Wednesday, November 6, 2024
முகப்புகட்சிகள்தி.மு.ககருணாநிதியின் வம்சம் 24×7

கருணாநிதியின் வம்சம் 24×7

-

கருணாநிதி 24x7
வம்சம், கனிமொழி, அஞ்சுகம், இதெல்லாம் கோடம்பாக்கத்தில் எடுக்கப்பட்ட எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களின் பெயர்கள்.  இனி வரும் காலங்களில் தயாநிதி, கலாநிதி, தயாளு, ராஜாத்தி, காந்தி அழகிரி, துர்கா ஸ்டாலின், இதெல்லாம் தமிழ் சினிமாவில் வரப்போகிற படங்கள். இதற்கு கூட்டம் கூட்டி ஆள் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை.

ருணாநிதியின் வாரிசுகள், வாரிசின் வாரிசுகள் என்று நிறுத்தமில்லாமல் வளர்ந்து விட்ட நிலையில் எல்லா தொழில்களையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பம் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. பிரமாண்ட மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், நவீனக் குடியிருப்புகள், சாராய ஆலைகள், ரியல் எஸ்டேட், எந்த வழியிலேனும் சம்பாதித்து தமிழகத்தையே பழைய ராஜராஜசோழன் காலத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறார் கருணாநிதி. ஆக அரசியலிலும், தொழில்களிலும் முத்துவேலர் வம்சம் கொடி கட்டிப் பறக்கிறது.

எண்பதுகளில் இந்தியாவையே கபளீகரம் செய்த நேரு குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எதிர்த்தவர் கருணாநிதி. இந்தியா என்ன நேரு குடும்பத்தின் சொத்தா? என்றெல்லாம் கேட்டவரின் குடும்பம் நேரு குடும்பத்தையே விஞ்சி விட்டது. மகள், மகன், பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன் என்று கிளம்பி வந்து தமிழகத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மெகா குடும்பத்தை அண்டிப் பிழைக்கும் குறுநில மன்னர்களோ அவர்கள் சக்திக்கு வட்டம், மாவட்டம், வட்டாரம் என்று பங்கு போட்டு வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். ‘வட போச்சே’ என்பது போல சசிகலா குடும்பமோ  அடுத்து எப்படி ஆட்சிக்கு வருவது இந்தத் தொழில்களை எப்படிக் கைப்பற்றுவது என்று கைபிசைந்து நிற்கிறது.

தமிழின் சினிமாவில் ஒரு காலத்தில் சிறு சிறு தயாரிப்பாளர்கள் கூட சினிமாத் தொழிலில் முதலிட முடியும் என்ற நிலை மாறி சன் தொலைக்காட்சி கேட்கிற விலைக்குள் படத்தை எடுத்து முடித்து அதற்குள் லாபம் பார்க்கிற ஒருவரால் மட்டுமே சினிமாவில் இருக்க முடியும் என்ற நிலை. இதை மீறுகிறவர்களோ, சன், கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு அப்பாற்பட்டு ரசிகர்களை நம்பி படம் எடுக்கலாம் என்று நினைக்கிறவர்களோ அதிகாரமற்றவர்களாக இருந்தால் கோடம்பாக்கத்தில் எதுவுமே செய்ய முடியாத நிலை. அல்லது எல்லோரும் மணிரத்னமாகப் பிறந்திருக்க வேண்டும்.  ஒரு மாறன் இல்லை என்றால் சோனி நிறுவனத்திடம் பேரம் பேசி விற்கும் தந்திரம் தெரிந்திருக்க வேண்டும். ஆக விருத்தியான பார்ப்பன, திராவிட வம்சங்களில் பிறக்க வாய்ப்பில்லாதவர்கள் கருணாநிதியின் வம்சத்தின் முன் அடங்கி நடக்க வேண்டும். இதுதான் மாமன்னர் கருணாநிதியின் அரசியல் வளர்ச்சி.

இவர்கள் முதன் முதலாக கைப்பற்றியது கேபிள் தொலைக்காட்சியை. திமுகவின் கட்சிப் பணத்தை எடுத்து பேரன்களுக்குக் கொடுத்து பூமாலை என்னும் வீடியோ பத்திரிகையைத் துவங்கினார் மாமன்னர். பின்னர்தான் அதிகாரமும் வந்து சேர, பூமாலை தன் வலையை விரித்து கேபிள் தொடங்கி இப்போது தென்னிந்தியாவையே 17 சேனல்களால் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் தூர்தர்ஷன் தமிழர்களுக்கு எதிரானது என்று சொல்லி தூர்தர்ஷனை உடைத்த கருணாநிதியின் குடும்ப ஊடகங்கள் தூர்தர்ஷனை விட படுமோசமான நஞ்சு போதையை மக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

இவர்களை மீறி எந்த ஒரு தொலைக்காட்சியும் கேபிள் வழி மக்களைச் சென்றடைய முடியாத நிலை. இவர்களை விமர்சித்து ஏதாவது நிகழ்ச்சி தயாரித்தால் அந்த நிகழ்ச்சி மக்களைச் சென்றடையாது. காரணம் 70% கேபிள் இணைப்புகளை கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் வைத்திருக்கிறது. மீதியை அழகிரிக்குச் சொந்தமான நிறுவனம் வைத்திருக்கிறது.  இது கேபிள் தொலைக்காட்சியின் நிலை. வம்சங்களுக்கிடையில் பிளவு வந்த போது அரசுத் தொலைக்காட்சி துவங்கி உமசாங்கரை பொறுப்பாகப் போட்டு பின்னர் வம்சம் இணைந்ததும் அவரை பலிகடாவாக்கியதுதான் வம்சத்தின் இயல்பான குணம். வம்சம் பிரிந்த போது ஒரு தொலைக்காட்சிதான் இருந்தது. வம்சம் இணைந்த பின் செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்பது போல  சன், கலைஞர் என்று இரண்டு சனியன்கள்.

