Tuesday, October 15, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள்: அரசின் வதைமுகாம்கள்!

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள்: அரசின் வதைமுகாம்கள்!

-

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள் : அரசின் வதைமுகாம்கள் !

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள் : அரசின் வதைமுகாம்கள் !சென்னையிலுள்ள அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படித்துவரும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கடந்த டிசம்பர் 21 அன்று சென்னை – அண்ணா சாலையில் நடத்திய சாலை மறியல் போராட்டம், அம்மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காகத் தமிழக அரசால் நடத்தப்படும் நல விடுதிகள் அனைத்தும் மாட்டுக் கொட்டகைகளைவிடக் கேவலமாக இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

‘‘கடந்த பல ஆண்டுகளாகவே முறையாகப் பராமரிக்கப்படாததால், சிதிலமடைந்துவிட்ட கட்டிடங்கள்; உடைந்து போன கழிவு நீர் செல்லும் குழாய்கள் மாற்றப்படாததால், மலமும், சிறுநீரும் விடுதிக்குள்ளேயே குட்டையைப் போலத் தேங்கி நின்று, அதனால் வீசும் துர்நாற்றம்; 52 அறைகளில் 595 மாணவர்கள் தங்க வேண்டும் என்ற அரசின் கணக்கே அளவுக்கு அதிகமானது எனும்பொழுது, இப்பொழுது அந்த 52 அறைகளில் 1,600 மாணவர்கள் (ஒரு அறைக்கு 30 மாணவர்கள்) அடைபட்டுக் கிடக்கும் அவலம்.” – இதுதான் சென்னை – சைதாப்பேட்டையிலுள்ள எம்.சி.ராஜா விடுதியின் குறுக்குவெட்டுத் தோற்றம்.

சென்னையிலுள்ள மற்ற 16 விடுதிகளும், தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள விடுதிகளும் எம்.சி.ராஜா விடுதியைப் போன்று அல்லது அதைவிடக் கேவலமான நிலைமையில்தான் இருக்கின்றன.

இவ்விடுதிகள் ஒவ்வொன்றிலும் மாவரைக்கும் இயந்திரங்கள், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், குடிநீரைச் சுத்திகரிப்பதற்கான கருவிகள் இருக்க ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள் : அரசின் வதைமுகாம்கள் !வேண்டும் என ஆதிதிராவிடர் நலத் துறையின் கொள்கைக் குறிப்பு கூறுகிறது. ஆனால், இவ்விடுதிகளில் காலைக் கடன்களைக் கழிப்பதற்கும், குளிப்பதற்கும்கூட முறையான, போதுமான வசதிகள் கிடையாது என்பதுதான் உண்மை.

இவ்விடுதிகளில் தங்கிப் படிக்கும் ஒவ்வொரு கல்லூரி மாணவன் மற்றும் பள்ளி மாணவனின் உணவிற்காக மாதமொன்றுக்கு ரூ.550/- வரை நிதி ஒதுக்கப்படுவதாக அரசு கூறுகிறது. இந்த ஒதுக்கீடைத் தின்று தீர்ப்பது அதிகார வர்க்கம்தான் என்பதை இவ்விடுதிகளால் போடப்படும் உணவே காட்டிக் கொடுத்துவிடுகிறது. புழுத்துப் போன அரிசிச் சோறுதான் இவ்விடுதிகளால் போடப்படும் ஒரே ‘சத்தான’ உணவு. குழம்புக்கும் காய்கறிக்கும் மாணவர்கள் தங்கள் கைக்காசைத்தான் போட்டுக் கொள்ள வேண்டும். உணவிற்காகவும், கல்விச் செலவிற்காகவும் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்குப் போவதாகக் குறிப்பிடுகிறார்கள், இம்மாணவர்கள்.  .

இப்படிபட்ட இழிந்த சூழ்நிலையில் தங்க நிர்பந்திக்கப்பட்டுள்ள ஏழை தாழ்த்தப்பட்ட மாணவனால், தனது படிப்பில் முழுமையான கவனத்தை எப்படிச் செலுத்த முடியும்?

அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டிய கடமையை அரசு புறக்கணிக்கிறது என்பதாக மட்டும் இந்தப் பிரச்சினையைப் பார்க்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகப் பட்டம் சூட்டிக் கொண்டுள்ள திருமா., ரவிக்குமார் போன்றவர்களால் ஆதரிக்கப்படும் தி.மு.க. ஆட்சி, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மீது கொண்டுள்ள தீண்டாமை மனோபாவத்தையும் பிரதிபலிப்பதாகவே இதனைப் பார்க்க முடியும்.

__________________________________________________

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2011
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள் : அரசின் வதைமுகாம்கள் ! | வினவு!…

    சிதிலமடைந்த கட்டிடங்கள், அகற்றப்படாத சாக்கடை, ஒரே அறையில் 30 மாணவர்கள், சுற்றி வரும் தெருநாய்கள் இதுதான் சென்னை எம்.சி.ராஜா விடுதியின் குறுக்குவெட்டுத் தோற்றம்….

  2. கவலையான செய்தி. இந்த போராட்டத்திற்கு பின் தீர்வு ஏதும் கிடைத்ததா?

  3. […] This post was mentioned on Twitter by வினவு, ராஜன். ராஜன் said: ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள்: அரசின் வதைமுகாம்கள் https://www.vinavu.com/2011/02/16/casteist-hostels/ […]

    • Yes.. You are correct. Can you please collect some information about them and publish here?
      Either Kallar or Adhi Dravidars, the government treats them as beggers. Sametime the govrnment spends crores and crores for IIT Madras. Why? Why this government treat the IITs and Adhi dravida / kallar hostels in different ways?

      Is because of IITians are Iyers and Iyengars? (Iyer and Iyengar institute of technology)

  4. திருமா, ரவிக்குமார்ன்னு சொல்றீங்களே… இவங்கள்லாம் யாரு தோழர்? ஆதிதிராவிட பிரச்னைக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம்?

    • ரமேஷ் அவர்களே அவனவன் பிரச்னைக்கு அவனே தான் போராடவேண்டுமா? மீனவன் பிரச்னைக்கு மீனவனே போராடவேண்டும் தலித் பிரச்னைக்கு தலித்தே போராடவேண்டும் சூப்பர் தலைவா. ஒன்னு தெரியுமா உடையார் ரெட்டியார் முதலியார் கொங்கு வேளாளர் சமூகம் எல்லாம் மிகச்சிறிய எண்ணிகையில் இருப்பவர்கள் அனால் அவர்கள் போக்குவரத்து பொதுப்பணி நிதி உள்ளாட்சி விவசாயம் போன்ற துறைகளில் மந்திரிகளாக இருக்க மக்கள் தொகையில் நான்கில் ஒருவரான தலித்களுக்கு ஆதி திராவிட நலத்துறை என்ற ஒரே ஒரு இலக்கா தான் ஐம்பது வருஷமாக கொடுக்கப்படுகிறது. அரசியல் அதிகாரம் தேடி இப்போதுதான் திருமா போன்றோர் முனைகிறார்கள்.ஏன் நீங்கள் போராட சாதி தடுக்கிறதா?சாதிக்கட்சிகள் தோன்றுவது ஏன் என புரிகிறதா?

  5. டிசம்பர் போராட்டத்திற்கு பிறகு பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று ஆதிதிராவிட நல அமைச்சர் சொன்னார் இன்று வரை ஒரு துரும்பைக்கூட எடுத்து போடவில்லை. இந்த விடுதிகளில் சென்று அங்கிருக்கும் துரும்பையாவது எடுத்து போட்டிருக்கலாம் விடுதி சிறிது சுத்தமாகியிருக்கும்..

  6. நானும் இதுபோன்றதொரு மாட்டுத் தொழுவத்தில் தங்கி, உண்டு, படித்து கிழித்தேன். அந்த விடுதி பாண்டி பஜாரில் இருந்தது. இன்று அந்த கொட்டடி காணக் கிடக்கவில்லை. அந்த காரைக் கட்டிடம், ஒரு பெரிய ஷாப்பிங்க் காம்ப்ளெக்சாக மாறிவிட்டிருக்கிறது. இப்பொழுது அது இந்தியா ஒளிர்வது போன்று ஒளிர்கிறது. பரிணாம வளர்ச்சி கட்டிடங்களுக்குத்தான்… புழு நெளியும் சோறு இன்றும் கூடப் பரிமாரப் படுகிறது என்பதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கோபப்படவேண்டும் – புழு நெளியும் சோறு உண்பவர்கள் மட்டுமல்ல, உப்புப் போட்டுத் தின்பவர்களும்தான்!

