ரதியின் “ஈழத்தின் நினைவுகள்” தொடர் பற்றி தோழர் இரயாகரன் அவரது தளத்தில் வினவையும், ரதியையும் கடுமையாக விமரிசித்து ஒரு தொடர் வெளியிட்டு வருகிறார். அதற்கான பதிலை வினவு ஒரு இடுகையாக வெளியிட்டது. இதற்கு வந்த பின்னூட்டங்களிலும் இருதரப்பையும் ஆதரித்தோ எதிர்த்தோ கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் ரதி எமக்கு அனுப்பிய மின் மடலை கீழே தருகிறோம்.
வினவு குழு,
என்னைப்பற்றி காரசாரமாக உங்கள் தளத்திலும், தமிழ் அரங்கத்திலும் பதிவுகளும் விவாதங்களும் நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால், எனக்குத்தான் ஏதோ தேவையில்லாத ஓர் சங்கடத்தில் மாட்டிக்கொண்டது போல் ஓர் உணர்வு. நான் எழுத தொடங்கும் போது எனக்கு நீங்கள் எந்தவொரு கட்டுப்பாடோ, விதிகளோ விதிக்கவில்லை. நன்றி. ஆனால், இப்பொது வாசகர்களின் பதில்களைப் பார்த்தால் நான் பக்கச் சார்பாக எழுதுவதாகவும், புலிகளின் பிரச்சாரம் செய்வதாகவும் என்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அது அவர்களின் கருத்து சுதந்திரம். நான் என்னைப் பற்றி ஓர் விடயத்தை என்வரையில் தெளிவுபடுத்தவே விரும்புகிறேன். நான் யாரையும் தனிப்பட்ட ரீதியில் சாடுவதற்கு உங்கள் தளத்தை களமாக பயன்படுத்தவில்லை. அது தவிர, புலிகளைப்பற்றி பேசும் ஜனநாயக உரிமை எனக்கும் உண்டு. அதை நான் உங்கள் தளத்தில் என் கட்டுரைகள் மூலம் ஏதோ புலிப்பிரச்சாரம் செய்வது போல் சிலர் தவறான அபிபிராயம் செய்கிறார்கள். நான் ஓர் பொதுப்பிரஜை, எனக்கு புலிகள் மீது மதிப்பு உண்டு. இதை நான் யாருக்காகவும், எதற்காகவும் மாற்றிக்கொள்ள தயாராகவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை யாரும் கங்கணம் கட்டிக்கொண்டு மாற்றவேண்டும் என்று நினைக்கவும் இடமளிக்கப்போவதில்லை. இதுவரை நான் என் கட்டுரைகளில் புலிகளைப்பற்றி எந்தவொரு விடயமும் எழுதியதாக நினைக்கவில்லை. இனிமேலும், நான் மக்கள் அவலம் பற்றி தான் எழுதினாலும், அது என்னை தேவையில்லாத விமர்சனங்களுக்குள்தான் தள்ளிவிடும். அதனால், நான் இத்தோடு உங்கள் தளத்தில் கட்டுரை எழுதுவதை நிறுத்திக்கொள்கிறேன். தொந்தரவுகளுக்கு மன்னிக்கவும். எப்படியென்றாலும், உங்கள் நட்பு கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. தொடர்ந்தும் உங்கள் கொள்கைகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். விடைபெறுகிறேன். நன்றி.
நட்புடன்,
ரதி.
ரதியின் தொடர் இனி வெளிவராது. எங்கள் கோரிக்கையை ஏற்று இதுவரை எழுத முன்வந்ததற்கு அவருக்கு எம் நன்றி. இனி நாங்கள் வெளியிட வேண்டும் என்று விரும்பினாலும் அவர் எழுத விரும்பவில்லை. அவர் எழுத்தை விமரிசிக்கும் விவாதச்சூழல் மாறி, வினவு தளம் இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.
‘புலிப்பாசிசத்தை பிரச்சாரம் செய்ய தளம் அமைத்துக் கொடுத்தோம்’ என்ற ‘வரலாற்றுப் பழி’யில் வீழ்வதிலிருந்து ரதி எங்களைக் காப்பாற்றிவிட்டார் என்றும் சொல்லலாம். இந்த அனுபவத்தை இரண்டு விதமாக தொகுத்துக் கூறலாம். “பாசிஸ்ட்டால் காப்பாற்றப்பட்ட கம்யூனிஸ்டுகள்” அல்லது “வறட்டுவாதத்தால் பாதுகாக்கப்பட்ட மார்க்சியம்!”
ரதியின் தொடர் குறித்த அறிவிப்பு வந்த உடனேயே “ஒரு பக்க சார்பு இல்லாமல் எழுதுமாறு” அறிவுறுத்தி வாழ்த்தும் தெரிவித்தார் தோழர் இரயாகரன். பின்னர் இது தொடர்பான விவாதத்தில் பின்னூட்டமிட்ட தோழர் மா.சேயை “ஒரு புலி பாசிஸ்ட்” என்று சாடினார். எமது தலையீட்டிற்குப் பின் தவறாக அவ்வாறு கருதிக்கொண்டதாக விளக்கமளித்தார். பிறகு ரதி எழுதிய தொடரில் மூன்று பகுதிகள் வெளிவந்த பின் ரதி ஒரு பாசிஸ்ட் என்றும் தனது தளத்தில் கடுமையாக விமரிசிக்கப் போவதாகவும் மின்னஞ்சல் அனுப்பினார். ( இதை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம் )
புலித்தலைமை – புலி அணிகள், புலிகள் – புலி அனுதாபிகள் என்று பகுத்துப் பார்க்கும் புரிதலை கொண்டிருப்பதாக கூறும் தோழர் இராயகரனுக்கு ரதி எழுதத் துவங்கும் முன்னரே அவர் ஒரு பாசிஸ்ட் என்ற உண்மை தெரிந்திருக்கும் பட்சத்தில் அவர் வாழ்த்து தெரிவிக்க அவசியம் என்ன? ஒரு வேளை அதன் பிறகுதான் இந்த உண்மையை அவர் கண்டுபிடித்தார் போலும். கட்டுரையாளர் ரதி ஒன்று புலி அனுதாபியாக இருக்கவேண்டும். (தற்போதைய கடிதத்தில் தன்னைப்பற்றி அவரே அவ்வாறுதான் கூறிக்கொள்கிறார்.) அல்லது அவர் தந்திரமாக மறைத்துக் கொண்டு வினவு தளத்தில் ஊடுருவிய ஒரு நரித்தனமான பாசிஸ்ட்டாக இருக்க வேண்டும். இதுதான் இரயாவின் கருத்து.
அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உரிய ஆதாரங்களுடன் இதை எங்களுக்கு அவர் தெரிவித்திருக்கலாம். ஆனால் அத்தகைய ஆதாரங்கள் எதையும் இரயா வழங்கவில்லை. மாறாக வினவு தளத்தின் மீதான விமரிசனமாக அவர் எழுதி வரும் தொடரில் கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
“நாங்கள் இந்து அல்லது முஸ்லீம் அடிப்படைவாத பாசிசத்தை, பொதுவான அவர்களின் துயரத்தின் ஊடாக, எம்தளத்தில் இந்திய பொதுவுடமைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கலாம் என்பதே வினவின் நிலைப்பாடு”.(பாகம்1)
“ஈழத்தின் பொதுவுடமைக்காக வினவு பிரசாரத்தை செய்யாமல், இதற்கல்லாத, ஒரு வர்க்கமற்ற, தமிழ் மக்களைச் சாராத, தனிமனித (புலி) வக்கிரத்தை பிரச்சாரம் செய்ய வினவு தளம் உதவிவருகின்றது”. (பாகம்1)
“தமிழ் பாசிச வரலாற்றுக் கல்வியை இந்தியப் பொதுவுடமை இழந்து நிற்கின்றது”.(பாகம்-1)
“புலி பாசிச பிரச்சாரம் எது?, பொது மக்கள் கருத்து எது?, என்று பிரிக்கின்ற அந்த அரசியல் இடைவெளியை இன காணமுடியாதுள்ளனர்.” (பாகம்-2)
“கடந்த காலத்தில் புலிப் பாசிசம் ஆடிய பாசிச ஆட்டத்தை, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் தெளிவாக அம்பலப்படுத்திப் போராடியது. நாம் நாட்டை விட்டு வெளியேறி செயலற்றுப் போன ஒரு இடைக்காலத்தில், எமக்கே அது துல்லியமாக வழிகாட்டியது. இப்படி தோழர்கள் வரலாறு இருக்க, இதையும் மீறி புலிப்பாசிசம் தோழர்களுக்கு தனது வரலாற்றை மட்டும் கற்றுக்கொடுக்க முனைகின்றது.” (பாகம்-3)
இவை அனைத்தும் மிகக் கடுமையான விமரிசனங்கள். “இது வினவு தளம் தெரிந்தே செய்யும் தவறு” என்று கூறுவது மட்டுமின்றி புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகத்தின் இதழ்கள் புலிகள் தொடர்பாக கொண்டிருக்கும் நிலைப்பாடுகளுக்கு எதிராக வினவு தளம் செயல்படுவதாகவும் இரயா குற்றம் சாட்டுகின்றார். ஆனால் ஒரு பாசிஸ்ட் பிரச்சாரம் செய்வதற்கு தெரிந்தே மேடை அமைத்துக் கொடுப்பதாக கூறும் இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் எங்கே? அதை நான்காவது பகுதியில் அவர் வழங்குவாராம்.( “அவரை (ரதியை) நாம் பாசிட் என்று ஏன் அழைக்கின்றோம், என்பதை பகுதி 4 ல் வெளிக்கொண்டு வரவுள்ளோம்.”எம் முந்தைய இடுகைக்கு இரயா அனுப்பிய பின்னூட்டம்)
முதலில் குற்றச்சாட்டு, தீர்ப்பு, அபிப்ராயத்தை உருவாக்குதல்- பிறகு ஆதாரங்களை சமர்ப்பித்தல்.! இதனை ஜனநாயக வழிமுறை என்று யாரேனும் அழைக்க விரும்பினால் அழைத்துக் கொள்ளலாம்.
அடுத்தது தோழமை உறவு பற்றியது. இரயா – பு.க, பு.ஜ – வினவுக்கு இடையிலான தோழமை உறவு பற்றி வாசகர்களுக்கு தெரியும். இதனை விளக்கத் தேவையில்லை. தோழர் இரயா தனது தளத்தில் ரதியின் தொடரை கடுமையாக விமரிசித்து எழுதப்போவதாக ஒரு அறிவிப்பைத்தான் கடிதம் மூலம் எங்களுக்கு வெளியிட்டார். அவர் விரும்பும் வகையில் ரதியின் தொடரை உடனுக்குடன் அம்பலப்படுத்தி வினவு எழுதியிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு எழுதத் தவறியதால்தான் தான் எழுத நேர்ந்ததாகவும் இதற்கு விளக்கமும் கூறுகிறார். அவரது கடிதத்திற்கு வினவு அளித்த பதிலில் காணப்பட்ட தோழமை உணர்வை பலவீனம் என்றோ கொள்கைப் பிறழ்வை மறைப்பதற்கான மழுப்பல் என்றோ அவர் புரிந்திருக்கும் பட்சத்தில் – கொஞ்சம் கஷ்டம்தான்.
இரயாவைப் போல அடுத்தடுத்து அவருக்கான பதில் கட்டுரைகளை நாங்கள் இறக்க முடியாது. எங்களுக்கு இது ஒரு ‘இயலாமை’; தனி ஒருமனிதனாக நின்று மார்க்சியத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் நாங்கள் இல்லாததால் ஏற்படும் இயலாமை; கூட்டுத்துவம் தோற்றுவிக்கும் இயலாமை; தனது தனிப்பட்ட மன உணர்வுகளால் மட்டுமே வழிநடத்தப்பட விரும்பாதவர்களுக்கு ஏற்படும் இயலாமை. ஆனால் இரயாவுக்கும் எமக்குமான உரையாடல் தனிப்பட்ட விவகாரமாக இனிமேலும் இல்லை. பொதுவெளிக்குள் வந்துவிட்டது. வினவு வாசகர்களில் சிலரும் வினவின் நிலைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் நாங்கள் அஞ்சவில்லை – ரதி வினவு தளத்தில் பாசிசப் பிரச்சாரத்தை செய்து விடக்கூடுமோ என்று அஞ்சாததைப் போலத்தான்.
ரதி எழுதக்கூடிய எழுத்துகளுக்கு வெளியே அவர் ஒரு பாசிஸ்ட் என்பதுதான் இரயாவின் நிலை. ரதி ஒரு புலி அபிமானி என்பது எங்களுக்கோ வினவின் வாசகர்களுக்கோ தெரியாதது அல்ல. இருந்தும் அவர் கூறவிரும்பும் அகதி வாழ்க்கையின் அனுபவங்களை கூறட்டும். அவர் கூறுகின்ற அல்லது கூறாமல் விட்ட அனுபவங்களை, வரிகளுக்கு இடையில் மறைந்திருக்கும் உண்மையை விவாதத்திற்கு உட்படுத்துவோம். அதுதான் ஈழத்தமிழ் மக்களுக்கும், இந்தியத்தமிழ் வாசகர்களுக்கும் இன்று தேவைப்படுவது என்பதே வினவு கூறிவரும் நிலைப்பாடு.
அந்த வாய்ப்பு மூடப்பட்டுவிட்டது. விவாதத்திற்கு உரியவர் ரதி அல்ல. அவருக்கு வினவு மேடை அமைத்துக் கொடுத்தது சரியா தவறா என்பதே இப்போது விவாதப் பொருள். வறட்டுவாதமா, மார்க்சியமா என்பதே விவாதப்பொருள். இப்பிரச்சினையில் தோழர் இரயாவை முன்னுறுத்தி வறட்டுவாதம் குறித்த விவாதத்தை நடத்த நேர்ந்திருப்பது வருந்தத் தக்கதுதான். எனினும் இந்நிலையை நாங்கள் தோற்றுவிக்கவில்லை.
இப்பிரச்சினையில் எமது விமரிசனத்தை சில நாட்கள் இடைவெளியில் எழுதுகிறோம். பிற பணிகள் இருப்பதனால் சில நாட்கள் பொறுத்திருக்க கோருகிறோம். மார்க்சியவாதிகளை புலிகள் கொன்றொழித்தார்கள் என்பதை நாம் அறிவோம். வறட்டுவாதம் மார்க்சியத்தைக் கொல்லும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
…..
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
*********************************
தொடர்புடைய பதிவுகள்
புலி அபிமானிகள் அனைவரும் பாசிஸ்டுகளா? தோழர் இரயாகரனுக்கு ஒரு பதில்!
இந்த பதிவிலிருந்து தெரியும் விசியம் என்னவென்றால் : எதிர்காலத்தில் செம்புரட்சி ராயகரன் தலைமையில் உருவானால், அவ்ர் தோழர் ரதி மற்றும் வினவு இதர தோழர்களை முதலில் போட்டு தள்ளுவார். தோழர் வினவு தலைமையில் உருவானால் முதலில் ராயகரன் மற்றும் இந்திய போலி கம்யூனிஸ்டுகளை போட்டு தள்ளுவார். !! :)))
புரட்சிக்கு முன்பாகவே இப்படி சண்டை என்றால், புரட்சி வந்தால் என்ன ஆகும் ? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் !
பி.கு : இப்படி எழுதவதினால், எம்மை பற்றி : “ஊர் இரண்டுபட்டால் கூத்த்டாடிக்கு கொண்டாட்டம்” என்று சொல்ல வேண்டாம். நான் கொண்டாடவில்லை. மேலும், தோழர் ராயகரன் பல நேரங்களில் கேனத்தனமாக எழுதாவர் என்று முன்பே ஒரு பேச்சு உண்டு !!
தோழர் ராயகரனுக்கு யான் எழுதிய ஒரு மடல் :
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2507:2008-08-04-19-09-24&catid=74:2008
தோழர் ராயகரன்,
சோவியத் ரஸ்ஸியாவில் நடந்த பஞ்சம், படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை தான். மேற்கத்திய ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்கள் அதை மிகை படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் முக்கிய காரணம், சோவியத் ரஸ்ஸிய ஒரு இரும்புத்திரையில் பின் மறைந்திருந்து. நேர்மையான, சரியான தகவல்கள் வெளியே வராமல் அமுக்கப்பட்டன். பிற நாட்டு ஊடகவியலாளர்கள்
அங்கு சுதந்திரமாக சுற்றி, தகவல் தேட அனுமதிக்க மறுக்கப்பட்டன். லோக்கல் ஊடகங்கள் முழுவதும் அரசின் கைப்பாவைகள். (ராஜ பக்ஷெ அரசு, வன்னி பகுதியில் நடந்த விதம் இதை போலத்தான். மேலும் இறுதி போரில் சுமார் 15000 முதல் 30000 தமிழர்கள் கொல்லப்படிருக்கலாம் என்று தமிழர்களாகிய நாமும் பல இதர பார்வையாளார்களும் கருதுகிறார்கள். ஆனால் சிங்கள் அரசு சில நூறு மக்கள் தாம் கொல்பாட்டதாக “ஆதாரங்களை” உருவாக்கி, உண்மையான ஆதரங்களை அழித்துவிட்டது. உண்மைதான் என்ன ? பதில் இல்லை. இதே பாணிதான் சோவியத் ரஸ்ஸிய மற்றும் இதர சர்வாதிகார நாடுகளில் நடந்தது / நடக்கும்)
மிகைபடுத்தப்பட்ட எண்ணிக்கை என்பதாலே, சோவியத் ரஸ்ஸியாவில் நடந்த கொடுமைகளை, மனித உரிமை மீறல்களை முற்றாக மறுக்குகிறீர்களா ? அந்த அமைப்பே அப்படிப்பட்ட விளைவுகளை தான் விளைவிக்கும் என்பதே வரலாறு காட்டும் உண்மை.
சோல்சென்ஸினை துரோகி என்று விளிக்கிறீர்கள். என்ன துரோகம் செய்தார் அவர் ? அவர் பட்ட துன்பங்கள் பொய்யா என்ன ? உலகில் யாரும் இப்போது மறுக்க வில்லை. and Solezenshen was jailed not for advocating compromise with NAzis, but for critising Stalin in letter to a freind. HE was a honest patriot who faught in the WW 2 with honour. his jailing happened much later. ok. not as you try to portary. many many innocents like him too were jailed. (i wish you too were with him in the gulag. you are cozy in France and talk like pseudo-moralist). and try to read Gutav HErlings “A World apart”
மார்கிஸம் பேசும் நீங்க, ஃபிரான்ஸ் நாட்டில் தஞ்சம் அடைதுள்ளீர்கள். கூபா அல்லது வட கொரியாவில்
அகதியாக தஞ்சம் புகுந்து, அங்கு ஒரு கூட்டு பண்ணையில் ஒரு 10 ஆண்டுகள் வேலை செய்திருக்க வேண்டும் நீங்க. உலகம் வேற மாதுரி தெரியும். வந்தாரை வாழ வைக்கும் பிரான்ஸ் தேசம், போதிய மான்யம் மற்றும் உதவிகளை அளித்து, அதைவிட முக்கியமாக கட்டற்ற கருத்து சுதந்திரத்தை அளித்துள்ளது.
அதன் அருமை புரியாதவர் நீங்க. வட கொரியா செல்ல வேண்டும் நீங்க. அப்ப தெரிய்ம், சோல்சென்சின் துரோகியா இல்லை யார் துரோகி என்று.
I know you are too narrow minded and insular and undmeocratic to publish my comment. but this for your kind information. that is all.
My only wish is France should expel you to N.Korea now. It is a great shame on France and it shows the magnanimity of France which is a capitalitic democracy.
ஹிஹி அதியமான் ஒங்கள் யாரு போட்டு தள்ளுவார் 🙂 இந்த உலகத்தில் அதிக அளவு போரிட்டது மதவாதிகளும், முதலாளிகளும்தான்.. கண்ணாடியை மாத்துங்க.
போடாங்.. நல்லா வாயில வருது.
ஹலோ மரியாதையா பேசுங்க
ஒருமையில பேசுங்கன்னு எல்லாம்
ஏங்கிட்ட சொல்லாத நீ இப்படி பின்ணூட்டம்
போடுகிற வரை உனக்கு மரியாதையும் கெடைக்காது
ஒரு மண்ணும் கெடைக்காது.
தமிழன்,
அப்படி எல்லாம் அடக்கி வைத்தால் அசிடிட்டி வந்துவிடும் !!
என்னை போல “தாரளமாக” பேசலாமே !! :))
புரட்சிக்காக கூட்டக செயல்பட்ட நெருங்கிய தோழர்கள்,
பின்னாட்ட்களில் தங்களுக்கு சண்டையிட்டுக்கொண்டு,
கொலை வரை போவது மிக சகஜமான வரலாறுதான்.
லெனினுக்கு அடுத்தபடியாக இருந்த முக்கிய தலைவர்களான
டிராட்ஸ்கி, புகாரின் போன்றவர்களை ஸ்டாலின் பின்னாட்களில்
கொன்றழித்து பற்றி படித்துப் பாருங்கள் :
http://www.columbia.edu/~lnp3/mydocs/modernism/Zizek.htm
அதியமான், கம்யூனிச அவதூறுகளை விவாதிக்க இது இடமில்லை.. அதான் புதிய ஜனநாயக கட்டுரைகள் இருக்கிறதே அங்கே பார்ப்போம். மேலும், உலகில் பல அரசியல் தலைவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள் இறந்தவர்களும், கொன்றவர்களும் கம்யூனிஸ்டுகள் அல்ல. இதுக்கு லிங்கெல்லாம் தரமுடியாது
//சோவியத் ரஸ்ஸியாவில் நடந்த பஞ்சம், படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை தான். மேற்கத்திய ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்கள் அதை மிகை படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் முக்கிய காரணம், சோவியத் ரஸ்ஸிய ஒரு //
சம்பந்தம் இல்லாமல் உளரும் அதிமேதாவித்தனத்தை நீங்க எப்ப விடபோறீகளோ
கடைசியில் இராயகரனின் ஒற்றைத்தனம் வென்றுவிட்டது! ரதியின் தன்மான உணர்ச்சிக்குப் பாராட்டுகள்! இனியாவது இராயகரன் போன்ற ஒற்றைத் தனங் கொண்ட உயர் மீநிலை, மேதாவி பார்ப்பனியர்களிடம் இருந்து, வறட்டு, போலி ஈழ மார்க்சியர்களிடமிருந்து ம.க.இ.க விலகி, ஈழ மக்கள் மத்தியில் தன் வழியில் மார்க்சிய விழிப்புணர்வைப் பரப்பும் என நம்புகிறேன். நனைந்த பின்னும் அடிக்கடி அடித்த இராயகரனின் சாயம் அடுத்த மழையிலும் வெளுக்கும்! நன்றிகள்!
சரியான அனுகுமுறை. வினவு கருத்துடன் நான் 100% ஒத்துப்போகிறேன். தோழர்கள் உணர்ச்சிவசப்படாமல் இதை பரிசீலித்து விவாதிக்குமாறு வேண்டுகிறேன்
enna thozhar ithu mailil pesi theerkka vendiyathai pathivil pottu rendu perum kuzhambi engalaiyum kuzhappuringale.
நான் மணி
இணையம் என்பது ஒரு ஜனநாயகத்திற்கான அதாவது விவாதத்திற்கான மேடை என்று கருதுகிறேன். மற்றபடி வசிட்டரின் வாயால் பிரம்மரிஷி பட்டம் வழங்குவதற்கான அரங்கு இது அல்ல என நினைக்கிறேன்.
//தமிழ்ப்பாசிசம் தன்னை மூடிமறைத்து எப்படி எந்த வேஷத்தில் தமிழ்மக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்ததோ, அதே உள்ளடக்கதில் இந்திய பொதுவுடமைவாதிகளை ஏமாற்றுகின்றது. இதற்காக தன்னை மூடிமறைத்துக்கொண்டு; களமிறங்குகின்றது. பாசிசம் எப்போதும் வெளிப்படையாக தன்னை பிரச்சாரம் செய்வது கிடையாது. அது தன்னை மூடிமறைக்கின்றது.
மக்களின் பொதுவான அவலத்தை, தன் சொந்த அவலமாக காட்டியே பிரச்சாரம் செய்கின்றது. தமிழ் பாசிசமாகட்டும், இந்துத்துவ அடிப்படைவாத பாசிசமாகட்டும், முஸ்லீம் அடிப்படைவாத பாசிசமாகட்டும்…, சமூகத்தின் பொதுவான பாதிப்புக்களையும், துயரங்களையும், மனித அவலங்களையும் முன்வைத்துத்தான் பாசிசம் பாசாங்காக செயற்படுகின்றது.
இந்து அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம், தன் அடிப்படைவாதத்தை மூடிமறைத்துக் கொண்டு அதற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டும், இதுபோல் முஸ்லீம் அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்து, தன் அடிப்படைவாதத்தை மூடிமறைத்துக்கொண்டு அதற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டும், பொதுவுடமை தளத்தில் பிரச்சாரம் செய்யலாம் என்பது வினவின் பொதுவுடமை அரசியல் நிலைப்பாடாக மாறி நிற்கின்றது. இந்த அடிப்படையில்தான் (புலிப்) தமிழ் பாசிசம் தன்னை மூடிமறைத்துக்கொண்டு, வினவில் புகுந்து நிற்கின்றது.
நாங்கள் இந்து அல்லது முஸ்லீம் அடிப்படைவாத பாசிசத்தை, பொதுவான அவர்களின் துயரத்தின் ஊடாக, எம்தளத்தில் இந்திய பொதுவுடமைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கலாம் என்பதே வினவின் நிலைப்பாடு. இந்து அல்லது முஸ்லீம் அடிப்படைவாதத்துக்கு நேரடியாக பிரச்சாரம் செய்யாவிட்டால் சரி. மறைமுகமாகச் செய்யலாம் என்பதற்கு இது ஒத்தது.(பாகம் 1 லிருந்து)//
வன்மம் இல்லாத மனதுடன் தனது மகளை இந்துமத வெறியர்களின் காமப்பசிக்கு பலிகொடுத்த தாய் ரத்தசாட்சியம் அளித்தால்தான் தூய மார்க்சிய லெனிய இயக்கத்தின் ‘கற்பு’ காப்பாற்றப்படும் என்ற உங்களது ஆர்வம் புரிகிறது. இப்படி ரிஜக்ட பண்ணுவது என்றால் ஒரு அமைப்பை கட்ட முடியுமா? அல்லது அவர்களுக்கு புரியவைக்கும் செயலை நடைமுறையில் செய்து காட்டி புரிய வைக்க முடியுமா?
அந்த மேடையில் வன்மம் கொண்ட மனதுடன் ஒரு தாயோ, தந்தையோ சாட்சியம் சொல்லியிருந்தால், அதற்காக பொதுவுடமை இயக்கம் பின்னடையுமா…
முதலில் கம்யூனிஸ்டுகள் தங்களது எதிரிகளுடன் கூட விவாதிக்க தயாராக இருக்க வேண்டும். அது உங்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் எனில் இன்றுவரை உங்கள் பக்கம் எத்தனை பேரை வென்றெடுத்தீர்கள் பிரான்சில்… வென்றெடுப்பதற்கு கூட விவாதிப்பதற்கான பொறுமையோ, மக்களிடம் தொடர்போ கொள்ளாமல் இருந்துவிட்டு, வாக்கியத்துக்கு இடையில் வர்க்கம் என் மூன்று தடவை, புலிப்பாசிசம் என்று மூன்றுதடவை, தமிழ்பாசிசம் என மூன்று தடவை உச்சரித்துவிட்டால் அது மார்க்சியம் என் ஆவதற்கு மார்க்சியம் ஒன்றும் ஸ்ரீகிருஷ்ண ஜெயம் இல்லையே…
உங்களது மனதில் உண்மையில் நீங்கள் தோழராக மாறியிருந்தால் புலிகள் மீதான தனிப்பட்ட வன்மம் மறைந்திருக்க வேண்டும். போலியாக மறைத்தால் தகுந்த சந்தர்ப்பத்தில் அது இயல்பாக வெளிப்படும்.
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களில் உங்களால் பங்குபெற முடியாமல் இருந்ததற்கு காரணம் என்ன? ஒருவேளை பங்கு பெற்று இருந்தால் ஏன் எழுதவில்லை. வர்க்கமா.. அப்படியானால் நீங்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்..
// ஈழத்தின் பொதுவுடமைக்காக வினவு பிரசாரத்தை செய்யாமல், இதற்கல்லாத, ஒரு வர்க்கமற்ற, தமிழ் மக்களைச் சாராத, தனிமனித (புலி) வக்கிரத்தை பிரச்சாரம் செய்ய வினவு தளம் உதவிவருகின்றது.//
ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் அவலத்தை ஒரு கம்யூனிஸ்டு ஆதரிப்பதுதானே சரி அந்தப்பார்வை வர்க்கப்பார்வைக்கு எதிரானாதா.. ஆம் எனில் நீங்கள் புரிந்து கொண்டிருப்பது மார்க்சியமா.. தமிழ்மக்களைச் சார்ந்துதான் தனது அனுபவங்களை ரதி சொல்ல வருகிறார் என நினைக்கிறேன்.. நீங்கள் அப்படி சார்ந்து இருப்பதாக கருதிக் கொள்கின்றீர்களா.. தனிமனித வக்கிரமா.. கொஞ்சம் லாஜிக் ஆக பேசிப் பழகுங்கள்.. தமிழ்தேசிய வாதிகள் மாதிரி பேசிப் பழகாதீங்க.. உலகத்துல இருந்தே தனிமைப்பட்டுப் போயிடப் போறீங்க..
ஒரு அகதியின் கண்ணீரைப் புரிய வைக்க வேண்டும் என்பதுதான் நோக்கமே தவிர இது ஒரு மாற்று மகாவம்சம் என்று புரிந்துகொள்ளும் அளவுக்கு வினவின் வாசகர்கள் ஒருவகை அடி முட்டாள்கள் இல்லை எனவும் கருதுகிறேன்.
//தமிழ்மக்களின் பொது அவலத்தை புலியிசம் தனக்கு ஏற்ப, தன் வர்க்கத்துக்கு ஏற்ப பயன்படுத்தும் என்ற அரசியல் உண்மையை, இந்த நடத்தை மூலம் வினவு நிராகரிக்கின்றது. இந்த அடிப்படையில் எதிர் விமர்சனமின்றி, அதை நுணுகிப் பார்க்கத்தவறி, தமிழ் பாசிசத்தை தமிழ்மக்கள் அவலத்தினூடு, பொதுவுடமை ஊடாக பிரச்சாரம் செய்ய வினவுதளம் உதவுகின்றது. வர்க்கங்கள் உள்ள சமூகத்தில், தமிழ்மக்களின் பொதுவான துயரங்களை எந்த வர்க்கம், எப்படி தனக்கு இசைவாக பயன்படுத்தும் என்ற அடிப்படையான அரசியல் வேறுபாட்டை கூட இங்கு கைக்கொள்ளாது, தமிழ் பாசிசத்தை ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் குரலாக பொதுவுடமை பிரச்சாரத்தில் வினவு அனுமதித்துள்ளது. ஒரு புலிப் பாசிட்டை “தோழர்” என்று கூறி, எம் தோழர்களின் (சர்வதேசியத்தில் அவர்கள் தோழர்கள் கூட) பல ஆயிரம் பேரின் கழுத்தை அறுத்த பாசிச கும்பலுக்கு “தோழர்” அந்தஸ்து கொடுத்து, பொதுவுடைமை தளத்தில் கம்பளம் விரித்து பிரச்சாரம் செய்ய அனுமதித்துள்ளது. “தோழர்” என்ற அரசியல் பதத்தை எழுந்தமானமாக கையாள்வது, அரசியல் ரீதியாக மன்னிக்க முடியாது. தோழர் மருதையனையும், தோழர் என்று புலியை ஆதரிப்பதாக கூறும் ஒருவரையும், ஒரே விழிச்சொல் ஊடாக “தோழராக” ஒன்றுபடுத்தி விடுவது, தோழமையின் மேலான கேள்வியாகிவிடுகின்றது. //
தோழர் எனப்படுபவர்கள் அனைவரும் முதலில் மனிதர்கள். மனிதகுல எதிரியான பாசிஸ்டுகள் மாத்திரம்தான் அப்படி அழைக்கப்பட முடியாதவர்கள். அதற்கும்கூட மொத்த வேலைக்கு
உதவும் என்றால் அந்த வார்த்தையை பயன்படுத்த கூடாது எனப் பார்ப்பது மார்க்சியவகைப்பட்ட பார்வை அல்ல, மாறாக மார்க்சிய’வார்த்தை’யில் பிழைக்கும் பார்வை..மேலும், முதலில் சொன்ன இயக்கவியல் கண்ணோடமின்மையே ரதி என்ற புலி ஆதரவாளர் தமது விவாதங்களினூடாக மாறுவார் என்ற பார்வை இல்லாத்தாலே, அல்லது சரியாகச் சொல்வது என்றால், தான் பேசுகின்ற வறட்டு மார்க்சியத்தால் அவரை மாற்ற முடியாது என நம்புபவர்கள்தான் இன்னும் சரியாகச் சொல்வது என்றால், மாற்றவே முடியாதவர்களால் பூமி நிறைந்திருப்பதாக நம்பும் மார்க்சிய இயக்கவியலின் எதிரிகள்தான் பற்றுவதற்கு ஒரு கைப்பிடி கிடைக்காமல் தோழர் என விளித்த்தை ஒரு விசயம் எனக் கருதி மயிர்பிளக்கும் விவாதங்களைச் செய்ய முடியும்.
