Wednesday, July 24, 2024
முகப்புவாழ்க்கைஅனுபவம்அடிமைப் பெண்ணும், போராடும் பெண்ணும் - விஜி

அடிமைப் பெண்ணும், போராடும் பெண்ணும் – விஜி

-

உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு – 7

தோ பெண்களை நினைவு கூற ஒரு தினம் அத்தனை பத்திரிகைகளிலும் அதற்கான கொண்டாட்டம். நாம முந்திக்கு எவ்ளவோ சுதந்திரமா இருக்கோம். முன்னேறியிருக்கோம்னு மட்டற்ற மகிழ்ச்சியால் மனம் திளைக்கிற இந்த நேரத்தில இதெல்லாம் நிஜமாவே உண்மையான்னு ஒரு நிமிடம் யோசிச்சு பார்க்கறேன். கண்ணீரை உள்வாங்கி கிட்டு காலத்தை கடத்திகிட்டிருக்கிற எத்தனையோ பெண்கள தான் வாழ்க்கையில நான் சந்திச்சுகிட்டிருக்கேன். இது கொண்டாட்டமா, இல்லை நம்மள நாமளே ஏமாத்திகிடறமான்னு நினைச்சு பாக்கிறேன்.

என்னோட உறவுக்கார பெண் தான் அந்த பொண்ணு. தாயில்லை. தகப்பனும் அண்ணனும் சீராட்டி வளர;த்து தேடித் தேடி மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. கட்டிக்கிட்டவன் ஒரு பக்கா அயோக்கியன். இது அந்த பொண்ணுக்கு ஒரு வருஷத்திலேயே நல்லா தெரிஞ்சிடுச்சு சொந்த வீட்டுலேயே தன் மனைவியோட நகை அத்தனையையும் திருடி செலவழிக்கிற அளவுக்கு கேவலமானவன்னும் தெரிஞ்சது. ஒரு பிள்ளையாயிடுச்சு -குடும்பம்னு வந்தா அவன் மனசு மாறும்னு சொன்னதால தொடர்ந்தது உறவு.

எதாவது சொத்தை வித்து அடைக்கிற அளவுக்கு கடன் வச்ச பிறகு தான் அவன் பண்ண அத்தனை பிராடும் வெளியில தெரியும். தன்னோட தவறை தவறே  இல்லாம செய்றதுல அவன் மன்னன். திருந்துவது போல நடித்து பொறுப்பானவன்னு, காட்டிகிட்ட அவனோட தொழிலிலும் கொஞ்சம் முன்னேற்றம். கையில புழங்குன பல இலட்சம் அவனோட இருட்டான பக்கங்களை நினைக்காம இருக்க வச்சது அவள.

அப்பவும் சுத்தி இருக்குறவங்க சொல்றாங்க, “இவன் நியாயமான முறையில சம்பாதிக்கிற மாதிரி தெரியலை, இப்படி யாரும் முன்னேற முடியாது, இதுல ஏதோ தப்பு இருக்குன்னு”. 1 லட்சம் 2 லட்சம்னு சம்பாசிச்ச மாதிரி புழங்குன இடத்துல 10 லட்சம் கடன் இருந்தது. “இப்பவாவது நீ யோசிச்சுக்க, இப்படிபட்டவங்க மாற மாட்டாங்க, அவனோட போராடி போராடி நீ உன் வாழ்க்கையை பணயம் வைக்காதேன்னு” சொன்னா, “தப்பா வர;ற காசுன்னாலும் வசதியான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டதனால என்ன செய்ய, இது தான் விதின்னு நினைச்சு கிட வேண்டியது தான், பன்னியோட சேர;ந்த கன்றும் பீ திங்கும்னு திங்க வேண்டியதுதான், இதுதான் வாழ்க்கைன்னு” பழகுக்கிறேன்னா. சொன்னவர்;கள் வாயடைத்து நின்றார்;கள்.

