“ஒருபுறம் இந்தியா ஒளிர்கிறது என்றும் தொழில்துறையில் அபார வளர்ச்சி என்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகட்டான விளம்பரங்கள் – உலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற வீரர்களுக்கு சில கோடிகளை மாநில அரசுகள் அறிவித்ததன் மூலம் தேச நலனுக்கு வித்திட்டதாக படாடோப செய்திகள் – மறுபுறம் குறிப்பாக ஊடகங்கள் குஜராத்தைப் பார் ! மோடி அரசின் வளர்ச்சியைப் பார்!! என தம்பட்டங்கள் வேறு. ஆனால் உலகமயமாக்கல் விளைவினால் விவசாயம் அழிந்து, வாழ வழிதேடி மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து குஜராத்திற்கு வரும் ‘கூலி’ தொழிலாளிகள் ‘சிலிக்கோசிஸ்’ என்ற அபாயகரமான உயிர்க்கொல்லி வியாதியினால் தாக்குண்டு தெரிந்தே, தடுக்க இயலாமல் “சாவை” வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதை இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது”
(இடது) சிலிக்கோசிஸ் வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி புத்தா மற்றும் அவரது 16 வயது மகள் காம்மா (மற்றும்) சிலிக்கான் துகள்கள்
(வலது) குஜராத் பலசினோர் மாவட்ட சிலிக்கான் பாறை நொறுக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி நோய் தாக்கிய ஒரே வருடத்தில் எலும்புக்கூடாக காட்சி தரும் 20 வயது சனோ.
மெதுவாக ஆனால் கண்டிப்பாக இந்த தொழிற்சாலையினால் “சாவு” எங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்த போதிலும், அதைத் தடுக்க இயலாது என்கிறார் மத்திய பிரதேச அலிராஜ்பூர் மாவட்டம், உண்ட்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த புத்தா என்கிற 45 வயது விவசாயி வேதனையோடு. சமீபத்தில் இவரது 18 வயது மகனை ‘சிலிக்கோசிஸ்’ என்ற உயிர்க்கொல்லி நோயினால் இழந்துள்ளார் என்பதுடன், இவரின் 16 வயது மகள் காம்மா இன்னும் அந்த நோயுடன் போராடிக்கொண்டுள்ளார் என்கிற உண்மை நம்மை சுடுகிறது.
குஜராத்தில் சிலிக்கன் (குவார்ட்ஸ்) பாறையை உடைத்து தூளாக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதற்கு அருகிலுள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் அலிராஜ்பூர், தர் மற்றும் தாபுவா மாவட்டங்களிலிருந்து பிழைப்பு தேடி புலம் பெயர்ந்து வரும் கூலித் தொழிலாளர்கள் வேலைக்காக ஒப்பந்த காரர்களால் அழைத்து வரப்படுகின்றனர்.
இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் காற்றோடு கலக்கும் சிலிக்கன் துகள்களை தினமும் பணியின் போது 8 முதல் 12 மணிநேரம் சுவாசிக்கின்றனர். இதன் மூலம் மூச்சுத் திணறல், கடுமையான இருமல் போன்ற வியாதிகள் துவங்கி, கண்டிப்பான இறப்பை நோக்கி இவர்களை அழைத்துச் செல்கிறது.
தொழில்வழி உடல் நல பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யும் தேசிய பயிற்சி மையம், குவார்ட்ஸ் கடிகாரம் போன்றவற்றிற்கு பயன்படக்கூடிய இந்த சிலிக்கான் பாறை துகள்கள் இங்கு பணிபுரிகிற அனைவருக்குள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கிறது. இந்த நோய் தாக்கியிருப்பதை சில மாதங்கள் ஏன் சில வருடங்கள் சென்ற பின்தான் வெளித்தெரிய வருகிறது. இந்த நோய் தனிநபரை மட்டும் பாதிக்காமல், குடும்பத்தில் உள்ள அனைவரையும் தாக்குகிறது. இந்த உயிர்க் கொல்லி நோயைப் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுவரும் ஷிப்பி கேந்திரா என்ற அமைப்பு அலிராஜ்பூர், மற்றும் தர் மாவட்டங்களைச் சேர்ந்த இந்நோயினால் பாதிக்கப்பட்ட 105 குழந்தைகளை தத்து எடுத்து பராமரித்து வருகிறது.
இந்த அமைப்பு வெளியிடும் விபரங்களின்படி 2010ல் மட்டும் அலிராஜ்பூர், தாபுவா, தர் மாவட்டங்களைச் சேர்ந்த 386 நபர்கள் இறந்துள்ளனர், 724 நபர்கள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. அரசின் பல்வேறு அமைப்புகள் தெரிவிக்கும் புள்ளி விபரங்கள் 238 நபர்கள் இறந்துள்ளனர் எனவும், 304 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கிறது. அலிராஜ்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பதிவுகளின்படி அந்த மாவட்டத்தில் மட்டும் 277 இறப்புகள் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
ஒவ்வொரு வருடமும், விவசாய பணி குறைவாக இருக்கும் மாதங்களில் ஆயிரக்கணக்கிலான பில் என்றும் பிலல்லா என்றும் அழைக்கப்படும் பழங்குடியின விவசாய கூலி தொழிலாளர்கள் மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர், மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து குஜராத்தின் கோத்ரா, மற்றும் கேடா மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி வருகின்றனர். ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குஜராத்தை சேர்ந்தவர்கள் இந்த அபாயகரமான தொழிற்சாலை தொழிலுக்கு வர மறுத்ததால், பிற மாநில, மாவட்டங்களிலிருந்து புலம் பெயரும் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தி பணி வாங்குவது என்ற நிலை துவங்கியிருக்கிறது.
குஜராத்தில் இது போன்ற தொழிற்சாலைகளுக்கு குஜராத் தொழிலாளர்களை வரவழைக்க முடியாத ஒப்பந்தகாரர்களுக்கு, விவசாயம் பொய்த்துப் போய் இது போன்று அருகிலுள்ள மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து வரும் கூலித் தொழிலாளர்களால் வாழ்வு வளமானது என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு வரும் தொழிலாளர்கள் கோத்ரா, மற்றும் பலசினோர் மாவட்டங்களில் உள்ள சிலிக்கான் பாறை உடைப்பு தொழிற்சாலைகளில் வேலை செய்ய பணிக்கப் பட்டனர். இவ்வாறு தொழிலாளர்கள் புலம் பெயர்தல் என்பது அருகிலுள்ள தாபுவா, தர் மற்றும் பரவானி மாவட்டங்களிலிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிவதென்பது சாவை நோக்கி அழைத்துச் செல்லும் என்று தெரிந்தே ஏன் தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர்?
