கோவை என்.டி.சி தொழிற்சங்கத் தேர்தல்: பு.ஜ.தொ.மு மாபெரும் வெற்றி!
தமிழகத்திலுள்ள என்.டி.சி. எனப்படும் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான 7 ஆலைகளிலும் டிசம்பர் 18ம் தேதியன்று தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக நடைபெற்ற தேர்தலில், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி) பெருவெற்றி பெற்றிருக்கிறது.
மொத்த வாக்குகளில் முதலிடத்தை தொ.மு.ச வும் (2 பிரதிநிதிகள்) இரண்டாமிடத்தை பு.ஜ.தொ.மு வும், (ஒரு பிரதிநிதி) மூன்றாமிடத்தை சி.ஐ.டி.யு வும் (ஒரு பிரதிநிதி), நான்காம் இடத்தை ஐ.என்.டி.யு.சி யும் (ஒரு பிரதிநிதி) பெற்றிருக்கின்றன.
1974 இல் தேசிய பஞ்சாலைக் கழகத்தின் ஆலைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து கடந்த 36 ஆண்டுகளில் தேர்தல் என்ற ஒன்றை என்.டி.சி மில் தொழிலாளிகள் கண்டதில்லை. தேர்தலை நடத்தவேண்டும் என்பதற்காக கோவையில் இருந்த எந்த கட்சியின் தொழிற்சங்கமும் போராடியதில்லை. தேர்தலே நடக்காமல் இருப்பது நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் வசதியானதாகவே இருந்தது. தொழிலாளர்களின் அங்கீகாரத்தைப் பெறாமலேயே,. அவர்களுக்கு பதில் சொல்லும் தேவை இல்லாமலேயே, அவர்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கும் அதிகாரத்தை இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் பெற்றிருந்தனர். நிர்வாகமும் தேர்தலே இல்லாமல் இவர்களையெல்லாம் பிரதிநிதிகளாக அங்கீகரித்திருந்தது.
தொழிலாளி வர்க்கத்தின் மீது சதித்தனமாகத் திணிக்கப்பட்டிருந்த இந்தக் கட்டைப் பஞ்சாயத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், தேர்தலை நடத்த வைப்பதற்கும் பு.ஜ.தொ.மு தொடர்ந்து போராடியது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தேர்தல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தியது.
தேர்தல் நடத்தப்பட்டால் பு.ஜ.தொ.மு வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தினாலும், 36 ஆண்டுகளாக வழக்கத்தில் இல்லாத ஜனநாயக உரிமையை தொழிலாளி வர்க்கத்துக்கு வழங்கினால் நேரக்கூடிய அபாயம் குறித்த கவலையினாலும் உறக்கம் இழந்த தொழிற்சங்கத் தலைமைகள், ஒரு கூட்டுக் கமிட்டி அமைத்து தேர்தலுக்கு இடைக்காலத் தடையாணை வாங்க அரும்பாடு பட்டனர். இன்று தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றிருக்கும் சங்கங்கள்தான் தேர்தலை முடக்குவதற்கு மும்முரமாக வேலை செய்தன. சட்டத்தில் சந்து கண்டுபிடித்து தேர்தலை தடுப்பதற்கு இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் முறியடித்த பின்னர்தான் இந்த தேர்தல் நடைபெற்றிருக்கிறது.
எனவே, நடந்து முடிந்த தேர்தலில் பு.ஜ.தொ.மு பெற்ற வெற்றியினைக் காட்டிலும், இந்தத் தேர்தலை நடத்த வைத்ததுதான் பு.ஜ.தொ.மு வின் முதன்மையான வெற்றி.
தேர்தலை நடத்தியாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு நிர்வாகம் பணிய நேர்ந்த போதிலும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்று சண்டித்தனம் செய்தது. ஆண்டுக்கணக்கில் தற்காலிகத் தொழிலாளர்களாக வைக்கப்பட்டிருக்கும் சுமார் 1600 தொழிலாளர்களின் வாக்குரிமையை மறுக்க முடியாது என்றும் 240 நாட்கள் வேலை செய்த எல்லாத் தொழிலாளிகளுக்கும் நிரந்தரத் தொழிலாளிகளுக்குரிய உரிமைகள் உண்டு என்றும் போராடி, சுமார் 600 தற்காலிகத் தொழிலாளிகளுக்கு வாக்குரிமை பெற்றுத் தந்தது பு.ஜ.தொ.மு.
