Friday, October 4, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கூட்டணி ப்ளாக்மெயிலுக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல்!!

கூட்டணி ப்ளாக்மெயிலுக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல்!!

-

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஊடகங்களால் அதிகம் வில்லனாக்கப்பட்டவர் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாதான். இந்தியாவில் அறியப்பட்ட எல்லா ஊழல்களிலும் அரசியல்வாதிகள், ஓரளவுக்கு அதிகாரிகள் மட்டுமே தொடர்புடையவர்களாக காட்டப்பட்டிருக்கின்றனர். இதில் மறைக்கப்படும் விசயம் என்னவென்றால் இந்த ஊழல்களுக்கு அச்சாரமான முதலாளிகளின் தொடர்புகள் மட்டும் எப்போதும் தெரிவதில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழல், ராடியா டேப் போன்றவற்றின் மூலம் சில முதலாளிகளது பெயர்கள் கசிந்திருக்கின்றன. ஆனால் என்ன பயன்? நேற்று புதிய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபில் தொலைத்தொடர்பு சேவை முதலாளிகளான ரத்தன் டாடா, அனில் அம்பானி, சுனில் மிட்டல் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார். என்ன பேசியிருப்பார்? கவலைப்படாமல் தொழிலைத் தொடருமாறும், செய்திகளில் அவர்களது பெயர்கள் அடிபட்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாமென்றும்தான் பேசியிருப்பார். இதை நாம் ஊகமாகச் சொல்லவில்லை, ஊடகங்களும் அப்படித்தான் செய்தி வெளியிடுகின்றன.

ரத்தன் டாடாவின் தொழில் விருப்பங்களுக்கேற்ப ராசாவை அமைச்சாராக்க நீரா ராடியா லாபி வேலை செய்தது ஆதாரப்பூர்வமாகவே நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில் புதிய அமைச்சர் அதே டாடாவை சந்தித்து ” மாப்புள, நீ ஒன்னியும் கவலப்படாத, எதையும் கண்டுக்காம தொழிலப் பாரு”ன்னு பேசினால் அதன் மறைபொருள் என்ன? ஊழல் செய்த முதலாளிகளின் தகிடுதத்தங்கள் மறைக்கப்பட்டு எல்லாவற்றையும் ராசா தலையில் கட்டுவதுதான் நோக்கம்.

ஊடகங்கள், அரசியல் கட்சிகள், புரோக்கர்கள் எல்லாரும் இந்த வேலையைத்தான் செய்து வருகின்றனர். அமெரிக்க மாமா சுப்ரமணிய சாமி நேற்று நெல்லையில் அ.தி.மு.க பினாமி கூட்டம் ஒன்றில் பேசும்போதும் இதையே கூறியிருக்கிறார். அதாவது பிரதமர் மன்மோகன் சிங் நல்லவராம், அவருக்கு ஊழலில் தொடர்பே இல்லையாம், எல்லாம் ராசாதான் செய்திருக்கிறாராம். இப்படி கல்லூளி மங்கனைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன?

சு.சாமி கூட ஒரு அரசியல் புரோக்கர்தான். அமெரிக்காவிற்கும், காங் எதிர்ப்பு, பா.ஜ.க ஆதரவு முதலாளிகளுக்கும் தரகு வேலை பார்க்கும் இந்த மாமா ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெரிய புடுங்கி போல பேசுவதற்கு காரணம் என்ன? வரும் சட்டமன்றத் தேர்தலலில் தி.மு.க – காங் கூட்டணியை கலைப்பதன் மூலம் அ.தி.மு.கவிற்கும், மறைமுகமாக பா.ஜ.கவிற்கும் உதவுவதுதான் நோக்கம். அதனால்தான் இவர் ராசாவை மட்டும் குறிவைத்து தாக்குவதோடு ஒவ்வொரு முறையும் கல்லுளி மங்கன் மன்மோகன் சிங்கிற்கும் வக்காலத்து வாங்குகிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பா.ஜ.க ஆட்சிக்காலத்திலேயே தொடங்கிவிட்டது குறித்தெல்லாம் மாமா சு.சாமிக்கு கவலை இல்லை. அவரது ஒரே அஜண்டா தி.மு.க எதிர்ப்புதான். அதுவும் கூட அவரது பார்ப்பனிய சிந்தனையில் ஆழப்பதிந்துவிட்ட விசயம்தான். ஆக ஒரு அரசு, அரசியல் அமைப்பு சம்பந்தப்பட்டிருக்கும் ஊழலை ஒரு தனி மனித, கட்சி விவகாரமாக மாற்றுவதையே சு.சாமி குறிக்கோளாக கொண்டிருக்கிறார்.

ஸ்பெக்ட்ரல் ஊழல் வெடித்துக் கிளம்பியதற்கு தான்தான் காரணமென்று பிதற்றித் திரியும் ஜெயலலிதாவின் கணக்கும் அதேதான். வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவின் பணபலத்தையும், அழகிரி ஃபார்முலா தேர்தல் முறையையும் (உண்மையில் இந்த தேர்தல் ஃபார்முலாவைக் கண்டுபிடித்தவர் ஜெயலலிதாதான்) எதிர் கொள்ள முடியாபடி, சொந்தக் கட்சி கரைந்து கழுதையாகிவிட்ட நிலையில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல்.