இன்னொரு குழந்தையும் ஆச்சு. திரும்பவும் ஏணி மரம் சறுக்கு மரம் கதை தான். 1+1ம் நம்ம தேவைக்காக எப்பவும் 11 ஆகாது. இரண்டு தான் ஆகும். யதார்த்தம் தெரியாம 11 ஆயிடும்னு ஆசைப்பட்ட அவளோட வாழ்க்கை இரண்டு பிள்ளைகளோட 20 லட்சம் கடனோட தலைமறைவா வாழ வாழ வேண்டிய நிலைமைக்கு வந்துருச்சு.

“ஐயோ”ன்னு ஒரு சொட்டு கண்ணீர் விட்டவங்க கூட இன்னைக்கு திரும்ப திரும்ப அவ தேர;ந்தெடுத்த பாதைய நினைச்சு பக்கத்துல கூட வரமாட்டேன்ட்டாங்க. இத்தனைக்கும் அவள் படிக்காதவள் அல்ல… சுயமாக தன் காலில் நின்று ஒரு வேலை தேடி கொள்ளக் கூடிய அளவு படித்தவள். எல்லாத்தையும் இழந்துட்ட அவ கையில் இரு பிள்ளைகள். புருசன் இன்னமும் அதே நிலையில் தான்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அவள நான் பார;த்து பேசினேன். “தெரியாம செஞ்சாத்தான் எந்த தப்புக்கும் மன்னிப்பு உண்டு. தெரிஞ்சே இது தான் வாழ்க்கைன்னு வாழ்;றவனோட நீ ஏன் வாழ துணியற. இப்பவும் ஒண்ணும் இல்லை நீ இப்படித்தான் இருப்பேன்னா உன்னோட வாழ மாட்டேன்னு தனிச்சு நில்லு ஒரு சரியான வாழ்க்கைக்காக போராடு”ன்னு சொன்னப்ப அவ சொன்னா “இல்லை எனக்கு அந்த துணிவில்லை”

இதுக்குள்ளேயே என்றாவது ஒரு நாள் இந்த நிலைமை மாறும். காலம் போகும் வழியில் போகட்டும்னா. அந்த பிள்ளைகள நினைச்சு அவள நினைச்சு என்னால சில நாள் தூங்க கூட முடியல. தன்னோட வாழ்க்கைக்காகவே ஒரு போராட்டம் பண்ண துணியாத இந்த பெண்கள் என்று சமூக சிந்தனையோட போராடுறதுன்னு ஒரு மலைப்பு.

_____________________________________

தே நேரம் அப்படி போராடி ஜெயிச்ச பொண்ணையும் பார்த்திருக்கேன்.

அவள் ஒரு கிராமப்புற பெண்.  +2 வரை படிச்சிருக்கா. தகப்பனில்லாம 5 பேர் கொண்ட குடும்பம், கடுமையான உழைப்பினால ஏதோ கௌரவமா பிழைச்சுக்கிட்டிருந்துச்சு. திருமண பேச்சு வந்தது. இந்த பெண்ணை என்னோட உறவுக்கார பையனுக்கு பேசி முடிச்சிருந்தாங்க. ஒரு அறிமுகத்துக்காக நான் இந்த பொண்ணை பார்;க்க போயிருந்தேன். ஏழ்மையிலும் நேர்மைன்னு படிச்சு தான் இருக்கேன். ஆனா அந்த குடும்பத்தை கண்ணார பார;த்தேன். பார;த்த உடனேயே ஏனோ ஒரு பெருமிதம். ச்சே! இப்படியும் மனிதர;கள் இருக்காங்களேன்னு மனதுள் அப்படி ஒரு சந்தோஷம்.

இவங்களோட திருமணமும் பேரம் படிஞ்சு முடிஞ்சது. அவன் ஒரு கூலித்தொழில் பார்ப்பவன். கல்யாணமான ஒரே மாசத்துல சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. சந்தேக நோய். நின்னா குத்தம், நிமி;ந்தா குத்தம். இதுல தூண்டி விட அவனோட கூட பிறந்தவுக. அதிர;ச்சியான உண்மை அவளுக்கும் புரிந்தது. உலகத்துல மாத்த முடியாததுன்னு எதுவும் இருக்குதா என்ன? சரி பண்ணுவோம்.

