Sunday, November 27, 2022
முகப்புஅரசியல்ஊடகம்பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம்! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!!

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம்! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!!

-

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !
போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!
கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!!

” அவனுங்க எல்லாம் பொறுக்கிப்பசங்க, பஸ்ஸ¤ல பாட்டு பாடறது, புட் போர்ட் அடிக்குறது, வம்பு பண்றது இதுதான் வேலை, பஸ் டே வேணுமாம் இவனுங்களுக்கு? போலீஸ் அதான் உள்ள பூந்துட்டானுங்க, ரவுடிப்பசங்க போலீசையே அனுபிச்சுட்டான் பாரு “

23ம் தேதி காலையில் போலீஸ் புகுந்ததும், மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் முகப்பிலே தலைப்புச்செய்தியாகபெரும்பான்மையான பத்திரிக்கைகளின் வெளியாகி இருந்தது. அதைப்படித்த மற்றும் 22ம் தேதி தொலைக்காட்சியில் அச்செய்தியை கவனித்த பலரின் எண்ணங்களில் உதித்தவை மேலே கூறிய வார்த்தைகளாகத்தான் இருக்கும்.

ஒரு கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது. ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா? லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா?

மேலே வெளிப்பட்ட வார்ர்த்தையின் வடிவத்தை மட்டுமே மாற்றியமைத்து ஒவ்வொருமுறையும் வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள் , மீனவர்கள், என போராடும் மக்கள் மீது போலீசு நடத்தும் கொலை வெறியாட்டத்தை நியாயப்படுத்தி ஊடகங்கள் முதல் பலரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ” குளிக்கும் போது கோபிகையர்களின் உடைகளைத் திருடி மானபங்கப்படுத்தியவன், திரவுபதிக்கு சேலையைக் கொடுத்தானாம்”. கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பது போலல்லவா இருக்கிறது.

இப்போது 23-ம் தேதிக்குச் செல்வோம், எழும்பூரில் 1.30 மணிக்கு கிளம்பிய பேருந்திற்கு மாணவர்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுத்து “பஸ் டே” விழாவை கொண்டாட வந்தவர்கள் ஆனால் அவர்களை போலீசு அடித்து பேருந்திற்குள் திணித்தது. பேருந்து கல்லூரியை நெருங்கும் போது கல்லூரிக்கு வெளியே மாணவர்களை தாக்க வேண்டும் என்ற முன்திட்டத்தோடு (preplan) ஆயுதப்படை போலீசு குவிக்கப்பட்டிருந்தது மாணவர்களுக்குத் தெரியவில்லை. வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்குள்சென்று பச்சையப்பன் சிலைக்கு பால் மற்றும் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.

ஏற்கனவே கல்லூரிக்குள்ளும் முன்திட்டத்தோடு குழுமியிருந்த போலீசுப்படையின் டி.சி லட்சுமி மீது தண்ணீர்த்துளிகள் பட்டதும் “லத்தி சார்ஜ்” ஆரம்பமானது. தப்பி ஓடிய மாணவர்களை வெறிகொண்டு தாக்கியது போலீசு கும்பல், அறிவியல் பிரிவு கட்டிடத்திற்குள் (science block) தஞ்சம் அடைந்த மாணவர்களை பூட்டியது. பின்னர் உண்மையில் எதற்கு வந்தார்களோ அந்த வேட்டைக்குக் கிளம்பியது.

கலைப்பிரிவு கட்டிடத்திற்குள் (arts block) நுழைந்தன வெறிபிடித்த மிருகங்கள், ஓங்கிய லத்திக்கம்பு பச்சையப்பன் அறக்கட்டளையின் நிறுவனரான பச்சையப்பனின் சிலையை பதம் பார்த்தது. கண்ணில் பட்ட பேராசிரியர்களுக்கெல்லாம் லத்திக்கம்பு பாடம் எடுத்தது, ரத்தக்கணக்குச் சொல்லிக்கொடுத்தது. வெறியடங்காத ஓநாய்கள் அலுவலகப்பணியாட்களையும் அடித்து நொறுக்கின. கலைப்பிரிவின் மேசைகள், மின்விளக்குகளென என்னவெல்லாம் சிதைக்கப்பட முடியுமோ அனைத்தும் சிதைக்கப்பட்டது.

தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது. தோட்டத்திற்கு தண்ணீரைப்பாய்ச்சி தன் வியர்வையை சிந்திய பணியாளின் ரத்தக்கவுச்சி அறைகூவியது, தினமும் காலையில் புன்சிரிப்புடன் “தம்பி” என உரிமையோடு அழைக்கும் அலுவலகப்பணியாளின் அழுகை, கண்ணீர் எல்லாம் ஒன்று சேர்ந்து மாணவனை போர்க்களத்திற்கு இழுத்து வந்தது.

அவர் அந்த ஆசிரியர் மதிப்பெண் போடமாட்டார், அவர் எப்போதும் ஆப்செண்ட் போடுவார் , என்ற எண்ணங்கள் எல்லாம் மறைந்து போய் உண்மையாக மாணவர்களாக களமிறங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மீண்டும் காவல் துறை மாணவர்களை கல் கொண்டு தாக்கியது, அதை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள் மாணவர்கள். வெறியடங்காத போலீசிடம் மாணவர்களுக்காகவும், அத்துமீறி நுழைந்ததற்காகவும் சண்டையிட்டார்கள் பேராசிரியர்கள். மதியம் 2.15க்கு தொடங்கிய வெறியாட்டம் 3.30 வரை நீடித்தது.

இணை ஆணையர் சாரங்கனோ தாக்குதலை நியாயப்படுத்தினார். அவரிடம் “ஏன் சார் இப்படி ரவுடித்தனமா நடந்துக்குறீங்க?” என்றனர் பேராசிரியர்கள். அதற்கு “நீ நிறுத்துறீயா? நான் நிறுத்துறேன்?” என்றிருக்கிறார். என்னவோ இரு ரவுடிகள் பேசிக்கொள்வது போல பதிலளித்து இருக்கிறார் இணைஆணையர் சாரங்கன். மாணவர்கள் மீது வழக்கு பதியப்படாதென அவர் உறுதியளித்ததன் பேரில் உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

காவற்படை தாக்குதலில் படுகாயமுற்ற பல மாணவர்கள் கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கேயும் போலீஸ் மிரட்டியது, அவர்களுக்கு மருத்துவம் செய்யக்கூடாது என நிர்வாகத்தை நிர்பந்தித்தது. ஒவ்வொரு வருடமும் பீஸ் கூட கட்ட வக்கற்ற அந்த ஏழை மாணவர்கள் ரத்தம் சிந்தியபடி அலைந்தார்கள். ஆறாத ரத்தத்துடன் அலைந்தபடியே வேறுவழியின்றி வீடுகளுக்கு சென்றார்கள்.

இதோ காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டிருக்கிறது மாணவர்களுக்கு மட்டும், வேலை நாளாக கணக்கு காட்டிவிட்டு கல்லூரியில் கையெழுத்து போட்டுவிட்டு வெதுப்பிக்கிடக்கிறார்கள் ஆசிரியர்களும், அலுவலர்களும். 170 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை , எளிய மாணவர்களுக்காக திறந்திருந்த அக்கல்லூரியின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. விடுதிகளில் இனி இடம் கிடைக்குமா என தள்ளாடிக்கொண்டிருக்கிறர்கள் மாணவர்கள். வெளியே ரத்தவெறியோடு காத்திருக்கிறது போலீசு.

ஆம் உண்மைதான், தள்ளாடிக்கொண்டிருக்கிறது மாணவர் சமூகம், ஆறாத செங்குருதியோடு உலாவிக்கொண்டிருக்கிறது.

பச்சையப்பன் கல்லூரி பஸ் டே

ஏற்கனவே வெளியே அடித்த போலீசு ஏன் கல்லூரிக்குள்ளும் நுழைந்து மாணவர்களையும் அவர்களோடு பேராசிரியர்களையும் பணியாட்களையும் தாக்கியது? ஏன் அறிவியல் கட்டிடத்திற்குள் புகுந்து பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள மேசைகளையும், மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கியது? எதற்காக பச்சையப்பனின் சிலையை உடைத்தது? ஆயிரம் கேள்விகள் எழும் அதற்கு பதிலாக சாரங்கன் சொன்ன பதிலை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.

” நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன் “

எதை நிறுத்தச்சொன்னார் இணை ஆணையர்? இதற்கு காலத்தினை சற்று பின்னோக்கி சுழற்றுவோம். மெட்ரோ ரயில் திட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரியின் நிலம் அபகரிப்பதற்கான எல்லா வேலையும் நடந்து முடிந்து விட்டன. 170 ஆண்டு காலம் ஓங்கி வளர்ந்த மரங்கள், நிமிர்ந்த கட்டிடங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பொது மக்கள் பிரச்சினைக்காக குருதி சிந்திய இந்த செம்மண், தங்கள் ஊண், உயிரான உருவான பச்சையப்பன் கல்லூரி, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்தக்கொடூரம் நிகழ்ந்தே விட்டது, பச்சையப்பன் சிலை வரை முதற்கட்டமாக அடித்து நொறுக்கப்படும் என்ற செய்தி அவர்களின் கண்களை பணிக்க வைத்தது.

