Tuesday, September 17, 2024
முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?

காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?

-

காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?

சம்பவம்:1

திருச்சிஅருகிலுள்ள ஒரே ஊரைச் சேர்ந்த லோகேஷ்வரியும், கார்த்திக்ராஜாவும்வெவ்வேறு பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படித்து வந்த நீண்டநாள் காதலர்கள்.காதல் முற்றியபோது லோகேஷ்வரி கர்ப்பமானார். முதல் கர்ப்பத்தை கலைத்ததுபோல இரண்டாவது கர்ப்பம் ஐந்து மாதங்களை தாண்டிவிட்டதால் கலைக்க முடியாதெனமருத்துவர்கள் மறுத்தனர். இதனால் தன்னை மணம் செய்யுமாறு ராஜாவை கர்ப்பமானகாதலி வற்புறுத்தினாள். முதலில் தன் பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என தட்டிக் கழித்த ராஜா பிறகு நச்சரிப்பினால்ஒத்துக்கொண்டான். காதலியுடன் ஒரு காட்டிற்கு பைக் சவாரி செய்து அங்கேஇருவரும் தற்கொலை செய்யலாம் என கூற அந்த பேதைப் பெண்ணும் சம்மதித்தாள்.எங்கே விஷம் என்று காதலி கேட்க அவளது துப்பட்டாவை எடுத்து கழுத்தைநெறித்து கொன்று சென்றுவிட்டான் ராஜா. பின்னர் போலீசால் கைதுசெய்யப்பட்ட பின் இந்தத் தகவல்கள் வெளியுலகிற்கு வந்தன.

சம்பவம்:2

டெல்லியில் சாக்ஷி என்னும் 26 வயது ஆசிரியை, தனதுகாதலனுடன் நெருக்கமாக இருந்ததைப் பார்த்து, அவளது தாய் கிரண் பலமுறைகண்டிக்கவே, தாய் கிரண் மீது கோபம் கொள்கிறாள். காதலர்கள் இருவரும்கிரணை படுக்கையறையில் கிடத்தி கையில் கிடைக்கும் ஆயுதங்களால் குத்திக்கொல்கிறார்கள். சாக்ஷி ஆத்திரம் தீர பலமுறை குத்துகிறாள். இறுதியில்அந்தத்தாய் மரணமடைகிறாள். ஆரம்பத்தில் கொள்ளையர்கள் வந்து கொன்றதாகசொன்ன சாக்ஷியின் வாக்கை நம்பிய போலீசார்கள் பின்னர் உண்மையைகண்டுபிடிக்கிறார்கள்.

000000
நடனத்திற்குப் பின் எனும் டால்ஸ்டாயின் சிறுகதையில்முந்தைய நாளின் இரவு விருந்தில் அழகான பெண்ணை சந்தித்து நடனமாடும் பணக்காரஇளைஞன் ஒருவன் அதிகாலையில் வீடு திரும்புகிறான். ஏதோ ஒரு புதியஉற்சாகமும், தன்னம்பிக்கையும், நல்லெண்ணமும் கொண்ட உணர்வுக்குஆட்படுகிறான். நெடுநேரம் விழித்திருந்தாலும் அவனால் துயில் கொள்ளமுடியவில்லை. படுக்கையை விட்டு அகன்று அதிகாலை எழுப்பியிருக்கும் வீதியில்இதுவரை இல்லாத நல்லவனாக நடக்கிறான். சந்திக்கும் எல்லா மக்களையும்நேசிக்கிறான். முன்னை விட இப்போது ஏதோ அவன் மிகவும் நல்லவனாகஆகிவிட்டதாக ஒரு உணர்ச்சி. அவனது கெட்ட எண்ணெங்களெல்லாம் முந்தைய இரவோடுஅகன்றுவிட்டதாக ஒரு தோற்றம். இப்படி காதல் ஒருவனிடன் ஏற்படுத்தும் நல்லரசாயனமாற்றங்களையெல்லாம் டால்ஸ்டாய் அற்புதமாக சித்தரித்திருப்பார்.

இந்த அனுபவம் டால்ஸ்டாய்க்கு மட்டுமல்ல இளவயதில் காதல் வயப்பட்டஎல்லோரும் இந்த அனுபவத்தில் மூழ்கி எழுந்திருப்பார்கள். தனது காதல்ஜோடிக்கு முன் தனது தீமைகளை மறைப்பதாக இருக்கட்டும், தனது நல்லெண்ணங்களைகாட்டுவதாக இருக்கட்டும், குடும்பத்தில் எல்லோரிடமும் அன்பு காட்டுவதாகஇருக்கட்டும், சமூக உறவுகளில் உதவும் பண்பு திடீரென்று உருவவாதாகஇருக்கட்டும், இவையெல்லாம் ஒருகாதல் வயப்பட்ட ஆண், பெண்ணின் மனதில்இயல்பாகத் தோன்றும். மனமே பரிசுத்தமாக மாறியது போலும், பண்பே அடியோடுமாறிப்போனது போலும், இதற்கு முன் இருந்த நானும் இப்போது இருக்கும்நானும் அடியோடு வேறுபடுவதும் போல இருந்தாலும் கொஞ்ச காலத்தில் அந்தகாதல் வழக்கமானதும், அல்லது திருமணம் முடிந்ததும் இருவரதும்உண்மைப்பண்புகளை ஒருவரோருவர் தெரிந்து கொண்டு அவமானமும், சினமும்அடைவதும் அப்புறம் சில ஆண்டுகளில் இந்தப் பகை நிதானமடைந்து பிரிவதற்குவழியில்லாத பார்ப்பனிய சமூகத்தின் தடையில் மற்றவர்களின் குறைகளை சகித்துக்கொண்டு வாழப்பழகுவதும் ஏற்பட்டு வாழ்க்கை வண்டி ஓடுகிறது.