முழுத் தமிழகத்தையும் கொள்ளையடித்து மொட்டை போட்ட இந்த ஊழல் நாயகி இப்போது ஊழல் எதிர்ப்பு வீராங்கனையாக பேசுவதை என்னவென்று சொல்ல? ராசாவை நீக்கினால் காங்.கிற்கு அ.தி.மு.க ஆதரவளிக்கும் என்று தொடங்கியவர் இன்னும் நிறுத்தவில்லை. போதாக்குறைக்கு ஊடகங்களும் இந்த கூட்டணி மாற்றத்தை ஏற்றிவிடுகின்றன. அந்த வகையில் தமிழக ஊடகங்களில் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது கூட்டணி மாற்றம் குறித்த பரபரப்பு செய்தியாக மாற்றப்பட்டுவிட்டன.

நேற்று கோபியில் பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் “அ.தி.முகவுடன் கூட்டணி ஏற்படலாம், தி.மு.க வுடன் கூட்டணி முறியலாம்” என்றே கருத்து தெரிவித்திருக்கிறார். ஆரம்பத்தில் ராசா குற்றமற்றவர் என்று நல்லபிள்ளை போல பேசிய இளங்கோவின் பிறகு சூழ்நிலை மாறியதும் தனது பழைய அஜெண்டாவை கையிலெடுத்துக் கொண்டார். சோனியா பெயரைக் கேட்டாலே சிறுநீர் கழிக்கும் இந்த ஈரோட்டு அடிமை ஏதோ தன்மானமுள்ள வீரன் போல சித்தரித்துக் கொள்ளும் கொடுமையை என்னவென்று சொல்ல?

தமிழகத்திற்கு இருநாள் சுற்றுப்பிராயாணமாக வரும் ராகுல் காந்தி, காசுக்கு அழைத்து வரப்படும் 63,000 செட்டப் இளைஞர் காங். நிர்வாகிகளை சந்திக்கிறாராம். ஆனால் கருணாநிதியை சந்திக்கவில்லையாம். இதனால் கூட்டணி முறிந்து விடும் என்று ஊடகங்கள் வதந்திகளைக் கிளப்புகின்றன. ராகுல் காந்தி வரும் நேரம் பார்த்து அவரது அடிமை இளங்கோவனும் அதே போல பேச போயஸ் தோட்டத்தில் உற்சாகம் பொங்கி வழிகிறது.

பா.ஜ.க காலத்திலிருந்து நிறுவன ஊழலாக நிலைபெற்றிருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரசு கட்சிக்கு மிகப்பெரிய பங்குண்டு. 2008 இல் ராசா ஒதுக்கியது குறித்து 2010இல் அதுவும் எதிர்க்கட்சிகள் பேச ஆரம்பித்த பிறகே காங்கிரசும் ஏதோ நடவடிக்கை எடுப்பது போல பாவ்லா காட்டுகிறது. அந்தப் படிக்கு இந்த ஊழலை காங்கிரசு சந்தர்ப்பவாதமாக கையாள்கிறது. விசாரணை, சி.பி.ஜ ரெய்டு, என்றெல்லாம் சீன் போடுபவர்கள் ஏன் அதை இரு வருடங்களுக்கு முன்னரே செய்யவில்லை?

காங்கிரசின் நோக்கம் முதலாளிகளுக்கு உதவுதுதான். அதை செய்துவிட்டார்கள். தற்போது ஊழல் என்று பேசப்படும் நிலையில் அதை வைத்து தமிழக கூட்டணியில் தமது பங்கை அதிகப்படுத்தும் வேலையைச் செய்கிறார்கள். அதனால்தான் ராசாவை மட்டும் இந்த ஊழலில் தனிமைப்படுத்திவிட்டு பழம்பெரும் காங்கிரசு பெருச்சாளிகள் ரொம்ப நல்லவர்கள் போல நடிக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து தி.மு.கவிடம் அதிக தொகுதிகளை வரும் தேர்தலில் கேட்கலாம். அதை தி.மு.கவும் தவிர்க்க முடியாது. இரண்டாவது சந்தர்ப்ப சூழலைப் பொறுத்து தி.மு.க கூட்டணியை வெட்டியும் விடலாம். அதனால் ஜெயா நிச்சயம் அதிக தொகுதிகளை தருவது உறுதி. மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழலை தி.மு.க ஊழலாக அல்லது ராசா ஊழலாக மாற்றி தேர்தலில் ஆதாயமும் அடையலாம்.

ஆக ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொறுத்தவரை காங்கிரசு ஒரே கல்லில் இரு மாங்காய்களை அடித்திருக்கிறது. முதலாளிகளுக்கு மலிவான விலையில் அலைக்கற்றையை ஒதுக்கியது, அப்படி ஒதுக்கியதில் ஊழல் என்ற பெயரில் தமிழக கூட்டணி பலத்தில் தனது பங்கை அதிகப்படுத்தியது; அதன்படி தமிழகத்தில் சுவரொட்டி ஒட்டுவதற்கு கூட தொண்டர்கள் இல்லாத மிட்டா மிராசுதாரர்களைக் கொண்ட கட்சி, தலைவர்களும், கோஷ்டிகளும், வேட்டிக் கிழிப்புகளுமே கொண்ட கட்சி இப்போது ஜாமென்று பல்லக்கில் பவனி வருகிறது. இதற்காகத்தான் இவர்கள் காத்திருந்தார்கள் போலும்.