இது ஒரு போராட்டம். கடைசி வரை போராடி பார்ப்போம்னு நினைச்சா. அவனோட டார்ச்சர்  தாங்காம தற்கொலைக்கும் ஒரு முறை முயற்சி பன்னுணா. “பாரு, பாரு நான் எப்படி வச்சிருக்கேன், அவ தற்கொலைக்கு முயற்சி பண்றான்னு” என்னை அவட்ட பேச கூட்டிட்டு போனான். “இல்லை ஏதோ அவசரத்துல அப்படி பண்ணிட்டேன், இனி இப்படி பண்ண மாட்டேன்னா”. முடிஞ்ச அளவு சமாதானப்படுத்திட்டு வந்துட்டேன்.

கொஞ்ச நாள்லயே திரும்பவும் பிரச்சனை. அங்க உள்ள கிராம பஞ்சாயத்து வரைக்கும் பிரச்சனை போய் அப்புறம் எங்க கவனத்துக்கு வந்தது. அவன் உறவுன்றதனால எங்கள அவன் தான் கூப்பிட வந்தான்….. கண்ணீர; விட்டான். “நான் நல்லவன்னு” சத்தியமே பண்ணுனான். “இரு, நாங்க அந்த பொண்ணையும் பார்;த்து பேசிட்டு போறாம்”னு சொன்னோம். அவனோட சொந்தமா இருந்தும் அவ பக்கத்து நியாயத்தை நாங்க கேட்க போனதுனால மனம் திறந்து தன்னோட பிரச்னை என்னன்னு சொன்னா.

தப்பு பண்ணும் மகன். அதை தடவிக் கொடுக்கும் குடும்பம். “என்னால சமாளிக்க முடியல, இந்த சூழல்ல அவரோட வாழ்றதே போராட்டமா இருக்குன்”னா. பிரச்னையோட மையம் என்னன்னு தெரிஞ்சதால அவுக இரண்டு பேரையும் பேசி நாங்க இருக்குற ஊருக்கே கூட்டி வந்து குடி வச்சோம். எங்கள் முன்னாடி அப்படி ஒரு அம்மாஞ்சி வேஷம். ஆனால் அவளோட ஒரு சைக்கோ போன்ற அணுகுமுறை.

எங்களோட சின்ன சின்ன உதவிகளோட விளையாட்டு பிள்ளை மணல்வீடு கட்றாப்ல தன்னோட வாழ்க்கைய ஆரம்பிச்சா. தாய் தந்த சீதனமா கையிலே இருக்குற உழைப்பை மதிச்சா. அவன் 3 ரூபா தான் கொடுப்பான் செலவுக்கு. மாற்றுவோம், என்றாவது அவன் மாறுவான்னு அவன் போடுற அத்தனை தடைகளையும் தாண்டி கிட்டே வந்தா. ராத்திரி 1 மணி 2 மணிக்கு அவள ஏதோ ஒரு காரணம் சொல்லி சண்டை இழுத்து அடிச்சு போட்டுட்டு நல்ல பிள்ளை மாதிரி அவளுக்கு முந்தி இவன் வந்துடுவான். “அவ என்னை கொல்ல வாறா, அதனால அடிச்சிட்டு வந்துட்டேன்னு” இவன் வர பின்னாடியே இரத்தக் காயத்தோட அவ வருவா. பொறுப்பேற்றுக் கொண்ட நாங்களே பொறுமை இழந்தோம்.

போலீஸ் ஸ்டேஷன், பஞ்சாயத்து, தெருச் சண்டை, கருக்கலைப்பு என பிரச்சனை வளர்ந்து கிட்டே போச்சு. போராட்டத்தின் நெடிய பயணம் அவளை ஒரு முடிவு எடுக்கத் தூண்டியது.