பேராசிரியர்கள் உண்ணாவிரமிருந்து எதிர்ப்பைக் காட்டினார்கள், அவர்களுக்கு பக்கபலமாய் களத்திலிறங்கினார்கள் மாணவர்கள், தொடர் பிரச்சாரம் மூலம் பச்சையப்பன் கல்லூரியின் நிலப்பறிப்புக்கெதிராய் போராடினார்கள், போராடிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆதரவு மக்களுக்காக மாறிய அச்சமயத்தில், திட்டமிட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் , ரவுடிகள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு, தாக்குதலையும் நிகழ்த்தியிருக்கிறது காவல் துறை. 400 மாணவர்கள் மீது பத்திற்குமேற்பட்ட வழக்குகளைத்தொடுத்து யாரும் நில அபகரிப்பிற்கெதிராய் பேசக்கூடாதென்கிறது கருணாநிதியின் போலீசு.

பூந்தமல்லி சாலையில் அமையவுள்ள இந்த மெட்ரோ ரயில்திட்டப்பாதை முன்னர் இடது புறம் தான் திட்டமிடப்பட்டது, பின்னர் இடது புறம் முழுக்க பெருமுதலாளிகளின் சொத்து என்பதால் அவர்களின் செல்வ’ வாக்கில் முழுக்க முழுக்க அரசின் இடங்களாக இருக்கும் வலப்புறத்திற்கு மாற்றப்பட்டது. சில முதலாளிகள் ஊரை அடித்து உலையில் போடுவதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கக்கூடியபச்சையப்பன், கந்தசாமி நாயுடு, செல்லம்மாள்ஆகிய கல்லூரிகளின் நிலங்கள் முதற்கட்டமாக அபகரிக்கப்படப்போகின்றன. மூன்று கல்லூரிக்கும் ஒரே அறக்கட்டளை என்பதால் அலேக்காக தூக்கி கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள்.

இந்த ரயில்திட்டப்பாதை செல்லும் இடங்களெல்லாம் நேரு பூங்கா, கேஎம்சி மருத்துவமனை, நெய்வேலி இல்லம், ஆகிய அரசு மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்விடங்களே. அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களை வெளியேற்றி விட்டு பணக்காரர்களுக்காக சிங்காரச்சென்னை உருவாக்கப்படுகின்றது. சென்னையின் நெரிசலைக் குறைக்கிறேன் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் யாருக்காக? ஏழை எளிய மக்களுக்காகவா? அங்கு சீசன் டிக்கெட் எடுத்துகொண்டு போக முடியுமா? இல்லை, அது முற்றிலும் உண்டுகொழுக்கும் பணக்காரர்களுக்கானதே! ஏசி வசதியுடைய ரயில்கள்தான் வரப்போகின்றன மெட்ரோ ரயில் திட்டத்தில்.

அன்னிய முதலீடுகள் இந்தியாவிலே தங்குதடையின்றி நுழைய வேண்டுமென்றால் அதற்கு ஏசி பேருந்துகளும் ஏசி ரயில்களும் தங்க நாற்கரச்சாலை திட்டங்களும்தான் தேவைப்படுகின்றன. அதற்குத் தடையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. காசுமீர் முதல் பச்சையப்பன் கல்லூரி வரை பன்னாட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கின்றன விழுங்குவதற்காக.

காசுமீரை அபகரிக்க உள்ளே நுழைந்த ராணுவத்திற்கும், பச்சையப்பன் கல்லூரியை அபகரிக்க உள்ளே நுழைந்த கருணாநிதி போலீசிற்கும் என்ன வித்தியாசம்? நோக்கம் ஒன்று தான் !. இந்திய தரகுமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராணுவத்தை ஏவி சேவை புரிகின்றது மத்திய அரசு, பச்சையப்பன் கல்லூரியை அபகரித்து ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம் கொழுப்பதற்காக மானங்கெட்ட கருணாநிதி அரசு முண்டியடிக்கிறது. தேசம் காக்கப் போராடும் காசுமீரிகளை தீவிரவாதிகளாகவும், தாராவி போன்ற சேரிகளில் வாழும் உழைக்கும் மக்களை திருடர்களாகவும் சித்தரிக்கும் அதே ஊடகங்கள்தான் கல்லூரியைக் காக்கப் போராடும் மாணவர்களை ரவுடிகள் என்கிறது. ” சென்னையின் மத்தியில் இப்படிப்பட்ட கல்லூரி தேவையா? ” என எழுதுகிற பத்திரிக்கைகளின் நோக்கம் இனியும் நமக்குப் புரியாமலிருக்கப்போகின்றதா என்ன?

ஈராண்டுகளுக்கு முன்புவரை “ரூட்” பிரச்சினைக்காக அடித்துக்கொண்ட மாணவர்கள் தற்போது வேறுபாடுகளை மறந்து கல்லூரியைக்காக்க களத்தில் நிற்கிறார்கள். அதனால்தான் தங்களினுடைய ஆசிரியர்களின் கதறல்களை பொறுக்கமுடியவில்லை அவர்களால். தாங்கள் ஓடிப்பிடித்து விளையாடிய கல்லூரி மைதானத்தை, சோற்றுக்கே வழியின்றி இருந்த தங்களுக்கு வாழ்வளித்த கல்லூரி நொறுக்கப்படுவதை, தாங்கள் சாய்ந்திருந்த இருக்கைகள், எழுதி கிறுக்கிய மேசைகள் எல்லாம் உடைக்கப்படுவதை அவர்களால் பொறுக்கமுடியாது கிளர்ந்தெழுந்து பேராசிரியர்களையும், கல்லூரி அலுவலர்களையும் காத்தார்கள் மாணவர்கள்.

உடைக்கப்பட்டது பச்சையப்பன் சிலை மட்டுமல்ல அது நம் வாழ்வுரிமையை உடைப்பதாய் உணர்கிறார்கள் மாணவர்கள். சிலையுடைப்பின் தொடர்ச்சி கல்லூரி அபகரிப்பில் முடியுமென்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள். அதனால்தான் இப்போதும் உறுதியாய் களத்தில் நிற்கிறார்கள்.

இது ஏதோ “பஸ் டே” பிரச்சினை என்று மட்டும்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. இது பஸ்டே பிரச்சினை அல்ல என்பது மற்றவர்களை விட இணை ஆணையர் சாரங்கனுக்கு நன்றாகவே தெரியும். இதே பச்சையப்பன் கல்லூரியில் 81-ம் ஆண்டுப்பிரிவில் படித்த அவர் எத்தனை பேருந்துகளை உடைத்து இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருக்கிறாரா தெரியவில்லை. தாங்கள் மாணவர் பருவத்தில் செய்த சிறுசிறு தவறுகளைத்தான் இப்போதைய மாணவர்களும் செய்கிறார்கள். அப்போது இனித்தது, இப்போது கசக்கிறது. இழுத்துப்போட்டு மாட்டைப்போல் அடிப்பதால் மட்டும் இப்பிரசினை தீர்ந்து விடப்போவதில்லை. மாணவர்களை கலாச்சார ரீதியிலேயே மாற்ற வேண்டியிருக்கிறது. ஆக ஒரு விசயம் மட்டும் தெளிவாகப் புலனாகிறது பஸ்ஸிலே ரூட் அடிப்போருக்கும் , கல் விடுவோருக்கும் எந்த வேலை கிடைக்கிறதோ இல்லையோ இணை ஆணையர் பதவி கண்டிப்பாய் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது.

NDTVக்கு பேட்டியளித்த இணை ஆணையர் சாரங்கன் ” மாணவர்கள் இந்த அளவுக்கு எதிர்ப்பை காட்டுறங்கன்னா உள்ள ஏதோ சக்தி அவங்கள இயக்குது” என்றார். அவருக்குத்தெரியுமோ தெரியாதோ நமக்குத் தெரியாது. அந்த சக்திக்குப்பெயர் “மாணவர் சக்தி “. தன் கல்லூரி ஆசிரியர்கள் தாக்கப்படுகையில், தன் கல்லூரி அடித்து நொறுக்கப்படுகையில், தன்னைப்போன்ற ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளுக்காக அது எரிமலையாய் வெடித்துக்கிளம்பும்.

மாணவர்களுக்காக ஆசிரியர்களும், ஆசிரியர்களுக்காக மாணவர்களும், இருவரும் கல்லூரிக்காக போராடும் தருணம் வந்து விட்டது. இதை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கையிலே அத்தருணத்திலே கூட போராடும் மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் போராடினார்கள்-போராடுகிறார்கள்-போராடுவார்கள்.
நிகழ்காலத்தின் நிகழ்வுகள் தான் வரலாறாய் மாறுகின்றன. இந்தி எதிர்ப்புப்போரில் முக்கியக் களமாய் நின்ற பச்சையப்பன் கல்லூரியின் பழைய மாணவர் வரலாறு மீண்டும் திரும்புகிறது.

