Wednesday, November 6, 2024
முகப்புஉலகம்ஆசியாமாபியா கும்பலின் பிடியில் திணறும் 'செஞ்சீனம்'!

மாபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’!

-

சாங்குயிங் என்ற நகரம், சீனாவின் மேற்கேயுள்ள சிச்சுவான் மாநிலத்தின் வளர்ந்துவரும் பெரு நகரங்களில் ஒன்றாகும். இந்நகரத்தைச் சேர்ந்த லீ குயாங் என்பவர், சீன “கம்யூனிஸ்ட்”கட்சியின் செல்வாக்குமிக்க அதிகாரி. அவர் ஒரு பெரும் தொழிலதிபர்; கோடீசுவரர். வீட்டுமனைத் தொழிலிலும் நகரின் வாடகைக் கார் போக்குவரத்திலும் அவர்தான் ஏகபோக அதிபர். இது தவிர, ஏராளமான சூதாட்ட-சாராய-களிவெறியாட்ட-

விபச்சார விடுதிகளையும் போதைமருந்து வியாபாரத்தையும் சட்டவிரோதமாக அவர் நடத்தி வந்தார். நவீன ஆயுதங்களைக் கொண்ட குண்டர் படையையும் அவர் வைத்திருந்தார். எனவே, சாங்குயிங் நகரில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர்தான் இந்நகரின் “ஞானத் தந்தை’’!

நான்காண்டுகளுக்கு முன்பு, இந்நகரைச் சேர்ந்த ஹூவாங் கோபி என்ற 47 வயதான பெண்மணி, தன்னுடைய வீட்டுமனையை இவருக்குத் தர மறுத்தார். விளைவு? அவரின் கண் முன்பாகவே அவரது கணவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது வீடு நாசமாக்கப்பட்டது. குற்றுயிராக அவர் தெருவில் வீசியெறிப்பட்டார். இக்கொடுஞ்செயலைப் பற்றி அவர் போலீசில் புகார் தெரிவித்தார். நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், லீ-யின் வானளாவிய அதிகாரத்தை எதிர்த்து அதிகார வர்க்கமோ, நீதித்துறையோ, போலீசோ எதுவும் செய்ய மறுத்தன. ஹூவாங் கோபியின் துயரமும் லீ-யின் கொட்டமும் ஏதோ விதிவிலக்கான சம்பவம் அல்ல. சீனா முழுவதும் நடந்துவரும் கம்யூனிசப் போர்வையணிந்த தனியார் முதலாளிகளின் அட்டூழியங்களுக்கும் பயங்கரத்துக்கும் ஒரு உதாரணம்தான் இந்தச் சம்பவம்.

சாங்குயிங் நகர “கம்யூனிஸ்ட்”கட்சியின் புதிய செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள போ ஷிலாய் என்பவர், கட்சித் தலைமையின் ஆதரவுடன் லீ கும்பலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்து கடந்த ஜூலை 21-ஆம் தேதியன்று நூற்றுக்கணக்கான அரசு அதிகாரிகள், போலீசு அதிகாரிகள், நீதிபதிகள்- என அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். லீ உள்ளிட்டு, பல மாஃபியா குண்டர் படைகளுக்குப் புரவலனாக இருந்த அந்நகரத்தின் போலீசு கமிசனர், விபச்சார-சூதாட்ட விடுதிகளையும் போதை மருந்து வியாபாரத்தையும்  நடத்தி வந்த இந்நகரின் “ஞானத் தாய்” ஷி காய்பிங் – என 31 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, 1500 அரசு அதிகாரிகள், 250 போலீசு அதிகாரிகள், மூன்று கோடீசுவரர்கள், 70 குண்டர் படைத் தலைவர்கள் எனப் பலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இக்கும்பல் நடத்திவந்த ஆயுத தொழிற்சாலை அம்பலப்பட்டு, ஏராளமான ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. உலக மகா கோடீசுவரர்கள் பயன்படுத்தும் ஃபிராரி, லம்போர்கினிஸ், பென்ட்லேஸ் முதலான கார்களுடன் உல்லாசமாகத் திரிந்த இக்கும்பலின்  ஆடம்பர வெளிநாட்டு சொகுசு கார்கள், 65 -க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பலருக்கு ஆயுள் தண்டனையும், மாஃபியா குண்டர் படைத் தலைவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் குற்றக் கும்பல்களுக்கு எதிரான இந்நடவடிக்கை தொடங்கியதும், வேறு சில நகரங்களிலும் இதேபோன்று கைதுகள் நடந்து, அதில் சிலருக்கு மரண தண்டனையும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இக்கிரிமினல் கும்பல் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சாட்சியமளிக்க வந்த ஹூவாங் கோபியைப் போலவே 300-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கும் இக்கிரிமினல் கும்பலால் ஏற்பட்ட கொடுமைகளை வாய்விட்டு அழுது சாட்சியமளித்துள்ளனர். “இந்தக் குண்டர்கள் பட்டப்பகலில் பலரை வெட்டிக் கொன்றனர். பலரைப் படுகாயப்படுத்தினர். போலீசில் புகார் செய்தால் மீண்டும் தாக்கி எச்சரித்துப் பயபீதியை உருவாக்கினர். சீனாவின் குயிங் வம்ச கொடுங்கோலாட்சியில் கூட இத்தகைய கேள்விமுறையற்ற அட்டூழியங்கள் நடந்ததில்லை”என்று வேதனையுடன் புலம்பினார், நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க வந்த ஒரு சீனத் தொழிலாளி.

“இது 10 சதவீத கமிசன் வாங்கும் ஊழல் பெருச்சாளிகளின் ஆட்சி. இரகசிய உலகப் பேர்வழிகள் அரசியல் பலத்தோடு அரசு எந்திரத்தையே தமது காலடியில் கொண்டுவந்து விட்டனர். இலஞ்ச ஊழலே இன்று “கம்யூனிஸ்ட்”கட்சியை அச்சுறுத்தும் பெரிய நோயாக மாறிவிட்டது”என்று சீழ்பிடித்து நாறும் சீனாவைப் பற்றி விவரிக்கிறார் பூ யோங்ஜியான் என்ற பேராசிரியர். உண்மைதான்! கடந்த செப்டம்பரில் சீன “கம்யூனிஸ்ட்”கட்சியின் விரிவாக்கப்பட்ட பிளீனத்தில், கட்சியில் புரையோடிப் போய்விட்ட இலஞ்ச ஊழலுக்கு எதிராகப் போராடுமாறு கட்சித் தலைமையே அறைகூவல் விடுக்குமளவுக்கு, அக்கட்சியும் அதன் முதலாளித்துவ ஆட்சியும் நாடெங்கும் நாறிப் போயுள்ளது.

உலகமயமாக்கத்தின் கீழ் எந்தளவுக்கு அரசு ஆதரவோடு தனியார் முதலாளித்துவம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அந்தளவுக்கு ஊழலும் கிரிமினல் குற்றங்களும் தீவிரமாகின்றன. கடந்த 2000-வது ஆண்டில் சாங்குயிங் நகரில் விரைவான தொழில் வளர்ச்சி என்ற பெயரில் ஏற்றுமதி அடிப்படையிலான தொழில்பூங்காக்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் உருவாகத் தொடங்கியதும், அதே வேகத்தில் ஊழலும் கிரிமினல் குற்றங்களும் பெருகத் தொடங்கின.

முதலாளித்துவத்தை ஒழிக்காமல், இக்கிரிமினல் குற்றக் கும்பல்களுக்கும் ஊழல் பெருச்சாளிகளுக்கும் மரணதண்டனை முதல் கடுமையான தண்டனைகள் விதிப்பதன் மூலம், தீவிரமாகிவரும் ஊழலையும் கிரிமினல் குற்றங்களையும் ஒழித்துவிட முயற்சிக்கிறது சீன முதலாளித்துவ அரசு. கடந்த ஆண்டில் உலகிலேயே மிக அதிகமாக மரணதண்டனை விதிக்கப்பட்ட நாடு சீனாதான். இப்படி கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்ட போதிலும் ஊழலும் கிரிமினல் குற்றங்களும் குறையவில்லை. மாறாக, மேலும் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. ஏனென்றால்,முதலாளித்துவமும் கிரிமினல் குற்றக் கும்பல்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும்.

மகத்தான சீனப் புரட்சியின் 60-வது ஆண்டுவிழாவை உலகெங்குமுள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகள் கொண்டாடிவரும் இத்தருணத்தில், சீன நாடானது முதலாளித்துவத்தின் எல்லா கடைகோடி கழிசடைத்தனங்களையும் கொண்டு சீரழிந்து நிற்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக அந்நாடு பின்பற்றிவரும் முதலாளித்துவம், இன்று அந்நாட்டையே அச்சுறுத்தும் அபாயமாக மாறி, நாட்டையும் மக்களையும் வதைத்துக் கொண்டிருக்கிறது. சீரழிந்த சீனா, இன்னுமொரு பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியை எதிர்நோக்கி நிற்கிறது.

