Wednesday, October 16, 2024
முகப்புசெய்திதண்ணி வந்தது தஞ்சாவூரூ - பாடல்!

தண்ணி வந்தது தஞ்சாவூரூ – பாடல்!

-

வினவில் இன்று முதல் மக்கள் இசை!

மக்கள் கலை இலக்கியக் கழகம் இதுவரை 11 பாடல் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒலிப்பேழைகளாக வெளிவந்தவை தற்போது ஒலிக்குறுந்தகடுகளாக கிடைக்கின்றன. இந்தப்பாடல்கள் அனைத்தும் அரசியல் சார்பு கொண்ட தமிழக மக்களிடம் பிரபலம் என்றால் மிகையில்லை. ம.க.இ.கவின் மையக்கலைக்குழு தோழர்கள் இதற்கு இசையமைத்து பாடியிருக்கிறார்கள். எமது பொதுக்கூட்டத்தில் அவர்கள் நடத்தும் கலைநிகழ்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வருவார்கள். ஒவ்வொரு குறிப்பான அரசியல் காலகட்டத்தை மனதில் கொண்டு அவர்கள் தயாரிக்கும் பாடல்கள், நிகழ்ச்சிகள் தமிழகத்தின் புரட்சிகர வரலாற்றின் கலைப்பதிவாய் இடம் பெற்றுவிட்டன.

நடைமுறையில் இப்படி இயங்கும் இந்த மக்கள் இசையை இணையத்தில் இருக்கும் வினவின் வாசகர்கள் பலர் அறிந்திருக்கமாட்டீர்கள். உங்களுக்கு அறிமுகம் செய்வதற்காக குறைந்தபட்சம் வாரம் ஒரு பாடலை இன்று முதல் வெளியிடுகிறோம். உங்கள் கருத்துக்களை அறியவும் ஆவலாக உள்ளோம்.

இங்கு வெளியிடப்படும் பாடல் நான்காவது பாடல் தொகுப்பான “அடிமைச் சாசனம்” தொகுப்பில் இடம் பெற்றுள்ள முதல் பாடலாகும். காட் ஒப்பந்தமும், டங்கல் திட்டமும் ஆதிக்கத்தை துவங்கியிருந்த 90 களின் மத்தியில் வெளிவந்த இந்த இசை அன்னியர்களின் சுரண்டலை இயல்பாய் எதிர்க்கும் விவசாயிகளின் நினைவை மீட்டு வருகிறது. காவிரியில் தண்ணீர் வரும் நாள் எப்படி தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருக்கும் தஞ்சையில் ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது என்பதை நீங்களும் கேட்டுப்பாருங்கள். பாடல் வரிகளும் உங்கள் வசதிக்காக கீழே இடம்பெற்றுள்ளது.

அடிமைச்சாசனம் பாடல் தொகுப்பிற்கான முன்னுரையுடன் முதல் பாடலை நீங்கள் கேட்கலாம்.

00.00 – 04.25 – அறிமுகம் , 04-26 – 08.04 – பாடல்

தண்ணி வந்தது தஞ்சாவூரூ

ஏ… தண்ணி வந்தது தஞ்சாவூரூ, தஞ்சாவூரு….
மடை திறந்தது மாயவரம், மடை திறந்தது மாயவரம்…..

ஏ….ஓடையில தண்ணி வந்தா…
நாணல் தலையாட்டும்….
ஓடிவரும் நீரைக்கண்டா….
காத்தும் சிலுசிலுக்கும்….
வாய்க்கா வரப்புல பாட்டுச்சத்தம்..
வானத்து மொத்தமும் கேட்டு நிக்கும்..
பாலுக் கழுவும் எங்க புள்ளைங்களும்
பாட்டுச் சத்தத்த கேட்டுறங்கும்…
(ஏ தண்ணி..)

ஏ…பொன்னுமணி நெல் வெளையும்…
மண்ணு எங்க மண்ணாகும்…
போகம் நூறு ஈன்று தரும்..
தாயாக எங்க நிலம்….
கொண்டக்கதிருல பூ மணக்கும்…
வண்டல் படிஞ்ச நெல் மணக்கும்…
வெளைஞ்சு நிக்கிற நெல்லு கதுருல
வயலும், வரப்பும் மறஞ்சுடும்…
(ஏ தண்ணி..)