இருப்பினும் காதல் வயப்பட்ட தருணத்தில் ஏற்படும் அந்த நேச உணர்வுக்குகாரணம் என்ன? ஒருவர் மனித குலத்தை நேசிப்பதாக இருந்தால் அது கருத்துரீதியாகவும், உயிரியல் ரீதீயாக நாம் எல்லோரும் ஒரே இனமென்பதாலும்ஏற்படுகிறது. சகமனிதனை நாம் நேசிப்பதற்கான உயிரியல் அடிப்படை ஆண் பெண்உறவிலும், குழந்தைக்கான பெற்றோராக இருப்பதிலும் ஏற்படுகிறது. இங்கேஉடலும் உள்ளமும் சங்கமிக்கின்றன. ஒருவகையில் காதல் என்பது மனிதன் தன்இனத்தின் மீது கொண்டுள்ள நேசத்தின் தன்னுணர்வற்ற வெளிப்பாடு.

தான் நேசித்த பெண்ணுடலுடன் முதலில் ஆசையுடனும், பின்னர் வெறியுடனும்உறவு கொண்டு தனது காமத்தை தீர்த்துக் கொண்ட கார்த்திக் ராஜா, பின்னர்ஈவிரக்கமில்லாமல் அவளது துப்பட்டாவையே சுருக்கு கயிறாக மாற்றி இறுக்கிகொன்றிருக்கிறான். ஒரு காலத்தில் தான் நேசித்த உள்ளத்தையும் உடலையும்இப்படி துணி துவைப்பதுபோல பதட்டமின்றி கொன்றிருப்பது எதைக் காட்டுகிறது?

சாக்ஷி தனது காதலுடன் நெருக்கமாக பலமுறை இருந்ததை பார்த்துகண்டித்திருக்கும் தனது தாயை, வயிற்றில் வலியுடன் சுமந்து பெற்று ஆளாக்கிவளர்த்து தனது வாழ்வின்பெரும் பகுதியை மகளுக்காக தியாகம் செய்திருக்கும்அந்த பெண்மணியை, சமையல் கத்திகளால் ஆத்திரம் தீரக் குத்திக்கொன்றிருப்பது சாக்ஷியின் காதல் குறித்து நம்மை பரீசீலிக்கக் கோருகிறது.

இப்படி குற்றம் செய்யாத காதலர்களெல்லாம் கூட காதலின் தன்மையில்இப்படியான மதிப்பீடுகளைத்தான் கொண்டிருப்பார்களோ என ஐயம் ஏற்படுகிறது.இன்றைய காதலின் கவர்ச்சி எது? தான் இதுவரை அனுபவித்திராத காமம் என்பதுதான்அந்த கவர்ச்சியைத் தரும் வல்லமையைக் கொண்டிருக்கிறதோ?
இன்றைய பாதுகாப்பற்ற பொருளாதாரச் சூழலில் நல்ல வேலையும், பணமும்கொண்டிருக்கும் இளைஞர்களையே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள்.இன்று பாலியல் வேட்கையை ஊரெங்கும் இரைத்திருக்கின்றன பண்பாட்டுக்கருவிகள். நேற்றுவரை வீட்க்குள் முடங்கியிருந்த பெண்கள் இன்று வேலை, கல்விகாரணமாக வெளியே நடமாடுவதால் புதிய மதிப்பீடுகளுக்கு அறிமுகமாகிறார்கள்.திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைப்பெதெல்லாம் தவறல்ல என்றுநினைக்குமளவுக்கு பார்வை மாறியிருக்கிறது. மேலும் காதலிக்கும்ஆண்களெல்லாம் காதலிகள் தங்கள் உடலைத் தருவதன் மூலம்தான் காதலை உறுதி செய்யமுடியுமென நிர்ப்பந்திக்கிறார்கள். எப்படியும் இவரை திருமணம் செய்யத் தானேபோகிறோம் என பெண்கள் குழிக்குள் விழுகிறார்கள்.