_____________________________________

–   புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010
_____________________________________

  1. ///தன்னுடைய வீட்டுமனையை இவருக்குத் தர மறுத்தார். விளைவு?அவரின் கண் முன்பாகவே அவரது கணவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது வீடு நாசமாக்கப்பட்டது. குற்றுயிராக அவர் தெருவில் வீசியெறிப்பட்டார்///

    அதத்தானேயா தமிழ் நாட்டுல தி மு கவும் திருமாவளவனும் மாறி மாறி செஞ்சிக்கிட்டு வர்றாங்க. எத்தைனை பேர் இந்த ரௌடிகளால பாதிக்கப்பட்டிருக்காங்க. அதைப்பத்தி எழுத துப்பு இல்ல. துப்பு கெட்டுபோய் சீனால நடக்குதாம் கொலை அத பெரிய கட்டுரையா எழுதறாங்க. வெக்கமா இல்ல. வெக்கங்கெட்டவங்களா? ௦௦நூறடி ரோட்டு ஆக்கிரமிப்பு வழக்குல இப்ப தான் திருமாவளவன் கோஷ்டிய கழுத்தப் பிடிச்சு வெளிய தள்ளினாங்க. ஏதோ அந்த பார்டி கொஞ்சம் ஸ்ட்ராங்க இருந்ததால பொழைச்சான். இல்லன்ன அந்த நிலத்த சுவாஹா பன்னிருப்பீங்க நீங்க. இத எழுத தைரியம் இல்ல. சாக்கடைல நின்னுகிட்டு சைனா நாறுதுங்கறீங்க. உங்கள திருத்தவே முடியாது.

    • ராம்,

      வெறும் உளறல். உருப்படியா விவாதிக்க வாங்க! வினவு தளம் கருணாநிதியையும், திருமாவளவனையும் தொட்ர்ச்சியாக விமர்சனம் செய்து கொண்டு தான் இருக்கிறது.

      வினவின் பிரச்சாரம் விரிவடைந்து கொண்டே போக போக… பலருக்கு கடுப்பு கடுப்பா வருது என நினைக்கிறேன். அதுக்கு நாம் என்ன செய்ய? போய் சுவத்துல முட்டிகிட வேண்டியது தான்.

    • யோவ் ராம் லூசா நீயி, ஜகத்கஸ்பர விமரிசனம் பண்ணா கனிமொழிய பண்ணுவியான்னு கேக்குற.. சீனாவ பத்தி எழுதுனா விடுதலை சிறுத்தையை பத்தி எழுவியாங்கறா? ஆனா உன் சைட்டுல மட்டும் இதபத்தியெல்லாம் எழுதாம பார்ப்பான தாங்கிதாங்கி எழுதற.. என்ன உன் பிரச்சன.

    • அதாவது பாஸ் … இந்த பாப்பானுங்களுக்கு .. நேரடியா மொத துப்பு கிடையாது .. இப்படி தான் .. நீ அவன அடி … நீ இவன அடி நு .. ஏத்தி விட்டு கடசிய நம்ம கிட்ட வாங்குற மாதிரி சூ** சுண்ணாம்பு ஆக்கிட்டு பிகிறது .. இவனுங்களுக்கு இதுவே வேலையா போச்சு பாஸ் ..

  2. இது போன்ற கட்டுரை உங்களிடம் இருந்து வருவது ஆச்சர்யமாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் சீனா, மக்கள் புரட்சி, ரசியா , செம்படை, உழைக்கும் மக்கள் என்று கட்டுரை அமையும். ரசியர்களும், சீனர்களும் மட்டுமே இந்த உலகில் உழைக்கும் மக்கள், இந்தியர்கள் உட்பட மற்ற அனைத்து நாட்டு மக்களும் மலத்தின் மீது உட்காரும் ஈ போன்றவர்கள் என்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்குவது போன்று இருக்கும் உங்கள் கட்டுரைகள். அங்கே என்னய்யா வாழுது, அவங்களும் பேமானிகல்தானே என்று அங்கு நடக்கும் கொடுமைகளையும், அராஜகங்களையும் சுட்டி காட்டினால், ஒரே வரியில் இப்போது ஆள்பவர்கள் போலி கம்யுனிஸ்டுகள் என்பீர்கள். சரி, நீங்கள் சொல்லுவதை ஒத்துக்கொண்டாலும், ஆள தெரியாத, சூழ்ச்சிகளை சமாளிக்க தெரியாமல் இரண்டு மாபெரும் மக்கள் குடியரசுகள் (அதுதாங்க சீனாவும், ரசியாவும்) போன்று இங்கும் / வேறு எங்கும் உருவாக்க ஏன் ஆசைப்படுகிறீர்கள்? ஒரு வேலை கணினி யுகத்தில் உழைக்கும் சீன/ரசியா மக்கள் என்று உங்களால் தலைமேல்தூக்கி வைத்து கொண்டாடப்படுபவர்களின் வண்டவாளங்கள் நீங்கள் சொல்லாவிட்டாலும் கூட உலகின் எந்த மூலையில் இருக்கும் சாதாரண மனிதனுக்கும் தெரிந்து விடத்தானே போகிறது என்று நீங்களே ஒத்துகொள்கிறீர்களா?.

    • சீனி நீங்க என்ன சொல்லவற்றீங்க? வினவு சீனாவ விமர்சனம் செஞ்சது சரியா தவறா? அப்புறம் ஒரு விசயம், சீனாவுலயாவது பெயருக்கு கம்மூனிஸ்டு கட்சி ஒட்டிகிட்டிருக்கு, ரசியாவுல கட்சிய கலச்சு ரொம்ப வருசமாச்சு.. அது முழுக்க முழுக்க முதலாளித்துவ அரசுதான்.. எப்போ உங்க knowledgeஅ உப்க்ராடே பண்ணிக்கபோறீங்க… கணிணியுகமாச்சே அதான் கேட்டேன்?

      • ரசியாவுல கட்சிய கலைச்சு ரொம்ப வருசமாச்சுன்னு சொல்றிங்க. அப்போ அங்கே கம்யுனிஸ்டு கட்சியே கிடையாதா? இப்போ முதலாளித்துவம் வந்துடுச்சுன்னு சொல்றீங்களே, அந்த முதலாளிகள், முன்னாள் தோழர்கள்தானா இல்ல திடீர்னு வானத்துல இருந்து குதிச்சுட்டாங்களா? என்னுடைய கேள்வி ரொம்ப எளிமையானது. உலக வல்லரசுகளில் ஒன்றான ரசியாவுலயும், பக்கத்துல இருக்குற சீனாவுலவுயும் கம்யுனிசம் தோத்துப் போச்சு. நிலைமை ரொம்ப மோசம். இங்கேயும் அதே மாதிரி கம்யுனிசம் மலரனும்னு பிரச்சாரம் பன்னிக்கிட்டிருக்கிங்களே, ஒரு வேளை துரதிர்ஷடவசமாக அந்த மாதிரி நடந்துவிட்டால், அவங்களுக்கு நேர்ந்த கதிதனே இங்கேயும் நடக்கும்? அதுக்கு ஏன்யா கிடந்து சாகுறிங்க? புரியுதுங்களா?

        • நான் மணி

          முதலாளித்துவம் தோன்றி 210 ஆண்டுகளில் ஒரு நாட்டில் அல்ல பல நாடுகளில் ஏன் உலகம் முழுவதும் கூட தோற்றுக் கொண்டுதான் உள்ளது. தோல்வியை தவிர்க்க உலகப் போர்களை நடத்தியது. பெருமந்தந்தை உருவாக்கியது. காலனிகளைத் தேடியது. ஆசியா முடிந்தவுடன் லத்தீன் அமெரிக்கா அதுவும் முடிந்தவுடன் ஆப்ரிக்க நாடுகள் எல்லாம் முடிந்த பிறகு நாடுகளை அழிக்க சில போலி மோதல்களையும் யுத்த பிரபுக்களையும் உருவாக்கி பிறகு அந்த நாட்டின் மறுகட்டுமானத்தில் உயிர்வாழ்வது, பெட்ரோ டாலரை உருவாக்கி உலக மக்களின் உழைப்பை உறிஞ்சித் தின்பது என ஒட்டுண்ணி வாழ்க்கைதான் முதலாளித்துவம் வாழ்கிறது. யாரை எதிர்த்து தோன்றியதோ அதே நிலப்பிரபுவுடனும் மன்னருடனும் கூட்டணி அமைக்கவும் தவறாத அமைப்பு முதலாளித்துவம். தனது தோல்வியை பஞ்சமாக, ரிஸசனாக மக்களது தலையில் கட்டி அவர்களை கொல்லவும், போர் நடத்தி ஒரு நாகரீகத்தையே அழிக்கவும் தயங்காத ஈவிரக்கமற்ற அரக்கனுக்கு ஆதரவாக பேசுகின்றீர்கள். கம்யூனிசம் ஒரு புதிய முயற்சி அதனை அதற்கு முந்தைய முதலாளித்துவ சொத்துடைமை உறவு அதிகார மட்டத்தில்தான் வீழ்த்தி இருக்கிறது. அது தரும் தீர்வுகளை மக்கள் அறிந்து கொள்ள முடியாமல் பிரச்சாரம் செய்யக் கூட தடை விதிக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஜனநாயகம் பற்றி பேசினால் கூட பாசிசம் உடன் கூட்டணி வைத்து ஜனநாயகம் கம்யூனிசம் என பேசுவர்களை இல்லாமல் பண்ணவும் செய்வது முதலாளியம். முக்கியமான உண்மை முதலாளியம் தன்னந்தனியாக இதுவரை 210 ஆண்டுகளில் ஒரு பத்து ஆண்டு கூட முழுமையாக வெற்றி பெற்றது இல்லை உலக அளவில். இதனை பொருளாதரம் பற்றிய அறிவுள்ள உலகம் பற்றிய வரலாற்று அறிவுள்ள எவரும் புரிந்து கொள்ள முடியும்

        • மணி,

          உங்களை நான் சீரியசா எடுத்தகறதில்லை. மேலும் அடிப்படை பண்பு, மனிதனேயம் கூட உங்களுக்கு இல்லை என்பதை, சந்திப்பு மரணம் பற்றி பதிவில் இருந்த அறிந்துகொண்டேன். மனிதனேயம் கூட இல்லாமல் என்ன கம்யூனிஸ்ட் ?