மாணவர்களாக, முன்னாள் மாணவர்களாக, பேராசிரியர்களாக, அலுவல பணியாளர்களாக, மனசாட்சியுள்ள மனிதர்களாக, உழைக்கும் மக்களாக ஒன்று சேர வேண்டிய நேரமிது. ராணி மேரிக்கல்லூரி மாணவிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தை நினைவு கூர்வோம். ” கடந்த நேரமும், தவறவிட்ட வாய்ப்பும்” மீண்டும் கிடைப்பதில்லை. இந்த நல்ல’ நேரத்தைப் பயன்படுத்தி மாணவ-பேராசிரியர்களுக்குத் தோள் கொடுப்போம். இல்லையெனில் கொடுக்கப்பட்ட வாய்ப்பு இறந்த காலமாகிவிடும்.

இதோ !!!!

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உங்கள் தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில் கல்லூரியைக் காக்கும் போராட்டத்தில் உங்களையும் அழைக்கிறார்கள். உங்களை மீண்டும் மாணவ பருவத்திற்கு ஒரே ஒரு முறை கொண்டு செல்லுங்கள். இப்போது சொல்லுங்கள் என்ன செய்யப்போகிறோம் நாம் ?

_________________________________________________________

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு) , சென்னை
_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 1. பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் ! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம் !! | வினவு!…

  பச்சையப்பன் கல்லூரி மாணவர் மீதான போலிசுத் தாக்குதல்: பஸ் டே கொண்டாட்டம்தான் உண்மைக் காரணமா ?…

 2. ஆக்கபூர்வமாக செலவழிக்க வேண்டிய சக்தி இப்படி அநியாயமாக சீரழிக்கப்படுகிறதே..

  //ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உருவான அந்த அறக்கட்டளையை இழப்பது பற்றி மாணவர்களும் பேராசிரியர்களும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. //

  மாணவ-பேராசிரியர்களுக்குத் தோள் கொடுப்போம் நாமும்..

 3. “தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது. தோட்டத்திற்கு தண்ணீரைப்பாய்ச்சி தன் வியர்வையை சிந்திய பணியாளின் ரத்தக்கவுச்சி அறைகூவியது, தினமும் காலையில் புன்சிரிப்புடன் “தம்பி” என உரிமையோடு அழைக்கும் அலுவலகப்பணியாளின் அழுகை, கண்ணீர் எல்லாம் ஒன்று சேர்ந்து மாணவனை போர்க்களத்திற்கு இழுத்து வந்தது.”
  ஆம். இது உண்மை, இது விரைவில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கிடை உள்ள பாகுபாடுகளை களைந்து, மாணவர் வர்க்கமாய், ஒண்றினைந்து போராடும்

 4. இப்பொழுது தான் புரிகிறது.. வினவிற்கு நன்றி..

  சட்டகல்லூரி வாசலில் 5 அடி தூரத்தில் ஒரு மாணவனை அடித்தபொழுது வேடிக்கை பார்த்தவர்கள் அனுமதியில்லாமல் உள்ளே போக கூடாது என்று.. மனித நேயத்தை குழி தோண்டி புதைத்தவர்கள் இந்த காவல்துறையினர்.

  பச்சையப்பா கல்லூரி இது வரையில் பல அரசியல்வாதிகளையும் சமூக சேவகர்களையும் வழங்கியுள்ளது. பல மக்கள் போராட்டங்களிலும் மாணவர் போராட்டங்களிலும் முன்னால் நின்ற கல்லூரி அதன் மாணவர்களுக்கு என்றுமே சக்தி அதிகம் அவர்களுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று சங்கரன் சொல்வது 1981க்கு முன்னால் அவர் கல்லூரிக்கு காலையில் போகும் பொழுது ஒரு இருமாப்புடன் சென்றிருப்பார் அந்த நாளை நினைவுகூர்ந்தால் விசாரித்து தேடி அலைய வேண்டியதில்லை தன்னாலேயே உணர்ந்து கொள்ளுவார்..

  • Mr Hariharan,

   Ippo enna solla vareenga?
   Police vediakkai paakkanumaa, illa udanae action edukkanumaa???
   U r supporting porikki pasanaga and not students. Mind it….

  • சென்னையில் மெட்ரோ ரயில் 14000 கோடி ரூபாய் செலவில் கட்டபடுகிறது. இன்னும் இரண்டு புதிய மெட்ரோ வழிகள் (மூலக்கடை டு திருமங்கலம், திருவான்மியூர் – ரூ 4000 கோடிக்கு மேல் )

   ஆனால் செங்கல்பட்டு – திண்டுக்கல் ரயில்வே திட்டம் என்னவாயிற்று ? ஏன் தமிழா அரசாங்கம் ஒரு 500 கோடி தரக்கூடாதா ?

   அல்லது மதிய அரசாங்கத்தை போராடி கேட்டு பெற முடியாதா ??

   தன் குடும்ப வருவாய்க்கு டெல்லி சென்று பல நாட்கள் தங்கும் தெருனாநிதி, விழுப்புரம் – திண்டுக்கல் இரட்டை பாதைக்கு பணம் பெற நடவடிக்கை எடுக்க முடியாதா ?

   கர்நாடக அரசு 2500 கோடி மாநில பங்கு, 2500 கோடி மத்திய பங்குடன் மாநிலம் முழுவதும் ரயில்வே திட்டம் செய்கிறதே ? அது எப்படி ?

   சென்னை மட்டும் தான் தமிழகமா ?

   சேது திட்டம் – வராது என்று தெரிந்தும் ரூ 2000 கோடி கடலில் கொட்டியாச்சு. TR பாலு அடித்தது போக மீதம் தலைவர் தெருனாநிதி குடும்பத்துக்கு !!! இந்த பணத்தில் கொஞ்சமாவது தென் மாவட்ட ரயில்வே திட்டங்களுக்கு தந்து இருக்கலாமே ?

   சென்னையில் எத்தனை பாலங்கள் ? ரோடு அதே ரோடு தான் !!! ஆனால் எதற்கு இத்தனை பாலங்கள் ? கொள்ளை அடிக்கவா ?

 5. இந்த கட்டுரையை வலையேற்றியது பு.ம.இ.மு., தோழர்களா? அல்லது தோழர்.விடுதலையா?
  தமிழரங்கத்தில் இந்த கட்டுரையை போட்டு நன்றி விடுதலை என போட்டுள்ளனரே?

 6. மீனவர்களின் கொலைகளுக்கு தோள் கொடுக்காத மாணவர்கள்;
  ஏழைகளின் வயிற்றிலடிக்கும் விலைவாசி உயர்வுக்கு குரல் கொடுத்து பொங்கி எழாத மாணவர்கள்;
  ஊழல் பெருச்சாளிகளை கண்டுகொள்ளாத மாணவர்கள்;
  துனீசியாவிலும், லிபியாவிலும், அரபு நாடுகளிலும் கிளர்ந்தெழுந்த மாணவர்களுக்காக தோள் கொடுக்காத மாணவர்கள்;

  இவர்களின் பிரச்சினைகளுக்கு மட்டும் பொதுமக்கள் ஒத்துழைத்து போராட வேண்டும் என்று எந்த விதத்தில் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

  கட்டுரையின் ஆரம்பத்தில் மாணவர்கள் ‘பஸ் டிக்கெட்’ எடுத்துத்தான் ‘பஸ் டே’ கொண்டாடினார்கள் என்கிற உங்கள் கூற்று, அந்தக் கொண்டாட்டத்தை நியாப்படுத்துவதுபோல படுகிறது. காதலர் தினத்துக்கும், ‘பஸ் டே’க்கும் என்ன கலாச்சார வித்தியாசம் என்பது புரியவில்லை.

  கட்டுரையாளர் ‘பஸ் டே’ கொண்டாட்டத்தைக் கண்டித்து, பின்பு, நில அபகரிப்புக்கான போராட்டத்தில் கலந்து கொள்ள மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தால், அதில் நியாமிருக்கிறது.

  மாணவர்கள் தவறு செய்வதை கண்டிக்கவும் வேண்டும்; அதே சமயம் அவர்களின் நியாமான போராட்டத்துக்கு உதவவும் வேண்டும்.

  இந்தக் கட்டுரையில் எனக்கு உடன்பாடில்லை.

  • //மீனவர்களின் கொலைகளுக்கு தோள் கொடுக்காத மாணவர்கள்;
   ஏழைகளின் வயிற்றிலடிக்கும் விலைவாசி உயர்வுக்கு குரல் கொடுத்து பொங்கி எழாத மாணவர்கள்;
   ஊழல் பெருச்சாளிகளை கண்டுகொள்ளாத மாணவர்கள்;
   துனீசியாவிலும், லிபியாவிலும், அரபு நாடுகளிலும் கிளர்ந்தெழுந்த மாணவர்களுக்காக தோள் கொடுக்காத மாணவர்கள்;//

   ஈழப் போரில் மாணவர் போராட்டத்திற்கு அச்சாரமிட்டதே பச்சையப்பா கல்லூரிதான் என்பதை மறந்துவிட்டீர்களா புதிய பாமரன்?

