Friday, June 9, 2023
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை!

ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை!

-

அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டத்தையே மாபெரும் புரட்சியாக உச்சி மோந்து மெச்சிய அம்பிகள் இந்தக் கட்டுரையை மனப்பாடம் செய்து படிக்கட்டும். ஊழலை சட்டமோ, சில மேதைகளின் நடவடிக்கைகளோ ஒழித்து விடாது. அதற்கு உழைக்கும் மக்களை அணிதிரட்டி ஊழல் செய்யும் அதிகாரவர்க்கம், முதலாளிகள், அரசியல்வாதிகள் அனைவரையும் எதிர்த்து களத்தில் இறங்கி தண்டிக்க வேண்டும். அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளை ஏமாற்றி கொள்ளையடித்த ஊழியர்கள், அதிகாரிகள் அவர்களுக்கு துணை போன போலீசு அத்தனை பேரையும், அதே விவசாயிகளை அணிதிரட்டி நீதியை பெற்றிருக்கிறது விவசாயிகள் விடுதலை முன்னணி.

இந்தப் போராட்டத்தில் ஊழல் பணம் 1,70,000 ரூபாய் மீட்கப்பட்டு அங்கேயே அதற்குரிய விவசாயிகளுக்கு பிரித்தும் கொடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் அரசு அலுவலகத்தை கைப்பற்றுதல், நெல் மூட்டுகளை பாதுகாத்தல், அதிகாரிகள் சிறைபிடிப்பு, லாரிகள் சிறைவைப்பு என அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இவையெல்லாம் அண்ணா ஹசாரே டைப் கனவான்கள் நினைத்தும் பாரக்க முடியாத போராட்டம். ஏனெனில் இது நக்சல்பாரிகளின் போராட்டம். அதே நேரம் இது போன்ற போராட்டத்தில் கலந்து கொள்வதற்கும் அண்ணா ஹசாரேவை நம்பிக் கொண்டிருக்கும் கனவான்கள் முன்வரட்டும். இன்னும் எத்தனை நாள் மெழுகுவர்த்தியையே மட்டுமே ஏந்திக் கொண்டிருப்பது!

-வினவு

______________________________________________________________

ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை!

டந்த மார்ச் மாதம் 4-ம் தேதி அதிகாலை 6 மணியளவில் விருதை வட்டார விவிமு(விவசாயிகள் விடுதலை முன்னணி) செயலரை எழுப்பினார் ஒரு விவசாயி. “நமது ஊரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 1 மூட்டைக்கு 8 கிலோ அதிகமாக வைத்து நெல் கொள்முதல் செய்ததை விவசாயிகள் கண்டுபிடித்துவிட்டனர்.அங்கே வாருங்கள்” என அழைத்தார்.தோழர் உடனடியாக எழுந்து சென்றபோது நூற்றுக்கணக்கான விவசாயிகள் அங்கே குவிந்திருந்தனர்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசினார்கள்.

விவிமு தோழர்கள் அவர்களை ஒருமுகப்படுத்தி நெல்கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இப்பேச்சு வார்த்தையின் முடிவில் 19.01.2011 முதல் 3.3.2011 வரை எத்தனை மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டனவோ, அவை அனைத்திற்கும் மூட்டைக்கு நான்கு கிலோ வீதம் பணம் தந்துவிடுவதாக நெல் கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் கூறினார்.இது குறைவாயினும் இதை விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர். இப்படி பணம் தருவதற்கு தன்னை ஊருக்கு சென்றுவர அனுமதிக்குமாறு அந்த நபர் கோரினார். இதை விவிமு தோழர்கள் ஏற்கவில்லை.ஆனால் விவசாயிகள் கூறியதன் பேரில் அந்நபர் ஊருக்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டார்.

மாலைக்குள் வருவதாக சொன்ன அவன் மறுநாள் காலை வரை திரும்ப வரவே இல்லை.அங்கே வேலை செய்த சுமைதூக்கும் தொழிலாளிகளும் ஓடிவிட்டனர்.இப்போது அந்த கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 4000 நெல்மூட்டைகள் இருந்தன.இந்த 4000 நெல்மூட்டைகளையும் அதன் அலுவலக பதிவேடுகளோடு,இரு எடைபோடும் இயந்திரங்கள் ஆகியவற்றை,விவிமு விவசாயிகளின் ஒப்புதலோடு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.அலுவலகத்தை விவிமு பூட்டிவிட்டு சாவியை தன்னிடத்தில் வைத்துக்கொண்டது.

05.03.2011 அன்று நெல் கொள்முதல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அங்கே வந்தார்கள்,அலுவலகத்தை திறக்குமாறு கேட்டார்கள் இதை விவசாயிகளும்,விவிமுவும் ஏற்க மறுத்துவிட்டனர்.திருடிவிட்டு ஓடிப்போன நெல்கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தரை கொண்டுவந்து ஒப்படையுங்கள் எனக் கோரினோம். இதை அதிகாரிகள் மறுத்துவிட்டு அங்கிருந்து காரில் ஏறிதப்பிக்க முயன்றனர்.உடனே விவிமு வழிகாட்டியதன் அடிப்படையில் உயர் அதிகாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனர்.

இதனால் குலை நடுங்கிப்போன அதிகாரிகள்,நாளை மேலும் சில உயர் அதிகாரிகளை அழைத்துவந்து விவசாயிகளிடம் பேசுவதாக கூறினர்.இதை எழுத்துபூர்வமாக எழுதித்தாருங்கள் என்று விவிமு கோரியபடி எழுதிதந்தனர்.இதனால் சிறைபிடிக்கப்பட்ட அதிகாரிகள் 2 மணிநேரத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.அவர்கள் கூறியபடி மறுநாள் கடலூர் மாவட்ட TNCSC –துணைமேலாளர் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழு 06.03.2011 அன்று மதியம் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.அலுவலகத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு அவர்கள் கோரியதை நாங்கள் நிராகரித்தோம். பிரச்சினை தீரும் வரை அலுவலகம் எமது கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்று திட்டவட்டமாக அறிவித்தோம்.

பின்னர் பேச்சுவார்த்தை நடந்தது ”தவறு நடந்தது உண்மை தான் ஆனால் கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லிற்கு எங்களால் பணம் தர இயலாது.சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு தொடுக்கத்தான் முடியும்”என சட்டவாதம் பேசினர். ஆனால் நாங்களோ கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லிற்கு உடனடியாகவே பணம் தரவேண்டும், என்ற கோரிக்கையில் உறுதியாகவே இருந்தோம்.”கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லிற்கான தொகையை தற்காலிக ஊழியரான பட்டியல் எழுத்தர் மட்டுமே எடுத்துக்கொள்ளவில்லை.உயர் அதிகாரிகளான உங்கள் அனைவருக்கும் பிரித்து தான் கொடுத்துள்ளார்,ஆகவே நீங்கள் அனைவரும் வாங்கியப் பணத்தை திருப்பித் தாருங்கள்” என பகிரங்கமாகவே கோரிக்கை வைத்தோம்.