பொன்மலையா போர் உசரும்…
போட்டி வச்சு பொலி உசரும்…
பொங்கலோட தை பிறக்கும்…
செங்கரும்பு வாசல் வரும்…
மாசிப் பங்குனி மத்தாளம் கொட்டும்…
சித்திரை வெயில் வந்து வெருட்டும்…
தாகங்கொண்ட நிலம் காத்திருக்கும் –தண்ணி
காற்றிடம் தூது சொல்லி விடும்…
(ஏ தண்ணி..)

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

அடிமைச் சாசனம்அடிமைச் சாசனம்
விலை ரூ. 30

இந்த ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர், இங்கே அழுத்தவும்


  1. பாடல் ஒலிப் பேழைகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
    இரா. சீனிவாசன், No 18, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை – 83

    கீழைக்காற்று,
    10,அவுலியா சாகிபு தெரு,
    எல்லீசு சாலை,
    சென்னை 2.
    தொலைபேசி எண் : 044-28412367

  2. Dear Vinavu,

    I belong to Thanjavur district and have spent my childhood in the rice bowl of tamilnadu,..That time I have witnessed three cultivations in an year. But right now even one cultivation per year is hardly possible,.. Our great politicians have enured that Cauveri is blocked and the same with the MULLAIPERIYAR … Can you write something of this cause????

  3. மிகவும் எதிர்பார்த்த ஒன்று. பாடல் வரிகளை சேர்த்தது நல்ல சிந்தனை. நன்றி தோழர்களே

  4. வினவின் வீச்செல்லை விரிந்துகொண்டே செல்கிறது.
    இன்னும் விரியவேண்டும்.
    அதைக்கொண்டு நாங்களும் விரிந்துகொள்ளவேண்டும்
    தோழமையுடன்
    செங்கொடி

  5. \\போகம் நூறு ஈன்று தரும்.. \\மூணு என்பதிற்கு பதிலாக நூறு என்று பதிவிடபடுள்ளது

  6. நண்பர்களே எனக்கு காந்தி(ஜி???) யின் மறுபக்கம் குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றன. உங்களிடம் தகவல்கள் இருந்தாலோ அல்லது தகவல்கள் இருக்கும் வலைப்பூக்கள் தெரிந்தாலோ தயவு செய்து jeevendran@yahoo.com அனுப்பும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி

    • Nanbar Jeeva avarkalukku, gandiji pattri (thurrokam) arinju kolla, ganthium, gangressum ennum putthagam keezhaik kaatru book stallil kidaikkum, nanbar vaanki padikkavum.nandri.

      • நண்பரே நான் ஐரோப்பிய தேசமொன்றில் வாழ்கிறேன். நான் வசிக்கும் இடத்தில் அம்மாதிரியான தமிழ் புத்தகங்கள் வாங்குவது கடினம். வலைப்பூவில் என்றால் வாசிக்கலாம். இருந்தாலும் உங்களது தகவலுக்கு மிக மிக நன்றி.
        அன்புடன் ஜீவா

  7. பதினொன்றில் நான்கை வாங்கி கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதில் அடிமை சாசனமும், காவியருளும் மாஸ்டர் பீஸாக இருக்கின்றன. காவியிருளை இப்பொழுது என் முஸ்லீம் நண்பர்களுக்கு கொடுத்து கேட்க சொல்லியிருக்கிறேன்.

    இந்த பதிவை தொடர்ந்து… இப்பொழுது புதிதாக வெளியிட்டிருக்கிற ‘நான் உலகம்’ சிடியையும் அறிமுகப்படுத்தலாமே!

  8. நெஞ்சை நெகிழ வைக்கும் பாடல் .அற்புதமான அறிமுக உரை .மடைதிறந்தது மாயவரத்தில் அல்ல.எந்தன் கண்களில் ,அடக்க முடியவில்லை .
    “பாலுக்கு அழும் எங்க புள்ளையும்
    பாட்டு சத்தத்தை கேட்டு உறங்கும் ”
    சொல்ல வந்த கருத்தை விளக்கி ,உயர்ந்த இடத்திற்கு நம்மை அழைத்து செல்கிறது இசை .இன்றைய சினிமா இசை பொறுக்கிகள் கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல் .
    நெஞ்சை உருக்கும் பாடல்.
    நன்றி வினவு .

  9. பாடல்கள் முழுவதையும் பதிவேற்றினால் “வினவு” ஐ பார்க்கும் பொழுது கேட்டுக்கொண்டே பார்க்கலாம்.நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க