ஒரே வாக்கியத்தில் குறிப்பிட வேண்டுமென்றால், ‘மக்கள் புரட்சியில் எகிப்து பற்றி எரிகிறது‘ என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்படி நடக்கும் என ஏகாதிபத்தியங்கள் முன்பே கணித்திருந்ததோ இல்லையோ அதை நிச்சயம் விரும்பவில்லை. தங்களால் முடிந்தவரை புரட்சி வராமல் பார்த்துக் கொள்ள எவ்வளவோ முயற்சித்தன. கலகமாகவும், சின்ன எழுச்சியாகவும் மறைத்து மூடிவிட முயன்றன. ஆனால், ஒன்றிணைந்த மக்களின் தொடர் போராட்டமும், சலிப்படையாத எழுச்சியும் புரட்சிக்கான கருவை எகிப்தில் விதைத்துவிட்டன.
இனி அமெரிக்காவின் தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள் ஒன்றிணைந்து எகிப்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சரி அல்லது இப்போதைய அதிபர் ஹோஸ்னி முபாரக்கையே தொடர்ந்து ஆட்சி நடத்த முட்டுக் கொடுத்தாலும் சரி, அதிபராக இருப்பவரின் கழுத்தில் உழைக்கும் மக்களின் வெப்ப மூச்சு வீசிக் கொண்டே இருக்கும். அந்த வெப்பம், எப்போது வேண்டுமானாலும் தன் கழுத்தை நெறிக்கலாம் என்ற அச்சத்திலேயே அதிபர் ஆட்சி நடத்த வேண்டும்.
ஏனெனில் எகிப்தில் இன்றைய தினம் போராடுபவர்கள் மசூதிக்கு சென்று தொழுகை மட்டும் நடத்திவிட்டு செல்லக்கூடிய ‘இஸ்லாமியர்கள்’ அல்ல. இவ்வளவு வருடங்களும் அரபு உலகின் ஆளும் வர்க்கமும், அமெரிக்காவும் மதத்தை வைத்து ஏமாற்றி வந்த தந்திரங்கள் இப்போது பலிக்கவில்லை.
எகிப்தில் இன்று போராடுபவர்கள் தொழிலாளர்கள், கூலிகள், வேலையில்லா பட்டதாரிகள், கல்லூரி படிக்கும் மாணவ – மாணவிகள். மொத்தத்தில் அடித்தட்டு உழைக்கும் மக்கள்தான் எகிப்தில் 90% வாழ்கிறார்கள். இந்த வர்க்க உணர்வைத்தான் எகிப்து மக்களிடம் ஜனவரி 25ஆம் தேதி முதல் நடந்து வரும் மக்கள் எழுச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
எகிப்திய தொழிலாளர் வர்க்கம் இன்றைய தினம் அணிதிரண்டு தங்கள் எதிர்கால பயணத்துக்கான முதல் அடியை எடுத்து வைத்திருப்பது நிச்சயம் அசாரணமான ஒன்று. இன்று ஆட்சி மாற்றம், அரசாங்க மாற்றம் என்பாதாக இருக்கும் எகிப்தின் போராட்டம் விரைவிலேயே இல்லை தாமதமாகவோ அடிப்படையான சமூக மாற்றத்தை நோக்கி சென்றாலும் செல்லலாம் என்ற உண்மை அமெரிக்காவை பிடித்து ஆட்டுகிறது. இருபதாம் நூற்றாண்டோடு கம்யூனிசம் ஒழிந்துவிட்டது என்று இறுமாந்திருந்தவர்களின் இதயம் இப்போதைய எகிப்தின் எழுச்சியால் பதட்டமடைந்திருக்கிறது.
இந்த உண்மையை சற்று தாமதமாக புரிந்து கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது. அதன் விளைவாக வெள்ளை மாளிகை முன்பைவிட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொலைபேசிகள் ஓயாமல் மத்திய கிழக்கு நாடுகளை தொடர்பு கொண்டபடியே இருக்கின்றன. அந்தந்த நாட்டு அதிபர், மன்னர்களுடன் விடாமல் உரையாடிக் கொண்டிருக்கின்றன. யேமன், துருக்கி, ஜோர்டான், அல்ஜீரியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலும் அடுத்தடுத்து மக்கள் எழுச்சி ஏற்படலாம் என்ற அச்சம், அமெரிக்காவின் சாம்ராஜ்ஜியத்தில் காய்ச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதை தடுப்பதற்கான – தணிப்பதற்கான – நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறது.
இதன் ஊடாக அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் எகிப்தை ஒட்டி தங்கள் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்துவிட்டன. ஜனநாயகத்துக்கு எதிராக, மக்கள் உணர்வுக்கு முரணாக, சர்வாதிகாரத்துக்கு மறைமுக ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்பதை உலக மக்களுக்கு தெளிவுபடுத்தி விட்டார்கள். எகிப்து நிகழ்வுகளை ஏகாதிபத்தியங்கள் அணுகுவதிலிருந்தே இதை புரிந்து கொள்ளலாம்.
உண்மையில் எகிப்தின் மக்கள் எழுச்சியை, ‘மேட் இன் அமெரிக்கா’ (Made in America) என்று பறைசாற்றத்தான் அமெரிக்கா விரும்பியது. ஜனவரி மாத நடுப்பகுதியில் வட ஆப்பிரிக்க தேசமும், எகிப்துக்கு அருகாமையில் இருக்கும் நாடுமான துனிசியாவில் மக்கள் கிளர்ந்து எழுவதற்கு முன்பே –
எகிப்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கலாம் என்று அமெரிக்கா கணித்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே எகிப்தின் நிலை சரியாக இல்லை. ரோமர்களின் காலத்தில் பண்டைய எகிப்து, ஐரோப்பாவின் உணவுக்களஞ்சியமாக விளங்கியது. அப்படிப்பட்ட உணவுக் களஞ்சியமாக எகிப்து இன்று இல்லை. உலகமயம், தாராளமயம் என மறுகாலனியாதிக்க கொள்கைகள் எகிப்தை நாசம் செய்துவிட்டன. அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையேற்றம், வேலையில்லா பிரச்னை, வருமானக் குறைவு, விலைபோகும் கல்வி என மக்களை வாட்டும் பிரச்னைகளே அரசாங்கத்தின் கருவூலத்தில் இன்று நிரம்பி வழிகின்றன.
அரபு தொழிலாளர் அமைப்பின் (ALO) சமீபத்திய தேசிய கருத்தரங்கில் வெளிவந்த புள்ளிவிவரங்கள் இதை தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றன. எகிப்து மக்களிடையே காணப்படும் சமூக நிலைமைகள் மிக மோசமாக உள்ளன என்றும், நாள் ஒன்றிற்கு 2 டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்க்கை நடத்துபவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதத்திற்கும் மேலாக இருக்கிறது என்றும் அந்த விவரங்கள் முகத்தில் அறைகின்றன. அதாவது 8.5 கோடி மக்கள் வாழும் எகிப்தில் கிட்டத்தட்ட 43 சதவிகிதத்தினர் வறுமையில் வாழ்கின்றனர். அதேபோல் உலகளவில் மனித உரிமை மீறல்களும், சித்திரவதைகளும், காவல்நிலையத்தில் நடக்கும் படுகொலைகளும் அதிகமாக நடைபெறும் நாடுகளில் எகிப்தும் ஒன்று.
இதனையொட்டியே இணையதள சமூக வலைத்தளமான ‘ஃபேஸ் புக்’கில் ‘ஏப்ரல் 6 இயக்கம்’ தோன்றியது. எகிப்திலுள்ள El-Mahalla El-Kubra என்ற தொழில் நகரத்தில் உரிமை கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதற்காக 2008ல் அகமத் மஹர் என்பவரால் இத்தளம் உருவாக்கப்பட்டது. படித்த, இணையதளம் பயன்படுத்தக் கூடிய எகிப்து இளைஞர்கள் மெல்ல மெல்ல இத்தளத்தில் சேர ஆரம்பித்தார்கள். டிவிட்டர் தளத்திலும் கால் பதித்தார்கள். ப்ளாக் என்னும் வலைத்தளங்களையும் தனித்தனியே உருவாக்கினார்கள். நாட்கள் செல்லச் செல்ல அரசாங்கத்துக்கு எதிரான தளமாக ‘ஏப்ரல் 6 இயக்கம்’ உருவாகியது. எந்தக் கட்சியையும் சார்ந்தவர்களாக இவர்கள் முன்னிறுத்திக் கொள்ளாதது இவர்களின் பலமாயிற்று. எல்லாக் கட்சிகளையும் பார்த்து மக்கள் சலித்திருந்தார்கள் என்பதுதான் இவர்களது கட்சி சார்பற்ற பலத்தின் அடிப்படை. அதே நேரம் இந்த இளைஞர்கள் முபாரக்கை மாற்ற வேண்டும் என்பதைத் தாண்டி வேறு காத்திரமான அரசியல், சமூக மாற்றத்தை கோரியவர்கள் அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்வது நல்லது.
இதை மோப்பம் பிடித்த அமெரிக்கா, ஃபேஸ் புக்கிலும், வலைத்தளங்களிலும் (ப்ளாக்) துடிப்புடன் இயங்கும் சில இளைஞர்களை தங்கள் செலவில், தங்கள் நாட்டுக்கு அழைத்து இணையதள தொழில்நுட்பங்களை பயிற்றுவித்தது. ஹிலாரி கிளிண்டன் போன்றவர்கள் கூட இவர்களுடன் சில மணி நேரங்களை செலவிட்டார். எகிப்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் உருவாக வேண்டும் என்பது குறித்த கலந்துரையாடல் இச்சந்திப்பின் ஹைலைட்டாக அமைந்தது. அதாவது, கம்யூனிசம் கூறுவது போன்ற அடிப்படை சமுகத்தை மாற்றும் புரட்சி சார்பாக இளைஞர்கள் சென்றுவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா குறியாக இருந்தது. அரசு மாற்றமல்ல; ஆட்சி மாற்றமே தேவை என்பதான கருத்துக்கு அந்த இளைஞர்கள் குழு வந்ததும் – வர வைத்ததும் – எகிப்துக்கு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
முபாரக்கை ஆதரித்த அமெரிக்கா அவரை மாற்றுவதையும் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதில் பெரிய முரண்பாடு ஏதுமில்லை. முடிந்த வரை முபாரக், அவர் போய்விட்டால் தனக்கு விசுவாசியான அடுத்த நபர் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம் மற்றும் நடைமுறை. இதனால் உலகமெங்கும் உள்ள மக்கள் போராட்டங்களை காயடித்து அதை வெறுமனே ஒரு அடையாள எதிர்ப்பாக மட்டும் மாற்றுவதற்கு அமெரிக்கா எப்போதும் முயல்கிறது. இப்படித்தான் எகிப்தின் விவகாரத்திலும் அது தனது மூக்கை நுழைத்தது.
துனிசியாவில் மக்கள் எழுச்சி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் நிகழ்ந்தது. இதனையடுத்து துனிசிய அதிபர், பென் அலி சவூதி அரேபியாவுக்கு ஓடிப் போனார். இந்த நிகழ்வு படித்த – குறிப்பாக இணையதள பயன்பாடுள்ள – எகிப்து மக்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது.
காரணம், கடந்த டிசம்பர் மாதம் காலித் சைத் என்னும் எகிப்திய இளைஞன் போலீஸ் வன்முறைக்கு பலியாகி இருந்தான். போலீசாரின் அத்துமீறல் குறித்த வீடியோவை இணையத்தில் அவன் வெளியிட்டதால், காவலர்களால் அவன் கொல்லப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். ஆனால், காலித் சைத் போதைப்பொருள் உட்கொண்டதால்தான் மரணமடைந்தான் என போலீஸ் கதைவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த எகிப்து இளைஞர்கள், ஜனவரி 25ம் தேதியை ஆர்ப்பாட்டத்துக்கான நாளாக ‘ஏப்ரல் 6 இயக்க’த்தின் தளமான ‘ஃபேஸ் புக்’கில் அறிவித்தார்கள். ஜனவரி 25ம் தேதியை போலீசுக்கு எதிரான நாளாக அவர்கள் தேர்ந்தெடுத்ததற்கு காரணமிருக்கிறது. அன்றுதான் ஆண்டுதோறும் எகிப்தில் ‘போலீஸ் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. தவிர, அன்று தேசிய விடுமுறையும் கூட.
எனவேதான் காவலர்களுக்கான நாளில், காவலர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை கடைப்பிடிக்க முடிவு செய்தார்கள். இதற்கு மக்களிடம் பெருமளவு ஆதரவு கிடைத்தது. எதிர்க் கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் களமிறங்க முடிவு செய்தன. ஆனால், ‘துனிசிய மாதிரி’யாக இல்லாமல், ஆட்சி மாற்றமாக இது நடைபெற வேண்டும் என திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். அதற்கேற்ப ‘மாற்றீட்டு பாராளுமன்றம்’ என்கிற ‘மக்கள் பாராளுமன்றத்தை’ முன்னிலைப்படுத்தினார்கள். அதாவது எதிர்க் கட்சிகளை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் பங்கேற்கும் விதமாக அந்த அறிக்கை இருந்தது.
உஷாரான அதிபர் ஹோஸ்னி முபாரக், ஜனவரி 25 அன்று காவலர்களை எகிப்து முழுக்க, அனைத்து நகரங்களிலும் ஆயுதங்களுடன் நிறுத்தினார். எந்த காவலருக்கும் அன்று விடுமுறை தரப்படவில்லை. விடுமுறையில் இருந்தவர்களும் கட்டாயமாக பணிக்கு அழைக்கப்பட்டார்கள்.
விபரீதத்தை உணர்ந்த அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்தப் போராட்டம் அரசுக்கு எதிராக செல்லாதபடியும், ஆட்சிக்கு எதிராக மட்டுமே இருக்கும்படியும் தனது இணையதள விசுவாசிகள் மூலம் பார்த்துக் கொண்டது.
ஒருவேளை மக்கள் எழுச்சி நூறு சதவிகிதம் இருந்தால், ஹோஸ்னி முபாரக்கை பதவியிலிருந்து இறக்கிவிட்டு வேறு நபரை ஆட்சியில் அமர்த்தலாம். அதன் மூலம் எகிப்து மக்களின் கொந்தளிப்பை மட்டுப்படுத்தி, மக்கள் எழுச்சியை, ‘மேட் இன் அமெரிக்கா’ (Made in America) ஆக மாற்றலாம் என கணக்குப் போட்டது.
ஆனால், அது தப்புக் கணக்காகிவிட்டது. தனித்தனியாக மக்கள் சிதறி இருக்கும்வரைதான் ஏகாதிபத்தியம் வெற்றி பெறும். அதுவே மக்கள் திரளாக அவர்கள் ஒன்றிணைந்துவிட்டால், எப்படிப்பட்ட சூப்பர் பவர் ஏகாதிபத்தியமும் தவிடு பொடியாகிவிடும்.
இந்த புரட்சிக்கான விதையை நடைமுறையிலிருந்து கற்றுக் கொண்ட எகிப்து மக்கள், மீண்டும் அதையே நடைமுறையாக்கினார்கள். நகரம் முழுக்க காவலர்கள் ஆயுதங்களுடன் நிரம்பியிருந்தது அவர்களது கொந்தளிப்பை அதிகரித்தது. தனித்தனியாக இருக்கும்வரைதானே பயம்? ஒன்றாக சேர்ந்து சாலையில் இறங்கினால்…
இறங்கினார்கள். மெல்ல மெல்ல முன்னேறினார்கள்.
1977ல் நடந்த ரொட்டி எழுச்சிக்குப் பின், எகிப்தில் பேரணி நடத்தவும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் சட்டப்படி தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தச் சட்டத்தை மக்கள் மீறினார்கள். விளைவு… 30 ஆண்டுகளாக எகிப்து கண்டிராத மக்கள் போராட்டத்தை – எழுச்சியை – அன்றைய தினம் கண்டது.
