Monday, September 16, 2024
முகப்புகலைகவிதைவரலாற்றைப் படித்து வர்க்கமாய் எழு தோழி!

வரலாற்றைப் படித்து வர்க்கமாய் எழு தோழி!

-

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 6

ஆண் என்றும் பாராமல்
என்னைப் பேச அனுமதித்த
பெண்களுக்கு முதல் வணக்கம்.

பெண்களைத்
திட்டியே தீர்த்த ஆணாதிக்கத்தின்
சொற்கொலைகளையும் தாண்டி,
பெண்ணின் வர்க்க உணர்வுக்கு
வார்த்தைகளை உசுப்பிவிடும்
இறவா தமிழுக்கும் என் வணக்கம்.

கைத்தலம் பற்றி
நான்குசுவருக்குள் நயம்படச்சுரண்டி
தன்னைச்சுற்றி நடப்பதேதுமே
தெரியாததுபோல்,
பொய்த்தவம் பூண்டவர் மத்தியில்,

வலைத்தளம்பற்றி  சமூகம் பற்றி
வாழ்வின் சகலமும் சுற்றி, வாதம்புரிந்து
எதிரெதிர் பேசி, இணக்கமிலாவிடினும்
தன்னைத் தாண்டியும் சிந்திக்கும்
வினவாளர்களுக்கு உரிய வணக்கம்.
_______________________________________
பெண்களைப் புகழ்ந்து பேசிப் பேசியே
உண்மையில் பெண்களை பேச விடாத
தந்திரக்கார சமூகமிது.

பூமியை “பூமாதேவி’ என்று
புகழ்ந்து பாடியது மதம்.
எதற்கு?
காலந்தோறும் அவளை
காலில்போட்டு மிதிப்பதற்கு.

“வம்சவிளக்கு’ என்று
பெண்ணை வருடிக்கொடுக்கும் சாதி.
எதற்கு?
கடைசிவரைக்கும் அவளை
கொளுத்தி, கொளுத்தியே கருக்கிப் போடுதற்கு.

ஆணின் ஒடுக்குமுறையோ நுட்பமானது
’’நீ பேசினால் என்னையே மறந்து விடுகிறேன்’’
-இது காதலிக்கும் போது.
’’இனி பேசினால் கொன்னே போடுவேன்’’
-இது கல்யாணத்திற்குப் பின்.

ஒரே அடியாகக் கொல்லக்கூடாது!
பெண்களும் பேசலாம்தான்,
பிடித்தமான தொலைக்காட்சி தொடர்கள் பற்றி..

’மானாட, மயிலாடா’ வில்
ஊனாடும் உருவம் பற்றி…

ஆலுக்காஸ் கடையின்
நகைகள் பற்றியும்
ஏழுமாடி சரவணா ஸ்டோரின்
வகைகள் பற்றியும்…
அடுத்துவீட்டுப் பெண்ணிடம்
அசந்துபோய் பேசலாம்தான்…

இரண்டு வட்டிக்கு வங்கியில் வாங்கி
ஐந்து வட்டிக்கு விடும்
மகளிர் சுய உதவிக்குழுவின்
மகிமைப் பற்றியும் பேசலாம்…

ஏன்?
போட்டு வந்த வளையலை வாங்கி
தங்கைத் திருமணத்திற்கு அடகு வைத்ததை
மீட்டுத் தரத் துப்பில்லை என்று
கணவனிடம் கூட கலகம் செய்யலாம்.

மற்றபடி
கலைஞர் போடும் ஒரு ரூபா அரிசியைப் பாரு
உன் முகரையைப் போல,
அடுப்புக்கு நெருப்புமில்ல – சத்தாய்
ஆக்கித் திங்க பருப்புமில்ல
என்ன நாடு இது? ஆட்சி இது?
இதை எதிர்த்துக் கேட்கத் துப்பில்லாத
என்ன ஆம்பிள்ளை நீ?

என்று பெண் பேச ஆரம்பித்தால்
ஏற்குமோ இல்லற தர்மம்!

’’ஆம்படையான் எக்கட்சிக்கு ஓட்டோ
அடியேனும் அக்கட்சிக்கே ஓட்டு’’ எனப்
பெண்களைப் பெரும்பாலும் பழக்கியுள்ள
ஆம்பிளை சிங்கங்களுக்கு
பிடித்தமானது
பெண்களின் அடுப்படிச் சுதந்திரமே
அரசியல் சுதந்திரமல்ல,
______________________________________
ஒரு பெண் சுதந்திரமாகத்
தன் காதல் உணர்வை
வெளிப்படுத்துவதைக் காட்டிலும்
முக்கியமானது
அவள் அரசியல் உணர்வை
வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம்

அனுமதித்ததுண்டா
ஆணாதிக்கத் தந்திரம்

’லவ்வர்ஸ்டே’ மூலமாக
பெண் காதல் உணர்வை வெளிப்படுத்தினால் சம்மதம்,

’மதர்ஸ் டே’ மூலமாக
தாய்மை உணர்வை வெளிப்படுத்தினால் சம்மதம்,

’வெட்டிங் டே’ மூலமாக
குடும்ப உணர்வை வெளிப்படுத்தினால் சம்மதம்,

ஏன்?
’வயசுக்கு வந்ததையே’ உறுத்தலின்றி
ஊரறியச் சொல்வதற்கும் சம்மதம்.
ஆனால் ஒரு பெண்
கம்யூனிஸ்ட் கட்சி மூலமாக
தன் வர்க்க உணர்வை வெளிப்படுத்தினால் மட்டும்
பயம்.. பயம்.. பயம்..
_______________________________________
பெண் பேசுவது பிறகு
விளக்கம் சொல்ல வந்தாலே
வாயை அடக்கு என – என்
தாயை அடக்கிய தந்தையைப் பார்த்து,
சின்ன வயதிலேயே
பெண் மீதான கொடுமையை
கண்ணெதிரே பார்த்து, பார்த்து
’ஆம்பிள்ளைத் தனத்தை’ வெறுத்ததுண்டு.

சொந்த அனுபவத்தில்
சொல்கிறேன் ஒன்று.
அந்த நாளில் அம்மாவுக்கு…
மோரு புளித்தால் அடி
நீரு வைக்க மறந்தால் வார்த்தைக் கடி
குழம்பு தன் சூடு மறந்தால்
கிளம்பும் கரண்டி,
ஒரு நாள் சோறு குழைந்ததற்காய் அடி

அழுதுகொண்டே தடுக்கப் போய் நானும் அடிவாங்கி
நோட்டில் எழுதிவைத்தேன் இப்படி;

’’அன்னம் குழைந்தாலென்ன?
அருமை குறைந்தாலென்ன,
தின்னும் உன் எருமை வயிறு
ஏற்காதா?
கன்னம் குழையும்படி
என்னமாய் அறைந்தாய்
என் அம்மாவை
சின்னஞ் சிறியவனாய் இருப்பதனால்
செய்வதறியாது நிற்கிறேன்
பின்னம் பெரியவனாய் ஆன பின்னே
உன்னை என்ன செய்கிறேன் பார்!’’