பிரபாகரனுக்கு ஒரு காலத்தில் நான் கூட ரசிகர்தான். என்னிடம் அரசியலை விவாதித்த மா.லெனிய அமைப்பினைச் சேர்ந்த தோழர் என்னைப் போன்ற ஒரு ‘பாசிஸ்டி’டம் நாள்கணக்கில் விவாதித்து எனது கருத்தை மாற்றினார். இது தவறு என ரயாகரன் அவருக்கு விளக்கினால் அந்த அமைப்பை ‘நன்றாக’ இந்தியாவில் வளர்க்கலாம்.சுத்த சுயம்புவாக தோழராக பிறப்பவர்கள் மாத்திரம்தான் நம்முடன் பேசத் தகுதியானவரகள் என நினைத்தால்.. அந்த தனிமையை நினைத்துப் பார்க்கவே மனசு பதறுகிறது..
// ஈழத்து பொதுவுடமை தன் வர்க்க எதிரியில் ஒன்றை, இந்திய பொதுவுடமைக்கு சார்பான வினவுத் தளத்தின் ஊடாக எதிர்கொள்ளும் துயரம் எம்முன். நாம் சந்திக்கும் கடும் உழைப்பு, கடும் பளுவுக்குள், சர்வதேசியத்தின் அரசியல் அடிப்படையை தகர்த்துவிடும் எல்லைக்குள் இவர்கள் நகர்த்துகின்றனர். மனிதன் தான் சந்தித்த பாதிப்புகளை எந்த வர்க்கமுமற்றதாக காட்டி, ஈழத்துப் பாசிட்டுகளின் பிரச்சாரத்தை எமது பொதுவுடமை பிரச்சாரத்துக்கு எதிராக முன்னிறுத்தியுள்ளனர்.//
ஈழத்துப் பொதுவுடமைக்கு நீங்களோ, இந்தியாவுக்கு வினவோ பிரதிநிதி என நீங்கள் உங்களுக்குள்ளேயே முடிவுசெய்ய முடியாது. அது மக்கள் அரங்கத்தில் உங்களது செல்வாக்கால், சித்தாந்த தெளிவால், புரட்சியை நடத்திக்காட்டுவதால் தீர்மானிக்கப்படும். வினவு சார்ந்த அமைப்பும், நீங்கள் மாத்திரமே கொண்ட ‘ஈழத்துப் பொதுவுடமைக் கட்சியும்’ ஒன்றா? இந்த ஆணவம் எனக்கு புலிப்பாசிச தலைமையை ஞாபகப்படுத்தக் கூடாதா? நீங்கள் பாசிசத்தை எதிர்க்கிறேன் என்பதாகக் காட்டிக் கொள்வதால் மாத்திரமே கம்யூனிஸ்டாக மாற முடியாது.
நீங்கள் கடும் உழைப்பு உழைத்து கட்டிய ஈழத்து கம்யூனிஸ்டு கட்சியில் இன்னமும் திட்டம் கூட எழுத நேரமில்லையா…
பெரியாரை பெரியாரியவாதிகள் எனத் தங்களை அழைத்துக் கொள்பவர்கள் பூசையறைப்படமாக மாற்றிக் கொண்டுவருகிறார்கள். அதற்காக பெரியாரை வீரமணியிடமிருந்து மீட்போம் என்றார்கள் தோழர்கள். இதோ ரயாகரனிடமிருந்து மார்க்சியத்தை காப்போம் என முழங்க வேண்டி வந்துவிட்டது.
ரயாகரனுக்கு மற்றும் அவரை ஆதரிக்கும் அன்பர்களுக்கு ஒரு சவால்… இதோ கீழே சொல்லப்பட்டது கூட பாகம் 1 ல் எடுக்கப்பட்டதுதான்.. இது ஒரு மார்க்சிய அடிப்படையிலான பார்வை என யாராவது நிரூபிக்க முடியுமா.. முடிந்தால் நான் இனி இணையம் பக்கத்தில் வருவது இல்லை என உறுதி கூறுகிறேன்.
// நாங்கள் இதற்கு முரணாக, முரண்பட்ட விதத்தில் பிரச்சாரம் செய்கின்றோம். வரலாறும், அனுபவமும், துயரங்களும் வர்க்கம் சார்ந்தது. வெறும் சிங்கள பேரினவாதத்தை முன்னிறுத்தி, அனைத்தையும் வர்க்கமற்றதாக, முற்போக்கானதாக காட்டுவது அரசியல் அபத்தம். தமிழினம் சிங்கள பேரினவாதத்தால் தனித்து இந்த நிலையையடையவில்லை. தமிழ் பாசிசத்தினால் தான், கேவவமான இழிவான இந்த நிலையை அடைந்;தது. இதுவின்றி எதையும் பேச முடியாது.//
தோழர்களே,
நான் மணி மேலே எழுதியிருக்கும் பின்னூட்டத்தில் மேற்கோள் காண்பித்திருக்கும் பகுதிகள் தோழர் இரயாகரனது கட்டுரையான “தோழர் வினவின் தளத்தில் மூடிமறைத்த (புலி) தமிழ்ப்பாசிசம் (பகுதி 1)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. மேலே அதை குறிப்பிடத் தவறிவிட்டேன். மன்னிக்கவும்
// இப்பிரச்சினையில் தோழர் இரயாவை முன்னுறுத்தி வறட்டுவாதம் குறித்த விவாதத்தை நடத்த நேர்ந்திருப்பது வருந்தத் தக்கதுதான்//
வினவுத் தோழர்களே,
இராயகரனின் வறட்டுவாதத்தை நீங்கள் இதுவரை எதிர்கொள்ளவில்லை – ஒரு வேளை அவர் உங்களை ஒத்த சிந்தனை கொண்டவரென நீங்கள் எண்ணியதாலோ, என்னவோ- ஏனையோர் எதிர் கொண்டார்கள் அதை. இப்போது நீங்களும் எதிர் கொள்கிறீர்கள். அவ்வளவே, வருந்துவதற்கு ஒன்றுமில்லை இதில்.
// இதோ ரயாகரனிடமிருந்து மார்க்சியத்தை காப்போம் என முழங்க வேண்டி வந்துவிட்டது.
// அதே.. அதே!
வழிமொழிகிறேன்!
உங்களையும் யோவ் நீ யாரு.. அவனே இவனே புலி அடிவருடி எனத் திட்டி வரப்போகும் பின்னூட்டங்களுக்கு வாழ்த்துகள்! 😀
இரயாகரனின் இந்த நிலைப்பாடு துயருக்குரியது. ரதியின் கட்டுரைக்கு பின்னூட்டமிடவும், வரிக்கு வரி மறுத்து பின்னூட்டமிடவும் கூடாது என்று யார் தடுத்தது ?. ரதி தன் பதிவினை இடைநிறுத்தியது துரதிஷ்ட வசமானதுதான்.
ரதி,
அடுத்தவர்கள் குற்றம் கண்டுபிடித்ததற்காக எழுதுவதை நிறுத்துவது தவறு. உங்களுக்கு இன்னும் கொஞ்சம் தடிமனான தோல் வேண்டும். ரயாகரனா நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது?
உங்கள் பதிவுகள் முக்கியமான ஆவணங்கள். ஏற்கனவே பல முறை சொன்னதுதான், இருந்தாலும் திருப்பி சொல்கிறேன். எதிர் கருத்துகள் உங்களுக்கு முட்டாள்தனமாக, கடுப்படிப்பவையாக இருக்கலாம், அதற்காக எழுதுவதை நிறுத்தாதீர்கள். உங்கள் முடிவை மாற்றிக்கொண்டு தொடர்ந்து எழுதுங்கள்!
வினவு,
// இரயா – பு.க, பு.ஜ – வினவுக்கு இடையிலான தோழமை உறவு பற்றி வாசகர்களுக்கு தெரியும். //
எனக்கு தெரியாது. என்ன உறவு?
நானும் ஆர்வி சொன்னதையே வழிமொழிகிறேன்.
//ரயாகரனா நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது?//
ஒரு அகதியின் வாழ்க்கை சோகங்களை அறிந்து கொள்ளும் பொன்னான வாய்ப்பு பாழாயிற்று. அவர் புலிகளை உயர்த்தி எழுதினாலும்கூட புலிகள் ஏன் பலரால் நேசிக்கப்ப்டுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளவாவது ஒரு வாய்ப்பிருந்திருக்குமே?
கருத்துகளை சொல்லவே விடாமல் (மறைமுகமாகத்தானென்றாலும்) வென்றது Prejudious ரயாகரனின் சாமர்த்தியமே. அவருடைய இந்த நடவடிக்கை ஃபாஸிஸமில்லையா? இதனை புலியெதிர்ப்பு ஃபாஸிஸமெனலாமா?
ரதி,
எனக்கு தைரியமும், அறிவுறையும் சொல்லிவிட்டு இப்படி நீங்கள் வருத்தப்படுகிறீர்களே! நம் உடல் நலமும், உள்ள நலமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமென்றால் உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள பகுதிகளில் செல்லாமல் தவிர்ப்பது மிகவும் சிறந்தது. எழுத்தாளர்கள் ஒரு பிரச்சனையை என்ன தான் நடுவு நிலைமையுடன் எழுதினாலும், உலகம் அதை சப்ஜெக்டீவான பார்வை என்று தான் விமரிசிக்கும். வாசகர்களில் உள் நோக்கு உள்ளவர்கள் என்றும், எந்த வித உள் நோக்கும் இல்லாதவர்கள் என்றும் நாம் பிரித்துக்கொள்ளவேண்டும். நம் மன ஆரோக்கியத்திற்க்காக நம் கருத்திற்கு எதிர் கருத்து கூறுபவர்களை, அதை நாம் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில், உள்நோக்கு கொண்டவர்களாக கற்பனை செய்து கொண்டு, மேலும் வாதிட விரும்பவில்லை என்று கூறி ஒதுங்கிவிடவேண்டும். இதனால் பலர் நாம் தோற்றுவிட்டோம் என்று பரிகசிக்க நேரலாம். அதனால் என்ன? அவார்டா கொடுக்கிறாங்க? 🙂
Bags
ரதி தோற்று விட்டது மட்டுமல்ல எம்மையும் அவமானப்படுத்திவிட்டார்
விமர்சனங்களுக்கு , குறிப்பாக விசமிகளுக்கு பயப்படுபவர் எழுதவே தொடங்கியிருக்கக் கூடாது
ஆனாலும் இவர்கள் புலிகளுக்கு எதிராக எழுதும் போது புலிகள் ஜனநாயக மறுப்பு, கருத்து சுதந்திரம் என்று பீற்றிக் கொள்வார்கள்
ஆனால் அதையே புலிகளுக்கு ஆதரவாக எழுதினால் அருவருடி , புலிப்பாசிசம் என்று ஊலை யிடுவார்கள்
புலிகளுக்கு எதிராக எழுதுவது தான் கருத்துச் சுதந்திரமா ??
புலிகளுக்கு ஆதரவாக எழுதுவர்களுக்கு கருத்து சுதந்திரம் கிடையாதா ???
புலிகளுக்கு ஆதரவாக எழுதுபவர்களின் சுதந்திரத்திற்கு ஊறு விளைவிப்பவர்களுக்கு என்ன பெயர் ??
அனால் புலி ஆதரவாளர்களுடன் ஒப்பிடும் போது எதிர்ப்பாளர்களும் துரோகிகளும் கடுகளவே
புலி ஆதரவு ஊடகங்களிலும் பார்க்க புலி எதிர்ப்பு ஊடகங்கள் தான் அதிகம்
அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் புலி எதிர்ப்பிற்கு இந்திய இலங்கை அரசுகளின் ஆதரவுகள், கூலிகள் கிடைப்பதும் ஒரு காரணம்
ஆண்மீகத்தையும் ஆபாசத்தையும் ஒன்றாக காட்டினால் எம்மவர் உடனே ஆபாசத்தை தான் பார்ப்பார்கள்
அது போலத் தான் புலி ஆதரவும் எதிர்ப்பும்
இதில் வெட்கக கேடு என்னவென்றால் இந்த ஊட்கங்களுக்கு அதிகமாக உலாவுவதும் புலி ஆதரவாளர்கள் தான்
புலிகள் துரோகிகளை வசைபாடுவது கிடையாது மாத்தையா முதல் கருணா வரை இது வரை அவர்கள் வசை பாடியது கிடையாது
இந்தியாவின் தமிழின அழிப்பில் கூட எந்த ஆதரத்தையோ அல்லது இந்தியாவையோ வசை பாடியது கிடையாது
இவர்கள் என்ன எழுதினாலும் புலிகளை குற்றம் சொல்லுவதற்கு இவர்களுக்கு தகுதியோ ,தாற்பரியமோ, அல்லது மாற்றுக் கொள்கையோ கிடையாது
புலி எதிர்ப்பு மட்டுமே இவர்களது கொள்கை அதற்கு ஊதியம் கிடைக்கும் வரை இவர்கள் தொடர்வார்கள்
கருத்துச் சுதந்திரம் , மறுப்பு , மாற்றுகருத்து என்று கத்திக் கொண்டு ஈழத்தில் எல்லா பத்திரிக்கையாளர்களையும் கொல்லுவதும் மிரட்டுவது இந்த கூட்டம் தான்
ரதி போல் ஒதுங்காவிட்டால் போட்டுத் தள்ளுவது இது தான் ஈழத்தில் நடைபெறுகின்றது
இது தமிழ் ஊடகவியளார்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் தான் அண்மையில் கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியளாளர் கருணாவால் கொல்லப்பட்டதாக தகவல்
puligal than makkal… makkal than puligal… veliyae irunthikittu vetti velai pakkathingada… stupids..
ரயாகரன் என்னும் கொள்கை சிங்கத்தின் கூற்றுக்கு பயந்து நீங்கள் எழுதுவதை நிறுத்தியிருக்க வேண்டாம். அவரது கட்டுரைகளை படித்துவிட்டு நியாயமான சந்தேகங்களோ, கேள்விகளோ கேட்டால் உடனே நம்முடைய பின்னூட்டம் தூக்கப்பட்டுவிடும். அவ்வளவுக்கு நேர்மையுள்ளவர் அவர்.
சில உதாரணங்கள்:
௧.”புலிகள் ஒரு சாதி மறுப்பு இயக்கமாம்” என்று நக்கல் தொனியில் அவர் வெளியிட்டிருந்த கட்டுரைக்கு பின்னூட்டமாக, “அய்யா ரயாகரன் அவர்களே, புலிகள் சாதி மறுப்பு இயக்கம் இல்லை என்றால், அவர்கள் சாதியை பேணினார்கள் என்றால் அதற்கு ஏன்ன ஆதாரம்?” என்று வினவி இருந்தேன். இரண்டாவது நாளே அந்த பின்னூட்டம் தூக்கப்பட்டு விட்டது. எனக்கு வந்த சந்தேகம் அந்த கட்டுரையை படித்த ஓரிரெண்டு சுரணை உள்ள மனிதர்களுக்கு வந்திருக்க கூடும். ஏன், திடீரென்று ரயாகரனுக்கே கூட உறைத்திருக்கலாம்.
௨. நீங்கள் உங்கள் இணைய தளத்தின் முகப்பு பக்கத்தின் அடிப்பாகத்தில் இணைத்துள்ள மாவோ ஒரு வடிகட்டிய முட்டாள். குருவிகள்தான் நெல்மணிகளை பெருமளவில் தின்று உணவு பஞ்சத்தை உருவாக்குகின்றன என்ற ஆழ்ந்த “ஞ்ஞான உண்மையை” ண்டு பிடித்து, “குருவிப் போர்” என்ற ஒன்றை தொடங்கி, குருவிகளை பெருமளவில் கொன்று, அதனால் குருவிகள் உண்டு வந்த பூச்சியினம் பல்கி பெருகி, அந்த வருடம் பெரும் உணவுப் பஞ்சம் சீனாவில் வந்தது என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா என்று வினவி இருந்தேன். அதற்கும் பதில் இல்லை. ஏன் என்றால் அவர் நேர்மை மிக்கவர்.
௩. “புலி பாசிசம், புலி பாசிசம்” என்று கூவுகிரீர்களே, நீங்கள் நக்கி பிழைக்கும் கொள்கையை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் சீனாவும் ரசியாவும்தானே தமிழின அழித்தலின் முக்கிய கூட்டாளிகள்? நீங்கள் புலம்புவது போன்று அவர்கள் உண்மையிலேயே பாட்டாளி வர்க்கமாய் இருந்தால், உழைக்கும் மக்களாய் இருந்தால், ஒரு இன விடுதலைக்கு எதிராக சிந்திக்கவும் தோன்றுமா? மாறாக பல்லாயிரம் கோடி பெறுமானமுள்ள ஆயுதங்களை கடனுக்கும், அன்பளிப்பாகவும் வழங்கி தமிழ் மக்களை கொல்ல துணை போன துரோகிகள் அவர்கள். அவர்களை நீங்கள் ஆதரிப்பதால் நீங்களும் தமிழ் மக்களுக்கான எதிரிகள். உங்களுக்கு தமிழ் மக்களை பற்றி பேச, எழுது என்ன அருகதை இருக்கிறது என்று கேட்டிருந்தேன். அதையும் வெளியிட வில்லை. ஏன் என்றால் அவர் கொள்கை பிடிப்புள்ள நேர்மையான மனிதர்.
௪.” சீன இந்தியாவின் மீது காரணமின்றி படை எடுத்தது. இன்னமும் சரியான நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திபெத்தை ஆக்கிரமித்தது என்ன நியாயம்? திபெத் இறையாண்மை மிக்க தனிப்பிரதேசம் அல்லவா?” என்று கேட்டிருந்தேன். அதற்கு கட்டுரையை எழுதிய ரயாகரன் நேரடியாக பதில் அளிக்காமல் தன்னுடைய அடிபொடிகள் மூலம் ஒரு முத்தை உதிர்த்திருந்தார்: “நாங்கள் நினைத்திருந்தால் டில்லியையே கைப்பற்றி இருப்போம். ஆனால் எங்கள் நோக்கம் அதுவல்ல என்று சீனர்கள் சொன்னார்கள்” என்று திமிரோடு ஒரு பதில். அண்டை நாட்டை சீண்டிப்பார்க்கும் பொறுக்கித்தனமான இவர்களுக்கே இவ்வளவு திமிர் இருந்தால், பேரினவாதத்தில் இருந்து தமிழ் மக்களை கொஞ்சம் காலமேனும் பாது காத்து வைத்திருந்த தமிழ் ரத்தம் ஓடும் புலிகளுக்கு எவ்வளவு திமிர் இருந்திருக்கும்? மேலும் திபெத்தை ஆக்கிரமிக்க என்ன உரிமை சீனர்களுக்கு இருக்கிறது என்று கேட்டதிற்கு, “அவர்கள் தியானம் செய்ய போராடுகிறார்கள்” என்று ஒரு “புதிய” கண்டு பிடிப்பை உதிர்த்திருந்தார் அந்த அடிபொடி. மேலும் அவர்களை சிங்கள பிக்குகளுடன் ஒப்பிட்டு தன்னுடைய “பரந்த உலக அறிவையும்” வெளிப்படுத்தி இருந்தார். திபெத்திய பிக்குகள் தங்கள் சொந்த நாட்டில், மண்ணில் செவ்விந்தியர்களை போலவும், ஈழ தமிழர்களையும் போல அமைதியாக வாழ விரும்பிய ஒரு இனம். சிங்கள பவுத்தர்களை போல வேறு மொழி பேசும் இன மக்களை கொன்று அதில்
சுகம் கண்ட பேய்கள் அல்ல.
மேலும், ஸ்டாலினால் கொல்லப்பட்ட ஏழை ரசிய குடியானவர்களை பற்றி கேட்டால்,
ஸ்டாலின் ஒரு தன்னிகரில்லாத தலைவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டதாக உளறியிருந்தார். பதிலுக்கு நானும், “கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழினத்துக்காக
போராடிய சிறந்த தலைவர் யார்?” என்று ஒரு கருத்துகணிப்பை தைரியமிருந்தால் எடுத்துப்பாருங்கள். பிரபாகரனை தவிர வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வர முடியாது என்று எழுதினேன். அந்த பதிலையும் பிரசுரிக்கவில்லை. ஏன் என்றால் அவர் ஒரு சிறந்த கொள்கை பிடிப்புள்ள நேர்மையான manithar.
பாட்டாளி makkal, உழைக்கும் மக்கள் என்ற போர்வையில் திபெத்தை வேட்டையாடிய ஓநாய்தான் சீனா. அந்த ஓநாய்களை உயர்த்திப் பேசும் ஒரு ஓநாய்தான் இந்த ரயாகரன். அவர் எழுதிய கட்டுரைகளை படித்துப் பாருங்கள். எங்காவது ஓரிடத்தில் பாட்டாளி மக்கள், உழைக்கும் மக்கள் என்ற போர்வையில் தமிழர்களை கொல்ல துணை போன அந்த கயவர்களை பற்றி எங்காவது ஒரு வார்த்தையாவது கண்டித்திருப்பாரா? மாட்டார். ஏன் என்றால் அந்த கேவலமான கயவர்களை, நய வஞ்சகர்களை,ஓநாய்களை நக்கித்தான் இவர் பிழைக்க வேண்டியிருக்கிறது.
ரசியாவில் கோபசெவ் ஆட்சிக்கு வந்தபிறகு, “தோழர்கள்” நடத்திய திருவியாளையாடல்கள் ஒவ்வொன்றாய் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தது. ஏழை மக்களை சுரண்டி கம்யுனிசம் பேசிய “தோழர்கள்” எவ்வாறு கொழுத்து வளர்ந்தார்கள் என்று வெளி வந்த செய்திகளால் “தோழர்களால்” ரசியாவையும் தூக்கி பிடிக்க முடியவில்லை. உடனே எவன் இளிச்ச வாயன் என்று பார்த்து தங்களுடைய நக்கி தின்னும் பிழைப்பிற்கு ஆதாரம் தேடி கொண்டார்கள். மாஸ்கோவில் ஆயிரக்கணக்கான கல்லூரி பெண்களை விபச்சாரிகள் ஆக்கியதும், உழைக்கும் மக்களை பிச்சைகாரர்கள் ஆக்கியதும்தான் ரசியாவில் “தோழர்களின்” மிகப்பெரும் சாதனை. விடுதலைக்கு போராடிய ஒரு இயக்கத்தை, இனத்தை வேரோடு அழிக்க சகல உதவிகளையும் செய்து விட்டு, ஒன்றுமே தெரியாதது போன்று, “புலி பாசிசம், புலி பாசிசம்” என்று இப்போது கூவி திரிகிறார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசம் எல்லாம் வேஸ்ட். “தோழர்” ரயாகறந்தான் பெஸ்ட்.
இதுதான், அந்த “உயர்ந்த லட்சியவாதியின் ” லட்சணம். அந்த கேவலமான பொய்யனுக்கு பயந்தா இந்த கட்டுரையை நிறுத்தினீர்கள்?
உண்மையில் ரயாகரன் போன்ற காகிதப் புலிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும் வாதாடி, உண்மையை எடுத்து கூறி அவர்களின் பைத்தியகார தங்களை தோலுரிப்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை. ஆனால், அவர்களை போன்று “போராளிகள் ,பாட்டாளிகள்” என்று நக்கி திரியாமல், நாம் உழைத்து பிழைக்க வேண்டியிருப்பதால் இதற்கெல்லாம் நேரமில்லை.
சீனிவாசன், இரயாகரனை விமர்சிப்பது என்ற பெயரில், கம்யூனிச அவதூறு உளரல்களை எழுதியிருக்கிறீர்கள். இருப்பினும், இந்த பதிவின் விவாத போக்குக்கு வெளியே அது இருப்பதால் உங்களுக்கு இப்போது மறுப்பு எழுத முடியாது… யாரும் எழுதவும் எழுதக்கூடாது… இங்கே புதிய ஜனநாயக கட்டுரைகள் வெளியிடப்படும் போது வாருங்கள் விவாதிக்கலாம்.
உண்மைதான் ஜான், உண்மைதான்.
எந்த கம்யுனிச கொள்கையை “தோழர்கள்” தூக்கி பிடித்து கூத்தாடுகின்றார்களோ அந்த கம்யுனிச கொள்கையை சீனாவும், ரசியாவும் தூக்கி குப்பையில் போட்டுவிட்ட பிறகும் நீங்கள் கத்தி கொண்டிருப்பது ஏன் என்று கேட்டால் அது உளறல்தான்.
சரி. நீங்கள் சொல்வது போலே கம்யுனிசம் உழைக்கும் மக்களின், பாட்டாளி மக்களின் வரம் என்று வைத்துக்கொண்டாலும், அந்த பாட்டாளி மக்களின் பேரால், உழைக்கும் மக்களின் பேரால் தமிழ் மக்களை கொல்ல துணை போன துரோகிகளை நீங்கள் தலையில் தூக்கி வைத்து கூத்தாடுவது ஏன் என்று கேட்டால், அது உளறல்தான்.
கம்யுனிச போர்வையில் திபெத்தை ஆக்கிரமித்து, அவர்கள் வாழ்வை சிதைத்து , கலாச்சாரத்தை குலைத்தது ஏன் என்று கேட்டால் அது உளறல்தான். கம்யுனிச
சீன “தோழர்” பாணியில்தான் “தோழர்” ராஜபக்சேவும் தமிழ் நிலத்தை ஆக்கிரமித்தார் என்று கூட நாளை நீங்கள் சித்தாந்த வக்காலத்து வாங்கக்கூடும். வாழ்க கம்யுனிசம். வாழ்க தோழர்கள்.
****************,
யாரு தோழர் என்று சொல்லச்சொல்கிறாய் ராஜ பக்சேவையா? பார்ப்பன சங்கராச்சாரி, அசோக் சிங்கால், பீஜேபிக்கு கால் கழுவ அனுப்புனவன போய் கேளு சுயமருவாதன்னா என்னான்னு? இந்தியாவு புடிச்சு இவ்வளவு நாள் தொங்குனீங்க. இந்திய மேலாதிக்கத்தின் தேவையை பூர்த்தி செய்ய ஆவலா இருந்தீங்க. அவன் கவுத்து உட்டுட்டான் அதான் கோவம். புரட்சிகர கம்யூனிச வரலாற்றை எடுத்துப்பார் நாங்கள் இந்திய மேலாதிக்கத்தை அபோதிலிருந்தே எதிர்த்தோம் . எப்போன்னு தெரியுனுமா? உங்க அமைப்ப வளர்க்க எம்ஜிஆர், ரா பணம் கொடுத்தாங்களே அப்பவே இருந்தே.இதய்ம் பொய்யுங்காத உங்க ஆசான் பாலசிங்கம் சொன்னதுலா இது.
அந்த மொட்ட லாமாவுக்கு சப்போர்ட் செய்து அதன் மூலமா ஈழத்தை புடிக்கப்போறாங்களாம். சீனிக்குட்டி , வரலாறை ஒழுங்கா படி, காங்கிரஸ் காரன் சொன்னத அப்புடியே சொல்லுதியே நீ ஈழகாங்கிரஸா.
//அண்டை நாட்டை சீண்டிப்பார்க்கும் பொறுக்கித்தனமான இவர்களுக்கே இவ்வளவு திமிர் இருந்தால், பேரினவாதத்தில் இருந்து தமிழ் மக்களை கொஞ்சம் காலமேனும் பாது காத்து வைத்திருந்த தமிழ் ரத்தம் ஓடும் புலிகளுக்கு எவ்வளவு திமிர் இருந்திருக்கும்? //
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
எனக்கு புலிகள் மீது மதிப்பு உண்டு. இதை நான் யாருக்காகவும், எதற்காகவும் மாற்றிக்கொள்ள தயாராகவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை யாரும் கங்கணம் கட்டிக்கொண்டு மாற்றவேண்டும் என்று நினைக்கவும் இடமளிக்கப்போவதில்லை.
தமிழீழத்தின் தற்போதைய இழிநிலைக்குப் பிறகும் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள தயாராக இல்லையென்றால் தோழர்,இரயா கூறியது போல் நீங்கள் ஒரு..
அஸ்கர், உங்கள் நிலைப்பாடு விந்தையாக இருக்கிறது. புலிகள் மீதான அபிமானம் என்ன சினிமா நடிகர்கள் அபிமானம் போன்றதா? சட்டென்று மாற. அது இரத்தமும் சதையுமான அனுபவபூர்வமான ஒரு அபிமானம். புலிகளின் அரசியல் தவறுகளை சொல்லி, விவாதித்து ஒருவரை மாற்றலாம். அப்படியில்லாமல் வெறுமனே மாறு மாறு என்றால் போதுமா?
தவிர தமிழீழத்தின் இன்றைய நிலைக்கு புலிகள் மட்டும்தான் காரணமா? மற்ற புறக்காரணங்களே இல்லையா? அப்போ புலிகள் இராணுவ ரீதியாக மேல்கையில் இருந்தால் புலிகளின் மீது அபிமானம் கொள்ளலாமா? இது என்ன அரசியலற்ற பார்வை?
புலிகளின் தலைமை அரசியல் தவறு புரிந்தாலும் அந்த அணிகளின் மீது நாம் அபிமானம் கொள்வது தவறா? மாவோயிஸ்டு அணிகளை நாம் அப்படித்தான் பார்க்கிறோமா?
ஒரு தோல்வியின் உணர்ச்சிமயமான தருணத்தில் மக்கள் இருக்கும் போது, முன்னெப்பாதும் காட்டிலும் கூடுதல் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டாமா. பாதிக்கப்பட்ட மக்களை அரவனைத்து, உற்சாகமூட்டி, போராட்டத்தை தொடர வேண்டாமா. ஒரு மார்க்சிஸ்டு சிந்தனை இந்த தருணத்தில் ஒரு தாயைப்போலல்லவா இருக்க வேண்டும்,
மாறாக ஒரு பாசிஸ்டின் தோல்வியை கொண்டாடி, நான் அன்றே சொன்னேன் பார்த்தாயா என்று எழுதினால், யாரை நாம் நம் பக்கம் கொண்டு வர முடியும். மேலும் விலகிப் போகவே வழிவகுக்கும் ரதியின் இந்த கூற்று இதை நிரூப்பிக்கின்றது.
சிந்திப்பீர் தோழர்களே, வென்றிருப்பது இன்னொரு பாசிஸ்டு. இந்தப் போர் இன்னமும் முடியவில்லை.