மீதமுள்ள சுமார் 1000 தற்காலிகத் தொழிலாளிகளுக்கு வாக்குரிமையை மறுப்பதன் மூலம் தேர்தலைத் தள்ளிப்போட சதி செய்தது நிர்வாகம். இந்தச் சதியைப் புரிந்து கொண்டதனால், தேர்தலை நடத்த வைத்து, 1000 தொழிலாளிகளின் வாக்குரிமை குறித்த பிரச்சினைக்கு அதன் பின் போராடுவது என்று முடிவு செய்தது பு.ஜ.தொ.மு. தற்காலிகத் தொழிலாளிகள் என்று வரையறுக்கப்பட்ட சுமார் 600 தொழிலாளிகளுக்கு வாக்குரிமையைப் பெற்றதன் மூலம், அவர்களுடைய பணி நிரந்தரத்துக்கான உரிமைக்கு கால் கோள் இடப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் பு.ஜ.தொ.மு ஈட்டிய இரண்டாவது வெற்றி இது.
மூன்றாவது வெற்றிதான் பு.ஜ.தொ.முவின் தேர்தல் வெற்றி. இந்த வெற்றியும் எளிதில் அடையப்பட்டதல்ல. தேர்தல் நடைபெற்ற 7 மில்களில் ஒரு மில்லில் மட்டுமே கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் இயங்கி வருகிறது. அதனுடைய செயல்பாடு ஏற்படுத்திய தாக்கம்தான் எல்லா மில்களிலும் உள்ள தொழிலாளர்களை பு.ஜ.தொ.மு வை நோக்கி ஈர்த்திருக்கிறது.
பல என்.டி.சி ஆலைகள் நட்டம் என்று பொய்க்கணக்கு காட்டி மூடப்பட்டும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டும், இருக்கின்ற மில்களில் 20 ஆண்டுகளாக ஊதிய உயர்வு ஒப்பந்தமே இல்லாமல் கிடப்பில் போடப்பட்டும், எதுவும் செய்ய இயலாமல், 36 ஆண்டுகளாக தொழிற்சங்கத் தேர்தல் கூட இல்லாமல், கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர்களைத் தனது பிரச்சாரத்தின் மூலம் தட்டி எழுப்பியது பு.ஜ.தொ.மு. வெறுமனே எங்களுக்கு வாக்களியுங்கள் என்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரங்கள் அல்ல இவை.
தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் எவை, அவை மறுக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன, இன்றைய ஜவுளித்துறை நெருக்கடியின் ஊற்றுமூலம் எது என்று தொழிலாளர்களுக்கு விளங்க வைத்தன இப்பிரச்சாரங்கள். எண்ணற்ற ஆலை வாயிற்கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், துண்டறிக்கைகள்… அனைத்துப் பிரச்சார செலவுகளுக்கும் நிதி கொடுத்து ஆதரித்தவர்கள் தொழிலாளர்கள். தொழிலாளர்களிடம் பு.ஜ.தொ.மு பெற்றது கொள்கை ரீதியான ஆதரவு.
இத்தேர்தலில் தற்போது 2 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தி.மு.கவின் தொ.மு.ச, தனது கொள்கையான “பிரியாணியையும் பாட்டிலையும்” வைத்து சுமார் 10 இலட்ச ரூபாய் செலவு செய்து பிரச்சாரம் செய்தது. ஒரு ஓட்டுக்கு அவர்கள் செய்த செலவு சுமார் 1600 ரூபாய்.
பிரியாணியையும், பாட்டிலையும், சாதியையும் காட்டி, அந்த ஒரு நாளில் மயக்கத்திலாழ்த்தி தொழிலாளிகளின் ஓட்டை அவர்கள் அபகரித்திருக்கலாம். ஆன்ல் தொழிலாளி வர்க்கத்தின் நம்பிக்கையை அவ்வாறு அபகரிக்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் யாரோ, போராடக் கற்றுக் கொடுப்பவர்கள் யாரோ அவர்கள் மட்டும்தான் தொழிலாளியின் நம்பிக்கையைப் பெற முடியும்.