ஆசிரியப்பாவால்
அடித்தேன் அப்பாவை
என ஆற்றிக் கொண்டிருந்த மனதை
ஒருகீறு கீறிவிட்டாள் அம்மா…

’’அப்பாவைப் போல் இருக்காதே
பொம்பளையை அடிக்காதே
அவள் சொல்றதையும் கேளு!’’

எனக்கு திருமணமானவுடன்
என் அம்மா சொன்ன அறிவுரை இது.

என்ன இருந்தாலும்
நீயும் ஆம்பிள்ளைதாண்டா? எச்சரிக்கை!
என எனக்கு உணர்த்திய
அம்மாவின் வார்த்தையில் அர்த்தங்கள் ஆயிரம்
அனைவருக்கும் அதில் பொருத்தமுள்ளதால்
அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன்.

பெண்ணைப் பார்த்து
என்ன கொண்டுவந்தாய்
எனப் பேசுபவனுக்குத் தெரியுமா?

இந்த பூமியே
அவள் உனக்கு போட்ட பிச்சை.
_________________________________________________
விஷ மூச்செறியும் மலைப்பாம்புகள்,
வெறிகொண்டு இரைதேடும் விலங்குகள்,
பாறைகள் கரையும் சூறை மழை,
சூரியன் நடுக்கும் கோரப்பனி
இவையிடமிருந்து உயிர்க்கரு காத்து
விழிக்குடம் தளும்பினும் பனிக்குடம் தளும்பாமல்
கானகம் தெறிக்க அலறி தொண்டை நரம்புகள் குழறி
உயிர் ஈன்றவள் பெண்ணடா!

எந்தக் காலத்திலும் பெண்
சும்மாயிருந்ததில்லை…
காந்தள் மலர் கைகளெல்லாம்
தின்று தீர்த்து
வாந்தியெடுக்கவும் உதவி தேடும்
மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கே!
கறுத்துச் சிவந்த வாழைப்பூ தோலென
தடித்துக் காய்த்திருக்கும் தலைமுறையாய்
உழைக்கும் பெண்களின் கைகள்.

ஆட்டுடன், மாட்டுடன் சென்று
அதன் இயல்பறிந்து
பொறுமையாய் புல்மேய உடனிருந்து
புதிய மேய்ச்சல் நிலங்களை
கண்டறிந்தவள் பெண்
ஆணோ
அவளை ஆடு, மாடாய் நடத்தி
உழைப்பைக் கறந்தான்.

வேட்டைச் சமூகம் முடிந்து
பெண் சும்மாயிருந்தாளா?
முதலில் பயிரிடக் கற்று
விதைநெல்லைக் கொடுத்தாள்
ஆணோ உடனே அவளை
வீட்டினில் அடைத்தான்.

சிக்கி, முக்கி கல்லை உரசி
முதலில் நெருப்பைத் தந்தவள் பெண்
ஆணோ
சிக்கிக் கொண்டாள் இலவச வேலைக்காரி
என அவளை அடுப்பினில் வைத்தான்.

வெறும் பெருமை அல்ல உண்மை,
அன்று;
பெண் தலைமுறை பல விளைவித்த காரணத்தால்
தாங்கும் நிலமும் ’’தாய்மண்’’ ஆனது.

குடும்ப அமைப்பின் சுமைகளனைத்திற்கும்
தாங்கும் குவிமையமாக அவளே ஆனதால்
வீட்டின் முக்கியச் சுவரும் ’’தாய்ச்சுவரானது’’.

வரலாற்றில்
எதையெல்லாம் பெண்
கண்டறிந்து தந்தாளோ
அதைவைத்தே அவளை
சிறைவைத்தான் ஆண்.

வேட்டையாடி பெற்ற
பெண்ணின் சமநிலையை
வேளாண் சமூகத்தின்
உபரி பறித்தது..

காட்டு வாழ்க்கை வழங்கிய
கைகளின் சுதந்திரத்தை
வீட்டு வாழ்க்கை
வேலைக்காரியாய் அடக்கியது.
முதல் வர்க்க ஒடுக்குமுறை
பெண் குரல்நெறித்து துவங்கியது..

தொல்குடி வேட்டையில்
காட்டு விலங்கினை வேட்டையாடி
வெற்றி கண்டவள் பெண்.
கடைசியில் வீட்டு விலங்கிடம்
மனைவியாய் மாட்டிக்கொண்டு
இல்-குடி என வேட்டைக்கு இரையானாள்.

செல், கொல் என
இனக்குழுச் சண்டையில் தலைமையேற்று
சமர்க்களம் புரிந்த
பெண்ணின் அமர்க்களம் பார்த்து
சமமாய் நடந்தான் அன்று காட்டுவாசி.

நில், கேள், சொல்வதை மட்டும் செய்
எனப் பெண்ணை
அடக்கி ஆள்கிறான் வீட்டுவாசி.

பெண்ணின் மாதவிடாய் இரத்தத்தை
புனிதமென்று விளைநிலத்தில் தெளித்து
பெண்ணைக் கொண்டாடினான் புராதனவாசி,
பெண்ணின் மாதவிடாயை
தீட்டு என்று வீட்டுக்குள்ளேயே
தள்ளி வைப்பவன் நாட்டுவாசி

காலத்தால் இவன் முன்னேறியவனாம்
மூளையிருந்தால் மாத்தி யோசி!
____________________________________________
ஒவ்வொரு சமூகக்கட்ட
உழைப்பினில் மட்டுமல்ல,
வரலாற்றில்
பெண்வாடையில்லாத
போராட்டம் ஏதுமில்லை..
பெண் கை கொடுக்காமல்
புரட்சிகள் ஜெயித்ததுமில்லை…

ஜான்சிராணியும், வேலுநாச்சியும்
அசரத்பேகமும்,
வெள்ளையனுக்கு எதிராகத்
தன்னையே தீம்பிழம்பாக வெடித்த
குயிலியும் இல்லாமல்
விடுதலைப் போரில்லை.

தில்லையாடி வள்ளியம்மை மட்டும்
இல்லையெனில்
தென்னாப்பிரிக்காவில் காந்தி கதை
முன்னமே முடிந்திருக்கும்.
இந்தியாவும் எப்பாதோ விடிந்திருக்கும்.
வ.உ.சிக்கு
தென்னாப்பிரிக்க மக்கள் கொடுத்த காசையே
தான் ஓசிக்கு அமுக்கிக் கொண்ட
தில்லாலங்கடி காந்தி பற்றி
பாவம்! தில்லையாடிக்கு தெரியவில்லை.

காந்தியத்திற்கும்
பெண்கள் பெரும்படையாய்
கதராடை உடுத்தினர்.
போராட்டத்திற்கு
கைவளையல்கள் கழட்டிக் கொடுத்தனர்.
பெண் படை தைரியத்தில்
காலை முன்வைத்த காந்தியும்
பெண் உணர்வு மதித்தாரா?