பழங்குடியினர் மிகுதியாக வசித்து வரும் அலிராஜ்பூர் மாவட்டத்திற்கும் அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அனைவருமே பரம்பரையாக மேற்கொண்டு வந்த, வாழ்வாதாரமான விவசாயம் அழிந்து போனதால் பசியை முன்னிட்டு புலம் பெயர்ந்து வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு வந்த கோபால் என்கிற 20 வயது தொழிலாளி சொல்கிறார், இந்த வேலை எளிதானது. ஒரு சணல் சாக்கில் உடைத்த துகள்களை நிரப்பினால் ரூ 1.50 லிருந்து 2.00 வரை கூலியாக கிடைக்கும், நாங்கள் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு நாளைக்கு 600 முதல் 700 சாக்குகளை நிரப்ப முடியும் என்கிறார் அவர். மேலும் இந்த பணி என்பது மற்ற கட்டிட பணிகள் போன்ற கடுமையான பணிகளோடு ஒப்பிடுகையில் எளிதாக உள்ளது என்கின்றனர் அப்பாவி தொழிலாளர்கள். எனினும் உயிர்க்கொல்லியான வியாதி பீடிக்கிறது என்பது பல மாதங்கள் கழித்துத்தான் சிரமப்பட்டு மூச்சு விடுதல், நடக்க முடியாமல் இரைப்பது, எடை குறைவது போன்ற சில அறிகுறிகளின் மூலம் இவர்களுக்கு தெரியவருகிறது.
உண்ட்லி கிராமத்து மக்கள் திடீரென தங்கள் மாவட்டத்தில் பலர் உயிரிழந்ததினாலும், குறிப்பாக இள வயதினர் உயிர் இழந்ததும், பலர் நோயினால் பாதிக்கப்பட்டது தெரிந்ததும் அனைத்தும் இந்த தொழிற்சாலையின் பணியினால்தான் என்பதை உணர்ந்தனர். குறிப்பாக சில இறந்தவர்களின் உடலை எரித்த போது, உடம்பின் அனைத்து பகுதியும் எரிந்து நெஞ்சுப்பகுதி மட்டும் எரியாமலிருந்தது கண்டு, அதை அறுத்துப்பார்த்தால் நெஞ்சு முழுவதும் மேற்படி பாறைகளின் வெள்ளைத் துகள்களால் நிரம்பியிருப்பதை கண்டவுடன் நோயின் அபாயத்தை முழுவதுமாக உணர்ந்தனர் என்கிறார் இந்த கிராமத்தின் தலையாரியான ஷர்மிளா என்பவரின் கணவர் கேசர்சிங்.
அதிலிருந்து அபாயத்தை உணர்ந்த எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த தொழிலுக்கு செல்வதை தவிர்த்து வருகிறோம் என்கிறார் ஷர்மிளா. ஆனால் இந்த உணர்தலுக்கு முன்பாகவே பாதிப்புகள் என்பது பலருக்கு ஏற்பட்டுவிட்டது. பத்திரிகை நிருபரோடு பேசிய மேற்படி கோபால் 500 மீட்டர் தொலைவு நடப்பதற்குள் மூச்சு வாங்குகிறார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம் என்பது இந்த மாவட்டங்களில் திறம்பட செயல்படவில்லை. மேலும் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை தவிர்த்துவிட்டு இந்த தொழிற்சாலையை கூலித் தொழிலாளர்கள் தேடுவதற்கு முக்கியமான காரணம் இந்த தொழிற்சாலையில் உடனுக்குடன் கூலி கிடைக்கிறது என்ற காரணத்தினால்தான். அலிராஜ்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அசோக் தேஷ்வால் தெரிவிக்கையில், இந்த தொழிற்சாலை பாதிப்பினால் 277 நபர்கள் இறந்துள்ள போதிலும், குறுகிய காலத்தில் பணம் பார்க்க முடியும் என்ற ஆவலே கூலித் தொழிலாளர்களை இந்த மாவட்டத்திலிருந்து குஜராத்தை நோக்கி ஈர்க்கிறது என்கிறார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், நாங்கள் பல விழிப்புளர்வு முகாம்களை நடத்தியுள்ளோம். பலருக்கு அரசின் திட்டமான தீன்தயாள் அந்த்யோதய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சையும் சிலருக்கு பென்சனும் கொடுத்துள்ளோம் என்றார். தவிர 10 நபர்களுக்கு மேல் சொந்த தொழில் துவங்குவதற்காக ரூ 2 லட்சம் வரை உதவித் தொகைகள் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
ஆனால் சாதனைகளாக சொல்லிக்கொள்ளப்படும் அரசின் இந்த செயல்பாடுகள் அரைமனதுடன் செய்வதாகவே எதார்த்தமாக தெரியவருகிறது. விழிப்புணர்வு என்பதற்காக அரசின் சார்பாக பெரிய அளவில் பேனர்களோ, சுவற்று விளம்பரங்களோ மாவட்ட தலைநகர்களில் கூட காணப்படவில்லை. மேலும் சொல்லக்கூடிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்பதில் சிலிக்கோசிஸ் என்ற வியாதிக்கான மருத்துவம் என்பது சேர்க்கப்படவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது.
மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை ஆணையாளர் டாக்டர் மனோகர் அக்னானி பிரச்சனை மிக மோசமானதும் கடுமையானதும் ஆகும் என ஒப்புக் கொள்கிறார். மேலும் அவர் தெரிவிக்கையில் “மாவட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து தீர்விற்கான ஆலோசனைகளை வழங்க கேட்கப்பட்டுள்ளனர். அதே போல் அரசு சார்பில்லா நிறுவனங்கள் சிலவற்றிடமும், தீர்விற்கான ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது, அவை பெறப்பட்டவுடன் எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிப்போம்” என்கிறார்.
