Tuesday, December 10, 2024
முகப்புஉலகம்ஈழம்புத்தகக் கண்காட்சியில் " துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்" நூல் அறிமுகம்

புத்தகக் கண்காட்சியில் ” துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” நூல் அறிமுகம்

-

நூல்: துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்”

புதிய கலாச்சாரம் வெளியீடு. விலை ரூ. 20.00

நூலிலிருந்து:

vote-012“மே, 2009 இல் ஈழப்பிரச்சினை தொடர்பாக புதிய ஜனநாயகம் இதழின் சார்பில் மூன்று வெளியீடுகள் கொண்டுவரப்பட்டன. தமிழக ஓட்டுக் கட்சிகளின் தமது தேர்தல் சந்தர்ப்பவாதத்துக்கு ஈழப் பிரச்சினையைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதையும், தமிழ்நாட்டின் தமிழ்த்தேசியவாதிகள் எனப்படுவோரும் புலிகளும் இந்திய மேலாதிக்கத்துக்கு ஈழப்போராட்டத்தை பலியிட்டிருப்பதையும், ஈழப்போராட்டம் குறித்த ஒரு மீளாய்வின் அவசியத்தையும் அந்த மூன்று வெளியீடுகளும் பேசின. இந்த வெளியீடுகளுக்கு புலிகள் இயக்க ஆதரவாளர்கள் பலரும் வெளிப்படுத்திய எதிர்வினை – பகையுணர்வு, மவுனம்.

புலிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்த ஒரு சூழலில், அரவணைத்து ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக, விமரிசிப்பது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்   வேலை என்பது அவர்களுடைய அபிப்ராயம். பாராட்டுபவனே நண்பன், விமரிசிப்பவன் எதிரி என்ற ஓட்டுக்கட்சி அரசியலின் பண்பாடு இவர்களுடைய பார்வையின் மீது செலுத்தும் செல்வாக்கு இத்தகைய அபிப்ராயம் உருவாவதற்குக் காரணமாக இருக்கிறது.

ஒரு போராட்டத்தின் தவறுகளைச் சுட்டிக் காட்டி விமரிசிப்பதென்பது, அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குச் செய்யப்படும் உதவி. குறிப்பிட்ட இயக்கங்கள் அல்லது தலைவர்களின் கவுரவத்தையும் நலனையும் காட்டிலும், மக்களுடைய போராட்டத்தின் நலன் மேம்பட்டது. வெளிப்படையான அரசியல் விமரிசனங்களும் விவாதங்களும்தான் தவறுகளிலிருந்து மீள்வதற்கும், சரியான வழியைக் கண்டறிவதற்கும் வழி –  என்பது எங்களுடைய பார்வை.

விமரிசனங்கள் முடக்கப்படும் இடத்தில்தான் துரோகிகள் பெருகுகிறார்கள். வெளிப்படையான அரசியல் விவாதம் மறுக்கப்படும் இடத்தில், திரைமறைவுச் சதிகள் மூலம் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கருத்து வேறுபாடுகளின் இடத்தை அவதூறுகளும் முத்திரை குத்துதல்களும் பிடித்துக் கொள்கின்றன.

இவையெல்லாம் நன்னெறி போதனைகள் அல்ல. எமது விமரிசனங்களைக் கண்டு முகம் சுளித்த புலிகள் இயக்க ஆதரவாளர்களைக் கேட்கிறோம்: முள்ளிவாய்க்கால் கொலைக்களத்தின் பின்னால், திரைமறைவில் நடைபெற்றிருக்கும் பேரங்கள் – நாடகங்கள், பிரபாகரன் குறித்த மர்மங்கள், யார் புலிகள் இயக்கத்தின் உண்மையான பிரதிநிதி, யார் நண்பன், யார் உளவாளி என்று புரிந்து கொள்ளமுடியாத குழப்பங்கள்.. இவையெல்லாம் உங்களுக்கு அதிர்ச்சியூட்டவில்லையா? இந்த நிலைமைகள் திடீரெனத் தோன்றியவையென்று கருதுகின்றீர்களா?

நேர்மையான சந்தர்ப்பவாதம் என்று எதை நாங்கள் குறிப்பிட்டோமோ அது, பச்சையான துரோகமாக அம்பலமாகி நிற்கின்றபோதும், புலிகளும் புலி ஆதரவாளர்களும் அதனைப் புரிந்து கொள்ளும் திராணியற்றவர்களாக, புரிந்தாலும் புலம்புவதைத் தவிர வேறு வழி தெரியாதவர்களாக மாறியிருப்பதன் காரணம் என்ன என்பதைக் காலம் கடந்த பின்னராவது பரிசீலிப்பீர்களா? பார்ப்போம்.”

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

மனிதவாழ்வை மறுக்கும் முதலாளித்துவக் கொடுங்கோன்மைக்கு
மார்க்சிய-லெனினியமே ஒரே மாற்று
மக்களிடம் கொண்டு செல்லும் கீழைக்காற்று

சென்னை புத்தகக் கண்காட்சி
(டிச.30 – சன.10 வரை, ஜார்ஜ் பள்ளி,பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

கீழைக்காற்று  விற்பனை அரங்கு, எண் 64-65

  • உரைவீச்சுக்களாய், இசைப்பாடல்களாய், அரசியல் போராட்டக்காட்சிப் பதிவுகளாய், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் ஒலி,ஒளி வட்டுகள், பெரியார், அம்பேத்கார் படைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அனைத்து ஆக்கங்களும் கீழைக்காற்றில் கிடைக்கும்.
  • வாருங்கள், நண்பர்களிடம் சொல்லுங்கள்!

