privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை!

ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை!

-

அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டத்தையே மாபெரும் புரட்சியாக உச்சி மோந்து மெச்சிய அம்பிகள் இந்தக் கட்டுரையை மனப்பாடம் செய்து படிக்கட்டும். ஊழலை சட்டமோ, சில மேதைகளின் நடவடிக்கைகளோ ஒழித்து விடாது. அதற்கு உழைக்கும் மக்களை அணிதிரட்டி ஊழல் செய்யும் அதிகாரவர்க்கம், முதலாளிகள், அரசியல்வாதிகள் அனைவரையும் எதிர்த்து களத்தில் இறங்கி தண்டிக்க வேண்டும். அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளை ஏமாற்றி கொள்ளையடித்த ஊழியர்கள், அதிகாரிகள் அவர்களுக்கு துணை போன போலீசு அத்தனை பேரையும், அதே விவசாயிகளை அணிதிரட்டி நீதியை பெற்றிருக்கிறது விவசாயிகள் விடுதலை முன்னணி.

இந்தப் போராட்டத்தில் ஊழல் பணம் 1,70,000 ரூபாய் மீட்கப்பட்டு அங்கேயே அதற்குரிய விவசாயிகளுக்கு பிரித்தும் கொடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் அரசு அலுவலகத்தை கைப்பற்றுதல், நெல் மூட்டுகளை பாதுகாத்தல், அதிகாரிகள் சிறைபிடிப்பு, லாரிகள் சிறைவைப்பு என அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இவையெல்லாம் அண்ணா ஹசாரே டைப் கனவான்கள் நினைத்தும் பாரக்க முடியாத போராட்டம். ஏனெனில் இது நக்சல்பாரிகளின் போராட்டம். அதே நேரம் இது போன்ற போராட்டத்தில் கலந்து கொள்வதற்கும் அண்ணா ஹசாரேவை நம்பிக் கொண்டிருக்கும் கனவான்கள் முன்வரட்டும். இன்னும் எத்தனை நாள் மெழுகுவர்த்தியையே மட்டுமே ஏந்திக் கொண்டிருப்பது!

-வினவு

______________________________________________________________

ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை!

டந்த மார்ச் மாதம் 4-ம் தேதி அதிகாலை 6 மணியளவில் விருதை வட்டார விவிமு(விவசாயிகள் விடுதலை முன்னணி) செயலரை எழுப்பினார் ஒரு விவசாயி. “நமது ஊரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 1 மூட்டைக்கு 8 கிலோ அதிகமாக வைத்து நெல் கொள்முதல் செய்ததை விவசாயிகள் கண்டுபிடித்துவிட்டனர்.அங்கே வாருங்கள்” என அழைத்தார்.தோழர் உடனடியாக எழுந்து சென்றபோது நூற்றுக்கணக்கான விவசாயிகள் அங்கே குவிந்திருந்தனர்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசினார்கள்.

விவிமு தோழர்கள் அவர்களை ஒருமுகப்படுத்தி நெல்கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இப்பேச்சு வார்த்தையின் முடிவில் 19.01.2011 முதல் 3.3.2011 வரை எத்தனை மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டனவோ, அவை அனைத்திற்கும் மூட்டைக்கு நான்கு கிலோ வீதம் பணம் தந்துவிடுவதாக நெல் கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் கூறினார்.இது குறைவாயினும் இதை விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர். இப்படி பணம் தருவதற்கு தன்னை ஊருக்கு சென்றுவர அனுமதிக்குமாறு அந்த நபர் கோரினார். இதை விவிமு தோழர்கள் ஏற்கவில்லை.ஆனால் விவசாயிகள் கூறியதன் பேரில் அந்நபர் ஊருக்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டார்.

மாலைக்குள் வருவதாக சொன்ன அவன் மறுநாள் காலை வரை திரும்ப வரவே இல்லை.அங்கே வேலை செய்த சுமைதூக்கும் தொழிலாளிகளும் ஓடிவிட்டனர்.இப்போது அந்த கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 4000 நெல்மூட்டைகள் இருந்தன.இந்த 4000 நெல்மூட்டைகளையும் அதன் அலுவலக பதிவேடுகளோடு,இரு எடைபோடும் இயந்திரங்கள் ஆகியவற்றை,விவிமு விவசாயிகளின் ஒப்புதலோடு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.அலுவலகத்தை விவிமு பூட்டிவிட்டு சாவியை தன்னிடத்தில் வைத்துக்கொண்டது.

05.03.2011 அன்று நெல் கொள்முதல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அங்கே வந்தார்கள்,அலுவலகத்தை திறக்குமாறு கேட்டார்கள் இதை விவசாயிகளும்,விவிமுவும் ஏற்க மறுத்துவிட்டனர்.திருடிவிட்டு ஓடிப்போன நெல்கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தரை கொண்டுவந்து ஒப்படையுங்கள் எனக் கோரினோம். இதை அதிகாரிகள் மறுத்துவிட்டு அங்கிருந்து காரில் ஏறிதப்பிக்க முயன்றனர்.உடனே விவிமு வழிகாட்டியதன் அடிப்படையில் உயர் அதிகாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனர்.

இதனால் குலை நடுங்கிப்போன அதிகாரிகள்,நாளை மேலும் சில உயர் அதிகாரிகளை அழைத்துவந்து விவசாயிகளிடம் பேசுவதாக கூறினர்.இதை எழுத்துபூர்வமாக எழுதித்தாருங்கள் என்று விவிமு கோரியபடி எழுதிதந்தனர்.இதனால் சிறைபிடிக்கப்பட்ட அதிகாரிகள் 2 மணிநேரத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.அவர்கள் கூறியபடி மறுநாள் கடலூர் மாவட்ட TNCSC –துணைமேலாளர் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழு 06.03.2011 அன்று மதியம் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.அலுவலகத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு அவர்கள் கோரியதை நாங்கள் நிராகரித்தோம். பிரச்சினை தீரும் வரை அலுவலகம் எமது கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்று திட்டவட்டமாக அறிவித்தோம்.

பின்னர் பேச்சுவார்த்தை நடந்தது ”தவறு நடந்தது உண்மை தான் ஆனால் கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லிற்கு எங்களால் பணம் தர இயலாது.சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு தொடுக்கத்தான் முடியும்”என சட்டவாதம் பேசினர். ஆனால் நாங்களோ கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லிற்கு உடனடியாகவே பணம் தரவேண்டும், என்ற கோரிக்கையில் உறுதியாகவே இருந்தோம்.”கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லிற்கான தொகையை தற்காலிக ஊழியரான பட்டியல் எழுத்தர் மட்டுமே எடுத்துக்கொள்ளவில்லை.உயர் அதிகாரிகளான உங்கள் அனைவருக்கும் பிரித்து தான் கொடுத்துள்ளார்,ஆகவே நீங்கள் அனைவரும் வாங்கியப் பணத்தை திருப்பித் தாருங்கள்” என பகிரங்கமாகவே கோரிக்கை வைத்தோம்.

எமது இந்த கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்ததால் அவர்களை முற்றுகையிட்டு சிறைபிடித்தோம். எங்களது பிரச்சனையை தீர்க்காமல் நீங்கள் இங்கிருந்து வெளியேற முடியாது என, நூற்றுக்கணக்கான விவசாயிகளுடைய ஒருமித்த ஆதரவோடு அறிவித்தோம்.பின்னர் எடை இயந்திரங்களை பழுது பார்ப்பவர்களை வரவழைத்து இரு எடை இயந்திரங்களும் சரிபார்க்கப்பட்டது.இதில் ஒரு மூட்டைக்கு 4 முதல் 8 கிலோ வரை கூடுதாலாக காட்டியது நிருபிக்கப்பட்டது.இதனால் அதிகாரிகள் தேள்கொட்டிய திருடனை போல் விழித்தாலும்,தங்களால் பணம் தரமுடியாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தனர்.இதனால் மாலை வரை முற்றுகை நீடித்தது.வெளியே இருந்த இரண்டு எடை இயந்திரங்களும் அலுவலகத்தில் வைத்து பூட்டப்பட்டது.

மாலை 6.30 மணியளவில்  போலிசு வந்தது. அதிகாரிகளை விடுவிக்காவிட்டால்,வழக்குப் போடுவோம் என மிரட்டியது. இதனால் விவிமு தனது உத்தியை மாற்றியது. உடனடியாகவே புதிய பட்டியல் எழுத்தரை நியமித்து விவசாயிகளின் எஞ்சிய நெல்லையும் கொள்முதல் செய்யவேண்டும், என்ற விவிமுவின் கோரிக்கையை உயரதிகாரிகள் ஏற்றுக்கொண்டதால் முற்றுகையை விலக்கிக் கொண்டு அதிகாரிகளை விடுவித்தோம்.அதே நேரத்தில் “நாளைக்குள் கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லுக்கு பணம் தராவிட்டால்,தற்போது நிலையத்தில் உள்ள 4000 நெல்மூட்டைகளையும் விவசாயிகளுக்கு பிரித்துத் தருவோம்,”என விவசாயிகளின் ஆரவாரத்திற்கிடையே அறிவித்தோம்.இது சட்டவிரோத செயல் என போலிசு கூறிய போது,நான்கு கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களிடம் கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லை திருப்பி எடுத்துக்கொள்ளப் போகிறோம்.இந்நடவடிக்கை சட்டவிரோதம் என்று சொன்னால் அதை செய்வதற்கு நாங்கள் தயங்கமாட்டோம். போலிசால் முடிந்தால் எங்கள் அத்துனை பேர் மீதும் வழக்கு போடட்டும்.நாளை 07.03.2011 அன்று  திருடியதை திருப்பி எடுப்போம், என்ற போராட்டத்தை விவிமு அறிவித்தது.

இதனால் ஏழாம் தேதி காலை கோட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக போலிசு எங்களுக்கு தகவல் தந்தது.நாங்கள் பேச்சுவார்த்தைக்கு கோட்டாட்சியர் அலுவலகம் சென்றோம்.”நான் உங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை நீங்கள் வட்டாட்சியரை பாருங்கள்” என்றார் கோட்டாட்சியர்.நாங்கள் வட்டாட்சியரை சந்தித்த போது ”போலிசு ஆய்வாளரிடம் பேசுங்கள்”என்றார்.பேச்சுவார்த்தை போலிசு நிலையத்தில் நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையில் 4000 நெல்முட்டைகளையும் எடை போட்டு கூடுதலாக உள்ள நெல்லிற்கு பணம் தந்துவிடுவதாக TNCSC அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.”ஏற்கனவே சேமிப்பு கிடங்கிற்கு சென்றுவிட்ட நெல்லிற்கு தங்களால் ஒன்றும் செய்யமுடியாது”, என்று கூறினர்.இதை விவசாயிகள் ஏற்றுக்கொண்டதால் விவிமுவும் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டது.மறுநாள் வருவதாக சொன்னவர்கள் TNCSC-யில் பணிபுரியும் பட்டியல் எழுத்தர் ஒருவரையும், பணி ஓய்வு பெற்ற முன்னாள் கண்காணிப்பாளர் ஒருவரையும் இடைத்தரகர்களாக TNCSC உயரதிகாரிகள் அனுப்பிவைத்தனர். இவர்கள் ”02.03.2011 , 03.03.2011 ஆகிய இரு நாட்களில் மட்டும் தான் தவறு நடந்துள்ளது,இவ்விரு நாட்களில் எடைபோடப்பட்ட மூட்டைகளுக்கு மட்டும் தான் பணம் தரமுடியும்.எஞ்சிய நாட்களில் எடைபோட்ட மூட்டைகளில் தவறு நடக்கவில்லை” என வாதாடினர்.

4000 நெல் மூட்டைகளில் மேலே அடுக்கிவைக்கப்பட்டு இருந்த முட்டைகளில் 10 மூட்டையை எடைப் போட்டு ”நெல் குறைகிறதே தவிர கூடுதலாக இல்லை”, என விவசாயிகளுக்கு காட்டிவிட்டு லாரிகளில் மூட்டைகளை ஏற்ற ஆரம்பித்தனர்.சுமார் 50 மூட்டைகளை ஏற்றிய பின்பு அடியில் இருந்த மூட்டைகளை எடை போடுமாறு நாங்கள் கோரினோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே கீழே இருந்த மூட்டைகளில் 2 முதல் 4 கிலோ வரை கூடுதலாக நெல் இருந்தது.கடைசி இரு நாட்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளில் கூடுதலாக இருந்த நெல்லிற்கு மட்டும் பணம் தந்துவிட்டு நெல்மூட்டைகளை ஏற்றிச்சென்றுவிடலாம், என்று திட்டமிட்டிருந்த இடைத்தரகர்கள் ஏமாந்து போனார்கள்.

“கடைசி இரு தினங்களுக்கு மூட்டைக்கு 8 கிலோவும் எஞ்சிய மூட்டைகளுக்கு சராசரியாக 2 கிலோவீதம் பணம் தரவேண்டும். அப்போது தான் நெல்மூட்டைகளை ஏற்றுவதற்கு அனுமதிப்போம்” என திட்டவட்டமாக அறிவித்தோம்.இதை உயரதிகாரிகளுக்கு அறிவிப்பதாக கூறிவிட்டு இடைத்தரகர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.திருடப்பட்ட நெல்லிற்கு பணம் தந்துவிட்டு நெல்மூட்டைகளை ஏற்றாமல் வெளியேறக்கூடாது, என விவிமு 6 லாரிகளை சிறைபிடித்தது.

உடனடியாக இத்தகவலை உயரதிகாரிகளுக்கும்,பத்திரிக்கை,தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கும் தெரிவித்தது.மறு நாள் காலை 10 மணியளவில் லாரிகள் சிறைப்பிடித்திருப்பதை செய்தியாக்கிக்கொண்டு செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்கமுயன்றனர்.இப்படி புகைப்படம் எடுக்ககூடாது என்று தமிழ்நாட்டில் இல்லாத கட்சியின் (புரட்சிகர சோசலிச கட்சியின்) கடலூர்மாவட்ட செயலாளர் என்று தன்னை கூறிக்கொள்ளும் போலிசு புரோக்கரான செந்தில் என்பவர் தடுக்க முயன்றார். இப்படி லாரிகள் சிறைபிடிக்கப்பட்ட செய்தி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்தால் எங்கள் ஊர்களின் பெயர் கெட்டுப்போகும் என்று விவிமு செயலரிடம் வாதாடினார்.இதை மறுத்த விவிமு செயலரும்,அந்த நேரத்தில் அங்கே இருந்த விவசாயிகளும் TNCSC திருடர்களுக்கு ஆதரவாக அவர் பேசுவதை அம்பலப்படுத்தி அவரை எச்சரித்தனர்.இச்செய்தி இரண்டாவது முறையாக பத்திரிக்கை மற்றும் தொலைக்கட்சிகளில் வெளிவந்தது.

இதற்கிடையில் இப்படி தொடர்ந்து போராட்டம் நட்த்தினால் TNCSC-யை மூடிவிடுவார்கள் என்று வதந்தியை பரப்பி நெல் விற்ற விவசாயிகள்,விற்காத விவசாயிகள் ஆகிய இருவருக்கிடையில் மோதலை உண்டாக்க முற்பட்டனர்.இவர்களின் இந்த சதியை விவசாயிகளை கூட்டிப் பேசி அவர்களுக்கு புரிய வைத்து விவிமு முறியடித்தது.இப்படி TNCSC-க்கு ஆதரவாக வதந்தி பரப்பி விவசாயிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க முற்படும் எட்டப்பர்களை விவிமு செயலர் மிக கடுமையாக எச்சரித்தார்.விவசாயிகளும் எட்டப்பர்களின் சதியை புரிந்துகொண்டு தங்களது வாத்தைகளில் திட்டித் தீர்த்தனர்.விவிமு செயலரை திட்டிய ஒருவரிடம் பல விவசாயிகள் சண்டையிட்டனர்,அடிக்கவும் சென்றனர்.இச்சண்டையை விலக்கிவிட்ட விவிமு தோழர்கள் இப்போதைக்கு எட்டப்பர்களோடு சண்டை வேண்டாம் என்றும், இப்படி செய்தால் சட்டம்,ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க நினைக்கும் அதிகாரிகளின் விருப்பத்திற்கு நாம் பலியாகிவிடுவோம் என புரியவைத்தனர்.

மறுநாள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் இச்செய்தி வெளிவந்ததால் உயரதிகாரிகளின் வழிகாட்டுதல் படி முதல் நாள் ஓடிப்போன இடைத்தரகர்கள் மீண்டும் வந்தனர். விவிமு கோரியபடி 4000 மூட்டைகளுக்கும் ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரத்தை TNCSC-கொள்முதல் அதிகாரி முன்னிலையில் இடைத்தரகர்கள் விவிமுவிடம் தந்தனர்.இதன் மூலம் விவசாயிகளிடம் திருடியதில் ஒரு பகுதியை விவிமு திரும்பப் பெற்றது.இப்பணத்தை அனைத்து விவசாயிகளுக்கும் கணக்கிட்டு 14.03.2011 அன்று விவிமு பிரித்து தந்தது.

TNCSC-வரலாற்றிலேயே அவர்கள் திருடியதை திரும்பப் பெற்ற முதல் நடவடிக்கை இது தான்.இப்போராட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் ஒளிந்திருக்கும் போர்குணத்தை விவிமு மிகச்சரியாக பயன்படுத்தியது.மேலும் எட்டப்பர்களை முறியடிப்பதையும்,சட்டபூர்வ,சட்டபூர்வமற்ற போரட்டமுறைகளை இணைத்து மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதை வெறுமனே பேச்சின் மூலமாக மட்டும் அல்ல,தனது செயலின் மூலமாகவும் விவசாயிகளுக்கு விவிமு உணரவைத்தது.இப்போரட்டத்தின் மூலம் விவாசாயிகள் மத்தியில் போராட்டக் குணத்தை மட்டுமல்ல,விவிமு போன்ற நக்சல்பாரி அமைப்புகள் மட்டுமே மக்களின் உரிமைகளை வென்றேடுக்க விடாப்பிடியாக நின்று போராடுவதுடன்,இப்போராட்டத்தில் தமது உயிரையும் தரத் தயங்காதவர்கள் என்பதையும் விவசாயிகளுக்கு உணர்த்தியது.

இப்போரட்டத்தை சாதி,ஊர் ஆகிய பிற்போக்குத் தனங்களை காட்டி, விவசாயிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க முயன்ற அதிகாரிகள் மற்றும் எட்டப்பர்களின் சதிச்செயல்களை விவிமு தனது தன்னலமற்ற,உறுதியான நிலைப்பாடுகளாலும்,போராட்டத்தாலும் உடைத்தெரிந்தது.இப்படிப்பட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் அனைத்தையும் பயன்படுத்தி அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்துவதன் மூலமே விவசாயிகளின் வாழ்நிலையால் அவர்களிடம் உள்ள பிற்போக்கு தனங்களை உடைத்தெரிந்து,அவர்களிடம் இயல்பிலேயே உள்ள போராட்டக்குணத்தை வெளிக்கொணர்ந்து,விவசாயிகளிடையே ஒற்றுமையையும்,கூட்டுத்துவ சிந்தனையையும் ஜன்நாயக உணர்வையும் உருவாக்க முடியும்.விவசாயிகளை திருத்தமுடியாது,அவர்களை அணிதிரட்ட முடியாது,என்று மார்க்சிய இயங்கியலுக்கு புறம்பாக உளறித்திரியும் மரமண்டைகளுக்கு இது ஒருபோதும் புரியாது!

_____________________________________________________________

– தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி, விருத்தாசலம் வட்டம்.
_____________________________________________________________

  1. ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை !…

    அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டத்தையே மாபெரும் புரட்சியாக உச்சி மோந்து மெச்சிய அம்பிகள் இந்தக் கட்டுரையை மனப்பாடம் செய்து படிக்கட்டும்….

    • “அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டத்தையே மாபெரும் புரட்சியாக உச்சி மோந்து மெச்சிய அம்பிகள் இந்தக் கட்டுரையை மனப்பாடம் செய்து படிக்கட்டும்”.