பழத்தை புசித்துவிட்டு தோலை எறிந்து விடுவது என்பதே இன்று காதலைப்பற்றி பல இளைஞர்களின் வக்கிரமான கருத்தாக இருக்கிறது. ஜாலிக்குகாதலிப்பது, செட்டிலாவதற்கு வீட்டில் பார்க்கும் பெண்ணை மணம் செய்வதுஎன்பதே அவர்களது தந்திரமாக உள்ளது. லோகேஷ்வரியைக் காதலித்தராஜா மணம்செய்வதற்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியதன் காரணம் என்ன? ஒன்றுஅவள் ஏழையாகவோ, தாழ்த்தப்பட்ட அல்லது ராஜாவின் சாதியை விட பிற்பட்டசாதியாக இருந்திருக்கவேண்டும். உடலுறவின் இன்பத்திற்காவே காதலித்தாகநடித்த இந்த கயவன் முதலில் கருவைக் கலைத்து விட்டு இரண்டாவது கரு ஐந்துமாதம் கடந்துவிட்ட படியால் கலைக்கமுடியாது என்ற பிறகே கருவைச் சுமந்த தாயைகொல்வதற்கு முடிவு செய்திருக்கிறான்.

காதலின் மூலம் மற்ற மனிதர்களை தனது இனமாக உணரும் இயல்பை உணரும் அதேநேரத்தில் அது தனிப்பட்ட இரு மனிதர்களின் உறவாகவும் உள்ளது. இந்த தனிஇயல்பின் ஊற்று மூலம் இன்னார் இன்னாரைத்தான் காதலிக்கிறார் என்பதிலிருந்துபிறக்கிறது. பொதுவில் இந்த இரு நபர்களின் காதலை பெற்றோர், உற்றோர், சாதியினர் ஊரார் அனைவரும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதிலிருந்தே இந்ததனிமைத் தன்மை அழுத்தமாக காதலர்களின் மனதில் பதிந்து விடுகிறது. சமயத்தில்எதிர்ப்பு பலமாக வரும்பட்சத்தில் காதல் கைவிடப்படுவதும், இல்லையேல் பலஇடர்ப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியும் வருகிறது. தனி மனிதனது காதலுக்கும், சமூக கட்டுப்பாடுகளுக்கும் உள்ள முரண்பாடு இப்படி பல்வேறு அளவுகளில்ஏற்படுகிறது.

வயதுவந்த பிறகு, படிப்பு, தொழில் நிலையான பிறகே ஒருவர் காதலிப்பதற்குஉண்மையில் தனது சொந்தத் தகுதியில் தயாராகிறார். ஆனால் தமிழ் சினிமாவும், ஊடகங்களும் அதை வெறும் கவர்ச்சியாகவும், மற்ற கடமைகளை மறந்து இந்தஉலகத்திலேயே காதல்தான் உன்னதமானது என்றும் தவறாக கற்பிக்கின்றன. இதனால்விடலைப்பருவத்தில் கற்றுத்தேர வேண்டிய வயதில் காதலித்து, காதலிக்கமுடியாமல் போனதை எண்ணி எண்ணிச் சோர்ந்தோ, பலரது ஆளுமை சமூகத்திற்குபலனளிக்காமல் வெம்பி வாடிப்போகிறது.

பிறப்பிலிருந்து, மரணம் வரை எல்லோரையும் சார்ந்து வாழவேண்டிய பெண்இத்தகைய விடலைக்காதலால் கணநேர மகிழ்ச்சி அடைந்தாலும் மறுபுறம் வாழ்க்கைமுழுவதும் ஆயுள் கைதியாகவே காலம் தள்ளுகிறாள். விடலைப்பருவத்தில்காதலிக்கும் ஆண்களில் பெரும்பாலானோர் பாலுறவு என்ற அவர்கள் இதுவரைஅனுபவித்திராத புதிரை ருசிப்பதிலேயே ஆர்வம் கொள்கின்றனர். இதைஅனுபவித்துவிட்டு அப்புறம் வளர்ந்து ஆளான பிறகு பெற்றோர் பார்க்கும்பெண்ணை வரதட்சணையுடன் மணம் செய்து வாழ்க்கையில் நிலைபெறுகின்றனர்.

பெண்ணுக்கோ தனது விடலைக்காதலையும் அதன் விளைவையும் மறைக்க முடியாமல்அவளது வாழ்வே கேள்விக்குறியாக மாறுகிறது. இதனால் தனக்குவிருப்பமில்லையென்றாலும் வீட்டில் பார்க்கும் ஏதோ ஒருவரை அவர் வயதானாவராகஇருந்தாலும் கூட கட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்றைய நுகர்வு கலாச்சார சூழலில் அழகும், காமமுமே காதலைத் தீர்மானிப்பதில்பாரிய பங்குவகிக்கின்றன. ரசனை, சமூக நோக்கு, தனிப்பட்ட பண்புகள், பொதுப்பண்புகள், அறிவு, பழகும் இயல்பு, எதிர்காலம் குறித்த கண்ணோட்டம், இவையெல்லாம் சேர்ந்துதான் காதல் துளிர்ப்பதற்கும், தளிர்ப்பதற்கும்தேவைப்படும் விசயங்கள். ஆனால் இவையெல்லாம் தெளிவில்லாத மாயமானைப்போலஓடிக்கொண்டிருக்க, கைக்கெட்டும் காமமே காதலின் தகுதியாக மாறிவிடுகிறது.