அவ தெளிவாயிட்டா. இல்லை, இவன் திருந்தி நாம ஒரு நல்ல வாழ்க்கை வாழ முடியாதுன்னு. வாழ்க்கை பூராவும் போராடி வாய கட்டி வயித்த கட்டி காசு சேர்த்து கட்டி கொடுத்த நம்ம பிள்ளை வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னே இந்த பொண்ணோட அம்மாவுக்கு மனநிலை பாதிச்சு ஆஸ்பத்திரியில சேர்க்கிரமாதிரி ஆயிருச்சு. நிலைமைய எங்கட்ட சொல்லிட்டு அவ அம்மா வீட்டுக்கு கிளம்பிட்டா.

அங்கயும் அவனோட தொந்தரவு தொடர்ந்துச்சு. “நீ ஒரு டாக்டரிடம் வா உன்னை சரிபடுத்திக்கோ. சரியான பிறகு இரண்டு பேரும் உழைச்சுனாலும் ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்னா” அவன் அதற்கு தயாரில்லை. “வீட்டுக்கு அடங்காதவ, அவன் அடிச்சா பணிஞ்சு போகாதவ, ஏன் நாங்கள்ளாம் இல்லை, ஆனாலும் பொம்பளைக்கு இவ்வளவு திமிரு ஆகாதப்பா”. எத்தனை எத்தனை பேச்சு. அனைத்தையும் தாங்கி நின்றாள்.

“வாழ்க்கை என்னுடையது, வழியும் என்னுடையது, முடிவும் என்னுடையதாகவே இருக்கட்டும்” என்றாள். நிமிர்ந்து நின்றாள். “நானும் போராடி பார்த்து விட்டேன், அவரு எதற்கும் ஒத்து வர்றமாதிரி இல்லை. இது தான் வாழ்க்கைன்னா நான் இனி இவரோட வாழ தயாராயில்லை”.

அவள் பட்ட பாட்டையும், அலைந்த அலைச்சலையும் அவளோட தெளிவான அணுகுமுறையும் பார்த்து எங்களுக்கே வீரம் வந்தது. அட இவள்ள பொம்பளைன்னு. அவன் குற்றம் சாட்டி போன அதே பஞ்சாயத்துலயே எந்த தயக்கமும் இல்லாம அவனோட குற்றங்களை ஆதார பூர்வமா நிரூபிச்சா. தானே தன்னோட பொண்டாட்டிக்கு மொட்டை கடுதாசி எழுதி யாரோடயோ தொடர்பு இருக்கு என்று சொல்லியிருந்தான். “அது அவன்  எழுத்துனதுன்னும், இப்படித்தான் அவன் இருப்பான்னா என்னால வாழ முடியாது”ன்னும் தெளிவா சொன்னா. அவனிடமிருந்து அதே பஞ்சாயத்து மூலமே தன்னோட திருமண உறவ ரத்து பண்ணீட்டா.

மறுமணமும் செஞ்சுகிட்டா. இன்னைக்கு ஒரு குழந்தைக்கும் தாயாகிட்டா. போன வாரம் போய் அவளை பார்த்து வந்தேன். பிரச்னைகளை கண்டு அதற்குள்ளேயே அழுந்தி தானாய் ஏதாவது ஆகி எல்லாம் காணாம போயிடுவோம்னு தான் எல்லா பெண்களும் நெனைச்சிருக்காங்க. இது சமூகம் சார்ந்த பிரச்சனை. அது புரியணும், நிலைமையை சமரசப்படுத்திகிட்டு மட்டுமே வாழ நினைக்கிறாங்க. தன் கை விலங்கொடிக்க யாரோ வருவாங்கன்னு இருக்காங்க. ஆனா போராடினால் மட்டுமே விடிவு.. விடிவு…. விடிவு….

எதிலும் எப்போதும்.

______________________________________________

விஜி
______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010

 

 1. அடிமைப் பெண்ணும், போராடும் பெண்ணும் – விஜி…

  நாம முந்திக்கு எவ்ளவோ சுதந்திரமா இருக்கோம். முன்னேறியிருக்கோம்னு மட்டற்ற மகிழ்ச்சியால் மனம் திளைக்கிற இந்த நேரத்தில இதெல்லாம் உண்மையான்னு ஒரு நிமிடம் யோசிச்சு பார்க்கறேன்….

