்திரிகை எவற்றையுமே வாசிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.

    ஆனாலும் அந்தத் தொடர் பற்றிய விளம்பரத்தையும் வாழ்த்துக் கோசங்களையும் படித்த போதே இது ஒரு இணைய பாலியல் ‘அறிமுகத்’
    தொடராகத் தான் இருக்கப் போகிறது என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கையிருந்தது. இந்த கட்டுரையைப் படித்த பின் லக்கி என்
    நம்பிக்கை வீண் போகாமல் காப்பாற்றியிருக்கிறார் என்றே தெரிகிறது. அவருக்கு நன்றி!

    கழுதை விட்டையிலிருந்து சந்தன வாசத்தையா எதிர்பார்க்க முடியும்? குமுதத்திலிருந்து சமூகத்திற்கு பயன்படும் படைப்புகளையா எதிர்பார்க்க முடியும்? நான் தமிழினையத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக கவனித்து வருகிறேன் – லக்கியை அவரது முதல் பதிவிலிருந்து கவனித்து வருகிறேன்..
    குமுதம் + லக்கி = கழுதைவிட்டை + பன்றி விட்டை.. வடிவமா உள்ளடக்கமா என்கிற கேள்வி லக்கியின் முன் எந்தக் காலத்திலும் எழுந்திருக்கவே
    முடியாது – அவரைப் பொருத்தளவில் வடிவம் தான் படைப்பின் தரத்திற்கான உச்சகட்ட நிர்ணயம்..

  11. வினவு, நீங்க இந்த இடுகை எழுதினது எதுக்கு ? விலாவாரியா எழுதி குமுதம் ரிப்போர்ட்டர் வாங்காதவங்க / படிக்காதவங்களை வாங்க சொல்லி தூண்டவா ? இல்லாட்டி கூகிள்ல சபிதா பாபி தேட வைக்கவா ? உங்களுக்கு விவரங்களை தவிர்க்கனம்ன்னு ஏன் தோணலை ? உங்க வலைத்தளத்தை பிரபல படுத்தவா ?

    • வலைவீசி ஜொல்லுவோர் சங்க மெம்பர்லாம் கண்டன அட்டென்டன்ஸ் ரெஜிஸ்டர்ல கைநாட்டு வைக்க ஆரம்பிச்சுட்டாங்க்யா. பேர குறிச்சுகங்க

      • பேரு குறிச்சு வச்சி என்ன பண்ண போறீங்க ? இனிமே இது மாதிரி ஜொள்ளுவோர் சங்கத்துக்கு இடுகைகளா எழுத போறாங்களா ? எழுதினா மெயில் அனுப்பி சொல்லுவீங்களா ? ஒரே ஒரு எதிர்விமர்சனம் எழுதினா ஏன் இப்படி டென்ஷன் ஆகறீங்க?

      • செல்வா ஏன்பா டென்சன், சும்மா டமாசுப்பா, வினவு எழுதுனது சரின்னுதான் படுது…லக்கி எழுதுன அளவு இதுல டீடெய்லான் இல்ல ஒன்லி விமர்சனம்…இல்ல லக்கி எழுதுனது சரிதான்னு தோனுனா உங்க நியாயத்த எழுதுங்க…

    • /// வினவு, நீங்க இந்த இடுகை எழுதினது எதுக்கு ?////

      அதுவே உனக்கு வெளங்களையா?, இன்னாதான் உனக்கு புரிஞ்சிது சொல்லு. வேற விசியமா இந்த பக்கம் வழி தவறி வந்துட்டியா?

      /// உங்களுக்கு விவரங்களை தவிர்க்கனம்ன்னு ஏன் தோணலை ? உங்க வலைத்தளத்தை பிரபல படுத்தவா ? ////

      விவரமில்லாம எதுவும் அப்படி எழுத முடியாது செல்வா, அப்படி எழுதினா அது உன் கேள்வி மாதிரி தான் வரும். இன்னமே வினவை பிரபலப்படுத்தவேண்டிய அவசியமில்ல, அது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கே.

      • விவரத்தோட குமுதம் ரிப்போர்ட்டர்ல எழுதினா அது வியாபாரமாம். ஆனா, அதே வினவு தளத்துல எழுதினா பொதுஜன சேவையாம். என்ன அயோக்கியத்தனம் ? இதே கட்டுரையை ஒரு சில விவரங்களை தவிர்த்து ஏன் எழுதமுடியாது ?

      • அதை எப்படி தவிர்க்க முடியும்.
        அப்படி எழுதினால் தானே வினவுக்கும் ஒரு விளம்பரம்.

  12. பதிவர் லக்கிலுக்கும் ஆபாசமும்…

    முதல் இரண்டு தொடரை படிக்கும்போதே லக்கியை கவனிக்க வேண்டுமென்று நினைத்து அப்புறம் சரி விட்டுத் தொலைப்போம் என்று மறந்த நேரத்தில்… https://www.vinavu.com/2009/07/27/lucky/trackback/

  13. விரிவாக என்னுடைய கருத்தை பிறகு பதிவு செய்வேன்,இருந்தாலும் அவரது தனிப்பட்ட விவரங்களை அவருடைய பணியோடு தொடர்புபடுத்தி (உதா: மகள் பெயர்), எழுதி இருப்பதற்கு என்னுடைய வலிமையான கண்டனங்களை பதிவுசெய்கிறேன்..!!!

    • ஒ்ரே ஒரு விவரம்தான், விவரங்கள் இல்லை, அதுவும் அவரே பதிவுலகில் அதைப்பற்றி எழுதி அனை்வரும் அறிந்த ஒன்றுதான்… மேலும் எழுதப்பட்ட விதமே ஆதங்கத்தோடு இருக்கின்றது அதனால் இதில் கண்டங்கள் தெரிவிக்க எதுவும் இல்லை… மேலும் நீங்களும் கவர்ச்சி படம் போடுபவர் தானே அதனால் வேண்டுமென்றால் கண்டனம் தெரிவிக்கலாம் புரிந்து கொள்ளமுடியும். 🙂 🙂 🙂

  14. //புதிய கலாச்சாரத்தில் வந்த ஈராக் சிறைக்கொடுமை படங்களுக்கும், //

    //ஆமான்டா! ஈராக்கில் பெண்களை அமெரிக்கர்கள் சித்ரவதை செய்த படங்கள் மட்டுமல்ல கயர்லாஞ்சியில் பிரியங்காவை ஆதிக்க சாதி வெறியர்கள் பாலியல் வல்லுரவால் கொன்ற படம், மணிப்பூரில் ‘ இந்திய இராணுவமே எங்களையும் பாலியல் பலாத்காரம் செய்’ என தாய்மார்கள் நடத்திய நிர்வாண போராட்ட படம், இவைகளை கூடத்தான் வெளியிட்டோம், இதையெல்லாம் பார்த்தால் உனக்கு பாலுணர்வு தூண்டப்படுகிறதா, சைக்கோவாடா நீ?//

    அடடா , நீங்க துப்பறொயும் ஜர்னலிஸம் செய்து ஈராக்கில் போய் படம் எடுத்து போட்டிருந்தால் நாங்களும் ஒத்துக்கொள்வோம் ,

    மிலிட்டரிசெக்ஸ்.காமிலிருந்து ஏதோ சில வக்கிரமான படங்களை எடுத்து போட்டு இதுதான் ஈராக்கில் அமரிக்கர்கள் கற்பழித்த படம் என்று வெளியிட்டு உங்கள் வக்கிர மன அரிப்பை தீர்த்துக் கொண்டீர்கள் ,

    லக்கி தான் என்ன செய்கிறேன் என்று எல்லோருக்கும் தெரிந்துதான் செய்கிறார் ,

    ஆனால் நீங்கள் வழக்கம் போல சபிதாபாபியை குறிப்பிட்டதை கண்டித்து அதை புகழடைய செய்கிறீர்கள் (அந்த தளம் தடை செய்யப்பட்டுவிட்டதாம் , தேடாதீர்கள் அரைடிக்கட்டு)

    (எதிர் கருத்து சொல்லும் யாரையும் அவன் , இவன் என பேசும் பூர்ஷ்வா மனநிலையை இப்போதைக்கு விட்டுவிடுங்கள் ,

    புரட்ச்சி வந்து பொன்னுலகம் அமையட்டும் , எங்களையெல்லாம் தொழிலாளி வர்க சர்வாதிகார நீதிமன்றத்தில் நிறுத்தி டிராஸ்க்கியை கோடாலியால் பின் மண்டையில் அடித்து கொன்றது போல் கொல்லலாம்)

    • மதி, அல்ஜசீரா என்னும் உலகப் புகழ் பெற்ற ‘மிலிட்டரி செக்ஸ்’ தளத்தில் வெளிவந்த படங்களை, தி கார்டியன் எனும் மூன்றாம் தர டிரிபிள் எக்ஸ் வெப்சைட் வெளியிட்ட படங்களை புதிய கலாச்சாரம் பத்திரிக்கை வெளியிட்டது இந்த நூற்றான்டின் மாபெரும் வக்கிரமான செயல்… பன்றி கண்ணை மூடிக்கொண்டால் கூட உலகம் இருண்டுவிடும் போல இருக்கிறது… மேலும் நான் எனது பின்னூட்டத்தில் குறிப்பிட்ட மணிப்பூர் தாய்மார்களின் நிர்வாண போராட்டம், கயர்லாஞ்சி பிரியங்காவின் நிர்வாண சடலம், பிறகு பென்புலிகளின் பிணங்களையும் புணரும் இலங்கை இராணுவ மிலிட்டெரி செக்ஸ் இவையெல்லாம் தடைசெய்யப்படாமல் இணையத்தில் இருக்கிறது அதெல்லாம் உங்களுக்கு நாட் சேஃப் பார் ஒர்க், ‘NSFW” படங்கள், அலுவலகத்தில் பார்த்து பாலுணர்வு தூண்டப்பட்டு மாட்டிக்கொள்ளாதீர்கள், வீட்டில் போய் பார்த்து உங்கள் இச்சையை தீர்த்துக்கொள்ளுங்கள்….

      இருந்தாலும் உங்களை டிராட்ஸ்கியுடன் ஒப்பிட்டு கொள்வது இருக்கிறதே…அடடா எனது எதிரியான டிராட்ஸ்கிக்கு வந்த இந்த நிலைமை வேறு யாருடைய எதிரிக்கும் வந்து விடக்கூடாது என விரும்புகிறேன்.

  15. // செல்வன்
    Posted on July 27, 2009 at 3:48 pm

    வினவு, நீங்க இந்த இடுகை எழுதினது எதுக்கு ? விலாவாரியா எழுதி குமுதம் ரிப்போர்ட்டர் வாங்காதவங்க / படிக்காதவங்களை வாங்க சொல்லி தூண்டவா ? இல்லாட்டி கூகிள்ல சபிதா பாபி தேட வைக்கவா ? உங்களுக்கு விவரங்களை தவிர்க்கனம்ன்னு ஏன் தோணலை ? உங்க வலைத்தளத்தை பிரபல படுத்தவா ?//

    நல்ல கேள்விகள் நண்பரே .

    • செல்வன், வெளிப்படையாக கேட்கிறேன், இந்த கட்டுரையை படித்த பின்னர் உங்களுக்கு ‘மூடு’ வருகிறதா? அப்படி வரவில்லையென்றால் லக்கியின் குமுதம் ரிப்போர்டர் கட்டுரையை எடுத்து படிக்கவும் சட்டென வித்தியாசம் தெரியும். இல்லை வினவு கட்டுரையை படிக்கும் ‘மூடு’ வந்தது என்றால் உங்கள் விமர்சனத்தில் நியாயம் உண்டு….

      • இது அடி
        செருப்பாலையே நச்சு நச்சுன்னு
        போட்ட மாதிரி இருக்கு.

        இதுங்க எல்லாம் மேற்படி
        யோக்கியர்கள் தான்
        அதனால் தான் வக்காலத்து.

      • அர டிக்கெட்,

        எனக்கு குமுதம்.காம் படிக்கும் பழக்கம் இல்லை. ஆதலால் சொல்ல முடியவில்லை. எப்படி குமுதம் ரிப்போர்ட்டர் படித்து விட்டு கூகுளில் தேடுவீர்கள் என்று நீங்கள் அனுமானம் செய்தீர்களோ அதே போன்ற அனுமானத்தை கொண்டது தான் எனது விமர்சனம்.

        உங்களிடம் நேரடியாக கேட்கிறேன். இந்த கட்டுரையை படிப்பவர்களுக்கு லக்கியின் கட்டுரையை படிக்க வேண்டும் என்றோ, சபிதா பாபியையோ தேடவேண்டும் என்றோ தோன்றாதா ?

      • //உங்களிடம் நேரடியாக கேட்கிறேன். இந்த கட்டுரையை படிப்பவர்களுக்கு லக்கியின் கட்டுரையை படிக்க வேண்டும் என்றோ, சபிதா பாபியையோ தேடவேண்டும் என்றோ தோன்றாதா ?//

        செல்வன் நீங்கள் சொல்வது மிகவும் சரி, ஆனால் இந்த நிலைக்கு வினவை கொண்டு வந்து விட்டது லக்கி எழுதும் அந்த தொடர்தான். இணையத்தில் புழங்குபவர்களுக்கு சபிதா படங்களை பற்றி தெரிந்திருக்கும், ஆனால் லக்கி குமுதம் ரிப்போர்டர் மூலம் அதை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அறிமுகப்படுத்திவிட்டார் என்பதுதான் விமர்சனம், அவர் எழுதியதை சொல்லாமல் எப்படி விமர்சனம் செய்வது?

    • அட மதி
      என்ன இன்னைக்கு ரொம்ப நேரம்
      நிக்கிறீங்க போல
      இன்னும் ஒட்டியே போகல
      ஆச்சரியமாருக்குபா !

  16. பதிவில் லக்கியின் தனிப்பட்ட விசயம் உங்களுக்கெதற்கு, அவசியம் என்ன அதற்கு மறுப்பு தெரிவிக்கிறேன். மற்றும்படி லக்கியின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.லக்கி பதில் சொல்லியே ஆகணும்.

    • ராசா, இங்கே பர்சனல் மேட்டர் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்!

      • குமுதம்.காம் பத்திரிகையில் வந்த கட்டுரைக்கு எதிர்வினை கருத்துரீதியாக கூறும் பொழுது எழுதியவரின் மகளின் பெயரை பயன்படுத்தவது தேவையற்றது அர டிக்கெட் !

      • //உங்களுக்கு தமிழ்மொழி எனும் அழகான பெண் குழந்தை பிறந்ததற்கு பல வாசகிகள் பாசத்துடன் அண்ணாவிற்கு வாழ்த்து தெரிவித்ததையும் பதிவு செய்திருக்கிறீர்கள். அத்தகைய பெண்களுக்கு நீங்கள் எழுதும் போர்னோ கிரைமை சமர்ப்பணம் செய்யுங்கள் லக்கி! //

        செல்வன், இங்கே பாருங்கள், அவரது பதிவைத்தான் வினவு குறிப்பிடுகிறார்கள் அதுவும் எந்த contextல் . இதில் அவரது மகளோ, அவரின் பெயரோ இல்லை முக்கியமான பொருள், அந்த பதிவுக்கு பல வாசகிகள் வந்து வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர், பெண் வாசகர்கள் அதிகம் உள்ள லக்கி பெண்களை இழிவு படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சரியா என்ற அர்த்த்தில் எழுதப்பட்டதாகத்தான் எனக்கு புரிகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

  17. ஆனா என்ன நான் எழுத இருந்த ஒரு மாட்டரை லக்கி எழுதிட்டார்ங்கிறது எனக்கு இப்பத்தான் தெரியுது.நானும் இந்த சபிதா என்கிற பெயரைப்பற்றி எழுதணும்னுதான் இருந்தேன்.

  18. //மற்றபடி எது ’ஆபாசம்’ என்பது எப்பொழுதும் அவரவர் பார்வை சம்பந்தபட்டது//

    ஆமாம் எனக்குக் கூட “அந்தப்” பக்கங்களைப் படிக்கும் போது பூணூலைத் தடவிக் கொண்டு காயத்திரி மந்திரம் சொல்லத் தோணுகிறது!!!

  19. சில வரிகளை தவிர்த்திருக்கலாம், சிலவற்றை தேவையில்லாமல் விவரிப்பது போல் உள்ளது. லக்கி மீதான விமர்சனம் மேலோட்டமாகவே உள்ளது.

    • அஸ்கர் அது என்ன வரிகள் என்பதையும் சொல்லி விடுங்களேன்

  20. தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல நெறி கட்டுமாம். ஒருத்தனை பத்தி எழுதினா இன்னொருத்தன் எதிர்பதிவு போட்டிருக்கிறான். இவனுங்களுக்குள்ள அப்படி என்னதான் கண்றாவியோ ????

    • இது போன்ற தனிநபர் தாக்குதல் வேண்டாம் ராஜா, பதிவின் நோக்கம் கெட்டுவிடும்….

      • ஒருத்தனை பத்தி எழுதினா இன்னொருத்தன் எதிர்பதிவு போட்டிருக்கிறான்

        இணைப்பை கொடுக்க முடியுமா ??

  21. எல்லோரும் யோக்கிய சிகாமணிகளைப்போல‌
    அவரவர் பார்வையை பொறுத்தது,உரிமை,
    ஜனநாயகம், வெங்காயம் என்றெல்லாம்
    பொளந்து கட்டுவதைப் பார்த்தால்
    இவர்களுடைய பரந்த மனது மிக மிக‌
    நன்றாகவே தெரிகிறது.

    இது போன்ற் மனங்களின் பாலியல் அம்சம்
    தொடர்பான உளவியல் என்ன என்பதை நமது
    மருத்துவர் ருத்ரன் விளக்கினால் விவாதம் இன்னும்
    சுவையாக சூடு பிடிக்கும்.

    • இதை விளாக்க எதுக்கு ருத்தரன் வேண்டும்.. ஒவ்வொரு மனிதனுமே உணவையும், மலத்தையும் சேர்த்தே சுமக்கின்றனர்..ஒவ்வொரு மனிதனின் மனதிலும் மனித்நேயமும் வக்கிரமும் கலந்தே இருக்கிறது அதன் விகிதமும், வ்க்கிரத்தை கட்டுபடுத்தும் மனபலமும் தான் நல்லவன் , கெட்ட்வன் என்ற பாகுபாடை சமுதாய்த்தில் பிரிக்கிறது… எல்லரும் யோக்கிய சிகாமனிகளாக இருக்க முடியாது, இருந்தாலும் மனதளவில் காமம் என்கிற விடயத்தை கட்டுபடுத்த முடியாத மனிதன் பயத்தாலும், சில கடமைகளாலும் தன் வக்கிரத்தை அடக்குகிறான் . மற்றவர்களின் யோக்கியதை கேளிவிக்குள்ளாககி நீங்கள் முன் வைக்கும் கருத்தே உங்களின் மனதின் அகங்காரத்தையும் வக்கிரத்தையும், மற்றவர்களை ‘இவெனெல்லாம் சொல்ல வந்துட்டான்’ என்று புழுவாக பார்க்கும் மனோபாவமும் தெரிகிறது… லெனின் போட்டோவை வைத்திருக்கிறீர்கள் கொஞ்சம் சோஸியலிசம் , கருத்து சுத்ந்திரம் பற்றியும் தெரிந்து மற்றவர்களையும் மதிக்கலாம்.. மற்றபடி உங்களின் கருத்துக்கு என கண்டனங்கள்..

      • அக்னிபார்வை,

        பாலியல் பிரச்சினைகளில் தனிநபரது உயிரியல் இயல்பும் சமூகம் அதற்கு விதித்திருக்கும் கட்டுப்பாடும் எல்லா மனிதர்களிடமும் அதை ஒரு போராட்டத்தில் வைத்திருப்பது உண்மைதான். இந்த முரண்பாட்டை விசுவரூபமாக்கி அதில் பொருளாதார ஆதாயம் அடைவதுதான் ஊடக முதலாளிகளின் விருப்பம். நாம் அந்த முரண்பாட்டை சமூகத்திற்காக சில கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு பாலியல் தேவையையும் இயல்பாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை பக்குவமாக உணர வைக்க முயல்கிறோம். சகமனுசியை வெறும் சதையாகவும், ஆவேசத்துடன் உண்ணும் தீனியைப் போலவும் சித்தரித்து அதையே வாழ்க்கையின் பெறும்பேறாக கருதவைக்க ஆளும் வர்க்கம் முயல்கிறது. அதனால் ஊருக்கு கற்பும் மனதளவில் படிதாண்டவும் சிலசமயம் வக்கிரமாகவும், சில சமயம் கொலை கற்பழிப்புக்களிலும் அந்த நபர்கள் விழுந்து பலியாகிறார்கள். இந்த பிரச்சினையை எவ்வளவு எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும் கையாள வேண்டும் என்பதை இதற்கு மேலும் விளக்க தேவையில்லை. ஆனால் குமுதம் ரிப்போர்ட்டரும், லக்கியும் இதை மலிவாக விற்பதற்கு பரபரப்பான தீனீயாக ஆக்கி சந்தைப்படுத்துகிறார்கள். மற்றபடி இங்கு விவாதம் இந்த திசையில் நடப்பதற்கு எல்லா நண்பர்களும் முயலுமாறு கேட்கிறோம். அக்னி சொன்னதை நண்பர் சூப்பர்லிங்ஸ் நேர்மறையில் பரீசிலிக்கலாம்.