ரதி அவர்கள் தனது பதிவில், தனது ஈழ சகோதர சகோதரிகள் சிங்களர்களால் எவ்வாறெல்லம் துன்புறுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டனர் என்பதை விவரிக்கிறார். இதையேதான் தனது சொந்த மக்கள்மீது புலிகள் செய்தனர். புலிகளால் கொலை செய்யப்பட்டவர்களும் ரதியின் சகோதர சகோதரிகளே. புலிகள் இவ்வாறு செய்யும்போது ரதி அவர்கள் கண்ணை மூடிக்கொண்டிருந்தாரா. புலிகள் இவ்விதம் செய்ய ஆரம்பித்தது இன்றல்ல நேற்றல்ல எப்போதோ(10 வருலங்களுக்கு முன்பே)ஆரம்பித்துவிட்டனர். புலிகளின் இச்செயல்கள் ரதி அவர்களை பாதிக்கவில்லையா? இரத்தமும் சதையுமான அனுபவப்பூர்வமான அபிமானம் என்கிறீர்கள். நானும் இதையேதான் கேட்கிறேன். புலிகளின் பாசிசச் செயல் பல வருடங்களுக்கு முன்பே செயல்படத் துவங்கியிருந்தும் எந்த அனுபவத்திலிருந்து இவர் புலிகள் மீது அபிமானம் கொள்கிறார்?. புலிகளின் செயல் தெரிந்திருந்தும் இவர் அபிமானம் கொள்கிறார் என்றால் அந்த அபிமானம் எப்படிபட்டதாக இருக்கும்? ஏன் இத்தனை ஆண்டுகள் கடந்தும் தான் மாறமாட்டேன் என்கிறார்? புலிகள் தன் மக்களையே கொலை செய்ததை தெரியாது என ரதி அவர்கள் மறுக்கமுடியாது.
கட்டுரை வேறு விவாதம் வேறு. ஒரு கட்டுரையில் தனது கருத்தைப் பதியவிடுவது என்பது வேறு விவாதத்தில் கருத்தைச் சொல்வது என்பது வேறு. ஒரு தளத்திற்கு வருபவர்கள் எல்லாம் (அதிகபட்சம்) கட்டுரையை மட்டும் படித்துவிட்டு செல்வாற்கள் . படிப்பவர்கள் அனைவரும் விவாதத்தில் பங்குகொள்வதில்லை. ரதி அவர்களின் கட்டுரை விவாத அரங்கை விட முக்கியத்துவமுடையது. ரதி அவர்கள் புக,புஜ,மற்றும் வினவு கட்டுரைகளைப் படித்திருப்பார் என்றே நினக்கிறேன். இவற்றிலிருந்து வினவின் கொள்கைகளை ரதி தெரிந்திருப்பார். இப்படி தனக்கு முரண்படான கொள்கையுடைய ஒரு தளத்தில் ரதி அவர்கள் எழுத ஒத்துக்கொண்டது தவறு என்றே நினக்கிறேன்.
மற்றபடி அவர்களின் வார்த்தைகளால் எழுத முடியாத துன்பங்களையும் துயரங்களையும் வலிகளையும் குறைத்து மதிப்பிடவில்லை.
//ரதி அவர்கள் புக,புஜ,மற்றும் வினவு கட்டுரைகளைப் படித்திருப்பார் என்றே நினக்கிறேன். இவற்றிலிருந்து வினவின் கொள்கைகளை ரதி தெரிந்திருப்பார். இப்படி தனக்கு முரண்படான கொள்கையுடைய ஒரு தளத்தில் ரதி அவர்கள் எழுத ஒத்துக்கொண்டது தவறு என்றே நினக்கிறேன்.//
இதிலுள்ள அரசியல் தவறு தான் வறட்டுவாத்ததிற்கு அடிப்படையாகிறது விரிவாக எழுதுலாம் ஆனால் இப்போது ஒரு கேள்வி.
ஓட்டுகட்சி, போலி கம்யூனிஸ்டு, ஆத்தீகவாதி, தமிழ் தேசியர், ஆணாதிக்கவாதி போன்றவர்களை புரட்சிகர அமைப்பில் சேர்க்கலாமா கூடாதா? அவர்க்ளது பழைய கருத்துக்கள் அனைத்தையும் அவர்கள் மனதிலிருந்ந்து அழிந்துவிட்டது என்பதை நார்கோ அனாலிஸிஸ் அல்லது லை டிடெக்டர் வைத்து சோதித்து விட்டுதான் உள்ளே விடுவீர்களா, அது வரை அவர்கள் திண்ணையில் உக்கார வேண்டுமா?
புரியவில்லை தயவு செய்து விளக்கவும்
Who’s is the “Fascist”? Even Sinhalese fascists cannot beat Indian fascists.
You useless communist idiots.
//உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள தயாராக இல்லையென்றால் தோழர்,இரயா கூறியது போல் நீங்கள் ஒரு..//
என்னைப்பற்றித்தான் எவ்வளவோ சொல்லிவிட்டீர்களே! இனியென்ன தயக்கம். மீதியையும் சொல்லவேண்டியது தானே. தமிழீழத்தின் இன்றைய நிலைக்கு சில இனத்துரோகிகளும், “இழிபிறப்புகளும்” தான் காரணம். அதை சொல்ல துப்பில்லாத நீர், வறட்டுவாதம் பேசுபவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீர், என்னை விமர்சிப்பதா?
பாசிசப்புலிகளை பற்றி சொல்லாத உங்களுக்கு துப்பு இருக்கிறதா?
\\தமிழீழத்தின் இன்றைய நிலைக்கு சில இனத்துரோகிகளும், “இழிபிறப்புகளும்” தான் காரணம். \\
மக்களின் இழி நிலைக்கு காரணம் பேரினவாதம் மட்டும்தான் காரணமா? புலிகள் காரணமில்லையா? பாருங்கள் புலிப்பாசிசத்தை அம்பலப்படுத்தாத நீங்கள் எல்லாம் வீரர்கள், இந்திய மேலாதிக்கம் புலிப்பாசிசத்தை, சிங்கள இனவெறியை அம்பலப்படுத்தி வாழும் நாங்கள் கோழைகள்.
துரோகிப்பட்டியல் காத்திருக்கின்றது காலம் மலரும் போது துரோகிகள் தானாய் அம்பலப்படுவார்கள் ரதி, துரோகிப்ப்பட்டியல் நீளும்.
இங்கே மியாவ் குட்டி என்ற பெயரில் எழுதும் தோழரே, இதைத்தானே தோழர் இரயாகரனும், நீங்களும் செய்திருக்க வேண்டும். அதாவது ரதி எழுதும் போது அதிலுள்ள அரசி்யல் பிழைகளை சுட்டிக்காட்டி விவாதித்திருக்க வேண்டும். அதை விட்டு விவாதத்திலிருந்து விலகி அவர் ஒரு பாசிட்டு, பாசிட்டுக்கு வினவு இடமளிக்கிறது என்று புலம்பி அவர் கருத்தை வராமல் தடுப்பதில் என்ன வெற்றி கண்டீர்கள்
தோழர் அஸ்கர் அவர்களுக்கு,
//புலிகளால் கொலை செய்யப்பட்டவர்களும் ரதியின் சகோதர சகோதரிகளே. புலிகள் இவ்வாறு செய்யும்போது ரதி அவர்கள் கண்ணை மூடிக்கொண்டிருந்தாரா. புலிகள் இவ்விதம் செய்ய ஆரம்பித்தது இன்றல்ல நேற்றல்ல எப்போதோ(10 வருலங்களுக்கு முன்பே)ஆரம்பித்துவிட்டனர்.//
டக்லஸ் தேவானந்தமும் அவரது ஆட்களும் (EPDP) செய்த படுகொலைகளை எப்படி அய்யா புலிகள்தான் செய்தார்கள் என்று ஆதாரமில்லாமல் கூறுகிறீர்கள்?
தோழமையுடன்,
செந்தில்.
செந்தில் ரொம்ப அப்பாவியா இருக்கீங்க, புலிகள் ஒன்னும் புனிதர்கள் இல்ல, அவங்களும் பாசிஸ்டுதான். ஆதாரம் இல்லாமல் இல்லை, மேல ஏகலைவன் மதிபாலா விவாதத்தை கவனியுங்க.
நான் இதற்கு மேலும் பேசாமலிருந்தால் அது எனக்கும் என் எழுத்து முயற்சிக்கும் moral support தந்த நண்பர் RV, மா.சே., குருத்து, சுக்தேவ், அர டிக்கெட், மற்றும் பல நண்பர்களை அவமதிப்பது போலாகும். எல்லோருக்கும் என் நன்றிகள். ஈழம் பற்றி நான் என் அனுபவங்களின் மூலம் எழுத முனைந்ததற்கு காரணம் எங்களின், ஈழத்தமிழர்களின், உரிமைகள் பறிக்கப்பட்டு, ஏதிலிகள் ஆக்கப்பட்டு, எதுமற்றவர்களாய் நாடின்றி, தேசமின்றி “அகதிகள்” (உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில்) “பயங்கரவாதிகள்” என்ற பெயர்களைத்தவிர வேறெதையும் சம்பாதிக்காத எங்களின் அவலவாழ்வின் அடுத்த பக்கத்தை தழ்நாட்டு உறவுகளுக்கு சொல்ல நினைத்ததேயாகும். உயிர்ப்பயமின்றி, கவுரவவாழ்வு வாழுபவர்களுக்கு ஏதிலி வாழ்வின் வலிகள் புரிந்திருக்க நியாமில்லை. அந்த வலிகளை சொல்ல நினைத்தேன் எதிர்பாராத தடைகள் எழுந்துவிட்டது. இதற்கு யாரையும் நான் குற்றம் சொல்லவில்லை. ஆனால், இதற்கு மேல் என்னால் என்னைப்பற்றிய விமர்சனங்களின் பாதிப்புகளின்றி என் அனுபவங்களைப்பற்றி சொல்லமுடியுமா என்றால், அது முடியாது என்றுதான் தோன்றுகிறது.
நான் எந்தவொரு கொள்கை மூலமும் என்னை அறிமுகப்படுத்துமளவிற்கு அல்லது என்னை அடையாளப்படுத்துமளவிற்கு எனக்கு எந்தவொரு கொள்கை பற்றியும் ஞானம் கிடையாது. நான் போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் ஓர் அகதி. கொள்கைகளின் கோட்பாடு என்ற சிறைக்குள் என் சிந்தனையை சிறை வைக்கத்தெரியாத , நானும் என் இனமும் போரினால், இன அடக்குமுறையால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற எளிய உண்மையைத்தவிர வேறெதுவும் தெரியாதவள். அதனாலோ என்னவோ என் எழுத்துகளும் நானும் சில கொள்கைகளின் கோட்பாட்டுச் சிறைக்குள் சிக்காமல் எப்படி எழுதுவது என்ற அரசியல் தெரியாமல் சிக்கவேண்டியதாகிவிட்டது. என்னை அடித்தார்கள். எனக்கு வலிக்கிறது என்று சொல்வதற்கு, எதற்கு கொள்கையும், கோட்பாடும்? எனக்கு புரியவில்லை.
நான் எழுத தொடங்கிய நாட்களிலிருந்தே, வினவுகுழு என்னை தேவையற்ற விமர்சனகளிலிருந்து காத்திருக்கிறார்கள். ஆனால், இன்று என்னை எழுத சொல்லிய குற்றத்திற்காக அவர்களே அவர்களின் “தோழர்களின்” விமர்சனங்களுக்கு ஆளாக நேரிட்டுவிட்டது. இனிமேலும் அவர்களுக்கு சங்கடத்தை கொடுக்கவும் நான் விரும்பவில்லை. ஈழத்தமிழர்களின் தலைவிதியை ஈழத்தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதில் எப்போதும் உறுதியாய் இருப்பவள் நான். ஆனாலும், தமிழ்நாடு உறவுகள் எங்களுக்கு ஓர் பக்கபலமே. அவர்கள் நினைத்தால் நிச்சயமாக எங்கள் விடுதலைக்கு உதவலாம். ஆனால், அதை சில ஈழத்தமிழர்களே கொள்கை என்ற பெயரில் வறட்டுவாதம் பேசி, எங்களுக்குள் நாங்களே சண்டையிட்டு அதையே சிங்கள ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாக்கி, எங்களுக்கு மற்றவர்களிடமிருண்டு கிடைக்க வேண்டிய தார்மீக ஆதரவை நாங்களே குழிதோண்டிப்புதைத்து…… அரசியல்வாதிகள் செய்யும் அநாகரீகத்தை நாங்களும் செய்ய வேண்டுமா என்று நினைக்கிறேன்.
நான் வினவு தளத்தில் கட்டுரை எழுதுவதைத்தான் நிறுத்தினேனே தவிர ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான என் எழுத்துகளை நிறுத்தப்போவதில்லை.
வினவு தளத்தில் தொடர்ந்து என் அனுபவம் பற்றி எழுத முடியாமல் போனது எனக்கும் வருத்தம் தான். ஈழம் குறித்த என் வலிகளின் பட்டியலில் இதையும் சேர்த்துக்கொள்கிறேன்.
ரதி, உங்கள் எழுத்தின் நியாங்களை நான் பெரிதும் மதிக்கிறேன், விமர்சனங்கள் நம்மை பரிசோதனை செய்து கொள்ள ஒரு வாய்ப்பு, அதைத்தான்டி அதை உணர்ச்சி பூர்வமாக அணுக வேண்டாம், இது சிரமம்தான் ஆனால் உங்களால் முடியாத ஒன்றல்ல, என்றுமே பெண் ஆணைவிட வலிமையானவள் என்ற கருத்துடையவன் நான். தொடர்ந்து நீங்கள் எழுதுவதுதான் உங்களை நீங்கள் இந்த பெண், குடும்பம், அகதி, என இந்த சமூகம் விதித்துள்ள சிறையிலிருந்தும், விமர்சகர்களின் கருத்துக்களிலிருந்தும் விடுவித்துக்கொள்ள ஒரே வழி, எங்கள் தோழர்களுக்கிடையான முரண்பாடு ஜனநாயக பூர்வமான முறைகளில் நாங்களே தீர்த்துக்கொள்வோம். இது இந்த கட்டுரை உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தேவை , எழுதுங்கள்..
ரதி அவர்களுக்கு,
ஒரு நீண்ட நெடிய பல துயரங்களை கொண்ட, பல உயிர்ப்பலிகள் கொண்ட போராட்டத்தை பற்றி எழுதும் பொழுது, விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.
இப்பொழுது, தோழர் ரயாகரன் தொடந்து விமர்சித்து எழுதுவதால் நிலைமை கொஞ்சம் சிக்கலாக மாறியிருக்கிறது. வினவே சொல்கிற படி, வினவு தளம் தான் இப்பொழுது விவாத பொருளாயிருக்கிறது. வினவின் மீதான் விமர்சனத்தை வினவு தோழமையுடன் எதிர்கொள்ளும்.
அதனால், நீங்கள் எழுத வேண்டாம் என முடிவெடுத்திருக்க வேண்டாம். உங்கள் முடிவை பரிசிலீயுங்கள்.
தோழர் ரயாகரனை விமர்சிக்கிறேன் பேர்வழி என சில கம்யூனிச அவதூறுகளை அள்ளி வீசி, இங்கு சந்தில் சிந்து பாடுகிறார்கள்.
தோழர் குருத்தின், கருத்துக்களில் நான் உடன் படுகிறேன். உங்களை எழுத சொன்னது வினவு எனவே உங்களை நிறுத்த சொல்வதும் வினவாகவே இருக்க வேண்டும்.
1. உங்களின் கட்டுரையின் கருத்துக்கள் மீதான விமர்சனங்களும், விவாதங்களும் வேறு.
2. உங்களை எழுத அனுமதித்த வினவின் மீதான விமர்சனங்களும், விவாதங்களும் வேறு.
எனவே, உங்களின் கருத்துக்களின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள். உங்களை எழுத சொன்னதிற்காக தற்பொழுதைய விமர்சனகள் வினவை நோக்கியே உள்ளன. அவ்வாறே இருக்க வேண்டும். வினவு தளம் பல படைப்பாளிகளை உருவாக்கும் தளமாக உயர இந்த விமர்சனங்கள் உதவும். இந்தக் குழப்பங்களில் இருந்து நல்ல தீர்வு அமையும் என நம்புகிறேன்.
ரதி அவர்களுக்கு,
ம.க.இ.க மற்றும் வினவு தளத்திற்கு அறிமுகமாகும் பலரும் பல்வேறு அரசியல் நிலைகளில் இருந்து அவர்களின் பழைய அரசியலை விவாததிற்கு உட்படுத்தி தான் புரட்சிகர அரசியலை அறிவை பெறுகிறார்கள். அத்தகையோர் எவரும் தன்னுடைய பழைய பிம்பங்கள் , கருத்துக்கள் உடை படுவதையும் மிகுந்த வலியுடன் ஏற்றுக் கொள்கின்றனர்.
ஏனெனில் புதிய அரசியல் அதை வேண்டுகிறது. அவ்வாறு தாங்கள் ஒரு மாற்றுக்காக ஈழ மக்களின் உண்மையான விடுதலையை வேண்டி நிற்பீர்களேயானால் ஏன் பின்வாங்குகிறீர்கள். வாதிடுங்கள்.
தோழர் ரயாகரனிடம் இல்லாத (?) சரியான அரசியலை நீங்கள் வைத்திருப்பீர்களேயனால் முன்வையுங்கள்.
மாமேதை கார்ல் மார்க்சின் கூற்றுக்கிணங்க உங்களின் கருத்து அவரை வெல்லட்டும்.
இது அறிஞர்களின் விவாதம்…நான் சிறியவன் ….இருப்பினும் வினவின் மூலம் உலகைப் படித்துக் கொண்டிருப்பவன்..வினவுக்கு நன்றிகள்…ஆனாலும் ரதி அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன்…ஆமோதிக்கிறேன்..தயவு செய்து ரதி அவர்களை யாரும் காயபடுத்தாதீர்கள்…..அவர் காயத்தால் எழுதுபவர்…தாய்க்கு மட்டுமே தெரியும் பிரசவ வலி….தவறு இருந்தால் மன்னிக்கவும்….
////அவர் கூறவிரும்பும் அகதி வாழ்க்கையின் அனுபவங்களை கூறட்டும். அவர் கூறுகின்ற அல்லது கூறாமல் விட்ட அனுபவங்களை, வரிகளுக்கு இடையில் மறைந்திருக்கும் உண்மையை விவாதத்திற்கு உட்படுத்துவோம். அதுதான் ஈழத்தமிழ் மக்களுக்கும், இந்தியத்தமிழ் வாசகர்களுக்கும் இன்று தேவைப்படுவது என்பதே வினவு கூறிவரும் நிலைப்பாடு//////
சரியான நிலைப்பாடு. இப்போதாவது இப்படியான இருசாரார் அனுபவங்களையும் உள்வாங்கி உண்மையான பிரச்சினைகளையும், குறைகளையும் நேர்மையான விவாதங்களாக்கி ஈழம்பற்றிய சரியான புரிதலை பொதுவில் இருக்கும் சாதாரணர்களுக்கு ஏற்படுத்துவது இன்றியமையாததும்கூட. ஆனால் வழமையான வழியிலும் பாசிஸ்டுச் சண்டையிலும் நாம்:(( ரதி எழுதுவதை நிறுத்தியது வருத்தமளிக்கிறது.
திரு .இராயாகரன் சம்பவங்களின் அடிப்படையில்தான் தன்னுடைய அனுமானங்களை புரிதல்களை முன் வைக்கிறார். மாக்ச்சிய அரசியல் கோட்பாடு சார்ந்து அவர் இதுவரை எந்தக் கருத்துக்களையும் முன் வைத்தது கிடையாது. இவரிடம் ஓயாத உழைப்பு இருக்கிறது.ஆனால் அதற்கேற்ற மாக்ச்சிய புரிதல் அறவே கிடையாது. இதில் ஆபத்து என்னவெனின் அவர் ம.க.இ.க வினரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதுதான். இராயாகரன் அவர்களின் வரட்டு அரசியல் ம.க.இ.க தையும் பலவீனப்படுத்தி பல சிக்கல்களுக்கும் உள்ளாக்கிவிடும் ஆபத்து உள்ளது. இராயாகரன் இதுவரை யாரைப் பற்றியும் எதைப்பற்றியும் ஆராய்ந்து விஞ்ஞான பூர்வ சமூக அறிவியலோடு எழுதியது கிடையாது. இடைக்கிடை மாக்ச்சிய வார்த்தைகளை பொறுக்கிப்போட்டால் அது மாக்ச்சிய ஆய்வு கட்டுரை என எண்ணும் அப்பாவித்தனமான எண்ணம் இவரிடம் உள்ளது.
கடுமையான முயற்ச்சியை மேற்கொண்டால் இவரை அரசியல் ரீதியில் சிந்திக்க பயிற்றுவிக்க முடியும். தோழர்கள் இவரின் குறைபாடுகளை புரிந்துகொண்டு இதற்கு தீர்வு காண்பது நல்லது.
சிற்டிசன் ஜேர்னலிசம் அல்லது மக்கள் ஊடகவியல் என்ற கருத்தாக்கம் இரண்டாயிரத்தின் ஆரம்பங்களிலேயே உருவாகிவிட்டது. ருவிட்டர், மைஸ்பேஸ்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் உருவாக்கத்தின் போதும் பின்னர் வெப் லொக் என்பதிலிருந்து உருவான ப்லொக் என்கிற வினவு போன்ற கருத்துக் களங்களின் பின்னரான காலப்பகுதியிலும் மக்கள் ஊடகவியல் தொடர்பாக வெகுவாகப் பேசப்பட்டது. இந்த மக்கள் ஊடகவியலின் பண்பு என்பதே ஊடகவியலுக்கு வெகுஜனத் தன்மையை வழங்கியதிலிருந்து தான் உருவானது. எம் போன்ற சாதாரண மனிதர்களும் பலரின் பார்வைக்கு உள்படக் கூடிய கருத்துக்களை எழுத முடியும் என்பதும், அதை மற்றவர்களின் விவாதங்களூடாக மக்களின் பங்களிபிற்கு உட்படுத்த வாய்ப்பளிக்க இயலும் என்பது தான் இதன் பண்புகளில் ஒன்று. இந்த மக்கள் ஊடகவியல் என்பது தொலை தூர தேசியவாதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாக பெனடிக்ட் அன்டர்சன் என்பவர், அமெரிக்காவில் வாழும் அல்பேனியர்களின் ப்ளொக்குகளை முன்வைத்து வாதாடுகிறார்.
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினூடாக உருவான இவ்வாறான கருத்துப் பரிமாறலுக்கான சூழலை மேற்கு நாடுகள் தமக்கு ஏற்றவாறு சரியாகவே பயன்படுத்திக்கொண்டன. இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வை மேற்கில் உருவாக்குவதற்கு இந்த ப்ளொக்குகள் கணிசமான பங்கு வகித்திருக்கின்றன. அதேவேளை மேற்கின் அதிகாரவர்க்கம் விரும்பியவாறே இஸ்லாமிய அடிப்படை வாதத்தை உருவாக்குவதற்கும் இவை பங்காற்றியுள்ளன,
பொதுமக்களின் கருத்தை உள்வாங்குதல் என்ற இதன் பண்பியலில் எந்த மாற்றமும் இவர்கள் மேற்கொள்ளவில்லையாயினும் அதை ஒரு திசை நோக்கி நெறிப்படுத்துதலில் இவர்கள் தெளிவாக இருந்தார்கள். அதற்கான நிகழ்ச்சி நிரலும் கொள்கைத் திட்டமும் அவர்களிடம் இருந்தது.
வினவில் ஏற்பட்ட ரதி என்பவரின் கட்டுரை தொடர்பாக ஏற்பட்ட சலசலப்புகள் இதனடிப்படையிலேயே நோக்கப்படலாம்.
மூன்று வகையான போக்குகள் காணப்பட்டன.
1. ரதியின் கட்டுரைக்கு ஆதரவு.
2. ரதிக்கு எதிர்
3. வினவின் உள்ளார்ந்த நிலைப்பாடு.
இங்கு மக்கள் ஊடகவியலில் ரதி உள்வாங்கப்பட்டது தவறல்ல. ஆனால் அவரின் கருத்துக்களை நெறிபடுத்துவது தொடர்பாகவும், வினவின் கருத்துக்களை முன்னிறுத்துவது குறித்தும் வினவிடம் எந்த வரையறுக்கப்பட்ட கொள்கைத்திட்டமும் இருந்ததில்லை. கட்டுப்பாடற்ற, பிரபலமாதலை நோக்கிய ஊடகவியல் போலவே காணப்பட்டது. இந்த நெறிப்படுத்தலை மேற்கொள்ள பல வழிமுறைகள் ஏலவே கையாளப்பட்டுள்ளன.
இவாறு நிறைவுற்ற சலசலப்பைக் கூட வினவு சுயவிமர்சனமாக முன்வைத்து, கட்டுரையை எதிர்த்தவர்களை விமர்சித்து, புதிய நெறிமுறைகளை விவாதத்திற்கு உட்படுத்தக்கூட முன்வரவில்லை.
இது மக்கள் ஊடகவிலால் எதிர்பார்த்ததைக் கூடச் சாதிக்க முடியாத வரட்டு வாதம் மட்டுமல்ல. எஸ்கேப்பிசம் – தமிழில் நாகரீகம் இல்லாமல் “ஓடுகாலித்தனம்” -மென்று கூடச் சொல்லலாம்,
ஆக, வினவு தன்னைச் சுய விமர்சனத்திற்கு உட்படுத்திக்கொண்டு, புதிய நெறிமுறைகளூடாக,மக்கள் ஊடகவியலின் மொத்தப் பலனையும், மக்கள் மத்தியில் கருத்தைக் கொண்டு செல்வதற்கும், கருத்தை உருவாக்குவதற்கும் பிரயோகிக்கும் என எதிர்பார்ப்போம்.
தோழர் நாவலனின் வினவின் உள்ளார்ந்த நிலைப்பாடு பற்றிய கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை.
1) வினவு மறுமொழிகளை மட்டறுப்பதில்லை என்ற கொள்ளகையை கடைப்பிடித்து வருகிறது. அதை பல முறை எழுதியும் விட்டது.
2) ரதி விடயத்தில் வினவு மூடி மறைத்து எதுவும் செய்யவில்லை, தோழர் இரயாகரனுக்கு எழுதிய கடிதம் உட்பட பொது அரங்கில் விவாதத்துக்கு உட்படுத்தியது.
3) ரதியின் கருத்தை நெறிப்படுத்துவதுவதில் வினவுக்கு மட்டும் பொறுப்பு என்ற அவரின் பார்வை தவறு, இது அச்சு ஊடகமல்ல, வாசகர் கருத்து பரிமாரவும், ஆசிரியர் பதில் சொல்லவும் வாய்ப்பு உள்ள ஊடகம். அதனால் தவறான கருத்துக்களை ) நெறிப்படுத்துவதில் அனைவருக்கும் பங்கு உண்டு, ரதியின் கட்டுரையிலும் மாற்றுக்கருத்துக்கள் வருவதும் அதை விவாதிப்பதும், அதில் வினவும் பங்கேற்பதும் நடந்தது. இந்த சூழலுக்கு முக்கிய காரணமாக தோழர் இரயாகரன் இங்கே விவாதத்தில் பங்கெடுக்காமல் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது
4) வினவின் கருத்துக்களை முன்னிறுத்துவதில் எந்த கொள்கையும் இல்லை என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள். மாற்றுக் கருத்துக்களுடன் விவாதிக்கும் தளம் அமைப்பது என்பது தான் வினவின் கொள்கை என்பதை அவர்கள் முன்னமே அறிவித்திருக்கிறார்களே.
5) எஸ்கேப்பிசம் என்பதை பற்றிய தோழர் நாவலனின் முன்முடிவு/விமர்சனம் கொஞ்சம் சிரமப்பட்டு தோழர் இரயாவுக்கு கூட பொறுத்தலாம் ஆனால் வினவுக்கு பொறுத்துவது சாத்தியமே இல்லை.
6) வினவு மீது தவறுள்ளதைப் போல எழுதும் தோழர்.நாவலன், இங்கே இன்னொறு விவாதப் பொருளான தோழர் இராயாகரனைப் பற்றி ஏன் கருத்து பதியவில்லை. இதில் அவர் நிலை என்ன.
மொத்தத்தில் வினவு மீதான தோழர் நாவலன் கூறியிருப்தற்கான காரணங்கள் தர்க்க ரீதியிலானவை அல்ல, வினவு தளம் எப்படி இயங்க வேண்டும் என்ற அவரது மன விருப்பத்தை எழுதியிருக்கிறார். இதற்கு இவ்வளவு ஆர்பாட்டம் தேவையில்லை,
வினவு – பின்னூட்டங்களை மட்டறுத்துங்கள்……
வினவு – ரதியின் உள்ளடக்கத்தில் பிரச்சனை உள்ளது அதை பற்றி விவாதிக்கலாம்….
என இரண்டு வரிகளில் முடித்திருக்கலாம்
//வினவு – பின்னூட்டங்களை மட்டறுத்துங்கள்……
வினவு – ரதியின் உள்ளடக்கத்தில் பிரச்சனை உள்ளது அதை பற்றி விவாதிக்கலாம்….
என இரண்டு வரிகளில் முடித்திருக்கலாம்//
எனது பின்னூட்டத்தில் கூற வந்தது இவைதான்:
1. மக்கள் ஊடகவியலின் முன்னைய அனுபங்களைத் திரட்டிக்கொள்ளுதல்.
2. அவற்றிலிருந்து கருத்தை உருவாக்கும் செயற்பாட்டிற்குரிய வேலைத்திட்டம் ஒன்றை வினவு வரைந்து கொள்ளுதல்.
3. இவ்வாறான வேலைத்திட்டம் இன்மையே ரதியின் கட்டுரையைத் தொடர்ந்த குழ்ப்பங்களுக்குக் காரணம்.
4. வினவு இதைப்புரிந்து கொள்ளாமையால் கருத்தை உருவாக்குவதற்கான நெறிப்படுத்தல் இல்லை, இதே வேளை ரயாகரன் இதைப் புரிந்துகொள்ளாமையால் ரதியின் கட்டுரையை வெளியிட வேண்டாம் என்கிறார். இரண்டுமே தவறானது.
தவிர, விடயங்களை ஆழமாகப் புரிந்துகொள்ளாமல் மேலோட்டமாக கும்பலில் கோவிந்தா போடுகின்ற மனோபாவத்திலிருந்து நாம் அனைவருமே விடுபடவேண்டும். இந்த விடயங்களைப் புரிந்துகொண்டு ரதியின் குறிப்புக்களைத் தொடர்ந்தும் வெளியிடுவதோடு அவ்வாறான கருத்துக்களை நெறிப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றை வினவு முன்வைக்கவேண்டும்.
//வினவு தளம் எப்படி இயங்க வேண்டும் என்ற அவரது மன விருப்பத்தை எழுதியிருக்கிறார். இதற்கு இவ்வளவு ஆர்பாட்டம் தேவையில்லை,
வினவு – பின்னூட்டங்களை மட்டறுத்துங்கள்……
வினவு – ரதியின் உள்ளடக்கத்தில் பிரச்சனை உள்ளது அதை பற்றி விவாதிக்கலாம்….
என இரண்டு வரிகளில் முடித்திருக்கலாம்// நாவலன் எப்படி எழுதவேண்டும் என்ற மனஆசையை மாசே இங்கு வெளியிட்டுள்ளார்
//ரயாகரன் இதைப் புரிந்துகொள்ளாமையால் ரதியின் கட்டுரையை வெளியிட வேண்டாம் என்கிறார்.//
தவறு. ரதி எழுதுவதை யாரும் நிறுத்தும்படி கோரிக்கை வைக்கவில்லை. அவர் மேல் விவாதம் மட்டும் வைக்கப்பட்டது. அவர் தானாக விலத்திக் கொண்டுள்ளார்.
சிறி
சிறி, நல்லா இருக்கு உங்க நாயம், எப்படி அது விவாதம் வைக்கப்பட்டதா, எப்போ? இங்கே விவாதிக்க முடியாம எஸ்கேப்பு ஆகி, ஆதாரமே இல்லாம ரதி ஒரு பாசிட்டுன்னும், தேவையில்லாம வினவு தளத்தை விமர்சனம் செஞ்சி , வேற ஒரு எடத்துல போயி கட்டுரை எழுதுவது விவாதமா. நல்ல கூத்து. ஐயா மணி அவர்களே மார்க்சியத்தை இரயா மட்டுமல்ல சிறியிடமிருந்து கூட காப்பாற்ற வேண்டும். கடவுளே இன்னும் எத்தன பேரு இருங்காய்ங்களோ?
//இங்கு மக்கள் ஊடகவியலில் ரதி உள்வாங்கப்பட்டது தவறல்ல. ஆனால் அவரின் கருத்துக்களை நெறிபடுத்துவது தொடர்பாகவும், வினவின் கருத்துக்களை முன்னிறுத்துவது குறித்தும் வினவிடம் எந்த வரையறுக்கப்பட்ட கொள்கைத்திட்டமும் இருந்ததில்லை.//
இந்தக் கருத்தை நான் வழிமொழிகிறேன். மாற்றுக் கருத்து உள்ளோரும் வினவில் தன் பங்களிப்பை செய்ய அனுமதிக்கப்படும் பொழுது வினவின் கருத்தை முன்னிறுத்துவதற்கு நிச்சயம் ஒரு திட்டம் தேவை.