ஆம், எந்த காவலர்களை பார்த்து இத்தனை ஆண்டுகளாக பயந்து நடுங்கினார்களோ… அதே காவலர்கள் முன்பு தைரியமாக தடையை மீறினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையினர் 30 வயதுக்குட்பட்டவர்கள். இதற்கு முன்பு எந்த அரசியல் போராட்டத்திலும் கலந்து கொள்ளாதவர்கள். எந்தக் கட்சியின் உறுப்பினர்களாகவும் இல்லாதவர்கள். அதுமட்டுமல்ல, தங்கள் வாழ்நாளில் எந்தவொரு மக்கள் எழுச்சியையும் அவர்கள் கண்ணால் பார்த்ததும் இல்லை; காதால் கேட்டதுமில்லை. அஹ்மத் அஷ்ரப் என்னும் 26 வயது வங்கி ஊழியர், ‘நாங்கள்தான் இப்போது சாலையை கட்டுப்படுத்துகிறோம். காவலர்கள் அல்ல…’ என்று பெருமிதத்துடன் அன்றைய தினம் குறித்து ஊடகங்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.
எந்த மத அமைப்பும் அம்மக்களை வழி நடத்தவில்லை. தொழிலாளர்களும், வேலையில்லா பட்டதாரிகளும், அடித்தட்டு உழைக்கும் மக்களும்தான் இந்த எழுச்சியை வழிநடத்தி இருக்கிறார்கள்.
சுதந்திரத்தின் சுவையை மட்டுமல்ல, கூட்டிணைவின் மகிழ்ச்சியையும் அன்றைய தினம் எகிப்து மக்கள் யாரும் கற்றுத் தராமலேயே உணர்ந்தார்கள். காவலர்களின் துப்பாக்கி சூட்டுக்கு ஆங்காங்கே மக்கள் பலியானபோதும் ஆர்ப்பாட்டத்தை அவர்கள் நிறுத்தவும் இல்லை. சிதறி ஓடவும் இல்லை.
அலெக்சாந்திரியா நகரில் வயதான பெண்கள், வீட்டு பால்கனியில் நின்றபடி அழுகிய தக்காளிகளையும், கல்லையும் காவலர்கள் மீது வீசினார்கள். இப்படியாக ஜனவரி 25 ஆர்ப்பாட்டம், ஒட்டுமொத்த எகிப்து மக்களின் எழுச்சியாக உருவெடுத்தது.
வரலாறு முழுக்கவே மக்கள் திரள் ஒன்றிணைந்து இதுநாள் வரை தங்களை பிணைத்திருந்த அச்சம் என்னும் சங்கிலியை அறுத்து எறியும்போது, பூமிப் பந்திலுள்ள எந்த ஆற்றலும் – சக்தியும் – அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பின் வாங்குகிறது என பதிவு செய்திருக்கிறது. அந்தப் பதிவு மீண்டும் எகிப்து வரலாற்றில் எழுதப்பட்டது.
அன்று மாலை அரசு தொலைக்காட்சி முன்பு தோன்றிய அதிபர் ஹோஸ்னி முபாரக், ஆட்சியிலிருந்து தான் விலகப் போவதில்லை என்றும், மக்களின் பிரச்னைகளை தீர்க்க துணை அதிபராக ஓமர் சுலைமானை நியமிப்பதாகவும் அறிவித்ததுடன், தனது அமைச்சரவையை கலைப்பதாகவும், விரைவில் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்றும் உரையாற்றினார். இது மக்களின் கோபத்தை அதிகரிக்கவே வழி வகுத்தது.
இரவு வீடு திரும்பியவர்கள் மீண்டும் சாலையில் இறங்கி போராட்டத்தை தொடர்ந்தார்கள். இது அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்தது.
ஃபேஸ் புக், டிவிட்டர், ப்ளாக்… என இணையத்திலுள்ள சகல வலைத்தளங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தை குறித்து விவாதித்தார்கள். 26 பக்க போராட்ட வழிமுறைகள் பிடிஎஃப் ஆக மின்னஞ்சலில் சுற்றுக்கு விட்டார்கள். படித்தவர்கள் அதை தெரிந்தவர்களுக்கு எல்லாம் ஃபார்வர்ட் செய்தார்கள்.
அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் தூதுவர் உடனடியாக விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். இதன் மூலம், எகிப்தை உண்மையில் ஆள்பவர்கள் யார் என்பது வெட்ட வெளிச்சமானது. மத்திய கிழக்கு நாடுகளின் தளப் பிரதேசமாக எகிப்தை ‘நிர்வாகம்’ செய்து வரும் அமெரிக்கா, இந்த மக்கள் எழுச்சியால் கவலையடைந்தது. இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக இராணுவ தளவாடங்களை அதிகளவு அமெரிக்கா விற்பது எகிப்துக்குத்தான். அந்நாட்டில் இருக்கும் சூயஸ் கால்வாய், அமெரிக்காவின் வணிகத்துக்கு தேவை. அத்துடன் இஸ்ரேலினால் பொருளாதார தடை விதிக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் காசா பகுதி, சூயஸ் கால்வாயை ஒட்டியே இருக்கிறது. எனவே எக்காரணம் கொண்டும் எகிப்தை இழக்க அமெரிக்கா தயாராக இல்லை.
அதேபோல் பாலஸ்தீனியர்களை அடக்கவும், அரபு நாடுகளை மிரட்டவும் இஸ்ரேலுக்கு தனது அண்டை நாடான எகிப்தின் துணை தேவை. எனவே எகிப்துடன் ஈருடல் ஓருயிர் என்ற நட்பையே இஸ்ரேல் கடைபிடித்து வருகிறது. இப்போது எகிப்தின் துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஓமர் சுலைமான், அப்பட்டமான சிஐஏ கைக்கூலி. எகிப்தின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி. மனித உரிமை மீறலுக்கும் அரசியல் படுகொலைகளுக்கும் காரணமானவர். இஸ்ரேலின் அனைத்து அராஜக – அடாவடித்தனங்களுக்கும் துணை போனவர்.
எனவே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எகிப்து தங்கள் கையை விட்டு போகாமல் இருக்க, அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்கள் விசுவாசியும், நீண்ட ஆண்டுகள் நண்பருமான ஹோஸ்னி முபாரக்கை கை கழுவ இப்போது தயாராகிவிட்டன. இதன் மூலம் புரட்சி ஏற்படாமல், வெறும் ஆட்சி மாற்றத்தின் மூலம் மக்களின் கோபத்தை தணிக்கலாம் என முடிவு செய்துவிட்டன. அமெரிக்க – இங்கிலாந்து வெளியுறவுத் துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் ஊடகங்களுக்கு தரும் பேட்டியை நாள்தோறும் உன்னிப்பாக கவனித்து வருபவர்கள் இதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
அதன் பலனாக இப்போது எகிப்தின் முக்கிய எதிர்க் கட்சித் தலைவரும், நோபல் பரிசு பெற்ற சர்வதேச அணுசக்தி முகமையின் முன்னாள் தலைவருமான எல்பரதேய் ஊடகங்களால் முன்னிலைப்படுத்தப்படுகிறார். இவர், துனிசிய புரட்சி நடந்த ஈரம் காய்வதற்குள் ‘கார்டியன்’ இதழுக்கு, ‘எகிப்தும் ஒரு துனிசிய வகையிலான வெடிப்பை எதிர்நோக்கியிருக்கிறது’ என்று எச்சரித்தவர்தான். கூடவே ‘துனிசிய முன்மாதிரி போல் அல்லாமல், ஒழுங்கான முறையில் மாற்றம் வரும் என்று, தான் நம்புவதாகவும், இருக்கும் முறையில் இருந்தே மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தேவையான வழிவகைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும்’ குறிப்பிட்டு, மக்கள் புரட்சியில் தனக்கு நம்பிக்கையில்லை என்பதையும், அமெரிக்காவுக்கு தான் விசுவாசமானவன்தான் என்பதையும் அறிவித்தவர்தான்.
இதுபோன்ற எடுபிடிக்காகவே காத்திருந்த அமெரிக்கா, எல்பரதேய்யை எகிப்துக்கு அனுப்பியது. நடக்கப் போவதை ஓரளவுக்கு ஊகித்துவிட்ட ஹோஸ்னி முபாரக், உடனே அவரை வீட்டுக் காவலில் வைத்தார்.
இந்நிலையில்தான் வெள்ளிக்கிழமை (28.01.2011) விடிந்தது. அன்றைய தொழுகை முடிந்ததும் அதிபருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி மக்கள், சாலையில் இறங்கி ஊர்வலம் போக ஆரம்பித்தார்கள். அதிபர் மாளிகையை முற்றுகையிட்டார்கள். நகரங்களில் இருந்த ஆளுங்கட்சி அலுவலகம் தீக்கரையானது. அரசியல் கைதிகள், சிறைச்சாலையை கைப்பற்றி வெளியே வந்தார்கள்.
அரசாங்கமும் சும்மா இருக்கவில்லை. குற்றவாளிகளை விடுதலை செய்து, மக்களின் உடமைகளை திருடச் சொன்னது. சீருடை அணிந்த காவலர்களில் சிலரும் இந்த வழிப்பறியில் – கொள்ளையில் இறங்கினார்கள். மக்கள் அவர்களை கைது செய்தார்கள். தங்களுக்குள்ளாகவே குழுவை அமைத்து தங்கள் உடமைகளை கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு பாதுகாத்துக் கொண்டார்கள்.
ஜனவரி 31ம் தேதி முடிய பொது மக்களுக்கும் பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 150 பேர் பலியாகியுள்ளனர். 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இது அறிவிக்கப்பட்ட கணக்கு மட்டுமே. பலியானோர் எண்ணிக்கை இன்னமும் அதிகமாக இருக்கக் கூடும். என்றாலும், இந்த எண்ணிக்கை எந்தவிதத்திலும் எகிப்து மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கவில்லை. பலியானோரின் சடலத்தையே, உணர்வெழுச்சிக்கான ஆயுதமாக மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். காயமடைந்தோரும், ரத்தம் வழிய வழிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். நாள்தோறும் அலைகடலென திரண்டு வரும் மக்களை கட்டுப்படுத்த வழியின்றி பாதுகாப்புப் படை திகைத்து நிற்கிறது.
நேர்மையான பல காவலர்கள் மக்களுடன் இணைந்து இப்போது போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்த வேண்டிய இராணுவ வீரர்கள், அமைதி காக்கிறார்கள். மக்களுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று பகிரங்கமாக இராணுவம் அறிவித்திருப்பது முபாரக்குக்கு மட்டுமல்ல அமெரிக்காவிற்கும் பிரச்சினைக்குரிய ஒன்று.
ஆனால், முன்னாள் விமானப்படை அதிகாரியான ஹோஸ்னி முபாரக்கால் இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. தரைப்படை அமைதிகாத்தால் என்ன… விமானப்படையை அனுப்புகிறேன்… மக்கள் பயத்துடன் கலைந்து செல்வார்கள் என போர் விமானங்களை நகரங்களின் மீது பறக்க விட்டிருக்கிறார். முதலில் அதிர்ந்த மக்கள், பிறகு இந்த போர் விமானங்களை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘முதலில் நாங்கள் பயந்தோம். ஆனால், இப்போது இசையை ரசிப்பது போல் போர் விமானங்களின் ஒலியை ரசிக்க ஆரம்பித்துவிட்டோம்’ என்கிறார்கள்!
அரசின் சமூக – அரசியல் – ஆட்சி இயக்கமே இராணுவத்தின் பாதுகாப்பில்தான் மையம் கொண்டிருக்கிறது. இந்த அச்சு இன்று எகிப்தில் மாறியிருக்கிறது. இராணுவ தளவாடங்கள் வேண்டுமானால் அமெரிக்காவில் தயாரானதாக இருக்கலாம். ஆனால், இராணுவ வீரர்கள் எகிப்தின் அடித்தட்டு, நடுத்தர மக்கள்தானே? எகிப்தின் மக்கள் எழுச்சியால் ஈர்க்கப்பட்ட இராணுவ வீரர்கள் – இதுநாள் வரை அரசின் துருப்பாக இருந்தவர்கள் – வர்க்க அடிப்படையில் மக்களுடன் இரண்டற கலந்துவிட்டார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு மக்களுடன் இராணுவம் தொடர்பு கொள்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு புரட்சி வலிமை பெறும் என்பது விதி. அந்த விதி, எகிப்தில் இப்போது மையம் கொண்டிருக்கிறது. கிடைத்த உணவை மக்களுடன் இணைந்து இராணுவ வீரர்களும், காவலர்களும் பகிர்ந்து உண்ணும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.
இதோ வீட்டுச் சிறையிலிருந்து வெளியே வந்த எல்பரதேய், ஏதோ தான்தான் இந்த மக்கள் எழுச்சியை வழிநடத்துவது போல் ஊடகங்களுக்கு பேட்டியளித்தும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தும் தன் இருப்பை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சிக்கிறார். ஆனால், எகிப்து மக்கள் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. காரணம், பலருக்கு இவர் யார் என்றே தெரியவில்லை!
எகிப்தின் இன்றைய மக்கள் எழுச்சியை யாரும், எந்தக் கட்சியும் முன்னின்று நடத்தவில்லை. எனவே மக்கள் மெல்ல சோர்வடைந்து பின்வாங்கி விடுவார்கள் என்று நம்பிய ஹோஸ்னி முபாரக், இப்போது மூக்குடைந்திருக்கிறார். நாள்தோறும் முந்தைய நாளின் தீவிரத்தை விட அதிக வலிமையுடன் அனைத்து நகர தெருக்களிலும் மக்கள் இறங்கி போராடுகிறார்கள். தலைநகர் கெய்ரோவிலுள்ள தாஹீர் சதுக்கத்தை சுற்றிச் சுற்றி வருகிறார்கள். இத்தனைக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தொடர் போராட்டத்தினால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வீட்டில் சமைக்க பொருட்களில்லை. உணவு விடுதிகள் திறக்கப்படவேயில்லை. ஆயினும் கிடைத்ததை பகிர்ந்துக் கொண்டு சோர்வடையாமல் உறுதியுடன் போராடி வருகிறார்கள்.
இராணுவம் தன்னை கைவிட்ட நிலையில், இப்போது ஹோஸ்னி முபாரக், தனது ஆதரவாளர்களை போராடும் மக்களுக்கு எதிராக ஆயுதங்களுடன் நிறுத்தியிருக்கிறார். உண்மையில் இந்த ஆதரவாளர் குழுவில் இருப்பவர்கள் பெரும்பாலும் காவலர்கள்தான். முபாரக்கின் விசுவாசிகள்தான். சிவிலியன் உடையில் சாலையில் நடமாடும் இந்த அதிபரின் ஆதரவாளர் குழுவுக்கும், மக்கள் திரளுக்கும் இடையில் பிப்ரவரி மாத தொடக்கம் முதல் மோதல் நடந்து வருகிறது. இதில் பலர் காயமுற்றனர். சிலர் பலியாகினர். அருகிலுள்ள மசூதியை மருத்துவமனையாக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எகிப்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக புரட்சியை உயர்த்திப் பிடித்திருக்கும் மக்கள் திரளுக்கும் – எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கும் அதிபரின் ஆதரவாளர் குழுவுக்கும் இடையில் மோதலும் உயிர்ச்சேதமும் இனிவரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும். ஆனால், அதிபரின் இந்தச் செயலே மக்கள் புரட்சியை மேலும் செழுமைப்படுத்தும். அரசின் குண்டாந்தடிகள்தானே புரட்சியை வலிமையாக்குகின்றன?