      • முதலில் உங்கள் கருத்தௌ வழிமொழிகிறேன்.. மற்றொரு விடயம் இது மாதிரியான விடய்ங்களை இதழ் எந்தளவிற்கு சீரியஸாக எடுத்துகொள்வார்கள் என்று தெரியாது ஆனால் நாம்முடைய நோக்கம் அதை வீவாதித்து படிக்கிறவர்களௌக்குகாவது தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.. அத்னால் இதை பயன்படுத்தி தனிநபர் தாக்குதலை தொடுக்காமல் இந்த மாதிரியான விடயங்களை பற்றிய நேர்மையான விவாதம் தொடரலாம் மேலும் கடசி பத்தியில் லக்கியின் குழந்தையை இழுத்திருக்கிறீர்கள் அத்னை நீக்கிவிடுவது நல்லது .. இணையத்தில் ஒரு இரணடு மாத குழந்தையின் பெயர் சற்றே வேதனையளிக்கிறது.. லக்கியை விமர்சனம் செய்வது தவறில்லை ஆனால் அவருடைய தனி நபர் சார்ந்த விடயங்களை சந்திக்கு இழுப்பது சரியாக தெரியவில்லை ..ஏன் இதைய் நீங்கள் “ லக்கியின் பெண் வாசகர்களுக்கு சமர்பணம் செய்ய்லாம்” என கூட எழுதியிருக்கலாம்.. அல்லது இன்னும் நல்லவைத்மாக் கூட… இதை நிச்சயம் வினவு செய்ய வேண்டும் என் எதிர்பார்க்கிறேன் .. மீண்டும் யோசியுங்கள்

        • அக்னி பார்வை,
          லக்கியின் குழந்தை பெயரை போட்டது அவரது தனிப்பட்ட விடயத்தை சந்திக்கு இழுப்பது என்ற உங்கள் விமரிசனத்தை நேற்று ரவியும் வெளியிட்டிருந்தார். இன்று இதைத்தாண்டி பல மொக்கைகள் இந்த விவாதத்தை திசைதிருப்புவதற்காக வலிந்து இப்படி ஒரு பிரச்சாரத்தை எந்த பொருளுமற்று ஆரம்பித்திருக்கிறார்கள். விசயம் தெரிந்த நீங்களும் இதற்கு பலியாகியிருப்பது வருத்தமளிக்கிறது. கருணாநிதியின் மகள் கனிமொழி, கனிமொழியின் மகன் ஆதித்யன், ஆதித்யனின் தந்தை அரவிந்தன் என்று பெயரை சொல்வதெல்லாம் தனிப்பட்ட குடும்ப விசயங்களை விமரிசனம் செய்வாதாக ஒருபோதும் ஆகாது. சாருநிவேதிதாவின் மனைவி பெயர் அனாமிகா, ஜெயமோகனின் மனைவி பெயர் அருண்மொழி என்று ஒருவர் சொல்லிவிட்டாலே அது தவறென்பதல்ல. இதில் பாமரத்தனமாக கவுரவம் பார்ப்பது பிற்போக்கான நிலப்பிரபுத்தவ பார்வை. மேலைநாடுகளில் ஒரு எம்.டி பெயரைக்கூட ஒரு பணியாளர் தாராளமாக்க கூப்பிடலாம். இங்கே லக்கி தனது பதிவில் தெரிவித்து பலர் வாழ்த்து தெரிவித்து எல்லாருக்கும் தெரிந்ததுதாதன் அந்த பெயர். எங்களுக்கும் அப்படித்தான் தெரியும். அப்படி அந்தக் குழந்தைக்கு வாழத்து சொன்ன பெண்களை தனது தொடர் மூலம் லக்கி அவமதித்திருக்கிறார் என்பதே எமது விமரிசனம். இதில் லக்கியின் தனிப்பட்ட விவாகரத்தை எதை இழிவுபடுத்தினோம்? அடுத்து பொதுவாழ்க்கைக்கு அதாவது தனது நடவடிக்கைகள் மக்களுக்க்கு தெரியும் விதத்தில் வேலை செய்யும் ஒருவரது குடும்ப வாழ்க்கை விவரங்கள் எல்லோருக்கும் தெரிந்துதான் ஆகும். அதையே தனிப்பட்ட வாழ்க்கை என்று யாரும் மறைக்க முடியாது. இங்கே லக்கி என்ன தொழில் செய்கிறார், எப்படி வாழ்கிறார், என்றெல்லாம் சொன்னால் கூட குற்றமில்லை. அப்படி நாங்கள் எதுவும் சொல்லவில்லை. இதைப்போய் ஒரு உலகமகா தப்பு போல மொக்கைகள் வேண்டுமானால் பேசலாம். நீங்களோ, ரவியோ பேசுவது ஆச்சரியமளிக்கிறது. தி.மு.க தலைவரின் கொள்ளுப் பேரனெல்லாம் பிளக்ஸ் பேனர்களில் தி.மு.க தொண்டர்களால் வாழத்தப்படும் நிலையில் ஒரு தி.மு.க தொண்டனின் குழந்தையின் பெயரை அதுவும் அழகான தமிழப்பெயரை சொன்னது குற்றம் என்று குமுறும் கோமாளிகளை எப்படி புரியவைப்பது என்பது தெரியவில்லை. இதற்கு மேல் வினவு லக்கியின் தனிப்பட்ட குடும்பத்தை விமரிசித்திருப்பதாக யாரும் கருதினால் அவர்கள் சட்டப்படி எங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கலாம். மற்றபடி இந்தக்கட்டுரையில் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்பதை ஆயிரம் முறை உறுதியாக கூறுகிறோம்.
          மற்றபடி லக்கியின் குழந்தையை பார்க்க நேரிட்டால் அதை பாசத்துடன் முத்தமிட்டு எங்கள் அன்பை எப்போதும் தெரிவிப்போம். அதுவே நாளைக்கு வளர்ந்து எங்கள் நியாத்தை புரிந்து கொள்ளும். நன்றி

          • என்னுடைய கவலையெல்லாம் ஒரு கலத்தில் நுழைந்து விவாத்தை திசை திருப்பும் சிலர் சம்பந்த்மே இல்லாது சில பின்னூட்டங்களை இட்டு களத்தையும் , வீவதிப்பவர்களையும் சங்கடத்திற்க்குள் ஆக்கிவிடுவார்கள அது மாதிரி நிகழ்ந்துவிட போகிறது என்று தான் சில பெயர்களை நீக்க வேண்டும் என்றேன்.. இது வரை யாரும் த்வாறாக பின்னூட்டம் இடாது சற்றே ஆறுதல்… திசை திரும்பிவிட்டது என்பது உணமை ..பார்க்க்லாம் சில நேரங்களில் பழைய நிலைக்கு திரும்பலாம் இல்லை அதற்க்குள் நீங்கள் வேறு கட்டுரை எழுதலாம்…
            சரி இதை ரிப்போர்ட்டரின் கவனத்திற்க்கு எடுத்து சென்றாயிற்றா?

  22. தோழர் வினவு மன்னிக்கவும். உங்க பதிவின் நோக்கம் லக்கி எழுதும் தொடரை விமர்சிப்பதா அல்லது லக்கிலுக்கை விமர்சிப்பதா!

    அவரது தொடர் குறித்த உங்கள் விமர்சனம்… உங்கள் விமர்சனம்..!

    மற்றபடி விமர்சனத்தில் கொடுத்திருக்கிற ஒவ்வொரு வரிகளும் உண்மையே..! அது ஏற்கனவே அவரிடம் நேரில் நான் கூறியதுதான்.

    அந்த தொடர் குறித்து விமர்சிக்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.

    ஆனால் பின்னூட்டங்களில் அந்த தொடர் குறித்து விவாதிக்கலாமே! அதை விடுத்து அந்த ” தனி நபர்” குறித்து ஏன்?

    • இது நியாயமான கேள்வி, இங்கே விவாதிப்பவர்கள் இதை கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால் லக்கி லுக் ரசிகர்கள்தான் இதை பர்சனலாக எடுத்துக்கொண்டுள்ளனர்.

      • என்ன அரடிக்கட், இந்த மாதிரியான விவாதங்கள் ‘டயலெக்டிக்காக ‘ இருக்கும் என்று வருகிறேன் ஆனால் தோழர்கள் அதை தனி நபர் தாக்குதல் தொடுத்து கெடுக்கிறார்கள் ..

      • இங்கு தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரை தோழர்கள் என குறிப்பிடுகிறீர்கள் என தெரியவில்லை. நபர்களின் பெயரை குறிப்பிட்டே எழுதுங்கள். யாராக இருந்தாலும் இதை பதிவுக்கு சம்பந்தமில்லாமல் திட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள கூடாது என்பது என் கருத்து.

    • அதிஷா

      இங்கே ஒரு சில பின்னூட்டங்களைத் தவிர பெரும்பாலும் விசயத்தை ஒட்டித்தானே நடக்கின்றன? மற்றபடி இந்த விவாதங்கள் எல்லாம் எமது ஒப்புதல் பெற்றெல்லாம் வெளியிடப்படவில்லை. அவரவர்கள் விரும்பியதை எழுதுகிறார்கள். நீங்கள் கூட வினவு, புரட்சி, புண்ணாக்கு என்று ஒரு பக்கவாட்டு கவிதையை எழுதியிருந்தீர்கள். உங்களது விருப்பத்தில் யார் எப்படி தலையிட முடியும்?

      அடுத்து லக்கியும் அவரது எழுத்தும் சேர்ந்தேதான் அவரது ஆளுமையை தீர்மானிக்கிறது என நினைக்கிறோம். இதில் அவரை தனியாகவும், அவரது கட்டுரையை தனியாகவும் பிரித்து பார்ப்பது நடைமுறையில் சற்று சிரமமானதே. மற்றபடி லக்கியின் கட்டுரையை தவிர்த்து வெறும் லக்கியை மட்டும் திட்டுவதில் எங்களுக்கும் உடன்பாடில்லை. அதை கண்டிக்கிறோம். இங்கே பாலியல் பிரச்சினையில் நாம் கொள்ளவேண்டிய அணுகுமுறை எதுவென விவாதம் சென்றால் பயனுள்ளதாக இருக்கும். அப்படி நடந்தால் லக்கியின் கட்டுரையை நாம் இன்னும் ஆழாமக புரிந்து கொண்டு விமரிசனம் செய்யலாம்.

    • //தோழர் வினவு மன்னிக்கவும். உங்க பதிவின் நோக்கம் லக்கி எழுதும் தொடரை விமர்சிப்பதா அல்லது லக்கிலுக்கை விமர்சிப்பதா! //

      மட்டமான தொடரை எழுதிக் கொண்டிருக்கும் மட்டமான எழுத்தாளரை கொஞ்சம் மண்டையில் கொட்டி திரும்பி பார்க்க வைக்க தான் இந்த பதிவு.

      அது என்னங்க தொடரை விமர்சணம் செய்யுங்கள் ஆனா லக்கியை ஒன்னும் சொல்லாதீங்கன்னு சொலறீங்க, அந்த தொடரை எழுதுவது அவர் தானே பின்ன அவர விமர்சிக்காம ?

      நல்ல விசியத்திற்கு மட்டும் நண்பர்களுக்கு வக்காலத்து வாங்குங்க அதிஷா. அவர் பீயை தின்னுன்னு சொன்னாலும் தின்போம்ற மாதிரி பேசாதீங்க

  23. லக்கியும் அவரது கூட்டாளிகளும் இழவு வீட்டில் சுண்டல் விற்ப்பவர்கள். பிரபாகரன் பற்றிய புத்தக விமர்சகமானாலும் – சைபர் கிரைமானாலும் நோக்கம் ஒன்றே. கண்மூடி தனமாக தமிழின கொலைங்கரை ஆதரிப்பதில் இருந்தே அவர் எவ்வளவு பகுத்தறிவாளர் என்பது நமக்கு தெரியாதா ??

    குறிப்பு: தொழில் நுட்பம் சார்ந்ததால் – ‘WLL’ உரிமம் வாங்கி அதில் ‘ரோமிங்’ வசதி எல்லாம் எப்படி கொடுத்து அம்பானி கொள்ளை அடித்தான் ? ( அதில் நமக்கு ஒன்னும் வருத்தம் இல்லை. நம்ம காசை சுனில் மிட்டல் அடித்தால் என்ன? அம்பானி அடித்தால் என்ன ?), ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது என்ன? (முக்கியமாக வளர்ந்த நாடுகளை ஸ்பெக்ட்ரம் எப்படி வழங்க படுகிறது. அதே போல் இங்கு செய்தால் மாறனுக்கும் அவரது கட்சிக்கும் உள்ள நன்மைகள் தீமைகள் என்ன ? என்பது போன்ற தகவல்களுடன் இந்த தொடரை லக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் .

    • குறிப்பு: அதற்கு அவருக்கு சிலரது ஒப்புதல் தேவை. சிபாரிசு செய்தவர்களே ஒப்புதல் தருவார்களா..?? அதுவும் குமுதத்திலா..?? நல்லா கேட்டீங்க..

  24. “லக்கியும் அவரது கூட்டாளிகளும் இழவு வீட்டில் சுண்டல் விற்ப்பவர்கள்” – காற்றுள்ள போதே தூற்றி கொள்னு கூட சொல்லலாம் !! சொல்ல வந்ததை சென்ற முறை முழுமையாக சொல்ல மறந்து விட்டேன். லக்கி முதல் ரிப்போர்டர் வரை எல்லோரிடமும் சமூக பொறுப்பை எதிர்பார்க்கும் வினவுக்கு எனது கண்டனங்கள்.

    கள்ள காதல், போர்னோ போன்றவற்றில் வினவின் நிலைபாடுகள் வினவின் மீதும் எரிச்சல் படவே வைக்கிறது.

    ரெண்டு குடும்பம் சேந்து ஒரு பெண்ணையும் ஆணையும் கல்யாணம் செய்து வைத்து விடுவார்களாம். இதற்க்கு பிறகு இவர்களுக்கு வேறொரு ஆணின் மீதோ பெண்ணின் மீதோ காதல் வந்தால் அதற்க்கு பெயர் கள்ள காதலாம். என்ன கொடுமை சார் இது ? இப்ப தான் மொத தடவையா அவனுங்களுக்கு உண்மையான காதலே வந்திருக்கு. ஆனா இதுக்கு பேரு கள்ள காதலா ? நகைப்பாக இல்லை ? விவாகரத்தான ஆணையோ பெண்ணையோ சமூகம் எல்லோரையும் போல் சாதரணமாக நடத்தினால் – கணவனோ மனைவியோ பிரிந்து போனால் அதை எல்லோரும் புரிந்து கொண்டு அதில் கேவலப்பட ஒன்றும் இல்லை என்று சமூகமே ஏற்று கொண்டால் யார் கொலை செய்ய போகிறார்கள் ?? கணவனை கொலை செய்யாவிட்டால் எங்கே அவன் நம்மையோ அல்லது காதலனையோ கொன்றுவிடுவானோ என்ற பயத்தினாலும் “வெக்கம் மானம் மரியாதையை இன்ன பிற மன நலம் சார்ந்த உணர்ச்சிகளினாலும் தான் கணவனையே கொள்கிறார்கள். இங்கே பெருவாரியான திருமணங்கள் எப்படி நடக்கிறது – காதல் எனப்படுவது யாது ( பேருந்தில் பின்னாடியே சென்று, பேசும் முதல் வாக்கியமே “ஐ லவ் யு ” என்று சினிமா சொல்லி தரும் காதலை சொல்லவில்லை ), என்பது போன்ற அடிப்படை அமைப்பே கேலிக்குரியதாக இருக்கும் பொழுது அதை எல்லாம் விட்டு விட்டு கள்ள காதல் போர்னோ பற்றி வினவு மேலோட்டமாக எழுவது வினவும் ராம் சேனாவின் மற்றோறொரு வடிவம் என்றே புரிந்துகொள்கிறேன்.

    • //கள்ள காதல், போர்னோ போன்றவற்றில் வினவின் நிலைபாடுகள் வினவின் மீதும் எரிச்சல் படவே வைக்கிறது.

      ரெண்டு குடும்பம் சேந்து ஒரு பெண்ணையும் ஆணையும் கல்யாணம் செய்து வைத்து விடுவார்களாம். இதற்க்கு பிறகு இவர்களுக்கு வேறொரு ஆணின் மீதோ பெண்ணின் மீதோ காதல் வந்தால் அதற்க்கு பெயர் கள்ள காதலாம். என்ன கொடுமை சார் இது ? இப்ப தான் மொத தடவையா அவனுங்களுக்கு உண்மையான காதலே வந்திருக்கு. ஆனா இதுக்கு பேரு கள்ள காதலா ? நகைப்பாக இல்லை ? விவாகரத்தான ஆணையோ பெண்ணையோ சமூகம் எல்லோரையும் போல் சாதரணமாக நடத்தினால் – கணவனோ மனைவியோ பிரிந்து போனால் அதை எல்லோரும் புரிந்து கொண்டு அதில் கேவலப்பட ஒன்றும் இல்லை என்று சமூகமே ஏற்று கொண்டால் யார் கொலை செய்ய போகிறார்கள் ?? கணவனை கொலை செய்யாவிட்டால் எங்கே அவன் நம்மையோ அல்லது காதலனையோ கொன்றுவிடுவானோ என்ற பயத்தினாலும் “வெக்கம் மானம் மரியாதையை இன்ன பிற மன நலம் சார்ந்த உணர்ச்சிகளினாலும் தான் கணவனையே கொள்கிறார்கள். இங்கே பெருவாரியான திருமணங்கள் எப்படி நடக்கிறது – காதல் எனப்படுவது யாது ( பேருந்தில் பின்னாடியே சென்று, பேசும் முதல் வாக்கியமே “ஐ லவ் யு ” என்று சினிமா சொல்லி தரும் காதலை சொல்லவில்லை ), என்பது போன்ற அடிப்படை அமைப்பே கேலிக்குரியதாக இருக்கும் பொழுது அதை எல்லாம் விட்டு விட்டு கள்ள காதல் போர்னோ பற்றி வினவு மேலோட்டமாக எழுவது வினவும் ராம் சேனாவின் மற்றோறொரு வடிவம் என்றே புரிந்துகொள்கிறேன்.//

      நண்பரே இங்கு எழுதவந்த விசயத்திற்காக ஊடகங்கள் ‘கள்ளக்காதலை’ எப்படி அளிக்கிறார்கள் என்பதையே சுட்டியிருக்கிறோம். இது குறித்து எமது நிலைப்பாடு எதையும் எழுதவில்லை. ஆனால் கள்ளக்காதலில் உண்மையான காதல் ஒரு சில வேண்டுமானால் இருக்கலாம். பெரும்பாலும் அது புதிய பழத்தை சுவைக்கும் வக்கிரமாகவும் குறிப்பாக ஆண்கள் தமது இச்சையை தீர்ப்பதற்கு அத்தகைய அவலமான பெண்களை வடிகாலாக பயன்படுத்துவதுதான் யதார்த்தாம். இது குறித்து

      இது காதலா, கள்ளக்காதலா

      என்ற எமது பழைய இடுகையை நீங்கள் வாசிக்கலாம். மற்றபடி ஒரு வாக்கிய்த்திற்காக எங்களையும் ராம்சேனாவில் சேர்த்திருப்பதை விடுத்து கொஞ்சம் விவாதித்து விட்டு முடிவு செய்திருக்கலாம்.

  25. இன்ப லீலா,சரோஜா புத்தகங்களில் எழுதுபவரிடம் போய், இப்படியெல்லாம் எழுதலாமா கேட்டா அவங்க கிட்ட இருந்து என்ன பதில் வரும்ன்னு நினைக்கிறீங்க தோழரே.

    எங்க போயிட்டாங்க அவரோட அல்லகைகள்,?இவர் என்ன வாந்தி எடுத்தாலும் அதுக்கு ஆமாம் போடுறதுக்கு ஒரு பத்து பேர் பதிவுலகில இருப்பாங்களே. அது அவரோட விருப்பம், உரிமை, நீ ஏன் போய் பாக்குற, படிக்குறன்னு நமக்கு புத்திமதி சொல்ல.

    //அண்ணே , உங்க பு,ஜவில் ஈராக்கில் பெண்கள் கற்பழிப்பு என்ற செய்திக்கு நீங்கள் போட்ட ஆபாச படங்களைவிடவா லக்கியுடையது//

    அடேய் அடல்ட் மண்டையா, ஈராக்கில் பாதிக்கபட்ட பெண்களை பற்றி செய்திகளுக்கும் இதுக்கும் கூட உனக்கு வித்தியாசம் தெரியாதா?

  26. சில பேர் வாடகைத்தாய் முறையை ஆஹா ஓஹோ என்று சிலாகிப்பார்கள். குழந்தை இல்லாத ஒரு தம்பதியின் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டு வருகிறவர்கள் வாடகைத் தாய்மார் என்று பெருமை பேசுவார்கள். அப்படி ஒரு வசந்தத்தை அடுத்தவர்களுக்கு வழங்க தங்கள் தங்கையரையோ, மனைவியரையோ வாடகைத் தாயாக அனுப்ப மாட்டார்கள். அது போன்ற “இண்டெலெக்சுவல் அல்லைக்கைகள்”தான் இங்கே தம்பி பத்து லட்சத்துக்காக ஓவராகத் தட்டுகின்றன.

    ”வெக்கப்படாதீங்க சும்மா பாருங்க” என்று குறையாடைப் பெண்களின் படத்தைப் போட்டு வாங்கியதுதான் அந்தப் பத்து லட்சம். தம்பி பத்து லட்சம் தன்னுடைய “இணையதள சுனாமி” “வலையுலக சூப்பர் ஸ்டார்” போன்ற அல்லைக்கைகளின் கும்மிகளைத் தக்கவைத்துக் கொள்ள எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கும்.