கடந்த நவம்பரில் தேசிய மனித உரிமை ஆணையம் குஜராத் அரசிடம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலிக்கோசிஸ்-னால் பாதிக்கப்பட்ட 238 குடும்பங்களுக்கு தகுந்த நஷ்ட ஈடு ஏன் வழங்கப்படவில்லை என காரணம் காட்டக் கோரும் அறிவிப்பை சார்பு செய்துள்ளது. ஆனால் அதன் மீதான நடவடிக்கை என்பது அரசு அலுவலக சிவப்பு நாடா கோப்பு முறையினால் கட்டுண்டு நடவடிக்கையின்றி இருப்பதாகவே தெரிகிறது.
தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் குஜராத் மத்திய பிரதேச மாநிலங்களில் தாவாக்கள் அதிகரிக்க துவங்கியது. தற்போது மாநில அரசு பல்வேறு அதிகார அமைப்புகளுடன் இழப்பீடு வழங்குவது தொடர்பாக கடிதப் போக்குவரத்துக்கள் நடத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் எதுவும் முடிந்தபாடில்லை என்கிறார் குஜராத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் (தொழிலாளர்) டாக்டர் வரேஷ் சின்ஹா. தேசிய மனித உரிமை ஆணையம் இந்த சிலிக்கோசிஸ் இறப்புக்களை மிகவும் கடுமையாக பார்த்ததுடன், புதுடில்லியில் சிலிக்கோசிஸ் தொடர்பான மாநாடு ஒன்று நடத்தி, ராஜஸ்தான் அரசின் மூலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூ 1 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிகார வரம்புள்ளவர்களான தொழிலாளர் துறை, மருத்துவத்துறை அல்லது சமூக நலத்துறை எதுவாக இருக்கட்டும், அவர்கள் இந்த சிலிக்கோசிஸ் என்ற உயிர்க்கொல்லும் நோயிலிருந்து அப்பாவி தொழிலாளர்களை காப்பதற்கு உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். இல்லையெனில் கோடி கோடியாக கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு கொட்டிக் கொடுப்பதினால் இந்த உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் ஒருவர் கூட திரும்பப்போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.
இந்த தொழிற்சாலையின் பணிநிலை என்பது மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதன் தொழிலாளர்களை உயிர்பலிவாங்கும் இந்த அபாயத்திலிருந்து காக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும் என்கிறார் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் திரு பி.சி.சர்மா.
_________________________________________________________
நன்றி- தி இந்து நாளிதழ் (16-04-11) மற்றும் செய்தியாளர் திரு மஹிம் பிரதாப் சிங்
தமிழில் – சித்ரகுப்தன்
__________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்:
- நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி!
- அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை!
- தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !!
- நோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ !!
- நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!
- சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!!
- வளைகுடா ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளர்கள் ! நேரடி ரிப்போர்ட் !!
- பாண்டிச்சேரி கெம்பாப் கெமிக்கல் ஆலை: காத்திருக்கும் மற்றுமொரு போபால் விபத்து?
- மதுரையில் தடை செய்யப்பட்ட இராசயனங்கள் தயாரிப்பு ! அதிர்ச்சி ரிப்போர்ட் !!
- பன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள்!
- சத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை, ஒரு தொழிற்சங்கம் உருவான கதை
- ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!
- ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!
- இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !
- கான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!
- வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை !
- உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம்!!
- “சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி! உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி!”
- அரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் !!
- கூலித்தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா? இலாப வெறியா?
- கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!
குஜராத்தின் வளர்ச்சிக்காக கொல்லப்படும் மத்தியப் பிரதேச தொழிலாளர்கள் ! | வினவு!…
மோடியின் குஜராத் பெருமையுடன் அளிக்கும் சாதனை ! சிலிக்கன் பாறையை உடைக்க வரும் ஏழை தொழிலாளர்கள் கொடூரமான நோயினால் கொலை !!…
முதல்ல தமிழக தொழிலாளர்களின் வாழ்க்கை சீர்பட பார்ப்போம் வினவு. பிறகு பிறர் குதித்து அக்கறை படுவோம். பிற மாநில தொழிலாளர்களால், தம் வாழ்க்கையை இழந்திருக்கும், தமிழகத்தின் பல்வேறு தொழில் மற்றும் தொழிலாளர்களை பற்றி எழுதுங்க. அப்படி எழுதி, நம் செயல்பாடுகளால் ஒரு சிறு துரும்பையேனும் நகர்த்த முடிந்தால் தான் நம்மை ஜனங்கள் நம்புவாங்க. இல்லேன்னா எழுதிட்டே இருக்க வேண்டியது தான். வட மாநிலத்தவன், நம்மை சுரண்டும் போது, நம் வளத்தை அபகரித்து, நம் தொழிலாளர்களின் வாழ்க்கையை கேளவி குறியாக்கும் போது – இன்னொரு சுரண்டலை பற்றி எழுத என்ன அவசியம் வந்தது.
இந்த தலைப்பை மட்டும் படிச்சிட்டு பின்னூட்டம் போடும் அறிவா(வி)லிகள் தொல்லை தாங்கலப்பா. நல்லதம்பி, இத்தனை மாசாமா நீர் வினவில் பின்னூட்டம் போடும் லட்சணம் இப்பத்தான் தெரியுது. கொஞ்சம் கீழே தொடர்புடைய பதிவுகள் பட்டியலை பாத்துட்டு உம்ம பின்னூட்டத்தை எச்சி தொட்டு அழியும்.
பிற மாநில தொழிலாளர்களால், தம் வாழ்க்கையை இழந்திருக்கும், தமிழகத்தின் பல்வேறு தொழில் மற்றும் தொழிலாளர்களை பற்றி எழுதுங்க/////////////////////////////
ஓஹோ அண்ணன் பால் தாக்கரே, ராஜ் தாக்கரே வாரிசு போலிருக்கு. அண்ணே நம்ம நாட்டு தொழிலாளி – விவசாயிக்கு ஆப்பு வைப்பது அடுத்த மாநில தொழிலாளியா இல்லை பன்னாட்டு முதலாளியா? விவசாயம் காலியாகி தமிழகத்திலிருந்து தென்னிந்தியா முழுக்க வேலை தேடி போற தமிழக தொழிலாளர்களையும் அந்தத்த மாநிலதின் நல்லதம்பிகள் அடிச்சி விரட்ட சொன்னா அதுக்கும் சந்தோசப்படுவீங்களோ திருவாளர் தயிர் தாக்கரே அவர்களே?