ஸ்பெக்டரம் ஊழலுக்காக நாடு முழுவதும் எதிர்ப்பு இயக்கம் எடுக்கப் போவதாக சி.பி.எம் அறிவித்திருக்கிறது. இணையத்திலும் நமது மாற்று தோழர்கள் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து தினம் இரண்டு பதிவுகள் போட்டுத் தாக்குகிறார்கள். தோழர்களது கணக்கு இதை வைத்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு, தி.மு.க இல்லாத அ.தி.மு.க அணியை பலப்படுத்துவது. ஆனால் அம்மா அங்கே தோட்டத்தில் காங்கிரசு பெருச்சாளிகளுக்குக்காக பொக்கேயை வைத்துக் கொண்டு காத்துக்கிடக்கிறாரே? பார்ப்பனிய ஊடகங்களும் அதையே இலக்கு வைத்து பிரச்சாரம் செய்கின்றன. இந்நிலையில் தோழர்கள் என்ன செய்வார்கள்? காங், அ.தி.மு.க கூட்டணி அமையக்கூடாது என்று ஆண்டவனிடம் வேண்டுவதைத் தவிர அவர்களுக்கு கதிமோட்சம் ஏதுமில்லை.

மேலும் ஊழல் நாயகி ஜெயலலிதா தலைமையில் ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்க்க முடியுமா என்ற கூச்சம் கூட சி.பி.எம்மிடம் இல்லை. அந்த அளவுக்கு அம்மா விசுவாசம் கொடிகட்டிப்பறக்கிறது. சுயமரியாதையும், தனது கொள்கையை வைத்து மக்களைத் திரட்ட முடியுமென்ற நம்பிக்கையும் இல்லாத இந்த செங்கொடிக் கோமாளிகளின் அரசியல் எதிர்காலம் அதாவது தமிழகத்தில் கிடைக்கும் நாலைந்து சீட்டுக்கள் போயஸ் தோட்டத்து புரட்சித் தலைவியிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

ஒருவேளை காங், அ.தி.மு.க கூட்டணி ஏற்பட்டால் சி.பி.எம் தோழர்கள் வேறுவழியின்றி தி.மு.க கூட்டணிக்கும் செல்வதற்கு தயங்க மாட்டார்கள். என்ன, “ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசா மட்டும் செய்தது, அதற்கும் தி.மு.கவிற்கும் தொடர்பில்லை” என்று ஒரு விளக்கம் கொடுத்தால் போயிற்று. அந்த வகையில் சாயம் போன இந்த செங்கொடியின் எதிர்காலம் கோபாலபுரத்திலும் சிக்குண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

எனினும் நிறுவன மயமான ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க மட்டும்தான் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று காங்கிரசு அத்தனை சுலபத்தில் கழட்டி விட முடியாது. அதனால்தான் தற்போது விசாரணைகள், ரெய்டுகள் எல்லாம் ராசா, சில அதிகாரிகள் என்று தனிநபர்களை மையமாக வைத்து செய்யப்படுகின்றன. அதன்படி இதில் ராசாவை மட்டும் பலிகொடுத்து தி.மு.க, காங்கிரசு கூட்டணி நீடிக்கவும் வாய்ப்பிருக்கின்றன. இதில் காங்கிரசு மேல் நிலையிலிருக்கும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் புதிதல்ல.

இந்த உள்குத்து நிர்ப்பந்தத்தை தி.மு.க பெருச்சாளிகள் அறியாமலில்லை. அதனால்தான் மாறன் சகோதரர்கள், ஸ்டாலின், அழகிரி கோஷ்டிகள் எல்லாம் ஒன்றிணைந்து சி.ஜ.டி காலனி கோஷ்டியை தனிமைப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. இதற்காக மாறன்கள் தற்காலிகமாக அழகிரி கும்பலுடன் சமாதானமாக இணைந்திருக்கிறார்கள். தற்போது ராஜாத்தி அம்மாள் கோஷ்டியின் எதிர்காலம் கருணாநிதியின் தர்மசங்கடம் என்ற வகையில்தான் ஊசாலாடுகின்றதே அன்றி வேறுவகையில் அல்ல.

தமிழக ஊடகங்கள் அனைத்தும் இதையே பரபரப்புச் செய்தியாக்கி விற்று வருகின்றன. கருணாநிதியைப் பொறுத்தவரை அவரைப் பாராட்டி ஏதாவது ஒரு விழா எடுத்து நேரு உள்விளையாட்டு அரங்கில் ஒரு குத்தாட்ட நிகழ்ச்சி நடத்திவிட்டால் போதுமானது. அத்தகைய காக்காய் முதுகு சொறிதலைத் தவிர அவருக்கு வேறு நோக்கங்கள் இல்லை. எனவே ராசாவை மட்டும் பலிகொடுத்து விட்டு தி.மு.க பழையபடியே ஒன்றுமில்லாதது போல இயங்குவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஆக கூட்டி கழித்துப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம் ஊழல் இத்தகைய கூட்டணி பேரங்களுக்கான கச்சாப்பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. ஒன்னே முக்கால் இலட்சம் கோடி ரூபாய் ஊழல் என்பது ஏதோ வானத்திலிருந்தோ இல்லை நாசிக்கில் அச்சடிக்கப்பட்டு வரும் பணம் என்பதாகத்தான் மக்கள் புரிந்திருக்கின்றனர். இல்லை அது அவர்களிடமிருந்துதான் பறிக்கப்பட்டிருக்கிறது என்பது இங்கே சுத்தமாக மறைக்கப்பட்டிருக்கிறது.