சினிமாவை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்று நினைத்த மாறன் சகோதரர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தைத் துவங்க, ஸ்டாலினின் மகனோ ரெட் ஜெய்ண்ட் நிறுவனத்தைத் துவங்கினார். அழகிரி மகனோ கிளவுட் நைன் நிறுனத்தை துவங்கினார். இன்று கோடம்பாக்கத்தில் இந்த மூன்று சினிமா நிறுவனங்களும் வைப்பதுதான் சட்டம். மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர்களுக்கு பத்து கோடி சம்பளம் ஏற்றி விட்டதோடு, எந்தப் படத்திற்கு தியேட்டர் கொடுப்பது, எந்தப் படத்தை எப்போது வெளியிடுவது, தொலைக்காட்சி ரைட்ஸ் எவ்வளவு என தீர்மானிப்பது எல்லாம் இவர்கள்தான்.

இந்த வம்சத்தின் அரஜாகத்திற்கு துணை போகும் சூப்பர் ஸ்டார்கள், சுப்ரீம் ஸ்டார்கள், புரட்சி நாயகர்கள். படங்களில் இந்த புர்ரச்சி வீரர்கள் காண்பிக்கும் வீரம் நிஜத்தில் கோபாலபுரத்தில் கொத்தடிமைகளாக நடமாடுகின்றன. கருணாநிதி வம்சம்  எடுக்கிற சினிமாவைத்தான் விநியோகஸ்தகர்கள் வாங்க வேண்டும், தியேட்டர்காரர்கள் திரையிட வேண்டும், ரசிகர்கள் பார்க்க வேண்டும். இது போக எடுக்கப்படுகிற எல்லா சினிமாக்களையும் தங்கள் தொலைக்காட்சிகளுக்கே கேட்கிற விலைக்கே விற்க வேண்டும் என்ற மறைமுக நெருக்கடி வேறு. ஆக கருணாநிதி வம்சத்தின் அந்தப்புரமாக கோடம்பாக்கம் மாறி விட்டது.

அடுத்து பத்திரிகை. தமிழ் பத்திரிகை உலகில் கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளையுமே கட்டுப்படுத்துவது, அல்லது பத்திரிகை துவங்குவது என்று துவங்கி இப்போது இருக்கும் எல்லா ஊடகங்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது கருணாநிதி வம்சம்.  குமுதம் செட்டியாருக்கும் வரதராஜனுக்கும் வந்த பிரச்சனையில் உள்ளே நுழைந்த கருணாநிதி இரு தரப்பையுமே தன் வழிக்குக் கொண்டு வந்து விட்டார். செட்டியார் இனி எப்போதும் கருணாநிதிக்கு எதிராக எழுத முடியாது. வரதராஜனின் குமுதம் ரிப்போர்ட்டரோ எழுதிய அடுத்த நிமிடமே பழைய எப்.ஐ.ஆர் தூசு தட்டி எடுக்கப்படும் நிலையில் நிரந்தரமான கத்தியை செட்டியாருக்கும், பார்ப்பனருக்கும் சேர்த்தே தொங்க விட்டு விட்டார் கருணாநிதி.

மிச்சமிருப்பது ரியல் எஸ்டேட். கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து குடிகாரராக இருந்த இவர் நீண்டகாலமாக கருணாவைத் திட்டிக் கொண்டிருந்தார். அதிமுக கூட கருணாநிக்கு எதிராக இவரைப் பயன்படுத்திக் கொண்டது. இப்போது ஐந்தாவது முறையாக முதல்வரான கருணாநிதி பதவியேற்ற உடனேயே முத்துவை சேர்த்துக் கொண்டார். இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் முத்துவின் மகன் டாக்டர் அறிவுநிதி கொடி கட்டிப் பறக்கிறார்.  இன்றைய தேதியில் தமிழக விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு நிலத்தை மிரட்டி வாங்கி பிரமாண்ட குடியிருப்புகளை அமைப்பதும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விவசாய நிலங்களை மக்களை மிரட்டி வாங்கிக் கொடுப்பதும்தான் அறிவுநிதியின் தொழில். ஒரே நாளில் பல கோடி ரூபாய், இப்படிக் கட்டப்பஞ்சாயத்து செய்து சம்பாதிக்கும் அறிவு நிதி சினிமாவிலும் அவ்வப்போது போலீஸ் மாமா கேரக்டரில் நடித்து சமூக நீதியை நிலைநாட்டுகிறார்.

