Wednesday, July 24, 2024
முகப்புகட்சிகள்காங்கிரஸ்காங்கிரசு கருமாதிக்கு காலம் வந்தாச்சு! – பாடல்

காங்கிரசு கருமாதிக்கு காலம் வந்தாச்சு! – பாடல்

-

இந்தப்பாடல் வெளிவந்த போது நரசிம்மராவ் பிரதமர். மன்மோகன் சிங் நிதியமைச்சர். இன்று ராவ் இல்லை, சிங்கோ பிரதமர். அன்று நிதியமைச்சராக நின்று நாட்டை வல்லரசு நாடுகளுக்கு கூறு போட்டு விற்றவர் இன்று மொத்தமாக எழுதிக் கொடுக்கிறார். இந்திராவின் அந்திம காலத்தில் ஆரம்பித்த புதிய பொருளாதாரக் கொள்கையின் செயலாக்க அதிகாரிகளாக இருந்த மன்மோகன் சிங், அலுவாலியா கும்பலின் கையில் இன்று நாடே உள்ளது இங்கே குறிப்பிடத் தக்கது. தற்போது இரண்டு மாநிலங்களின் தேர்தலில் காங்கிரசு வென்றிருந்தாலும் இந்த ஏலக்கம்பெனிக்கு கருமாதி செய்யும் அவசியம் அன்று மட்டுமல்ல இன்றுமிருக்கிறது. முன்னுரையுடன் பாடலைக் கேளுங்கள்:

காங்கிரஸ் என்றொரு கட்சி

காங்கிரஸ் என்றொரு கட்சி – அவன்
கருமாதி எழவுக்கு காலம் வந்தாச்சு…

கைராட்டை கதருன்னு சொன்னே
வெள்ளக்காரனின் கொள்ளைக்கு காவலாய் நின்னே
47க்கு பின்னே… நாட்டை ஆக்கிட்டான் – கண்ட
நாய் நக்கும் தொன்னை
(காங்கிரஸ் என்றொரு…)

தொடங்கி வச்சார் காந்தி தாத்தா – உன்
ஊழல் வரலாறு இன்னைக்கு நேத்தா- கொஞ்சம்
உள்ள போய் எட்டிப் பாத்தா – அங்கே
உள்ளவன் எல்லாம் அர்ஷத் மேத்தா
(காங்கிரஸ் என்றொரு…)

ஏற்றுமதி பஞ்சு பேலு – உங்க
அம்பானிகள் மட்டும் அடிக்குது டாலு – இப்ப
நெசவுக்கு இல்லடா நூலு..- நம்ம
நரசிம்மராவுக்கு எருமைத் தோலு..
(காங்கிரஸ் என்றோரு…)

அமெரிக்க ஜப்பான் ஜெர்மனி – அகிலமெல்லாம்
ஆரம்பிக்கிறோம் கம்பெனி
டாடா பிர்லா அம்பானி –மன்மோகன சிங்கும்
கூட்டாளிதாண்டா ராவுஜி…

வரி வட்டி ராயல்டி.. என்ன இது அநீதி
யார் நீ?
ஹா….என்னையா யாரென்று கேட்கின்றாய்?
அண்டரெண்டும் நடுங்கிட ஒடுங்கிட
கண்டபேர்கள் கருகிட குறுகிட
வீரபுஜபல பராக்கிரம சூரன் டங்கல்…ஹா…

வேட்டிய உருவுறான் டங்கல் – அதை
ஃபோட்டா புடிக்கிறான் அமெரிக்க அங்கிள் – உன்
பங்காளி தூக்குறான் செங்கல்..- கடன்
பாரம் சுமப்பதோ பாட்டாளி நாங்கள்..
(காங்கிரஸ் என்றொரு…)

உனக்கு வாச்சானே மன்மோகன் சிங்கு – அவன்
வாயத் தெறந்தாலே அபாய சங்கு – உன்னை
ஆட்டுறான் அமெரிக்கா பாங்கு – ஐயோ
மானம் போகுதடா தூக்குல தொங்கு
(காங்கிரஸ் என்றொரு)

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

அடிமைச் சாசனம்அடிமைச் சாசனம்
விலை ரூ. 30

இந்த ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர், இங்கே அழுத்தவும்


 1. பாடல் வரிகள் ஒவ்வொன்றும் கத்தியின் கூர்மை…

  பதிப்பித்தமைக்கு நன்றி

 2. மருதையன் அங்கிள், 1991,2001,2011,2021 இப்படி ஒரே பாட்டை நீங்க பாடிக்கிட்டே இருங்க. காங்கிரசுக்கு ஒன்னும் ஆகாது.அப்ப காசெட், இப்ப சிடி அதான் முன்னேத்தம். காங்கிரசை விட்ட பாஜக.
  நீங்களும் பாடிக்கிட்டே இருங்க, அவங்க ஆண்டுகிட்டே இருப்பாங்க

  • போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு..