பிரியாணிப் பொட்டலக்காரர்களுக்கு இந்த உண்மை தெரியாததல்ல. அது தெரிந்ததனால்தான் முடிந்த வரையில் தேர்தலே நடக்காமல் அவர்கள் தடுக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை. “அவர்கள் தீவிரவாதிகள்” என்று முத்திரை குத்தி அச்சுறுத்திப் பார்த்தார்கள்; தொழிலாளிகளுக்கு தங்களது எதிர்காலத்தைக் குறித்த அச்சத்தைக் காட்டிலும் பெரிய அச்சத்தை இந்த தீவிரவாதப் பூச்சாண்டி ஏற்படுத்திவிடவில்லை. “அவர்களுக்கு எம்.எல்.ஏ, எம்.பி இல்லாததால் அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தி கோரிக்கைகளைப் பெற இயலாது” என்று சொல்லிப்பார்த்தார்கள்; “எம்.எல்.ஏ இல்லை” என்ற உண்மை, தொழிலாளிகள் மத்தியில் பு.ஜ.தொ.மு வின் செல்வாக்கை அதிகரிப்பதற்கே பயன்பட்டது.
கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (பு.ஜ.தொ.மு) வெற்றியும் பெற்று விட்டது. “இந்த வெற்றி கோவையில் உள்ள தனியார் பஞ்சாலைத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தோற்றுவித்திருக்கிறது என்றும் தங்கள் மில்லில் சங்கம் தொடங்க வருமாறு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன” என்றும் கூறுகிறார், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் செயலர், தோழர் விளவை இராமசாமி.
கோவை நகரின் பஞ்சாலை முதலாளிகளிடம் இந்த வெற்றி என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்? ரங்கவிலாஸ், ஸ்டேன்ஸ் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்தையும், சின்னியம்பாளையம் தியாகிகளின் போர்க்குணத்தையும் அவர்களுக்கு நினைவு படுத்தியிருக்குமோ? அல்லது, பிரட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியில் நடைபெற்ற போராட்டங்கள் என்பதால் அவை பழங்கதைகள் என்று முதலாளிகள் இறுமாந்திருப்பார்களா?
காலனியாதிக்கம், இன்று புதிய வடிவில் மறுகாலனியாக்கமாகத் திரும்பியிருக்கும்போது, தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாறு மட்டும் திரும்பாதா என்ன? திரும்ப வைப்போம்!
_________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்
- ஓசூர் கமாஸ் தொழிலாளர்களின் மாபெரும் வெற்றி ! பொதுக்கூட்டம்!!
- பன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள்!
- நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி!
- அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை!
- தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !!
- நோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ !!
- நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!
- சத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை, ஒரு தொழிற்சங்கம் உருவான கதை
- ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!
- ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!
- இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !
- கான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!
- வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை !
- உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம்!!
- “சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி! உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி!”
- அரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் !!
- கூலித்தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா? இலாப வெறியா?
- கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!
கோவைத் தொழிலாளி வர்க்கத்திடையே ஒரு புத்தெழுச்சி!…
தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான 7 ஆலைகளிலும் தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக நடைபெற்ற தேர்தலில் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (இணைப்பு: பு.ஜ.தொ.மு) பெருவெற்றி பெற்றிருக்கிறது….
கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்துக்கு புரட்சிகர நல் வாழ்த்துகள்
தோழமையுடன்
பைத்தியக்காரன்
உண்மையிலியே கொண்டாடபட வேண்டிய வெற்றி. தேர்தலில் வெற்றி என்பதைவிட தொழிலாளர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
[…] This post was mentioned on Twitter by வினவு. வினவு said: கோவைத் தொழிலாளி வர்க்கத்திடையே ஒரு புத்தெழுச்சி! https://www.vinavu.com/2010/12/20/ntc-ndlf-victory/ […]
வெற்றி பெற்ற புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணிக்கும், தொழிலாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.
பு.ஜ.தொ.மு க்கு புரட்சிகர வாழ்த்துக்கள்…
The workers of NTC revolted against the labour’s “sulthan” of the traditional union leaders. The result is shows this. AITUC, HMS, ATP, MLF, BMS,…. the JAC team which dictates till now the NTC workers were defeated and the CITU, INTUC were in the lower rung after the KOVAI MANDALA PANCHALAI THOLILALAR SANGAM. NDLF will win over the workers of kovai in the coming days.