 2. நிலைமையை சமரசப்படுத்திகிட்டு மட்டுமே வாழ நினைக்கிறாங்க.//

  நிஜம் ..

  சில நேரம் பலரின் சூழல் அப்படித்தான் இருக்கு என்பதே நிதர்சனம்..

  இருக்கும் பேய் பரவால்லையோ, இல்லாத பூதத்தை விட எனுமளவில்..

  //இப்படித்தான் அவன் இருப்பான்னா என்னால வாழ முடியாது”ன்னும் தெளிவா சொன்னா. //

  அருமை.. எல்லாத்துக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் உண்டே..

 3. “இது சமூகம் சார்ந்த பிரச்சனை. அது புரியணும், நிலைமையை சமரசப்படுத்திகிட்டு மட்டுமே வாழ நினைக்கிறாங்க. தன் கை விலங்கொடிக்க யாரோ வருவாங்கன்னு இருக்காங்க. ஆனா போராடினால் மட்டுமே விடிவு”

  நன்றாகச் சொன்னீர்கள்.

 4. இந்த தளத்தில் தொடர்ச்சியாக பெண்களின் கட்டுரைகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் எத்தனை பேர்கள் வரிசையில் இருக்கின்றார்களோ? பொதுவாக சில விசயங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.

  பெணகளுக்கு விடிவு காலம், சுதந்திரம், பேச்சுரிமை, போன்ற இத்யாதி சமாச்சாரங்களை ஒவ்வொருவரும் கூவிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது வியப்பாக உள்ளது. யார் மறுத்தார்கள்? எங்கு புறக்கணிப்படுகின்றது?
  அவரவர் சுதந்திரம் என்பது கேட்டுப் பெறுவது அல்ல. எடுத்துக் கொள்வது? இந்த இடத்தில் தான் பெரிதான வித்யாசயங்கள் உருவாகின்றது.

  எந்த நாட்டிலும் ஆண்களுக்கு உண்டான அத்தனை வாய்ப்புகளும் இன்றைய சூழலில் பெண்களுக்கும் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் எத்தனை பேர்கள் இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தான் கேள்வி? உலகம் முழுக்க சுற்றிக் கொண்டு வந்து உணர்ந்து வாழும் பெண்களும் இருக்கிறார்கள். உள்ளுருக்குள்ளே இருந்து கொண்டு உளறிக் கொண்டு ஆணாதிக்கம் என்று புலம்பும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  நீங்கள் இரண்டாவதாக குறிப்பிட்டுள்ளவரைப் போல பல பெண்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். அத்தனை பேர்களும் நகர்ப்புறத்தில் படித்து நாகரிக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அல்ல. அடிப்படை கிராமங்களில்இருந்து வந்து வெளியுலகம் தெரியாமல் வந்த இடத்தில் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கும் கிராமத்து பெண்மணிகள் கண்மணிகளாகத்தான் இருக்கிறார்கள். உழைப்பு, போராட்டம், விடாமுயற்சி என்று அவர்கள் எப்போதும் போல தங்களுக்கான விடுதலையைப் பெற்று வீராங்கனைகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  மற்றபடி பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் படித்து விட்டு கலாச்சாரத்திற்க்கும் வாழ்க்கைக்கும் வித்யாசம் தெரியாமல் வீதியில் வந்து தொலைந்து போய்க் கொண்டிருக்கும் மெத்தப்படித்த பெண்கள் அல்ல இவர்கள். அனுபவத்தை உணர்ந்து உண்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் மூலம் நகர்ப்புற பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளம் உண்டு.

 5. //“வாழ்க்கை என்னுடையது, வழியும் என்னுடையது, முடிவும் என்னுடையதாகவே இருக்கட்டும்” என்றாள். நிமிர்ந்து நின்றாள். //

  அருமை! ஆமாம், இவங்க தான் பொம்பளை!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க