1905ல், ரஷ்யாவில் புரட்சி நடந்ததும் அப்போது மன்னராக இருந்த ஜார் இரண்டாம் நிக்கோலஸ், அக்டோபர் அறிக்கையை வெளியிட்டு என்னவெல்லாம் தேனொழுக மக்களிடம் பேசினாரோ அதையே இப்போது ஹோஸ்னி முபாரக் எதிரொலிக்கிறார். ‘இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன். தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்துவேன். என்னை நம்புங்கள்…’ என்ற அதிபரின் இரண்டாவது உரையும் உழைக்கும் மக்களை சமாதானப்படுத்தவில்லை. மக்கள் எழுச்சியை மட்டுப்படுத்தவில்லை. ஆனால், நடுத்தர வர்க்கத்தை ஓரளவு அதிபரின் இந்த இரண்டாவது உரை ஊசலாட வைத்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. என்றாலும் நடுத்தர வர்க்கம் இன்னமும் களத்திலிருந்து பின்வாங்கவில்லை.
மாக்கியவெல்லி ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார். ‘மக்களிடம் அன்பை பொழிவது அரசாங்கத்தின் வேலையல்ல. பயத்தை உண்டாக்குவதே எந்தவொரு அரசாங்கம் நிலவவும் அடிப்படை…’ என்று. இதுநாள்வரை ஹோஸ்னி முபாரக்கும் பயம் காட்டித்தான் வந்தார். இப்போது அது தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் அவரை பயமுறுத்தி வருகிறார்கள்!
‘மன்னிக்கவும் முபாரக். உன்னை நாங்கள் நம்பவில்லை. உடனே அதிபர் பதவியை விட்டு விலகு. உனக்காக விமானம் காத்திருக்கிறது…’ என ஒரே குரலில் கோஷமிடுகிறார்கள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அமெரிக்க இராணுவம், தயார் நிலையில் இருக்கிறது. ஹோஸ்னி முபாரக், பதவி விலகி வேறொரு நாட்டில் தஞ்சம் அடைய வேண்டியதுதான் பாக்கி. அடுத்த நொடியே எகிப்தை தன் கட்டுப்பாட்டுக்குள் அமெரிக்கா கொண்டு வந்துவிடும். ஏனெனில் அரசு மாற்றத்தை அது விரும்பவில்லை. ஆட்சி மாற்றத்தையே அது விரும்புகிறது. அதனாலேயே எல்பரதேய்யை ஆதரிக்கிறது. அதேநேரம் இப்போது துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஓமர் சுலைமான் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கவும் முபாரக்குக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இன்னொரு நாசர், இன்னொரு கோமேனி அரபு நாடுகளில் உருவாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.
என்ன சவூதி அரேபியாவில் ஹோஸ்னி முபாரக் தஞ்சமடைந்தால், துனிசிய முன்னாள் அதிபர் பென் அலியுடன் தேநீர் அருந்தியபடி ‘மலரும் நினைவுகளை’ பகிர்ந்துக் கொண்டு மாலைப் பொழுதை கழிக்கலாம். இல்லாவிட்டாலும் ஒன்றும் நஷ்டமில்லை. எஞ்சிய வாழ்நாளை மனமுவந்து அவர் கழிக்கும்படி அமெரிக்கா ஏற்பாடு செய்து தந்துவிடும்.
ஆனால், எகிப்து?
இந்தக் கேள்விதான் உலகம் முழுக்க தொக்கி நிற்கிறது. முக்கியமாக ‘இஸ்லாம் சகோதரத்துவ கட்சி’ இன்னமும் செல்வாக்குடன் எகிப்தில் இருக்கிறது. எல்பரதேய் போலவே இக்கட்சியும் ‘துனிசிய மாதிரி’ புரட்சியை விரும்பவில்லை. ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறது. எகிப்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் ஹோஸ்னி முபாரக்தான் காரணம் என்றும் பிரச்சாரம் செய்து வருகிறது.
ஜனவரி 25 அன்று ஆரம்பித்து இன்று வரை தொடரும் மக்கள் எழுச்சியில் – புரட்சியில் – அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்கள் எதிரொலிக்கவேயில்லை. ஆளுங் கட்சி அலுவலகத்தை தீக்கரையாக்கிய மக்கள், அமெரிக்க தூதரகத்துக்கு ஒரு சின்ன கீறலைக் கூட ஏற்படுத்தவில்லை. சிறந்த அதிபர் என உலக வங்கி ஹோஸ்னி முபாரக்குக்கு விருது கொடுத்து கெளரவித்திருக்கிறது. அந்தளவுக்கு மறுகாலனியாதிக்க கொள்கைகளை முழு மூச்சுடன் அவர் எகிப்தில் அமல்படுத்தியிருக்கிறார். அதனால்தான் வேலையில்லா திண்டாட்டமும், தொழிலாளர்களின் வேலை பறிப்பும், ஏழ்மையும், உயர் கல்வி கட்டண உயர்வும், உணவுப் பொருட்களின் விலையேற்றமும் நிகழ்ந்தன.
ஹோஸ்னி முபாரக் போய் எல்பரதேய் அல்லது வேறு யார் அதிபரானாலும் இதேநிலைதான் தொடரும். பஞ்சமும் பசியும் ஒழிய வேண்டுமானால் ஆட்சி மாற்றம் தீர்வாகாது. நிலவும் அரசமைப்பு மாற வேண்டும். சமூக மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு புரட்சிகர கம்யூனிச கட்சியின் கீழ் உழைக்கும் மக்கள் ஒன்று திரள வேண்டும்.
திரள்வார்கள். பல ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதானே மக்கள் திரளின் வலிமையை, இராணுவத்தை எதிர்க்கும் பலத்தை, வர்க்க உணர்வின் எழுச்சியை, ஒவ்வொரு எகிப்தியனும் உணர்ந்திருக்கிறான்? இந்த உணர்வு நிச்சயம் அரசமைப்பு மாற்றத்துக்கு வருங்காலத்தில் வழிவகுக்கும். இன்று கருநிலையில் இருக்கும் புரட்சி நாளை செயல் வடிவம் பெறும்.
சூயஸ் கால்வாயை நாட்டுடைமையாக்கி பிரான்ஸ், இங்கிலாந்து அரசின் ஏகபோகத்தை ஒழித்த நாசர் ஆண்ட மண்ணல்லவா எகிப்து? ஸ்டாலினை நேசித்த நாசர் பிறந்த பூமி, இன்று ஒவ்வொருவரையும் புரட்சியாளனாக உருவாக்கியிருக்கிறது.
நேற்று துனிசியா. இன்று எகிப்து. நாளை? அல்ஜீரியா, யேமன், ஜோர்டான் என அடுத்தடுத்து பல நாடுகள், நாட்டு மக்கள், எழுச்சிக்காக – புரட்சிக்காக காத்திருக்கிறார்கள். துனிசிய நடைமுறை எகிப்தின் வர்க்க அணி சேர்க்கைக்கு வழிவகுத்தது. எகிப்தின் நடைமுறை நாளை பிற நாடுகளில் நடைபெறப் போகும் மக்கள் எழுச்சியில் எதிரொலிக்கப் போகிறது.
முதல் உலகப் போருக்குப் பின் ஏகாதிபத்தியங்கள், ஒன்றுபட்ட அரபு நாடுகளை துண்டாடி, பெயரளவுக்கு சுதந்திரம் கொடுத்து தங்களுக்குள் பங்கீடு செய்து கொண்டன. அதற்கு தோதாக சர்வாதிகாரிகளையும், மன்னர்களையும் ஆட்சியில் அமர்த்தி பாதுகாத்தன. அதன்மூலம் தங்களுக்கான சுரண்டல் காலனியாக மாற்றின. மறுகாலனியாதிக்கத்தை அறிமுகப்படுத்தி நாட்டின் வளத்தை உறிஞ்சின. ஏகாதிபத்தியங்கள் செய்த அந்தப் பங்கீட்டை – மறுகாலனியாதிக்கத்தை – இப்போது மக்கள் ஒன்றுதிரண்டு புரட்சிக்கான கருநிலையில் மறுவார்ப்பு செய்து வருகிறார்கள்.
‘நியூயார்க் டைம்ஸ்’ சுட்டிக் காட்டியுள்ளபடி, அரபு நாடுகள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தலைமைக்காக மீண்டும் எகிப்தையே இன்று எதிர்நோக்கியிருக்கின்றன.
மக்கள் திரளின் மீது நம்பிக்கைக் கொண்டு சோர்ந்து போகாமல் தீரமுடன் களத்தில் நிற்கும் ஒவ்வொரு எகிப்தியனுக்கும் புரட்சிகர நல்வாழ்த்துகள்.
_______________________________________________
– அறிவுச்செல்வன்
__________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்:
- எகிப்தில் சோஷலிசத்தை தடுப்பதற்கு இஸ்லாமே துணை! – கலையரசன்
- எகிப்து: மத அடிப்படைவாதம் சோறு போடுமா? – கலையரசன்
- எகிப்தில் மக்கள் எழுச்சி! துனிசிய புரட்சியின் எதிரொலி!! – கலையரசன்
- எகிப்தின் எதிர்காலம் என்ன? – கலையரசன்
- துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்
- துனிசியா: சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி!
- Notes on the Tunisian Revolution- Sanhati
- மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!
- அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!
- ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !!
- துபாய் : உல்லாசபுரி சுடுகாடானது!
- மாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’!
- அமெரிக்க மான்சாண்டோவுக்கு எதிராக ஆர்த்தெழுந்த ஹெய்தி மக்கள்
எகிப்து : அரபுலகின் அடுத்த வரவு எகிப்திய மக்களின் எழுச்சி !! | வினவு!…
ஒரே வாக்கியத்தில் குறிப்பிட வேண்டுமென்றால், ‘மக்கள் புரட்சியில் எகிப்து பற்றி எரிகிறது’ என்றுதான் சொல்ல வேண்டும்….
அவர்கள் எல்லாம் நாகரிகத்தில் முனேறிய மக்கள் , நம் தமிழர்களை போன்றா ? எத்தனை தமிழர்கள் செத்தாலும் (இலங்கையிலும் தமிழக கடலிலும் )
ஒரு சிறு பாதிப்பை கூட ஏற்படுத்தாது, உனெர்வே இன்றி இருக்க , அல்லது வெறும் சோற்றுக்கும் , சாராய பாட்டிலுக்கும் சோரம் போய், ஜன நாயகத்தை
கேவலம் செய்வதற்கு (தேர்தல் சமயத்தில் ) . எனதான் கர்நாட கவும் கேரளாவும் தண்ணீர் விஷயத்தில் ஏமாற்றினாலும் , நம் ஆட்களை உதைத்தாலும் ,
பதிலுக்கு இங்குள்ள மணல் முதல் கொண்டு அணைத்து வளங்களையும் வாரி வாரி அவர்களுக்கு கொடுபதற்கு ?
[…] நன்றி : வினவு […]
மகத்தான மக்கட் புரட்சியை அடுத்து எகிப்தில் மறுபடியும் முறையான மக்கள் ஜனநாயகம் தோன்ற வாழ்த்துவோம். உயிர் கொடுத்து அடைந்த இந்த வெற்றிக்கனி கம்யுனிச சேற்றிலே கரைந்துவிடாமல் இருக்க வேண்டும்.
நல்ல வேளை ஊடால பூந்து கொழப்பி விட கம்யுனிச நாடுகள் ஏதும் உலகில் இல்லை…எல்லாம் சேது ஒழிஞ்சு இருவது வருஷமாச்சு 🙂
அங்கங்க மிஞ்சி இருக்குற பெட்ரூம் காம்ரேட்கள் தான் கீபோர்ட்ல ரொம்ப தட்டி தட்டி சதம் போடுரானுங்க. போங்கடே, போய் பொழப்ப பாருங்க, கொஞ்சம் காசு பாருங்க
நாம் இங்குள்ள எகிப்து, துனிசியா , இலங்கை தூதரங்களை முற்றுகையிட வேண்டும். இதன் மூலம் தான் நாம் கலகக்காரர்களின் தோழர்கள் என்பதை பறை சாற்ற முடியும்.
//‘இஸ்லாம் சகோதரத்துவ கட்சி’ //
இஸ்ரேலுக்குச் செல்லும எரிவாயு குழாய் உடைக்கப்பட்டுவிட்டது இஸ்ரேலுக்கு வயிற்றைக் கலக்கச் செய்துள்ளது. சீனாவில் எகிப்து என்று இணையத்தில் தேடுவதையே தடுத்து வைத்துள்ளனர், அந்தளவுக்கு பயம் மக்களைக் கண்டு.
இஸ்லாம் சகோதரத்துவ கட்சி இந்த போராட்டங்களில் முக்கிய சக்தியாக பங்கெடுத்திருந்தாலும் இந்த போராட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட்டதாகையால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எதையும் மக்களின் விருப்பத்திற்குட்பட்டே செய்வோம் என்று மிக எச்சரிக்கையுடன் சொல்கிறது (ஷுரியத் சட்டம் கொண்டு வருவீர்களா என்ற கேள்விக்கு அவர்களின் பதில்).
புரட்சி பற்றி கேலி பேசித் திரிந்த அற்பர்களையும், கிலி பிடித்து ஆட்டும் அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் அரேபிய அடிவருடிகளையும் நினைத்துப் பார்க்கிறேன் (ஆர்எஸ்எஸ் பினாமி பா.ரா. போன்றோர்).
மத்திய ஆசியாவில் மக்களின் கோபங்களை இஸ்லாம் பயங்கரவாதம் மட்டுமே நிறுவனப்படுத்தும் என்று வாய் பிளந்து கனாக் கண்டு கொண்டிருந்த மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்கு ஆசான வாயில் சொருகிய ஆப்புகளில் ஒன்றுதான் எகிப்து.
//சீனாவில் எகிப்து என்று இணையத்தில் தேடுவதையே தடுத்து வைத்துள்ளனர்//
ஏன்?
மக்களை கண்டு பயமா?
புரட்சியை கண்டு புரட்சியே பயப்படுகிறதா?
இது மக்கள் புரட்சி தான். ஆனால் கம்(னாட்டி)யூனிஸ்ட்களால் அல்ல.
எந்த விதத்திலும் தங்களுக்கு தொடர்பில்லாத போது எப்படி இவர்களால் சந்தோசப்பட்டுகொள்ள முடிகிறது.
வெட்கக்கேடு .
/*அவர்கள் எல்லாம் நாகரிகத்தில் முனேறிய மக்கள் , நம் தமிழர்களை போன்றா ? எத்தனை தமிழர்கள் செத்தாலும் (இலங்கையிலும் தமிழக கடலிலும் )
ஒரு சிறு பாதிப்பை கூட ஏற்படுத்தாது, உனெர்வே இன்றி இருக்க , அல்லது வெறும் சோற்றுக்கும் , சாராய பாட்டிலுக்கும் சோரம் போய், ஜன நாயகத்தை
கேவலம் செய்வதற்கு (தேர்தல் சமயத்தில் ) . எனதான் கர்நாட கவும் கேரளாவும் தண்ணீர் விஷயத்தில் ஏமாற்றினாலும் , நம் ஆட்களை உதைத்தாலும் ,
பதிலுக்கு இங்குள்ள மணல் முதல் கொண்டு அணைத்து வளங்களையும் வாரி வாரி அவர்களுக்கு கொடுபதற்க/*
நீங்கள் சொல்வது சரிதான் இங்கே தமிழீழ ஆதரவாளர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் பா ஜ க வும் ஜெயலலிதாவும் அல்லவா அவர்களை காப்பாற்றுவார்கள் என்று நம்பினார்கள் . உலகிலே வேறு எங்கும் காணமுடியாத பேடித்தனம் இது . இதே தவறைத்தான் இயக்குநனர் சீமானும் செய்கிறார் . கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் அவர் என்ன வேறுபாட்டைதான் கண்டாரோ .