      அவரும் போராட தானே செய்தார்..உங்கள் கட்டுரை உங்கள் போராட்டத்தை வெளிபடுத்ஹஊவதை விட அண்ணாவை குறை சொல்ல எழுதியதை போல் இருக்கிறது…. lkg சிறுவனைப்போல் இருக்கிறது உங்கள் மனநிலை… மற்றபடி நல்ல காரியம் யார் செய்தாலும் நல்லது தான்.. அரை குடமாய் தலும்புகிரீர்கள் . நிறைகுடமாய் மாற…

      வாழ்த்துக்களுடன

      ravi

      ravi

  2. You have done a great job and this is a good article to, (**இது போன்ற போராட்டத்தில் கலந்து கொள்வதற்கும் அண்ணா ஹசாரேவை நம்பிக் கொண்டிருக்கும் கனவான்கள் முன்வரட்டும். இன்னும் எத்தனை நாள் மெழுகுவர்த்தியையே மட்டுமே ஏந்திக் கொண்டிருப்பது!**)

    but each and everyone is having their own style, that is the beauty of INDIA…Blaming ANNA is not related to this article(Like u are blaming HINDUS, RAJINI as you cant avoid these PICKLES without these tasty PICKLES u cant sell ur curd rice… :-))

    அண்ணா ஹசாரே மீது உமக்கு அப்படி ஒரு கொபம்…இன்டிய நாட்டில் ஹிம்சை மட்டும் அகிம்சை முறை இரன்டும் இருக்கும் தம்பி…இதுதான் இந்தியா…வினவு திட்டமட்டும்தான் தெரியும் பொல…உமக்கு காந்தி, ஹசாரே எல்லாம் ஒன்னு தானா…அதெ ச‌ம‌ய‌ம் நான் இன்த‌க்க‌ட்டுரையை பாராட்டுகிரென்..அண்ணா மீது என்ன தவரென்டு சரியா ஒரு காரனம் சொல்லுஙக…நான் சுபாஷ் சந்திர பொஷ் ரசிகன்..ஆனால் காந்தியயும் மதிக்கின்ரேன்…வெள்ளைக்காரன்டே அஹிம்சை வென்ர பொழது நம்ம ஊரு கொல்லைக்காரன்ட்ட முதியாதா?

    • காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு!
      http://senkodi.wordpress.com/2009/03/18/ghandi-congress/

      August 15, 1947 The Transfer of Power: Real or Formal? — Suniti Kumar Ghosh
      http://rupe-india.org/43/ghosh.html

      அன்னா ஹாசரே, உலக வங்கியின் கட்டுமான மறுசீரமப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த கார்ப்போரேட்-தரகு முதலாளிகளால் 40 வருடங்களாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட விசப் பாம்பு. அன்னா ஹாசரே அடிப்படையில் ஒரு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி. இது தெரியாமல் அவர் பின்னே கூடிய முற்போக்கு, ஜனநாயக சக்திகள் இன்று பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடியுள்ளனர்.

      சரியாகச் சொன்னால் மக்களின் கடும் வெறுப்புக்கு ஆளாகி அம்பலப்பட்டு நிற்கும் அமெரிக்கக் அடிமை இந்திய அரசை காக்க உருவாக்கப்பட்ட இன்னொரு காந்தி.

      • ஆர்.எஸ்.எஸ் காரனுவோ, காந்தியக் கொன்னவங்கோ! அசுரக் கூட்டத்திற்கு, காந்தியே முதல் எதிரி! அப்ப காந்திய கொன்னவனும், திட்டறவனும் ஒரே ஜாதி?அப்ப இது பங்காளிச் சண்டை!

        முரண்பாடுகளற்ற தலைவர்களேது? ராஜ ராஜ சோழனும், காந்தியும் விதி விலகல்ல! காந்தி தன்னைக் குறித்து, முடிந்தவரை ஒப்புதல் அளித்துள்ளார்!

        முரண்பாடுகளே அற்ற தலைவரை, அசுரன் அடையாளம் காட்டுவார் என்று எதிர் பார்க்கிறேன்!

        உமது போராட்ட முறை வேறு! மற்றவர்களது வேறு!
        எவனைக் கேவலப்படுத்தலாம் என்று, அலைவது என்ன போராளித்தனம்! இது , எந்த வகைக் குரைப்பு?(ஊரான் பின்னூட்டத்தை பார்க்கவும்!)

        • //முரண்பாடுகளே அற்ற தலைவரை, அசுரன் அடையாளம் காட்டுவார் என்று எதிர் பார்க்கிறேன்!//

          தலைவரிடம் முரன்பாடுகள் இருப்பதோ, முரன்பாடுகள் உள்ள தலைவன் இருப்பதோ ஒரு பிரச்சினையல்ல. அது சரி செய்யக் கூடிய விசயங்களே.

          அன்ன ஹாசரே தலைவன் அல்ல. அவர் ஒரு விசப்பாம்பு எனும் கீழ் வரும் கருத்தை ரம்மி கவனிக்கத் தவறிவிட்டார்.

          //அன்னா ஹாசரே, உலக வங்கியின் கட்டுமான மறுசீரமப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த கார்ப்போரேட்-தரகு முதலாளிகளால் 40 வருடங்களாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட விசப் பாம்பு. //

  3. இதுவும், அஹிம்சா முறை போராட்டத்தின் வெற்றியே!

    காந்தியவாதத்தின் வெற்றி!

    வன்முறை வேண்டாம் என்று வழிநடத்திய, வி.வி.மு தலைவரும், காந்தியவாதியே!
    வன்முறை அற்ற அறவழி போராட்டத்தை, ஹசாரே,வி.வி.மு என்ன , யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்!
    மக்கள் ஆதரவு வேண்டும், காரியம் சித்தி அடைய!

    போராட்டம் நடத்துவது, நக்சல்பாரி இயக்கங்களுக்கு மட்டுமே உரிய உரிமை! எனும் நினைப்பில் , அன்னா ஹசாரே போன்ற ஆட்கள் உள்ளே வந்து விட்டால், நமக்கு மக்களிடம் ஆதரவு இழந்துவிடுமே என்ற கவலையில், மற்றவரை தூற்றுகிறீர்கள்!

    மதவாதிகளும், மரத்தடி ஜோதிடர்களும், மட்டமான அரசியல் வாதிகளும், தன்னை உயர்த்தி, மற்றவரை தூற்றும் செயலுக்கும், இது போன்ற பதிவுகளுக்கும் வித்தியாசமில்லை!

    வி.வி.மு நடத்திய போராட்டமும், வெற்றியும் பாராட்டுக்குறியவை, என்பதில் சந்தேகமில்லை! நமக்கு விளம்பரம் கிடைக்க வில்லை என்பதற்காக, மற்ற போராளி குழுக்களை, இகழ்வது, நக்சல்பாரிகளால் மட்டுமே, போராடி வெற்றிகளை வாங்கித் தர முடியும் எனும் தோணியில் உரைப்பது – பிரபாகனை ஞாபகப் படுத்துகிறது!

    குழு மனப்பான்மை–கோடி குழப்பம்,சகோதர யுத்தம், எதிரியின் வெற்றி!

    அன்னா ஹசாரேவும், வன்முறையற்ற நக்சலும் நமக்குள் ஒருவரே!

    எதிரிகளை வெளியில் தேடுவோம்!

    • ரம்மி,

      நக்சல்பாரிகள் ஒன்றும் அகிம்சாவாதிகள் கிடையாது-புரட்சியாளர்கள். புரட்சி என்பது ஜந்தர் மந்தரில் உட்கார்ந்து கொண்டும், ஆபீஸ் முடிந்த பிறகு மெழுகு வர்த்தி பிடித்துக்கொண்டும் நிற்பதல்ல அது வன்முறையாது.

      அகிம்சை என்பது துரோகம்.
      புரட்சி என்பது தான் தியாகம்.

      வி.வி.மு தோழர்களிடம் போய் இதை அகிம்சை போராட்டம் என்று கூறிப்பாருங்கள் பிறகு தெரியும்.

      • உண்மை,
        விவிமு தோழர்களின் போராட்டம் ஒரு முன்னுதாரணப் போராட்டம், புரட்சி என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. புரட்சி என்றாலே ஆயுதம் தூக்குதல், வெட்டுக்குத்தில் இறங்குதல், வன்முறையை கட்டவிழ்த்துவிடல் என்பதாக வெகுஜனங்களிடையே ஒரு மாயக்கருத்து இருக்கிறது.

        இந்தக் குறிப்பிட்ட போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மீது விவிமு ஒரு போதும் ஆயுதப் பிரயோகம் செய்யவில்லை. அவர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து போராடியிருக்கின்றனர். இதைத்தான் ரம்மி கூறவருகிறார் என்று நினைக்கிறேன்.

        • நக்சல்களைப் பற்றி, மக்கள் கொண்டுள்ளது மாயக் கருத்தல்ல! ‘உண்மை’தான் என்று, மறுதலிக்கிறார் போல!

      • புரட்சி என்றால் ஹிம்சை! வன்முறை தான் புரட்சி! இதுவன்றோ கொள்கை!
        ஒருவன் புரட்சி என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டால்,கிடைக்கும் வெற்றி நிரந்தரமல்ல! நிம்மதியானதுமல்ல!
        எதிர் வன்முறையே பரிசு!

    • இங்கே பலருக்கு காந்தியை பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்பது பின்னூட்டங்களிலிருந்து தெளிவாக தெரிகின்றது. ஒரு வேளை காந்தி உயிரோடு இருந்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் வாழ்திருந்தால், அதிகாரிகள் சொல்லிய வழக்கு பதிவு செய்வோம் என்ற பதிலில் திருப்தியடைந்து, சட்டம் அதன் கடமையை செய்ய்யட்டும் என்று தெளிவாகவே கூறி போரட்டத்தை கருவருத்திருப்பார். இது போன்ற சம்பவங்கள் காந்தி காலத்திலேயே நடந்துள்ளது. எனவே காந்தியவாதிகள் என்று தன்னை சொல்லிக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் அனைவரும் தயை கூர்ந்து காந்தியின் வாழ்க்கையை ஒரு முறைக்கு இருமுறை நன்றாக படித்துவிட்டு வரவும்.

      – ஜெய் ஜாக்கி

      • ஜெய் ஜாக்கி,

        //ஒரு வேளை காந்தி உயிரோடு இருந்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் வாழ்திருந்தால், அதிகாரிகள் சொல்லிய வழக்கு பதிவு செய்வோம் என்ற பதிலில் திருப்தியடைந்து, சட்டம் அதன் கடமையை செய்ய்யட்டும் என்று தெளிவாகவே கூறி போரட்டத்தை கருவருத்திருப்பார்//

        காந்தி இருந்திருந்தால் அந்த TNCSC ரெகார்ட் கிளார்க் எடையில் திருட்டுத்தனம் செய்து விவசாயிகளின் நெல்லை கொள்ளை அடித்திருக்க மாட்டார். அதை தடுப்பதற்கான வாய்ப்பு நக்ஸல்பாரி இயக்கங்களுக்கு கிடைத்திருக்காது.

        • அவ்வ்வ்வ்வ்… ரூம் போட்டு யோசிப்பாரோ?

          ஒரு மூனாப்பு படிக்கிற குழந்தையளவுக்கு அறிவிருப்பவர் கூட இப்படிப்பட்ட ஒரு பதில் மேல் காறி உமிழ்ந்துவிட்டு போய்விடலாம்.

          முடியல

    • ரிஷி,

      நான் கூறியது இந்த போராட்டத்திற்கும் அகிம்சைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தான். நக்சல்பாரிகள் அகிம்சாவாதிகள் என்கிறார் ரம்மி அப்படி இல்லை அகிம்சை என்பது துரோகம் நக்சல்பாரிகள் புரட்சியாளர்கள் என்பது தான் நான் கூறிய கருத்து.

    • ராமி,

      அரசு அதிகாரிகளை சிறைபிடித்தது , அரசு அலுவலகத்தை சீல் வைத்தது, லாரிகளை சிறை வைத்தது இதெல்லாம் அகிம்சை என்றா கருதுகிறீர்கள்? இவையெல்லாம் சட்டபடியே தவறு. இதையெல்லாம் போலிசுதான் செய்ய வேண்டும். அவர்களும் கூட வழக்கு பதவு செய்து நீதிமன்றத்தில் வாதாடிதான் இதை நிறைவேற்ற வேண்டும். அந்த அதிகாரத்தை சட்டவிரோதமாக எடுத்துக் கொண்டு விவசாயிகளை வைத்து விவிமு செய்திருக்கிறது. உங்களுக்கு அகிம்சை குறித்தும் தெரியவில்லை, வன்முறை குறித்தும் புரியவில்லை, எனினும் போராட்டத்தை ஆதரித்ததற்கு நன்றி!

      • ! தமிழகத்தில் நக்சல்கள் உண்டு என்றும், யார் அவர்கள்? எந்த போர்வையில் உள்ளனர்? என்றும், அடையாளம் காட்டியுள்ளனர்! பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது! நுணலின் சப்தமா? புலியின் கர்ஜனையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

      • பிக் பாக்கெட் திருடனையும், சங்கிலி அறுப்பு திருடனையும், சிக்கினால், மின் கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து பணத்தை, பறிமுதல் செய்வது – திருப்பூர் மக்களின் பழக்கம்! இதைப் போன்ற ஒரு குறைந்தபட்ச வன்முறை கூட நிகழவில்லை என்று கட்டுரை உரைக்கிறது! மேலும் அடிக்கப் பாய்ந்தவரை, வி.வி.மு தலைவர் தடுத்ததாக குறிப்பு உள்ளது! இது அஹிம்சா முறை அன்றோ?

  4. சும்மா பேசிக்கொண்டிராமல் செயலில் காட்டிய தீரர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.
    இதுவும் ஒரு அறப்போராட்டமே! நக்ஸல்கள் என்றாலே பொதுமக்களுக்கு கொஞ்சம் அலர்ஜியாகத்தானிருக்கிறது. துப்பாக்கி தூக்காதவரை, ஆயுதங்களை கையிலேந்தாதவரை எப்பேர்ப்பட்ட போராட்டத்திற்கும் என் ஆதரவு உண்டு. நம் தரப்பு நியாயங்களை எல்லோரும் ஒன்றுகூடு பொட்டிலடித்தாற்போல ஆட்சியாளர்களிடம், அதிகார வர்க்கத்திடமும் போராடி நிலைநிறுத்தும் இதுபோன்ற போராட்டங்களை வரவேற்கவே செய்கிறேன். சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் இது தொடரவேண்டும்.

    • ///ஆயுதங்களை கையிலேந்தாதவரை எப்பேர்ப்பட்ட போராட்டத்திற்கும் என் ஆதரவு உண்டு///

      மயிலே மயிலேன்னு சொன்னா மயிலு இறகு போட்டுடுச்சுன்னா சரிதான்.மயிலு கொத்துச்சுன்னா என்ன செய்யிறது?

      • மயிலு கொத்துச்சுன்னா என்ன செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்க கலை??

        • கழுத்தைப் பிடிப்பதென்பது வேறு!
          கழுத்தை அறுத்தெறிவது என்பது வேறு!
          சங்கை நெரிச்சு உண்மையைச் சொல்லுடான்னு கேட்கலாம்.
          அந்த சங்கையே அறுக்கணும்னு நெனக்கிறது சரியானதல்ல.

  5. தேர்தல் மூலமோ, இந்த அரசு மூலமோ எதையும் சாதிக்க முடியாது என்பதை அழகாய் எடுத்துக்காட்டிய போராட்டம். தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்

    கலகம்

  6. அம்பிகளே! இது எப்படி-னு யோசிக்கிறிங்களா, யோசிங்க,
    நல்லா யோசிங்க, இது மாதிரிதான் முதல்படி போலித்தேர்தல் புறக்கணிப்பு. அடி,உதை,வெட்டு,டுமீல் எல்லாம் இப்பஇல்ல.அதெல்லாம் கிளைமாக்ஸின் கடைசில
    தான் வரும்.

  7. மக்கள் போராளி தோழர் பினாயக் சென்னுக்கு பெயில் – உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி

    • சித்திரகுப்தரே,

      பினாயக் சென் ஒரு காந்தியவாதி என்று அவரது தாயாரே சொல்லியுருக்கிறார்.

      எல்லோரும் நம்பிக்கை இழந்து விட்டாலும் நான் சுப்ரீம் கோர்ட்டின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன் என்று அவரது சகோதரர் தீபாங்கர் சென் தெரிவித்திருக்கிறார்.

      இங்கே வெற்றி நீதிக்கும் அஹிம்சா வழி போராட்டத்துக்குமா? இல்லை நக்ஸலிசத்துக்கா?

      http://ibnlive.in.com/news/my-son-is-a-gandhian-binayak-sens-mother/149274-3.html

      • இராம், பினாயக் சென்னினுடைய தாயார் அவர் யார் என்று சொல்வது இருக்கட்டும். தன்னைத்தானே காந்தியவாதி என்று சொல்லிக்கொள்ளும் காந்தியவாதி என்றே கருத்தப்படும் அழைக்கப்படும் ஹிமான்சுகுமார் என்ன சொல்கிறார் என்பதையும் படித்துப்பாருங்கள் https://www.vinavu.com/2010/02/16/revolution-of-the-poor/

  8. திரைப்படத்தில் ஒரு கதாநாயகன் இந்த வேலையை செய்தால் கைதட்டி ரசிக்கும் சிலருக்கு வி.வி.முவின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லக்கூட வாய்வரவில்லை சரியான நிழலை ரசிக்கும் நிழல் மனிதர்கள். வி.வி.மு போராட்டம் மென்மேலும் வெற்றியாகட்டும்.

  9. மிகப் பொறுப்புணர்வுடன் வினவு பலவற்றை எழுதி வருகின்றது. இந்த சேவை தொடர வேண்டும்.
    சமூகச் செயல்பாடு பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றது. அண்ணா வின் வெற்றி மற்ற புரட்சி முறைகளையெல்லாம் நீர்த்துப் போகச் செய்யும் என்று யாராவது நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது. நமக்கு பல்வேறு விதமான முறைகள் தேவைபடுகின்றன. எதிரியின் அம்பாரத் துணியிலிருந்து அம்புகளை லாவகமாக எடுத்து அவர்கள் மீது விட வேண்டும்.
    விணவைப் போல பொறுப்புள்ள ஊடகங்கள் மக்களை ஒன்றிணைக்க Facebook Twitter போன்ற சாதனங்களையும் கையிலெடுக்க வேண்டும். விருதை வட்டார விவிமு(விவசாயிகள் விடுதலை முன்னணி) செய்தது பாராட்டத்தக்க செயல். ஆனால் இந்த நற்செய்தி பரவலாக்கப் படவில்லையே. மெழுகு வர்த்தி போராட்டத்தைப் பற்றி சிலாகித்துப் பேசிய ஒரு Twitter லிங்க் மூலமாகத்தான் வினவு தளத்திற்கு வந்தேன்.
    போராட்ட முறைகள் மாறி வருகின்றன. மாறி வரும் போராட்ட முறைகளைப் பயன்படுத்துவதிலும் தாங்கள் வல்லமைப் படவேண்டுமென்பதே என்னுடைய விருப்பம்

  10. அண்ணா அசாரே அவர்கள் நடத்திய உண்ணா நோன்பு மேடையில் காந்தியின் படத்தையும், மாவீரன் என்ற சொல்லின் முழுப் பொருளான தோழர் பகத்சிங் அவர்களின் படத்தையும் வைத்திருந்ததைப் பார்த்ததுமே இந்த ஆளும் தெளிவான ஆளு இல்லையே என்ற முடிவுக்கு என்னை போன்ற கொஞ்ச விசயம் தெரிந்தவர்களூம் வந்திருப்பார்கள்! இந்த கேடுகெட்ட சாக்கடை அரசியல் அமைப்பை மூற்றும் மாற்றாமல், ஊழல ஒழிக்கிறோம், நாட்ட திருத்துவோம் என்பவர்கள், மீண்டும் காந்தி யின் துரோகத்துக்குத் தோழ் கொடுத்து, இந்த ஊழல் அரசியல் சாக்கடைக்குள் அமிழ்ந்து பொவதற்கு தயாராக இருக்கிறார்கள்! இந்த அதிகார வர்க்கம் என்பது, திட்டமிட்டுத் திருடும் திருட்டுக் கூட்டம்! இந்தக் திருட்டுக் கூட்டத்துக்கு காவல்துறை தலைமைப் பொறுப்பேற்று, திருடுவதற்கு உரிய பாதுகாப்பு தருவதுமே முதன்மையான பணியாகச் செய்கிறது, அதிகார வர்க்கமும் அரசியல் அயோக்கியர்களும் அடுத்த நிலையில்…! இவர்கள் ஒன்று கூடி, மக்களின் குருதியை உறிஞ்சிக் குடித்து விட்டு, அந்த மக்களிடமே கூர் பார்க்கும், இந்த தன்நலக் கும்பலின் இருப்பை அப்படியே நீடிக்க விட்டுவிட்டு, தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் ஊழலை ஒழித்து விடுவோம் என்று சொல்பவனை நம்புவதற்கு காதில் பூ சுற்றியவர்களா மக்களை நேசிக்கும் புரட்சிகர இயக்கத்தினர்? அதனால் தான் அசாரே அவர்களையும் அம்பலப் படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது நமக்கு! எதிரிகளை வெளியில்தான் தேட வேண்டும் என்பது சரிதான்! அதற்கு முன்பாக நம்மிடையே உள்ள துரோகிகளை அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறதே! எதிரியை விட துரோகியல்லவா ஆபத்தானவன் தமிழர்களூக்கு, இந்தியர்களுக்கு?
    காந்தியையும் சுபாஸ் சந்திரபோஸ் அவர்களையும் ஒன்றாகப் பார்க்கும் குழப்பமான நிலை நம்மிடையே மாறுவதற்கு, காந்தி காங்கிரசுத் துரோக வரலாறு என்ற அருமையான நூலைப் படித்தால் ஓரளவுக்காவது தெளிவு ஏற்படும். வினவு தோழர்கள் இது தொடர்பாக யோசிக்க வேண்டும், ஏனென்றால், காந்தி ஏதோ ஒரு மனித ஆற்றலை மீறிய ஒரு மகான் என்ற போதை நிறைய பேருக்கு இருக்கிறது, இந்த போதையிலிருந்து இவர்களைத் தெளிய வைக்கும் பொறுப்பையும் பணிச் சுமைகளூக்கிடையே தோழர்கள் ஏற்க வேண்டுகிறேன்.
    விருத்தாச்சலத்தில் தோழர்கள் ஆரம்பித்து வைத்த இந்த அதிரடி நடவடிக்கை, உழவுத் தொழிலாளர்கள் இடையே தோழர்களின் மேலும் பொதுவுடமைச் சித்தாந்தத்தின் மேலும், தோழர்களின் பரப்புரைகளின் மேலும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி ஒரு புதிய பாதையில் அவர்களை அணிதிரட்ட வைக்கும் ஓர் ஆரம்பம் தான் இது! மகிழ்சியும் நம்பிக்கையும் ஆறுதலும் தோழர்களுக்கு ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை! வாழ்த்துகள் தோழர்களே! முன்னேறிச் செல்லுங்கள்! வாழ்த்துகளுடன், காசிமேடு மன்னாரு.