முத்துவேலர் வம்சம் தழைத்தோங்கி செழித்தோங்கி ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஆக்டோபஸ் போலப் படர்ந்திருக்கிறது. ஆனால் கருணாநிதி முன்னர் எப்போதையும் விட தனது வாரிசுகளை நினைத்து பெருமை கொள்கிற ஒரு தகப்பனாக வம்சத்தின் அரசனாக இருக்கிறார். இது தொடர்பான அதிருப்தி எல்லா தரப்பிலும் எழுவதை உணர்ந்திருக்கும் கருணாநிதி அதை அலட்சியத்துடன் ஒதுக்குகிறார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த நடிகர், நடிகைகள், தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கி வீடு கட்டும் திட்டத்தை துவங்கும் விழாவில் கலந்து கொண்டு தன் பெயரை தானே அந்த சினிமா ஏழை நடிகர்களின் நகருக்கு வைத்து, அதை தானே திறந்து வைத்துப் பேசிய கருணாநிதி இந்தியாவில் உள்ள எல்லா வாரிசுகளையும் சுட்டிக்காட்டி இப்படி எல்லோரும் வாரிசாக இருக்கும் போது ‘‘என் மனைவி மட்டும் மலடியாக இருக்க வேண்டுமா? ’’ என்று கேட்டிருக்கிறார். மேலும் தான் திராவிட மக்களுக்காக உழைப்பதாலேயே இப்படித் திட்டப்படுவதாக வேறு தன் வழக்கமான திராவிட, பார்ப்பனப் பல்லவியைப் பாடியிருக்கிறார். நிகழ்ச்சி முடிந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கலாசார தூதுவரும் பார்ப்பன நாட்டிய மாமேதை பத்மா சுப்ரமணியத்தின் ராஜராஜசோழன் ஆயிரமாண்டு ஸ்பெஷல் மானாட மயிலாட டான்ஸ் ரிகல்சலுக்குச் சென்றதாகக் கேள்வி.

புழுத்து நாறிக் கொண்டிருக்கும் இந்த சமூக அமைப்பில் சினிமா தொடங்கி சட்டமன்றம், நாடாளுமன்றம் வரை வாரிசுகளின் ராஜ்ஜியமே கொடிகட்டிப் பறக்கிறது. இந்த வாரிசுகள் தங்களின் திறமைகளால் வந்தவர்களில்லை. அரசு, சினிமாத்துறைகளின் பிரமாண்டமான இரும்புக் கதவுகள் இவர்களின் தனிப்பட்ட திறமைகளுக்காகவும் திறக்கவும் இல்லை. ரவுடி அழகிரி மத்திய மந்திரியானதும், அழகிரி மகன் தயாரிப்பாளராகவும், ஸ்டாலின் மகன் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளராகவும், தயாநிதி எம்.பி, அமைச்சரானதும், இலக்கியவாதி கனிமொழி ஓவர்நைட்டில் பாராளுமன்ற உறுப்பினராக ஆனதும் வம்சத்தின் அதிகார செல்வாக்கில்தான். இந்த வம்சத்தின் ஆட்சியை ஏற்றுக் கொண்டதால்தால் ரஜினி வம்சம், கமல் வம்சம், போன்ற சினிமா வம்சங்கள் வாழ்கின்றன.

இப்போது வம்சம் தனது சாம்ராஜ்ஜியத்தை அதிகாரப்பூர்வமாகவும், வியாபார நிமித்தமாகவும் நிலைநாட்டி விட்டது. அரசியலோ, சினிமாவோ, பத்திரிகையோ எல்லாம் வம்சத்தின் தயவில் வாழ்கின்றன. வம்சத்தை எதிர்த்துக் கொண்டு ஒரு தமிழன் கூட தமிழகத்த்தில் மூச்சு கூட விடமுடியாது. தமிழ், திராவிடம், முற்போக்கு, முதலாளித்துவம் எல்லாம் வம்சத்தின் இருப்பிற்கேற்ப புதிய விளக்கம் பெறுகின்றன.

சட்டபூர்வமாகவோ, சட்டமன்ற தேர்தல் மூலமாகவோ இந்த வம்சத்தை வீழ்த்திட முடியாது. சுரணையும், சுயமரியாதையும், வார்த்தையைத் தாண்டி வாழ்க்கையில் வரும்போது தமிழக மக்க்ளால் வம்சத்தின் ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும். அந்த நாள் தானாக வருமென்று காத்திருப்பவர்கள் முடக்கப்படுவார்கள். அந்த நாளை தனது போராட்ட இலக்காக கொண்டு போராடுபவர்கள் அதிகரிக்கும்போது வம்சம் அதன் அடிப்படையற்ற டாம்பீகத்திலிருந்து வேரும் விழுதுமாய் நீக்கப்படும்.

தொடர்புடைய பதிவுகள்

 

  1. அவர்கள் எல்லாம் திறமையினால் முன்னுக்கு வந்தவர்கள்.
    உங்களுக்கு ஏன் இவ்வளவு பொறாமை?

    • அந்த “திறமைகளை” தான் விலாவரியா மேலே கட்டுரையில் வினவு சொல்லிருகாரு… இதெல்லாம் படிச்சிடும் இப்படி ஒரு கமண்டா ??

      உஸ்ஸ்ஸ்….முடியல்ல…!!!

        • Mr. Amuthan அவர்களே,
          “”avarkaL kurukku vazhiyil sambaathippathaaga neer eNNinaal, avarakaL meethu kutram sumaththi case poda veNdiyathuthaane ?””

          பதில்;
          அவர்கள் மீது வழக்கு தொடர மக்கள் ஆட்சி வந்தாதால் தான் முடியும், இது மன்னர்களின் ஆட்சி (கருணாநிதி) பன்னாட்டு முதலாளிகளுக்காக இயற்றப்பட்ட இந்த சட்டம் இருக்கும் போது மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக மக்களால் ஒரு சட்டம்இயற்றப்பட வேண்டும், அப்போது நீங்கள் சொல்வதை போல CASE போடலாம், நீங்களும் வாங்க. Mr. Amuthan

  2. கருணாநிதியின் வம்சம் 24×7 | வினவு!…

    கருணாநிதி வம்சத்தை எதிர்த்துக் கொண்டு தமிழகத்த்தில் மூச்சு கூட விடமுடியாது. தமிழ், திராவிடம், முற்போக்கு, முதலாளித்துவம் எல்லாம் இந்த வம்சத்தினால் புதிய விளக்கம் பெறுகின்றன….