இதில் இன்னொரு விஷயம் இங்குள்ள தமிழ் ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களின் இனவெறி . விடுதலைப்புலிகள் அப்பாவி முஸ்லிம் விவசாயிகளை கொன்றோழிக்கும்போதும் அவர்களை அவர்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றும்போதும் அவர்களின் ஆதரவாளர்கள் மௌனன் காத்தனர் . எப்பொழுது மக்கள் அவர்கள் யாராக இருந்தாலும் சரி , முஸ்லிம்கள் ,கிருஸ்தவர்கள் , தமிழர்கள் ,தாழ்த்தப்பட்டவர்கள் , எவராக இருந்தாலும் சரி ஒடுக்கப்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்ற ரீதியிலேய பார்க்கப்பட வேண்டும் , ஆதரவும் அளிக்கப்பட வேண்டும் .
நண்பரே , வுங்களின் கோபமும் எனது கோபமும் ஒன்றே , வார்த்தை கள் தான் வேறு , நான் ஒன்றும் ஜெயலிதவை ஆதரயுங்கள் என்றோ
பிஜேபி யை ஆதரயுங்கள் என்றோ சொலவில்லை . ஏன் நமக்கு மட்டும் இந்த கையால் ஆகாத தனம் என்று தான் கேட்கிறேன்.
ஜெயா வை சீமான் ஆதரிக்கும் பட்சத்தில் அவரயும் புறகணிப்போம் . இவளவு பெரிய தமிழ் நாட்டில் ஆண்களே இல்லையா என்ன ?
அடுத்து 1 ), தமிழர்கள் கொல்லும் பொது முஸ்லிம் கல் அமைதி காத்தனர், முஸ்லிம்களை கொல்லும் பொது தமிழர்கள் அமைதி காத்தனர்.
இது எவளவு நாளைக்கு? (ஆனால் இஸ்ரேல் இல் முஸ்லிம்கள் கொலைபடும் போதெலாம் தமிழர்கள் எதிர்ப்பு தேர்விதர்கள் தெரயுமா?)
//இதில் இன்னொரு விஷயம் இங்குள்ள தமிழ் ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களின் இனவெறி . விடுதலைப்புலிகள் அப்பாவி முஸ்லிம் விவசாயிகளை கொன்றோழிக்கும்போதும் அவர்களை அவர்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றும்போதும் அவர்களின் ஆதரவாளர்கள் மௌனன் காத்தனர் //
2 ) ஸ்ரீ சபாரத்தினம் உட்பட அனேக தமிழ் தலைவர்கள் கொளப்பட்ட பொது அதை புலிகள் செய்தார்கள் என்று நம்பினோம் , இவர்கள் தரும் செய்தியை வைத்து
அதற்கு பின்னே யாரஎல்லாம் இருந்தது என்று நாம் யோசிக்கவில்லை. புலிகள் தங்கள் மீது சுமத்திய குற்ற சாட்டுக்கு என்றுமே பதில் அளித்தது இல்லை .
அவர்கள் சாதனை யை வெளி வுலகதுகு தெர்விகதது போல , ( புரியவில்லை என்றால் BRGD பால்ராஜ் இன் operation களை பற்றி விசாரித்து தெரிந்து கொளவும் )
கடைசியாக தமிழர்கள் என்றுமே யாருக்கும் எதிரியாக இருந்தது இல்லை . ஆனால் தமிழனுக்கு எல்லார் உமே கெடுதல் செய்து இருகின்றனர் .
நான் வுங்கலையோ உங்கள் சமுதயத்தியோ சொல்ல வில்லை . இனி மேலும் பேசி கொண்டு இராமல் . நம் ரத்தத்தை உறிஞ்கும் இந்த அரசியல் பேய்களிடம் இருந்து நம்மை பிரிதாலும் நாய்களிடம் இருந்தும் விடு பட வழி தேடுவோம் .
//விடுதலைப்புலிகள் அப்பாவி முஸ்லிம் விவசாயிகளை கொன்றோழிக்கும்போதும் அவர்களை அவர்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றும்போதும் அவர்களின் ஆதரவாளர்கள் மௌனன் காத்தனர் //
திரு அஹமது இக்பால் புலிகள் ஏன் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்? அதற்கான காரணத்தை என்றாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்கு கள்ள மௌனம் தான் எல்லா இஸ்லாமிய அறிவாளிகளிடம் இருந்தும், இஸ்லாமிய ஆதரவு அறிவாளிகளிடம் இருந்தும் வரும். புலிகள் கொடுத்தது பதிலடி தானே தவிர முதலடி அல்ல. கிழக்கு மாகணத்தில் முஸ்லிம் காடையர்கள் இரண்டாயிரம் தமிழர்களை படுகொலை செய்தார்களே அதற்கு என்ன பதில் ? அதற்கு பதிலடி தான். கட்டு சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்துக் கொண்டு பின்னர் அது குத்துதே குடையுதே என்று எத்தனை நாளைக்கு கத்திக் கொண்டு இருக்க முடியும் ? முதலில் இனம், மதம் இரண்டையும் போட்டு குழப்புவதை நிறுத்துங்கள்.
எழில்,
ஈழ முசுலிம்கள் மீதான இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது,ஆதாரமற்றது, பொய்யானது. சொல்லியிருக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன.ஏற்கனவே வினவில் நடந்த விவாதத்தில் புலிகள்-முசுலிம்கள் முரண் குறித்து
https://www.vinavu.com/2010/11/17/ban-on-ltte/#comment-33373
எழிலின் இந்த பின்னூட்டம் குறித்து ஈழ சகோதரர்கள் கிருத்திகன்,ரதி போன்றோர் கருத்து சொல்ல வேண்டும்.தார்மீக அடிப்படையில் அவர்களுக்கு அந்த பொறுப்பு உண்டு என கருதுகிறேன்.
பதிவுக்கு தொடர்பற்ற விவாதத்தை தொடர்வதற்கு வினவு என்னை மன்னிக்க வேண்டும்.ஆரம்பித்தது நானல்ல.
இந்த விடயத்தில் நான் கருத்தொன்றும் சொல்வதற்கில்லை திப்பு. இது தொடர்பான தேடலில் ஒவ்வொருவர் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள். எனக்கு நெருக்கமான இருவர் இந்தச் சம்பவம் பற்றிச் சொன்ன கருத்துகளைச் சொல்கிறேன். என்னுடைய நிலமை புரியலாம். ஒருவர் சொன்னார் இது புலிகளின் அட்டூழியம் என்று. இன்னொருவர் சொன்னார் புலிகள் அதைச் செய்திருக்காவிட்டால் முள்ளிவாய்க்கால் 1990களிலேயே நடந்திருக்கும் என்று. நான் பிறந்து ஐந்து வருடங்களில் நடந்த அந்தச் சம்பவத்தைப் பற்றிய என்னுடைய புரிதல் ‘சிலரின் தவறுக்காக ஒரு சமூகம் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டது’ என்பதே. அந்த சிலர் யார், எவர் என்பது பற்றி என்னிடம் உண்மையிலேயே சரியான தகவல்கள் இல்லை. வெட்கத்துக்குரிய விடயமாக இருந்தபோதும் இதைச் சொல்வதில் எனக்குத் தயக்கங்களில்லை. விபரம் தெரியாத வயதில் நடந்த இந்தச் சம்பவத்தின் உண்மையான பக்கங்களை எனக்கு மூத்ததலைமுறை ஏனோ என்னிடமிருந்து மறைத்தே வருகிறது.
இலங்கை முஸ்லிம்கள் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் போல, தாமும் தமிழர்களே எனக் கூறவில்லை. அரேபியாவில் இருந்து நேராக வந்துக் குடியேறிவர்கள் எனக் கூறிக் கொண்டார்கள். இதனால் தமிழர்கள் விடுதலைப் போரில் எப்பக்கம் சாய்வது எனத் தெரியாமல் குழம்பியதன் விளைவே வி.பு. அவர்களை வெளியேற்றியக் கதை. அது மட்டுமின்றி, சாதிய பிடியில் இருந்த தமிழ் தலித்த்கள் சிலர் இலங்கைக்கு கிருத்துவம் பரவ முன்னரே இஸ்லாமைத் தழுவிக்கொண்டனர். உயர்சாதி தமிழர்கள் இந்துமத்தில் இருந்தனர். இவர்களுக்கு உள்ளான பிளவே இதுவாகும் ! தமி்ழ்நாட்டு காரனை ஒரு கன்னடன் அடித்து விட்டால், தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தான் தமிழ்நாட்டுக் காரனுக்குப் போய் உதவுவான், அந்த மனோபாவம் இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகளால், குறைந்துவிட்டது. அப்படி மருந்துப் போட்டாலும், அதை ஏற்கும் மனோபாவம் யாழ்ப்பாணத்தமிழரிடம் இல்லை. இன்னும் முஸ்லிம் என்றாலும் இந்தியன் என்றாலும் மலையாளிகளைப் போல யாழ்ப்பாணத் தமிழர் நடந்துக் கொள்வார்கள். தமிழர்களைப் பிரித்துவைத்து சிங்களவன் ஆண்டான், ஆள்வான் !!!
அது சரி ahamed iqbal! நீங்கள் கூட வி.பு. முஸ்லீம்களை வெளியேற்றினார்கள் என்பதற்காக தான் இங்கே வந்திருக்கிறீர்கள். தமிழ்ர்கள் அடி வாங்கியபோது அல்ல…
//ஆனால் இஸ்ரேல் இல் முஸ்லிம்கள் கொலைபடும் போதெலாம் தமிழர்கள் எதிர்ப்பு தேர்விதர்கள் தெரயுமா?// கரெக்டு தான். ஆனால், அதை இங்கு சொல்ல வேண்டிய நிலையை நினைத்தால் சிரிப்பாக இருக்கு.
எழில்,
இதே வாதத்தைதான், அனைத்து வகை மதவெறியர்களும், தங்கள் கொலைகளை நியாயப்படுத்த சொல்கிறார்கள். ‘எங்க’ ஆட்க்களை அவனுக கொன்னானுக, அதனால திருப்பி பழி வாங்க ‘அவங்க’ ஆளுங்களை கொல்றோம். கொல்லப்படுபவர்கள் பெரும்பாலும் ஒரு பாவமும் செய்யாத அப்பாவிகள். ஏழைகள். கொலை செய்பவர்கள் பெரும்பாலும் பதிலுக்கு கொல்லப்படுவதில்லை. வேறு பல அப்பாவிகள் தான் பதிலுக்கு கொல்லப்படுவர். இந்தியாவில் நடந்த மத கலவரங்களை உங்க லாஜிக்குடன் ஒப்பிட்டு பாருங்கள். குஜராத் படுகொலைகள், கோவை கொலைகள் மற்றும் குண்டு வெடிப்புகள்.
திப்புவின் பின்னூட்டத்திற்க்கு பதில் சொல்லுங்க. பல பொய் பிரச்சாரங்கள் ஈழம் பற்றி.
புலிகளின் ஃபாசிசத்தை நியாயப்படுத முடியாது / கூடாது. இந்த ஃபாசித்தால் தான் அவர்கள் முற்றாக அழிந்தார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முயலுங்கள்.
இந்த அப்பாவிகள் என்பவர்கள் மோதிக் கொள்ளும் இரு தரப்பையும் விட ஆபத்தானவர்கள்.இதே அப்பாவிகள் தான் வியட்நாமிய மக்கள் சாவதை கோக் குடித்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பின்னர் அமெரிக்க படைகள் அடி வாங்கி தங்களது வீடுகளில் இழவு விழுகும் வரை அப்படியே இருந்தார்கள் பின்னர் தான் போர் நிறுத்தம் என்று இறங்கினார்கள்.இதே அப்பாவிகள் தான் குஜராத் கோத்ரா வில் ரயில் தாக்கப் படும் என்று தெரிந்திருந்தும் எந்த எதிர் வினையும் ஆற்றவில்லை பின்னர் அதன் விளைவாய் குருதி ஆறு ஓடிய போதும் அடுத்த தரப்பு அப்பாவிகள் எதிர் தரப்பை சேர்ந்தவர்கள் தானே என்று வேடிக்கை பார்த்தார்கள். உங்களுக்கு எப்படியோ எனக்கு இந்த அப்பாவிகளோடு நேரிடையான அனுபவமே இருக்கிறது அதாவது 1998 இல் கோவையில் குண்டு வெடிக்கும் என்று எனது வகுப்பில் இருந்த சில “அப்பாவி”களுக்கு தெரிந்து இருந்தது ஆனால் அவர்கள் எங்குமே சொல்லவில்லை .எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
அவர்களுக்கு அவ்வாறு “அறிவுறுத்தல்” தரப் பட்டிருந்தது. இதை பின்னர் அந்த குறிப்பிட்ட நாளில் சிலர் விடுமுறையில் இருந்ததன் மூலம் நாங்கள் உணர்ந்தோம். தமிழர்கள் கொல்லப்பட்டபோது சிங்கள அப்பாவிகளும் இவ்வாறு தான் இருந்தார்கள். அதாவது இவர்கள் தனக்கு என்று வரும் வரை அமைதியாக இருந்துவிட்டு பின்னர் கூப்பாடு போடுபவர்கள்.இவர்களின் அமைதிதான் இந்த பிரச்சினைகளை மேலும் கொழுந்து விட்டு எரியக் காரணம் .ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் நல்லது கேட்டது என்று எதிர் வினையாற்றினால் எந்த சிக்கலும் வராது.இந்த அப்பாவிகள் எந்த போராட்டத்தின் பயனை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நீங்கள், வினவு போன்ற அப்பாவிகள் தங்களது கொள்கையில் உறுதியாக இருந்து எதிர்வினை ஆற்றுகிறீர்கள் நீங்கள் ஒருவருக்கொருவர் ஆபத்தானவர்கள் இல்லை என்று நம்புகிறேன் 🙂
மசாலா: நான் முஸ்லிம் காடையர்கள் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன் எல்லா முஸ்லிம்களும் என்று சொல்ல வில்லை. நீங்கள் கூட எல்லா தப்பையும் புலிகள் மேல் சுமத்துகிறீர்கள். மேற் சொன்ன அஹ்மத் இக்பால் கூட அவ்வாறு தான்.நிச்சயம் முஸ்லிம்களிடம் தவறு இருந்திருக்கிறது. ஏதோ தவறு இல்லாமல் எல்லோரையும் வெளியேற்றும் அளவுக்கு போயிருக்காது. மேலே கிருத்திகன் கூட முஸ்லிம்களை “ஒரு சமூகம்” என்று தான் கூறுகிறார்.அவர்கள் தங்களை தமிழர்கள் என்று ஒப்புக்கொள்ளவில்லை.முள்ளி வாய்க்கால் அவலம் நடை பெற்றுக் கொண்டிருந்த பொது இதே முஸ்லிம்கள் என்ன செய்தார்கள்.நன்றாக அடி வாங்கட்டும் என்று இருந்தார்கள் பின்னர் அது தங்களை நோக்கி திரும்பும் என்று உணராமல்.
இனம் என்பதும் மதம் என்பதும் ஒன்றா? அப்படி என்றால் ஒரே மதத்தை சேர்ந்த பாகிஸ்தானும் பங்களாதேஷ் உம் ஏன் பிரிந்தது ? ஏனென்றால் வங்காள முஸ்லிம்களுக்கு தெளிவு இருந்தது. ஆனால் தமிழ் முஸ்லிம்களிடம் இல்லை. இரண்டாயிரம் என்பது சிறிய கூட இருக்கலாம்.ஒரு நேரடி ஆதாரம் இல்லாமல் அது ரொம்ப அதிகம் என்று நீங்களும் உறுதிப்படுத்தி விடமுடியாது.ஒற்றுமையின்மை என்பது தமிழினத்தின் சாபம்.உங்களது பின்னூட்டங்களின் படி பார்த்தால் ஒரு முற்போக்கு முகமூடி அணிந்த இஸ்லாமியவாதி போல தெரிகிறது.