  7. உன்சோற்றுக்கு உப்பு போட … பக்கத்து வீட்டு மாமியாரை அழைக்காதே ….
    நிமிர்ந்து நில் துணிந்து செல் …. தனித்து …
    அந்த இமயமலையை கரைப்பதாக நினைத்தாலும்
    தனித்து யோசி ..

    நினைவூக்கும் கனவூக்கும் துணை தேடும் மானிட
    சிதிலமடைந்த கட்டிடங்களும் , அகற்றப்படாத சாக்கடைகளும் –
    உனக்கு இமயமலை …..
    தி .மு .க மற்றும் திருமா … உனக்கு எதிரிகள் ….

    வெட்கமா இறுக்கு… வேதனைய இறுக்கு .. வேட்ட்க்கி தலை குன்னிய வேண்டும் இந்திய மக்கள் அனைவரும் .— அண்ணல் அவர்கள் எதனை கடினப்பட்டு வாங்கிய சுதந்திரம் உன்கையில் அல்லவா இறுக்கு ( சட்டம் ) இது முறையாக பின்பற்று —
    இதுல்லாம் நெல்லிக்காய் சுண்டக்காய் …
    நி அடிக்கும் ஒவோவ்று அடியும்(சட்டத்தினால் ) இந்திய தேசத்துக்கே கேட்க வேண்டும் . சாலை இல்லை நமது போர்க்களம் …….. சாலை இல்லை நமது போர்க்களம்…சாலை இல்லை நமது போர்க்களம்….

    இந்த அரசு அந்த அரசு .. அவன் இவன் — அன்று இன்று என்று பேசி காலம் போக்காதே … ஆணிவேரை கண்டுப் பிடி அறுத்து எறி… ஆகட்டும் நம் வேலைyai பார்க்கலாம் ..

  8. நண்பர்களுக்கு வணக்கம். நான் ஒரு இலவச தனியார் விடுதியில் தங்கி பயின்ற மாணவன் என்ற முரையிலும், ஆதிதிராவிட / பிற்படுதப்பட்ட மற்றும் கல்லூரியின் முதன்மை விடுதி அகியவற்றில் நண்பர்களுடன் தங்கி இருந்துள்ள அனுபவம் எனக்கு உள்ளது.

    அரசு விடுதிகள் மட்டும் அல்ல அரசு கல்லுரியில் இருக்கும் முதன்மை விடுதியிலும் இத்தகாய நிலைதான். அதுமட்டுமல்ல, விடுதி அறைகளிலும் இதேபோல் துர்நாற்றம் வீசுவதை கண்டுல்லேன்.

    காரணம், பள்ளியிலும், கல்லூரியிலும் தனது உரிமை பறிபோகிரது என எண்ணும் மாணவர்கள் சுதந்திரமாக இருப்பதாக எண்ணி சோம்பேரியகிறார்கள். தினமும் அறையை சுத்தபடுத்துவதையும் தவிர்கிறார்கள்.

    ஆனால் சில மாணவர்கள் சில அறைகளில் உள்ள மாணவர்கள் சேர்ந்து ஒருகுறிபிட்ட கழிவரையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை கண்டுள்ளேன். காரணம் தங்கள் கழிவறையை சுத்தமாக வைத்திருகிறோம் என்றனர்.

    ஏன் இதை முன்னுதாரனமாக கொண்டு மற்ற மாணவர்கள் செய்ய கூடது?

    பழுதுபார்த்தல் என்பது மாணவர்களல் செய்ய இயலதகரியமே. ஆனால் சுத்தம் செய்ய ஏன் அடுத்தவரை எதிர் பார்க்கவேண்டும். அது நாம் வழுமிடம், அதை சுத்தமாக வைதிருக்க வெண்டியது நமது கடமை. பாராபட்சமின்றி ஒவ்வொரு மாணவனும் சேர்ந்து, வார விடுமுரையில் தங்களுக்குள் வேலையை பகிர்ந்து சுத்தம் செய்தால், நமது இடம் சுத்தத்தை முதலில் காக்கலாமே?

    இங்கே தொடங்கி வையுங்கள் போராட்டத்தை. அந்த மாணவ சமுதயம் எழுச்சிமிகு சமுதயம் மட்டும் அல்ல, தலைமைதாங்கும் பக்குவமும், பொருப்புண்ர்ச்சியும், மற்றவருக்கு உதவும் மனபாண்மையும் வந்துசேரும்.