’’இச்சாபத்தியம்’’ எனும் பெயரில்
இரண்டு இளம்பெண்களுடன்
பாலியல் உணர்வை அடக்கிப் பழக
நிர்வாணமாய் கிடந்த காந்தியின்
ஆணாதிக்க அருவருப்பைப் பார்த்துதான்
காந்தியின் குரங்குப் பொம்மையும் கண்ணை மூடியது.

அந்நியத் துணி எரிப்புக்காய்
ஆங்கிலேயரால் துகிலுரியப்பட்ட
பெண்களின் நிர்வாணமோ
தேசத்தின் மானம்!

வெட்கத்தை எதிர்பார்த்த
அடக்கு முறையாளர்களிடம்
தம் வர்க்கத்தை காட்டி
எதிரியின் இரத்தத்தை
காறித்துப்பியவர்கள் உழைக்கும் பெண்கள்!

கீழத் தஞ்சை விவசாயி எழுச்சியில்
கருக்கரிவாளை
கம்யூனிச அரிவாளாய் உயர்த்திப் பிடித்து
நிலப்பண்ணைகளுக்கெதிராக
அறுவடை இயக்கம் செய்தவர் பெண்கள்.

தெலுங்கானாவிலோ
நிஜாம் நிலப்பிரபுத்துவக் குண்டர்களின் முகத்தில்
எண்ணையை காய்ச்சி ஊற்றி
தங்கள் அதிகாரத்தை
சமைத்தவர்கள் பெண்கள்

தெபாகா போராட்டமோ
தினஜ்பூர், ராங்பூர், மால்டா,
மிதுனப்பூர், குல்னா, பர்கானா,
என எல்லா மாவட்டங்களும்
சேலை கட்டிக் கொண்டுதான்
இந்து, முசுலிமாய் இணைந்து போராடின

ஆண்டைகளுக்கு அடியாளாய் வரும்
போலிசு கிராமத்திற்குள் நுழைந்தவுடனேயே
ஒரு பெண் சங்கெடுத்து ஊதுவாள்,
இன்னொரு பெண் மணி அடிப்பாள்
கேட்ட மாத்திரத்தில்
பால்குடிக்கும் குழந்தையையும்
பாதியில் கிடத்திவிட்டு
’இன்குலாப் ஜிந்தாபாத்’ என்றெழும்
பெண்கள் கையில் விளக்கமாறும் ஆயுதமாகும்.

கையில் கிடைக்கும் போலீசை
கூட்டிப் பெருக்காமல்
பெண்கள் கூட்டம் கலையாது.
இது தெபாகா வரலாறு.

திருவாங்கூர் சமஸ்தானத்தின்
இராணுவத் தாக்குதலை
கல், அம்பு, ஈட்டியுடனும்,
எந்த ஆயுதங்களையும் எதிர்க்கும்
வர்க்கக் கோபத்துடனும்
எதிர்த்துப் பாய்ந்து தம் இரத்தத்தில்
நிலப்பிரபுத்துவத்தை மூழ்கடித்தவர்கள்
வயலார்-புன்னப்புரா போர்க்களப் பெண்கள்.

கய்யூர் விவசாயிகள் போராட்டக் காட்சிகளோ
உங்கள் கண்ணில் நீரை வரவழைக்காது!
அடக்குமுறைக்கெதிராக போராடியதால்
அப்பு, சிருகண்டன், அபுபக்கர், குஞ்ஞாம்பு
ஆகிய நால்வரையும் தூக்கிலேற்றியது
பிரிட்டிஷ் அரசு.

நால்வரின் தாய்மாரே
நாட்டு மக்களைப் பார்த்து சொன்னார்கள்..
’’நாட்டுக்காக மரணத்தை துச்சமாக மதித்த
எங்கள் பிள்ளைகளின் பிணத்தைப் பார்த்து
யாரும் கண்ணீர் வடிக்க வேண்டாம்
கனன்றெழும் கோபத்தை மட்டும்
தாருங்கள் என்றார்கள்!

மன்னன் கொட்டமடித்து வாழ
விழுப்புண் எய்திய மகனைப் பார்த்து
மகிழ்ந்து போவாளாம் தாய்.
என்னடா புறநானூறு!

உழைக்கும் வர்க்க உரிமைக்காக
பிரிட்டிஷ் செருக்கை அடக்கிய
பெண்களின் வீரகாவியம் கய்யூரு.
______________________________________________
வரலாறு படைத்த பெண்குலத்தை
வரவேற்று மதித்ததா எந்த மதமும்?

இந்துமதம் என்பதைவிட – இதை
ஆணாதிக்க விந்துமதம் என்றால்
மிகையில்லை,
ஜெயேந்திரன் முதல் நித்யானந்தா வரை
இதை நிரூபிக்கிறான் பொய்யில்லை.

’’பெண்-
குழந்தையில் தந்தைக்கும்,
இளமையில் கணவனுக்கும்,
முதுமையில் மகனுக்கும் கட்டுப்பட்டவள்’’
என்று பிறப்பிலேயே பெண்ணை
ஆணுக்கடிமையாய் ஆக்கியது இந்துமதம்.

’’பெண் பயங்கரமானவள்,
வஞ்சகமானவள், கேடானவள்,
நம்பத்தகாதவள்
போகத்துக்காக மாத்திரமே
பெண்களுடன் உறவு வேண்டும்’’
இவையெல்லாம் ’’அனுசாசன பர்வத்தில்’’
பெண்களைப் பற்றி
’’மகாபாரதம்’’ கொட்டிய குப்பைகள்,
இந்த மகா.. பாவத்தை
பெண்கள் சுமக்கலாமா?
குப்பை இராமாயணத்தையும் சேர்த்தல்லவா
நீ கொளுத்த வேண்டும் பெண்ணே!

கிறித்தவமும்
ஆணின் விலா எலும்பிலிருந்தே
பெண் வந்ததாய்
அடக்கி வைக்கவே
அவிழ்த்து விட்டது கதையை..

பெண்கள் பாவம் செய்ய
தூண்டுபவர்கள் என்றும்,
ஆண்களுக்கு
அலங்கார  மாக்கப்பட்டவர்கள் என்றும்
பர்தாவை போட்டு ஆணாதிக்கத்தை
பாதுகாக்கிறது இஸ்லாமும்.

புத்தரும் கூட
மணலைப் போல உறுதியற்றவர்கள்
பெண்கள் என்று மட்டம் தட்டினார்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்தும்
தன் புலனடைக்க முடியாமல்
பக்தி முக்தி பரத்தமையில் வழிந்த
அருணகிரிநாதனோ
தொழுநோய் வந்து தெருநாய் துரத்தியபோது
’’விடமொத்த விழியினர்’’
என பெண்களைப் போய்ப் பிராண்டினான்.

’’பெண் எனும் மாயப் பிசாசே’’
எனச் சித்தர்கள் சிலரும் எத்தர்களாயினர்.
பொதுவாகச் சொன்னால்
பொம்பளை விசயத்தில்
எல்லா மதமும் வீக்’’
______________________________________________
பெண்களைப் பற்றிப் பேசாதவன் யார்?
ஆனால்.. பெண்களுக்காகப் பேசியது யார்?