இனி இந்த விவகாரங்கள் ஓய்ந்து கூட்டணி பேரங்கள் பேசி முடிக்கப்பட்டு அமல்படுத்தும் வேளையில் டெல்லியில் ஏதாவது ஒரு பண்ணை வீட்டில் விருந்து நடக்கும். எல்லா முதலாளிகளும், அரசியல் பெருந்தலைகளும் அங்கே வருவார்கள். “சியர்ஸ்” சொல்லிக் கொண்டு சீமைச்சாராயத்தை உள்ளே தள்ளும் வேளையில் நாட்டுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் அங்கே கேலிக்குரிய இறந்த காலமாகிவிடும். தேசத்தின் அடுத்த வளத்தை எப்படி சுருட்டலாம் என்று அங்கே விவாதம் சூடுபிடிக்கும். நமட்டுச் சிரிப்புடன் முதலாளிகள் தத்தமது மாளிகைக்குத் திரும்புவார்கள்.

இதை ஏற்கப் போகிறோமா, இல்லை இந்த ஊழலின் உறைவிடமாய் நாறும் இந்த சமூக அமைப்பை தகர்க்கப் போகிறோமா?

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. கூட்டணி ப்ளாக்மெயிலுக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல் !!…

    முதலாளிகளும், அரசியல் பெருந்தலைகளும் சீமைச்சாராயத்தை உள்ளே தள்ளும் வேளையில் நாட்டுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் அங்கே கேலிக்குரிய இறந்த காலமாகிவிடும்….

  2. சுருக்கமான, தெளிவான கட்டுரை. அடிப்படையில் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய பயனடைந்த முதலாளிகளைப் பற்றி உச்ச நீதி மன்றம் கூட வாய் திறக்க வில்லை. ஆனால், உச்சநீதி மன்றம் பிரதமரை எல்லாம் கேள்வி கேட்பதாகவும் ஜனநாயகத்தை நிலை நாட்ட இன்னும் அவதாரங்கள் இருப்பதாவும் வெளியில் உதார் விடுகிறார்கள். கல்லுளி மங்கன் முதற்கொண்டு இந்த பாராளுமன்றம் வேலை செய்வதே தரகு, பன்னாட்டு முதலாளிகளுக்காகவே என்னும் உண்மையை மூடி மறைத்து பரபரப்பு கிளப்புகிறார்கள். இதோ இப்போ தான் கபில் சிபில் வாய் திறக்கிறார், பா ஜ க ஆட்சிக் காலத்தில் பின்பற்றிய நடைமுறைகளால் 1.43 லட்சம் கோடி இழப்பு என்று.. ஆக நாங்க மட்டுமில்லை… நீங்களும் தானடா கூட்டி கொடுத்தீங்க என்று சொல்கிறார்.. ஒரு விசயம் இவர்கள் வருமான இழப்பு, இழப்பு என்று தான் சொல்கிறார்களே தவிர எவனும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வருமான ஏய்ப்பு என்று சொல்வதில்லை.. ஒரு பக்கம் அரசுக்கு வருமான இழப்பு என்றால் அது வேறு ஏதோ ஒரு பக்கமிருந்து ஏய்த்ததாகத் தானே இருக்க முடியும்…

  3. அப்ப என்னதான் செய்யணும்…ன்ற பகுதியை நீங்க தொடவேயில்லையே.ராசாவையும் விட்டுடலாம்-ங்கறீங்களா.இல்ல spectrum ஊழலையே விற்றுலாம் -கிறீங்களா?

    • ” இதை ஏற்கப் போகிறோமா, இல்லை இந்த ஊழலின் உறைவிடமாய் நாறும் இந்த சமூக அமைப்பை தகர்க்கப் போகிறோமா? ””

      தீர்வு தெரிகிறதா ?..

  4. பதிவு எப்போதும் போல நறுக்கென்று தெளிவாகவே இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை…
    ஆனால் இது நாள் வரை எல்லா பதிவிலும், “நடந்தது என்ன” என்ற விவரங்களையும், பின்னணியில் “என்னவெல்லாம் நடந்திருக்கலாம்” என்ற மிகையுடன் அல்லது மிகையல்லாத கூடுதல் விவரங்களையும் மட்டுமே வினவு வெளிப்படுத்தி பழகி இருக்கிறது…
    அதை விடுத்து, இவை நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்… வாசகர்களாகிய / மக்களாகிய நாம் எல்லோரும் இதை எதிர்த்து என்ன / எப்படி செய்ய வேண்டுமென்று வினவின் எந்த பதிப்பிலும் நான் பார்க்கவில்லை….