  3. இம்முடியாட்சி இந்த வருடத்தோடு முடிந்து விடும் என்றாலும், அடுத்துவரும் அம்மாட்சியும் வழிப்பறி கும்பல்தான்.
    எப்படியோ வினவுக்கு நிறைய வேலை உண்டு.

  4. //mootoo
    அவர்கள் எல்லாம் திறமையினால் முன்னுக்கு வந்தவர்கள்.
    உங்களுக்கு ஏன் இவ்வளவு பொறாமை?//
    எப்பேர்ப்பட்ட திறமை?
    ஸ்பெக்ட்ரம் ஊழலை மணிக்கொருமுறை ஒளிபரப்பி மந்திரி பதவி வாங்குவது சாதாரண திறமையா?
    நடைபயிற்சி போன முன்னாள் மந்திரியை வெட்டிக்கொன்றுவிட்டு மந்திய மந்திரி ஆவது எளிதா?
    ஆயிரக்கணக்கான பேர் மிசாவில் உதை வாங்கி அதில் பல பேர் உயிரை விட்டும் தான் மட்டுமே அடி வாங்கியதுபோலப்பேசிக்கொண்டு துணை முதல்வர் வரை பதவி பெறுவது அபார திறமையில்லையா?
    முடிவாக,
    திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலேறும்போது திருடிகொண்டு வந்த கிழிந்த கோவணத்தை மட்டும் கையிருப்பாக வைத்திருந்த கருணாநிதி தற்போது தமிழ்நாட்டையே தவணைமுறையில் வாங்கி தனது வம்சத்துக்கே தாரைவார்த்துக்கொடுப்பது என்பது சொல்லி புரிவைக்கக்கூடிய திறமையா?

    • நீர் சொல்லுவது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. அது போகட்டும், அவர் மிசா வில் அடி வாங்கியதை சொல்லுவதில் என்ன குறை கண்டீர்? நீங்க கூட தான் சின்னதா tea குடிக்க கூட்டம் போடுவதையே
      எதோ மகாமகம் கூட்டம் போட்ட மாதிரி காட்டுவீங்க.

      • தோழர் மிசா வில் ஸ்டாலின் உதய் வாங்கியது உண்மை யாருடன் அது ? அவருடன் 5 பெண்கள் இருந்தனர் . ஜட்டியுடன் அழைத்து சென்றனர் . ஏன் தந்தை சவேர விடுதியின் வரவேற்பறை தலைபேசி இடத்தில இருந்து பார்த்தவர். இது பெரிய சாதனையா

  5. கருணாநிதியின் வம்சம் 24×7 | வினவு!…

    கருணாநிதி வம்சத்தை எதிர்த்துக் கொண்டு தமிழகத்த்தில் மூச்சு கூட விடமுடியாது. தமிழ், திராவிடம், முற்போக்கு, முதலாளித்துவம் எல்லாம் இந்த வம்சத்தினால் புதிய விளக்கம் பெறுகின்றன….

  6. The stone age ended not because there was no stones.

    மன்னர்களிடம் அனுமதி பெற்று மன்னராட்சிகள் தூக்கியெறியப்படவில்லை.

    முதலாளி வர்க்கம் தனக்கான சவக்குழியை தானே தோண்டுகிறது.

    ”ஓடப்பர் எல்லாம் உதையப்பராகி விட்டால் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பார் ஆகி விடுவார்” என்பது வரலாறு படிக்காத (அது போரடிப்பதால்) கருணாநிதியின் வாரிசுகள் உணராததாய் இருக்கலாம், இளைஞர்களுக்கு உணர்ச்சி வீறிட 2008ல் வரலாற்று காவிய நாயகர்களின் கட்டுரைகள் தீட்டிய கருணாநிதிக்கு அது நன்றாகத் தெரிந்திருக்கிறது. அதனால் தான் அந்த மக்களை பிரமையில் ஆழ்த்த கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்றும், கலர் டிவி என்றும் தாராள முதலாளித்துவத்தின் தந்திரோபாயங்களை கவர்ச்சிகரமாய் எடுத்தாண்டு இந்திய முதலாளித்துவத்திற்கே இன்று முன்னுதாரணமாக நிற்கிறார். ஆயினும் அவருக்கு உள்ளே உதறல் நிற்கவில்லை என்பதைத் தான் “நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆகியோரது லட்சியங்கள் உயர்ந்தவைகளாக இருக்கலாம். அவர்களது கொள்கைகள் சிலாக்கியமானவைகளாக இருக்கலாம். ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் இப்போது அவர்கள் கையாளுகின்ற முறைகள் மனித நேயத்திற்கு முற்றிலும் விரோதமானவைகளாக இருக்கின்றன” என்பது போன்ற ’வேதனை’ அறிக்கைகளும், ’இல்லாத’ போராட்டங்களைத் தூண்டி விடும் கம்யூனிஸ்டுகள் குறித்த அவரது கோபமான அறிக்கைப் போரும் புலப்படுத்துகின்றன.

  7. மார்வாடிகளும் குஜராத்திகளும் இந்திய பொருளாதரத்தை கையில் வைத்துக்கொண்டு ,இந்தியாவையே ஆட்டிப்படைப்பதை எழுத யாருக்கும் துணிவு கிடையாது.ஒரு தமிழன் திராவிடன் இருந்து விட்டு போகட்டும் .தமிழனுக்கு தமிழன்தான் எதிரி.