  11. இத்தகைய செயல்களை வரவேற்கவும் மற்ற விவசாய தொழிலாளர்களிடம் பரப்பவும் வேண்டும்

    விவசாய முன்னனி தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

    • இவரு ரொம்ப நேர்மையா நடந்துக்கிறாராம், கருத்து சொல்றாராம். நல்ல கா..மேடிப்பா.

      • இதிலென்ன காமெடி இருக்கு உண்மை

        நீங்கள் நடத்தும் போராட்டத்தில் சரியானது இருந்தாலும் ஆதரிப்பேன்
        அன்னாவின் போராட்டத்தை நீங்க ஃபேக் போராட்டம் என்றாலும் எதிர்ப்பேன் எனது கருத்து இதுதான் .

        சும்மா வசவுகளையும் நையாண்டிகளையும் அள்ளி வீசாமல் என் தளத்திலோ இங்கேயோ விவாதிக்க துப்பிருந்தால் சொல்லுங்கள் இல்லையே மூடிவிட்டு போங்கள் கடையை

        • சரிங்க நான் இத்தோட மூடிக்கிறேனுங்க ! ஆனா, உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்குங்க- புல்லரிக்கவும் வைக்குதுங்க.

  12. வி.வி.மு வினரின் இந்த அஹிம்சா வழி, அறவழிப் போராட்டத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

    • அரசு அதிகாரிகளை சிறைப்பிடித்தது, நெல்மூட்டகளை எடுக்க விடாமல் பாதுகாத்தது, அரசு கொள்முதல் நிலையத்திற்கு பூட்டு போட்டது, லாரிகளை சிறைவைத்தது இதெல்லாம் அஹிம்சை போராட்டமா? எந்த ஊரில் இதை அகிம்சை என்கிறார்கள்? இந்த பிரச்சினையில் உண்ணாவிரதம் இருந்திருந்தால் மட்டுமே அது அகிம்சை, சரி, போகிற போக்கைப் பார்த்தால் புரட்சியைக்கூட அகிம்சை என்று அழைப்பார்களோ?

  13. வி.வி.மு வினர் போராடி நெல்லுக்கு சரியான பணத்தை பெற்றுக் கொண்ட எத்தனை விவசாயிகள், ஏப்ரல் 13 அன்று தேர்தலை புறக்கணித்தார்கள், எத்தனை விவசாயிகள் வாக்குக்கு பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தார்கள் என்பதை வினவு கொஞ்சம் விசாரித்து எழுதினால் நன்றாக இருக்கும்

    • ராம் காமேஸ்வரன்,

      ஏழைகள் பணம் வாங்குகிறார்கள் என்று குமுறும் நடுத்தர வர்க்கத்தின் ‘ஜனநாயக’ உணர்வின் உண்மை குறித்து வினவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.

      வாக்களிக்க பணம் வாங்குவது குற்றமா? https://www.vinavu.com/2011/04/11/money-for-vote/ படித்துப் பாருங்கள்! அதன் பின்னர் உங்கள் கவலை குறித்து நீங்களே வெட்கப்டுவீர்கள்.

  14. விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பினர் இதுபோல் நடந்துகொண்டால் அரசு இவர்களை தீவிரவாதிகளாக அறிவித்துவிடும்

    • கொடியேந்தி, சுழன்று சுழன்று போராடினால் தீவிரவாதி.
      குல்லா போட்டுக்கொண்டு மேடையின் நிழலில் அமர்ந்து கொண்டுவிட்டால்
      அறவழி வாதியா?
      திருடியதை மீட்பதற்கு குல்லாகளால் விசிறிக் கொண்டிருக்கமுடியாது.
      தரும அடி, அதுவும் நடுத்தெருவில் நிற்கவைத்து!
      அதுதான் நடந்தது.

  15. ஊழலை எதிர்த்து பலர் குரல் கொடுக்கத்தான் செய்கின்றனர். ஊழல் ஒழிய வேண்டும் என முழக்கமெல்லாம் போடுகின்றனர். அண்ணா ஹசாரே முதல் பல தொண்டு நிறுவனங்கள் வரை – ஏன் சில அரசியல் கட்சிகள்கூட ஊழலுக்கு எதிராக போராடுவது போல பிரம்மையை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் அனைவருமே குட்டிச்சுவரை பார்த்துதான் குரைக்கின்றனர். குற்றவாளிகளை எதிர்த்து களத்தில் போதுவதற்கு யாரும் முன் வருவதில்லை.

    குற்றவாளிகளை களத்தில் மோதி வீழத்துவதுதான் ஊழலை ஒழிப்பதற்கான உருப்படியான நடவடிக்கை. அதைத்தான் விவிமு வின் இந்தப் போராட்டம் உணர்த்துகிறது.

    இந்தப் போராட்டம் மற்றொரு உண்மையையும் நமக்கு உணர்த்தியுள்ளது. ஊழலின் ஊற்றுக்கண் தரகு முதலாளிகள் அதிகார வர்க்கம்தான் என்பதும் பலருக்குத் தெரிவதில்லை. அதிகார வர்க்கத்தின் துணை இன்றி இந்த நாட்டில் எந்த ஊழலும் நடைபெறுவதில்லை. அது ஸ்பெக்ட்ரம் ஊழலாக இருந்தாலும் அதுதான் உண்மை. ஊழல் செய்யாத அரசியல்வாதிகளைக் கூட காண முடியும். ஆனால் ஊழல் செய்யாத அதிகாரிகளைக் காண்பதரிது.

    அதிகாரிகளின் துணையின்றி அரசியல்வாதிகள் ஊழல் செய்யமுடியாது. ஆனால் அரசியல்வாதிகளின் துணையின்றி அதிகாரிகள் ஊழல் செய்யமுடியும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்று. இப்படி எத்தனையோ அரசு அலுவலகங்களில் அரசியல்வாதிகளின் துணையின்றி அதிகார வர்க்கம் மட்டும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பது அன்றாடம் நடந்து வருகிறது. இத்தகைய அன்றாட ஊழல்களை மதிப்பிட்டால் அது ஸ்பெக்ட்ரம் ஊழலையே விஞ்சும் என்பதே உண்மை.

    அத்தகைய ஊழல் ஒன்று தமிழ் நாடு மின்வாரியத்தில் தற்போது நடந்து வருகிறது. இங்கும் எந்த அரசியல்வாதியின் தலையீடும் கிடையாது. அதிகாரிகள் மட்டுமே கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். அது பற்றிய சமீபத்திய பதிவு இதோ.

    பம்புசெட்டுகளுக்கு இலவச மின் இணைப்பு: ரூ.200 கோடி இலஞ்சம்!
    http://hooraan.blogspot.com/2011/02/200.html

    • //இந்தப் போராட்டம் மற்றொரு உண்மையையும் நமக்கு உணர்த்தியுள்ளது. ஊழலின் ஊற்றுக்கண் தரகு முதலாளிகள் அதிகார வர்க்கம்தான் என்பதும் பலருக்குத் தெரிவதில்லை//

      //திருடிவிட்டு ஓடிப்போன நெல்கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தரை கொண்டுவந்து ஒப்படையுங்கள் எனக் கோரினோம்//

      சிவில் சப்ளை கொள்முதல் நிலையத்தில் வேலை பார்க்கும் ரெகார்ட் கிளார்க் (ரூபாய் 4800 முதல் 10,000 வரை சம்பளம் வாங்குபவர்) தான் தரகு முதலாளி அதிகார வர்க்கம் என்றால் நக்ஸல்களின் இலக்கு குறித்து என்னத்த சொல்ல!

      TNCSC RECORD CLERK Pay Scale Rs. 4800-10000
      http://www.tncsc.tn.gov.in/html/staff.htm

      அந்த ரெகார்ட் கிளார்க்கும் பாட்டாளி வர்க்கம் தானே ஐயா?
      அவருக்கு மேலே இருக்கும் அதிகாரி தவறு செய்யும் போது தட்டி கேட்க அவர் பின்னாலும் நில்லுங்கள். இப்படி எல்லா மட்டத்திலும் தனக்கு மேலுள்ள அதிகாரிகளிடம் விழிப்புணர்வோடும், கீழே பணிபுரிபவர்களிடம் கண்டிப்போடும் நடந்து கொண்டால் நக்ஸல்களுக்கு வேலையில்லாமல் போய்விடும்.

      • அண்டார்டிகாவில் இருக்கும் அண்ணனை ராம் காமேஸ்வரனுக்கு,

        //”கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லிற்கான தொகையை தற்காலிக ஊழியரான பட்டியல் எழுத்தர் மட்டுமே எடுத்துக்கொள்ளவில்லை.உயர் அதிகாரிகளான உங்கள் அனைவருக்கும் பிரித்து தான் கொடுத்துள்ளார்,ஆகவே நீங்கள் அனைவரும் வாங்கியப் பணத்தை திருப்பித் தாருங்கள்” //
        இதுவும் கட்டுரையில் உள்ள வரிகள்தான். எல்லா அரசு அலுவலகங்களிலும் ஊழல் என்பது ஒரு குமாஸ்தாவோடு முடிந்து விடுவதல்ல. அது மேலிருந்து கீழ் வரைக்கும் உள்ள வலைப்பின்னல்.

        மேலும் ஒரு குமாஸ்தா மட்டும் துணிந்து இப்படி ஒரு ஊழலை எங்கும் செய்துவிடமுடியாது. அடுத்து விவசாயம் அழிக்கப்பட்டு, புறக்கணிப்பட்டுவரும் நிலையில் முன்பு போல அரசு கொள்முதல் நிலையங்கள் அனைத்தையும் கொள்முதல் செய்வதில்லை. இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி தனியார் நிறுவனங்களிடம் விற்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தற்போது ரிலையன்ஸ், ஐ.டி.சி நிறுவனங்கள் விவசாயத்தில் முற்றிலும் ஏகபோகத்தை கொண்டுவரும் முயற்சியில் இருக்கின்றன. பல இடங்களில் இவர்கள் மட்டும் கொள்முதல் செய்யும் நிலைமையும் இருக்கிறது. எதிர்காலத்தில் இவர்கள் மட்டுமே நீடிக்க வேண்டும் என்பதற்காக தற்போது அரசு கொள்முதல் நிலையங்கள் வேண்டுமென்றே நலிந்து போகவும், ஊழலில் திளைக்கவும் அனுமதிக்கப்படுகின்றன.

        இன்று தனியார் செல்பேசி நிறுவனங்களின் உயர்பதவியில் இருப்பவர்களெல்ல்லாம் பி.எஸ்.என்.னில் இருந்து ஓய்வு பெற்றவர்களோ, இல்லை விருப்ப ஒய்வு பெற்றவர்கள்தான். இவர்கள்தான் அரசு செல்பேசி நிறுவனத்தை அழிக்கும் சூட்சுமங்களையும், மோசடிகளையும் அந்தந்த நிறுவனங்களில்தலைமை தாங்கி நடத்துகிறார்கள். அதே போல தனியார் வங்கிகளில் இருக்கும் உயர் அதிகாரிகள் பலரும் கூட அரசு வங்கிகளில் இருந்து சென்றவர்கள்தான்.

        எனவே திட்டமிட்டு அரசு நிறுவனங்களை அழிக்கும் முயற்சியில் தனியார் முதலாளிகளே இருக்கின்றனர். இதெல்லாம் உண்மையில் சமூக அக்கறை இருப்பவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய விசயங்களே. ராம் காமேஸ்வரனும் அதில் ஒருவராக இருப்பதை விரும்புகிறோம்.

        எனினும் உடனே இதனை மறுப்பதற்கு ஏதாவது லிங்குகளை அண்ணன் தேடாமல் இருப்பதற்கும் திருப்பதி வெங்கடாசலபதியை இறைஞ்சுகிறோம்.

  16. recently recruitment examination conducted for village administrative officers in Tamil Nadu.More than 10 lakhs person are writing this examination for less than three thousands posts.No one surprised for this
    because VAO is more powerful person than the MOHAL EMPERORS in every village. the poor villagers have no way to stop this.
    the youngster must take this mater and stop this . it is very easy, if the youth form a forum in the village itself , and give complained to the higher officer about the VAO if he acts against the law, and paste the copy of the complaint in the wall of village temple and other public places. definitely the VAO may WALKOUT from the village.
    the organized youth forum must think about this and help the village youth In this way we can eliminate at least 1% corruption from India .

  17. தேர்தல் மூலமோ, இந்த அரசு மூலமோ எதையும் சாதிக்க முடியாது என்பதை அழகாய் எடுத்துக்காட்டிய போராட்டம். தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

  18. *** வி.வி.மு வினர் போராடி நெல்லுக்கு சரியான பணத்தை பெற்றுக் கொண்ட எத்தனை விவசாயிகள், ஏப்ரல் 13 அன்று தேர்தலை புறக்கணித்தார்கள், எத்தனை விவசாயிகள் வாக்குக்கு பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தார்கள் என்பதை வினவு கொஞ்சம் விசாரித்து எழுதினால் நன்றாக இருக்கும் ***

    புத்தி எங்க போவுது பாரு.

  19. வி வி மு என்ற் ஒருவர் ஒரு கொசுவை அடித்ததற்கு இந்தத் தேவையில்லாத ”நக்சல்பாரி”
    பாராட்டா? அன்னா ஹசாரேவின் கொசு மருந்து அடிப்பதற்கான ஏற்பாட்டிற்க்கு விவிமு வும் உடன் சேரலாமே. லஞ்சம்,ஊழல் என்பது பொதுவான சமூக விரோதச் செயல்தானே. பூனைக்கு யார் மணிகட்டுவது என்பதுதானே பிரச்னை. இதில் அன்னாஹசாரே என்ன உங்கள் எதிரியா? இதில் ஏன் ”அம்பி” என்று இழுத்து உங்களது பெரியாரிச வறட்டு தத்துவத்தை கைக் கொண்டு உளறுகிறீர்கள். பெரியாரிச முட்டாள்தனமான கொள்கையை என்று நிறுத்தப் போகிறீர்களோ? இது பற்றி ஜீவா என்ன சொல்லி யுள்ளார் என்று அறிந்து கொண்டு எழுதுங்கள்.

    ஒருமித்த குரல் எழும் போது உடன் குரல் கொடுக்காத புத்தியில்லாத சொரணை யில்லாத முட்டாளாகி விடாதீர்கள்.

    • அன்ன அச்ரே எத்ற்காக போராடினார்? லோக்பால் பில். அப்பொழுது இந்திய சட்டம் என்ன ஊழல் செய்ய சொல்கிறதா? லோக்பால் பில் என்ன வென்று தெரியுமா சந்துரு அது எப்படி ஊழலை ஒழிக்கும் என்று விளக்கினால் சரி.
      பெரியாரியம் முட்டாள் தனமான கொள்கையா? கிழிந்தது உங்களிடம் எங்கிருந்து ஆரம்பித்து புரியவைக்க சரி மேலும் விவாத்தை தொடருங்கள். இல்லை உங்களுக்கு நிறைய கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்புகொள்ளுங்கள்

  20. வினவு,
    நியாத்திற்கான போராட்டம் எந்த வழியில் நடந்தாலும் நல்லதே. வழிகள் வேறுபடலாம். எல்லோரும் ஒரே வழியை பின்பற்றுவார்கள் என நினைப்பது அறியாமை. இது போராட்டத்தினைப் பற்றி பேசாமல், உன் பென்சில் பெரிசா? என் பென்சில் பெரிசா? என்ற வகையில் போவது உங்கள் மறைமுக எண்ணங்களை காட்டுகிறது.

    • சட்டம் முதல் சர்கார் வரை முதலாளிகளின் எலும்பு துண்டுக்கு வேலை செய்யும் போது, அதன் பிடியிலிருந்து மக்களை காப்பற்ற மேற்கொள்ளும் போராட்டாம் எப்படி இருக்க வேண்டும் என்ற நினைத்து பார்த்துக்கொள்ளுங்கள். ஊழலை ஒழிக்க உண்ணவிரதம் இருந்து, யாருக்கும் ப்யன் த்ராத லோக்பில்லுக்கு அடிக்கப்பட்ட கூத்துகள் போன்ற போலிதனங்களை விமர்சிக்கவே ந்த கட்டுரை. இப்பொழுது இந்தியாவில் முத்லாளிகளுக்கு எதிரான போராட்டம் வீரியமிக்கதாக இருக்கும் என்பதை உணர்ந்தால் சரி

  21. நெல்
    நெல்லாகவேயிருந்தது.
    துருப்பிடிக்கவில்லை.

    எடைக்கல்
    எடைகல்லாகவேயிருந்தது.
    துருப்பிடிக்கவில்லை.

    துருப்பிடிததென்னவோ
    எடையிட்டவர்களின்
    கரங்கள்.

    துருப்பிடித்த கரங்களைக்
    கவ்விப் பிடித்தவர்கள்
    காந்தியவாதிகளுமில்லை;
    ஹசாரேவாதிகளுமில்லை.
    அவர்கள்
    மனிதாபிமானிகள்.

    ஏனெனில்
    நெல் விளைச்சலுக்கு
    இரு முறை
    வியர்வை சிந்தப்பட்டிருக்கிறது.
    ஒரு முறை;
    விவசாயின் நெற்றியிலிருந்து.
    இன்னொரு முறை;
    வி.வி.முவின் உறுதியிலிருந்து.

    நேர்மைக்கு
    நாம் துணை போகவில்லையென்றால்
    நம் மூளையும்
    துருப்பிடித்திருக்கிறதென்று
    நாம் கொள்ளலாம்.

  22. வினவுக்கு வாழ்த்துக்கள். அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு மட்டும் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்கிறார்கள். இதுபோன்ற சமூக புரட்சிகளை வெளியுலகத்திற்கு யாருமே அடையாளங்காட்டுவதில்லை. அதை சிறப்பாக செய்தீர்கள்.
    உங்கள் சிந்தாந்தத்தை சேர்ந்தவர்கள் செய்யும் செயலை பாரட்டுவதில் தவறில்லை. ஆனால் அதே நேரம் மற்றவர்களின் போராட்டத்தை இழிவுபடுத்தாத குறைந்தபட்ச நாகரீகத்தைக் கூடவா உங்கள் சித்தாந்தம் கற்றுத்தர வில்லை.

  23. விருதுநகரில் பாதாள சாக்கடைத்திட்டம் 2006 நடுவில் ஆரம்பிக்கப்பட்டது. 2008 நடுவில் முடிக்கவேண்டும் என்று திட்ட அறிக்கை கூறுகிறது. திட்ட மதிப்பீடு 23 கோடி. இன்று ஏப்ரல் 2011 ஆகிவிட்டது. நகரில் 70% சதவீத அளவுக்குத்தான் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதிகளுக்கும் குழாய்கள் பதிக்கப்படாமலே தேர்தல் அவசரத்தில் சிமென்ட் சாலைகள் அவசர அவசரமாக போடப்பட்டன. முறையாக பாதாளச் சாக்கடையுடன் வீட்டுகளுக்கான இணைப்புகள் கொடுக்கப்படவில்லை. கொடுக்கப்பட்ட இடங்களிலும் தொட்டி கட்டுவதற்கென வீட்டுக்கு 2000 வசூல் செய்தனர் கவுன்சிலர்கள். இதுபோக மக்கள் பங்கு என்ற வகையில் வீட்டுக்கு 3000 லிருந்து 10000 வரை வசூல் செய்தது நகராட்சி.