நமது காதல் தகுதியானதா என்று பரிசீலிப்பதற்கு கவலைப்படாத காதலர்கள்காமத்தை பகிர்ந்து கொள்வதற்கும் மட்டும் அவசரப்படுகிறார்கள். இந்தஅவசரப்படுதலில் ஆணை விடபெண்ணுக்கு அபாயங்கள் அதிகமென்றாலும் அவள்அதைப்பற்றையும் கவலைப்படுவதில்லை. ஆணுக்கோ தனது ஆண்மையை நிலைநாட்டிவெற்றிக்கொடி காட்டுவதற்கு, தனத நண்பர்களிடம் வெற்றிச்செய்தியைபகிர்வதற்கு ஒரு வாய்ப்பு. ஒரு பெண் அப்படி பகிர முடியாமல் இரகசியம்காக்கவே விரும்பினாலும் வயிற்றில் உருவாகும் கரு அதை உடைத்து விடுகிறது.

கார்த்திக்ராஜா காமத்திற்காக மட்டும் லோகேஷ்வரியை பயன்படுத்தவிரும்பினான். லோகேஷ்வரியோ அவனை மணம்செய்து கொள்ளவே விரும்பினாள். இதுசுதந்திரத்தெரிவிலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை, கறைபட்ட பெண்ணை யாரும்ஏற்கத்தயாராக இருக்கமாட்டார்கள் என்ற சமூக நிலைமையிலிருந்தேவந்திருக்கவேண்டும். அவன் வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதாக சப்பைகட்டுகட்டும் போது அவளோ அவனது போலித்தனத்தை, துரோகத்தை உணர மறுத்துவயிற்றில் இருக்கும் கருவை மட்டும் வைத்து தனது அவல நிலையைவிளக்கியிருக்கிறாள். முறிந்திருக்கவேண்டிய காதல் ஒரு பெண்ணின்பாதுகாப்பற்ற அவலநிலையினால் அந்த அடிமை வாழ்வை பின்தொடர்ந்துஓடவேண்டியிருக்கிறது. ஆனால் கார்த்திக்ராஜாவோ இந்த தொல்லையை ஓரேயடியாகமுடித்து விட்டு தனது வாழ்க்கையை தொடரவிரும்பினான். இரக்கமின்றி முடித்துவிட்டான். எந்த முகத்தையும், கன்னத்தையும், கழுத்தையும் காமத்துடன்முத்தமிட்டானோ அந்தக் கழுத்தை கதறக் கதற இறுக்கி துடிப்பை அடக்கினான்.

மாநகரத்தில் வாழும் மேட்டுக்குடி பெண்களும், மேட்டுக்குடி பெண்களின்மதிப்பீடுகளை கொண்டு வாழநினைக்கும் நடுத்தர வர்க்க பெண்ணான சாக்ஷியின்கதைவேறு. தனது அழகு, உடை, ஆண்நண்பர்கள், பணக்காரர்களின் தொடர்பு, அதன்மூலம் உயர நினைக்கும் காரியவாதம் இவையெல்லாம் இவர்களது ஆளுமையில்ஏற்றப்பட்டிருக்கிறது. இந்த காரியவாத உயர்வுக்காக இவர்கள்என்னவேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களுக்கெல்லாம் காதல் என்பதுபணவசதியுடன் செட்டிலாவதற்கான ஒரு பெரிய படிக்கட்டு.

இவர்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களெல்லாம் பழைய மதிப்பீடுகளில்வந்தவர்கள். இதனால் இருதரப்பினருக்கம் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்வகையிலேயே உறவு இருக்கும். இந்த தலைமுறையின் வேறுபாட்டில் வரும்பிரச்சினைகளை பெற்றோரே சுமக்க நேரிடும். புதிய தலைமுறைப் பெண்களுக்குவெளியில் எந்த அளவுக்க வெளிச்சம்கிடைக்கிறதோ அந்த அளவுக்கு வீட்டில்இருள் சூழ்கிறது. பெற்றோரோடு சண்டை, எதிர்ப்பு, ஆவேசம்!

தனது ஆண்நண்பர்களில் ஒருவனுடன் வீட்டிலேயே உறவு வைத்துக் கொள்வதைசகிக்கமுடியாமல் சாக்ஷியின் தாய் சண்டை போடுகிறாள். சாக்ஷியோ இந்ததொந்தரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கத்தியால் 24 குத்துகுத்தி தாயை கொல்கிறாள். ஏதோ ஆத்திரத்தில் நடந்த சண்டையல்ல இது. ஆழவேர்விட்டிருக்கும் வெறுப்பு, பகையுணர்ச்சி.