எமது இந்த கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்ததால் அவர்களை முற்றுகையிட்டு சிறைபிடித்தோம். எங்களது பிரச்சனையை தீர்க்காமல் நீங்கள் இங்கிருந்து வெளியேற முடியாது என, நூற்றுக்கணக்கான விவசாயிகளுடைய ஒருமித்த ஆதரவோடு அறிவித்தோம்.பின்னர் எடை இயந்திரங்களை பழுது பார்ப்பவர்களை வரவழைத்து இரு எடை இயந்திரங்களும் சரிபார்க்கப்பட்டது.இதில் ஒரு மூட்டைக்கு 4 முதல் 8 கிலோ வரை கூடுதாலாக காட்டியது நிருபிக்கப்பட்டது.இதனால் அதிகாரிகள் தேள்கொட்டிய திருடனை போல் விழித்தாலும்,தங்களால் பணம் தரமுடியாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தனர்.இதனால் மாலை வரை முற்றுகை நீடித்தது.வெளியே இருந்த இரண்டு எடை இயந்திரங்களும் அலுவலகத்தில் வைத்து பூட்டப்பட்டது.

மாலை 6.30 மணியளவில்  போலிசு வந்தது. அதிகாரிகளை விடுவிக்காவிட்டால்,வழக்குப் போடுவோம் என மிரட்டியது. இதனால் விவிமு தனது உத்தியை மாற்றியது. உடனடியாகவே புதிய பட்டியல் எழுத்தரை நியமித்து விவசாயிகளின் எஞ்சிய நெல்லையும் கொள்முதல் செய்யவேண்டும், என்ற விவிமுவின் கோரிக்கையை உயரதிகாரிகள் ஏற்றுக்கொண்டதால் முற்றுகையை விலக்கிக் கொண்டு அதிகாரிகளை விடுவித்தோம்.அதே நேரத்தில் “நாளைக்குள் கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லுக்கு பணம் தராவிட்டால்,தற்போது நிலையத்தில் உள்ள 4000 நெல்மூட்டைகளையும் விவசாயிகளுக்கு பிரித்துத் தருவோம்,”என விவசாயிகளின் ஆரவாரத்திற்கிடையே அறிவித்தோம்.இது சட்டவிரோத செயல் என போலிசு கூறிய போது,நான்கு கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களிடம் கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லை திருப்பி எடுத்துக்கொள்ளப் போகிறோம்.இந்நடவடிக்கை சட்டவிரோதம் என்று சொன்னால் அதை செய்வதற்கு நாங்கள் தயங்கமாட்டோம். போலிசால் முடிந்தால் எங்கள் அத்துனை பேர் மீதும் வழக்கு போடட்டும்.நாளை 07.03.2011 அன்று  திருடியதை திருப்பி எடுப்போம், என்ற போராட்டத்தை விவிமு அறிவித்தது.

இதனால் ஏழாம் தேதி காலை கோட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக போலிசு எங்களுக்கு தகவல் தந்தது.நாங்கள் பேச்சுவார்த்தைக்கு கோட்டாட்சியர் அலுவலகம் சென்றோம்.”நான் உங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை நீங்கள் வட்டாட்சியரை பாருங்கள்” என்றார் கோட்டாட்சியர்.நாங்கள் வட்டாட்சியரை சந்தித்த போது ”போலிசு ஆய்வாளரிடம் பேசுங்கள்”என்றார்.பேச்சுவார்த்தை போலிசு நிலையத்தில் நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையில் 4000 நெல்முட்டைகளையும் எடை போட்டு கூடுதலாக உள்ள நெல்லிற்கு பணம் தந்துவிடுவதாக TNCSC அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.”ஏற்கனவே சேமிப்பு கிடங்கிற்கு சென்றுவிட்ட நெல்லிற்கு தங்களால் ஒன்றும் செய்யமுடியாது”, என்று கூறினர்.இதை விவசாயிகள் ஏற்றுக்கொண்டதால் விவிமுவும் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டது.மறுநாள் வருவதாக சொன்னவர்கள் TNCSC-யில் பணிபுரியும் பட்டியல் எழுத்தர் ஒருவரையும், பணி ஓய்வு பெற்ற முன்னாள் கண்காணிப்பாளர் ஒருவரையும் இடைத்தரகர்களாக TNCSC உயரதிகாரிகள் அனுப்பிவைத்தனர். இவர்கள் ”02.03.2011 , 03.03.2011 ஆகிய இரு நாட்களில் மட்டும் தான் தவறு நடந்துள்ளது,இவ்விரு நாட்களில் எடைபோடப்பட்ட மூட்டைகளுக்கு மட்டும் தான் பணம் தரமுடியும்.எஞ்சிய நாட்களில் எடைபோட்ட மூட்டைகளில் தவறு நடக்கவில்லை” என வாதாடினர்.

4000 நெல் மூட்டைகளில் மேலே அடுக்கிவைக்கப்பட்டு இருந்த முட்டைகளில் 10 மூட்டையை எடைப் போட்டு ”நெல் குறைகிறதே தவிர கூடுதலாக இல்லை”, என விவசாயிகளுக்கு காட்டிவிட்டு லாரிகளில் மூட்டைகளை ஏற்ற ஆரம்பித்தனர்.சுமார் 50 மூட்டைகளை ஏற்றிய பின்பு அடியில் இருந்த மூட்டைகளை எடை போடுமாறு நாங்கள் கோரினோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே கீழே இருந்த மூட்டைகளில் 2 முதல் 4 கிலோ வரை கூடுதலாக நெல் இருந்தது.கடைசி இரு நாட்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளில் கூடுதலாக இருந்த நெல்லிற்கு மட்டும் பணம் தந்துவிட்டு நெல்மூட்டைகளை ஏற்றிச்சென்றுவிடலாம், என்று திட்டமிட்டிருந்த இடைத்தரகர்கள் ஏமாந்து போனார்கள்.

“கடைசி இரு தினங்களுக்கு மூட்டைக்கு 8 கிலோவும் எஞ்சிய மூட்டைகளுக்கு சராசரியாக 2 கிலோவீதம் பணம் தரவேண்டும். அப்போது தான் நெல்மூட்டைகளை ஏற்றுவதற்கு அனுமதிப்போம்” என திட்டவட்டமாக அறிவித்தோம்.இதை உயரதிகாரிகளுக்கு அறிவிப்பதாக கூறிவிட்டு இடைத்தரகர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.திருடப்பட்ட நெல்லிற்கு பணம் தந்துவிட்டு நெல்மூட்டைகளை ஏற்றாமல் வெளியேறக்கூடாது, என விவிமு 6 லாரிகளை சிறைபிடித்தது.