எல்லா துறையிலும் கடுமையான சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் சரியாக நடக்கின்றதா என்பதை உறுதிப்படுத்தப்படவேண்டும். தவறு என்கிற போது பாரபட்சம் காட்டப்படாமல் குற்றவாளிகளை அவர்கள் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடிய, சுற்றுச் சூழலை மாசுபடுத்தக்கூடிய வகையில் உள்ள தொழில் கூடங்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் மூட ஆவன செய்யப்பட வேண்டும்.
மேலே உள்ளவற்றை படிக்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கு சித்ரகுப்தன். இந்தியாவில் சாத்யமா? நண்பர் அதியமான தொடர வேண்டுகின்றேன்.
நண்பர் அதியமான தொடர வேண்டுகின்றேன்.///////////
செஞ்சீனாவில் நடக்காத தொழிலாளர் விபத்துக்களா?
சோவியத் குலாக்கில் நடக்காத தொழிலாளர் மரணங்களா?
பாரிஸ் கம்யூன் போது நேராத அவலமா?
ரோம சாம்ராஜ்யத்தில் கிளாடியேட்டர் விளையாட்டில் இறக்காத்தவர்களா?
எகிப்து பிரமிடு கட்டும் போது நேராத மரணமா?
பைபிளில் கூட மக்கள் பேரழிவில் இறந்தது குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எனது ஆராய்ச்சியின் மூலம் மில்கிவேயின் பல கிரகங்களில் கூட இப்படி நிகழ்வதாக அறிகிறேன். இது எல்லாவற்றுக்கும் காரணமான சோசலிசமே மனித குலத்தில் முதல் எதிரி
– அதியமானின் ஆல்டர் ஈகோ
பி.கு – இதை சொல்றதுக்காக அதியமான் வரணுமா ஜோதிஜி? இத்தன வருசமா அவர் இதத்தானே சொல்றார்
அதியமான் டெம்பிளேட் பின்னூட்டம் நம்பர் 2 —
இது போன்ற சூழலுக்கு காரணமே ஜவஹர்லால் நேருவின் சோசலிச கொள்கைதான். அது மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் குஜராத்தில் குவாட்ஸ் குவாரிகளின் கூலிகளுக்கு நோய் பிடித்த்தற்கு பதிலாக பேய் பிடித்திருக்கும்.
இதைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள்
http://indhapudilinku.com
http://innorulinku.com
இது தொடர்பாக கிமு மூன்றாம் நூற்றாண்டில் நான் எழுதிய பதிவு
http://appdiyaeensitukkumoruvilambaram.com
http://nellikaioorukai-blogspot.com
@ஜோதிஜி
எப்பவும் மோடிக்கு ஜால்ரா அடிக்கர ஆள்
இன்னைக்கு வினவுல ஒண்ணும் சொல்லல?!!
நீங்கள் இராம் காமேஷ்வரனையா அழைத்தீர்கள்?
மோடியோஃபோபியா என்ற வியாதியால் கடுமையாக பீடிக்கப்பட்டிருக்கும் வினவின் சில தீவிர வாசகர்களுக்கு,
தொழிற்சாலை ஆபத்துக்கள் பல தொழில்களிலும் உள்ளது. கட்டுமான தொழிலில் மேலேயிருந்து விழும் அபாயம் இருக்கிறது, சுரங்கங்களில் மண்சரிவு, தண்ணீர் புகுதல் போன்ற அபாயம் இருக்கிறது, அணுசக்தி நிலயங்களில் கதிர்வீச்சு அபாயம் இருக்கிறது, அதேபோலத்தான் நுண்துகள் (dust) சிலிகா அபாயம் குவார்ட்ஸ் அரைக்கும் தொழிலில் இருக்கிறது.
ஹிந்து கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் சரியானவைதான். ஆனால் NIOH வலைத்தளத்தில் ஆபத்தானது (hazardous) என்று இருப்பதை “பத்திரிகை தர்மம்” கருதி “மரணம் விளைவிக்கக் கூடிய” (deadly) என்று எழுதியிருப்பது தினத்தந்தி சதக் சதக் என்று குத்தினான் வகையறா தான்.
http://www.nioh.org/niohachiveprodustcontech.htm
Quartz Crushing Industry:
Quartz grinding is one of the most hazardous occupations causing exposure to almost 100% free silica leading to silicosis in a matter of few months. NIOH scientists identified the sources of dust generation and recommended appropriate dust control measures like, enclosure of dust source, use of powerful exhaust and humidification of work environment. After implementation of these control measures, the industrial hygiene survey showed that the reduction in the total and respirable air borne dust levels, in the six factories studied previously, ranged from 80 to 96%. Under one of the programmes sponsored by the Ministry of Health and Family Welfare, Govt. of India, NIOH will take up National Programme on Elimination of Silicosis in which the problems of stone grinders and stone cutters are going to be the major areas of intervention.
குஜராத்தில் உள்ளூர் வாசிகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடாமல் இருப்பது மோடியின் வெற்றியைத்தானே காட்டுகிறது. மத்திய பிரதேசத்தையும் பா.ஜ.க தானே ஆள்கிறது அதன் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் சரியில்லை, தனது மாநில மக்கள் உள்ளூரில் பிழைக்க வழியில்லாமல் குஜாராத்துக்கு சென்று ஆபத்தான தொழிலில் ஈடுபடுவதை தடுக்கவில்லை என்று குற்றம் சொன்னாலாவது பொருத்தமாக இருக்கும்.
குஜராத் – சாவு என்ற இரண்டு சொற்களும் ஒரே கட்டுரையில் வந்து விட்டால் வினவுக்கு ஒரே கொண்டாட்டமாகி விடுகிறது. கூடவே மோடியின் பெயரையும் சேர்த்து விடவேண்டும் என்பதில் வினவு காட்டும் வேகம் பிரமிக்க வைக்கிறது.