எல்லாக் காதலர்களும் கொலை செய்வதில்லை என்றாலும் வன்முறை பல்வேறுஅளவுகளில் வெளிப்படத்தான் செய்கிறது. காதலினால் கருவுற்ற பெண்கள் தனதுகாதலன் தன்னை மணம் செய்ய மறுக்கிறான் என்று சொல்லி அன்றாடம் காவல்நிலையத்தில் அழுதபடி கொடுக்கும் புகார்கள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன.
காதலியின் உடலை செல்பேசியில் படம்பிடித்து நண்பர்களுக்கு படைக்கும்வக்கிரங்களும் ஊடகங்களை நிறைக்கின்றன. தனது இளவல்கள் செய்யும் மைனர்பொறுக்கித்தனங்களுக்கு பணம் கொடுத்து செட்டில் செய்வதற்கு பலபணக்காரர்கள் தயாராகத்தான் இருக்கின்றன. சினிமா வாய்ப்புக்காக தனது உடலைபடுக்கையாக விரிக்கும் பெண்களை வைத்துத்தான் கதாநாயகர்கள் தமது ஓய்வைபோக்குகின்றனர். அலுவலகத்தில் மேலதிகாரிகளும் தமது பெண் பணியாளர்களைகாமத்திற்காக சின்னவீடாகவோ, இரண்டாம்தாரமாகவோ பயன்படுத்தவேசெய்கின்றனர். மாநகர மேட்டுக்குடிபெண்களோ பணம், ஆடம்பரத்திற்காக இதைவிரும்பியே செய்கின்றனர்.

காதல் என்பது உணர்ச்சியில் ஒன்றேயானாலும், சமூகப்பிரிவுகளுக்கேற்பவேறுபடவே செய்கிறது. ஆனால் எல்லாப் பிரிவுகளையும் தாண்டி அவசர அவசரமாககாமத்தை அனுபவிப்பது என்பது மட்டும் எல்லாக் காதலர்களின் தேசியநடவடிக்கையாக மாறிவருகிறது. இதில் ஏழைகளாக இருக்கும்பெண்களின் அவலம்இருக்கும் வறிய நிலையிலிருந்து தேறுவதற்கு வழியில்லாமல் முடக்கிவிடுகிறது.சிலருக்கு வாழ்க்கையே முடிந்துவிடுகிறது. மேட்டுக்குடி பெண்களுக்கோ இந்தஅவசரக் காமல் வளமான வாழ்க்கைக்கான வாசலை திறந்து விடுவதாக உள்ளது. உள்ளேநுழைந்து பட்டுத்தெரிந்த பின்னரே அதன் கொடூரம் உரைக்க ஆரம்பிக்கிறது.அதற்குள் வாழ்க்கை வெகுதொலைவு கடந்து விடுகிறது. ஆனால் எல்லா ஆண்களும்இப்படி வலிந்து வரும் காமத்தை அனுபவிப்பதை இளமையின் இலட்சியமாகவிரும்புகின்றனர். காமம் முடிந்த பின் உறவை தூக்கி எறிய நினைக்கும்இவர்களெல்லாம் எதிர்கால மனைவிகளை எப்படி நடத்துவார்கள் என்பதும்இத்தகையோர்தான் நாட்டின் எல்லா மட்டங்களிலும் வேலை செய்கிறார்கள்என்பதும் இந்த நாட்டின் சமூகத் தரத்தை காட்டுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

ஆகவே காதலை சட்டென ஏற்றுக்கொள்ளாதீர்கள். வாழ்க்கையையும், சமூகத்தையும் பொறுப்புடன் கற்றுத்தேர்ந்து சமூகத்தில் உங்களுக்குரியஇடத்தை உறுதி செய்த பிறகே ஒரு முறைக்கு நூறு முறை ஆலோசித்து உங்கள்வாழ்க்கை துணையை தெரிவு செய்யுங்கள். இதே விதி பெண்களுக்கு இன்னும் பலமடங்கு அதிகம். இந்தக் காலத்தில் காதல் ஏற்படுவது ஒன்றும் முற்போக்கல்ல, அதன் சமூகத்தரமே நம் கவலைக்குரியது. அன்றாடம் கொல்லப்படும்காதல்பெண்களின் கதைகள் நமது தரம் மிகவும் இழிவாக இருப்பதையே எடுத்துச்சொல்கிறது.

__________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்ட்டு‘ 2009
__________________________________________

  1. வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/

  2. இந்த காதல், கற்பு, ”கள்ள” உறவு, காளிமுத்து டாக்டர் எல்லாம் நம்ம ஊரோட விசேச பிரச்சனை, இங்க சேருவதும் கஷ்டம் பிரிவதும் கஷ்டம்…. அதனாலதான் காம இச்சைக்கு ஒளிவட்டம் போட்டு புனிதப்படுத்த காதல் வேஷம் கட்ட வேண்டியிருக்கு… (தற்)கொலை செய்ய வேண்டியிருக்கு … இந்த சமூகத்தோட ஆன்மாவான hypocrisy ஒழியும் போது , தானா இந்த பிரச்சனைகளும் மாறும்… ஆன்மாவுக்கு தேவை அவசர அறுவை சிகிச்சை aka புரட்சி

  3. Please,make awareness of this issue in all colleges and through newspapers&medias.Necessary action has to be taken against the people who will do such nuisance in the public places like beach, theatres,malls and parks.
    I am requesting the administrator to do something wise inorder to avoid such annoyed things in future. Urs-Klk-H.I