உடனடியாக இத்தகவலை உயரதிகாரிகளுக்கும்,பத்திரிக்கை,தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கும் தெரிவித்தது.மறு நாள் காலை 10 மணியளவில் லாரிகள் சிறைப்பிடித்திருப்பதை செய்தியாக்கிக்கொண்டு செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்கமுயன்றனர்.இப்படி புகைப்படம் எடுக்ககூடாது என்று தமிழ்நாட்டில் இல்லாத கட்சியின் (புரட்சிகர சோசலிச கட்சியின்) கடலூர்மாவட்ட செயலாளர் என்று தன்னை கூறிக்கொள்ளும் போலிசு புரோக்கரான செந்தில் என்பவர் தடுக்க முயன்றார். இப்படி லாரிகள் சிறைபிடிக்கப்பட்ட செய்தி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்தால் எங்கள் ஊர்களின் பெயர் கெட்டுப்போகும் என்று விவிமு செயலரிடம் வாதாடினார்.இதை மறுத்த விவிமு செயலரும்,அந்த நேரத்தில் அங்கே இருந்த விவசாயிகளும் TNCSC திருடர்களுக்கு ஆதரவாக அவர் பேசுவதை அம்பலப்படுத்தி அவரை எச்சரித்தனர்.இச்செய்தி இரண்டாவது முறையாக பத்திரிக்கை மற்றும் தொலைக்கட்சிகளில் வெளிவந்தது.

இதற்கிடையில் இப்படி தொடர்ந்து போராட்டம் நட்த்தினால் TNCSC-யை மூடிவிடுவார்கள் என்று வதந்தியை பரப்பி நெல் விற்ற விவசாயிகள்,விற்காத விவசாயிகள் ஆகிய இருவருக்கிடையில் மோதலை உண்டாக்க முற்பட்டனர்.இவர்களின் இந்த சதியை விவசாயிகளை கூட்டிப் பேசி அவர்களுக்கு புரிய வைத்து விவிமு முறியடித்தது.இப்படி TNCSC-க்கு ஆதரவாக வதந்தி பரப்பி விவசாயிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க முற்படும் எட்டப்பர்களை விவிமு செயலர் மிக கடுமையாக எச்சரித்தார்.விவசாயிகளும் எட்டப்பர்களின் சதியை புரிந்துகொண்டு தங்களது வாத்தைகளில் திட்டித் தீர்த்தனர்.விவிமு செயலரை திட்டிய ஒருவரிடம் பல விவசாயிகள் சண்டையிட்டனர்,அடிக்கவும் சென்றனர்.இச்சண்டையை விலக்கிவிட்ட விவிமு தோழர்கள் இப்போதைக்கு எட்டப்பர்களோடு சண்டை வேண்டாம் என்றும், இப்படி செய்தால் சட்டம்,ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க நினைக்கும் அதிகாரிகளின் விருப்பத்திற்கு நாம் பலியாகிவிடுவோம் என புரியவைத்தனர்.

மறுநாள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் இச்செய்தி வெளிவந்ததால் உயரதிகாரிகளின் வழிகாட்டுதல் படி முதல் நாள் ஓடிப்போன இடைத்தரகர்கள் மீண்டும் வந்தனர். விவிமு கோரியபடி 4000 மூட்டைகளுக்கும் ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரத்தை TNCSC-கொள்முதல் அதிகாரி முன்னிலையில் இடைத்தரகர்கள் விவிமுவிடம் தந்தனர்.இதன் மூலம் விவசாயிகளிடம் திருடியதில் ஒரு பகுதியை விவிமு திரும்பப் பெற்றது.இப்பணத்தை அனைத்து விவசாயிகளுக்கும் கணக்கிட்டு 14.03.2011 அன்று விவிமு பிரித்து தந்தது.

TNCSC-வரலாற்றிலேயே அவர்கள் திருடியதை திரும்பப் பெற்ற முதல் நடவடிக்கை இது தான்.இப்போராட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் ஒளிந்திருக்கும் போர்குணத்தை விவிமு மிகச்சரியாக பயன்படுத்தியது.மேலும் எட்டப்பர்களை முறியடிப்பதையும்,சட்டபூர்வ,சட்டபூர்வமற்ற போரட்டமுறைகளை இணைத்து மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதை வெறுமனே பேச்சின் மூலமாக மட்டும் அல்ல,தனது செயலின் மூலமாகவும் விவசாயிகளுக்கு விவிமு உணரவைத்தது.இப்போரட்டத்தின் மூலம் விவாசாயிகள் மத்தியில் போராட்டக் குணத்தை மட்டுமல்ல,விவிமு போன்ற நக்சல்பாரி அமைப்புகள் மட்டுமே மக்களின் உரிமைகளை வென்றேடுக்க விடாப்பிடியாக நின்று போராடுவதுடன்,இப்போராட்டத்தில் தமது உயிரையும் தரத் தயங்காதவர்கள் என்பதையும் விவசாயிகளுக்கு உணர்த்தியது.

இப்போரட்டத்தை சாதி,ஊர் ஆகிய பிற்போக்குத் தனங்களை காட்டி, விவசாயிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க முயன்ற அதிகாரிகள் மற்றும் எட்டப்பர்களின் சதிச்செயல்களை விவிமு தனது தன்னலமற்ற,உறுதியான நிலைப்பாடுகளாலும்,போராட்டத்தாலும் உடைத்தெரிந்தது.இப்படிப்பட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் அனைத்தையும் பயன்படுத்தி அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்துவதன் மூலமே விவசாயிகளின் வாழ்நிலையால் அவர்களிடம் உள்ள பிற்போக்கு தனங்களை உடைத்தெரிந்து,அவர்களிடம் இயல்பிலேயே உள்ள போராட்டக்குணத்தை வெளிக்கொணர்ந்து,விவசாயிகளிடையே ஒற்றுமையையும்,கூட்டுத்துவ சிந்தனையையும் ஜன்நாயக உணர்வையும் உருவாக்க முடியும்.விவசாயிகளை திருத்தமுடியாது,அவர்களை அணிதிரட்ட முடியாது,என்று மார்க்சிய இயங்கியலுக்கு புறம்பாக உளறித்திரியும் மரமண்டைகளுக்கு இது ஒருபோதும் புரியாது!

_____________________________________________________________

– தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி, விருத்தாசலம் வட்டம்.
_____________________________________________________________

  1. ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை !…

    அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டத்தையே மாபெரும் புரட்சியாக உச்சி மோந்து மெச்சிய அம்பிகள் இந்தக் கட்டுரையை மனப்பாடம் செய்து படிக்கட்டும்….

    • “அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டத்தையே மாபெரும் புரட்சியாக உச்சி மோந்து மெச்சிய அம்பிகள் இந்தக் கட்டுரையை மனப்பாடம் செய்து படிக்கட்டும்”.