இந்திய தொழிலாளிகள் சுரண்டப்படுவதையும், சுகாதாரமற்ற, உயிருக்கு ஊறு விளைவிக்கும் சூழலில் வேலை செய்வதையும், காண்டிராக்டர்களின் கொடுமையையும் எதிர்ப்பதை விட்டு விட்டு “மோடி எதிர்ப்பு” என்ற ஒற்றை இலக்கை ஏற்படுதியிருக்கும் “மோடி வசியம்” – சும்மா சொல்லக்கூடாது, நல்லாவே வேலை செய்யுது.
மிஸ்டர் ராம் காமேஸ்வரன்,
//குஜராத்தில் உள்ளூர் வாசிகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடாமல் இருப்பது மோடியின் வெற்றியைத்தானே காட்டுகிறது. //
ஆஹா இது அற்புதமான வாதமாயிருக்கிறதே?
தன் மாநில மனித உயிர் சற்று விலை கூடுதல், மற்ற மாநில மனித உயிர் சற்று விலை குறைவோ? யாராயிருந்தாலும் அடிப்படை சுகாதார வசதிகள், இது போன்ற அபாயகரமான தொழிலில் மருத்துவ வசதி, பாதுகாப்பு சாதனங்கள் தருவது போன்ற பணிகளை எந்த மாநில முதல்வர் செய்ய வேண்டும்?
சிலிகோஸிஸ் பிரச்சனை குவாட்ஸ் அரைக்கும் போது மட்டும் ஏற்படுவதில்லை. அகேட் போன்ற மணிக்கற்களை கையாளும் போது ஏற்படும் தூசியினாலும் கூட உண்டாகும். குஜராத்தில் உள்ள Cambay யில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பல தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதை இந்த வீடியோவில் பார்க்கவும்.
http://www.youtube.com/watch?v=VW7Xk5VBwao
Occupational Hazard என்ற தொழில்முறை அபாயங்களை மக்கள் உணரத் துவங்கும் போது பாதுகாப்பு உபகரணங்களை பயன் படுத்துவது, தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க செய்வது போன்ற விழிப்புணர்வு அதிகமாகிறது. இத்தனை பேர்கள் இருமவதைப் பார்த்த பின்னும், இறப்பதை பார்த்த பின்னும் இந்த கிராமங்களிலிருந்து இந்த வேலைக்கு யாராவது போவார்களா?. இந்த பாக்டரிகளில் ventilation போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் அமல் படுத்தப்பட்டு விட்டதா என்பதை ஏன் எந்த பத்திரிகையாளரும் விசாரித்து எழுதவில்லை?
நோக்கியாவில் அம்பிகாவின் மரணத்துக்குப் பின் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதைப் பற்றி வினவு ஏன் விசாரித்து எழுதவில்லை? நல்ல விஷயமாக இருந்தால் TRP கிடைக்காதே.
மேற்கு வங்கத்திலிருந்து இளைஞர்கள் வேலை தேடி வெளியேறும் அவலத்தைப் பற்றி ந.மோ வின் வலைப்பக்கத்தில் பார்க்கவும்.
http://narendramodi.in/news/news_detail/1312
//சிலிகோஸிஸ் பிரச்சனை குவாட்ஸ் அரைக்கும் போது மட்டும் ஏற்படுவதில்லை. அகேட் போன்ற மணிக்கற்களை கையாளும் போது ஏற்படும் தூசியினாலும் கூட உண்டாகும். குஜராத்தில் உள்ள Cambay யில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பல தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதை இந்த வீடியோவில் பார்க்கவும்.
http://www.youtube.com/watch?v=VW7Xk5VBwao
Occupational Hazard என்ற தொழில்முறை அபாயங்களை மக்கள் உணரத் துவங்கும் போது பாதுகாப்பு உபகரணங்களை பயன் படுத்துவது, தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க செய்வது போன்ற விழிப்புணர்வு அதிகமாகிறது. இத்தனை பேர்கள் இருமவதைப் பார்த்த பின்னும், இறப்பதை பார்த்த பின்னும் இந்த கிராமங்களிலிருந்து இந்த வேலைக்கு யாராவது போவார்களா?. இந்த பாக்டரிகளில் ventilation போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் அமல் படுத்தப்பட்டு விட்டதா என்பதை ஏன் எந்த பத்திரிகையாளரும் விசாரித்து எழுதவில்லை?//
நல்ல விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள் ராம். முதலில் இது போன்ற கட்டுரைகள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முதல் முயற்சியே. வினவு தளம் trp rating ற்காக கட்டுரைகள் எழுதுவதில்லை. நிச்சயமாக இந்து போன்ற பத்திரிக்கையிலும் செயலாற்றுகிற நல்ல சிந்தனையுள்ள செய்தியாளர்கள் இதை பார்வையிட்டார்களென்றால் கண்டிப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் அந்த தொழிற்சாலைகளில் எவ்வாறு உள்ளது என்பதை விசாரித்து எழுதுவார்கள். தாங்கள் தெரிவித்திருக்கும் வீடியோ காட்சியை இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதிய திரு மஹிம் பிரதாப் சிங் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சி எடுத்துள்ளேன்.
மற்றபடி ஒரு மாநில முதல்வர் அடுத்த மாநில முதல்வரை விமர்சனம் செய்வதென்பது, இந்த சாக்கடை ஓட்டுக் கட்சி அரசியலில் சகஜமே. அதன் காரணமாக மேற்குவங்கத்தின் தவறுகளை நான் ஆதரிப்பதாக அர்த்தம் இல்லை.
மிஸ்டர் ராம்,
நீங்கள் சுட்டிக்காட்டியிருப்பதும் குஜராத்தின் தொழிலாளர் இழிவு நிலையைத்தான். இன்னும் ஒரு படி மேலாகச் சொன்னால் குழந்தைத் தொழிலாளர் அவலத்தையும் சேர்த்து படம் பிடித்து காண்பிக்கிறது
அப்ப நீ வினவோட ஜால்ராவா…..