          மேற்கொண்ட உங்கள் பதிலில் முதலாளித்துவம் என்ற சொல்லுக்கு பதில் கம்யூனிசம் என்ற சொல்லை போட்டு பார்க்கவும் !! எது தோற்றது, எது இன்னும் உயிர் வாழ்கிறது என்பதை வாசகர்கள், மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும். ஓ.கே.

          தென் அமெரிக்க நாடான உருகுவேயில் சமீபத்தில் நடந்த தேர்ந்தலில் வென்று ஜனாதிபதியான ஒரு முன்னாள் மார்கிசிய போராளியான முஜிக்காவின் இன்றைய நிலைபாடு பற்றிய சுட்டி இது :
          http://www.hindu.com/mag/2009/12/13/stories/2009121350130400.htm
          A new beginning
          How Mujica, the guerilla fighter, climbed out of his prison well to become the President of Uruguay… The emerging democratic paradigm in Latin America has a particular relevance to the struggle of Maoists, says India’s Ambassador to Argentina, Uruguay and Paraguay R.
          VISWANATHAN.
          /////In one of his campaign speeches, Mujica vowed to distance the Left from “the stupid ideologies that come from the 1970s — I refer to things like unconditional love of everything that is State-run, scorn for businessmen and intrinsic hate of the United States.” He said, “I’ll shout it if they want: Down with isms! Up with a Left that is capable of thinking outside the box! In other words, I am more than completely cured of simplifications, of dividing the world into good and evil, of thinking in black and white. I have repented!”
          உங்களைப் போன்றவர்கள் அவசியம் படிக்க வேண்டும் இதை. Marxism, Maoisim இன்று எத்தனை தூரம் relevant and credible என்பதை பற்றி ஒரு முன்னால் மாவோயிஸ்ட்டின் அனுபவங்கள் மற்றும் கருத்துக்கள் இவை..

  3. சீனி இது பச்சை பொய், இப்படி ஒரு பொய்யை நீங்க எழுதினத்துகத்கு வருத்தப்படனும் @@இந்தியர்கள் உட்பட மற்ற அனைத்து நாட்டு மக்களும் மலத்தின் மீது உட்காரும் ஈ போன்றவர்கள் என்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்குவது போன்று இருக்கும் உங்கள் கட்டுரைகள்@@@

  4. சீனாவை பற்றிய தகவல்கல் மிக சரியானவைதான். பல காலமாக இப்படிதான் சீன
    இருக்கிறது.

    ////உலகமயமாக்கத்தின் கீழ் எந்தளவுக்கு அரசு ஆதரவோடு தனியார் முதலாளித்துவம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அந்தளவுக்கு ஊழலும் கிரிமினல் குற்றங்களும் தீவிரமாகின்றன. ////

    அப்படியா ? தைவான் நாடு சைனா அருகில் இருக்கும் தீவு. 1948க்கு பின் சைனாவில் இருந்து பிரிந்து தனியார் முதலாளித்துவம் தீவிரமாக அமலாக்கப்பட்ட நாடு. அவர்களும் சீன இன மக்கள் தாம். இன்றைய தைவான் வளமான முன்னேறிய நாடு. ஊழல் மிக மிக குறைவு. எப்படி நிகழ்ந்தது இது ? சமீபத்தில் சென்னையில் ஒரு
    தைவான் நாட்டு அரசு அதிகாரியோடி உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பல விசியங்களை தெளிவுபடுத்தினார்.

    /////முதலாளித்துவத்தை ஒழிக்காமல், இக்கிரிமினல் குற்றக் கும்பல்களுக்கும் ஊழல் பெருச்சாளிகளுக்கும் மரணதண்டனை முதல் கடுமையான தண்டனைகள் விதிப்பதன் மூலம், தீவிரமாகிவரும் ஊழலையும் கிரிமினல் குற்றங்களையும் ஒழித்துவிட முயற்சிக்கிறது சீன முதலாளித்துவ அரசு.///

    சீனா ஒரு முழுமையான முதலாளித்துவ நாடல்ல. அங்கு இருப்பது அரைகுறை முதலாளித்துவம் ; அரசியல் முறை : ஜனனாயகமே இல்லாத காட்டு தர்பார்.

    முதலில் ஒரு விசியத்த புரிந்துகொள்ளுங்கள். அடிப்படை ஜனனாயகம் இல்லாத நாடுகள் இப்படிதால் சீரழியும். If capitalism is not based on a liberal democracy, then the results will be like this only. சீனாவை, தைவானுடன் ஒப்பிட்டாலே புரியும். இன்றைய ரஸ்ஸியாவையும், ஜெர்மனியையும் ஒப்பிட்டலாமே. கடந்த 60 வருடங்களில் அவை சென்ற பாதைகள், அடைந்த மாற்றங்களை பற்றி…

    The Russian mafia and mob did not merge over night after the fall of USSR in 1991. It was there for decades before 1991 and was the product of the black market and corruption of Soviet bureaucracy for
    decades. சீனாவிலும் இதே கதைதான்.

    செம்புரட்சி நிகழ்ந்தால், அது போக போக இப்படிதான் சீரழியும். The seeds of fasicism, anarchy and corruption are all held within a red revolution and they slowly manifest over the years.
    இதெல்லாம் திரிபுவாதிகள் மற்றும் ஏகாதிபத்திய சதிகளின் விளைவுகள் என்று உங்கள் வழக்கமான பல்லவியை பாடுவீர்கள் என்றும் அறிவேன்.

    • இந்த k.r.adhiyaman க்கு வேற வேல வெட்டி இல்ல விக்கிபீடியா நாலு வாட்டி படிச்சுட்டு புல்பு இல்லாம பேச வேண்டியது அவரு சொல்ற ஓவ்று லைன் நும் விக்கிபீடியா சுட்டதுதான் இவன் எல்லாம் வேற எதாச்சும் வேல இருந்த செய்யலாம்

  5. அடிப்படையில் கம்யுனிச சித்தாந்தம் ஒரு நாட்டிலும் இல்லை. ஏன் தோத்தது? ஜனநாயக மறுப்பு? மக்களிடம் இருந்து கட்சி அந்நியப்பட்டது? தனி நபர் வழிபாடு? (ஸ்டாலின், மா ஓ மீது உட்பட)

    நாம் எப்படி இதே தவறுகள் நடக்காமல் பார்க்கலாம்?

  6. mr.அதியமான் அவர்கள் நல்லாத்தான் ஜனநாயகத்தின் மகிமையை விளக்கி இருக்கிறார் .சிறந்த ஜனநாயக நாடான இந்தியாவில் ,உலகத்துக்கே அகிம்சையை போதித்த உத்தமர் காந்தி பிறந்த மண்ணில் ஏன் சக மனிதனின் பீயை தலையில் ஒருவன் சுமக்கிறான் ?விளக்குவாரா பண்டிதர் ?
    விபச்சாரம் ,ஊழல் ,பிச்சை எடுத்தல் ,அனாதைகள் ,சேரிகள் ,பஞ்சம் ,பசி இவை எல்லாம் ஜனநாயகம் உலகுக்கு வழங்கிய சீதனங்கள்.
    இந்திய,பங்களாதேஷ் ,பிரேசில் மற்றும் ஆப்ரிக்கா நாடுகள்,லத்தீன் அமெரிக்க நாடுகளில் இவை சர்வ சாதாரணம் .

    சீன ,ரஷ்யாவில் இன்றைய ஜனநாயகம்(முதலாளித்துவம் ) அரியணை
    ஏறியதான் இந்த நாசம்.
    ஸ்டாலின் .மாவோ காலத்தை பற்றி பல முதலாளித்துவ வாதிகளே ஆச்சர்யத்துடன் மேல் சொன்ன சங்கதிகள் இல்லை என ஒத்து கொண்டவை தான் மேத்திரியாரே!