வேதாந்தமெல்லாம்
பெண்களை ’பொரணி’ பேசியபோது
மார்க்சியம் ஒன்றே
பெண்களை புரட்சி பேச வைத்தது!

வேலைக்குப் போகும் ஆணின் ஊதியத்தில்
சமபங்கு
வீட்டிலிருக்கும் பெண்ணுக்கு உரியதென
காரல் மார்க்சே சரியாய்ச் சொன்னார்.

ஏன் தெரியுமா?

வேலைக்குப் போகும் ஆணின்
உழைப்பு நடவடிக்கைக்காக
வீட்டில் அவனுக்கு வேலைகள் செய்து
தன் உழைப்புச் சக்தியை செலவிடுபவள்
பெண் என்பதால்
ஊதியத்தின் பங்கு அவளுக்கும் சேரும் என
உறுதிபட விளக்கியது மார்க்சியம் மட்டுமே!

நெசவுத் தொழிலில்
பிழியப்பட்ட பெண்களின் கைகளுக்காக,
முதலாளித்துவத்தின் ஈரலை எடுத்தது
மார்க்சின் மூலதனமல்லவா!
’’இங்கிலாந்தில்  தொழிலாளி வர்க்கத்தின் நிலைமையில்’’
பெண்கள் மீதான அவலச்சுரண்டலை
எங்கெல்சின் எடுத்துக்களல்லவா
உலகுக்கு எடுத்துக் காட்டியது!

சம உரிமை, சம வாய்ப்பு
சம ஊதியம், சம அதிகாரம்
என பெண்கள் வாழத் தகுந்ததாய்
ஒரு உலகை
சோசலிச ரசியாவே படைத்துக் காட்டியது!

அதனால்தான்
தங்களின் புதிய உலகை
பறிக்க வந்த பாசிச இட்லரை
சோவியத் பெண்கள்
தெருவில் இறங்கி அவன் கருவைக் கலைத்தனர்.

பக்தி உணர்வால் பெற முடியாததை,
மத உணர்வால் பெற முடியாததை,
சமூக உணர்வால் ஆணோடு பெண்ணும் சமமென்று
சோசலிச உணர்வால் நிரூபித்தது ரசியா!

ஆணுக்கு பெண் எதிரியென
முதலாளித்துவம் மடை மாற்றியது
ஆணையும், பெண்ணையும் வர்க்கமாய் சேர்த்து
கம்யூனிசமே முதலாளித்துவ சுரண்டலை பழி தீர்த்தது!
பொது லட்சியத்தோடு இன்னும்
பெண் போக வேண்டிய இலக்குகளையும்
அடையாளம் காட்டியது…

பெண் என்றால் பேயும் இரங்குமாம்
முதலாளித்துவம் இரங்குமா?
ஒரு போதும் இரங்காது என
மூலதனத்தின் இரத்தத்தில்
ரசியா எழுதிக் காட்டியது.
ஆனால் முடியவில்லை சுரண்டல் இன்னும்
___________________________________
மூலதனத்தின் நகங்கள்
உன்னை நோக்கியே முளைக்கிறது பெண்ணே!

உனது சுயமரியாதைக்கான
கைத்தொழில், சிறுதொழிலை பிடுங்கி
மீண்டும் உன்னை
பண்ணையடிமையாக்குகின்றன
பன்னாட்டு கம்பெனிகள்!

அன்று உன் அன்னைக்கு
சொந்தமாக ஒரு மாடிருந்தது.
இன்று அதுவும் போய்
’நோக்கியா’ பட்டியில்
நீயே ஒரு கறவை மாடாய் கட்டப்பட்டுவிட்டாய்.

ஊர்மணக்க உனக்கிருந்த
விளைநிலம் பாழாகி
நீயோ தெருவுக்கு தெரு
ஊதிவத்தி விற்கிறாய்,

பார்க்கும் பெட்ரோல் பங்கிலெல்லாம்
வார்க்கப்படுகிறது உன் இள இரத்தம்

அதிரும் ஆயத்த தையற் கூடங்களிலெல்லாம்
உருவப்படுகிறது உனது நரம்பு,

எந்த முதலாளியின் சோப்பை விற்கவோ
வெயிலில் கரைந்து போகிறாய் நீ,

எந்த பன்னாட்டுக் கம்பெனி
கழிவறை கிளீனர் விற்கவோ
மாடிப்படிகள் ஏறி இறங்கி
நாறிப்போகிறது உனது வாழ்க்கை.

கவுரவமான கால்சென்டர் பண்ணையில்
ஏ.சி. அறையில் ஏவல் வேலை உனக்கு,
கண்களை விற்று சம்பளம் வாங்கி
கண்ட நேரத்தில் தின்று, தூங்கி
கம்ப்யூட்டர் சாம்பிராணியாய் மணக்கிறாய் நீ!
எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம்
என்று கூலியுழைப்பின் பதைப்பிலேயே
துடிக்கிறது இதயம்  உனக்கு!

உனது சொந்தத் தறியை அறுத்தது யார்?
உன் துண்டு நிலத்தைப் பறித்தது யார்?
உனது தயிர்கூடையை பிடுங்கியது யார்?
உன் ஆடு, மாட்டை அடித்து ஓட்டியது யார்?
எந்த உரிமையும் இல்லாமல்
சந்தை மாடாய் பெண்ணே உன்னை
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்
மூன்று முடிச்சில் கோர்த்தது யார்?

இந்த நாடாளுமன்ற, சட்டமன்ற
பச்சை அயோக்கியர்கள்தான் என்பது
உனக்குத் தெரியாதா என்ன?
அலுவலகத்திலும், வீட்டிலும்
உன் ரத்தத்தை முறிக்கும்
புல்லுருவிகளை எதிர்த்து போராட தயக்கமென்ன?

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும்
ஒரு பெண் இருக்கிறாள்
என்பதில் பெருமை என்ன?
ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னே
பெரும்பாலும் ஆணிருக்காத மர்மமென்ன?

ஆணே ஒரு அடிமை
ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு
எப்படி விடுதலை தர முடியும்?

ஆணுக்கும் உரைக்கும்படி
ஆர்த்தெழுந்து போராடு!
பெண்ணின் பேரழகு
அவள் வர்க்க உணர்வு என்பதை
ஆணுக்குப் புரிய வை!

போராடும் வர்க்கத்தோடு
சேராமல் பெண்ணுக்கு மகிழ்வேது!
தடுப்பவன்
தந்தையாய், கணவனாய்,
தம்பியாய், மகனாய்,
எந்த வடிவில் வந்தாலும்
எதிர்த்து நில்!
வர்க்க உறவே வாழ்க்கைத் துணையென
தெளிந்து கொள்!

இல்லறம் காக்கவே பெண் என்பது
முதலாளித்துவச் சுரண்டலின் தந்திரம்
இணைந்து மக்களோடு போராடு! பெண்ணே
நக்சல்பாரியே நல்லறம்…
நாடே எதிர்பார்க்குது உன்னிடம்..

போதும் உங்கள் பிரச்சாரம்!
புரட்சிக்கெல்லாம்
பொம்பளை வரமாட்டாங்க
என்று கதவைச்சாத்தும் நண்பா,
ஏன் நீ வாயேன்!