    இதில் வேடிக்கை என்னவென்றால், கழிவுநீரை சுத்திகரிக்க, சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்ட பின்னரே பாதாளசாக்கடை திட்டத்தையே ஆரம்பித்திருக்க வேண்டும். அல்லது இரண்டும் ஏக காலத்தில் நடந்தேறியிருக்க வேண்டும். ஆனால் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக ஒரு செங்கல் கூட இன்னும் கட்டப்படவில்லை!!! ஆனாலும் அறைகுறையாக நிறைவேற்றப்பட்ட திட்டத்தால் ஊரை ஒட்டிய மழைநீர் ஓடையில் சாக்கடையாறு ஓடுகிறது.

    நகராட்சி தரப்பில் அரசிடமிருந்து முறையாக திட்டப்பணம் வரவில்லை என்கிறது. ஆனால் நகர்நல அமைப்போ வந்த பணத்தின் பெரும்பகுதியை நகராட்சி சேர்மனும், கவுன்சிலர்களும், அதிகாரிகளும் அமுக்கிவிட்டனர் என்கின்றனர். இறுதியில் இரு அப்பாவி பொறியாளர்கள் மட்டுமே பெயரளவிற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக உயர் அதிகாரிகளால்!

    பல ஆண்டுகளாக தோண்டப்பட்ட குழிகளில் விழுந்து எழுந்து சென்றோரும், உடல் மன அளவில் பாதிக்கப்பட்டோரும் பலருண்டு. மாவட்டத் தலைநகர் என்றுதான் பெயர்!! ஆனால் படுமோசமான நிர்வாகத்தால் ஊரே நாறிப்போய்க்கிடக்கிறது.

    இப்போது பொதுமக்கள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறது வினவு? உங்களின் கருத்தென்ன?

    • ஊழலுக்கும், நிர்வாக சீர்கேடுகளுக்கும், அபத்தமான நடைமுறைகளுக்கும் நக்ஸலின் மாற்று முறைமை என்ன? அல்லது பதிலடி என்ன?

      என் கேள்விக்கு வினவோ அல்லது மற்ற தோழர்களோ பதிலளிக்கவில்லையே??

      • https://www.vinavu.com/2011/04/11/money-for-vote/ இந்த பதிவில் வினவு எழுதியிருக்கும் பின்னூட்டங்கள் உங்களுக்கு பயனளிக்கும் மேலதிக விவரங்களுக்கு அவர்கள் vinavu(at)gmail(dot)com முகவரியில் தொடர்பு கொள்ளவும் அல்லது 97100 82506 இந்த எண்ணில் அழைத்து பேசவும்

        • படித்துவிட்டு பதிலளிக்கிறேன். சந்தேகமிருந்தால் கேள்விகளைக் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்கிறேன். நன்றி.

  24. வி வி மு தோழர்களுக்கும், விருத்தாசலம் விவசாயிகளுக்கும் வீர வணக்கங்கள்…..
    விஜயகாந்தின் விருத்தாசலம் அல்ல… இது இனி வி வி மு வின் விருத்தாசலம்….
    தோழர்களே!. நீங்கள் மீட்டது இழந்த பணத்தை மட்டுமல்ல…
    விதை நெல்லான விவசாயிகளின் வீரத்தை…
    இதுதான் நக்சல்பரி

  25. அன்னா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டம் அரசை மயில் இறகால் வருடுவது போல்தான்..
    ஜார் மன்னனை எதிர்த்து பாதிரிகள் நடத்திய மெழுகுவர்த்தி போராட்டத்தால் ரசியா விடுதலை பெற வில்லை..
    லெனின் வழி நடத்திய புரட்சியால் தான் விடிவு…
    மேலும் அன்னா வின் போராட்டம் முதலாளித்துவ மற்றும் பாரதீய ஜனதா sponsored ..
    கோவையில் அதில் கலந்து கொண்டோர் PRICOL முதலாளி வனிதா மோகன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முதலாளி போன்றோர் தான்…. இவர்கள் தான் சிறுதுளியாய் மக்களை மடையர்களாக்கி.. பொதுபுத்தியை உருவாக்குகிறவர்கள்…போலிகள்

  26. //வி.வி.மு வினரின் இந்த அஹிம்சா வழி, அறவழிப் போராட்டத்திற்கு எனது வாழ்த்துக்கள்.//

    காமேஸ்வரன் ,

    இது அறவழி போராட்டம் அல்ல புரட்சிகர போராட்டம் என்கிற வன்முறை பாதைதான்

    சூழ்திருந்த விவசாயிகளை ஒடுக்க போலீஸ் வந்தால் இந்த விவசாயிகள் நிச்சயம் கல்லை எடுத்து எறிந்து இருப்பார்கள் எனில்
    இதை காந்தி நிச்சயம் ஏற்று கொண்டு இருக்கமாட்டார்

    காந்திய போராட்டம் என்பது வன்முறை வெடித்தவுடன் முடிவுக்கு வந்துவிடும் என்பதை மறக்காதீர்கள் .

    எல்லா போராட்டங்களும் காந்திய போராட்டம் என வகைபடுத்துவது காந்தியத்தை உயர்த்தி பிடித்தலாகும் என நீங்கள் நினைத்தால் அதை விட்டுத்தள்ளுங்கள் .

    • இந்த போராட்டத்தில் வன்முறை வெடிக்க காரணங்களும், சூழ்நிலையும் பல சமயங்களில் இருந்த பொழுதும் வி.வி.மு வினர் அமைதி காத்ததாகத்தான் தோன்றுகிறது.
      TNCSC அலுவர்கள் எடையில் ஏமாற்றியது கண்டு பிடிக்கப்பட்டவுடன் அவர்களை “தர்ம அடி” போட்டிருக்கலாம், பணத்தை கொண்டுவருகிறேன் என்று போனவர் சொன்ன நேரத்தில் வராத பொழுது நெல்லை விவசாயிகள் பிரித்து எடுத்துக் கொண்டு போயிருக்கலாம், அதிகாரிகள் பேச்சு வார்த்தையின் போது தாக்கப்பட்டிருக்கலாம், லாரிகள் கொளுத்தப்பட்டிருக்கலாம், கோட்டாட்சியர், வட்டாட்சியர், போலீஸ் என்று பேச்சு வார்த்தைக்கு அலைக்கழிக்கப் பட்டபோது வன்முறையில் ஈடுபட்டு இருக்கலாம், இப்படி பல சந்தர்ப்பங்களிலும் பொறுமை காத்து, பேச்சு வார்த்தை மூலம், புத்திசாலித் தனமாக பணத்தை மீட்பதைத் தான் அறவழி, அஹிம்சாவழி, காந்திய வழி என்றெல்லாம் சொல்லுகிறோம்.

      இந்த விஷயத்தில் ஒரு TNCSC அலுவலர் கொல்லப்பட்டிருந்தாலோ, கலவரம் நடந்து ஒரு விவசாயி போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்திருந்தாலோ, அப்போது செய்தியில் வி.வி.மு என்ற பேரே வெளியில் வந்திருக்காது. “விருத்தாசலத்தில் விவசாயிகள் வன்முறை – போலீஸ் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம்” என்பது தான் செய்தியாக இருந்திருக்கும்.

      செத்தவர் அ.தி.மு.க தொண்டர் என்று ஜெவும், தி.மு.க தொண்டர் என்று கருணாவும், தே.மு.தி.க தொண்டர் என்று விஜயகாந்தும், பா.ம.க தொண்டர் என்று டாக்டர் ஐயாவும், அவர் ஒரு சிறுத்தை என்று திருமாவும் அறிக்கை விட்டிருப்பார்கள். இந்த “alphabet soup” சண்டையில் ம.க.இ,க. வி.வி.மு போன்ற “blogosphere” வாசகர்களுக்கு மட்டுமே பரிச்சயமான நமது நண்பர்களை பூதக்கண்ணாடி வைத்துதான் தேட வேண்டியிருந்திருக்கும்.

      நமது நண்பர்கள் இப்படி “what-if scenario க்களையும்” cause-effect diagram” களையும் போட்டுப் பார்த்துதான் தங்களது உதார் எவ்வளவு தூரம் செல்லுமோ அவ்வளவு விட்டிருக்கிறார்கள்.

      கருணாநிதி, ஜெ, விஜயகாந்த், அம்பானி, டாட்டா ஆகியோரது வீடுகளையும் அலுவலகங்களையும் நண்பர்கள் இதேபோல முற்றுகையிட்டு, சிறைபிடித்து பல லட்சம் கோடி ரூபாய்களை கைப்பற்றி இந்திய மக்கள் எல்லோருக்கும் பிரித்துக் கொடுக்கும் அந்த நல்ல நாளுக்காக அண்டார்டிகாவிலேயே உண்ணாவிரதம் இருக்கும் – லிங்க் சாமி.

      • அமைதியாக இருப்பது மட்டுமே காந்தியவழி போராட்டம் இல்லை
        அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததுமே காந்தி அந்த போராட்டத்தை வாபஸ் வாங்கினார்

        ஆனால் விவி மு அப்படி செய்து இருக்காது அந்த இடத்தில் அமைதி குலைய காரணமாக போலீஸ் அல்லது குண்டர் படை வந்து இருந்தால் விவசாயிகள் திருப்பி தாக்கி இருப்பார்கள் அடிவாங்குவது அல்லது பின்வாங்குவது என முடிவெடித்து இருக்கமாட்டார்கள்
        (அடி வாங்குவது காந்திய போராட்டம் )

        எனவே காந்திய வழி போராட்டம் அல்ல என்கிறேன் நான்
        மேலும் காந்திக்கு சமூகத்தின் மாற்றத்தின் மீது இருந்த அக்கரையை விட சீர்திருத்தத்தின் மீதுதான் அக்கரை இருந்தது

        • அதே நேரத்தில் ஊழல் போன்ற மிகப்பெரிய பிரச்சனைகளை ஒழிக்க ஒரு அமைப்பை உருவாக்குவதே சிறந்தது லோக்பல் மசோதாவுக்கும் இதே வழியிலான போராட்டம் செல்லுபடியாகது என்பதே எனது கருத்து

        • //எனவே காந்திய வழி போராட்டம் அல்ல என்கிறேன் நான்
          மேலும் காந்திக்கு சமூகத்தின் மாற்றத்தின் மீது இருந்த அக்கரையை விட சீர்திருத்தத்தின் மீதுதான் அக்கரை இருந்தது//

          இரண்டு போராட்டங்கள் நடக்கிறது ஒன்று அன்னாவின் போராட்டம் இன்னொன்று விருதாச்சலத்தில் விவசாயிகள் போராட்டம்

          அன்னாவின் போராட்டத்தை புரட்சிகரமானது என சொல்வதும் தப்பு
          விருதாச்சலத்தில் நடக்கும் போராட்டத்தில் அகிம்சை போராட்டம் என்பதும் தப்பு

          அன்னா எடுத்து கொண்ட ஊழல் விசயத்தை ஒழிக்க
          விருத்தாச்சலம் விவசாயிகள் செய்ததை போன்ற முறைதான் சரியென்றால் அவர்கள் சிறு குழந்தைகளே

          ஊழல் போன்ற விசயங்களை உக்கார்ந்த இடத்தில் இருந்து ஆட்களை பிடித்து வைப்பதால் உடனே நிரூபிக்க முடியாது தண்டனை வாங்கிதர முடியாது இப்போ ராசாவின் ஊழல் தெரிந்தவுடன் எந்த விசாரணை தகவல்கள் இல்லாமல் உக்கார்ந்த இடத்தை விட்டு ராசாவை நகரவிடாமல் செய்வதன் மூலம்
          இதற்கு தீர்வு காண முடியாது – புரியும்னு நினைக்கிறேன்

        • அன்னாவின் போராட்டம் ஒரு சீர்திருத்த பாணிபோராட்டமே

          அது தேவை இல்லை என்பதோ -தவறானது என்பதோ பேக்கான போராட்டம் என்பதோ இல்லை

          அதே நேரத்தில் அது புரட்சிகரமான போராட்டமில்லை என்பதை சொல்லிடனும்

          எல்லா விசயத்தையும் புரட்சிகர போராட்டத்தின் மூலமே தீர்த்துவிட முடியும் என்பதைவிட சிலவிசயங்களுக்கு சீர்திருத்தபாணி போராட்டங்களும் சீர்திருத்தங்களும் வேண்டும்

        • இந்த போராட்டம் என்பது சீர்திருத்த பாணி போராட்டம் என்கிறீர்கள். அதற்கு என்ன ஆதாரம். இதனால் என்ன சீர் திருத்தம் ஏற்படும், எப்படி ஏற்படும் என்பதை எழுதமுடியுமா?

  27. வி வி மு விருத்தாசலத்தில் எடுத்த நேரடி நடவடிக்கை பற்றி எழுதியிருந்ததை படித்தேன். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். அதே நேரத்தில் உங்கள் கட்டுரையின் துவக்கம் கொஞ்சம் அநாகரிகமாக எழுதியிருப்பதுபோல் தெரிகிறது. பொதுவாக ஒரு இயக்கம் வளர வேண்டுமானால் அதற்க்கு தற்புகழ்ச்சி இருக்கக் கூடாது. அது மற்ற இயக்கங்களை குறைத்து மதிப்பிடுதலையும் தவிர்க்க வேண்டும். அன்னா ஹசாரேயை புகழ்ந்து எழுதுவது தவறா? முழுமையாகப் புரிந்தும், அல்லது புரியாமலும் எழுதியிருக்கலாம். உங்களைப் போலவே அன்னா ஹசாரேயும் சமூக மாற்றத்திற்காக முயல்கிறார் என்றே கருத வேண்டும். பாதைதான் மாறுபடுகிறது.

    அம்பி, தும்பி, மனப்பாடம் செய்யுங்கள் என்றெல்லாம் ஏன் எழுத வேண்டும்.

    ம க இ க வின் கொள்கைகள் சிறந்தவைகள்தான். பாதையில்தான் தவறு இருக்கிறது. உங்கள் கொள்கையை ஒத்துள்ள கட்சிகளை, இயக்கங்களை ஏதோ ஒரு புள்ளியிலாவது சந்திக்க முயலுங்கள். அது இந்தியாவுக்கு நல்லது.

    தோழமையுடன்,

    சிவசிதம்பரம்,
    பட்டுக்கோட்டை.

    • well said… that style writing is not right… i think vinavu has to take note of this point… better to change the style…aggresive writing is good.. but some times it flops..
      regards
      RV

    • ம க இ க வின் கொள்கைகள் சிறந்தவைகள்தான். பாதையில்தான் தவறு இருக்கிறது. உங்கள் கொள்கையை ஒத்துள்ள கட்சிகளை, இயக்கங்களை ஏதோ ஒரு புள்ளியிலாவது சந்திக்க முயலுங்கள். அது இந்தியாவுக்கு நல்லது.

      சீனா வுக்கு நல்லதுனா சொல்லு தோழர்கள் கேட்பார்கள் … இந்தியாவுக்கு நல்லதுனா கேட்க மாட்டார்கள்

      • adadey! vaanganney! ungala maathiri mookku kannadi viyabariya than india puratchi theduthu. kolgaila otthu ponaa pulliyila enna pothu idatthulaye sandhikkalanga! appadi otthu poravangala paarttha thayavu senju thagaval sollunga plz… varalaru ungalai pesum

        • adadey! vaanganney! ungala maathiri mookku kannadi viyabariya than india puratchi theduthu. kolgaila otthu ponaa pulliyila enna pothu idatthulaye sandhikkalanga! appadi otthu poravangala paarttha thayavu senju thagaval sollunga plz… varalaru ungalai pesum

          தமிழ்! கொள்கையில ஒத்துப் போனா புள்ளியில என்னா, பொது இடத்திலேயே சந்திக்கலாம்னு சொல்றீங்க. இப்போ நீங்க சொல்றதிலேய தெரியுது, கொள்கையில ஒத்துப் போவது எவ்வளவு சிரமம்னு நீங்க உணர்ந்திருப்பது.

          ம.க.இ.க வின் பல கூட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை நான் பார்த்திருக்கிறேன். அதில் அவர்கள் விமர்சித்துப் பேசும்போது, முதலாளித்துவக் கட்சிகளையோ, மதவாதக் கட்சிகளையோ, ஜாதீய கட்சிகளையோ தாக்கிப் பேசுவதை விட, இடதுசாரிக் கட்சிகளைத் தாக்குவதைத்தான் முதல்நிலைப் படுத்துகிறார்கள். ஏன்? இவர்களால் சிறுபான்மையாக உள்ள இடது சாரிகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று. அதே நேரத்தில், இடதுசாரிகள் தங்களது நடவடிக்கைகளில் ம.க.இ.க வை விமர்சிக்காததையும் பார்த்திருக்கிறேன்! இதனால், முதலாளித்துவத்தை எதிர்க்கும், அதே தொனியிலேயே இடதுசாரிகளையும் எதிர்ப்பதால், இவர்கள் முதலாளித்துவத்திற்கு மறைமுக ஆதரவளிப்பதாகவே படுகிறது. இதன் காரணமாகவே இந்த இயக்கம் அவ்வளவாக வளரமுடியவில்லை என்பது என் கருத்து. ஒரு எதிராளியை வரிசைப் படுத்தும் புள்ளியை ஏன்? இவர்களால் நெருங்க முடியவில்லை. எப்படி இடதுசாரிகள் தனித்தனி மேடைகளில் நின்று கொண்டு, மக்களை ஒன்றுபடுங்கள் என்று கூறுகிறார்களோ அதுபோல்தான், நீங்களும் காரசாரமாகப் பேசுவதாகப் படுகிறது.

          இன அழிப்புக்கு எதிராக, விலைவாசி உயர்வுக்கு எதிராக, சமீபத்திய உலக மகா ஊழலை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்திய பெருமை அவர்களுக்கு இருக்கிறதா இல்லையா? அவர்களிடமிருந்து பிரிந்து வந்த பலர் வட மாநிலங்களில் கூட்டணி அமைத்திருக்கிறார்களே! அது மாதிரி இங்கு முயலக் கூடாதா?

          உங்களைப் போன்றவர்களின் விமர்சனங்கள்தான் சாதாரண ஜனங்களின் எண்ண ஓட்டங்களை, இடதுசாரிச் சிந்தனைக்கு மாற்ற முடியாமல் போகிறது. யார்? யாரோடு ஒத்துப் போகலாம் என்று நான் கூறுவது உங்களுக்குப் புரிந்திருக்கும். அவர்களோடு எந்தப் புள்ளியிலும் சந்திக்க முடியாது என்கிற பாணியில்தான் ம.க.இ.க வின் பரப்புரை இருக்கிறது என்று நான் கூறுகிறேன். மறுக்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா? அல்லது புதிய கருத்தை அறிந்து கொள்ள விழைகிறேன்.

          மூக்குக் கண்ணாடி வியாபாரிக்கு கருத்து இருக்கக் கூடாதுன்னு சட்டம் ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன். இந்தியப் புரட்சிக்கு எல்லோருமே தேவைதான்.

          உங்கள் பின்னூட்டத்திற்குப் பின் மீண்டும் சந்திப்பேன்!

          வாழ்த்துகளுடன்,

          சிவசிதம்பரம்,

          பட்டுக்கோட்டை.

          • VANAKKAM! CHIDHAMBARAM ANNEY! ROMBA LATE AH REPLY PANDRATHUKKU MUTHALLA MANNIPPU KETTUKKAREN.NEENGA NINAIKKARA MAATHIRI ‘CPM’ KATCHI IDATHU SAARI KIDAIYATHU. THERDHAL PAATHAILA PORA ELLA ‘COMMUNISTKALUM’ VALATHU SANDHARPPAVAATHIGAL THAN. COMMUNISM ENBATHEY AAYUDHAMENDHIYA ARASIYAL THAAN. ATHAAVATHU MAKKALAI ANITHIRATTI, ARASIYAL PADUTTHI, AVARGALAI AAYUDHAMENDHI PORAADA VAIPPATHU. ITHULA AAYUDHAMEY KOODATHNU SOLLI THERDHALLA NIKKARAVANGA VALATHU SANDHARPPAVAATHIGAL, AAYUDHATTHAI MATTUM MUNNIRUTTHUBAVARGAL IDATHU SAAGASA VAATHIGAL.INNIKKU CPI, CPM KUM CONGRESS, BJP KUM VITTHIYAASAMEY KIDAIYATHU.
            INNORU VISAYAM, PURATCHIKKU ELLORUM THEVAINU SOLLIRUKKEENGA, AANAA NEENGA SOLRA MAATHIRIYANA THUROGIGAL, ENGALUKKU THEVAI ILLAI.

        • ம.க.இ.க. தாக்குகிற கட்சிகள் யாவுமே உண்மையிலேயே இடதுசாரிக் கட்சிகள் என்று நீங்கள் நினைக்கிறிர்களா?