ரதி அவர்களுக்கு வணக்கம்,
ஒரு புலி அபிமானியால்தான் தமிழீழ மக்களின் வலியை ஆழமாக புரிந்துகொள்ள முடியும். தயவு செய்து உங்கள் அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.
தோழமையுடன்,
செந்தில்.
இந்த சர்ச்சை நிச்சயம் தேவையற்றது……..ரதி அவர்கள் போலவே இன்று கம்யூனிஸ்டுகளிடமிருந்த மக்களும் விலகி நிற்கிறார்கள்….இதற்குப் பின்னூட்டமிட ஆரம்பித்து கடைசியில் நீண்டு விட்டதால் தனி இடுகையாகப் போட்டிருக்கிறேன்…..!!!
http://www.mathibala.com/2009/08/blog-post_27.html
நண்பர் மதிபாலா,
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6165:2009-08-25-21-35-40&catid=277:2009
மேற்கண்ட இணைப்பில் தோழர் இரயாகரனின் பதிவு ஒன்றில் கீழ் காணும் தலைப்புகளில் வெளிவந்த புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரத்தின் கட்டுரைகளைத் தொகுத்திருக்கிறார். நேரமிருந்தால் அவற்றைப் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.
ஏகலைவன்.
1. அதிர்ச்சி : போதை மருந்து கடத்தி இஸ்ரேலிடம் ராணுவ பயிற்சி!
2. புலிகளின் பாசிசம்
3. விடுதலைப் புலிகளின் இழிசெயல்!
4. ஈழம் : விடுதலைக்கு எதிராக புலிகளின் பாசிசப் போக்குகள்
5. ஈழம் : விமர்சனமும் விளக்கமும்
6. ஈழம் : துரோகத்தை நோக்கி…?!
7. ஈழம் : கொலைகளுக்கு யார் பொறுப்பு
8. டாக்டர் இராஜனி திரணகம கொலை
9. விட்டெறிந்த காசுக்கு விலைபோன புலிகள்
10. பிரபாகரனும் – தமிழ் இனவாதக் குழுக்களும்
அதையெல்லாம் படிப்பதற்கும் , நான் சொன்னதற்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லுங்களேன் தோழர் ஏகலைவன்..!
புலிப்பாசிசத்தை நிரூபணம் செய்வதற்கா இல்லை புலிப்பாசிசத்தை மெய்பிக்கவா?
அதுதான் இன்றைக்கு புலிகளே இல்லையென்று ஆகிவிட்டதே …இனி மெய்ப்பித்து என்னவாகிறது…..?????யாருக்கு மெய்ப்பிக்க வேண்டிய கடமை இருக்கிறது?
அந்த மெய்ப்பித்தலைத் தாண்டி நிதர்சனத்துக்கு வர வேண்டாமா?
/////////////அதையெல்லாம் படிப்பதற்கும் , நான் சொன்னதற்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லுங்களேன் தோழர் ஏகலைவன்..!
புலிப்பாசிசத்தை நிரூபணம் செய்வதற்கா இல்லை புலிப்பாசிசத்தை மெய்பிக்கவா?
அதுதான் இன்றைக்கு புலிகளே இல்லையென்று ஆகிவிட்டதே …இனி மெய்ப்பித்து என்னவாகிறது…..?????யாருக்கு மெய்ப்பிக்க வேண்டிய கடமை இருக்கிறது?
அந்த மெய்ப்பித்தலைத் தாண்டி நிதர்சனத்துக்கு வர வேண்டாமா?////////////
நண்பர் மதிபாலா,
அந்த நிதர்சனத்திற்கு வருவதற்கு வரலாற்றில் சில பக்கங்களைப் புரட்டிப்பார்க்க வேண்டிய அவசியத்தை உங்களுக்கு உணர்த்தத்தான் நான் முயன்றேன். நான் குறிப்பிட்டுள்ள சுட்டிகளில் உள்ள கட்டுரைகளின் மீதான உமது கருத்தாக்கத்தைத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.
இன்றைக்குப் புலிகளே இல்லையென்றாகிவிட்டதே? என்ற உங்களது வரிகளில் உள்ள உணர்ச்சி உண்மையானது என்றால், அந்த புலிகளின் பின்னடைவுக்கான காரணத்தையும் பகுத்தாய்வது மிக மிக அவசியமானதாக இருக்க வேண்டும். புலிகளின் இந்தப் பாரிய பின்னடைவுக்கும் ஈழப்போராட்டத்தின் பின்னடைவுக்கும் காரணம், சிங்கள பேரினவாதமும், இந்திய மேலாதிகவெறியும் மட்டும் காரணமில்லை. புலிகளின் வரலாற்றுப் பிழைகளும் அவர்களின் பாசிச அனுகுமுறையும் அவர்களது பாரதூரமான விளைவுகளுக்கு வெகுவாக பங்காற்றியிருக்கின்றன.
நாம் இதனைத் தெளிவாக உணர்ந்து கொண்டால்தான், ஈழ மக்களின் மிகவும் நியாயமான சுயநிர்ணய போராட்டத்தை தொடர்ந்து ஆதரிப்பதில் அர்த்தமிருக்க முடியும். இப்போது புலியரசியலிடம் நாம் வேண்டுவது அவர்களின் சுயவிமர்சனத்தை அல்ல அவர்களின் சுய பரிசீலனையைத்தான். இந்த அனுகுமுறை தவறு என்று நீங்கள் குறிப்பிட விரும்பினால் எனது மேற்கண்ட பின்னூட்டங்களை தாராளமாக நிராகரித்துத் தள்ளுங்கள்.
நண்பர் ஏகலைவன்.
///
அந்த நிதர்சனத்திற்கு வருவதற்கு வரலாற்றில் சில பக்கங்களைப் புரட்டிப்பார்க்க வேண்டிய அவசியத்தை உங்களுக்கு உணர்த்தத்தான் நான் முயன்றேன். நான் குறிப்பிட்டுள்ள சுட்டிகளில் உள்ள கட்டுரைகளின் மீதான உமது கருத்தாக்கத்தைத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.
//
சில சமயம் வரலாறுகளை புரட்டுவதை விட இன்றைய சூழலில் எது தேவை என்று உணர்வதும் முக்கியம். புலிப்பாசிசம் என்ற கருத்தாக்கம் இன்று பொதுவுடமைவாதிகளால் எழுப்பப்பட்டதில்லை என்பது எனக்குத் தெரிந்த ஒன்றே.
புலிகளின் சர்வாதிகாரத் தலைமை , ஏனைய போராட்டக்குழுக்களை அழித்தது என்ற ஒரீரு கருத்துக்கள் உண்மையெனினும் , ஒரு விடயத்தை உணர்ந்து கொள்ளுங்கள்….
அன்று , போட்டி மனப்பாங்குடன் அரசாங்கத்துக்கு துணை போனவர்களை அழித்தனர் புலிகள் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களை அழித்ததாலேயே புலிகளின் போராட்டம் இவ்வளவு காலம் உயிர்ப்புடன் இருந்தது..என்று அவர்கள் அதை மாற்றி கருணா போன்றவர்களை அழிக்காமல் விட்டார்களோ அன்றே புலிகளின் அழிவு நிச்சயிக்கப்பட்டது..
இன்று புலிகளின் அழிவில் கருணாவின் பங்கு உண்டு என்பதை ஒத்துக்கொண்டீர்களானால் சமயங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செல்லும் சில தலைமைகளை அழிப்பதன் அவசியத்தை நீங்கள் உணரலாம்……அதற்கு நீங்கள் பாசிசம் என்று பெயரிட்டாலும் கூட போராளிகளுக்கு இலக்கை அடைவதில் சில தவறுகளையும் செய்யவேண்டிய கட்டாயமேற்படுகிறது.
அது தவறேயெனினும் தவிர்க்கவியலாதது ஆகிறது.
புலிகளின் இந்தப் பாரிய பின்னடைவுக்கும் ஈழப்போராட்டத்தின் பின்னடைவுக்கும் காரணம், சிங்கள பேரினவாதமும், இந்திய மேலாதிகவெறியும் மட்டும் காரணமில்லை. புலிகளின் வரலாற்றுப் பிழைகளும் அவர்களின் பாசிச அனுகுமுறையும் அவர்களது பாரதூரமான விளைவுகளுக்கு வெகுவாக பங்காற்றியிருக்கின்றன.//
கூடவே துரோகிகளும் என்று சேர்த்திக்கொள்ளூங்கள்……………புலிகளுக்கெதிரான இந்தத்துரோகக் கூட்டம் தான் புலிகளைப் பற்றிப் போட்டுக்கொடுத்தன.
****
நாம் இதனைத் தெளிவாக உணர்ந்து கொண்டால்தான், ஈழ மக்களின் மிகவும் நியாயமான சுயநிர்ணய போராட்டத்தை தொடர்ந்து ஆதரிப்பதில் அர்த்தமிருக்க முடியும்.///
நீங்களே அது மிகவும் நியாயமான சுயநிர்ணய போராட்டம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்…..ஆதலால் அதை ஆதரிப்பதற்கு ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் எதற்கு என்கிறேன் நான்?
இப்போது புலியரசியலிடம் நாம் வேண்டுவது அவர்களின் சுயவிமர்சனத்தை அல்ல அவர்களின் சுய பரிசீலனையைத்தான். இந்த அனுகுமுறை தவறு என்று நீங்கள் குறிப்பிட விரும்பினால் எனது மேற்கண்ட பின்னூட்டங்களை தாராளமாக நிராகரித்துத் தள்ளுங்கள்.///
உங்கள் பின்னூட்டங்களை நிராகரிக்க வில்லை நான்..அத்தவறை என்றுமே செய்யமாட்டேன்….அது பற்றிய உள்ளாய்வுகளும் , சிந்தனைகளும் எவ்வித பயனையும் இச்சூழலில் தரா என்பதால் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு ஒன்றுபட்டு முள்வேலிகளிலிருந்து தமிழர்களை விடுவிப்போம் என்றுதான் சொல்கிறேன்.!
இது மிகவும் வருந்தத் தக்க நிகழ்வு. தோழர் ரதி தன் அனுபவம் சார்ந்து புலிகளின் மேல் கொண்ட அபிமானங்களை தர்க்கரீதியாக விவாதித்து மறுத்திருக்க வேண்டுமேயொழிய, இவ்வாறு அராஜகமான முறையில் அவரை நடத்தியிருக்கக் கூடாது. தோழர் ரயாகரனின் குற்றச்சாட்டுக்கள் வினவு குறிப்பிட்டதைப் போல வெளிப்படையாகவும் தீர்க்கமாகவும் இல்லாமல் போனது வருந்தத்தக்கதே. இதனை தோழர் இரயாகரன் பரிசீலிக்க வேண்டும். பிற தோழர்களும் இவ்விவாதத்தில் தலையிட்டு நெறிப்படுத்த வேண்டும்.
இரயாகரனின் முறையீடுகள் தவறு என்று நான் சொல்லவில்லை. இருப்பினும் அவை தகுந்த ஆதாரத்துடன் இங்கு வைக்கப்பட்டிருந்தால் ரதி உள்ளிட்ட பலரும் தெளிவடைய உதவியாக இருந்திருக்கும். தோழர் இரயா அவர்கள் உடனடியாக (4-ஆம் பாகத்தில் வெளியிடுவதற்கு நேரமில்லை) ரதி குறித்த தனது எதிர்ப்புக்கு நியாயமான காரணங்களை இங்கே பட்டியலிட வேண்டும். இன்றேல் இத்தனை நாட்கள் உழைத்து இரவு பகலாக எழுதிக் குவித்த தோழர் இரயாவின் எழுத்துக்களும் அவர் கற்றுத்தந்த அனுபவங்களும் செயலற்றதாகிவிடும்.
எப்படியோ ரதி போன்ற மாற்று எண்ணம் கொண்டவர்கள் இங்கு எந்த இடையூறுமின்றி எழுதி விவாதிக்க வேண்டும். தோழர் ரதி தமது கருத்துக்களை, இந்த தொடரிலேயே மீண்டும் தொடர வேண்டும். இந்த நிகழ்வு, மேலே ரதி குறிப்பிட்டுள்ளதைப் போல அவரது துயரங்களுள் ஒன்றாக ஆகிவிடக்கூடாது.
புலி எதிர்ப்பு கருத்துக்களை நாம் வெளியிடுவதற்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் புலியாதரவுக்கருத்துக்களுக்கும் கொடுத்தாக வேண்டும். அபப்டிப்பட்ட எதிர்க் கருத்தியல்களுடன் மோதுகையில்தான் சரியான கருத்தாக்கம் வெற்றி பெற்று வளர முடியும். இத்தகைய முரண்பாடுகள் நமது கருத்தின் வீச்சை வெகு வேகமாக அனைவருக்கும் கொண்டு சேர்க்கும். தோழர் ரதியும் இங்குள்ள தமிழினவாதிகளைப் போல விவாதிக்கும் நேர்மையற்றவராக இல்லை. அவரது பதிவுகளின் மீதான விமர்சனங்களுக்கு வலிய வந்து அவரது கருத்தைத் தெரிவித்து விவாதிக்கிறார், என்பது ஒரு நல்ல அம்சமாகக் கருதுகிறேன்.
தோழர் இரயாகரனின் இதுபோன்ற அனுகுமுறை ’எல்லாளன்’ போன்ற அனாமதேயங்கள் இங்கு வந்து உபதேசிப்பதற்கு வழியமைத்துக் கொடுத்திருக்கிறது. தமிழ் தேசிய கபட வேடதாரிகளின் முகமூடிகள் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் கட்டுரைகளின் பக்கம் இந்த எல்லாளன்கள் எட்டிக்கூட பார்ப்பதில்லை என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
தோழமையுடன்,
ஏகலைவன்.
வினவுக்கு,
புலிகளின் மீது மதிப்பு வைத்திருப்பதாக கூறும் ஒருவரை எவ்வாறு வினவில் எழுத அனுமதிதீர்கள். அதன் நோக்கம் என்ன. ஒரு மாற்றுக்கருத்தாளருடன் சமரசம் பேச வேண்டிய தேவை என்ன. அவரை கட்டுரைகள் எழுத விட்டு மேலும் ம.க.இ.கவின் அரசியலை மெல்ல மெல்ல பிறகு புரிய வைக்க போகிறீர்களா ?. வினவு தளத்தை புதிய ஜன நாயகம், புதிய கலாச்சாரம் போன்றே தான் அனைவரும் கருதுகிறோம்.
புலிகளை எந்த விமர்சனமும் இன்றி ஏற்கும் தமிழினவாதிகளை அல்லது சி.பி.ஐ அல்லது சி.பி.எம் இல் உள்ள ஒருவர் எழுதி தரும் கட்டுரையை புதிய ஜன நாயகத்திலோ அல்லது புதிய கலாச்சாரத்திலோ பிரசிப்பீர்களா?
நீங்கள் எந்த புள்ளியில் ரதியுடன் இணைகிறீர்கள்?
பூதம், இதே கேள்வியைத்தான் ஆர்பாட்டமான மொழிகளில் இராயாகரன் கேட்டுள்ளார், இதைத்தான் வறட்டுத்தனம் என வினவு விமர்சனம் செய்துள்ளது, அதே இடுகையில்தான் நீங்கள் பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்கள்.
உலகமயமாக்கலின் விளைவாக ஏற்பட்டுட்டள நகரமயமாக்கமும், புதிய பொருளாதார கொள்கைகள் உருவாக்கியுள்ள வேலைகள், வேலை நேரங்கள், வசதி வாய்ப்புகள் போன்றவை படித்து வேலைக்கு செல்லும் அனைவரையுமே ஒரு குட்டி முதலாளிய சிந்தனையுடையவர்களாக்கி விடுகிறது.
அவர்களின் சிந்தனை நேர்மையை கேள்விக்குள்ளாக்க முடியாதெனினும் அவர்களின் புறநிலை வெளியுலக தொடர்பிலிருந்து அவர்களை துண்டித்து, மக்களிடமிருந்து பணியாற்றும் வாய்ப்ப்பை பறித்து, கொஞ்சம் கொஞ்சமாக அண்ணியப்பட வைக்கிறது. வறட்டுவாதியாக மாற்றிக்கொண்டிருக்கிறது. இணையத்தில் எழுதும் இளம் தோழர்கள் பலரிடம் இந்த வறட்டு்ததனம் இருப்பதை நாம் காண முடியும்.
அகநிலையின் பலத்தில் மார்க்சியம் நீண்ட நாள் நிற்காது.
இது போன்ற வாழ்நிலையுள்ள தோழர்கள் இனி அதிகமாவார்களேயன்றி குறைவதற்கு வாய்ப்பில்லை. இது முன்னெப்போதுமில்லாத ஒரு புதிய நிலை, புரட்சிகர அமைப்புகளின் தலைமைக்கு ஒரு சவால். சவாலை எதிர்கொள்ள, புதிய வியூகங்களும் திட்டங்களும் அவசியம். என்ன செய்யப் போகிறோம், ?
வறட்டுத்தனம்.
வறட்டுத்தனத்தை எப்படி வரையறுப்பது. வினவு தோழர்.இரயா வை வறட்டுத்தனம் என்கிறது. தமிழகத்தில் பலர் மகஇக வை வறட்டுத்தனமானவர்கள் என்கின்றனரே.
தோழர் மாசே வணக்கம்,
சில தகவல்கள் மற்றும் சந்தேகங்களை உங்களிடமிருந்து பெற வேண்டும். தங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?
kalagam.nation@gmail.com
நான் மணி
…
ஐயா கம்யூனிச பூதம்.. எனக்கு ஒரு சந்தேகம்
எனக்கும் கூட புலிகள் மீது மதிப்பு இருக்கிறது. அப்படி இருந்தால் நான் கம்யூனிஸ்டாக இருக்க முடியாதா..
YES
ரதி,
உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு ஈமெயில் அனுப்பி இருக்கிறேன். கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள்.
RV,
கிடைத்தது. மிகவும் நன்றி.
disappointed to see that Rathi has deceided to stop writing in Vinavu, because of irayakarns comments and questions; ok lets put it in this way , Rathi, why dont you start your own bolg ? to write your life experiences ….then give the link to all..let people deceide to read or not…i cant accept this just because if someone is saing some nonsense things and they didnt like you to write its absolutely stupid…..i hope i see you soon writing your experiences in anyway…
All the best
Murugan
//தமிழினம் சிங்கள பேரினவாதத்தால் தனித்து இந்த நிலையையடையவில்லை. தமிழ் பாசிசத்தினால் தான், கேவவமான இழிவான இந்த நிலையை அடைந்;தது. இதுவின்றி எதையும் பேச முடியாது. அத்துடன் பேசப்படும் மனித துயரங்கள், தமிழ் பாசிசத்தினால் உசுப்பேற்றப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டது. உதாரணமாக மக்களை பணயம் வைத்து, (மக்கள் மத்தியிலிருந்து தாக்குதல் தொடுத்து மக்கள் பலியாகி விழும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட தாக்குதல் இன்றல்ல என்றோ ஆரம்பத்திலிருந்தே அவர்களது உத்தியாகவிருந்தது) அவர்களை பலிகொடுத்து, பலியை மனித அவலமாக காட்டிப் பிரச்சாரம் செய்தது தான் தமிழ் பாசிசம். இதைத்தான் காலாகாலமாக தமிழ்ப்பாசிசம் செய்தது.//
தோழர்களே,
தோழர் இராயகரனின் மையமான விமர்சனம் மேற்காணும் பத்தி எனக் கருதுகிறேன். இதனை தோழர் கலகமும் கீழ்க்காணும் முறையில் கேள்வியாக எழுப்பியுள்ளார்.
//ஒரு புலி ஆதரவாளரால் சரியான வரலாறை எழுத முடியுமா? முடியுமெனில் அது எப்படி சாத்தியம்? துயரத்திற்கு,கண்ணீருக்கு வர்க்கமில்லையா? இதே வரலாற்றை தோழர் சிறீயோ அல்லது இரயாவோ எழுதினால் சிங்கள இனவெறிப்பாசிசம், புலியின் குறுந்தேசிய பாசிசத்தை அம்பலப்படுத்துவார்களா இல்லையா ? அது தானே சரியா இருக்கும்.//
இக்கருத்தில் நான் உடன்படுகிறேன்.
அதே வேளையில், ரதி எழுதுவது பக்கச் சார்பு என்பது பொதுவான வாதம், சொல்லப் போனால் ஒரு நடுத்தர வர்க்க வாதம். பக்கச் சார்பின்றி யாரும் எழுத முடியாது. எது சரியான பக்கம் என்பதை பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் நலன்தான் தீர்மானிக்கிறது.
ஒரு புலி ஆதரவாளரின் அனுபவப் பகிர்வு, ஈழத்தில் சிங்களப் பேரினவாதம் நிகழ்த்திய கொடூரங்களை மனக்கண்ணில் எழுப்பத்தான் செய்யும். ரதியின் எழுத்துக்களில், அவரது அரசியல் கண்ணோட்ட வரம்புகளைத் தாண்டி, தமிழ் மக்கள் பட்ட துன்பம் வெளிப்படவில்லையா? ஆம். வெளிப்படத்தான் செய்கிறது. ரதியே சொல்வது போல, “என்னை அடித்தார்கள். எனக்கு வலிக்கிறது என்று சொல்வதற்கு, எதற்கு கொள்கையும், கோட்பாடும்? எனக்கு புரியவில்லை.” இந்தத் துயரம் நிராகரிக்கப்படக் கூடிய ஒன்றல்ல.
ஆனால், இது ஈழ மக்களின் துன்ப வரலாறு குறித்த முழுமையை கொண்டிருக்குமா என்றால், நிச்சயமாக இருக்க முடியாது என்றுதான் கருதுகிறேன். இது ஊகம் மாத்திரமல்ல. இதுவரை ரதி எழுதிய கட்டுரைகளிலும் அவ்வாறே வெளிப்படுகிறது.
இதனை வினவும் உணர்ந்திருக்கிறது என்று நம்புகிறேன்.
இந்நிலையில், இன்றைய ஈழச் சூழலில், சிங்களப் பேரினவாதமும், புலிகளின் பாசிச நடைமுறையும் விளைவித்த ரத்தம் தோய்ந்த வரலாற்றின் நேர்மறை, எதிர்மறை அனுபவங்கள், படிப்பினைகளை, அதன் முழுமையில் தொகுப்பதே ஈழ மக்களுக்கும், இனவாதிகளால் குழப்பப்படும் தமிழ் இளைஞர்களுக்கும் பயன்படும். பொதுவான தமிழர் துயரம் என்பதும், ஒரு அகதியின் தனிப்பட்ட அனுபவப் பகிர்வு என்பதும் உணர்ச்சிப்பூர்வமான எல்லையைத் தாண்டாது. எனவே, தோழர் ரதியின் கட்டுரை கருத்துக்களை மறுபரிசீலனைக்குட்படுத்துவதற்கு பயன்படாது. தனது பதிலில் வினவு இம்மையமான கேள்விக்கும், கருத்துக்கும் பதிலளிப்பது அவசியம் எனக் கருதுகிறேன்.
ஆனால், ரதி ஒரு புலிப் பாசிஸ்ட்தான், வினவு குழுமம் புலிப்பாசிசத்திற்கு ஆதரவு வழங்குகிறது எனத் தோழர் இராயகரன் முன்வைப்பது மிகையான, அதிகப்படியான விமர்சனம். மேற்குறிப்பிட்ட மையமான விமர்சனத்தில் பொறுமையோடு நின்று விவாதிப்பதற்கு பதிலாக, அவர் விமர்சனத்தை மிகைப்படுத்தியதன் மூலம் விவாதத்தின் திசையே மாறியிருக்கிறது எனக் கருதுகிறேன். மேலும், வினவு தளத்தில் பின்னூட்டங்கள் மட்டறுக்கப்படாத நிலையில், தோழர் இராயகரனின் கருத்துக்களை வினவு அனுமதிக்கின்ற நிலையில், ஏதோ கருத்து சொல்ல மறுக்கப்பட்டதைப் போல தனிப்பதிவாக தமது தளத்தில் பாகம் பாகமாக வெளியிட்டு, எதிர்நிலையெடுப்பது ஒரு ஆரோக்கியமான, பொறுப்புணர்வுடன் கூடிய விவாத முறையல்ல. மிகத் தவறான முன்னுதாரணம் எனக் கருதுகிறேன்.
இதனைத் தாண்டி, தோழர் கம்யூனிச பூதம் கூறுவது போல, “வினவு தளத்தை புதிய ஜன நாயகம், புதிய கலாச்சாரம் போன்றே தான் அனைவரும் கருதுகிறோம்.” என்ற கருத்து வேறு சில தோழர்களிடமும் வெளிப்படுகிறது. ஒன்று, வினவு ம.க.இ.க வின் அதிகாரபூர்வ தளமல்ல என்பதை வினவே சொல்லியிருக்கிற போதிலும், அவ்வாறு கருதிக் கொள்வதன் அடிப்படை என்ன? அதே வேளையில் ம.க.இ.கவின் ஆதரவாளர்கள் என்ற முறையில், ம.க.இ.கவின் நிலைப்பாடுகளில் ஊன்றி நிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தவறு இருக்க முடியாது.
இவ்விவாதத்தை பயன்படுத்திக் கொண்டு தோழர் இராயகரனையும், ஒட்டுமொத்தமாக மார்க்சியத்தையும் அவதூறு செய்ய சிலர் முயன்றுள்ளனர். இது தவிர்க்கவியலாதது. எதிரிகளிடம் நாம் அதை எதிர்பாராமலிருக்க முடியாது. இதனை கணக்கில் கொள்வது அவசியம்.
ரதியே சொல்வது போல, “என்னை அடித்தார்கள். எனக்கு வலிக்கிறது என்று சொல்வதற்கு, எதற்கு கொள்கையும், கோட்பாடும்? எனக்கு புரியவில்லை.” இந்தத் துயரம் நிராகரிக்கப்படக் கூடிய ஒன்றல்ல.
ஆனால், இது ஈழ மக்களின் துன்ப வரலாறு குறித்த முழுமையை கொண்டிருக்குமா என்றால், நிச்சயமாக இருக்க முடியாது என்றுதான் கருதுகிறேன். இது ஊகம் மாத்திரமல்ல. இதுவரை ரதி எழுதிய கட்டுரைகளிலும் அவ்வாறே வெளிப்படுகிறது.//
தோழர் போராட்டத்தின் இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்
“வினவு தளத்தை புதிய ஜன நாயகம், புதிய கலாச்சாரம் போன்றே தான் அனைவரும் கருதுகிறோம்.”
சிக்கலே இதுதான் வினவு தோழர்கள் வினவு மகஇக தளமில்லை என்றாலும்
நாம் அப்படி பார்க்கவில்லை (இது எமது தவறுதான்) புஜ புகவுக்கு இணையாக பார்த்து அதே கருத்தை எதிர்பார்க்கிறோம் இதுதான் தேவையற்ற சிக்கலை கிளப்பிவிட்டது,
நான் மணி
ரயாவின் மையமான கருத்து ஈழத்தை வெறும் சிங்கள பாசிசம் எனக் குறுக்க முடியாது. புலிகளின் பாசிசத்தையும் சேர்த்துதான் எப்போதுமே பேச வேண்டும்.. அப்படி எந்திரத்தனமாக பேச ஆரம்பித்தால் புலிகளின் அபிமானிகளோடு கூட உரையாடக் கூடாது என்ற மக்களிடமிருந்து தனிமைப்படுத்துகின்ற அரசியலை நோக்கிதான் நம்மை வழிநடத்தும்.. அப்படி உரையாடல்களை மக்களுடன் நடத்தாத அரசியல்தான் உங்களது விருப்பமா… ரயாவின் விருப்பம் அதுதானே..
ரயாவுடன் நீங்கள் உடன்பட்ட கருத்து அபாயகரமானது.. ரதி முழுவரலாற்றையும் எழுதவில்லை. அப்படி யாராவது சொன்னதாக நிரூபிக்க முடியுமா.. வரலாற்றின் ஒரு சிறிய பகுதியை அல்லது உணர்ச்சி அம்சத்தை எழுதுகிறார்… உணர்ச்சி அம்சம் தவறான கருத்துக்களை மாற்ற உதவாது என்று பேசுகின்றீர்கள்.. உங்களுக்கே இது சரியாகப் படுகிறதா..
துயரமும், கண்ணீரும் வர்க்கம் சார்ந்ததுதான்.. ஆனால் சில இனங்களுக்கு துயரமும், கண்ணீரும் விதிக்கப்பட்டிருக்கிறதே.. அது பொய்யா.. தங்களது துயரங்களை அந்த மக்கள் சொல்கின்றார்களே அது பொய்யா.. புலி அவர்களது போராட்டங்களைக் கைப்பற்றியதால் மக்கள் அவர்களை நேசிக்கிறார்கள்.. அம்மக்களை இன்று பாசிஸ்டுகள் என்றுதானே ரயா வரையறை செய்ய முடியும். அது சரியா..
ஒரு அகதியின் தனிப்பட்ட உணர்வை வெறும் உணர்ச்சி என்று சொல்லி இருக்கிறீர்கள்.. ரயா சொன்னது கூட பரவாயில்லை.. நீங்க அவர தாண்டி விட்டீர்கள். உரிமைக்கும் அகதிக்கும் உள்ள தூரம் உங்களுக்கும் மார்க்சியத்துக்கும் உள்ளது.
நான் சொல்லியது.
//இந்நிலையில், இன்றைய ஈழச் சூழலில், சிங்களப் பேரினவாதமும், புலிகளின் பாசிச நடைமுறையும் விளைவித்த ரத்தம் தோய்ந்த வரலாற்றின் நேர்மறை, எதிர்மறை அனுபவங்கள், படிப்பினைகளை, அதன் முழுமையில் தொகுப்பதே ஈழ மக்களுக்கும், இனவாதிகளால் குழப்பப்படும் தமிழ் இளைஞர்களுக்கும் பயன்படும். பொதுவான தமிழர் துயரம் என்பதும், ஒரு அகதியின் தனிப்பட்ட அனுபவப் பகிர்வு என்பதும் உணர்ச்சிப்பூர்வமான எல்லையைத் தாண்டாது. எனவே, தோழர் ரதியின் கட்டுரை கருத்துக்களை மறுபரிசீலனைக்குட்படுத்துவதற்கு பயன்படாது.//
நீங்கள் சொல்வது.
//ஒரு அகதியின் தனிப்பட்ட உணர்வை வெறும் உணர்ச்சி என்று சொல்லி இருக்கிறீர்கள்.. //
நான் சொல்லியதற்கு நீங்களாக ஒரு விளக்கம் அளிக்கிறீர்கள். வெறும் உணர்ச்சி என்று நான் சொல்லவில்லை. உணர்ச்சிப்பூர்வமான எல்லை என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதனுடைய முழுமையின் தற்போதைய பயன்பாடு குறித்து சொல்லியிருக்கிறேன். ஆனால் அதற்கு ஒரு கொச்சையான விளக்கம் அளித்து எனது கருத்தை கொச்சைப்படுத்துகிறீர்கள்.
//உரிமைக்கும் அகதிக்கும் உள்ள தூரம் உங்களுக்கும் மார்க்சியத்துக்கும் உள்ளது.//
துவக்கத்திலிருந்தே நீங்கள் அதிகப்படியாகப் பேசிக் கொண்டே செல்கிறீர்கள். இதற்கு முன்பாக நீங்கள் மிகையாக பேசிக் கொண்டே வந்ததற்கு தீர்க்கமாக ஒரு முற்றுப்புள்ளி வைத்தவுடன், அதற்கு மெளனம் காத்து விட்டு, இப்பொழுது இந்தக் கருத்துக்கு பதில் சொல்ல வருகிறீர்கள். மார்க்சியத்துக்கும், விவாத நேர்மைக்குமான தூரம் யாருக்கு உள்ளது என்பது குறித்து நீங்கள் யோசிப்பது நல்லது.