    தம்பி பத்துலட்சத்துக்கு முதுகு சொறிவதற்கென்றே ஒரு கூட்டமும் பதிவு எழுதி வருகிறது. விறைப்புத் தன்மை ஏற்படுவதில் கோளாறுள்ளவர்கள் தம்பி பத்து லட்சத்தின் தளத்தை தினம் இரண்டு மணிநேரம் படித்தால் நல்லது என்று மருத்துவர்கள் சிபாரிசு செய்யும் காலமும் ஒருநாள் வரலாம். எவர் கண்டார். முதுகு சொறிகிற கூட்டம் இந்த அடிப்படையில் பலனடைந்த கூட்டமாக இருக்குமோ என்பதுதான் என் சந்தேகமெல்லாம்.

  27. ரசவாதியின் எலி

    உண்மையச் சொன்னா லக்கி அவர்கள் தான் ரிப்போட்டரிடம் சிக்கியுள்ள ‘ரசவாதியின் எலி’.

    ‘புதியவர்களுக்கு’ எழுத வாய்ப்பு கொடுக்கப் பட்டாலும் அதனை எழுத்தாளர்களே உணரா வண்ணம் எவ்வளவு எளிதாக மாற்றக் கூடியவர்கள் வர்த்தக பத்திரிக்கையினர் ?

  28. நல்ல விமர்சனம், லக்கி இதை யோசிக்க வேண்டும், இந்த வனிக பத்திரிக்கைகளெல்லாம் முத்திரை குத்தி விடுவார்கள் ஆரம்பத்திலேயே உசாராக இல்லையெனில் ஆயுசு முழுக்க போர்னோ சாயலில் எழுத வேண்டிவரலாம் இல்லை அடையாளத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்… எதுக்கு சாமி அதெல்லாம்..

  29. நல்ல கட்டுரை தோழர். சிலர் இங்கு வினாவை குறை கூறி இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.. ஒரு மனிதனின் உடல் உறுப்பை சதையை காசாக்கும் சினிமாக்காரன் காண்பதற்கும், ஒரு மருத்துவர் காண்பதற்கும் வேறுபாடு இல்லையா.. இங்கு வினவினால் எழுதப்பட்டு இருக்கும் விமர்சனகள் ஒரு மருத்துவரின் நோக்கிலேயே எழுதப்பட்டு இருக்கிறது..

    லக்கி லுக்கின் கட்டுரை, நம்மில் பலரின் உள்ளேயும் உள்ள சமூகத்தால் முறைப்படுத்தப் படாத உணர்ச்சியை தூண்டி, கீழ்த்தரமான ரசனையை தருகிறது..

    பல காட்டுவாசி மக்கள் உடலில் மிகக் குறைந்த ஆடைகளை அணிந்து கூட்டாக வாழ்கின்றனர்.. அவர்களின் சமூகத்தில் , வன் புணர்ச்சியோ அல்லது பெண்ணை வெறும் சதையாக நோக்கும் கலாச்சாரங்கள் இல்லை.. ஆனால் அவர்களை விட அறிவியல் வளர்ச்சியில் பன் மடங்கு முன்னில் உள்ள நாம் நாகரீகத்திலும் , கலாச்சாரத்திலும் நம்மை உயர்வாக கருதி கொண்டு இருக்கும், நமக்கு உள்ளேதான் பாலியல் குற்றங்கள் மிக அதிக அளவில் நடை பெறுகின்றன.. விலங்கைப் போல் காட்டில் வாழும் காட்டுவாசி பாலியல் குற்றங்கள் புரிவது இல்லை ஆனால் மனிதனை போல் நகரத்தில் வாழும் நாம் புதிது புதிதாக பாலியல் குற்றங்கள் புரிகிறோம்… இங்கு யார் மனிதன்.. யார் விலங்கு..

  30. லக்கியை நீங்கள் விமரிசித்திற்பதற்கு உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்…..நிற்க பதிவுகள் அவர்கள் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது..அதை படிப்பவர்கள் அவர்கள் இஷ்டம்…எத்தனையோ போர்னோ தளங்கள் இருக்க நாங்கள் பிளாக் படிப்பதில்லயா உங்கள் தளமும் லக்கிலுக் தளமும் சேர்ந்துதான் …பிடித்ததை எடுத்து கொள்ள போகிறோம்….இறைவனை திட்டுபவ்ர்கள்… பல பாராட்டுபவர்கள் பல ……அவர்கள் இறைவன் உசத்தி என சொல்லுபவர்கள் பல … நமக்கு பிடித்ததை பார்க்கிறோம் ..மாற்று கருத்துகளை யோசிக்கிறோம்…

  31. தோழர் வினவு,

    இந்த பதிவு ஒரு moral policing பாணியில் இருக்கிறதே. லக்கியின் பதிவுகள் ஆபாசம, மஞ்சள் பதிவுகள் என்றெல்லாம் அடைமொழிகள். அவை ஆபாசமாக இருக்கலாம். அது சட்டப்படி குற்றமா என்ன ? பாதிக்கப்பட்ட நடிகைகள் மற்றும் இதர தரப்பினர், ரிப்போட்டர் மற்றும் லக்கி மீது மான நஸ்ட வழக்கு தொடரலாமே. ஆனால் இதுவரை யாரும் செய்யவில்லை.

    Moral policing செய்வதில் கடும் மதவாதிகளும், கடும் மார்க்ஸியவாதிகளும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றனர். சர்வாதிகார மனோபாவம் (அது என்ன வகையாக இருந்தாலும்) இதில் தான் முடியும். இதை பற்றி, பதிவுலக நண்பர்கள் ஜ்யோவ்ராம் சுந்தர், சுகுணா திவாகர், ரோசா வசந்த, ஓசை செல்லா போன்றவர்கள் விரிவாக விவாதிக்கும் திறமை உள்ளவர்கள். நண்பர்களே வாங்க.

    சரி, இருக்கட்டும். ஒரு வேளை தோழர்கள் செம்புரட்சியை அடுத்த வருடம் அக்டோபரில் கொண்டு வந்து,
    இந்தியாவில் ஒரு புரட்சி அரசை அமைத்தால், அதன் பின் நீங்க அதற்க்கு தலைவரானால், இது போன்ற
    “ஆபாச” பதிவர்கள் மற்றும் பத்ரிக்கையாளர்களை என்ன செய்வீக ? புதய சட்டம் இயற்றி, இவர்களை
    உடனே சைபீரிய சிறை போன்ற சிறைகளில் தள்ளி நல்ல “கவனிப்பீர்களா” அல்லது தீர்த்துக்கட்டுவிடுவீர்களா ?
    என்ன செய்வீக ? புரட்சி அரசு என்னென்ன நூல்களையும், எழுத்தாளர்களையும் தடை செய்யும் ?
    சாரு, ஜெயமோகன் போன்றவர்களை என்ன செய்வீர்கள் ?
    லக்கி,

    எதுக்கும், சீக்கிரம் துபாய்ல ஒரு வேலை வாங்கிக்கொண்டு, எஸ்கேப் ஆயிடுங்க. அங்க புரட்சி வரவே
    வராது. இனிமேல், முதலாளித்துவ ஜனனாயகத்திற்க்கு மாற்று கம்யூனிச சர்வாதிகாரம் தான் என்று
    சொல்ல மாட்டீக என்று நினைக்கிறேன். :))))

    • அன்பே அதியமான்,

      மாரல் போலீசாக செயல்படுவதில் மதவாதிகளும் மார்க்சியவாதிகளும் ஒரு புள்ளியிலோ, கோலத்திலோ சந்திப்பது இருக்கட்டும். எனது கேள்வி நீவீர் என்னவகை போலீசு என்பதே. உன்னைப் போன்ற ஆணாதிக்க அறுவை ரம்பத்திடம் மாட்டிக்கொண்டிருக்கும் உனது பாவமான மனைவியை நான் காதலித்து கடைத்தேற்ற விரும்புகிறேன். அதற்கு ஜனநாயக முறையில் ஏற்பாடும் உதவியும் செய்வது உனது பொறுப்பு. மறுத்தால் நீயும் மாரல் போலீசு என்ற அடைமொழிக்குள் வந்து விடுவாய். என்ன சொல்லப் போகிறாய் காத்திருக்கிறேன் அன்பே.

      காதலன்.

      • காதலன், அது உம‌து த‌னி உரிமை. முய‌ற்ச்சி செய்து பார்ப‌து உம‌து இஸ்ட்ட‌ம். நான் யாருடைய‌ த‌னிம‌னித‌ உரிமைக‌ளையும் ந‌சுக்கும் ஃபாசிச‌வாதி அல்ல‌. எம் ம‌னைவி எம்மை விட்டு பிற்ந்து, வேறு ஒரு
        ம‌னித‌னோட‌ வாழ‌ விரும்பினால், ஒரு ஜென்ட்டில்மேனை போல‌ அமைதியாக‌ என் வ‌ழியில் செல்வேன்.
        ஓ.கே. ஆனால் அத‌ற்க்கு (அதவாது உமக்கு) எம‌து உத‌வி தேவை, செய்யாவிட்டால் நானும் ஒரு மார‌ல் போலிஸ் என்று பித‌ற்றுவ‌து உம‌து வ‌க்கிர‌ புத்தியையும், அறிவீன‌த்தையும் காட்டுகிறது.

      • // உனது பாவமான மனைவியை நான் காதலித்து கடைத்தேற்ற விரும்புகிறேன்.//இந்த மாதிரி கேவலமான கேடுகெட்டவார்த்தைகளை காதலன் என்ற பெயரில் எழுதியிருக்கும் நபரை வன்மையாக கண்டிக்கிறேன,

  32. இங்கே லக்கி ரசிகர்களும் wannabe லுக்குகளும் “நன்பர்களுமாக” சேர்ந்து கொண்டு லக்கிலுக்கிற்கு ஆதரவு கோசம் பாடிச் சென்றிருக்கிறார்கள். அதில் முக்கியமாக சில கேள்விகளை வினவை நோக்கி வைத்திருக்கிறார்கள்

    # தனிப்பட்ட தகவல்களை / குடும்ப உறுப்பினர்களை ஏன் இழுக்கிறீர்கள்?

    அந்தத் “தனிப்பட்ட” தகவல்கள் அவருடம் பழகி “தனிப்பட்ட” முறையில் பெறப்பட்டதல்ல. அவரால் அவருடைய பதிவில் பகிரங்கமாய்
    எழுதப்பட்டு பல பெண் வாசகிகளால் அந்தப் பதிவில் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

    # தனிநபர் விமர்சனம் செய்யாதீர்கள் / படைப்பை விமர்சியுங்கள் படைப்பாளியை விமர்சிக்காதீர்கள்

    இதே பதிவில் எனது முந்தைய மறுமொழியில் நானும் தான் “தனிநபர்” விமர்சனம் செய்திருக்கிறேன் – லக்கியை பன்னி விட்டை என்று
    குறிப்பிட்டிருக்கிறேன்.

    ஒரு படைப்பு என்பது எங்கே இருந்து எப்படி உருவாகிறது? ஒரு படைப்பாளியின் சமூக உறவும் அவன் சார்ந்த வர்க்கமுமே
    ஒரு படைப்பு யாருக்காக எதை எப்படிப் பேசுகிறது என்பதைத் தீர்மானிக்கிறது. ஒரே சம்பவத்தை வினவும் தோழர்களும் பார்க்கும் விதமும்
    அதினின்று அடையும் அனுபவமும் சாருநிவேதிதா போன்ற கழிசடைகள் பார்க்கும் விதமும் அதினின்று பெரும் அனுபவமும் முற்றிலும் வேறு
    வேறானதாக இருக்கும். அச்சம்பவத்தினின்று கிடைத்த அனுபவத்திலிருந்து எழுவதே சாரு நிவேதிதா படைக்கும் மலக்குவியல். இப்போது அந்த
    மலக்குவியலானது சுற்றுப்புறத்தில் ஏற்படுத்தும் துர்கந்தத்தை மட்டும் விமர்சியுங்கள் பேண்டவனை விட்டு விடுங்கள் என்றா சொல்வீர்கள்?

    மேலே தோழரொருவர் குறிப்பிட்டதைப் போல ஒரு படைப்பாளியின் ஆளுமையும் அவன் படைப்பும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாத உறவு
    கொண்டது – படைப்பாளியை விட்டு படைப்பை மட்டும் விமர்சிக்கவியலாது.

    இங்கே குறிப்பாக லக்கிலுக் போன்ற திறமைசாலிகள் முதலாளித்துவ ஊடகங்கள் அளிக்கும் புகழ் போதைக்கு மயங்கிக் கிடப்பதையும்
    மற்றவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாய் திகழ்வதையும் சகித்துக் கொள்ளவே முடியாது.

    # லக்கிலுக்கை விமர்சிப்பதற்காக நீங்கள் கூட சில போர்ன் சைட் பெயர்களை குறிப்பிட்டிருக்கிறீர்கள்?

    மும்பை குண்டு வெடிப்புகள் பற்றி தினமலரும் எழுதியது – வினவு தளமும் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டது. ஷகிலா குறித்து லக்கிலுக்கும்
    எழுதியிருக்கிறார் – வினவு தளத்திலும் கட்டுரை வெளியாகியிருக்கிறது.

    அவர் ஆர்வமூட்டி அறிமுகபடுத்தும் நோக்கத்தோடு எழுதுகிறார் ( க்ரைம் என்பது ஒரு போர்வை ) – இங்கே அப்படி ஆர்வமுற்றவர் கூட தனது என்னங்களை மறு ஆய்வுக்குட்படுத்த எண்ணும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனைக் கண்டு உளக்கிளர்ச்சியடையும் ஒருவன் மேலே கழிந்து
    விட்டுச் சென்றுள்ள மதி இண்டியா என்ற கூறு கெட்டவனைப் போல ஆப்கானிய பெண்கள், ஈழச் சகோதரிகள், மணிப்பூர் தாய்மார்கள், ஈராக்கியச்
    சகோதரிகளின் கற்பழிப்புக் காட்சிகளிலிருந்தும் உளக்கிளர்ச்சியடையும் மனோவியாதிக்காரர்களாய்த் தான் இருக்க முடியும்.

    # இன்னும் சிலர் வக்கிரவுணர்சி என்பது ஒருவனின் தனிநபர் சுதந்திரம் அதில் கூடவா கம்யூனிஸ்டுகள் தலையிடுவார்கள்? என்று
    அங்கலாய்க்கிறார்கள்

    இது மருத்துவர் ருத்திரன் அவர்களாலோ அல்லது மூத்த தோழர்களாலோ விரிவாக எழுதப்பட வேண்டியது.. இது எனக்குத் தோன்றிய கருத்துக்களே

    நியாயமான பாலுணர்வு / காமம் என்பதும் வக்கிரவுணர்ச்சி என்பதும் முற்றிலும் வேறுவேறானது. ஒருவன் தனது சந்ததி விருத்திக்காகவோ, மீண்டும்
    உழைக்கத் தேவையான புத்துணர்ச்சியை அடையவோ, மன அழுத்தத்திலிருந்து விடுபடவோ ஒரு சமூக அமைப்பு அனுமதித்திருக்கும்
    வரையறுத்திருக்கும் எல்லைகளுக்குள் பெற்றுக்கொள்ளும் காமம் என்பதற்கு எப்போதும் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை..

    ஆயின் முதலாளித்துவ ஊடகங்கள்/ எழுத்தாளர்கள் முன்னிருந்தும் காமம் என்பது யாது? அது ஒருவனை மன அழுத்தங்களிலிருந்து விடுதலையளிப்பதற்கு பதில் மனநோயாளியாக்குகிறது. புத்துணர்ச்சியை அளிப்பதற்கு பதில் புத்துணர்ச்சி முழுவதையும் உறிஞ்சியெடுத்து களைப்புற்றவனாய்
    சோம்பேரியாய் ஆக்குகிறது. மந்த புத்தியுள்ளவனாக்குகிறது. விட்டேத்தியான மனோபாவத்தையுண்டாக்குகிறது. அமெரிக்காவின் ஆயுத
    வரிசையில் டொமஹாக், எஃப் 16, எஃப் 22 ஹொர்னெட், பேட்ரியாட், என்.ஜி.ஓக்கள் போன்றவற்றின் வரிசையில் போர்னோவும்
    நீலப்படங்களுக்கும் கட்டாய இடமுண்டு என்பதை நன்பர்கள் அறிவார்கள்.

  33. சாரு நிவேதிதா தொடங்கி இதோ லக்கிலுக்கு வரை இந்த இழிநிலை எழுத்து விபச்சாரிகளுக்கு சரியான சவுக்கடி வினவில்தான் கிடைக்கிறது. சமூகப் பொறுப்பு சிறிதும் இன்றி தங்களது சிந்தைச் சாக்கடையினுள் நிரம்பியிருக்கும் இதுபோன்ற கழிசடை எழுத்துக்களை விற்கும் இந்த பொறுக்கி கும்பலை இன்னும் அதிகமாக திரைகிழிக்க வேண்டும். லக்கியைப் பொறுத்தவரை ஏதோ அறியாத மயக்கத்தில் எழுதுகிற ஆளில்லை. பதிவுலகில் நெடிய அனுபவம் உண்டு அந்த அனுபவத்தினூடாக இணையத்தின் மூலம் தேடிப்பிடித்து அவர் கற்றுக்கொண்டது இதுநாள்வரை ஃபோர்னோக்களைத்தவிர வேறொன்றுமில்லை என்பதையே அவரது கழிசடை எழுத்துக்கள் காட்டுகின்றன.

    அனைவரும் மன்னிக்க வேண்டும். சற்று கடுமையாக நான் இதை எழுத நேர்ந்ததற்கு காரணம் உண்டு. வேலைக்காகாத எத்தனையோ அரட்டைகளுக்கும் அற்ப விசயங்களுக்கும் முந்திக்கொண்டு வந்து மூக்கை நுழைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக பதில் சொல்லும் லக்கிலுக்கு, இங்கே கள்ள மவுனம் சாதித்துக் கொண்டு இருப்பதே வினவின் இப்பதிவு அம்பலப்படுத்தியிருக்கும் உண்மைகளை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

    இணைய விவாதங்களில் தி.மு.க.வுக்கு சப்பை கட்டு கட்டி தலைவன் கருணாநிதிக்கு காவடித்தூக்கும் உடன்பிறப்பும் கொள்கைக்குன்றுமான லக்கிலுக்கு இப்படி ஆபாச வியாபாரியாக மாறியதில் வியப்பில்லை. தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழிதான். கலைஞர் தொலைக்காட்சியின் மானாட மயிலாட மூலமாக தமது உடன்பிறப்புக்களுக்கு தானைத்தலைவன் சொல்லிக் கொடுக்கும் கலாச்சாரம் எப்படிப்பட்ட தொண்டர்களை உருவாக்கும், என்பதற்கு லக்கிலுக்கு ஒரு உதாரணம்.

    குமுதம் ரிப்போர்ட்டரின் காசு கொடுத்திருக்கும் கொழுப்பை அவரது சகோதரிகளின் செருப்படிகள் அடித்து கரைக்கட்டும்.

    • /////சாரு நிவேதிதா தொடங்கி இதோ லக்கிலுக்கு வரை இந்த இழிநிலை எழுத்து விபச்சாரிகளுக்கு சரியான சவுக்கடி வினவில்தான் கிடைக்கிறது. ////

      சரி, சரி. ஆபாசம் தான் அவை. நான் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லலையே.
      செம்புரட்சி வந்தால், அதன் பிறகு இந்த ஆபாச எழுத்தாளர்களை என்ன செய்வதாக உத்தேசம்.
      உங்க ராஜ்யத்தில் (அதாவது தொழிலாள வர்க சர்வாதிகாரம்) என்ன “தண்டனை” ?
      நாடு கடத்தலா, அல்லது சிறைவாசமா அல்லது ஸ்ட்ரேய்ட்டா மேலுலகத்திற்க்கு டிஸ்பேட்ச்சா ?
      அந்த ஆபாச ஆக்கங்கள், நூல்கள், படங்களை தடை செய்வீர்களா ? என்ன செய்வதாக‌
      உத்தேசம் ? ப‌தில் சொல்லுங்க‌ளேன்..

  34. எஃப் 16, எஃப் 22 ஹொர்னெட், பேட்ரியாட், என்.ஜி.ஓக்கள் போன்றவற்றின் வரிசையில் போர்னோவும்
    நீலப்படங்களுக்கும் கட்டாய இடமுண்டு என்பதை நன்பர்கள் அறிவார்கள்.//

    கரக்டுனே ,

    எங்களுக்கு செக்ஸ் உணர்ச்சி வருவதே ஏகாதியபத்ய சதிதான் , மார்க்ஸின் சுசுவேவேசத்தில் அப்படிதான் குறிப்பிடப்ட்டிருக்கு ,

    ஆகவே ஏகாதியபத்திய அடிமைகளுக்கு அக்டோபரில் புரச்சி வந்தவுடன் காயடித்துவிடுவோம் ,(சஞ்சய்காந்தியை இந்த விசயத்தில் ஆதரிப்போம்)

    வரலாறு என்பது மார்க்ஸியவியாதிகளின் கட்டளைகளுக்கேட்ப தன்னை மாற்றிக் கொள்வதல்ல என்பதை இன்னும் எத்தனை கோடி குளக்குகளை பலி கொடுத்து புரிந்து கொள்ளபோகிறீர்கள் தவாரிஷி ?

    //நியாயமான பாலுணர்வு / காமம் என்பதும் வக்கிரவுணர்ச்சி என்பதும் முற்றிலும் வேறுவேறானது. ஒருவன் தனது சந்ததி விருத்திக்காகவோ, மீண்டும்
    உழைக்கத் தேவையான புத்துணர்ச்சியை அடையவோ, மன அழுத்தத்திலிருந்து விடுபடவோ ஒரு சமூக அமைப்பு அனுமதித்திருக்கும்
    வரையறுத்திருக்கும் எல்லைகளுக்குள்//

    இந்த எல்லையை யார் நிர்யிப்பது ? மண்டைக்குள் செத்துப் போன புத்தகங்களால் நிரப்பபட்ட தத்துவங்கள் நிறைந்த மதவாதிகளா ? அல்லது மார்ஸியவாதிகளா ?