பு.ஜ.தொ.மு. தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
கோவையில் மீண்டு(ம்) வருகிறது பாட்டாளிகளின் குரல் பு.ஜ.தொ.மு தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
இனிமேல்தான் போலி தொழிற்சங்கங்களுக்கு ஒரிஜினல் ஏழரை ஆரம்பிக்குது…
தொழிலாளர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.
தமிழகத்தின் இந்துத்வாவின் சோதனைக்களன்களின் ஒன்றாக மாறிவரும் கோவையில் செங்கொடியின் கீழ் தொழிலாளி வர்க்கம் போராடப் போகிறது. போலி தமிழ் தேசியமும், போலி கம்யூனிசமும் வாளாவிருந்து வளர்த்துவிட்ட சங்பரிவார் கோஷ்டிகளின் குலைநடுக்கமாகட்டும் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம்.
உத்வேகத்தை அளிக்கவல்ல மாபெரும் வெற்றி. வாழ்த்துக்கள்.
“பிரியாணியையும் பாட்டிலையும்” வைத்து சுமார் 10 இலட்ச ரூபாய் செலவு செய்து பிரச்சாரம் செய்தது. ஒரு ஓட்டுக்கு அவர்கள் செய்த செலவு சுமார் 1600 ரூபாய்.”
…..Thrutha mudiyadha jenmathin jenmangal…….. .
we are proud to here this news. Vaazhthukkal thozharkale.
என்.டி.சி ஆலைகள் நட்டம் என்று பொய்க்கணக்கு காட்டி மூடப்பட்டும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டும், இருக்கின்ற மில்களில் 20 ஆண்டுகளாக ஊதிய உயர்வு ஒப்பந்தமே இல்லாமல் கிடப்பில் போடப்பட்டும், எதுவும் செய்ய இயலாமல், 36 ஆண்டுகளாக தொழிற்சங்கத் தேர்தல் கூட இல்லாமல், கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர்களைத் தனது பிரச்சாரத்தின் மூலம் தட்டி எழுப்பியது பு.ஜ.தொ.மு. வெறுமனே எங்களுக்கு வாக்களியுங்கள் என்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரங்கள் அல்ல இவை.
பிரியாணியையும், பாட்டிலையும், சாதியையும் காட்டி, அந்த ஒரு நாளில் மயக்கத்திலாழ்த்தி தொழிலாளிகளின் ஓட்டை அவர்கள் அபகரித்திருக்கலாம். ஆன்ல் தொழிலாளி வர்க்கத்தின் நம்பிக்கையை அவ்வாறு அபகரிக்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் யாரோ, போராடக் கற்றுக் கொடுப்பவர்கள் யாரோ அவர்கள் மட்டும்தான் தொழிலாளியின் நம்பிக்கையைப் பெற முடியும். பு.ஜ.தொ.மு க்கு புரட்சிகர வாழ்த்துக்கள்…
mano கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்துக்கு புரட்சிகர நல் வாழ்த்துகள்
நீங்க பொறுக்கினாமட்டும் அது வெற்றியாம்… வேற யாராவது செஞ்சா அது ஓட்டு பொறுக்குதலா… நல்லா இருக்குனே உங்க நியாயம்…
தம்பி நீ சின்னப் பையனாவே இருக்கியே இன்னும் வளரனும். மணிகண்டன் எழுதிய பின்னூட்டத்தை படிக்கலியா! எந்த தேர்தலில் 99 % வாக்கு பதிவு நடந்தது உன்னால் கூற முடியுமா.
ஒவ்வொரு தொழிலாளியும் தான் தொழிலாளி ஓர் வர்க்கம் என்று உணர்ந்து வாக்களித்ததை அறிவாயா! இதுவரை கட்டப்பஞ்சாயத்து கமிஷன் புரோக்கர் சங்கங்கள் தாங்கள் யாருக்காக சங்கம் அமைத்திருக்கிறோம் என்பதை உணராமல் நிர்வாகத்திடம் பொட்டி வாங்கும் மாமா வேலை பார்த்து வந்தது. நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கின்றான் என்ற தோழர் மாவோ வின் கூற்றுக்கேட்ப இப்போதைய ஆயுதமாக தொழில் சங்க ஜனநாயகம் வேண்டி தேர்தல் என்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் ஏதும் சிக்கல் வந்தால் அடுத்த ஆயுதம் எது என்று அனைவருக்கும் தெரியும். உதாரணம் நேபாளம். இனி தொ மு ச வோ, ஐ என் டி சி யு யோ, சி ஐ டி யு வோ பொட்டி வாங்கட்டும் அப்புறம் பாரு தம்பி, அண்ணன் களோட ஆட்டத்தை….