      அவரும் போராட தானே செய்தார்..உங்கள் கட்டுரை உங்கள் போராட்டத்தை வெளிபடுத்ஹஊவதை விட அண்ணாவை குறை சொல்ல எழுதியதை போல் இருக்கிறது…. lkg சிறுவனைப்போல் இருக்கிறது உங்கள் மனநிலை… மற்றபடி நல்ல காரியம் யார் செய்தாலும் நல்லது தான்.. அரை குடமாய் தலும்புகிரீர்கள் . நிறைகுடமாய் மாற…

      வாழ்த்துக்களுடன

      ravi

      ravi

  2. You have done a great job and this is a good article to, (**இது போன்ற போராட்டத்தில் கலந்து கொள்வதற்கும் அண்ணா ஹசாரேவை நம்பிக் கொண்டிருக்கும் கனவான்கள் முன்வரட்டும். இன்னும் எத்தனை நாள் மெழுகுவர்த்தியையே மட்டுமே ஏந்திக் கொண்டிருப்பது!**)

    but each and everyone is having their own style, that is the beauty of INDIA…Blaming ANNA is not related to this article(Like u are blaming HINDUS, RAJINI as you cant avoid these PICKLES without these tasty PICKLES u cant sell ur curd rice… :-))

    அண்ணா ஹசாரே மீது உமக்கு அப்படி ஒரு கொபம்…இன்டிய நாட்டில் ஹிம்சை மட்டும் அகிம்சை முறை இரன்டும் இருக்கும் தம்பி…இதுதான் இந்தியா…வினவு திட்டமட்டும்தான் தெரியும் பொல…உமக்கு காந்தி, ஹசாரே எல்லாம் ஒன்னு தானா…அதெ ச‌ம‌ய‌ம் நான் இன்த‌க்க‌ட்டுரையை பாராட்டுகிரென்..அண்ணா மீது என்ன தவரென்டு சரியா ஒரு காரனம் சொல்லுஙக…நான் சுபாஷ் சந்திர பொஷ் ரசிகன்..ஆனால் காந்தியயும் மதிக்கின்ரேன்…வெள்ளைக்காரன்டே அஹிம்சை வென்ர பொழது நம்ம ஊரு கொல்லைக்காரன்ட்ட முதியாதா?

    • காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு!
      http://senkodi.wordpress.com/2009/03/18/ghandi-congress/

      August 15, 1947 The Transfer of Power: Real or Formal? — Suniti Kumar Ghosh
      http://rupe-india.org/43/ghosh.html

      அன்னா ஹாசரே, உலக வங்கியின் கட்டுமான மறுசீரமப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த கார்ப்போரேட்-தரகு முதலாளிகளால் 40 வருடங்களாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட விசப் பாம்பு. அன்னா ஹாசரே அடிப்படையில் ஒரு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி. இது தெரியாமல் அவர் பின்னே கூடிய முற்போக்கு, ஜனநாயக சக்திகள் இன்று பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடியுள்ளனர்.

      சரியாகச் சொன்னால் மக்களின் கடும் வெறுப்புக்கு ஆளாகி அம்பலப்பட்டு நிற்கும் அமெரிக்கக் அடிமை இந்திய அரசை காக்க உருவாக்கப்பட்ட இன்னொரு காந்தி.

      • ஆர்.எஸ்.எஸ் காரனுவோ, காந்தியக் கொன்னவங்கோ! அசுரக் கூட்டத்திற்கு, காந்தியே முதல் எதிரி! அப்ப காந்திய கொன்னவனும், திட்டறவனும் ஒரே ஜாதி?அப்ப இது பங்காளிச் சண்டை!

        முரண்பாடுகளற்ற தலைவர்களேது? ராஜ ராஜ சோழனும், காந்தியும் விதி விலகல்ல! காந்தி தன்னைக் குறித்து, முடிந்தவரை ஒப்புதல் அளித்துள்ளார்!

        முரண்பாடுகளே அற்ற தலைவரை, அசுரன் அடையாளம் காட்டுவார் என்று எதிர் பார்க்கிறேன்!

        உமது போராட்ட முறை வேறு! மற்றவர்களது வேறு!
        எவனைக் கேவலப்படுத்தலாம் என்று, அலைவது என்ன போராளித்தனம்! இது , எந்த வகைக் குரைப்பு?(ஊரான் பின்னூட்டத்தை பார்க்கவும்!)

        • //முரண்பாடுகளே அற்ற தலைவரை, அசுரன் அடையாளம் காட்டுவார் என்று எதிர் பார்க்கிறேன்!//

          தலைவரிடம் முரன்பாடுகள் இருப்பதோ, முரன்பாடுகள் உள்ள தலைவன் இருப்பதோ ஒரு பிரச்சினையல்ல. அது சரி செய்யக் கூடிய விசயங்களே.

          அன்ன ஹாசரே தலைவன் அல்ல. அவர் ஒரு விசப்பாம்பு எனும் கீழ் வரும் கருத்தை ரம்மி கவனிக்கத் தவறிவிட்டார்.

          //அன்னா ஹாசரே, உலக வங்கியின் கட்டுமான மறுசீரமப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த கார்ப்போரேட்-தரகு முதலாளிகளால் 40 வருடங்களாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட விசப் பாம்பு. //

  3. இதுவும், அஹிம்சா முறை போராட்டத்தின் வெற்றியே!

    காந்தியவாதத்தின் வெற்றி!

    வன்முறை வேண்டாம் என்று வழிநடத்திய, வி.வி.மு தலைவரும், காந்தியவாதியே!
    வன்முறை அற்ற அறவழி போராட்டத்தை, ஹசாரே,வி.வி.மு என்ன , யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்!
    மக்கள் ஆதரவு வேண்டும், காரியம் சித்தி அடைய!

    போராட்டம் நடத்துவது, நக்சல்பாரி இயக்கங்களுக்கு மட்டுமே உரிய உரிமை! எனும் நினைப்பில் , அன்னா ஹசாரே போன்ற ஆட்கள் உள்ளே வந்து விட்டால், நமக்கு மக்களிடம் ஆதரவு இழந்துவிடுமே என்ற கவலையில், மற்றவரை தூற்றுகிறீர்கள்!

    மதவாதிகளும், மரத்தடி ஜோதிடர்களும், மட்டமான அரசியல் வாதிகளும், தன்னை உயர்த்தி, மற்றவரை தூற்றும் செயலுக்கும், இது போன்ற பதிவுகளுக்கும் வித்தியாசமில்லை!

    வி.வி.மு நடத்திய போராட்டமும், வெற்றியும் பாராட்டுக்குறியவை, என்பதில் சந்தேகமில்லை! நமக்கு விளம்பரம் கிடைக்க வில்லை என்பதற்காக, மற்ற போராளி குழுக்களை, இகழ்வது, நக்சல்பாரிகளால் மட்டுமே, போராடி வெற்றிகளை வாங்கித் தர முடியும் எனும் தோணியில் உரைப்பது – பிரபாகனை ஞாபகப் படுத்துகிறது!

    குழு மனப்பான்மை–கோடி குழப்பம்,சகோதர யுத்தம், எதிரியின் வெற்றி!

    அன்னா ஹசாரேவும், வன்முறையற்ற நக்சலும் நமக்குள் ஒருவரே!

    எதிரிகளை வெளியில் தேடுவோம்!

    • ரம்மி,

      நக்சல்பாரிகள் ஒன்றும் அகிம்சாவாதிகள் கிடையாது-புரட்சியாளர்கள். புரட்சி என்பது ஜந்தர் மந்தரில் உட்கார்ந்து கொண்டும், ஆபீஸ் முடிந்த பிறகு மெழுகு வர்த்தி பிடித்துக்கொண்டும் நிற்பதல்ல அது வன்முறையாது.