    சமூகத்தில் ஏற்கனவே இருப்பதைதான் எல்லை என்பீர்களானால் , அந்த வரையறை காமத்துக்கு மட்டும் எதற்க்கு ? பொருளாதாரம் மற்றும் இன்னபிறவற்றிலும் அதே இருந்துவிட்டு போகட்டுமே ?

    பெருங்கனவுகளும் சித்தாந்தங்களும் பலி மட்டுமே கேட்கும் , எதையும் மாற்றாது

  35. மனித உணர்வுகளை சந்தைக்கேற்ற உணர்வுகளாக்குவதில் ஆபாசம் ஒன்று. பெண்ணின் உடலை பற்றி, ஆண்களின் வக்கிரமான சொந்த உணர்வுடாக விபரிப்பதன் மூலம், மனித உணர்வை கிளகிளுவுட்டுவதன் மூலம் இந்த ஜென்மங்கள் சாதிப்பது என்ன?

    பணத்தை மற்றவனின் பொக்கற்றில் இருந்து அவனை அறியாமல் திருடுவதுதான். தனிமனிதர்கள் ஆரம்பத்தில் தன்சொந்த மன வக்கிரத்தித்தில் தொடங்கும் இந்த மனநோய், இதன் மூலம் புகழ் பணம் என்று மனவிகாரத்துடன் களத்தில் இறங்குகி வக்கரிக்கின்றது. இதை நியாயப்படுத்த வாசகரின் விருப்பம், தனிமனித உரிமை என்று என்னவெல்லாம் பேசும்.

    இதில் அறிவு, நாணயம், நேர்மை என்று எதுவுமிருப்பதில்லை. பெண்ணின் உடலை நிர்வணமாக திறந்து பர்க்கும் சொந்த வக்கிரம புத்திதான், இங்கு அனைத்திற்கும் அடிப்படையாகவும் ஆதாரமாக இருக்கும். பெண்ணை நிர்வணமாகவும் ஆபாசமாகவும் காட்டி, அதை கிளர்ச்சியூட்டும் மூலதனத்துக்கு வெளியில், மனிதனாக நின்று எதையும் சொல்ல வக்கற்றவர்கள் தான் இவர்கள்.

    • தோழர் ராயகரன்,

      கட்டற்ற சுதந்திரம் (அனைத்து விசியங்களிலும்) உள்ள பிரான்ஸ் நாட்டில் அகதியாக தஞ்சம் புகுந்து, அங்கு
      வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்க, இப்படி ஆவேசப்படுவது கொஞ்சம் ஓவாரா தெரியலையா ? ஃப்ரான்ஸில் நடக்கும் விசியங்கள், அங்கு ஊடகங்களில் அரங்கேற்றப்படும் விசியங்க்ளை ஒப்பிடும் போது, இந்த பதிவில்
      இருக்கும் விசியங்கள் ஒன்னுமேயில்லை. ஜுஜுபி. இதற்க்கே இத்தனை “அறசீற்றத்தை” காட்டும் நீங்க,
      ஃப்ரென்சு மொழி ஊடகங்களில், இணையதளங்களில் உங்க சீற்றத்தை காட்டுவீர்களா ? அப்படி செய்தால்,
      அந்நாட்டில் எழும் எதிர்வினைகள் எப்படி இருக்கும் ?

  36. டேய் லூசுக் கூமுட்டை,

    மார்க்ஸ்-மார்க்சியம் பற்றியெல்லாம் பேச கழிசடையான உனக்கு என்ன யோக்கியதை இருக்கு? பாலியல் வல்லுறவுச் செய்தியில் கூட
    கிளர்ச்சியடையும் சொறி நாய் தானே நீ?

    //வரலாறு என்பது மார்க்ஸியவியாதிகளின் கட்டளைகளுக்கேட்ப தன்னை மாற்றிக் கொள்வதல்ல என்பதை இன்னும் எத்தனை கோடி குளக்குகளை பலி கொடுத்து புரிந்து கொள்ளபோகிறீர்கள் தவாரிஷி ?//

    லூசுப்பயலே.. மார்க்ஸியவாதிகள் வரலற்றுக்கு கட்டளையிடுவதில்லை – வரலாற்றின் கட்டளையை, வரலாற்றின் அழைப்பை, சுமந்து வருபவர்களே மார்க்சியர்கள்.

    முந்தைய பதிவுகளிலும் நீ தானே பல பத்தாயிரம் முறை தரவு ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் மூக்குடைக்கப்பட்ட மார்க்சியம் மீதான அவதூறுகளை மீண்டும் மீண்டும் கழிந்து சென்றவன்? ஒன்றிற்காவது நாங்கள் தர்க்க / தரவு ரீதியாக இதுவரையில் உடைத்திருக்காத குற்றச்சாட்டையோ விமர்சனத்தையோ வைத்ததுண்டா?

    //இந்த எல்லையை யார் நிர்யிப்பது ? மண்டைக்குள் செத்துப் போன புத்தகங்களால் நிரப்பபட்ட தத்துவங்கள் நிறைந்த மதவாதிகளா ? அல்லது மார்ஸியவாதிகளா ?//

    எந்த மதவாதி? சொர்ணமால்யாக்களுடன் குத்தாட்டம் போட்ட, நடுவயதுப் பெண்மணிக்கு வேட்டியை விலக்கிக் காட்டிய மதவாதியா?

    மார்க்சியவாதி முழுநேர ஒழுக்கக் காவலராயும் இருக்க முடியாது – உன்னைப் போன்ற ஒழுக்கங்கெட்ட / தரங்கெட்டத்தனத்தின் பிரச்சாரகர்களை அம்பலப்படுத்துவதை தவிர்க்கவும் முடியாது.

  37. லக்கி லுக் எழுதியிருக்கா விட்டால் இன்னொருவரை வைத்து அதே வகையான போர்னோ க்ராபிகளை எழுதிக்குவிக்கத் தான் போகீறது குமுதம்.

    இதில் லக்கிலுக் நமக்குத் தெரிந்தவர் என்பதால் இந்த வாங்கு வாங்குகிறோம் அவ்வளவுதான்…….

    எந்த எழுத்தாளருக்கும் சரி , முதலில் பிசினஸ் முக்கியம்……பிறகு அதன் மூலம் புகழ்….அதன் பிறகு தான் சமூகம் / ஒழுக்கம் / எக்ஸ்டரா….எக்ஸ்டரா.

    எந்த நடிகையாவது முதல் படத்திலேயே , நான் நல்லா நடிச்சு தேசிய விருது வாங்கணும்னு சொல்றாங்களா என்ன?

    நெறைய படம் நடிச்சு மார்க்கெட் போற சமயத்தில் தான் , தன் க்ளாமருக்கு மவுசு குறைஞ்ச சமயத்தில் தான் நான் நல்ல படங்களில் நடிக்கணும்னு ஆசைப் படறாங்க…

    முதலில் பதிவுலகிலிருந்து ஒருவர் பிரபல இதழில் தொடர் எழுதுகீறார் என்பதற்கான பாராட்டுக்களைத் தான் அவரது தோழ/தோழிகள் தெரிவித்திருக்கிரார்கள்…..அதிலென்ன தவறு.

    இரண்டாவது அவர் போர்னோ க்ரைமை வளர்க்கிறார் என்றால் அவர் ஒண்றும் காலச்சுவட்டிலோ , புதிய சனநாயகத்திலோ அப்படி எழுதவில்லையே…??????? மஞ்சள் பத்திரிக்கையில் தானே எழுதுகிறார்…?

    சமூக வக்கிரங்கள் ஒரு சில தொடர்களால் உந்தப்படுவது இல்லை..!!!!

    • மதிபாலா,

      லக்கிலுக் மட்டுமல்ல யார், எந்த பத்திரிகையில் எழுதியிருந்தாலும் விமரிசித்திருப்போம். உங்களுக்கு லக்கி எழுதியது மட்டும் தெரிவதால் அப்படி நினைக்கிறீர்கள். புதிய கலாச்சாரத்தில் ஜூ.வி, நக்கீரன் உட்பட எல்லோரையும் விமரிசனம் செய்து கட்டுரைகள் வந்துள்ளன.

      அடுத்தது லக்கி எழுதியிருப்பது பிசினஸ் என்று வக்கலாத்து வாங்கியிருப்பது படு அபத்தமாக இருக்கிறது. இது ஒன்றும் தேங்காய், மாங்காய் பிசினஸ் அல்ல. அப்படியே இருந்தாலும் தேங்காய் அழுகியிருக்கிறது என்றால் வாங்குபவர் விற்பவரைக் கேட்பதற்கு உரிமை உள்ளது. முழு இளைஞர்களின் வாழ்க்கையோடு தொடர்புள்ள பாலியல் பிரச்சினைகளை எழுதும்போது கண்டிப்பாய் பொறுப்புணர்வு வேண்டும். அப்படி இல்லை என்றால் அதை கேட்பதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது.

      நடிகைகளைப்போல அவிழ்த்துப் போட்டால் இலட்ச்தில் சம்பாதிக்காலம் என்பது உண்மைதான். ஆனால் அப்படி வாழ்வது தவறு என உழைத்து வாழும் பெண்கள்தான் இங்கு பெரும்பான்மை.

      லக்கிக்கு வாழ்த்து தெரிவித்தது தவறல்ல. ஆனால் அந்த வாழ்த்துக்கு பொறுப்பாக அவர் இல்லையென்றால் இடித்துரைப்பதும் வாழ்த்து சொன்னவர்களின் பொறுப்புதான்.

      சமூக வக்கிரங்கள் இந்த தொடரால் மட்டுமல்ல, இந்த தொடரலும் உருவாகும் என்பதே. இதற்கு மற்றவர்கள்தான் காரணம் நானல்ல என்பது பிரச்சினைக்கு முகம் கொடுக்க மறுப்பதே.

      • அடுத்தது லக்கி எழுதியிருப்பது பிசினஸ் என்று வக்கலாத்து வாங்கியிருப்பது படு அபத்தமாக இருக்கிறது. இது ஒன்றும் தேங்காய், மாங்காய் பிசினஸ் அல்ல. அப்படியே இருந்தாலும் தேங்காய் அழுகியிருக்கிறது என்றால் வாங்குபவர் விற்பவரைக் கேட்பதற்கு உரிமை உள்ளது. முழு இளைஞர்களின் வாழ்க்கையோடு தொடர்புள்ள பாலியல் பிரச்சினைகளை எழுதும்போது கண்டிப்பாய் பொறுப்புணர்வு வேண்டும். அப்படி இல்லை என்றால் அதை கேட்பதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது.//

        நன்றி……

        நான் சொன்னது அப்படியே இருக்கிறது..இருப்பினும் இன்னுமொரு முறை

        டாஸ்மாக் கடைக்கு போய் ப்ராந்தி விற்கிறான் என்று குறை பட்டுக்கொள்வது முறையா?? ப்ராந்தி விற்பது அவர்கள் தொழில்…..அதைப் பிடிக்கவில்லையென்றால் ப்ராந்தி விற்பவனை கடிந்து கொள்ளலாமா இல்லை டாஸ்மாக்கை இழுத்து மூடச் சொல்லலாமா??

        லக்கிலுக் வெறும் ப்ராந்தி விற்பவர்………….விற்கச் சொல்வது யார் என்று உங்களுக்கே தெரியும்….

        எய்தவன் இருக்க அம்பை நோவானேன்….

        நிற்க இதையும் கூட லக்கிலுக்கிற்காக வக்காலத்து வாங்குவதற்காக எழுதவில்லை…..

        இதைப் போன்ற மஞ்சள் பத்திரிக்கைகளின் இதழியல் தர்மம் தானே இங்கே ப்ரச்சினை?

        **

        சமூக வக்கிரங்கள் இந்த தொடரால் மட்டுமல்ல, இந்த தொடரலும் உருவாகும் என்பதே. இதற்கு மற்றவர்கள்தான் காரணம் நானல்ல என்பது பிரச்சினைக்கு முகம் கொடுக்க மறுப்பதே.//

        இந்த ஒரு தொடர் மட்டுமல்ல , இதைவிட வக்கிரமான தொடர்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன……

        காரணம் பொத்தி வைக்கப்பட்ட நமது சமூகக் கட்டமைப்பு…

        எனது பள்ளீ ஆசிரியர் – மிக மூத்தவர் – பள்ளி ஹாஸ்டலில் சரோஜா தேவி புத்தகம் இருக்கும் , அதை வாங்கி வா என்று என் நண்பனை அனுப்பிய போது தான் சரோஜா தேவி புத்தகம் எனக்கு முதல் முறை அறிமுகமானது……….இங்கே யார் தவறு…???

        சொல்லித் திருத்த வேண்டிய ஒரு ஆசிரியரே தனது மாணவனைக் கெடுக்குமளவிற்கு எங்கிருந்து சமூகம் தன்னைக் கெடுத்துக்கொண்டதூ??? இது நடந்து இன்றைக்கு 13 வருடங்கள் ஆகின்றன………அப்போது ஏது கணினி? அப்போது ஏது இணையம்??? அப்போது எங்கிருந்து வக்கிரம் உருவானது?

        இங்கே தகவல்கள் நிறைந்து கிடக்கின்றன……..முன்பு மாதிரி யாராவது சொன்னால் தான் தெரியும் என்கிற காலமெல்லாம் மலையெறிப் போயிற்று…

        இல்லாவிட்டால் , சிவராஜ் சித்திய வைத்தியசாலை விளம்பரத்தைப் பாருங்கள் …உலகின் அத்துனை வக்கிரங்களையும் சொல்லிக்கொடுக்கிறார்கள்…

        ஆக , இது போன்ற தொடர்கள் சமூகத்தின் கேவல பக்கங்களை உரித்துக்காட்டுகின்றன என்று எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர இதனால தான் சமூகமே கெடுகிறது என்ற வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாயில்லை.

        • மதிபாலா,

          லக்கியை எதோ சூழ்நிலையின் கைதி போல பரிதாபப்படுகிறீர்கள். அவரை யாரோ அடித்து மிரட்டி அச்சுறுத்தி இந்த தொடரை எழுதவில்லையென்றால் நடப்பது வேறு என்று பிளாக்மெய்ல் செய்தா இந்த தொடர் எழுதப்படுகிறது? அவரை பிராந்தி விற்கச்சொன்னால் முடியாது என மறுக்கவேண்டியதுதானே? லக்கி இந்த சமூகத்தை தனியாக கெடுக்கிறார் என்று சொல்லவில்லை. ஆனால் அப்படி பாலியல் பிரச்சினைகளை வைத்து மக்களின் உணர்வை கேவலமாக சொறிந்து விட்டு ஆதாயம் அடையும் ஊடக முதலாளிகளிடம் லக்கி ஒப்புதலுடன் பணிபுரிகிறார். எனவே அவருக்கும் பங்குண்டு. என்ன குமுதம் செட்டியாரின் பங்கு 90 சதவீதமென்றால் லக்கிக்கு ஒரு பத்து கொடுக்கலாம். அளவில் அல்ல பிரச்சினை. ஒரு செயல் சமூகத்தில் என்ன விளைவு ஏற்படுத்தும் என்ற கண்ணோட்டம்தான் நமக்குள்ள வேறுபாடு.

          • //லக்கி இந்த சமூகத்தை தனியாக கெடுக்கிறார் என்று சொல்லவில்லை. ஆனால் அப்படி பாலியல் பிரச்சினைகளை வைத்து மக்களின் உணர்வை கேவலமாக சொறிந்து விட்டு ஆதாயம் அடையும் ஊடக முதலாளிகளிடம் லக்கி ஒப்புதலுடன் பணிபுரிகிறார். எனவே அவருக்கும் பங்குண்டு. என்ன குமுதம் செட்டியாரின் பங்கு 90 சதவீதமென்றால் லக்கிக்கு ஒரு பத்து கொடுக்கலாம். அளவில் அல்ல பிரச்சினை. ஒரு செயல் சமூகத்தில் என்ன விளைவு ஏற்படுத்தும் என்ற கண்ணோட்டம்தான் நமக்குள்ள வேறுபாடு.//

            வினவு. உங்கள் வார்த்தைப் பிரயோகங்கள் நாளாக நாளாக மேலும் மெருகேறி வருவதாக நினைக்கிறேன். எண்ணங்கள் எப்போதோ ஒருமுகப் பட்டிருக்கலாம். ஆனால் அவற்றைப் பிறருக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் இருக்கும் கட்டுப்பாடு என்னைக் கவர்கிறது.

            ஒரு குறை. குமுதம் செட்டியார் என்று சொல்லியிருக்க வேண்டாம். சாதிகள் பற்றி சம்பந்தமில்லாத இடங்களில் அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுவது வேண்டாமென்று நினைக்கிறேன். இங்கு குமுதம் ஆசிரியரின் சாதிக்கு இடமில்லை என்பது என் கருத்து.

    • //சமூக வக்கிரங்கள் ஒரு சில தொடர்களால் உந்தப்படுவது இல்லை..!!!!//

      இந்த ஒற்றைத்துருவ பார்வை தவறு. சமூக வக்கிரங்கள் தொடர்களால் பேணப்படுகின்றன. வக்கிரத் தொடர்கள் சமூக வக்கிரங்களால் பேணப்படுகின்றன. இப்படி தொடர்பு கொண்டுள்ள இவை.

      • இந்த ஒற்றைத்துருவ பார்வை தவறு. சமூக வக்கிரங்கள் தொடர்களால் பேணப்படுகின்றன. வக்கிரத் தொடர்கள் சமூக வக்கிரங்களால் பேணப்படுகின்றன. இப்படி தொடர்பு கொண்டுள்ள இவை.//

        ஒத்துக்கொள்கிறேன்.!

  38. ////////////லக்கி லுக் எழுதியிருக்கா விட்டால் இன்னொருவரை வைத்து அதே வகையான போர்னோ க்ராபிகளை எழுதிக்குவிக்கத் தான் போகீறது குமுதம்.
    இதில் லக்கிலுக் நமக்குத் தெரிந்தவர் என்பதால் இந்த வாங்கு வாங்குகிறோம் அவ்வளவுதான்…….////////////

    இதுபோன்று எண்ணற்ற மதிபாலாக்களின் முகமூடிகளுக்குள் பல லக்கிலுக்குகள் இருக்கிறார்கள். இங்கே வெம்பி வெடித்திருப்பது அண்ணன் மதிபாலா அல்ல அவருக்குள் இருக்கும் லக்கிலுக்குதான். பதில் சொல்லமுடியாத கோழைத்தனத்தில் தலைவன் இருக்கையில் அவனது ரசிகனிடமிருந்து இதைவிட வேறெந்த வெளிப்பாட்டை நாம் எதிர்பார்க்க முடியும்? மதிபாலாவைப் பொருத்தவரை தனக்குள் இருக்கும் வக்கிர லக்கிலுக்கு தனத்துக்கு ஒரு சப்பைக் கட்டுதானோ இப்பின்னூட்டம்?

    மன்னிக்கவும் மதிபாலா, லக்கியின் தொழில்தர்மத்துக்கு இத்தனை வக்காலத்துக்களை லக்கியாலேயே சொல்லியிருக்க முடியாது.

    ////////எந்த எழுத்தாளருக்கும் சரி , முதலில் பிசினஸ் முக்கியம்……பிறகு அதன் மூலம் புகழ்….அதன் பிறகு தான் சமூகம் / ஒழுக்கம் / எக்ஸ்டரா….எக்ஸ்டரா./////////

    இங்கே நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘எழுத்தாளர்’ என்பதை நீக்கிவிட்டு (உங்கள் தொழில்தர்ம வியாக்கியானத்தை) சாராய ரவுடி, கஞ்சாக்காரன், விபச்சாரி இன்னும் அனைத்து சமூக விரோத ‘தொழில்’தர்மர்களின் எந்த பதத்தை வேண்டுமானாலும் இட்டு நிரப்பி உங்கள் வாக்கியத்தை ஒரு முறை வாசித்துப்பாருங்களேன். எங்களது விமர்சனத்தின் நியாயத்தில் ஒரு பகுதியாவது அதில் உங்களுக்குத் தெரியும்.

    வாங்கிய காசுக்கு ஏற்ற வேலை செய்யவில்லை என்றகிற வெற்றுப் புலம்பலல்ல எமது விமர்சனம். ஒருவேளை அதுபோன்ற விமர்சனங்களை யாரேனும் செய்தால் அங்கே செல்லுபடியாகும் உங்களின் ‘தொழில் தர்ம’ வியாக்கியானம். இங்கே ஒரு வக்கிர சமூக விரோதி கொடுக்கும் காசு ஒரு சமூக பொறுப்புள்ள படைப்பாளியாக மிளிர வேண்டிய இளைஞனை வக்கிரப் பிரச்சாரகனாக சீரழிப்பதை விமர்சிக்கிறது இக்கட்டுரை. இதற்கு உங்களது பொருமல்கள் பொருந்தும் வகையில் உள்ளதா என்பதை தயவு செய்து யோசித்துப்பாருங்கள், நண்பர் மதிபாலா.

    ///////////சமூக வக்கிரங்கள் ஒரு சில தொடர்களால் உந்தப்படுவது இல்லை..!!!!/////////

    உண்மைதான் உங்களைப் போன்ற ‘நியாயவான்’கள் இருக்கும் வரையில் சமூக வக்கிரங்களை வளர்த்து பாதுகாப்பதில் தொடர்கள் என்ன பெரிசாக கிழித்துவிடமுடியும்?!