உனது மொழியிலேயே உரிமையுடன் கேட்கிறேன்..
’’நீ தைரியமுள்ள மீச வச்ச, வைக்காத
ஆம்பிளையா இருந்தா
பொம்பளையை வெளியே அனுப்பு!’’.

— துரை.சண்முகம்

________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. வரிக்கு வரி அருமை ….
    தாமதமாக வந்தாலும் இதுவே சிறந்த இடுகை …

    //ஆணின் ஒடுக்குமுறையோ நுட்பமானது’’நீ பேசினால் என்னையே மறந்து விடுகிறேன்’’-இது காதலிக்கும் போது.’’இனி பேசினால் கொன்னே போடுவேன்’’-இது கல்யாணத்திற்குப் பின்.ஒரே அடியாகக் கொல்லக்கூடாது!பெண்களும் பேசலாம்தான்,பிடித்தமான தொலைக்காட்சி தொடர்கள் பற்றி..’மானாட, மயிலாடா’ வில்ஊனாடும் உருவம் பற்றி…ஆலுக்காஸ் கடையின்நகைகள் பற்றியும்ஏழுமாடி சரவணா ஸ்டோரின்வகைகள் பற்றியும்…அடுத்துவீட்டுப் பெண்ணிடம்அசந்துபோய் பேசலாம்தான்…இரண்டு வட்டிக்கு வங்கியில் வாங்கிஐந்து வட்டிக்கு விடும்மகளிர் சுய உதவிக்குழுவின்மகிமைப் பற்றியும் பேசலாம்…ஏன்?போட்டு வந்த வளையலை வாங்கிதங்கைத் திருமணத்திற்கு அடகு வைத்ததைமீட்டுத் தரத் துப்பில்லை என்றுகணவனிடம் கூட கலகம் செய்யலாம்.மற்றபடிகலைஞர் போடும் ஒரு ரூபா அரிசியைப் பாருஉன் முகரையைப் போல,அடுப்புக்கு நெருப்புமில்ல – சத்தாய்ஆக்கித் திங்க பருப்புமில்லஎன்ன நாடு இது? ஆட்சி இது?இதை எதிர்த்துக் கேட்கத் துப்பில்லாதஎன்ன ஆம்பிள்ளை நீ?என்று பெண் பேச ஆரம்பித்தால்ஏற்குமோ இல்லற தர்மம்!’’ஆம்படையான் எக்கட்சிக்கு ஓட்டோஅடியேனும் அக்கட்சிக்கே ஓட்டு’’ எனப்பெண்களைப் பெரும்பாலும் பழக்கியுள்ளஆம்பிளை சிங்கங்களுக்குபிடித்தமானதுபெண்களின் அடுப்படிச் சுதந்திரமேஅரசியல் சுதந்திரமல்ல,//
     
    ovoru varium nethiyadi …….

  2. ‘கவுரவமான கால்சென்டர் பண்ணையில்
    ஏ.சி. அறையில் ஏவல் வேலை உனக்கு,
    கண்களை விற்று சம்பளம் வாங்கி
    கண்ட நேரத்தில் தின்று, தூங்கி
    கம்ப்யூட்டர் சாம்பிராணியாய் மணக்கிறாய் நீ!’

    இதற்கு முன்பு எழுதிய உமா ருத்ரன்,சந்தன முல்லை,தீபா குறித்து துரை சண்முகத்தின் கருத்து இதுதான் அதாவது அவர்கள் கம்யுட்டர் சாம்பிராணிகள், கண்ட நேரத்தில் தின்று தூங்குபவர்கள், கண்களை விற்று சம்பளம் வாங்குபவர்கள்.. மட சாம்பிராணி என்றால் பழைமை பேசி,கம்யுட்டர் சாம்பிராணி என்றால் புரட்சிர இலக்கியம். உங்கள் வார்த்தைகள உங்களை தோலுரிக்க உதவுகின்றன. நன்றி

    • சங்கு,,,,,, முல்லை,தீபா, உமா, ரதி, தமிழச்சி உள்ளிட்ட கம்ப்யூட்டர் சாம்பிராணிகள் எழுதிய புரட்சிகர இலக்கியங்களை உங்கள் பழமை பேசும் ஆணாதிக் மட சாம்பிராணி,  மனோபாவம் ஏற்றுக்கொள்ள மறுத்ததை பதிவு செய்தமைக்கு நன்றி….  இது வெற்றி! 

      வாழத்துக்கள் தோழிகளே………………….

      • நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன் – தீபா,முல்லை, ரதி, தமிழச்சிக்காக இல்லை – அவர்களுக்கு என் மூலம் பேசத் தேவையும் இல்லை.
        //”
        ஏ.சி. அறையில் ஏவல் வேலை உனக்கு,
        கண்களை விற்று சம்பளம் வாங்கி
        கண்ட நேரத்தில் தின்று, தூங்கி
        கம்ப்யூட்டர் சாம்பிராணியாய் மணக்கிறாய் நீ!” //
        முழுமையாக ஒத்துக்கொள்கிறேன். இதுதான் என் வாழ்க்கை. நான் புரட்சிகர இலக்கியம் ஒன்றும் எழுதியதில்லை. ஆனால் “பொம்பளையை வெளியே அனுப்பச்” சொல்வதை முழுமையாக வழிமொழிகிறேன். துரை.சண்முகத்திற்கு என் நன்றிகள் பல – உங்கள் புரிதலுக்காக.

        • எதற்கு பேருக்கு பின்னால் ருத்ரன்? மருத்துவர் உங்கள் பெயரை பின்னாடி போட்டுக்கொள்கிறாரா என்ன? 🙂

        • அனானி, ஒரு பெண் தனது பெயருக்கு பின்னால் யாருடைய பெயரையும் இணைத்துக்கு கொள்ளும் சுதந்திரத்தை நீங்கள் ஏன் முறைப்படுத்த நினைக்கிறீகள்??? 

        • பாஸ்போர்ட் பழக்கம். தவிர பல உமாக்களில் அடையாளப்படுத்த அலுவலகத்தில் பயன்படுகிறது. அவ்வளவே. அவரால் எனக்குப் பெருமை உண்டு எனினும் அதற்காக பெயரைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

  3. இன்னாப்பா உங்க காட்டு கூச்சலுக்கு ஆம்பளைங்க கெடைக்கலையா? இல்ல இன்னும் போதலையா? பெண்களை (புரட்சி) வலை வீசி இழுகுரீன்களா? வீட்டுல எல்லோரும் களத்துல இறங்கியாச்சா?

  4. ஒவ்வொரு வார்த்தையிலும் நெத்தியடி…
    ஆண்களுக்கு மட்டுமல்ல..
    பெண்களுக்கும் தான்…

  5. எதையும் சுருங்க, நச்சென்று சொல்ல பழகுதல் நல்லது. இயல்பில் குறைவாக எழுதுபவர்கள்… வினவில் எழுதும் பொழுது, நீளமாக எழுதுகிறார்கள். ஆணாதிக்கத்தை எதிர்த்து… நீளமாக சொன்னால் தான் உரைக்கும் என்றால் அதையும் ஆமோதிக்கிறேன்.