    • //சுரணையும், சுயமரியாதையும், வார்த்தையைத் தாண்டி வாழ்க்கையில் வரும்போது தமிழக மக்க்ளால் வம்சத்தின் ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும். அந்த நாள் தானாக வருமென்று காத்திருப்பவர்கள் முடக்கப்படுவார்கள். அந்த நாளை தனது போராட்ட இலக்காக கொண்டு போராடுபவர்கள் அதிகரிக்கும்போது வம்சம் அதன் அடிப்படையற்ற டாம்பீகத்திலிருந்து வேரும் விழுதுமாய் நீக்கப்படும்.//

      வார்த்தையில் சுயமரியாதை கொண்டவர்கள் வாழ்க்கையில் சுயமரியாதை கொள்வது எப்போதோ?

    • பாதி நேரம் டாஸ்மாக் நால அல்லல் படற குடும்பங்களுக்கு அவசரதுக்கு கடன்குடுக்குறது மர்வடிங்க சேட்டுமாறுங்க தான்.
      வம்சம் சொரண்டற சொரண்டலவுட இவணுங்க எவ்வளவோ மேல். நாம வுட்டுல இருக்கற குப்பைய சுத்தம் படுத்துவோம் அப்புறமா வடநாட்டுக்கு போயி Vaccum Cleaner போடறதபத்தி யோசிக்கலாம்.

    • கருணாவின் வெற்றியே… தமிழ்ன் திராவிடன் என்று பேசி விட்டு சொத்து சேர்ப்பதுதான்.. அதைத்தான் subamenu என்கிற பின்னுட்டவாதியும் செய்கிறார்.. ஏதாவது கேட்டால் நான் தமிழன்டா… என்ன கொற சொல்றியே என்பது… உண்மையின் தமிழ்னுக்கு எதிரி என்பது இத்தகைய வாதம்தான்….

  8. //செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்பது போல சன், கலைஞர் என்று இரண்டு சனியன்கள்.//
    :)))))

  9. எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர்
    – வம்சம்

    எப்பாடு பட்டாலும் குடும்பத்தை தாண்டி கட்சியில் யாரையும் வளர விடாதவர்

    – செம் மொழி காத்தான்

  10. நாம் விரைவில் ஒன்று ஒரு மௌனப்புரட்சிக்கு தயார் ஆகவேண்டும்.. அல்லது 2000 ரூபாய்,குவார்ட்டர் பாட்டில், பிரியாணிக்கு நம் ஒட்டை விற்க தயாரக இருக்கவேண்டும்…சோத்தமுக்கி,சொரணைக்கெட்ட தமிழர்களே … நீங்கள் எந்த விஷயத்திற்கு விழிப்பாக இருக்கீறிர்கள் என்று தெளிவாக சொல்லுங்கள்….?

    • நைட்டு 10 மணிக்குள்ள சரக்கு வாங்கிடுணும், இல்லேனா கடை கட்டிடுவங்க..இந்த விசயத்தில் ரொம்ப ஷார்பா (விழிப்பாக)… இருப்போம்லா….!!

  11. இந்த குடும்பத்தின் “Family Tree” புரியாமல் முழித்தேன். இப்போ புரிகிறது நன்றி.

  12. மன்னர் மன்னர், லகுடபாண்டிகளின் அல்லக்கை கோஷத்தில் புளங்காகிதம் அடைந்து இருப்பார்.

    இன்னொன்று ! முதலாளிகள் இப்படிதான் அயோக்கியதனமாக உருவாகுகின்றனர்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

  13. Rediff la ஆனமலைய ஒடச்சு கிரநைட் எடுக்கறதுக்கு வம்சம் ஏற்பாடு செய்யுதாம் மதிப்பு 2500 கோடியாம், இவனுங்க யானைமலைய ஒடச்சு சுண்டெலி மலை ஆக்கீடுவனுங்கையா

    http://news.rediff.com/slide-show/2010/mar/10/slide-show-1-tamil-nadu-casts-evil-eye-on-granite-elephant.htm#contentTop

  14. முத்தமிழ் வித்தகர்;மூத்த தலைமகன்
    முடியில்லாத சோழன்; நாட்டை
    மொத்தமுமாகக் குத்தகைக்கெடுத்து
    முறைப்படித் தேர்தலில் வென்றவர்:
    எத்தகு விமர்சனம் எழுந்தபோதும்
    எனது ’மக்கள்’என்’பவர்’;என்பார்
    உத்தம வாரிசுப் பட்டியல் குறைத்து
    உமது தளத்தில் வெளியிட லாமோ?

  15. கலைஞர் எழுதிய திரைக்கதை வசனமே அவருக்கு எதிராகிவிட்டது.
    அவர் உரையெழுதிய திருக்குறளே அவரைப் பார்த்து நகைக்கிறது.
    சிலப்பதிகாரமோ அவரைப்பார்த்து நாணப்பட்டுக்கொண்டிருக்கிறது.
    மந்திரிகுமாரியோ நீ, வாராய் என்று மலைக்கு அழைக்கிறாள்.
    குஷ்புவோ ஐயோ! இப்பதானே ஜாய்ண்டானேன் என்று கண்ணீர்
    சீந்துகிறார்.

    • If we conscious Indians take an assertion not to vote, then such dishonest parties headed by people like Karunanidhi could easily win the election without much effort because these thugs can buy the rest of the crowd by insinuating strategies like mooting jingoistic ferver, or emoting people with ideologies and groupism like ‘thravidar’ and ‘tamizhan’ conferring their self professed leaderships on these and by diverting people’s attention to things that would not address the dire problems of the state and people, false proclamations, inducing psychosis and unfounded fear that if people will not vote for them they would be ruled by the elite class and will be left with no real protection or leader to speak for them in such a case.
      People like Karunanidhi and Jayalaitha are worried not because the larger crowd but because of people like you and me the consious voters which they call by the term ‘swing electorates’ who are thinkers, not loyal to a single party, and would vote to the party depending upon the situation of the state and without selfish goals or clannish thinking. So it is not right to say and take a decision to not vote in the elections, we as people also have to play our politics in such situations by dethroning the corrupt governments thereby sending a strong message to those who strive for power and position in politics by employing such manipulative tactics and methods. In a democracy for good governance to prevail one should definitely utilise his right to vote to the maximum extent possible, which is what the responsibility of a good citizen is.