    • ஏகலைவன்,

      வாதிடும்போது ஒரு புதியவரிடன் நேருக்கு நேர் பேசுவதுபோல நினைத்துக் கொண்டு நிதானமாக பேசுங்கள். உள்ளடக்கம் எவ்வளவு வீரியமாக இருந்தாலும் வடிவத்தில் மென்மை வேண்டும். இல்லையேல் நீங்கள் பேசுவதை மாற்று கருத்துள்ளவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். நமது கோபத்தைக்கூட அரசியல் கருத்துக்களை மற்றவர்கள் பரிசீலனை செய்யுமளவுக்கு மாற்றுவதுதான் பலனளிக்கும்.

      அனைவருக்கும்,

      இங்கே ஈராக்கிலோ, மணிப்பூரிலோ, ஈழத்திலோ உள்ள ஒடுக்கப்படும் பெண்களை கற்பழிக்கவேண்டுமென்ற கொடுர வெறியுடன் அலைந்து கொண்டிருக்கும் மதி இண்டியா என்ற பயங்கர சைக்கோவை யாரும் பொருட்படுத்த தேவையில்லை.அது தான் பாட்டுக்கு அலைந்து விட்டு எங்காவது பாழடைந்த இட்த்தில் பதுங்கிக் கொள்ளும். அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தாலே அதன் வெறிபிடித்த கொழுப்பு கதறிவயாறு செத்துப்போகும்.

      • ஏகலைவன்,

        வாதிடும்போது ஒரு புதியவரிடன் நேருக்கு நேர் பேசுவதுபோல நினைத்துக் கொண்டு நிதானமாக பேசுங்கள். உள்ளடக்கம் எவ்வளவு வீரியமாக இருந்தாலும் வடிவத்தில் மென்மை வேண்டும். இல்லையேல் நீங்கள் பேசுவதை மாற்று கருத்துள்ளவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். நமது கோபத்தைக்கூட அரசியல் கருத்துக்களை மற்றவர்கள் பரிசீலனை செய்யுமளவுக்கு மாற்றுவதுதான் பலனளிக்கும்.//

        அன்பு நண்பருக்கு..

        நன்றி…

        நண்பர் ஏகலைவனின் பாணி எனக்குப் பழக்கமானதுதான்….அவர் எவ்வளவு கடுமையாகப் பேசினாலும் விவாதத்தின் தொனி மாறாது என்றே நம்புகிறேன்…

        தோழமையுடன்
        மதிபாலா

    • வாங்க ஏகலைவன்…
      .
      உங்களோட சூடுபறக்கும் வாதங்களை ஓர்க்குட்டில் கேட்டது. அதற்கப்புறம் இப்போதான்……நல்லா இருக்கீங்களா???
      //
      இதுபோன்று எண்ணற்ற மதிபாலாக்களின் முகமூடிகளுக்குள் பல லக்கிலுக்குகள் இருக்கிறார்கள். இங்கே வெம்பி வெடித்திருப்பது அண்ணன் மதிபாலா அல்ல அவருக்குள் இருக்கும் லக்கிலுக்குதான். பதில் சொல்லமுடியாத கோழைத்தனத்தில் தலைவன் இருக்கையில் அவனது ரசிகனிடமிருந்து இதைவிட வேறெந்த வெளிப்பாட்டை நாம் எதிர்பார்க்க முடியும்? மதிபாலாவைப் பொருத்தவரை தனக்குள் இருக்கும் வக்கிர லக்கிலுக்கு தனத்துக்கு ஒரு சப்பைக் கட்டுதானோ இப்பின்னூட்டம்?

      மன்னிக்கவும் மதிபாலா, லக்கியின் தொழில்தர்மத்துக்கு இத்தனை வக்காலத்துக்களை லக்கியாலேயே சொல்லியிருக்க முடியாது.///

      முதலில் லக்கிலுக்கின் தொழில்தர்மத்துக்கு வக்காலத்து வாங்குவது என் நோக்கமல்ல என்று சொல்லிக் கொள்கிறேன்….அவரது ரசிகப்பொடி நானென்று சொன்னால் அவரே நம்ப மாட்டார்…..அவருக்கும் , எனக்குமான தொடர்பு அங்கங்கே ஒன்றிரண்டு பின்னூட்டங்களைத் தவிர வேறொன்றுமில்லை…இங்கே நான் நண்பர் லக்கிலுக்கிற்காக பரிந்து பேசவுமில்லை….!

      ****

      எது வக்கிரம் என்பதற்கான அளவுகோலை நீங்கள் எமக்கு தெளிவு படுத்த வேண்டும்…

      இணையத்தில் பிட்டு படம் பார்ப்பதா இல்லை செக்ஸி போட்டோக்களை வலைப்பூவில் போடுவதா?

      அல்லது…

      இவன் பொண்டாட்டியை அடுத்தவன் கூட்டிக்கொண்டு போனான்….கள்ளக் காதலுனுக்காக புருஷனை கொன்ற பொண்டாட்டி……பத்து பேர் சேர்ந்து ஒரு சிறுமியைக் கற்பழிப்பத்தார்கள்………..பருத்தி வீரன் படம் போல் குச்சு வீட்டில் ஒதுங்குவதா…..???

      இரண்டைக் காட்டிலும் எது வக்கிரம்?????????

      ******
      இங்கே நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘எழுத்தாளர்’ என்பதை நீக்கிவிட்டு (உங்கள் தொழில்தர்ம வியாக்கியானத்தை) சாராய ரவுடி, கஞ்சாக்காரன், விபச்சாரி இன்னும் அனைத்து சமூக விரோத ‘தொழில்’தர்மர்களின் எந்த பதத்தை வேண்டுமானாலும் இட்டு நிரப்பி உங்கள் வாக்கியத்தை ஒரு முறை வாசித்துப்பாருங்களேன். எங்களது விமர்சனத்தின் நியாயத்தில் ஒரு பகுதியாவது அதில் உங்களுக்குத் தெரியும்.//

      உங்கள் விமர்சனத்தின் நியாயத்தை நான் சற்றும் குறை சொல்லவில்லை……ஆனால் உங்கள் விமர்சனம் தவறான திசையில் நிற்கிறது என்றுதான் சொல்கிறேன்……

      நேற்று கூட ஒரு குமுதம் பார்த்தேன்…

      அதில் இருக்கும் 150 பக்கங்களீல் 50 சதவீதத்திற்கும் மேல் சினிமா , வக்கிரத்தைத் தூண்டும் புகைப்படங்கள்……..திருப்பதியில் சீரழியும் சிறுவர்கள் என வக்கிரத்தையே தாங்கி நிற்கினறன அனேக பக்கங்கள்…

      நமது விமர்சனங்கள் அத்தகைய தவறான இதழியல்களைப் பற்றி இருக்க வேண்டும்…

      காரணம் – அவைகள் புற்று நோய் போல – மெல்ல மெல்ல நல்ல சமூகத்தை அரித்து வீண்டித்து விடும்…மெல்லச்சாகடிக்கும் புற்றுநோயை விட்டுவிட்டு எப்போதாவது வலிக்கும் தலைக்கு மருந்து தயாரித்துக்கொண்டிருப்பதில் யாருக்கு லாபம்….? உங்களுக்கு தான் நேர விரயம்….!

      ****

      உண்மைதான் உங்களைப் போன்ற ‘நியாயவான்’கள் இருக்கும் வரையில் சமூக வக்கிரங்களை வளர்த்து பாதுகாப்பதில் தொடர்கள் என்ன பெரிசாக கிழித்துவிடமுடியும்?!//

      வக்கிரங்களாக நமக்கு தெரிபவை மற்றவர் கண்ணுக்கு நாகரீகமாகத் தெரியலாம்…நமக்கு நாகரீகமாகத் தெரிபவை மற்றவர்களுக்கு வக்கிரமாகத் தெரியலாம்….!

      பிகினிகள் தமிழ்நாட்டில் வக்கிரம்……..அதே பிகினிகள் மேல்நாட்டில் சாதாரண உடை..

      இப்போது பிரச்சினை பிகினி உடையா இல்லை பார்க்கும் பார்வையா???

      • //இப்போது பிரச்சினை பிகினி உடையா இல்லை பார்க்கும் பார்வையா???//

        பிகினி உடை மேற்குலகிலும் கவர்ச்சியானதுதான். பெண்களின் உடை மற்றும் உடலுறவு குறித்து நம்மிடம் தற்போது நிலவும் பல்வேறு கருத்துக்குறைபாடுகளில் பிரிட்டிஸ் ஆட்சியின் பங்கு குறிப்பிடத்தகுந்தது.

        பெண் உடல் என்பது குறித்து சொத்துடமை சமூகம் கட்டமைத்துள்ள இந்த கருத்தாங்களை ரயாகரனின் சில கட்டுரைகளை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.(சுட்டியை தேடி எடுத்துக் கொள்ளவும்)

        எனவே, மதிபாலாவின் ஒப்பீடு சரியாக பொருந்தவில்லை.

      • //பிகினிகள் தமிழ்நாட்டில் வக்கிரம்……..அதே பிகினிகள் மேல்நாட்டில் சாதாரண உடை.//

        நூறு வருடம் முன்பு மார்பை மறைக்காமல் அலைந்த சமூகம் தமிழகத்தின் தென்பகுதியில் இருந்தது(தோள் சீலை போராட்டம்). கிராமங்களில் உள்ளாடை அணியும் பழக்கம் மிகச் சமீபத்தில் வந்தது. அதற்கு முன்பு பிகினியை விட கவர்ச்சியாகவே வலம் வந்தனர் பெண்கள்.

        பிகினியை பொது இடங்களில் அணிவது மேற்குலகில் கவர்ச்சிகரமானதே ஆனால் நாமோ கூச்சமின்றி படு கவர்ச்சிகரமான உடலில் கவர்ச்சிக்குரிய பகுதிகளை காட்டும் வாய்ப்புள்ள(அப்படியில்லாமலும் சேலை அணியலாம்) சேலை என்னும் உடையை பெருவாரியாக அணிந்து வருகிறோம்.

        உழைக்கும் பெண்கள் அணியும் உடைகள் அவர்கள் விரும்பாவிட்டாலும் விலகி கவர்ச்சி காட்டவே செய்யும். அது பார்ப்பவர்களின் சமூக பார்வையை பொருத்து மாறுபடும்.

        லக்கி லுக் பாணியில் என்றால், சுகுனா திவாகர் எழுதிய ஒரு கவிதையில் பச்சை பயிர்களை தொடும் விவசாய பெண்களின் மார்பு அவருக்கு கிளுகிளுப்பு ஓட்டும். நமக்கோ அது தாயின் பாசத்தை அள்ளித் தரும் மண்ணுடன் ஒப்பிடும் அழகு வெளிப்படும்.

        உண்மைதான் பார்க்கும் பார்வைதான் தீர்மானிக்கிறது. அந்த பார்வை ஒருவது சமூக கண்ணோட்டத்திலிருந்து வருகிறது. லக்கி லுக்கோ அத்தகைய சமூக கண்ணோட்டத்தில் விசம் விதைக்கும் ஏஜெண்டாக உள்ளார்.

      • பிகினி உடை மேற்குலகிலும் கவர்ச்சியானதுதான். பெண்களின் உடை மற்றும் உடலுறவு குறித்து நம்மிடம் தற்போது நிலவும் பல்வேறு கருத்துக்குறைபாடுகளில் பிரிட்டிஸ் ஆட்சியின் பங்கு குறிப்பிடத்தகுந்தது.//

        ஆனால் அதை அங்கே யாரும் ஜொள்ளு விட்டுப் பார்ப்பதில்லையே??

        எந்த ஒப்பீடு சரியாகப் பொருந்தவில்லை நண்பரே?

      • இவன் பொண்டாட்டியை அடுத்தவன் கூட்டிக்கொண்டு போனான்….கள்ளக் காதலுனுக்காக புருஷனை கொன்ற பொண்டாட்டி……பத்து பேர் சேர்ந்து ஒரு சிறுமியைக் கற்பழிப்பத்தார்கள்………..பருத்தி வீரன் படம் போல் குச்சு வீட்டில் ஒதுங்குவதா…..???

        இரண்டைக் காட்டிலும் எது வக்கிரம்?????????

        மதிபாலா அவர்களுக்கு,

        அது தவறு என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா. பாலியல் ரீதியிலான கட்டுரையின் நோக்கம் பெண்ணை ஒரு உடலை போகப்பொருளாய் மாற்றுவதாய் இருக்க்கக்கூடாது என்பதுதானே தேவை. இதழியல்களை பற்றி விமரிசனம் செய்யாமல் இல்லை. கண்டிப்பாக ஆபாச தொடரை கத்தியினை கழுத்தில் வைத்தா எழுதச்சொல்கிறார்கள்?

        மக்களின் தேவைக்குத்தகுந்தபடி இதழியல்கள் இல்லை என்பதனை ஒத்துக்கொள்கிறீர்களா? அப்படியெனில் தேவையில்லாததை எழுதும் எழுத்தாளர்களுக்கு அதில் பங்கில்லையா?

        \\இரண்டாவது அவர் போர்னோ க்ரைமை வளர்க்கிறார் என்றால் அவர் ஒண்றும் காலச்சுவட்டிலோ , புதிய சனநாயகத்திலோ அப்படி எழுதவில்லையே…??????? மஞ்சள் பத்திரிக்கையில் தானே எழுதுகிறார்…?\\

        இங்கே இப்படித்தான் எழுதுவார்கள் கேள்வி கேட்கக்கூடாதென்கிறீர்களா? என்னங்க செய்யறதப்ப அதுக்குன்னு இருக்குற இடத்துல செஞ்சா சரியாயிடுமோ.

      • லக்கி லுக் பாணியில் என்றால், சுகுனா திவாகர் எழுதிய ஒரு கவிதையில் பச்சை பயிர்களை தொடும் விவசாய பெண்களின் மார்பு அவருக்கு கிளுகிளுப்பு ஓட்டும். நமக்கோ அது தாயின் பாசத்தை அள்ளித் தரும் மண்ணுடன் ஒப்பிடும் அழகு வெளிப்படும்.//

        எல்லாம் சரி….

        எவ்வளவு பேர் வெளியில் தாயின் பாசத்தின் அழகை வெளியில் ஒப்பிட்டுக்கொண்டே உள்ளுக்குள் கிளுகிளுப்படைகிறார்கள் நண்பரே………

        வெளிப்படையாக ரசிப்பவனுக்கோ அது சபலம்…உள்ளுர ரசித்துக்கொண்டே வெளியில் நடிப்பவன் தான் வக்கிரன்…!

      • //

        எவ்வளவு பேர் வெளியில் தாயின் பாசத்தின் அழகை வெளியில் ஒப்பிட்டுக்கொண்டே உள்ளுக்குள் கிளுகிளுப்படைகிறார்கள் நண்பரே………

        வெளிப்படையாக ரசிப்பவனுக்கோ அது சபலம்…உள்ளுர ரசித்துக்கொண்டே வெளியில் நடிப்பவன் தான் வக்கிரன்…!//

        மதிபாலா அவர்களே,

        நீங்கள் இரண்டுமே பெண்ணை ஒரு பொருளாக, கட்டற்ற ஆதிக்கத்தின் அடிமையாக மாற்றுவதுதானே நோக்கம்?

      • மக்களின் தேவைக்குத்தகுந்தபடி இதழியல்கள் இல்லை என்பதனை ஒத்துக்கொள்கிறீர்களா? அப்படியெனில் தேவையில்லாததை எழுதும் எழுத்தாளர்களுக்கு அதில் பங்கில்லையா//

        சத்தியமாக ஒத்துக்கொள்கிறேன்…அதுதான் உண்மையும் கூட…அதில் வக்கிரமாக எழுதும் எழுத்தாளர்களுக்கும் கூட பங்குண்டு. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

        ஆனால் , ஒரு எழுத்தாளன் இங்கே நியாயமானதையும் , நிதர்சனமானதையும் , சமூக ஒழுங்கையும் வலியுறுத்த வேண்டுமானால் தான் போட்ட வட்டத்திற்குள்ளேயே சுழல வேண்டும்…

        அத்தகைய வட்டத்திற்குள்ளேயே அவன் சுற்றிக்கொண்டிருந்தால் அடைய நினைக்கும் இலக்கினை அடைய முடியாது. அப்படி அடைய இயலவில்லை என்றால் அவன் கவனிக்கப்படப் போவதில்லை.

        தான் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒரு சில சமரசங்களைச் செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்…

        அவ்வாறு சமரசம் செய்து கொள்ளாதவனை , நீங்கள் , நான் ஏன் வினவு இவையும் கூட பேசுவதேயில்லை….பேசவும் மாட்டார்கள்…ஒரு ஓரமாக ஜோல்னா பையைத் தொங்கவிட்டுக்கொண்டு தெருவின் ஓரத்தில் ஒரு பை டூ டீயை சாப்பிட்டுவிட்டு துண்டு பீடியை குடித்துக் கொண்டிருப்பான்….!

        அவன் சமரசம் செய்து கொள்வதாலேயே தவறான கோணத்தில் பார்க்கப்படுகிறான்…

        அவன் சமரசமின்றி எழுதும் போது கவனிக்காத இந்த உலகம், அவன் எதையாவது எழுதி புகழ் பெற எத்தனிக்கும் போது கண்டு கொள்கிறது…

        இப்போது சொல்லுங்கள்………….
        ஏன் சமரசமற்ற பல எழுத்தாளர்கள் கவனிக்கப்படுவதேயில்லை?????

        மூள்ளும் மலரும் அருமையான படம் தான். மகேந்திரன் சமரசமற்ற இயக்குனர் தான்….ஆனால் ?????? ஏன் அவரால் சம்பாதிக்கக் கூடிய ஒரு திரைப்பட இயக்குநராய் வர இயலவில்லை?

        நல்ல படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன….ஆனால் அவை ஏன் மக்களைச் சென்றடைவதில்லை???

        காரணம் – சமூகம் ஒரு சந்தர்ப்பவாதச் சாக்கடையில் சிக்கி உழன்று கொண்டு இருக்கிறது…

        அதில் இருக்கும் அனைவருமே சந்தர்ப்பவாதிகள் தான்….அவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதற்காக சமூகம் அவர்களை புறக்கணிப்பதுமில்லை……….சந்தர்ப்பவாதியல்லாதவர்களை சமூகம் போற்றுவதுமில்லை. !

        அப்படியொரு சூழலில் ஏதோ சந்தர்ப்பவாதியை நொந்து என்ன பிரயோசனம்…???? சந்தர்ப்பவாதிகளை மட்டுமே அங்கீகரிக்கும் சமூகத்தை வைத்துக்கொண்டு??

        கொஞ்சம் சிக்கலானதுதான்….நான் சொல்ல வருவதை எழுத்துக்களில் வடிக்க….

      • மதிபாலா அவர்களே,

        நீங்கள் இரண்டுமே பெண்ணை ஒரு பொருளாக, கட்டற்ற ஆதிக்கத்தின் அடிமையாக மாற்றுவதுதானே நோக்கம்?///

        உண்மையே நண்பர் கலகம்…!

        இரண்டுமே தவறு.தான்..!

        ஆனால் இன்றைய நிலை வேறு…பெண்களே தங்களைக் காட்சிப் பொருளாக்குகிறார்களே???

      • அந்த சாக்கடை சமூகத்தினை மாற்றவேண்டுமா வேண்டாமா?

        அப்படி சாக்கடை சமூகத்தினை மாற்றும் போதோ , அதற்கு முயலும் போது அதற்கு காரணமானவர்கள் மட்டுமல்ல தன்னையறியாது மாட்டிக்கொன்டிருப்பவர்களையும் இழுத்து வெளியில் தானே போட்டாக வேண்டும். ஒரு படைப்பாளிக்கு சமூக பொறுப்பு இருக்கிறதா இல்லையா?

        சாக்கடை சமூகத்தினை மாற்றியதால்தான் ராமசாமி தந்தை பெரியாரானார்? மாற்ற யாருமில்லை என கூறுவது ஒரு புறம்/

        நீங்கள் தயாரா? ஏன் ? எது உங்களை தடுக்கிறது.

        //ஆனால் இன்றைய நிலை வேறு…பெண்களே தங்களைக் காட்சிப் பொருளாக்குகிறார்களே???//

        அது கூட ஆணாதிக்கத்தின் அடிபணிந்து போனதும், அடிமைத்தனமும்தானே தோழர். அதுவும் தவறுதானே . ஏன் மாற்றக்கூடாது

      • மேலே ‘விடுதலை’ என்ற பெயரில் வெளியாகியுள்ள பின்னனூட்டம் நான் எழுதியதல்ல என் பெயரில் தவறுதலாக வந்திருக்கிறது,

  39. //இங்கே நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘எழுத்தாளர்’ என்பதை நீக்கிவிட்டு (உங்கள் தொழில்தர்ம வியாக்கியானத்தை) சாராய ரவுடி, கஞ்சாக்காரன், விபச்சாரி இன்னும் அனைத்து சமூக விரோத ‘தொழில்’தர்மர்களின் எந்த பதத்தை வேண்டுமானாலும் இட்டு நிரப்பி உங்கள் வாக்கியத்தை ஒரு முறை வாசித்துப்பாருங்களேன். எங்களது விமர்சனத்தின் நியாயத்தில் ஒரு பகுதியாவது அதில் உங்களுக்குத் தெரியும்.

    வாங்கிய காசுக்கு ஏற்ற வேலை செய்யவில்லை என்றகிற வெற்றுப் புலம்பலல்ல எமது விமர்சனம். ஒருவேளை அதுபோன்ற விமர்சனங்களை யாரேனும் செய்தால் அங்கே செல்லுபடியாகும் உங்களின் ‘தொழில் தர்ம’ வியாக்கியானம். இங்கே ஒரு வக்கிர சமூக விரோதி கொடுக்கும் காசு ஒரு சமூக பொறுப்புள்ள படைப்பாளியாக மிளிர வேண்டிய இளைஞனை வக்கிரப் பிரச்சாரகனாக சீரழிப்பதை விமர்சிக்கிறது இக்கட்டுரை.//

    அதே நியாயம் உங்களுக்கு இல்லையா ?