   பஸ் டே கொண்டாட்டம் என்பது அரசுக்கு ஒரு முகாந்திரம் மட்டுமே. அதன் பின்னே இருக்கும் உணை பச்சையப்பா கல்லூரி மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்குவதே ஆகும். பஸ்டேவா இங்கு பரிசீலிக்கப்பட வேண்டிய பிரச்சினை? அவ்வாறு பஸ் டே பிரதான பிரச்சினையாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்றுதானே அரசு திட்டம் போட்டு அன்றைக்கு தாக்குதல் தொடுத்துள்ளது. புதிய பாமரனுக்கு இந்த சதித் திட்டம் புலப்படவில்லையா?

   அடுத்தவனுக்காக போராடியவன் தான் தனக்கான போராட்டத்திற்கு அடுத்தவனின் ஆதரவை கோர முடியும் என்ற தர்க்கம் ஆளும் வர்க்கத்தின் தர்க்கம். அதனை இங்கு புதிய பாமரன் பேசுவது சரியாகுமோ? உண்மையில் தனது பிரச்சினைக்கான போராட்டத்தின் ஊடாக அடுத்தவன் பிரச்சினைக்கும் தனக்கும் எதிரி ஒருவரே என்று அறிந்து ஐக்கியமாவதே நடைமுறை வளர்ச்சிப் போக்கு.

  • //ஊழல் பெருச்சாளிகளை கண்டுகொள்ளாத மாணவர்கள்;
   துனீசியாவிலும், லிபியாவிலும், அரபு நாடுகளிலும் கிளர்ந்தெழுந்த மாணவர்களுக்காக தோள் கொடுக்காத மாணவர்கள்;//

   அவர்கள் எல்லாம் மாணவர்கள்தானே? பொதுமக்கள் இல்லையே? அறிந்து அறியாத இளம் பருவத்தில் சமுதாய யாதார்த்தை உரசிப் பார்க்க கல்லூரிப் படியேறும் மாணவர்களுக்கு புதிய பாமரனைப் போலவே அரசியல் தெளிவும், அறிவு முதிர்ச்சியும் கிட்டும் அழகில்தான் நமது சமுதாயச் சூழலை நாம் பேணி வைத்திருக்கிறோமா என்ன?

   அவனுக்கு தெரிந்தது அவனது பெற்றோர் அவனுக்கு ஊட்டும் பிழைப்புவாதமும், சினிமாக் கழிசடைகள், அரசியல் சொறிநாய்கள் கற்றுக் கொடுக்கும் கழிசடைத்தனமும்தான். இதிலிருந்து அவனை மீட்கும் போராட்டம் ஒரு பக்கம் அதி முக்கியமாக இருக்கிறது என்பதை மறுக்கவில்லை. ஆனால் இவ்வாறு அவன் சீரழிவு கலாச்சாரத்தின் பிடியில் இருப்பதை வைத்தே அவனது நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு கோருவதை ‘ எனக்கு உடன்பாடில்லை’ என்று மறுப்பதை ஆளும் வர்க்க அரசியல் என்றுதான் பார்க்க முடியும். இதே வாதங்கள்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும், ஈழ மக்களுக்கு எதிராகவும், பாலஸ்தீனம், வட கிழக்கு, முஸ்லீம் மக்களுக்கு, காஷ்மீரிகளுக்கு எதிராகவும் வைக்கப்படுகிறது.

   மையமான பிரச்சினை என்று பஸ் டேவை ஆளும் வர்க்கமும், நீங்களும் முன் வைக்கிறீர்கள். மாணவர்களும், வினவும் நகர வளர்ச்சி என்ற பெயரில் கல்விக் கூடம் வீணடிக்கப்படுவதையும், மறுபுறம் நகரத்தின் வளமான சொத்துடமையாளர்கள் பாதுகாக்கப்படுவதையும் முன்னிருத்திருகிறார்கள்.

  • “நீ நிறுத்தறீயா , நான் நிறுத்தறேன்” என்று சாரங்கன் சொன்னது போலத்தான் இருக்குது “நீ போராடுறியா, நான் போராடுறேன்” என்பதும்.

   ‘பஸ் டே’ குறித்த குற்றச்சாட்டுகளைக் கூறுபவர்கள், தோழர் அசுரன் மேலே சொன்ன விடயத்தை புரிந்து கொள்ள முயலவேண்டும்.

  • எல்லவற்றுக்கும் அவன் போரட்டம் நடத்தி கொண்டிருந்தால் அவன் படிப்பு என்ன ஆவது. நீங்க என்ன செய்தீர்கள். மாணவனை வழி நடத்துவதும், அவர்களை காப்பதும் நம் கடமை.

 7. பஸ்டே கொண்டாட்ட கலவரம் என்று அரசு கூறிய பொய்யை நம்பி மாணவர்களை தூற்றிய பதிவுலக நண்பர்களும் தோள் கொடுக்க முன் வரவேண்டும்.

  • குழப்பாதீர்கள். முதலில் பஸ் டே நடத்திய விதம், நடக்கும் விதத்தை கண்டியுங்கள்.
   இவர்கள் தறுதலையாக நடக்காவிடில் போலீஸ் உள்ளே ஒரு கல்லூரி வழகதிற்குள் எப்படி
   நுழைய முடியும்? மாணவர்கள் குறி வைத்து தாகபட்டர்கள் என்பது உண்மையானால் அதற்க்கு வழி வகுத்தவர்கள் இந்த
   மாணவர்கள். எல்லா கல்லூரிக்குமா போலீஸ் நுழைகிறது? அல்லது பச்சையப்பன் கல்லலூரி வழக்கத்தில் தான் போலீஸ் நுழைந்த சம்பவங்கள் எத்தனை?

   தேவையில்லாமல் ஒன்று பிளஸ் ஒன்று பதினொன்று என்று முடிச்சு போட்டு குழப்பாதீர்கள்.

   போலீஸ் அராஜகம் கண்டிக்கபடவேண்டியது. அதே போல் இந்த மாணவர்களின் காடு மிராண்டி தனமான பஸ் டே கொண்டாட்டங்கள்.

 8. //இந்த கட்டுரையை வலையேற்றியது பு.ம.இ.மு., தோழர்களா? அல்லது தோழர்.விடுதலையா?
  தமிழரங்கத்தில் இந்த கட்டுரையை போட்டு நன்றி விடுதலை என போட்டுள்ளனரே?//

  http://vitudhalai.wordpress.com/2011/02/28/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/

  விடுதலையோட தளத்துல புமாஇமுன்னு போட்டுக்குங்கோ…

  • தோழர் அசுரன் சுட்டி காட்டியைமக்கு நன்றி
   தோழர்கள் அனுப்பியதை அப்படியே விடுதலையில் பிரசுரித்துள்ளேன் மற்றபடி அதை நான் எழுதகிடையது, கீழே புமஇமு சென்னை என்றே போட்டிருக்கிறேன், வலையேற்றியதும் அதன் இணைப்பை தோழர்களுக்கு அனுப்பியிருந்தேன்(தமிழரங்கத்துக்கும்) அதனால் நான் எழுதியதாக அவர் நினைத்திருக்கலாம் நான் தமிழரங்கம் செல்லவில்லை தமிழரங்கத்தில் இது பற்றி பின்னூட்டம் இடுகிறேன்

 9. பச்சையப்பன் கல்லூரியின் பஸ் டே கொண்டாட்டங்கள் எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே விவகாரமானவை .எவரையும் அந்த வழியில் போக விடாதவை .நீங்கள் சொன்ன காரணங்களுக்காகவே போலீஸ் நுழைந்தாலும் ,இந்த பஸ் டே என்பதும் அந்த நாளில் நடக்கும் அக்கிரமங்களும் எந்த காரணங்களுக்கும் உட்படாதவை .இது இன்று நேற்று நடப்பதல்ல ..என்னுடைய பள்ளி நாட்களில் இருந்தே(1980) இது நடைபெறுகிறது .எதற்காக என்பதில் எவருக்கும் தெளிவு இல்லை .

  இடம் சம்பந்தமான பிரச்னையை தீர்க்க வேண்டியது கல்லூரி நிர்வாகம் தான் .கல்லூரி டிரஸ்ட் முழுவதும் அரசுக்கு சாதகமானவர்களிடம் இருக்கிறது ,பின் ஏன் இவர்கள் மாணவர்களை இதற்கு ஏவி விட வேண்டும் ?இவர்களே அரசிடம் பேசி சமரசம் செய்ய வேண்டியது தானே ?
  எப்படியோ மாணவர்களை திசை திருப்பும் வேலையை நிர்வாகமும் மாணவர்கள் சிலரும் சேர்ந்தே செய்கின்றனர்

 10. இந்த கட்டுரை…மாணவர்களை அரசுக்கு எதிராய் துண்டிவிடுற மாதிரி இருக்கு…
  விளக்கம் தேவை…
  உங்கள் அரசியலுக்கு மாணவர்களை மூளை சலவை செய்வது போல இருக்கிறது…
  இந்த பிரச்சனைகு கட்டுரையாளர் சொல்லும் தீர்வு என்ன?
  சும்மா பசங்கள ஏத்தி விட்டா போதுமா??/

  இதை பிரசூரிப்பதும்..இல்லததும்…உங்கள் இஷ்டம்….
  எனக்கு ஒண்ணும் இல்லை….