    சுருக்காமா சொல்லணும்னா… “இந்த வியாக்கியானம் எல்லாம் எல்லாருக்கும் தெரியும் அப்பு… இதை மாத்த்னும்னா என்ன செய்யணும்னு உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லூங்கப்பு”…

    //இதை ஏற்கப் போகிறோமா, இல்லை இந்த ஊழலின் உறைவிடமாய் நாறும் இந்த சமூக அமைப்பை தகர்க்கப் போகிறோமா?//

    தங்களது இந்த கேள்விக்கு எல்லோரும் “இல்லை” என்று பதில் அளித்து விட்டு பேசாமல் இருந்தால் எல்லாம் சரியாகி விடுமா என்ன..??

    மக்கள் கிட்ட இருக்குற ஒரே ஒரு ஓட்டை கத்தி “ஒட்டு” மட்டுமே….
    இருக்குறா எல்லா நாதாரிகளும் இப்படி அழுக்கா இருக்கும் போது வேற எந்த நாயை நம்ம எலெக்ட் பண்ணுரது?? பேசாம இந்த ஏழவெடுத்த எழெக்ட்சன் வேண்டாம்ணு சொல்லிடலாமா??

    சொல்லூங்கப்பு….

    • ஏனுங்கனா .. என்னனா இப்புடி கேட்டுப்புட்டிங்க … இதைப் பல பதிவுகள்ல போட்டிருக்காங்க ..

      இந்தப் பதிவுல கூட போட்டிருக்காங்க பாருங்க …

      ”ஊழலின் உறைவிடமாய் நாறும் இந்த சமூக அமைப்பை தகர்க்கப் போகிறோமா? “

  5. “ஊழல்”, “ஊழல்” என்று ஒலி/ஒளி/அச்சு ஊடகங்களாலும், போலிக் கம்யூனிஸ்டுகளாலும், பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகளாலும், சு.சாமி போன்ற அரசியல் தரகர்களாலும் ஓயாமல் ஊளையிடப்படுகிற இந்த “ஊழல்” மட்டுமல்ல, இந்திய சமுகக் கட்டமைப்பில் எந்தவொரு ஊழலும் ஊழலல்ல. மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட/படாத எந்தக் கட்சியினதும் ஓட்டுப் பொறுக்கிகளினதும் தமது எஜமான விசுவாசத்தின்பாலான அறம் சார்ந்த கடமையாகும். மேலும், “ஊழல்கள்” அவர்களின் கடமை மட்டுமல்ல, அந்தக் கடமைகளை ஆற்றும்போது தவிர்க்கவியலாமல் வெகு சில சமயங்களில் இது போல் எழும் சகோதரச் சண்டைகளையும், கால் வாருதல்களையும், போட்டுக் கொடுத்தல்களையும், கைவிடுதல்களையும், பலிகடா ஆக்கப்படுதல்களையும் தாமே சமாளித்துக் கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பும் அவர்களையே சாரும். இந்தக் கடமையையும் பொறுப்பையும் ஏற்காதவர்களைப் பாராளுமன்றம் ஏற்பதில்லை; பாராளுமன்றத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அதன் எஜமானர்களைக் (பெரு/தரகு/பன்னாட்டு முதலாளிகள்) காட்டிக் கொடுப்பதில்லை. அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் ராசா திண்ணியத்தின் மலம் தின்னவைக்கப்பட்ட தலித் ஆகிவிடப் போவதுமில்லை; ‘கைவிட்டதால்’ டாடாவுடனும் மு.க வுடனும் அவர் கோச்சுக்கப் போவதுமில்லை. “ஊழல்கள்” எல்லாம் ஊழல்கள் அல்ல; எதிர்க் கட்சிகளின் ஒப்பாரிகள் எல்லாம் “அவனுக்குப் பதில் அவனைவிட சிறப்பான தகுதிகளுடன் நானிருக்கிறேன் உங்களுக்கு” என்று எஜமானர்களுக்குக் காட்டுபவை!! மக்களுக்கு?! இருக்கவே இருக்கிறது மறதி! தம்மைத் தாமே மீள முடியாத அவலத்தில் ஆழ்த்தும் மறதி! சிந்திக்கத் தேவையற்ற மறதி! “ஊழலை” விட ஆபத்தானதாகவும் அம்பலப்படுத்தலைவிட உடனடி கவனத்துக்குரியதாகவும், எனக்கென்னவோ, இந்த மறதிதான் தெரிகிறது.

  6. Business people will do anything to shine the business . However the politicians should have responsibility to stop those unethic activities of the business man. Raja and Rajavin thunaivi/(not wife) did a great robbery. They bought many engineering colleges including KSR,Jayaram, etc. what is tha action and when… Pavam Rasa…. theeyaal suzhapatullar…..

  7. “ஊழல்”, “ஊழல்” என்று ஒலி/ஒளி/அச்சு ஊடகங்களாலும், போலிக் கம்யூனிஸ்டுகளாலும், பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகளாலும், சு.சாமி போன்ற அரசியல் தரகர்களாலும் எச்சிலொழுக ஊளையிடப்படுகிற இந்த “ஊழல்” மட்டுமல்ல, இந்திய சமுகக் கட்டமைப்பில் எந்தவொரு ஊழலும் ஊழலல்ல. மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட/படாத எந்தக் கட்சியினதும் ஓட்டுப் பொறுக்கிகளினதும் தமது எஜமான விசுவாசத்தின்பாலான அறம் சார்ந்த கடமையாகும். மேலும், அந்தக் கடமைகளை ஆற்றும்போது தவிர்க்கவியலாமல் வெகு சில சமயங்களில் இது போல் எழும் சகோதரச் சண்டைகளையும், கால் வாருதல்களையும், போட்டுக் கொடுத்தல்களையும், கைவிடுதல்களையும், பலிகடா ஆக்கப்படுதல்களையும் தாமே சமாளித்துக் கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பும் அவர்களையே சாரும்.