சரியான கேள்வி. நானும் இதற்கான பதிவை எனது பிளாக்கில் இட்டிருக்கிறேன்.
பொதுவாக பு.ஜ.தொ.மு. பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தலை புறக்கணிக்கவேண்டும், மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தை கோருகின்ற அமைப்பு. அந்த வகையில் பு.ஜ.தொ.மு. அணி தேர்தலில் போட்டியிடுமா? என்ற கேள்வி உங்களில் பலருக்கு தோன்றலாம். சில கருங்காலிகள்” தேர்தலைப் புறக்கணிக்கும் இவர்கள் ஏன் சங்கத் தேர்தலில் போட்டியிடவேண்டும்?” என்ற கேள்வியையும் எழுப்பிவிட்டு தொழிலாளர்களை குழப்பித் திரிகின்றனர்.
உங்களுடைய அக்கறைக்குரிய கேள்விக்கு பொறுப்பாக பதில் சொல்லும் வகையிலும், சில கருங்காலிகளின் அவதூறு பிரச்சாரத்தை முறியடிக்கும் பொருட்டும் எமது முக்கிய முதன்மை நோக்கத்தையும் உங்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
“தொழிற்சங்க ஜனநாயகம்” என்பதும் “பாராளுமன்ற ஜனநாயகம்” என்பதும் இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் அடிப்படையிலேயே வேறுபட்டது என்பதை புரிந்துகொள்வோம்.
காரணம் பின்வரும் நான்கு முதன்மை அம்சங்களைக்கொண்டு சிந்தியுங்கள்.
1.தொழிற்சங்க ஜனநாயகம் என்பது முதலில் எதில் அடங்கியுள்ளது? எதனை ஆதாரமாகக்கொண்டுள்ளது என்று பார்த்தால் அது வரம்புக்குட்பட்ட துல்லியமாக அமைப்பாக்கப்பட்ட 2350 தொழிலாளர்கள் ஒரு அமைப்பாக திரண்டுள்ளது என்பதில்தான். அதாவது நாம் ஒரு சங்கமாக இருக்கிறோம் என்பதை தொழிற்சங்க ஜனநாயகம் ஆதாரமாகக்கொண்டுள்ளது. இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கருங்காலிகள் குட்டையை குழப்ப முயற்சிக்கலாம். இதில்தான் அதிசயமே இருக்கிறது.
*அதாவது பாராளுமன்ற தேர்தலை கவனியுங்கள்! அதில் இல்லாத இந்த அம்சம் உங்களுக்கே புரியும். மக்கள் ஆங்காங்கே கூடி ஊர், நகரம் என்று வாழ்பவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை அரசே கணக்கெடுத்துக்கொண்டு செல்கிறது. அரசு கணக்கெடுத்துச் சென்ற அந்த மக்களும் தாம் ஒரு அமைப்பு என்ற உணர்வே இன்றி உள்ளனர். அதற்குக் காரணமே அவர்கள் தங்களை ஒரே அமைப்பாகவும், அதற்கு ஒவ்வொருவரும் உறுப்பினராகவும் ஒழுங்கமைத்துக்கொள்ளவில்லை என்பதில்தான் உள்ளது. அதாவது வாக்காளர் கணக்கெடுப்பு என்பது அவர்கள் உள்ளுணர்வு அல்ல. மாறாக மேலிருந்து அரசு கொடுக்கும் நிர்பந்தம்.
*ஆனால் தொழிலாளர்களாகிய நாம் சங்கத்தில் உறுப்பினராக, நாம் அமைப்பாக சேர்ந்திருப்பது அந்த உள்ளுணர்வுக்கு வலிமை சேர்ப்பதற்குத்தான். அந்த உள்ளுணர்வின் அடித்தளமே நாம் இயல்பிலேயே தொழிலாளர்களாக இருக்கிறோம் என்பதுதான்.