      அகிம்சை என்பது துரோகம்.
      புரட்சி என்பது தான் தியாகம்.

      வி.வி.மு தோழர்களிடம் போய் இதை அகிம்சை போராட்டம் என்று கூறிப்பாருங்கள் பிறகு தெரியும்.

      • உண்மை,
        விவிமு தோழர்களின் போராட்டம் ஒரு முன்னுதாரணப் போராட்டம், புரட்சி என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. புரட்சி என்றாலே ஆயுதம் தூக்குதல், வெட்டுக்குத்தில் இறங்குதல், வன்முறையை கட்டவிழ்த்துவிடல் என்பதாக வெகுஜனங்களிடையே ஒரு மாயக்கருத்து இருக்கிறது.

        இந்தக் குறிப்பிட்ட போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மீது விவிமு ஒரு போதும் ஆயுதப் பிரயோகம் செய்யவில்லை. அவர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து போராடியிருக்கின்றனர். இதைத்தான் ரம்மி கூறவருகிறார் என்று நினைக்கிறேன்.

        • நக்சல்களைப் பற்றி, மக்கள் கொண்டுள்ளது மாயக் கருத்தல்ல! ‘உண்மை’தான் என்று, மறுதலிக்கிறார் போல!

      • புரட்சி என்றால் ஹிம்சை! வன்முறை தான் புரட்சி! இதுவன்றோ கொள்கை!
        ஒருவன் புரட்சி என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டால்,கிடைக்கும் வெற்றி நிரந்தரமல்ல! நிம்மதியானதுமல்ல!
        எதிர் வன்முறையே பரிசு!

    • இங்கே பலருக்கு காந்தியை பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்பது பின்னூட்டங்களிலிருந்து தெளிவாக தெரிகின்றது. ஒரு வேளை காந்தி உயிரோடு இருந்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் வாழ்திருந்தால், அதிகாரிகள் சொல்லிய வழக்கு பதிவு செய்வோம் என்ற பதிலில் திருப்தியடைந்து, சட்டம் அதன் கடமையை செய்ய்யட்டும் என்று தெளிவாகவே கூறி போரட்டத்தை கருவருத்திருப்பார். இது போன்ற சம்பவங்கள் காந்தி காலத்திலேயே நடந்துள்ளது. எனவே காந்தியவாதிகள் என்று தன்னை சொல்லிக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் அனைவரும் தயை கூர்ந்து காந்தியின் வாழ்க்கையை ஒரு முறைக்கு இருமுறை நன்றாக படித்துவிட்டு வரவும்.

      – ஜெய் ஜாக்கி

      • ஜெய் ஜாக்கி,

        //ஒரு வேளை காந்தி உயிரோடு இருந்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் வாழ்திருந்தால், அதிகாரிகள் சொல்லிய வழக்கு பதிவு செய்வோம் என்ற பதிலில் திருப்தியடைந்து, சட்டம் அதன் கடமையை செய்ய்யட்டும் என்று தெளிவாகவே கூறி போரட்டத்தை கருவருத்திருப்பார்//

        காந்தி இருந்திருந்தால் அந்த TNCSC ரெகார்ட் கிளார்க் எடையில் திருட்டுத்தனம் செய்து விவசாயிகளின் நெல்லை கொள்ளை அடித்திருக்க மாட்டார். அதை தடுப்பதற்கான வாய்ப்பு நக்ஸல்பாரி இயக்கங்களுக்கு கிடைத்திருக்காது.

        • அவ்வ்வ்வ்வ்… ரூம் போட்டு யோசிப்பாரோ?

          ஒரு மூனாப்பு படிக்கிற குழந்தையளவுக்கு அறிவிருப்பவர் கூட இப்படிப்பட்ட ஒரு பதில் மேல் காறி உமிழ்ந்துவிட்டு போய்விடலாம்.

          முடியல

    • ரிஷி,

      நான் கூறியது இந்த போராட்டத்திற்கும் அகிம்சைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தான். நக்சல்பாரிகள் அகிம்சாவாதிகள் என்கிறார் ரம்மி அப்படி இல்லை அகிம்சை என்பது துரோகம் நக்சல்பாரிகள் புரட்சியாளர்கள் என்பது தான் நான் கூறிய கருத்து.

    • ராமி,

      அரசு அதிகாரிகளை சிறைபிடித்தது , அரசு அலுவலகத்தை சீல் வைத்தது, லாரிகளை சிறை வைத்தது இதெல்லாம் அகிம்சை என்றா கருதுகிறீர்கள்? இவையெல்லாம் சட்டபடியே தவறு. இதையெல்லாம் போலிசுதான் செய்ய வேண்டும். அவர்களும் கூட வழக்கு பதவு செய்து நீதிமன்றத்தில் வாதாடிதான் இதை நிறைவேற்ற வேண்டும். அந்த அதிகாரத்தை சட்டவிரோதமாக எடுத்துக் கொண்டு விவசாயிகளை வைத்து விவிமு செய்திருக்கிறது. உங்களுக்கு அகிம்சை குறித்தும் தெரியவில்லை, வன்முறை குறித்தும் புரியவில்லை, எனினும் போராட்டத்தை ஆதரித்ததற்கு நன்றி!

      • ! தமிழகத்தில் நக்சல்கள் உண்டு என்றும், யார் அவர்கள்? எந்த போர்வையில் உள்ளனர்? என்றும், அடையாளம் காட்டியுள்ளனர்! பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது! நுணலின் சப்தமா? புலியின் கர்ஜனையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

      • பிக் பாக்கெட் திருடனையும், சங்கிலி அறுப்பு திருடனையும், சிக்கினால், மின் கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து பணத்தை, பறிமுதல் செய்வது – திருப்பூர் மக்களின் பழக்கம்! இதைப் போன்ற ஒரு குறைந்தபட்ச வன்முறை கூட நிகழவில்லை என்று கட்டுரை உரைக்கிறது! மேலும் அடிக்கப் பாய்ந்தவரை, வி.வி.மு தலைவர் தடுத்ததாக குறிப்பு உள்ளது! இது அஹிம்சா முறை அன்றோ?

  4. சும்மா பேசிக்கொண்டிராமல் செயலில் காட்டிய தீரர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.
    இதுவும் ஒரு அறப்போராட்டமே! நக்ஸல்கள் என்றாலே பொதுமக்களுக்கு கொஞ்சம் அலர்ஜியாகத்தானிருக்கிறது. துப்பாக்கி தூக்காதவரை, ஆயுதங்களை கையிலேந்தாதவரை எப்பேர்ப்பட்ட போராட்டத்திற்கும் என் ஆதரவு உண்டு. நம் தரப்பு நியாயங்களை எல்லோரும் ஒன்றுகூடு பொட்டிலடித்தாற்போல ஆட்சியாளர்களிடம், அதிகார வர்க்கத்திடமும் போராடி நிலைநிறுத்தும் இதுபோன்ற போராட்டங்களை வரவேற்கவே செய்கிறேன். சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் இது தொடரவேண்டும்.