  சரா

 11. “தங்களை அடித்தபோது ஓடிய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தாக்கியபோது வீறு கொண்டெழுந்தார்கள். நேற்றுவரை ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் பிளவுகள் இருந்திருக்கலாம், பிளவுகள் தானாய்ச் சேர்ந்தன, தடைகள் சுக்கு நூறாய் உடைந்தன. ஆசிரியர்களின் கதறல்கள், ஓடி ஒளிந்த மாணவனை திருப்பி அழைத்தது”.

  சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் நுழைந்து வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் காவல் துறை தாக்கிய சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது.

  உண்மை என்னவென்று தெரியாமலேயே “பச்சையப்பன் கல்லூரியும் பன்னாடைப்பயல்களும்” என்று தலைப்பிட்டு பிலாசபி பிரபாகரன் எனபவர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பற்றி ஒரு மோசமான சித்தரிப்பை வலை உலகில் ஏற்படுத்தியுள்ளார். விவரத்திற்குள் செல்லாமலேயே சில பதிவர்களும் வாசகர்களும் அவசரப்பட்டு அவரது கருத்தை ஆமோதித்துள்ளார்ள்.

  இந்தப் பதிவு மாணவர்களுக்கெதிரான அவதூறுகளை துடைத்தெறியும் என நம்புகிறேன். அதே நேரத்தில் பல பதிவர்களை சிந்திக்கவும் வைக்கும்

  ஆழமான ஒரு பரிசீலனையோடு மாணவர் சமூகத்திற்காக வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்!

  • பிலாசபி பிரபாகரன் மட்டுமல்ல். இன்னும் சிலரும் இப்படி பதிவு போட்டிருக்கிறார்கள். கீதா சாம்பசிவம் என்பவரும் உண்டு.

   இவர்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் குருட்டாம்போக்கில் எழுதியிருக்கிறார்கள்

 12. பு. மா .இ .மு.சென்னை

  பச்சையப்பன் கல்லூரியை காப்போம் !
  போராடும் மாணவர்களுக்கு தோள்கொடுப்போம் !
  இந்தக் கட்டுரையை வலை ஏற்றுவதற்காக
  தோழர் .விடுதலையின் தளத்திற்கும் ,
  அனுப்பியது நாங்கள் (பு. மா .இ .மு )தான்
  என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .

 13. எதையும் அரசுக்கு எதிராக சிந்தித்தே வரும் மூளை மழுங்கிகளின் கட்டுரை இது.
  பஸ் டே எனபது பொறுக்கிகளின் கொண்டாட்டங்களுக்கானது
  அதை ஆதரிப்பவன் அனைவரும் பொறுக்கிகளே..

  • you are absolutely right “Marmayogie”. What is this nonsense they are talking about how many millionaire are traveling in Delhi Metro rail as this guy mentioning this metro rail is going to have only A/c coach and only rich people is going to use? utter stupidity. These people are totally twisting the news. if you want to talk about land issue talk about that separately and also sensibly at least you will get some support from the public. Do not justify the bus-day and link this land issue.

  • பஸ் டே கொண்டாடுவது தவறு தான். அதை காரணம் காட்டி மாணவர்களை அடிப்பது எந்தவிததில் நியாயம். இந்தகட்டுரையின் நோக்கமே மாணவர்களை காக்கவேண்டும் என்பதுதான்.

   மேலும் கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதியின்றி காவலர்காள் செல்லகூடது என்பது சட்டதிலும் உள்ளது. உங்களுக்கு தெரியவில்லை என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

   1. பஸ் டே கொண்டாடப்படுவது சாலையில். அதற்க்கான தண்டனை காப்பு அடி என்றாலும், அதை சலையிலேயே கொடுத்திருக்க வேண்டும். கால்லூரிக்குள் சென்று அடித்தது ஏன்?

   ஒரு கல்லுரியில் படிக்கும் அனைவரும் பொறுக்கிகள் அல்ல, இந்த தாக்குதலில் நிரபராதியும் தண்டிக்க பட்டிருப்பான்.

   2. தவறு செய்தவர்கள் மாணவர்கள் என்றால் ஊழியர்கள் மீது தக்கல் ஏன்?

   3. சட்ட கல்லூரியில் கொலையை வேடிக்கைப் பார்த்த காவல் துறைக்கு இன்று புத்தி வந்தது எப்படி?

   4. 1980 க்கு முன்பிருந்தே கொண்டாடப்படும் பஸ் டே இன்று தவறாக போய் விட்டதோ?

   இந்த கேள்விகளுக்கு மட்டும் சரியான விடை இருந்தால் கூறவும்.

   • நாங்களும் 80 களில் பஸ் டே கொண்டாடியிருக்கிறோம். இந்த மாதிரி காடு மிராண்டி தனமாக அல்ல. நாகரிகமற்ற முறையில் அல்ல.
    நமக்கு தினமும் பனி செய்யும் டிரைவர் மற்றும் கண்டக்டர் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இருக்குமே அல்லாமல் , பொது மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அல்ல.

    There are two things.

    1. Police action. 2. Bus day … Who started it first? What prompted the police to enter into the college and take action. Analyze.

    வேலியில் போகிற ஓனானை மடியில் விட்ட கதை இது.

 14. மாணவர் பருவம் என்பது நல்ல செயல்களையும், ஆக்கபூர்வமான சிந்தனைகளையும் கற்கும் வயது. இந்த கல்லூரி வாழ்வில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான் அவர்கள் வாழ்வின் அஸ்திவாரம். அந்த மாணவர் பருவத்தில் படிப்பை கோட்டை விட்டுவிட்டு புரட்சி, எழுச்சி என்று தங்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்புபவர்கள் சமுதாயத்தில் தங்கள் தேவைக்குகூட அடுத்தவரை எதிர்பார்க்கும் அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
  எங்கோ ஒருவர் அதிர்ஷ்டவசமாக சாதித்திருப்பார் ஆனால் அந்த ஆயிரத்தில் ஒருவர் என்ற probability யில் நாம் நிச்சயமாக இருக்கமாட்டோம். படிப்பில் மாணவர்களின் கவனமின்மை, அலட்சியம் அவர்களை தொழில் துறையின் தகுதியற்ற இளைஞனாக உருவாக்குகிறது. பிறகு பசி, பட்டினி, வேலை இல்லா திண்டாட்டம் என்று வரும்போது அவர்களின் கோபம் அரசு மீது திரும்புகிறது. புரட்சி என்று கிளம்பி விடுகிறார்கள்.
  அவாள் எல்லாம் படித்து கரன்ஸியில் குளிப்பார். நம் மாணவ செல்வங்கள், புரட்சி எனும் அட்டை கத்தி கொண்டு கம்பியை எண்ணி கொண்டிருப்பார்களா? இந்த நிலையை ஊக்குவிக்காதீர்கள் வினவு.
  வேரில் வெந்நீரை ஊற்றுவதை நிறுத்துங்கள்.

 15. பஸ் டே எனப்படும் பேருந்து தினம் ( உலகிலேயே ஒரு அதிசயக் கண்டுப்பிடிப்பு ) கொண்டாடுகிறோம் என்றப் பெயரில் அட்டூழியம் செய்து வரும் மாணவர்களை காவலர் கண்டித்துள்ளனர். எது நடந்தாலும், அதனை சாதியம் ஊடாகவும், வர்க்கம் ஊடாகவும் பார்க்கும் மனோபாவத்தி்ன் விளைவே இக்கட்டுரை. சரி ! அப்படியே காவலர் அராஜகம் செய்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம், அப்படி என்றால் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களில் சிலர் பஸ் டே கொண்டாடுவதையும், அதனால் பயணிகளுக்கு இடையூறு செய்வதையும், பொது இடத்தில் ஒழுக்கமற்று நடப்பதையும் வினவு ஆதரிக்கின்றதா ? வர்க்கத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு சரி தவறை சுட்டிக் காட்டி, கல்வியிலும், ஒழுக்கத்திலும் முன்னேற்றம் காணச்ச்செய்து, அவர்களை இந்த சமூகத்தில் பொறுப்பான, உயர்வான மனிதர்களாக மாற்ற வேண்டுமே ஒழிய ! அவர்களை மேலும் உசுப்பேத்தி, காவலருக்கு எதிராக திருப்பிவிட்டு அரசியல் செய்வதையும், இதனால் காவலர்களின் கரங்களுக்கு பலியாவதையும் தடுக்க வேண்டும்…..

  காவலர் செய்தது தவறு என்றால் அதனைச் சட்ட ரீதியாக முதலில் எதிர்க்கொள்ளுங்கள். அப்பாவி ஏழை மாணவர்களை பலிக்கடாவாக்க வேண்டாம். அவர்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்த வேண்டாம்……………………………..