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. அருமையான புத்தகம், இதன் கூடவே பு.ஜ வெளியீடுகள் மூன்றின் விளம்பரங்களையும் கொடுத்திருக்கலாம்.

  2. //விமரிசனங்கள் முடக்கப்படும் இடத்தில்தான் துரோகிகள் பெருகுகிறார்கள்//.
    வரலாற்று உண்மை

    • தோழர்கள் ஒரு புத்தகத்தோடு   நிற்காமல் இரண்டு , மூன்று பிரதிகள்வாங்குங்கள் பிறகு நண்பர்களுக்கு கொடுங்கள், (இது நல்ல பலனை கொடுக்கிறது.)

    • எல்லா இடங்களிலும் அப்படி நடப்பதில்லை (எ.கா சில சமயம் பணம் ) 

  3. அப்பாவி இலங்கைத் தமிழனின் உயிரில் பணம் பார்க்கத் துடிக்கும் இன்னொரு முயற்சி ………..வாழ்க தமிழகம்

  4. இவையெல்லாம் நன்னெறி போதனைகள் அல்ல. எமது விமரிசனங்களைக் கண்டு முகம் சுளித்த புலிகள் இயக்க ஆதரவாளர்களைக் கேட்கிறோம்: முள்ளிவாய்க்கால் கொலைக்களத்தின் பின்னால், திரைமறைவில் நடைபெற்றிருக்கும் பேரங்கள் – நாடகங்கள், பிரபாகரன் குறித்த மர்மங்கள், யார் புலிகள் இயக்கத்தின் உண்மையான பிரதிநிதி, யார் நண்பன், யார் உளவாளி என்று புரிந்து கொள்ளமுடியாத குழப்பங்கள்.. இவையெல்லாம் உங்களுக்கு அதிர்ச்சியூட்டவில்லையா? இந்த நிலைமைகள் திடீரெனத் தோன்றியவையென்று கருதுகின்றீர்களா?

    நேர்மையான சந்தர்ப்பவாதம் என்று எதை நாங்கள் குறிப்பிட்டோமோ அது, பச்சையான துரோகமாக அம்பலமாகி நிற்கின்றபோதும், புலிகளும் புலி ஆதரவாளர்களும் அதனைப் புரிந்து கொள்ளும் திராணியற்றவர்களாக, புரிந்தாலும் புலம்புவதைத் தவிர வேறு வழி தெரியாதவர்களாக மாறியிருப்பதன் காரணம் என்ன என்பதைக் காலம் கடந்த பின்னராவது பரிசீலிப்பீர்களா? பார்ப்போம்.

    மிகவும் சரியான கேள்வி தோழரே !
    புலிகளை பொறுத்தவரையில் தேசிய விடுதலை போர் என்ற போர்வையில் “மாபியா ” விளையாட்டுகளை தான் விளையாடினார்கள.அவர்கள் என்ன செய்தாலும் ஜால்ரா போட ஆட்களை வைத்திருந்தார்கள்.புலிகள் என்ன செய்தாலும் அது சரிதான் என்பது தான் அவர்கள் வாதம்.ஈழத்தில் தமிழ் திரைப்படங்களை தடை பண்ணுவார்கள் ,ஆனால் பிரான்சில் தமிழ் படங்களை எடுத்து ஓட்டுபவர்கள் புலிகளே. “தோழர் ” என்ற சொல்லை வெறுத்த முதன்மை இயக்கம் புலிகள் தான்.
    பிரபாகரன் புகழ் பாடுவதும் ,கார்த்திகை மாதம் மன்னவன் பிறந்தான் வல்வையிலே என்று வல்வெட்டி துறை புகழ் பாடுவதும் இன்ன பிற இழிந்த செயல்களை எல்லாம் இந்த ஜால்ரா கூட்டம்தான் செய்தது.
    குறுக்கு வழியில் எப்படி சம்பாதிப்பது என்பதை கடத்தல் மன்னர்களான வல்வெட்டி துறை வாசிகளிடமே கற்க வேண்டும்.கடத்தல் என்பது அங்கே கைத்தொழில் .கடத்தல் காரர்களால் (மாபியா ) ஆரம்பிக்கட்டது இன்று அவர்களலேயே அழிக்கபட்டது .இந்த சூதாட்டத்தில் சிக்கி சின்னா பின்னமாகியது தமிழர்களின் வாழ்வே .மறைமுக மாக ,அப்பாவிகள் போல புலி புகழ் பாடும் ரதி போன்றவர்கள் என்ன சொல்ல போகிறார்கள்.?

    ஒரு தலை மறைவு இயக்கம் எப்படி எல்லாம் இருக்க கூடாது என்பதற்கு புலிகளே சிறந்த உதாரணம். உலக அரங்கில் ஈழ தமிழர்களை அரசியல் அனாதைகள் ஆக்கியவர்கள் புலிகள் .

    • நண்பர்களே உங்களை ஆதாரங்களுடன் எழுதுமாறு தயவுடன் வேண்டுகிறேன் . 

  5. //இந்த வெளியீடுகளுக்கு புலிகள் இயக்க ஆதரவாளர்கள் பலரும் வெளிப்படுத்திய எதிர்வினை – பகையுணர்வு, மவுனம்.// 
    இதில் “பலரும்” என்பதற்குப் பதிலாக சிலர் எனப்  எழுதப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க