நான் மணி,
வறட்டுவாதி என்று மாத்திரமே அறியப்பட்ட திருவாளர் ரயாகரன் அவர்களுக்குள் ஒளிந்திருந்த பாசிஸ்டும் தன்னை வெளிப்படுத்தி விட்டார். தனது பாகம் 4 இல் ரதி ஏன் பாசிஸ்டு என்பதற்கு ஆதாரம் தருவதாக எழுதிய ரயாகரன், அப்பகுதி நான்கை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் ஏதாவது ஆதாரம் உள்ளதா என அறிவுள்ள எவரும் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.
இத்தகைய இழிவான செயலை வரலாற்றில் இதற்கு முன் செய்தவர்கள் ஹிட்லரும், ஜார்ஜ் ஜூனியர் புஷ்ஷும் .. இராக் மீது படையெடுப்பதற்காக ஒரு காரணத்தை தேடிய புஷ் கூறியது அங்கு ரசாயன ஆயுதங்கள் உள்ளது என்று.. கடைசிவரை அதனை அவர் கண்டுபிடித்தாரா என்பதையும் வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.. நாடாளுமன்றத்தை தீக்கிரையாக்கிய ஹிட்லர் அதனை கம்யூனிஸ்டுகள் செய்தார்கள் எனக்கூறி அதனைக் கலைத்தான். இன்று வரை அதற்கு ஆதாரம் வெளிவரவில்லை..
கம்யூனிஸ்டுகள் யாரையாவது பாசிஸ்டுகள் என அறிய நேர்ந்தால் மக்களுக்கு உடனடியாக அறிவிக்கவும் அம்பலப்படுத்தவும் செய்வார்கள். இது இந்திய மா.லெனிய இயக்க வரலாறு தெரிந்த, பு.ஜ,பு.க படித்துவரும் அனைவரும் அறிந்த ஒன்றே.. அதனை தள்ளிப்போடுபவர்கள் தங்களது மன விருப்பத்ற்கேற்ப சிலரை பாசிஸ்டுகளாக சித்தரிக்க முயல்பவர்கள்தான்.. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்…..
புலிகள் ரயாகரனுக்கு எதனைச் செய்தார்களோ அதனைத்தான் கருத்து தளத்தில் ரதிக்கு திருப்பித் தருகிறார் ரயாகரன். ரதியின் வாயில் நாம் விரும்புவதை பேச நிர்ப்பந்திக்க முடியாது.. இணையம் லூயி போனபார்ட்டின் பிரான்சு அல்ல•.
Rathi avarkalukku: Ethiriyodu mattum sandaipoduvathu alla porattam. Vimarsanam, Suyavimarsanam seivathum, ethir karuthukkalodu poraduvathum porattamthan.Indha irandu porattamum idaividamal seiya vendum. Kurainthathu, ungal jananayakathai neengal kappatra vendum. Atharku koodava urimai illai ? so, Neengal meendum katturai yelutha vendum. sari yentral yetrukkolvom; thavaru yentral vimarsippom Avvalavuthan. Please write…
நான் மணி
நண்பர் போராட்டம், ஏகலைவன் உள்ளிட்ட சிலர் ரயாகரன் பற்றிய பிரச்சினையில் நடுநிலை ஒன்றைத் தேடுகிறார்கள். நடப்பது வறட்டுவாத்த்திற்கும் மார்க்சியத்திற்குமான் போராட்டம். இதில் நடுநிலைமை வகிப்பது யாருக்கு உதவும் என நினைக்கின்றீர்கள்.. அந்த நடுநிலைமை என ஒன்று உண்மையில் சாத்தியமா..
நண்பர் போராட்டம்.. ரயாகரனின் வெண்பாவிற்கு விளக்கம் எழுதிய கலகத்தின் மேற்கோளை எடுத்தியம்பி உள்ளீர்கள். நல்லது.. ரதி எழுதுவது முற்றும் முடிந்த வரலாறு என யாரும் சொன்னார்களா.. அப்படி சொன்னாலும் அதனைப் பின்னூட்டங்களில் அம்பலப்படுத்த முடியாதா.. இந்திய மா.லெனிய இயக்கங்களை தங்களது சகநாட்டுக்கு அருகில் சில காலம் வாழ நேர்ந்த தனிநபர் ஒருவர் (ரதி) வரலாற்று வழியில் ஏமாற்ற முடியும் என நீங்கள் கருதினால், அந்த அமைப்பை சவலைப்பிள்ளையை விடக் கேவலமாக கருதுகின்றீர்களா..
ரயாகரனை வரலாறு எழுதச் சொன்னால் அது யாழ் மாவட்டத்தில் அதுவும் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நடந்த்தைத் தாண்டி போகும் என்று கருதுகின்றீர்களா… மார்க்சியம் அவரிட்ம பட்டபாடு போதாது என்று வரலாற்றையும் இணையப்பார்வையாளர்களை வெறுக்க வைக்க தாங்கள் நடத்தும் சூழ்ச்சி போலத் தெரிகின்றதே…
பல கட்டுரைகளில் தனது சொந்த மனக்குமுறலை வரலாறாகப் பதிவு செய்தவர் ரயாகரன் என்பதை தொடர்ந்து படித்தால் புரிந்து கொள்ள முடியுமே..
உங்களது பக்கச்சார்பின்மையை எப்படி புரிந்துகொள்வது..
2003 ல் பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு தஞ்சையில் நடந்தது. குஜராத் படுகொலையின் ரத்தசாட்சியங்கள் மேடையேறி தங்களது மனக்குமுறல்களை, சில நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டினார்கள். அவர்களிடம் தலிபான்கள்தான் தங்களுக்கு மேசையாக்கள். ம•க•இ.க போன்றவர்கள் அல்ல என்ற கருத்து ஒருவரிடம் கூடவா இல்லாமல் இருந்திருக்கும். அதனை உறுதிசெய்து விட்டுதான் மேடையேற்றினார்களா..
இன உணர்ச்சியை தாண்டி அவர்கள் எழுத மாட்டார்கள் என்பது ஏறக்குறைய ரயாகரனின் கருத்துதான். ஒருவேளை இது உங்களுக்கு இருப்பதன் வெளிப்பாடுதான் திரும்பத் திரும்ப வினவின் விளக்கத்தைக் கோருவது.. ஸோ நீங்கள் இருப்பது வறட்டுவாதத்தின் பக்கம்தான்..
2003 ல் பார்ப்பன பயங்கரவாத…….சரியா கேட்டீங்க தல… இதத்தான் நான் அன்னிக்கே கேட்டேன்! ஆனா தோழர்கள் என்னைய குழப்பவாதின்னு முத்திர குத்தி மூலேல உக்கார வச்சிட்டாங்க . என்னத்த சொல்ல, வறட்டுவாதம் போரடிக்கும்னுதான் நெனச்சிகிட்டிருந்தேன் அந்த அக்கப்போருக்கும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்குதே?
முதலாவதாக, நான் நடுநிலைமை வகிக்கிறேன் என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள் என்பதை மட்டும் சற்று விளக்குங்கள். மற்ற விசயங்களை பிறகு பேசலாம்.
//இன உணர்ச்சியை தாண்டி அவர்கள் எழுத மாட்டார்கள் என்பது ஏறக்குறைய ரயாகரனின் கருத்துதான். ஒருவேளை இது உங்களுக்கு இருப்பதன் வெளிப்பாடுதான் திரும்பத் திரும்ப வினவின் விளக்கத்தைக் கோருவது.. ஸோ நீங்கள் இருப்பது வறட்டுவாதத்தின் பக்கம்தான்..//
வேடிக்கையாக இருக்கிறது. நான் எந்தப் பக்கம் என்று ஆய்வு செய்து கண்டுபிடிக்கிற அளவுக்கு சிக்கலாக இருக்கிறதா என்ன?
வினவு இன்னும் சில நாட்களில் இது குறித்த விமர்சனத்தை சில நாட்களில் வெளியிட இருப்பதாகத் தெரிவித்திருப்பதன் அடிப்படையில், பதிலளிக்க வேண்டிய மாற்றுக் கருத்துக்களை கணக்கில் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே நான் எனது கருத்தை முன்வைத்தேன். குறிப்பாக தோழர்கள் வினவு, இராயகரன் இருவருடைய கருத்துக்களிலும், உடன்படும், முரண்படும் புள்ளிகளை தெரிவித்திருந்தேன். இது நடுநிலைமை என்பது ரதியை புலி பாசிஸ்ட் என்று சொல்வதற்கு இணையானது எனக் கருதுகிறேன்.
சிலர் இந்த பிரச்சினையின் மூலம் கம்யூனிஸ்டுகளையே அவதூறு செய்ய நினைக்கின்றனர். எள்ளி நகைக்கின்றனர். நாம் ரதியை விமர்சிப்பது எதனால்? அவர் ஒரு பக்க சார்பாக எழுதுவார் என்பதினால் தான். அவர் தன் மக்களை துன்பத்திற்க்குள்ளாக்கிய இரு பாசிசத்தைப் பற்றியும் எழுதட்டுமே. யார் வேண்டாம் என சொன்னது. அவர் லெனினையும் ஸ்டாலினையும் மாவோவையுமே தாக்கி எழுதட்டும். வேண்டாம் என சொல்லவில்லை. உண்மை வரலாறு அதன் எல்லா பக்கங்களையும் கொண்டதாக இருக்கவேண்டும்.
தோழர் அஸ்கர், உங்களுக்கு ஒரு விசயம் புரியவே மாட்டேங்குதே. எப்படி ஒரு மனுசன் ஒரு பக்கச்சார்பில்லாம இருக்க முடியும். நடுநிலைன்னு ஒன்னு இல்லவே இல்ல. அப்படி நீங்க நம்புனா மார்க்சியத்த உட்டுடுங்க ஏன்னா மார்க்சியம் நடுநெலமையா பீச்சாங்கையால ஒதுக்கி தள்ளும்.
அப்புறம் ரதி எழுதுனது அவங்க கதைய, அவங்கள சுத்தி நடக்குற விசயத்த பத்தின அவங்க புரிஞ்சுகிட்டத, அவங்க நினச்சத, அவங்க நம்புனத. அது வினவுல கலையரசன் எழுதியமாதிரி ஆப்ரிக்க வரலாற்ற பத்துன மார்க்சிய ஆய்வு இல்ல, அகதியான ஒரு பெண்ணோட அனுபவம். அவங்களுக்கு புலி பாசிசத்த பத்தி தெரியலேன்னு வச்சுக்கங்க அத அவங்க எப்படி எழுத முடியும்.
நீங்க எதுக்கு இருக்கீங்க, வாசகரா உங்களுக்கு ஒரு கடமை இருக்கா இல்லயா? இந்தாம்மா சகோதரி, நீ நெனைக்குற மாதிரியில்ல, அந்த காலகட்டத்துல அடக்குமுறை வந்ததுக்கு புலிகள் செஞ்ச இன்னன்ன தப்புதான் காரணமின்னு சொல்லாமில்ல, அத உட்டுட்டு ரதி வரலாற்ற திரிக்கிறாரு, ரதி பாசிட்டு, புலி, சிங்கம் கரடின்னு எங்கேயோ போய் எழுதுனா என்னஙஃக நாயம்
இரயாகரன்தான் இத புரிஞ்சுக்கல உங்களுக்கு என்னா ஆச்சு?
அய்யா, நீங்கள் காமெடி கீமடி பண்ணலியே?! விஷயம் வேற ஒண்ணுமில்லிங்க சாமி. கொஞ்சம் சந்தேகம் வந்துருசுங்கோ. அய்யா கொஞ்சம் மனசு வைச்சா என் சந்தேகத்தை தீர்த்துப்புடலாமுங்க. இதை ஏன் உங்க கிட்டே கேட்கிறேன்னா, நான் யார் கிட்டே இந்த சந்தேகத்த பின்னூட்டமா கேட்டாலும் ஒன்னு, உனக்கொன்னும் தெரியாது போடான்னு சொல்லிப்புடுறாங்க. இல்லையின்னா அந்த பின்னூட்டத்தை தூக்கிப்புடுறாங்க. சரிங்க விஷயத்துக்கு வர்றேங்க.
௧.சிலபேர் கம்யுநிசத்தையே கேவலப்படுத்திடுறாங்க அப்படின்னு கோபப்படுறீங்க. நியாம்தானுங்க. கம்யுனிசம் பேசும் சீனா, திபெத்தை ஆக்கிரமிச்சு, அவங்க வாழ்க்கை முறையை குலைச்சது, அவங்களை அடிமையாக்கினது எந்த ஊரு நியாயமுங்க? ஏன் கேட்கிறேன்னா, ராஜபக்சே செஞ்சதுக்கும், சீனா செஞ்சதுக்கும் வித்தியாசம் இல்லிங்களே? அதோடே, திபெத் ஒரு தனிப்பட்ட பிரதேசமா, தனி நாடா இருந்து, உலக வரைபடத்துல எல்லாம் பார்த்திருக்கேங்க. சீன செஞ்சது சரின்னா, கம்யுனிசம் என்கிறே பேரால நீங்க செய்யுற அம்புட்டும் சரிதானுங்களா? அப்படி பார்த்தாக்க, ராஜபக்சே உங்க பாணியிலே “தோழர்” ஆயிடுறாரு. என்னங்க நான் சொன்னது சரிதானுங்களா?
௨.சரி சீனாவை விடுங்க. நம்ம தோழர்கள் அடிக்கடி சொல்லுற, “ரசியாவை பார்” என்கிற வாசகத்தை கேட்டு நானும் ரசியாவை பாத்தேனுங்க. அங்க கல்லூரி பொண்ணுங்க எல்லாம், ஹோட்டல் கதவை தட்டி “வரியா?” ன்னு கேக்குறாங்கன்னு யாரோ சொன்னாங்க. அவ்வளவு வறுமையாம். உண்மைதானுங்களா? சாதாரண ஏழை குடியானவனுங்க எல்லாம், பிச்சை எடுக்கிறாங்க ன்னு கேள்விப்பட்டேனுங்க. உண்மைதானுங்களா? மறுபடியும் கேட்டுகிறேன், கோவிச்சுக்காதிங்க, இதுதான் கம்யுனிஸ்டுகளின் சாதனைங்களா? அதைத்தான் உலகம் பூரா பரப்பனும்னு பாடுபடுறிங்களா? நல்ல நோக்கமுங்க. செய்யுங்க.
௩ இன்னுமொரு சந்தேகமுங்க. புலிகள் தமிழர்களை கொன்னாங்க, புலிகள் பாசிட்டுகள் ன்னு நிறைய பேரு எழுதுறிங்க,விவாதிக்குறிங்க. சரிங்க. ஆனா, புலிகளை கொல்லுறோமுன்னு சொல்லிக்கிட்டே , ஆயிரக்கணக்கான மக்களை சிங்களவன் கொன்னபோது, முன்னணி வரிசையிலே, சுமார் நானூறு போர் டாங்குகள் சரமாரியா எறிகணை வீசுச்சுன்னும், அம்புட்டு டாங்குகளும், நம்ம சீன பாட்டாளி மக்கள், அதாங்க, உழைக்கும் மக்கள் சிங்களனுக்கு அன்பளிப்பா வழங்கினதுன்னும் சொல்லுறாங்க. அதோடே, பல்லாயிரம் கோடி பெறுமானமுள்ள ஆயுதங்கள, இலவசமாகவும், அஞ்சு வருஷ கடன் தவணையிலும் கொடுத்தாங்கன்னு கேள்விப்பட்டேனுங்க. “சீன தோழர்கள்” அப்படின்னு நீங்க, நீங்கன்னா நீங்க மட்டுமில்லேங்க, நம்ம சித்தாந்த சிங்கங்கள் எல்லாரும், பாசமா அழைக்கிறவங்க பாட்டாளி வர்க்கமுன்னா, உழைக்கும் மக்களின் கூட்டமுன்ன, அவங்க இன்னொரு உழைக்கும் மக்கள் கூட்டத்தை அழிக்க ஆயுதம் கொடுப்பாங்களா? எங்கேயோ இடிக்குதுங்களே? இதே குற்றச்சாட்ட ரசிய தோழர்கள பார்த்தும் சில பேரு, அட சத்தியமா நான் இல்லைங்க, சொல்லுறாங்க.
அந்த பாசிட்டு புலிகள், தமிழ் மக்களை கைய புடிச்சு கூட்டிட்டு போயி சிங்களவன் கிட்டே ஒப்படைக்கலிங்க. நம்ம முதலாளிகள், அதாங்க, இந்தியா, சப்பானு, மற்றும் நம்ம தோழர்கள், அதாங்க, சீனா, ரசியா, இவங்கலோடே கூட்டு முயற்சியால , புலிகள் கொல்லப்பட்டு, அந்த அப்பாவி மக்கள் சிறைப்படுத்தப்பட்டாங்கன்னு சில பேர் பேசிக்கிறாங்க. உழைக்கும் மக்கள் கூட்டணியான நம்ம ரசிய, சீன தோழர்கள் எப்படிங்க முதலாளிகளோடே கூட்டு சேர்ந்தாங்க? சத்தியமா புரியலிங்க.
அய்யா, நாங்கல்லாம், படிக்காதவங்க. சித்தாந்தத்தை பத்தி அவ்வளவா தெரியாதுங்க. நீங்கள் விளக்கி சொன்னா விளங்கிக்குறோமுங்க. குறிப்பா, இந்த முதலாளி + பாட்டாளி கூட்டணி, விடுதலைக்கு போராடும் ஒரு இனத்த அழிக்க எப்படி சேர்ந்தாங்கன்னு சுத்தமா புரியலிங்க. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி விளக்குங்க சாமி!
சீனிவாசன், உங்க கேள்விக்கான பதிலை நாம இங்க விவாதிக்க முடியாது… ஆனாலும் உங்க கேள்வி ரொம்ப நியாயமானது. உங்களுக்கு உண்மையிலேயே பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால், மேலே உள்ள வினவு தொலைபேசி எண்ணிலோ அல்லது புதிய கலாச்சாரம் அலுவலகத்துக்கு 044-23718706 என்ற எண்ணுக்கோ கூப்பிடுங்க, தோழர்களை நேரில் சந்திச்சு பேசுனா உங்க சந்தேகம் தீரும்.
வெளக்கந்தான கேட்டீங்க அதுக்கென்ன குடுத்துட்டா போச்சு
1.திபெத்தின் நிலபிரபுத்துவ, மத கொடுங்கோன்மைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை அப்போதைய சீன மக்கள் அரசு யாரையும் அடிமையாக்கவில்லை
யாருடைய வாழ்க்கையும் குலைக்கவுமில்லை.
2.ரசியாவில் இப்போது இருப்பது கம்யூனசம் கிடையாது அது முதலாளித்துவ
அதுதான் அங்குள்ள பெண்களின் இழிநிலைக்கு காரணம் முதலாளித்துவ அரசுதான் அவர்களின் சாதனைதான் ருசிய கம்யூனிசம் தோழர் ஸ்டாலினுக்கு பிறகு சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்து விட்டது(போலி கம்யூனிட் போல)
ரசியா சமூக ஏகாதிபத்திய நாடாக இருந்தபோது கூட அங்கு “வர்றியா” என்று
கேட்கும் நிலை இல்லை, ஆனால் முதலாளித்துவத்தின் நல்லாட்சியில்தான்
இச்சீரழிவு, அதே தோழர் மவோவிற்கு பிறகு சீனாவில் நடப்பது கம்யூனிச ஆட்சி அல்ல அவர்கள் போலிகள் மேலும் உலகில் இப்போது எந்த நாட்டிலும்
கம்யூனிசமில்லை இங்கு உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் பாட்டாளிவர்க்கமும் முதலாளித்துவமும் கூட்டு சேர முடியாது, கூட்டு சேர்ந்தது முதலாளித்துவ சமுக ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்க நாடுகள்தான்
அவை ஈழத்தில் இரத்த வெறிபிடித்த வெறியாட்டம் போடுகின்றன.
நான் மணி
நண்பர் போராட்டம்.. பின்பகுதியில் வினவுதான் ம•க•இ.க என சில தோழர்கள் கருதுவதாகச் சொல்லி உள்ளீர்கள். அவர்கள் இந்திய ரயாகரன்கள்..
மார்க்சியத்தை சொந்த முறையில் கஷ்டப்பட்டு படித்து சமூகத்தில் வேலைசெய்து அதில் தோற்று மீண்டும் ஏன் தோற்றோம் என்பதை அறிய மார்க்சியத்தைப் படித்து பிறகு மீண்டும் பிரயோகித்து, தவறு நம் மீதா, அணுகுமுறையிலா என்பதை கண்டறிந்து, தோழர்களுடனும், மக்களுடனும் விவாதித்து, மக்களுக்கு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற ஆவலுடன் வேலை செய்யும், பூச்சியங்களுக்கு பின்னால் நின்று எண்களின் மதிப்பை உயர்த்துபவர்கள் அல்ல இவர்கள்.
இணையத்தில் எழுத தெரிந்த்தால் மற்றும் சில பல தோழர்களின் நட்பால் தாங்களும் கம்யூனிஸ்டுகள் என்று நம்பிக் கொள்பவர்கள். இவர்கள் எப்போதெல்லாம் கம்யூனிசத்துக்கு எதிராக இன்னும் சரியாகச் சொல்வது என்றால் தாங்கள் மனதில் யாருக்கெல்லாம் கம்யூனிஸ்டுகள் என்று இடம் கொடுத்திருக்கிறார்களோ அவர்களை நீங்கள் சண்டைக்கோ, விமர்சிப்பதற்கோ வந்தால் கூட இவர்கள் புதிய ஜனநாயகம் மற்றும் புதிய கலாச்சாரத்திலிருந்து அரசியலை விலக்கி விட்டு எள்ளலை மட்டும் எடுத்தியம்புவார்கள்.
இணையம் வருவதற்கு இடமில்லாத முற்காலத்தில் இவர்கள் இன்றைய பிரச்சினையைப் பற்றி பொதுவான ஒரு நபர் கருத்து கேட்டால் ஒன்னாம் தேதி வரைக்கும் பதில் சொல்ல மாட்டார். அந்த மாதம் பு.ஜவில் பார்த்த பிறகு பதில் சொல்வார். அது குறித்த கட்டுரை வராவிடில் வந்த கட்டுரைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டி நீங்கள் சொல்வதெல்லாம் ஒரு பிரச்சினையா என்பார்.. இது செங்கொடியை ஏந்திக் கொண்டே அதற்கு எதிராக பார்க்கும் வேலை இல்லையா..
தங்களையும் இவர்கள் நேசிப்பதால், தங்களையும் கம்யூனிஸ்டுகள் என்றே கருதிக் கொள்கிறார்கள். தங்களது ஐயங்களை இதற்கிடையில் மாத்திரம்தான் ஏதாவது மேசையாக்கள் வந்து தீர்க்க வேண்டும் என்று கருதுபவர்கள் இவர்கள்.. இந்த விவாத்த்தில் கூட ஒரு இத்தகைய நபர் கேட்டிருந்தார். வறட்டுவாதம் வரையறு என்று.. இப்படி கேள்வி கேட்பதுதான் வறட்டுவாதம் என்று எளிமையாக சொல்லியிருக்கலாம். அத்தகைய மேசையா வேலை பார்த்தால் அது இந்தியப் புரட்சிக்கு செய்யும் மாமா வேலை என்று எனக்கு தெரிந்த்தால் அமைதியாக இருக்கிறேன்.
இந்த ‘மேலான’ கருத்தை பார்ப்பதற்கு முன்னால் அவசரப்பட்டு தங்கள் முந்தைய பின்னூட்டத்திற்கு பதிலளித்து விட்டேன். மன்னியுங்கள். இந்தப் பின்னூட்டம் உங்கள் ‘தூய நோக்கத்தை’ தெளிவாக எடுத்தியம்புகிறது. கொஞ்சம் அவசரப்பட்டு உங்கள் ‘நடுநிலைமை’ வேடத்தை கலைத்து விட்டீர்களோ? இதுவரை இரயாகரன் மீது வசைமாரி பொழிந்து சிண்டு முடிந்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது வினவு இந்திய இரயாகரன்கள் என திருவாய் மலர்ந்திருக்கிறீர்கள். இப்பொழுதுதான் உங்கள் திருமுகம் துலக்கமாகத் தெரிகிறது.
இரயாகரன் மீதான உங்கள் ‘ஆழமான’ கருத்துக்களும், வினவின் மீதான உங்கள் ‘ஆழமான’ கருத்துக்களையும் படிக்கையில் உங்கள் ‘விசால அறிவு’ புலப்படுகிறது. உங்களை போன்ற எல்லாம் அறி(ரி)ந்த மேதைகளுக்கு பதில் சொல்ல முடியாத சாமானியன் நான்.எனவே, உங்கள் விளக்கெண்ணெய் விளக்கங்களுக்கு ரொம்ப நன்றி. அப்புறம் பார்க்கலாம்.
பி.கு:
நண்பர் போராட்டம்னுல்லாம் சொல்லாதீங்க… உங்களையெல்லாம் நண்பராக ஏற்றுக் கொள்ளுமளவுக்கு நான் இன்னும் ‘பக்குவமடையவில்லை.’
கிழிந்சுது, ஐயா போராட்டம், உங்க மொதோ பின்னூட்டத்த பாத்து பெரிசா விவாதிக்க போரீங்கன்னு நெனனச்சா இப்படி எஸ்கேப்பு ஆவுரீங்களே, மணி வினவ இந்திய இராயாகரன்னு சொல்லல, வினவு தான் ம.க.இ.கன்னு (இரயாகரன் மாதிரி) நெனச்சுகிட்டிருக்குற தோழர்களதான் அவரு இந்திய இரயாகரன்னு சொல்லுராறு. இன்னோரு தபா படிச்சு பாருங்களேன்
உண்மைதான். அதை நான் தவறாக புரிந்து கொண்டேன். நல்ல வேளை, நீங்கள் விளக்கினீர்கள். அவர் ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் மடையர்களோ? என்ன ஒரு மேன்மையான கருத்து? தான் மட்டுமே எல்லாம் அறிந்த மேதாவி, அமைப்புக் கருத்தை பற்றி நிற்பவர்களெல்லாம் மடையர்கள் என்ற தோரணையில் அவர் எழுதிய கருத்துக்கு எனது பதில் சரியானதே.
மற்றவர்களை அறிவிலிகளாகவும் தம்மை
மேதைகளாகவும் கருதிக்கொள்ளும்
இதுபோன்ற ‘மணி’யானவர்களுக்கு உங்கள்
பதில் மிக மிக சரியானது தான்.
ஓட்டுகட்சி, போலி கம்யூனிஸ்டு, ஆத்தீகவாதி, தமிழ் தேசியர், ஆணாதிக்கவாதி போன்றவர்களை புரட்சிகர அமைப்பில் சேர்க்கலாமா கூடாதா?
திரு ஜான் அவர்களே,
நீங்கள் மேற்குறிப்பிட்ட நபர்களை புரட்சிகர அமைப்பில் சேர்க்கலாம். புரட்சிகர அமைப்புகளின் சில கருத்துக்களை ஏற்றுக்கொண்டுதான் அவர்களும் வருவார்கள். பிறகு நாம் அவருடன் விவாதங்களில் ஈடுபடுவதன் மூலம் அவர் கொண்ட கொள்கைகளின் தவறுகளை சுட்டிகாட்டி அவரை வென்றெடுக்க முயல்வோம். அவரை வென்றெடுக்க முடியாத பட்சத்தில் அவர் ஆதரவளராக மட்டுமே நீடிக்கமுடியும். கட்சிப் பொறுப்புகளை அவரிடம் கொடுக்க இயலாது. ஒரு போலி கம்யூனிஸ்டு நான் அப்படித்தான் இருப்பேன் என்றால் அவரை போலி என்றுதானே அழைக்கமுடியும்.
இவர்கள் சிந்தனையை மாற்றிக்கொள்ளவில்லையென்றால் தானாகவே புரட்சிகர அமைப்பிலிருந்து வெளியேறிவிடுவர்.
அஸ்கர், சரியாக சொன்னீர்கள்… வினவுடன் சில மாற்றுக்கருத்து இருந்தாலும், (கவனியுங்கள்) அவர்கள் கேட்டுக்கொண்டதற்கினங்க, ஜனநாயக பூர்வமாக தனது அனுபவங்களை பகிர்ந்து, விவாதித்து வந்த ரதியை, அதே ஜனநாயக உணர்வுடன் அனுகாமல் பாசிஸ்டு என தூற்றி எதிர்நிலைக்கு தள்ளியது யார்? இதுதான் உங்கள் வென்றெடுக்கும் முறையா? இல்லை குறைந்த பட்ச ஆதரவாளராகவாவது பாதுகாக்கும் வழியா? தயவு செய்து பரிசீலனை செய்யவும்.
வினவுடன் சில மாற்றுக்கருத்து இருந்தாலும், (கவனியுங்கள்) அவர்கள் கேட்டுக்கொண்டதற்கினங்க, ஜனநாயக பூர்வமாக தனது அனுபவங்களை பகிர்ந்து, விவாதித்து வந்த ரதியை, அதே ஜனநாயக உணர்வுடன் அனுகாமல் பாசிஸ்டு என தூற்றி எதிர்நிலைக்கு தள்ளியது யார்? இதுதான் உங்கள் வென்றெடுக்கும் முறையா? இல்லை குறைந்த பட்ச ஆதரவாளராகவாவது பாதுகாக்கும் வழியா? தயவு செய்து பரிசீலனை செய்யவும்.
திரு ஜான்,
இதிலிருந்து ரதி அவர்கள் இன்னும் வென்றெடுக்கப்படவில்லை என்பதை உணரமுடிகிறது. அவர் குறைந்தபட்ச ஆதரவாளராக விவாத அரங்கிலேயே நீடித்திருக்க விட்டிருக்கவேண்டும். எனவே அவரை கட்டுரை எழுதச் சொன்னதன் மூலம் வினவே விமர்சனத்திற்குள்ளாகிறது. வினவும் பதில் எழுதுவதாக சொல்லியிருக்கிறார்கள். காத்திருக்கிறோம் வினவின் பதிலுக்காக.
நன்றி ஜான்.
அஸ்கர், இங்கு வந்து விவாதிப்பவர்கள் அனைவரும் ஆதரவாளர்கள் அல்லவே, வி்னவு தனது அறிமுகத்தில் குறிப்பிட்டுள்ளது போல வாசகரை எழுத்தாளராக்கும் முயற்சியில் இது ஒன்று. தவிர வினவு தளத்தில் எழுதுபவர்கள் எல்லாரும் கம்யூனிஸ்டா என்ன? டாக்டர் ருத்ரன், வித்தகன் , அருள் எழிலன் போன்றவர்களின் படைப்புகள் வினவில் வெளியாகியுள்ளன, இவர்கள் எல்லாம் தோழர்களா?
இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்பியது
1) தோழர் இரயாகரன் சற்றும் ஜனநாயக வழிமுறையில் இந்த பிரச்சனையை அனுகவில்லை மாறாக தவறான வழிமுறையை கடைப்பிடித்துள்ளார்.
2) ரதியின் எழுத்துக்களிலுள்ள சரி தவறை விவாதிக்காமல் அவரை பாசிஸ்டு என தாக்கி வேறொரு தளத்தில் எழுதியுள்ளார்
3) முக்கியமாக வினவு தோழர்கள் மீது அவர் வைத்த விமர்சனம் இந்த விவகாரத்தை திசை திருப்பி விட்டது
இதன் விளைவாகத்தான் இப்படி ஒரு விவாதம் இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதற்கு மாறாக ரதியின் பதிவுகளிலேயே அவருடன் விவாதித்திருந்தால் அனைவரும் பயன்பெற்றிருக்கலாம்.
சற்று சம்மந்தமில்லாத கேள்வி,
ரதி பதிவின் முதல் பாகத்தில் இரயாவின் கருத்தை எதிர்த்து பின்னூட்டம் எழுதினீர்கள், உங்கள் மனமாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை தெரிந்து கொள்ளலாமா?