    • இந்தியாவில் தள்ளு வண்டில்கள் கக்கூஸ் அள்ளும் தொழிலாளருக்கு வழங்க படவில்லை.. அதை உபயோகித்திருந்தால் தலையில் வைத்து காவ வேண்டிய தேவை இல்லை..
      அந்த வண்டில்களை உபயோகப்டுதாதது யாருடைய பிழை?
      அதை உபயோக படுத்துவதை யார் தடுத்தது?
      முதலாளித்துவத்தில் தான் புதிய கண்டுபிடிப்புகளும் புதிய உபயோககங்களும் உருவாக்கப்பட்டன..ஏனென்றால் வாழ்வை வழமாக்குவதர்காக..
      ஆயிரம் வியாக்கியானம் பேசும் இந்த பன்னாடைகள் தங்களின் ஊரில் இருக்கும் ஒரு சக்கிளியனுக்காவது வண்டிலோ ..அல்லது கையுறையோ கொடுத்தானுகளா? இவனுகளால் ஊருக்கும் நன்மை இல்லை.. வீட்டுக்கும் நன்மை இல்லை..

  7. யோகன்,

    இந்தியா ஒரு அரை ஜனனாயகம், அரை முதலாளித்துவம். (a play of the popular ‘slogan’ of
    Ma.Ka.I.Ka !! ). இங்கு உண்மையான ஜனனாயகம் மற்றும் முதலாளித்துவம் இருப்பதாக
    யார் சொன்னார்கள் ? நெதர்லாந்து போன்ற நாடுகளை ஓரளவு சொல்லாம்.
    தைவான் பற்றி ஏன் விவாதிக்க மறுக்கிறீர்கள் ?

    நிலபிரவுத்தவம் மற்றும் மன்னராட்சி முறையில் இருந்து மிக இயல்பாக, படிப்படியாக
    சில நூற்றாண்டுகளில், ஜனனாயக பாணி முதலாளித்துவமாக மாறிய மேற்க்கு அய்ரோப்பிய நாடுகள் இன்று வளர்ந்த நாடுகளாகவும், லிபரல் ஜனனாயக அமைப்புகளாகவும் மாறியுள்ளன. கனடா போன்ற நாடுகளை சொல்லலாம்.

    சர்வாதிகார பாணி சோசியலிச / கம்யூனிச பாதைகள், அடிப்படை ஜனனாயகத்தை முற்றாக அழித்து, பிறகு பாசிசமாக உருவெடுத்ததை வரலாறு சொல்கிறது. காலனியாதிக்கத்தால் சீரழிக்கப்பட்ட பின், சுதந்திரம் பெற்ற ஆசிய / ஆப்பிரக்க நாடுகள்
    ‘சோசியலிச’ பாணி பொருளாதார கொள்கைகளை பின்பற்றியதன் விளைவாக ஊழல் மயமானது. அடிப்படை ஜனனாயகமும் பலவீனமடைந்தது. Cumulative and long term effects
    பற்றி அறிந்துகொள்ள வேண்டும். கிழக்கு அய்ரோப்பிய நாடுகள், வட கொரியா போன்றவற்றின் இன்றைய நிலை அப்படிதான்.

    இந்தியர்கள் 1947க்கு முன் இத்தனை ஊழல்வாதிகளாக இல்லை. அன்று நிலப்பிரவுத்துவம், சாதியம், கல்லாமை, கடும் வறுமை இருந்தது. ஆனால் சராசரி இந்தியனின் நேர்மை பல மடங்கு அதிகமாகவே இருந்தது. நம் நேர்மையை அழித்த
    சித்தாந்தம் பற்றிய எமது பழைய பதிவுகள் :

    http://athiyaman.blogspot.com/2006/02/why-indians-became-cynical_114041607453064093.html

    நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது
    http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_2745.html

    http://athiyaman.blogspot.com/2009/09/rajaji-on-sri-sri-prakasa-and-nehrus.html

    சீனாவை பற்றிய தகவல்கல் மிக சரியானவைதான். பல காலமாக இப்படிதான் சீன
    இருக்கிறது.

    ////உலகமயமாக்கத்தின் கீழ் எந்தளவுக்கு அரசு ஆதரவோடு தனியார் முதலாளித்துவம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அந்தளவுக்கு ஊழலும் கிரிமினல் குற்றங்களும் தீவிரமாகின்றன. ////

    அப்படியா ? தைவான் நாடு சைனா அருகில் இருக்கும் தீவு. 1948க்கு பின் சைனாவில் இருந்து பிரிந்து தனியார் முதலாளித்துவம் தீவிரமாக அமலாக்கப்பட்ட நாடு. அவர்களும் சீன இன மக்கள் தாம். இன்றைய தைவான் வளமான முன்னேறிய நாடு. ஊழல் மிக மிக குறைவு. எப்படி நிகழ்ந்தது இது ? சமீபத்தில் சென்னையில் ஒரு
    தைவான் நாட்டு அரசு அதிகாரியோடி உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பல விசியங்களை தெளிவுபடுத்தினார்.

    /////முதலாளித்துவத்தை ஒழிக்காமல், இக்கிரிமினல் குற்றக் கும்பல்களுக்கும் ஊழல் பெருச்சாளிகளுக்கும் மரணதண்டனை முதல் கடுமையான தண்டனைகள் விதிப்பதன் மூலம், தீவிரமாகிவரும் ஊழலையும் கிரிமினல் குற்றங்களையும் ஒழித்துவிட முயற்சிக்கிறது சீன முதலாளித்துவ அரசு.///

    சீனா ஒரு முழுமையான முதலாளித்துவ நாடல்ல. அங்கு இருப்பது அரைகுறை முதலாளித்துவம் ; அரசியல் முறை : ஜனனாயகமே இல்லாத காட்டு தர்பார்.

    முதலில் ஒரு விசியத்த புரிந்துகொள்ளுங்கள். அடிப்படை ஜனனாயகம் இல்லாத நாடுகள் இப்படிதால் சீரழியும். If capitalism is not based on a liberal democracy, then the results will be like this only. சீனாவை, தைவானுடன் ஒப்பிட்டாலே புரியும். இன்றைய ரஸ்ஸியாவையும், ஜெர்மனியையும் ஒப்பிட்டலாமே. கடந்த 60 வருடங்களில் அவை சென்ற பாதைகள், அடைந்த மாற்றங்களை பற்றி…

    The Russian mafia and mob did not merge over night after the fall of USSR in 1991. It was there for decades before 1991 and was the product of the black market and corruption of Soviet bureaucracy for
    decades. சீனாவிலும் இதே கதைதான்.

    செம்புரட்சி நிகழ்ந்தால், அது போக போக இப்படிதான் சீரழியும். The seeds of fasicism, anarchy and corruption are all held within a red revolution and they slowly manifest over the years.
    இதெல்லாம் திரிபுவாதிகள் மற்றும் ஏகாதிபத்திய சதிகளின் விளைவுகள் என்று உங்கள் வழக்கமான பல்லவியை பாடுவீர்கள் என்றும் அறிவேன்.

    • அதியமான் தைவான் தைவான் என்ன்று ஏன் குதிக்கிறார் என்று தெரிய வில்லை.தைவானின் நிலபரப்பு நமது கேரளாவுக்கு இணையானது .மேலும் அங்கு எதோ ஐரோப்பாவில் நடந்தது போன்று பெரிய முதலாளித்துவ புரட்சி நடந்து அதன் மூலம் அது முநேரியது போன்றும் அதை  எடுத்துக்கட்டாக கூறிக்கொண்டு இருக்கிறார் .நாளைக்கே அவர்கள் சீனாவுடன் ஒத்து போவதாக அறிக்கை விடட்டும் செல்வா செழிப்பு என்னவாகும் என்று தெரியும்.அங்கு உள்ள அதனை அணுக்களும் காணமல் போய்விடும்.ஏன் என்று நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள்.அப்புறம் அதியமான் வேற முதலாளித்துவ நாடே கெடைகலைய இல்ல அந்த நாட்ட உதாரணம் சொன்னா மாட்டிக்குவோம் என்ற பயமா ?

  8. பாஸ்கர், மேற்க்கு அய்ரோப்பிய நாடுகள், கனடா பற்றியும் குறிப்பிட்டுள்ளேன். முழுசா எமது பதில்களை, சுட்டிகளை படியுங்கள்.

  9. What has happened to Vinavu and other comrades and swines in m ka i ka.has China stopped giving these bastards unlimited supply of biriyaani and arrack?Why these swines are howling against china.

  10. மருது நீங்கள் முப்பது ஆண்டுகளாக தூங்கி கொண்டிருகிறீர்கள் எனக் கருதுகிறேன்.

  11. mani can you deny that maoists(naxals) in nepal and India have been receiving funds and arms from China in order to destabilize indiaand prevent Indian masses from gaining freedom from poverty?What is the source of fund for the unlimited supply of arms and luxury goods for the likes of maruthaiyan and other thugs ?

    • நான் மணி

      மன்னிக்கவும் அந்தப் பணத்தை உங்களது அம்மாதான் தந்தார்கள்.. அவர்கள் அதனை என்ன தொழில் செய்து தந்தார்கள் என என் வாயால் சொல்ல முடியாது.