    மற்றவரை ஏமாற்றும் எண்ணம் அறவே அழிந்து போகும்.

    கெட்ட உணவுக்கும், பழுது பார்க்கபடாத பராமரிப்பு பணி செய்யமைக்கும் எதிரக போராட்டங்கள் செய்தேயக வேண்டும். அது வரவேற்க்க தக்கது.

    பொருப்புள்ள மாணவ சமுதயமே,
    பொருப்புள்ள இளைஞர் சமுதயத்தை உருவாக்கும் !

    பொருப்புள்ள இளைஞர் சமுதயமே,
    பொருப்புள்ள சமுதயத்தை உருவாக்கும் !

    இதுவே ஆணிவேர் பிடியுங்கள்…..

    குறிப்பு: எங்கள் விடுதியில் அறையிலோ, கழிவறையிலோ, நீர் தொட்டியிலோ வாடை வந்ததில்லை. ஏனென்றால் இவை அனைத்தும் எங்களால், தினமும் (அறை), வரமும்(கழிவ்ழ்றை), மதமும் ( நீர் தொட்டி) ஒருமுறை என்று சுத்தம் செய்யபட்டது.

    • //பொருப்புள்ள//

      அலோ இதுக்கு அர்த்தம் வேறங்க.. கருத்துப் பிழய விடுங்க எழுதுப் பிழையவவாது கொஞ்சம் பாத்து சரி பன்னுங்க

      • அசுரன் என் கருத்துக்கு, தங்கள் மாற்று கருத்து சொல்ல விரும்புகிரீரா?

      • //பொருப்புள்ள//

        அலோ இதுக்கு அர்த்தம் வேறங்க.. கருத்துப் பிழய விடுங்க எழுதுப் பிழையவவாது கொஞ்சம் பாத்து சரி பன்னுங்க

        அசுரரே,

        பிழை திருத்தத்திலேயே பிழைகள்.

        பிழையையாவது
        பண்ணுங்க

  9. ஆனால் எவ்வளவு வசதிகள் செய்து கொடுத்தாலும் அதை பொறுப்பாக பார்த்து கொள்வதும் கிடையாது என்பதையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். அரசு பணம் தானே என்ற அலட்சியம் நம் உடன் பிறந்தது. அந்த எண்ணம் ஒழிய வேண்டும்

    • இதுதான் மேலே கூறியுள்ளேன் சுரேஷ் சார். முதலில் பொறுப்பை உணர்த்துவோம், நற்பண்புகளையும் கற்றுதருவோம்.

      அதற்க்காக போராடாமல் இருந்தால் மாண்வர்கள் பெயரில் கணக்கு எழுதி அட்சியளர்கள் சாப்பிட்டு விடுவார்களே?

  10. //52 அறைகளில் 1,600 மாணவர்கள் (ஒரு அறைக்கு 30 மாணவர்கள்) அடைபட்டுக் கிடக்கும் அவலம்.” – இதுதான் சென்னை – சைதாப்பேட்டையிலுள்ள எம்.சி.ராஜா விடுதியின் குறுக்குவெட்டுத் தோற்றம்//

    என்றென்றும் நீடிக்கும் கொடுமை!
    சிறைச்சாலையில் தண்டனை கைதிகளுக்கு கூட இந்த நிலை இல்லை.
    எவ்வளவு போராடினாலும் இந்நிலை மாறுவதேயில்லை.

  11. எல்லா அரசு விடுதிக்கும் இதே நிலை தான். விடுதி வார்டன் செம ஊழல் பேர்வழியா இருப்பாங்க. ஆதி திராவிடர் விடுதிகள் இன்னும் மோசமாக இருக்கு. என்னுடைய கேள்வி – ஏன் அவங்களுக்குன்னு தனி விடுதி இனியும்? அதுவும் சென்னையில? எல்லாருக்கும் பொதுவான விடுதி தந்து, ஒடுக்கப்பட்டவங்களுக்குன்னு தனி ஊக்கத்தொகை மட்டும் கொடுத்து வரலாம். இப்படி தனித் தனியாப் பிரிச்சுப் போட்டுத் ஒரே பிரிவினையா இருக்கு.