நான் மணி
உணர்ச்சிவசப்படும் நபர்கள் ரதியின் எழுத்தை வெறும் உணர்ச்சிவசப்படத்தான் உதவும் என்று சொல்வது வியப்பாக உள்ளது.. எனது விளக்கெண்ணெய் விளக்கத்திலிருந்து இதில் இன்னதும் கலந்திருக்கிறதே என துல்லியமாக குற்றம் காணத் தெரிந்தவர்களுக்கு இராயகரனின் கத்தி போன்ற விளக்கங்களின் சாரம் புரிந்து இருப்பதும் அதன் நியாய தர்மங்களை வியந்தோதுவதும்… அப்ப்ப்பா இந்த வசிஷ்டர்களின் வாயால் எத்தனை முறைதான் குட்டுப்படப் போகின்றோமோ…
இங்கே போராட்டம் என்ற பெயரில் எழுதும் தோழர், மணியின் வாதத்திலுள்ள நியாயத்தை புரிந்து கொள்ளாமல் உணர்ச்சிவசப்படுவது வேதனையளிக்கிறது. இரயாகரன் பற்றி மணி சின்டு முடிந்து விட்டார் என கூறுவது மிக தவறான வாதம். மணி திருத்தமான வாதங்களை முன்வைத்திருக்கிறார், அதை மறுத்தாவது விவாதம் செய்யலாம். இப்படி அவதூறு செய்வதுதான் மார்க்சிய முறையா. தோழர்களே சிந்திப்பீர்
Senthil, ////டக்லஸ் தேவானந்தமும் அவரது ஆட்களும் (EPDP) செய்த படுகொலைகளை எப்படி அய்யா புலிகள்தான் செய்தார்கள் என்று ஆதாரமில்லாமல் கூறுகிறீர்கள்?///////
//// also see this long report in wiki about the past
LTTE murders and genocide :
http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE
and LTTE’s methods to raise funds included arms, drugs
smuggling for anyone ; extortion from Eelam diaspora,etc
also they forced recruited boys.
See these too :
USD200 million profit margins maintain sophisticated Tamil Tiger war
http://www.janes.com/press/press/pc070719_1.shtml
from Jane’s Defence Weekly :
http://www.janes.com/security/international_security/news/jwit/jwit070327_1_n.shtml
and i wrote the following in orkut :
ஆன்டன் பாலசிங்கம் என்னும் ஞானி
விடுதலை புலிகளில் முக்கிய தலைவர் மற்றும் குரு போனறவர் ஆன்டன்
பாலசிங்கம். ஆரம்ப நாட்களில் இருந்தே பிரபாகரனின் முக்கிய கூட்டாளியாக,
ஆலோசகராக, வழிகாட்டியாக, இருந்தவர். அவரின் மனைவி அடேல் பாலசிங்கம்
(ஆஸ்த்ரேலியா நாட்டை சேர்ந்தவர்) பெண் புலிகளுக்கு தலைவராக சிறுது காலம
பணியாற்றியவர். புலிகளில் தலைமைக்கும் இவர்கள் இருவரும் மிக
முக்கியமானவர்கள்.
உலக அரங்குகளில், தமீழ மக்களின் துன்பங்களை, சிங்கள அரசின் இனவாதத்தை
கொண்டு சென்றவர்கள். சிங்கள் அரசுகளுடன் புலிகள் நடத்திய அனைத்து
பேச்சுவார்த்தைகளிலும் பங்கு கொண்டார்.
பாலசிங்கம் பெரிய அறிவாளி ; உலக அறிவும், ஆழ்ந்த வாசிப்பனுபவும், தொலை
நோக்கு பார்வையும் கொண்டவர்.
யாதார்த்தை முற்றிலும் உணர்ந்தவர். 1994இல் சந்திரிக்கா அளித்த ஃபெடரல்
தீர்வை ஏற்றிருக்கலாம் என்று 2003இல் கிளினோச்சியில் ஒரு கூட்டத்தில்
வெளிப்படையாக பேசினார். மாறும் உலகத்தையும், எதிரியின் பலத்தையிம்,
புலிகளின் பலத்தையும் அறிந்தவர்.
அவரின் தீர்க்கதரிசனமான வாதங்களை புலிகளின் தலைமை கேட்டக்கவில்லை.
http://en.wikipedia.org/wiki/Anton_Balasingham
http://www.timesonline.co.uk/tol/comment/obituaries/article754765.ece
Anton Balasingham
Journalist who became the chief strategist and negotiator of the Tamil
Tigers in their struggle for autonomy
Dear Mr. K.R. Athiyamaan,
Thank you for your reply.
But for your kind information, it will not take too much time to modify the wiki pages easily by anyone. So do not produce the wikipedia pages as proofs.
Senthil.
முதலில் ஒரு தெளிவு:
நான் வினவு கருத்துடன் முழுமையாக உடன் படுகிறேன். மேலும் தோழர்கள், மா.சே, மணி, நாவலன், ஜான், மாம்போ, அறிவுக்க்கொழுந்து, ஏகலைவன் உள்ளிட்டோரும் சரியான திசையில் இந்த விவாதத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள் என கருதுகிறேன்.
வினவு கருத்துடன் ஒன்றுபடாத மற்ற தோழர்கள் எப்படி இராயகரனுடைய கருத்து வறட்டுத்தனமானதல்ல என்பதை விளக்காமல், தேய்ந்த ரெக்கார்டு போல ஒரே இடத்தில் (புலி எதிர்ப்பு) நின்று போய் விட்டனர். அவர்களால் விவாதத்துக்கு எந்த பயனும் இல்லை இது அவர்களுக்கும் சலிப்பூட்டி, மற்றவற்களையும் வெறுப்பேற்றுவதில்தான் போய் முடியும்.
எனவே மார்க்சிய ஆய்வு முறையை பயன்படுத்துங்கள். வறட்டுவாதத்தை அடையாளம் காணுங்கள். அதற்கு எதிராக போராடுங்கள்,
வினவுக்கு மாற்றாக கருத்து கூறிய தோழர்கள்
எல்லோரும் புலி எதிர்ப்பை மட்டும்தான் பேசினார்களா, ஒரே அடியாக “தேய்ந்த ரெக்கார்டு” என்பது மற்ற தோழர்களை கேவலப்படுத்துகிறது.
மற்ற தோழர்கள் கேட்ட முக்கியமான கேள்விகளை வசதியாக மறந்துவிட்டு(அதை மறுபடியும் கேட்டு உங்களை வெறுப்பேத்த விரும்பவில்லை)
வறட்டுவாதத்தை விளக்குங்கள் என்றால் எப்படி ?
//அவர்களால் விவாதத்துக்கு எந்த பயனும் இல்லை//
நல்லா பேசறீங்க!!! அருமையான வரிகள் ?????
அய்யா ? இங்கே யாரையும் கேவலபடுத்தும் நோக்கம் எனக்கில்லை. உங்களால் முடிந்தால் அந்த கேள்விகளை தொகுத்து சொல்லுங்களேன். நான் பார்த்த வரையில் இங்கே மற்றும் இதற்கு முன்தைய இடுகையில் இரயாகரன் தரப்பு பேசும் சாரமான விசயம் ‘புலி எதிர்ப்பு’ மட்டும்தான். இரயாகரனின் கருத்து வறட்டுவாதமல்ல என்று இந்த இடுகையின் கருப்பொருளை ஒட்டி யாராவது விளக்கி எழுதியிருந்தால் சொல்லுங்கள் என் கருத்தை மாற்றிக்கொண்டு மன்னிப்பும் கேட்டுவிடுகிறேன்.
இரயாகரன் எப்போது கடவுளானார்:
நானும் ரதி முதல் பகுதி எழுத துவங்குவதிலிருந்து பார்த்து விட்டேன், இரயாகரனை யாராவது விமர்சித்தால் சிலருக்கு கோபம் வந்துவிடுகிறது. இரயாகரன் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒரு நபரா? அவரை கடவுகளாக்கும் முயற்சி ஏன்? எந்த ஒரு மார்க்சியவாதியும் ஆசான்கள் உட்பட விமர்சனத்துக்கு உரியவர்களே. இந்த தனிநபர் வழிபாடு புரட்சிகர அமைப்பின் பண்புகளில் ஒன்றல்ல. அதைக்கொண்டுள்ள தோழர்கள் உடனடியாக அதை விட்டொழியுங்கள்
//ஒரு மார்க்சியவாதியும் ஆசான்கள் உட்பட விமர்சனத்துக்கு உரியவர்களே. இந்த தனிநபர் வழிபாடு புரட்சிகர அமைப்பின் பண்புகளில் ஒன்றல்ல. அதைக்கொண்டுள்ள தோழர்கள் உடனடியாக அதை விட்டொழியுங்கள்//
உண்மை
தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்
ஆனால் இது உங்களுக்கும் பொருந்துகிறது 😆
ஈழத்தின் அத்தாரிடி இரயாகரன் மட்டுமா:
ஈழத்து அனுபவத்தை ரதி எழுதத்துவங்கும் போதோ ஆ! நடுநிலையா எழுது, புலிய திட்டி எழுது என கன்டீசன் போட்டார். அதவிட பெரிய காமெடி அதற்கு பல தோழர்கள் சப்போர்ட்டா வந்ததுதான், நடுநிலை நாட்டாமைகளை பற்றி வினவு, மா.சே போன்ற தோழர்கள் அப்போதே எழுதிவிட்டதால் அதற்குள் போகவில்லை… ஆனால் இது என்ன பன்பு, ஒருவர் எழுத ஆரம்பிக்கும் போதே அவர் இப்படித்தான் எழுதுவார், அவரால் நேர்மையாக எழுத முடியாது என்று கருதுவதன் மறுபக்கம், நான் சொல்லும் வழியில்/என்னுடைய கருத்தில் ஒன்று படுவதுதான் நடுநிலை, நியாயம் என்பது… அதனால்தான் கேட்கிறேன் ஈழத்தின் அத்தாரிடி இரயாகரன் மட்டுமா, மற்ற மனிதர்களுக்கு அங்கே பலவிதமான அனுபங்கள் ஏற்பட்டிருக்க கூடாதா? அனைத்தையும் இரயா என்னும் ஸ்கேலு வைத்துதான் அளந்து பார்க்க வேண்டுமா?
இன்னொரு கேள்வியும் இருக்கிறது அதாவது, மார்க்சியத்தின் அத்தாரிடி இரயாகரன் மட்டுமா என்பது ஆனால் அதை மணி ஏற்கனவே கேட்டு விட்டதால் அங்கே போய் யாராவது பதில் சொல்லுங்கள்.
மறுபடியும் கிண்டல் நையாண்டி இதெல்லாம் சக தோழர்களிடம் தேவையா?
ஈழத்துக்கோ,மார்க்சியத்துக்கோ ரயாகரன் அத்தாரிட்டி அல்ல அப்படி அவர் சொல்லவும் இல்லை அதே நீங்களும் நானும் அத்தாரிட்டி ஆக முடியாது
//புலிய திட்டி எழுது என கன்டீசன் போட்டார்//
இதை தாங்கள் நேர்மையுடன் நிரூபிக்க தயாரா,
பக்கசார்பின்றி எழுது என்பது குற்றமா?
வறட்டுவாதம் பேசும் ரயாகரனின் நூல்களை புரட்சிகர அமைப்புகள் ஏன் வெளியிட்டது ?
இதை நீருபிக்க வேறு வேண்டுமா இந்த தொடரில் இரயாகரன் எழுதிய பின்னூட்டங்களுக்கும், இப்பொது அவர் எழுதி வரும் தொடரையும் படியுங்கள், அதுவே நிரூபனம்.
பக்கச்சார்புக்கான விளக்கம் ரதிகட்டுரையின் முதல் பாகத்தில் மா.சே, வினவு பின்னூட்டங்களிலும், இந்த இடுகையில் போராட்டத்தின் பின்னூட்டத்திலும் தெளிவாக இருக்கிறது.
வறட்டுவாதம் பேசுபவரின் நூலை புரட்சிகர அமைப்புகள் ஏன் வெளியிட்டது, பிளஹனவ்வை ஏன் லெனின் பெரிதும் மதித்தார்?
முடிவதற்குள் என்டர் அழுத்திவிட்டேன் 🙂
அதாவது, ஒரு நபரிடம் ஐய்க்கியமும் போராட்டமும் உள்ள உறவுதானே இயங்கியல், மார்க்சியம், தோழமை எல்லாம். ஒன்று இப்படி இல்லை அப்படி என்றால் எப்படி
//இதை நீருபிக்க வேறு வேண்டுமா இந்த தொடரில் இரயாகரன் எழுதிய பின்னூட்டங்களுக்கும், இப்பொது அவர் எழுதி வரும் தொடரையும் படியுங்கள், அதுவே நிரூபனம். //
நல்லா சமாளிக்கிறீங்க 😆
பகக சார்பின்றி எழுதுங்கள் என்றுதான் கூறியுள்ளார்.
தோழர் இரயா தனது கட்டுரை பகுதி 4 ல் கூறுவது.
அவர் 1986-1987 க்கு பிந்தைய காலத்தில் மண்ணில் இருக்கவில்லை என்கின்றார். அதற்கு பிந்தைய காலத்தைப் பற்றி அவரின் கருத்துகள், சொந்த தனிப்பட்ட அனுபவமல்ல. பொதுவான ஒன்றின் மேலான, புலி பற்றிய அவரின் “மதிப்பும் மரியாதையும்” சார்ந்து செய்யப்படும் அரசியல் புனைவு. பொது மக்களைச் சார்ந்து நின்று சொல்லும் ஒன்றல்ல. இப்படி இயல்பாகவே 1986-1987 க்கு பிந்தைய வரலாற்றை, புலியின் ஊடாக எமக்கு கூற முனைகின்றார்.
தான் மண்ணில் இல்லாத போது நடந்தநிகழ்வை எப்படி தன் சொந்த அனுபவமாக கூறமுடியும் என்றுதானே கேட்கிறார். அத்துடன் தகவல்கள் அன்னிய சூழலில் நின்று மிகையாக்கி புனையப்படுகின்றது.
என்கிறார். இதில் தவறிருப்பதாக நாம் எண்ணவில்லை.
இராயாகரனும் கூடத்தான் 83-84 பிறகு ஈழத்தில் இல்லை அவரும் அன்னிய சூழலில்தான் இருக்கிறார். அவருக்கும் இதே விமர்சனத்தை பொருந்தும் தானே? ஆனால் அதில்லை என் கேள்வி, இதை ஏன் ரதியுடன் விவாதிக்க அவர் முன்வரவில்லை என்பதே?
நமக்கு வேண்டுமென்றால் புலி ஆதரவாளர்களை வென்றெடுப்்பது பிரதான வேலையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஈழத்து பொதுவுடமைக்கு அது தானே பிரதான வேலை? யாருடனும் விவாதிக்காமல் புலியின் தாக்கத்தில் இருப்பவர்களையெல்லாம் பாசிட்டுகள் என்றால் அது வறட்டுவாதம் இல்லாமல் வேறென்ன?
//அவர் 1986-1987 க்கு பிந்தைய காலத்தில் மண்ணில் இருக்கவில்லை என்கின்றார். //
This is not true.
வினவில் வரும் தமிழர்கள் எதையும் நம்பும் கேனையர்கள் என்று ரதி நினைத்து விட்டார். //அவர் 1986-1987 க்கு பிந்தைய காலத்தில் மண்ணில் இருக்கவில்லை என்கின்றார். //
This is not true.
ரதியின் கட்டுரையில் இருந்து:
//வடபகுதியில் ராணுவம் முகாம்களில் முடக்கப்பட்ட காலங்களில்// அதாவது 1984-1987 //பரீட்சை எழுதிய சில நாட்களிலேயே நான் இந்தியாவுக்கு அகதியாய் சென்றுவிட்டேன். எனக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது என் நண்பி மூலம் இந்தியாவில் இருக்கும் போதுதான் தெரியவந்தது.ஈழத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் திரும்பி ஈழத்துக்கு போக என்னை வீட்டில் அனுமதிக்காததால் படிப்பை தொடரும் அந்த பொன்னான சந்தர்ப்பத்தை இழந்தேன்.// ரதி தொடர்ந்து எழுத மாட்டேன் என்று முடிவெடுக்க காரணம் அவரது பொய்கள் அம்பலமாகி விடும் என்பதால் தான். இது தெரியாமல் இன்னமும் ஒரு கும்பல் ரதிக்கு ஜால்ரா அடிக்கின்றது.
வினவில் ரதியால் எழுதப்பட்டது ஈழத்து வரலாறா
இங்கே இரயாகரனால் துவங்கப்பட்டு பின்பு மற்றவர்களால் மீண்டும் மீண்டும் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு ‘ ஒரு புலி ஆதரவாளர் எப்படி ஈழத்து வரலாறை வினவு தளத்தில் எழுதலாம்’ என்பது. இந்த கேள்வியிலுள்ள அபத்தத்தை காட்டிலும் அபத்தமானது ரதி ஈழ வரலாற்றை எழுதுகிறார் என்பது.
ரதியை அறிமுகப்படுத்தும் போது வினவு எழுதுகிறார்
”ஈழத்திலும் பின்னர் தமிழகத்திலும் தற்போது கனடாவிலும் அகதி என்ற பெயரில் வாழ்க்கைய நகர்த்திக்கொண்டிருக்கும் ரதி ஒரு பெண் என்ற முறையிலும் இந்த நாடோடி வாழ்க்கையின் கசப்புகளை கூடுதலாக உணர்ந்திருப்பார். ஈழம் தற்போது பாரிய பின்னடைவு கண்டிருக்கும் நேரத்தில் ஈழத்தின் நினைவுகளை மீட்டிக் கொண்டு வரும் முயற்சியாகவும், வினவில் வாசகராக அறிமுகமாகும் நண்பர்களை படைப்பாளிகளாக உயர்த்த வேண்டுமென்ற எமது அவாவினாலும் இங்கே தோழர் ரதியின் நினைவுகளை பதிவு செய்கிறோம்.”
”இந்த நினைவுகள் நாம் எவ்வளவுதான் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் ஈழப் போராட்டத்தின் கடமைகளை செய்வதற்கு ஒரு சிறிய தூண்டுகோலாகாவாவது இருக்குமென்று நம்புகிறோம். ரதியை உற்சாகப்படுத்துங்கள், அவரது நினைவுகளை உங்கள் நினைவலைகளில் அரசியல் உணர்வோடு சேமித்து வையுங்கள்.”
இதற்கு என்ன பொருள் என்பதை புரிந்து கொள்ள மார்க்சியத்தை கரைத்து குடித்து தண்டி தண்டியாய் புத்தகம் எழுதியிருக்க தேவையில்லை, தமிழ் கற்றிறுந்தாலே போதும்.
பின்னர் ரதி இப்படி துவங்குகிறார்…
”நான் அரசியல் பேசப்போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். எங்கள் வாழ்வு எப்படி போர் என்ற சகதியில் சிக்கி சின்னாபின்னப்பட்டது என்று என் அனுபவத்தைதான் சொல்ல வருகிறேன்”
இப்படி முடிக்கிறார்…
”நான் அகதியாய் ஈழத்திலும், இந்தியாவிலும் தற்போது கனடாவிலும் என் அனுபவங்களை மீட்டிப்பார்க்கிறேன். என் தன்மானம் என்னை எத்தனையோ தடவைகள் சாட்டையாய் அடித்திருக்கிறது. எதற்கு இந்த “அகதி” என்ற பெயர் என்று. கூனிக்குறுகி பலதடவை இந்த அகதிவாழ்க்கை தேவையா என்று என்னை நானே வெறுக்கிற சந்தர்ப்பங்களும் உண்டு. ஏன் எல்லா மானிடப்பிறவிகள் போலும் என் இருத்தலை, என் உயிரை என்னால் நேசிக்கமுடியவில்லை? காரணம், நான் தமிழ் என்பதலா? அல்லது நான் சுதந்திரத்தை அதிகம் நேசிப்பதாலா? நான் சட்டப்படியான உரிமைகளோடும், தன்மானத்தோடும் என் மண்ணில் வாழ நினைப்பது ஒரு குற்றமா? நான் அகதியாய் அன்னியமண்ணில் மடிவதுதான் விதியா?
ஈழத்தில் என் பதுங்குழி வாழ்க்கை, இடப்பெயர்வு, கல்விக்கூடங்கள், வாழ்விடங்கள் எதுவும் சந்தோசம் நிறைந்தவை அல்ல. என் சந்தோசமான மாணவப்பருவம் மற்றும் பாடசாலை நாட்களில் கூட போரியல் வாழ்வின் காயங்கள் நிறையவே உண்டு. ஆனால், சுதந்திரம் வேண்டுமென்றால் இதெல்லாம் விலையோ என்று எங்களை நினைக்கத்தூண்டிவிட்டது சிங்கள அடக்குமுறை”
ஈழத்தில் தன் அத்தை பாட்டி செத்த அனுபவத்தை யாராவது சொன்னால் கூட பிண்ணனியில் ஷெல் ஒன்று விழும் சத்தம் கேட்டிருக்கும். அதானல் ரதி தனது கதையில் ஏன் போரை பற்றியும் தமிழர் உரிமை பற்றியும் பேசினார் என யாரும் கேட்க முடியாது ஏனெனில் அவர் அகதியானதற்கு காரணம் அவர் தமிழர் என்பதனால். இதை யாரும் மறுக்க முடியாது என நினைக்கிறேன். மறுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை 🙂
ரதி பாசிஸ்டு – இரயாகரன், ஜனநாயகவாதி
ரதி தனது முதல் பகுதியை எழுதியவுடன் அவரை நடுவு நிலைமையாக? எழுதும்படி அன்போடு அச்சுறுத்தியதோடில்லாமல் ரதி எழுதிய அறிமுகத்தை வைத்தே அவர் ஒரு புலி என ‘கண்டு’ படித்து விமர்சனங்களை எழுதிய இரயா மற்றும் தோழர்களுக்கு ரதி இவ்வாறு பதிலளித்துள்ளார்
என் அனுபவத்தொடரில் அரசியல் அல்லது புலிகள் பற்றியோ எழுதுவது என் நோக்கம் கிடையாது. அரசியல் பேசும் அளவுக்கு எனக்கு அதில் ஞானம் கிடையாது. புலிகள் பற்றிய கருத்துகள் என் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. அதை யார் மீதும் திணிக்கும் எண்ணமும் எனக்கு கிடையாது. எழுதலாம் என்ற முடிவெடுத்தபின் நான் தீர்மானமாக நினைத்துக்கொண்டேன், அரசியல் மற்றும் புலிகளை பற்றி பேசுவதில்லை என்று. இங்கே ஆரம்பத்தில் நான் சொன்னது என் மனக்குமுறலகள் மட்டுமே.
நான் என் அனுபவத்தொடரை எழுதுவதன் மூலம் எங்கள் போரியல் வாழ்வின் சிரமங்களையும், அகதிவாழ்வின் அவலங்களையும், சாவோடு போராடி நாம் செத்து செத்து பிழைத்ததையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதுதான்.
இங்கே மா_சே சொன்னது போல் என் அனுபவங்களை நான் எப்படி புரிந்து கொண்டேனோ அதன் பிரதிபலிப்பாகத்தான் என்னால் சொல்லமுடியும். ஒருவேளை நான் விவாவதத்திற்குரிய விடயங்களை சொன்னால் தாராளமாக விவாதிக்கலாமே.
எப்பேர்பட்ட புலிப் பாசிசம்…எப்படிப்பட்ட நடுவு நிலைமை பிழற்சி
அந்த இடுகைக்கான விவாதத்திலிருந்து விலகிய போது இரயா இப்படி எழுதுகிறார்
இங்கே நாம் வலியுறுத்த விரும்புவது புலிகளின் பால் பற்று கொண்டிருக்கும் இதயங்களை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்வோம். அப்போதுதான் புலிகளின் பெயரால் ஈழம் கண்ட பின்னடைவை நாம் அவர்களுக்கு எடுத்து சொல்ல முடியும். மாறாக இதுதான் எமது நிலைப்பாடு இதை ஏற்காதவர்கள் தவறானவர்கள் என்று நமக்கு நாமே பேசிக் கொள்வதில் பயனுண்டா? இந்த விமர்சனங்கள் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஒரு அணுகுமுறையை புரிந்து கொள்வதற்காக சொல்கிறோம்.”
இந்த வகையில் தொடர்ந்து இந்த விவாதத்தில் இருந்து நாம் விலகிக்கொள்வது நல்லதாகப் பாடுகின்றது.
நீங்கள் புலியுடன் போய் புலியை திருத்த முனைகின்றீர்கள். நாங்கள் அதை எதிர்த்து அம்பலப்படுத்திதான் இதைச் செய்ய முடியும் என்று கருதுகின்றோம்.
அதாவது அவர் எதை செய்ய வேண்டும் என்று விரும்புகிறாறோ அதை செய்யாமல். விவாதத்திலிருந்து விலகுகிறார்.
அவர் செய்ய விரும்பியதை செய்பவரை ( புலிகளின் பெயரால்….) ‘புலியுடன் போய் புலியை திருத்த’ என ரதிக்கும் புலி முத்திரை குத்தி, வினவுக்கும் புலி ஆதரவு முத்திரை குத்தி, அதற்கு எதிர்வினையாற்றினால் பதில் சொல்ல வேண்டுமே என்ற பொறுப்பு கூட இல்லாமல் விவாதத்திலிருந்து விலகுகிறார்.
என்ன ஒரு ஜனநாயக ஜொலி ஜொலிப்பு…
இதற்கு பின்னர் நடந்த விவரங்களைத்தான் வினவு கடந்த இரண்டு இடுகைகளில் தொகுத்து எழுதியிருக்கிறார்…..
இதில் தோற்றது என்னவோ நான்தான்….. எவ்வளவுதான் பில்டப் கொடுத்து பார்த்தாலும் ரதியை பாசிஸ்டு எனவும் இரயாவை ஜனநாயகவாதி எனவும் நிரூபிப்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் இல்லை. ஆகவே தோழர்களே தலைப்புக்கு மன்னியுங்கள் 🙁
ரயா வறட்டுவாதி தோழர் ரதி கம்யூனிஸ்டு
ரதி புலி ஆதரவாளர் இல்லை என அரைடிக்கட் கூறுகிறார்
//‘ ‘ ஒரு புலி ஆதரவாளர் எப்படி ஈழத்து வரலாறை வினவு தளத்தில் எழுதலாம்’ என்பது. இந்த கேள்வியிலுள்ள அபத்தத்தை காட்டிலும் அபத்தமானது ரதி ஈழ வரலாற்றை எழுதுகிறார் என்பது. ’//
அபத்தம் என்றால் முட்டாள்தனம் என்று அர்த்தம்,
இந்த கேள்வியே முட்டாள்தனமானதென்றால் மகஇக போன்ற புரட்சிகர அமைப்புகளுக்கு பல ஆண்டுகளாக ஆதரவாளராக இருந்து பிளாகில் எழுதுபவரெல்லாம் உங்கள்
பார்வையில் முட்டாள்கள். இப்படி கேள்வி கேட்டவர்களெல்லாம் சக தோழர்கள்தான் அவர்களை எதிர்நிலையில் தள்ளுவது போல ஆணவமான பதில்கள் இதில் நீங்கள் மற்றவர்களை வென்றெடுக்க போகிறீர்களா?
நீங்கள் எங்கே பொதுவுடைம பாடம் கற்று கொண்டிருக்கிறீர்களோ அங்குதான்
நாங்களும் கற்றுகொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாதிர்கள், வினவின் பாதையில் இது ஒரு விமர்சனத்துக்குறியதாகவே எதிர்காலத்திலும் இருக்கும்
இங்கு வினவு ரயாவை தாக்குவதற்கு மேடை போட்டு கொடுத்துள்ளது
அதனால்தான் “எல்லாளன்” போன்றவர்கள் உள்ளே வந்து ரயாகரனையும்
கூடவே ஆசான்களையும் போட்டுதாக்கியுள்ளனர் ஆனால் ரயாகரனின் தளத்தில்
வினவை தாக்குவது போன்ற மறுமொழிகளை அனுமதிப்பதில்லை,
இங்கோ எல்லாளனின் அவதூறுகளுக்கு பதில் சொல்ல வினவுகூட முன்வரவில்லை ஏனென்றால் எல்லா(ள) ஜனநாயகவாதிகளும் ஒன்றாக சேர்ந்து ரயாவை ரவுண்டு கட்டி கொண்டி இருப்பதால் இந்த சமயத்தில் சப்போர்ட்டுக்கு வரும் எல்லா(ள) தோழர்களையும்(?) புண் படுத்தக்கூடாது என முடிவு செய்திருப்பீர்கள் போலும், ரயாவிடமிருந்து மார்க்ஸியத்தை காப்பாற்ற வேண்டும், சிறீயிடமிருந்து மார்க்ஸியத்தை காப்பாற்ற வேண்டுமென சிலர் சபதம் எடுக்கிறார்கள் இதையெல்லாம் காமிடி என ஒதுக்கிவிட முடியாது இந்த விவாதத்திலிருந்து எமது பக்கமும் சுயவிமர்சனம் அவசியம்தான் ஆனால் வினவு ஒன்றும் விமர்சினத்திற்கு அப்பாற்பட்டவரல்ல, உங்களின் பாணி சலிப்பூட்டக்கூடியதல்ல “தோழர்களுக்கு”(?) ரயா வறட்டுவாதி தோழர் ரதி கம்யூனிஸ்டு
என்று முழுமையாக எம்மாலும் “கண்டு”பிடிக்க இயலவில்லை ஆனால் வினவு தோழர்கள் அதை பிரகடனமே செய்துவிட்டார்கள் எதிர்காலத்திலும் அவர்கள் இதை முன்னெடுத்து சென்று “வறட்டுவாதத்துக்கு” எதிராக போராடுவார்கள் என நம்புகிறோம், போதும் இதோடு எமது விவாதம், (முடியல)
நண்பர்களே, என் உணர்வையும் எழுத்துக்களையும் மதித்து இந்த ஆரோக்கியமான ஓர் விவாதத்தை நடத்துவதற்கு நன்றி. நீங்கள் எல்லோரும் இவ்வளவு தூரம் சொல்வதாலும், எங்கள் அவல வாழ்வின் வலிகளை சொல்லாமல் இடையில் நிறுத்தக்கூடாது என்பதாலும் என் முடிவை மீள் பரிசீலனை செய்கிறேன்.
எனக்குள் ஓர் குற்ற உணர்வு வருத்திக்கொண்டே இருக்கிறது. நண்பர் கலகம் போன்றோர்கள் வினவு மீது மிகவும் மதிப்பு கொண்டவர்கள். அவர் போன்றவர்கள் கூட வினவை விமர்சிக்க முனைந்ததாலும்; இரயாகரனுக்கும் வினவுக்கும் இடையில் இருந்த நட்பு எனக்கு தெரிய வந்த போதும்; என்னால் வினவு தன் தோழர்களின் விமர்சனங்களுக்கு தேவையில்லாமல் ஆளாக நெரிடுகிறது என்ற ஓர் உறுத்தல் உண்டானது. அது மட்டுமல்ல, இரயாகரன் என்னை “Facist” என்று சொன்னது எனக்கு ஏறக்குறைய ஓர் அதிர்ச்சியாகவே இருந்தது. இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று நினைத்து தான் நான் எழுதவில்லை என்று சொன்னேன். ஏன் தேவையில்லாத விமர்சனத்திற்கு உள்ளாக வேண்டும் என்ற ஒருவிதமான கோழைத்தனமும் தான் காரணம்.
உங்கள் விவாதங்களைப் பார்த்த பிறகு எனக்கு, நான் எழுத்தத் துணிந்தால் விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் துணிவு வேண்டும் என்று உணர முடிந்தது. நானும் இராயகரனின் விமர்சனங்களை personal ஆக எடுத்துக்கொள்ளாமல் வெறும் விமர்சனங்களாக மட்டுமே பார்த்திருக்கலாம். எனக்கு தமிழரங்கம், இரயாகரன் அறிமுகமானது மிக அண்மைக்காலங்களில் தான். அவரின் பதில்களை வினவு தளத்தில் படித்ததோடு சரி. மிகவும் கரடு, முரடான வார்த்தைகளாக இருக்கிறதே என்று அவரின் தளத்தில் நான் எந்தவொரு கட்டுரையையும் படித்ததில்லை. இப்பொழுது கூட என்னைப்பற்றி அவர் தளத்தில் எழுதிய எந்தவொரு விமர்சனத்தையும் இதுவரை நான் படிக்கவில்லை. படிக்கவேண்டும் என்று கூட எனக்கு தோன்றவில்லை.
உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி.
நல்ல முடிவு சகோதரி! தொடர்ந்து எழுதுங்கள்! அரசியல் புரிந்தவர்களும், மற்றவரும் விமர்சிக்கட்டும், விவாதிக்கட்டும், போற்றட்டும், தூற்றட்டும்.