  12. சீனாவின் இன்றைய நிலை முதலாளித்துவத்தை அரைகுறையாக அமலாக்கியதால் மட்டும் உருவாகவில்லை. பல பத்தாண்டுகளுகாக அங்கு நிலவிய அரசியல் / சமூக
    கோட்டுபாடுகளின் நிகர விளைவு இது. முக்கியமாக கலாச்சார புரட்சி என்று மாவோ
    ஆரம்பித்து வைத்த வேட்டை மற்றும் கொலைகள். தனக்கு ‘போட்டியாக’ இருப்பவர்களை ஒழித்துக்கட்ட அவர் ஆரம்பித்த ‘புரட்சி’ பெரிய சிக்கலாக நாட்டிற்க்கே
    ஆனாது. இதெல்லாம் ஏகாதிபத்திய கட்டுகதை என்று நிராகரிப்பீர்கள்.

    The Last Emperor என்ற அருமையான திரைபடத்தில், சீனாவின் கடைசி மன்னனின் வாழ்க்கை வரலாற்றை திறம்பட சொல்லியிருப்பார்கள். அதில் 60களில் நடந்த
    கலாச்சார புரட்சி பற்றி சில காட்சிகள் உண்டு. அவரை சிறைபிடித்து, சிறையில்
    நேர்மையாக நடத்திய ஒரு செம்படை தலைவரை, 60களில், அவரின் முதிய வயதில்,
    ‘திரிபுவாதி’ என்று முத்திரை குத்தி எப்படி பொதுவில் வைத்து அவமானப்படுத்தி, தண்டனை தந்தார்கள் என்பதை காட்சிபடுத்தியிருக்கிறார்கள்.

    அது ஒரு வகையான mob frenzy unleashed by young red gurads. Indiscriminate and arbitary arrests,
    Denouncitaiton and executions across the nation. ஒரு வகையான கட்டுபாடடற்ற மதவதாம் போல. பகுத்தறிவிற்க்கு அங்கு இடமில்லா உணர்சி பேரலை. இது போன்ற ‘மாற்றங்கள்’
    சீனா சீராழந்தற்க்கு காரணிகள். All these were part of reasons for the internal corruption, power struggle, etc.

    இக்கட்டுரையில் வெளிவராத பல பல கொடுமைகள் அங்கு உள்ளன. Forced labour and slave labour camps, prisoners being mercilessly exploited under inhuman working conditions in sweat shops, etc. All hidden behind the bamboo curtain…..

    • அதியமான், சீனாவில் இன்று முழுமுதலாளித்துவம் அதாவது பொருளாதார அர்த்த்தில் அமலாகியிருக்கிறது. மிகப்பெரும் முதலாளிகளும், அந்த முதலாளிகள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பதும், பல கம்யூனிசத் தலைவர்களின் வாரிசுகள் முதலாளிகளாக இருப்பதும் அங்கே உண்மை. ஒரு கட்சி சர்வாதிகாரம் இருப்பதால் அது முதலாளித்துவம் இல்லை என்றாகிவிடாது. பல முதலாளித்துவ நாடுகளில் நாடாளுமன்ற சர்வாதிகாரம் இருப்பது போல இது ஒரு முறை. அடுத்து கலாச்சாரப் புரட்சியின் போது மாவோ தனது போட்டியாளர்களை ஒழிக்க முயன்றார் என்பது அப்பட்டமான பொய். அது உண்மையின்றிருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்ட டெங்சியோ பிங்க், லியோ ஷோசி முதலானோர் கொல்லப்பட்டிருக்கவேண்டும். மாறாக அவர்கள் தங்களை சுயவிமரிசனம் செய்து கொண்டு மீண்டும் கட்சியில் பதவிகளைப் பிடித்தார்கள். எல்லாவற்றையும் அறைகுறையாக அறிந்து கொண்டு நீங்கள் கூறுவதையெல்லாம் பின்னூட்ட ஜனநாயகத்தின் பெயரால் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

      • ///அதியமான், சீனாவில் இன்று முழுமுதலாளித்துவம் அதாவது பொருளாதார அர்த்த்தில் அமலாகியிருக்கிறது.//

        இல்லை. முழுமுதளாத்துவம் என்றால் என்னவென்பதில் வேறுபடுகிறேன்.
        முக்கியமாக அரசு துறை இன்றும் பெரிய அளவில் உள்ள அமைப்பை முழு முதலாளித்துவம் என்று சொல்ல முடியாது. தனி நபர் சொத்துரிமை, பிற அடிப்படை உரிமைகள், தனிநபர்கள் சுதந்திரமாக தொழில் துவங்கும் உரிமை : இவை சீனாவில்
        ஒழுங்காக, ஏன் அரைகுறையாகக்கூட இல்லை. ஒரு சீன நாட்டவருக்கு அத்தனை
        சுதந்திரம் இல்லை. வெளிநாட்டினர் மற்றும் வெளி நாட்டில் வசிக்கும் சீனர்கள் முதலீடு செய்து தொழில் துவங்க இருக்கும் உரிமைகள், சீன நாட்டின் சாதாரண குடிமகன்களுக்கு இல்லை. PLA எனப்படும் சீன ராணுவம் பல பெரும் தொழில் நிறுவனங்களை நடத்துகின்றது. பல ஊழல்கள், மீறல்களுடன். இதை முழு முதலாளித்துவம் என்கிறீர்கள். நேதர்லாந்து போன்ற நாடுகளிலும் ‘முழு முதலாளித்துவம்’ தான் ; இரண்டும் ஒன்றா என்ன ?

        China has crony capitalism with collusion of corrupt and fasicistic ruling regime in collusion with mafia like elements. Certainly this is not free market capitalism based on liberal democracy..

        நாடாளுமன்ற சர்வாதிகாரமா ? புதுக்கதையா இருக்கே. இன்றுதான் கேள்விபடுகிறேன்.
        இன்னும் என்னென்ன கண்டுபிடிக்க போகிறீர்களோ !!

        ///கலாச்சாரப் புரட்சியின் போது மாவோ தனது போட்டியாளர்களை ஒழிக்க முயன்றார் என்பது அப்பட்டமான பொய். அது உண்மையின்றிருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்ட டெங்சியோ பிங்க், லியோ ஷோசி முதலானோர் கொல்லப்பட்டிருக்கவேண்டும். மாறாக அவர்கள் தங்களை சுயவிமரிசனம் செய்து கொண்டு மீண்டும் கட்சியில் பதவிகளைப் பிடித்தார்கள்.//// எது அப்படமான பொய் என்பதை வரலாறு முடிவு செய்யும். டெங் பல காலம் வனவாசம் அனுப்பபட்டார். அவரின் மகனை கல்லூரி விடுதியில் மேல் மாடியில் இருந்து தூக்கிவீசப்பட்டு முடமாக்கப்பட்டார். மாவோ பற்றி உங்கள் version தான் உண்மை, மற்ற தகவல்கள் எல்லாம் பொய்கள் என்று நீங்கள் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளாம்.

        ////எல்லாவற்றையும் அறைகுறையாக அறிந்து கொண்டு நீங்கள் கூறுவதையெல்லாம் பின்னூட்ட ஜனநாயகத்தின் பெயரால் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.////

        ))))) நீங்கள் ஆட்சி அதிகாரத்தை புரட்சி மூலம் கைபற்றினால் முதல் வேலையாக இந்த ‘ஜனனாயகத்தை’ ஒழித்துக்கட்டுவீர்கள் எனபது தெளிவாகிறது. யார் அரைகுறை என்பதை வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். ஓ.கே தோழர் ?

    • ஏன் இப்படி? தமிழிலும் ஆங்கிலத்திலும். தமிழ் பட கதாநாயகன் மாதிரி. இது தமிழ் விவாத தளம் தானே! தமிழ்ல அடிங்க!

    • அதியமான்,
      நீங்கள் புராதான பொதுவுடைமை சமுதாயம் முதல் முதலாளித்துவ சமுதாயம் வரையிலான அவற்றைப்பற்றிய தோற்றம் வாழ்வு முடிவு களைப்பற்றி தெரிந்துகொள்ள முயலுங்களேன்.

  13. உங்க பதிவுல இததான் முதல்ல சொன்னேன்… உடனே அத கொண்டு போய் எங்கயோ கெடாசிட்டிங்க.. அதான திருப்பித் திருப்பிச் சொல்றேனே.. முந்தா நாள் ரசியாவில.. நேத்து சீனாவுல.. இன்னிக்கு நேபாளம்னு சொன்ன உடனே நாளைக்கி எல்லா நாட்லயும் கம்யூனிசம் சரிஞ்சுடுது.. அதுக்கு ஆயிரம் வியாக்யானம் சொன்னாலும், சரியுதா இல்லையாங்க கேள்வி எளிமையானது.. சரியுது.. அதுக்கு ஆயிரம் வெளிக்காரணி இருந்தாலும் (சிஅய் ஏ சதி இத்யாதி இத்யாதி) உள் காரணி.. கம்யூனிசம் ரொம்ப சுத்தமா இருக்கறதனால வெளியே வந்தஉடனே சீக்கு புடிச்ச கோழிமாதிரி செத்துப் போவுது… முதல்ல அது கெடாம பாதுகாக்கற ஒரு உபகரணத்த கண்டுபிடிச்சப்பறம் கொண்டாங்க.. இல்லன்னா செத்துப் போய்ரும். மறுபடியும் பேக் டு சீரோ… அதக் காப்பாத்தணும்னு நினைச்சுத்தான் ஸ்டாலின் மாவோ மிகக் கடுமையா நடந்து அது சர்வாதிகாரமா மாறி.. அப்பா.. கொடுமை.. அதனால முதல்ல கொளந்தய பொழக்க வைக்கிற இன்குபேட்டர கண்டுபிடிங்க…

    • சரியாக சொன்னிர்கள். இதற்கு அர/கால் டிக்கெட், குறி நரி மற்றும் ஜால்ரா கும்பலிலிருந்து ஒரு பதிலையும் காணோம்?.