  4. இந்த கட்டுரை படித்ததும் வேறு ஒரு பெண்ணின் வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. அது ஒரு வறிய தொழிலாளியின் குடும்பம். பிள்ளைக்கு சிரமம்(!) தெரியாமல், கேட்பதை எப்பாடு பட்டாவது வாங்கி கொடுத்தார்கள். உடன் படிக்கும் சக தோழிகள் ஒரு முறை அந்த பெண்ணின் வீட்டுக்கு போன பொழுது, உங்க வீட்ல டி.வி. இல்லையா! என எதார்த்தமாக கேட்டு வந்துவிட்டார்கள். அதற்கு பிறகு வீட்டில் ஒரு களேபரம். உடனடியாக டி.வி. வாங்க வேண்டும் என அடம்பிடித்து, வாங்கியும் வைத்துவிட்டார்கள்.
    இந்த பெண் வளர்ந்து, ஒரு இடத்துக்கு வேலைக்கு போன பொழுது, வசதியான வாழ்க்கை வேண்டும் என்பதற்காக அந்நிறுவனத்தின் நிர்வாகிக்கு மூன்றாவது மனைவி(!)யாக செட்டிலானார். அந்த பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. முதல் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள். இப்பொழுது அந்த பெண் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். சென்னைக்கு வந்த சில நாள்களிலேயே இந்த பெண்ணைப் பற்றி கேட்டதும். முதலில் அதிர்ச்சியாக இருந்தது. பெருநகர வாழ்க்கை நுகர்வு கலாச்சார பண்பாட்டின் விளைவு இது.

  5. அருமையான பதிவு…நவ நாகரீக, ஆடம்பரங்களுக்கும் திரைப்பட (சின்ன, பெரிய திரை) பொய்க்கனவுகளுக்கு அடிமையாகி அந்த சாக்கடை நாற்றத்தில் உழலும் அனைவருக்கும் (இளைஞர், இளைஞிகளுக்கு முக்கியமாக) நெற்றியில் அடிப்பது போல் உள்ளது. இதை எல்லோரும் படிக்கும் படி ஏதாவது ஒரு நடுநிலைப் பத்திரிகையில் பிரசுரிக்கவேண்டும்

  6. இதெல்லாம் ஆணவமிக்க அமெரிக்க மற்றும் முதலாளித்துவ சதி தோழரே. நாம் இதற்க்கு கண்டிப்பாக ஒரு பொரட்சி (புதிய காப்பி) ரிலீஸ் செய்தாக வேண்டும் தோழரே.

    கொட்டட்டும் முரசு. உயருட்டும் செங்கொடி.. பொரட்சி.. பொரட்சி..

    • ஏன்யா, நம் சமுதாயத்தை உள்ளிருந்து அரித்துவரும் ஒரு பெரும் பிரச்சினையைப் பற்றி அலசி எழுதி விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்கிற நோக்கத்தில் அமைந்திருக்கும் இங்கே உங்களது குரூர பகை உணர்வுகளை கொட்ட வந்துவிட்டீர்களே… இது உங்களுக்கு அசிங்கமாக தெரியவில்லையா?

      இங்கு எழுதி அலசப்படுவது கட்சி கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது ஐயா. நாம் அனைவரும் இதைப்பற்றிய தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்றால், இங்கு விவாதிக்கப்படும் இதே போன்ற ஒரு விபரீதம் உங்கள் குடும்பத்திலும் நாளை நடக்க வாய்ப்புண்டு என்பதனை நினைவில் வைத்துக்கொண்டு எதையும் எழுத ஆரம்பியுங்கள்.

      இணையத்தில் இந்த “சைக்கோ”வுங்க தொல்லை தாங்க முடியலைடா சாமி!

  7. கள்ளக்காதல், கற்பழிப்பு மற்றும் இன்ன பிற வக்கிர செய்திகளுக்கு வினவுக்கு நிகர் வினவே தான்.
    புதிய ஜனநாயகம், தீச்சுடர் போன்ற இதழ்களில் இவ்வளவு சுவாரசியம் இல்லை.
    வாழ்க கம்யூனிசம்.

  8. பழைய கலாச்சாரம் எவ்வளவு ஆண்கள் மீது பழி போடுகிறீரார்களோ அந்தளவு பெண்களும் இந்த விசயத்தில் குற்றவாளிகள் தான். சும்மா சொல்லலை , ஜாலிக்குக் காதலித்து வேறு ஆண்ணினை திருமணம் செய்த பெண்களைக் கண்டிருக்கிறேன்.

    மற்ற படி இக்கட்டுரை உபதேசம்…உபதேசம்…ஊருக்கு உபதேசம். காதலிக்கும் போதே இப்பெல்லாம் ஜாதகம் பார்த்துதான் பல பேர் களத்துல இறங்கறாங்கண்ணோவ்…

  9. என்னை பொறுத்தவரை, இது போன்ற காதலுக்கு பிந்தைய விபரீதங்களுக்கு முழு காரணமும் மன முதிற்சி இன்மையே. இதற்கு அடுத்தபடியாக வேண்டுமானால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை (பணயம்) வைத்து பணம் சம்பாதிப்பதும் ஒரு முக்கிய காரணம். நம் சமுதாயத்தில், குழந்தை பருவம் முதல் பின்னப்பட்ட பாச வலைகளில் சிக்குண்டு அவைகளை உடைத்தெறிந்து வெளி வரத்தெரியாத பல இளைஞர்கள் குடும்பம், கௌரவம், சொந்தம், பந்தம், பெயர், புகழ்ச்சி, பரம்பரை, சொத்து, சாதி, மதம், சமுதாய நிலை ஆகிய காரணிகளுக்காக எதையும் செய்ய துணிந்தவர்களாக இருக்கின்றனர். 18, 20 வயதிற்கு பிறகும் பெற்றோர்கள் சொற்களுக்கு தலையாட்டி பொம்மைகளாக இருக்கும் பிள்ளைகளிடம் மன முதிற்சி என்பதை எதிர்பார்க்க முடியாது.