லிபெர்டரியன் .நீங்கள் ஒரு முதலாளித்துவ பொருளாதார மேதையாக இருக்கலாம் ஆனால் அரசியல் சமூகம் போன்ற விடயங்களில் நீங்கள் அவ்வாறு அல்ல என்று தோன்றுகிறது.புலிகள் பாசிசத்தால் அழிந்தார்கள் என்கிறீர்கள். நிச்சயம் இல்லை. புலிகள் பாசிசமாக இருந்திருந்தால் எல்லா சிங்களவர்களும் எதிரி என்று நீங்கள் சொல்லுகிற அப்பாவி சிங்களவர்கள் மீதும் தாக்குதல் தொடுத்திருப்பார்கள் ஆனால் அப்படி நடக்கவில்லை.
எல்லா புலி எதிர்ப்பு “அறிவு ஜீவி” களிடமும் இருந்து உதிர்க்கும் ஒரே தத்துவ முத்து பாசிசம்.புலிகளின் சித்தாந்தத்தை பலர் பல வேறாக உளறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை புலிகளிடம் இருந்தது ஒரு “புதிய ஜனநாயகம்” (ம. க. இ. க ஏடு அல்ல ) அதவாது உங்கள் பாணியில் Neo Democracy. இதை இவ்வாறு வரையறுக்கலாம் கட்டுப் படுத்தப் பட்ட மக்களாட்சி. அதாவது நம்ம ஊரில் உள்ளது போல அளவுக்கதிகமான சுதந்திரம் அல்ல.விதிமுறைகளை கடைபிடிப்பதை உறுதியாக கண்காணிப்பது. தன கட்டுப்பாடு ஒழுக்கம் இல்லாத ஒரு சமூகத்தை சில உறுதியான நடவடிக்கைகள் மூலம் தான் வழிப் படுத்த முடியும்.
எடுத்துக் கட்டாக நீங்கள் நமது சாலைகளை எடுத்துக் கொள்ளுங்கள் நடுவில் வெறும் ஒரே கோடு மட்டும் இருந்தால் யாரேனும் அதை மதித்து செல்கிறார்களா ? ஒரு சிறிய அளவிலான சுவர் இருந்தால் கூட அதன் மேல் ஏற்றி செல்கிறார்கள் இதை தடுக்க மூன்று நான்கு அடிக்கு காங்க்ரீட் சுவர் கட்ட வேண்டியது உள்ளது.தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற உறுதியான நிலை இருந்தால் இது நடக்குமா ? புலிகளின் ஆட்சியில் தண்டனை கிடைக்கும் என்ற நிலை இருந்திருக்கிறது அதைத்தான் நீங்கள் பாசிசம் என்கிறீர்கள். தப்பு செய்தால் அதை எப்படியாவது தப்பித்துக் கொள்ளாலாம் என்பது தானே நமது அமைப்பு? இதை நீங்களே பலமுறை கூறி உள்ளீர்கள்.
இங்கு கூட எல்லாவற்றுக்கும் சட்டம் இருக்கிறது ஆனால் யாரேனும் அதை மதிக்கிறார்களா ? பின்னர் அதை எவ்வாறு நடை முறைபடுத்துவது ? அதற்குதான் புலிகளின் அணுகுமுறை போன்ற ஒரு நடவடிக்கை நிச்சயம் தேவை. நீங்கள் சொல்வது போல புலிகள் பாசிசம் என்றால் ஒரு பெரும் மக்கள் திரள் நிச்சயம் அதை ஆதரித்திருக்காது. அவர்களின் ஆளுகையின் கீழ் மக்கள் தமிழ் நாட்டு மக்களை விடநன்றாகத்தான் இருந்தார்கள் அங்கே பயணம் சென்ற சிங்கள மனித உரிமை செயல்ப்பட்டாளர் பெண்மணியே சொல்லி இருந்தார். பிரபாகரனை யாழ் காடுகளின் போல்பாட் என்று சொன்ன வாஸந்தியே பின் அங்கு சென்று உண்மையை உணர்ந்து தெளிந்தார். ஏன் சிங்கள அரசாங்க ஆளுகையை விட அங்கே பொருட்களின் விலை குறைவாக இருந்தாது.மிக சிறப்பான வரி வசூல் முறை இருந்தது என்று சிங்கள அமைச்சனே ஒப்புக்கொண்டுள்ளான். பிரபாகரன் எளிதில் அணுகும் அளவில் தான் இருந்திருக்கிறார்.இதை பல இடங்களில் பலர் தெளிவு படுத்தியுள்ளார்கள்.ஆனால் நீங்கள் போற்றும் ஜனநாயகத்தின் நிலை என்ன ? கூட்டணி கட்சிகளுக்கே அனுமதி கிடைக்காத ஜெயாக்களையும், தொண்டனை சந்திக்காமல் சினிமாக்காரர்களை சந்தித்துக் கொண்டிருக்கும் கருணாக்களையும் தான் விளைபொருளாக தந்திருக்கிறது.
நீங்கள் கூட புலிகளை பாசிஸ்டுகள் என்று gross generalize (பொதுமைப்படுத்தல் )செய்கிறீர்கள்.எனக்கு என்னமோ நீங்கள் உலகத்தையே முதலாளித்துவம் X கம்யுனிசம் என்று பார்க்கிறீர்கள் என்று தோன்றுகிறது.
your very correct all those Tamils pretending that they are fighting for their rights is wrong they are fighting because they are racist there is no connection to communism or the good will of the people in this matter there is not difference in daily life problems faced by Sinhalese and Tamils its just the, Tamils want a country in the world and they choose sri Lanka…. these people have no idea what they are fighting or asking for ….. Tamils are too idiotic … although they say they are the most intelligent race…. you can’t just fight for a language because..,preventing it won’t lead people to the road… its not a basic need… and no one will die for it until others forces them by force or by installing crocked ideas… if the Tamils actually had problem to such extend they would have at least burnt a flag in sri lanka….after prabakaran… Tamils tigers are not communists… nor.. capitalist they are dictators….. all concepts in worlds are fake no communist country’s leader is communist .. only in riots the communistic concepts last. . . cos having a leader is the nature of man kind and that is not a communistic idea… so its never possible…. you may change the label but the countries situations won’t till you get the right person… or people… anything can be done correct if the right people are in the right place…. che is right person in right place… fidal wrong person in right place
[…] This post was mentioned on Twitter by வினவு and sandanamullai, Kirubakaran S. Kirubakaran S said: அரபுலகின் அடுத்த வரவு எகிப்திய மக்களின் எழுச்சி!! http://feedly.com/k/igjwq1 […]
எகிப்து புரட்சி ஏதோ இஸ்லாம் மதத்துக்கு சொந்தமான புரட்சி என்று பல பிளாக்குகளின் பீலா விட்டுவந்தவர்களுக்கு ஒரு நல்ல தெளிவான விளக்கத்தை தருகிறது இந்த கட்டுரை.அப்போ வரும் காலங்களில் அமெரிக்கா காங்கிரஸை கைவிட்டு பி.ஜே.பியை தேர்ந்தெடுக்கும் போல,அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டது போலவே தெரிகிறது.
கூர்ந்து கவனித்தேன் உள்ளதை உள்ளபடியே சொல்லும் வினவின் வருகை ஆத்மா திருப்தி. ஆனாலும் முடிவில் கொஞ்சம் சொதப்பல். எகிப்தின் ஒரு நாசர் வேண்டுமானால் கம்யூனிசத்தை தெரிவுசெய்திருக்கலாம். ஆனால் பல நாசர்கள் அன்று தொட்டு இன்று வரை இஸ்லாத்தை தெரிவு செய்தவர்கள். காரணம் இஸ்லாம் வாழ்வியலின் வசந்தம். அது ஒன்று மட்டும்தான் மொத்த அரபுலகத்தை ஆட்சி செய்ய ஏற்ற கொள்கை. பின் நாட்களில் மொத்த உலகமும் அதை விரும்பி ஏற்றுக்கொள்ளும். ஆட்சி மாற்றமும் ஆள் மாற்றமும் மட்டும் எகிப்தை வழிநடத்தப்போவதில்லை. கொள்கை மாற்றம் ஒன்றால் மட்டுமே எகிப்து மாற்றம் பெரும். எகிப்தின் வரலாறு படித்தால் அது இஸ்லாத்தோடு கொண்டுவரும் தொடர்பு விளங்கும்.
/காரணம் இஸ்லாம் வாழ்வியலின் வசந்தம். அது ஒன்று மட்டும்தான் மொத்த அரபுலகத்தை ஆட்சி செய்ய ஏற்ற கொள்கை. பின் நாட்களில் மொத்த உலகமும் அதை விரும்பி ஏற்றுக்கொள்ளும்/
இப்படி எல்லாம் சொன்னால் வினவு கும்பல் மவுனம் காக்கும். இதையே சற்று மாற்றிச் சொன்னால் எப்படி குதிப்பார்கள் என்று யோசிக்கிறேன்.
/காரணம் இந்து மதம் வாழ்வியலின் வசந்தம். அது ஒன்று மட்டும்தான் மொத்த இந்தியாவில் ஆட்சி செய்ய ஏற்ற கொள்கை. பின் நாட்களில் மொத்த உலகமும் அதை விரும்பி ஏற்றுக்கொள்ளும்/.
எகிப்தில் நடப்பதை கண்முன்னே நிறுத்துவதை போல அமைந்துள்ள இந்த கட்டுரை அருமை. உங்களுடன் சேர்ந்து எகிப்தியனை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்
அருமை வினவு, எகிப்தில் வேலை பார்க்கும் என் நண்பன் என்ன சொன்னானோ அதை அப்படியே எழுத்தில் காண்கிறேன்.. இது போன்ற மக்கள் போராட்டங்களை தமிழ் வாசிப்புக்கு உடனுக்குடன் வெளியிடுவது மிக அவசியம். வாழ்த்துகள்
இதுவரை எகிப்தில் நடந்துவந்த ஆட்சி மன்னராட்சியா? போலி ஜனநாயக ஆட்சியா?
தமிழ் கூறும் நல்லுலகிற்கு மிக விரைவாகவே செய்திகளை உடனுக்குடன் கொண்டுவரும் உங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது. உங்களுடைய கட்டுரையை முழுவதும் மிகவும் கவனமாகவே படித்தோம். நல்ல அலசல். என்றாலும் நீதங்கள் முழுவதுமாக கடைப்பிடிக்கப்படவில்லை. காரணம் உங்களால் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சமூகப்பார்வையில் சமூக இயக்கமாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்பதை உங்கள் வரிகள் மிகத்தெளிவாகவே எடுத்துக்காட்டுகிறது. நீங்கள் அவர்களை கருத்தில் கொள்ளாது விட்டிருந்தாலே போதுமானதாக இருக்கும்.
உங்களுடைய வரிகள் கம்யூனிசத்திற்கு வக்கலாத்து வாங்கியதை, நாசரை மேற்கோள் காட்டியதன் மூலம் காணமுடிந்தது, நீண்ட நெடுங்காலமாக இஸ்லாத்தை கொள்கையாக கொண்டுவரும் நாட்டில் நேற்று தலைகாட்டியவைகளே கம்யூனிசமும் அதற்குப்பின் முதலாளித்துவமும். அவைகள் நிலைக்கும் என்று நம்பிக்கை வைக்கும் அதன் சார்பாளர்கலைப்போலவே இஸ்லாமும் அவர்களின் நாளைய கொள்கையாக அரசியல் தீர்வாக உருப்பெறும் என்பதில் அதன் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களின் எதிர்பார்ப்பு.
ஒன்றை நன்றாகப்புரிந்து கொள்ளுங்கள் முஸ்லிம் சகோதரத்துவம் அடுத்து ஆட்சியில் அமர்ந்தால் முதல் தலைவலி அமெரிக்காவிற்கும் அடுத்து இஸ்ரேலுக்கும் என்றால் அது மிகையில்லை.
எகிப்தில் கம்யூனிச அமைப்புகள் உள்ளனவா?
///சூயஸ் கால்வாயை நாட்டுடைமையாக்கி பிரான்ஸ், இங்கிலாந்து அரசின் ஏகபோகத்தை ஒழித்த நாசர் ஆண்ட மண்ணல்லவா எகிப்து? ஸ்டாலினை நேசித்த நாசர் பிறந்த பூமி, இன்று ஒவ்வொருவரையும் புரட்சியாளனாக உருவாக்கியிருக்கிறது///
ஸ்டாலினை நேசித்த நாசரின் எகிப்திய பாத்திரத்தை யாரேனும் விளக்குங்களேன்?
ஆகா, அந்தப் பாத்திரத்தை எப்படி விளக்குவது – ப்ளீச்சிங் பவுடர் போட்டா, இல்லை புளியைத் தேய்த்து விளக்குவதா?
நாசர் கம்யுநிசத்தின் ஆதரவாளர் என்று எவன் சொன்னான்? அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் சவால் விட்ட எல்லோருமே இன்று கம்யுனிஸ்ட் தெய்வங்கள் ஆகி விட்டனரோ? உண்மையில் எகிப்துக்கும் கம்யுநிசத்துக்கும் அமெரிக்க எதிர்ப்பைத் தவிர வேறு தொடர்பே கிடையாது. நாசர் ஸ்டாலினை பெரிதும் மதித்தார் என்று எந்த ஆதாரமும் இல்லை.
அறுபது ஆண்டுகளாக எகிப்து உட்பட அனைத்து அரபு நாடுகளின் நிலையும் ஒன்றே – பரம்பரை அரசர்கள் அங்கே முதலாளித்துவ ஜனநாயகம் வளராமல் தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் – ஜனநாயக பற்று கொண்ட இளைய சமுதாயத்தை புனித இஸ்லாத்தின் பெயரைச் சொல்லியே திசை திருப்புகிறார்கள். ஜன நாயகம் வந்துவிட்டால் பரம்பரை மன்னர்களின் கதி அதோகதிதான். அமெரிக்க ஐரோப்பிய அரசுகளும் பெரும் நிறுவனங்களும் பரம்பரை அரசர்களுக்கு சலாம் போட்டே காரியத்தை சாதித்துக் கொள்கின்றன.
அரேபியா ஒரு காலத்தில் உலகுக்கே முன்னோடியாக கலையையும் இலக்கியத்தையும் வாழ்வியலையும் அறிவியலையும் வளர்த்தது. இன்று அதன் பின்தங்கிய நிலை முழுதும் பரம்பரை அரசர்களின் சர்வாதிகார ஆட்சியினால் விளைந்ததே. பயங்கரவாதத்தை ஊக்குவித்து இளைஞர்களின் ஆக்க சக்தியை மழுங்கடித்து இவர்கள் ஆடும் ஆட்டம் ஒரு நாள் கண்டிப்பாக முடியும்.
ஆனால் அந்த நாளில் அங்கு மேடையில் கடவுளை நம்பாத கம்யுநிசத்துக்கு ஒரு இடம் இருக்குமா ? சந்தேகமே !
Here we should analyze and learn How & Where these Egyptians got the Guts to fight on street?
We should compare Ours Tamils (When Eezham MULLIVAAIKKAL Mass Murders) and These Peoples Egyptians.
They lost their faith on Vote Bank politics & Courts.
But Our People still holding belief on Parliament(event it is decaying like Pig’s Dead Body).
Why & What ? Think of it Frends
”எகிப்தில் இன்று போராடுபவர்கள் தொழிலாளர்கள், கூலிகள், வேலையில்லா பட்டதாரிகள், கல்லூரி படிக்கும் மாணவ – மாணவிகள். மொத்தத்தில் அடித்தட்டு உழைக்கும் மக்கள்தான் எகிப்தில் 90% வாழ்கிறார்கள். இந்த வர்க்க உணர்வைத்தான் எகிப்து மக்களிடம் ஜனவரி 25ஆம் தேதி முதல் நடந்து வரும் மக்கள் எழுச்சி ஏற்படுத்தியிருக்கிறது”.