    • இன்னிக்கு மூளையில நகசுத்தி அதனால ஒரு காப்பி பேஸ்ட் பதில்.
      @@@@@@@@@@@@
      முதலாளித்துவத்துக்கு 300 ஆண்டு காலம் வயது இருக்குமா! இதற்குள் ஆயிரக்கணக்கான வங்கி திவால்கள்! பத்தாண்டுகளுக்கொருமுறை சுழற்சிமுறையில் வரும் தேக்கம்! நாடு பிடிக்கும் போட்டியில் மிகப்பெரும் சேதங்களை விளைவித்த இரண்டு உலகப்போர்கள்! எவ்வளவு சுரண்டல்! எவ்வளவு பஞ்சம்! ஒரு பக்கம் ஆயிரம் தலைமுறைக்கு சொத்து! அதே நாட்டில் அடுத்த வேளை சோற்றுக்கு திண்டாட்டம். இதுதான் முத‌லாளித்துவ‌த்தின் ல‌ட்ச‌ண‌ம். முத‌லாளித்துவ‌ம் தோற்றுக்கொண்டே இருக்கிற‌து. க‌ட‌ந்த‌ ஆண்டு த‌லை குப்புற‌ க‌விழ்ந்து கிட‌க்கிற‌து. இதைப் ப‌ற்றி பேச‌ ம‌றுக்கிறார்க‌ள். ஆனால்… சோச‌லிச‌ம் க‌ட்டிய‌மைத்த‌ சில‌ நாடுக‌ள், சில‌ காலமே இருந்தாலும், ‍ எவ்வ‌ள‌வு முன்னேற்ற‌ங்க‌ள். வ‌ள‌ர்ச்சிக‌ள். க‌ம்யூனிச‌ம் தோற்று போச்சு! என … முத‌லாளிக்கு வ‌க்கால‌த்து வாங்க‌ வ‌ரிசை க‌ட்டி நிற்கிறார்க‌ள் எல்லா வ‌ர்க்க‌ங்க‌ளிலும்.
      நன்றி குருத்து!!!!
      @@@@@@@@@@@

      மன்டே மீட் பண்ணலாம் மக்கா!!

  14. நான் மணி

    எனது அடிப்படை பண்பு மனித நேயம் பற்றிய உங்களது அவதானிப்புக்கு நன்றி. உதாரணத்திற்கு நீங்கள் இன்றைக்கு செத்துப் போனாலால் நான் எப்படி உங்களுக்கு அனுதாபம் தெரிவிக்க முடியும். நீங்க டாடா ஓ அல்லது அம்பானியோ இல்லைதான். ஆனால் அவர்களது நிலைப்பாட்டை உங்களது அறிவின் மூலம் நியாயப்படுத்துகிறீர்கள்.. அதாவது ஜஸ்டிபை பண்ணுகின்றீர்கள். உங்களுக்காக நான் அனுதாப்ப்பட முடியாதுதானே..

    அப்புறம் அது என்னங்க .. கம்யூனிஸ்டின்னா மாத்திரம் மனிதநேயம் கேப்பீங்க•.. முதலாளிகள்னா கேக்க மாட்டீங்களாக்கும்.. மேற்கு வங்காளத்தில் பல விவசாயிகளைக் கொன்று அவர்தம்மின் வீட்டுப்பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதை செய்தி வெளிவந்த பிறகும் ஒத்துக்கொள்ளாத சந்திப்பு போன்றவர்களை அவர்களது மரணத்திற்காக ஆதரிக்க முடியாது. மனிதநேயம் என்ற பெயரில் எனது நிலைப்பாடை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

    கடை வைத்து நட்டமடைந்தவர்கள், மேல்நிலை முதலாளிகளிடையிலான போட்டியில் தோற்ற முதலாளிகளை வைத்து முதலாளித்துவத்திற்கு எதிராக பேச வைக்க முடியாது. ஏனெனில் அதில் சுயநலனில் எப்படி தோற்றோம் என்பதுதான் வெளிப்படும். அதன் எளிய கொடூரமான முகம் வெளியில் தெரிய அரசியல் சமூக கல்வி அவசியமாகிறது. உங்களுக்கும் கூட•. ஒரு பொதுநலனான கம்யூனிசத்திற்காக பாடுபடும் அனைவரிடமும் சுயநலன் இல்லாமல் போய்விடும் என எப்போதுமே உறுதி சொல்ல முடியாது. ஆனால் சுயநலனை பொதுநலன் வெல்லும் முயற்சிஇயல் அவர்கள் இருப்பர். சொத்துடமை ஆசை இதனை தலைகீழாக்கும் தருணங்களில் தங்களை ஆளும்நிலையில் வைத்திருக்கும் சில முன்னாள் கம்யூனிஸடுகள், அவர்கள் வானத்தில் இருந்து குதிக்காதபடியால் சுயநலனான முதலாளித்துவம் பக்கம் உங்களைப் போலவே ஷால்ரா அடிக்கத் துவங்குகின்றனர். நியாயமானவர்கள் தோற்ற வரலாறுதான் அதிகம் என்பதற்காக அநியாயம் நியாயமாகி விடாது. நியாயம் ஒருநாள் வெல்வதற்கு அது அநியாயத்தை எதிர்த்த போராட்டத்தில் உறுதியாக இருப்ப‍தில்தான் உள்ளது.

    முன்னாள் நல்லவர்களிடமிருந்து எப்படி நல்லது தவறு என கட்டுரை எடுப்பது ஒன்றும் கடினமல்ல• இதற்குத்தானே கெட்டவர்கள் காலம் தோறும் தயாராக இருக்கிறார்கள்.. என்ஜிஓ வாக, அறிவாளிகளாக•.

    • நான் மணி, அதியமானை முதலாளித்துவத்தின் பிரதிநிதியாகவும், சந்திப்பை சி.பி.எம்மின் பிரதிநிதியாகவும் பார்த்தால் அப்புறம் இத்தகைய கருத்துக்களை கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களையும் எதிரிகளென்றுதான் பார்ப்பீர்களோ.

      • கருத்துகளை கொண்டிருப்பதற்கும் கருத்துகளை நியாயபடுதுவதர்க்கும் வித்தியாசம் உள்ளது..

      • // இத்தகைய கருத்துக்களை கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களை //

        வாழ்த்துகள். பெரும்பான்மை மக்கள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற உண்மையை ஒப்புகொண்டதட்கு.

  15. சீனா மாவோவின் காலத்தில் சரியாக இருந்தது.அப்புறம் ‘கெட்டுப்’ போய்விட்டது என்பது பொய்.மாவோ இருக்கும் போதே அமெரிக்காவுடன் கை குலுக்க ஆரம்பித்தாயிற்று.மாவோவின் கலாச்சாரப் புரட்சியின் மோசமான விளைவுகளை களைய அவரது மரணத்திற்குப் பின் கட்சி முடிவு செய்தது.1978ல் தாரளமயமாக்கல் கொண்டுவரப்பட்டது.இல்லையென்றால் சீனாவில் இத்தனை வேலைகள் உருவாகி இருக்காது.முதலாளித்துவதிற்கு சரியான மாற்று கம்யுனிசம் என்றால் அது வெற்றி பெற்ற ஒரு பெரிய நாட்டைக் உதாரணமாக காட்டுங்கள். வியதனாமே இப்போது அமெரிக்கா ஒழிக என்று சொல்வதில்லை. முதலாளித்துவ நாடுகளான ஸ்வீடன், ஹாலந்து, டென்மார்க், நார்வே போன்றவையும், கனடாவும் முதலாளித்துவம் என்றால் சிலர் கொழிப்பர்,பெரும்பாலோர் உணவிற்கே திண்டாடுவர் என்று இல்லை என்று காட்டியுள்ளன. அங்கெல்லாம் பொருளாதார ஏற்றத்தாழ்வு உண்டு ஆனால் கொடிய வறுமை இல்லை, மக்களுக்கு சுதந்திரம் உண்டு, அடிப்படை தேவைகளுக்காக ஒருவர் அதிக சிரமப்பட வேண்டியதில்லை. ரஷ்ய,சீன அனுபவங்களை வைத்துப் பார்த்தால் கம்யுனிசம் தோற்றதாகவே கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டு பெரிய நாடுகளில் பெரும் புரட்சி மூலம் கம்யுனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தனர். இரண்டு நாடுகளும் மனித உரிமைகளை மதிக்கவில்லை.ரஷ்யா சிதறிவிட்டது.
    சீனா கம்யுனிசத்தை கைவிட்டு விட்டது. எனவே சீனா கெட்டுப்போய்விட்டது அதற்கு மாற்று மாவோயிசமும்,ஸ்டாலினிசமும் என்றால் சிரிக்கத்தான் தோன்றுகிறது. அந்தக் கொள்கைகளுக்கு உயிரூட்ட முயலும் உங்களுக்கு என் அனுதாபங்கள்.