    விடுதிய மேம்படுத்தும் பொறுப்பு, பசங்களுக்கு வரணும் – எங்க விடுதிக்கு ஒரு மாணவச் செயலாளர், அது போக மெஸ், டாய்லெட் – இதுக்கெல்லாம் தனித் தனி ஆளுக. பொறி பறக்கும் ஒவ்வொரு கூட்டத்துலயும்.

  12. பிற்படுத்தப்பட்டோருக்கும் ஆதி திராவிடருக்கும் தமிழகமெங்கும் தனித்தனி மாணவர் விடுதிகள் கட்டும் அரசை பாராட்ட வார்த்தைகளே இல்லை.தனியார் கல்லூரிகளும் இந்த முறையை பின்பற்றவேண்டும்.

    • அண்ணா நீங்க சொல்ல நினைபதை இன்னும் கொஞ்சம் தெளிவா சொன்னா நல்ல இருக்குங்கண்ணோவ்….!

  13. வினவு உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? இதெல்லாம் அந்த சாதியினரே போராட வேண்டிய பிரச்னை.அவர்களுக்கு எவ்வளவு சலுகைகள் தருகிறோம்?இன்னும் போய் சமைத்து தரவும் வேண்டுமா?அல்லது கழிவறையை சுத்தம் செய்து தரணுமா?

    • //வினவு உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? இதெல்லாம் அந்த சாதியினரே போராட வேண்டிய பிரச்னை.அவர்களுக்கு எவ்வளவு சலுகைகள் தருகிறோம்?இன்னும் போய் சமைத்து தரவும் வேண்டுமா?அல்லது கழிவறையை சுத்தம் செய்து தரணுமா?//

      இது ஏதோ காமெடிப் பீசு கண்டுக்காத விடுங்க….. சைடுல அதும் பாட்டுக்கு களிஞ்ச்சுட்டு போகட்டும்

      • இல்லை அசுரன்,

        இது ஏதோ கோமாளிகளின் உளறல் என எடுத்து கொள்ளமுடியாது.ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு,இலவச விடுதி போன்றவை அவர்களது உரிமை என்பதை மறுத்து ”சலுகை” என்று பொதுப்புத்தியில் ஏற்றுவதற்காக தொடர்ச்சியாக நடத்தப்படும் வஞ்சக பரப்புரையின் ஒரு பகுதியே இது போன்ற பின்னூட்டங்கள்.

        தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பற்றி பேசும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட மேல்சாதியினர் ”அவங்கதான் அரசாங்கத்தின் செல்லப் புள்ளையாச்சே,அவங்களுக்குதா நாட்ல நல்ல சலுகை”என்று வெறுப்போடு பேசுவதை வெகு இயல்பாக நீங்கள் காண முடியும்.இந்த வெறுப்புதான் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கலவரங்களின்போது அவர்களின் குடிசைக்கு நெருப்பாகிறது.

        இத்தனை ”சலுகைகள்” இருந்தும் அவர்கள் ஏன் இன்னும் சேரிகளில் வாழ்கிறார்கள்,ஆக பெரும்பான்மையானோர் அன்றாட கூலிகளாகவே இருப்பது ஏன் என்று கேட்டால் மட்டும் பதில் சொல்ல மாட்டார்கள்.இந்த இட ஒதுக்கீடு ,இலவச விடுதி,கல்வி உதவித்தொகை என்று அத்தனையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளும் பிற்படுத்தப்பட்டோரும் இந்த கள்ள பரப்புரையில் மயங்கி கிடப்பதுதான் வேதனையானது.

  14. இந்த போராட்டம் நடந்த சில நாளில் பதிவுலகில் உலாவும் சில ‘ரொம்ப நல்லவர்கள்’ மாணவர்களின் போராட்டம் ‘பொதுமக்களு’க்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அவர்கள் ‘நேர்மையான முறை’யில் போராடுவது என்றால் சட்டமன்றத்தையோ அல்லது வேறெதாவது அரசு மையங்களையோ முற்றுகையிட்டிருக்க வேண்டும் என்று புத்திமதி கூறிக் கொண்டிருந்தனர்.

    அவர்களுக்கு இந்நேரத்தில் மிகவும் தாழ்மையுடன் ஒரு கோரிக்கையை உரிமையுடன் முன் வைக்கிறேன்.