மக்கள் எழுச்சியை முறைப்படுத்தி சமூக மாற்றத்தை ஏற்படுத்த பாட்டாளி வர்க்க சித்தாந்தமும் பாட்டாளி வர்க்க கட்சியும் அவசியம். வரலாற்றின் படிப்பினைகளிலிருந்து எகிப்து மக்கள் இதைக் கைக் கொண்டால் இன்றைய எகிப்துச் சூழலில் பாட்டாளி வர்க்கப் புரட்சி சாத்தியமே.
எழில்
.
“…. புலிகள் ஏன் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்? …. புலிகள் கொடுத்தது பதிலடி தானே தவிர முதலடி அல்ல. கிழக்கு மாகணத்தில் முஸ்லிம் காடையர்கள் இரண்டாயிரம் தமிழர்களை படுகொலை செய்தார்களே அதற்கு என்ன பதில் ? அதற்கு பதிலடி தான். …. முதலில் இனம், மதம் இரண்டையும் போட்டு குழப்புவதை நிறுத்துங்கள்.”
என்ன ஆதாரங்களைக் கொண்டு இப் பொய்ப் பிரசாரத்தைத் திருப்பியும் எழுதுகிறீர்கள?
இவை சில, விடுதலைப் புலிகளே சொல்லத் தயங்கும் பொய்கள்.
.
“கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காடையர்கள் இரண்டாயிரம் தமிழர்களை படுகொலை செய்தார்களே”— எங்கே? எப்போது? முஸ்லிம்கள் சிலர் ஊர்க் காவற்படைகளில் இருந்தனர். உண்மை. ஆனாற் படுகொலைகள் என வரும்போது தமிழ்ச் சிறுவர்கள் முதல் பிற தமிழ்ப் பேசும் மக்களைப் படுகொலை செய்தோர் (இலங்கை அரசுக்கு அடுத்ததாகப்) புலிகளும் பிற இயக்கத்தினருமே.
சரணடைங்த 600 பொலிஸ்காரர்களைக் கொன்று குவித்த வீரமல்லவா புலிகளது!
.
இந்தியப் படைகளின் துணையுடனும் இன்றறியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியில் நடந்த பள்ளிவாசல் படுகொலை உட்பட்வற்றின் பட்டியல் நீளமானது.
.
புலிகள் முஸ்லிம்களை விரட்டியது முட்டாள்தனம் என 2001 அளவில் விளங்கிக் கொண்டபோது உறவுகளைச் சீர் செய்யக் காலம் கடந்துவிட்டது அதைப் புலிகள் என்றுமே விளக்கியதுமில்லை, நியாயப்படுத்த முயன்றதுமில்லை, காரணம் எதையும் சொன்னதுமில்லை.
.
.
தமிழகத்திற் போலன்றி, இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் மலையகத் தமிழரும் தம்மைத் தனித் தேசிய இனங்களாகவே கருதுகின்றனர். பொன்னம்பலம் ராமநாதன் 1915இல் செய்த துரோகத்தின் பின்பு தொட்டு முஸலிம்கள் இதைப் பற்றி மிகத் தெளிவாகவே உள்ளனர்.
கரம்மசாலா, இதில் எனக்கு நேரிடையான கள அனுபவம் இல்லை ஆனால் ஈழத்தமிழர்களின் சாட்சியங்களை முன்வைக்க விரும்புகிறேன்.என்ன சொன்னாலும் பாதிக்கப் பட்டவர்களிடம் இருந்து வரும் வார்த்தைகளில் இருந்து கொஞ்சமாவது உண்மை இருக்கும் என்றே நம்புகிறேன்.
இந்த சுட்டியையும் அதன் பின்னூட்டங்களையும் கொஞ்சம் படியுங்கள்.பின்னர் இது புலிகளே சொல்லத் தயங்கும் பொய்யா இல்லையா என்று முடிவு செய்யலாம்.
http://thesamnet.co.uk/?p=24032
புலிகள் முஸ்லிம்களை விரட்டியது முட்டாள்தனம் என 2001 அளவில் விளங்கிக் கொண்டபோது உறவுகளைச் சீர் செய்யக் காலம் கடந்துவிட்டது அதைப் புலிகள் என்றுமே விளக்கியதுமில்லை, நியாயப்படுத்த முயன்றதுமில்லை, காரணம் எதையும் சொன்னதுமில்லை.//
மிக எளிதாக ஊர்காவல் படையில் இருந்தார்கள் என்று கடந்து செல்கிறீர்கள் ஏன் இருந்தார்கள் அங்கே என்ன செய்தார்கள் ? ஊர்காவல் படையை வழி நடத்தியது யார் ? இதெற்கெல்லாம் தெளிவாக விளக்கம் தேவை. மேலும் புலிகள் ஒன்றும் சீர் செய்ய தேவை இருக்க வில்லை புலிகள் அப்பொழுது நன்கு பலத்துடன் தான் இருந்தனர்.ஆனால் அஸ்ரப் போன்றவர்கள் தான் ஓடி வந்து புலிகளுடன் ஒப்பந்தம் போட்டனர்.பகையைத் தொடங்கியது இஸ்லாமியர்கள் எனவே முடித்து வைக்க வேண்டியதும் அவர்களே.இன்னும் இருக்கிறது வருகிறேன்
எத்தனை பேர் இருந்தார்கள் எத்தனை பேரைத் தாக்கியிருப்பார்கள் என்று கூடத் தெரியாமல் ஆயிரக் கணக்கு சொல்லுகிறீர்களே!
தமிழர்-முஸ்லிம்கள் மோதல்கள் என்பன அதுவரை மட்டகளப்புப் பகுதியில் மட்ட்மே நடந்துள்ளன.
அதற்குப் பல காரணங்கள் உள்ளன. பழி முழுவதையும் ஒரு தரப்பின் மீதும் (போதாததற்கு எல்லா முஸ்லிம்கள் மீதும்) சுமத்துகிறீர்களே!
தமிழ் இளைஞர்களின் நடத்தை (கப்பம் வாங்கல், மிரட்டல், ஆட்கடத்தல் போன்றவை) பற்றி அறிவீர்கள் என நினைக்கிறேன். இவை முஸ்லிம்கள் தமிழ் மக்களுக்க்கு ஆதரவாக இருந்த போது நடந்தவை.
தயவு செய்து எண்ணிக்கைகளை ஊதிப் பெருப்பித்துத் தவறான எண்ணங்களை விதைக்காதீர்கள்.
வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியது எப்போ? ஊர்க் காவற் படை சம்ம்பவங்கள் நடப்ந்தது எப்போ?
சம்பந்தா சம்பந்தமற்ற விடயங்கட்கு முடிச்சுப் போடுகிறீர்கள்.
விடுதலைப் புலிகளின் இனத்த் துவேஷத்துக்கும் சிலர் கருதுவது போல பாசிசத் தன்மைக்கும் எளிமையான விளக்கங்கள் தேடுகிற பரிதாபமான முயற்சி உங்களுடையது.
ஒன்றை மறவாதீர்கள். முஸ்லிம்களால் எல்லாச் சூழ்நிலைகளிலும் கொல்லப் பட்ட தமிழரை விடப் பன்மடங்கு அதிகமான தமிழர் தமிழ் இயக்கங்களால் கொல்லப் பட்டுள்ளனர், தனியே ஒரு இயக்கமே கூட அவாறன தொகயில் கொன்று குவித்துள்ளது
இக்பால் செல்வன்
.
இலங்கை முஸ்லிம்கள் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் போல, தாமும் தமிழர்களே எனக் கூறவில்லை. அரேபியாவில் இருந்து நேராக வந்துக் குடியேறிவர்கள் எனக் கூறிக் கொண்டார்கள். இதனால் தமிழர்கள் விடுதலைப் போரில் எப்பக்கம் சாய்வது எனத் தெரியாமல் குழம்பியதன் விளைவே வி.பு. அவர்களை வெளியேற்றியக் கதை. … இத்தியாதி… இத்தியாதி.
.
தயவுசெய்து இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையை இப்படிக் கொச்சைப் படுத்தாதீர்கள்.
தமிழ்த் தேசியவாதம் முஸ்லிம்கள் பற்றி எப்போதாவது அக்கறை காட்டியததா?
தமிழ்த் தேசியவாதம் தொங்கிய நாளிலிருந்தே தமிழ் மேட்டுக்குடிகளின் தேசியவாதமாகவே இருந்து வந்தது. அது என்றமே மக்கள் போராட்டமாக மாறாமையில் அந்த மரபுக்கு ஒரு பெரும் பங்குண்டு.
சைவ-கிறிஸ்தவ வேளாளத் தமிழரின் உயர்சாதி யாழ் மையவாதம் கொஞ்சம் நெகிழ முதலே 1960கள் கடந்துவிட்டன.
அதன் பின்பும் வேளாள ஆதிக்கச் சிந்தனை போய்விடவில்லை.
“இரானியம்” என்ற திரைப்படத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்
http://www.iraniumthemovie.com/#
“இதில் எனக்கு நேரிடையான கள அனுபவம் இல்லை ஆனால் ஈழத்தமிழர்களின் சாட்சியங்களை முன்வைக்க விரும்புகிறேன்.என்ன சொன்னாலும் பாதிக்கப் பட்டவர்களிடம் இருந்து வரும் வார்த்தைகளில் இருந்து கொஞ்சமாவது உண்மை இருக்கும் என்றே நம்புகிறேன்.”
“கள” அனுபவம் இல்லமல் நீங்கள் சொல்லுகிற தொகைக்கு நம்பகமான ஒரு சாட்சியமும் நீங்கள் தந்துள்ளதாகத் தெரியவில்லை. முஸ்லிம் விரோதக் கருத்துக்களைச் சாட்சியமாகக் கொண்டாற் கூட அந்த “ஆயிரங்கள்” தேறாது.
விடுதலை புலிகள் முஸ்லிம்களை விரட்டிய போது அதிகாரபூர்வமாக ஒரு காரணமும் கூறப்படவில்லை.
வதந்திகள் பரப்பப்பட்டன.
முஸ்லிம்கள் “செல் போன்” பாவித்து உளவுத் தகவல்கள் அனுப்புவதாகச் சொல்லப்பட்டதை நம்பி ஏமாந்த “பாதிக்கப்பட்ட” யாழ்ப்பாணத் தமிழரை நானறிவேன்.
நீங்கள் குறிப்பிடும் “பாதிப்புக்களுக்கு உட்பட்டோர்” மட்டக்களப்பு அம்பாறைத் தமிழராகவே இருக்க முடியும். அவர்களிற் பலரை அறிவேன், அவர்களிடையே முஸ்லிம்களூடன் நல்லுறவற்றவர்கள் கூட நீங்கள் சொல்லும் தொகைகளைச் சொல்லியதில்லை.
முஸ்லிம்கள் “பகையைத் தொடங்கியதற்கு” என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்?
முதலில் தயவுசெய்து வரலாற்றைக் கொஞ்சம் நேர்மையாக எழுதுகிறவர்களிடமிருந்து விசாரியுங்கள்.
தமிழகம் புலி ஆதரவுப் பொய்கட்கும் புலி எதிர்ப்புப் பொய்கட்குமே காது கொடுத்து வந்துள்ளது. இனியாவது கொஞ்சம் நிதானமாக விசாரித்தறிவது நல்லது.
தமிழர்களுக்கு நண்பர்கள் போதாத நிலையில் பயனற்றா வீக்பை ஊக்குவிக்காதீர்கள்.
ஹக்கீம் ஒரு வோட்டுப் பொறுக்கி அரசியல்வாதி அவருக்கும் தமிழ்த் தலைவர்கட்கும் ஒரு வேறுபாடுமில்லை. அவர்கள் யாருடைய பிரதினிதிகளுமல்ல –சில செல்வந்தப் பிரபுக்களை விட்டால்.
எழில்: “நான் முஸ்லிம் காடையர்கள் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன் எல்லா முஸ்லிம்களும் என்று சொல்ல வில்லை”.
தயவு செய்து “முஸ்லிம் காடையர்கள்” என்று மட்டுமே சொன்னதாகச் சொல்லி நழுவ முயலாதீர்கள். எல்லா இனவெறிச் செயல்களும் சில “காடையர்களாலே தான் மேற் கொள்ளப்படுகின்றன”.
*
“நீங்கள் கூட எல்லா தப்பையும் புலிகள் மேல் சுமத்துகிறீர்கள்”.
புலிகள் செய்யாத ஒரு தவற்றையும் நான் கூறவில்லையே. எப்போதேன் தவறு செய்யாத போது பாராட்டியும் இருக்கிறேன்.
*
“நிச்சயம் முஸ்லிம்களிடம் தவறு இருந்திருக்கிறது. ஏதோ தவறு இல்லாமல் எல்லோரையும் வெளியேற்றும் அளவுக்கு போயிருக்காது”.
ஆமாம், யூதர்களிடம் ஏதோ தவறு இல்லாமல் ஹிற்லர் இன ஒழிப்பில் இறங்கியிருக்க மாட்டான்!
பலஸ்தினீயர்களிடம் ஏதோ தவறு இல்லாமல் சியொனிஸ்டுக்கள் அவர்களை இம்சிக்க மாட்டர்கள்!
கறுப்பர்களிடம் ஏதோ தவறு இல்லாமல் அவர்களை வெள்ளை நிறவெறியர்கள் துன்புறுத்தியிருக்க மாட்டார்கள்!…..
புலிகளை நியாயப் படுத்தும் பரிதாபமான முயற்சி உங்களுடையது.
*
முஸ்லிம்கள் “தங்களை தமிழர்கள் என்று ஒப்புக்கொள்ளவில்லை”.
ஒப்புக் கொள்ளவிட்டால் என்ன தப்பா?
இலங்கை முழுவதும் பரவி வாழும் அவர்களிற் பெரும்பாலோர் தமிழ்ப் பேசுவோரே ஒழிய, அவர்கள் தமிழரல்ல.
முஸ்லிம்களில் 25% பேரே வடக்கு கிழக்கில் வாழுகின்றனர்.
தமிழராக இல்லாமை தண்டனைக்குரிய ஒரு குற்றமா?
*
“முள்ளி வாய்க்கால் அவலம் நடை பெற்றுக் கொண்டிருந்த பொது இதே முஸ்லிம்கள் என்ன செய்தார்கள்.நன்றாக அடி வாங்கட்டும் என்று இருந்தார்கள் பின்னர் அது தங்களை நோக்கி திரும்பும் என்று உணராமல்”.
தயவு செய்து இந்த அபாண்டமான கூற்றுக்கு ஆதாரத்தைத் தாருங்கள்.
தமிழ் மக்களை கொலக் களத்துக்கு இட்டுச் செல்ல தூண்டியோர் புலம் பெயர்ந்த தமிழ் மேட்டுக்குடிகளும், புலிகளிடம் பணம் வாங்கிச் செயற்பட்ட அரசியல் கூலிப் படைகளுமே.
முஸ்லிம்கள் முள்ளிவாய்க்காலில் போய் என்ன செய்திருக்க வேண்டும்? தங்கால் பங்கிற்குச் செத்தொழிந்திருக்க வேண்டும் என்பது தான் உங்கள் ஆசையா?
தெற்கில் பெரும்பாலான தமிழர்களே வாய் மூடித் தான் இருந்தனர்.
*
“இனம் என்பதும் மதம் என்பதும் ஒன்றா? அப்படி என்றால் ஒரே மதத்தை சேர்ந்த பாகிஸ்தானும் பங்களாதேஷ் உம் ஏன் பிரிந்தது ? ஏனென்றால் வங்காள முஸ்லிம்களுக்கு தெளிவு இருந்தது”.
தயவு செய்து சம்பந்தமில்லாத பிரச்சனைகளை இங்கு இழுக்காதீர்கள். அப்படித் தெளிவு இருந்தால் ஏன் அவர்களால் மேற்கு வங்கத்துடன் இணைந்து ஒரு விசால வங்க தேசத்தை உருவக்கியிருக்க இயலாது?
மதம் தன்னளவிலேயே போதிய தேசிய அடையாளமல்ல; ஆனால் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு தனித்துவமான வரலாறுண்டு.