என்னைப்பொருத்தவரை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கப்ப்டும் புலிகளுக்கு அதனைவிட பன்மடங்கு ஆதரவு இருப்பது எப்படி என்னும் கேள்விக்கு உங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் விடையிறுக்கக்கூடும் என தோன்றுகிறது. Compromise செய்து கொள்ளாமல் எழுதுங்கள். எதிர்ப்பார்த்துக்காத்திருக்கிறேன்.
Irayakaran is simply ploughing. What did he do than blaming LTTE. He blames LTTE because of his personal bitterness against LTTE. What Irayakaran did do for the welfare of Eelam Tamils. Can he talk about taht. Irayakaran is a best example for Etttappan. As a Tamizhian Irayakaran should keep quiet if he does not want LTTE. He is talking like a mental. Rathi should continue writing. Irayakaran is coolie.
நான் மணி
இதோ ஒருவர் அப்புறம் பார்க்கலாம் என எனது விவாத்த்திற்கு தனது ஜனநாயகத்தை தந்துள்ளார். அவரது அணியைச் சேர்ந்த உத்தமர் திருவாளர் ரயாகரன் விவாதிக்கவும் தரப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்லவும் முன்வரவில்லை.
எனக்கு தெரிய இந்தியாவில் உண்மையான கேள்விகளைத் தவிர்க்கும் சாதி ஒன்று உண்டு.. அவங்க கூட இப்போ கோப்ப்பட ஆரம்பிச்சிட்டாங்க•. என்னத்த சொல்றது
//நண்பர்களே, என் உணர்வையும் எழுத்துக்களையும் மதித்து இந்த ஆரோக்கியமான ஓர் விவாதத்தை நடத்துவதற்கு நன்றி. நீங்கள் எல்லோரும் இவ்வளவு தூரம் சொல்வதாலும், எங்கள் அவல வாழ்வின் வலிகளை சொல்லாமல் இடையில் நிறுத்தக்கூடாது என்பதாலும் என் முடிவை மீள் பரிசீலனை செய்கிறேன்// என்று ரதியின் கூற்றை வரவேற்கிறேன். விரைவில் வினவில் எதிர்பார்போம்…..
முதலில் இந்திய ரயாகரன்கள் என்றும், பார்ப்பனர்கள் எனப் பொருள்படும்படியும் விளிக்க நேர்ந்த என்னுடைய உணர்ச்சிவசப்பட்ட தன்மைக்காக மன்னிப்பு கோருகிறேன்.
உங்களுக்கு ஆத்திரமூட்டுவதோ, விவாதத்தின் மையப் பொருளை விட்டு விலகிச் செல்லும் தேவையற்ற விவாதத்தை எழுப்புவதோ எனது நோக்கமில்லை. எனினும், தானாக முன்வந்து தவறு செய்து விட்டதாக ஏற்றுக் கொண்டிருப்பதால், இக்கருத்தை முன்வைக்கிறேன். தங்கள் சுயவிமர்சனத்தை சுருக்கமாக முடித்து கொண்டு விட்டீர்கள். நான் காட்டமாக பதிலளிக்க நேர்ந்த தங்கள் ,பின்னூட்டம், ஒட்டுமொத்தமாக அமைப்பின் மீதான அவதூறாகவும், அமைப்பு கருத்தை பற்றி நின்றாலே, ஒரு விவாதத்தில் அமைப்பின் கருத்துக்கு காத்திருந்தாலே, வறட்டுவாதிகள் என்ற முத்திரை குத்துவதாக இருந்தது. அமைப்பு விரோதக் கண்ணோட்டமும், தான் முன்வைக்கும் ‘சிக்கலான’ கேள்விகளை புரிந்து கொள்ள முடியாத ‘மந்தைகள்’ என சக தோழர்களைக் கருதும் குட்டிமுதலாளிய மனோபாவத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என நான் கருதியதால்தான் அவ்வாறு பதிலளிக்க நேர்ந்தது. இதனைப் பரிசீலிக்க வேண்டுகிறேன். மற்றபடி தங்கள் முதல் பின்னூட்டத்தில் கூறியபடி அரசியல்ரீதியிலான மாற்றுக் கருத்துக்களை விவாதிக்க தயாராகவே இருக்கிறேன்.
ஐயா கேள்விக்குறி..
ஈழ வரலாறு ரதியால் எழுதப்படும் என வினவு அறிவிக்கவில்லை. அறிவித்தால் முதல் விமர்சனம் நான்தான் செய்வேன். ஆனால் அறிவிக்கப்படாத ஒன்றை அறிவித்தார்கள் எனப் பேசிக் கொண்டே இருந்தால் என்னவாக அவர்கள் இருக்கிறார்கள் என நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
அபத்தம் என்றால் முட்டாள்தனம் என்று ஒரு பொருள்தான் உள்ளதா? அல்லது அறிவாளிகள் எப்போதாவது முட்டாள்தனமாகப் பேச மாட்டார்களா..? அதனை சுட்டிக்காட்டினால் ‘என்னை முட்டாள்னு சொல்லிட்டான்’னு கத்துவீங்களா..?
சக தோழர்களை வென்றெடுக்கின்றீர்களா நீங்கள்.. இது (ஏற்கனவே தோழர்களாக இருக்கும் இரு தோழர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் வென்றெடுத்துக் கொள்வது) அபத்தம் எனக் கூறினால் உங்களுக்கு கோபம் வரக் கூடும்… கொஞ்சம் உங்களது வாக்கியத்தை சிறிது பரிசீலனை செய்கின்றீர்களா..?
நீங்களும், நானும், முன்னாள் நக்சல்பாரிகள் என அறியப்படும் பல என்ஜிஓ க்களும், ஓடுகாலிக் கும்பலும் கூட ஒரு காலத்தில் ஒரே இடத்தில்தான் அரசியல் கற்றுக் கொண்டார்கள்.. அதற்காக மாற்றுக்கருத்தை விவாதித்தால் மனசு புண்படுமே என்று சும்மா இருக்க சொல்கின்றீர்களா..
ரயாகரனைத் தாக்குவதற்கு மற்றவர்கள் வந்து மேடை போட்டுத்தர வேண்டிய அவசியமில்லை. அவர் நல்ல ஸ்டிராங்காக நான்கு மேடைகளை பக்காவாக போட்டு வைத்திருக்கிறார். அந்த மேடையை ஒரு முறை கூடத் திரும்பிப் பார்க்காமல் வினவை விமர்சிக்க வருவது வேடிக்கைதான். முதலில் அந்த நான்கு கட்டுரையைப் படியுங்கள். எந்தத் தோழருக்கும் கோபம் தானாக வரும்..
எல்லாளனோ அல்லது மற்றவர்களுக்கோ ஆசான்களையும், கம்யூனிசத்தையும் மடத்தனமாக போட்டுத்தள்ள முயற்சிப்பது ஏதோ இந்த கட்டுரைல தொடங்கியது போல பேசுறது உங்களுக்கே கிச்சுகிச்சு மூட்டலயா..
எல்லாளனின் சைடு டிராக்குக்கு பதில் சொல்ல வினவு முனைந்தால் ஒரு வேளை ரயாகரனுடனான சித்தாந்த போராட்டம் ஏற்படுத்தும் அயற்சியிலிருந்து நீங்கள் தற்காலிகமாக ‘விடுதலை. அடைவீர்களோ..
எது காமடி.. மார்க்சியத்தை ரயாகரனிடமிருந்து காப்போம் என்று கூறுவது காமடியா.. ரயாகரன் ஒரு காமடியன் ஆக மாறிக் கொண்டிருக்கிறார் என்பதை அவரது நான்கு கட்டுரையில் வெளிப்படுத்திய பாயிண்டுகளே புட்டுபுட்டு வைப்பதால், அவரிடம் சிக்கித்தான் மார்க்சியமோ கம்யூனிசமோ வளர வேண்டும் என நிர்ப்பந்தித்தால், நிச்சயம் அது ரயாகரனுக்கு மாத்திரமே புரியக்கூடிய ஒரு வகை ரயாகரனிசமாக வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்..
வினவு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். விமர்சனம் என்ற பெயரில் வினவிற்கு எடிட்டோரியல் பாலிசி ஒன்றை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மாபெரும் ஜனநாயக உணர்வோடு பலரும் முன்வந்து உள்ளார்கள். சக தோழர்கள் இன்னார் இன்னாருடன்தான் பேச வேண்டும் என முடிவு செய்ய தங்களுக்கு உரிமை இருப்பதாக இவர்கள் கருதிக் கொள்கிறார்கள். இவர்களிடம் வினவே இந்தப் பாடுபட்டால் ரதியை நினைத்துப் பார்த்தால் பாவமாகத்தான் உள்ளது..
வினவு மீதான விமர்சனம் என்று எப்படி ரயாகரனால் உருப்படியாக ஆதாரத்துடன் விமர்சிக்க முடியவில்லையோ அதே போல அவரைப் பற்றி நிற்பவர்களும் இருக்கிறார்கள். சுயவிமர்சனம் செய்யுமாறு இவர்கள் தங்களது பின்னூட்டங்களில் ரயாகரனை ஏன் கோரவில்லை.
ரதியை ஒரு கம்யூனிஸ்டு என்று வினவு அறிமுகப்படுத்தி உள்ளதா.. அல்லது நிறுவி உள்ளதா… இதற்கு உங்களிடம் ஆதாரம் உள்ளதா… தயவுசெய்து ஆதாரம் இல்லாமல் ரயாகரனைப் போலவே அவதூறுகளை அள்ளி வீசாதீர்கள்.. இதுதான் நீங்கள் ரயாகரனுடன் இணையும் புள்ளியா..
ரயா வறட்டுவாதி என்பதை வினவு சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.. நான்கு பாகம் எழுதியும் அதில் அரசியல் அபத்தங்களை மாத்திரமே எழுதி பொதுவான நபர்களுக்கும், மார்க்சியம்தான் வழியா எனத் தேட முனைபவர்களுக்கும் நுழைவாயிலிலே விரட்டுவதற்கு உகந்த முறையில் விளக்குவதும், வறட்டு சூத்திரம் போல புலிப்பாசிசம், வர்க்கத்தன்மையற்ற தமிழ்பாசிசம்.. என்று வாய்க்கு வந்த பார்முலாவுக்கெல்லாம் மார்க்சியம்னு பெயர் வைத்து ஊருக்கு விளம்புவது, வறட்டுவாதம் மட்டுமல்ல• மார்க்சியத்தை பூசையறைப் படமாக்கும் உத்தி.. கணித சூத்திரம் போல எல்லோரையும் கண்டு பயந்து ஓட வைக்கும் உத்தி.. இதற்கு உங்களது அகராதியில் வேறு எதாவது பெயர் உள்ளதா… ஆயிரம் கருத்துக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளட்டும் என்று பேசிய மாவோ போன்ற தோழர்களை நீங்கள் எல்லாம் வினவு போலத்தான் கருதுவீர்களா..
“ஜான் அவர்களுக்கு,
இரயாகரன் அவர்கள் ஈழம் சென்று புரட்சியை ஆரம்பிப்பாரா?”
இதற்கு எனக்கு நானே சுயவிமர்சனம் செய்துகொண்டு தோழர்.இரயாகரனிடம் வருத்தம் தெரிவித்துவிட்டேன். வினவு தளத்தில் அல்ல. மின்னஞ்சல் மூலமாக.அவரும் பதிலளிப்பு கொடுத்துவிட்டார். பிறகு நான் யோசித்தேன் இதை வினவு தளத்திலே கோரியிருக்கலாமே என்று. நான் யாருக்காகவும் மாறமாட்டேன் என்ற கொள்கையுடையவனல்ல. ஏன் யாருக்காகவும் நாம் மாற வேண்டும். நமக்காக நாம் மாறுவோம். மாற்றம் என்ற ஒன்றுதான் மாறாதது. அப்படித்தானே ந்ண்பரே. சரியான கருத்தின் பக்கம் நாம் சென்று ஒரு சரியான(மக்களுக்கான) அமைப்பினூடாக அணி திரள்வதுதானே சரி.
எனக்குத் தெரிந்த வரையில் தோழர்.இரயாவின் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாதவர்களும், அவரின் கடினமான எழுத்துக்களும், மக்களுக்கானதல்லாத எவற்றுடனும் சமரசம் கொள்ளாத மனப்பாங்குமே மற்றவர்களை இவரிடமிருந்து தள்ளி நிற்க வைக்கிறது என நினைக்கின்றேன். இது இவரின் தவறல்லவே.
பெரும்பாலும் தமிழகத்திலும்,புலம் பெயர் தமிழர்களிலும் புலி அபிமானிகளாக இருக்கின்றனர். இவர்களுக்கு தோழரின் கடுமையான புலியெதிர்ப்பு கட்டுரைகள் எரிச்சலைத் தருகிறது. இதுவும் அவரது தவறல்லவே. தோழரின்,”எம்மைச் சுற்றிய அரசியலில்,நாம் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் தோழருடன் ஒரு உரையாடல்,20வருடமாக தனி மனிதனாக தனித்து நின்று போராடியது என் தவறா?. ஆகிய கட்டுரைகளைப் ப்டித்து பாருங்கள்.
விவாதங்களை ஆழ்ந்து (!) கவனித்தும் சில விசயங்கள், விவாதங்கள் என் அறிவுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது.
இருப்பினும் இந்த விவாதத்தில் என் அறிவுக்குட்பட்டு என் கருத்தையும் பதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
ரயாகரன் தனது விமர்சனத்தை ஜனநாயக பூர்வமாக நடக்காதது தவறு. முதலில் பாசிஸ்ட். பிறகு ஆதாரங்கள் தருவது
என்பது எப்படி சரியாகும்?
ரயாகரன் அமைப்பில் இல்லாத தனிநபராக இருப்பதால்… பலரை வென்றெடுக்க வேண்டிய தேவையில்லாமல் இருக்கிறது.
அதனால் தான் புலி பாசிஸ்ட் என டுமீல்! டுமீல்! என போட்டுத் தாக்குகிறார்! வறட்டுத்தனத்தின் அடிப்படை வேர் இங்கு
இருப்பதாக படுகிறது எனக்கு1
ரதி எழுதட்டும்! அவர் சொன்ன விசயங்களிடமிருந்து நாம் விவாதிக்கலாம் என வினவு சொன்னது சரி என நினைக்கிறேன்.
சில சந்தேகங்கள், குழப்பங்கள் இருக்கின்றன. வினவு ரயாகரன் அவர்களுக்கு பதில் எழுதும் பொழுது புரிபடும் என நினைக்கிறென்.
வினவின் பதில்களுக்காக காத்திருக்கிறேன்.
ரதி மீண்டும் எழுத முன்வந்துள்ளார். நல்லது.
ரதிக்கு,
//இன்று என்னை எழுத சொல்லிய குற்றத்திற்காக அவர்களே அவர்களின் “தோழர்களின்” விமர்சனங்களுக்கு
ஆளாக நேரிட்டுவிட்டது. //
பொதுவுடைமை அமைப்பில் விவாதங்கள் சகஜமானது! அது தான் அடிப்படையும் கூட! அதிமுக வில் விவாதம் நடத்த
முடியாமா என்ன?
உங்களுக்கு இது புதிது. அதனால் தான், தோழர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்பதற்காகவே தோழர்களை அடைப்புக்
குறிக்குள் போட்டு எழுதுகிறீர்கள்.
இந்த தொடரை நீங்கள் எழுதி முடிக்கும் பொழுது, தொடர்ச்சியாக வினவு தளத்துடான தொடர்பில் உங்களிடத்தில் பல
மாறுதல்கள் ஏற்படும் என நினைக்கிறேன்.
பி.இரயாகரன் ஈழத்து கம்யூனிஸ்டாம். சிரிப்புச் சிரிப்பாய் வருகிறது. பி.இராயாகரனை எந்த முட்டாள் ஈழத்து கம்யூனிஸ்டாக ஏற்றுக் கொண்டது. அங்கே ஈழத்தில் உள்ள கம்யூனிஸ் வாதிகளிடம் பி. இராயாகரனை கேட்டுப்பாருங்கள். அப்போது பி.இராயாகரனின் கம்யூனிஸ்ச வேடம் தெரியும். நரித்தனமாக ஈழத்து கம்யூனிஸ்டுக்களோடு வினவுவை பகைக்க வைக்க பி.இராயாகரன் கபட நாடகம் ஆடுகின்றார். வினவு கவனமாக தெளிவாக இருக்கவேண்டும். பி.இராயாகரன் என்ற வரட்டுவாதியோடு முரண்பாடே ஒழிய ஈழத்து கம்யூனிஸ்டுக்கள் நட்பு சக்திகள் என்பதை நாம் புரியவைக்கவேண்டும். ஒருபக்கத்தில் வரட்டுவாதி பி.இராயாகரனோடு வினவு வைத்திருக்கும் உறவு ஆபத்தானது. புலிகளோடு எப்படி சனநாயக வாதி உறவு வைத்திரக்க முடியாதோ அதைவிட ஆபத்தானது பி;இராயாகரனுடனான உறவு.
போகிற போக்கில் உளறாதீர்கள். உங்கள் வாதப்படி ஈழத்து கம்யூனிஸ்ட் ராயாவை கம்யூனிஸ்ட் இல்லையென்று சொல்லிவிட்டால், அவர் கம்யூனிஸ்ட் இல்லாது போய்விடுவாரா!
ஜான்,
வியப்பாக இருக்கிறது. கட்டுரையாளரையும் தோழரையும் சமமாக பார்ப்பது.
எனக்கு தமிழரங்கம், இரயாகரன் அறிமுகமானது மிக அண்மைக்காலங்களில் தான். அவரின் பதில்களை வினவு தளத்தில் படித்ததோடு சரி. மிகவும் கரடு, முரடான வார்த்தைகளாக இருக்கிறதே என்று அவரின் தளத்தில் நான் எந்தவொரு கட்டுரையையும் படித்ததில்லை. இப்பொழுது கூட என்னைப்பற்றி அவர் தளத்தில் எழுதிய எந்தவொரு விமர்சனத்தையும் இதுவரை நான் படிக்கவில்லை. படிக்கவேண்டும் என்று கூட எனக்கு தோன்றவில்லை.
இது கட்டுரையாளரின் கூற்று. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
சரி நண்பரே வினவின் பதில் வரட்டும். காத்திருப்போம்.
நன்றி!
தோழமையுடன்,
அஸ்கர்
நொந்தகுமாரன் புலிகள் அமைப்பில் கேள்வி கேட்பது, விவாதம் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனால் தான் ரதிக்கும் இது “புதிது.” தலைவன் சொன்னால் செய் அல்லது செத்துமடி என்று தலைமையின் மேலே அடிமையின் விசுவாசத்தைக் கோருவது பாசிசமில்லையா? புலிகள் அமைப்பில் ஜனநாயகம் இருந்ததா? தலைமையை எதிர்த்து கேள்வி கேட்டவர்களை விவாதம் செய்தவர்களை சுட்டுக் கொன்றது வரலாறு.
வினவுக்கும், ரயாகரனுக்கும் இடையில் பிரிவை உருவாக்கியதன் மூலம் ரதி தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார். கடந்த காலத்தில் புலிகளும் இப்படிச் செய்து தான் ஈழத்தமிழரின் ஏகபிரதிநிதிகள் ஆனார்கள். இது
பாசிசமில்லை
என்றால் வேறு
எப்படி அழைப்பீர்கள்?
//இந்தப் பாசிசத்தின் மூடுமந்திரத்தை அப்பாவித்தனமானதாக காட்டிவிட
“ரதி ஒரு புலி அபிமானி என்பது எங்களுக்கோ வினவின் வாசகர்களுக்கோ தெரியாதது அல்ல”
என்று கூறி வினவு பாசிசத்துக்கு சுயவிளக்கம் அளிக்கின்து. அந்தப் பாசிசப் புலியோ, புலி மீது “மதிப்பும் மரியாதையும்” உண்டு என்று கூறி புலிப் பாசிசத்துக்கு ஆரத்தி எடுக்கின்றார். அவரின் புலித்தனம் அம்பலமாகாமல் இருக்க, வினவு உதவியது. அதைத்தான் அவர் “வினவுகுழு என்னை தேவையற்ற விமர்சனங்களிலிருந்து காத்திருக்கிறார்கள்” என்று நன்றியுடன் கூறுகின்றார். அவர் தன் பாசிச மொழியில் உறுமும் போது “தமிழீழத்தின் இன்றைய நிலைக்கு சில இனத்துரோகிகளும், “இழிபிறப்புகளும்” தான் காரணம். அதை சொல்ல துப்பில்லாத நீர், வறட்டுவாதம் பேசுபவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீர், …” என்கின்றது. இப்படித்தான் புலி, “இனத்துரோகிகளும், “இழிபிறப்புகளும்” ” என்று கூறி, ஆயிரம் ஆயிரம் பேரை போட்டுத்தள்ளியது. இப்படி வினவு மட்டும் எம்மை வரட்டுவாதி என்று கூறவில்லை, புலி ரதியும் தான் கூறுகின்றார். அரசியல் ரீதியாக ஒரு புள்ளியில் சந்திக்க முனைகின்றனர்.
“வினவுகுழு என்னை தேவையற்ற விமர்சனங்களிலிருந்து காத்திருக்கிறார்கள்” என்று ரதி கூறுவது உண்மை. எமது விமர்சனங்கள் மேல் உடனுக்குடன் பதிலளித்து அதை தடுத்து நிறுத்தியவர், ரதியின் பாசிச வரலாற்று திரிபுகள் மேல் அவ்வாறு எதிர்வினையாற்றவில்லை. எப்படி ஆற்றுவார். அதுதான் கூறுகின்றார் “புலிகளின் பாசிச நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர் எதையும் எழுதவில்லை.” என்று. //
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6181:-q-q-5&catid=277:2009
ரதி ஒரு பாசிஸ்ட் என்பதற்கு அவரே தரும் ஆதாரங்கள். //இப்பொழுது கூட என்னைப்பற்றி அவர் தளத்தில் எழுதிய எந்தவொரு விமர்சனத்தையும் இதுவரை நான் படிக்கவில்லை. படிக்கவேண்டும் என்று கூட எனக்கு தோன்றவில்லை.//
//இதை நான் யாருக்காகவும், எதற்காகவும் மாற்றிக்கொள்ள தயாராகவில்லை. இந்த நிலையிலிருந்து என்னை யாரும் கங்கணம் கட்டிக்கொண்டு மாற்றவேண்டும் என்று நினைக்கவும் இடமளிக்கப்போவதில்லை.//
இவற்றை விட இன்னும் நிறைய உண்டு. புலிகள் மாற்று இயக்கங்களை சேர்ந்த சொந்த சகோதரர்களையே படுகொலை செய்தார்கள். சிங்கள கிராமங்களில் புகுந்து காடைத்தனமாக பெண்கள், குழந்தைகள் என்றும் பாராது இனப்படுகொலை செய்தார்கள். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்தார்கள். இதற்குப் பெயர் பாசிசம் இல்லையா? ரதி இதயெல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கிறார். அவர் ஒரு பாசிஸ்ட் இல்லையா? இன்று ரதிக்காக பரிந்து பேசுபவர்கள் நாளை ஹிட்லர் ஒரு பாசிஸ்ட் இல்லை என்றும் சொல்வார்கள்.
ரயாகரன் தவறான அரசியல் நிலைப்பாட்டில் ஊன்றி நின்றால் கூட அவரை ஆதரிக்க வேண்டும் என தனது அணிகளுக்கு ஒரு மா.லெனிய அமைப்பு சொல்ல முடியுமா.. சொல்லி இருக்கின்றார்களா.. உடன் இருக்கும் தோழருடனும் கூட உறவைத் தீர்மானிப்பது எது.. அமைப்பின் கருத்தை அனைவரும் பற்றி நின்றார்கள் என்று சொல்வதன் மூலம் அமைப்பு சொல்லாத ஒன்றை சொன்னதாக நீங்கள் பிரச்சாரம் செய்கின்றீர்கள்.. இது சரியா.. ரயாகரன் சொல்வதை விமர்சனம் இல்லாமல் ஆதரிக்க வேண்டும் என அமைப்பு எப்போதுமே சொன்னதாகத் தெரியவில்லை. ஆதாரம் தந்தால் என்னை வேறு அமைப்பிற்கு இடம்பெயர்த்துக் கொள்கிறேன்.
குட்டிமுதலாளிய மனோபாவம் பற்றி சொல்லி இருந்தீர்கள்.. என்னுடைய குட்டிமுதலாளிய பண்பு நீங்கள் சொல்வதில் இல்லை. மாறாக எனது முடிவை முதலில் சொல்லிவிட்டு அதற்கு வந்தடைந்த முறையை தர்க்கரீதியாக நிறுவ வேண்டியதை செய்யாமல் அந்தரத்தில் தொங்க விட்ட கருத்தில் இருக்கிறது.
நான் மக்களையோ தோழர்களையோ மந்தைகள் எனக் கருதுபவன் அல்ல• அந்த மனோபாவம் நான் தமிழினவாதத்தில் சிக்கி இருந்தபோது இருந்தது. நான் மார்க்சியத்தை சாகும்வரை கற்கவும் அதனை சமூகம் எனும் சோதனைச்சாலையில் (என்னையும் உள்ளடக்கிய) பயன்படுத்தவும் முடிவுசெய்த பிறகு, அந்தப் பண்பு என்னிடமிருந்து விடைபெற துவங்கியது. அதுவும் நான் சாகும்வரையிலும் எனக்குள் நான் நடத்த வேண்டிய போராட்டத்தில்தான் இருக்கிறது. அதற்கு புறச்சூழலும் உதவும்.
அமைப்பின் கருத்துக்காக காத்திருக்கும் தோழர்கள் இருவகையினர். ஒருவர் மாணவரின் வேலையை செய்கிறார். மற்றவர் தம்மை அறிவாளி எனக் கருதிக் கொள்ளும் மாணவர். கொஞ்சம் வாத்தியார் அசந்து போனால் அவருக்கே பாடம் எடுக்கவும் தகுதியானவராக தன்னைக் கருதிக் கொள்பவர். வாழ்வியலுக்கு உதவும் பலவற்றையும் கற்றுக் கொள்ளத் தெரிந்த ஆற்றலுள்ள இவர்கள், மார்க்சியம் கற்பது என்றால் மாத்திரம் அமைப்பு சொல்லட்டும் என்பார்கள். இவர்களும், கல்விமறுக்கப்பட்ட ஒரு ஆலைத்தொழிலாளியும் ஒருவகையினர் அல்ல•
தங்களுக்குள் குறுங்குழுக்களை அமைத்துக் கொண்டு தங்களுக்குள் ஒரு அறிவாளியை தேர்வு செய்கிறார்கள். அவர்தான் ரயாகரன் என்றும், அவரை தேர்வுசெய்தவர்கள்தான் அவரை கண்ணைமூடி ஆதரிப்பவர்கள் என்பதை தெரிந்துகொள்ள, அனைவரின் விவாதத்திலும் காணப்படும் உள்ளடக்கமின்மை உதவக்கூடும். யாராவது விவாதத்தை துவக்கிவைத்தால் உடனடியாக தமது கருத்துக்களை வெளிப்படையாக வைக்க மாட்டார்கள். யாராவது பதில் சொல்ல வந்தால் கூடச் சேர்ந்துகொண்டு கும்மி அடிப்பார்கள்.
நீங்கள் அவர்களை விமர்சனம் செய்தால் அவர்களது கல்வித்தகுதியை உங்களுக்கு முன்னால் உயர்த்திக் காட்டுவார்கள். மற்ற நடுத்தரவர்க்க நபர்கள் இழக்க விரும்பாததை இழந்ததற்கு எனக்கு இதுவும் தேவைதான் இன்னுமும் தேவைதான் என்பார்கள். அலுவலகத்தில் யாராவது அவர்களது அறிவை கேள்வி கேட்டால் தாங்கள் மார்க்சிய ஐடி கார்டு வைத்திருப்பவர் மாத்திரம்தான் என்பதை சொல்லாமல் தன்னை மார்க்சிய அறிஞர் போலக் காட்டிக் கொள்வார்.
இந்த மனோபாவம் எந்த வர்க்கத்திற்கானது என போராட்டம் முடிவு செய்து கொள்ளலாம்..
அப்படி ஒரு ஆலைத் தொழிலாளி நடந்துகொள்ள மாட்டார். அவர் தன்னை மார்க்சியத்தின் எளிய மாணவர் என்று ஒத்துக் கொள்வார். அது இதயத்தில் இருந்து வருவதால் ஒருவேளை இணையமும், வலைப்பூவில் விவாதிக்கின்ற வாய்ப்பும் கிடைத்தால், தனது கருத்துக்களை அது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் அல்லது தவறாக இருந்தாலும் முன்வைப்பார். தவறு என காரணகாரியங்களுடன் விளக்கினால் புரிந்து கொள்ள முயற்சிப்பார். புரியவில்லை என்றால் கூட அதனை வெளிப்படையாகச் சொல்வார். புரிந்து கொண்டால் தான் எவ்வாறு மடையானாக இருந்தேன் என்று கூட தன்னைப்பற்றிச் சுயவிமர்சனமாக முனவந்து சொல்வார். மார்க்சியத்தின் உயிர்த்துடிப்பான மாணவர்கள் இவர்கள்தான். தங்களது கருத்தின் பாமரத்தனத்தால்
தமது பாமரத்தனம் வெளிவந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக இந்த விவாத்த்திற்கு மாத்திரம் தமது பெயர்களை பலவாறு மாற்றத் தெரியாதவர்கள். ஒரு அறிவாளியின் அறிவை விடவும் எனக்கு இந்த மாணவர்களின் நேர்மையிடம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது.
இதற்கு மேலும் தமது கருத்துக்களை முன்வைத்து நேர்மையாக விவாதிக்க வராத ரயாகரனையும், அவரை உள்ளடக்கமில்லாமல் ஆதரிப்பதுதான் அமைப்பின் கருத்து என்றும் நீங்கள் கருதினால், அல்லது அதுதான் அமைப்பின் முடிவு என்றால் எந்த அமைப்பு பாட்டாளிவர்க்கம் தலைமையேற்று நடத்தும் புதிய ஜனநாயகப் புரட்சியை செய்யுமோ அந்த அமைப்புக்கு போவதுதான் சாலச்சிறந்த்து என்று கருதுகிறேன்.
இத்தகைய நடுத்தரவர்க்க வறட்டுவாதிகளின் பிச்சையில்தான் விதர்பா விவசாயிகளின் தற்கொலை முடிவுக்கு வருமென்றால், ஒரு விவசாயியின் மகன் என்பதால் உங்களுடைய பிச்சையிடலைத் தடுப்பதுதான் எனது முதல் பணி..
//இதற்கு மேலும் தமது கருத்துக்களை முன்வைத்து நேர்மையாக விவாதிக்க வராத ரயாகரனையும், அவரை உள்ளடக்கமில்லாமல் ஆதரிப்பதுதான் அமைப்பின் கருத்து என்றும் நீங்கள் கருதினால், அல்லது அதுதான் அமைப்பின் முடிவு என்றால்//
//இப்படி கருதுவதற்கு போராட்டம் தான் அமைப்பை பற்றி நிற்பதாகச் சொன்னதும் உதவுகிறது.//
//ரயாகரன் தவறான அரசியல் நிலைப்பாட்டில் ஊன்றி நின்றால் கூட அவரை ஆதரிக்க வேண்டும் என தனது அணிகளுக்கு ஒரு மா.லெனிய அமைப்பு சொல்ல முடியுமா.. சொல்லி இருக்கின்றார்களா.. உடன் இருக்கும் தோழருடனும் கூட உறவைத் தீர்மானிப்பது எது.. அமைப்பின் கருத்தை அனைவரும் பற்றி நின்றார்கள் என்று சொல்வதன் மூலம் அமைப்பு சொல்லாத ஒன்றை சொன்னதாக நீங்கள் பிரச்சாரம் செய்கின்றீர்கள்..//
மறுபடியும் நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறீர்கள். அதன் விளைவாக எனது கருத்துக்களை தொகுத்துப் பார்க்காமலும், நான் சொல்வதற்கு நீங்களாக ஒரு அர்த்தம் கற்பித்துக் கொண்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இரயாகரன் கருத்தை ஆதரிப்பவர்களெல்லாம், அமைப்புக் கருத்தை பற்றி நிற்பவர்கள் என்று நான் எங்கே சொல்லியிருக்கிறேன்? இதனை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.
தங்களது முந்தைய பின்னூட்டத்தில் கீழ்க்காணும் நீண்ட ‘ஆராய்ச்சி’ முடிவை நீங்கள் வெளியிட்டிருந்தீர்கள்.