          சகோதரக் கட்சிகள் என்று சொல்லக் கூடியவற்ரின் நடுவே பரஸ்பர விமர்சனம் இருக்கும் அது பகையானதல்ல.
          பாராளுமன்ற இடதுசாரித் தலைமைகளின் கதையே வேறு.
          அங்கும் கீழ்மட்டத் தோழர்கள் எதிரிகளல்ல.

          • கார்ப்பரல் ஸீரோ அவர்களே!

            ம.க.இ.க. தாக்குகிற கட்சிகள் யாவுமே உண்மையிலேயே இடதுசாரிக் கட்சிகள் என்று நீங்கள் நினைக்கிறிர்களா?

            என்று கேட்கிறீர்களே! நான் அப்படி ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை. அவைகளில் சில உண்மையிலேயே இடதுசாரிக் கட்சிகள் ஆக இருக்கலாம், சில இடது சாரிச் சிந்தனை வழியில் சென்று கொண்டிருப்பவையாகவும் இருக்கலாம். எனது குற்றச்சாட்டு என்னவென்றால் மற்றெல்லா கட்சிகளையும் விட இடதுசாரிகள்தான் மிக மோசமானவர்கள் என்று உங்களால் எப்படி கருத முடிகிறது. மக்களைத் திரட்டிப் போராடுவதற்கு முன் அவர்கள் சார்ந்துள்ள அமைப்புகளில் சிலவற்றை ஆதரிக்க முயலுங்கள். அல்லது அவைகள் உங்களை ஆதரிக்க வையுங்கள். மக்கள் என்று ஒரு கூட்டம் இன்றைக்கு தனியாக இல்லை. அவர்கள் ஏதாவதொரு அமைப்புக்குள் தங்களைப் பிணைத்துக் கொண்டு அல்லது மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை திரட்டுவதற்கு அமைப்புகளிடம் உங்களுக்கு கூடுதல் இணக்கம் தேவை என்று கருதுகிறேன்.

            வாழ்த்துகளுடன்,
            சிவசிதம்பரம்,
            பட்டுக்கோட்டை.

  28. போராட்டத்தை வழிநடத்திய வி.வி.மு தோழர்களூக்கும் பங்கேற்ற விவசாயிகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

  29. அண்ணா ஹசாரே வழியில் போராடினால் நம் மூன்றாம் தலைமுறை தம்பதிகளுக்கு கூட இந்த பணம் கிடைத்திருக்காது, நாம் அனைவரும் மக்களை திரட்டி போராடினால்தான் நம்மால் நீதியை உடனேயே பெறமுடியும், இந்த இந்திய திருநாட்டில் தூக்கு தண்டனை சட்டம் கொண்டுவந்தாலும் இதுபோன்ற ஒரு தீர்வை தரமுடியாது, போராட்டம் தான் இதற்க்கான சரியான தீர்வாக அமையும்………..

    தோழர்களுக்கு மனமார்ந்த நன்றி……….. இவன் ராஜசூரியன்……

  30. தியாகு உங்க கருத்தை இன்னும் நீங்கள் சொல்ல ஆரம்பிக்கவே இல்லை என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்

    • ஒரு போராட்டம் நடக்கிறதென்றால் அதில் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்
      இவர்களின் நோக்கமென்ன அந்த நோக்கத்தை இந்த போராட்டம் நிறைவேற்றுமா என ஆராயாமல்

      போராட்டத்தை நடத்துபவன் யார் – காந்தியவாதி
      பங்கேற்பவர்கள் யார் – மத்தியதரவர்க்கம்
      விளம்பரம் கொடுப்பவன் யார்- ஊடகங்கள்
      நோக்கம் ? -சும்மா பொழுது போக்கு
      மேற்கண்ட மூன்று கேள்விகளின் படி
      மார்க்சிய புத்தகத்தை ஆராய்ந்தால் அது என்ன சொல்கிறது
      இந்த போராட்டம் போலின்னு
      அப்படியே முடிவு செய்துடலாம் போலீன்னு
      இது சரியா

      போராட்டத்தை நடத்துபவர் -காந்தியவாதியாக இருக்கட்டும்
      பங்கேற்பவர்கள் யார் – மத்தியதரவர்க்கமாக இருக்கட்டும்
      விளம்பரம் கொடுப்பவன் யார்- ஊடகங்களாக இருக்கட்டும்
      நோக்கம் ? -சும்மா பொழுது போக்கல்ல என்பதை நான் உறுதியாக
      சொல்லமுடியும்

      கேள்வி என்னவென்றால் இதை பொழுதுபோக்கென்றால்
      இம்மாதிரி பொழுதுபோக்கு போராட்டமாவது ஏன் முற்காலத்தில்
      மத்தியதரவர்க்கத்தால் செய்யப்படவில்லை அதையாவது செய்யுங்கள்
      பெட்ரோல் உயர்வுக்கு என்றுதானே மன்றாடினோம் ஏன் செய்யவில்லை
      இதற்கெல்லாம் பதில் சொல்பவனே மார்க்சியவாதி

      • ஊழலை ஒழிப்போம்னு கையில மெழுகுவத்தியோட ஒரு கூட்டம் சொல்லுது, எந்தக்கூட்டம் இத்தனை காலமும் ஊழலை ஆதரித்தும், செய்தும் வந்த கூட்டம்… இந்தக் கொடுமையை ஆய்வு செய்யத்தான் நீங்க களப்பணியிலிருந்து ஜகா வாங்கிக்கொண்டு வந்தீர்களா?

        உங்களை பார்க்கும் போது சின்னகவுண்டர் செந்திலின் புல்லாராய்ச்சிதான் நினைவுக்கு வருது. தயவு செஞ்சு அந்த வேட்டியை திருப்பி கொடுத்திடுங்க. ஏன்னா அம்மணமா இருப்பவன் வேட்டியை இடுப்பில் கட்டவேண்டும் நீங்களோ அதை தரையில் விரித்து அதன் மேல் ‘என்னா காத்தோட்டம்’னு விட்டத்த பாத்துகிட்டு படுத்திருக்கீங்க

        தாங்க முடீலடா சாமீஈஈஈஈஈஈஈஈ

        • நடமாடும் கோயபல்சே உமது அங்கிகாரத்தை தூக்கி உடப்பில் போடும்.

        • //எந்தக்கூட்டம் இத்தனை காலமும் ஊழலை ஆதரித்தும், செய்தும் வந்த கூட்டம்… இந்தக் கொடுமையை ஆய்வு செய்யத்தான் நீங்க களப்பணியிலிருந்து ஜகா வாங்கிக்கொண்டு வந்தீர்களா?//

          அன்ன ஹசாரேவும் , மத்தியதரவர்க்கமும் ஊழலை ஆதரித்து செய்தும் வந்த கூட்டமா இதை நிரூபிக்கவும் கேள்விகுறி

        • அண்ணா ஹசாரே உள்ளிட்ட ஊழல் எதிர்ப்பு போராளிகள் பற்றிய வினவு கட்டுரையில் உங்களுக்கான பதில் இருக்கிறது. திறந்த மனதுடன், ஒரு நல்ல மாணவனுக்கே உரிய பணிவுடன் அதை படித்தால் எதாவது புரிய வாய்ப்புள்ளது

      • //இந்த போராட்டம் என்பது சீர்திருத்த பாணி போராட்டம் என்கிறீர்கள். அதற்கு என்ன ஆதாரம். இதனால் என்ன சீர் திருத்தம் ஏற்படும், எப்படி ஏற்படும் என்பதை எழுதமுடியுமா?//

        இது உங்கள் கேள்வி

        //அன்ன ஹசாரேவும் , மத்தியதரவர்க்கமும் ஊழலை ஆதரித்து செய்தும் வந்த கூட்டமா இதை நிரூபிக்கவும் கேள்விகுறி//

        இது எனது கேள்வி

        எனது கேள்விக்கு வினவு கட்டுரையில் பதில் இருக்கு படிச்சிக்கோ என்றும் உங்கள் கேள்விக்கு மட்டும் நான் பதில் சொல்ல வேண்டும் என்றும் நினைப்பது என்ன மனோபாவம்

        • இதிலென்ன மனோபாவம் குறித்த கேள்வியைக்கேட்டு ஏன் திசைதிருப்ப வேண்டும்?
          இது பதில் குறித்த பிரச்சனையில்லவா?

          நான் சொன்ன கட்டுரையில் உங்களுக்கான பதில் இருக்கிறது படிக்கச்சொன்னேன்..

          நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இருந்தால் சொல்லவும், இல்லை பதிலிருக்கும் சுட்டியைக்கூட கொடுக்கலாம். அதுவும் இல்லையெனில் பதில் இல்லை என்று நேர்மையாக ஒப்புக்கொள்ளலாம்.. ஒன்னும் குடிமுழுகிப்போய்விடாது

        • //இது பதில் குறித்த பிரச்சனையில்லவா?//

          பிரச்சனையை திசை திருப்பவில்லை ஊழல் என்கிற பிரச்சனை
          ஒரே நாளிலோ அல்லது புரட்சி போராட்டங்களின் போதோ அல்லது
          உடனே முடிவுக்கு வந்துவிடாது ?

          ஊழலை ஒழிக்க ஏற்படுத்த பட்ட மசோதா நாற்பதாண்டுகாலமாக தூங்குவதிலிருந்து அதை நாம் புரிந்து கொள்ளலாம்

          இந்த மசோதா வந்தால் உடனே ஒழிந்து விடாது என்றும் ஆனால் ஊழல் செய்பவர்க்கு – கடுமையான சட்டங்கள் தப்பிக்க முடியாத வழிகளை ஏற்படுத்துவது என்கிற வகையில் இது சீர்திருத்த வாத போராட்டம் என்கிறேன் .

          இந்த சட்டம் வந்து அதில் நேர்மையாக விசாரணை நடந்தால் ஊழல் செய்பவர்கள் திருந்துவார்கள் இதெல்லாம் சீர்திருத்தம் தான்
          இதையே செய்ய கூடாது அது முடியாது அதற்கான போராட்டமும் போலித்தனமானது என சொல்வது சரியானதல்ல

        • சரி தியாகு. சட்டம் போட்டு தீண்டாமை, தீவிரவாதம், இனக்கலவரம், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, வரதட்சினை கொடுமை இதையெல்லாம் ஒழித்த்து, குறைத்தது, தண்டித்தது போல ஊழலையும் ஒழிக்கமுடியும் என்று நம்புகிறீர்கள் போலும்… அதுவும் இந்த அரசாங்கத்துக்கு புரவலர்களாக இருந்து கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் முதலாளிகளை… நல்ல ஆய்வு முடிவுதான் போங்கள் 🙂 🙂 🙂

        • ///ஊழலையும் ஒழிக்கமுடியும் என்று நம்புகிறீர்கள் போலும்… அதுவும் இந்த அரசாங்கத்துக்கு புரவலர்களாக இருந்து கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் முதலாளிகளை… நல்ல ஆய்வு முடிவுதான் போங்கள் 🙂 🙂 🙂 ///

          ஊழலை ஒழிக்க வேறு என்ன வழி இருக்கிறது தோழர் கேள்விக்குறி அவர்களே?

          ஊழலை ஒழிக்க அல்லது குறைக்க அல்லது தண்டிக்க தோழர் கேள்விக்குறி முன்வைக்கும் திட்டங்கள், வரைவுகள் என்னென்ன?

        • ரிஷி, ஊழல் எந்த கொசுவா மருந்தடித்து ஒழிக்க?
          அது இந்த உளுத்துப்போன அமைப்பின் ஒரு அம்சம். இந்த அமைப்பு நீடிக்கும் வரை ஊழலும் நீடிக்கும். எனவே இந்த ஊழலான அமைப்பை மாற்றுவதர்கான வழியைப் பார்ப்பதுதான் ஒரே வழி. ஊழலுக்கு மட்டுமல்ல, நமது சமூகத்தின் எல்லா கேடுகளுக்கும் இது ஒன்றுதான் வழி

        • //எனவே இந்த ஊழலான அமைப்பை மாற்றுவதர்கான வழியைப் பார்ப்பதுதான் ஒரே வழி. ஊழலுக்கு மட்டுமல்ல, நமது சமூகத்தின் எல்லா கேடுகளுக்கும் இது ஒன்றுதான் வழி//

          ரிஷி ,

          கேள்விகுறி உங்ககிட்ட மட்டும் ரகசியமா என்னவோ சொல்லுவார் அந்த புரட்சி மந்திரத்தை மலைமேல நின்னு எல்லாருக்கும் சொல்லிடுங்க பாவம் நாங்களெல்லாம் பொழைச்சி போறோம்

        • //எனவே இந்த ஊழலான அமைப்பை மாற்றுவதர்கான வழியைப் பார்ப்பதுதான் ஒரே வழி. ஊழலுக்கு மட்டுமல்ல, நமது சமூகத்தின் எல்லா கேடுகளுக்கும் இது ஒன்றுதான் வழி //

          இந்த வழிதான் என்னவென்று கேட்டேன். இனிமேல்தான் பார்க்கவேண்டுமா?
          முந்தைய பின்னூட்டமொன்றில் மற்றொரு கட்டுரையின் வினவு பின்னூட்டங்களைப் படித்துப்பாருங்கள் என்று சொல்லியிருந்தீர்கள். படித்துவிட்டு மேற்கொண்டு பதிலளிக்கிறேன்/கேள்விகளை மேலும் எழுப்புகிறேன். நன்றி.

  31. //தீண்டாமை, தீவிரவாதம், இனக்கலவரம், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, வரதட்சினை கொடுமை இதையெல்லாம் ஒழித்த்து, குறைத்தது, தண்டித்தது போல ஊழலையும் ஒழிக்கமுடியும் என்று நம்புகிறீர்கள் போலும்..//

    கேள்விக்குறி இவ்வள்வு மொக்கையா நீங்க விவாதிப்பீங்கன்னு நம்பல
    இஸ்லாமியர்களுடன் உங்களது விவாதங்களை படித்து நான் வந்த முடிவு அப்படி சொன்னது ஆனால் நீங்கள் இப்படித்தான்முடிவும் முத்திரையும் குத்துகிறீர்கள் என்பதை காண்கிறேன்

    ஊழலை ஒரே அடியாக ஒழிக்க பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் சட்டத்தைதான் கைகொள்ளும் – ஆமாவா இல்லையா

    அந்த சட்டம் வேறு இந்த சட்டம் வேறுன்னு நழுவாதீங்க

    • தியாகு உங்க கூட விவாதிக்கனும்னு வந்தப்புறம் மொக்கையை பத்தியெல்லாம் யோசிக்க முடியுமா 🙂

      நீங்க சொன்ன பதிலைத்தான் நான் மேற்கோள் காட்டியிருக்கேன் அதாவது சட்டம் போட்டு தண்டிக்கலாம் என்பதை…

      உங்க வார்த்தையிலேயே சொல்லனும்னா *****///இந்த சட்டம் வந்து அதில் நேர்மையாக விசாரணை நடந்தால் ஊழல் செய்பவர்கள் திருந்துவார்கள் இதெல்லாம் சீர்திருத்தம் தான்////****

      நீங்க சொன்னா கருத்து அதையே நீங்க சொன்தா நான் சொன்னா முத்திரை குத்துவதா.. ரூம் போட்டு ஆய்வு பண்ணுறீங்களோ #அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  32. //19.01.2011 முதல் 3.3.2011 வரை எத்தனை மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டனவோ, அவை அனைத்திற்கும் மூட்டைக்கு நான்கு கிலோ வீதம் பணம் தந்துவிடுவதாக நெல் கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் கூறினார்.இது குறைவாயினும் இதை விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர். இப்படி பணம் தருவதற்கு தன்னை ஊருக்கு சென்றுவர அனுமதிக்குமாறு அந்த நபர் கோரினார். இதை விவிமு தோழர்கள் ஏற்கவில்லை.ஆனால் விவசாயிகள் கூறியதன் பேரில் அந்நபர் ஊருக்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டார்.//

    1.நெல்லை திருடியவனை ஒரு போராட்டம் நடத்தி திருப்பி வாங்க முடிந்த உங்களால் நெல் கொள்முதல் விலையை உயர்த்த ஒரே போராட்டத்தில் ஏன் முடியவில்லை

    2.எல்லாத்தையும் தீர்க்க சர்வரோக நிவாரணிமாதிரி புரட்சியை வச்சிருக்கீங்களோ

    • கரெக்டு தியாகு,
      நீங்க எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய மார்க்சிய அறிஞ்சர்.
      நீங்க சுட்டுப்போடும் மேற்கோள்ளெல்லாம் எவ்வளவு நீஈஈஈளமா இருக்கு.
      நீங்க போட்டிருக்கும் லெனின் படம் எவ்வளவு அழகா இருக்கு
      நீங்க போட்டிருக்கு சேகுவேரா படம் எவ்வளவு தெளிவா இருக்கு
      உங்க டிராட்ஸ்கியிஸ்டு பதிவு எவ்வளவு பெரிச்ச்ச்சா இருக்கு
      அதனால நீங்க ரூம் போட்டு ஆய்வு செஞ்சு கண்டுபிடிச்ச வழியை சொல்லுங்கண்ணே. அதை படிச்சிட்டு நாங்களும் எங்க வருங்கால சந்ததியினரும் விவரமாயிக்கிறோம்

        • தியாகு நல்ல பையனா சொல் பேச்சை கேளுங்க. உங்க விளங்காத ஆய்வை தூக்கி பரண்ல போட்டுட்டு ஏதாவது ஒரு கட்சியல சேந்து வேலை செய்யுங்க.. பொது புத்திக்கு எதிரா பேச பயப்படாம நாலு பேரு திட்டினா கூட பரவால்லைனு துணிஞ்சு நேர்மையா சரியான கருத்தை சொல்லுங்க. தானா உங்களுக்கு இருக்கும் மனத்தடைகள் ஒவ்வொண்ணா விலகி சரியான வழியில போவீங்க. இல்லேன்னா இப்படியே குண்டு சட்டியில குதிரையை ஓட்டிகிட்டே ஆயுசு கழிஞ்சிடும்..

          அப்புறம் உங்க இஷ்டம்!

        • //குண்டு சட்டியில குதிரையை ஓட்டிகிட்டே ஆயுசு கழிஞ்சிடும்..

          அப்புறம் உங்க இஷ்டம்!//

          ஏழெட்டு வருசமா கட்சியில இருந்துதான் இந்த வேலையை செய்ஞ்சோம்

          ஓக்கே உங்க அறிவுரைக்கு நன்றிங்க பை

        • கேள்விக்குறி,

          சிலர் திட்டுவார்கள் பிறகு அறிவுரை சொல்லி நம்மை திருத்துவார்கள் எதோ அவர்களால் முடிந்தது நாமும் சரின்னுட்டு போவோம் 🙂

  33. ஒரு ஊர்ல ஒரு நல்லவன் டாக்டர்ட்ட போனான். அவனுக்கு நல்ல காய்ச்சல் வேற அடிச்சது. டாக்டர் நாடிய பிடித்துப் பார்த்து, ஸ்டெத் ஐ எல்லாம் வைத்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து மருந்து எடுக்க திரும்புனாரு. அப்போது, டாக்டர் எனக்கு வந்த காய்ச்சலுக்கு மாத்திரம் இல்லை உலகத்துல உள்ள எல்லா காய்ச்சலுக்கும் மருந்து சொல்லுங்க என்று கேட்டானாம் அந்த நல்லவன். டாக்டருக்கு அந்த தியாகு வ சூ தியாகிய நினைச்சு புல்லரிச்சுப் போச்சுதாம். அவரு பேராசெட்டமால் போதுமே என்றாராம். சொல்லிவிட்டு அவனுக்கு ஊசி போட மருந்தெடுக்கப் போனாராம். அதுக்கு, என்ன டாக்டர் என்னயவே ஏமாத்துறீங்களா? ஊருல எல்லா வியாதிக்கும் மாத்திரை ஒன்றை சொல்லி விட்டு எனக்கு மாத்திரம் ஊசி போடப் பாக்குறீங்களா என்றாரானாம். டாக்டர் சொன்னார், இல்லீங்க உங்களுக்கு வந்திருக்கிறது மூளைக்காய்ச்சல், ஊருக்குள்ள வந்திருக்கிறது சாதாரண காய்ச்சல் என்றாராம். அப்போ ஊருக்குள்ள இருக்கவங்களுக்கும் ஊசிதான போட வேண்டும் என்றானாம் அந்த நல்லவன். அதுக்கு அப்புறம் கேட்டான் பாருங்க, ஏன் டாக்டர் இத்தினி நாளா வராத காய்ச்சல் ஊருக்குள்ள அன்னா ஹசாரே விரதமிருந்த அன்னிக்கு வந்துவிட்டது என்று. டாக்டர் பார்த்தார், ஏம்ப்பா ஊருக்குள்ள சாக்கடைய விட்டுட்டு இருக்கதால அடிக்கடி ஊருக்குள்ள காய்ச்சல் வருது, உனக்கு மூளைக்குள்ள பிரச்சின என்றாராம்.