2.அமைப்பாக திரண்ட நாம் தேர்ந்தெடுத்த தலைமை ஒன்றை நிறுவிக்கொண்டது அடுத்த மிகப்பெரிய ஜனநாயகம். அவ்வாறு நம்மை நெறிப்படுத்த ஒரு தலைமைத தேவை என்பது நமது உள்ளுணர்வு, வர்க்க உணர்வு, ஒற்றுமை உணர்வு.( பாராளுமன்ற ஜனநாயகத்தில் இதை எதிர்பார்க்க முடியுமா?)
3.உங்கள் தலைவர்கள் நேர்மையானவர்களாக, பாட்டாளி வர்க்கத்தின் லட்சியத்திற்காக போராடுபவர்களாக, எதிலும் அச்ச உணர்வே இல்லாதவர்களாக , நிர்வாகத்துடனான போராட்டத்தில் கிஞ்சித்தும் அச்ச உணர்வு அற்றவர்களாக இருக்கவேண்டும் என நீங்கள் கோர முடியும்.
அதாவது ஒவ்வொரு முக்கிய நேரத்திலும், அன்றாட கூட்டத்திலும் தலைவர் / தலைமைக்குழு தனது திட்டத்தை, செயல்பாட்டு முறையை GB. யில் வைத்து ஒப்புதல் பெறவேண்டும். அதற்கு ஏற்ப அவர் நடக்கிறாரா என தொழிலாளர்கள் சோதிக்க அடுத்த GB யில் அதன் மீது விவாதம் நடத்தப்படவேண்டும். தொழிற்சங்க ஜனநாயகம் இதற்கு வழிவகை செய்கிறது.
4.தேர்ந்தெடுத்தவர்களை திருப்பி அழைப்பதற்கான ஜனநாயகம். இதுவும் தொழிற்சங்க ஜனநாயகத்தில் முதன்மையானது. ஒருவருடைய போக்கில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து திருப்தியில்லை எனில் அவர்மேல் நம்பிக்கையின்மை தீர்மானத்தைக்கொண்டுவந்து விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பின் மூலம் புதிய தலைவரை மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினரை தேர்ந்தெடுக்கலாம்.
இந்த நான்கு முதன்மை அம்சங்கள் தொழிற்சங்க ஜனநாயகத்தில் சிறப்பம்சங்கள். இவை ‘பாராளுமன்ற ஜனநாயகத்தில்’ கிஞ்சித்தும் இல்லை. இதனால்தான் ‘பாராளுமன்ற ஜனநாயகத்தில்’ பங்கேற்பதன் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய இயலாது என்கிறோம்.
பு.ஜ.தொ.மு. அணிதான் உண்மையான ஜனநாயக அமைப்பு. புதிய ஜனநாயக அமைப்பு.. அது நம்புவதெல்லாம் தொழிலாளர்களையும், தொழிற்சங்க ஜனநாயகத்தையும், நமது சங்கத்தையும்தான். மற்றவர்களைப் போல் நிர்வாகத்தையும், பாராளுமன்ற லோக்கல் அரசியல் பாணியையும், நிலவுகின்ற சமூக அமைப்பையும் அல்ல.
உங்களுடைய ஒவ்வொரு ஓட்டும் உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான ஒரு வாய்ப்பு.
உங்கள் பிரதிநிதி யாருடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்? அசரியல் தலைமையுடன்தானே? நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நீங்கள் சொல்லும் அனைத்துப் பிரச்சனைகளும் தொழிற்சங்க ஜனநாயகத்திலும் இருக்கறதே?