    • ///ஆயுதங்களை கையிலேந்தாதவரை எப்பேர்ப்பட்ட போராட்டத்திற்கும் என் ஆதரவு உண்டு///

      மயிலே மயிலேன்னு சொன்னா மயிலு இறகு போட்டுடுச்சுன்னா சரிதான்.மயிலு கொத்துச்சுன்னா என்ன செய்யிறது?

      • மயிலு கொத்துச்சுன்னா என்ன செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்க கலை??

        • கழுத்தைப் பிடிப்பதென்பது வேறு!
          கழுத்தை அறுத்தெறிவது என்பது வேறு!
          சங்கை நெரிச்சு உண்மையைச் சொல்லுடான்னு கேட்கலாம்.
          அந்த சங்கையே அறுக்கணும்னு நெனக்கிறது சரியானதல்ல.

  5. தேர்தல் மூலமோ, இந்த அரசு மூலமோ எதையும் சாதிக்க முடியாது என்பதை அழகாய் எடுத்துக்காட்டிய போராட்டம். தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்

    கலகம்

  6. அம்பிகளே! இது எப்படி-னு யோசிக்கிறிங்களா, யோசிங்க,
    நல்லா யோசிங்க, இது மாதிரிதான் முதல்படி போலித்தேர்தல் புறக்கணிப்பு. அடி,உதை,வெட்டு,டுமீல் எல்லாம் இப்பஇல்ல.அதெல்லாம் கிளைமாக்ஸின் கடைசில
    தான் வரும்.

  7. மக்கள் போராளி தோழர் பினாயக் சென்னுக்கு பெயில் – உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி

    • சித்திரகுப்தரே,

      பினாயக் சென் ஒரு காந்தியவாதி என்று அவரது தாயாரே சொல்லியுருக்கிறார்.

      எல்லோரும் நம்பிக்கை இழந்து விட்டாலும் நான் சுப்ரீம் கோர்ட்டின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன் என்று அவரது சகோதரர் தீபாங்கர் சென் தெரிவித்திருக்கிறார்.

      இங்கே வெற்றி நீதிக்கும் அஹிம்சா வழி போராட்டத்துக்குமா? இல்லை நக்ஸலிசத்துக்கா?

      http://ibnlive.in.com/news/my-son-is-a-gandhian-binayak-sens-mother/149274-3.html

      • இராம், பினாயக் சென்னினுடைய தாயார் அவர் யார் என்று சொல்வது இருக்கட்டும். தன்னைத்தானே காந்தியவாதி என்று சொல்லிக்கொள்ளும் காந்தியவாதி என்றே கருத்தப்படும் அழைக்கப்படும் ஹிமான்சுகுமார் என்ன சொல்கிறார் என்பதையும் படித்துப்பாருங்கள் https://www.vinavu.com/2010/02/16/revolution-of-the-poor/

  8. திரைப்படத்தில் ஒரு கதாநாயகன் இந்த வேலையை செய்தால் கைதட்டி ரசிக்கும் சிலருக்கு வி.வி.முவின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லக்கூட வாய்வரவில்லை சரியான நிழலை ரசிக்கும் நிழல் மனிதர்கள். வி.வி.மு போராட்டம் மென்மேலும் வெற்றியாகட்டும்.

  9. மிகப் பொறுப்புணர்வுடன் வினவு பலவற்றை எழுதி வருகின்றது. இந்த சேவை தொடர வேண்டும்.
    சமூகச் செயல்பாடு பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றது. அண்ணா வின் வெற்றி மற்ற புரட்சி முறைகளையெல்லாம் நீர்த்துப் போகச் செய்யும் என்று யாராவது நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது. நமக்கு பல்வேறு விதமான முறைகள் தேவைபடுகின்றன. எதிரியின் அம்பாரத் துணியிலிருந்து அம்புகளை லாவகமாக எடுத்து அவர்கள் மீது விட வேண்டும்.
    விணவைப் போல பொறுப்புள்ள ஊடகங்கள் மக்களை ஒன்றிணைக்க Facebook Twitter போன்ற சாதனங்களையும் கையிலெடுக்க வேண்டும். விருதை வட்டார விவிமு(விவசாயிகள் விடுதலை முன்னணி) செய்தது பாராட்டத்தக்க செயல். ஆனால் இந்த நற்செய்தி பரவலாக்கப் படவில்லையே. மெழுகு வர்த்தி போராட்டத்தைப் பற்றி சிலாகித்துப் பேசிய ஒரு Twitter லிங்க் மூலமாகத்தான் வினவு தளத்திற்கு வந்தேன்.
    போராட்ட முறைகள் மாறி வருகின்றன. மாறி வரும் போராட்ட முறைகளைப் பயன்படுத்துவதிலும் தாங்கள் வல்லமைப் படவேண்டுமென்பதே என்னுடைய விருப்பம்