  34. மணி எதாவது உருப்படியா பேசுங்க இல்லாங்காட்டி வீட்டுல போய் படுத்து தூங்குங்க

    தூங்குவது உடம்புக்கு நல்லது

  35. //ஊழல், வேலையில்லாப் பிரச்சினை, விலைவாசி உயர்வு, இவற்றை எதிர்த்தே போராட்டத்தில் குதித்துள்ளேன். எமது சிறிய கனவுகளைத் தான் கேட்டுப் போராடுகிறோம்.” – கெய்ரோ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 26 வயது இளைஞனான ரத்வா கபாணி./

    அந்த நாட்டில் மக இகவோ மணியோ இல்லை இல்லாங்காட்டி போய்
    கேள்வி கேட்பார்கள் இப்படி போராட்டம் நடத்தினால் சிறிய கனவு நிறைவேறுமான்னு

    //துனிசியாவில் நடந்த புரட்சி, எகிப்திய மக்களையும் எழுச்சி கொள்ள வைத்தது. “துனிசிய மாதிரி”, எகிப்திலும் பின்பற்றப்பட்டது. பேஸ்புக் மூலம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடப்பட்டது. சுமார் 90000 பேர் கலந்து கொள்வதாக தெரிவித்தனர். தற்போது எகிப்தில், டிவிட்டர் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.//

    கொஞ்ச நாளைக்கு முன்பு வரை இந்த புரட்சி புலிகள் சொல்லி வந்தது
    இது மெய்நிகர் உலகம் இங்க ஒன்னும் ஆட்ட முடியாது மெய் உலகத்துக்கு வாங்கன்னு உடனே சொன்னாங்க பாரு

    டிவிட்டரில் இணைவீர்னு

    ஆக எது நடந்தாலும் நடக்கும் போது அதை எதிர்த்து தத்துபித்துன்னு உளர்வது
    பிறகு என்னதான் இருந்தாலும் நடுத்தரவர்க்கம் இல்லாங்காட்டி புரட்சி செய்ய முடியாதுன்னு சொல்வது ..

    என நம்ம தோழர்ஸ் மாத்தி மாத்தி பேசுவாங்க மக்கள்ஸ் யோசிங்க

    துனிசியாவிலும் ,எகிப்திலும் மக்கள் முன்னபின்ன இவ்ளோ பெரிய போராட்டம் செய்யலையாம்

    துனிசியா போராட்டத்தை பின்பற்றி எகிப்தில் போராடினாங்களாம்

    அய்யா நல்லா கவனிங்க அமைப்பு ரீதியா திரட்டபடாத மக்கள் எல்லாரும் –
    எந்த கட்சியும் திரட்டவில்லை பொதுவா ஊழலை ஒழிக்க சேர்ந்த மக்கள் தான்

    அவங்களை இவர்கள் வாழ்த்துவார்களாம் – இங்கே மக்கள் திரண்டால் திட்டுவார்களாம்

    • தியாகு, இதே எழவயே 2 வாரமா சொல்லிகிட்டிருக்கீங்க? முன்னாடித்தான் யோசிக்க அறிவு பத்தல, திருப்பி திருப்பி சொல்லும்போதாவது எதுவும் உரைக்கணுமா வேண்டாமா? அவ்ளோ டுபாகூரா நீங்க???

      அரசுக்கு எதிராக பீரங்கிக்கும், துப்பாக்கிக்கும், விமானப்படைக்கும் முன்னால போராடுவதும், அரசுக்கு ஆதரவாக மெழுகுவத்தி ஏத்தி போராடுவதும் ஒன்னா… துனிசியாவிலும் எகிப்திலும் அதிபருங்க ஊரை விட்டோ ஓடினாங்க இங்க என்னாச்சு, அரசு மசோதாவை பரிசீலிப்பதா சொல்லியிருக்கு… எந்த அரசு இப்பத்தான் வரலாறு காணாத ஊழல்களை செஞ்சு சிரிப்பா சிரிச்ச அரசு…

      இன்னொருவாட்டி இந்த மாதிரி லூசுத்தனமான வாதத்தை பெரிய ஆய்வறிக்கை மாதிரி சொல்லிகிட்டு வறாதீங்க, பயங்கர கடுப்பா இருக்கு

      • //அரசுக்கு எதிராக பீரங்கிக்கும், துப்பாக்கிக்கும், விமானப்படைக்கும் முன்னால போராடுவதும், அரசுக்கு ஆதரவாக மெழுகுவத்தி ஏத்தி போராடுவதும் ஒன்னா… துனிசியாவிலும் எகிப்திலும் அதிபருங்க ஊரை விட்டோ ஓடினாங்க இங்க என்னாச்சு, அரசு மசோதாவை பரிசீலிப்பதா சொல்லியிருக்கு… எந்த அரசு இப்பத்தான் வரலாறு காணாத ஊழல்களை செஞ்சு சிரிப்பா சிரிச்ச அரசு…//

        கேள்விக்குறி ,

        எகிப்திலயும் , துனிசியாவிலும் கோரிக்கை அதான்

        இந்தியாவில் கோரிக்கை இதான் இங்க காங்கிரஸ் பதவி விலகனும்னு அன்னா கோரிக்கை வைக்கவில்லையே

        ஏன் வைக்கலைன்னு திரும்ப ஆரம்பிச்சுடாதீங்க்
        ஏன்னா வைக்க முடியாது அவரு மண்டைய போட்டாலும் அமைப்ப மாத்த முடியாது எனவே வேஸ்டு வேஸ்டு வேஸ்டு

        நான் முன்பே சொல்லிட்டேன் இது அமைப்பை மாத்துர போராட்டம் அல்ல , அப்படின்னு

        • சரி பாசு. இந்தியால உள்ள ஊழலில் பெரிய ஊழல் எதுன்னு சொல்லுங்களேன். அல்லது இப்போ நடக்கும் மெகா ஊழல்களுக்கான ஊற்றுக்கண் எதுன்னு சொல்லுங்களேன்

        • @@@எகிப்திலயும் , துனிசியாவிலும் கோரிக்கை அதான்
          இந்தியாவில் கோரிக்கை இதான் @@@

          எகிப்துல அது அரசுக்கு எதிரான போராட்டம், இந்தியாவுல இது லோக்பால் மசோதாவுக்கானது. போராட்ட முறைக்கு மட்டுமல்ல கோரிக்கைக்கே இரண்டுக்கும் மலைக்கும அதலபாதாளத்துக்குமான வித்தியாசம் உண்டு. இத்தனைக்கும் அங்கும் அது அமைப்புக்கு எதிரான போராட்டமாக இல்லை என்பதையும் வினவு பதிவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படிப்பினைகளை பற்றியும் எழுதியுள்ளார்கள். எதையாவது உருப்படியாக படித்தால் உங்களுக்கு புரியும்..

          @@@இங்க காங்கிரஸ் பதவி விலகனும்னு அன்னா கோரிக்கை வைக்கவில்லையே
          ஏன் வைக்கலைன்னு திரும்ப ஆரம்பிச்சுடாதீங்க்@@@

          நான் முதல்லேயே அப்படி சொல்லவில்லை, அது உங்க கற்பனை

          @@@நான் முன்பே சொல்லிட்டேன் இது அமைப்பை மாத்துர போராட்டம் அல்ல , அப்படின்னு@@@

          நானும்தான் சொன்னேன் இது ஊழலுக்கு எதிரான போராட்டமே இல்லைன்னு…
          புரியலயா வேற மாதிரி கேக்கறேன்
          இந்த அமைப்பையும் வச்சிகிட்டு ஊழலை எப்படி ஒழிப்பீங்க? பதில் இருந்தா சொல்லுங்க

          காலையில நீங்க சொன்னது

          @@@இந்த சட்டம் வந்து அதில் நேர்மையாக விசாரணை நடந்தால் ஊழல் செய்பவர்கள் திருந்துவார்கள் இதெல்லாம் சீர்திருத்தம் தான்@@@

          அதற்கு நான் சொன்னது

          @@@சரி தியாகு. சட்டம் போட்டு தீண்டாமை, தீவிரவாதம், இனக்கலவரம், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, வரதட்சினை கொடுமை இதையெல்லாம் ஒழித்த்து, குறைத்தது, தண்டித்தது போல ஊழலையும் ஒழிக்கமுடியும் என்று நம்புகிறீர்கள் போலும்… அதுவும் இந்த அரசாங்கத்துக்கு புரவலர்களாக இருந்து கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் முதலாளிகளை… நல்ல ஆய்வு முடிவுதான் போங்கள் @@@

          இதற்கும் இன்னமும் நீங்கள் பதில் சொல்லவில்லை..

          உங்களுக்கு பொழுபோக்க நிறைய நேரம் இருக்கலாம் ஆனால் எல்லாருக்கும் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து நம் இருவர் நேரத்தையும் வீண்டிக்காமல் இருக்குமாரு அறிவுருத்துகிறேன்

    • பாசு ! நானும் உங்க பக்கம்தான் பாசு ! இவங்க எப்போ பாரு நம்ம நடுத்தர வர்க்கத்த திட்டிக்கிட்டே இருப்பாங்க• அங்க நடந்தா மட்டும் பாராட்டுவாங்க• சரி கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்துட்டு காத கொடுங்க• அங்கே தெருச்சண்டை, ராணுவ அணிவகுப்பு இதுக்கெல்லாம் அஞ்சாத மக்கள் இருந்தாங்க• நீங்க ஒன்னு பண்ணுங்க ஒரு பத்து லட்சம் பேர டெல்லிக்கு அப்பிடியே நைசா தள்ளிட்டு வந்துருங்க• மிலிட்டரி வந்தாக் கூட அசராமல் நின்னு மன்மோகன பதவிவிலக வைப்போம். அப்புறம் ஹசாரே வ பிரதமராக்குவோம். உங்கள தமிழ்நாட்டுக்கு சிஎம் ஆக்கிருவோம். சே குவேரா கெட்டப் ல வரும்போது வாங்க• ரகசியம் தோழர்

      • சொல்ல மறந்துட்டேன் தியாகு . ஒரு பத்து லட்சம் மஞ்சள் கலர் டீ ஷர்ட்ல கருப்பு கலர்ல சே குவேரா படத்த பிரிண்ட் பண்ணி டெல்லிக்கு வர்றச்சே எடுத்துட்டு வாங்க. கோவிந்தசாமி அண்ணன் இடம் வாங்கிறாதீங்க• அப்புறம் போட்டிக்கு நெறய பேரு வந்துருவாங்க‌

  36. நான் உங்களையோ அல்லது அன்னா ஹசாரே வையோ சத்தியமா எதுவும் சொல்லவே இல்லீங்க. அவரு லோக்பால லோக்சபாக்கு அடங்கின பிள்ளையா காட்டினப்புறம் கூட நான் வாயத் தொறக்கவேயில்லீங்க• மிஸ்டு காலா கொடுத்து ஓட்டுப் போட்டேங்க• அது மாதிரியே காசுமீர் சுயநிர்ணய உரிமை, வடகிழக்கின் பிரச்சினைக்கெல்லாம் மிஸ்டு கால் உண்டான்னு கூட கேக்கலீங்க• அதுக்கப்புறமும் என்னய அடிக்கிறது உங்களுக்கே நியாயமா இருக்கா பாசு

        • அன்னா ஹாசரே உலக வங்கியின் உருவாக்கம், தரகு முதலாளிகளின் கையாள். இது குறித்த பின்னூட்டத்தை மீண்டும் இடுகிறேன்.

          காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு!
          http://senkodi.wordpress.com/2009/03/18/ghandi-congress/

          August 15, 1947 The Transfer of Power: Real or Formal? — Suniti Kumar Ghosh
          http://rupe-india.org/43/ghosh.html

          அன்னா ஹாசரே, உலக வங்கியின் கட்டுமான மறுசீரமப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த கார்ப்போரேட்-தரகு முதலாளிகளால் 40 வருடங்களாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட விசப் பாம்பு. அன்னா ஹாசரே அடிப்படையில் ஒரு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி. இது தெரியாமல் அவர் பின்னே கூடிய முற்போக்கு, ஜனநாயக சக்திகள் இன்று பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடியுள்ளனர்.

          சரியாகச் சொன்னால் மக்களின் கடும் வெறுப்புக்கு ஆளாகி அம்பலப்பட்டு நிற்கும் அமெரிக்கக் அடிமை இந்திய அரசை காக்க உருவாக்கப்பட்ட இன்னொரு காந்தி.

      • அசுரன் கொடுக்கும் சுட்டிகள் என்ன சொல்லுதுன்னா – சிவில் சொசைட்டியை எப்படி தேர்ந்தெடுப்பது என்கிற பார்வை இல்லைன்னு

        சிவில் சொசைட்டி கமிட்டியில் இருக்கனும் என்பதற்கே போராட்டம் நடத்தவேண்டி இருக்கிறது

        அசுரன் சொல்றமாதிரி அன்னா அமெரிக்காவின் கையாள் என்பதாகவெல்லாம் இல்லை

        அடுத்து அவர் கொடுத்த அதே சுட்டியில் இந்த ஜனநாயக அமைப்பு ஒரு மிசிகள் சேர் விளையாட்டு மாதிரி இருக்கு – அப்படிங்கிது
        அதன் ஆளும் வர்க்கம் ஏமாற்றிதான் ஒவ்வொரு முறையும் வருதுன்னு சொல்லுது

        அந்த ஆளும் வர்க்கம் கமிட்டியில் இருப்பதை ஏற்றுகொள்ளும் அசுரன் (அதை ஜனநாயகம் என்பதாக ஏற்று கொள்கிறாரா )
        ஏனெனில் அடிப்படை ஜனநாயகமில்லை என கட்டுரையாளர் சொல்வது இந்த அடிப்படையிலிலேயே ?)
        அதில் சிவில் சொசைட்டியை சேர்ந்த ஐந்து பேர் இருப்பதை மறுக்கிறார்

        ஆகவே இவரது வாதம் தனக்குள்ளேயே முரண்பாடு உடையது

        அடுத்து அமெரிக்காவின் கையாள் அன்னா என அசுரன் சொன்னதை நிருவனும்

        • //அந்த ஆளும் வர்க்கம் கமிட்டியில் இருப்பதை ஏற்றுகொள்ளும் அசுரன் (அதை ஜனநாயகம் என்பதாக ஏற்று கொள்கிறாரா //

          எங்கே ஏற்றுக் கொண்டார்??

          நீங்கள் எதையுமே உருப்படியாய் படிக்க மாட்டீர்களா தியாகு?

          அந்த தெகல்கா சுட்டியிலும் இந்து பத்திரிகையின் சுட்டியிலும் ஜன் லோக்பால் கமிட்டியை மிக விரிவானதொரு விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் கோணம் உள்ளது.

          நீங்க என்னடான்னா…

          //அசுரன் கொடுக்கும் சுட்டிகள் என்ன சொல்லுதுன்னா – சிவில் சொசைட்டியை எப்படி தேர்ந்தெடுப்பது என்கிற பார்வை இல்லைன்னு //

          இப்படி டக்கடிக்கிறீங்க.

          //சிவில் சொசைட்டி கமிட்டியில் இருக்கனும் என்பதற்கே போராட்டம் நடத்தவேண்டி இருக்கிறது //

          அந்த வெங்காய சிவில் சொசைட்டியில் இருக்கும் சிவில் யாருடையது. எப்போது, எங்கே, ஏன், யாரால் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது? அதற்காக மக்களிடம் தேர்தல் எதுவும் நடத்தப்பட்டதா? பஞசாயத்து / வார்ட்டு அளவில் விவாதம் நடத்தப்பட்டதா? இந்தக் கமிட்டியில் இருக்கும் எவருமே மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்களா? அது மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளதா?

          நீங்கள் முதலில் எதாவது பள்ளிக்கூட ஆங்கில வாத்தியாரிடம் இவ்விரண்டு கட்டுரைகளையும் பிரின்ட் அவுட் எடுத்துக் கொடுத்து படித்து அர்த்தம் சொல்லச் சொல்லி கேட்டு வாருங்கள்.

        • ஆனந்து ,

          //அரசாங்கத்தில் லோக்பால் மசோதா மூலம் ஒரு மந்திரியோ அல்லது அரசாங்க அதிகாரி

          தொடர்புடைய ஊழலையோ வெளிக் கொணர்ந்து, விசாரித்து தண்டனை பெற்றுத் தர

          வேண்டுமானால், பொதுமக்கள் முதலில் லோக்சபா அல்லது ராஜ்யசபாவின் சபாநாயகரிடம்

          ஊழல் தொடர்பான புகார் மனுவை அளிக்க வேண்டும். சபாநாயகர் அம்மனுவைப்

          பரிசீலித்து, அது ஏற்புடையது என்றால் லோக்பால் கமிட்டிக்கு அனுப்புவார். பின்பு

          அது விசாரிக்கப்பட்டு, தண்டனையளிக்கப்படும்.

          இயல்பாகவே சபாநாயகர் ஆளுங்கட்சியையோ அல்லது கூட்டணியையோ சார்ந்த நபராக இருப்பதால், ஆளுங்கட்சி அல்லது அதற்கு வேண்டிய அதிகாரி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு சபாநாயகர் எடுத்துக் கொள்வது சந்தேகமே. அதற்கு மீறி கமிட்டிக்கு அனுப்பப்பட்டாலும் விசாரணை ஆண்டுகள் கணக்கில் எடுத்து, மறக்கப்பட்டு, பொதுமக்களின் பணமும் விசாரணை என்ற பெயரால் வீணடிக்கப்படும். எனவே அந்த லோக்பால் சட்டம் ஏற்புடையதல்ல என்பதே ஹஸாரே மற்றும் குழுவினரின் வாதம்.//

          அதாவது இந்த அரசும் பாராளு மன்றமும் – ஊழலை விசாரிக்க சக்தியற்றதாக இருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்

          எனவே சிவில் சமூகத்தில் ஒரு பகுதியை இந்த குழுவில் நியமிக்கும் படி கோருகிறார் அன்னா

          //லோக்பால் அமைப்பின் உறுப்பினர்கள் அரசாங்கம் மூலம் நியமிக்கப்பட மாட்டார்கள்.

          நீதிபதிகள், பொதுமக்கள் போன்றவர்கள் மூலம் மிகவும் வெளிப்படையான நியமனம்

          இருக்கும். ஆகவே ஊழல் பேர்வழிகளே ஊழலை ஒழிக்கப் புறப்படும் அவலங்கள்

          தவிர்க்கப்படும்.

          * ஜன் லோக்பால் உறுப்பினர்களே ஊழல்வாதிகளாக இருப்பின், அவர்கள் மீதான புகார்கள்

          உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு,

          தண்டனை பெற்றுத் தரப்படுவர்.

          * புகார் அளிப்பவர்கள் மற்றும் புகாரில் தொடர்புடையவர்களுக்கு முழு பாதுகாப்பு

          அளிக்கப்படும்.

          மேற்கண்ட எந்தவொரு அம்சமும் அரசாங்கத்தின் தற்போதைய லோக்பால் மசோதாவில் இல்லை.

          இது போன்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, கொண்ட நோக்கில் பழுதின்றி

          செயல்பட்டால், நிச்சயம் இந்தியா ஊழலற்ற தேசமாக மாறும் என்பதில் சிறிதளவும்
          //

          நீதிபதிகளும் பொதுமக்களும் நியமிக்கும் உறுப்பினர்கள் மேலே மட்டும் நம்பிக்கை எப்படி வந்துவிடும் என நீங்கள் கருதினால்

          மாற்று திட்டம் என்னவென ஒரு வரைவு கொடுங்கள்

          ஆனால் இதை விட்டு விட்டு

          இந்த அமைப்பை தூக்கி எறிந்தபின் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்கிற வாய்பாட்டு பாடாதீர்கள்

        • ஒன்றும் சொல்வதற்கில்லை. முன்பு மன்னார்சாமி அவர்கள் உங்களை லூசு எனும் அர்த்தத்தில் ஏதோ சொன்னபோது அவர் மீது மிகவும் வருத்தமுற்றேன். இன்றோ…. அதை முதலிலேயே சொல்லாமல் ஏன் அவர் இத்தனை நாட்கள் கழித்து சொன்னார் என்று கோபப்படுகிறேன்.

          🙁 = திஸ் இஸ் பார் யு & Grrrrrr = திஸ் இஸ் பார் மன்னார்

          நான் என்ன சொன்னேன்? இந்தக் கமிட்டியில் இருப்பவர்கள் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் இல்லையென்றேன். அதற்கு இப்போது அவர்கள் மேல் வரும் புகார்களுக்கு அவர்கள் முகம்கொடுக்கும் விதமே சான்றாக நம் முன் இருக்கிறது.

          நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

          //நீதிபதிகள், பொதுமக்கள் போன்றவர்கள் மூலம் மிகவும் வெளிப்படையான நியமனம்
          இருக்கும். ஆகவே ஊழல் பேர்வழிகளே ஊழலை ஒழிக்கப் புறப்படும் அவலங்கள்
          தவிர்க்கப்படும்.//

          இப்போது எனது கேள்வியின் நீட்சி; இதுக்கு மட்டும் தயவு செய்து பதில்னு எதையாச்சும் சொல்லி கடுப்பேத்தாதீங்க யுவர் ஆனர். நீங்க தலைகீழா நின்டாலும் அறிவு மட்டும் வளரவே வளராது.

          பொதுமக்களிடம் தேர்தல் மூலமா? ஐ.ஏ.எஸ் போன்ற பரீட்சை வைத்தா? குடுகுடுவென்று ஓடி லாங் ஜம்ப் செய்ய வைத்தா? எப்படி? தவறு செய்பவர்களை இம்பீச் செய்ய எதுனா வழியிருக்கா?

          சரி விடுங்க… ஒரு கிளாஸ் தண்ணி குடிங்க.

      • அன்னா ஹாசரேயின் ஊழல் பற்றிய கேள்விக்குறியின் லிங்க்

        கேள்விக்குறி

        வாங்க இராம் காமேஷ்வரன், உங்களைத்தான் எதிர்பாத்திருந்தேன்..
        இன்னிக்கு இப்படி ஒரு செய்தி கேள்விப்பட்டேன்

        @@@@@@@@
        Anna Hazare has been indicted as man involved in corruption by the Justice P.B.Sawant commission of inquiry constituted way back in 2003. The report was submitted in 2005 (Not now!). The pages indicting Hazare is compiled and published in the web site
        http://groups.google.com/group/alt.politics/browse_thread/thread/c3c79ff02635f005

        The full report of the Commission of Inquiry by Justice P.B.Sawant is available in the site
        http://www.scribd.com/doc/32699610/Report-of-JUSTICE-P-B-SAWANT-COMMISSION-OF-INQUIRY
        @@@@@@@@
        இது என்ன விவரம்னு கொஞ்சம் பாத்து சொல்ல முடியுமா?

  37. //நெல்லை திருடியவனை ஒரு போராட்டம் நடத்தி திருப்பி வாங்க முடிந்த உங்களால் நெல் கொள்முதல் விலையை உயர்த்த ஒரே போராட்டத்தில் ஏன் முடியவில்லை//

    இந்த மாதிரி அறிவுப்பூர்வமா நீங்க கேட்பதைப் பற்றி நான் எந்த கமாண்டும் அடிக்காமல்தானே இருக்கிறேன்

    • மணி அண்ணே நமக்கு இந்த இடம் வேண்டாம் (கர்ரு புர்ருன்னு உறுமுறாக)

      நம்ம விவாதத்தை டிவிட்டரில் வச்சுக்கலாம் ஓக்கேவா

  38. தியாகு – கேள்விக்குறி விமர்சனம் விறுவிறுப்பாகத்தான் போகிறது. ஆனால் புரிந்து கொள்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும் போலிருக்கிறது. விமர்சனம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்று நாவலாசிரியர் பொன்னீலன் சொல்லக் கேட்டதை கூறுகிறேன்.

    விமர்சனம் தங்கத்தைப் போன்று மதிப்பு மிக்கதாகவும், அழகு மிக்கதாகவும் இருக்க வேண்டும். அந்த தங்கத்தை வித விதமாக அழகுற, ஆபரணங்களாக செய்து அணிந்து பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கும். அதே போன்று விமர்சனமும் அழகுற, பொருத்தப்பாட்டோடு, புதிய பரிமாணத்தை கொடுக்கும் வகையில் அமைய வேண்டும்.

    மாறாக, தங்கத்தை ரூல்தடி போன்று ஆக்கி அதனால் அடித்தால் அது தங்கமென்றாலும் வலிக்கத்தான் செய்யும் என்று கூறுவார். அதைப் போன்ற விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

    தோழமையுடன்,

    சிவசிதம்பரம்,

    பட்டுக்கோட்டை.

    • தங்கம் மாதிரி பார்ப்பதற்கு பல்லை இளிக்க வேண்டும் எனக் கருதுகிறீர்களா ? அல்லது வினையூக்கி போல சிறுத்து இருக்க வேண்டும் என கருதுகிறீர்களா ?

    • மிகச்சரியா சொல்லிருக்கீங்க சிவசிதம்பரம். நானும் எனது கருத்துக்களை முன்வைத்து, அதே நேரம் எதிர் தரப்பு கருத்துக்களையும் விளக்கமாக கேட்டறியவேண்டும், புரிந்துகொண்டு பதிலளிக்க வேண்டும் என முனைகிறேன். ஆனால் பின்னூட்டமிடுவதற்குள் இங்கே ஒரு வார்த்தைப் போரே நடந்து முடிந்துவிடுகிறது!! நமக்கு எரிச்சலாகத்தான் ஆகிவிடுகிறது!!

    • வினவு தோழர்களுக்கு,

      நமது நாயகன் மேற்கூறியவாறு இதற்கு முன்பும் பல முறை பல பதிவுகளிலும் பின்னூட்டமிட்டிருக்கிறார். அதாவது இவருடைய பின்னூட்டங்களை வினவு வெளியிடுவதில்லை என்பதைப்போன்று பேசுகிறார் இது உண்மையா பொய்யா ?
      பொய் எனில் இந்த மரமண்டைக்கு நன்றாக குட்டு வைக்கவும்.

      • தோழர் உண்மை, சில தரம் தாழ்ந்த பின்னூட்டங்களும், பதிவுக்கு சற்றும் தொடர்பில்லாத புலம்பல்களும், விளம்பர நோக்கத்தில் கொடுக்கப்படும் சுட்டிகளும் நீக்கப்படும். இது தியாகுவுக்கு என்றில்லை அனைவருக்கும் அப்படித்தான். புதியவர்கள் என்றால் அதை அறிவித்துவிட்டு செய்வோம். தியாகு முன்பே போலிப்பெயரில் வந்து திட்டி அதன் காரணமாக எச்சரிக்கப்பட்டவர்தான் என்பதால் அவருக்கு அறிவிப்பு கிடையாது. அவரும் இதை புரிந்து கொண்டுதான் இப்பொழுதெல்லாம் பின்னூட்டம் எழுதி வருகிறார்.

        • அப்படின்னா [obscured] சொன்னதையே திரும்பத் திரும்ப, சாரி போட்ட பின்னூட்டத்தையே திரும்பத் திரும்ப போடுதுன்னு சொல்லுங்க.

  39. ம க இ க விற்கு காந்தியம் என்றால் என்னவென்றே தெரியாமல் தான் இதுவரை காந்தியத்தை எதிர்த்தீர்கள் போல?
    >> இவையெல்லாம் சட்டபடியே தவறு. இதையெல்லாம் போலிசுதான் செய்ய வேண்டும். அவர்களும் கூட வழக்கு பதவு செய்து
    நீதிமன்றத்தில் வாதாடிதான் இதை நிறைவேற்ற வேண்டும். அந்த அதிகாரத்தை சட்டவிரோதமாக எடுத்துக் கொண்டு விவசாயிகளை
    வைத்து விவிமு செய்திருக்கிறது. உங்களுக்கு அகிம்சை குறித்தும் தெரியவில்லை, வன்முறை குறித்தும் புரியவில்லை <<
    சட்டப்படி நடப்பது தான் காந்தியம் என்று புரிந்து வைத்துள்ளீர்கள். நீங்கள் புரிந்தது தான் தவறு. காந்தியின் போராட்டம் பல சட்ட விரோதமானதே. தண்டி யாத்திரை என்ன சட்டத்திற்கு உட்பட்டதா? பிறகு ஏன் பல முறை காந்தியை கைது செய்ய வேண்டும்?
    வி.வி.முவின் போராட்டம் காந்தியமே. இதற்கு வேறு பெயர் வைத்து ஏன் உங்களை ஏமாற்றி கொள்கிறீர்?
    நக்சல் வழி போராட்டம் என்றால், தவறு செய்த பணியாளரை அப்போதே வெளுத்து வாங்கி, அலுவலகத்தில் இருக்கும் பணம், மற்றும் அந்த பணியாளரிடம் இருந்த பணம், மற்றும் அங்கிருந்த நெல் மூட்டை யாவும் பிரித்து கொடுக்க பட்டிருக்கும். இது நடக்கவில்லையே? அதனால் இது நக்சல் போராட்டம் அன்று.
    எதை வன்முறை என்று சொல்கிறீர்? Lorryகளை பிடித்து வைத்தா? அலுவலர்களை பிடித்து வைத்ததா? சிறிது யோசித்து பார்த்துவிட்டு பிறகு சொல்லவும் – இது அஹிம்சா வழியா அல்லது நக்சல்பானியா என்று.
    அது சரி, விவசாயிகள் ஏமாற்றத்தை போக்குவதன்றோ aim. நீங்கள் செய்தது காந்தியம் என்றால் ஏன் உங்களுக்கு கோபம்? பேசி தீர்க்கும் பிரச்னை கூட so called "புரட்சி" என்ற பெயரில் வன்முறையாக தான் முடிப்பீர்கள் போல?

    • ஆயுதம் எடுத்தால் நக்சலைட் ஆயுதம் எடுக்காவிடில் காந்தியவாதி என்ற ‘கொள்கைய’ விளக்க வர்றீங்களா ?

  40. சரி, ஏன் அன்னா ஹசாரே மீது இவ்வளவு கோபம்?
    அவரவர் வழியில் போராட்டம் செய்வது அவரவர் விருப்பம். உங்கள் வழியே சிறந்தது. எல்லோரும் அதையே பின்பற்ற வேண்டும் என்பது ஒரு வகை திணிப்பு.
    அவருடைய போராட்டதிற்கு இந்தியா முழுவதும் பெரும் ஆதரவு கிடைத்தது. அவர் போராட்டம் ஊழலுக்கு எதிரானது. அதை தான் மக்கள் பார்த்தனர். உங்களை போல “அவர் சட்டையில் ஒரு பொத்தான் கருப்பு, அவர் முடியில் பாதி வெள்ளை” போன்ற உப்பு பெறாத சமாச்சாரங்களை பார்க்க வில்லை. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஏன் இவ்வளவு எதிர்ப்பு?
    அவர் போராட்டம் corporate sponsor செய்கிறார்கள் என்று ஏதோ சம்மந்தமில்லாமல் உளறல் வேறு.
    நாடு தழுவிய போராட்டம் ஆரம்பிக்கும் போதே “அது நொள்ளை இது நொள்ளை” என்று பிதற்றல். நீங்கள் அந்த ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை என்பதை மறக்காதீர். பெரியாரின் முக்கிய கொள்கையே சக மனிதனை மதிப்பது தான். பெரியாரை பின்பற்றும் நீங்கள் அதை மறக்க வேண்டாம். அன்னாவை மதிக்க வேண்டாம். மிதிக்காமல் இருங்கள்.

    • திட்டமெல்லாம் நான் கேட்க மாட்டேன். ஊழல எப்படி ஒழிக்கலாம்னு நீங்க நினைக்கிறீங்க தியாகு

  41. கேள்விக்குறி ,

    சட்டம் போட்டு ஊழலை ஒழிச்சிட முடியாதென்றால் இந்த மசோதாவை ஏன் நாற்பாண்டுகாலம் நிறைவேற்றவில்லை

    இந்த மசோதா வந்தாலே முழுக்க ஊழல் ஒழிந்துவிடாது என ஏற்கனவே சொல்லி இருக்கேன் ஆனால் ஒழிப்பதற்கான முன்முயற்சிய ஏன் குறை சொல்லனும்

    சட்டம் போட்டு கொலையையும் தடுக்க முடியவில்லை ஆனால் கொலை செய்தால் தண்டனை என்கிற சட்டத்தை ரத்து செய்துடலாமா

  42. அப்புறம் நான் முன்பிட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு அடுத்து நீங்கள் கேள்வி கேட்பதுதான் நேர்மை மிஸ்டர் கேள்விகுறி

    இதோ எனது பழைய கேள்வி

    //எந்தக்கூட்டம் இத்தனை காலமும் ஊழலை ஆதரித்தும், செய்தும் வந்த கூட்டம்… இந்தக் கொடுமையை ஆய்வு செய்யத்தான் நீங்க களப்பணியிலிருந்து ஜகா வாங்கிக்கொண்டு வந்தீர்களா?//

    அன்ன ஹசாரேவும் , மத்தியதரவர்க்கமும் ஊழலை ஆதரித்து செய்தும் வந்த கூட்டமா இதை நிரூபிக்கவும் கேள்விகுறி

    (வினவு கட்டுரையில் பதில் இருக்குன்னு சொன்ன பதில் ஏற்றுகொள்ளப்பட மாட்டாது)

    • சரிங்க ஆபீசர்,

      அண்ணா ஹசாரே மற்றும் அவர் சார்ந்த அமைப்பு சாரா நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக 2005ம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி சாவந்த் தலைமையிலான விசாரணைக்குழுவின் அறிக்கை, அண்ணா ஹசாரேவின் மீதே ஊழல் குற்றங்களை சுமத்துகிறது.

      உங்களுக்குத்தான் லிங்கு கொடுத்தா புடிக்காதே அதனால நீங்களே இதை தேடிப்படிச்சுகங்க.

      அண்ணாவின் என்ஜிஓ அரசியலே ஊழல்மயமானது என்பதை ஒப்பிடும் போது இது மேட்டரே இல்லை என்பதுதான் என் நிலைப்பாடு ஆனாலும், அந்த அரசியலில் உள்ள ஆபத்தை புரிந்து கொள்ள சராசரிக்கும் சற்று அதிகமாகவே சமூக அறிவு இருக்கவேண்டும், உங்களுக்கு அது செட்டாவாது.

      எனவே உங்க நாயகன் டவுசரே இங்கே கிழிந்த படியால் கும்பலோடு கோவிந்தா போட்ட வில்லன்கள் முதல் காமெடி பீசுகள் வரை மற்றவர்களுக்கெல்லாம் பஞ்சர் பார்க்க தேவையில்லை

      நீங்கள் உருப்படியான ஒரு கேள்வி கேட்க்கூட அறிவாற்றல் இல்லாதவர் என்று திரும்பத்திரும்ப பல இடத்தில் நிரூபித்து வருவதால் நான் உங்களிடம் முன்வைத்த வாதங்களுக்கு எந்த பதிலையும் எதிர்பார்க்கப் போவதில்லை காற்று வீசும் பக்கம் சாய்ந்துகொள்ளும் வீர்ரான உங்களிடம் விரயம் செய்ய அடுத்த சில நாட்களுக்கு எனக்கு நேரமில்லை. போயிட்டு வாங்க…

      பி.கு – வாங்கன்னு சொல்லிட்டதால வந்துடகிந்துட போறீங்க… ஒரு பேச்சுக்கு சொன்னேன் 🙂

      • ha ha கேள்விக்கு ,

        என்னுடைய இரண்டு கேள்விக்கும் மழுப்பலே பதிலாக சொன்னமையால் உலக டுபாகூராக உங்களை அறிவிக்கலாம் வினவு

        இது எனது பரிந்துரை

        அன்னாவின் //அண்ணா ஹசாரே மற்றும் அவர் சார்ந்த அமைப்பு சாரா நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக 2005ம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி சாவந்த் தலைமையிலான விசாரணைக்குழுவின் அறிக்கை, அண்ணா ஹசாரேவின் மீதே ஊழல் குற்றங்களை சுமத்துகிறது.//
        சுமத்துகிறது என சொல்லிட்டு போயிடுவீங்க

        நாங்களே சுட்டி தேடி படிச்சுகனும் நல்ல விவாதம்

        போய் வேற எதாவது வேலை இருந்தா பார்க்கவும்
        விவாதம் செய்கிறேன்னு வராதீங்க ப்ளீஸ்

        • அப்புறம் இன்னொரு விசயம் அன்னா ஊழல் செய்திருந்தால் விட்டு விடனும்னு யாரும் இங்க போராடவில்லை

          எனவே ஊழலுக்கு எதிரான போராட்டம் பிசுபிசுக்காது நீங்க நினைக்கிறா மாதிரி

        • //நீங்கள் உருப்படியான ஒரு கேள்வி கேட்க்கூட அறிவாற்றல் இல்லாதவர் என்று திரும்பத்திரும்ப பல இடத்தில் நிரூபித்து வருவதால் நான் உங்களிடம் முன்வைத்த வாதங்களுக்கு எந்த பதிலையும் எதிர்பார்க்கப் போவதில்லை காற்று வீசும் பக்கம் சாய்ந்துகொள்ளும் வீர்ரான உங்களிடம் விரயம் செய்ய அடுத்த சில நாட்களுக்கு எனக்கு நேரமில்லை. போயிட்டு வாங்க… //

          உருப்படியா ஒரு பதிலை கூட சொல்ல துப்பில்லாத அதற்கான பேசிக் அறிவுகூட இல்லாமத்தான் இத்தனை நாள் கத்தி சுத்தினீங்களா

          நாங்கூட பெரிசா நினைச்சு பேசிட்டேன்
          நீங்களும் வெறும் முண்டாஸ் பார்ட்டிதான்ன் தெரிஞ்சு போச்சு
          பை பை குட் லக்

  43. ஆனந்த்,

    இந்தத் தியாகுவின் பிரச்சினையென்னவென்றால் அவர் பட்டாபட்டி போடாமல் அகஸ்மாத்தாக போலி பெயரில் இங்கே உலாத்திய போது கவனித்து விட்ட எல்லோரும் கச்சக் என்று வேட்டியை உருவி விட்டார்கள். அதிலிருந்து அவருக்கு மிகப் பெரிய மானப் பிரச்சினையாகி விட்டது. ஏனென்றால் அண்ணன் மிகப் பெரிய தத்துவஞானியன்றோ?? அவர்தம் ஞானத் தவத்தால் முற்றும் உணர்ந்து கொண்ட உண்மைகளைத் தன் பதிவுகளில் கல்வெட்டாகப் பொறித்து வைத்துக் கொண்டு வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் சொல்ல பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பவர். அவரது ஞானக் குளத்திலேயே வினவின் ஆதரவு வாசகர்களும் தோழர்களும் கல்லெரிந்து விட்டதால் ஒரு உண்மை அம்பலபட்டு விட்டது. அதாவது அண்ணன் ஒரு அரசியல் ஓட்டாண்டி என்பது.

    அதுக்குத் தான் வினவு போடும் பதிவுகளுக்கெல்லாம் எதிராக கருத்து எதையாவது சொல்ல வேண்டும் என்கிற தீராத வெறியில் எதையாவது உளரிக் கொண்டுள்ளார்.

    அவரது விவாதமுறையின் பாணியே தனி. வினவு தளத்தில் “பூமி உருண்டை” என்று எழுதுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் – இவர் உடனே தனது பதிவில் “அதெப்படி உருண்டை என்று வினவு சொல்லப் போச்சு? உருண்டையென்றால், இந்தியாவில் நிற்கும் நாம் பூமியில் நேராக நிற்கிறோம் – இந்த உருண்டையின் எதிர்ப்புறத்தில் இருக்கும் அமெரிக்கர்கள் தலைகீழாகத் தொங்குவார்களா?” என்றெல்லாம் விவாதிப்பார்.

    இந்த விவாதங்களைத் தன் பதிவில் கல்வெட்டாகப் பொறித்து வைத்துக் கொண்டு பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கிறார். அந்தக் கல்வெட்டுகளில் காலைத் தூக்கி ஒன்றுக்கடிக்கக் கூட சொரிநாய்கள் ஏதும் வராதது வேறு தனி கடுப்பு. இந்தக் கடுப்புகளைத் தனித்துக் கொள்ள அடிக்கடி இங்கே வருவார். வந்து ‘விவாதிப்பார்’. அது இப்படித் தான் இருக்கும்; அதாவது செத்தவன் கையில் வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி!

    ‘எலேய் வெத்தில நழுவி கீழ வுழுதுடே’ ன்னு யாராவது ஞாபகப்படுத்திட்டா ஒடனே பாயைச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு “எனக்கென்று ஒரு மலை. எனக்கென்று ஒரு கொடி.எனக்கென்று மக்கள்’ அப்படின்னு பழனி கோவானாண்டி கணக்கா கெளம்பிறுவாரு. ஆனா பாருங்க மிஸ்ட்டர் ஆனந்து, அந்த மலைல இவுரு மட்டும் தான் நின்று கொண்டிருக்கிறார். யாரையாவது கூப்பிடலாம்னு ஒரு விளம்பரமாக தன் சுட்டியை இங்கே வினவில் போட்டாலும் இந்தத் தள நிர்வாகிகள் அதை எடிட் செய்து விடுகிறார்கள்.