அதை விடவும் தமிழ்த் தேசியம் என்றுமே முஸ்லிம்களின் கண்ணோட்டத்தில் எப் பிரச்சனையையும் பார்க்க முயன்றதில்லை
*
“இரண்டாயிரம் என்பது சிறிய கூட இருக்கலாம்.ஒரு நேரடி ஆதாரம் இல்லாமல் அது ரொம்ப அதிகம் என்று நீங்களும் உறுதிப்படுத்தி விடமுடியாது”.
இது வேடிக்கையான வாதம்.
ஒன்று நடந்ததற்கு வேண்டுமானல் நேரடி ஆதாரம் இருக்கலாம். நடவாததற்கு எப்படி நேரடி ஆதாரம் தர முடியும்?
அக் காலச் செய்திகளதும் மட்டக்களப்புத் தமிழரது கூற்றுக்களது அடிப்படையிலுமே (கைகலப்புக்கள் உட்பட) ஒட்டுமொத்த வன்செயல்களின் தொகை கூட உங்கள் ஆயிரங்களை எட்டாது என என்னால் உறுதியாகக் கூற இயலுகிறது.
*
“ஒற்றுமையின்மை என்பது தமிழினத்தின் சாபம்.உங்களது பின்னூட்டங்களின் படி பார்த்தால் ஒரு முற்போக்கு முகமூடி அணிந்த இஸ்லாமியவாதி போல தெரிகிறது”.
ஆமாம். நள்ளிரவில் யாருமறியாமல் என் முகமூடியுடன் பள்ளிவாசலில் தொழுகைக்குப் போவேன்.
(உங்கள் ஆற்றாமை காரணமான மூர்க்கம் கண்டு பரிதாபப் பட்டு இன்றிரவு ஆண்டவனை வேண்டிக்கொள்வேன்).
உங்கள் முஸ்லிம் துவேஷத்தை நீங்கள் கொஞ்சம் களைந்தால் உண்மைகள்க் கொஞ்சம் கூடிய தெளிவுடன் காண வாய்ப்புண்டு.
எழில்,
எகிப்திய மக்கள் எழுச்சிக்கு எந்த ஒரு விடுதலைக்கான இயக்கமும் தலைமையேற்று வழி நடத்தவில்லை. ஆனாலும் அங்கே உலகின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் ஒரு மாபெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. ஆனால், ஈழ விடுதலைக்கு தலைமையேற்றுப் போராடிய விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழ் எந்த ஒரு மக்கள் எழுச்சியும் ஏற்படவே இல்லையே அது ஏன்?
Here we are speaking about the unity of the Tamil People. it is a good thing.
there is one simple way to show our Tamil unity. In Tamil Nadu there is some Ceylon Tamil peoples camps , people are forced to live as animal by the government in the camp.
youngsters must come forward to form a forum or other way to help them and support them . it is a useful one and pay way for Tamil unity. .
//ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையினர் 30 வயதுக்குட்பட்டவர்கள். இதற்கு முன்பு எந்த அரசியல் போராட்டத்திலும் கலந்து கொள்ளாதவர்கள். எந்தக் கட்சியின் உறுப்பினர்களாகவும் இல்லாதவர்கள். அதுமட்டுமல்ல, தங்கள் வாழ்நாளில் எந்தவொரு மக்கள் எழுச்சியையும் அவர்கள் கண்ணால் பார்த்ததும் இல்லை; காதால் கேட்டதுமில்லை. //
I Like it
லிபியாவில் நடப்பது இன்று நடப்பது என்ன?
மத்தியக் கிழக்கின் மக்கள் எழுச்சிகளின் ஒரு பகுதியாகவும் தொடர்ச்சியாகவும்தான் லிபியாவில் மக்கள் எழுச்சி எழுந்திருக்கிறது.
முபாராக்,பென் அலி போன்றுதான் லிபியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தனது இரும்புக்கர அதிகாரத்தினால் பதவி வகித்து வருகிறார் கடாபி. மத்தியக் கிழக்கு மக்கள் எழுச்சிகளை அதனது முரண்கள் மற்றும் பலவீனங்களோடும் ஆதரித்திருக்கிறார்கள் சமிர் அமின் மற்றும் தாரிக் அலி போன்ற மார்க்சியர்கள்.
இந்த எழுச்சிகளுக்கு மார்க்சியர்கள் தலைமைதாங்க வில்லை, ஆயினும் இந்த மக்கள் எழுச்சிகளை அவர்கள் ஆதரித்து நிற்கிறார்கள். தாமதமாகவேனும் திரட்டப்பட்ட தொழிலாளிகளும் இந்த மக்கள் எழுச்சிகளுக்கு ஆதரவாகவே நிற்கிறார்கள்.
லிபியாவில் இன்று ஏற்பட்டிருப்பது மத்தியக் கிழக்கு மக்கள் எழுச்சிகளின் ஒரு பகுதிதான். அதனது சர்வாதிகாரிகளுக்கும் மன்னராட்சிகளுக்கும் ராணுவ சர்வாதிகாரிகளுக்கும் எதிரானதுதான் இந்த மக்களது எழுச்சி.
மக்கள் எழுச்சிகளின் மூலம் ஆட்சிகளுக்கு வந்த சேவாசுக்கும், ஒர்ட்டேகாவுக்கும் குறைந்தபட்சம் இந்த மக்கள் எழுச்சிகளை ஏன் பரிவாகப் பார்க்க முடியவில்லை?
அந்த மக்களின் எழுச்சிகளின் முரண்களோடும் பலவீனங்களோடும் கூட ஏன் அதனது குணாம்சத்தை அளவிட அவர்கள் தயாராகவில்லை? இந்த மக்கள் எழுச்சிபற்றிப் பேசுகிற நிலைமையில், சர்வாதிகாரியான பாடிஸ்டாவை எதிர்த்துப் போராடிய பிடல் காஸ்ட்ரோ ஏன் மனம் கொள்ளவில்லை?
அவர்களால் ஒரே ஒரு காரணம்தான் சொல்ல முடிகிறது.
கடாபி ஏகாதிபத்திய எதிர்ப்பாளர். ஏகாதிபத்தியம் எண்ணெய்வளத்தின் மீது ஆதிக்கம் கொள்வதற்காக இந்தப் பிரச்சினையைப் ‘பாவிக்க’ப் பார்க்கிறது.
முக்கியமான சில கேள்விகளை அவர்கள் தமக்குத்தானே கேட்டுக் கொள்ளவில்லை.
இந்த மக்கள் எழுச்சி ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான எழுச்சியா? இந்த மக்கள் எழுச்சியை ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் தலைமை தாங்குகிறார்களா? அல்லது இதுவரையிலும் கடாபியினால் கொல்லப்பட்ட 2000 வெகுமக்களும் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்பதனால்தான் கடாபியினால் விமானக் குண்டுவீச்சினால் கொல்லப்பட்டார்களா?
‘எமக்கு எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளும் தேவையில்லை, வெளிநாட்டுத் தலையீட்டையும் நாங்கள் விரும்பவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள் லிபியாவின் இரண்டாவது நகரான பெஞ்சாய் நகரின் கிளர்ச்சியாளர்களான இடைக்கால நிர்வாகத்தினர்.
எனில், மக்கள் மீதான தாக்குதலை நிறுத்திவிட்டு, அந்தக் கிளர்ச்சியாளர்களை ஆயுதமுனையில் அடக்குவதை நிறுத்திவிட்டு, ஒரு சமாதான அரசியல் தீர்வுக்கு ஏன் கடாபி இணங்கிவரக் கூடாது? அந்தச் சமாதான முயற்சிக்கு – கிளர்ச்சியாளர்களுக்கும்; கடாபிக்கும் இடையிலான அப்படியான இணக்கத்திற்கு காஸ்ட்ரேவும், ஒர்ட்டேகாவும், சேவாசும் முயற்சி செய்யலாமே?
அதைவிட்டுவிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியிலிருக்கும் கடாபியின் அதிகாரத்தைத் தக்க வைக்கவேண்டும் என்கிற ரீதியிலும், கடாபிக்கு அமெரிக்க ஆபத்து எனப்பேசுவதிலும் என்னவிதமான தார்மீக அல்லது புரட்சிகர அறம் இருக்க இயலும்?
அனைத்துக்கும் மேலாகக் கேட்கவேண்டிய பிறிதொரு கேள்வியும் இருக்கிறது.
கடாபி கடந்த பத்து ஆண்டுகளாக ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகத்தான் இருக்கிறாரா? அமெரிக்க-மேற்கத்திய நிறுவனங்களுடன் அவர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற-எண்ணெய் நிறுவனங்களை மேற்குக்குத் தாரைவார்க்கிற அவரது கொள்கைக்கு என்ன பெயர்? அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்தில் அவர் அவர்களது செல்லப் பிள்ளையாக இருக்கிறாரே அதற்கு என்ன பெயர்?
இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் இவர்களிடம் சொல்வதற்கு ஒரே பதில்தான் இருக்கிறது.
அவர் எம்முடைய நண்பராக இருந்தவர். ஓரு காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தவர். எம்முடைய அனுபவத்தில் அமெரிக்காதான் எமக்குப் பொது எதிரி. ஆகவே எல்லாப் பிரச்சினையிலும், அமெரிக்காவுக்கும் மேற்கத்திய அதிகாரத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதுதான் எமது கொள்கை. ஓரு நாட்டை ஆளுகிறவர், சர்வாதிகாரியாக இருந்தாலும், மக்களது விருப்புக்கு எதிராக நூறாண்டுகாலம் எதேச்சாதிகாரியாக ஆட்சி செய்தாலும், கொடுங்கோல் மன்னராக இருந்தாலும், இனக்கொலை செய்பவராக இருந்தாலும், அவர்கள் தமது சொந்த மக்களையே கொன்றொழித்தாலும், அவர்களை நாங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கடமையின் பெயரால் ஆதரிப்போம்!
இந்தப் பதிலில் ஒரே ஒரு விடயம் மட்டுமே பொருட்படுத்தத்தக்கதாக இருக்கும்.
இலத்தீனமெரிக்க நாடுகளின் பொது அனுபவத்தில், அவர்தம் சொந்த அனுபவத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பது அவர்களுக்குப் பிசாசு. அமெரிக்க ஏகாதிபத்தியமே வரலாற்று ரீதியில் இலத்தீனமெரிக்க நாடுகளின் கொடுங்கோலர்களுக்கு, சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு கொடுத்து வந்திருக்கிறது. அதற்கு எதிராகவே அங்கு மக்கள் எழுச்சிகள் தோன்றின. காஸ்ட்ரோவின் தலைமையிலும், ஒர்ட்டேகாவின் தலைமையிலும், சேவாசின் தலைமையிலும் அவர்கள் மாற்றத்தைக் கொண்டுவந்தார்கள். அதன்பொருட்டே அவர்கள் தென்னமெரிக்காவில் அமெரிக்க அதிகாரத்தைத் தகர்க்கிற மாதிரியிலான கூட்டமைப்பையும் சாதித்திருக்கிறார்கள்.
என்றாலும், இந்த அனுபவத்தை உலகின் எல்லா நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் இன்று பொருத்தமுடியாது.
எந்தெந்த நாடுகளில் எது எது முன்னுரிமை என்பதனை அந்தந்த நாட்டு மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
இலத்தீனமெரிக்க நாடுகள் தமது அனுபவத்தைப் பொதுமைப்படுத்தியதும், ஆசிய நாடுகளின் இடதுசாரிகள் தமது கடந்தகால அனுபவங்களைப் பொதுமைப்படுத்தியதும்தான் ஈழப்பிரச்சினையில், நடைமுறையில், அவர்களை இனக்கொலைக்கு உள்ளான தமிழ்மக்கள் எதிர்ப்பு நிலைபாட்டுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவு நிலைபாட்டுக்கும் அவர்களைக் கொண்டு சேர்த்தது.
துரதிருஷ்டவசமாக ராஜபக்சே அமெரிக்க-மேற்கத்திய-சீன-இந்திய ஆதரவைக் கோரிப்பெறுகிற ஒரு ஆட்சியாளர்தான் என்பதனை அவர்கள் உணரவில்லை. அதுமட்டுமன்று ஒரு மூன்றாம் உலக நாட்டுக்கு எதிராக அமெரிக்காவும்-மேற்கத்தியர்களும் வலியுறுத்துகிற மனித உரிமை எனும் அஸ்திரத்தை நாங்கள் ஒப்புவதா எனும் அடிப்படையில், சுயாதீனமான மனித உரிமை அரசியலையும் அவர்கள் பொருட்படுத்தவேயில்லை.
உலகின் எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் எழுகிற எதிர்ப்பு அரசியல் ஏகாதிபத்திய எதிர்ப்பைத் தமது உடனடி நோக்காகக் கொண்டிருப்பதில்லை. இன்றைய நிலையில் அது திட்டவட்டமான இடதுசாரித் திசையிலான அரசியலைத் தேர்ந்து கொள்வதும் சாத்தியமில்லை.
பின்-சோவியத் பின்-செஞ்சீன நிலைமையில் சோசலிச மறுகட்டமைப்புக்கான இடைக்காலகட்டமே இன்றைய காலம்.
மேலாக, ஒடுக்குமறையின் தன்மையே அவர்களது எதிர்ப்பின் தன்மையையும் தீர்மானிக்கிறது. அவ்வகையில் ஏற்பட்டிருக்கும் மத்தியக் கிழக்கு எழுச்சி, எகிப்து முதல் லிபியா வரையிலான எழுச்சி அதனது அடிப்படையில் முடிமன்னராட்சிகள், பல பத்தாண்டுகளாக வாரிசுகளை வளர்த்துவரும் எதேச்சாதிகாரிளுக்கு எதிரான மக்களாட்சி நோக்கிய எழுச்சிகள்தான். இதனை அமெரிக்க ஏகாதிபத்தியம் ‘பாவித்து’க் கொள்ளும் என்பதற்காக இந்த எழுச்சிகளை அங்கீகரிக்க மறுப்பதோ, அது பற்றிப் பேசாமல் தவிர்ப்பதோ இடதுசாரி அரசியல் ஆகாது.
எகிப்து-துனீசியா-லிபியா எனத் தொடரும் இந்த எழுச்சி எதேச்சாதிகாரிகளை பதவியிலிருந்து அகற்றுவதோடு மட்டும் நின்றுவிடாது. இந்த மக்களின் எழுச்சிகள் மக்களாட்சிக்கும் தேசிய இறையான்மைக்கும் ஆனது எனில், இது ஏகாதிபத்திய ஆக்கிரமைப்பை எதிர்த்;துப் போராடுவதனின்றும் தவிர்க்கவியலாதது.
இன்றைய கேள்வி இதுதான் : ஏகாதிபத்தியம் ‘பாவித்து’க் கொள்ளும் என்பதன் அடிப்படையில் சொந்த மக்களைக் கொல்கிற சர்வாதிகாரியை நாம் ஆதரிப்பதா? அல்லது உடனடியில் பிரதிநிதித்துவ ஆட்சி நோக்கிய, சர்வாதிகாரிகளுக்கு எதிரான மக்களாட்சி அமைப்புக்கள், அதன்பின்பான தவிர்க்கவியலாத தேசிய இறையான்மைக்கான போராட்டம் – அது ஏகாதிபத்திய எதிர்ப்பாகவே இருக்கும் – என்பதனை நாம் ஆதரிப்பதா?
எமது தேர்வு இரண்டாவதாகவே இருக்க வேண்டும்.
By-யமுனா ராஜேந்திரன்
யமுனா ராஜேந்திரன்
“சமாதான அரசியல் தீர்வுக்கு ஏன் கடாபி இணங்கிவரக் கூடாது?” என்கிறீர்கள். அது மிகச் சரியானது. அல்பா () நாடுகளும் அதையே கூறுகின்றன.
கடாஃபி அதை ஏற்க ஆயத்தம் எனத் தெரிகிறது.