    அனுபவம் வாய்ந்த ‘ரொம்ப நல்லவர்களே’, எல்லாருக்கும் நல்லவனாய் இருக்க வேண்டும் என்ற உங்கள் அவா புரிகிறது. அஞ்ஞனமே, ‘முறை தவறி’ போராட்டம் நடத்தி எதிர்ப்பு காட்டிய மாணவர்களுக்கு உங்களது ‘ரொம்ப நல்லவன்’ போராட்ட வழிமுறைகளை கற்றுக் கொடுத்து ‘முறைப்படி’ போராட அவர்களை அமைப்பாக்குமாறு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

  15. சர்வதேச பிரச்னைகளுக்கெல்லாம் கடுமையாக கமென்ட் கொடுக்கும் பலர் இந்த பக்கம் வரவே இல்லையே?ஒருவர் இங்கே வந்து உரிமைகளை சலுகை என்கிறார். சாதி தாண்டாத மனிதநேயம் வாழ்க வளர்க இது தான் இந்தியா.

  16. ஏதோ ஆதி திராவிடர் விடுதிகள் மட்டும் தான் நாறுவது போலவும், மற்றவர்கள்
    பெரு வாழ்வு வாழ்வது போலவும் எழுதி இருக்கிறீர்கள்.

    சென்னை நகரம் முழுவதும் குப்பை மயம். திருவான்மியூர், மயிலை, சைதாப்பேட்டை, ராயபுரம் என பல இடங்களுக்குச் சென்றேன். தவிர ஶ்ரீரங்கம், திருச்சி, கும்பகோணம், குளித்தலை, கோயம்புத்தூர் என சென்ற இடமெல்லாம் ஒரே குப்பை மயம், மூத்திர நாற்றம்.

    இத்தனைக்கும் நடுவில், ஒரு எம்.ஜி.ஆர் சிலை, பெரியார் சிலை, காமராஜர், அண்ணா சிலைகள். அவர்கள் உருவாக்கி வளர்த்த சாக்கடைக் கட்சிகள் அவர்களுக்கு எழுப்பிய சிலைகள்.

    அந்த மூத்திர நாற்ற சுவர்களில் புரட்சித்தலைவி, கலைஞர், ஸ்டாலின் என பகல் கொள்ளைக்காரர்களின், மன்னிக்கவும் கட்சித்தலைவர்களின் விளம்பரங்கள்.

    ஊர் கிடந்து நாறும் போது இவர்கள் வீடு மட்டும் என்ன எப்போதும் மணக்கவா போகிறது?

    இதற்கெல்லாம் முதல் காரணம் மக்கள்தான். பீயில் 10 பைசாவைப் போடுங்கள் அதை எடுத்து அலம்பி பையில் போட்டுக் கொள்வார்கள்.

  17. this mater appeared even in the Hindu also!!!!
    every college have its own hostel. But they never admitted S.C. students in their Hostel on the pretext of insufficient hostel fees given by the Government. even if the S.C. students are agree to pay the fees the college never admitted them. the reason for this every one knows it.
    the S.C student hostel fees are given by the central government not by the state Government. but the maintenance of the hostel is the responsibility of the State Government. but it fails miserably.
    now we may see some solution for this.
    1. Students association must approach the central government to increase the hostel fees , equal to the College hostel fees.
    if they fail the student body may approach the Supreme court to get justice. the student may filed application to the President directly.
    2 student must approach the college administration to admit them in their college itself. if they refused ,student give complaint to the police for this discrimination and filed the case in the court.
    it may seen as a dificult one, but there is no other way.
    For the maintenance of the existing hostel the state government may give it to Suitable N.G.OS. for the proper maintenance,
    or the student association may approach the Madras High Court to interfere in this mater.
    our society is a caste based society ,it is not easy for S.C. student to get justice from this society , so some rationalist forum may take this mater as their prime projects, to wipe out the tears from the every one eyes.thanks for this forum.