இது இந்தியாவில் உல்ல அனைது மானிலஙலிலும் உல்ல பிரஷனை தான்…ஹிந்து கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் சரியானவைதான். ஆனால் உமது உல்னோக்கம் மோடியை டாக்குவது மட்டும் தான்…சொந்த மானிலத்தில் வேலை இல்லை என்ரால் அவன் வெலி மானிலத்திர்க்கு அதுவும் ஆபத்தான வேலையாக இருந்தாலும் அதர்க்குத்தான் போவான்..இஙே நம்ம வோர்ல இருந்து ஆந்திர கல் குவாரிகலில் கச்டப்படும் சிருவர்கலும் இருக்கிரார்கல்..
இந்தியாவிலெ வளர்ஷியில் முதல் மாணிலமாகத் திகழும் குஜராத்தை பாராட்ட லட்ஷம் காரனஙல் உனடு…..அது உமக்கு நட்ராகவெ தெரியும் ஆனால் இது போல ஹிந்து(இதுக்கு மட்டும் ஹிந்து வேனுமா வினவு தம்பி)கப்பி அடித்து உமது____________________________ .
**நான் ஏர்க்கனவே சொன்னது போல் உமது பழய தயிர் சாதக் கட்டுரைகலுக்கு ரஜினி, மொடி, ஹிந்துத்துவ எதிர்ப்பு மட்றும் போலி முர்போக்கு போன்ர ருசியான வூரகாய்கல் வேன்டும்…ஆவஙல திட்டித் திட்டிய நல்லா பொழ்ப்பு ஓடும் உமக்கு**
உலா ல ல … உல் லே லே.. உலா ல ல …
கூரை ஏறி கோழி புடிக்க வக்கிலாத [obscured] குஜராத் போயி ம.பி தொழிலாளர்களைப் பற்றி பேசவந்துட்டானுங்க..
ஒக்காந்த எடத்தவிட்டு நகராம புர்ச்சி பண்ணிட்டு இருந்தா [obscured] டா..எழுந்திருச்சு போயி ஓடியாடி வேலையப்பாருங்க டா…
அதிகபிரசங்கிமான்
பெயருக்கேற்ப இல்லாமல், கட்டுரையின் கீழே தொடர்புடைய பதிவுகள் என்பதில் பல சந்தர்ப்பங்களில் தமிழ்நாடு உள்ளிட்ட பல அபாயகரமான தொழில்களைப் பற்றி எழுதிவந்திருப்பதை படித்துப் பாருங்கள். தேவையானபோது அத்தகைய தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களை அணிதிரட்டும் பணியையும் செய்து வந்திருக்கிறது வினவு மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள்
மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை ஆணையாளர் டாக்டர் மனோகர் அக்னானி பிரச்சனை மிக மோசமானதும் கடுமையானதும் ஆகும் என ஒப்புக் கொள்கிறார். மேலும் அவர் தெரிவிக்கையில் “மாவட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து தீர்விற்கான ஆலோசனைகளை வழங்க கேட்கப்பட்டுள்ளனர். அதே போல் அரசு சார்பில்லா நிறுவனங்கள் சிலவற்றிடமும், தீர்விற்கான ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது, அவை பெறப்பட்டவுடன் எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிப்போம்” என்கிறார்.
What is the next level action? Contact the person who owns that and get bribe. That’s all !!!
‘சிலிக்கோசிஸ்’ சிற்பங்கள்…
என் மகளே காம்மா,
நீ
பசித்திருந்தாலும்
காற்றைச் சுவாசித்தாய்;
மத்தியப் பிரதேச வாசத்தில்.
ஆனால் அந்தோ…
சோறு தேடி வந்த இடத்தில்
சோற்றையும் இழந்தாய்;
குஜராத்துக் குடியேற்றத்தால்
சுவாசிக்கும்
காற்றையும் இழந்தாய்.
குஜராத் –
உன் உழைக்கும்
சதைகளையுமல்லவா
சுரண்டித் தின்றுவிட்டது?
மகளே காம்மா,
முதலாளிகளுக்கேயான
சொந்த ஊர்
குஜராத்.
இதன் விளம்பரப்படுத்தப்பட்ட
வெளிச்சத்தில்
விட்டிலாய் வந்து
விழுந்துவிட்டாய் மகளே…
இந்திய ஒளிர்வில்
உன் முகம் தெரியவில்லையென்றா
உன் முகம் காட்ட
குஜராத் வந்தாய்?
இதோ…
கொழுப்பில் எரியும்
கொள்ளிக் கட்டையால்
நன்றாகவே உன் முகம்
ஊர் முழுதும்
வெளிச்சம் போட்டு
காட்டப்பட்டுவிட்டது.
அதோ…
அங்கே ஒரு ஏழை.
பெயர் அன்னா அசாரே.
வெறும் இரண்டரை இலட்ச ரூபாயில்
கஞ்சத்தனமாய் கேக்கு வெட்டி;
பந்தி போட்டு;
பிரபலப் படுத்தாமல்;
பிறந்த நாள் கொண்டாடிவிட்டு,
பேனர் கட்டிய
மேடையேறி
உண்ணாவிரதம் இருந்தார்.
தலைமேலிருந்தது குல்லாய்.
இளகிய இந்தியர்களின்
மூக்கின் மேல் இருந்தது விரல்.
அந்தப் பட்டினி,
ஊடகங்களால்
எதையோ எதிர்பார்த்து
விளம்பரப்படுத்தப் பட்ட
பட்டினி.
ஏனெனில்
அந்த குல்லாய் ஹீரோவுக்கு
பட்டினியால் செத்துவிடும்
கண்டமேது மில்லையென்று
சோதிடம் பார்க்காமலேயே
பாரதத்துப் பார்வையாளர்களுக்குத்
தெரிந்து போனது.
இருப்பினும்
பதட்டப்படாமல்
கைதட்டல்.
காதைப் பிளந்தது.
அன்னா எனும் அற்புதத்துக்கு
கிடைத்தது பாராட்டு.
ஆனால் நீ
உன் உணவின் எதிர்பார்ப்பில்
உன் வாழ் நாள் முழுதுமே
பட்டினியிலிருந்தாய்.
உன் வாழ் நாள் பட்டினியை
விளம்பரப்படுத்தும்
ஒரே ஊடகம் –
உன் உருக்குலைந்த
உடல்தான்.
இதோ…
உன் சுவாசத்தை நிறுத்தவும்
ஏற்பாடு செய்தாகிவிட்டது.