அதை மறுப்போர் யார்? ஏன்?
பெங்காஸி கிளர்ச்சித் தலைமை அந்நிய உதவியை இது வரை மறுத்தமை வரவேற்கத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக வெனெசுவேலாவின் அமைதியான தீர்வு ஆலோசனையை அவர்கள் ஏற்பது நன்றாயிருக்கும் என நினைக்கிறேன்.
.
எந்தச் சர்வாதிகாரத்தை ஆதரிப்பது என்பதன்றிச், சில சர்வாதிகாரங்களுக்குப் பாதுகாப்பும் சிலவற்றுக்கு எதிர்ப்பும் காட்டுகிற ஏகாதிபத்தியக் குறுக்கீடு தான் உடனடிப் பிரச்சைனை.
.
.
கடாஃபி வீழ்வதா நிலைப்பதா என்பது என்றுமே என் கவலை அல்ல.
ஆனால், கடாஃபியை வீழ்த்துவதற்கு அமெரிக்கா வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் போது, ஒரு சர்வாதிகாரியின் வீழ்ச்சி என்று மட்டும் அதை நோக்க இயலவில்லை.
கடாஃபிக்குச் சாதகமாகவும் (அதே காரணத்தால்) பாதகமாகவும் உள்ளது, 1990 முதல் ஏகாதிபத்திய நாடுகளுடன் கடாஃபி மெல்ல மெல்லச் சமரசம் செய்துவந்த நிலையிலுங்கூட, பலஸ்தீனப் பிரச்சனையிலும் ஈராக் மீதான அமெரிக்கப் போரின் போதும் பிற அரபு நாடுகளை விட உறுதியாக கடாஃபி ஏகாதிபத்திய நோக்கங்களை எதிர்த்தமையாகும்.
சொல்லப்போனால், சதாம் ஹுசேனைப் போலவே கடாஃபியையும் நோக்குவது பொருந்தும்.
.
.
இந்த நிலையிலேயே, கடாஃபி வீழ்வதா நிலைப்பதா என்ற முடிவை ஏகாதிபத்தியம் எடுத்தால் அதன் விளைவு என்னவாயிருக்கும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்கட்குப் பின்னால் உள்ளோர் யாரென என்னால் உறுதியுடன் கூற இயலாது.
ஆனால் அவர்களின் நோக்கங்கள் எகிப்திய, துனீசிய, யெமெனி, பாஹ்ரெய்னி மக்களின் நோக்கங்கள் போன்றவையா என்று எனத் தெரியவில்லை.
நாட் போக்கில் உண்மைகள் தெளிவாகலாம்.
தன் சொந்த மக்களையே கொல்லும் கொலைகாரன் கடாபியை ஆதரிக்க வேண்டுமா ? கரம்மசாலாவின் சிறந்த நகை சுவை
தனது சொந்த மக்கள் மீதே விமானக் குண்டுத் தாக்குதல்களை கடாபி நடத்திவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 10 நாட்களுக்கு மேலாக மோதல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
இந்த வார முற்பகுதியில் தலைநகர் திரிபோலியில் லிபியாவின் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் 5 மணித்தியாலங்கள் கடாபி உரையாற்றியுள்ளார். அந்த உரையில் குறைந்தது ஐந்து தடவைகளாவது இந்தியா பற்றி கடாபி குறிப்பிட்டிருக்கிறார். எதிர்காலத்தில் வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியசீன கம்பனிகளுக்கே தான் வழங்குவார் எனக் கூறியுள்ளார்.
இந்தியசீன கம்பனிகளுக்கே தான் வழங்குவார் என்றுதான் நம்ம ஸ்டாலின் அடிவருடிகள் துள்ளி குதிக்கிறார்கள்.
கடாபி குடும்ப தில்லுமுல்லுகள்
லிபியாவில் போராட்டங்கள் வலுத்து வரும் இந்நிலையில், கடாபி மகன் பாப் பாடகிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய விவகாரம் அம்பலமாகியுள்ளது.
லிபியாவில் 41 ஆண்டுகள் அதிபராக இருந்த மும்மர் கடாபி பதவி விலக கோரி நாடு முழுவதும் பொது மக்கள் நடத்தி வரும் கிளர்ச்சி தீவீரம் அடைந்து வந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அரசு கருவூலத்தில் மோசடி செய்திருப்பதும், அரசு கஜானாவை ஊதாரித்தனமாக செலவு செய்திருப்பதும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணம் மூலம் அம்பலமாகியுள்ளது.
அதில் கடாபியின் மகன்களில் ஒருவரான சையீப் கடாபி தனது பிறந்த நாளன்று அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் மரியாக் கேரியினை அணுகி பாப் பாடல் இசைகேட்டுள்ளார். இதற்காக ரூ.10 லட்சம் பரிசாக வாரி வழங்கியுள்ளதாக விக்கிலீக்ஸ் ஆவணம் வெளியிட்டுள்ளது.
இது குறித்த நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கடாபியின் 41 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சியில் அவரது குடும்பத்தினர் அரசு பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்துள்ளனர். கடந்த ஆண்டு ஹெய்டி பூம்பம் ஏற்பட்டது. அப்போது அந்நாட்டிற்கு நிதி வழங்குவதாக அறிவித்தார் கடாபி. அதற்காக சர்வதேச கடாபி அறக்கட்டளை மேம்பாடு நிதியகம் ஒன்று அமைத்து கோடிக்கணக்கில் வசூலித்தார்.
ஆனால் நிதியினை முறையாக வழங்கவில்லை. இந்நிலையில் இவரது இளைய மகன் சையீப் கடாபி தனது பிறந்த நாளன்று கரீபியன் தீவில் நடந்த ஆடம்பர விழாவில் பிரபல அமெரிக்க பாப்பாடகி மரியாக் கேரியினை வரவழைத்து பாடச்சொல்லி மொத்தம் 4 பாடல்களுக்கு ரூ.10 லட்சம் பரிசாக வாரி வழங்கியுள்ளார். இவ்வாறு விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணம் குறித்து அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
(முன்பு இன்னொரு இடத்தில் சொன்னதையே மீள இங்கு தருகிறேன். ஏனெனிற் புதிதாகக் கூற எதுற்கும் தேவையில்லை).
அனைத்தினுந் தலையாய நகைச்சுவை ஏதெனின் ஒருவர் எழுதியதைச் சரிவர வாசிக்காமலே கருத்துரைப்பது தான்.
கடாஃபியை ஆதரிக்க வேண்டுமென எங்காவது ஒரு சொல்லேனும் என்னாற் கூறப் பட்டுள்ளதா?
“பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருமாறு தான் உலக இடதுசாரிகள் பலரும் (கடாஃபியை ஏற்காதோருட்பட) இப்போதும் வலியுறுத்துகின்றனர்.
அமைதியான தீர்வை யார் விரும்பவில்லை என விசாரியுங்கள்.” –
இது அமைதிக்கான வற்புறுத்தலே ஒழிய யாருக்கான ஆதரவுமல்ல.
என்னிடம் எதற்கும் தடாலடித் தீர்வுகள் இல்லை.
இப்போதைய பெரும் பிரச்சனை அமெரிக்கக் குறுக்கீடு தான். தயவு செய்து சதாம் ஹுசேன் பிரச்சனையுடன் ஒப்பிட்டால் நான் சொல்வது விளங்கும்.
அமெரிக்கா ஆதரித்தால் அது தவறான போராட்டம் எனக் கூறுவது மஞ்சள் காமாலை நோயாளியின் பார்வை போன்றது. அமெரிக்காவுக்கு உள் நோக்கம் இருக்கலாம். அதற்காக இந்த போராட்டமே தவறு, இதனை ஆதரிக்க கூடாது எனக் கூறுவது கேவலமா கருத்து. முதல் கட்டமாக சர்வதிகார ஆட்சி முடிவுக்கு வர வேண்டும்.
எகிப்து வில் முபாரக்கை எதிர்த்து போராட்டம் வந்த போது முபாரக் தடை விதித்தாரே தவிர ஆர்ப்பாட்டாக்காரர்கலை கடாபி போல் கொலை செய்யவில்லை.
லிபியாவில் கடாபியின் மகன் ரத்த ஆறு ஓடும் என எச்சரிக்கை செய்கிறார். கருணாநிதிக்கும் கடாபிக்கும் என்ன வித்தியாசம்? கருணாநிதி பல மடங்கு பரவாயில்லை. கடாபியின் மகனையும் கருணாவின் மகன் ஸ்டாலின் ஒப்பிட்டு பாருங்கள்.
இந்த கடாபியா லிபியாவை வாழவைக்க போகின்றார்!!!! லிபியாவில் இப்போது ஏற்பட்டுள்ள கிளர்ச்சி மக்கள் புரட்சியல்ல என்பதை மட்டும் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அல்-காய்தா தீவிரவாதி பின்லேடன்தான் கிளர்ச்சியை தூண்டிவிடுகிறார் என்று இப்போது அறிக்கை விட்டுள்ளார். அப்படியானால் புரட்சியில் அமெரிக்காவின் பங்கு எங்கே?
மஞ்சட் காமாலை என்ற தகுதி, எழுதியதை வலிந்து பிழையாகப் பொருள் கொள்ளத் தான் மிகவும் தேவையானது தேவை.
அமெரிக்கா ஆதரிக்கிறதா இல்லையா என்பதை வைத்து நான் இங்கு எதையும் நியாயப்படுத்தவில்லையே.
அமெரிக்கக் குறுக்கீட்டு அபாயம் பற்றியல்லவா பேசுகிறேன்.
எந்த அயற் குறுக்கீடும் தீய விளைவுகளையே தரும் என்ற நோக்கிலேயும் பேச்சுவர்த்தைகள் மூலம் தீர்ப்ப்பதே உகந்தது என்ற நோக்கிலேயுமே இதுவரை என் மதிப்பீடுகளைச் சொன்னேன்.
ஏந்த மேலாதிக்க வல்லரசின் நேரடி/மறைமுகக் குறுக்கீடும் தீயதே! இது தான் என் நிலைப்பாடு.
ஈராக் அனுபவத்துடன் ஒப்பிட்டால் நான் சொல்ல முனைந்தது விளங்கும்.
(கொஞ்சம் குறைவான பொருத்தமுடைய இன்னொரு உதாரணம்: இலங்கையில் இந்தியா குறுக்கிடலாகாது என்பது 1978 முதலாக என் போற் பலர் சொன்ன விடயம். கேட்டார்களா? பட்டு அனுபவித்துப் பரதவித்து நிற்கிறர்கள்).
Gulf: Rising Shias, uneasy Sunnis
by : ’சுவாமிநாதன் அங்கலேஸ்ர்ய அய்யர்’
Indians are rightly excited by the jasmine revolution that has overthrown autocracies in Tunisia and Egypt, and may oust Muammar Gaddafi in Libya too. They hope that the jasmine revolution will spread to the rest of the Middle East, bringing some sort of democracy throughout the region. However, there is one huge difference between North Africa and the Persian Gulf. Tunisia, Egypt and Libya are all Sunni-majority states ruled by Sunni autocrats. But it may surprise readers to learn that the Persian Gulf coast is entirely a Shia majority area, much of which is ruled by Sunni autocrats. Hence popular revolts in the Gulf nations may or may not evolve into democracy, but will certainly evolve into Shia-cracy. This terrifies the Sunni rulers.
Arabs hate the term “Persian Gulf” and call that body of water the “Arabian Gulf.” Yet the most appropriate name may be “Shia Gulf”. The Shias in the north coast of the Gulf are Persian and those in the west and southern coasts are Arab, but all are Shia regardless.
Iran and Iraq are Shia-majority countries where Shias are in power. But in other Gulf countries, the Shia majority is ruled by Sunni sheikhs— in Kuwait, Bahrain and the United Arab Emirates. Even the Gulf coast of Saudi Arabia (which produces and exports most of its oil) has a Shia majority, although the country overall has a Sunni majority. The Saudi king has one big advantage over other Sunni rulers of the region: he is revered by all Muslims, Shia or Sunni, as the guardian of the holy cities of Mecca and Medina. This makes Saudi Arabia less vulnerable to a popular Shia revolt than Bahrain (where demonstrators are already choking the streets), Kuwait or the UAE. Yet the Saudis are paranoid because all their oil lies in the Shia-majority eastern region.
This is why the Saudi king has just announced that he will spend a whopping $ 11 billion on improving welfare and housing in the Shia-majority region. He wants to buy off potential revolutionaries. Whether he will succeed remains to be seen: Bahrain’s Shia demonstrators have refused to be bought off with grants of $ 2,250 per head. Some months ago, the WikiLeaks of US confidential diplomatic papers revealed that many Gulf sheikhdoms—including Bahrain and the UAE—wanted the US to bomb Iran’s nuclear facilities. The sheikhs claimed they feared armed invasion or bombing by Iran. In fact, their real fear is that a rising Iran will induce their own Shia subjects to revolt and demand democracy. The Sunni sheikhs have long cultivated the US to keep Iran at bay. But this simply induces disgust on the part of many Shia subjects, who view their rulers as not just Sunni oppressors but American stooges too. Bahrain is a small island off the Saudi Gulf coast, linked to it by a motorable causeway. Whereas Saudi Arabia is an ultra-conservative Muslim state where women must wear burqas and are not even allowed to drive cars, Bahrain is a freewheeling, westernized state where women can wear short skirts and dance all night in nightclubs. It has an elected lower house, but real power vests with the king. The democracy movement in Bahrain started off as a secular one, yet inevitably became coloured by the Shia-Sunni split.
Some analysts hope for a peaceful transition from autocracy to democracy in the Middle East. Muslim autocrats have sometimes evolved into leaders of political parties in democracies. Two examples are Gen Zia-ur Rahman in Bangladesh and Gen Pervez Musharraf in Pakistan. It is just possible that some such transition could occur in North Africa too. But this will be impossible in the Gulf, since any political party formed by the Sunni rulers will be thrashed by Shia rivals. Hence Gulf sheikhdoms are more likely to opt for the Gaddafi path of bloody suppression than the Mubarak path of exiting in favour of democracy.
This creates a moral and financial dilemma for the US. It swears in theory by democracy, but in practice dreads the replacement of Sunni sheikhs by Shia-cracies in the Gulf. It also fears that Shia revolts in the Gulf may disrupt oil supplies and send prices soaring, above all if the democracy fever spreads to Saudi Arabia.
Iran loves the thought of a completely Shia Gulf. But it also fears that its own theocracy could be toppled by a democracy movement, and that tempers its enthusiasm for the jasmine revolution. When democracy seems inconvenient to so many powerful forces, its prospects in the Gulf cannot be too bright. Its prospects in North Africa are much brighter.
http://swaminomics.org/?p=1956
பட்டுக்கோட்டைக்குப் போக வழி கேட்டால் “துட்டுக்கு இரண்டு கொட்டைப் பாக்கு” என்று பதில் வரும்.
விக்கிலீக்ஸ் இணையதளத்தின் டெக்னாலஜி எதிரி அமெரிக்கா அல்ல அது சீனா மட்டுமே என ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார். லண்டனில் நியூ ஸ்டேட்மெண்ட் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், சீனாவின் செய்திகளை சென்சார் செய்யும் முறை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். போலியான மற்றும் வலிந்து சண்டைகளை ஏற்படுத்தும் முறையை சீனா கடைபிடித்துவருவதாகவும், விக்கிலீக்சின் டெக்னாலஜி சீனா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டைக்குப் போக வழி கேட்டால் “துட்டுக்கு இரண்டு கொட்டைப் பாக்கு” என்று பதில் வரும்:
இன்னொரு கொட்டைப்பாக்கு இடுகை:
This one is by
Ethicalist
“விக்கிலீக்ஸ் இணையதளத்தின் டெக்னாலஜி எதிரி அமெரிக்கா அல்ல அது சீனா மட்டுமே என ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார் etc. etc.”