  18. சகோதரர் திருமா அவர்கள் தன் இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக நடத்திய போது அவர் பிழைகள் குறைந்த, எதிர்பார்ப்புகள் நிறைந்த மனிதராகவே தெரிந்தார் நமக்கு! ஆனால் அவரின் அமைப்பை, அரசியல் இயக்கமாக என்று மாற்றினாரோ அன்றே அவரின் சறுக்கல் ஆரம்பமாகிவிட்டது! பாராளுமன்றம் என்ற பன்றிகளின் தொழுவத்தில் தனக்கும் ஒரு இடம் வேண்டும் என்று அவர் முயற்சித்ததின் விளைவு, நந்தனாரை எரித்த தில்லையம்பலத்திலேயே அரை நிர்வாணமாகப் போய் பார்ப்பன அட்டைகளிடம் வாக்குப் பிச்சை கேட்டார். அவர் சீரழிவின் உச்சமே அதுதான்! அதன் பிறகு ஒரே ஏறுமுகம் தான், சீரழிவை நோக்கி! என்றாலும் அவரை பகைவராகக் காண ஏனோ நம் மனது இடம் தரவில்லை! ஆற்றாமையும் எதிர்பார்ப்பும் இருப்பதாலே இந்த விமர்சனம் அவர்மேல்! ஆனால் இரவிக்குமார் நிலமை முற்றிலும் வேறு! அவர் ஒரு முழுநேர பார்ப்பன அடியாள் போலவே செயல் படுபவர்! இந்த இருவரும் ஒரே அரசியல் இயக்கத்தில் இருந்தாலும் இருவரையும் ஒன்றாகப் பார்ப்பது சரியாகப் படவில்லை! தான் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து திருமா அவர்கள் பின்விலகுதாலேயே தாழ்த்தப் பட்ட மாணவர்களூக்கு நேர்வது இந்த அவலம். இந்தப் போராட்டத்துக்கு தலைமையேற்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் அவர், போராட்டத்திலிருந்து விலகியிருப்பது மன்னிக்க முடியாத ஒன்று!
    சகோதரர் திருமா அவர்கள் தயவுசெய்து தன் விமர்சனம் ஏற்கவேண்டும்! தன் கடமையை உணர வேண்டும், களத்தில் இறங்கிப் போராடாவிட்டாலும், தன்னால் முடிந்ததையாவது மாணவர்களூக்குப் பெற்றுத் தர வேண்டும்! காலத்தால் செய்த உதவி போல, தோழர் வினவின் இந்தப் பதிவு அவலத்தில் உழலும் மாணவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் என்பது உண்மை! காசிமேடு மன்னாரு.

  19. //52 அறைகளில் 595 மாணவர்கள் தங்க வேண்டும் என்ற அரசின் கணக்கே அளவுக்கு அதிகமானது எனும்பொழுது, இப்பொழுது அந்த 52 அறைகளில் 1,600 மாணவர்கள் (ஒரு அறைக்கு 30 மாணவர்கள்) அடைபட்டுக் கிடக்கும் அவலம்.” //

    இந்த அறைகளில் தங்கியிருப்பவர்கள் அனைவரும் “மாணவர்கள்” அல்ல என்ற விவரத்தை இந்த கட்டுரை சொல்லவில்லை. முழு விவரத்தையும் Frontline பத்திரிகையில் வெளியான கட்டுரையில் காணவும்.

    http://www.frontlineonnet.com/fl2802/stories/20110128280209000.htm

    http://www.hindu.com/2011/02/17/stories/2011021753980700.htm

    இந்த அவல நிலையைப் பற்றி அநேக தொண்டு நிறுவனங்கள் எழுதியும் பேசியும் வருகின்றன. (உதாரணம் – “பாடம்” நாராயணன் போன்றவர்கள்)

    http://paadam.in/
    (May 2010 Issue)

    படித்தும் வேலை கிடைக்காததால் இத்தகைய விடுதிகளிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஒரு வழி பிறந்தால்தான் உண்டு.
    மேலும் சமூக விரோத சக்திகளும் இத்தகைய விடுதிகளை முறைகேடாக பயன் படுத்துவதை தடுக்க வேண்டும்.

  20. திருமா அரசியல் சாக்கடையில் கால் வைக்காத காலத்தில் அவருடன் இருந்த மார்க்சிய லெனினிய பின்புலம் கொண்ட தலித் இளைஞர்கள் இன்று அவரிடையே இல்லை பொறுக்கிகளும் லும்பன்களும் சாதி வித்யாசம் இல்லாமல் அவர் கட்சியில் இணைகின்றனர் குறைந்த பட்ச தகுதியே ஒரு கொலை செய்திருக்க வேண்டும் என்பதாய் பதவிகள் கொடுக்கப்படுகிறது.பெரிய கார் வீடு என்று அடுத்தவனை மிரட்டி சம்பாதிப்பதை ஒரு அரசியல் ஆக மாற்றிய அவரிடம் இதை எதிர்பார்ப்பதே தவறு.மாணவர்கள் ஒன்றுபடகூடாது என்று தனித்தனி விடுதிகள் கட்ட யோசித்த வேசிமகனின் தந்திரத்தைதான் இன்னமும் வியக்கிறேன்.