    அப்புறம் என்னா ..க்கு உங்க தலைவர்ர்ர்ர்ர்ர்ர் அசுரன் ஏகாதிபத்திய சுரண்டல் பன்னாட்டு கம்பேனிக்கு பொட்டிதட்ட போனாரு ?

    புரச்சியை எதிர்நோக்கி தடையரண்களை ஏற்படுத்தி காத்திருக்க வேண்டியதுதானே ?

    நீங்கெல்லாம் கொளுக குன்றுக , மத்தவிங்கெல்லாம் இ வாயனுகளா?

    (இந்த கேள்விக்கு மட்டும் யாருமே பதில் சொல்றதில்லையே ஏன் ? அசுரன் அண்ணன் உங்களுக்கும் ஏகாதியபத்திய அடிவருடும் வேலை வாங்கிதரதா சொன்னாரா ?)

  40. இந்திய மாவோயிஸ்ட்டுக்களின் இரகசிய ஆவணம்//

    உடனடி இலக்குகள்’ என்ற உப தலைப்பின் கீழ் கட்சியும் அதன் ஆயுதக் கிளைகளும் தந்திரோபாயமான பதில்தாக்குதல்களை பல்வேறு வடிவங்களிலான ஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்ச் சக்திகளுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்த வேண்டிய தேவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    பகைவரின் புதிய யுத்தத்தைத் தோற்கடிக்கவும் மக்கள் யுத்தத்தை தக்கவைக்கவும் நாடளாவிய ரீதியில் மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.//

    ஏ போய் புரச்சிக்கு தயாராகுங்கப்பா ,

    ம்ம் கிளப்புங்கள் , பொன்னுலம் தயாராகவுள்ளது.
    http://inioru.com/?p=4128

  41. மதிபாலா,

    லக்கி சில்லறையாக பிராந்தி விற்பவர் அல்ல – காய்ச்சுபவர்
    குமுதம் இப்படி பலரால் காய்ச்சப்படும் பிராந்தியை வாங்கி ஒரே லேபிளில் விற்கும் மல்லையா

    • லக்கி சில்லறையாக பிராந்தி விற்பவர் அல்ல – காய்ச்சுபவர்
      குமுதம் இப்படி பலரால் காய்ச்சப்படும் பிராந்தியை வாங்கி ஒரே லேபிளில் விற்கும் மல்லையா//

      நண்பருக்கு . அது ஒரு உதாரணத்திற்குச் சொல்லப்பட்டது…கடைசியில் என்ன பிராந்தி விக்கிறவன்னு சொன்னியான்னு லக்கி சண்டைக்கு வந்துடப் போறார்…

      ஹிஹிஹிஹி

  42. லக்கியை எதோ சூழ்நிலையின் கைதி போல பரிதாபப்படுகிறீர்கள். அவரை யாரோ அடித்து மிரட்டி அச்சுறுத்தி இந்த தொடரை எழுதவில்லையென்றால் நடப்பது வேறு என்று பிளாக்மெய்ல் செய்தா இந்த தொடர் எழுதப்படுகிறது? அவரை பிராந்தி விற்கச்சொன்னால் முடியாது என மறுக்கவேண்டியதுதானே? லக்கி இந்த சமூகத்தை தனியாக கெடுக்கிறார் என்று சொல்லவில்லை. ஆனால் அப்படி பாலியல் பிரச்சினைகளை வைத்து மக்களின் உணர்வை கேவலமாக சொறிந்து விட்டு ஆதாயம் அடையும் ஊடக முதலாளிகளிடம் லக்கி ஒப்புதலுடன் பணிபுரிகிறார். எனவே அவருக்கும் பங்குண்டு.//

    அதையே தான் நானும் சொல்கிறேன் நண்பரே….அவர் தான் என்ன சமூகத்தைத் திருத்த வந்த போராளி என்று சொல்லிக்கொண்டு போர்னோ தொடர் எழுதப் போனாரா என்ன????????? அது அவருக்குப் பிழைப்பு….அதைத்தான் அவர் செய்கிறார்…….! இன்று சமரசமற்ற எழுத்தாளர்கள் ஒன்றிரண்டு பேரையாவது வெகுஜன பத்திரிக்கைகளில் சுட்டிக்காட்டுங்களேன் பார்ப்போம்…அப்படி இருப்பவர்கள் எல்லோரும் சிறு பத்திரிக்கை வட்டங்களில் எழுதி டீக்குடிக்கக் கூட காசில்லாமல் தேய்ந்து போகிறார்கள்…

    இங்கே சமரசம் செய்து கொள்ளாமல் எழுதி புகழும் , பணமும் பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத போது வளரும் எழுத்தாளரான லக்கிலுக்கை மட்டும் நொந்து கொள்வானேன் என்பதே எனது பின்னூட்டத்தின் சாரம்சம் தோழரே….

    *****

    என்ன குமுதம் செட்டியாரின் பங்கு 90 சதவீதமென்றால் லக்கிக்கு ஒரு பத்து கொடுக்கலாம். அளவில் அல்ல பிரச்சினை. ஒரு செயல் சமூகத்தில் என்ன விளைவு ஏற்படுத்தும் என்ற கண்ணோட்டம்தான் நமக்குள்ள வேறுபாடு..///

    அது சமுகத்தின் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விட , அதையும் விலை கொடுத்து வாங்கிப் படிக்குமளவிற்கு சமூகம் சீரழிந்து போனதன் காரணம் என்ன என்பதே எனது கேள்வி…தேவை நமது கலாச்சாரம் பற்றிய பார்வை மாற்றம்..

    இதே தொடர்பில் நான் முன்பொருமுறை எழுதிய ஒரு பதிவு……

    “அஞ்சரைக்குள்ள வண்டி” காப்பாத்தும் கலாச்சாரம்.!

    http://www.mathibala.com/2009/01/blog-post_5190.html

    • //அது சமுகத்தின் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விட , அதையும் விலை கொடுத்து வாங்கிப் படிக்குமளவிற்கு சமூகம் சீரழிந்து போனதன் காரணம் என்ன என்பதே எனது கேள்வி…தேவை நமது கலாச்சாரம் பற்றிய பார்வை மாற்றம்..//

      சமூகத்தில் நிலவும் ஊனத்தை கிளறி கிழங்கு எடுக்கும் அயோக்கியத்தனத்தை சுட்டிக்காட்டினால் சமூகத்தில் ஊனம் நிலவுகிறெதே அதுதான் அடிப்படை என்று அங்கு கைகாட்டுவதும்,

      சமூகத்தில் நிலவும் ஊனத்தைச் குறிப்பிட்டால் அதை கிளறி கிழங்கு எடுக்கும் அயோக்கியன் தான் காரணம் என்று இங்கு கைகாட்டுவதுமான நடைமுறை நம்மை எங்குமே கொண்டு செல்லாது.

  43. //வெளிப்படையாக ரசிப்பவனுக்கோ அது சபலம்…உள்ளுர ரசித்துக்கொண்டே வெளியில் நடிப்பவன் தான் வக்கிரன்…!//

    பிரச்சினை அதுவல்ல, நண்பரே. அப்படியொரு கண்ணோட்டத்தை பேணும், வளர்க்கும், ஊக்கப்படுத்தும், திருப்திப்படுத்தும் லக்கிலுக் பாணி கட்டுரைகள்தான் பிரச்சினை.

    வக்கிரன் இருக்கிறான் என்பது இருக்கட்டும். அந்த வக்கிரனின் வக்கிரத்தை சொறிந்து அங்கீகாரம் வழங்குபவன் குறித்துதான் இங்கு பேச்சே.

    வக்கிரம் குறித்த உங்களது வரையறை தவறு என்பது இன்னொரு பக்கம் இருக்கட்டும்.

    //உள்ளுர ரசித்துக்கொண்டே வெளியில் நடிப்பவன்// என்கிற அளவிலாவது நாகரிகமாக இருக்கும் ஒரு சமூக சூழலை வெளிப்படையாகவே ரசிக்கலாம் என்று கட்டவிழ்த்து விடுவதுதான் லக்கி போன்றவர்களின் எழுத்துக்கள் செய்யும் வேலை.

    அதாவது வக்கிரத்தை சபலம் என்பதாக மென்மைப்படுத்தும் ஒரு மேம்ப்பட்ட சமூகப் பணியையா லக்கியின் எழுத்து செய்கிறது என்று சொல்ல வருகிறீர்கள்? அது ஒரு மேம்ப்பட்ட சமூகப் பணியா மதிபாலா?

    மேலும், நீங்கள் குறிப்பிட்டது போன்றே வக்கிரமாக எல்லாருமே பார்க்கிறார்கள் என்பது தவறு. இதனை குறிக்கும் முகமாகவே இந்தியாவில் சில பத்து வருடங்களுக்கு முன்பு நிலவிய உடைக் கலாச்சாரம் குறித்த எடுத்துக்காட்டுக்களை முன் வைத்தேன். அவை இப்பொழுது உள்ளது போன்ற பாலியல் வக்கிரங்களை தூண்டியதாக தெரியவில்லை.

    இன்னும் சரியாகச் சொன்னால், 1990களுக்குப் பிறகான ஊடகங்களில் பெண் உடல் சார்ந்த சித்தரிப்புகள் படு கேவலமான எல்லைக்கே சென்று விட்டன. இவை உருவாக்கியிருக்கும் சமூக தாக்கங்கள் தனியே ஆய்வு செய்ய வேண்டிய ஒன்று. இந்த ஊடக செயல்பாடுகள் ஏற்கனவே இங்கு சமூகத்தில் நிலவிய பாலியல் மன ஊனத்தை இன்னும் கூர்மையாக வக்கிரப்படுத்தியதையே செய்தன. அத்தகைய செயல்பாடுகளில் ஒன்றுதான் லக்கியினுடையது.

    • //லக்கி லுக் பாணியில் என்றால், சுகுனா திவாகர் எழுதிய ஒரு கவிதையில் பச்சை பயிர்களை தொடும் விவசாய பெண்களின் மார்பு அவருக்கு கிளுகிளுப்பு ஓட்டும். நமக்கோ அது தாயின் பாசத்தை அள்ளித் தரும் மண்ணுடன் ஒப்பிடும் அழகு வெளிப்படும்.

      உண்மைதான் பார்க்கும் பார்வைதான் தீர்மானிக்கிறது. அந்த பார்வை ஒருவது சமூக கண்ணோட்டத்திலிருந்து வருகிறது. லக்கி லுக்கோ அத்தகைய சமூக கண்ணோட்டத்தில் விசம் விதைக்கும் ஏஜெண்டாக உள்ளார்.//

      மேலே உள்ள எனது கருத்தை உங்களது கருத்தில் ஊன்றி சிந்தியுங்களேன் மதிபாலா?

      சமூக கண்ணோட்டம் உருவாகும் சமூக அடிப்படை ஒரு பக்கம் இருக்கட்டும். அதை மாற்றியமைப்பதுதான் நிரந்தரமாக இந்த வக்கிரங்களுக்கான முடிவாக இருக்கும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னொரு பக்கம் இப்படி இந்த சமூக கண்ணோட்டத்தை தொடர்ந்து பேணி வளர்ப்பதற்கு எதிராக போராட வேண்டியிருப்பதை மறுக்கிறீர்களா மதிபாலா?

      இரண்டு இடங்களிலும் போராட வேண்டியுள்ளது அல்லவா?

      • மேலே உள்ள எனது கருத்தை உங்களது கருத்தில் ஊன்றி சிந்தியுங்களேன் மதிபாலா?

        சமூக கண்ணோட்டம் உருவாகும் சமூக அடிப்படை ஒரு பக்கம் இருக்கட்டும். அதை மாற்றியமைப்பதுதான் நிரந்தரமாக இந்த வக்கிரங்களுக்கான முடிவாக இருக்கும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னொரு பக்கம் இப்படி இந்த சமூக கண்ணோட்டத்தை தொடர்ந்து பேணி வளர்ப்பதற்கு எதிராக போராட வேண்டியிருப்பதை மறுக்கிறீர்களா மதிபாலா?

        இரண்டு இடங்களிலும் போராட வேண்டியுள்ளது அல்லவா?//

        இரண்டு இடங்களிலும் போராட வேண்டியது எவ்வளவுக்கெவ்வளவு உண்மை யோ அந்தளவு சமூக கண்ணோட்டம் உருவாக்கும் சமூக அடிப்படையை மாற்றியமைப்பதுதான் நிரந்தரமாக இந்த வக்கிரங்களுக்கான முடிவு என்பதும்…அத்தகைய நிரந்தர மாற்றத்திற்கான தேடலே உடனடித் தேவை என்பது என் கருத்து…

        **
        இந்த சமூக கண்ணோட்டத்தை தொடர்ந்து பேணி வளர்ப்பதற்கு எதிராக போராட வேண்டியிருப்பதை மறுக்கிறீர்களா மதிபாலா?//

        எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது நின்று விடுமே…..இதே லக்கிலுக்கோ வேறு யாரோ ஒருவருக்கான கதவு திறக்கப்படும் போது அவரது நேர்மையான எழுத்துக்கள் அங்கீகரிக்கப்படும் ஒரு சூழலில் நேர்மையற்ற எழுத்துக்களின் பக்கம் அவர் ஏன் போகப்போகிறார்….???

        இதுக்கு மேலேயும் கம்யூட்டரில் உட்கார்ந்திருந்தா சாப்பாடு கிடைக்காது என்கிற மேலான தத்துவத்தின் பால் இப்போது விடை பெற்றுக்கொள்கிறேன். முடிந்தால் நாளை சந்திக்கிறேன்..

        நன்றி.

        தோழமையுடன்
        மதிபாலா

    • வக்கிரம் குறித்த உங்களது வரையறை தவறு என்பது இன்னொரு பக்கம் இருக்கட்டும்.//

      தவறு என்று நீங்கள் முடிவு செய்து கொண்ட பின் விவாதம் எதற்கு அன்பு நண்பரே?

      ****

      அதாவது வக்கிரத்தை சபலம் என்பதாக மென்மைப்படுத்தும் ஒரு மேம்ப்பட்ட சமூகப் பணியையா லக்கியின் எழுத்து செய்கிறது என்று சொல்ல வருகிறீர்கள்? அது ஒரு மேம்ப்பட்ட சமூகப் பணியா மதிபாலா?//

      நான் லக்கிலுக்கின் எழுத்துக்களையோ , இல்லை அது கைகாட்டும் திசையை சரி தவறு என்று சொல்வதான விவாத்திற்குள்ளே நுழையவே இல்லை……

      நேற்று புஷ்பா தங்கதுரை…இன்று லக்கிலுக்…..நாளை யாரோ…..

      நேற்று நக்கீரன்….இன்று ரிப்போர்ட்டர்…..நாளை எதோ ஒரு பத்திரிக்கை.

      ஆக , ப்ரச்சினை ரிப்போர்ட்டரிலோ , லக்கிலுக்கிடமோ இல்லை..

      மாறாக ப்ரச்சினையின் ஆணி வேர் சமூகத்தில் இருக்கிறது. சமூகம் என்றால் சமூகத்தின் அங்கத்தினர்கள்…

      அங்கத்தினர்கள் என்றால் நீங்கள் , நான் , லக்கிலுக் இப்படி எல்லோரும்.

      சமூகத்தின் அங்கத்தினர்கள் பாலியல் பற்றிய தெள்வான அறிவையும் , சமூக ஒழுங்கிற்காக வரைமுறைகளையும் பேணுகின்ற போது இத்தகையவைகளெல்லாம் கடந்து போகும்…

      கவனிப்பாரற்றுப் போகும்…

      அத்தகைய சமூக மாற்றமென்பது , சமூகத்தின் ஒவ்வொரு படிமானத்திலும் இருக்க வேண்டும்…

      8 வது படிக்கும் வரை சிறுவனும் , சிறுமியும் பழகுவதை தவறாக எடுத்துக்கொள்ளாத இந்தச் சமூகம் 9 வது சென்றவுடன் பையங்கிட்ட பேசாதே என்கிறது..

      உணர்வுகளால் உந்தப் பட்டு , வயதின் பாலியல் தேடலின் ஏமாந்து போகும் ஒரு இளைஞியை ஒழுக்கம் கெட்டவள் என்று குற்றம் சாட்டுகிறது இந்த சமூகம்…! அதே வேலியை ஆணுக்குப் போட மறுக்கிறது…

      கற்பு என்ற வேலியை பெண்ணுக்கு மாத்திரம் போட்டு விட்டு சமூக ஒழுங்காம்…கலாச்சாரமாம்…!!!

      இதையெல்லாம் விட லக்கிலுக்கின் போர்னோ கட்டுரைகள் ஒன்றும் சமூகத்தைக் கெடுத்து விடவில்லை என்று நான் சொன்னால் அதை நான் லக்கிலுக்கிற்காக வக்காலத்து வாங்குகிறேன் என்று சொன்னால் எப்படி நண்பரே??

      • // இரண்டு இடங்களிலும் போராட வேண்டியது எவ்வளவுக்கெவ்வளவு உண்மை யோ அந்தளவு சமூக கண்ணோட்டம் உருவாக்கும் சமூக அடிப்படையை மாற்றியமைப்பதுதான் நிரந்தரமாக இந்த வக்கிரங்களுக்கான முடிவு என்பதும்…அத்தகைய நிரந்தர மாற்றத்திற்கான தேடலே உடனடித் தேவை என்பது என் கருத்து… //

        அதைத்தானே வினவு செய்துள்ளது. வினவு குழுவோ அல்லது அவர்களின் அமைப்போ லக்கியை மட்டும் விமர்சித்திருந்தால் நீங்கள் சொல்லுவதில் ஏதோ நியாயம் உள்ளது என்றாவது யோசிக்கலாம். ஆனால், அவர்களோ தொடர்ந்து சமூக விரோத கருத்துக்கள் பற்றிப் பரவும் எல்லா தளங்களிலும் போராடி வருகிறார்களே? மக்களிடம் பண்பாட்டு மாற்றம் கோரி போராடி வருகிறார்களே?

        //எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது நின்று விடுமே…..இதே லக்கிலுக்கோ வேறு யாரோ ஒருவருக்கான கதவு திறக்கப்படும் போது அவரது நேர்மையான எழுத்துக்கள் அங்கீகரிக்கப்படும் ஒரு சூழலில் நேர்மையற்ற எழுத்துக்களின் பக்கம் அவர் ஏன் போகப்போகிறார்….???//

        சாதி கூட சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டதுதான். பார்ப்பனியமும் அதன் பண்பாட்டு வடிவங்களும் அப்படித்தான். அதனால் நாமும் இனிமேல் ஆதிக்க சாதி வெறி பேசும் தனி மனிதர்கள், சோ, சுப்பிரமணிய சாமி போன்றோரை விமர்சிப்பதை தவிர்த்து விடுவோம் என்று சொல்ல வருகிறீர்களா மதிபாலா?

        நேர்மையான எழுத்துக்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்பது பொய். அத்தனை அடக்குமுறைகளையும் மீறி இன்றும் மக்களிடம் தமது கருத்துக்களை பெருத்த வரவேற்புடன் கொண்டு செல்லும் ம க இ கவே இதற்கு சாட்சி. நமது செயல்பாடின்மைக்கு சமூகத்தின் மீது பழி போடுவது சரியல்ல.

        ஒரு சின்ன கேள்வி, லக்கி லுக் அப்படி எந்த வகையில் நேர்மையான எழுத்துக்களை எழுதி அதை சமூகம் அங்கீகரிக்காமல் போய் விட்டது?

        லக்கி செய்வது தவறு என்கிறீர்கள், எல்லா தளங்களிலும் இந்தத் தவறை எதிர்க்க வேண்டும் என்கிறீர்கள். ஆனால் அதை செய்தால் அது சரியான திசையில் இல்லை என்கிறீர்கள்.

        ஒரே காரணம் லக்கியை விமர்சித்து அவர் எழுதாமல் நிறுத்திவிட்டால் இன்னொருவன் செய்யத்தான் போகிறான் என்று சொல்கிறீர்கள். இது எந்த வகை நியாயம் என்று தெரியவில்லை. இந்த தர்க்கத்தை நாம் எந்த தளங்களுக்கும் நீட்டித்துக் கொள்வதன் மூலம் எந்த அயோக்கியத்தனத்தையும் கண்டுகொள்ளாமல் இருந்து விடும் அபாயகரமான தர்க்கம்.

      • //ஆக , இந்த இதழியல் நீதியை மாற்றுவதால் மட்டுமே இது போன்ற தொடர்களையும் நிறுத்த முடியும்…!, வக்கிர மனிதர்களுக்கு வாய்க்கரிசி போடுவது அப்போதுதான் உண்மையான தாய் இருக்கும்.//

        எனது முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

        பார்ப்பனிய நீதியை மாற்றுவதன் மூலம்தான் நிரந்தர தீர்வு எனவே பார்ப்பனிய நீதியை வைத்து பிழைக்கும் கும்பலை, பார்ப்பனிய நீதியை நியாயப்படுத்தும் கும்பலை, அதற்கு சமூக அங்கீகாரம் கிடைப்பதை வலுப்படுத்தும் எழுத்துக்களை நாம் விமர்சிக்கக் கூடாது என்று சொல்கிறீர்களா மதிபாலா?