   என்னோட தலைமையில எவ்வளவு முன்னேத்தம் நடந்திருக்கு நீ என்னாடான்னா இப்படி சொல்லிட்டியே. அவிங்க சொல்றது உண்மை தான்யா நரசிம்ம ராவ், அய்யோ அய்யோ உன்னையெல்லாம் நரசிம்ம ராவ்ன்னு கூப்பிடவே வெக்கமா இருக்கு, எப்பேர்ப‌ட்ட பேர வச்சிக்கிட்டு என்னென்னமோவெல்லாம் தப்பு தப்பா பேசுறியேய்யா ? அங்கிள் மருதையன் இல்லைய்யா நீயும் நானும் தான்யா மாமாப் பயலுங்க, நீயாவது போய் சேர்ந்துட்ட இப்ப நான் தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாமா…
   ஆமாய்யா நம்புய்யா.. நீ நம்ப மாட்ட நீ தான் என் உண்மையான‌ பங்காளி நரசிம்மராவ் இல்லையே, நீ போலி நரசிம்ம ராவ் இல்லைன்னா இப்படி பன்னுவியா நம்ம கவுரவ பட்டத்தை போயி
   மருதையனுக்கு சூட்டுவியா ?

   போ போ ஓடிப்போயிரு இல்லைன்னா நானே ஒன்னைய ஒத‌ச்சிபுடுவேன் படுவா..

  • வாடி பார்த்தசாரதி… இல்ல இல்ல பாசாதி இல்ல கோசாதி அட அதுவும் இல்ல கோட்சில்லா… ஆனாலும் உனக்கு ரொம்பத்தான்யா கிசும்பு. உனக்கே ஒரு 100 கழுத வயசாச்சு, நீ போய் மருதையன அங்கிள்னு எழுதறியே.. சேலத்துல ரூம்போட்டு வைத்தியம் பாக்குற டாக்குடர் சீவி ரானிவாஸ் கிட்ட  போனியோ?

   • வா கோட்சில்லா மறுக்கா மறுக்கா வந்துடுவியே ரொம்ப சந்தோசம் ரொம்ப நாள் கழிச்சு நான் வந்தேன் இன்னைக்குன்னு பாத்து நீயும் வந்துருக்க. சரி உங்க மாமா சுப்பீரமணிய சாமி ஆத்த் அம்பிகளெல்லாம் சிதம்பரத்துல டேரா போட்டுருக்காளாமே, ஏன் நீயும் போகலையா என்ன புரியுதா.
    அப்பப்ப வா நம்ம அரடிக்கட்டுகிட்ட செருப்படி நீனு வாங்கிட்டு போனாத்தான எங்களுக்கும் கொஞ்சம் நலா இருக்கும்

    கலகம்

 3. மேலே ஒரு காய்சல் வந்த நன்றி கேட்ட கேள்விக்கு எதிர் கேள்வி… எய்ட்சு கூடத்தான் 30 வருசமா பிரபலமா இருக்கு, ஃபிரீயா கிடைக்குதாம், போய் தொத்திகிட்டு வாங்களேன்…. உங்களுக்கு மருத்துலதான்  நம்பிக்கை இல்ல அட்லீஸ்ட் வியாதிவாவது அனுபவியுங்க கோட்டிகாரசில்லா

 4. இப்படியே பாடிக்கினு உண்ட சோறு வாங்கினு தின்னுகினு இருங்க.. இந்தியாவின் ஒரே எதிர்கால நம்பிக்கை நட்சத்திரன் ராகுல் காந்தி தான். அதான் கம்யுநிசதையே கழுவில் எத்தியாசே இன்னும் எண்டா புலம்பறீங்க..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க