  21. ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு,இலவச விடுதி போன்றவை அவர்களது உரிமை என்பதை மறுத்து ”சலுகை” என்று பொதுப்புத்தியில் ஏற்றுவதற்காக தொடர்ச்சியாக நடத்தப்படும் வஞ்சக பரப்புரையின் ஒரு பகுதியே இது போன்ற பின்னூட்டங்கள்.இந்த இட ஒதுக்கீடு ,இலவச விடுதி,கல்வி உதவித்தொகை என்று அத்தனையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளும் பிற்படுத்தப்பட்டோரும் இந்த கள்ள பரப்புரையில் மயங்கி கிடப்பதுதான் வேதனையானது……..WELL SAID THIPPU A FACE SLAMMING FACT.

  22. நண்பன் ஒருவனை பார்க்க சில மாந்தங்களுக்கு முன் சைதாபேட்டை விடுதிக்கு சென்றிருந்தேன். சுவர்களின் ஓரங்களில் சாம்பார் கொட்டப்பட்டு இருந்தது. துர்நாற்றம் வீசியது. இப்பதிவின் மூலம் மாணவர்களின் நிலையை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி!

  23. மன வேதனையோடு ஒரு விஷயம் சொல்கிறேன்.

    ஆதிதிராவிடர்-பழங்குடியினர் சலுகை நம் அனைவருக்கும் தெரிந்ததே, அது ஏன்?

    ஏனென்றல், அவர்கள் வாழ்க்கை தரம் குறைந்து காணபட்ட காலம், விழிப்புனர்வு இல்லாமலும், கல்வியறிவு இல்லாமலும் இருந்தனர்.

    அரசு உதவி மூலம் தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும், என்னும் அடிப்படையில் வழங்கப்பட்டது. அதை முறையாகப் பயன்படுத்தி முன்னெறிவர்களை நான் கண்டுள்ளேன். பிறர் வளர்வதற்கு உதவுவதையும் கண்டுள்ளேன்.

    ஆனால் சிலர் அதை முறைதவறி பயன்படுத்தி அழிந்ததையும் கண்டுள்ளேன்.

    மேலும் வளர்ந்துவிட்ட சிலரோ தான் அதிகமாக வளர்ந்துவிட்டதக வெளிபடுத்த நினைப்பதும் கவலைகூறிய விஷயமே. அதனாலேயே சிலர் ஒதுக்கியே வாழ்வதற்கு காரணமாகிறார்கள் என்பதை வருத்ததுடன் கூறுகிறேன்.

    கர்வபடுவதை விட்டு, தன் சமுதாயத்திற்கு அற்றவேண்டிய காடமையில் கருத்து கொண்டால், அனைவராலும் போற்றபடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

    அண்ணல் அம்பேத்கரை நினைக்கும் போது அவர் ஆற்றிய சேவைகளையும் காருத்தில் கொள்ளுதல் நலம் தரும்.

  24. அநியாயம் நடக்காத இடமே இல்லையின்னு ஆகிபோச்சு. அநியாயத்தை ஒழிக்க.அட.தட்டி கேட்க வாவது.எத்தனை பேர வருவீங்க! எத்னி பேருக்கு தகிரியம் இருக்கும்

  25. சென்னை நகரம்திருச்சி, கும்பகோணம், குளித்தலை, கோயம்புத்தூர் ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள்: அரசின் வதைமுகாம்கள் ஊர் கிடந்து நாறும் போது இவர்கள் வீடு மட்டும் என்ன எப்போதும் மணக்கவா போகிறது?அடித்தட்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டிய கடமையை அரசு புறக்கணிக்கிறது

  26. நாமனைவரும் சாதியை அழித்து தீயிட்டு
    சாதித்திட பிறந்தவர்கள் ஆவோம்.
    இதை இவ்வரசு உணராவிட்டாலும் நாமனைவரும் இவ்வரசுக்கு உணர்த்திட போராடுவோம்…

    அன்புடன்…. மணி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க