கோவை பஞ்சாலையில் வெற்றிபெற்ற தோழர்களுக்கு புரட்சி கர வாழ்த்துக்கள். 1998க்கு முன்பு வரை அரசு போக்குவரத்துக் கழகங்களில் அரசியல் சார்புள்ள 6 தொழிற்சங்கங்கள் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டுவந்ததை எதிர்த்து ஓட்டுக்கட்சி சார்பில்லாத பணியாளர்கள் சம்மேளனம் என்ற அமைப்பு இதே போன்று சிஐடியு வை பின்தள்ளிய வெற்றியை சந்தித்தது. பின்னர் தற்போது 2010ல் மீண்டும் நடைபெற்ற தேர்தலில் “ஆளும்கட்சி தொமுச வென்றிருக்கிறது- ஆனால் தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட குணம் என்பது தோற்கடிக்கப்பட்டுள்ளது” – போராடாமல் பணத்தால் எல்லாம் கிடைக்கும் என்கிற புதிய பொருளாதார குணாம்சம் உள்ளே புகுந்துள்ளது. இதுபற்றி விரிவாக தனியாக கட்டுரை எழுதுகிறேன். பஞ்சாலைக்குள் புகுந்த புஜதொமு இன்னும் பல ஆலைகளில், தொழில்களில் புகுந்து வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்
பணியாளர் சம்மேளனதிர்க்கு அரசியலே கிடையாது. அதனால் தான் இப்ப நடந்த தேர்தல்ல சி.ஐ.டி.யு இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. பணியாளர் சம்மேளனத்திற்கு கிடைத்த வாக்குகளை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அதை முன்மாதிரியா எடுத்துக்கிட்டு போங்க… பொழப்பு நல்லா இருக்கும்…
//எந்த தேர்தலில் 99 % வாக்கு பதிவு நடந்தது உன்னால் கூற முடியுமா.
ஒவ்வொரு தொழிலாளியும் தான் தொழிலாளி ஓர் வர்க்கம் என்று உணர்ந்து வாக்களித்ததை அறிவாயா! இதுவரை கட்டப்பஞ்சாயத்து கமிஷன் புரோக்கர் சங்கங்கள் தாங்கள் யாருக்காக சங்கம் அமைத்திருக்கிறோம் என்பதை உணராமல் நிர்வாகத்திடம் பொட்டி வாங்கும் மாமா வேலை பார்த்து வந்தது. நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கின்றான் என்ற தோழர் மாவோ வின் கூற்றுக்கேட்ப இப்போதைய ஆயுதமாக தொழில் சங்க ஜனநாயகம் வேண்டி தேர்தல் என்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. //
நூற்றுக்கு நூறு உண்மை….
தொழிற்சங்கத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது, ஆனால் இவர்கள் யார் எங்களை அங்கீகரிக்க, இவர்களின் தேர்தலில் நாங்கள் ஏன் போட்டியிடவேண்டும், இவர்களுடன் நாங்கள் ஏன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்று நீங்கள் நினைக்காமல், தேர்தலிலும் நின்று நல்லதொரு வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள்.
இது மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம்தான்…
இப்போதிருக்கிற ஜனநாயகம் அப்படியே ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் அது சில-பல மாறுதலுக்குட்படுத்தப்படவேண்டுமென்றும்தான் நானும் சொல்கிறேன். அந்த மாறுதலை பஞ்சாலை தொழிற்சங்கத்தில் எப்படி நீங்கள் செய்ய முனைந்து வெற்றியும் பெறத்தொடங்கி இருக்கிறீர்களோ, அதுபோலவே ஒட்டு மொத்த ஜனநாயக தேர்தலிலும் செய்ய முயலுங்கள்…
வழிமொழிகிறேன், அண்ணா.
நண்பர் தம்பி மற்றும் கணேஷ்,
பின் வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
1. இந்த நாடாளுமன்ற ஜனநாயகம் , ஒட்டுமொத்தமாக யாருக்கு இயங்குகிறது ?.. ஓட்டு போட்ட மக்களுக்கா ?.. இல்லை நோட்டு கொட்டும் முதலாளிகளுக்கா ?..
ஆனால் தொழிற்சங்கம் என்பது யார் ஓட்டுப் போட்டார்களோ அவர்களுக்காக இயங்குகிறது.
2. நாடாளுமன்றத் தேர்தலில் சாதாரணமானவனா போட்டியிடுகிறான் ?.. அனைவராலும் அங்கே போட்டியிட முடியுமா ?.. சாதாரண மக்களில் ஒருவராக இருப்பவரால் அங்கே நின்று ஜெயிக்க முடியுமா ?.
ஆனால் தொழிற்சங்கத்தில் புஜதொமுவைப் பொறுத்தவரை அவர்கள் சாதாரண தொழிலாளியைத் தான் முன் நிறுத்துகிறார்கள் தேர்தலுக்கு ..