  6. //ஒவ்வொரு சமூகக்கட்ட
    உழைப்பினில் மட்டுமல்ல,
    வரலாற்றில்
    பெண்வாடையில்லாத
    போராட்டம் ஏதுமில்லை..
    பெண் கை கொடுக்காமல்
    புரட்சிகள் ஜெயித்ததுமில்லை…//

    அருமை தோழரே

  7. நெருப்பு வார்த்தைகள். …….ஒன்று பற்றி கொள்ளும் அல்லது சுடும்.

    புரட்சிகர வாழ்த்துக்கள்

  8. //உனது சொந்தத் தறியை அறுத்தது யார்?
    உன் துண்டு நிலத்தைப் பறித்தது யார்?
    உனது தயிர்கூடையை பிடுங்கியது யார்?
    உன் ஆடு, மாட்டை அடித்து ஓட்டியது யார்?
    எந்த உரிமையும் இல்லாமல்
    சந்தை மாடாய் பெண்ணே உன்னை
    தனியார்மயம், தாராளமயம், உலகமயம்
    மூன்று முடிச்சில் கோர்த்தது யார்?//

    பெண்கள் வேலைக்கு செல்வதில் மாறுபட்ட கருத்து இருக்கிறது தோழர் சண்முகம்

    தயிர் விற்றால் கிடைக்குமா மாதம் ஐம்பதாயிரம்

    தயிரை விற்று பிழைத்தால் தனியார் ஆஸ்பத்திரிக்கு யார் பணம் கட்டுவது காய்ச்சலுக்கும் மருந்துக்கும்

    தயிர் , மாடு ,விவசாய நிலங்களை பறித்தபின நமக்கு ஏதும் கிடைக்காமல் இருந்தது .

    கடந்த பத்தாண்டாக தானே கால்செண்டர் வந்து இருக்கு

    அதை தூக்கி எறிந்தால் இன்னொரு நாட்டுக்கு போகும் அவ்ளோதான்

    போராட வரும்படி தூண்டும் நீங்கள் வேலையை ஏன் குறை சொல்கிறீர்கள்

    • துரை.சண்முகம் வேலையை குறை சொல்வதாக நான் கருதவில்லை, மாறாக சுரண்டலை குறிப்பதாகவே அது இருக்கிறது.

      காரல்மார்க்ஸ், உங்களுடைய இதே கருத்தை திருப்பூர் பனியன் கம்பெனி சுரண்டலுக்கும் கூட பொருத்த முடியுமல்லவா? அப்போ எந்த வேலை நிலையையும் பொருத்துக்கொள்ள சொல்கிறீர்களா? இது எந்த வகையான மாரக்சியம்???????

      • சுரண்டல் இல்லாத வேலை ஒன்று இருப்பதாக மார்க்சியம் கருதவில்லை அது தயிர் விற்கும் தொழிலாக இருந்தாலும் சரி
        பனியன் கம்பெனி தொழிலாக இருந்தாலும் சரி

        புதிய ஜனநாயக புரட்சி நடந்து புதுவகை முதலாளி வந்தாலும் சுரண்டல் இல்லாமல் இல்லை வேலை வேறு சுரண்டல் வேறு அல்ல
        வேலை நிலமைகளை தயிர் காரி வேண்டுமானால் சுருக்கியும் நீட்டியும் கொள்ளலாம் ஆனால் கால்செண்டர் செல்லும் பெண் டூட்டி நேரம் என தீர்மாணிக்கப்படுகிறது . அதை குறை சொல்கிறீர்கள் என வைத்து கொள்வோம் அந்த குறிப்பிட்ட நேரம் உழைக்க வேண்டும் எனபதை பு.ஜ அல்லது சோசலிசம் எதுவுமே மாற்றுவதில்லை.

        சரியா கேள்வி குறி விவாதிப்போம்

        • உபரி மதிப்பை தான் முதலாளிகள் ‘சுரண்டி’ லாபாமாக எடுத்து, பின் மூலதனமாக உருவாக்குகின்றனர் என்கிறது மார்க்சிசம். முதலில் உபரி மதிப்பு என்று ஒன்றும் இல்லை என்பதே அடிப்படை. அதை பற்றிய எம் பதிவு :
          http://nellikkani.blogspot.com/2009/11/blog-post.html ‘உபரி மதிப்பு என்னும் மாயயை’

          An old joke : “In capitalism man exploits man, in communism it is the opposite”

  9. கவிதையில் பெண்மையின் வீரம் ,சுயமரியாதை ,அவளின் போர்குணம் பேசப்பட்டு இருக்கிறது

    கம்யூனிஸ்டுகளே பெண்களை சகமனுசியாக மதிக்க கற்று கொடுப்பவர்கள் என உணர்த்தப்படுகிறது

    போராட வா என பெண்ணை அழைத்தது அருமை

  10. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சு போச்சு. இந்த உலகத்துல உள்ள ஒரே ஆம்பிள யோக்கியன் துரை.சண்முகம் தான்

  11. எல்லாம் சரி பெண்ணை முக்காடு போடாமதான் இன்னைக்கு சச்சு வரைக்கும் பெண்ணோட மானம் சிரிக்குது .

  12. ஒன்னும் புரியல ஒன்னு வேலைக்கு போங்க சொல்லுங்க இல்ல வேண்டாமென்று சொல்லுங்க ரஜினி மாதிரி குலபாதிங்க வீட்டுல இரு

    சொல்லுங்க இல்ல வீடவிட்டு வந்துருன்னு சொல்லுங்க பெண் சுதந்திரம் நா அரைகுறை ஆடையோட அலைகிறது தான் சொல்லுகிறமாதிரி இருக்குது

  13. முதலில் பயிரிடக் கற்று
    நெல்லைவிதைத்து
    விளைநிலங்களாக்கினால் பெண்.
    நீங்கள் ’எங்களின் விளைநிலங்கள்’என்று படுக்கையில் கிடத்தினான் ஆண்.  -இப்படி இருந்திருக்கவேண்டும்

  14. நிறைய சொல்லியிருக்கிறீர்கள். இதை ஒரு கவியரங்கில் கேட்டிருந்தால் நிச்சயமாக மகிழ்ந்திருப்பேன்.. இன்னும் விரித்துக்கூட சொல்லியிருக்கலாம்.. ஒவ்வொரு சம்பவத்தையும் படிமமாக்கும் விதத்தில். ஆனால், கவிதை வடிவில், கண்ணைப் பறிக்கும் கணினி ஒளியில், இது சற்று கனக்கிறது. சொந்த அனுபவங்களைச் சொல்லுமிடங்களும், இன்றைய நிலைமை பற்றிய படப்பிடிப்புகளும் மிளிர்கின்றன.. repeat மிளிர்கின்றன . அனைத்தையும் சொல்லிவிடவேண்டும் என்ற ஆதங்கம் தேர்ந்த கவிஞருக்கு ஏன் வந்தது? எடுத்துக்கொண்ட விசயம் காராணமாகவா?