இந்த வாழ் நாள் போராட்டத்தால்
உனக்குக் கிடைக்கப்போவதோ
உணவு அல்ல.
குறைந்த பட்சமாக…
காற்றுமல்ல.
மரணம்!
அதுதான்
இந்தப் பழம்பெரும் நாட்டின்
பார்வையாளர்கள் சாட்சியாக
உன்
உண்ணாவிரதத்துக்கான
கடைசி பரிசு.
அந்த
உண்ணாவிரத வேதனையில்
கல்லாகிப்போன உன் நெஞ்சம்.
இடுகாட்டில் உன்னை
எரிக்கப்படும்போது,
என் தாயே…
தீயும் கூட உன் நெஞ்சைத்
தின்னமுடியாமல்
துப்பிவிடும்!
– புதிய பாமரன்.
வினவு அண்ணா இன்று கியூபாவில் திரு ரால் காஸ்ட்ரோவின் பேச்சை உங்கள் வினவில் வெளியிடுவீர்களா!!! உங்கள் பெரிய சொத்து முட்டாள் கமுநிசத்தின் ஆதர சுருதி மாதந்திர ரேஷன் புத்தகத்தை ஒழிக்க முடிவு செய்துவிட்டார்கள் அண்ணா. ரொம்ப அநியாயம் அண்ணா பொருளாதாரத்தின் மூல ஆணி வேர் தேவை மற்றும் அளிப்புக்கு ஏற்று விலை நிர்ணைக்க கியூபா அரசு ஒத்துக்கொண்டு உள்ளது அண்ணா. அதை விட அண்ணா அவர் இரண்டும் இரண்டும் நாலு தான் என்பதை அனைத்து முட்டாள் கமுனிச மகாஜனகளுக்கும் தெரிவித்து விட்டார் அண்ணா.
என்னாது? கூபாவில் இருப்பது கம்யூனிசமா?
கும்புடுரேன்ஞ் சாமீ…, எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும் சாமீ
எப்பிடி ஒரு இன்ஸ்டன்ட் கவிதை. வர கவி!!!. occupational hazard எல்லா தொழில்களிலும் இருக்கும். அதை நிவர்த்திக்க சட்ட பூர்வமான வழி முறைகள் உள்ளது. ஆனாலும் ஒரு சில ஆபத்தான தொழில்களில் இப்பிடியான நிலை உருவாகும். ஏன் பஞ்சாலைகளிலும், சாயதொழில்களிலும் கனிம அகழ்வுகளிலும் இந்த மாதிரி நடப்பது அனைவரும் அறிந்தது. [obscured]
சண்டண்ணா சாவு சகசம்தான… இப்படி சொன்ன ஜெவின் சகோதரர் மோடியின் மாநிலத்தில் நோய் எல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை… தீய சக்தி கருணாநிதி நோயை பரப்பி விட்டு இருக்கலாம்… இது விகடன், தினமலம், தினமன்னி பாணி செய்தி…
//இந்த கிராமத்தின் சுடுகாட்டுத் தொழிலாளியான ஷர்மிளா என்பவரின் கணவர் கேசர்சிங்//
சர்பஞ்ச் என்பதை “தலையாரி” என்று மொழிமாற்றம் செய்திருக்கலாம். சுடுகாட்டு தொழிலாளி” ரொம்ப பயங்கரமா இருக்கு சித்திரகுப்தரே. எமதர்ம ராஜனுக்கு பக்கத்திலேயே உக்கார்ந்திருக்கும் உமக்கு வேண்டுமானால் சுடுகாட்டு பயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் “சர்பஞ்சினி” (பெண் சர்பஞ்சை அப்படித்தான் சொல்லணுமாம் – நம்ம விக்கி சொல்லுது) ஷர்மிளா பாவம் சார். கொஞ்சம் மாத்திடுங்க!
http://en.wikipedia.org/wiki/Sarpanch
நன்றி, அகராதியில் சரியான வார்த்தை கிடைக்காததால் இந்த தவறு நேர்ந்திருக்கிறது. வினவும் இதை திருத்திவிடுவார்கள்.
😉
subscribing to the comments
முன்னேறிய முதலாளிய நாடுகள் தங்களது மலிவான இறக்குமதிகளுக்கு இவ்வாறு மூன்றாமுலக நாடுகளில் (இன்றைய இந்தியா, 1900களில் ரஷ்யாவைப்போல, ஒரு பின்தங்கிய –மூன்றாமுலக– வல்லரசு) இவ்வாறான் ஏற்கத் தகாத நடைமுறைகளைக் கண்டு கொள்வதில்லை. ஏன், ஊக்குவிப்பதும் உண்டு.
தமது நாடுகளில் மட்டும் கொஞ்சம் கண்டிப்பாக இருப்பார்கள். ஏனெனில் அங்கு இம் மாதிரி விடயங்களுக்கு எதிராகப் பல தளங்களிலும் போராட்டங்கள் எழ வாய்ப்பு அதிகம்.
முன்பு காலனித்துவம் செய்ததை இப்போது நவகாலனித்துவத்துக்காக மூன்றாமுலக ஆட்சியாளர்கள் செய்கிறர்கள்.
வியக்க என்ன இருக்கிறது?
இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள நிலை இதுதான்.தொழிலாளர் நலனில் அக்கறை காட்டாத அரசுகள், ஏழ்மை,வறுமை காரணமாக இடம் பெயரும் கூலித்தொழிலாளர்களை மட்டும் கவனிக்கப்போகிறார்களா என்ன.இதற்கு தீர்வு அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பதும், தொழிலாளர்களை ஒன்று திரட்டி போராடுவதும்தான்.சிஐடியு போன்றவை அதைச் செய்கின்றன.ஆனால் பல இடங்களில் இடதுசாரி தொழிற்சங்கங்கள் இல்லை அல்லது வலுவாக இல்லை.சிஐடியு என்றால் உங்களுக்கு ஆகாது என்பதுதான் உண்மை.
திருப்பூரில்,சிவகாசியில் எல்லாம் சரியாக நன்றாக இருக்கிறதா.இங்கெல்லாம் தொழிலாளர்களுக்கு பணிகாரணமாக உடல்நிலை பாதிக்கப்படுவதில்லையா இல்லை பாதுகாப்பு விதிகள் 100% கடைபிடிக்கப்படுகின்றனவா.