    இந்தக் கடமையையும் பொறுப்பையும் ஏற்காதவர்களைப் பாராளுமன்றம் ஏற்பதில்லை; பாராளுமன்றத்தை ஏற்றுக் கொண்டவர்கள் பொறுப்பற்று அதன் எஜமானர்களைக் (பெரு/தரகு/பன்னாட்டு முதலாளிகள்) கைவிடுவதில்லை.

    டாடாவும் அம்பானியும் என்கவுண்டரில் போடப்படப் போவதுமில்லை; அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் ராசா திண்ணியத்தின் மலம் தின்னவைக்கப்பட்ட தலித் ஆகிவிடப் போவதுமில்லை; ‘கைவிட்டதால்’ டாடாவுடனும் மு.க வுடனும் அவர் கோச்சுக்கப் போவதுமில்லை; பா.ஜ.க – சி.பி.ஐ/எம் டாடாவுடன் கோச்சுக்கப் போவதுமில்லை.

    ஆம்… “ஊழல்கள்” எல்லாம் ஊழல்கள் அல்ல; எதிர்க் கட்சிகளின் ஒப்பாரிகள் எல்லாம் “அவனுக்குப் பதில் அவனைவிட சிறப்பான தகுதிகளுடன் நானிருக்கிறேன் உங்களுக்கு” என்று எஜமானர்களுக்குக் காட்டுபவை!!

    மன்மோகன்/சோனியா என்ற பெயருக்குப் பதில் அத்வானி/மோடி; மு.க. வுக்குப் பதில் ஜெ. மக்களுக்கு?! இருக்கவே இருக்கிறது மறதி! தம்மைத் தாமே மீள முடியாத அவலத்தில் ஆழ்த்தும் மறதி! சிந்திக்கத் தேவையற்ற மறதி!

    “ஊழலை” விட ஆபத்தானதாகவும் அம்பலப்படுத்தலைவிட உடனடி கவனத்துக்குரியதாகவும், எனக்கென்னவோ, இந்த மறதிதான் தெரிகிறது.

  8. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 60% சோனியாவிற்கு தரப்பட்டுள்ளதாக காமெடி சாமி சொல்லிவருகின்றார். ஆனால் மன்மோகன்சிங் எவ்வளவு அடித்தார் என்பதை மட்டும் இவர் பேசமாட்டார் – மிஸ்டர் கீளின் சர்டிபிகேட் தருவார். எனென்றால் இதில் கிருத்துவ எதிர்ப்பு மற்றும் ஜெயா பார்ப்பனிய எதிர்ப்பு என்ற இரண்டு பலன்கள் அவருக்கு உண்டு. சோனியா, மன்மோகன்சிங் எல்லோரும் அமெரிக்க அடிவருடிகள். சு சாமி ஒரு சி.ஐ.ஏ ஏஜெண்ட். மன்மோகன்சிங் நியமனத்தில் அமெரிக்காவின் பங்கு உள்ளது. இவர் மட்டும் அக்மார்க் சுத்தம் போலப் பேசுவது பக்கா அயோக்கியதனம்.

    ஈழ ரத்தம் குடித்த கருணாநிதி வகையாக மாட்டிக் கொண்டு இருக்கின்றார்.

  9. இந்த ஊழலில் ஊடகங்களும் தாங்களும் சோனியாவை கணக்கில் எடுத்துக்கொள்ளாதது என்? என்று புரியவில்லை. இந்த ஊழலில் ராசா-10%, கருணாநிதி குடும்பம்-30%, சோனியா-60% என பங்கு சென்றுள்ளது என்று சு.சாமி குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி சோனியா மற்றும் அவருடைய சகோதரிகள் பற்றி அதிர்ச்சியளிக்ககூடிய பல்வேறு தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். இவருடைய குற்றச்சாட்டுகளை இது சோனியாவோ காங்கிரசோ மறுக்கவில்லை. சு.சாமிக்கு எதிரான நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.

    போபர்சஸ் ஊழல் முதல் ஸ்பெக்டரம் ஊழல்வரை சோனியாவின் பங்கே அதிகமாக உள்ளபோது ஊடகங்களும் எதிர்கட்சிகளும் அவருக்கு எதிராக போராடாதது ஏன்?

    நாடாளுமன்றத்திற்கு சென்று வரும் அனைத்து அரசியல் கட்சிக்கும் இந்த ஊழலிலிருந்து சோனியா பங்கு பிரித்துகொடுத்திருப்பாரோ என்ற ஐயம் எழுகிறது.

    • நண்பர் பிரபாகரன்,

      இங்கு சோனியா நல்லவள் என்றோ , மு.க நல்லவன் என்றோ யாரும் சான்றிதழ் வழங்க முயலவில்லை. மாறாக இந்த குற்றத்தின் மூலக் காரணம் யார் எபது குறித்து யாரும் பேசுவதில்லையே என்பது தான் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

      சு.சுவாமி சொன்னது போல் சோனியாவுக்கும், கலைஞருக்கும்,ராசாவுக்கும் 10,30,60 சதவீத பங்கு என்றால் காசு கொடுத்த முதலாளி என்ன வெறுங்கையை நக்கிக் கொண்டா போவான். சிந்திக்கவும்.