  44. சரி, சரி. ஆபாசம் தான் அவை. நான் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லலையே.
    செம்புரட்சி வந்தால், அதன் பிறகு இந்த ஆபாச எழுத்தாளர்களை என்ன செய்வதாக உத்தேசம்.
    உங்க ராஜ்யத்தில் (அதாவது தொழிலாள வர்க சர்வாதிகாரம்) என்ன “தண்டனை” ?
    நாடு கடத்தலா, அல்லது சிறைவாசமா அல்லது ஸ்ட்ரேய்ட்டா மேலுலகத்திற்க்கு டிஸ்பேட்ச்சா ?
    அந்த ஆபாச ஆக்கங்கள், நூல்கள், படங்களை தடை செய்வீர்களா ? என்ன செய்வதாக‌
    உத்தேசம் ? ப‌தில் சொல்லுங்க‌ளேன்..

    • நோக்கம் நிறைவேறியதா கண்மணி அதியமான்? ஏன் முப்பது பின்னூட்டத்திற்கு ஒரு முறை வந்து உங்களது வரலாற்று புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை காப்பி பேஸ்ட் செய்கிறீர்கள். இரண்டு அல்லது மூன்று பின்னூட்டத்திற்கு ஒரு முறை செய்யலாமே? நமது கருத்துக்கள் வலுவாக பதியப்படுமே?

      ஒரு பொய்யை ஆயிரம் முறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று நம்பும்,
      உங்கள்,
      ஜங்கி மங்கி

    • //நான் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லலையே//

      உங்கள எவருமே மதிக்கலைன்னு அர்த்தம்!

      • பதில் யாருக்கு தெரியவில்லை என்றும் அர்த்தபடித்திக்கொள்ளலாமே !!
        சோவிய‌த் ர‌ஸ்ஸியா ம‌ற்றும் செஞ்சீனாவில் ப‌ழைய‌ எழுத்தாள‌ர்க‌ள்,
        மாற்றுக்க‌ருத்தாள‌ர்க‌ள் க‌தி என்ன‌வாயிற்று என்ற‌ வ‌ர‌லாறு ப‌டியும்.
        “க‌ளை எடுத்த‌ல்” என்று ஒன்று ந‌ட‌ந்த‌து…

      • கம்யூனிசத்தை பிரச்சாரம் செய்தே எதிர் கொள்ளலாம் என்று நண்பர் அதியமான் நம்புகிறார். கம்யூனிசமும் பிரச்சாரத்தினால் மட்டும்தான் உயிர்வாழ்கிறது என்று நம்புகிறார்.

        கம்யுனிச சமூகம் படைக்கும் உந்துதல் சொத்துடமை சமூகத்தின் சுரண்டலிலும், முதலாளித்துவ சமூகத்தின் முரன்பாட்டிலும் தன்னை உயிர்பித்துக் கொள்கிறது.

        இது தெரிந்ததால்தான் அதியமானின் அன்பு அண்ணன்மார்கள் எல்லாம் முதலாளித்துவ சமூகம் உருவாக்கும் அவலங்களுக்கு எதிராகவும், புனுகு தடவுவும் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி வளர்க்கிறார்கள்.

        அதியமானோ வெறுமே கம்யூனிச பூச்சாண்டி பயம் காட்டியே எதிர்கொண்டுவிடலாம் என்று நம்புகிறார். மார்க்ஸ் காலத்திலேயே இது தோல்விதான். பாவம் அதியமான்

      • //இது தெரிந்ததால்தான் அதியமானின் அன்பு அண்ணன்மார்கள் எல்லாம் முதலாளித்துவ சமூகம் உருவாக்கும் அவலங்களுக்கு எதிராகவும், புனுகு தடவுவும் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி வளர்க்கிறார்கள்.
        /// how asuran ? no one can hide the misery of poverty and hunger with fancy talk and propoganda. but only thru free market polices did many many nations conquer poverty. good example is Japan after WW 2 ; while all nations which went red (that is tired thur socialistic path to communism) falied and actually increased human misery and mass deaths by famine, etc. History is full of this. so ? and anyway, i am not into propoganda, etc. no need, unlike communist propaganda. the rational and humane polices will survive the test of time while irrational and fascist polices will eventually fail. that is all.

      • /how asuran ? no one can hide the misery of poverty and hunger with fancy talk and propoganda. but only thru free market polices did many many nations conquer poverty. good example is Japan after WW 2 ; while all nations which went red (that is tired thur socialistic path to communism) falied and actually increased human misery and mass deaths by famine, etc. History is full of this. so ? and anyway, i am not into propoganda, etc. no need, unlike communist propaganda. the rational and humane polices will survive the test of time while irrational and fascist polices will eventually fail. that is all.//

        அதியமான் ஏதோ புதிதாக பேசுவது போல பேச வேண்டாம். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் ஐரோப்பாமுரன்பாடும், ஜப்பான் அமெரிக்கா முரன்பாடும் ஆற்றிய அடிப்படை பங்களிப்பு குறித்தும். இரண்டாம் உலகப் போருக்கு பிற்பாடு ஜப்பானின் பொருளாதாரம் என்பதில் அமெரிக்காவின் பங்களிப்பு குறித்தும் உங்களுடனான முந்தைய விவாதங்களில் குறிப்பிட்டுள்ளேன். ப்ரி மார்க்கெட் என்று எதை சொல்கிறீர்கள். முடிவாகச் சொல்லுங்கள்

    • முதலாளித்துவம் எதை தான் விட்டு வைத்துள்ளது ?
      காண்பதை எல்லாம் சர‌க்காக்கி காசு பார்ப்பது தான்
      முதலாளித்துவத்தின் சந்தை வக்கிரம்.
      அதற்கு பெண்ணுடல் மட்டும் வில‌க்கா என்ன ?

      வறுமையின் காரணமாக ஏழைப் பெண்களை
      விபச்சாரத்தில் தள்ளிவிடுவதும்,
      பெண்ணையும் ஒரு சரக்காக்கி அரிசி,பருப்பைப்போல
      பெண்ணைக்கொண்டு பாலுணர்வை சந்தைப்படுத்தி
      விற்பதும் ‌இந்த கேடுகெட்ட முதலாளித்துவம் தான்.
      முதலாளிகளை ‘மாமா’என்று சொல்தற்கு இந்த காரணம்
      ரொம்பவே பொருத்தமாக இருக்கிறது இல்ல.

      சோசலிச சமூகத்தில் இப்படி ஒரு கேடுகெட்ட
      தொழிலை(விபச்சாரம் மற்றும் எழுத்து விபச்சாரம்)
      செய்ய வேண்டிய அவசியம்
      அதியமானுக்கு கூட நேராது என்று உத்திரவாதம்
      அளிக்கிறோம்

      • that is what you think. have you any idea of the “anathapuram” of Chairman Mao ? and about the leelaihal of Fidel and Company ? you will easily dismiss these as avathuuruhal. and yes, prostitution is a social evil and has to be stopped. but not thru your “methods” ; and poverty driven prostitution is the most terrible of all. but to conquer poverty your methods will not work ; that is the past history. ok.

      • ஒரு முதலாளி என்கிற வகையில்
        கம்யூனிசம்,மற்றும் கம்யூனிச தலைவர்களை
        பற்றி முதலாளித்துவம் வாந்தியெடுக்கும்
        அவதூறுகள் மட்டும் தான் உங்களுக்கு
        ஒரே நம்பிக்கை,பற்றுக்கோல்.
        அதைக் கடந்து உண்மைகளை
        நீங்கள் பார்க்க மாட்டீர்கள்,
        அதற்கு உங்களுக்கு விருப்பம்
        இல்லை.
        முதலாளித்துவத்தின் விபச்சாரித்தனத்தை
        சொன்னால் அதற்கு மட்டையடியாக‌
        பதில் கூற வேண்டும் என்பதால்
        வறட்டுத்தனமாக உங்களுடைய அவதூறுகளை
        ஒப்பிப்பதை தவிர உங்களிடம் சொல்வதற்கு
        வேறு ஒன்றுமில்லை.

        சோவியத்தில் யாரும் பட்டினி கிடக்கவில்லை
        எனவே விபச்சாரமும் இல்லை.
        வாழ்க்கை பிரச்சனைகள் எதுவும் இல்லை
        எனவே கடவுளும் இல்லை.
        முதலாளித்துவ மேற்கண்ட இரண்டையும்
        கட்டிக்காப்பாத்துகிறது.

        ஆங்கிலத்தில் ரொம்ப பீட்ரு உட வேண்டாம்
        அதியமான்.
        என்னால் ஆங்கிலத்தில் பின்ணூட்டம்
        போட‌ முடியாது.
        உங்களுக்கு தமிழ் தெரியும் தானே
        அப்புறம் எதற்கு ஆங்கிலத்தில் பின்ணூட்டம்.

        நாங்கள் எல்லாம் தொழிலாளிகள் தான் எனவே
        ரொம்ப ஆங்கிலம் தெரியாது.
        தமிழிலேயே எழுதுங்கள்.

      • ***
        சோவியத்தில் யாரும் பட்டினி கிடக்கவில்லை
        எனவே விபச்சாரமும் இல்லை.
        வாழ்க்கை பிரச்சனைகள் எதுவும் இல்லை
        எனவே கடவுளும் இல்லை

        *** :)- super.

  45. வினவு, பெண்களின் மீதான் ஆண்களின் ஈர்ப்பை – ஆண்கள் தங்கள் கவட்டிக்குள் கையை விட்டு சொரிய வைக்கும்படி எழுத்தாகவோ அல்லது சினிமாவாகவோ படைத்தால் தான் சமூகத்தில் படைப்பாளியாய் முகம் காட்ட முடியும். அவர்கள் தான் இலக்கியவாதிகள், கலைமாமணிகள் என்றழைக்கப்படுவார்கள்.

    பெண்களை முன் வைத்துதான் இவ்வுலகமே இயங்குகிறது அது குழந்தைக்காக இருக்கலாம் அல்லது எதுவாகவோ இருக்கலாம்.

    லக்கிலுக்குக்கு சமூகத்தின் மீதான பிரக்ஞை இருக்க வேண்டுமென்று எதிர்ப்பார்ப்பது தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாய் போராட்டம் நடத்திய அரசியல்வாதியிடம் இலங்கைத் தமிழர்கள் தங்களது விடுதலையை எதிர்பார்ப்பது போலாகும்.

    எவனொருவன் சமூகவிரோதியோ அவன் தான் மக்கள் தலைவன் என்பது தங்களுக்கு தெரியாத ஒன்றா என்ன ? விடுங்கள் .. வயிற்றுப் பிழைப்புக்கு பிணம் எரித்து வாழும் மனிதர்களும் நம்மிடையே இருக்கிறார்கள் அல்லவா ?

  46. //இங்கே சமரசம் செய்து கொள்ளாமல் எழுதி புகழும் , பணமும் பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத போது வளரும் எழுத்தாளரான லக்கிலுக்கை மட்டும் நொந்து கொள்வானேன் என்பதே எனது பின்னூட்டத்தின் சாரம்சம் தோழரே….//

    மதிபாலா,

    லக்கி ஒரு ப்ரொபசனல் எழுத்தாளர் எனும் அடிப்படையில் பேசுகிறீர்கள் அல்லவா.. அதாவது அவர் ஒரு பலசரக்குக் கடை – கேட்டது கிடைக்கும்; கஞ்சா வேணும்னு கேட்டாலும் கிடைக்கும் – அதைப் பற்றி எவரும் விமர்சிக்கக் கூடாது. ஏனென்றால் அது அவருக்குத் தொழில் – அது தானே நீங்கள் சொல்ல வரும் விஷயம்?

    இதே அளவுகோலின் படி எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்தி விடமுடியுமே மதி?

    ரவுடிக்கு தொழில் கூலிக்கு கொலை செய்வது!
    அரசியல்வாதிக்கு அரசியல் தொழில்

    ஒருவன் செய்யும் செயலின் பாதிப்பு அவனளவில் நின்று விடும் போது அதை விமர்சிக்கமுடியாது தான் – அதன் பாதிப்பு சமூகத்தில் பரவும் போது விமர்சிக்காலிருக்க முடியாது.

    இங்கே தனி நபர் சுதந்திரம் தனி நபர் சுதந்திரம் என்று நிறைய பேர் நீட்டி முழக்குகிறார்களே.. அந்தத் தனி நபர் சுதந்திரம் என்பதன் நீளம் அவர்கள் மூக்கின் நுனியோடு முடிந்து போகிறது. அதற்கு மேல் நீளும் உங்கள் எந்தச் செயலுக்கும் நீங்கள் இந்த சமூகத்துக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவராவீர்.

    மனிதன் ஒரு சமூக விலங்கு – பள்ளிக்கூட பாடத்தில் படித்திருப்பீர்கள் தானே?

    ____________________________________________________________________________

    லக்கிலுக் எப்போதும் தன்னை எந்தவொரு சுயவிமர்சனத்துக்கும் உட்படுத்திக் கொள்ளப்போவதில்லை என்பதை மெள்ள மெள்ள உணர வைக்கிறார். அவரது நன்பர்களே அவரை உருவேற்றிவிடும் வேலையைச் செய்து வருகிறார்கள்..

    சமூக நலனை நோக்காத எந்தவொரு படைப்பாளியும் எந்த இடத்துக்குப் போய்ச் சேருவார்களோ அதே இடத்துக்கு அவரும் பயனமாகிவிட்டார். விரைவில் சேர்ந்தும் விடுவார்.

    • நண்பர் ஆர்.கே .

      நீங்கள் கேட்டிருப்பவை நியாயமான கேள்விகளே. ஆனால் நீங்கள் இன்று லக்கி லுக்கின் மேல் வைக்கும் விமர்சனம் சற்றேறக்குறைய தமிழகத்தின் அனைத்து வெகுஜன எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.

      பக்கம் பக்கமாக நாம் புரட்சி பேசினால் பேசுவதற்கும் , விவாதிப்பதற்கும் பஞ்சமிருக்காது.

      மானைக் கொன்று சாப்பிட்டு வாழ்வது என்பது புலியின் வாழ்வியல் நீதி.

      புல்லுக்கும் உயிர் இருக்கும் என்பார்கள் – அப்புல்லை தின்று வாழ்வது ஆட்டின் நீதி.

      ஆடு , மாடு , கோழி இவைகளை தவிர்க்க வாய்ப்பிருந்தாலும் கொன்று தின்பது மனிதனின் நீதி.

      தான் இரை தேடாவிட்டாலும் போட்ட மிச்சங்களை திருடித் தின்பதென்பது நரியின் நீதி.

      இப்படி உலகு அதனதன் நீதியில் பயணிக்கிறது.

      மனிதனின் நீதி ஆடுமாடு கோழிகளை பாதிக்கிறது. புலியின் நீதி மானைப் பாதிக்கிறது. ஆட்டின் நீதி புற்களை , செடிகளைப் பாதிக்கிறது.

      அது போலவே , இன்றைய இதழியல் நீதி இந்த சமூகத்தைப் பாதிக்கிறது. அந்த இதழியல் நீதி தான் முற்போக்குக் கருத்துள்ளவர்களையும் கூட தன் வட்டத்தில் இழுத்து விடுகிறது.

      அந்த வட்டம் யாரும் மீள முடியாதது அல்ல. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று உலகில் யாருமே இல்லை. ஆனால் அந்த விமர்சனம் என்பது கட்டற்றதாக இருக்க முடியுமா?

      உதாரணத்திற்கு – எல்லோரும் சொல்லி இருந்தாலும் நானுமொரு முறை சொல்கிறேன்.

      – நேற்று யுவகிருஷ்ணாவின் கட்டுரை படித்து போர்னோ ஆசையில் இணையத்தைத் தோண்டினார்கள் என்று வினவு குற்றம் சாட்டியிருந்தார்.

      – இன்று வினவு அவர்களின் இந்தக் கட்டுரையைப் படிக்கப் போய் பலருக்கு அந்த ரிப்போர்ட்டர் தொடரை படிக்கும் ஆர்வம் மேலிட்டிருக்கும்…அதனால் பலருக்கும் அந்தத் தொடர் போய்ச்சேர்ந்திருக்கும். அதன் மூலம் இன்னும் பல பேர் கெட்டுப் போயிருப்பார்கள்…

      இங்கே மட்டும் என்ன வினவிற்கு ஒரு நீதி? லக்கிலுக்கிற்கு ஒரு நீதி?

      ஆக , இந்த இதழியல் நீதியை மாற்றுவதால் மட்டுமே இது போன்ற தொடர்களையும் நிறுத்த முடியும்…!, வக்கிர மனிதர்களுக்கு வாய்க்கரிசி போடுவது அப்போதுதான் உண்மையான தாய் இருக்கும்.

      • மதிபாலா

        லக்கி கட்டுரையின் முழுமை படிப்பவர்களுக்கு பாலியலில் தெரியாத விசயங்களை ஆர்வத்துடன் அறிமுகப்படுத்துவதில் இருக்கிறது. வினவு கட்டுரையின் முழுமை அந்த தவறை சுட்டிக்காட்டுவதில் இருக்கிறது. மற்றபடி இரு கட்டுரைகளில் உள்ள வார்த்தைகளை சில பொதுவானவை என்பதை வைத்து இப்படி ஒரு முழுப்பொய்யை சிலர் கட்டவிழ்த்திருக்கிறார்கள். அதற்கு நீங்களும் பலியானது சற்றே வருத்தம். மற்றபடி இதை வினவின் பின்னூட்டத்தில் நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் உண்மையல்ல.

        அடுத்து உங்களது ஆடு, மாடு, நரியின் நீதி தாங்கமுடியாத தத்துவ உளறலாக இருக்கிறது. மன்னிக்கவும். வலுத்தவன் வாழ்வான், அமெரிக்கா ஈராக்கில் பத்து இலட்சம் மக்களை கொன்றது ஒரு நீதி, முள்ளிவாய்க்காலில் பல ஆயிரம் தமிழ்மக்களை சிங்கள இராணுவம் கொன்றது ஒரு நீதி, குஜராத்தில் மோடி தலமையிலான இந்து மதவெறி கும்பல் நூற்றுக்கணக்கான முசுலீம்களை கொன்று ஒரு நீதி, இப்படி உலகம் அதனதன் நீதியில் பயணித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? ஏதோ காலையில் வேலைக்கு வந்து சில பதிவுகள் படித்து பின்னூட்டமிட்டு அவ்வளவுதான். மற்றபடி மக்களாக பார்த்து திருந்தினால்தான் அமெரிக்கா, மோடி, பக்சே, குமுதம் ரிப்போர்ட்டர் முதலான மகான்கள் திருந்துவார்கள். வாழ்க வளமுடன்!

        உங்களது இந்தோனிஷாயா தொடர் பயனுள்ள முறையில் இருக்கிறது. வெளிநாடுகளில் வாழும் பதிவர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை அவர்கள இப்படி பயன்படுத்துவதில்லை. உங்கள் முயற்சிக்கு இங்கே வாழ்த்து தெரிவிப்பதற்கு மன்னிக்கவும். இதைப் பார்த்து சிலரேனும் அங்கே படிக்க வருவார்கள் என்ற நப்பாசைதான்.

      • நீங்கள் இப்போது என்ன சொல்லவருகிறீர்கள்? இதழியல்களை குற்றம் சாட்டலாம் என்கிறீர்கள் .சரி ஆனால் இதழியல்களில் எழுதுவோரையும் குற்றம் சாட்டலாம். இது அளவுக்கு அதிகம் என்கிறீர்களா?

        லக்கிலுக்கோ அல்லது குமுதம் உள்ளிட்ட இதழியல்கள் சொல்வது சரியா தவறா? என்பதை மட்டும் சொல்லுங்கள்.அதை எப்படி மாற்றலாம் நீங்கள் தான் ஒரு ஐடியா கொடுங்கள்.
        தவறுதான் என்றும் சொல்கிறீர்கள்.அது முழுக்க லக்கியை குற்றம் சாட்டுவது பலனில்லை என்கிறீர்கள்.

        பார்ப்பான் ஒருவனை தே.மவன் என சொல்வதும் , பகுத்தறிவு வாதிகள் உன்னை விலைமகள் மகனாக பார்ப்பான் சித்தரிக்கிறான் என சொல்வதும் ஒன்றா?
        வினவினைப்பார்த்து ஒருவன் ஆபாசதளங்களுக்கு போவானெனில் அவன் அட்ரஸ் தெரியாமல் வந்தவனாய் இருப்பான் அல்லது நம்ம மதிக்குட்டி(மதி இந்தியா) மாதிரி ஏதாவது லூசாகத்தானிருக்கும்.

        மீண்டும் நீங்கள் சொல்லவருவதெல்லாம் பணத்துக்காக புகழுக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்பது போலல்லவா இருக்கிறது?(தவறாக சொல்லிவிட்டேனா கொஜ்சம் விளக்குங்குளேன் ப்ளீஸ்)

  47. பின்னூட்டங்களை மின்னஞ்சலில் பெற… ஹி..ஹி.. வந்ததுக்கு ஒரு கருத்து சொல்லிக்கிறேன்… [[இணைய போலீஸ் அண்ணன் வினவு வாழ்க]]

  48. தோழர் ராயகரன்,

    கட்டற்ற சுதந்திரம் (அனைத்து விசியங்களிலும்) உள்ள பிரான்ஸ் நாட்டில் அகதியாக தஞ்சம் புகுந்து, அங்கு
    வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்க, இப்படி ஆவேசப்படுவது கொஞ்சம் ஓவாரா தெரியலையா ? ஃப்ரான்ஸில் நடக்கும் விசியங்கள், அங்கு ஊடகங்களில் அரங்கேற்றப்படும் விசியங்க்ளை ஒப்பிடும் போது, இந்த பதிவில்
    இருக்கும் விசியங்கள் ஒன்னுமேயில்லை. ஜுஜுபி. இதற்க்கே இத்தனை “அறசீற்றத்தை” காட்டும் நீங்க,
    ஃப்ரென்சு மொழி ஊடகங்களில், இணையதளங்களில் உங்க சீற்றத்தை காட்டுவீர்களா ? அப்படி செய்தால்,
    அந்நாட்டில் எழும் எதிர்வினைகள் எப்படி இருக்கும் ?
    ??