  சமுதாய மாற்றம் வேண்டுமெனில் பிரமண இளைஞன் முதல் தலித் இளைஞன் வரை ஒரே குடையில் ஒன்றாக போராட வேண்டுமே ஒழிய ! ஒரு சிலர் ஐடிக் கம்பெனிகளில் பணியாற்ற, ஒடுக்கப்பட்டவன் மட்டும் ரோட்டில் இறங்கிய போராட வேண்டுமோ. இது தான் உங்களின் சமதர்மமோ !!!

  • சரி இக்பால், சட்டகல்லூரி வாசலில் நின்று வேடிக்கை பார்த்த வெண்ணெய்கள் இங்கு கல்லூரிக்குள் எப்படி சென்றது. சட்டகல்லூரியில் நடந்த கொலை வெறி தாக்குதலை விடவா மோசமாக பஸ்தினம் கொண்டாடினார்கள்..

   எதற்காக இது நடந்தது என்பதை விட எவன் இளிச்சவாயன் என்று பார்த்து அடிக்கிறார்கள் காவல்துறையினர்.

  • sir,

   Ellam seri,, An Pasang Bus la Para

   attuliaytha neea erla pathu irkingala ila anubaivhu irukingala.

   evlov prechanaikal iruku porada. Adha vitutu Unga Manavar Samudhayam Ean Bus day ku ipdi poradudhu..

   Pachayappan collegenu ila, Nandanam Arts, Presidency, Govt Law College, nu Elathalaum idhe prechana tan

   Ladies kita misbheave panradhum nadakudhu… Public ah disturb Pananama Ivanga elraum ena Venalum Panalam.

   Ana adhukum oru limit iruku.

   anbudan
   Rajendran

 16. அடங்கொப்புரானே மெட்ரோரயில் நமக்கில்லையா?சீசன் செல்லாதா?அதப்பத்தியும் விளக்கலாமே

 17. இந்த செய்தி உண்மையாகி விட்டால், ஆட்சியாளர்கள் மனசாட்சி, நியாயம், சட்டம், மக்கள் நலன், கல்வி இவற்றை முதலாளித்துவத்திற்கு முழுமையாக விற்று விட்டார்களா என தெளிவாகும்…

  இப்படியே போனால் சாராய முதலாளிகள், கல்வி முதலாளிகளாகி நடத்தும் கல்வி வியாபார நிறுவனங்கள் மட்டும் நடக்கும் போல் இருக்கிறது… அரசு சாராய கடைகளை நடத்தி மக்கள் சேவை செய்து கொண்டு இருக்கும்…

 18. //ஜப்பானின் ஜிகா-JICA ( மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனம் ) நிறுவனம் கொழுப்பதற்காக//

  1) Japan International Cooperation Agency (JICA) ஒரு கட்டுமானப் பணி நிறுவனம் அல்ல. அது வெளிநாடுகளுக்கு கடன் வழங்கும் வங்கி. வெறும் பணத்தை மட்டும் கொடுத்து விடாமல், தொழில் நுட்பம், திட்டத்தின் செயல்முறை சாத்தியங்கள் என்று அனைத்து விஷயங்களையும் கவனமாக பார்க்கக் கூடிய அமைப்பு.

  2) பச்சையப்பன் கல்லூரிக்கு அருகே அமையவிருக்கும் மெட்ரோ ரயில் தரைக்கு அடியில் அமையவிருக்கிறது.

  3)சென்னையின் மக்கட்தொகை அடர்த்தி சதுர கி.மீ க்கு 24000 பேர். தலைக்கு மேலேயோ, தரைக்கு அடியிலேயோ ரயில் பாதை அமைக்க வில்லையென்றால், இப்பொழுது மணிக்கு 15 கி.மீ வேகத்தில் செல்லும் சென்னை டிராஃபிக் இன்னும் சில வருடங்களில் நடை வேகத்தை விட மெதுவாகிவிடும்.

  4)”பஸ் டே” கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடிக்கும் கூத்தை இப்பொழுதல்ல, 1977- 80 வரை (வைஷ்ணவ கல்லூரி மாணவன் என்ற முறையில்) – நேரில் அனுபவித்தவன். எனவே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏதோ நில ஆக்ரமிப்புக்கு எதிராக தார்மீக போராட்டம் நடத்துவது போல் கதை விடுகிறது இந்த கட்டுரை.

  5)போலீஸின் செயல் கண்டிக்கத்தக்கது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் செயல் அதைவிட கண்டிக்கத்தக்கது.

 19. ///சிலையுடைப்பின் தொடர்ச்சி கல்லூரி அபகரிப்பில் முடியுமென்று புரிந்து கொண்டார்கள் மாணவர்கள். அதனால்தான் இப்போதும் உறுதியாய் களத்தில் நிற்கிறார்கள்.///

  அப்படியா ? நில அபகரிப்பை எதிர்த்து போராடும் முறை இதுதானா ? நல்ல கதை. எப்படி மிக சரியா, தப்பான judgement எடுக்கறீங்க ? சரி, 5 ஆண்டுகளாக தான் இந்த மெட்ரோ ரயில் திட்டம். அதற்க்கு முன்பு நிகழ்ந்த பஸ்டே காலித்தனங்கள் (அல்லது போராட்டங்கள், உங்க பாசையில் சொன்னா) எதற்க்காம் ?

  நேற்று, சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் காலித்தனம் செய்தனர் :

  http://www.thehindu.com/news/cities/Chennai/article1498748.ece

  மாநில கல்லூரி நிலத்தை அபகரித்து, அங்கு ஏதாவாது ‘கிட்ரோ ரெயில்’ விட
  போகிறார்களா என்ன ? அல்லது போலிஸ் ‘அராஜகம்’ ஏதாவது பன்னாட்டு,
  ஏகாதிபத்திய, பிற்போக்கு சதியின் வெளிபாடா ?

  மெட்ரோ ரயில் திட்டம் பொது மக்களுக்காகத்தான். டெல்லியிலும், கல்கட்டாவிலும்
  வெற்றிகரமாக, பொது மக்கள் தான் பயன்படுத்துகிறார்கள். மேட்டு குடி மக்கள் அல்ல.
  போய் பாருங்க அய்யா. ஆனா, இதில் ஊழல் மற்றும் தனியார் நிலங்களை விட்டுகொடுக்காமல் தடுக்க பல தகிடுதத்தங்கள் உள்ளனதான்.

  மாணவர்கள் கூட்டமாக சேர்ந்தால் mob frenzy மற்றும் ஆணவம் தலைக்கேறி, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற திமிர் மற்றும் காலித்தனம் உருவாகிவிட்டது.
  பாதிக்கப்படுவது பொதுமக்கள் தாம். இது உங்களுக்கு ‘புரட்சியாக’ தெரிகிறது. இப்ப புரியுது, கம்யூனிஸ்டுகள் ஏன் இங்கு உருப்படவில்லை என்று.

  அறிஞர் பெர்னாட் ஷா அன்று சொன்னார் :

  “Socialism had a chance in western Europe, but for the socialists”

  :))))))
  வெறும் மெட்டோ ரயில் போதாது. போதுமான பஸ்கள், மினி பஸ்கள் இல்லாமல்
  feeder services அளிக்க முடியாமல் தான் இருக்கும்.

 20. மாணவர்கள் தவறு செய்வதை கண்டிக்கவும் வேண்டும்; அதே சமயம் அவர்களின் நியாமான போராட்டத்துக்கு உதவவும் வேண்டும்.

  இந்தக் கட்டுரையில் எனக்கு உடன்பாடில்லை.

 21. பஸ் டே எனபது பொறுக்கிகளின் கொண்டாட்டங்களுக்கானது
  அதை ஆதரிப்பவன் அனைவரும் பொறுக்கிகளே..100% உண்மை

 22. தோழர் அசுரன்,

  இந்தக் கட்டுரையில் ‘எதிரி யார்’ என்பதைக் கணக்குப் போட்டுப் பார்க்கத் தேவையில்லை. எனது பின்னூட்டக் கருத்து என்பது இதுதான்:

  1. மாணவர்களுக்கு போரடவும் கற்றுக் கொடுக்க வேண்டும்; அதே சமயம், செய்யும் ‘சமுதாயக் கேடான’ தப்புக்களையும் திருத்த தலையில் கொட்ட வேண்டும். அதனால் தான், எனது பின்னூட்டம் இப்படி முடிந்தது :

  //மாணவர்கள் தவறு செய்வதை கண்டிக்கவும் வேண்டும்; அதே சமயம் அவர்களின் நியாமான போராட்டத்துக்கு உதவவும் வேண்டும்.//

  2. துனீசியாவிலும், அரபு நாடுகளிலும் கிளர்ந்தெழுந்தது, முக்கியமாக, மாணவர்களும் இளைஞர்களும் தானே? அங்கும் சினிமாத் தாக்கமும், பிற்போக்குப் போதனைகளும் இல்லாமல் போயினவா? அவர்களையும் மீறித்தானே அம்மாணவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள்?