  10. அண்ணா அசாரே அவர்கள் நடத்திய உண்ணா நோன்பு மேடையில் காந்தியின் படத்தையும், மாவீரன் என்ற சொல்லின் முழுப் பொருளான தோழர் பகத்சிங் அவர்களின் படத்தையும் வைத்திருந்ததைப் பார்த்ததுமே இந்த ஆளும் தெளிவான ஆளு இல்லையே என்ற முடிவுக்கு என்னை போன்ற கொஞ்ச விசயம் தெரிந்தவர்களூம் வந்திருப்பார்கள்! இந்த கேடுகெட்ட சாக்கடை அரசியல் அமைப்பை மூற்றும் மாற்றாமல், ஊழல ஒழிக்கிறோம், நாட்ட திருத்துவோம் என்பவர்கள், மீண்டும் காந்தி யின் துரோகத்துக்குத் தோழ் கொடுத்து, இந்த ஊழல் அரசியல் சாக்கடைக்குள் அமிழ்ந்து பொவதற்கு தயாராக இருக்கிறார்கள்! இந்த அதிகார வர்க்கம் என்பது, திட்டமிட்டுத் திருடும் திருட்டுக் கூட்டம்! இந்தக் திருட்டுக் கூட்டத்துக்கு காவல்துறை தலைமைப் பொறுப்பேற்று, திருடுவதற்கு உரிய பாதுகாப்பு தருவதுமே முதன்மையான பணியாகச் செய்கிறது, அதிகார வர்க்கமும் அரசியல் அயோக்கியர்களும் அடுத்த நிலையில்…! இவர்கள் ஒன்று கூடி, மக்களின் குருதியை உறிஞ்சிக் குடித்து விட்டு, அந்த மக்களிடமே கூர் பார்க்கும், இந்த தன்நலக் கும்பலின் இருப்பை அப்படியே நீடிக்க விட்டுவிட்டு, தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் ஊழலை ஒழித்து விடுவோம் என்று சொல்பவனை நம்புவதற்கு காதில் பூ சுற்றியவர்களா மக்களை நேசிக்கும் புரட்சிகர இயக்கத்தினர்? அதனால் தான் அசாரே அவர்களையும் அம்பலப் படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது நமக்கு! எதிரிகளை வெளியில்தான் தேட வேண்டும் என்பது சரிதான்! அதற்கு முன்பாக நம்மிடையே உள்ள துரோகிகளை அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறதே! எதிரியை விட துரோகியல்லவா ஆபத்தானவன் தமிழர்களூக்கு, இந்தியர்களுக்கு?
    காந்தியையும் சுபாஸ் சந்திரபோஸ் அவர்களையும் ஒன்றாகப் பார்க்கும் குழப்பமான நிலை நம்மிடையே மாறுவதற்கு, காந்தி காங்கிரசுத் துரோக வரலாறு என்ற அருமையான நூலைப் படித்தால் ஓரளவுக்காவது தெளிவு ஏற்படும். வினவு தோழர்கள் இது தொடர்பாக யோசிக்க வேண்டும், ஏனென்றால், காந்தி ஏதோ ஒரு மனித ஆற்றலை மீறிய ஒரு மகான் என்ற போதை நிறைய பேருக்கு இருக்கிறது, இந்த போதையிலிருந்து இவர்களைத் தெளிய வைக்கும் பொறுப்பையும் பணிச் சுமைகளூக்கிடையே தோழர்கள் ஏற்க வேண்டுகிறேன்.
    விருத்தாச்சலத்தில் தோழர்கள் ஆரம்பித்து வைத்த இந்த அதிரடி நடவடிக்கை, உழவுத் தொழிலாளர்கள் இடையே தோழர்களின் மேலும் பொதுவுடமைச் சித்தாந்தத்தின் மேலும், தோழர்களின் பரப்புரைகளின் மேலும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி ஒரு புதிய பாதையில் அவர்களை அணிதிரட்ட வைக்கும் ஓர் ஆரம்பம் தான் இது! மகிழ்சியும் நம்பிக்கையும் ஆறுதலும் தோழர்களுக்கு ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை! வாழ்த்துகள் தோழர்களே! முன்னேறிச் செல்லுங்கள்! வாழ்த்துகளுடன், காசிமேடு மன்னாரு.

  11. இத்தகைய செயல்களை வரவேற்கவும் மற்ற விவசாய தொழிலாளர்களிடம் பரப்பவும் வேண்டும்

    விவசாய முன்னனி தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

    • இவரு ரொம்ப நேர்மையா நடந்துக்கிறாராம், கருத்து சொல்றாராம். நல்ல கா..மேடிப்பா.

      • இதிலென்ன காமெடி இருக்கு உண்மை

        நீங்கள் நடத்தும் போராட்டத்தில் சரியானது இருந்தாலும் ஆதரிப்பேன்
        அன்னாவின் போராட்டத்தை நீங்க ஃபேக் போராட்டம் என்றாலும் எதிர்ப்பேன் எனது கருத்து இதுதான் .

        சும்மா வசவுகளையும் நையாண்டிகளையும் அள்ளி வீசாமல் என் தளத்திலோ இங்கேயோ விவாதிக்க துப்பிருந்தால் சொல்லுங்கள் இல்லையே மூடிவிட்டு போங்கள் கடையை

        • சரிங்க நான் இத்தோட மூடிக்கிறேனுங்க ! ஆனா, உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்குங்க- புல்லரிக்கவும் வைக்குதுங்க.

  12. வி.வி.மு வினரின் இந்த அஹிம்சா வழி, அறவழிப் போராட்டத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

    • அரசு அதிகாரிகளை சிறைப்பிடித்தது, நெல்மூட்டகளை எடுக்க விடாமல் பாதுகாத்தது, அரசு கொள்முதல் நிலையத்திற்கு பூட்டு போட்டது, லாரிகளை சிறைவைத்தது இதெல்லாம் அஹிம்சை போராட்டமா? எந்த ஊரில் இதை அகிம்சை என்கிறார்கள்? இந்த பிரச்சினையில் உண்ணாவிரதம் இருந்திருந்தால் மட்டுமே அது அகிம்சை, சரி, போகிற போக்கைப் பார்த்தால் புரட்சியைக்கூட அகிம்சை என்று அழைப்பார்களோ?

  13. வி.வி.மு வினர் போராடி நெல்லுக்கு சரியான பணத்தை பெற்றுக் கொண்ட எத்தனை விவசாயிகள், ஏப்ரல் 13 அன்று தேர்தலை புறக்கணித்தார்கள், எத்தனை விவசாயிகள் வாக்குக்கு பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தார்கள் என்பதை வினவு கொஞ்சம் விசாரித்து எழுதினால் நன்றாக இருக்கும்

    • ராம் காமேஸ்வரன்,

      ஏழைகள் பணம் வாங்குகிறார்கள் என்று குமுறும் நடுத்தர வர்க்கத்தின் ‘ஜனநாயக’ உணர்வின் உண்மை குறித்து வினவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.

      வாக்களிக்க பணம் வாங்குவது குற்றமா? https://www.vinavu.com/2011/04/11/money-for-vote/ படித்துப் பாருங்கள்! அதன் பின்னர் உங்கள் கவலை குறித்து நீங்களே வெட்கப்டுவீர்கள்.

  14. விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பினர் இதுபோல் நடந்துகொண்டால் அரசு இவர்களை தீவிரவாதிகளாக அறிவித்துவிடும்

    • கொடியேந்தி, சுழன்று சுழன்று போராடினால் தீவிரவாதி.
      குல்லா போட்டுக்கொண்டு மேடையின் நிழலில் அமர்ந்து கொண்டுவிட்டால்
      அறவழி வாதியா?
      திருடியதை மீட்பதற்கு குல்லாகளால் விசிறிக் கொண்டிருக்கமுடியாது.
      தரும அடி, அதுவும் நடுத்தெருவில் நிற்கவைத்து!
      அதுதான் நடந்தது.

  15. ஊழலை எதிர்த்து பலர் குரல் கொடுக்கத்தான் செய்கின்றனர். ஊழல் ஒழிய வேண்டும் என முழக்கமெல்லாம் போடுகின்றனர். அண்ணா ஹசாரே முதல் பல தொண்டு நிறுவனங்கள் வரை – ஏன் சில அரசியல் கட்சிகள்கூட ஊழலுக்கு எதிராக போராடுவது போல பிரம்மையை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் அனைவருமே குட்டிச்சுவரை பார்த்துதான் குரைக்கின்றனர். குற்றவாளிகளை எதிர்த்து களத்தில் போதுவதற்கு யாரும் முன் வருவதில்லை.

    குற்றவாளிகளை களத்தில் மோதி வீழத்துவதுதான் ஊழலை ஒழிப்பதற்கான உருப்படியான நடவடிக்கை. அதைத்தான் விவிமு வின் இந்தப் போராட்டம் உணர்த்துகிறது.