      மு.க, ராசா கும்பலுக்கும், மன்மோகன் சிங்,சோனியா கும்பலுக்கும் எச்செலும்புத் துண்டுகளைப் போட்டு விட்டு மொத்தத்தையும் கவ்விக் கொண்டு சென்ற முதலாளிகளை என்ன செய்யப் போகிறீர்கள் ?..

  10. […] This post was mentioned on Twitter by வினவு. வினவு said: கூட்டணி ப்ளாக்மெயிலுக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல்!! https://www.vinavu.com/2010/12/22/allaince-bargain/ […]

  11. வினவு தோழர்களின் மேலும் ஒரு அற்புதமான பதிவு…

    காங்கிரஸ் பொறுக்கிகளும், ஊழலின் பெரிய நாயகி ஜெ இப்போது ஊழலுக்கு எதிராக பேசுவது போன்ற மோசடிதனங்கள் மிக தெளிவாக காட்டப்பட்டுள்ளது…

    இப்போது இந்த ஊழல் பிரச்சனையில் பெரும் பணத்தை கொள்ளை அடித்த அம்பானி, மிட்டல் போன்ற பெருமுதலாளிகளையும், காங்கிரஸ் கயவாளிகளையும், பாஜக திருடர்களையும் தப்ப வைத்து… அவர்களோடு கொள்ளையில் பங்கு கொண்ட திமுகவை மட்டும் தர்ம அடிக்கும் வேலையை செய்து கொண்டுள்ளன… பார்ப்பன பொறுக்கி ஊடகங்கள்…

    தேர்தல் அழுகுனி ஆட்டத்திற்கு இந்த ஊழல் ஜெ போன்ற ஊழல் பேர்வழிகளுக்கு விளையாட்டு பொருளாகி விட்டது போல் இருக்கிறது…

    இணையத்தில் செயல்படும்… தினமலம் பின்னூட்டம் பாணி ஆண்மையற்ற பார்ப்பன/நவீன பார்ப்பன பேடிகள்… இந்த ஊழலை கொண்டு ஜெவுக்கு ஆதரவு தேடும் பொறுக்கிதனத்தை செய்து கொண்டுள்ளனர்…

    • //கொள்ளையில் பங்கு கொண்ட திமுகவை மட்டும் தர்ம அடிக்கும் வேலையை செய்து கொண்டுள்ளன… பார்ப்பன பொறுக்கி ஊடகங்கள்//
      you agree that dmk participated in the “kollai” then why you are whitewashing them? When try to hate a particular section, then the same particular section “rebuff” this time…? what is use..? It is your mistake to allign with them. Why dont You try to become “patri eriyum neruppin naduvil, eriyaatha soodamaga”.. But you cant… then you better accept your defeat…athu thaane veeranukku azghu…?

      • இந்த பதிவில் நான் திமுகவை ஆதரிக்கவே இல்லை… ஆனால் திமுக ஊழல் செய்து விட்டது என சொல்லி… அதே போன்ற ஒரு ஊழல் பெரு நாயகி ஜெவை தூக்கி கொண்டாடும் தினமலம், துக்ளக் போன்ற பார்ப்பன சொரி நாய்களை சுட்டுகாட்டுவது தவறா?

        இந்த ஊழலில் திமுகவை விட பலன் அடைந்த பெரு முதலாளிகளை பற்றி யாரும் பேசுவதில்லை என்பது தவறா?

        காங்கிரஸ்காரர்கள் மற்றும் பாஜகவினர் இந்த ஊழலில் பங்கு கொள்ளாத உத்தமர்களா?

        இங்கு நடக்கும் அத்துனை அயோக்கியதங்களின் பின்னணியிலும் பார்ப்பனர்கள் இருப்பார்கள் என்பது உண்மை….

        நீங்கள் பார்ப்பனரா இல்லை பார்ப்பன அடிவருடியாகவோ இருந்து விட்டு பார்ப்பன பொறுக்கிகளை கடவுளாக வணக்கினால் நான் எப்படி ஏற்று கொள்ள முடியும்…

      • யாருப்பா இந்த நாகராசு …

        தத்துவமா பொழியிறாரு …. பார்ப்பன பொறுக்கி ஊடகங்கள்னு சொன்னது தான் சாருக்கு கோவமோ ?..

        அதை நேரடியா சொல்ல வேண்டியது தானே …

        அதை விட்டுட்டு “ நெருப்பு சூடம் பத்துது , பத்தலனு காமெடி பண்ணிட்டு இருக்கீறு ,,,

        பார்ப்பன பொறுக்கி ஊடகங்கள் முதலாளி மார்களையும் , பாஜகவின் கைக்கூலிகளையும் சாட்டை எடுத்து விளாசாதது ஏன்?.

        பதில் சொல்லவும் .

  12. This is just an attempt of witch hunting of Raja and thereby Tarnishing image of DMK. As North India Medias and few political parties are biased against South Indian Parties, DMK in particular as they are part of Central Govt since 1996 (Some gap in between).

    These North India Medias did the same sort of witch hunting against Anbumani Ramadas when he attempted to bring reservation in Health Ministry and changed the head of AIMSS when he not allowed implementing reservation in higher studies.