      • //If we conscious Indians take an assertion not to vote, then such dishonest parties headed by people like Karunanidhi could easily win the election without much effort because these thugs can buy the rest of the crowd//
        It would be very very helpful if you,the conscious Indians, identify the ‘honest’ parties to whom not so conscious Indians ,the crowd as you call, should vote to power.

  16. எனக்கு இந்த மக்களையும் பொறுமையையும் நினைத்தால் வியப்பாக இருக்கிறது. சித்தர்களுக்கும் கைகூடாத மெளனமும் பெருந்தன்மையும்:)))))

  17. ஒரு குடும்பத்த உருவாக்கச்

    சொன்னா, பாவிப் பயல்

    ஒரு ஊரையே உருவாக்கி

    வெச்சிருக்கான்

    கண்ணதாசன் சொன்னது போல்

    “”இந்த நாடும்

    நாட்டு மக்களும்

    நாசமாய் போகட்டும்””

    என்ற வார்த்தைகள் பலித்துக் கொண்டே

    இருக்கிறது.மீண்டும் ஒரு முறை இவர்கள்

    கையில் நாம் ஆட்சியை கொடுத்தோமானால்

    ஒரு பீகாரை போலவோ,ஜார்க்கன்ட் போலவோ

    நமது மாநிலம் நாசமாய் போய் விடும் என்பது

    உறுதி.இருக்கும் ஒவ்வொரு வாரிசுகளும் தமிழகத்தை

    பாகம் பிரித்து கிரயம் செய்து விடுவார்கள் என்பதும்

    உண்மை.இதற்கெல்லாம் எப்பொழுது மாற்றம் வரும்

    என்பதும் தெரியவில்லை.இப்பொழுது இருக்கும் நிலையை

    பார்த்தால்,எதிர் காலம் என்பது,வெறும் “”கானல் நீர்””வெச்சிருக்கான்.

  18. கேபிள் தொழில், தனியார் தொலைக் காட்சி, சினிமா, ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் கருணாநிதி ஈடுபடுவதால்தானோ தமிழினத்திற்கு எதிரான ஹிந்தியத்திற்கு அடிமை சேவகம் செய்து கொண்டு இருக்கிறார்…

    ஆட்சி மாறி அம்மா ஆட்சி வந்தால் சுதாகரன், தினகரன், பாஸ்கரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ், சுந்தரவதனம், விவேகநந்தன், மகாதேவன் போன்றவர்கள் தொழிலை டெவலப் செய்வார்கள்…

    கருணாநிதி குடும்பம் அதே தொழிலை மெயிண்டெயின் செய்வார்கள்…

    அப்போது வினவும் ஜெவின் மபியா கும்பலுக்கு எதிராக எழுத வேண்டி இருக்கும்…

    எப்படி இருந்தால் ஹிந்தியா எனும் பார்ப்பன முதலாளித்துவ கட்டமைப்பு இருக்கும் வரை கொள்ளைகாரர்கள்…

    மக்களின் உணர்வுகளை… உயிர்களை மிதித்து… வாழ்ந்து கொண்டிருப்பார்கள்…

  19. ஒரு குடும்பத்த உருவாக்கச்
    சொன்னா, பாவிப் பயல்
    ஒரு ஊரையே உருவாக்கி
    வெச்சிருக்கான்
    கண்ணதாசன் சொன்னது போல்
    “”இந்த நாடும்
    நாட்டு மக்களும்
    நாசமாய் போகட்டும்””
    என்ற வார்த்தைகள் பலித்துக் கொண்டே
    இருக்கிறது.மீண்டும் ஒரு முறை இவர்கள்
    கையில் நாம் ஆட்சியை கொடுத்தோமானால்
    ஒரு பீகாரை போலவோ,ஜார்க்கன்ட் போலவோ
    நமது மாநிலம் நாசமாய் போய் விடும் என்பது
    உறுதி.இருக்கும் ஒவ்வொரு வாரிசுகளும் தமிழகத்தை
    பாகம் பிரித்து கிரயம் செய்து விடுவார்கள் என்பதும்
    உண்மை.இதற்கெல்லாம் எப்பொழுது மாற்றம் வரும்
    என்பதும் தெரியவில்லை.இப்பொழுது இருக்கும் நிலையை
    பார்த்தால்,எதிர் காலம் என்பது,வெறும் “”கானல் நீர்””

  20. கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழக அரசியல் நடைபெற்ற பல்வேறு தவறுகளுக்கும், அயோக்கியத்தனங்களுக்கும், அத்துமீறல்களுக்கும் கருணாநிதியே காரணமாக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழர்களின் ஆளுமையை அனைத்துத் துறைகளில் சீரழித்தவர் கருணாநிதி.

    “கருணாநிதி” என்ற கெட்ட வார்த்தை கருணாநிதியின் குடும்ப பலத்தால் எதிர்காலத்தில் போற்றத்தக்கதாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை உள்ளதை உள்ளபடி தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    கருணாநிதியைப் பற்றி நன்கு அறிந்த பல நேரடி சாட்சிகள் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றன. அதற்குள் அவர்களிடமிருந்து வாக்குமூலமாவது பதிவு செய்யப்பட வேண்டும்.