  49. நண்பா நீங்க என்ன வேணா ஒரு எழுத்தாளரை கேட்டக்கலாம் அதுவும் நட்பாய் சொல்லி இருக்கலாம் என்பது என் கருத்து இதை அவருக்கு ஒரு மெயில் செய்து சொல்லி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்.. இப்படி சபையில் விமர்சனம் செய்தால் அது நல்லதாய் இருந்தாலும் நீ என்ன சொல்லுவது நான் என்ன கேட்பது என்ற மனபாவம் தான் மனிதனின் இயல்பு..

    உங்க மற்ற பதிவுகளின் விசிரி நான் ஆனா இந்த பதிவின் கடைசி பத்தி என்னை ரொம்ப கோபபடுத்தியது.. அவர் எழுத்துகளுக்கு அவரை பற்றி பேசுங்க அதை விடுத்து அவரது பெண்ணின் பெயரை எப்படி நீங்க யூஸ் செய்யலாம் நண்பா இது ரொம்பவே வருத்தம் அடைய வைத்தது…

    தயவு செய்து தனி நபரின் குடும்ப பெயர்களை யூஸ் செய்து இப்படி செய்ய வேண்டாம்..

    உங்க மேல் உள்ள மரியாதையில் அன்பாய் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் அந்த பெயரை எடுத்துவிடுங்க

    • மச்சி, கொஞ்சம் அந்த வரிகளை இன்னொருவாட்டி படிம்மா
      //உங்களுக்கு தமிழ்மொழி எனும் அழகான பெண் குழந்தை பிறந்ததற்கு பல வாசகிகள் பாசத்துடன் அண்ணாவிற்கு வாழ்த்து தெரிவித்ததையும் பதிவு செய்திருக்கிறீர்கள்.//

      பதிவு செய்திருக்கிறீர்கள்.//
      பதிவு செய்திருக்கிறீர்கள்.//
      பதிவு செய்திருக்கிறீர்கள்.//

      அதாவது அவர் பதிவு செய்திருக்கிறார் என்பதைதானே இது சொல்லுது.. இதுல என்ன கோபம்.

      அப்படி கோபப்பட்ட நீங்க அவருக்கு பெண் குழந்தை பிறந்ததுக்கு வாழ்த்து பதிவு ஏன் போட்டிங்க. அது அவரு சொந்த விசயத்துல தலையிடற மாதிரி ஆகாதா
      http://www.sakkarai.com/2009/05/blog-post_27.html
      உங்களுக்கு ஒரு நியாயம் வினவுக்கு ஒரு நியாயமா?
      திஸ் இஸ் டூ மச் மச்சி

      • மச்சான் நீங்களும் நம்ம பதிவுகளை பார்த்து இருக்கிங்க..

        நான் சொன்னது நீங்க இந்த பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற மேட்டரை எந்த பதிவுவில் வேணா சொல்லி இருக்கலாம் தப்பாய் இருக்காது…

        எதுக்கு இந்த விமர்சன பதிவில் அதுவும் ஆபசமாய் இருக்கு அது தப்புனு சொல்லுற பதிவில்… எனபதே என் ஆதங்கம்..

        நீங்க தனியா ஒரு பதிவு போட்டு இருந்தால் கூட இது பிரச்சனை இல்லை

        இப்பொ பிரச்சனையே இந்த மாதிரி பதிவில் எதுக்கு அந்த பெயர் என்பதே என் கேள்வி இது மச்சான்

        வினவு இந்த பதிவில் இதை சொன்னது தவறு தான் இதை சொன்ன ஏத்துகவா போறீங்க ஏன் என்னோட அந்த பதிவுக்கு கூட லக்கி என் எதிரி எனக்கு குழந்தை போட்டு இருக்குனு சொன்னாரு அப்படி ஒரு நட்பு தான் எங்க நட்பு ஆனா இந்த பதிவில் வினவு பெயரை போட்டது தப்பு தான் .. தப்பு தான் தப்பு தான்.. என்னை பொருத்த வரை..

      • என்னை பொருத்த வரை ஒரு நல்ல விசியமா அதை எல்லாரிடமும் சொல்லாம் அதனால் அவருக்கு மகிழ்ச்சியே தவிற மன வருத்தம் இல்லை..

        என்ன ஒரு விமர்சனத்தில் நீங்க சொன்ன விசியம் சரி தான் அதை தனியா சொல்லி இருக்கலாம் இல்லையா அதை பற்றி மட்டும் பேசி இருக்கலாம் என்பதே வருத்தம்.. கடைசி பத்தியின் அவசியம் உண்மைய சொல்லனும் என்றால்

        “இப்படி ஒரு பெண்ணுடலை ஆணின் வக்கிரத்திற்கு இரையாக்குவதன் மூலம் நீங்கள் முழு பெண்ணினத்தையும் கேவலப்படுத்துகிறீர்கள். உங்களுக்கு தமிழ்மொழி எனும் அழகான பெண் குழந்தை பிறந்ததற்கு பல வாசகிகள் பாசத்துடன் அண்ணாவிற்கு வாழ்த்து தெரிவித்ததையும் பதிவு செய்திருக்கிறீர்கள். அத்தகைய பெண்களுக்கு நீங்கள் எழுதும் போர்னோ கிரைமை சமர்ப்பணம் செய்யுங்கள் லக்கி! SHAME ON YOU !!”

        நீங்களே நிதனமாய் படிச்சு பாருங்க ரொம்ப சூடா போச்சு வினவு இது தோழர்களாகிய உங்களுக்கு சரியா

      • மச்சி,
        @@@அதனால் அவருக்கு மகிழ்ச்சியே தவிற மன வருத்தம் இல்லை.@@@ இதுல அவருக்கு மன வருத்தம்னு நீங்க ஏன் கற்பனை பண்ணிகிறீங்க, அவரு எழுதுன எதிர் பதிவுல அத பத்தி எதுவும் எழுதலையே! ஏன்னா அவரு இத சரியா புரிஞ்சுகிட்டாரு….

        மத்தபடி நீங்க சொல்ற மாதிரி பதிவு நெகடிவா இருந்ததால சொல்லியிருக்க வேண்டியதில்ல அப்படிங்கறது ஒரு சென்டிமென்ட் வாதம், கெட்ட காரியம் நடக்கும் போது நல்ல விசயம் பேசக்கூடாதுங்கற மாதிரி, திராவிட அரசியல்ல புடம் போடப்பட்ட லக்கி இல்ல வினவு மாதிரியான கம்யூனிஸ்டுங்க கிட்டயோ அந்த மாதிரி சென்டிமென்ட எதிர்பார்க்க முடியுமா?

  50. இப்போ தான் நீங்க அக்னிக்கு அளித்த பதிலை பார்த்தேன் ஒரு நல்ல விசியத்துக்கு இல்லை நல்ல பதிவுக்கு இதை பயண் படுத்தாமல் இந்த மாதிரி பதிவுக்கு அந்த பிஞ்சு குழந்தையின் பெயரை போட்டது தவறு தான் என்னை பொறுத்த வரை பதிவை யாரு நடுநிலையோடு படித்தேன் யார் பின்னூட்டமும் படிக்காமல் என் பின்னூட்டத்தை வெளியிட்டேன்

    எனக்கு அந்த வரிகள் தவறாய் தான் பட்டது.. இந்த பதிவுக்கு நீங்க சொன்ன விதம் தவறு அந்த பத்தியை அகற்றி விடுங்கள்

    இதற்க்கு ஏதோ லக்கி எனக்கு ரொமப் நெருங்கிய நண்பர் என்று எல்லாம் எண்ண வேண்டாம் அவரும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்டு.. இப்போ நீங்க சொன்ன தவறு எனது பார்வையில் இல்லை நானும் மற்றா பதிவர்கள் மாதிரி சொல்லியவ் விசியம் தவறாய் தெரிந்தாலும் அதை சரி என வாதாடும் நல்ல திறமை உண்டு என்று நீங்க பதில் சொல்லிகிட்டே போனா அது நல்லா இருக்காது..

    இந்த வரிகளை எடுப்பதால் உங்களுக்கு ஏதும் இழப்பு இல்லை மனகசப்பும் இருக்காது ஈக்கோ இல்லாம நல்ல எழுத்தாளாரா அதை எடுத்துவிடுங்கள் இது அன்பாய் நண்பனாய் கேட்கிறேன்

  51. லக்கி ரிப்போட்டரில் எழுதும் தொடரில் உங்களுக்கான விமர்சனங்களை வைப்பது தவறில்லை… ஆனால் லக்கியின் குழந்தையை விமர்சனத்தில் இழுத்தது… நிச்சயம் புண்படுத்த கூடிய செயல்… லக்கி இதுவரை எந்த பதிவிலும் தன் குடும்பத்தை இழுத்தது இல்லை… அப்படி இருக்கும் போது அவரது குழந்தையை… லக்கியை திட்டும் இலவசமாக சேர்த்து திட்டி விட்டு… அதனை நியாயபடுத்துவது…

    அந்த குழந்தையில் பெயரை சர்ச்சையில் இருந்து நீக்கி விட்டால்… மகிழ்ச்சி அளிக்க கூடிய ஒன்று…

    ஒரு எழுத்தாளர் தவறு செய்கிறார் என்றால்… அவரது குழந்தை எப்படி பொறுப்பாக முடியும்?

    • யோவ் தமிழ் குரல்ன்னு பேர வச்சிகிட்டு தமிழ் படிக்க தெரியாம இப்படி
      //அவரது குழந்தையை… லக்கியை திட்டும் இலவசமாக சேர்த்து திட்டி விட்டு… / எழுதியிருக்கியே… இத உன்னால நீருபிக்க முடியுமா? சும்மா ஏதாவது சொல்லனும்னு உளரக்கூடாது.. மொதல்ல படிங்க்கய்யா….

      • யோவ் ஜான் நீ முதல படி வினவு விமர்சனம் கூட தப்பு இல்லை இப்படி லக்கியின் குழந்தையை இழுத்தது தப்பு தான் இதை கருத்தா சொன்ன அது தப்பா… இப்படி ஒரு விமர்சனத்தை கூட ஏத்துகாதா நீங்க என்ன லக்கியை இப்படி அப்படி நொப்புடி எழுதுனு விமர்சனம் வேண்டி இருக்கு ?

        தப்புனு ஒருத்தர் சொன்னா பரவாயில்லை பல பேர் ஏன் லக்கியின் எதிர்களாகிய நான் மற்றும் இன்னும் சிலர் கூட சொல்லி இருக்காங்க

        நாங்க எந்த லக்கியின் பதிவிலும் சிங் அடிச்சதும் இல்லை, லக்கியிடம் தினமும் போன் பேசும் ஏன் ரொம்ப நட்புனு கூட சொல்ல முடியாது

        ஆனா யாரா இருந்தாலும் இது தப்பு தான் இப்படி சொல்லாட்டி நாளை எல்லா குடும்பத்தையும் இழுத்து எழுதுவது தான் புரட்சியா

        ஒரு விமர்சனத்தில் காச்சிட்டு கடைசி பத்தில் “அத்தகைய பெண்களுக்கு நீங்கள் எழுதும் போர்னோ கிரைமை சமர்ப்பணம் செய்யுங்கள் லக்கி!” இதை சொல்ல நீ யாரு அந்த பெண்களையும் அந்த பிஞ்சு குழந்தையும் சேர்த்து கேவல படுத்த்தும் முயற்சியா

        சினிமால வர மாதிரி நீ அக்கா தங்கிச்சியோட பிறக்கவில்லை என்ற மாதிரி எழுத முயன்ற அந்த பத்தி ரொம்ப கேவலம்..

        சொன்ன கேட்கவா போறீங்க வினவு

        தப்பை திறுத்தாவன் கமுனியசம் இல்லை …. எங்க மாமனார் தன் வீட்டில் சுத்தில் அறுவா பதித்தவர்.. பண்பானவர் அன்பானவர் உதவி என்றால் தனக்கு காசு இல்லாடியும் கொடுக்கும் அந்த கமுனியசவாதியை பார்த்து 54 வருசமா கட்சி கொடி கட்சிக்கு நாடகம் என்று தெருவில் ஏன் நல்ல வேளையில் இருந்தும் இப்படி செய்யும் அவரை பார்த்து கமுனியசம் புரட்சி அவரது சிந்தனை யாரையும் மதிக்கும் தன்மை இதை எல்லாம் பார்த்து என்னை இழுத்த கமுனியசத்தை இந்த ஈக்கோவில் போட்டு காலி செய்திவிட்டீர் வினவு

        இதல இருந்து நல்ல மனிதர்கள் தான் மதிக்கதகுந்தவர்கள் அவர்கள் கட்சியும் புரட்சியும் கோட்பாடும் இல்லை…

      • //தப்புனு ஒருத்தர் சொன்னா பரவாயில்லை பல பேர் ஏன் //

        பல பேர் சரின்னும் சொல்லியிருக்காங்களே ஏன்?

        //அத்தகைய பெண்களுக்கு நீங்கள் எழுதும் போர்னோ கிரைமை சமர்ப்பணம் செய்யுங்கள் லக்கி!” இதை சொல்ல நீ யாரு//

        இத கேட்க நீ யாரு?

        //லக்கியின் எதிர்களாகிய நான் மற்றும் இன்னும் சிலர் கூட சொல்லி இருக்காங்க..//

        லக்கிக்கு நீ எதிரியா, உங்க பர்சனல் விசயத்தல்லாம் ஏன் இங்க வந்து பேசுற நாளைக்க எல்லோருடைய பர்சனல் விசயத்தையும் பேசுவியா, இதுதான் புரட்சியா

        //.நாங்க எந்த லக்கியின் பதிவிலும் சிங் அடிச்சதும் இல்லை//

        அதனால என்ன நீயும் ஃபிகர் கரெக்ட் பண்ண பத்து வழிகள்.னு பொம்பளைங்கள கேவலப்படுத்தி பதிவு போடற ஆள்தானே அதான் கோபம் வருது… தானாடாலும் தன் சதையோ தசையோ ஆடும்னு சும்மாவா சொன்னாங்க

      • திரும்ப சொல்லுறேன் நீங்க வினவு சொன்ன விசியம் தப்பு இல்லை அதை சொன்ன இடம் தப்பு இப்படி போட்டு சொன்ன நீ நல்லவனா நீங்க அவருக்கு மெயில் அனுப்பி சொல்லி இருக்கனும் ரொம்ப புத்தன் ஏசு மாதிரி பேசாதே நான் சாதரமான மனிதன் ஆனா கெட்டவன் இல்லை நீங்க சொன்ன கருத்து சரியே என்று நானும் சொல்கிறேன் நீங்க சொன்ன ஒரு தொடர் கூட நான் படிக்கவில்லை அப்படி இருக்க நீங்க சொல்லி தான் ஓ இப்படி எழுதி இருக்காருனு தெரிந்தது அப்படியே இருந்தாலும் மெயிலில் போனில் சொல்லி இருக்கலாம் இல்லையா

        இப்படி சொன்ன யாரும் கேட்க்கமாட்டாங்க இது கூட புரியாத சிந்தனை சிற்பியா ஹீ ஹீ

        நான் ஒரு கிரைம் நாவல் கூட எழுவேன் உடனே ஹீ ஹீ 😉 நான் கொலை செய்தேன் கூட சொல்லுவிங்க போல

        தமிழில் காதல் ரசம் சொட்ட எழுதிய பல நூட்கள் ஒரு சன்யாசியால் எழுதப்பட்டது

        நான் சன்யாசில்லை புத்தனும் இல்லை நல்லவன் வேஷமும் போடவில்லை சாதரமான மனிதன் சைட் அடித்தேன் இப்போ கல்யாணம் ஆச்சு அடிக்கிறது இல்லை இது நடமுறை உண்மை

        எப்பா நல்லவரே தவறே செய்யாத புத்தனே ஏசுவே திரும்ப திரும்ப சொல்லுறேன் நீங்க சொன்ன கருத்தில் எனக்கு உடன் பாடு இருக்கு ஆனா சொன்ன விதத்திலும் கடைசி பத்தியில் உடன் பாடு இல்லை

        சும்மா நீ புடிச்ச முயலுக்கு மூன்று காலு நிக்காத இறங்கிவா

        நான் நீ சொன்ன கருத்தை தப்புனு சொல்லவில்லை முதல புரிஞ்சிக்க்கோ

      • லக்கிக்கு நீ எதிரியா, உங்க பர்சனல் விசயத்தல்லாம் ஏன் இங்க வந்து பேசுற நாளைக்க எல்லோருடைய பர்சனல் விசயத்தையும் பேசுவியா, இதுதான் புரட்சியா

        தம்பி நான் எதிரி நான் சொல்லவில்லை அவர் பதிவில் நகைச்சுவையா சொல்லி இருந்தாரு.. பர்சன்ல்னா என்னானு தெரியுமா .. உன் புரட்சி இது தான் .. முதல கோபத்தை விட்டு எழுதிய தவறை திருத்த முடியா பேச்சா பேசக்கூடாது

        /அதனால என்ன நீயும் ஃபிகர் கரெக்ட் பண்ண பத்து வழிகள்.னு பொம்பளைங்கள கேவலப்படுத்தி பதிவு போடற ஆள்தானே அதான் கோபம் வருது… தானாடாலும் தன் சதையோ தசையோ ஆடும்னு சும்மாவா சொன்னாங்க/

        இங்க பாருடா ஹீ ஹீ காமெடி செய்யுறிங்களா வினவு பெண்கள் மீது மரியாதை உண்டு உங்கள மாதிரி நான் நல்லவன் அது இதுனு எல்லாம் சொல்ல தெரியாது புரியுதா என்னை ஈன்றவளும் ஒரு பெண் என்னை தாங்குபவளும் பெண்… பெண்கள் மீது மரியாதை உண்டு… நான் பார்த்தை எழுதுபவன்.. ஒரு கொலை பற்றி எழுதினால் உடனே நீ ஏன் கொலை செய்தே கேட்ப போல.. நல்ல பதிவுகளை பார்.. சும்மா ஜாலியா போட்ட பதிவை படிச்சிட்டு காமெடி செய்யாதிங்க
        நாங்க எல்லாம் யூத் உங்க வயசுல நீங்க சைட் கூட அடிக்காம வந்த யோக்கியனு உன் மனசாட்சிய தொட்டு சொல்லு பார்ப்போம்

        எல்லரும் சைட் அடிச்சி இருப்பாங்க அப்படி இல்லை நான் சாமியார்.. என்றால் நோய் இருக்குனு அர்த்தம்

        சைட் அடிச்சது எல்லாம் நான் என் சக தோழிகளிடம் ஏன் என் தாய் குலத்திடமும் சொல்லுவது உண்டு என் தாயிடமும் மனைவியிடமும் சொல்ல முடியாத ஒன்றை நான் செய்தது இல்லை காரணம் அது தப்புனு தெரியும் புரியுதா..

        நல்லவரே உங்க கிட்ட பேசினா டைம் வேஸ்ட் இனி வினவு பக்கம் வந்தா தானே குட் பை வினவு வினவு செய்னு சொல்லிட்டு ஒரு கருத்து சொன்ன பொத்துகிட்டு வருது போல ..

      • /பல பேர் சரின்னும் சொல்லியிருக்காங்களே ஏன்/

        நானும் சரினு தான் சொன்னேன் அந்த விமர்ச்னத்தை ஆனா அந்த கடைசி பத்தியை எவரும் சரினு சொல்லவில்லை எப்பா சாமி வினவு நல்ல வேளை உங்க கையில் நாடு இல்லை இருந்து இருந்தால் இப்படி கருத்து சொன்ன க்கூட எகத்தளமா பேசுவிங்க

      • உனக்கு படிக்க தெரியலன்னு நான் சொன்னது எவ்வளவு ்கரெக்டு பாரு, ஜான் அப்படின்னு அலகான பேருல கருத்து எழுதுனா வினவு வினவுன்னு நீ பதில் சொல்லற, அதாவது காமாலை கண்ணுக்கு பாக்கறதெல்லாம் மஞ்ஞா கலர் மாதிரி, யார் கருத்து எழுதுனாலும் வினவு எழுதுன மாதிரிதான் உனக்கு தெரியிது, இப்படி பேரே தப்பா தெரியும் போது மத்தத நீ தப்பா புரிஞ்சுகிட்டதுல ஒன்னியும் ஆச்சரியம் இல்ல… கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்

  52. வினவு… நல்ல பதிவு. பாராட்டுகள். அந்த தொடரின் ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தது. உங்களின் கோப உணர்வு தான் எனக்கும் ஏற்பட்டது. அடுத்த அடுத்த வாரங்களில் குறிப்பாக சபிதா பாவி பற்றிய அவரின் விவரிப்புகள். சரோஜா தேவி புத்தகங்களை மிஞ்சும் அளவிற்கு. அந்த சைட் தடை செய்யபட்டிருக்கலாம் இன்னும் அந்த படகதைகள் பல வெப்சைட்களில் பார்வைக்கு உள்ளது.

    இந்த விமர்சனத்தை கூட சரியாக அவர் எதிகொள்ள தயாரில்லை,,,, இவனுங்க என்ன சொல்றது நமக்கு தான் குமுதம் சப்போர்ட் இருக்கே என்ற மமதை தான் அவரின் பதிலில் தெரிகிறது.

  53. குமுதம்,விகடன்,ரிபோர்ட்டர்,என்று பார்பார் நடத்தும் எந்த இதழ்களையும் வாங்குவதிலை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க