  15. அய்யா துரை சண்முகம் உங்க வீட்டு பெண்கள் எய்ல்லாம் போராடுதற்கு வெளிய அனுப்பிட்டின்கிலா ….. இல்ல அரசியல்வாதி மாதிரி ஒன்லி கவிதை மட்டும்தானா.. ஊருக்குதான் உபதேசமா???

  16. அதியமான் பின்னுட்டம் போட வேண்டும் என்பதற்காவோ உங்களது கருத்துகளை இங்கு உளராதிர்கள். பெண் வேலைக்கு போவது தனது பொருளதார சுதந்திரத்திற்காகவும், தனது குடும்ப தேவைக்காவும் தான். நிங்கள் வேண்டுமானால் முதலாளியாகாயிருக்கலாம் அதற்காக உழைப்பவர்களை பகடி செய்யாதிர்கள்.

    • Half,
      நான் அவர்களை பகடி செய்யவில்லை. அவர்களே அவர்களின் வேலையை அப்படி கருதுகிறார்கள். நானும் ஒரு தொழிலாளியாக பல முறை பணி புரிந்துள்ளேன். தற்போதும் part timeஆகவும் பணி புரிகிறேன். உளருவது நீர் தான். ஓ.கே.

  17. துரை சண்முகம் அவர்களே திக்கு முக்காட வைக்கிறது உங்கள் கவிதை, எந்தப்பக்கமும் தப்பமுடியாதபடி. அடுத்து “சங்கே முழங்கு” என்று பெயர் பார்த்தவுடன் ஏனோ எனக்கு பாரதிதாசன் தான் ஞாபகத்தில் வருகிறார். என் மனதில் பதிந்துபோன பாரதிதாசன் வரிகள் சில…
    “நாய் என்று பெண்ணை நவில்வார்க்கும்…….

    …..தெய்விகத்தை நம்பும் திருந்தாத பெண் குலத்தை உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!
    ….வாயிலிட்டு தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கை கோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே!
    சாணிக்கு பொட்டிட்டு சாமிஎன்பார் செய்கைக்கு நாணி உறங்கு! நகைத்து நீ கண்ணுறங்கு.

  18. துரை சண்முகம் அவர்களே! ஒவ்வொரு வரியிலும்,
    புறையோடிய பெண்முகம் போங்கோ! பக்கங்கள் பல கடந்தாலும், பெண்ணின் துக்கங்கள் சொல்லி மாளாது! வாழ்த்துக்கள்! – புரட்சிகர ஜீவன்

  19. //கவுரவமான கால்சென்டர் பண்ணையில்
    ஏ.சி. அறையில் ஏவல் வேலை உனக்கு,
    கண்களை விற்று சம்பளம் வாங்கி
    கண்ட நேரத்தில் தின்று, தூங்கி
    கம்ப்யூட்டர் சாம்பிராணியாய் மணக்கிறாய் நீ!//

    //

    ஆணின் ஒடுக்குமுறையோ நுட்பமானது
    ’’நீ பேசினால் என்னையே மறந்து விடுகிறேன்’’
    -இது காதலிக்கும் போது.
    ’’இனி பேசினால் கொன்னே போடுவேன்’’
    -இது கல்யாணத்திற்குப் பின்.//

    Arumaiyana pathivu….

  20. தோழர் துரை. சண்முகத்திற்கு வாழ்த்துகள்!!!
    எப்போதும் போலவே சிறப்பான கவிதை .
    ’’’அன்னம் குழைந்தாலென்ன?
    அருமை குறைந்தாலென்ன,
    தின்னும் உன் எருமை வயிறு
    ஏற்காதா?
    கன்னம் குழையும்படி
    என்னமாய் அறைந்தாய்
    என் அம்மாவை
    சின்னஞ் சிறியவனாய் இருப்பதனால்
    செய்வதறியாது நிற்கிறேன்
    பின்னம் பெரியவனாய் ஆன பின்னே
    உன்னை என்ன செய்கிறேன் பார்!’’
    நெஞ்சு அடைக்கிறது .

  21. /////////கலைஞர் போடும் ஒரு ரூபா அரிசியைப் பாரு
    உன் முகரையைப் போல,
    அடுப்புக்கு நெருப்புமில்ல – சத்தாய்
    ஆக்கித் திங்க பருப்புமில்ல
    என்ன நாடு இது? ஆட்சி இது?
    இதை எதிர்த்துக் கேட்கத் துப்பில்லாத
    என்ன ஆம்பிள்ளைநீ ////// /////// ’வயசுக்கு வந்ததையே’ உறுத்தலின்றி
    ஊரறியச் சொல்வதற்கும் சம்மதம்.
    ஆனால் ஒரு பெண்
    கம்யூனிஸ்ட் கட்சி மூலமாக
    தன் வர்க்க உணர்வை வெளிப்படுத்தினால் மட்டும்
    பயம்.. பயம். ///////// /////// பெண்ணைப் பார்த்து
    என்ன கொண்டுவந்தாய்
    எனப் பேசுபவனுக்குத் தெரியுமா?
    இந்த பூமியே
    அவள் உனக்கு போட்ட பிச்சை///////
    ///////// ’’பெண் எனும் மாயப் பிசாசே’’
    எனச் சித்தர்கள் சிலரும் எத்தர்களாயினர்.
    பொதுவாகச் சொன்னால்
    பொம்பளை விசயத்தில்
    எல்லா மதமும் வீக்’’
    ///////// வரிக்கு வரி ஆணாதிக்க வயற்றில் அடிக்கிறது. சொரணை உள்ளவன் புரிந்து கொள்வான்.. தொடரட்டும் உங்கள் பனி…………

  22. பாலியல் விவகாரத்தில் கார்ல் மார்க்ஸ்,மாவோ யோக்யதை உலகமறிந்த்தே.வேலைக்காரப் பெண்ணின் குழந்தைக்கு தான்தந்தை என்பதை மார்க்ஸ் ஒப்புக் கொண்டாரா.மாவோவின் பாலியல் லீலைகள் பற்றி கேட்கவே வேண்டாம். அண்ணாச்சி மாவோவின் லீலைகளையும் புகழ்ந்து பாடியிருக்க வேண்டாமோ. எந்த கம்யுனிஸ்ட் ஆட்சியிலாவது பெண்கள் தலைமைப் பொறுப்பில் இருந்ததுண்டா. சீனத்தில் அல்லது ருசியாவில் பெண்கள் கட்சியில் தலைமைப் பொறுப்பிற்கு அடுத்த இடத்தில் கூட இருந்தது இல்லையே.அது ஏன். வரலாறு அதானே.