  13. நொங்கு திண்டவன் ஓடிப்போயிட்டான்.நொண்படித் திண்டவன் மாட்டிக்கிட்டான் அப்பு. புதிய ஜனநாயகம்.கலாச்சாரம். வினவு. மற்றும் இது போன்ற ஊடகங்கள் தவிர மற்ற தொழில்முறை ஊடகங்கள் யாருக்கையா? சேவை செய்யும் வேசிக்கும்.இந்த ஊடகங்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமிலலை.அப்படி இருந்தால் எழுதுங்கள் மாற்று கருத்துடையோரே!.,

  14. ஊழல் என்பது மாறி கார்பொரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளையாக மாறி விட்டது. அதுதான் தனியார்மயம் -தாராளமயம் என நாட்டையே இன் நிறுவனங்கள் சூறையாடுகின்றன. அவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வினவு தவிர யாருமில்லை. கார்பொரேட் நிறுவனங்களின் மோசடிகள் நீரா-வின் டேப்பில் அம்பலமாவது பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை? இந்த பகற்கொள்ளையர்களை என்ன செய்வது என்பது பற்றி விவாதிப்பது தான் இன்றைய தேவை. இவர்களின் சூறையாடலுடன் ஒப்பிடும்போது மற்றவர்களின் ஊழல் கொசுறு. இதையே பூதாகரமாகப் பார்பவர்கள் இந்த கார்பொரேட் பகற்கொள்ளையர்களை என்ன செய்வது எனப் பேசினால் நல்லது.

  15. அரசை ஆட்டுவிக்கும் அதிகாரத் தரகர்கள்!! க்கு எழுதிய பின்னூட்டத்தையே இங்கும்….
    “பங்கு சந்தை சூதாட்டத்தை அரசு வளர்த்ததுதான் இந்த விதமான ஊழலுக்கு வாயிலாக இருக்கிறது. 1990 களுக்கு பிறகு அரசியல் தரகர்கள் தங்கள் நிறுவனங்களுக்காக அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் லஞ்சம் குடுப்பதும் பேரம் பேசுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதில் எந்த கட்சியும் விதிவிலக்கில்லை. அனால் இப்போது ராசாவை மட்டும் குற்றவாளியாக காட்டுவது பார்ப்பன சதியே காரணம். சு சாமி செய்யும் ஒவ்வொரு வேலையும் தமிழனுக்கு எதிராகத்தான் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தி மு க ஆட்சியை கலைத்தது, சேது திட்டத்தை முடக்கியது போன்றது எல்லாம். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போடா இவர் எவ்வளவு லஞ்சம் வாங்கினார் என்பது கொடுத்த கம்பெனிகளை விசாரித்தால் தெரியும். ராசா தலித் என்பதால்தான் வட நாட்டு பத்திரிக்கைகளும், பார்ப்பன பத்திரிக்கைகளும் ராசாவை கடித்து குதறுகின்றது. ராசா மீண்டும் மீண்டும் சட்டப்படியே நடந்துள்ளது என்று கூறுவது இந்த பங்கு சந்தை கூத்தையும், அரசு சொத்தை தனியாருக்கு விடுவதில் அரசு வகுத்த கொள்கையையும் தான். ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசுக்கு நஷ்டம் 1 .76 லட்சம் கோடி என்றால், 1990 முதல் அரசு சொத்தை தனியாருக்கும் , வெளி நாட்டு கம்பெனிக்கும் விட்டதில் நஷ்டம் 2000 லட்சம் கோடியை நிச்சயம் தாண்டும். பெப்சிக்கு தண்ணீரை தாரை வார்த்தது, நவரத்தின நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்தது, பெட்ரோலிய எண்ணை வளங்களை ஆராயவும், அதை நிலத்தில் இருந்து எடுக்கவும் ரிலையன்சுக்கு கொடுத்தது போன்றவற்றை கூட்டி பாருங்கள் 2000 லட்சம் கோடியை தாண்டும். இந்திய நிச்சயம் ஏழை நாடல்ல ஏழைகளை உருவாக்கும் நாடு. அத்தனை மனித உழைப்பையும் திரட்டி லஞ்சமாகவும் நிறுவனங்களின் லாபமாகவும் வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளன.”

  16. the cag accounts the losses as 1,76,000cr. That means the corporate houses swindle the money, paying less to the government. Whatever they gains they will pay a small amount. That does not mean they have paid the whole amount they have gained. But the general thinking is the loss amount was gained by the minister. As Velan mentioned the TNC, MNC’s are swindling crores and crores of rupees of our public money by the LPG policy. That policy is bankrupting our state. Vinavu and the revolutionary organisations are fighting against this. In that way they are exposing the LPG policy. But the genaral public was misguided by the whole meadia that by the LPG policy our state will bocome a super power(that is impearialism). How a bankrupting state will become an impearialism?

  17. I thought if some good educated people involve in indian politics things may happen gud but in this case, Raja is educated and well qualified even though Corruption is sitting in his head. We cant predict whole sum of amount gone inside Raja’s home but in that he took some part. Am really very sad to say this, I do no what kind of people should come insdie politics? because educated and youth personolities are doing more corruption that the old generation by using their educated brain. SORRY FOR INDIA

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க