    இந்தப் போராட்டம் மற்றொரு உண்மையையும் நமக்கு உணர்த்தியுள்ளது. ஊழலின் ஊற்றுக்கண் தரகு முதலாளிகள் அதிகார வர்க்கம்தான் என்பதும் பலருக்குத் தெரிவதில்லை. அதிகார வர்க்கத்தின் துணை இன்றி இந்த நாட்டில் எந்த ஊழலும் நடைபெறுவதில்லை. அது ஸ்பெக்ட்ரம் ஊழலாக இருந்தாலும் அதுதான் உண்மை. ஊழல் செய்யாத அரசியல்வாதிகளைக் கூட காண முடியும். ஆனால் ஊழல் செய்யாத அதிகாரிகளைக் காண்பதரிது.

    அதிகாரிகளின் துணையின்றி அரசியல்வாதிகள் ஊழல் செய்யமுடியாது. ஆனால் அரசியல்வாதிகளின் துணையின்றி அதிகாரிகள் ஊழல் செய்யமுடியும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்று. இப்படி எத்தனையோ அரசு அலுவலகங்களில் அரசியல்வாதிகளின் துணையின்றி அதிகார வர்க்கம் மட்டும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பது அன்றாடம் நடந்து வருகிறது. இத்தகைய அன்றாட ஊழல்களை மதிப்பிட்டால் அது ஸ்பெக்ட்ரம் ஊழலையே விஞ்சும் என்பதே உண்மை.

    அத்தகைய ஊழல் ஒன்று தமிழ் நாடு மின்வாரியத்தில் தற்போது நடந்து வருகிறது. இங்கும் எந்த அரசியல்வாதியின் தலையீடும் கிடையாது. அதிகாரிகள் மட்டுமே கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். அது பற்றிய சமீபத்திய பதிவு இதோ.

    பம்புசெட்டுகளுக்கு இலவச மின் இணைப்பு: ரூ.200 கோடி இலஞ்சம்!
    http://hooraan.blogspot.com/2011/02/200.html

    • //இந்தப் போராட்டம் மற்றொரு உண்மையையும் நமக்கு உணர்த்தியுள்ளது. ஊழலின் ஊற்றுக்கண் தரகு முதலாளிகள் அதிகார வர்க்கம்தான் என்பதும் பலருக்குத் தெரிவதில்லை//

      //திருடிவிட்டு ஓடிப்போன நெல்கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தரை கொண்டுவந்து ஒப்படையுங்கள் எனக் கோரினோம்//

      சிவில் சப்ளை கொள்முதல் நிலையத்தில் வேலை பார்க்கும் ரெகார்ட் கிளார்க் (ரூபாய் 4800 முதல் 10,000 வரை சம்பளம் வாங்குபவர்) தான் தரகு முதலாளி அதிகார வர்க்கம் என்றால் நக்ஸல்களின் இலக்கு குறித்து என்னத்த சொல்ல!

      TNCSC RECORD CLERK Pay Scale Rs. 4800-10000
      http://www.tncsc.tn.gov.in/html/staff.htm

      அந்த ரெகார்ட் கிளார்க்கும் பாட்டாளி வர்க்கம் தானே ஐயா?
      அவருக்கு மேலே இருக்கும் அதிகாரி தவறு செய்யும் போது தட்டி கேட்க அவர் பின்னாலும் நில்லுங்கள். இப்படி எல்லா மட்டத்திலும் தனக்கு மேலுள்ள அதிகாரிகளிடம் விழிப்புணர்வோடும், கீழே பணிபுரிபவர்களிடம் கண்டிப்போடும் நடந்து கொண்டால் நக்ஸல்களுக்கு வேலையில்லாமல் போய்விடும்.

      • அண்டார்டிகாவில் இருக்கும் அண்ணனை ராம் காமேஸ்வரனுக்கு,

        //”கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லிற்கான தொகையை தற்காலிக ஊழியரான பட்டியல் எழுத்தர் மட்டுமே எடுத்துக்கொள்ளவில்லை.உயர் அதிகாரிகளான உங்கள் அனைவருக்கும் பிரித்து தான் கொடுத்துள்ளார்,ஆகவே நீங்கள் அனைவரும் வாங்கியப் பணத்தை திருப்பித் தாருங்கள்” //
        இதுவும் கட்டுரையில் உள்ள வரிகள்தான். எல்லா அரசு அலுவலகங்களிலும் ஊழல் என்பது ஒரு குமாஸ்தாவோடு முடிந்து விடுவதல்ல. அது மேலிருந்து கீழ் வரைக்கும் உள்ள வலைப்பின்னல்.

        மேலும் ஒரு குமாஸ்தா மட்டும் துணிந்து இப்படி ஒரு ஊழலை எங்கும் செய்துவிடமுடியாது. அடுத்து விவசாயம் அழிக்கப்பட்டு, புறக்கணிப்பட்டுவரும் நிலையில் முன்பு போல அரசு கொள்முதல் நிலையங்கள் அனைத்தையும் கொள்முதல் செய்வதில்லை. இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி தனியார் நிறுவனங்களிடம் விற்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தற்போது ரிலையன்ஸ், ஐ.டி.சி நிறுவனங்கள் விவசாயத்தில் முற்றிலும் ஏகபோகத்தை கொண்டுவரும் முயற்சியில் இருக்கின்றன. பல இடங்களில் இவர்கள் மட்டும் கொள்முதல் செய்யும் நிலைமையும் இருக்கிறது. எதிர்காலத்தில் இவர்கள் மட்டுமே நீடிக்க வேண்டும் என்பதற்காக தற்போது அரசு கொள்முதல் நிலையங்கள் வேண்டுமென்றே நலிந்து போகவும், ஊழலில் திளைக்கவும் அனுமதிக்கப்படுகின்றன.

        இன்று தனியார் செல்பேசி நிறுவனங்களின் உயர்பதவியில் இருப்பவர்களெல்ல்லாம் பி.எஸ்.என்.னில் இருந்து ஓய்வு பெற்றவர்களோ, இல்லை விருப்ப ஒய்வு பெற்றவர்கள்தான். இவர்கள்தான் அரசு செல்பேசி நிறுவனத்தை அழிக்கும் சூட்சுமங்களையும், மோசடிகளையும் அந்தந்த நிறுவனங்களில்தலைமை தாங்கி நடத்துகிறார்கள். அதே போல தனியார் வங்கிகளில் இருக்கும் உயர் அதிகாரிகள் பலரும் கூட அரசு வங்கிகளில் இருந்து சென்றவர்கள்தான்.

        எனவே திட்டமிட்டு அரசு நிறுவனங்களை அழிக்கும் முயற்சியில் தனியார் முதலாளிகளே இருக்கின்றனர். இதெல்லாம் உண்மையில் சமூக அக்கறை இருப்பவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய விசயங்களே. ராம் காமேஸ்வரனும் அதில் ஒருவராக இருப்பதை விரும்புகிறோம்.

        எனினும் உடனே இதனை மறுப்பதற்கு ஏதாவது லிங்குகளை அண்ணன் தேடாமல் இருப்பதற்கும் திருப்பதி வெங்கடாசலபதியை இறைஞ்சுகிறோம்.