    கருணாநிதியின் மூதாதையர்களும் பெற்றோரும், கருணாநிதியின் பிறப்பும் வளர்ப்பும், கருணாநிதியின் நம்பகத்தன்மை, கருணாநிதி குடும்பத்தினருக்கு செய்த துரோகம், பெரியாருக்கு செய்த துரோகம், தி.மு.க.விற்கு செய்த துரோகம், நண்பர்களுக்கு செய்த துரோகம், தமிழக மக்களுக்கு செய்த துரோகம், கட்டிய மனைவி பெற்ற பிள்ளைகளுக்கு செய்த துரோகம் என இப்படி எத்தனையோ தலைப்புகளில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை தொகுக்க வேண்டும்.

  21. தின்னை பேச்சுவீரரிடம் ஒரு கண்ணாக இருக்கவேண்டும் அண்ணாச்சி
    -மாநகர்எருமை.

  22. ///சீ.பிரபாகரன்…..கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழக அரசியல் நடைபெற்ற பல்வேறு தவறுகளுக்கும், அயோக்கியத்தனங்களுக்கும், அத்துமீறல்களுக்கும் கருணாநிதியே காரணமாக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழர்களின் ஆளுமையை அனைத்துத் துறைகளில் சீரழித்தவர் கருணாநிதி///

    கோபம இருக்கும் இடம் குணம் இருக்கும்…அதை ஒத்துக் கொள்கிறேன். உங்களுக்கு நல்ல குணம் உள்ளது. ஆனால் சிந்திக்கும் திறந இருக்கும் என்று எதிர்பார்க்க கூடாதுதான்.

    ஏன்???

    கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆண்டது கருணாநிதி மட்டுமல்ல. கருணாநிதி ஆண்டது இருபது வருடம் மட்டுமே. காங்கிரசும் அதிமுகவும் ஆண்டது 30 வருடங்கள்….எம்ஜியார் பத்து வருடம், அம்மா பத்து வருடம், காங்கிரஸ் மீதி வருடம்….

    அவர்கள் (காங்கிரசும் அதிமுகவும்), அந்த முப்பது வருடம் என்னத்தை புடுங்கிக் கொண்டு இருந்தார்கள். அப்போ அந்த “நீங்கள் விரும்பும் நல்லாட்சியை” கொடுக்க வேண்டியது தானே?

    எவன் அவர்கள் கையை தடுத்தான்..அவர்கள் கையை தடுத்து நீங்களா?

    சொல்லுங்கள் அம்பி!!!

    பின் குறிப்பு:
    உங்களை மாதிரி ஆட்களுக்காக நான் மூன்று பதிவு போட்டுள்ளேன்.

    முடிந்தால் படியுங்களேன் அம்பி அவ்ர்களே!!!!

    • ஆட்டையாம்பட்டியாருக்கு வணக்கம்.

      கருணாநிதியின் அயோக்கியத்தனம் அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் மட்டும் நடக்க வில்லை. தி.மு.க. தொடங்கிய காலத்திலிருந்தே அவருடைய வேலையை தொடங்கிவிட்டார்.

      மேலும் “கருணாநிதி மட்டும்தான் தமிழ்நாட்டை சீரழித்தவர்” என்று நான் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இவர் அளவுக்கு மற்றவர்கள் மோசமில்லை என்பதே என் கருத்து.

      • ///சீ.பிரபாகரன்…..கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழக அரசியல் நடைபெற்ற பல்வேறு தவறுகளுக்கும், அயோக்கியத்தனங்களுக்கும், அத்துமீறல்களுக்கும் கருணாநிதியே காரணமாக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழர்களின் ஆளுமையை அனைத்துத் துறைகளில் சீரழித்தவர் கருணாநிதி///

        சீ.பிரபாகரன்… இது நீங்கள் எழுதியது. எனக்குத் தெரிந்த தமிழின் அர்த்தம நான் கூறிய மேற்சொன்ன பதில் தான். நான் சொன்ன பதில் சரி தான். தமிழ் அறிந்தவர்களை கெட்டுப் பாருங்கள்..

        பல்டிக்கு உதாரணம் இதே இது தான்…

        ///மேலும் “கருணாநிதி மட்டும்தான் தமிழ்நாட்டை சீரழித்தவர்” என்று நான் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.///

        சரி இது பல்ட்டி இல்லை என்று சொன்னால் …இதையும் சொல்லுங்கள்..

        MGR & JJ இருபது வருடம், காங்கிரச Emergency-இல கெடுத்தார்கள் என்றும் சொல்லுங்களேன்!!!

        இந்த புலம்பல் இப்போ என்று இல்லை. எப்போ கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலும் அதெ புலமப்ல். பத்திரிக்கைகளை நம்பாதீர்கள். அவர்கள் ஒரே குறிக்கோள்…அவாளை பதவியில் உக்கார வைக்க வேண்டும். அம்புடுதான்..

        • “கருணாநிதி” தமிழ்நாட்டை தொற்றிய ஒரு கொடூரமான நோய். அதுபோல் ம.கோ.இரா., செயலலிதா போன்றவர்கள் அவரைவிட வீரியம் குறைந்த நோய். தற்போது “கருணாநிதி” என்ற வீரியமான நோயை தற்போது நாட்டை தாக்கியுள்ளது.

  23. கேள்வி:- இந்த வம்சத்தின் ஆட்சியை ஏற்றுக் கொண்டதால்தால் ரஜினி வம்சம், கமல் வம்சம், போன்ற சினிமா வம்சங்கள் வாழ்கின்றன

    பதில்: சொந்த மூளை உடையவர்கள் எதற்காகவுமே பயப்பட மாட்டார்கள். இந்த வீடியோவை பாருங்கள். 00.40 யில் இருந்து.