    ம.க.இ.க வில் மருதையன்,துரை.சண்முகம் போன்ற ஆண்கள்தானே தலைமை பீடத்தில் இருக்கிறீர்கள்.ஏன் பெண்கள் இல்லை. உங்கள் கூட்டங்கள், இதழ்களில் கூட பெண்களுக்கு என்ன இடம் தருகிறீர்கள்.கட்சியில் பொறுப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா. 25 ஆண்டுகள் இயக்கம் நடத்தியும் உங்களால் எத்தனை பெண்களை திரட்டி என்ன சாதிக்க முடிந்தது. பெண்களுக்கு உங்கள் இயக்கம் செய்தது என்ன.
    கூரை ஏறி கோழி பிடிக்க் முடியாத போலி கம்யுனிஸ்ட்கள் வானத்தைக் கீறி வைகுந்தம் காட்டுவார்களாம்.

    • நீ ஒரு வர்க்க உணர்வோடு வாழ ஆசைபட்டால் உனக்கு எதுக்கு இட ஒதுக்கீடு ?
      இங்க என்ன பஸ்ல சீட் ஆ புடிகிறாங்க இட ஒதுக்கீடு குடுக்குறதுக்கு ….
      மருதையன் இடம் குடுக்கல சண்முகம் இடம் குடுக்கலைன்னு சினபுள்ள தனமா இருக்கு .
      இட ஒதுக்கீடு இடஒதுக்கீடு நு நாசமா போங்க !

    • ஜக்கம்மா எப்போதுமே கிசுகிசுவைப் பற்றித்தான் குறி சொல்லுமோ?

  23. இது என்ன கவித மனுதர்மத்துல ஒரு கவித இருக்கு பாரு அதுக்கு ஈடு இனை கிடையாது (பால்யே பிதிர்வஸே விஷ்டேது பானிக்ரஹா யெளவ்வனே புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது நபஜேத் ஸ்த்ரீ ஸ்வதந்த்ரதாம்) அதாகப்பட்டது இதற்கு அர்த்தம் என்னவேன்றால். பெண்ணே நீ குழந்தை பருவம் வரை அப்பன் சொன்னதை கேள் வளர்ந்து மணமனதும் கனவன் சொன்னதை கேள் உனக்கு குழந்தை பிறந்து தலையேடுத்ததும் உன் மகன் சொன்னதை கேள் உனக்கு இதுதான் கதி நீ சுகந்திரமாக வாழ தகுதியற்றவள் ஆண் சொல்படி கேள் 

  24. //உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – ௬// தோழர் கவிதை எழுதி இருக்கார்னு நினைக்கேன்..அதை ஏன் கட்டுரை என்று போடுறீங்க தோழர்? 🙂

  25. ஒரு இத்தாலிய பழமொழி, வேலை செய்பவனுக்கு ஒரு சட்டை வேலை செய்யாதவனுக்கு இரு சட்டைகள். உபரியை விழுங்கும் முதலாளித்துவத்திற்கு மிகவும் பொருத்தமான பழமொழி. உபரியை மட்டுமா விழுங்குகிறான், தொழிலாளியை குஜால் படுத்துகிறேன் என்று அவனின் உழைப்புச் சக்திக்கு பரிவர்த்தணையாகப் பெறும் கூலியின் பெரும்பகுதியையும் அல்லவா அபகரித்துக்கொள்கிறான்.
    கேக்குறவன் கேனையனா இருந்தா கேழ்வரகில் நெய்வடிதுன்னு  சொல்வானாம். அதுபோல்தான் உபரிமதிப்பு என்பது மாயைய்னு சொல்வதும்.

  26. வினவு, பொருத்தமில்லாத இடத்தில் இதைக் கேட்பதற்கு மன்னிக்கவும். ஆனால் எங்கு கேட்க வேண்டும் என்று தெரியாததால் இங்கு கேட்கிறேன். இங்கே நடிகர் ஜெயராம் வீடு தாகப் பட்டதைப் பற்றி வந்த கட்டுரையை த்தேடிப் பார்த்தேன். கண்டு பிடிக்க முடியவில்லை. தயவு செய்து அக்கட்டுரையின் இணைப்பைத தர முடியுமா?

  27. ௦நெடிய உரைவீச்சு என்றாலும் ஒரு வரலாற்றுத் தொகுப்பு .நீளம் அதிகரிக்க அதிகரிக்க தொய்வு ஏற்படும் என்பது அறிவியல் விதி தானே?என்றாலும் நினைவில் நிற்பவை நிறைய .பெண்கள் பொறுமையாகப் படிப்பார்கள் என்று சொன்னால் அது ஆணாதிக்கம் ஆகிவிடுமோ? பெண்ணியவாதிகளின் நிலைப்பாடு தான் சற்று நெருடுகிறது.

  28. விதை அருமைஆனால் மேலே ஒருவர் கூறியிருப்பது போல் கம்யூனிஸ்ட் அமைப்புக்களின் தலைமை பொறுப்புகளில் பெண்கள் பெருமளவு வரவேண்டும் அதற்கான தடைகள் எதுவும் புரட்சிகர அமைப்புகளில் கிடையாது இவை சாத்தியமாகுவது பெண் தோழர்களின் கைகளில்தான் உள்ளது,

  29. ஒரு ஆணாய் இருந்து பெண்ணின் நிலை உணர்த்து புரிந்து எழுதி இருகிரிகள் . நன்றி . தாய் அனுபவதித்த வேதனை உம்மை பெண்மையின் நிலை உணர வைத்திருகிறது .”மனைவியை அடிக்காதே ” தான் அனுபவித்த வலி பிறருக்கு வேண்டாம் எனும் பெண்ணினி அன்பையும் பெருந்தன்மையையும் ஆண் பயன் படுத்தி கொண்டான் பெண்ணை வீட்டில் விட்டு கொடுத்து செல்வதற்கு .
    உரிமை சுதந்திரம் கேட்டு பெறுவதல்ல . எடுத்து கொள்ள வேண்டியது . இன்றைய பெண்கள் பெரும்பாலும் அறிந்து இருகின்றனர் எப்போது அவர் உரிமை எந்த விசயத்தில் உறுதியாய் இருக்க வேண்டும் , எதற்கு எப்போது விட்டு கொடுக்க வேண்டும் என்று .விஜயகாந்த் பானியில் புள்ளிவிபரப்படி சொன்னால் முன்பு இருந்ததைவிட ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை ஆண்களிடம் இப்போது குறைந்து தான் உள்ளது .(கலை ஞர் பாணியில் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் இந்த நிலை குறைவாக உள்ளது :)…)
    பெண் தன பெயரின் பின்னால் கணவன் தந்தை பெயரை போடுவதாளியே அடிமை ஆகி விடமாட்டாள் . அது அவள் தீர்மானிக்க வேண்டிய அவளின் உரிமை . அன்பின் பொருட்டும் கூட பெயரை இணைத்து கொள்வது ஒன்றும் தவர் அல்ல .
    ஆணாதிக்கம் வேண்டாம் பெண்ணாதிக்கம் வேண்டாம் . இருவரும் சமம் எனும் நிலை வேண்டும் .

  30. அய்யா துரை சண்முகம்- இப்படியே குழப்பி கடைசி வரை,பெண்மையின் தனிதுவம் அவுங்கலுகே தெரியாம பண்ணிருஙக. சுயசிந்தனையை மட்டம் தட்ட சரியன வழி good tactics.

    “women wake up before this kind of poison kills U”

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க