    எனவே, 16 அல்லது 17 வயது முதல் 18 அல்லது 20 வயது வரை அனைத்து இளைஞர்களையும் தங்களது குடும்ப உறவுகளிடம் இருந்து பிரித்து கண்காணா தூரத்தில் சமூக சேவை போன்ற சேவைகளில் இரக்கி சுயமாக சிந்திக்க திறனுடைய, தைரியசாலியாக, தன் சொந்த உழைப்பில் முன்னேற திறனுடைய முழு மனிதர்களாக உருவாக்க வேண்டும்.

    இன்றைய காலங்களில்; நம் சமுதாயத்தில் உள்ள பெற்றோர்களுக்கு பிள்ளைகளை சரிவர வளர்க்க தெரியவில்லை. ஏதோ மதம், குலம்,மண்ணாங்கட்டி, சடங்கு, சம்பிரதாயம், சினிமா, டி.வி சீரியல் சொல்வதை பின்பற்றி இளைய தலைமுறைகளின் வாழ்க்கையை அழித்து வருகிறார்கள்.

    பிள்ளைகளை கடைசிவரை தங்களது அடிமைகளாகவே வைத்திருக்க பெற்றோர்கள் விரும்புகிறார்கள். பெற்றெடுத்த காரணம் ஒன்றுக்காக, பிள்ளைகளை கடைசிவரை இப்படி அடிமைத்தன்ம் செவதை சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

    பெற்ற ஒரு காரணத்திற்காக, 18 வயதிற்கு பிறகும் பிள்ளைகள் பெற்றோர்களுக்கு எந்த வித்தத்திலும் கடன் பெற்றவர்கள் இல்லை என்பதை அனைத்து இளைய சமுதாயமும் சரிவர புரிந்துகொள்ள வேண்டும்.

    வயதான காலத்தில் நல்லபடியாக வளத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் தாமாகவே வந்து பெற்றோர்களுக்கு உதவினால்தான் உண்டு. இல்லையேல், அவர்களை யாராலும் அதை செய் இதை செய் என எதற்கும் கட்டயப்படுத்த முடியாது.

    வளர்ந்த பிள்ளைகள் அவர்கள் பொறுப்பிற்கு தாங்களும் தரமான குடும்பம் அமைத்து, நல்ல பிள்ளைகளை பெற்று சமுதாய விருத்திக்கு தக்க பலணளிக்க வேண்டியது அவசியம்.

    எனவே, இள வயதில் மன முதிற்சி பெற தகுந்த ஏற்பாடுகளை செய்ய சமுதாயம் முன் வரவேண்டும்.

  10. வெறும் அழகு, காமத்தை மட்டுமே வரும் விடலை காதல் முற்போக்கானதல்ல. சமூகத்தை, தன்னுடைய வாழ்க்கையை பற்றி கற்றுத்தேர்ந்து எடுக்கும் காதல் முடிவே சரியானது. அப்படி போராடி ஜெயிக்கும் காதலே முற்போக்கானது.

    இது இளைஞர்களுக்கு தேவையான கட்டுரை.

  11. //வாக்கையையும், சமூகத்தையும் பொறுப்புடன் கற்று தேர்ந்து..//

    நீங்கள் சொல்கிற பொறுப்பு புரிகிறது. ஆனால், சமூகத்தில் பொறுப்பு என்றால்.. காரியவாத பொறுப்பு தான். பெரும்பாலும் காதலிக்கும் இள வயது தாண்டி திருமண வயது வந்துவிட்டால்… “தன் சாதியில், தன் உட்சாதியில், தன்னை விட வசதியான, சிவந்த நிறமுடைய, படித்த, எடைக்கு எடை தங்கம் தருகிற பெண்” வேண்டும் என பொறுப்பாய் சிந்திக்கிறார்களே! இளவயதில் திருமணம் செய்ய துணிவது… காமம் ஒரு தூண்டுகோலாக இருக்கிறது என்பது என் கருத்து.

    இதையே பெண்ணுக்கு பொருத்தலாம். மேலும், இந்த திருமண பந்தத்தில் நிறைய சிக்குண்டு சின்னா பின்னா படுகிறவர்கள் பெண்களே! பெண்கள் தன் அக்காக்கள், சொந்தங்கள், தோழிகளின் அழுகாச்சி குடும்ப வாழ்க்கையை பார்த்து… திருமணம் என்றாலே அலர்ஜியாகிவிடுகிறது.