    இங்கே தியாகு விவாதித்ததை எல்லோரும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் அறிமுகம், உலக அறிவு, தனிப்பட்ட சொந்த வாழ்க்கை அனுபவம் என்று எல்லாவற்றையும் விட்டுப்பார்த்தாலும் கூட, ஒரு நாற்பது வயது நபருக்கு இருக்க வேண்டிய தர்க்க அறிவு இல்லாமல் இருப்பது கூட பிரச்சினையில்லை – அதை அவரே உணராமல் இருக்கிறார் என்பதும், இப்படித் தான் உளருவதே மாபெரும் தத்துவ முத்துக்களை கக்குவதற்கு ஒப்பானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் பாருங்கள் – அது தான் பிரச்சினை!

    ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஆஆஆ முடியல தியாகு.

  44. சரியான முடிவு தோழர்.

    அர்த்தமற்ற விவாதம் எதற்கும் உதவப்போவது இல்லை, தியாகுவுக்கு வினவு மீதான வன்மம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதைப் போய் நோண்டி என்னவாகப் போகிறது, தியாகுவின் அடுத்த பிளாக்போஸ்டாகப் போவதைத் தவிர.

    தியாகு உங்களை மதித்து இந்த விவாத்தில் ஈடுபட்டேன், நான் முன்வைத்த எந்தக்கேள்விக்கும் நீங்கள் பதில் எழுதவில்லை, உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லியிருக்கிறேன். ஆம் எங்கள் தீர்வு சமூக புரட்சிதான். அதற்கான வேலைகளைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். புரட்சி இப்போ வரும் அப்போ வரும் என ஜோசியம் சொல்ல முடியாது. உங்களுக்கு அவ்வளவு ஆசை இருந்தால் அதை அதியமானிடன் கேட்டுக் கொள்ளுங்கள்.

    நான் நேற்று உங்களிடம் கேட்ட கேள்வியைத்தான் அவரும் கேட்டார். அரசியல்-சமூகப்புரட்சிக்கான உங்கள் திட்டம் என்ன? அப்படி ஏதும் இருந்து அதை நடைமுறைப்படுத்துவதாக உத்தேசமா இல்லை சதா சர்வகாலமும் புரட்சிகர அமைப்புகளை மொக்கையாக திட்டுவதிலேயே சுய இன்பம் காணும் போலி அறிவு ஜீவியா நீங்கள்?

    இந்தக் கேள்விக்கு உங்களால் பதில் சொல்லவியலும் என்றால் மேற்கொண்டு உங்களிடம் அரசியல் பேசலாம். இல்லையென்றால் இனி பேசுவதற்கு ஒன்றும் இல்லை

    தோழர்கள் கவனத்திற்கு : தியாகுவை பஸ்-டவிட்டர் என அவர் செல்லும் இடமெல்லாம் கலாய்கிறார்கள். அதை புரிந்து கொள்ளும் அளவுக்குக்கூட அவருக்கு ஆற்றல் இல்லை எனவே அவரை தனிப்பட்ட முறையில் அம்பலப்படுத்துவதை விட அவரின் அரசியல் ஓட்டாண்டித்தனத்தை அம்பலப்படுத்துவதுதான் அவருக்கும் சரி விவாதத்தை பார்ப்பவர்களுக்கும் பயனளிக்கும்

  45. வினவு,

    இப்பொழுதெல்லாம் பின்னூட்டங்கள் கருவிலிருந்து திசை மாற்றம் காணுகின்றன.
    இக் கட்டுரையில் வரும் பின்னூட்டங்களில் முக்கால் பாகம் என்னவென்றே எனக்குப் புரியவில்லை.
    சலிப்பூட்டுவதாயும், விதண்டாவாதங்களில் முடிவதாயும் பின்னூட்டங்கள் அமைந்துவிடுகின்றன.

    இவ்வாறு திசை மாற்றுக் கருத்துக்கள் கொண்ட பின்னூட்டங்களை, இதற்கென ‘ட்வீட்டரில்’ கணக்குத் தொடங்கி,
    தொடர வைக்கலாம்!

  46. தியாகு சார்,
    இன்னுமா பதிவு எழுதி முடிக்கவில்லை, உங்களுக்காக பர்மீசன் போட்டுவிட்டு உட்காந்திருக்கிறேன், சீக்கிரம் வாங்க சார்

    • எல்லா விசயங்களுக்கும் முன் முடிவுகளோடு
      வந்து விவாதிப்பது என்பது தீர்ப்பை கையோடு
      கொண்டு வந்து விவாதிக்கும் பட்டிமன்ற
      சாலமன் பாப்பையாகள் மாதிரியாகும்

      விவாதத்தில் ஒவ்வொரு முறையும் நான் எதையாவது
      தெரிந்து கொள்ளும் ஆவலில் தான் வந்து
      விவாதிக்கிறேன் ஆனால் என்னை ஜென்ம பகைவனாக
      கருதி விலகி சென்று திட்டுதலையே குறியாக கொள்கிறீர்கள்
      ஏனென்று விளங்க வில்லை

      மேலும் டிவிட்டர் பஸ்ஸில் என்னை கிண்டலடிக்கிறார்கள்
      என்கிறீர்கள் இந்த சுட்டியை பாருங்கள் வினவு
      எபெக்டுன்னு போட்டு வாரு வாருன்னு வாருகிறார்கள்

      தனிபட்ட முறையில் புரட்சி குறித்து எனது கருத்தை
      ஏன் கேட்கிறீர்கள் வரும் என தெரியவில்லை
      புரட்சிதான் தீர்வுன்னா மேற்கண்ட விவாதம் எல்லாம்
      நான் வேண்டுமென்ற செய்ததாக சொல்ல
      புரட்சி தீர்வில்லைன்னு சொன்னா நான் ஒரு போலின்னு சொல்ல
      என சிக்கலான கேள்விகள் கேட்கிறீர்கள்

      சமூக மாற்றத்தில் தான் அனைத்து பிரச்சனைகளும் தீரும்
      என்பதை நானும் மறுக்கவில்லை அதே வேளை எல்லா போராட்டங்களையும்
      பொழுது போக்கு போராட்டங்களாக பார்க்கும் பார்வை தவறு என சொல்லவே விவாதம்

      நான் மரமண்டையாகவே இருக்கட்டும் எனக்கு புரியவைக்க முடியாத நீங்கள் எப்படி ஒன்றுமரியாமல் உங்கள் பின் வரும் பாட்டாளிகளுக்கு புரியவைப்பீர்கள்

      ஏன் இத்தனை கோபம் கொண்டு வன்மத்தோடு தாக்குகிறார் மன்னார்சாமின்னு
      புரியலை .

      அவர் தனது கருத்துக்களை சுயவிமர்சனம் செய்துக்கட்டும் நேர்மை இருந்தால்
      மேலும்

      ஏற்கனவே ஒரு விவாதத்தில் சொன்னது போல திட்டி திட்டி என்னை அடிபணிய வைக்க முடியாது அத்தகைய ஒரு பாணி ஏற்கனவே இங்கு ஒருவரால் செய்யப்பட்டது ஆனால் அந்தோ எனது கேள்விகளுக்கு விடை சொல்லாமல் ஓடிப்போனார் சுட்டி https://www.vinavu.com/2010/10/19/textile/#comment-32413

      நன்றாக ஹோம் ஒர்க் செய்துட்டு விவாதிக்க வாங்கள் என்னை திட்டுவதற்கு பதிலாக

      • இந்தா தியாகு, அழுகக்கூடாது.. நான் அப்படி என்ன கேட்டுவிட்டேன்? நாங்க புரட்சி தீர்வுன்னு சொன்னா எங்களை பரிகாசிக்கிறீர்கள், அதே நேரத்தில் லெனின் சேகுவேரா படம் போட்டு உங்களை நீங்களே புரட்சியாளராக காட்டிக்கொள்கிறீர்கள் இந்த முரண்பாடு விளங்காமல்தான் புரட்சியை எப்படி செய்வதாக உத்தேசம் என்று கேட்டேன், இதில் எங்குமே நான் திட்டவில்லையே ரொம்பவே தன்மையாகத்தான் கேட்டேன்.

        நேற்று திறந்த மனதுடன் உங்களுக்கு எதாவது அமைப்பில் இணைந்து பணியாற்றுங்கள் என்று ஆலோசனை சொன்னேன், நீங்களோ அதை பஸ்ஸில் வைத்து கிண்டலிடிக்கிறீர்கள்.

        நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தேன், ஆனால் நான் உங்களிடம் கேட்ட எதற்குமே நீங்கள் பதிலளிக்கவில்லை

        உங்களை ஜென்மப்பகையாக கருத்வேயில்லை. நீங்கள் எதற்கும் பதில் சொல்லாமல் மொக்கையான கேள்வியாக கேட்டு கடுப்படிக்கிறீர்கள் என்ற வருத்தம் தான் உண்டு

        எனவே மேற்கொண்டு நாம் அரசியல் விவாதிக்க, நீங்கள் புரட்சி செய்வது பற்றிய கருத்தை சொன்னால் நிச்சயம் பலனளிக்கும்

        • ஹ ஹா உங்கள் நக்கலுக்கு நன்றி

          எனது புரட்சிகர திட்டம் எனது ஆய்வு முடிஞ்சப்புறம் தான் சொல்லமுடியும் அதுவரை பிரேக் எடுத்துகங்க கிட்காட் சாப்பிடுங்க

        • தியாகு இதுல ஒன்னும் நக்கல் நையாண்டியெல்லாம் இல்லை, ஏன் இப்படி எதிரியாகவே பாக்கறீங்க… ஒரு ஆலோசனை சொல்லுறேன் கேட்பது உங்க விருப்பம். உங்க ஆய்வு முடியிற வரைக்கும் வினவு பக்கம் வராதீங்க ஏன்னா அது உங்க ஆய்வுக்கான நேரத்தை அநியாயமாக சாப்பிடும். ஆய்வு என்று வந்து விட்டால் பஸ் டவிட்டரில் மொக்கை போடுவது கூட தப்பு. ஒரு நாளைக்கு 25 மணி நேரமும் ஆய்விலேயே மூழ்கி இருக்கனும்.

          விரைவில் ஆய்வு முடிந்து புரட்சித்திட்டத்துடன் எங்களை சந்திக்க வாருங்கள்
          வாழ்த்துகள்.

        • உங்களது இரண்டு யோசனைகள்

          1.எதாவது அமைப்பில் இருந்து பணியாற்றுங்கள்
          2.வினவு பக்கம் வராதீர்கள்

          இந்த யோசனைகளும் எனது சொந்த முடிவுக்கு உட்பட்டதுன்னு தெரிவிச்சுக்கிறேன்

          மேலும் வினவுக்கு வரும்போதெல்லாம் புரட்சிக்கான செயல் திட்டத்தை கேட்டு விவாதத்தை முடிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்

          மேலும் என்னோடு உரையாடியமைக்கு நன்றி

        • நிச்சையமா கேப்பேன் தியாகு. ஏனெனில் நீங்கள் சொல்லப்போகும் பதில் என்னவென்று தெரிந்தால் மொக்கையான கேள்விகளிலிருந்து நாங்கள் விடுபடலாம் அல்லவா? தவிர எங்கள் பதில்களை நீங்கள் படிப்பதே இல்லை அல்லது உங்களுக்கு புரிவதில்லை, அதனால் நீங்கள் ஈடுபட்டிருக்கும் உங்கள் ஆய்வைப் பற்றித்தானே உங்களிடம் பேச முடியும்.

        • எனது ஆய்வை பற்றி கேள்வி கேட்கிறீர்கள் அதாவது என்னை பற்றி ஓரளவு தெரிந்ததனால்

          எதுவுமே தெரியாத ஒரு நபரிடம் என்ன கேட்பீர்கள்

          (சும்மா இன்னுமொரு கேள்வி )

        • எதுக்கு இந்த டிஸ்கி? உங்களுக்கு கேள்வி மட்டும்தான் கேட்க தெரியும்னுதான் இன்னேரம் எல்லாருக்குமே தெரிஞ்சிருக்குமே…

          என்னைப் பொறுத்த வரை நீங்கள் கூடத்தான் எதுவும் தெரியாத நபர்… யார் தனக்கு எல்லாம் தெரியும் என்று கருதிக் கொள்கிறார்களோ அவர்கள் கற்றுக்கொள்ளும் ஆற்றலை இழந்துவிடுகின்றனர்.

          உருப்படியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து இங்கே விவாதித்த பலர் இன்று களப்பணியில் ஈடுப்ட்டு கொண்டிருக்கின்றனர்.

          • களப்பணியில் ஈடுபட்டால் ஆய்வு செய்ய முடியவில்லை
            என்பது எனது கருத்து தோழர்களோடு தொடர்ச்சியான
            விவாதத்தில் தான் இருக்கேன் ( மேலும் நான் இங்கு வருவது விவாதிப்பது தொந்தரவு என வினவு கருதினால் நான் நிறுத்தி கொள்கிறேன் தொந்தரவு படுத்தி என்ன சாதிக்க போகிறோம் 🙂

  47. வணக்கம் வினவு தோழர்கள்,

    இங்கு நலன்விரும்பி என்பவர் இட்ட பின்னூட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு
    விட்டனவோ ? அவரைத்தொடர்ந்து நானும் பின்னூட்டமிட்டிருந்தேன் அவற்றையும் கானவில்லையே ?

    • தோழர் உண்மை, பதிவுக்கு தொடர்பில்லாத விவாதமாகிப்போன மறுமொழி திரி ஒன்றை நீக்கினோம்.. அதில் உங்களுடையதும் நீக்கப்பட்டிருக்கலாம். தவறாக நீக்கப்பட்டிருந்தால் அதை மீண்டும் அளிக்கவும்

      • நன்றி தோழர் நீங்கள் கூறியது போல அந்த தொடர் பின்னூட்டத்தில் தான் நானும் இட்டிருந்தேன். ஆனால், நீக்க் வேண்டிய அளவிற்கு அவருடைய (நலன்விரும்பி) பின்னூட்டங்கள் மோசமாக இருக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. அவருக்கு பிறகு வந்த பின்னூட்டங்கள் எவ்வாறு இருந்தன என்பதை நான் வாசிக்கவில்லை, எனினும் விளக்கத்திற்கு நன்றி .

  48. சிவசிதம்பரம்
    இடதுசாரிகள் என்று நீங்கள் குறிப்பிடும் சிபிஐ அல்லது சிபிஎம் போன்ற திரிபுவாத நவீன திரிபுவாத அமைப்புகளை இன்னும் துல்லியமாகச் சொல்வது என்றால் அந்த திரிபுவாத சித்தாந்தத்தை மக்களிடம் கம்யூனிச முகமூடியுடன் பரப்புரை செய்யும் இயக்கங்களை மக்களிடம் திரைவிலக்கி காட்டுவது முதலாளித்துவக் கட்சிகளை எதிர்த்து போராடவதற்கு முன்நிபந்தனை. எதிரியை விட நம் பக்கம் உள்ள துரோகி மோசமானவன் இல்லையா.

    • ஊழல் மலிந்த அரசியல் சூழலில் பூத்த
      தும்பைப் பூ அன்னா ஹசாரே!!

      லஞ்சம், ஊழல், குற்றங்கள் எல்லாம் எங்குதான் இல்லை. உலகம் முழுதும் பரவியிருக்கிறது. என்ன! அது நம்ம நாட்டில் கொஞ்சம் ஓவர்! அவ்வளவுதான்!! என்று நியாயப்படுத்தப்பட்ட சூழலில்,

      அப்போ, இதற்கு விடிவே கிடையாதா! தடுப்பதற்கு மாற்று வழிதான் என்ன? என்ற கேள்வி நல்லவர்கள் மத்தியில் பதைபதைத்து எழுந்தபோது, எங்கு தேடினும் அதற்கான பதிலோ, வழியோ தென்படவில்லையே ஏன்?

      லஞ்சம், ஊழலை எதிர்த்து பெரிதும் அக்கறை கொள்பவர்கள் இடதுசாரிகள். ஆனால் அவர்களிடம் ஒன்றுபடும் அக்கறை, சகோதர கட்சிகளை, சங்கங்களை சகித்துக் கொள்ளும் தன்மை குறைந்து விட்டது. அங்கும், பதவி ஆசை பற்றிக்கொண்டு விட்டதோ!

      இருப்பினும், மாற்றத்தைக் கொண்டு வர உழைப்பவர்கள், என்கின்ற அடிப்படையில் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவதோடு, நாமெல்லாம் உதவிகரமாகவும் இருப்போம்!

      காந்தியவாதி திரு. அன்னா ஹசாரே அவர்கள் தனது பட்டினிப் போரை 4 தினங்கள் தொடர்ந்து நடத்தியிருக்கிறார். அந்த லோக்பால் மசோதாவின் நியாயத்தை உணர்ந்து மத்திய அரசு இறங்கி வரவில்லை. தேசம் முழுதும் ஆதரவு அலை எழுச்சியோடு எழுந்ததால் இன்றைக்கு அதை ஒப்புக் கொண்டுள்ளது.

      இதை அமுலுக்கு கொண்டு வருவது என்பதும் அவ்வளவு எளிதான காரியமல்ல. நமது தொடர்ந்த ஆதரவும், அக்கறையுடனான பரப்புரையும்தான் அம் மசோதாவை வெற்றி பெறச் செய்யும். இம் மசோதா இக் கால கட்டத்தில் மிக மிக அவசியம் என்பதை நாம் கண்டிப்பாக உணர்ந்தாக வேண்டும்!

      இதை ஆதரித்து பேசுகின்ற அதே நேரத்தில், நம் நாட்டில் இது சாத்தியமில்லை, இதை சட்டம் போட்டெல்லாம் மாற்ற முடியாது. எவன் ஆட்சிக்கு வந்தாலும் இப்படித்தான் நடக்கும் என்கிற அபஸ்வரங்களும் ஒலிக்க ஆரம்பிக்கும், அவைகளை சட்டை செய்யாதீர்கள்.

      பொதுவாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் பலருக்கு இவ் விஷயங்களில் அக்கறை இருக்காது. இவர்களும் வேதாந்தம்தான் பேசுவார்கள். இன்னும் சிலர், அக்கறை காட்டுவார்கள், ஆனால் செயல்பட மாட்டார்கள்.

      அப்போ யார்தான் இதில் அக்கறை காட்டுவார்கள்? என்று யோசிப்பதை விட யாரால் இவ் விஷயத்தில் பொறுப்பாக இருந்து செயல்பட முடியும் என்று யோசித்தால், நம்மைப் போன்ற நடுத்தர – தொழிலாளி வர்க்கத்தால் நிச்சயம் முடியும் என்பது புலனாகும். ஆனால், நடுத்தர வர்க்கம் சின்னஞ் சிறிய அல்லது சில்லறைத்தனமான ஊழல்களில் ஆட்படுகின்ற காரணத்தால், அவைகளின் போர்க்குணம் மழுங்கடிக்கப்படுகிறது.

      எனவே, பெரும்பான்மையாகவும், தாங்கும் சக்தியும் உள்ள நம்மால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நிலைப்பாடு இருக்கின்றபோது, நாம் அவைகளிலிருந்து விடுபடுவது நல்லதுதானே! இனி விடுபடத் துவங்குவோம்!!

      நம்மால் முடியாதது யாராலும் முடியாது என்று நினைக்க வேண்டாம். அவர்களாலேயே முடியும்போது, நாம் ஏன் இந்த அற்பமான வாழ்க்கையை வாழ்கிறோம் என்ற எண்ணத்தை பலருக்கு இத் தன்மை தோற்றுவிக்கும்.

      இந்த எண்ணத் தோன்றலே முதல் வெற்றி.

      தோழமையுடன்,
      எஸ். சிவசிதம்பரம்,
      பட்டுக்கோட்டை.

      • எனக்குத் தெரிய இந்தியாவில் பெரிய ஊழல் என்பது எல்பிஜி தான். அதனை எதிர்க்க அன்னா ஹசாரே முன்வந்திருந்தால் அதனால் ஆதாயம் அடைந்த பெரும் முதலாளிகள் எப்படி 82 லட்சம் ரூபாய் அவரது அமைப்புக்கு நன்கொடையாக தந்திருப்பார்கள். ஒருவேளை இந்தப் பெரிய ஊழலைக் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் அவருக்கு இந்தப் பணமா ?
        அடுத்து சிபிஎம் சிபிஐ உடன் எப்படி கம்யூனிசத்தை நேசிப்பவர்கள் உறவாட முடியும் என்பதை நேர்மறையாகவாவது விளக்குங்கள்.

  49. வலைத்தளத்தின் புதிய “கெட்டப்” நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  50. வியாபாரிகளின் பிடியில் சிக்கித் தவிக்குது அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்

    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=228783

    விருத்தாசலத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருக்கோவிலூரில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் நடக்கும் கொள்ளைகளை தட்டிக்கேட்க வி.வி.மு வினர் யாரும் அந்த ஊரில் இல்லையா?

  51. வாழ்த்துகள். அருமை.
    //அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டத்தையே மாபெரும் புரட்சியாக உச்சி மோந்து மெச்சிய அம்பிகள் இந்தக் கட்டுரையை மனப்பாடம் செய்து படிக்கட்டும்…//
    இது தேவையற்றது…

Leave a Reply to rammy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க