    • இந்தியால கூட முதலாளித்துவம் வந்து 20 வருஷம் ஆச்சிங்க பாஸ் ..

      அமேரிக்கா காரன் போட்டுட்டு கலட்டி போடுற காண்டம் ஐ சுவிங்கமாக மெல்லும் முதலாளித்துவ வாதிகளே .. இந்த 20௦ வருசத்தில் .. இந்தியாவில் விலைவாசி வுயர்வைத்தவிர .. என்ன ம*ரைக் கண்டீர் … பல முதலாளிகள் சுவிஸ் வங்கியில் இந்தியாவின் பெயரை நிலை நாட்டியது தான் மிச்சம் .. வறுமை போய் விட்டதா

  16. ”சீரழிந்த சீனா, இன்னுமொரு பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியை எதிர்நோக்கி நிற்கிறது.”

    மருதையன்,வினவு கும்பலை அங்கே யாரும் அழைத்து புரட்சிக்கு தலைமைதாங்க வைக்க தயாராக இல்லையா.மகிழ்வுடன் அவ்ர்களை அனுப்ப தமிழ்நாடு தயார் என்பதை சீனப் பட்டாளி வர்க்கத்திற்கு யாரவது எடுத்துச் சொல்லுங்கள்.

    • அருமையான ஐடியா. இதை உடனடியாக செயல்படுத்த பரிந்துரைக்கிறேன்.

  17. தோழர் கலை யின் பரிந்துரை தான் சிறந்ததாக உள்ளது.முழுமையாக வரலாறுகளை தெரிந்து கொள்ள விரும்பாதவர்களும் அரை குறையாக புரிந்து வைத்துள்ள குழப்பவதிகளுடன் கன்ன்மூடித்தனமான கம்யூநிஸ் எதிர்ப்பலர்களுடுன் வாதம் புரிவதில் அர்த்தம் இல்லை .ஒன்று சொன்னால் அதை பார் இதை பார் என்கிறபோக்கில் விவாதிக்கரர்கள்.
    இன்றைய ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வேலையற்றவர்களுக்கான உதவி தொகை இன்ன பிற சலுகைகள் எல்லாம் வழங்கபடுவது எதனால்.?
    அங்கே வாழும் சகலரும வசதியாகவா வாழ்கிறார்கள் ?எத்தனையோ மக்களிடம் கார் எல்லாம் கிடையாது ? மேல் சொன்ன சலுகைகளை எல்லாம் ஆறு மாதத்திற்கு அரசு நிறுத்தினால் என்ன நடக்கும் என்பது ஆட்சி செய்பவர்களுக்கு நன்றாகவே தெரியும் .அந்த மாதிரியான சலுகைகளை எல்லாம் மர்க்ஸ்யத்திட்கு பயந்து தான் நடைமுறையில் உள்ளன .
    தனியுடமை வரலாறு ,அதன் வலிமை ,அதன் கொடுமைகள், அதை ஒழிக்க மனிதர்கள் செய்த முயற்சி ,அதனை தடுக்க அதனை ஒழிக்க மனித விரோதிகள் செய்துவரும் கழுத்தறுப்புகள் ,( தங்களை நல்லவர்கள் போல் காட்டி கொண்டு நடிக்கும் வேடதாரிகள் ) என்பதுடன் எத்தனையோ சித்தாந்தங்களை எல்லாமும் எதிர்த்து மார்க்சியம் போராடி வருகின்றது.
    மாக்சிய எதிரிகளும் “சோசலிஷம் ” பேச வைத்ததே (இன்று வரை ) கம்யுனிஷ சித்தாத்தின் வெற்றியாகும்

  18. யோகன்,

    இதே டைலாக்குகளை நான் உங்களை பார்த்து மிக சுலபமாக சொல்ல முடியும். !!
    பொருளாதார வரலாறு பற்றி முழு விபரங்கள் அறியாதவர் என்று !

    கலை,

    அவை பற்றி சிறிது படித்திருக்கிறேன். கீழ்கண்ட இலவச மின் நூல்களை தரவிறக்கி, நீங்கள் படியுங்கள் :

    ‘The conquest of poverty’ by Henry Hazlitt
    http://www.mises.org/books/conquest.pdf

    ‘The Anti-Capitalistic Mentality’ by Ludwig von Mises
    http://mises.org/etexts/anticap.pdf

    • “அவை பற்றி சிறிது படித்திருக்கிறேன்.”
      என்ன பிரயோசனம் அதியமான், உங்களது மூளை தொழிலாளர்களைப் பற்றி சிந்திக்க மறுக்கிறதே.

  19. ஐரோப்பா ,அமெரிக்காவில் உள்ள” பொருளாதார மேதைகள்” எல்லாம அதியமான் தந்திருக்கும் நூல்களை எல்லாம் படிக்காததால் தான் அந்த நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது போலும்,இது போன்ற சவடால்கள் எல்லா காலங்களிலும் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது.

  20. Yogan,

    there is a great debate going on among economists and polciy makers about Keynesian econimics and Milton Friedman’s monetarists who have opposing views about money supply, deficit financing and govt control. they are all opposed to communism and are for free markets. But there is no consensus yet among them as there is variations in the definition for ‘free markets’ ; esp about govt intervention in money markets and regulation. The current crisis is a result of complex variables and one of them is the uncontrolled gambling by banks with borrowed money. Other main reasons are over supply of moeny into the sytem by govts everwhere, due to their ever increasing defict budgets ; subsidising housing loans, etc. more at :

    http://athiyaman.blogspot.com/2009/04/distortions-in-money-markets-due-to.html

    • என்னப்பா அதியமான் ..
      உனக்கு என்ன பிரச்னை ?.. எப்ப பாத்தாலும் , அமேரிக்காவ பாரு , தைவான பாரு , கனடாவ பாரு நு … சொல்லிடு இருக்க ?.. சரி .. ஒரேடியா அமேரிக்கா அமெரிக்கான்னு குதிச்சிங்க …

      பாவம் .. இப்போ அமேரிக்கா காரனே .. நக்கிட்டு திரியிறான் .. ஆமா யா ..இங்க இருந்து விப்ரோ , ஹெச் சி எல் போன்ற நிறுவனங்கள் போயிட்டு ரொம்ப கம்மியான விலைக்கு , பிராஜெக்ட்ட வாங்கிட்டு வந்திடுரானுங்க .. அமெரிக்கால இருக்க பட்ட தாரி சர்ச் ல ஓசி சோறு சாப்டுகிட்டு இருக்கான் … அமெரிக்காவுல அடுத்து பொருளாதார சீர்குலைவு வந்ததும் .. இப்போ அமேரிக்காவ விட்டுட்டு ..கனடாக்கும் , தைவானுக்கும் பரந்துட்டேல் .. சரி தம்பி .. நீயும் எதோ சின்ன முதலாளி தான்னு நினைக்கிறன் .. அம்பானியோட மயித்துக்கு ஆக முடிஞ்சதா உன்னால .. நீ என்ன தான் உயர பறந்தாலும் … ஈ .. பருந்தாக முடியாது பா ..

      உனக்கு மார்க்சிசம் நா என்னான்னு தெரியுமா ?..
      பொது வுடைமை ல என்ன பிரச்சன இருக்கு நு நினைக்கிற.. அதை சொல்லு …
      அத விட்டுட்டு .. சீனா ல ஜட்டி போடாததுனால முட்ட கீழ விளுந்துடுசினு சொல்லாத ,,,
      விவாதிக்கலாம் வா .. சித்தாந்த ரீதியா , நான் ஒரு கம்யுனிச மாணவன் தான் … உன்னோட முகத்திரை கிழிக்க நான் போதும் ..
      வந்து பேசுப்பா ….வா ..

  21. ல விக்கிலீக்ஸ் இணையதளத்தின் டெக்னாலஜி எதிரி அமெரிக்கா அல்ல அது சீனா மட்டுமே என ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார். லண்டனில் நியூ ஸ்டேட்மெண்ட் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், சீனாவின் செய்திகளை சென்சார் செய்யும் முறை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். போலியான மற்றும் வலிந்து சண்டைகளை ஏற்படுத்தும் முறையை சீனா கடைபிடித்துவருவதாகவும், விக்கிலீக்சின் டெக்னாலஜி சீனா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  22. உலக மக்கள் புரட்சி சீனாவின் அடிவயிற்றையும் கலக்க

    உலக மக்கள் புரட்சி சீனாவின் அடிவயிற்றையும் கலக்க ஆரம்பித்தது.