  24. Enna ithu !
    Aniyaayamaaga irukkiRathe.
    Oru thagappan than piLLaigaLukku seiya veNdiya kadamaikaLaiththaane kalingar seigiRaar. PiLLaikaLum makkaLidam oddu vaangiththaane pathaviyil vuLLaarkaL. UnkaLukku pidikkavillaiyenil karunaanithi vamsaththai therthalil thorkadiththu nallavarkaL enRu neengaL karuthupavarkaLai aadchikkaddilil etraveNdiyathuthaane. Atharkaaka kannadakkaariyaana Jeyalalithaavai nallavar enRu eNNi emaanthuvidaatheerkaL. Jayalalithaavai thavirththu veru yaaraavathu nallavarkaL irukkiRaarkaLaa endru thedip pidiyungaL.
    Karunaanidhi thanathu kudumbaththai munnetrugiRaar enbathai kutRamaaga eNNum neengaL; vungaL kudumbaththai munnetRa maRanthuvidaatheerkaL.
    So. ovvoru thagappanum tnan piLLaigaLai munnukku koNduvaralaam. Aanaal ! karunaanithi maddum than piLLaikaLaiyo allathu kudumbaththaiyo munnetRa koodaathu. ithuthaane vungaL anaivarin viruppam.

  25. ம.க.இ.க வின் கொள்கை என்னவென்று கேட்கும் டவுசர் பு.க மற்றும் பு.ஜ வின் உழைப்பைப் பற்றி கவலைப்படுவது போல் காட்டிக்கொண்டு வாசகர்களை ஏமாற்றுகிறார். ஆனால் இவருக்கு பு.ஜ.வும் பு.க.வும் அறிமுகம் எனும்பொழுது சி பி ஐ க்கும் ம க இ க விற்கும் வேறுபாடு விளங்கவில்லை என்றால் நமக்கு தோன்றுவது தூங்குவதுபோல் நடிப்பவனை ஓரிரு
    முறை எழுப்புவார்கள் இல்லையென்றால் அவரவர்க்குத் தோன்றியபடி கவனிப்பார்கள். 85 இலிருந்து ம க இ க தனது கொள்கைகளை தெருக்களிலும் பல்வேறு மேடைகளிலும் போராட்டக்களங்களிலும் தனிப்பட்ட முறையில் மக்களைச் சந்தித்தும் வெளிப்படுத்தி வந்திருக்கிறது. வினவின் அனைத்துப் பதிவுகளுமே ம க இ க வின் கொள்கையைத்தான் பறைசாற்றுகின்றன. இன்னும் எந்த வெங்காயத்தை உரித்து இந்த விளக்கெண்ணை டவுசருக்கு விளங்கவைக்க முடியும்? கேள்விகளுக்குத்தான் பதிலளிக்க முடியும் கேடுகெட்டத்தனங்களுக்கு முடியாது.
    பாவெல்

  26. It is wrong to equate Manirathnam with Karunanidhi vamsam (aka Parpana vamsam). MR has the needed latent which allows him to talk to Sony or anyone else. Not the same case with Sun family/Karunanidhi family. It is the same story that has been happening in the last 30-40 years. MGR and Karunanidhi dominated the cine and news outlets. Now with the unipolar world of Karunanidhi, his family members dominate all aspects of the media/cine field and use it for either political or business motives. Power beget more power! It is a deep rooted “systemic” problem larger than the immediate scope of this article and impacts the entire state. One of the root cuases for this is that people are ignorant and kept deliberately so.

  27. பெரியாரும் அண்ணாவும் இதை தானா? அவருக்கு கற்றுக்கொடுத்தார்கள். ஏன் பெரியாரியல் அவரை மாற்றவில்லை?

  28. ” செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்பது போல ” …………………………………………………………………………………………அது செத்தும் கெடுத்தான் சீதக்காதி அல்ல தோழா . செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதுதான் சரி..கீழக்கரை ஊர்வாசிகள் கோவித்து கொள்ள போகிறார்கள்.மற்றபடி கட்டுரையின் கருத்துக்கள் நச்.

  29. தொல்.திருமாவளவனுக்கும்,திராவிட இயக்க முன்னோடி திரு.எஸ்.எஸ்.ராஜே ந்திரனுக்கும் என்ன சம்பந்தம்!.அமாவாசைக்கும்,அப்துல்காதருக்கும் உள்ள சம்பந்தம் போல்!.எஸ்.எஸ்.ராஜேந்திரன் மகன் திருமணத்திற்கு,ஊரில் கல்யாணம் என்றால் மார்பில் சநதனம் என்பது போல்,சென்ற திருமா,தான் பலகலைக்கழகம்,மாநிலகல்லுரி,சட்டக்கல்லுரி நண்பர்களின் திருமணத்திற்கு ஒரு வாழ்த்தாவது அனுப்பியிருப்பானா?.

  30. “புழுத்து நாறிக் கொண்டிருக்கும் இந்த சமூக அமைப்பில் சினிமா தொடங்கி சட்டமன்றம், நாடாளுமன்றம் வரை வாரிசுகளின் ராஜ்ஜியமே கொடிகட்டிப் பறக்கிறது”

    இந்த நிலைகெட்ட தமிழ்-சமுதாயத்தை நினைத்தால்
    நெஞ்சு பொறுக்குதில்லையே

  31. North Korea also suffers from this type of dynasty rule. Communism in China and North Korea are examples for people like you. Republic countries develop and give freedom to their citizens. Socialistic/Communist countries result in dynasty and corruption. (Dravidianism is a sort of socialistic ideology)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க