“இவர்கள் நக்சலைட்டுகள்” என்று பிழைப்புவாதிகள் அவதூறு செய்து பார்த்தும் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் வெற்றி பெற்றிருக்கிறது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் ஆலை வாயிற்கூட்டத்தில் நாங்கள் நக்சல்பாரிகள் என்று பாடித்தானே தோழர்கள் வாக்கு கேட்டுள்ளார்கள். “நக்சலைட்டுகள்” என்று முத்திரை குத்துவதாக நினைத்து பாவம் பிழைப்பவாதிகள் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கமத்திற்காகத்தான் வாக்கு கேட்டுள்ளார்கள் என்பது தேர்தல் முடிவிலிருந்து தெரிகிறது. தோழர்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு பிழைப்புவாதிகளுக்கும் எனது நன்றியை பதிவு செய்கிறேன்.
வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகரவாழ்த்துக்கள். ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்பதையும் வெற்றியுடன் மனதில் கொள்ளவேண்டும்
NTC- LABOUR UNION ELECTION RESULT
RECOGNIZED UNIONS
LPF( DMK) – 650(TWO SEATES),
CRMLU (NDLF)- 478(ONE SEAT),
CITU-381(ONE SEAT),
INTUC-300(ONE SEAT),
DEFEATED UNIONS
ATP(ADMK)-270, MLF(MDMK)-227,AMBEDKAR-207, AITUC-200, KUSELAR-94, HMS-76, BMS(BJP)-31, ANNAI INDIRA-15
INVALID VOTES-10 ,UN POLLED VOTES-26
TOTAL ELIGIBLE VOTES-2956
TOTAL VOTES NEEDED FOR RECOGNITION=10%=296
வாழ்த்துக்கள்.நீங்களாவது தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல முதல் போட்ட முதலாளிகளுக்கும் சேர்த்து பாடுபடுங்கள்.தொழிலாளர் சங்கம் என்றாலே போராடுவதற்கு மட்டும்தான் என்ற நிலை மாறி முதலளிகாக உழைப்போம்.உரிமை மறுக்கபட்டால் கடைசி வரை போராடுவோம் என்ற நிலையை உருவாக்குங்கள்.
வ்.உ.சிதம்பரனார் தலமையில் தொழிலளர்கள் கொண்ட போர்க்கோலம் திரும்புகிறது.வாழ்த்துக்கள் தோழர்களே!
-சுடலை
Congrats . to pu ja tho mu.
poja thozar veire pera vazthukal!
தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள்
பு.ஜ.தொ.மு பெற்றுத் தந்துள்ளது.
கோவை மண்டல பஞ்சாலைத்
தொழிலாளர் சங்கத்துக்கு
புரட்சிகர நல் வாழ்த்துகள்.
all the best for the comardes.
நண்பர் fact,
தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் வரைதான் ஒரு உண்மையான தொழிற்சங்கம் கூலிக்கான போராட்டத்தை கையிலெடுக்க முடியும். “தொழிலாளர்களுக்காக மட்டுமல்ல முதல் போட்ட முதலாளிக்களுக்கும் சேர்த்து பாடுபடுங்கள்” என்கிறீர்கள். அப்படி முதலாளிகளுக்காக பாடுபடுவதனால்தான் சி.ஐ.டி.யு. போன்ற தொழிற்சங்கங்கள் பொருளாதார சலுகைகளைத்தாண்டி தொழிலாளர்களை பயிற்றுவிப்பதில்லை. காரணம், நிலவுகின்ற கூலி உழைப்பு முறையை அச்சங்கங்கள் ஏற்றுக்கொண்டு பாதுகாத்து வருகின்றன. கூலி உழைப்பு முறை நீடிப்பதே தொழிலாளர்களுக்கான உரிமை மறுப்புதான். யார் உழைப்பில் யார் சொத்து சேர்ப்பது? ஆக முதலாளிகளுக்கும் சேர்த்து பாடுபடுங்கள் என்ற உங்கள் கருத்து தலை கீழ் பார்வையானது. இந்த அடிப்படையில் பு.ஜ.தொ.மு. தொழிற்சங்கம் கட்டவில்லை. தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காக மட்டுமே அது தலைமை தாங்கும்.