  3. எனது ஆதங்கம், அந்தக் கிளர்ச்சி இங்கே தொற்றிக் கொள்ளவில்லையே / பற்றிக் கொள்ளவில்லையே என்பதுதான்.

  4. பான்பராக்கும், ரஜினிகாந்தும் இருக்கிற வரையிலே, மாணவர்கள் தங்களது மடை திறந்த சிந்தனைகளுக்கு அணை போட்டுக் கொள்கிறார்கள். ஆகையால் முதலில் அவர்களைத் திருத்தி சிந்திக்க வைக்க வேண்டும்.

  5. பின்னூட்டம், மொத்த மாணவ சமுதாயத்திற்குடையது. பச்சையப்பனுக்கு மட்டுமில்லை.

 23. இந்தக் கட்டுரையை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது. சிறிது
  மிகைப்படுத்தப் பட்டும், நேரில் எல்லாவற்றையும் பார்த்தது போலும் எழுதி
  இருப்பது கட்டுரை என்பதை கதை போல் மாற்றி விட்டது.

  அந்த மிகைப்படுத்துதளைத் தவிர்த்து, என்ன நடந்தது என்பதை இருதரப்பிலும்
  கேட்டு எழுதி இருந்தால், பொதுமக்களுக்கு உண்மையைக் கொண்டு சென்றது போல
  ஆகி இருக்கும்.

  எந்தப் பக்கம் தவறு இருந்தாலும், கண்டிப்பாகக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்…

  மாணவர் பக்கமும் கொஞ்சம் தவறு இருக்கிறது. தான் சந்தோஷமாக இருக்கும்போது
  பொது மக்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில்
  கொண்டாட்டங்களை நிகழ்த்துவது தவறு. அதை எந்த போதுநோக்குடைய மாணவனும்
  செய்ய மாட்டான். அவ்வாறு செய்பவர்களுக்கு அதைப் பற்றி எடுத்துரைத்து
  காவல் துறை எச்சரிக்கையோடு விட்டு இருக்கலாம்.

  ஆனால் அதையே சாக்காக வைத்து, அரசியல் பின்னணியுடன், ஆதாயத்துடன் அரசு
  வன்முறையைக் கட்டவிழ்ப்பதும் மிகவும் கண்டனத்திற்குரியது.

  அனால் இந்தக் கட்டுரை மாணவர்களை முற்றிலும் ஆதரிப்பது போலவும், பல
  பிரச்சினைகளை இதனுடன் பின்னி இருப்பதும் அதன் நடுநிலைதன்மையை கேள்விக்
  குறி ஆக்குகிறது..

  பத்திரிக்கைகள் ஒரு தலை பட்சமாக எழுதுகின்றன, மாணவர்களை ரவுடிகளாக சித்தரிக்கின்றன. அப்படியாயின், போராட்டம் எந்தப் புள்ளியில் ஆரம்பித்தது, வன்முறை எந்தப் புள்ளியில்
  ஆரம்பித்தது என்பதைத் தெளிவாகக் கூறுவது நடுநிலையாளர்களின் கடமை. நாங்களும் உண்மையைத் தெரிந்து கொள்ள எதுவாய் இருக்கும்..

  போராட்டம் என்பது ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். அதன் உண்மையான நோக்கத்தை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியது போராட்டக் காரர்களின் கடமை.

  எந்த நேரமும் அது எளிதில் வன்முறையாக மாறி விடலாம்.


  நன்றி
  சாமக்கோடங்கி

 24. பிலாசபி பிரபாகரன் பதிவில் அந்தக் காணொளியைப் பார்த்தேன். பொது மக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது சொத்தான அரசுப் பேருந்தின் மேலே இத்தனை பெரும் ஏறி ஆட்டம் போட்டுக் கொண்டு போவது தான் பஸ் டே வா..?? இத்தனை பெரும் டிக்கட் வாங்கிக் கொண்டு தான் ஏறினார்கள் என்பதை யார் பார்த்தது..?? வாங்கி இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா..?? எனக்குத் தோன்றவில்லை.

  இது போன்று அட்டூழியங்களில் ஈடு பட்டு, பிறகு அரசியல்வாதிகள் செல்லும்போது போக்குவரத்தைத் தடை செய்கிறார்கள், வழி மறிக்கிறார்கள், அரசியல்வாதிகள் ரோட்டில் மேடை போடுகிறார்கள், பொது சொத்தை நாசம் செய்கிறார்கள், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கிறார்கள் என்று எந்த மூஞ்சியைக் கொண்டு சொல்வார்கள்..??

  நாளைய இளைய சமுதாயம் இப்படி இருப்பது வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது. கல்லூரிக்குள் புகுந்து போலீஸ் சூறையாடி இருப்பதைப் பற்றி இது போன்ற காணொளி ஏதேனும் இருந்தால் போடவும். அப்பொழுது தான் உண்மை புரியும்.

  என்னைப் பொருத்தவரை பிலாசபி பிரபாகரன் எழுதியது தான் சரி.. போலீஸ் அராஜகத்தின் அரசியல் பின்னணிகள் பற்றி ஆதாரம் தேவை..

  நன்றி
  சாமக்கோடங்கி.

 25. ஒரு விஷயம் சொல்லிக்கொள்ள ஆசை. அந்த கல்லூரி வாசலில் எப்பவாவது நின்று இருகின்றீர்களா? மாணவர்களுக்கான எந்த ஒழுக்கமும் கொஞ்சம் கூட இருப்பதாக தெரியவில்லை அவர்களின் பேச்சு நடவடிக்கைகளில். இதை போன்ற பதிவுகளை எழுதி வினவின் மீது என்னை போன்றவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தகர்த்திட வேண்டாம் .

 26. வினவு எப்போதும் ஒரு மார்க்கமாகவே சிந்திக்கின்றது. பஸ் டேயின் அவசியம் என்ன? அதுவும் பொது மக்களுக்கு இடைஞ்சல் கொடுத்துக்கொண்டு. நீங்களோ நானோ போய் இரண்டு டிக்கெட் எடுத்துக் கொண்டு அரசு பஸ்ஸில் ஊர்வலம் போக முடியுமா? பஸ் டேவை அனுபதிப்பதற்கு காரணம் ‘ஓட்டு வங்கி அரசியல்’. அதை தடை செய்தால் மாணவர்கள் கோபம் கொள்வார்கள், கலகம் செய்வார்கள். அதனால் ஓட்டு வங்கி பாதிக்கும். அதற்காகத் தான் அதை தடை செய்ய அரசுகள் தயங்குகின்றன.

  ஒரு காலத்தில் காலெஜ் பஸ்ஸில் செல்லும் மாணவர்கள், வருடத்திற்கு ஒரு முறை பஸ் டே கொண்டாடுவார்களாம். அதுவும் அந்த காலெஜ் பஸ்ஸில் தானாம். அரசு பஸ்ஸில் அல்ல. பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் வருடா வருடம் இந்த ரவுடித்தனத்தை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களைப் பார்த்து இப்போது பள்ளி மாணவர்களும் இதே ரவுடித்தனத்தை செய்கிறார்கள்.

  இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள், தி.நகர் அருகே வெங்கடாஜலபதி கோயில் இருக்கும் வெங்கட நாராயண சாலையில் நான் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது பள்ளி பசங்கள் (உண்மையிலேயே அவர்கள் 12-15 வயதுள்ளவர்கள்) ஓடும் பஸ்ஸில் ஏறி ஒரு போஸ்டரை நடத்துனரின் வார்த்தைகளை மதிக்காமல் ஒட்டினார்கள். அதில் CDC ஸ்கூல் என்று எழுதியிருந்ததாக நினைவு. அதில் மூன்று வரிசையாக சுமார் ஐம்பதற்கும் மேற்பட்ட மாணவர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தது. எப்படி தெரியுமா, ரவுடிகளை போன்ற (முட்டை ரவி, அட்டாக் பாண்டி) அடைமொழிகளுடன்.

  நான் அதே வழியில் திரும்பி வரும் பொழுதும் இதே தான் நடந்தது. அப்போது நடத்துனர் (வேறு பஸ், வேறு நடத்துனர்) கடுமையாக கண்டித்தார். அதற்கு அந்த பொடி பயல்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா, ‘நீ எப்படி இங்க பஸ் ஓட்டுறன்னு பார்க்குறோம்’. அதோடு மட்டுமல்ல, பஸ் கிளம்பிய உடன் எல்லா பொடிசுகளும் (உண்மையிலேயே பொடிசுகள் தான். ஒரு பொடியன் சராசரி மனிதரின் தொடையளவு தான் இருந்தான்) ஓடும் பஸ்ஸில் தொத்திக் கொண்டார்கள். ஒவ்வொரு ஜன்னலிலும் இரண்டு பேர் ஏறி நின்றார்கள்.

  இப்போது சொல்லுங்கள் இப்படி செய்வதுதான் மாணவர்களுக்கு அழகா? அல்லது ரவுடித்தனமா? எதற்கெடுத்தாலும் போலிஸை குற்றம் சொல்வது நியாயம் தானா?