    வெடிக்கும் எரிமலைக்கு முன் நியாயங்கள் பேசுவதில் பயனில்லை..
    ஆசிய – தென்னாசிய நாடுகள் நோக்கி வருகிறது புயல்…

    தற்போது வடக்கு ஆபிரிக்கா நாடுகளிலும், மத்திய கிழக்கிலும் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி என்பது உலக வரலாற்றில் பதியப்பட வேண்டிய மகத்தான விடயம் என்பதை உலக அறிஞர்கள் படிப்படியாக ஒப்புக்கொள்ள ஆரம்பித்து வருகிறார்கள்.

    நடைபெறுவது வெறும் மத்தியகிழக்கு புரட்சி அல்ல அது உலக மக்கள் புரட்சியாக மாறும் அத்தனை உட்கருக்களையும் கொண்டுள்ளது. இப்போது தமது நாட்டிலும் இந்தப் புரட்சி பரவிவிடுமோ என்ற பீதியே சகல ஆட்சியாளர் மனங்களிலும் புயலாக வீசிக் கொண்டிருக்கிறது.

    உலக மக்கள் புரட்சி சீனாவின் அடிவயிற்றையும் கலக்க ஆரம்பித்தது.

    வெடிக்கும் எரிமலைக்கு முன் நியாயங்கள் பேசுவதில் பயனில்லை..
    ஆசிய – தென்னாசிய நாடுகள் நோக்கி வருகிறது புயல்…

    தற்போது வடக்கு ஆபிரிக்கா நாடுகளிலும், மத்திய கிழக்கிலும் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி என்பது உலக வரலாற்றில் பதியப்பட வேண்டிய மகத்தான விடயம் என்பதை உலக அறிஞர்கள் படிப்படியாக ஒப்புக்கொள்ள ஆரம்பித்து வருகிறார்கள்.

    நடைபெறுவது வெறும் மத்தியகிழக்கு புரட்சி அல்ல அது உலக மக்கள் புரட்சியாக மாறும் அத்தனை உட்கருக்களையும் கொண்டுள்ளது. இப்போது தமது நாட்டிலும் இந்தப் புரட்சி பரவிவிடுமோ என்ற பீதியே சகல ஆட்சியாளர் மனங்களிலும் புயலாக வீசிக் கொண்டிருக்கிறது.

    கேணல் கடாபியும், அவரோடு இணைந்து பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்திய அத்தனை தளபதிகளும் உலகில் எந்த நாட்டுக்கும் பயணிக்க முடியாது என்று பயணத் தடை போடப்பட்டுள்ளது. கடாபிக்கு பாதுகாப்பு வழங்குவோம் என்ற சிறீலங்கா இப்போது தனது தூரப்பார்வையின் மதிகெட்ட தனத்தை உணர்ந்திருக்குமோ தெரியாது.

    அதுதவிர கடாபியின் சொத்துக்கள், உடமைகள் உலகின் எங்கிருந்தாலும் அனைத்தும் உறைய வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ உதவிகள் ஆயுத ஏற்றுமதிகள் எதுவும் இனி அங்கு நடைபெறக்கூடாது. மேலும் கடாபி மக்கள் மீது போர்க்குற்றம் புரிந்தார் என்பதை ஆராய தனியான ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதேபோன்ற ஒரு குழு சிறீலங்காவிற்கும் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்கு சிறீலங்கா ஒத்துழைக்காவிட்டால் அவர்கள் பாதுகாப்பு சபையின் அடுத்த அம்புகளை சந்திக்க நேரும். அந்த நேரம் வரும்போது சீனா, இந்தியா இரண்டும் சிறீலங்காவை கைவிடும் காட்சியை தெளிவாகக் காணலாம்.

    வடக்கு ஆபிரிக்க நாடுகளில் காலனித்துவத்தை வைத்திருந்து, அந்த நாடுகளுடன் நெருங்கிய உறவுகளை பேணிய நாடு இத்தாலி. கேணல் கடாபிக்கும் இத்தாலிய பிரதமர் சில்வியோ பலர்ஸ்கோனிக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. சமீபத்தில் கடாபியின் 40 வருட கொடுங்கோல் ஆட்சிக்கு பரிசாக ஒரு ஐ.சி ரயில் வண்டியை கொடுத்தவர் பலர்ஸ்கோனி. அவர் நேற்று ரொய்டர் செய்தித்தாபனத்துக்கு பேட்டியில் லிபிய அதிபர் கடாபி மக்கள் எதிர்ப்பைச் சந்தித்து பதவியில் அதிக நாட்கள் நீடித்திருக்க முடியாது என்று தெரிவித்தார்.

    இன்று வெளியிடப்பட்ட ஐ.நா பாதுகாப்பு சபைத் தீர்மானத்தால் கடாபியின் குடும்பமே பொறிக்கிடங்கில் மாட்டுப்பட்டுவிட்டது. அவருடைய பிள்ளைகளில் பலர் வெளி நாடுகளில் படிக்கிறார்கள். அனைவரும் பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் இருந்தால் மக்களால் தண்டிக்கப்படும் அவலம் ஏற்படும், நாட்டை விட்டு வெளியேறினால் போர்க்குற்ற நீதிமன்றுக்கு போக வேண்டும். கடாபிக்கு போராடிச் சாவதைவிட வேறு பாதை எதையும் சர்வதேச சமுதாயம் விட்டு வைக்கவில்லை.

    அன்று..

    பர்மாவிலும், சிறீலங்காவிலும் நடைபெற்ற மக்கள் புரட்சிகளை அடக்க துணைபோன சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் இன்று நடைபெறும் நிகழ்வுகளை வைத்து, தமது இராஜதந்திரத் தவறுகளை உணர்ந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு. எனினும் முதலாவதாக சீனாவின் அச்சமே சர்வதேச அரங்கில் பெரிதாகப் பேசப்படுகிறது. இந்தப் பிரச்சனைகள் சீன ஊடகங்கள் வழியாக பெரிது படுத்தாமல் சீனா கவனமாகப் பார்த்து வருகிறது. ஆனால் சீனாவில் இணையம் வேலை செய்கிறது. தகவல்கள் அறிவார்ந்த சீனத் தலைமுறையால் அவதானிக்கப்படுகிறது. எரிமலை கக்கும் புகைக் கோடு அங்கே தெரிகிறது…

    சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவரை சிறையில் போட்டுள்ள சீனா தனது இரும்புக் கம்பிகள் உடையும் என்று அஞ்சுகிறது.

    2001 ல் ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தனது வெளிப்படையான பயங்கரவாதப் பட்டியலில் குறிப்பிட்ட அனைவரையும் ஏறத்தாழ ஒடுக்கிவிட்டது. அடுத்த கட்டமாக இப்போது பட்டியலில் போடப்படாத இலக்குகளை நோக்கித் திசை திரும்பியுள்ளது. நேட்டோ படைகள் இல்லாமலே காரியம் கச்சிதமாக நடைபெற்றும் வருகிறது.

    அக்காலத்து ஜேர்மனிய இராஜதந்திரி பிஸ்மார்க் அன்றைய ஜேர்மனிய சக்கரவர்த்தி பேர்டினன்ட் வில்லியத்துக்கு ஒரு விடயத்தை தெளிவாக சொன்னான். உலகப் பொருளாதாரத்தில் முதலிடத்திற்கு வருவதற்கு முயற்சிக்காதே, குடியேற்ற நாடுகளை அமைக்க முயற்சிக்காதே. இரண்டையும் செய்தால் ஜேர்மனியில் இரத்த ஆறு ஓடும் என்று கூறினான். ஆனால் பேர்டினன்ட் வில்லியம் அவனைப் பதவி விலத்தி முதல் உலகப் போருக்கு ஜேர்மனியை களமாக்கினான். அதே தவறை சர்வாதிகாரி ஹிட்லரும் இழைத்து இரண்டாவது உலகப் போரை வரவழைத்தான்.

    சென்ற வாரம் சீனா பொருளதார வளர்ச்சியில் ஜப்பானை முந்திக் கொண்டு உலகின் இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்டது. அது மட்டுமல்லாமல் சிறீலங்கா முதல் கொண்டு லிபியாவரை சகல இடங்களிலும் தனது காலனித்துவ ஆதிக்கக் கரங்களை நீட்டுகிறது. மேலும் ஆபிரிக்க வர்த்தகத்தில் அமெரிக்காவை முந்திச் சென்றுவிட்டது.

    பேர்டினன்ட் வில்லியம் செய்த அத்தனை தவறுகளையும் செய்த சீனாவுக்குள் இந்த மக்கள் புரட்சி பாயும் என்றே கருத வேண்டியுள்ளது. அணு ஆயுதம், உலகின் பெரிய இராணுவம் இரண்டையும் மக்கள் புரட்சியால்தான் தோற்கடிக்கலாம். இன்று ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி உலக மக்கள் புரட்சியாகி பலரைத் தோற்கடிக்கப் போகிறது.

    இதற்குப் பயந்து மக்களுக்கு அதிக உரிமைகளை கொடுத்தாலும் அது வெடிக்கும்..
    உரிமைகளை கொடுக்காவிட்டாலும் அது வெடிக்கும்…

    வெடிக்கும் எரிமலைக்கு நீரை ஊற்றி அணைக்கவா முடியும்…?

    அலைகள் சர்வதேச அரசியல் விவகார நோக்கல் 27.02.2011

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க