//இணையம் வருவதற்கு இடமில்லாத முற்காலத்தில் இவர்கள் இன்றைய பிரச்சினையைப் பற்றி பொதுவான ஒரு நபர் கருத்து கேட்டால் ஒன்னாம் தேதி வரைக்கும் பதில் சொல்ல மாட்டார். அந்த மாதம் பு.ஜவில் பார்த்த பிறகு பதில் சொல்வார். அது குறித்த கட்டுரை வராவிடில் வந்த கட்டுரைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டி நீங்கள் சொல்வதெல்லாம் ஒரு பிரச்சினையா என்பார்.. இது செங்கொடியை ஏந்திக் கொண்டே அதற்கு எதிராக பார்க்கும் வேலை இல்லையா..
தங்களையும் இவர்கள் நேசிப்பதால், தங்களையும் கம்யூனிஸ்டுகள் என்றே கருதிக் கொள்கிறார்கள். தங்களது ஐயங்களை இதற்கிடையில் மாத்திரம்தான் ஏதாவது மேசையாக்கள் வந்து தீர்க்க வேண்டும் என்று கருதுபவர்கள் இவர்கள்.. இந்த விவாத்த்தில் கூட ஒரு இத்தகைய நபர் கேட்டிருந்தார். வறட்டுவாதம் வரையறு என்று.. இப்படி கேள்வி கேட்பதுதான் வறட்டுவாதம் என்று எளிமையாக சொல்லியிருக்கலாம். அத்தகைய மேசையா வேலை பார்த்தால் அது இந்தியப் புரட்சிக்கு செய்யும் மாமா வேலை என்று எனக்கு தெரிந்த்தால் அமைதியாக இருக்கிறேன்.//
இந்த ‘ஆராய்ச்சி’ முடிவிற்குத் தான், “தான் மட்டுமே எல்லாம் அறிந்த மேதாவி, அமைப்புக் கருத்தை பற்றி நிற்பவர்களெல்லாம் மடையர்கள் என்ற தோரணையில் அவர் எழுதிய கருத்துக்கு” என நான் பதிலளித்தேன். “அமைப்பின் கருத்துக்காக காத்திருக்கும் தோழர்கள் இருவகையினர். ஒருவர் மாணவரின் வேலையை செய்கிறார். மற்றவர் தம்மை அறிவாளி எனக் கருதிக் கொள்ளும் மாணவர்.” எனத் தொடங்கி இந்தப் பின்னூட்டத்திலும், இந்த விவாதத்தின் மையப் பொருளுக்கு தொடர்பே இல்லாமல், மீண்டும் மீண்டும் அதீத விளக்கங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.
இதிலிருந்து இரு விசயங்கள்தான் எனக்குப் படுகிறது. ஒன்று, யாரோ சில நபர்களை மனதில் கொண்டு, அந்த வன்மத்தோடு உங்கள் கருத்தில் மாறுபடும் அனைவரும் அவர்களே என முடிவு செய்து தாக்குகிறீர்கள். இரண்டு, நான் எனது கருத்தில் மிகச் சுருக்கமாகவும், தெளிவாகவும் இரயாகரனின் எந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு, எந்தக் கருத்தில், அவரது தொடர்ச்சியான அணுகுமுறைகளில் எனக்கு உடன்பாடு இல்லை எனத் தெளிவாகச் சொன்ன பின்னரும், அதனைப் பரிசீலிக்கவே மறுக்கிறீர்கள். அதற்கு மாறாக, இரயாகரனை முழுமுற்றாக நிராகரிக்க வேண்டும். இல்லையேல் நீங்கள் வறட்டுவாதி, கம்யூனிஸ்டாக தன்னைத் தானே கருதிக் கொள்பவர் எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகிறீர்கள். இது புலி எதிர்ப்பு அரசியலை ரதி பேச வேண்டும், இல்லையேல் அவர் பாசிஸ்டு என இரயாகரன் சொன்னதற்கு இணையானது என்பதை நான் முன்னரும் சொல்லியிருக்கிறேன்.
நீங்கள் நான் இரயாகரன் கருத்தோடு உடன்படும் புள்ளி என்று சொன்ன கருத்துக்கு பதிலளிக்கலாம், அதை நீங்கள் ஆதரிக்க வேண்டியதில்லை. ஆனால், இரயாகரனின் கருத்தில் ஒரு சரியான அம்சம் மட்டும் உள்ளது என நான் கருதுவது ஏதோ விமர்சனமற்ற முழுமுற்றான ஆதரவு என நீங்களாக முடிவு செய்து கொண்டு இரயாகரனின் அடிப்பொடிகள் என்றெல்லாம் ஏகவசனத்தில் பேசிக் கொண்டே செல்கிறீர்கள். தயவு செய்து நிதானமாக தங்கள் கருத்துக்களையும், எனது கருத்துக்களையும் அதன் முழுமையில் மறுபரிசீலனை செய்யுங்கள்.
குறிப்பிட்ட விசயத்தில், தோழர் இரயாகரனின் தவறான கருத்துக்கள், தவறான நடைமுறை குறித்து விமர்சனம் செய்கிற அதே நிலையில், அவரை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவும், கொச்சைப்படுத்தவுமான போக்கில் நீங்கள் அவர் செய்யும் அதே தவறை செய்கிறீர்கள். நோக்கம், தேவை என்ற எல்லைகளைத் தாண்டி விமர்சனத்தை இழுத்துச் செல்கிறீர்கள். இது நீங்கள் மட்டுமல்ல, வேறு சில தோழர்களும் இதனைச் செய்வதாக நான் கருதுகிறேன். இன்னும் தெளிவாக சொன்னால், இந்த விவாதத்தை தோழர் இரயாகரன் மீதான் வெறுப்பை கொட்டித் தீர்ப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்துகிற போக்குதான் வெளிப்படுகிறது. அதனால்தான், குறிப்பிட்ட விவாதப் பொருளை விட்டு விட்டு, இரயாகரன் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளை அள்ளித் தெளிக்கிற நிகழ்வாக இதனைக் கருதிக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு நானும், தோழர் ஏகலைவன், கலகம் போன்றோர்(குறிப்பிட்ட அளவில்) உடன்பட மறுப்பதால் எங்களுக்கும் வறட்டுவாதிகள் என முத்திரை குத்துகிறீர்கள். இது ஒரு தவறான, சீர்குலைவுப் போக்கு என்பதாகவே நான் கருதுகிறேன்.
நான் நொந்தகுமாரன்,போராட்டம் உங்கள் வாதத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
தோழர் போராட்டத்தினுடைய கருத்தை நான் ஏற்கிறேன்.
மணி என்பவரின் விமர்சனங்கள் பெரும்பாலும் சரியானதாக
இருப்பினும் தனி நபர் தாக்குதலை போன்று உள்ளது.
அவர் எள்ளல் என்று எண்ணி இடும் பின்ணூட்டங்கள் அனைத்தும்
அபத்தம்.விமர்சனம் தோழர் ரயாவை நேர்வழிக்கு கொண்டு வருவதற்கு உதவ வேண்டும்.விமர்சனம் கடுமையுடன் இருக்கக்கூடாது என்பதல்ல என் கருத்து,வெறுப்புடன் இருக்கக்கூடாது என்பது தான்.
ரயாகரனை வறட்டுவாதி என்று சொல்கிற மணி
ரயாகரனை விட பெரிய வறட்டு வாதியாய் இருப்பார்
போல் இருக்கிறது.
அவருடைய விளக்கங்கள் ஒவ்வொன்றையும் தாங்க
முடியலடா சாமி
உங்களுக்கும் ரயாகரனுக்கும் என்ன வாய்க்கால் பிரச்சனையா
அவரை இவ்வளவு வெறுப்புடன் தாக்குகிறீர்கள் ?
அரசியல் வாதங்களுக்கு பதிலளிக்க முடியாத போது எதுவும் முடியாமல் தான் போகும்… ம் என்ன செய்வது இரயாவும் இப்படித்தான் புலம்புகிறார்…. மொத்தத்தில் கணுக்கால் உயரத்துக்கு இரயாபிமானிகளின் கண்ணீர் ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது… அதில் அரசியல் முங்கி, மூச்சடைத்து மரணிக்கும் நேரத்தை எதிர்நோக்கியிருக்கிறது…
இந்த விவாதத்தில் ”புலி” பிரச்சனையை தான்டி புதியதாக எதிர்கருத்து வரும் வரை எனக்கும் புதியதாக சொல்ல எதுவும் இல்லை. தோழர் கேள்விக்குறியின் (?) கருத்துக்களுக்கு மாற்றுகருத்தை விரிவாக எழுதி பதில் எழுதும் வேலையிலிருந்து என்னை விடுதலை செய்த தோழர்கள் பிரபாவதி மற்றும் மணி அவர்களுக்கு எனது நன்றிகள்
என்னை நான் அறிவாளி என்று கருதுவதாக நண்பர் சனி கூறியுள்ளார். தன்னை மார்க்சிய லெனிய அமைப்பினை விட அறிவாளி எனக் கருதிக் கொள்ளும் அதி மேதாவி ரயாகரனுக்காக வக்கலாத்து வாங்குகின்றீர்கள் நீங்கள்.. இதனை அவரது ஐந்து கட்டுரைகளையும் படித்தாலே புரிந்து கொள்ளலாம்.
நான்கு பாகம் வரையிலும் தான் ஒரு கம்யூனிஸ்டு என்று நம்பிய ரயாகரனே தற்போதையை 5 வது கட்டுரையில் அதுபற்றிய இந்திய தோழர்களின் கருத்தை அறிய விரும்பி உள்ளார். ஆனால் அமைப்பிற்கு பதிலாக அவரைத் தூக்கிப் பிடிப்பவர்களோ அவரைத்தான் தோழர் என்றும் உண்மையான அமைப்பு அவர்தான் என்றும் கருதுகின்றீர்கள்.
இப்படி கருதுவதற்கு போராட்டம் தான் அமைப்பை பற்றி நிற்பதாகச் சொன்னதும் உதவுகிறது. தனது மேதமைத்தனத்தைப் பயன்படுத்தி ரயாகரனுக்கு ஆள் சேர்க்கிறார் இவர். இவரிடம் போய் உங்களது பஞ்சாயத்தை வைத்திருக்கின்றீர்கள்.. தெளிவுபடுத்த வேண்டியது போராட்டம் மற்றும் அவரது அனுதாபத்திற்குரிய மார்க்சிய ஆசான் ரயாகரன்தான்..
ஏன் ஏன் இப்படி? மேதமைத்தனம், அது இதுன்னு நிறைய எழுதுறீங்க! போராட்டம்! போராட்டம் ன்னு சொல்றீங்க! அவர் வந்து பதில் சொல்லட்டும். அதுவரை பொறுங்க!
உங்களுடைய பின்னூட்டங்களை படிக்கும்போது, உங்களை நீங்களே அறிவாளியாக சித்தரித்து எழுதுவதுபோல் தான் தெரிகிறது.
முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் மகஇக வின் முழக்கங்களே பிராதானமாக அனைவராலும் முழங்கப்பட்டது.
வலைப்பூவில் எழுதுவது பற்றியெல்லாம் தெரிந்திருப்பவர்கள் நிச்சயமாக கொஞ்சமாவது பெரிய படிப்பு படித்தவர்கள்தான். படிக்கத் தெரியாத அப்பாவிகள் அல்ல•. எனவே உங்களை பாமர்ர்கள் என்று தாழ்த்திக்கொள்வது உங்களது துரோகத்தை மறைப்பதுதான்.. அதுனாலதான் சொல்றன்.. இதை ஒரு படிக்காத நபர் பேசலாம்.. நீங்க பேச முடியாது..
ஒரு சாப்ட்ட்வேர் படிச்சாதான் வேலை இருக்கும்னு முதலாளி சொன்னா படிக்கிறீங்கள்லா.. புரியாட்டி கூட எங்க போனா வேலைக்கு ஆகும்னு தேடிப் போய் படிக்கிறீங்கள்ல்லா.. பொதுமக்களுக்கான விடுதலைக்கான மாஃர்க்சியத்த மட்டும் படிக்க மாட்டீங்க•. எப்போ பாத்தாலும் அமைப்பில இருந்து வந்து ஊட்டி விடணுமாக்கும்..
இது சொம்பேறித்தனம்.. இப்படி பொது விசய்ம்கிறதுக்காக உழைக்காமல் இருப்பது ஒருவகையில் நடுத்தரவர்க்க நடைமுறைதான்.. உங்களுடைய சோம்பேறித்தனம் தன்னை லெனினை விடப் பெரியவர் எனக் கருதிக் கொள்ளும் ரயாகரனின் பக்கம் உங்களை சேர்த்துள்ளது. இல்ல நாங்கள் பாமர்ர்கள் என்று நீங்கள் சொன்னால் அது உங்களது சோம்பலை மறைக்க முயற்சிப்பதுதான்.
ஒரு சந்தேகம்.. இத்தகைய நடுத்தரவர்க்க சோம்பேறித்தனத்தை கொஞ்சம் உற்றுப் பாருங்கள் சகிக்கவில்லை. மக்களது வரிப்பணத்தில் படித்து கணிணி சம்பந்தப்பட வேலைக்கு வந்து நன்றாக சம்பாதிப்பவர்களான நீங்களே சோம்பேறியாக இருந்தால் உங்களுக்கு உறுத்தலாக இல்லையா..
தயவுசெய்து உங்களது சோம்பேறித்தனத்தால் சித்தாந்தப்பூர்வமான விவாத்த்தில் பங்கேற்க முடியாமல் இருந்து விட்டு கல்வி மறுக்கப்பட்ட இந்த நாட்டின் கோடானு கோடி மக்களது இயலாமையோடு உங்களது சோம்பேறித்தனத்தை ஒன்றுபடுத்தி கேவலப்படுத்தாதீர்கள்..
1. நண்பர் ரதியை யாரும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எழுதவதை நிறுத்த சொல்லவில்லை என்பது தெளிவு. அவர் மீண்டும் எழுத பரிசீலனை செய்து இருப்பது வரவேற்க தக்கது.
2. நண்பர் ரதி எழுதும் அவரின் நினைவுகளை நாம் ஒரு தனிப்பட்ட நபரின் நினைவுகளாக மட்டும் கருதுகிறோமா..? நான் அவரின் நினைவுகளின் மூலம் ஈழ மக்களின் துயரைத்தான் காண முற்படுகிறேன். ஒரு சமூகத்தின் வலிகளை அவரின் எழுத்துக்கள் பிரதிபலிக்க வேண்டும் என நான் தனிப்பட்ட முறையில் எதிபார்க்கிறேன். நண்பர் ரதியின் கடைசி கட்டுரையின் போது ஒரு பெண் புலி போராளியின் உடலின் மீது ஏவப்பட்ட வன்முறையானது ஒரு சமூகத்தின் மீது ஏவப்படும் வன்முறையை குறிக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர். அதே நோக்கில் தான் நான் நண்பர் ரதியின் நினைவுகளை ஒரு சமூகத்தின் நினைவுகளாகவே கருதுகிறேன்.
3. தோழர் ராயகரன் இரண்டு விடயங்களை வேறு மாதிரி செய்து இருக்கலாம் என்பது என் கருத்து…
அவர் நண்பர் ரதியின் எழுத்துக்களின் மீதான விமர்சனங்களையும், வினவின் மீதான விமர்சனங்களையும் தனியாக செய்து இருக்கலாம். இந்த தளத்தில் நண்பர் ரதியின் கட்டுரையின் மீதான விவாதம் நடந்து இருந்தால் , தோழர் ராயகரன் கேள்விகளுக்கு , நண்பர் ரதியை பதில் சொல்ல கடமைப்பட்டவராக ஆக்கி இருக்கலாம்.
இரண்டாவது, நண்பர் ரதியை , பாசிஸ்ட் என தோழரின் முடிவை அறிவித்து விட்டு பின்பு அந்த முடிவுக்கு வந்ததன் காரணங்களை விளக்கியதை சற்று மாற்றி செய்து இருக்கலாம்.
4. நண்பர் ரதி இந்த தளத்தில் அவரின் கட்டுரைகளின் மீதான கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமை பட்டவராக உள்ளார். அவர் வேறு தளத்தில் அவரின் மீதான வைக்கப் படும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல் விடுவது அவரின் சுதந்திரம் என கருதுகிறேன்.
5. வினவு, நண்பர் ரதியின் கட்டுரையில் அறிமுகத்தில் எவ்வளவுதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஈழத்தின் கடமைகளை ஆற்ற நமக்கு இந்த கட்டுரைகள் உதவும் என சொல்லி இருந்தது. ஈழத்திற்காக நாம் இன்று ஆற்ற வேண்டிய கடமைகள்தான் என்ன…
பகத்…
எப்படி ஒரு தனிநபரின் மன உணர்வுகளை சமூக உணர்வாகவே கருதுகின்றீர்கள்..
ரதியின் எழுத்துக்கு அவரை எப்படி விளக்கமளிக்க வைப்பது என்று ரயாகரனுக்கு ஐடியா கொடுக்கும் தாங்கள் அவர் பற்றிய எனது விமர்சனங்களுக்கு இதுவரை பதில் சொல்லவில்லையே… ஒருவேளை அவரது தரத்தில் இருப்பவர்களுடன் மாத்திரம்தான் விவாதிப்பாரா.. அந்த அளவுக்கு ஜனநாயகவாதியா… இதனை அவருக்கு எடுத்துரைக்காத உங்களது ஜனநாயக உணர்வு எப்படிப்பட்டது…
முதல்ல பாசிஸ்டு சொன்னத கொஞ்சம் மாத்தி சொல்லிருக்கலாம் அப்படின்னு நீங்க நினைத்தால், இராக்ல ரசாயன ஆயுதம் னு சொல்லி முடிவ முதல்லயே சொல்லி போர் தொடுத்த புஷ் கூட கொஞ்சம் மாத்தி செஞ்சிருந்தா அவரும் ஒரு கம்யூனிஸ்டு அப்படின்னு ஏத்துக்குவீங்களா..
ரதியின் கடமை பற்றிப் பேசும் தாங்கள், அவர்பற்றி கட்டுரை வந்து 120 பின்னூட்டங்கள் வந்தபிறகும் வராமல் இருக்கும் கடமையை ஒரு வார்த்தை கூட சுட்டிக் காட்ட மாட்டீர்களா.. ரதிக்கு ஒரு நியாயம் ரயாகனுக்கு ஒரு நியாயமா…
ஈழத்துக்கு வினவின் கடமை என்ன என்று கேட்டீர்களே.. தன்னை ஈழத்து கம்யூனிஸ்டு என்று சொல்லிக் கொள்ளும் ரயாகரனிடம் அவரது கட்சியின் தற்போதைய திட்டம் என்ன என்று விளக்க சொல்லுங்கள் அதற்கு பிறகு பேசலாம்…
மணி, தனி நபரின் மன உணர்வுகளில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள அல்லது அறிந்து கொள்ள நினைப்பது என்ன? அவரின் சொந்த வாழ்வின் வழிகளை அறிந்து கொள்வதன் மூலம், நீங்களும் நானும் அவரின் வாழ்வின் நிலை கண்டு பரிதாப உணர்வு கொள்ளப்போகிறோமா? அல்லது, ஈழ போராட்டத்தின் பின்னடைவிற்கான காரணங்களை, கடந்த கால தவறுகளை, மக்களுக்கு எடுத்து உரைப்பத்தின் மூலம் சரியான அரசியல் பாதையில் அவர்களை ஒன்றிணைக்க போகிறோமா?
அவரின் தனிப்பட்ட வாழ்வின் துயரை, நினைவுகளை முற்போக்கு தளத்தில் அவர் எழுதுவதின் மூலம் வாசகர்களுக்கு வினவும், கட்டுரையாளரும் கொடுக்க விரும்பும் செய்தி என்ன..? இந்தக் கட்டுரை ஈழத்தின் கடமைகளை ஆற்ற உதவும் என்றால் அந்த கடமைகள்தான் என்ன ?
நண்பர் ரதி அவரை பற்றிய வேறு தளங்களில் வரும் விமர்சனங்களுக்கு அவர் பதில் அளிப்பதும், அதனை நிராகரிப்பதும் அவரின் சுதந்திரம். அதே விதி தோழர் ராயகரனுக்கும் பொருந்தும். இங்கு அவரின் மீதான விமர்சனங்களுக்கு அவர் பதில் அளிப்பதும் , நிராகரிப்பதும் அவரின் சுதந்திரம்.
தோழர் ராயகரன், பாசிஸ்ட் என நண்பர் ரதியை முதலில் அறிவித்து பிறகு விளக்கம் கூறுவது, தவறு என்றே நினைக்கிறேன்.
மக்கள் கலை இலக்கியக் கழகம் சில மாதங்களுக்கு முன் ஈழம் பற்றி மூன்று வெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளது. அதில் சொல்லப்பட்டுள்ள வரலாறு குறைபாடு உள்ளதா.. அதன் அரசியல் விளக்கம் குறைபாடு உள்ளதா…புலிகளின் கடந்தகால்த் தவறுகளும், பின்னடைவிற்கான காரணங்களும் அதில் எடுத்து சொல்லப்பட்டது உங்களுக்கு புரியாமல் இருந்த்தா.. அப்புறம் எதற்காக இவற்றை ரதியின் எழுத்தில் தேடுகின்றீர்கள்.. ம•க•இ.க வெளியீடு குறைபாடு உள்ளது என்றால் அதனை நேர்மறையில் விமர்சனம் செய்யுங்கள்.. அதனை விட்டு ஒரு புலி ஆதரவாளரிடம் போய் அரசியல் சுயவிமர்சனம் இதனை எல்லாம் தேடுவது உங்களுக்கே கொஞ்சம் அதிகமாகத் தெரியவில்லையா..
தனிமனித அனுபவங்கள் ஒரு மாதிரிதான்.. அதில் மறைப்பது என்பதை மறைக்கும்போதுதான் பேச வேண்டும். மாறாக நான் விரும்புவதை நீ பேசு எனப் பேசினால் உங்களுக்கும் புலிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.. வாசகர்களுக்கு இருவரும் கொடுக்கும் ஒரே செய்தி .. விவாதிக்க வாருங்கள் என்பதுதான்.. மாறாக அதற்கான ஜனநாயகவெளியை தொடங்கும் முன்னரே அடைத்து விடாதீர்கள் என்பதுதான்..
வெளியீடுகளில் கடமைகள் பேசப்பட்டுள்ளது.. இணையத்திலேயே மூழ்கி இருப்பதால் அவற்றைப் படிக்க இயலாத உங்களது அவலம் எனக்குப் புரிகிறது.. என்ன செய்ய
ஒரு பாசிச ஆதரவாளரிடம் காணப்படும் ஜனநாயகப் பண்பு கூட உங்களிடமோ அல்லது தம்மை ஈழத்துக் கம்யூனிஸ்டு என்று நம்புகிறவரிடமோ இல்லாமல் போனதற்கு நான் என்ன செய்ய•. பராபரனே…
ரதி தன்னை கம்யூனிஸ்டு என அறிவித்துக் கொள்ளவில்லை.. அதனால் அவர் கட்டாயம் விளக்க வேண்டும் எனக் கோர முடியாது. ரயாகரனும் அப்படி சொல்லட்டும்.. நமக்கென்ன வாய்க்கால் பிரச்சினையா அவரு பின்னாடியே சண்டை போட்டுட்டு போறதுக்கு…
ரயாகரனின் தவறை ஒத்துக் கொண்டதற்கு நன்றி… நான் சுட்டிக்காட்டியது தவறின் ஒரு பகுதியைத்தான். பெரிய பகுதி இன்னமும் பேசப்படவில்லை… தனது பகுதி 4 கட்டுரையில் ரதி ஏன் பாசிஸ்டு என்பதற்கு ஆதாரம் தருவதாகச் சொன்ன ரயாகரன் பகுதி 5 ம் எழுதி விட்டார் … இன்னமும் ஆதாரம் எதுவும் தரவில்லை.. ஒருவேளை எனக்கு அவர் எழுதுவது அவ்வளவாக எளிதில் புரியாமல் இருப்பதால், அவரை ஆதரிக்கும் தாங்கள் அவற்றில் காணப்படும் ஆதாரங்களை எடுத்துக் காட்டினால் நன்றாக இருக்குமே…
நமது கடமைகள் என்ன என்று கேட்கும் நீங்கள் முதலில் அதற்கு கடமைப்பட்ட ரயாகரனிடம் ஈழத்துக்கு இனிமேல் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டீர்களா… அல்லது அதனைப்பற்றி அவராகவே என்ன எழுதி உள்ளார்.. நக்கீரர் வேலை மட்டுமே செய்யும் நபர்கள் அல்ல கம்யூனிஸ்டுகள்..
//..ஈழத்து கம்யூனிஸ்டுகளாகிய (நாங்கள் கம்யூனிஸ்ட்டுகளல்ல என்றால் அதைச் சொல்லுங்கள்) நாங்கள்..//
//ஈழத்து கம்யூனிஸ்டுகளாகிய நாம்,…//
//அதை அவர் திரித்துப் புரட்ட, கம்யூனிஸ்டுகள் கைகட்டி இருக்கக் கோலும் சர்வதேசியம்//
//இதை ஈழக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், எங்கள் தோழர்களின் மேலான பாசிசப் படுகொலைகளை ஊடாகவே, இதைக் கற்று உணர்ந்தவர்கள்.//
//ஈழத்து கம்யூனிஸ்களாகிய எமக்கு “வரடடுவாதிகளாகிய” எமக்கு பதிலாளிக்கிறார்.//
//நாங்கள் கம்யூனிஸ்டுகள்.//
//
//தனி ஒரு மார்க்சிஸ்டைக் கூட விட்டுவைக்காத பாசிச சூழலில் இருந்து போராடிய எம்மைப் பார்த்து//
வினவு பற்றி தனது 5 வது பகுதி கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது இது.. தன்னை கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொள்கிறார்க ரயாகரன். அது சரியா என அவரோ அல்லது அவரை ஆதரிப்பவர்களோ முன்வந்து விளக்க வேண்டும். தன்னைப் பற்றி விமர்சனம் வரும்போது அரங்கத்திற்கு வந்து விளக்கமளிக்க கடமைப்பட்டவர்கள் கம்யூனிஸ்டுகள். உண்மையில் ரயாகரன் தன்னை கம்யூனிஸ்டு எனக் கருதிக் கொண்டு இருந்தால் சாமானியர்களான எமது இந்த ஐயத்திற்கு விளக்கமளித்தால் தொடர்ந்து விவாதம் முன்னேறும் எனக் கருதுகிறேன்…
ஒரு வெள்ளிக்கிஇழைமை இரவு. அடுத்த நாள் விடுமுறையை எண்ணி சிறிது நேரம் அதிகமாக டி.வி முன் சேனல் மாற்றி சேனல் பார்த்த கண்களில் சோர்வு. விளக்குகளை அணைத்து துயில் கொள்ளும் நிசப்தத்தில் ஒலிக்கும் அந்த பாடல்: ‘தாயே… என்ன பிழை செய்தோமடி தாயே…’ மக்கள் டி.வியில் ஒளிபரப்பான பாடல். களைப்புற்ற கண்களில் துஉக்கத்தை கொண்டு வர மறுக்கும் பாடல். இப்பாடலின் வலியை வினவில் வெளியான ரதியின் ‘ஈழ நினைவுகள்’ கட்டுரைகள் ஏற்படுத்தியதை வினவின் வாசகர்கள் அனைவரும் உணர்ந்திருப்போம்.
ஜஸ்வந்த் சிங் புத்தகத்துக்கு மோடி தடைவிதித்த வேளையில், ரயாகரன் குறுக்கீட்டில், வினவில் ரதியின் கட்டுரை நின்று போனது என்ன ஒற்றுமையோ தெரியவில்லை. உயிரை கையில் பிடித்துக் கொண்டு அலையும் ஒரு சராசரி மனுசியை பாசிஸ்ட் என்று ரயாகரன் தூற்றியிருப்பது அவரின் உள்ளத்தின் ஆழத்தில் கருக்கொண்டிருக்கும் வன்மத்தின் வெளிப்பாடு. ஈழ விஷயத்தில் ரயாகரனுக்கு ஒரு பார்வையும், கருத்தும் இருப்பதை போலவே புலி ஆதரவாளர்களுக்கும் இருக்கும் என்பதை மறுப்பது ஜனநாயக விரோத செயலன்றி ேறென்ன. ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ என்ற மாவோ கூற்றுக்கு வென்நீரை ஊற்றும் திருப்பணியை ரயாகரனே மேற்கொள்ளலாமா? மருதையனும் தோழர், ரதியும் தோழரா? என்ற அதிமேதாவித்தனமான கேள்வி தான் ரயாகரன் கற்றுத்தருகின்ற கம்யூனிசப் பண்பாடா? ஆட்டோ சங்கரை மகாத்மா என்று அழைப்பதற்கு தே.பா.சட்டத்தை பரிந்துரை செய்யும் தங்கபாலுவின் உதார் தான் ரயாகரனிடம் தெரிகிறது. தமிழ் நாட்டில் நாத்திகர்கள், கம்யூனிஸ்ட்கள் பெயர்களில் பெரும்பாலானவை இந்து சாமிப் பெயர்கள். இந்து சாமிப் பெயர்களை கம்யூநிச்ட்களும், தி.கவினரும் வைக்கக் கூடாது என்று ராம கோபாலன் கூட சொல்லிக் கேட்டதில்லையே.
ரயாகரனிடம் ஒரு natural flair இல்லாததை அவர் எழுத்துக்களை படிக்க மெனக்கெடும் யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். சலிப்பூட்டும் வறண்ட சித்தரிப்புக்கள் அவை. R.K நாராயணனின் ‘Astrologer’s Day’ இல வரும் ஜோதிடன், முறையாக ஜோதிடத்தைக் கற்றவநல்ல. ஆனால் பத்து நிமிடத்தில் தன் முன் வந்து அமரும் வாடிக்கையாளனின் பிரச்சினையை அறிந்து திஇர்வு சொல்லும் தேர்ச்சியை பெற்றிருப்பான். நீண்ட பயிற்சியிநூடாக இந்த கலையை கைவசப்படுத்தியிருப்பான். ரயாகரனின் வர்க்கப் பார்வையும் இது போன்ற ஒன்று தான். நீண்ட பயிற்சியில் கைக்கூடிய எழுத்து முறை. அவ்வளவே. புலிகள் மீதும், புலி ஆதரவாளர்கள் மீதும் வைக்கப்படும் அரசியல் ரீதியான விமர்சனங்கள் என்பது ஒரு வகை. புலிகள், புலி ஆதரவாளர்களை கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி அதில் அடையும் கிளுகிளுப்பு [voyeuristic pleasure] இரண்டாம் வகை. ரயாகரன் இதில் இரண்டாம் வகையைஸ் சேர்ந்தவர்.
ரயாகரநின் கடிதம் பிரசுரமானவுடன் ஒரு நண்பர் தன் கருத்துரையில், மிகப்பெரிய பாவத்தை ரதி செய்து விட்டதை போன்று, ஊரில் பெரியவர்களை வைத்து பஞ்சாயத்து செய்யும் தோரணையில் போராட்டம்’, ‘அசுரன்’, ‘ஏகலைவன்’, ஆகியோர் உடனே வர வேண்டும் என்று கூவினார். வந்தவரில் ஒருவர் ரதி விளக்கமளிக்க வேண்டும் என்று சொல்லி விட்டுப் போனார். உயிர்மை இதழில் சாரு நிவேதிதாவை எதிர்த்து ஒரு கருத்தை உங்களால் பதிக்க முடியாது. தீராநதியில் வாசந்திக்கு எதிரான சிறு முனகலும் உடனே நசுக்கப்படும். வினவில் எழுத வந்த விருந்தாளி அவமானப்படுத்தப்பட்டுள்ளது சோகமே. ரயாகரனின் வரட்டுவாதம் பற்றி வினவில் கட்டுரை வரவிருக்கிறது. இது குறித்து ஒரு ஈழத் தமிழர் என்ன நினைத்திருப்பார் என்று யோசித்துப் பார்த்தேன். ‘ஈழத் தமிழரக்கு ராஜபக்சே செய்த திஇங்கை விடவா ரயாகரன் செய்து விட முடியும்’, என்று மெலிதாக புன்னகைக்கலாம். வலிகளையும், காயங்களையும் இயல்பாக்கி நகர்வதில் அல்லாமல் வேறு வழி இருப்பதென்ன?