தமிழ்நாட்டில், பெரியார் பிறந்த மண் என்று பெருமை கொண்டாடுகிறீர்களே அங்கு எல்லாம் சரியாக உள்ளது, தொழிலாளர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, கூலித்
தொழிலாளர் பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்வதில்லை என்று சொல்லிக் கொள்ள
முடியுமா.குஜராத்திலிருந்து வேலை தேடி இடம் பெயர்வோர் குறைவு,அங்கு வேலை தேடி செல்வோர்தான் அதிகம்.
அவர்களை மோடி அரசு புறக்கணிப்பதை கண்டிக்கலாம்.ஆனால் பிற அரசுகள் நடந்து கொள்வதைப் போல்தான் அந்த அரசும் நடந்து கொள்கிறது என்பதையும் சேர்த்து சொல்ல வேண்டும்.சூரத்தில் வேலை செய்ய ஒரிசாவிலிருந்து இடம் பெயர்கிறார்கள்.
பஞ்சாபில் வயல்களில் வேலை செய்ய பீகாரிலிருந்து இடம் பெயர்கிறார்கள்.சென்னையில்வட நாட்டு தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
இந்தியாவெங்கும் உள்ள பிரச்சினை இது.மோடியின் குஜராத்தில் மட்டும் உள்ள பிரச்சினை அல்ல.
//இந்தியாவெங்கும் உள்ள பிரச்சினை இது.மோடியின் குஜராத்தில் மட்டும் உள்ள பிரச்சினை அல்ல.//
அப்புறம் ஏம்பா மோடியின் குஜாரத்து மட்டும் ஒளிருது, வளருதுன்னு கத வுடூறீங்க? அது மாதிரி கதைகளிலும் நீங்க இதே மாதிரி பின்னூட்டமிட்டு குஜராத்தும், மற்ற மாநிலங்களும் ஒன்னுதான்னு சொன்னீங்களா என்ன?
நான் ஒரு வேதிபொறியாளன் , குஜராதில் நான் பன்னிரண்டு வருடங்கள் வேலை பார்த்திருக்கிறேன் (வாபி, அன்கேலேஹ்வர் , பரோடா, மற்றும் ஜாம்நகர்) , வாபி மற்றும் அன்லேஷ்வார் பகுதிகளில் உள்ள கெமிக்கல் கம்பனிகளில் வேலை செய்வது என்பது மிகவும் கொடும்மையான அனுபவம். காலையில் எழுந்தவுடன் organic vapour இல் தான் வாழவேண்டும். நான் வேலை பார்த்தது ஒரு அக்ரோ கெமிகல் கம்பெனி , சரியான safety சாதனங்கள் (PPE ) கிடையாது. பெயருக்குத்தான் gavernment audit , என்னக்கு தெரிந்து வாபி இல் ஓடும் ஆற்றின் pH , 2 – 5 (acidic கண்டிஷன்). ஆற்று தண்ணீரை குடித்து ஏறாளமான மாடுகள் மடிந்து கிடப்பதை நான் நேரில் பார்த்திருக்கேன். அங்கு குஜராத்தின் முன்நேற்றதுக்காக வேலை பார்ப்பது மற்ற மாநிலத்தை சேர்ந்த மக்கள் தான். குஜராத்திகள் கம்பெனியில் வேலை நேறத்தில் , ஷேர் மார்க்கெட் trading செய்து கொண்டிருப்பார்கள். வேலை செய்யாமல் பனம் சம்பாதிக்கவேண்டும் அவர்களுக்கு , ஆனால் மற்றமநிலதவரின் நிலைமை வேறு.அக்ரோ மற்றும் Dyeing கம்பெனியில் வேலை செய்வோர்களது வாழ்க்கை மிகவும் பரிதாபம். நான் வேலை பார்த்த கம்பெனியில் ஒரு நியூ product காண வேலையில் இருந்தேன், அந்த product இந்தியாவில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டது, அதன் chemical property , அதன் vapour , ஸ்கின் மற்றும் breathing வழியாக உடலில் சென்று , 24 மணிநேரத்திற்கு பின் , கண் பார்வை போய்விடும். சரியான மருத்துவம் seithal than , that person could save his eye otherwise , he will loose his eyes permanently.
Personally I had that experience for a week.But still that company is running at gujarat.
That’s gujarat.
மதுரைக்கு அருகே ஒரு போபால் என சில தினங்களுக்கு முன்னர் இந்த தளத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை சார்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அந்த அபாயகரமான கெமிக்கல் கம்பெனியை தற்போது குஜராத்திற்கு கொண்டு செல்ல லேன்செஸ் என்ற பன்னாட்டு நிறுவனம் குஜராத் மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இங்கு சுமார் 30 ஆண்டுகள் வேலைபார்த்த பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, இழப்பீடு போன்ற எதுவுமின்றி 60 நாட்களாக போராட்ட களத்தில் உள்ளனர்.
வளர்ச்சிப் பாதையில் குஜராத் – சுடுகாட்டுப் பாதையில் அப்பாவி கூலித் தொழிலாளர்கள் ?
அண்ணன் அஞ்சா நெஞ்சன் அழகிரி, மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர், இப்ப எலக்ஷன் “வேலை”யெல்லாம் முடிஞ்சு சும்மாத்தான் இருக்காராம். இந்த பிரச்சனையைப் பற்றி அவர் காதில் போடலாமே? இந்துத்வா, பார்ப்பண, ஃபாஸிஸ்ட், மேல்ஜாதி தொந்தரவு எதுவும் இல்லாமல் சுமுகமாக முடித்து வைப்பாரே?
எண்டோஸல்ஃபான் பற்றிய கட்டுரையை வினவில் விரைவில் எதிர்பார்க்கிறேன்.
http://www.thehindu.com/news/states/kerala/article1704116.ece
//இது இந்தியாவில் உல்ல அனைது மானிலஙலிலும் உல்ல பிரஷனை தான்…//
//இந்தியாவிலெ வளர்ஷியில் முதல் மாணிலமாகத் திகழும் குஜராத்தை பாராட்ட லட்ஷம் காரனஙல் உனடு…..//
ஐயோ பாவம்