  • //இப்போது சொல்லுங்கள் இப்படி செய்வதுதான் மாணவர்களுக்கு அழகா? அல்லது ரவுடித்தனமா? எதற்கெடுத்தாலும் போலிஸை குற்றம் சொல்வது நியாயம் தானா?//

   அதனால மாணவர்களை எல்லாம் போலீசை வைத்து நொங்கு எடுப்போம். இப்போ ஓகேவா? மாணவர்கள் யாரிடமிருந்து கற்றுக் கொள்கிறார்கள்? சுயநலத்துடன் எவனும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று பொறுப்பின்றி அலைவதுடன், இலவச அறிவுரைகளை மட்டும் அள்ளி வீசும் பெற்றோர்களும், சினிமா கழிசடைகளும் இருக்கு ஒரு சமுதாயத்தில் மாணவர்கள் ‘மட்டும்’ ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதுடன் ஒழுக்கத்தின் உருவமான – கொலை-கொள்ளை-பாலியல் பால்தாகாரம் போன்ற எதையுமே அறிந்திராத உலகமாக உத்தமர்களாம் போலீசைக் கொண்டு மாணவர்களை அடிப்பதன் மூலம் மேற்படி ஒழுக்கத்தை ‘மாணவர்கள்’ மட்டும் கற்றுக் கொள்ள முடியும் என்று இங்கு சாமியாடுபவர்களை என்ன கணக்கில் சேர்க்க என்றே தெரியவில்லை.

   • //அதனால மாணவர்களை எல்லாம் போலீசை வைத்து நொங்கு எடுப்போம். இப்போ ஓகேவா? மாணவர்கள் யாரிடமிருந்து கற்றுக் கொள்கிறார்கள்? சுயநலத்துடன் எவனும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று பொறுப்பின்றி அலைவதுடன், இலவச அறிவுரைகளை மட்டும் அள்ளி வீசும் பெற்றோர்களும், சினிமா கழிசடைகளும் இருக்கு ஒரு சமுதாயத்தில் மாணவர்கள் ‘மட்டும்’ ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதுடன் ஒழுக்கத்தின் உருவமான – கொலை-கொள்ளை-பாலியல் பால்தாகாரம் போன்ற எதையுமே அறிந்திராத உலகமாக உத்தமர்களாம் போலீசைக் கொண்டு மாணவர்களை அடிப்பதன் மூலம் மேற்படி ஒழுக்கத்தை ‘மாணவர்கள்’ மட்டும் கற்றுக் கொள்ள முடியும் என்று இங்கு சாமியாடுபவர்களை என்ன கணக்கில் சேர்க்க என்றே தெரியவில்லை.//

    இதே நியாயத்தைத்தான் அரசு ஊழியர்களை ஜெயலலிதா தாக்கிய போதும், சிங்கள ராணுவம் தமிழக மீனவர்களை தாக்கிய போதும் பேசுகிறார்கள். அரசு ஊழியர் என்ன பெரிய யோக்கியமா? அவனோட திமிருக்கு ஜெயலலிதா செஞ்சது சரிதான் என்றும், இலங்கைத் தமிழ் மீனவர்கள், தமிழக மீனவர்களால் பாதிக்கப்படுவதை சேர்த்து பேசுவதுதான் தமிழக மீனவர் படுகொலை பிரச்சினையில் சரியான நிலைப்பாடு என்றும் பேசப்பட்டதே/பேசப்படுகிறதே அதே நியாயம்தான் இங்கு மாணவர்களுக்காகவும் பேசப்படுகிறது.

    எனக்கு எழும் சில கேள்விகள் எவைவென்றால், 1) மாணவர்கள், அரசு ஊழியர்களின் ஒழுக்கக் கேடுகளுக்கு தண்டனை கொடுக்க போலீசுக்கு, ஜெயலலிதாவிற்கும் என்ன அருகதை உள்ளது?

    2) இங்கு புத்திமதி கூறுபவர்கள் மாணவ சமுதாயத்தையோ, அல்லது அரசு ஊழியரையோ சரியான வழியில் ஒழுங்காக்க என்ன முயற்சி எடுத்தார்கள்? அவ்வாறு முயற்சி செய்யும் முற்போக்கு அரசியல் சக்திகளை நடைபாதையோரம் நின்று புரம் பேசுவதைத்தானே செய்தார்கள்? அல்லது இந்த பிரச்சினைகளையெல்லாம் மசிரே போச்சின்னு கண்டும் காணாமல்தானே சென்றார்கள்?

    3) மாணவர்களை அடித்த போலீசின் நோக்கம் பச்சையப்பா கல்லூரியின் பஸ் டேதான் என்ற மூட நம்பிக்கையை எதைக் கொண்டு சாத்துவது? அல்லது அரசு ஊழியரை தாக்கிய ஜெயலலிதாவின் நோக்கம் அவர்களின் ஒழுங்கினமும், சம்பளமும்தான் என்ற மூடநம்பிக்கையை எதைக் கொண்டு சாத்துவது? இத்தனை ஆண்டு காலமாக போலீசு என்ன புடுங்கிக் கொண்டிருந்தார்கள் என்று இந்த விசயத்தில் அவர்களுக்கு திடீர் அக்கறை பொங்கி வலிந்தது?

    4) ஒருவேளை அடி வாங்கிய மாணவரில் இங்குள்ள யாரேனும் ஒருவரது ரத்த உறவும் இருந்தால் இதனை எப்படிப் பார்ப்பார்கள்? இதே போல தாழ்த்தப்பட்டவர்கள் சேரிகளில் வாழ்ந்து நகரத்தை அசுத்தப்படுத்துகிறார்கள், அரசுக் கல்லூரி மாணவர்கள் பொறுக்கிகள் அவர்களால் நகரத்தின் டீசன்ஸி கெட்டுப் போகிறது, மீனவர்கள் குடிகாரர்கள் அவர்களை போலீசின் மூலம் சென்னையை விட்டு விரட்டியடிப்பது நகர வளர்ச்சிக்கு அத்தியாவசியம் என்று நியாயம் பேசுவதை இவர்கள் ஒத்துக் கொள்கிறார்களா?

    • மாணவர்களை பஸ்டேவிற்காகத் தாக்கச் சென்ற போலீசு ஏன் ஆசிரியர்களின் மண்டையையும் உடைத்தது? கல்லூரி மேசை, நாற்காலி, சிலையை ஏன் உடைத்தது? உலகமே இருண்டாலும் கண்டு கொள்ளாத போலீசு திடீரென்று ஞானதோயம் பெற்று அத்தனை போலீசை ஏன் குவித்தது? பச்சையப்ப கல்லூரி மாணவருடன் ஒரு மோதலை திட்டமிடமால அத்தனை போலீசை குவித்தார்கள்? இல்லை பச்சையப்பா கல்லூரி கேண்டினில் முட்டை பச்சி நல்லாயிருக்கும் என்று தற்செயலாக போலீசார் அங்கு குவிந்தார்களா?

     நியாயவான்கள் இந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனேனில் நீங்கதான் ரொமப் ஸ்டிரிக்டு.. ஸ்டிரிக்டு.. ஸ்டிரிக்டு ஆச்சே….

  • //ப்போது நடத்துனர் (வேறு பஸ், வேறு நடத்துனர்) கடுமையாக கண்டித்தார். அதற்கு அந்த பொடி பயல்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா, ‘நீ எப்படி இங்க பஸ் ஓட்டுறன்னு பார்க்குறோம்’. அதோடு மட்டுமல்ல, பஸ் கிளம்பிய உடன் எல்லா பொடிசுகளும் (உண்மையிலேயே பொடிசுகள் தான். ஒரு பொடியன் சராசரி மனிதரின் தொடையளவு தான் இருந்தான்) ஓடும் பஸ்ஸில் தொத்திக் கொண்டார்கள். ஒவ்வொரு ஜன்னலிலும் இரண்டு பேர் ஏறி நின்றார்கள். //

   இதனைத் தட்டிக் கேட்டு ஒருவேளை நீங்கள் போலீசை கூப்பிட்டிருந்து, பதிலுக்கு அந்தப் பொடியன்கள் லோக்கல் அரசியல் கட்சி பிரமுகரையோ அல்லது தாதாவையோ கூப்பிட்டிருந்தால் அப்போதும் போலீசு உங்களுக்கா அந்த பொடியன்களை ரெண்டு தட்டு தட்டி அனுப்பியிருப்பார்களா? இங்கு அந்த பொடியன்களை அடக்கி ஒழுங்குபடுத்தும் பொறுப்பு போலிசிற்கு இருக்கிறதா அல்லது சிவில் சமூகத்திற்கு இருக்கிறதா? சிவில் சமூகத்திற்கு எனில் சிவில் சமூகத்தின் அங்கத்தினராக மாணவராஇ ஒழுங்குபடுத்த நீங்கள் செய்தவை என்ன? இந்த சமூகக் கலாச்சார சீரழிவின் நதி மூலம் கண்டுபிடிக்க நீங்கள் செய்த முயற்சிகள் என்ன?