  12. பல காதலர்கள் தற்போது பரிணாம வளர்ச்சியை அடைந்து விட்டார்கள். காதல் என்ற போர்வையில் கவர்ச்சியே ஆட்டம் போடுகின்றது. இந்த சதை சிறிது காலத்திலேயே புளித்து போவதை உணர்கிறார்கள். காதலிக்க தூண்டுவது எது? என்பது தான் மையமான கேள்வி அழகு எனில் அது சில வருடங்களில் காலியாகிவிடும் பின்னர் வெறொன்றை தேடும். இப்படித்தான் ஒவ்வொன்றும்…..

    புதிய ஜனநாயகத்தை கொடுத்தால் வாங்க மறுக்கும் ஒரு பெண் காதல் கடிதத்தை வாங்குவதன் நோக்கமென்ன. அதாவது புதிய ஜனனாயகமோ புரட்சிகரவாழ்வோ காதலை கட்டிலில் அல்லது சினிமாக்களில் அல்லது பொழுதுபோக்கு களில் தேடுவோருக்கு வசதியாயிராது தெளிவாய் தெரிகின்றது.காதலில் புகுந்த பிழைப்பு வாதம் அதை சிக்கி சின்னாபின்னப்படுத்துகிறது

    ஒரு காதலனும் காதலியும் மணிக்கணக்கில் பேசுகிறார்கள் நாட்கணக்கில் பேசுகிறார்கள்
    அதில் துளி கூட மக்களைப்பற்றி நாட்டைப்பற்றி பேசுகிறார்களா என்ன? ஏன் அதெல்லாம் அவர்களுக்கு தொடர்பில்லையா. அரிசி, பருப்பு எண்ணை விலை அவன் குடும்பத்தை அல்லது அவனை/அவளை பாதிக்காமலிருக்கிறதா என்ன?

    பல மணினேரம் , பல நாட்கள் எதைப்பேசினார்களோ அது திருமணம் ஆனவர்களுக்கு சில மாதங்களிலே சலிப்பை த்தருகிறது என்பது தான் உண்மை. க்கதல் என்பது பெண் தன் துணையை தெரிவு செய்வதற்கான உரிமைதான். ஆனால் தெரிவு ச்ய்யும் ஆணோ பெண்ணோ எதை வைத்து தெரிவுசெய்கிறார்கள் தானே கிளைமாக்சை முடிவு செய்கிறது.

    கலகம்

  13. இவ்வளவு நாட்கள் வெறும் Dry ஆகா இருந்த வினவு தளத்தை, நக்கீரன், ஜு.வி., குமுதம் ரிப்போட்டர் அளவுக்கு தரம் உயர்த்தி, படிக்க சுவாரஸ்யமான TV Mega சீரியலில் வரும் கள்ளகாதல், மற்றும் பலான விஷயங்களை எழுதி வாசகர்களின் அவாவை பூர்த்தி செய்தமைக்கு மிக்க நன்றி.

    தொடரட்டும் செம்மை ( ச்சே பச்சை) பொரட்சி.. வாழ்க கம்யுனிசம்.

    • காமாலை கண்ணுக்கு எல்லாமே மஞ்சளா தெரியுமாம்! அது மாதிரி நீல கண்ணுக்கு எல்லாமே நீலமா தெரியுது!
      திருத்தனும்னு நிறைய மெனக்கெடுகிறீங்க! சில ஜென்மங்க திருந்தாது போல இருக்கு! அதுக்காக நீங்க தளர்ந்துடாதீங்க வினவு!

  14. “காதல் என்பது உணர்ச்சியில் ஒன்றேயானாலும், சமூகப்பிரிவுகளுக்கேற்ப வேறுபடவே செய்கிறது. ஆனால் எல்லாப் பிரிவுகளையும் தாண்டி அவசர அவசரமாக காமத்தை அனுபவிப்பது என்பது மட்டும் எல்லாக் காதலர்களின் தேசிய நடவடிக்கையாக மாறிவருகிறது.” —– Great and really true these quotes. thank you vinavu

    • கள்ளக்காதல், கற்பழிப்பு மற்றும் இன்ன பிற வக்கிர செய்திகளுக்கு வினவுக்கு நிகர் வினவே தான்.
      புதிய ஜனநாயகம், தீச்சுடர் போன்ற இதழ்களில் இவ்வளவு சுவாரசியம் இல்லை.
      வாழ்க கம்யூனிசம்.

  15. காதல் வீரமாக அறியப்படுகிறது, பணத்திற்கான கருவியாக அறியப்படுகிறது, திகிலான பொழுது போக்கு, உடற்பசி இன்னும் பலவாறாக. ஆனால் காதலாக மட்டும் அறியப்படுவதில்லை. சரியான பொழுதில் சரியான இணையை தேர்ந்தெடுத்து காதல் செய்வது இந்த நுகர்வு உலகில், பணமே உயர்வு எனும் பெற்றோர்களின் காரியவாத சமூகத்தில் காதலர்களுக்கு கடினமான செயல் தான். முதலில் சுட்டவேண்டியது பெற்றோர்களையும் சமூகத்தையும் தான்.

    தோழமையுடன்
    செங்கொடி

  16. காதலை உடன் ஏற்றுகொள்ளதிர்கள் வாழ்கையும் ………
    உண்மையான வாக்கியம் இந்த வினவு மற்றுமூறு தீக்கதிர்வினவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க